பட்டினப்பாலை – Pattinappālai
Translated by Vaidehi Herbert
Copyright © All Rights Reserved
பாடியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பாடப்பட்டவன் – திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)
திணை – பாலை
துறை – செலவழுங்குதல்
பாவகை – ஆசிரியப்பா, வஞ்சி
மொத்த அடிகள் – 301
தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை: இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத் திணையாகலின், இதற்கு பட்டினப்பாலையென்று பெயர் கூறினார். பாலையாவது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் கூறுவது. இப்பாட்டு வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவு அழுங்கிக் கூறியது.
This song has 301 lines. They are written in Vanji meter and Āsiriyappā/Akaval meter. The vanji lines were introduced to effect a change in the rhythm. The song was written by Kadiyalūr Urithirankannanār who also wrote Perumpānātruppadai. The king is Chōlan Karikālan. This song is about the proposed separation of a woman from her lover who wants to go to Kaveripoompattinam, the capital city of the Chōla kingdom. The song describes the harbor, the big ships that arrive with merchandise, fishermen, dancing, wine drinking, Buddhist and Jain monasteries and as well the worship of Murukan. It describes Karikālan’s struggle to regain his rightful throne and his invasion of enemy countries. It also describes his activities during peaceful times and his patronage of artists. Works written in the 11th and 12th centuries A.D. say that Karikālan gave 1,600,000 gold pieces to the bard for his song.
காவிரியின் பெருமை
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, 5
மலைத் தலைய கடல் காவிரி;
புனல் பரந்து பொன் கொழிக்கும்; (1-7)
Kāviri’s Pride
Even if the faultless, famous, bright
Venus drifts to the south, even if the
skylarks are distressed without rain drops
to drink and even if the rain clouds change
and the skies fail,
Kāviri, which starts in the mountains
and ends in the ocean, does not fail.
Its flowing water
spreads and showers abundant prosperity.
Notes: புறநானூறு 35 – இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட. வானம்பாடி: கலித்தொகை 46 – துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், அகநானூறு 67 – வானம் வாழ்த்தி பாடவும் அருளாது உறை துறந்து எழிலி, ஐங்குறுநூறு 418 – வானம்பாடி வறம் களைந்து ஆனாது அழி துளி தலைஇய, புறநானூறு 198 – துளி நசைப் புள்ளின். வெள்ளி திசை மாறினும்: புறநானூறு 35 – இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும், புறநானூறு 117 – தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், புறநானூறு 388 – வெள்ளி தென் புலத்து உறைய, புறநானூறு 389 – வெண்பொன் போகுறு காலை, மதுரைக்காஞ்சி 108 – வரும் வைகல் மீன் பிறழினும், பட்டினப்பாலை 1 – வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும். மலையில் பிறந்த காவிரி: பட்டினப்பாலை 6-7 – மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும், மலைபடுகடாம் 327-328 – குடமலைப் பிறந்த தண் பெருங் காவிரி கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப.
Meanings: வசை இல் – without blemish, without fault, புகழ் – fame, வயங்கு வெண்மீன் – bright Venus, gleaming silver/white star, திசை – direction (north), திரிந்து – changing, தெற்கு ஏகினும் – even if it goes south, தற்பாடிய – skylarks (வானை நோக்கிப் பாடுவது வானம்பாடி, ஆதலின் தற்பாடி என்றனர்), தளி உணவின் – rain drops as food, புள் – birds (skylarks), தேம்ப – to be sad, புயல் மாறி – rain not falling, rain clouds not coming down as rain, வான் பொய்ப்பினும் – even if the clouds fail, even if the sky fails (வான் – ஆகுபெயர் முகிலுக்கு), தான் – it, the river (Kāviri), பொய்யா – does not fail, மலை – mountains (Western Ghats), தலைய – originating, கடல் காவிரி – Kāviri which reaches the ocean, புனல் பரந்து – flowing water is spread, பொன் கொழிக்கும் – brings abundant prosperity/gold
மருத நிலத்தின் வளமை
விளைவு அறா வியன் கழனி,
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்,
தீத் தெறுவின் கவின் 10
வாடி நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில் வதியும், 15
கோள் தெங்கின் குலை வாழைக்,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின் இணர்ப், பெண்ணை,
முதல் சேம்பின் முளை இஞ்சி; (8-19)
Prosperity of Agricultural Lands
There are continuous yields from
wide fields. Fragrant smells waft
from sugar mills and heat from their
fires wilt the waterlilies in nearby
fields, making them lose their beauty.
Fully grown calves of buffaloes
that eat mature, red paddy sleep in
the shade of tall granaries.
There are coconut palms with clusters
of nuts, banana trees with bunches of
fruits, betel nut palms with mature nuts,
fragrant turmeric, many kinds of mangoes,
clusters of palmyra fruits and harvests
of yam and tender ginger in the Chōla
country.
Notes: குழவி (14) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய. எருமையும் மரையும் வரையார் ஆண்டே. கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே. ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும். குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).
Meanings: விளைவு – yield, அறா – unending, not changing, வியன் – wide, கழனி – fields, கார்க்கரும்பு – dark colored sugarcane, mature sugarcane, கமழ் – fragrant, ஆலை – sugar mills, தீத்தெறுவின் – because of the fire’s heat, கவின் – beauty, வாடி – get wilted, lose luster, நீர்ச்செறுவின் – of the fields with water, நீள் – long, நெய்தல் – waterlilies – blue or white, பூச் சாம்பும் புலத்து – flowers fade in that place, ஆங்கண் – there, காய்ச் செந்நெல் – mature fine paddy, mature red paddy, அருந்து – eating, மோட்டு எருமை – buffaloes with stomachs, big buffaloes, (மோடு = வயிறு, உயர்ச்சி, பெரிய), முழுக்குழவி – mature calves, கூட்டு நிழல் – shade of grain bins, துயில் – they sleep, வதியும் – they stay, கோள் தெங்கின் – with coconut palms with clusters, குலை வாழை – banana trees with bunches of fruits, காய்க் கமுகின் – with the betel nut trees, கமழ் மஞ்சள் – fragrant turmeric, இன மாவின் – with many kinds of mango trees, இணர்ப் பெண்ணை – palmyra trees with clusters, முதல் சேம்பின் – with yam tubers, Colocasia esculenta (முதல் – கிழங்கு), முளை இஞ்சி – ginger plants with sprouts
காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு
அகல் நகர் வியன் முற்றத்துச் 20
சுடர் நுதல் மட நோக்கின்,
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்,
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக்கால் சிறு தேர் முன்வழி விலக்கும், 25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியாக்,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக், (20-27)
The Prosperity of Kāvirippoompattinam
Women with bright brows, fine jewels
and delicate looks, dry food in the wide
front yards of their huge houses,
and chase hens that come to steal their
food, throwing at them their earrings,
heavy and curved at the bases,
hindering the horseless, three-wheeled
toy chariots rolled by youngsters wearing
gold anklets.
These are the only hindrances in that
flourishing city where different groups
of people live without any other
difficulty or fear.
Notes: கனங்குழை (23) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளைந்த சுற்றுக்களையுடைய கனத்த குழை, நச்சினார்க்கினியர் உரை – வளைந்த இடத்தையுடைய பொன்னாற் செய்த மகரக்குழை.
Meanings: அகல் நகர் – huge houses, wealthy houses, வியன் முற்றத்து – in the wide yards, சுடர் நுதல் – bright foreheads, மட நோக்கின் – with delicate looks, நேர் இழை – fine jewels, perfect jewels, மகளிர் – women, உணங்கு – drying, உணா – food (உணவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது), கவரும் – come to take, come to eat, கோழி – hens/fowls/chicken, எறிந்த – thrown, கொடுங்கால் – curved base, கனங்குழை – heavy earrings, gold earrings, பொற்கால் – legs wearing gold ornaments, புதல்வர் – young boys, young sons, புரவி இன்று உருட்டும் – they roll them without horses, முக்கால் சிறு தேர் – three-wheeled small chariot (நடை வண்டி, தள்ளு வண்டி, child’s walker), முன்வழி விலக்கும் – blocks the front side, விலங்கு பகை – blocking hindrances, அல்லது – other than that, கலங்கு பகை – confusing hindrances, அறியா – do not know, கொழும் – prosperous, பல் குடி- many communities, செழும் பாக்கத்து – in the flourishing seashore city
காவிரிப்பூம்பட்டினத்துத் தோட்டங்கள், தோப்புகள், பூஞ்சோலைகள்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு,
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி,
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, 30
பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும்,
கழி சூழ் படப்பை கலியாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை; (28-33)
Gardens and Groves of Kāvirippoompattinam
In the huge Chōla country with many
small towns, sturdy boats with paddy
got by bartering salt, are tied to posts
on the shores of the backwaters, like
horses tied in a stable.
Kāvirippoompattinam has backwaters
surrounding the groves. Its orchards
yield prosperity and its groves have
abundant flowers.
Notes: பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு உப்பிற்கு பண்ட மாற்றாகக் கொண்ட நெல் என்க. Akanānūru 140 – நெல்லின் நேரே வெண்கல் உப்பு, Akanānūru 390 – நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோ, Kurunthokai 269 – உப்பை மாறி வெண்ணெல் தரீஇய. Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).
Meanings: குறும் பல் ஊர் – many small towns, நெடும் சோணாட்டு – of the vast Chōla country’s (சோணாடு – சோழ நாடு என்பதன் மரூஉ), வெள்ளை உப்பின் – white salt’s, கொள்ளை சாற்றி – announcing the purchase price, calling out the purchase price (கொள்ளை – கொள்ளுதற்குரிய விலை), நெல்லொடு வந்த – came with rice paddy, வல்வாய் பஃறி – sturdy boats, பணை நிலை – standing in the stalls, புரவியின் – like horses, அணை – raised bank, shore wall, முதல் பிணிக்கும் – tied to posts, கழி – brackish waters, backwaters, சூழ் – surrounded, படப்பை – groves, கலி யாணர் – new income, abundant prosperity, பொழில் – orchards, புறவின் – nearby, on the side, பூந்தண்டலை – flower-filled groves
பொய்கையும் ஏரியும்
மழை நீங்கிய மா விசும்பின்,
மதி சேர்ந்த மக வெண்மீன் 35
உருகெழு திறல் உயர் கோட்டத்து,
முருகு அமர் பூ முரண் கிடக்கை,
வரி அணி சுடர் வான் பொய்கை
இரு காமத்து இணை ஏரிப்; (34-39)
Lakes and pond
In the vast land, there is a bright pond
that is beautiful as in a painting, with
a well-built high shoreline surrounded
by many fragrant flowers, looking like
the white makam star near the moon in the
huge sky without clouds.
There are two lakes signifying the pleasures
of both this world and the next one.
Notes: உயர் கோட்டத்து (36) – பொ. வே. சோமசுந்தரனார் – ‘உயர்ந்த கரைகளையுடைய’, நச்சினார்க்கினியர் – ‘இனி உயர் கோட்டத்தை எல்லாரும் மதியைச் சேர்ந்த மகவெண்மீனைப் பார்க்கைக்கு இடமாகிய கோயிலாக்கிக் கோயிலும் பொய்கையும் என எண்ணுதலுமாம்; இனிப் பொய்கைக் கரையிலே கோயிலாக்கி கோயிலும் பொய்கையும் மதி சேர்ந்த மகவெண்மீன் போன்ற வென்றுமாம்’.
Meanings: மழை நீங்கிய – clouds removed, without clouds, மா விசும்பின் – of the huge sky, மதி சேர்ந்த – near the moon, மக வெண்மீன் – a white star called Makam which is the tenth lunar star, உருகெழு – with fine structure, திறல் – strength, உயர் கோட்டத்து – with tall banks, with tall temples, முருகு அமர் – with fragrance, பூ முரண் கிடக்கை – many kinds of flowers were there, வரி – drawing/painting, அணி – beauty, சுடர் – brightness, வான் பொய்கை – bright ponds, lovely ponds, இரு காமத்து – two kinds of pleasures (of this world and of the next world), இணை ஏரி – two adjoining lakes