New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொருநராற்றுப்படை


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பொருநராற்றுப்படை
Permalink  
 


பொருநராற்றுப்படை

 http://sangacholai.in/10-2.html

 

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்
விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை	5
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி	10
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண்நா இல்லா அமைவரு வறு வாய்
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்
கண்கூடு இருக்கை திண் பிணி திவவின்	15
ஆய் தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசி தொடையல்
மணம் கமழ் மாதரை மண்ணீ அன்ன
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி	20
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி
அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல்	25
கொலை வில் புருவத்து கொழும் கடை மழை கண்
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய்
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
பூ குழை ஊசல் பொறை சால் காதின்	30
நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின்
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து	35
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை
நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டு என உணரா உயவும் நடுவின்
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்
இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின்	40
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின்
பரல் பகை உழந்த நோயொடு சிவணி
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள்	45
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின்
பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி
பாடின பாணிக்கு ஏற்ப நாள்தொறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி
இலை இல் மராத்த எவ்வம் தாங்கி	50
வலை வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில்
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்
முரசு முழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல		55
பாடல் பற்றிய பயன் உடை எழாஅல்
கோடியர் தலைவ கொண்டது அறிந
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது
ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே
போற்றி கேள்மதி புகழ் மேம்படுந		60
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று
எழுமதி வாழி ஏழின் கிழவ
பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன்
இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின்	65
நசையுநர் தடையா நன் பெரு வாயில்
இசையேன் புக்கு என் இடும்பை தீர
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி	70
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய
கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்ப கூறி			75
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ
பருகு அன்ன அருகா நோக்கமோடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ
ஈரும் பேனும் இருந்து இறைகூடி
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த	80
துன்னல் சிதாஅர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து
அரவு உரி அன்ன அறுவை நல்கி
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர்	85
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு பேர் அஞர் போக்கி
செருக்கொடு நின்ற காலை மற்று அவன்
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி		90
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயம் எய்திய அளவை மான
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து		95
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப
கல்லா இளைஞர் சொல்லி காட்ட		100
கதுமென கரைந்து வம் என கூஉய்
அதன் முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்து
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு என தண்டி
காழின் சுட்ட கோழ் ஊன் கொழு குறை	105
ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி
அவையவை முனிகுவம் எனினே சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒள் நுதல் விறலியர் பாணி தூங்க	110
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள்
அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல் வறை கருனை காடியின் மிதப்ப	115
அயின்ற காலை பயின்று இனிது இருந்து
கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள்
செயிர்த்து எழு தெவ்வர் திறை துறைபோகிய	 120
செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லென கிளந்தனம் ஆக வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு என
சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு
துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு	125
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என
தன் அறி அளவையின் தரத்தர யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென் வென் வேல்
உருவ பல் தேர் இளையோன் சிறுவன்	130
முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில்
தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப
பவ்வமீமிசை பகல் கதிர் பரப்பி		135
வெவ் வெம் செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல்
நாடு செகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப
ஆளி நன் மான் அணங்கு உடை குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி	140
முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு
இரும் பனம் போந்தை தோடும் கரும் சினை
அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும்
ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த	145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய
வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள்
கண் ஆர் கண்ணி கரிகால்வளவன்
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி
தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று   150	
ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும்
கையது கேளா அளவை ஒய்யென
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கி தூய
கொட்டை கரைய பட்டு உடை நல்கி	155
பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என
பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல்வைகல் கை கவி பருகி
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலிய சூட்டி		160
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடும் தேர்
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி	165
காலின் ஏழ் அடி பின் சென்று கோலின்
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு
பேர் யாழ் முறையுளி கழிப்பி நீர் வாய்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
நன் பல் ஊர நாட்டொடு நன் பல்		170
வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவு இடை தங்கல் ஓவு இலனே வரவு இடை
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி தெற்றென
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து	175
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென
திரை பிறழிய இரும் பௌவத்து
கரை சூழ்ந்த அகன் கிடக்கை
மாமாவின் வயின்வயின் நெல்		180
தாழ் தாழை தண் தண்டலை
கூடு கெழீஇய குடி வயினான்
செம் சோற்ற பலி மாந்திய
கரும் காக்கை கவவு முனையின்
மனை நொச்சி நிழல் ஆங்கண்		185
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்டல் அயரவும் முதியோர்
அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்
முட காஞ்சி செம் மருதின்
மட கண்ண மயில் ஆல		190
பைம் பாகல் பழம் துணரிய
செம் சுளைய கனி மாந்தி
அறை கரும்பின் அரி நெல்லின்
இன களமர் இசை பெருக
வறள் அடும்பின் இவர் பகன்றை		195
தளிர் புன்கின் தாழ் காவின்
நனை ஞாழலொடு மரம் குழீஇய
அவண் முனையின் அகன்று மாறி
அவிழ் தளவின் அகன் தோன்றி
நகு முல்லை உகு தேறு வீ		200
பொன் கொன்றை மணி காயா
நல் புறவின் நடை முனையின்
சுற வழங்கும் இரும் பௌவத்து
இறவு அருந்திய இன நாரை
பூ புன்னை சினை சேப்பின்		205
ஓங்கு திரை ஒலி வெரீஇ
தீம் பெண்ணை மடல் சேப்பவும்
கோள் தெங்கின் குலை வாழை
கொழும் காந்தள் மலர் நாகத்து
துடி குடிஞை குடி பாக்கத்து		210
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப
கலவம் விரித்த மட மஞ்ஞை
நிலவு எக்கர் பல பெயர
தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்		215
தீம் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர்		220
நீல் நிற முல்லை பல் திணை நுவல
கானக்கோழி கதிர் குத்த
மனை கோழி தினை கவர
வரை மந்தி கழி மூழ்க
கழி நாரை வரை இறுப்ப		225
தண் வைப்பின் நால் நாடு குழீஇ
மண் மருங்கினான் மறு இன்றி
ஒரு குடையான் ஒன்று கூற
பெரிது ஆண்ட பெரும் கேண்மை
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்	230
அன்னோன் வாழி வென் வேல் குரிசில்
மன்னர் நடுங்க தோன்றி பல் மாண்
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ	235
கருவி வானம் கடல் கோள் மறப்பவும்
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறைதுறைதோறும் பொறை உயிர்த்து ஒழுகி
நுரை தலை குரை புனல் வரைப்பகம் புகுதொறும் 240
புனல் ஆடு மகளிர் கதுமென குடைய
கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடு கோடு ஆக பிறக்கி நாள்தொறும்
குன்று என குவைஇய குன்றா குப்பை
கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் 245
சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே


-- Edited by Admin on Wednesday 2nd of October 2019 03:06:13 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,
விழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,
வேற்றுப்புலத்தை எய்த நினைத்த விவேகத்தை அறிந்த பொருநனே,
(மானின்)குளம்பு (பதிந்த)இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து நடுவுயர்ந்த)பத்தலினையும்;
விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல்,   5
(பிறரால் நன்கு)அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல்
மென்மையாகிய மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல,
இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்த (மரத்தைத் தன் அகத்தே)பொதிதலுறும் போர்வையினையும்;
வளையில் வாழ்கின்ற நண்டின் கண்னைக் கண்டது போன்ற
(பத்தலிரண்டும் சேர்த்தற்குத் திறந்த)துளைகளின் வாய் மறைய முடுக்குதலமைந்த ஆணியினையும்;	10
(உவாவிற்கு)எட்டாம் நாள் (தோன்றும்)திங்களின் வடிவினையுடையது ஆகி,
உள்நாக்கு இல்லாத (நன்றாக)அமைதல் பொருந்திய வறிய வாயினையும்;
பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்;
கருநிறப்பெண்ணின் முன்கையில் (அணியப்பட்ட)அழகிய வளையலை ஒத்ததும்,
(ஒன்றோடொன்று)நெருங்கின இருப்பையுடையதும், திண்ணிய பிணிப்புடையதும் ஆகிய வார்க்கட்டினையும்; 15
ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற
(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்
இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய, தொடர்ச்சியையும்,
(புது)மணக்கோலம் பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற,
(யாழ்க்குரிய)தெய்வம் நிலைத்துநின்ற (நன்கு)அமைந்துவரப்பெற்ற தோற்றத்தையுடைய,		20
வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை -
(நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும்,
சீர்களை உடைய பண்ணை நீர்மையுடன் பரப்பி -
(ஆற்றின்)அறல் போலும் கூந்தலினையும், பிறை போல் அழகிய நுதலினையும்,			25
கொலை செய்யும் வில் (போன்ற)புருவத்தினையும், அழகிய கடையையுடைய குளிர்ச்சியுள்ள கண்ணினையும்,
இலவின் இதழை ஒக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும்,
பலவும் சேர்ந்த முத்துக்கள் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும்,
மயிரைக் குறைக்கின்ற கத்தரிகையின் சிறப்பாயமைந்த கடைப்பகுதியை ஒத்ததும்,
பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும்,	30
நாணம் (தன்னை)அழுத்த (பிறரை நோக்காது)கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும்,
அசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,
நெடிய மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள் (போலும்)மெல்லிய விரலினையும்,
கிளியின் வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெரிய நகங்களையும்,
(பிறர்க்கு)வருத்தம் எனத் தோற்றின தேமல் அணிந்த மார்பினில்					35
ஈர்க்கு(ம்) நடுவே போகாத எழுச்சியையும் இளமையையும் உடைய அழகிய முலையினையும்,
நீரிடத்துப் பெயர்தலையுடைய சுழி போலச் சிறந்த இலக்கணம் அமைந்த கொப்பூழினையும்,
உண்டென்று பிறரால் உணரப்படாத வருந்துகின்ற இடையினையும்,
(பல)வண்டினங்களின் இருப்பை ஒத்த பலமணி (கோத்த வடங்களையுடைய மேகலை அணிந்த)அல்குலையும்,
பெரிய பெண் யானையின் பெரிய கை போல நெருங்கி ஒன்றித் திரண்ட துடையினையும், 	40
பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட திருத்தமான கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த
ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில் ஏற்பட்ட)-
சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால்
பரல் கல்லாகைய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி,
மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,				45
நல்ல உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவே தவிர்த்தலால்
பெடை மயிலின் சாயலினையும் உடைய கல்விப்பெருமை தக்கிருக்கின்ற பாடினி
பாடின தாளத்திற்கு ஏற்ப, நாள்தோறும்
யானை உலாவரும் வழிகளை உடைய காட்டிடத்தே தங்கி,
இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி,					50
வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்,
காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு -
பெருமை பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும்,
முரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து
(திருவோலக்க மண்டபத்தே)அரசு வீற்றிருக்கும் காட்சியைப் போல -				55
(பல்வேறுவகைப்)பாடல்களையும் பற்றி(த் தோன்றும்) இசைப்பயனையுடைய யாழை உடைய
கூத்தர்கட்குத் தலைவனே, (பிறர் மனத்துக்)கொண்டதை(க் குறிப்பால்) அறிய வல்லோய்,
(வழி)அறியாமையினால் (இவ்)வழியைத் தப்பி (வேறொரு வழியில்) போகாமல்,
இவ்வழிக்கண் (என்னை நீ)சந்தித்ததுவும் (நீ முற்பிறப்பில்)தவம்செய்ததன் பயனே,
விரும்பிக் கேட்பாயாக, புகழை மேம்படுத்த வல்லோய்,						60
கொல்லுகின்ற பசியால் வருந்தின உன் கரிய பெரிய சுற்றத்தோடு,
நீடித்த நாட்களாய் இருக்கும் பசி (உன்னை)விட்டு நீங்குதலை விரும்பினால், கால நீட்டித்தல் இன்றி
எழுவாயாக, நீ வாழ்வாயாக, (நரம்பு)ஏழின் கண்ணும் உரிமை உடையோய்,
பழுத்த மரத்தை நினைத்துச் செல்லும் பறவையைப் போல, யானும், அவனுடைய
இழுமென்றெழும் ஓசையினையுடைய (அகலமான)வெளியை உடைய மதிலில்,			65
விரும்பி வந்தாரைத் தடுக்காத நல்ல பெரிய (கோபுர)வாயிலினுள்
(வாயிலோனுக்குக்)கூறாமற் புகுந்து, என்னுடைய துன்பம் தீர,
இளைத்த உடம்பையுடையேன் இளைப்பில்லாதவனாய் ஆகி,
படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப,
கை அழுக்கு இருந்த என் கண் அகன்ற உடுக்கையில் (தோற்றுவித்த)				70
இரட்டைத் தாளத்திற்கு ஏற்ப, விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே,
ஒரு பாட்டினை யான் பேணிப் பாடி முடிக்கும் முன்னே - (தன்னோடு)பொருந்திய
உறவினரைப் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி,
(தன்)உபசரிப்பிற்கு வழிமுறையாக (யான்)விரும்புமாறு (முகமன்)பொழிந்து,			75
(தன்)கண்ணில் படும்படியாக (தனக்குப்) பக்கத்து இடத்தில் (என்னை)இருத்தி,
(என்னைக்)கண்ணால் விழுங்குவது போன்ற குறையாத பார்வையால்,
உருக்கக்கூடிய(வெண்ணெய் முதலிய)வை போன்று (என்)எலும்பு(ம்) (நெகிழும்படி)குளிர் மூட்டி,
ஈரும் பேனும் இருந்து ஆட்சிசெய்து,
வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு				80
தைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி,
பார்வை நுழைய முடியாத நுண்மையை உடையதும், பூத்தொழில் நன்கமைந்ததும்,
(மென்மையால்)பாம்பின் தோலை ஒத்ததும் ஆன துகிலை நல்கி,
முகில்களோ என்று மருளுதற்குக் காரணமான மகிழ்ச்சியை விளைவிக்கும் மாடத்தில்,
இழைகளை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர்,					85
குற்றம் அற்ற பொன்(னால் செய்த)வட்டில் நிறைய, பல முறையும்
வார்த்துத் தந்துகொண்டே இருக்க, (வழிப்போன)வருத்தம் போம்படி,
நிறைய உண்டு, பெரிய வருத்தத்தைப் போக்கி,
மகிழ்ச்சியோடே (யான்)நின்ற போது - மேலும், அம் மன்னனுடைய
செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து,				90
(மிக்க)தவத்தைச் செய்யும் மக்கள் தம்முடைய (தவம் செய்த)உடம்பைப் பிரியாமல் இருந்தே
(இம்மை உடம்போடு)அத்தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப,
வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,
கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு
மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து,			95
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி,
வலிய வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த (என்)உள்ளம் உவக்கும்படியும்,
(அரச முறைமையை இன்னும்)கற்றுக்கொள்ளாத (எம்)இளைஞர் (எம் வரவைக்)கூவி எடுத்துக்கூற,	100
விரைவாக அழைத்து, ‘வருக வருக' என்று உரத்துச் சொல்லி,
அரசனைக் காணும் முறைகளைச் செய்து முடித்த பின்னர், காலமறிந்து,
அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக' என்று வற்புறுத்தி,
இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை	105
மாற்றி மாற்றி வாயின் (இடத்திலும் வலத்திலும்)(அத்தசைகளின்)வெப்பத்தை ஒற்றியெடுத்து,
புழுக்கினவும் சுட்டனவும் ஆகிய அவற்றை(த் திகட்டிப்போய்) வெறுக்கிறோம் என்கையில், இனிமையுடைய
வெவ்வேறான பல வடிவினையுடைய தின்பண்டங்களைக் கொணர்ந்து (எங்களை)இருத்தி,
மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய
ஒளிவிடும் நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட,					110
(இவ்விதமாய்)மகிழ்கின்ற செவ்வியைப் பலநாளும் பெற்றுக்கழித்து, ஒருநாள்,
‘சோற்று உணவை(யும்) கொள்வாயாக' என்று வேண்ட, (முல்லை)அரும்பின் தன்மையையுடைய
(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும்,
பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி	115
உண்டபொழுதின், இடையறாது பழகி இனிதாக உடனுறைந்து,
கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள்
பகலும் இரவும் இறைச்சியைத் தின்று (முனை)மழுங்கி,
மூச்சு விடுவதற்கும் இடம்பெறாமையால், அவ்வுணவுகளை வெறுத்து, ஒருநாள்,
‘குற்றத்தைச் செய்து எழுந்த பகைவரிடம் திறைகொள்ளும் முறைகளில் தேர்ச்சிபெற்ற		120
செல்வனே, (யாங்கள்)செல்வேம் - எம்முடைய (பழைய)சுற்றத்தாரிடம், (உம்மை)விட்டு' என்று
மெதுவாகச் சொன்னேமாக, ‘(இவ்வளவு)சீக்கிரம்
போகின்றீரோ (எம்)கூட்டத்தைவிட்டு' என்று கூற
வெகுண்டவனைப் போன்று (எமக்கு)வருத்தத்தைச் செய்த பார்வையுடன்,
‘துடி போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன்,			125
பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக' என்று
தான் அறிந்த அளவால் தரத்தர, யானும்
யான் அறிந்த அளவில் (எனக்கு)வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு,
(என்)இல்லாமை (முற்றிலும்)அற்றுப்போக வந்தேன், வென்ற வேலினையும்
அழகினையும் பல தேர்களையும் உடைய இளயவனான சிறுவன்,				130
முருகனது (சீற்றம் போலும்)சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவன்,			
(தன்)தாய் வயிற்று இருந்த போதே அரசவுரிமை பெற்று(ப் பிறந்து),
(தன் வலிமை)அறியாத பகைவர் ஏவின தொழிலைச் செய்ய,
(ஏவல்)செய்யாத பகைவர் நாடு மனக்கவற்சி பெருக,
கடல் மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி,				135
(எல்லோராலும்)விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற் போன்று,
பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல
நாட்டை(த் தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால்,
சிங்கம் (ஆகிய)நல்ல விலங்கின், வருத்துதலை உடைய குருளையானது -
இளமை(பொங்கும்) தோள்களின் மிகுந்த வலிமையால் செருக்கி,				140
முலையுண்டலைக் கைவிடாத அளவிலே(யே) கடுகப் பாய்ந்து,					
(தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று,
கரிய பனையாகிய போந்தையின் மாலையினையும், கரிய கொம்பினையுடைய,
அர(த்தின்) வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும்,
உயர்ந்த பெரிய தலையில் சிறப்பாகச் சூடிய							145
இரு பெரிய மன்னர்களும் ஒரே களத்தில் பட்டழியும்படி,						
வெண்ணி என்கிற ஊரில் பொருத அச்சந் தோன்றுகின்ற வலிமையையுடைய முயற்சியையும்,
கண்-நிறைந்த ஆத்தி மாலையினையும் உடைய கரிகாற்சோழனின்,
திருவடி நிழலின் பக்கத்தை அணுகிக் கிட்டே நெருங்கி
வணங்கி (அவன்)முன்னே நிற்பீராயின், (உம்)வறுமை நீங்க					150
ஈன்ற பசு (அதன் கன்றை நோக்கும்)விருப்பம் போன்ற விருப்பத்தோடு உம்மை விரும்பிப் பார்த்து, உம்
கைத்திறனை(கலையை)(த் தான்) கேட்டு முடிவதற்கு முன்னரே, விரைந்து
பாசியின் வேர் போல் அழுக்குடன் சுருங்கிப்போன,
தையலையுடைய துணிகளை நீக்கி, தூய
(பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து,				155
‘பெறுதற்கரிய (பொற்)கலத்தில் விரும்பியபடி உண்பாயாக' என்று,
பூ மணக்கின்ற கள்தெளிவை (மேலும்மேலும்)வார்த்துத் தரத்தர,
தினம் தினம் (வேண்டாம் வேண்டாம் எனக்)கையைக் கவிழ்க்கும் அளவிற்குக் குடித்து,
நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத தாமரையை,
சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி,							160
நூலால் கட்டாத நுண்மையினையும் பிணக்கத்தையும் உடைய பொன்னரிமாலையை
வெண்மையான ஒளியையுடைய முத்தத்தோடு பாடினி சூடத் தந்து,
(யானைக்)கொம்பாற் செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரில்,
(சாதிலிங்கம்)ஊட்டின தலைச்சிறகுகள் அலையாட, பிடரி மயிர் அசையப்,
பாலை ஒத்த (நிறத்தினையுடைய)குதிரைகள் நான்கினைச் சேரப் பூட்டி,				165
(தன்)காலால் ஏழு அடி பின்னே வந்து, தார்க்குச்சியில்
முள்ளை அகற்றி, ‘(இவ்வாறு)ஏறுவாயாக' என(க்காட்டி) ஏறச்செய்து, வீறுபெற்ற
யாழ்ப்பாணர்க்குக் கொடுக்கும் முறைகளை (உனக்குத்)தந்துவிட்டு, நீர் (நன்கு)வாய்க்கப்பெற்ற
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய
நல்ல பல ஊர்களையுடைய நாடுகளுடனே, நல்ல பல,						170
வெருட்டும் பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும்,
அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
(இவன் பிறர்க்குக் கொடை)தரும்போது(அதில்)நிலைகொள்ளலில் ஒழிதல் இலன், (உமக்கு வந்த)வரவின் போது
பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக
(உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு,		175
(ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,
‘(நீயிர்)செல்வீராக' என விடுவான் அல்லன், ஒல் எனும் ஓசையுண்டாகத்
திரை முரிந்த கரிய கடலின்
கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,
ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின் -					180
தாழ்ந்த தெங்கினையுடைய குளிர்ந்த மரச்சோலைகளிடத்தே,
- கூடு பொருந்தின வளமிக்க குடியிருப்புகளில்,
(உதிரத்தால்)சிவந்த சோற்றையுடைய படையலை விழுங்கின
கரிய காக்கை அகத்தீடான உணவை வெறுத்ததாயின்,
மனை(யைச் சூழ்ந்த) நொச்சியின் நிழலில்,							185
(மணலுக்குள் முட்டை)பொரித்து வந்த ஆமையின் குஞ்சைப் பின்னர் தின்பதற்காக பாதுகாத்து வைப்பவும்,
இளையோர் மணல்வீடு(கட்டி) விளையாடவும், முதியோர்
(நீதி வேண்டி)அவைக்களம் புகும்பொழுதிலேயே பகையின் மாறுபாடு (அகன்று அன்பு)கொள்ளவும்,
முடக்காஞ்சி மரத்திலும், செம்மருத மரத்திலும் இருந்த,
மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மயில்கள் ஆரவாரிக்க -					190
பசிய பாகலான பலாப்பழத்தினுள் கொத்தாகவுள்ள,
சிவந்த சுளைகளைக் கொண்ட பழத்தைத் தின்று - (இந்த ஆரவாரத்துடன்)
அறைத்தலைச் செய்யும் கரும்புக் கழனிகளிடத்தும், அரிதலைச் செய்யும் நெற் கழனிகளிடத்தும்,
திரண்ட உழவருடைய பண்ணொலி மிகுதியாய் ஒலிப்பதால் -
நீரற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும், படர்கின்ற பகன்றையினையும்,			195
தளிரையுடைய புன்கினையும், தாழ்ந்த சோலைகளும்,
தளிர்விட்ட ஞாழலோடு, (ஏனை)மரங்களும் கூட்டமாய் உள்ள
அந்நாட்டை வெறுத்தனவாயின், அவ்விடத்தைவிட்டு அகன்று மாறிப்போய்,
மலர்கின்ற செம்முல்லையினையும், பரந்த காந்தள் மலரினையும்,
மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும், 			200
பொன்னிறம் போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், மணி போன்ற காயா மலரினையும் உடைய,
நல்ல முல்லைக் காட்டில் சென்றும் (அந்நில ஒழுக்கத்தையும்)வெறுத்தனவாயின்,
சுறாமீன் திரியும் கரிய கடலில்
இறவினைத் தின்ற திரண்ட நாரைகள் (இருக்கும்)
பூக்களையுடைய புன்னையின் கொம்புகளில் தங்கின்,						205
உயர்ந்த அலையின் ஆரவாரத்திற்கு வெருவி,
இனிய பனையின் மடலில் தங்கவும்,
கொத்துக்கொத்தான (காய்களைக் காய்க்கும்)தெங்கினையும், குலையினையுடைய வாழையினையும்,
கொழுவிய காந்தளினையும், மலர்ந்த சுரபுன்னையினையும்,
துடி(யின் ஓசை போன்ற ஓசையையுடைய) பேராந்தையையுடைய குடி(யிருப்பை உடைய) பாக்கத்தில்,	210
யாழ்(ஓசை போலும்) வண்டின் பாட்டுக்கேற்ப,
தோகையை விரித்த மடப்பத்தையுடைய மயில் (இருக்கும்)
நிலவு (போலும்) இடுமணல் பலவற்றில் இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து செல்ல,
தேனாகிய நெய்யோடு, கிழங்கை(யும்) விற்றவர்கள்
மீனின் நெய்யோடு நறவையும் மாறாகக் கொண்டுபோகவும்,					215
இனிய கரும்போடு அவலைக் கூறுபடுத்தி விற்றோர்,
மானின் தசையோடு கள்ளையும் மாறாகக் கொள்ளவும்,
குறிஞ்சிப்பண்ணைப் பரதவர் பாடவும், நெய்தலாகிய
நறிய பூவால் புனைந்த கண்ணியைக் குறவர்கள் சூடவும்,
முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, உழவர்கள்					220
நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்,
காட்டுக் கோழிகள் நெற்கதிரைத் கொத்தித் தின்னவும்,
வீட்டுக் கோழிகள் தினையைத் தின்னவும்,
மலையின் மந்திகள் கழியில் மூழ்கவும்,
கழியில் திரியும் நாரைகள் மலையில் கிடக்கவும்,						225
குளிர்ந்த நிலப்பகுதிகளையுடைய நான்கு கூறாகிய நாடுகள் திரண்டு,
(இம்)மண்ணுலகத்தே, குற்றமின்றி,
ஒரு குடைக்கீழ்(ஒரே ஆட்சியில்) ஒன்றெனச் சாற்ற,
நெடுங்காலம் ஆண்ட பெரிய நட்பையும்,
அறத்தோடு பொருந்திய சார்பினை அறிந்த செங்கோலையும் உடைய,				230
அத் தன்மையையுடையோனே (நீ)வாழ்வாயாக, வெல்கின்ற வேலையுடைய தலைவனே,
(பகை)அரசர் நடுங்கும்படி விளங்கி, பல்வேறு மாண்புகளையுடைய
பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினால்,
கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும்,
அருவிகள் -- பெரிய மலைகளில் -- கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப்போகவும், இவை ஒழிந்த	235
கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,
பெரும் பஞ்சம் உண்டாகிய நற்குணமில்லாத காலத்தும் -
நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும்,
துறைகள்தோறும் துறைகள்தோறும், (தனக்குச்)சுமையானவற்றை ஒதுக்கி, இளைப்பாற நடந்து -
நுரையைத் தலையில் உடைய ஆரவாரத்தையுடைய நீர் குளத்திலும் கோட்டகத்திலும் புகுதொறும்,	240
நீராடும் மகளிர் கடுகக் குடைந்து விளையாட -
குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச்,
சூட்டை மலையாக அடுக்கி, நாள்தோறும்
மலை என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி
உலுக்கிக் குலுக்கிக் கட்டிய மூடைகள் வெற்றிடம் இல்லையாகும்படி (எங்கும்)கிடக்கும்,		245
செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,
ஓராயிரம் கலம் என்னும் அளவில் நெல்லை விளைச்சல் ஆக - (இவ்வாறான)
காவிரியாறு பாதுகாக்கும் நாட்டை உரித்தவன்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை – Porunarātruppadai

Vaidehi Herbert

Copyright ©  All Rights Reserved

பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்
பாடப்பட்டவன் – சோழன் கரிகால் பெருவளத்தான்
திணை – பாடாண்
துறை – ஆற்றுப்படை
பாவகை – ஆசிரியப்பா
மொத்த வரிகள் – 248

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – பத்துப்பாட்டில் இரண்டாம் பாட்டாகத் திகழும் இப்பொருநராற்றுப்படையை யாத்தவர் முடத்தாமக் கண்ணியார் என்னும் நல்லிசைப் புலவராவார்.  இவரைப் பெண்பாற் புலவர் என்று கூறுவாரும் உளர்.  தொல்காப்பிய உரையின்கண் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 22 – இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி பலர்க்கு உரி எழுத்தின் வினையொடு முடிமே, சேனாவரையர் உரை) ஆர் விகுதி பன்மையோடு முடிதற்கு ‘முடத்தாமக் கண்ணியார் வந்தார்’ என்று எடுத்துக் காட்டப்  பட்டிருப்பதால் இவர் பெயர் முடத்தாமக் கண்ணி என்பதாம் என்பர்.

This song has 248 lines in Āsiriyappā/Akaval meter.  It was written by Mudathāmakkaniyār.  The king here is Chōlan Karikālan. The poet mentions the king’s victory at the battle of Venni, his prowess and rule.  The fertility and wealth of the Chōla country is described in detail.  There is also a delightful description of a virali.

அறாஅ யாணர் அகன்தலைப் பேரூர்
சாறு கழி வழிநாள் சோறு நசை உறாது,
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந! (1-3)

O bard who always knows
to do the proper thing!
Not desiring food given out
on the day after the festivals
end, in the big town with vast
land and unending prosperity,
you want to leave for the next
country!

Notes:  பொருந (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருநர் என்பவர் ஏர்க்களம் பாடுவோர் போர்க்களம் பாடுவோர் பரணி பாடுவோர் எனப் பல திறப்படுவோர்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  அறாஅ யாணர் – unending prosperity, continued prosperity (அறாஅ – இசை நிறை அளபெடை), அகன்தலை – wide space, பேரூர் – big town, சாறு கழி – after the festivities are over, வழிநாள் – the next day, சோறு நசை உறாது – not desiring rice/food, வேறு புலம் முன்னிய – desiring to go to another land, விரகு அறி பொருந – O bard who knows what is right, O bard who is intelligent (Porunars were war bards who sang the praises of the kings during war)

பாலை யாழின் வருணனை

குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்,
விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை,   5
எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை,
அளை வாழ் அலவன் கண் கண்டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி,   10
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண்ணா வில்லா அமைவரு வறுவாய்ப்,
பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்,
மாயோள் முன் கை ஆய் தொடி கடுக்கும்,
கண் கூடு இருக்கைத் திண் பிணித் திவவின்,   15
ஆய் தினையரிசி அவையல் அன்ன,
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசித் தொடையல்
மணம் கமழ் மாதரை மண்ணியன்ன,
அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி   20
ஆறலைக் கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை, (4 – 22)

Description of the Pālai Lute

The Pālai lute is shaped like the
hoof track of a deer, its pot
section has two parts and is slanting
on the sides, its tightly tied leather
top in the color of flame from a lamp,
its sewn covers resembling the
flowing, delicate hair on the beautiful
stomach of a pretty, pregnant woman
whose early pregnancy is not known
to others, its nails that are driven in
hide the holes that appear like
the eyes of crabs that live in tunnels,
its sound hole without tongue has the
shape of an eighth day crescent moon,
its long and dark stem is like a
cobra’s lifted head, its frets tied tightly
close to each other are like pretty
bangles on the forearms of a dark
women, its strings plucked by fingers
are tied, long and faultless like pounded
fine millet with chaff removed,
and its body is beautiful like that of a
fragrant, decorated woman, sweet
like possessing a goddess within, faultless,
making even wayside bandits lose
their harshness and drop their weapons.

Notes:  மருவு இன் பாலை (22) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மருவு இன் பாலை என்றது கேட்குந்தோறும் பயிலுந்தோறும் வெறாஅது இனிமை மிகுதற்கியன்ற பாலை யாழ் என்றவாறு.

Meanings:  குளப்புவழி அன்ன – like the imprint of hoof (of a deer), கவடுபடு பத்தல் – pot which is of two parts with a split part on one end (and the center high and the sides low according to Po. Ve. Somasundaranar urai), விளக்கு அழல் உருவின் – like the color of flame from a lamp, விசியுறு பச்சை – tied leather, எய்யா இளஞ்சூல் – unaware of early pregnancy, செய்யோள் – red colored woman, perfect woman, அவ் வயிற்று – with a beautiful stomach, ஐது மயிர் – delicate hair, ஒழுகிய – flowing, தோற்றம் போல – appearing like, பொல்லம் பொத்திய – pieces sewn and attached, பொதியுறு போர்வை – lid that covers, அளை வாழ் அலவன் – crabs that live in holes, கண் கண்டன்ன – like seeing their eyes, துளைவாய் – hole openings, தூர்ந்த – filled, closed, துரப்பு அமை ஆணி – nail that is driven in, எண் நாள் திங்கள் – eighth day moon, வடிவிற்று ஆகி – got that shape, அண் நா இல்லா – without inner tongue, அமைவரு – suitably வறுவாய் – sound hole/mouth without tongue, பாம்பு அணந்து அன்ன – like a snake/cobra lifting its head, ஓங்கு – long, இரு – dark, மருப்பின் – with a stem, மாயோள் முன் கை ஆய் தொடி கடுக்கும் – like the fine bangles on the forearms of a dark woman, கண் கூடு இருக்கை – close to each other, திண் பிணி – tightly tied, திவவின் – with frets, ஆய் தினை அரிசி – tiny/chosen/beautiful millet grain, அவையல் அன்ன – like pounded, வேய்வை போகிய – fault removed, விரல் உளர் நரம்பின் – with strings plucked by fingers, கேள்வி போகிய – music ended, நீள் விசித் தொடையல் – long tightly tied strings, மணங்கமழ் மாதரை – the fragrant women, the women getting married, மண்ணி அன்ன – make up like, அணங்கு – goddess, மெய்ந்நின்ற – existed in the body, அமைவரு – in the proper methods, காட்சி – appearing, ஆறலைக் கள்வர் – wayside bandits (கள்வர் – கள்வரும் எனற்பாலது செய்யுள் விகாரத்தால் உம்மை தொக்கு.  ஆறலைக்கள்வரும்), படை விட – to drop their weapons, அருளின் மாறு தலைபெயர்க்கும் – it removes what is opposite of kindness/harshness from there, மருவு இன் – with sweetness when listening to the music that arises, பாலை –pālai lute



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 யாழை வாசிக்கும் முறை

வாரியும், வடித்தும், உந்தியும், உறழ்ந்தும்,
சீருடை நன் மொழி நீரொடு சிதறி; (23-24)

Playing the Lute

Stroking with the index finger,
strumming with the thumb and index fingers
together, plucking gently and strongly the different
strings, it creates vibrating music, sung with lovely
lyrics.

Notes:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வார்தல் என்றது சுட்டு விரல் செய்தொழில்.  வடித்தல் என்றது சுட்டுவிரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்.  உந்தல் என்றது நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும், மெலிவிற்பட்டதும், நிரல்பட்டதும், நிரலிலி பட்டதும் என்றறிதல்.  உறழ்தல் என்றது ஒன்றை இட்டும் இரண்டை இட்டும் ஆராய்தல்.  சிலப்பதிகாரம் – வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன். (கானல் – 12-13).

Meanings:  வாரியும் – stroking with index finger, வடித்தும் – strumming with thumb and index finger together, உந்தியும் – plucking gently and in a strong manner, உறழ்ந்தும் – plucking different strings – using the left index finger, using the right index finger, index finger and thumb together, with both thumbs together, சீருடை நன் மொழி – special fine songs with rhythm, நீரொடு – with fine nature, சிதறி – spreading

பாடினியின் வருணனை

அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல்,   25
கொலை வில் புருவத்துக் கொழுங்கடை மழைக் கண்,
இலவிதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்ப்
பல உறு முத்தின் பழி தீர் வெண்பல்,
மயிர் குறை கருவி மாண் கடையன்ன
பூங்குழை ஊசல் பொறை சால் காதின்,  30
நாண் அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்,
ஆடு அமைப் பணைத் தோள் அரி மயிர் முன்கை,
நெடு வரை மிசைஇய காந்தள் மெல் விரல்,
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்,
அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து   35
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை,
நீர்ப் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டென உணரா உயவும் நடுவின்
வண்டு இருப்பன்ன பல் காழ் அல்குல்,
இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின்   40
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப,
வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி,
அரக்கு உருக்கு அன்ன செந்நிலன் ஒதுங்கலின்
பரல் பகை உழந்த நோயொடு சிவணி
மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள்,   45
நன்பகல் அந்தி நடையிடை விலங்கலின்
பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி; (25-47)

Description of the Female Singer

The greatly esteemed singer’s
hair is like fine flowing sand,
her beautiful forehead is like the
crescent moon, curving eyebrows
appear like bows of warriors
who kill, moist eyes are huge,
lips that utter sweet words are
like red ilavam flower petals,
faultless white teeth are like pearls
strung together, patient
ears bearing beautiful swaying
earrings appear like the handles
of scissors that trim hair, her
splendid neck slanted by shyness,
arms like swaying bamboo, delicate
hair on her forearm, fingers
like the petals of glory lily flowers
that grow on towering mountains,
lovely fingernails like parrot beaks,
stately appearance with beauty spots
decorating the chest,
voluptuous young tight breasts
that don’t have space between them
even for a palm rib, navel like
that of a swirling whirlpool water,
a delicate waist that doesn’t appear
to be there, a hanging,
beehive-like, multi-colored gem
ornament on her loins,
full thighs like a female elephant’s
big trunks, perfect legs with just enough
hair, and proud, small feet elegant like
the tongues of tired dogs.

She walks on the pebbled red earth that is
like melted wax, causing pain to her feet.
The boils on her soles, with liquid, appear like
maral fruits.  She, who avoids walking on the
street at mid-day, is beautiful like a peahen.

Notes:  நாயின் நாக்கு அன்ன அடி:  நற்றிணை 252 – கத நாய் நல் நாப் புரையும் சீறடி, மலைபடுகடாம் 42-43 – ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடி, பொருநராற்றுப்படை 42 – வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி, சிறுபாணாற்றுப்படை 17-18 – உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் அடி. பிடி யானையின் தும்பிக்கையைப் போன்ற தொடை: சிறுபாணாற்றுப்படை 19-20 – இரும் பிடித் தடக் கையின் சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு.  காந்தள் இதழ் போன்ற விரல்:  முல்லைப்பாட்டு 95 – கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 – காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 – கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 – காந்தள் மெல் விரல், புறநானூறு 144 – காந்தள் முகை புரை விரலின்.  முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல்,  பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.  அறல் போல் கூந்தல்:  அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங் கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.

Meanings:  அறல் போல் கூந்தல் – flowing hair that is like fine black sand, பிறை போல் திரு நுதல் – beautiful forehead like the crescent moon, கொலை வில் புருவத்து – with curved murderous bow-like eyebrows, கொழுங்கடை – big sides, மழைக்கண் – moist eyes, இலவிதழ் – ilavam flower petals, silk cotton tree,  Aerua javanica, புரையும் – like (உவம உருபு, a comparison word), இன் மொழி – sweet words, துவர் வாய் – red mouth, coral-like mouth, பல உறு முத்தின் – like many pearls placed together, பழி தீர் – faultless, வெண்பல் – white teeth, மயிர் குறை கருவி – scissors, மாண் கடையன்ன – splendid on the sides, பூங்குழை ஊசல் பொறை சால் காதின் – with patient ears bearing beautiful dangling earrings, நாண் அடச் சாய்ந்த – slanting due to shyness, நலங்கிளர் எருத்தின் – beautiful splendid neck, ஆடு அமை – swaying bamboo like, பணைத் தோள் – thick arms, அரி மயிர் முன்கை – delicate hair on her forearm, நெடு வரை – tall mountains, மிசைஇய – existing above (சொல்லிசை அளபெடை), காந்தள் மெல் விரல் (long petaled) kānthal-like fingers, malabar glory lilies, கிளி வாய் ஒப்பின் – like parrot beaks, ஒளி விடு – bright, வள் உகிர் – proud fingernails, lovely fingernails, அணங்கென – causing fear in others, உருத்த சுணங்கணி ஆகத்து – with a chest with beauty spots, ஈர்க்கு – rib of a palm leaf, இடை போகா – does not go between, ஏர் – beautiful, இள வன முலை – young voluptuous breasts, நீர்ப் பெயர் சுழியின் – like a whirlpool that swirls in flowing water (சுழியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நிறைந்த – filled, கொப்பூழ் – belly button, navel, உண்டென உணரா – not aware that it exists, உயவும் – delicate/sad, நடுவின் – with a waist, வண்டு இருப்பன்ன – like honeybees abode, பல் காழ் அல்குல் – many colored (gems strung) mound, waist, loins, இரும்பிடி – big female elephant, தடக் கையின் – like a big trunk, செறிந்து திரள் குறங்கின் – with thighs that are together and thick, பொருந்து மயிர் – perfect hair, fitting hair, ஒழுகிய – perfect, திருந்து தாட்கு – to perfect legs, ஒப்ப – comparable, like, வருந்து நாய் – tired dogs, நாவின் – like the tongues, பெருந்தகு சீறடி – proud small feet, அரக்கு உருக்கு அன்ன – like wax melted, செந்நிலன் – red land (நிலன் – நிலம் என்பதன் போலி), ஒதுங்கலின் – while walking, பரல் பகை – pebbles causing pain, உழந்த – involved (walking on it), நோயொடு சிவணி – with pain, மரல் – bowstring hemp plant, Sansevieria trifasciata, பழுத்தன்ன – like ripe, like fruits, மறுகு நீர் – moving liquid, moving water, மொக்குள் – blisters, boils, sores, கொப்புளம், நன்பகல் – mid-day, அந்தி – street junction, நடையிடை விலங்கலின் – due to avoiding walking, பெடை  மயில் உருவில் – looking like a female pea****, பெருந்தகு பாடினி – greatly esteemed female singer

வழிப்படுத்தும் பொருநன்

பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தொறும்
களிறு வழங்கு அதர்க் கானத்து அல்கி,
இலை இல் மராஅத்த எவ்வம் தாங்கி,   50
வலை வலந்தன்ன மென் நிழல் மருங்கில்,
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றைப், (48 – 52)

The Bard Guides the other Bard

Singing to the rhythmic beats of the female
singer every day, you stay in the forest on a path
where bull elephants roam, under kadampam trees
without leaves, their meager shade like nets
tied on them,
and make your offerings to the god who dwells in
the forest.  After that,

Meanings:  பாடின பாணிக்கு ஏற்ப – according to the song sang with rhythmic beats, நாள்தோறும் – each day, களிறு வழங்கு அதர் – paths where male elephants roam, கானத்து – in the forest, அல்கி – staying, இலை இல் மராஅத்த – of kadampam trees without leaves, Kadampa Oak, Anthocephalus cadamba (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), எவ்வம் தாங்கி – tolerating sorrow, வலை வலந்தன்ன – like a net was tied above, மென் நிழல் மருங்கில் – in a place with very little shade, காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை – after doing the offerings to the forest-dwelling god

பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்,
முரசு முழங்கு தானை மூவருங்கூடி,
அரசவை இருந்த தோற்றம் போலப்   55
பாடல் பற்றிய பயனுடைய எழாஅல்
கோடியர் தலைவ கொண்டது அறிந!
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது
ஆற்று எதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே,
போற்றிக் கேண்மதி, புகழ் மேம்படுந! (53 – 60)

you play the lute with benefits of
songs – like wealth with pride, great
fame, strong effort, and the three great
kings owning armies with roaring drums
giving combined audience in an assembly.

O leader of musicians!
You know what others think, and do not lose
your way in ignorance.  It is the benefit
of your penance that we met on this path.
Listen with respect to what I have to say,
you with a great reputation!

Notes:  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

Meanings:  பீடு கெழு திருவின் – with wealth with pride, பெரும் பெயர் – great fame, நோன் தாள் – strong efforts, முரசு முழங்கு தானை – army with roaring drums, மூவருங் கூடி அரசவை இருந்த தோற்றம் போல – appearance like the three kings (Chōlan, Chēran and Pāndiyan) being together in the royal assembly, பாடல் பற்றிய பயனுடைய – with benefits of the song, எழாஅல் – musical notes of the lute (இசை நிறை அளபெடை), கோடியர் தலைவ – O leader of musician/artists, கொண்டது அறிந – O you who understands what others think, அறியாமையின் நெறி திரிந்து – losing the way in ignorance, ஒராஅது – not moving away (இசைநிறை அளபெடை), ஆற்று எதிர்ப்படுதலும் – meeting on the path, நோற்றதன் பயனே – it is due to the benefit of your penances, போற்றிக் கேண்மதி – respect and listen to what I say (கேண்மதி – மதி முன்னிலையசை, an expletive of the second person), புகழ் மேம்படுந – O you who has great fame

ஆடு பசி உழந்த நின் இரும்பேர் ஒக்கலொடு,
நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்று
எழுமதி, வாழி! ஏழின் கிழவ!
பழுமரம் உள்ளிய பறவையின், யானும் அவன்
இழுமென் சும்மை இடனுடைய வரைப்பின்   65
நசையுநர்த் தடையா நன் பெருவாயில்
இசையேன் புக்கு என் இடும்பை தீர
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகிப்,
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி  70
இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப, விரி கதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்,
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய, (61 – 73)

If you desire to remove your killer
hunger along with that of your very
large clan, rise up without delay.
May you live long, lord of the seven
traits of music!

I, like birds, thinking about trees with
fruits, entered the huge, fine, uproarious
gate that was not blocked to those who
came in need, without announcing,
for my sorrow to end.  My exhausted body
became cheerful. When it was pitch dark
at dawn, as Venus rose with its rays,
and even before I sang a song with double
beats, in a desired manner on my thadāri
drum whose wide eyes had my finger
marks that resembled the spots on the
spread hood of a cobra,

Notes:  The seven traits of music:  குரல், கைக்கிளை, உழை, இளி, துத்தம், விளரி, தாரம்.  வெள்ளி தோன்ற:  புறநானூறு 385 – வெள்ளி தோன்றப் புள்ளுக் குரல் இயம்ப புலரி விடியல், புறநானூறு 397 – வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும் உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே பொய்கையும் போது கண் விழித்தன பையச் சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, புறநானூறு 398 – மதி நிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர வகை மாண் நல் இல், பொருநராற்றுப்படை 72 – வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்.  பழ மரமும் புள்ளும்:  புறநானூறு 173 – பழுமரம் புள் இமிழ்ந்தன்ன, புறநானூறு 370 – பழுமரம் உள்ளிய பறவை போல, பெரும்பாணாற்றுப்படை 20 – பழுமரம் தேரும் பறவை போல, பொருநராற்றுப்படை 64 – பழுமரம் உள்ளிய பறவையின், மதுரைக்காஞ்சி 576 – பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல.  பாம்பின் பொறி: குறுந்தொகை 294 – தித்தி பரந்த பைத்து அகல் அல்குல்.  இரும்பேர் ஒக்கல் – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  சும்மை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).

Meanings: ஆடு பசி உழந்த – suffering from killer hunger (பொ. வே. சோமசுந்தரனார் உரை – அடு பசி – ஆடு பசி என முதனீண்டது), நின் இரும் பேர் ஒக்கலொடு – with your very large clan, with your dark large clan, நீடு பசி ஒராஅல் வேண்டின் – if you desire to remove great hunger (ஒராஅல் – இசைநிறை அளபெடை), நீடு இன்று எழுமதி – rise up without delay (மதி – முன்னிலையசை, an expletive of the second person), வாழி – may you live long, ஏழின் கிழவ – O lord of the seven traits of music, பழுமரம் உள்ளிய – thinking about fruit trees (பழுமரம் – வினைத்தொகை), பறவையின் – like birds (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), யானும் – I, அவன் – his, இழுமென் சும்மை – with loud sounds, இடன் உடைய – his wide space, வரைப்பின் – to the palace walls, to the limits of his palace, நசையுநர் – those who come with the desire to get gifts, தடையா நன் பெருவாயில் – fine huge gate that does not block, இசையேன் புக்கு – I entered without announcing, என் இடும்பை தீர – for my sorrow to end, எய்த்த மெய்யேன் – I with a weak body, எய்யேன் ஆகி – I became cheerful, பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – like the spots of a snake’s spread hood (ஏய்ப்ப – உவம உருபு, a comparison word), கைக் கசடு இருந்த– finger marks, scars (on the drum eyes where I hit the drum), என் – my, கண் அகன் – drum eye, தடாரி – thadāri drum (உடுக்கை), இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப – according to double beats, விரி கதிர் – spread rays, வெள்ளி முளைத்த – Venus rose, நள்ளிருள் – pitch darkness, விடியல் – dawn, ஒன்று யான் பெட்டா அளவையின் – even before I sang a song with desire

அரசனின் விருந்தோம்பும் பண்பு

கேளிர் போலக் கேள் கொளல் வேண்டி,
வேளாண் வாயில் வேட்பக் கூறி,   75
கண்ணில் காண நண்ணுவழி இரீஇ,
பருகு அன்ன அருகா நோக்கமொடு,
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ,
ஈரும் பேனும் இருந்து இறை கூடி
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த   80
துன்னல் சிதாஅர் துவர நீக்கி,
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவு உரி அன்ன அறுவை நல்கி, (74 – 83)

The Hospitality of the King

the king treated me like a relative,
was one with me desiring friendship,
made me stay near him with hospitality
and kind words, and looked at
me with unending kindness that
melted me and chilled my bones.

He removed my torn clothes drenched
in sweat, patched with different
threads and ruled by lice and nits, and
gave me clothing filled with flower designs,
so fine like the skin of a snake,
that I was unable to see the weave.

Notes:  வேற்று இழை:  புறநானூறு 69 – வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர், பொருநராற்றுப்படை 80 – வேற்று இழை நுழைந்த துன்னல் சிதாஅர்.  பாம்பின் தோல் அன்ன ஆடை:  புறநானூறு 283 – பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியின் இழை அணி வாரா ஒண் பூங்கலிங்கம் உடீஇ, பொருநராற்றுப்படை – 83 – அரவு உரி அன்ன அறுவை நல்கி.

Meanings:  கேளிர் போல – like relatives, ஒன்றிய – with oneness,கேள் கொளல் வேண்டி – desiring a relationship, desiring a friendship, வேளாண் வாயில் – with hospitality, வேட்பக் கூறி – he spoke kindly, கண்ணில் காண – to keep me within sight, to keep me within view, நண்ணுவழி – nearby place, இரீஇ – made me stay (இரீஇ – சொல்லிசை அளபெடை), பருகு அன்ன – like drinking, அருகா நோக்கமொடு – with un-abating looks, with unspoilt looks, உருகுபவை போல் – like those that melt – like butter, என்பு குளிர் கொளீஇ – making my bones tender and cold (கொளீஇ – சொல்லிசை அளபெடை), ஈரும் பேனும் – lice and eggs, இருந்து இறை கூடி – ruled together, வேரொடு நனைந்து – wet with sweat, வேற்றிழை நுழைந்த துன்னல் – stitched with different threads, darned, சிதாஅர் – rags, torn clothes (சிதாஅர் – இசை நிறை அளபெடை), துவர நீக்கி – totally removed, நோக்கு நுழைகல்லா – unable to see (the fine weave), unable for the eyesight to enter and see, நுண்மைய – fine, பூக் கனிந்து – with completed flower designs, அரவுரி அன்ன – like snake skin, அறுவை நல்கி – he gave me clothing

கள் கொடுத்தல்

மழை என மருளும் மகிழ் செய் மாடத்து,
இழை அணி வனப்பின் இன்னகை மகளிர்,   85
போக்கு இல் பொலங்கலம் நிறையப் பல் கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட,
ஆர உண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை, (84 – 89)

Serving Liquor

Living on the happy upper floors,
they awe those who see them,
with hair like clouds, pretty women
with sweet smiles, wearing beautiful
jewels, who poured many servings of
liquor in perfect gold bowls.
For my great sorrow to vanish, I
drank a lot, and stood up with joy.

Notes:  மழை என மருளும் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை – முகில், மழையென என்ற உவமைக்குத் தகுதியாற் கூந்தல் வருவித்துரைக்கப்பட்டது.

Meanings:  மழை என மருளும் – awed by their hair that are like they are clouds (மழை – ஆகுபெயர் முகிலுக்கு), மகிழ் செய் – causing happiness (liquor), மாடத்து – on the upper floors, இழை அணி – beautifully made jewels, வனப்பின் – with beauty, இன் நகை மகளிர் – women with sweet smiles, போக்கு இல் பொலங்கலம் – faultless gold bowls, நிறைய – full, பல் கால் – many times, வாக்குபு தரத்தர – poured and gave constantly, வருத்தம் வீட – for sorrow to be removed, ஆர உண்டு – drank a lot, பேர் அஞர் போக்கி – removed the great sorrow, செருக்கொடு நின்ற காலை – when I stood with joy, when I stood up intoxicated



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தங்குதற்குரிய இருப்பிடம் தரல்

……………………………………….மற்று அவன்,
திருக்கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கி,   90
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயம் எய்திய அளவை மான,
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி,
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி, மாழாந்து எழுந்து, (89 – 95)

Providing a Place to Stay

I stayed on one side of his rich palace.
I felt giddy because of my drinking,
trembled, but was totally rid of my
distress of going on paths seeking
patrons, much like ascetics who do
penances and attain the benefits of
their bodies without abandoning them.

Other than the trembling due to alcohol,
I did not have any other mental confusion.
I slept very well and woke up.

Meanings:  மற்று அவன் திருக் கிளர் கோயில் – after that in his wealthy palace, ஒரு சிறைத் தங்கி – staying on one side, தவம் செய் மாக்கள் – those who do penances, தம் உடம்பு இடாஅது – not abandoning their bodies (இடாஅது – இசை நிறை அளபெடை), அதன் பயம் எய்திய – attained its benefits, அளவை மான – like that method (மான – உவம உருபு, a comparison word), ஆறு செல் – going on paths, வருத்தம் – sorrow, அகல நீக்கி – totally removed, அனந்தர் – giddiness, நடுக்கம் – trembling, அல்லது – other, யாவதும் – even a little bit, மனம் கவல்பு இன்றி – without mental confusion,  without mental distress, மாழாந்து எழுந்து – slept very well and rose up

மாலையும் காலையும்

மாலை அன்னது ஓர் புன்மையும் காலைக்
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்,
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப,
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப,
கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக்   100
கதுமெனக் கரைந்து வம் எனக் கூஉய்,
அதன் முறை கழிப்பிய பின்றைப் (96 – 102)

Morning and Evening

In the morning when bees
swarmed around me,
those who had seen me in poverty
the previous evening, were awed.
I panicked that it was a dream.
But, for my heart to be bold and my
sad mind to become greatly happy,
uneducated, young servants pointed to
me and announced me to the king.
Rapidly he said, “Come here,” and I
paid proper respects to him.  After
that,

Meanings:  மாலை அன்னது – in the evening (before meeting the king), ஓர் புன்மையும் – poverty situation, காலை கண்டோர் மருளும் – those who saw me in the morning were confused, வண்டு சூழ் நிலையும் – situation of bees swarming – because of the alcohol smell or perfume smell, கனவு என மருண்ட – confused that it was a dream, என் நெஞ்சும் – my heart, ஏமாப்ப – to be strong, to be happy, to have clarity, வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – for my sorrow filled mind to become very happy, கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட – uneducated youngsters pointed and told (about me to the king), கதுமென – rapidly (விரைவுக்குறிப்பு), கரைந்து – said, வம்மெனக் கூஉய் – ‘come here’, he said loudly (கூஉய்  – இன்னிசை அளபெடை), அதன் முறை கழிப்பிய பின்றை – after paying the proper respects,

அரசன் உணவளித்த பாங்கு

…………………………………………பதன் அறிந்து,
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு எனத்தண்டி
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை   105
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி,
அவை அவை முனிகுவம் எனினே, சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க,   110
மகிழ்ப்பதும் பல் நாள் கழிப்பி ஒரு நாள்
“அவிழ்ப் பதம் கொள்க” என்று இரப்ப, முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்,
பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப,   115
அயின்ற காலைப் பயின்று இனிது இருந்து,
கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே,
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி,
உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து (102 – 119)

Food Served by the King

knowing the time to eat, he urged me to eat
cooked, thick thigh meat of sheep that
were fed arukam grass twisted to ropes,
and fatty, big pieces of meat roasted on iron
rods.  I cooled the hot meat pieces, moving
them from one side of my mouth to the other.
He gave more and more even when I refused
them again and again.
He served us many tasty pastries in many
shapes, and urged me to stay.

Female artists with bright brows played
finely tuned small lutes to the beats of
drums with clay eyes, and danced to rhythm.
Thus we spent our days happily.

One day, he gave me boiled rice that looked
like jasmine buds, all the grains of same size,
unbroken, with no streaks, and long
like fingers, along with stir-fried dishes,
staying with me sweetly.
Filled to my neck with food I swallowed
continuously day and night and
my teeth became blunted like a plow
that plowed a field.
There was no time to breathe.  I hated food.

Notes:  காடியின் (115) – நச்சினார்க்கினியர் உரை – கழுத்திடத்தே, காடியை புளிங்கறியாக்கிப் புளிங்கறியோடே நிரம்ப விழுங்கின காலை என்றும் உரைப்பர்.

Meanings:  பதன் அறிந்து – knowing right the time, துராஅய் – arukam grass rolled as ropes, Cynodon grass (துராஅய் – இசைநிறை அளபெடை), துற்றிய – fed, துருவை அம் புழுக்கின் – with lovely cooked sheep meat, பராஅரை – thick thigh (இசைநிறை அளபெடை), வேவை – boiled meat, பருகு எனத் தண்டி – urged me to eat, காழின் சுட்ட – cooked on an iron rod, கோழ் ஊன் – fatty meat, கொழுங்குறை – big pieces of meat, ஊழின் ஊழின் – very methodically/regularly (moving them) on all sides, வாய் – in the mouth, வெய்து ஒற்றி – reduced heat, அவை அவை முனிகுவம் எனினே – we were refusing them again and again, சுவைய – tasty, வேறு பல் –  many other, உருவின் – in shapes, விரகு தந்து – gave pastries/ பணியாரம் (விரகு – ஈகை என்னும் பொருட்டு), இரீஇ – made me stay (இரீஇ – சொல்லிசை அளபெடை), மண் அமை முழவின் – of drums with clay, பண் அமை சீறியாழ் – played small lute with tune/melody, ஒண்ணுதல் விறலியர் – the singers/dancers with bright brows, பாணி தூங்க – danced to rhythm, மகிழ்ப்பதும் பல் நாள் – happily many days, கழிப்பி – we spent, ஒரு நாள் – one day, அவிழ்ப் பதம் – cooked rice, கொள்க என்று இரப்ப – he gave to me to eat saying ‘take it’, முகிழ்த் தகை – like (jasmine) buds, முரவை போகிய – lines removed (the left over streaks from hand pounding), முரியா அரிசி  – unbroken rice, விரல் என நிமிர்ந்த – long like fingers, நிரல் அமை புழுக்கல் – boiled rice that was of the same size, பரல் – grains/seeds which were like pebbles, வறை கருனை – fried poriyal dishes, காடியின் மிதப்ப – filled to the neck, with dishes made with tamarind, அயின்ற காலை – swallowed at that time, பயின்று – continuously, இனிது இருந்து – stayed sweetly, கொல்லை உழு – plowed the field, கொழு ஏய்ப்ப – like the plow (ஏய்ப்ப – உவம உருபு, a comparison word), பல்லே – teeth, எல்லையும் இரவும் – day and night, ஊன் தின்று – eating meat, மழுங்கி – blunted, உயிர்ப்பு இடம் பெறாஅது – not getting time to rest, not getting time to breathe (பெறாஅது – இசை நிறை அளபெடை), ஊண் முனிந்து – hating food

தம்மூர் செல்ல முனைந்த பொருநன்

………………………………………………………….ஒரு நாள்,
“செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய   120
செல்வ! சேறும் எம் தொல் பதிப் பெயர்ந்து” என,
மெல்லெனக் கிளந்தனம் ஆக, “வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு?” என,
சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு,
“துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு   125
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!” எனத்
தன் அறி அளவையின் தரத்தர, யானும்,
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு,
இன்மை தீர வந்தனென்; (119 – 129)

Bard who tries to Return to His Town

One day, I said to him softly,
“O king who receives tributes in your ports
from enemies rising with rage!  We are
leaving for our ancient town.”  He asked me,
“Are you leaving my clan so soon?”
His looks were that of a sad man.

He showed us bull elephants with feet like
thudi drums, ones that united with their females,
along with calves with swaying walks, and bade us
to take what we desired.  He also showered lots of
gifts again and again.  I took what I needed
and came away, thus ending my poverty.

Notes:  குழவி (125) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

Meanings:  ஒரு நாள் – one day, செயிர்த்து எழு – rising with rage, தெவ்வர் – enemy, திறை துறை போகிய – received different tributes, செல்வ – O wealthy king, சேறும் எம் – we will leave, தொல் பதிப் பெயர்ந்து – leave for our ancient town, என – thus, மெல் என கிளந்தனம் ஆக – since we said slowly, வல்லே அகறிரோ எம் ஆயம் விட்டு – are you leaving so soon leaving my family/clan, என சிரறியவன் போல் – like he was angry, செயிர்த்த நோக்கமொடு – with sad looks, with angry looks, துடி அடி அன்ன – feet like thudi drum, தூங்கு நடை – swaying walk, குழவியொடு – with calves, பிடி புணர் வேழம் – male elephants that united with their females, பெட்டவை – what I desired, கொள்க என – take them, தன் அறி அளவையின் – to his capacity, தரத்தர – gave again and again, யானும் – me, என் அறி அளவையின் வேண்டுவ – what I desired, what I asked, முகந்துகொண்டு – took them, இன்மை தீர வந்தனென் – I came away ending my poverty

கரிகாலனின் சிறப்புகள்

………………………………………….வென்வேல்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்   130
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகல் கதிர் பரப்பி,   135
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு
பிறந்து தவழ் கற்றதன் தொட்டுச் சிறந்த நல்
நாடு செகிற் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,
ஆளி நன் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி   140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென
தலைக் கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த   145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்
கண் ஆர் கண்ணிக் கரிகால் வளவன், (129 – 148)

The Greatness of King Karikālan

As a young son of Ilanchēt Chenni owning
victorious spears and many fine chariots,
King Karikālan was fierce in appearance
like angry Murukan.

He obtained rights to the throne while still in
his mother’s womb, and enemies who did not
know his strength at first, bowed to him later.

The countries of those who did not obey
suffered in distress.
Like the sun which rises over the ocean and
moves to the wide sky, he carried his country
on his shoulders every day, since the day
he started to crawl, and protected it.

Like a fierce cub of a fine āli still being
breast fed, that kills an elephant in a wink
of an eye in his first hunt, with great strength
Karikālan wearing a garland sweet to behold
ruined the two Great Kings with fierce effort
at Venni – Pāndiyan wearing a strand braided with
beautiful, tender, saw-edged leaves of neem with
black branches, and Chēran wearing a tender
palmyra frond strand, on their lifted, large heads.

Notes:  The word உருவ could go with the king, meaning ‘handsome’, or with the chariots as ‘fine’.  Scholars have interpreted it both ways.  Karikālan beat Chēramān Perunchēralāthan and eleven Vēlirs at the Venni battlefield in the Chōla country – காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழிசை முரசம் பொரு களத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய (அகநானூறு 246).  There are references to Venni battle in Akanānūru 55, 246, Puranānūru 65, 66 and Porunarātruppadai 147.  Natrinai 390 has a reference to Venni town belonging to Chōla king Killi.  There are references to Āli in Akanānūru 78, 252, 381, Kurinjippāttu 252, Natrinai 205, Puranānūru 207 and Porunarātruppadai 139.  It could be a lion, a mythical animal or an Indian striped hyena which is a fierce scavenger.  நற்றிணை 205 – ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந் நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும்.  ஆளி (140) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.

Meanings:  வென் வேல் – victorious spears, உருவ – lovely, fine, handsome, பஃறேர் – many chariots (பல்தேர், லகர மெய் ஆய்தமாய்த்  திரிந்தது), இளையோன் சிறுவன் – young son (of Ilanchēt Chenni), முருகற் சீற்றத்து – angry like Murukan, உருகெழு குருசில் – leader/prince with fierce appearance, தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி – obtained rights to the throne in his mother’s stomach, எய்யாத் தெவ்வர் – enemies who are unaware (at first), ஏவல் கேட்ப – listened to his command (later), செய்யார் – those who did not do that, தேஎம் தெருமரல் கலிப்ப – their countries struggled in great pain (தேஎம் – இன்னிசை அளபெடை), பவ்வ மீமிசை – over the ocean (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), பகல் கதிர் பரப்பி – spread their rays during the day, வெவ்வெஞ் செல்வன் – very hot sun, விசும்பு படர்ந்தாங்கு – like how it moved on the sky, பிறந்து தவழ் கற்றதன் தொட்டு – since he learned starting from his birth and crawling days, சிறந்த நல் நாடு – fine splendid county, செகிற் கொண்டு – lifting on his shoulders, நாள்தொறும் – every day, வளர்ப்ப – causing growth, taking care, ஆளி நன் மான் அணங்குடைக் குருளை – like the fierce cub of a fine Āli, lion, hyena, a mythical animal, மீளி மொய்ம்பின் – with great strength, மிகு வலி – great sorrow, செருக்கி – with pride, with arrogance, முலைக் கோள் விடாஅ – not letting go of feeding breasts, மாத்திரை – winking of an eye, ஞெரேர் என – rapidly, தலைக்கோள் வேட்டம் – first hunting, களிறு அட்டாங்கு – like how it killed an elephant, இரும் பனம் போந்தைத் தோடும் – like one wearing a garland made from the tender frond of a palmyra tree (Cheran) (பனம் போந்தை – இருபெயரொட்டு), கருஞ்சினை – black branches, அர வாய் வேம்பின் – of neem trees with leaves with edges like saw edges, அம் குழை – beautiful sprouts, தெரியலும் – garlands, ஓங்கிருஞ் சென்னி – lifted big heads, மேம்பட – to be splendid, மிலைந்த – wearing splendidly, இரு பெரு வேந்தரும் – the two great kings, ஒரு களத்து – in one battlefield, அவிய – ruined, வெண்ணித் தாக்கிய – attacked them at Venni, வெருவரு – fierce, நோன் தாள் – strong efforts, கண் ஆர் – pretty to eyes, கண்ணி – garland, கரிகால் வளவன் – King Karikāl Valavan



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 ஆற்றுப்படுத்தும் பொருநன்

தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்
தொழுது முன் நிற்குவிர் ஆயின், பழுது இன்று,  150
ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி, நும்
கையது கேளா அளவை, ஒய் எனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்,   155
பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க எனப்
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர,
வைகல் வைகல் கைகவி பருகி,
எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி,   160
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணியக்
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டு உளை துயல்வர, ஓரி நுடங்கப்
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டிக்   165
காலின் ஏழ் அடிப் பின் சென்று கோலின்
தாறு களைந்து, ஏறு என்று ஏற்றி, வீறு பெறு
பேர்யாழ் முறையுளிக் கழிப்பி, நீர்வாய்த்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
நன் பல் ஊர நாட்டொடு, நன் பல்   170
வெரூஉப் பறை நுவலும் பரூஉப் பெருந்தடக்கை,
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவு உடைத் தங்கல் ஓவிலனே வரவிடைப்
பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தித் தெற்றெனச்
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின், பல புலந்து,   175
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
செல்க என விடுக்குவன் அல்லன்; (149 – 177)

Bard who Guides

If you get close to his feet, worship him
and stand there.  He will look at you with
tenderness, like a cow that looks at her
young calf.
Even before he listens to your music,
he’ll have them removed, your patched
clothes in rags, dirty like the roots of
moss, and give you pure silk clothing
with ends tied into knots,
place food on precious, rare gold bowls
and urge you to eat, serve you alcohol
with fragrance of flowers, pouring again
and again even when you refuse,
adorn your wavy, dark hair with
flame-like golden lotus flowers,
give the female musician a finely made,
bright pearl necklace strung on gold,
and give you a chariot decorated
with ornaments made from ivory,
yoked with four horses as white as milk
with dyed, swaying tufts, and when the
sharp end of the goad is removed, he will
walk seven steps behind, urge you to climb
and give you gifts according to what he
gave bards with large lutes – cool towns
with fertile lands and enraged, fierce
elephants with large, curved trunks that
march to fear-causubg parai drums.  If you
decide to share the wealth that you got along
with others and decide to leave, he will hate it.
He is not one to analyze the situation in this
unstable world and give you permission
to leave.

Notes:  எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை (159) – நெருப்புத் தழைத்தாற் போன்ற ஒருவன் செய்ததன்றித் தனக்கென இதழ் இல்லாத தாமரை, flame-like lotus blossoms that are created which do not have its own petals.

Meanings:  தாள் நிழல் மருங்கின் – near the shade of his feet, at the shade of his feet, அணுகுபு குறுகி – get close, தொழுது முன் – pray in front, நிற்குவிர் ஆயின் – if you stand, பழுது இன்று – without fault, ஈற்று ஆ விருப்பின் – like a new mother cow’s desire for her calf (ஈற்று – தொழிற்பெயர்), போற்றுபு நோக்கி – looking at you with kindness, நும் கையது கேளா அளவை – even before listening to the music from the instruments in your hand, ஒய் என – rapidly, பாசி வேரின் – with roots of moss, lichen or duckweeds, மாசொடு – with dirt, குறைந்த – few, துன்னல் – stitches, சிதாஅர் –  patched rag, torn clothes (சிதாஅர் – இசை நிறை அளபெடை), நீக்கி removed, தூய – pure, கொட்டைக் கரைய – end of the clothes tied with knots, பட்டுடை நல்கி – giving silk clothes, பெறல் அருங் கலத்தில் – in a precious bowl, பெட்டாங்கு – according to desire, உண்க  – may you eat, என – thus, பூக்கமழ் தேறல் – flower fragrant alcohol, வாக்குபு தரத் தர – poured again and again, வைகல் வைகல் – each and every day, கை கவி – bending the hands (to block), பருகி – drinking, எரி அகந்தன்ன – like flame burning, ஏடு இல் தாமரை – lotus without petals (gold lotus flowers), சுரி இரும் பித்தை – wavy dark hair, wavy thick hair (பித்தை – male hair), பொலியச் சூட்டி – wearing splendidly, wearing beautifully, நூலின் வலவா – not tied with threads, strung with gold, நுணங்கு அரில் – finely woven, மாலை – garland, வால் – white, ஒளி – white bright, முத்தமொடு – with pearls, பாடினி – female musician, அணிய – to wear, கோட்டின் செய்த – made from ivory, கொடுஞ்சி – lotus shaped ornament, நெடுந்தேர் – tall chariots, ஊட்டு உளை – dyed horse tufts, துயல்வர – moving, ஓரி – tufts, நுடங்க – swaying, பால் புரை – milk-like (புரை – உவம உருபு, a comparison word), புரவி – horses, நால்கு உடன் பூட்டி – yoked four of them (நால்கு – நான்கு என்னும் எண்ணுப்பெயர் திரிசொல்), காலின் ஏழ் அடி பின் சென்று – walking behind seven steps, கோலின் தாறு களைந்து – removing the sharp ends of the goad, ஏறு என்று ஏற்றி – he made us climb, வீறு பெறு – with splendor, பேர் யாழ் – large lutes, முறையுளி – according to the right method, கழிப்பி – sending us off, நீர்வாய்த் தண் பணை– cool agriculture land with water (நீர்வாய் = நீர் பொருந்திய), குளிர்ச்சியான மருத நிலம் தழீஇய – embracing cool agricultural lands (தழீஇய – சொல்லிசை அளபெடை), தளரா இருக்கை – prosperous places, established places, நன் பல் – good many, ஊர நாட்டொடு – with land with towns, நன் பல் – fine many, வெரூஉப்பறை – fear causing parai drums (வெரூஉ – இன்னிசை அளபெடை), நுவலும் – they roar, படூஉப் பெருந் தடக்கை – huge curved trunks (படூஉ – இன்னிசை அளபெடை), வெருவரு செலவின் – fierce when they walk, வெகுளி வேழம் – angry elephants, தரவு உடை – charitable giving, தங்கல் – stable, without hindrances, தொய்வு இன்றி – without relaxing, ஓவிலனே – he is one who does not stop giving (ஏகாரம் – அசை நிலை, an expletive), வரவிடைப் பெற்றவை – what you obtained, பிறர் பிறர்க்கு ஆர்த்து – give to many others, தெற்றென – rapidly, செலவு கடைக்கூட்டுதிர் – decided to leave, ஆயின் – if so, பல புலந்து – saddened a lot, hating it a lot, நில்லா உலகத்து – in the unstable world, நிலைமை தூக்கி – analyzing the situation, செல்க என விடுக்குவன் அல்லன் – he is not one who will say ‘may you leave’ and let you go

சோழ நாட்டு வளம்

………………………………………ஒல்லெனத்
திரை பிறழிய இரும் பௌவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை,
மா மாவின் வயின் வயின் நெல்,   180
தாழ் தாழைத் தண் தண்டலைக்
கூடு கெழீஇய குடிவயினான்,
செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை கவவு முனையின்,
மனை நொச்சி நிழல் ஆங்கண்,   185
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்டல் அயரவும், முதியோர்
அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்,
முடக்காஞ்சிச் செம்மருதின்,
மடக்கண்ண மயில் ஆல   190
பைம்பாகற் பழம் துணரிய
செஞ்சுளைய கனி மாந்தி,
அறைக் கரும்பின் அரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக,
வறள் அடும்பின் இவர் பகன்றைத்   195
தளிர்ப் புன்கின் தாழ் காவின்
நனை ஞாழலொடு மரம் குழீஇய
அவண் முனையின், அகன்று மாறி
அவிழ் தளவின் அகன் தோன்றி,
நகு முல்லை உரு தேறு வீ   200
பொன் கொன்றை மணிக் காயா
நற்புறவின் நடை முனையின்,
சுற வழங்கும் இரும் பௌவத்து
இறவு அருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின்   205
ஓங்கு திரை ஒலி வெரீஇ, (177 – 206)

Prosperity of the Chōla Country

In the wide land near the large ocean
with loud rolling waves, surrounded
by shores, in each mā measurement
of land in each area there are coconut
palms with low fronds in the cool
groves, and huge rice granaries in the
townships.

A black crow ate offerings with red rice,
and hating the contents, moves to a
nochi tree with shade that grows in a
house, where it protects the hatchlings
of a tortoise.

Children are playing, building sand
houses, elders with differences with
their enemies enter the courts,
a pea**** with delicate eyes dances on
on a bent kānji tree and marutham tree
and eats the red segments of jackfruits
that grow in clusters, as farm
workers work together cutting sugarcane
and harvesting rice, singing loudly.

Hating to stay there, the pea****
moves to the land with thalavam
flowers, open glory lilies, blossomed
mullai, dropped thetra flowers, golden
kondrai, sapphire-like kāyā flowers,
and hating to stay there, it moves to the
shores of the huge ocean where sharks live
and flocks of storks rest on punnai
trees with flowers, after gorging on shrimp,
and afraid of the roaring sounds of the
tall ocean waves,

Notes:  மனை நொச்சி: அகநானூறு 21 – மனை இள நொச்சி, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி.  மா மாவின் வயின் வயின் (180) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒரு மாநிலத்தில் ஒரு மாநிலத்தில் திடர்தோறும் திடர்தோறும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – மா என்னும் அளவினையுடைய நிலத்தின் இடந்தோறும்.  பைம்பாகற் பழம் துணரிய செஞ்சுளைய கனி மாந்தி (191-192) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுளையை கனி என்றது பலாப்பழம் என்றவாறு.  மயில் பாகற் கனியை உண்ணுதலை பாகல் ஆர்கைப் பறைக் கண் பீலித்தோகை (அகநானூறு 15-4,5) என்றும், பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக் கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை  (அகநானூறு 177-9,10) என்றும் பிறர் கூறுமாற்றானும் அறிக.  இறா இறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).

Meanings:  ஒல் எனத் திரை பிறழிய – with rolling waves with loud sounds, இரும் பௌவத்து கரை சூழ்ந்த – surrounded by the shores of the large ocean, அகன் கிடக்கை – wide space, மா மாவின் வயின் வயின் – land measurement of mā, in each region in all the places, நெல் – rice paddy, தாழ் தாழை – coconut with low fronds , தண் தண்டலை – cool groves, கூடு கெழீஇய குடிவயினால் – communities with rice bins (கெழீஇய – சொல்லிசை அளபெடை), செஞ்சோற்ற பலி – offering with red rice, மாந்திய – that ate, கருங்காக்கை – black crow, கவவு முனையின் – since it hated the contents (food), மனை நொச்சி நிழலாங்கண் – to the house nochi tree with shade, Chaste tree, Vitex leucoxylon, ஈற்று யாமை தன் –  the young ones of a tortoise, பார்ப்பு –   new hatchlings, ஓம்பவும் – protects, saves (பொ. வே. சோமசுந்தரனார் உரை – தான் பசித்த காலத்தில் தின்பதாய்ப் பாதுகாத்து வைப்பவும்), இளையோர் – youngsters, வண்டல் அயரவும் – play with sand dolls/houses, முதியோர் அவை புகு பொழுதில் – when elders enter the courts, தம் பகை முரண் – enmity and differences, செலவும் – to go, முடக்காஞ்சி – bent portia trees, பூவரச மரம், Thespesia populnea, செம் மருதின் – on a perfect marutham tree, Arjuna tree, Terminalia arjuna, மடக்கண்ண மயில் ஆல – pea**** with delicate eyes dances or pea**** with feather eyes dances, பைம்பாகல் பழம் – ripe jackfruits, fresh jackfruits, துணரிய – are in clusters, செஞ்சுளைய கனி மாந்தி – eating the red segments of fruit, அறைக் கரும்பின் – of chopped sugarcane, அரி நெல்லின் – of harvested rice paddy, இனக் களமர் – farm workers who work together, இசை பெருக – loud sounds increasing, வறள் அடும்பின் – with adumpu which grows in parched land, Ipomoea pes caprae, இவர் பகன்றை – spreading pakandrai,  சிவதை, Indian jalap, Ipomaea Turpethum or Exogonium purge, தளிர்ப் புன்கின் – with punku trees with sprouts, Indian Beech, Pongamia Glabra or Pongamia Pinnata, தாழ் காவின் – in the low groves, நனை – buds, ஞாழலொடு – with cassia trees, புலிநகக்கொன்றை, Cassia sophera, Tigerclaw tree, மரம் குழீஇய – many trees together (குழீஇய – சொல்லிசை அளபெடை), அவண் முனையின் – hating to be there, அகன்று மாறி – moves away, அவிழ் தளவின் – open golden jasmine, செம்முல்லை, அகன் தோன்றி – open glory lilies, Gloriosa superba, நகு முல்லை – blossoming jasmine, laughing jasmine, bright jasmine, உரு தேறு வீ – dropped thētra flowers, Clearing nut tree flowers, Strychnos potatorum, பொன் கொன்றை – golden laburnum, மணிக் காயா – sapphire-like kāyā flowers,  Memecylon edule, நற் புறவின் நடை முனையின் – hating it in the fine grove, சுற வழங்கும் – where sharks swim (சுற – சுறா, கடைக்குறை), இரும் பௌவத்து – in the dark ocean, இறவு அருந்திய இன நாரை – flocks of storks that ate shrimp (இறவு – இறா இற என்றாகி உகரம் ஏற்றது), பூம் புன்னைச் சினைச் சேப்பின் – go to rest in the punnai trees with flowers, நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, ஓங்கு திரை ஒலி வெரீஇ – afraid of the sounds of the tall waves (வெரீஇ – சொல்லிசை அளபெடை),

தீம் பெண்ணை மடல் சேப்பவும்,
கோள் தெங்கின், குலை வாழை,
கொழுங் காந்தள், மலர் நாகத்து,
துடிக் குடிஞை குடிப் பாக்கத்து   210
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப,
கலவம் விரித்த மட மஞ்ஞை
நிலவு எக்கர்ப் பல பெயரத், (207 – 213)

it rests on the leaves of a sweet palmyra,
in a village community on the shore with
coconut palms with clusters of nuts,
banana trees with bunches of fruits,
flourishing glory lilies, flowering
surapunnai trees, and a great owl
hoots in thudi drum tones, and a
naive pea**** spreads opens its feathers
and dances on the moon-like sand dunes.

Notes:  நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.

Meanings:  தீம் பெண்ணை மடல் சேப்பவும் – resting on the fronds of sweet palmyra, கோள் தெங்கின் – of coconut palms with clusters, குலை வாழை – bunches of bananas, கொழுங் காந்தள் – flourishing glory lilies, மலர் நாகத்து – with flowering surapunnai trees, long-leaved two-sepalled gamboge trees, or punnai trees, Laurel Tree, Mast wood Trees, Calophyllum inophyllum  according to the University of Madras Lexicon, துடிக் குடிஞை – great owl that hoots like thudi drum beats, குடிப்பாக்கத்து – in the seashore village community, யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப – according to the lute-like music of bees, கலவம் விரித்த – spread its feathers, மட மஞ்ஞை – a delicate pea****, நிலவு எக்கர் – white sand dunes that are like the moon, bright sand dunes, moon-like sand dunes, பல பெயர – go together

தேனெய்யொடு கிழங்கு மாறியோர்,
மீன் நெய்யொடு நறவு மறுகவும்,   215
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்,
மான் குறையொடு மது மறுகவும்,
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும் பூங்கண்ணி குறவர் சூட,
கானவர் மருதம் பாட, அகவர்   220
நீல் நிற முல்லைப் பல் திணை நுவல, (214 – 221)

People barter honey and yams for
fish oil and toddy.
Those who sell sweet sugarcane and
portions of flattened rice, barter for
deer meat and wine.
Fishermen sing songs in kurinji tune,
mountain dwellers wear waterlily
garlands, forest dwellers sing in marutham
tune and farmers sing many songs
about blue colored jasmine vines.

Thus they sing about the different landscapes.

Notes:  Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414.  This rare description of different thinais being mixed in this manner (218-221) is interesting – fishermen (Neythal – seashore) sing kurinji (Kurinji – mountain) melodies, mountain dwellers (Kurinji – mountain) sing marutham (Marutham – agricultural land), and farmers from the marutham land sing Mullai (Mullai – woodland) melodies.  தேன் நெய்யொடு (214) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  தேனெய், இருபெயரொட்டுப் பண்புத் தொகை, தேனாகிய நெய் என்க,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நெய்யென்று தேனை வழங்கப்படுவதனை ‘தேனெய் தோய்ந்தன’ என்ற சீவக சிந்தாமணியாலும் தேனை வடிப்பதற்கு உதவும் பன்னாடையை நெய்யரி என்று வழங்குவதாலும் அறியலாம்.

Meanings:  தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் – those who barter honey and yams (valli yams), மீன் நெய்யொடு நறவு – toddy with fish oil (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), மறுகவும் – they go and barter, தீங்கரும்போடு – with sweet sugarcane, அவல் வகுத்தோர் – those who sell flattened rice in portions, மான் குறையொடு – with deer meat, மது மறுகவும் – they go and barter liquor, குறிஞ்சி பரதவர் பாட – fishermen sing Kurinji tune, நெய்தல் நறும் பூங்கண்ணி குறவர் சூட – mountain dwellers wear fragrant waterlily garlands, கானவர் மருதம் பாட – those in woodlands sing Marutham tune, அகவர் நீல் நிற முல்லை – farmers in agricultural lands sing songs of the woodlands with blue colored jasmine vines (பொ வே. சோமசுந்தரனார் உரை –  முல்லை என்பதற்கு முல்லை நிலம் எனப் பொருள்கொண்டு முல்லை நிலம் காடு நிறைந்ததாகலின் நீனிறக்காடெனக் கொள்ளலுமாம்) (நீல் – கடைக்குறை), பல் திணை நுவல – they sing about the different landscapes

கானக் கோழி கதிர் குத்த,
மனைக் கோழி தினைக் கவர,
வரை மந்தி கழி மூழ்க,
கழி நாரை வரை இறுப்ப,  225
தண் வைப்பின் நால் நாடு குழீஇ,
மண் மருங்கினான் மறு இன்றி,
ஒரு குடையான் ஒன்று கூற,
பெரிது ஆண்ட பெருங்கேண்மை
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்,   230
அன்னோன் வாழி, வென் வேல் குருசில்! (222 – 231)

Forest fowl eat grains in the agricultural
land, house fowl steal millet from the mountains,
female monkeys from the mountains dive and play
in the backwaters, storks from the backwaters
go to reside in the mountains, in this cool
land with four different environments,
which are under one umbrella of Karikālan who
rules for a long time combining friendship with
fairness and in a faultless manner.
May he live long, the King with victory spears!

Notes:  The rare mixing of four thinais in this manner (222-225) is interesting – Mullai land fowl eat grains in the Marutham land, house fowl in the Marutham land steal millet from the Kurinji land, monkeys from the Kurinji land dive and play in the Neythal backwaters, and pelicans from the Neythal backwaters move to the mountains.

Meanings:  கானக்கோழி கதிர் குத்த – forest fowl peck at the grain spears in the agricultural land, Gallus soneratii, மனைக் கோழி தினைக் கவர – house fowl steal millet from the Kurinji land, வரை மந்தி கழி மூழ்க – mountain monkeys dive and play in the backwaters, கழி நாரை வரை இறுப்ப – storks from the backwaters go and stay in the mountains, தண் வைப்பின் நால் நாடு – in the cool land with four environments, குழீஇ – together (சொல்லிசை அளபெடை), மண் மருங்கினான் – in the land, மறு இன்றி – without fault, ஒரு குடையான் – the king who ruled under one umbrella, ஒன்று கூற – commanded in one voice, பெரிதாண்ட – ruled for a long time, பெருங்கேண்மை – great friendship, அறனொடு புணர்ந்த – combined with fairness, திறன் அறி செங்கோல் – just rule known to others, அன்னோன் வாழி – may he live long, வென்வேல் குருசில் – king with victorious spears

காவிரி வளம்

மன்னர் நடுங்கத் தோன்றிப் பல் மாண்
எல்லை தருநன், பல் கதிர் பரப்பிக்,
குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும்,
அருவி மா மலை நிழத்தவும், மற்று அக்   235
கருவி வானம் கடற் கோள் மறப்பவும்,
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்,
நறையும், நரந்தமும், அகிலும், ஆரமும்,
துறை துறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி,
நுரைத் தலைக் குரைப் புனல் வரைப்பு அகம் புகுதொறும்,  240
புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடையக்,
கூனிக் குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாள்தொறும்
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும்,  245
சாலி நெல்லின் சிறை கொள் வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆகக்
காவிரி புரக்கும் நாடு கிழவோனே. (232 – 248)

Prosperity showered by River Kāviri

His enemy kings tremble as he appears.

The sun which provides light during the day
spreads its fine rays and scorches.

Marijuana plants are parched, there are fires
on tree branches, waterfalls on huge mountains
are ruined, clouds with thunder and lightning forget
to take water from the oceans, and even when there
is such dryness, fragrant naraiakil, sandal and
narantham wood drift to the shores, the ocean sighing
after dropping its loads, as uproarious Kāviri flows with
white foam on its surface.

Wherever there are entry ports in ponds, women play
in the water,
diving rapidly.  They bend and cut paddy with sickles,
and bundles of sheaves are stacked each day like
mountains, in heaps that never become small.
Fine paddy in packed sacks, are stacked densely in
places protected by fences, growing in thousands of
measures, in the land of the king, where River Kāviri
provides abundance.

Notes:  Narai, Akil, Sandal and Narantham are fragrant woods.  புறநானூறு 23 – காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந.  புறநானூறு 285 – கடுந் தெற்று மூடையின்.  கருவி வானம் (236) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.

Meanings:  மன்னர் நடுங்க தோன்றி – he appears causing enemy kings to tremble, பல் மாண் – many times, எல்லை தருநன் – the one who provides light, the sun (தருநன் – தருபவன், கதிரவன்), பல் கதிர் பரப்பி – spreading its many fine rays, குல்லை – marijuana or basil, கரியவும் – have dried, கோடு எரி – flames on branches, நைப்பவும் – have burned, அருவி மா மலை நிழத்தவும் – waterfalls on huge mountains are ruined, மற்ற – other, கருவி வானம் – clouds crowded with thunder and lightning, கடல் கோள் மறப்பவும் – forgetting to take from the oceans, பெரு வறன் – great dryness, ஆகிய பண்பு இல் காலையும் – even when there everything was ruined, நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் – fragrant narai (nutmeg tree, Myristica fragrans), fragrant bitter orange (Cymbopogon flexuosus), akil wood (Eaglewood) and sandal wood (Santalum Album), துறை துறை தோறும் – in all the shores, பொறை உயிர்த்து – sighing after carrying load, ஒழுகி – flowing, நுரைத் தலைக் குரைப்புனல் – loud river with foam on top, வரைப்பு அகம் – where river water is saved – ponds and gardens, புகுதொறும் – wherever water enters, புனல் ஆடு மகளிர் – women play in the water, கதுமென – rapidly (விரைவுக்குறிப்பு), குடைய – dive, play, கூனிக் குயத்தின் வாய் நெல் அரிந்து – bend their bodies and cut paddy with sickle ends, சூடு கோடாகப் பிறக்கி – stacking the sheaves like a mountain, நாள்தொறும் குன்று எனக் குவைஇய – heaped up daily like mountains (குவைஇய – சொல்லிசை அளபெடை), குன்றா குப்பை – heaps that do not become small, கடுந் தெற்று மூடையின் – with sacks which are densely stacked, இடம் கெடக் கிடக்கும் – like lying around ruining the place, சாலி நெல்லின் – of red paddy, சிறை கொள் வேலி – fence which protects, ஆயிரம் விளையுட்டு ஆக – growing a thousand measures, காவிரி புரக்கும் நாடு கிழவோனே – lord of the river Kāviri which provides (கிழவோனே – ஏகாரம் அசை நிலை, an expletive)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard