New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நற்றிணை – வாழ்வியலின் நாகரிகம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
நற்றிணை – வாழ்வியலின் நாகரிகம்
Permalink  
 


நற்றிணை – வாழ்வியலின் நாகரிகம் (5)

 

 


- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். 
பதிவுகள் -


உலகியல் வழக்கினும் நாடக வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் 
(தொல்)

அறிமுகம்
சங்க இலக்கியம் மக்களின் மூச்சாக உள்ளது. பண்பாடுகள் - கருத்தின் நாகரீகங்களாகவும் அமைந்துள்ளது. போற்றுதல் மரபினதாகவும் திகழ்ந்துள்ளது. விருந்தினரை உறவுகளாக கொள்வதுதான் மேன்மைகளாகும். புகழுக்காக வாழ்வதுதான் உயிர்களின் நிலைகளாகும்.

இயற்கைகளாலான இவ்வுலகில் வாழ்வோ தனித்துவமானது. தன்னம்பிக்கைகளோ எதிர்விசைகளை மூழ்கடிப்பது. உண்மை – பொய்மைகளை வெல்வது. நீதிநெறி தழுவாமல், ஒழுக்க விதிமுறைப்படி வாழ்வதுதான் மக்களினம். வாழ்க்கை முறையினை காலங்களுக்கேற்றார் போன்று இயைவதுதான் நற்றிணையின் சிறப்பமைவாகும். இத்தகைய தகவலோடும் கருத்தமைவின் ஒழுங்கியலையும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

ஆய்வுக் கட்டுரையின் வார்ப்புகளாவன

-    நற்றிணை அறிமுகம்
-    நற்றிணை – பாடலின் உள்ளடக்க முறைகள்
-    நற்றிணை - நிலப்பரப்பின் வாழ்வியல்
-    பல இனக்குடிகளின் ஒழுகலாறு
-    மறைந்த பாடலின் பொருள்
-    நல்ல ஒழுகலாறின் பண்புகள்
-    முடிவுரை

முதலான பொருண்மைகளின் படியே கட்டுரை ஆய்ந்துள்ளது.   

நற்றிணை அறிமுகம்

அகிலம் அய்ம்புலன்களால் ஆனது, உலக வாழ்வியல் இயற்கைகளால் ஆனது. தட்பவெட்பமான நிலைகளெல்லாம் உயிர்களை வாழ வைக்கின்றன. மனிதம் இல்லையேல் மொழி இல்லை. வழக்காறுகள் சிதைந்தால் பன்னெடுங்கால வரலாறில்லை.

சிந்தனையுள்ளம் கொண்டவர்களினால் வழிபாடு நிலைத்துள்ளது. நிலங்களும், பொழுதுகளுக்கேற்றவாறும் வாழ்க்கைமுறை அமைந்துள்ளது. சங்ககால வாழ்வியல் என்பது பலரையும் அரவணைத்துள்ளது. வாழ்வின் செயல்பாடுகளால் கலையும், மனிதப்பரிமாணங்களையும் இலக்கியத்தின் மூலமாக நிறுவியிருக்கின்றனர்.

'இயற்கை நெறிக்காலத்தை அளவிறந்து சிறப்பித்துக் கூறும் பண்பு இன்று காணப்படுகிறது. அதற்குப் பல காரணங்கள் கூறலாம். திராவிடஇன மக்களுக்குள்ளே மிகப் பழைய இலக்கியச் செல்வம் உடையோர் தமிழரே. தமிழரின் மிகப் பழைய இலக்கியம் சங்க இலக்கியமே சங்ககால வாழ்க்கை பற்றி ஆராய்வதற்கு விரிவாகவும் தெளிவாகவும் உதவக்கூடிய சாசனம் முதலிய வேறு சான்றுகள் கிடைக்கவில்லை சங்க காலத்திற்குப் பின்பு தோன்றிய இலக்கியங்களில் வடமொழிச் செல்வாக்கு நிறைய உண்டு எனவே இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையுடையதாகவும் ஆரியக் கலப்பு பொரும்பாலும் இடம் பெறாததாகவும் உள்ள திராவிட நாகரிகம் சங்ககால இலக்கியத்திலிருந்தே அறியப்படுகிறது.
(ஆ.வேலுப்பிள்ளை.,(ம.ப) 2004, தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், ப 23).

என்றவாறானப் பாங்கில் உலகியல் முறையினை விளக்கியுள்ளனர்.

இயற்கைநெறி காலத்தையும், பண்பாட்டு முதலான விழுமியங்களையும் விளக்கப்பட்டுள்ளனர். மனிதர்களின் அன்றாட வாழ்வியலைப் பற்றியும் புரி;ந்துள்ளனர். தான்தோன்றித்தனமாக இருந்தவர்கள் கூட்டாக ஒன்று திரண்டனர். சமுகம் - என்னும் வழக்காறாகவும் மாறினர். நாடு – மொழி-இனம் என்னும் மனிதர்களின் உந்துதல் முறை ஒருங்கிணைக்கப்பட்டன. சமத்துவம் முதலான ஒழுகலாறுகளால் சமுகம் பின்னப்பட்டுள்ளது.

நல்ல ஒழுகலாறினைக் கொண்டுள்ள நூல்நற்றிணை. அய்ந்திணைகளால் அய்ம்புலன் கொண்ட மனிதர்களின் வாழ்வியலைப் பாடியுள்ளன. அய்ம்பூதங்களுக்கேற்றவாறு நிலமும் பொழுதும் குறிக்கப்பட்டுள்ளன. மாந்தர்களின் வாழ்வியலுக்கேற்றவாறு முதல், கரு, உரி என பிணைந்து இன்புற்றுள்ளனர். ஒன்பது முதல் பன்னிரெண்டு அடிகள் வரை இந்நூலுக்கு அடியெல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. நூற்றுப்பத்து (110), முந்நூற்று எழுபத்தொன்பது (379) பாடல்கள் மட்டும் 13 அடிகளைக் கொண்டுள்ளது. இருநூற்று முப்பத்தி நான்கு (234), முந்ந}ற்று எண்பத்தைந்தா (385) வது பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை. 398 – பாடல்களை மட்டும் ஆய்வு;கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -அய்ந்திணைகளால் ஆனதுதான் உலகம். மக்களின் வாழ்வியல் முறைதான் சமூக கண்ணோட்டம். பெரும்பொழுது, சிறுபொழுதுகளுக்கேற்றவாறு வாழ்வியல் முறை மாறுகின்றது. உடலசைகளின் தட்பவெப்ப நிலைகளும் மாறுகின்றது. குறிஞ்சித்திணையில் நூற்றி முப்பத்தொன்று (131) பாடல்களும், பாலை நிலத்தில் நூற்றியாறு (106) பாடல்களும், முல்லை நிலத்தில் இருபத்தொன்பது(29), நெய்தல் நூற்றியொன்று (101) பாடல்களும், மருதம் முப்பத்திரண்டு (32) பாடல் எண்ணிக்கைகளும் கொண்டுள்ளது. தான் நாகரீகமான நற்றி;ணை நானூறு' என்பதாகும். அகச்சிந்தணைகளை பாடுகின்ற நம்பிக்கையான நற்றிணை நூலாகும். தலைவன் தலைவிற்கும் தோழி என்பவள்தான் முதன்மைப் பங்கு வகிக்கின்றாள். எனவேதான் இருநூற்று பதினான்கு பாடல்கள் (214) அவளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாழ்வின் மகிழ்ச்சி பொருளை விளைவிப்பவள்  தலைவி. இருந்தாலும் தோழி இல்லையேல் வாழ்வியலில் எதுவுமேயில்லை. தோழி என்பவளே முதன்மைப் பங்கு வகிக்கின்றாள்.

நற்றிணை நூலிணை பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர் 1915-ம் ஆண்டிலே பதிப்பித்துள்ளார். 1952-ம் ஆண்டில் கழகவெளியீடாக பொ.வே.சோம சுந்தரனாரின் வெளியிட்டுள்ளார். மேற்கூறிய இருவரின் ஆராய்ச்சி நூலினைப் பற்றிய உரை வரலாற்றிணையும், ஆய்வுரை முதற்கொண்டு இலக்கிணக்குறிப்புடன் 1962-ம் ஆண்டில் கழக  வெளியீடாகவும் இவ்விரண்டு நூலையும் இணைத்து மீண்டும் பதிப்பித்துள்ளனர். கா.கோவிந்தன் (1956) மர்ரே எஸ்.ராஜம் வெளியீடாக (1957)-ம் வந்துள்ளன. அவ்வை துரைசாமியின் (1966)-ம் ஆண்டில் உரையும், புலியூர்கேசிகன் (1967), (1980) ஆண்டிலும் இருநூறு இருநூறு பாடல்களாக இரண்டு பகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

நற்றிணை – பாடலின் உள்ளடக்க முறைகள்:

உலக மாந்தர்களின் வாழ்வியலை எடுத்துரைப்பதுவே இலக்கியங்கள். நம்பிக்கைகள், பழமொழி சடங்குகள் முதலான மனதினோடு மனிதம் உரையாடுவதுதான் சங்க இலக்கியங்கள். மனம் ஒரு கோணல்பக்கங்கள் என்பது போலவே, வாழ்க்கைமுறைகளும் காலங்களுக்கேற்றார்போலவே மாற்று நிலைமையும் எய்துகின்றன.

நற்றிணையின் பாடுபொருளிலும் பாடலுக்கேற்றவாறு கருத்தமைவினைப் பற்றி மாற்றி மாறி பாடியுள்ளனர். நற்றிணை நானூறின் பாடல்களின் வரையறை என்பது முதல் (1) அடியில் தொடங்கி ஆறாவது (6) அடிவரை தலைவனைப் பற்றி விளக்கம் உள்ளது. ஏழாவது (7) அடியிலிருந்து பாடலின் இறுதிவரை தலைவனின் செயல்களைப் பாடப்பட்டுள்ளன. இப்பண்பில் அமைந்த தொன்னூறு (90) பாடல்கள் உள்ளன. நற்றிணையின் மீதியுள்ள முப்பத்தெட்டு (38) பாடலில் முதல் (1) அடியி;லிருந்து அய்ந்தாவது (5) அடிவரை தலைவனின் செயலைக்குறித்துள்ளனர். ஆறாவது (6) அயிலிருந்து பாடலின் இறுதிவரை தலைவன் பற்றிய விளக்கத்தைக் கொடுத்தள்ளனர். இப்பாடல்களெல்லாம் தலைவனை முதன்மையாகக் கொண்டுள்ள பாடலாகும்.

தலைவன், தலைவிக்கு சரிசமமான பாகுபாட்டோடு ஒன்பது (9) பாடல்களைப் பாடியுள்ளனர்.

தலைவனின் செயல்பாடு கொண்ட தலைவியின் பெருமையினைப்பற்றி ஏழு (7) பாடல்கள் பாடப்பட்டள்ளன.

தலைவன், தலைவியின் பத்தொன்பது (19) பாடல்களி;ல் முன்னர் கூறியதோடின்றி தலைவனின் வினைப்பாட்டினைப் பற்றி முக்கியப்படுத்தியுள்ளனர். முதலிரண்டு அடிகளில் தலைவனின் வினையைப் புலப்படுத்தி பிறகான அய்ந்து (5) வரிகளில் தலைவனின் விளக்கத்தைப் பாடியுள்ளனர். கடைசி மூன்று (3) வரிகளில் தலைவனின் வினையினைப் பற்றியே மீண்டும் வியந்துள்ளனர்.

அடுத்ததானப் பாடல்களில் தலைவனைப் போலவே அவர் போகின்ற பாதையின் இடங்களைப் பாடியுள்ளனர். பொருள்வயின் தலைவன் பிரியும்போது, அவன் செல்கின்ற பாதைகளாலானது காடுகளாகவும், ஒத்தையடிப் பாதைகளாகவும், குன்றம் அமைந்துள்ள பகுதிகளாகவுமே இருக்கின்றன. வன விலங்குகளையெல்லாம் தாண்டி, உயிருக்குப் பயந்து-நடை-பாதை வாழ்வியல் முறைகளோடு கடினமான வாழக்கைப் பயணத்தையே வழி நடத்துகின்றனர். இம்முறையிலான கொடுஞ்சித்திரவதைகளைப் பற்றி இருபது (20) பாடல்களில் விளக்கப்பட்டுள்ளது.

தலைவனின் முதல் அய்ந்து (5) அடிகளில் தலைவனின் செயல்பாடு பற்றி பாடப்பட்டள்ளது. ஆறாவது (6) அடியிலிருந்து பாடலின் முடிவுரை காடு பற்றிய வர்ணனையினையே பதினைந்து (15) பாடல்களில் பாடியிருக்கின்றனர்.

பாதையைப் பற்றி பாடும்போது இன்னமும் பதினேழு (17) பாடல்கள் உள்ளது. பாடலின் முதல் (1) அடியிலிருந்து ஆறாவது (6) அடிவரை தலைவனின் நடைபாதையே கருப்பொருளாகின. மீதமுள்ள வரிதொடங்கி ஈறுவரை தலைவனின் செயல்பாடுகளினையே பாடியுள்ளனர்.

ஊர், குடி, கானல் போன்ற பொருண்மைகளோடு பருவம் முதலான மாலைக்காலங்களைப் பற்றின பொருண்மைகளாகவும் பாடப்பட்டுள்ளன.

'களவு மணத்திற்கு வாய்ப்பு குறைந்த நிலையிலும் களவு மணத்தையே இவர்கள் வற்புறுத்தினர். களவிலிருந்தே கற்பென்ற நேர்பாதைதான் இவர்கள் வற்புறுத்திய நெறி. காதலன் அங்கும் மிங்கும் என அலையலாம். அவனை ஒரு மையத்தில் நிறுத்தும் உணர்வுடையவர் காதலி. இவள் அறத்தோடு நிற்கிறாள். காதலன்தான் தனக்கு கணவன். இன்னொருவன் எத்தகையவன் ஆகினம் அவனோடு எனக்க வாழ்வில்லை. இதுதான் அறம்.'
(ஞானி (கி.பழனிச்சாமி)., (மு.ப) 2010, செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம்,


பக்.(18-19). என்றவாறு உண்மையின் வழி உய்த்துணருகின்றாள். தலைவன் பாலியல் வேட்கைக்காகப் பரத்தையிடம் சென்றாலும், தன் தலைவனின் நிலைப்பாட்டினை உணர்ந்து காம இச்சையின் மூலமாகவே பரத்தையினை மறந்து, தன்னிடமே நிலைக்கச் செய்பவள் தலைவி. இவ்வாறான உயர்ந்த பாகுபாட்டினைப் பற்றி சங்க இலக்கியங்கள் மூலமாகவும் வியபபடைந்துள்ளனர்.

நற்றிணை – நிலப்பரப்பின் வாழ்வியல் :

அய்வகை நிலங்களில் இன்பற்றிருந்தனர். மக்களின் வாழக்கைமுறைகளில் பொழுதுகளும், நிலங்களும் முதன்மைப் பெற்றுள்ளன. உரிப்பொருள்கள் என்பதே அன்றாட மக்களின் வாழ்வின் முடிபொருளாகத் திகழ்ந்துள்ளன. வாழ்வின் சுவாரசியங்களை பெருந்தன்மைகளோயோடு ஆமோதித்துள்ளனர்.

மக்களின் இன்பமுறை என்பதே உலக வாழ்வியலோடு இன்புறுவதாகும். நல்ல ஒழுகலாறான இந்நூலின் நிலங்களுக்கேற்ற முறையில் பண்பாடு – சடங்குகள் எதிரொளிக்கின்றன. மாந்தர்களின் ஒரு மித்த அன்பானதோ பாடலின் மூலமாக எதிரொலித்துள்ளன.

'நின்ற சொல்லர் நீடுதோன்(று) இனியர்;
என்றும் என்தோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீந்தென் போலப்,
புரைய மன்ற, புரையோர் கேண்மை
நீரின்(று) அமையா உலகம் போலத்
தம்மின் (று) அமையா நம் நயந்(து) அருளி;
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை யுறுபவோ? செய்பு அறியலரே
(வேங்கடராமன்., (மூ.ப) 2013, நற்றிணை மூலமும் உரையும், குறிஞ்சி (பாடல்.1), பக்.(2-3)).

பொருள்வயின் பிரிவிற்காகத்தான் தலைவன் பிரிகின்றான். என்னை மறந்து ஒருநாளும் அவரால் இருக்கமுடியாது. தலைவனை மறந்துதான் ஒருவேளை தலைவியாலும் இருக்க முடியாது.

தோழி என்பவளே, தலைவனின் பிரிவால் தலைவியானவள் மனம் வாடமாட்டாள். இறக்கும் வரை கணவன், மனைவியாக இருப்பவர்கள் நாங்கள் தான். தலைவனை எண்ணி இமைக்காமல் கண் இருந்தாலும் அல்லது துடிக்காமல் மனசின் அதிர்வலைகள் இருந்தாலும் கூட தேகமே எனக்கு அவராகத்தானே இருக்கின்றார். என்கிற உன்னதமான நிலைப்பாட்டினைப் பற்றி உயிர்தோழிக்கு தலைவி தெளிவுறுத்துகின்றாள்.

தலைவர் சான்றோர் ஆதலால் பிரிவால் நாம் படுந்துன்பம் கண்டு தலைவன் மேலுள்ள அன்பால், நிலங்களின் மீதுள்ள பண்பால் இம்முறையிலான பாடலை தலைவி பாடியிக்கின்றாள்.

நற்றிணையில் நூற்றமைந்தாவது பாடலாக இருக்கின்ற மருதத்திணை சிந்தணையினைப் பற்றி பரத்தையானவள் தலைவனின் பெருமையினைப் பற்றி கீழுள்ளவாறு எடுத்துரைக்கின்றாள்.

'நகை நன்கு உடையன் பாண நும்பெருமகன்   
மிளை வலி சிதையக்களிறு பல பரப்பி
......................................................................................
......................................................................................
கண்ணுடைச் சிறகோல் பற்றிக்
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே'(11-வரி பாடல்)
(மேலது., மருதம் (பாடல்.150), ப.273).
உன் பெருமைக்குரிய தலைவன் பலராலும் நகுதற்படுதலை உடையன்.

பாணனே! காவல் வலிமை சிதையும்படி பலவாய யானைப் படைகளை பரக்க விட்டு பற்பல அரணங்களை வென்றுகொண்ட வலிமை மிக்க சேனைகளை உடைய பாண்டியன் மாறன் வழுதி பன்னெடுநாள் வாழ்வானாக என்று வணங்கி, தலைவனின் பெருமைத் தன்மையினை எடுத்துக்கூறி, தாங்களை இனிமேல் பரத்தைகளின் சேரியில் பார்க்கக்கூடாது என்று தலைவியினை வழி மறித்து அவளின் ஊருக்கே திருப்பி அனுப்புகின்றாள்.

தலைவனானவன் உனக்க மட்டும் சொந்தமில்லை. தலைவனின் வீரம், இளமை, பண்பாடு முதலான பலவகைகளில் பலரையும் கவர்ந்து – விடுகின்றார். என்று தலைவனின் சிறப்பியல்புகளைப் பற்றி பரத்தையானவள் இப்பாடலில் விதந்தோதியிருக்கின்றாள்.

பல-இனக்குடிகளின் ஒழுகலாறு)

சங்ககாலம் என்பது (அ) மனிதன் தோன்றிய அய்நூறு (500) ஆண்டுகளுக்கு பிற்பட்டது. நிலையான வாழ்வை மேற்கொண்டிருந்த மக்களெல்லாம் வேளாண்மையில் வாழ்ந்தனர். சங்க காலங்களில் இருவகைகளில் மனிதர்களைப் பிரித்துள்ளனர். முதலாளித்துவமாகவும் (நிலவுடைமையாளர்) மற்றும் வேளாண்மை மக்கள் என்பதனை முதல்வகையாகவும், விவசாயங்களுக்கேற்ற கருவிகளை உருவாக்குபவர்கள் என்று பிரித்துள்ளனர். மக்களெல்லாம் அவர்களின் தொழில் அடிப்படையில் இனங்களாகப் பிரித்துள்ளனர்.

பொன்னை உருக்கி அணிகலன்கள் செய்கின்ற பொன்செய் கம்மியர், செம்பு உலோகத்தால் பானைமுதலிய கலங்கள் செய்வோரை செம்புசெய் கம்மியர், மண்ணைக் கொண்டு மண்பாண்டங்கள் செய்கிற கயவர், சலவைத்தொழில் செய்பவர்களைப் புலையர் (ஆண்புலையன், பெண் புலத்தி), நாள் - கோள் கணிக்கின்ற கணியர்கள், சங்க இலக்கியங்களில் அறவோனாக – மருத்துவன் பற்றியும் வணிகர்கள் முதலான பலவிதமான இனக்குடிகளைப் பற்றி நல்ல ஒழுகலாறான இந்நூலில் பாடப்பட்டுள்ளன. வரலாற்றுச் செய்திகள், மனதில் நீங்கா இடமான கற்பனை வளங்களைப் பற்றி இந்நூலின் விளக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் வாழ்வியலை, பூ உலகின் நிலைகளும் கேற்றவாறு பாடப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் இனங்களைக் குறிப்பிட்டதோடு, அவர் வாழ்ந்த இல்லங்களின் அமைவினையும் குறிப்பிட்டுள்ளனர். நற்றிணை பாடலில் வருகின்ற இல், மனை, நகர், முன்றில், முற்றம், குரம்பை வரைப்பு, மாடம், குடில், கூரை முதலான சொற்களாலும் குறித்துள்ளனர்.

இவைகள் மட்டுமின்றி புல்லாலும், ஈந்திலையாலும் வேயப்பட்ட எளிய அமைப்புடைய குரம்பைகள், முதலான அவரவர்களின் வசதிக்கேற்ற வகையில் இல்லங்களை அமைத்துக்கொண்டனர்.

முடிவுரை
'நல்ல ஒழுகலாறு' என்னும் நூலின் பெயரே போதுமானதாக உள்ளன. மனிதர்களின் இனம் தொடங்கி பண்பாடு, குலம், கல்வி, தொழில் போன்றவைகளும் பாடப்பட்டுள்ளன. நம்பிக்கைகள், பண்பாடு, சடங்கு முதலானவைகளோடு குடும்பத்தின் அமைப்புமுறைகளும் பாடப்பட்டுள்ளன.

மன்னர்கள் தொட்டு நாட்டின் வளமைகளையும் பாடியுள்ளனர். அரசர்கள் கவிஞராகவும், காவலாளியாகவும் இருந்துள்ளனர். உலகப் பண்பாட்டிற்காகவும், உண்மையான வரலாறாகவும் இந்நூல் போற்றப்பட்டுள்ளன. தமிழன் அடைந்த வினையின் பயனே நற்றிணை நூலாகும்.

ஆய்வின் வெளிப்பாடுகளான
-    இயற்கையானது வாழ்வின் மருத்துவமாக நிலைத்துள்ளன.
-    நற்றிணை – நம்பிக்கையின் நாயகமாக விளங்குகின்றன.
-    வாழ்வின் வழிகாட்டியாக அமைந்துள்ளன.
-    பொருளாதார வாழ்வின் மேன்மைகளாக அமைந்துள்ளன.
-    சுதந்திரம், மனிதத்துவம், மானிடத்திலும் பங்காற்றியுள்ளன.

துணை நூற்பட்டியல்

முதன்மைத் தரவுகள்
•    வேங்கடராமன், (மூ.ப) 2013, நற்றிணை மூலமும் உரையும், சென்னை, டாக்டர் உ.இவே.சாமிநாதையர் நூல் நிலையம். 
•    வனிதா.மு.(மு.ப) 2016, நற்றிணையின் உள்ளடக்கவியல் அமைவுக்கூறுகள், சென்னை, சாந்தி நூலகம்.

துணைமைத் தரவுகள்
•    வேலுப்பிள்ளை.ஆ., (ம.ப) 2004, தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், சென்னை, குமரன் புத்தக இல்லம்.
•    ஞானி(கி.பழனிச்சாமி)., (மு.ப) 2010, செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம், சென்னை, காவியா.
•    சிற்பி பாலசுப்பிரமணியம் நீல.பத்மநாபன்., (மு.ப) 2014, புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி-1, சென்னை, சாகித்திய அகாதெமி.
•    முருகேச பாண்டியன்.ந.,(மு.ப)2011, மறுவாசிப்பில் மரபிலக்கியம், சென்னை, நற்றிணை பதிப்பகம்.
•    ராஜ்கௌதமன்., (மு.ப) 2006, பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், சென்னை, தமிழினி.

கட்டுரையாளர்: முனைவர் மு.சண்முகம், கவுரவ விரிவுரையாளர். தமிழ்த்துறை, திருகொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் - 606 001, கடலூர் மாவட்டம்

drshanmugam007@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard