New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழன் மறந்த தமிழர் வரலாறு !!!


Guru

Status: Offline
Posts: 24811
Date:
தமிழன் மறந்த தமிழர் வரலாறு !!!
Permalink  
 


தமிழன் மறந்த தமிழர் வரலாறு !!! பாகம் - 1
**************************************

மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அவனின் பரிணாம வளர்ச்சி அளவிடற்கரியது. நனி நாகரிகம் சிறந்த வாழ்வை வெளிப்படுத்தியவர்களாகத் தமிழர்கள் திகழ்கிறார்கள். அவர்களது இத்தகைய அபரிமிதமான முன்னேற்றத்துக்கு யார் காரணம்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எனப் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன. தமிழர்களைப் பற்றி இலக்கியங்கள் கூறும்பொழுது, ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று குறிப்பிடுகின்றன. அத்தகைய மூத்தகுடி, இந்தியாவில் முதன்முதலில் எந்தப் பகுதியில் தோன்றியது? அதன் உண்மை வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்கு அகழாய்வுச் சான்றுகளின் முடிவுகளுடன், வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் வல்லுநர்களும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றால், தமிழகத்தின் தொன்மைவாய்ந்த பகுதிகளை அகழாய்வு செய்து அதன்மூலம் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் கூறப்பட்டால், அவை வரலாற்றுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பார் கே.கே.பிள்ளை அவர்கள். அது முற்றிலும் உண்மைதான். வரலாற்று நிகழ்வுகள் மீது அவரவர்க்குத் தோன்றியதுபோல் தங்களது சொந்தக் கருத்தைக் கூறாமல், அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் கொண்டு உறுதிபடக் கூற வேண்டும்.

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளைக் கவனத்தில் கொண்டும், தமிழகத் தொல்லியல் துறையின் மூலம் நடைபெற்ற அகழாய்வுகளில் பெரும்பகுதி பங்கேற்று ஆய்வு செய்தவன் என்ற வகையிலும், இவ்வகையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளை முறைப்படுத்தியும், காலவரிசையாக வரலாற்றை காண்பதே ‘தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம்’ என்னும் இப்பகுதி. (இப்பகுதியில், உரிய இடத்தில் நிழற்படங்கள் இணைத்துத் தெளிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது).

மனிதன் தோன்றிய காலம் முதலாக அவன் பெற்ற பரிணாம வளர்ச்சிகளையும், அவன் ஆரம்பக் காலத்தில் முதன்முதலாகப் பயன்படுத்திய கல் அயுதங்கள் அவனால் தயாரிக்கப்பட்டன என்பதையும், அவன் அவற்றை எவ்வாறு தயாரித்தான், எப்படிப் பயன்படுத்தினான் என்பதிலும் தொடங்கி, அவன் வளர்ந்த விதமும், அவன் கண்டறிந்த பல அறிய கல் ஆயுதங்களின் படைப்புகளைக் குறித்தும் தகுந்த சான்றுகளுடன் இனி காண்போம்.

இத்தொடர், ஆதிகால மக்களின் வாழ்க்கை முறையில் தொடங்கி, அவன் புதிய பரிமாணத்தைப் பெற்று புதிய கற்கால மக்களாக வலம் வந்து, விவசாயத்தையும், உணவுப் பொருட்களை சேமித்தலையும் கற்ற விதம் குறித்தும், மனிதன் கூட்டமாக வாழ்ந்தமையும், கூட்டங்கள் குழுக்கலாக மாறியதும், பின்னர் அவை அரசு உருவகம் பெற்றமையும், தொடர்ந்து சங்க காலத்தின் துவக்கம் அமைந்து தமிழக வரலாற்றுக் காலம் தொடங்குவது வரையும் காணலாம்.

முதன்முதலின், கொற்றலை ஆற்றுப் படுக்கையில் வாழ்ந்த தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாம்.

கொற்றலை ஆறும் தமிழர் வாழ்வும் – பகுதி 1

கொற்றலை ஆறு

இந்தியத் தொல்லியல் வரலாற்றில் சிறப்புமிக்க ஓர் தனியிடத்தைப் பெற்றுள்ள பகுதிதான் கொற்றலை ஆறு. கொற்றலை ஆறு, சென்னைக்கு அருகாமையில் ஓடுகிறது. (இதை குஸஸ்தலை ஆறு என்றும் சொல்வார்கள்). இன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் பாலாற்றில் இருந்து கிளை பிரிந்து செல்லும் ஒரு நதியே கொற்றலையாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டிக்கு அருகாமையில்தான் தொல் மனிதர்கள் வாழ்ந்த பழமைவாய்ந்த பகுதிகள் அமைந்துள்ளன என்பதை மனத்தில் கொள்ளலாம்.

கற்காலம்

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின்*1 வாய்மொழிக்கு ஏற்ப, மக்கள் நீர்நிலைகளை அடுத்தே தங்களது வாழ்விடங்களை அமைத்துக்கொண்டனர். அங்கு வரும் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தனர். காடுகளில் அலைந்து அங்கு காணப்பட்ட காய், கனிகள், கிழங்குகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து உணவாக உட்கொண்டனர். இந்தக் காலகட்டத்தில், இவர்களது பாதுகாப்புக்காகக் கருவிகள் தேவைப்பட்டன. அதன் அடிப்படையில் உருவானவைதான் கற்கருவிகள்.

வலிமையான கற்களைக் கொண்டு தாமே கற்கருவிகளைத் தயாரிக்க முற்பட்டனர். எளிதில் கிடைக்கக்கூடிய மரம், செடிகளைவிட, அருகாமையில் காணப்பட்ட இயற்கையான, உருண்டையான கற்கள், பயனுள்ளவை, வலிமையானவை என்பதை உணர்ந்து, அவ்வகைக் கற்களைக் கொண்டு, தமது தேவைக்கேற்ப கருவிகளைத் தயாரிக்க முற்பட்டனர். கருவிகள் செய்ய அதிக அளவில் கற்களைப் பயன்படுத்தியதால், அக்காலத்தைக் ‘கற்காலம்’ என்று குறிப்பர்.

பழைய கற்காலம்

கற்கருவிகளின் தொழில்நுட்ப அடிப்படையிலும், மண்ணடுக்குகளின் அடிப்படையிலும், பழைய கற்காலத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை - முதல் பழைய கற்காலம் (Lower Palaeolithic Age), இடைப் பழைய கற்காலம் (Middle Palaeolithic Age), கடைப் பழைய கற்காலம் (Upper Palaeolithic Age) என்பவை.*2

இந்தியாவில் பழைய கற்காலம் குறித்த ஆய்வுகள்

இந்தியத் தொல்லியல் ஆய்வில், இந்தியாவிலேயே சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில்தான், முதல்முதலாகப் பழைய கற்காலக் கருவியை, 1863-ம் ஆண்டு மே மாதத்தில், இந்தியத் தொல்பழங்காலத்தின் தந்தை எனப் போற்றப்படும் சர். இராபர்ட் புரூஸ் புட் (இவரைப் பற்றி தனி கட்டுரையாகப் பிறகு பார்க்கலாம்) கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார்*3. இதனைத் தொடர்ந்து, அவரும் அவரது அலுவலர் வில்லியம் கிங் என்பவரும் சேர்ந்து, கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் தீவிரமான கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அத்திரம்பாக்கத்தில் அதிக அளவு கற்கருவிகளையும், குடியம் என்ற ஊருக்கு அருகில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த குகைகளையும் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தனர்.

கொற்றலை ஆற்றுப் பகுதியில்தான், உலகத்தின் தொன்மையான வாழ்விடம் அமைந்துள்ளது என்பது வரலாற்று உலகுக்குச் சிறப்பு சேர்க்கும் செய்தி ஆகும். இராபர்ட் புரூஸ் புட், இந்தியாவில் தனது ஆய்வை மேற்கொண்ட பிறகு, ஆய்வாளர்கள் கோஜின் பிரௌன் (Coggin Brown - 1917), காக்பர்ன் (**** Burn - 1888) மற்றும் அய்யப்பன் (1942) ஆகியோர், ராஜ்புத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிஸா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பழைய கற்காலத் தடயங்கள் உள்ள பல இடங்களைக் கண்டறிந்து, ஆய்வு மேற்கொண்டனர்*4.

இராபர்ட் புரூஸ் புட் அவர்களின் மறைவுக்குப்பின் (1912), இந்த ஆய்வில் தொய்வு ஏற்பட்டு, பிறகு 1930-ல் மீண்டும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது எனலாம். காமியாட், பர்கிட், வி.டி.கிருஷ்ணசாமி, டி.டி.பேட்டர்ஸன் மற்றும் கே.வி.சௌந்திரராஜன் போன்ற அறிஞர்கள், மீண்டும் இப்பகுதிகளை ஆய்வுசெய்து, பல அறிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இவற்றில் குறிப்பிடத்தக்கது, கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் நான்கு படிவுப் படுக்கைகள் (Four Fold Terrace System) உள்ளன என்றும், வடமதுரையில் கூழாங்கற்திரளை அடுக்கின் பகுதி (Boulder Conglomerate Horizon) ஒன்று காணப்படுகிறது என்றும் தெரியவந்தது. மேலும், இப்பகுதியில் இரண்டு வகை மண்பரப்புகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்தினர். அவை - இப்பகுதியில் சிறப்பாகக் காணப்படும் செம்மண் படிவங்களின் பரப்பு (Latrite Formation), மற்றும் பிளைஸ்டோசின் கால சிதைந்த செம்மண் படிவப் பரப்பு என்பன ஆகும். இப்பகுதியில் காணப்படும் பழைய கற்காலப் பண்பாட்டை, ‘சென்னைக் கைக் கோடாரி தொழிற்கூடம்’ (Madras Hand Axe Industry) என்று குறிப்பிட்டனர்*5.

கொற்றலை ஆற்றுப் பகுதியில் காணப்படும் படிவுப் பகுதியில், முதல் இரண்டு படிவுப் படுக்கைகள், வடமதுரை, அத்திரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளன என்கிறார் வி.டி.கிருஷ்ணசாமி (1947). ஏனெனில், வடமதுரையில் காணப்படும் கற்கருவிகள் மிகவும் பழமையானவை. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகளில் அச்சூலியன் தொழில்நுட்பம் சற்று முரண்பட்டதாகக் காணப்படுகிறது. ஆனால், குடியம் மற்றும் பூண்டி சுற்றுப்பகுதிகளில், அச்சூலியன் பண்பாடே அதிக அளவில் விரவிக் காணக் கிடக்கின்றன என குறிப்பிட்டு, தனது நான்கு படிவப் படுக்கைகள் பற்றித் தெளிவுபடுத்துகிறார்*6.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், முதல் பழைய கற்காலக் கைக் கோடாரிகள் கிடைத்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், தமிழகத்தில் தென்மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களிலும், அதிக அளவில் கரடுமுரடான கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மேலும், சுரண்டிகள், மூலக்கற்களான கூழாங்கற்களும் இங்கு காணப்பட்டன*7. அத்திரம்பாக்கம் பகுதியில்தான், சிறிய வடிவில் நன்கு முழுமை பெற்ற அழகிய வடிவமைப்புடன் கூடிய, பழைய கற்கால கைக் கோடாரிகள் கிடைத்துள்ளன. வேட்டையாடும் தொழிலையும், மீன்பிடித்தல் தொழிலையும் மேற்கொண்டிருந்த இவர்களிடம், கலைநயம்மிக்க அறிவும் காணப்பட்டதை இக் கைக் கோடாரிகள் மூலம் உணரமுடிகிறது*8.

பழைய கற்காலக் கற்கருவிகள், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பரவலாகக் கிடைத்துள்ளன. அவற்றை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அவை -

1. குகைத் தலங்களில் காணப்படும் கற்கருவிகள்

2. தரைத்தளத்தில் கிடைத்த கற்கருவிகள்

3. ஆற்றுப்படுகைகளில் காணப்படுபவை*9

தமிழகத்தில் குகைப் பகுதிகளில் காணப்படும் கைக் கோடாரிகள் என, குடியம் பகுதியில் காணப்படுபவற்றைக் குறிப்பிடலாம். தரைப்பகுதியில் காணப்படுபவற்றை, தொழில்பட்டறை வகையில், குறிப்பாக வறட்டனப்பள்ளியைக் (இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம்) குறிப்பிடலாம். ஆற்றுப்படுகையில் காணப்படுபவையாக, அத்திரம்பாக்கம், பரிகுளம் (இன்றைய திருவள்ளூர் மாவட்டம்) போன்றவற்றையும் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.

இடைப் பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய மூலக்கற்கள், படிகக் கல் வகை (Quartz), செர்ட் (Chert), அகேட் (Agate) (மணி வகை ரத்தினங்களில் ஒன்று), ஜாஸ்பர் (Jasper) (பழுப்பு நிற மணிக் கல் வகை) மற்றும் சால்சிடோனி (Chalcedony) (வெண்ணிற மணிக் கல் வகை). இதுவும் படிகக் கல் வகையைச் சார்ந்ததுதான். இவற்றில், செர்ட் வகைக் கற்களே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன*10.

இந்தியாவில் இரண்டுவிதமான தொழிற்பட்டறைகள் இருந்தன என ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்*11. அவை, தென்னிந்தியாவில் சென்னைத் தொழிற்கூடம் (Madras Hand Axe Industry). அடுத்து, வடஇந்தியாவில் சோகன் தொழிற்கூடம் (Sohan Hand Axe Industry).



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தமிழன் மறந்த தமிழர் வரலாறு !!! பாகம் - 5

வரலாற்றைப்பொறுத்தவரை ஒரு எளிய முன்வரைவு நமக்கு அவசியமானது. தமிழக வரலாற்றை நாம் கீழ்க்கண்டவாறு புரிந்துகொள்ளலாம்.

1. சங்க கால தமிழகம்

சங்க காலப்படைப்புகளில் இருந்து கிடைக்கும் தரவுகளைக் கொண்டு நாம் உருவகித்துக்கொள்ளும் ஒரு காலகட்டம் இது. சிலப்பதிகாரம் வரைக்கும் சித்தரிக்கப்படும் தமிழகம் இது என்று சொல்லலாம். கரிகால்சோழன், பாண்டியன் தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் , சேரன் செங்குட்டுவன் ஆகியோர் இக்காலகட்டத்தின் மிகச்சிறந்த மன்னர்கள். இக்காலகட்டத்தில் சேரசோழ பாண்டிய அரசுகள் இருந்தாலும் அதேயளவுக்கு வலிமையாக இனக்குழுத்தலைவர்களும் நாடாண்டார்கள். பெரும்பாலான போர்கள் மூன்று முடிமன்னர்களும் சிறு ஆட்சியாளர்களை வென்று பெரிய அரசை உருவாக்கும் பொருட்டு நிகழ்த்தியவை

2. களப்பிரர் கால தமிழகம்

கிபி ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தக்காண மையநிலத்தில் இருந்து வந்த சமணர்களான களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்ட காலகட்டம். கல்வெட்டு ஆதாரங்கள் போன்றவை அதிகம் கிடைக்காத காலகட்டம். சம்ஸ்கிருத சமண நூல்களை ஆதாரமாகக் கொண்டு இக்காலகட்டத்தைப்பற்றி ஆராய்ச்சிகள் செய்யலாமென்றாலும் அப்படி ஏதும் செய்யப்பட்டதாகத்தெரியவில்லை. திருக்குறள் முதலிய நீதிநூல்கள் உருவான காலகட்டம் இது.

3. பிற்கால தமிழகம், சோழ பாண்டியப்பேரரசுகள்

கிபி எட்டாம் நூற்றாண்டு வாக்கில் களப்பிரர் ஆட்சி முடிந்து உருவான தமிழ் முடிமன்னர்களின் ஆட்சி. வடக்கே பல்லவர்களும் தெற்கே சோழர்களும் களப்பிரரை வென்று தங்கள் அரசுகளை மீட்டனர். பேரரசுகள் உருவாயின. ஆரம்பத்தில் பல்லவப்பேரரசு. பின்னர் சோழப்பேரரசு. கடைசியில் சிறிதுகாலம் மட்டும் பாண்டியப்பேரரசு. நரசிம்மவர்ம பல்லவன், ராஜராஜ சோழன்,ராஜேந்திர சோழன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போன்றவர்கள் இக்கால பெரும் மன்னர்கள்

4..டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு

1310ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபது மாலிக் காபூர் தெற்கே படைகொண்டு வந்து தமிழ்ப்பேரரசுகளை அழித்தார். பின்னர் கிட்டக்தட்ட அரை நூற்றாண்டுக்காலம் சுல்தான்களின் தளபதிகளால் தமிழகம் ஆளப்பட்டது.
5. நாயக்கர், மராட்டியர் காலம்

விஜயநகர மன்னர் குமாரகம்பணன் 1371ல் மதுரையைக் கைப்பற்றுவதுடன் தொடங்கும் இக்காலகட்டம் 1730 வரை நீள்கிறது. மதுரை, தஞ்சை,செஞ்சி ஆகியவற்றின் நாயக்கர் ஆட்சி நிறுவப்பட்டது. ராணி மங்கம்மாளும் திருமலை நாயக்கரும் நாயக்கராட்சியின் சிறந்த மன்னர்கள். பின்னர் தஞ்சாவூர் மராட்டியரால் ஆளப்பட்டது

6. ஐரோப்பியர் காலம்

பாண்டிச்சேரியை பிரெஞ்சுக்காரர்களும் சென்னையை ஆங்கிலேயர்களும் உருவாக்குவதுடன் தொடங்கும் காலகட்டம். 1947 வரை நீண்டது

7.விடுதலைக்குப்பின்.

1947 தேசவிடுதலைக்குப்பின் தமிழகம் 1951ல் மொழிவழி மாநிலமாக உருவானது.

என்று ஏழு காலகட்டங்களாகப் பிரித்துக்கொள்கிறோம்.

கேரளவரலாற்றை சற்று மாறுபட்டு பிரித்துக்கொள்ளவேண்டும். சங்ககாலத்தில் சேரர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தார்கள். ஆகவே அதை பிளவுபடாத காலகட்டம் எனலாம். அதன்பின் சேரர் வரலாறு பல தனிப்பட்ட சிக்கல்களுடன் தனிப்பாதையில் இயங்குகிறது. அதைப்புரிந்துகொள்வது சிறிது கடினம். ஏனென்றால் தமிழக வரலாறில் பிற்காலத்தில் பேரரசுகள் உருவாயின. ஆகவே ஆலயங்களும் பேரிலக்கியங்களும் உருவாயின. அவை வரலாற்றாதாராங்களை அளிக்கின்றன. அதாவது தமிழக வரலாறு வென்றவர்களின் வரலாறு.

கேரள வரலாறு தோற்றவர்களின் வரலாறு . வென்றவர்களின் குறிப்புகள் அளிக்கும் சித்திரமே ஆய்வுக்குக் கிடைக்கிறது. உதிரிக்குறிப்புகள் வழியாகவே வரலாற்றை கற்பனைசெய்துகொள்ள முடிகிறது.

1. சங்க காலகட்டம்.

இக்கால சேர மன்னர்கள் அனைவரும் கேரளத்தவரே என்று கூறிவிட முடியாதென்றாலும் அன்றைய சேரநாட்டில் இன்றைய கேரள நிலம் பெரிதும் அடங்கியிருந்தது என்று சொல்லலாம். சேரர்களுக்கு இணையாகவே இக்காலத்தில் சிறு ஆட்சியாளர்கள் ஆண்டிருந்தார்கள். வடக்கே எழிமலை தனி நாடாக விளங்கியிருந்தது. தெற்கே வேள்நாடு [குமரிமாவட்டம்] ஆய் மன்னர்களால் ஆளப்பட்டது. பண்டைய கேரளத்தில் கிடைக்கும் திடமான தொல்பொருட் சான்றுகள் ஆய் மன்னர்களைப்பற்றியவையே.

இக்காலகட்டத்தில் சேரமன்னர்களின் தலைநகரமான வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் இப்போதுள்ள கொடுங்கல்லூர் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள தொன்மையான சிவன் கோயில் திருவஞ்சைக்குளம் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள தேவி கோயில் சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோயிலின் மறுவடிவமாக இருக்கலாம். தொல்பொருட் சான்றுகள் அனேகமாக ஏதுமில்லை


2. முதல் அறியப்படாத காலகட்டம்

களப்பிரர் காலகட்டத்தில் சேரநாடு எப்படி இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. கப்பம் கட்டும் சிறுகுடி மன்னர்களால் ஆளப்பட்டிருக்கலாம். அனைத்து குலங்களிலும் மன்னர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக வேள்நாட்டில் நாஞ்சில் குறவன் என்ற ஆட்சியாளர் இருந்திருக்கிறார். ஒருசில கோயில்கொடை கல்வெட்டுகளில் சில மன்னர்களின் பெயர்கள் மட்டும் உள்ளன.

3. சோழர் ஆதிக்க காலகட்டம்

இரணியலை ஆண்ட சேரன் பாஸ்கர ரவிவர்மனை பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் வெல்வதுடன் தொடங்கும் இந்த காலகட்டம் முந்நூறு வருடம் நீடித்தது. சோழர் கால கல்வெட்டுக்கள் பல கிடைக்கின்றன.

4. இரண்டாவது அறியப்படாத காலகட்டம்

சோழர் ஆட்சி முடிந்தபின் பாண்டிய ஆட்சியின் சிறிய காலகட்டத்துக்குப்பின் என்ன நடந்தது என்பது மீண்டும் தெளிவாக இல்லை. ஒரு நூற்றாண்டுகளுக்குள் பல சிறு ஆட்சியாளர்கள் சுதந்திர மன்னர்களாக உருமாறினார்கள். திருவிதாங்கூர், கொல்லம், கொச்சி, கோழிக்கோடு மன்னர்கள் அவர்களில் வலிமைபெற்றவர்கள் ஆனார்கள்.

5. கேரள சிறுமன்னர்களின் காலகட்டம்

கேரளம் ஐம்பதுக்கும் மேற்பட்ட மன்னர்களால் ஆளப்பட்ட காலகட்டம். திருவிதாங்கூர், கொல்லம், கொச்சி, கோழிக்கோடு மன்னர்கள் அவர்களில் வலிமைபெற்றவர்கள் ஆனார்கள். கடைசியில் கோழிக்கோடு சாமூதிரியும் திருவிதாங்கூர் மன்னரும் இரு பெரும் மன்னர்களாக எஞ்சினார்கள்.
6. ஐரோப்பியர் காலம்

போர்ச்சுக்கல்காரர்கள் , டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கேரள அரசுகள் மீது மறைமுக ஆதிக்கம் கொள்ள ஆரம்பிப்பதுடன் தொடங்கும் இக்காலகட்டம் 1947 வரை நீடித்தது. கடைசியில் கோழிக்கோடு சென்னை மாகாணத்தின் பகுதிகளாக ஆங்கிலேயரால் நேரடியாக ஆளப்பட்டது.. திருவிதாங்கூர் கப்பம்கட்டும் தனிநாடாக நீடித்தது. இக்காலகட்டம் பற்றி மிக விரிவான தகவல்கள் உள்ளன. திருவிதாங்கூரின் வரலாறு நாகம் அய்யா, சங்குண்ணி மேனன், வேலுப்பிள்ளை ஆகியோராலும் கொச்சி வரலாறு பத்மநாபமேனனாலும் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

7. விடுதலைக்குப்பின்.

1947ல் விடுதலைக்குப்பின் திருவிதாங்கூரும் கொச்சியும் இணைந்து திருகொச்சி என்ற பேரில் ஒரு ஆட்சிப்பகுதியாக நீடிக்க சென்னைமாகாணத்தின் பகுதியாக கோழிக்கோடுபகுதி இருந்தது. 1951ல் ஐக்கிய கேரளம் என்ற பேரில் இன்றைய கேரளம் உதயமாயிற்று.

இவ்வாறு கேரள வரலாற்றை பிரித்து ஒரு முன்வரைவை உருவாக்கிக் கொள்வது நல்லது.

கேரளத்தில் இன்றுள்ள இந்த வரலாற்றுப்பாடத்தின் முன்வரைவை உருவாக்கியவர் பேராசிரியர் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை என்ற பேரறிஞர். அவரே இக்காலகட்டங்களை பகுத்து ஒரு வரிசையை உருவகம் செய்தார். அவர் காலகட்டத்தில் அதிகமான கல்வெட்டுகள் கண்டடையப்படவில்லை. பயணிகளின் ஆவணங்கள் அதிகமும் பரிசீலிக்கப்படவுமில்லை. அவர் அதிகமும் இலக்கிய ஆதாரங்களையும் தொன்மங்களையுமே கணக்கில் கொண்டார்

அவருக்கு முன்னர் இருந்த வரலாற்று வரைவுகள் வில்லியம் லோகனின் மலபார் மானுவல், வார்ட் ஆண்ட் கானரின் குறிப்புகள் மேலும் சில ஐரோப்பியரின் குறிப்புகள் போன்றவை. கேரளோர்ற்பத்தி என்னும் பண்டைய நூல் கேரள வரலாறு பற்றிய செவிவழிச்செய்திகளினால் ஆனது. கேரளம் ரேணுகாதேவியின் மகனாகிய பரசுராமனால் மழு வீசி கடலில் இருந்து மீட்கப்பட்டது என்பது போன்ற தொன்மங்கள் இதில் உள்ளன. கொட்டாரத்தில் பாச்சு மூத்தது என்பவரால் எழுதப்பட்ட திருவிதாங்கூர் சரித்திரம் கேரள உற்பத்தி நூலை பெரும்பாலும் அடியொற்றியது. இந்த முன்தரவுகளை பலவகையிலும் தொகுத்து ஒரு வடிவம் கொடுத்தவர் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை.

அறியப்படாத காலங்களைப்பற்றிய இளங்குளம் குஞ்ஞன்பிள்ளையின் ஊகங்கள் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அறியப்படாத காலங்களில் அவர் கேரளத்தின் பொற்காலங்களை கற்பனைசெய்ய முனைகிறார் என்பதே முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் கேரள தேசியம் மெல்ல மெல்ல அடையாளம் காணப்பட்டுவரும் இன்று அவையெல்லாம் அதிகாரபூர்வமான பாடங்களாக ஆகிவிட்டிருக்கின்றன.

முதல் அறியப்படாத காலகட்டத்தைச்சார்ந்த மூன்று முக்கியமான தொன்மங்கள் கிடைக்கின்றன. ஒன்று, குலசேகர ஆழ்வாரைப்பற்றியது. இரண்டாவது சேரமான் பெருமாள் நாயனார். மூன்று மெக்காவுக்குச் சென்ற சேரமான் பெருமாள். இந்த தகவல்களைத்தவிர சேரமன்னர்களின் ஆட்சியுரிமை பெருமாள்களால் வழங்கப்பட்டது என்ற ஒரு தொன்மமும் உள்ளது. நூற்றியெட்டு சேரமான் பெருமாள்கள் வரிசையாக ஆண்டதாகவும் நூற்றியெட்டாவது பெருமாள் மெக்காவுக்குச் சென்றதாகவும் ஒரு தொன்மம் சொல்கிறது

கிபி 825 ஐச்சேர்ந்த வாழப்பிள்ளி கல்வெட்டு குலசேகர ஆழ்வாரைப்பற்றிய குறிப்புகளை அளிக்கிறது. சேரமான் பெருமாள் நாயனாரைப்பற்றிய இலக்கிய ஆதாரங்களுக்கு உபரியாக கொடுங்கல்லூரில் உள்ள திருவஞ்சைக்குளம் ஆலயத்தில் கல்வெட்டுக்குறிப்பு ஒன்றும் உள்ளது. திருவஞ்சைக்குளம் கோயிலில் சேரமான் பெருமாள் சொற்காரோகணம் செய்த நாள் தமிழக சைவ மடங்களின் பங்களிப்புடன் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல மெக்காவுக்குச் சென்ற சேரமான் பெருமாள் பற்றியும் சில உதிரி ஆதாரங்கள் உள்ளன. அரேபியக்கடற்கரை நகரான ஜாபரில் உள்ள கல்லறை ஒன்று சேரமான் பெருமாளுடையதாக இருக்கலாமென்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் சமகால அரேபிய ஆவணங்களில் இதைப்பற்றிய தகவல்கள் இல்லை. எனினும் வாய்மொழி ஆதாரம் வலுவாக இருப்பதனால் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கலாம் என்று இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை உள்ளிட்ட கேரள வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

கிபி 800 முதல் கிபி 820 வரை ஆண்ட குலசேகர ஆழ்வார் களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர் கேரளம் கண்ட முதல்பெருமன்னர் என்றும் கொல்லம் ஆண்டை அவரே தொடங்கிவைத்தார் என்றும் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை ஊகிக்கிறார். அதன் பின்னர் சேரமான் பெருமாள் என்று அழைக்கப்பட்ட மன்னர்களின் ஒரு வரிசை மகோதயபுரம் [மாக்கோதைபுரம்] என்று அழைக்கப்பட்ட கொடுங்கல்லூரை தலைநகரமாகக் கொண்டு கேரளநிலத்தை ஆண்டது என்று சொல்லும் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை அவர்களே பெருமாள் வம்சம் என்று சொல்கிறார். இதை இரண்டாவது சேரப்பேரரசு என்று அவர் குறிப்பிடுகிறார். முதல் சேரப்பேரரசு இயமவரம்பன் நெடுஞ்சேரலாதனால் உருவாக்கப்பட்டு அவர் மகன் சேரன் செங்குட்டுவனால் விரிவாக்கம்செய்யப்பட்டது என்றும் அதன் தலைநகரமும் கொடுங்கல்லூர்தான் என்றும் சொல்கிறார்.

பெருமாள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு சேரமான் பெருமாள்தான் சைவ நாயன்மாரில் ஒருவரான சேரமான் பெருமாள் நாயனார். அவரது வாரிசுகளால் திருவஞ்சைக்குளத்தில் இன்றுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார். அதேபோல சேரமான் பெருமாள்களில் ஒரு மன்னர் இஸ்லாம் மதத்தை தழுவி மெக்கா சென்றிருக்கலாம் என்றும் இளங்குளம் உள்ளிட்ட கேரள வரலாற்றாசிரியர்கள் பலர் நினைக்கிறார்கள். அவர் யார் என்பதை இப்போது தெளிவாகச் சொல்ல முடிவதில்லை என்றாலும் கிபி 825 முதல் கிபி 844 வரை ஆண்ட ராஜசேகர வர்மன் அல்லது அவரது மகன் ஸ்தாணு ரவிவர்மனாக [கிபி 844-855] இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் பெருமாள் வம்சம் சோழர்களுடனான போரில் முழுமையாக அழிக்கப்பட்டது என்பது இளங்குளம் குஞ்ஞன்பிள்ளையின் கருத்து. ராஜராஜசோழன் சேரநாட்டை கைப்பற்றி தன்னுடைய நேரடி ஆளுகைக்குக் கீழே கொண்டுவந்தார். 1090 முதல் 1102 வரை ஆண்ட ராமவர்ம குலசேகர பெருமாள் கடைசி பெருமாள் மன்னர் என்றும் அவர் மகோதயபுரத்தைக் கைவிட்டு கொல்லத்துக்கு வந்து ஒரு சிறு அரசை நிறிவினார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் திருவிதாங்கூரில் உள்ள திருவட்டாறில் வாழ்ந்தாரென்றும் பின்னர் இரணியலில் மறைந்தார் என்றும் சொல்லபப்டுகிறது. குலசேகரப்பெருமாள் அரண்மனை என்ற ஒரு கட்டிடம் சமீபகாலம் வரை இரணியலில் இருந்தது.

இந்தப் பெருமாள்வம்சத்தின் வரலாறு வெறும் கற்பனை என்று பி.கெ.பாலகிருஷ்ணன் போன்ற வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். இதற்கு வலுவான தொல்பொருள் சான்றுகள் இல்லை. ஆனாலும் இந்த வரலாற்றில் உள்ள கேரள தேசியப்பெருமிதம் காரணமாகவோ என்னவோ இது ஓர் அங்கீகரிக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது.

இரண்டாவது அறியப்படாத காலகட்டம் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் தொடங்குகிறது. சோழர்களின் ஆட்சியின் இறுதியில் கேரள நிலப்பகுதி பாண்டியர்களால் ஆளப்பட்டது என்பதற்கு சமீபமாக சில கல்வெட்டுகள் கிடைக்கின்றன. பின்னர் பாண்டிய அரசு சுல்தானியப்படையெடுப்புகளால் அழிக்கப்பட்டபோது கேரளத்தில் ஒரு அராஜக நிலை உருவாகியிருக்கலாம். பிற்காலத்தில் கேரளத்தில் உருவாகி வந்த ஏராளமான ‘மன்னர்கள்’ இக்காலகட்டத்தில் உருவானவர்களே. இவர்களில் ஒருவரான ரவிவர்மன் குலசேகரப்பெருமாள் கடைசி பெருமாள் மன்னரான ராமவர்ம குலசேகர பெருமாளின் வாரிசு என்றும் அவர் பாண்டிய அரசை குறுகிய காலம் ஆண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

சேரச் சிறுமன்னர்கள் பல வகைப்பட்டவர்கள். .கேரள நிலத்தில் இருக்கும் அளவுக்கு பலவகையான மன்னர்கள் எங்குமே இல்லை. புராதன சேர உதிரவழி கொண்டவர்கள் ஒரு வகை. சோழர்கள் காலத்தில் நியமிக்கப்பட்ட தளபதிகள் இரண்டாம் வகை. இதைத்தவிர குட்டிக்குட்டி அதிகாரங்கள் கொண்டவர்களும் மன்னர்களாக ஆனார்கள்கோயிக்கல் மன்னர்கள் என்று சிலர் சொல்லப்பட்டார்கள்.[ கோயில்கல் ] அவர்கள் சில கோயில் நிலங்கள் மீது அதிகாரம் கொண்ட கோயிலதிகாரிகள் மட்டுமே. நாடுவாழிகள் என்று சொல்லப்பட்டவர்கள் சோழத்தளபதிகள். அவர்களும் மன்னர்களாக தங்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.சில இடங்களில் வரிவசூல் உரிமை கொண்டிருந்த நிலப்பிரப்புக்குடும்பங்கள் ஸ்வரூபம் என்று சொல்லப்பட்டன. இவர்களும் பின்னர் மன்னர்களாக அறிவித்துக்கொண்டார்கள். உதாரணமாக பாண்டிய அரசர்களின் ஒரு சிறு வரிவசூல் தளபதிதான் பந்தளம் மன்னர்.

இவர்கள் அனைவருமே தங்களை புராதன சேர வம்சாவளியினர் என்றுதான் சொல்லிக்கொண்டார்கள். அத்தகைய ஐதீகப்பின்புலம் இல்லாமல் மக்களிடம் மன்னராக அங்கீகாரம் பெற முடியாது. ஆகவே பல வம்ச வரலாறுகளும் தொன்மங்களும் உருவாகி வந்தன. அவற்றில் ஒன்றுதான் பண்டைய சேரமான் பெருமாள் அவரே தன் நாட்டைப் பிரித்து இவர்களிடம் கொடுத்தார் என்ற கதை. பெருமாள்களிடமிருந்து உண்மையில் நாட்டை சோழர்கள் எடுத்துக்கொண்டார்கள்.

சிறந்த உதாரணம் திருவிதாங்கூர் அரச வம்சம். இவர்கள் திருப்பாம்பரம் ஸ்வரூபம் என்ற நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள். இவர்களின் உண்மையான உதிரவழி என்ன என்பது தெரியவில்லை. இவர்கள் ஆண்ட பகுதி சங்க காலத்தில் ஆய் மன்னர்களின் நாடாக இருந்தது. சோழர்கள் சென்றபின்னர் சிலகாலம் சுல்தான்களின் தளபதிகளால் திருவிதாங்கூர் நிலப்பகுதி ஆளப்பட்டது. பின்னர் இவர்கள் தங்களை மன்னர்களாக அறிவித்துக்கொண்டு ஆண்டனர். பிற ஸ்வரூபங்களை மெல்ல மெல்ல அழித்தும், தங்களுடன் இணைத்தும் முழுமையதிகாரம் பெற்றனர்

திருவிதாங்கூரின் முழு ஆட்சியாளர்களாக இவர்கள் ஆனபோது சேரமான் பெருமாளின் நாடு இவர்களுக்கு அளிக்கப்பட்டதாகச் சொல்லிக்கொண்டார்கள். வஞ்சீச பால என்ற அடைமொழி [வஞ்சியின் மன்னர்கள்] சூட்டிக்கொண்டார்கள். இவ்வாறுதான் காயங்குளம், கொச்சி, கொல்லம், சிறையின்கீழ், ஆற்றிங்கல்,கொடுங்கல்லூர் மன்னர்கள் அனைவருமே சொல்லிக்கொண்டார்கள். அத்தனை மன்னர்களையும் வென்று திருவிதாங்கூர் கோழிக்கோடு மன்னரின் எல்லைவரை பரந்தபோது இவர்கள் கேரள வரலாற்றின் மிகப்பெரிய நாட்டுக்கு உரிமையாளர்களாக ஆனார்கள். தொல்சேர வம்சத்தின் தொடர்ச்சியாக இவர்கள் அரண்மனைசார்ந்த வரலாற்றாசிரியர்களால் சுட்டப்பட்டார்கள்.
பெருமாள்கள் யார், அவர்கள் உண்மையிலேயே இருந்தார்களா என்பதெல்லாம் கேரள வரலாற்றாய்வில் அரைநூற்றாண்டுக்காலமாக விவாதிக்கப்பட்டு வௌம் விஷயங்கள். பெருமாள்கள் பாண்டியர்கள் அல்லது சோழர்களின் வம்சத்தில்வந்த அரச பிரதிநிதிகள் மட்டுமே என்றும், அவர்கள் புராதன சேர அரசின் அழிவுக்குப்பின்னர் கேரளத்தை ஆள நியமிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் தனித்த முடிமன்னர்கள் அல்ல என்றும் ஒரு தரப்பு உண்டு. கடைசிப்பெருமாள் ஆன ரவிவர்மன் குலசேகரப்பெருமாள் பாண்டிய அரியணைக்கு உரிமைகொண்டாடினான் என்பது இதற்கான ஆதாரமாகக் காட்டப்படுகிறது. பெருமாள்கள் என்ற பட்டப்பெயருடன் ஒருசில ஆட்சியாளர்கள் இருந்திருக்கலாமென்றும் அவர்களுக்கு கேரள நிலம் மீது தொன்மம் சார்ந்த அதிகாரம் இருந்தது என்றும் பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

நாம் கேரள வரலாறு சார்ந்த இந்த முன்வரைவை மனதில்கொண்டு எந்த ஒரு கருத்தையும் அந்தப்பின்னணியில் பொருத்தி மட்டுமே ஆராய்ச்சி செய்யவேண்டும்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 தமிழன் மறந்த தமிழர் வரலாறு !!! பாகம் 8


தமிழக கோவில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைபாடுகலாகட்டும், தூண்களில் ஒரு நூல் இல்லை கூட கோணல் இல்லாமல் கட்டப்பட்ட 1000 கால் மண்டபங்கள் ஆகட்டும், 1000 ஆண்டுகளாக இயற்க்கை சீற்றங்களால் கூட சிறு தேய்வுகள் இன்றி, எந்த வண்ண பூச்சும் இன்றி நிமிர்ந்து நிற்கும் தஞ்சை கோபுரம் ஆகட்டும். இன்னும் ஆதி தமிழர்கள் செய்த பற்பல அற்புதமான விஷயங்கள் பற்றி வியப்புடன் பேசும் நாம் இதை பற்றிய தேடலை மேற்கொண்டோமா? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விஷத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்று மா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி (வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரிமா
1/64 - கால்வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ் முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - 􀂫􀁿மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைபடி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

அடேங்கப்பா எந்த மொழியிலும் இல்லாத decimal calculation !!!!!!!

nano particle தான் மிக சிறியது என்று உலகமே பேசிகொண்டிருக்கையில் நம் முன்னோர்கள் அதைவிட சிறிய துகளுக்கு கூட calculation போடிருக்கிரார்கள் என்றால் மிகவும் வியக்கத்தக்க ஒன்றே.
இவ்வளவு கணிதமும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது!!!!!
இந்த எண்களை வைத்தே நுணுக்கமான பல வேலைகளை செய்துள்ளனர் என்றால் நம் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி பாருங்கள்.
இன்றைக்கு உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தை வைத்தே நம்மால் செய்ய இயலாத பல அற்புதங்களை அன்றே செய்து வைத்து விட்டனர்.
கால்குலேடரையும், தொழில்நுட்ப வளர்ச்சி என்று இளைய தலை முறை கூறிக்கொண்டிருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம், தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்...!!!



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 தமிழன் மறந்த தமிழர் வரலாறு !!! பாகம் - 4

தமிழ் எழுத்துக்கள்

தமிழ் மொழி வரலாறு

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

சங்க காலம் (கிமு 300 - கிபி 300)சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

 

சொற்பிறப்பு

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர். சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

எழுத்துமுறை

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

தமிழ் எழுத்து எப்பொழுது தொடங்கி எவ்வாறு வளர்ந்தது? 2006ம் ஆண்டில் கிடைத்த கி.மு. பதினைந்திலிருந்து கி.மு இருபதாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்திய கற்கோடாரியில், சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட 'Indus' எழுத்துருவில் சில வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலிரு வடிவங்கள் முருகன் என்ற பொருளைக் கொடுப்பதாக திரு. ஐராவதம் மகாதேவன் கூறுகிறார், மேலும் Indus எழுத்துரு தமிழ்தான் என்றும் கருதுகிறார். இவர் கருத்தை ஆதரித்து இந்தியா முழுமைக்கும் எழுத்துமுறை தந்தவன் தமிழனே என்று பல அறிஞர்களும் கருதுகின்றனர். இந்த 'Indus' எழுத்துரு உண்மையிலேயே தமிழாக இருந்தால், காலத்தால் முற்பட்ட தமிழ் எழுத்து இதுவேயாகும்.

இந்த Indus எழுத்துருவைத் தவிர்த்து நமக்கு இப்பொழுது கிடைத்துள்ள கல்வெட்டுச் சான்றுகளின் படி தமிழ் எழுத்துகளிலேயே மிகவும் தொன்மையானது 'தமிழ் பிராமி'யேயாகும். தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் பானை ஓடுகளில் உள்ள எழுத்துக் கீறல்கள் இவற்றின் காலத்தை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்ததில், இவ்வெழுத்துமுறை கி.மு 4ம் அல்லது 3ம் நூற்றாண்டிலுருந்து (அ.கு.1) கி.பி. 4ம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி.பி. 4ம் நூற்றாண்டிற்குப் பின், இவ்வெழுத்துமுறை மாற்றமடைந்து வட்டெழுத்தாகவும், பிறகு நாம் இப்பொழுது பயன்படுத்தும் நவீன தமிழ் எழுத்துகளுக்கு முன்னோடியான எழுத்துமுறையாகவும் வளர்ச்சியடைந்தது. தமிழ் பிராமி எழுத்துகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

கண்டுபிடிப்பு

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் சில புரிந்துகொள்ள முடியாத கல்வெட்டுகள் கிடைத்தன. இவற்றைப் பல அறிஞர்கள் ஆய்வு செய்தனர். அவ்வறிஞர்களுள் வெங்கய்யா என்பவரே இவை அசோகச் சக்கரவர்த்தி கால பிராமிக் கல்வெட்டுகளை ஒத்திருப்பதை உணர்ந்து, இவை பிராமிக் கல்வெட்டுகள் என்று கண்டுபிடித்தார். ஆனாலும் இவரும் இன்னும் பிற அறிஞர்களும் இவை வடமொழி அல்லது பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் என்றே நினைத்தனர். தமிழ் மொழிக்கே உரித்தான ழ, ள, ற, ன முதலிய எழுத்துகள் இக்கல்வெட்டுகளில் இல்லாதிருப்பதை கே. வி. சுப்பிரமணிய அய்யர் எனும் அறிஞரே முதன்முதலில் கண்ணுற்றார். மேலும் அவர் வடமொழி எழுத்துக்கள் சில இக்கல்வெட்டுகளில் இடம்பெறாமல் இருப்பதையும் உணர்ந்து, இவை தமிழ் மொழிக் கல்வெட்டுகளாகலாம் என்று மொழிந்தார். பின்னாளில் பல அறிஞர்கள் இக்கல்வெட்டுகளை படிக்க முயன்று பாடங்களை வெளியிட்டனர். ஆயினும் அக்கல்வெட்டுகளின் தெளிவில்லாத புகைப்படங்கள் மற்றும் மசிப்படிகளை மட்டுமே கொண்டு படித்த காரணத்தால் அப்பாடங்களில் பல தவறுகள் நேர்ந்தன. சில வருடங்களுக்கு முன்பு ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மிகவும் முனைந்து, இக்கல்வெட்டுகள் எல்லாவற்றையும் முடிந்தவரை நேரில் பார்வையிட்டு, மேலும் மசிப்படியில்லாமல் புதிதாக 'Tracing' முறை கொண்டு கல்வெட்டுகளைப் படியெடுத்து இக்கல்வெட்டுகள் அனைத்தும் ஒரு சில பிராகிருத சொற்கள் தவிர முழுதும் தமிழ் மொழியிலேயே இருப்பதை ஐயமின்றி நிரூபித்துள்ளார். தமிழ் பிராமியைப் பற்றி இதுவரை தெரிந்த எல்லா விவரங்களையும், இவர் புதிதாகக் கண்டுபிடித்த விவரங்களையும் "Early Tamil Epigraphy" என்ற புத்தகத்தில் விரிவாகக் கொடுத்துள்ளார். மேலும் அப்புத்தகத்தை வெளியிட்ட தேதிவரை கிடைத்த அனைத்துத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் படங்கள் மற்றும் கல்வெட்டுப் பாடங்களையும் இப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

தோற்றம்

தமிழ் பிராமி எழுத்துமுறை அசோகரின் பிராமி-யிலிருந்து தோன்றியது என்று சிலவருடம் முன்பு வரை எண்ணப்பட்டு வந்தது. ஆயினும் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்கும் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானைக்கீறல்கள் மற்றும் தேனியில் கிடைத்த கி.மு. 4 அல்லது 3ம் நூற்றாண்டின் நடுகற்கள் இவற்றிலிருந்து அசோகர் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே தமிழ்-பிராமி எழுத்துமுறை வழக்கில் இருந்தது என்று கருதப்படுகிறது. கீழே தமிழ் பிராமி எழுத்துக்களின் அட்டவணை (கையெழுத்துப்பிரதி) கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துக்கள்

தமிழ் பிராமியில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ இவற்றை குறிக்க 6 எழுத்துக்களும், எ மற்றும் ஏ இவ்விரண்டையும் குறிக்க ஒரு எழுத்தும், ஒ, ஓ இவையிரண்டையும் குறிக்க ஒரு எழுத்தும் ஆக மொத்தம் 8 உயிரெழுத்துக்கள் இருந்தன. ஔ இடம்பெறவில்லை. 14 மெய்யெழுத்துக்களையும் சேர்ந்து 22 எழுத்துக்களே இருந்தன. க், ம் முதலிய எழுத்துக்களைக் குறிக்க முற்காலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் புள்ளிகள் காணப்படவில்லை. ஒருசில பிற்கால தமிழ் பிராமி கல்வெட்டுகளில் அரிதாக புள்ளி காணப்படுகிறது. முற்கால வட்டெழுத்துக்கல்வெட்டுகளில் இப்புள்ளிகள் அதிகமான அளவில் காணப்படுகின்றன.

வளர்ச்சி

தமிழ்-பிராமி கி.பி 4ம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்தாலும், எழுத்துக்கள் சில காலத்திற்கேற்ப மாற்றமடைந்தன. திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள், தமிழ் பிராமி தோன்றியது 3ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 2ம் நூற்றாண்டு என்ற கருத்தில் கி.மு 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 1ம் நூற்றாண்டு வரை இருந்தது முற்கால தமிழ் பிராமி எனவும், கி.பி. 2ம் நூற்றாண்டிலிருந்து 4ம் நூற்றாண்டுவரை இருந்தது பிற்கால தமிழ் பிராமி எனவும் பகுத்துள்ளார். இப்பகுப்பில் கி.மு 2ம் நூற்றாண்டு என்பதை திருத்தம் செய்து கி.மு. 4ம் அல்லது 3ம் நூற்றாண்டு எனப் படிப்பது சரியாக இருக்கும். தமிழ்-பிராமி எழுத்து கி.பி 5-6ம் நூற்றாண்டில் முற்கால வட்டெழுத்தாக மாற்றமடைந்தது.

கல்வெட்டுகள்

மாங்குளம், அரிட்டாபட்டி, அரச்சலூர், எடக்கல் குகைகள், அழகர்மலை, சித்தன்னவாசல், திருமலை, ஜம்பை முதலிய பல இடங்களில் முற்கால தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், ஆனைமலை, புகளூர், குன்னக்குடி, குடுமியான்மலை முதலிய பல இடங்களில் பிற்கால தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் கிடைத்திருக்கின்றன.

இக்கல்வெட்டுகள் பல சுவையான தகவல்களைத் தருகின்றன. உதாரணத்திற்கு, புகளூரிலுள்ள 9 கல்வெட்டுகளுப் ஒரே செய்தியைத் தரும், ஒரு சில வித்தியாசங்கள் தவிர மற்றபடி ஒன்று போலவே இருக்கும் இரு கல்வெட்டுகள் கோ ஆதன் செல்லிரும்பொறை, அவர் மகன் பெருங்கடுங்கோன் மற்றும் பெருங்கடுங்கோனின் மகன் இளங்கங்கோ ஆகியோரின் பெயர்களைத் தருகிறது. இப்பெயர்கள், சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்களாக முறையே செல்வக்கடுங்கோ வாழிய ஆதன் எனவும், அவரை அடுத்து அரசாண்டவர்களாக பெருஞ்சேரல் இருப்பொறை மற்றும் இளங்சேரல் இரும்பொறை ஆகியோரின் பெயர்களைத் தருகிறது. பதிற்றுப்பத்தில் வரும் அரசர்கள் தாம் கல்வெட்டிலும் இடம்பெற்றவர்கள் என்று கருதக்கூடியதாக இருக்கின்றது.

முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் [இ*]ளங்
கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்

இதுமட்டுமல்லாது புறநானூறு மற்றும் அகநானூறுப் பாடல்கள் காட்டும் குதிரைமலையின் அரசரான சேரப்படையின் தளபதி பிடன் மற்றும் அவரின் மகன் பிடன்கொற்றன் இவர்களை அதே புகளூரில் உள்ள மேலும் சில கல்வெட்டுகளில் முறையே பிடன் அல்லது பிடந்தை என்றும் மகனை கொற்றந்தை எனவும் குறிப்பிடுவதாகக் கருதமுடிகிறது. இதிலுள்ள மற்றுமொரு கல்வெட்டு பிடனின் மகளாகக் கொற்றி என்பவரைக் காட்டுகிறது.

மேலும் பாண்டிய நெடுங்செழியன் மற்றும் சங்க இலக்கியம் காட்டும் அதியமான் நெடுமானஞ்சி ஆகியோரின் பெயர்களெனக் கருதத்தக்க வகையில் மாங்குளம் மற்றும் ஜம்பையிலுள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இப்பெயர்கள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் காட்டும் இவ்வரசர்கள் இருந்ததற்கான மேலுமொரு சான்றாக இக்கல்வெட்டுகள் இருக்கின்றன.

முதல் வரி - அ ன் ஊ ர் அ த ன்

இரண்டாம் வரி - ன் அ ன் க ல்

செய்தி

இக்கல்வெட்டு தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி தாலுகாவில் புளியம்கொம்பை என்ற ஊரில் கிடைத்துள்ள மூன்று நடுகற்களுள் ஒன்று. அ த ன் என்பதை ஆதன் என்று படித்து (பல கல்வெட்டுகளில் குறில் நெடில் எழுத்துகள் வித்தியாசம் இல்லாமல் ஒன்று போலவே குறிக்கப்பட்டுள்ளது). ஆதன் என்ற ஒருவரின் நினைவாக நட்ட கல் என்று பொருள் கொள்ளலாம். கல்வெட்டு முழுவதும் கிடைக்காததால் ஆதனின் முழுப்பெயர், ஊர் மற்றும் முழு செய்தியும் தெரியவில்லை.

மண்பானைக் கீறல்கள், காசுகள், மற்ற பொருள்கள்
உறையூர், அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் மற்றும் பல இடங்களிலும் 2005ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரிலும் தமிழ்-பிராமி எழுத்துகள் பொறித்த மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை தவிரத் தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த பல காசுகளும், மோதிரங்களும் அகழாய்வுகளில் முக்கியமாகக் கரூர் அமராவதி நதிப்படுகையில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, ஆந்திராவில் சாலிகுண்டம் பகுதியிலும் மற்றும் இலங்கையிலும் பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் எகிப்து நாட்டில் சிவப்புக் கடற்கரையிலுள்ள ரோம் நாட்டினர் குடியிருந்த பகுதிகளின் அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த ஒரு பானை ஓடு கிடைத்திருக்கின்றது. அதுபோல தாய்லாந்து நாட்டில் தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பொற்கொல்லர் உபயோகித்த உறைகல் ஒன்று கிடைத்திருக்கிறது.

பானைக்கீறல் பாடம்

முதல் எழுத்து உ போல் உள்ளது ஆயினும் சரியாகத் தெரியவில்லை. தமிழ் பிராமியில் உ மற்றும் ந எழுத்துகள் இரண்டுமே 'L' வடிவில் இருக்கும், 'ந' எழுத்தில் கீழுள்ள கோடு இடது பக்கமும் நீண்டிருக்கும். பிற்கால பிராமி கல்வெட்டுகள் சிலவற்றில் இந்த நீளல் காணப்படவில்லை. இவ்வெழுத்தை திரு ஐராவதம் மகாதேவன் 'ந' என்று படித்துள்ளார். அடுத்து வரும் எழுத்து 'க',

மூன்றாம் எழுத்தை திரு ஐராவதம் மகாதேவன் 'ன' என்று படித்துள்ளார். கீழே உள்ள படத்தில் 'ன' எழுத்து முற்கால மற்றும் பிற்கால தமிழ் பிராமியில் எப்படி இருந்தது என்பதும். பானைக்கீறலில் உள்ள எழுத்து எப்படி இருக்கிறது என்பதும் காட்டப்பட்டுள்ளது. 'ன' எழுத்தை தவறாக அப்படிப் பானையில் கீறியிருக்கலாம்.

நான்காம் எழுத்து படத்தில் பார்ப்பதற்கு 'ந' போல் இருந்தாலும் உற்றுப் பார்த்தால் அது 'உ' தான் என்பது புலப்படும். இடது பக்கம் நீண்டிருப்பதாகத் தோன்றும் கோடு உண்மையில் 'original' பானைக்கீறல் இல்லை. அடுத்து வரும் எழுத்துக்கள் 5) ர 6) ல.

சேர்த்துப்படித்தால்: ந க ன உ ர ல,

செய்தி

இதை திரு ஐராவதம் மகாதேவன் 'நாகன் ஊறல்' என்று படித்து, இப்பானை நாகன் என்பவரின் ஊறல் பானை அதாவது பனையில் பாளையைக் கீறி அதிலிருந்து ஊறும் நீரை சேமித்து இறக்கப் பயன்பட்ட பானை என்று கருதுகிறார். நாகன் என்பவர் பனையிலிருந்து பதநீர் இறக்கும் தொழிலாளியாக இருந்திருக்கலாம்.

கிடைக்கும் செய்திகள்

மேலே குறிப்பிட்டுள்ள படி அரசர்களின் பெயர்களும், அக்காலத்து ஊர் மற்றும் ஊர்சபையின் பெயர்கள், பொற்கொல்லர் போன்று பலவித தொழில் செய்வோரின் பெயர்கள், ஜைனத்துறவிகள் மற்றும் பள்ளிகளின் பெயர்கள், இளயன், குறவன், நாகன் போன்ற இனப்பெயர்கள், பல சொந்தப் பெயர்கள், வேளாண்மை பற்றிய விவரங்கள் போன்று சமயம் மற்றும் சமுதாயம் சார்ந்த பல விவரங்களை இக்கல்வெட்டுகள் மற்றும் பானைக்கீறல்களை ஆராய்ந்து அறிய முடிகிறது.

எகிப்து, தாய்லாந்து முதலிய இடங்களில் கிடைக்கும் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானையோடு மற்றும் உறைகல் இவை அந்நாளில் தமிழ்நாட்டினர் மற்றைய நாட்டினருடன் கொண்டிருந்த வாணிபத் தொடர்பிற்குச் சான்றாக உள்ளது.

இதுவே பெனிசிய இனத்திற்கும் பழந்தமிழர் இனத்திற்கும் இடையில் இருக்கும் தொடக்கப்புள்ளியாக அமைகிறது. ஏறக்குறைய பெனிசிய எழுத்து வடிவமும் உச்சாராடங்களும் ஒன்று போலவே வருகின்றது. பழந்தமிழரின் கடல் வாணிப தொடர்பிற்காக உருவாக்கப்பட்ட மொழியாக பெனிசிய மொழி இருந்திருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.

இதனை உண்மைப்படுத்தும் விதமாக பண்டைய பெனிசிய மொழியின் சொற்கள் அத்தனையும் ஆதி தமிழ்ச்சொல்லாகவே இருக்கின்றது. பொதுவாக கிரேக்க மொழியில் சொல்லின் முடிவு ' ஸ் ' ல் முடியும், அது பெயர்ச்சொல்லாக இருந்தாலும் வினைச்சொல்லாக இருந்தாலும் சரியே.. ஆனால் பிற்காலத்திய கிரேக்க சொற்கள் " யே " என முடிய ஆரம்பித்தன.. இது மொழியின் காலப்பிரிவை காட்டுகிறது. பெனிசிய மொழி தொடர்பற்றுப்போன காலம் வேறு மொழிகள் கிரேக்கத்துடன் இணைய ஆரம்பித்ததால் இது நிகழ்ந்திருக்கலாம்.

பெனிசி என்பதே தமிழின் " வணிக " என்பதன் கிரேக்க மருவியாகும் , இதுபோல தமிழாக இருந்து பெனிசிய சொல்லாக மாறிய பல சொற்களை இங்கே அடையாளங்காணலாம்.

ரைஸ் - அரிசி
மெற்சண்டைஸ் - மேற்சந்தை
நிற்சண்டைஸ் - நெல்சந்தை
சாப்பேர்ஸ் - கப்பல் ,கலன்
நிம்பஸ் - நீலமேகம்
கிர்ரஸ் - கார்மேகம்
போர்ஸ் - பொழிவு ( மழை )
டார்ச்சஸ் - தீவெட்டி
சீஸ் ( cheese ) - சீம்பால்

தமிழ்நாட்டில் காணப்படும் இக்கல்வெட்டுகள் தமிழ் தெரியாத புத்த, ஜைனத் துறவிகளால் வடமொழியில் எழுதப்பட்டதாக ஒரு கருத்து நிலவியது. இப்பொழுது இக்கல்வெட்டுகள் தமிழ்மொழிக் கல்வெட்டுகள்தாம் என்று ஐயமுற நிரூபிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானைக்கீறல்களில் பொதுமக்களின் பெயர்களும் அவர்கள் தம் பெயரால் பொறித்துக்கொண்டதாக உள்ள தமிழ் எழுத்துகளும், மிகப்பழமையான காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் எழுத்தறிவு மேல்தட்டு மக்களிடம் மட்டுமல்லாது சாமானிய பொதுமக்களிடமும் பரவலாக இருந்தது என்று கருத இடமளிக்கிறது. மேலும் சங்க இலக்கியங்களைப் பாடியோர் மற்றும் தொகுத்தோரில் சமுதாயத்தின் பலதரப்பட்ட தளங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இருப்பதையும் சான்றாகக் கொண்டு சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் முதல் அறிவொளி இயக்கம் மிகப்பரவலாக நடைபெற்றது என்று திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் கருதுகிறார்கள்.

அடிக்குறிப்பு

1) தேனியில் கிடைத்த நடுகற்கள் கி.மு. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று ஒரு சாராரும், கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சிலரும் கருதுகின்றனர்.

பார்வை நூல்கள்

1) Early Tamil Epigraphy - Iravatham Mahadevan
2) சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - திரு. ஐராவதம் மகாதேவன், வரலாறு ஆய்விதழ் 6.
3) தன்னிகரில்லாத தமிழ் - ச. கமலக்கண்ணன் & தமிழ்சசி, வரலாறு.காம் இதழ் 23
4) "Discovery of a century" in Tamil Nadu - T.S. Subramanian, The Hindu dated May 01, 2006.
5) "The tale of a broken pot" Iravat Mahadevan.

பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.

இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.

மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை.! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள். தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள்.

தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா? சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.

பழங்காலத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் அதை ஏன் எழுதவில்லை? சிந்திக்க வேண்டிய விசயம்! உலகிலேயே முதன்முதலில் தான் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்! அதைக் கல்லிலும், ஓட்டிலும், ஓலையிலும் எழுதிப்பார்த்தவன் தமிழன்!

சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது.

கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழ் சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர்.

அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி ம



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சாத்தூர் சேகரன் அவர்களின் தொன்தமிழ் ஆராய்ச்சி

எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி'யின் அற்புதங்கள்.

உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், "தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது" -

சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன்.

"நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்"

- நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல்.

"பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிறகுரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்"

- கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து.

"தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்"

- டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.

"இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்"
- டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி.
இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த" மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்... தமிழே உலகமொழிகளின் தாய்மொழி

என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார்.

களி (மண்) - Clay. பிறப்பு - Birth. பொறு - Bear. நாடுதல் - நாடு (ஜெர்மன்). கண் - கண் (சீனா). உப்பர் - ஊப்பர் (இந்தி).

தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள்

"நாமம் - நாம் (இந்தி). தாழ்வு - தாவு (தெலுங்கு).
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse.

தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன.

பதின் - Ten. உருண்டை - Round. உருளை - Roll. அம்மா - மா (இந்தி). நிறங்கள் - றங் (இந்தி). உராய் - Rub. அரிசி - Rice

காரணப் பெயராகிய புதிய சொற்கள்

தேங்குதல் - Tank. ஈனுதல் - Earn என்றும்

திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.

* சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது.

* உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.

* பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.

* பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது.

* தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் "ஹொங்கரோ ஹொங்கர்" என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள்.

* கண்-கண் காண் - காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது.

* சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது.

ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது.

* மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன.

S பேச்சு - Speech. S மெது - Smooth. S உடன் - Sudden. S நாகம் - Snake
* தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள்
எட்டு - ஆட் (இந்தி) பத்து - ஹத்து (கன்னடம்) கடை - கெடா (மலாய்) பூங்கொத்து - கொத் (ஜெர்மன்)

* இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது.
கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம்
(கல்அறை) கல்லறா - கேரளம்
கல்லூர் - ஆந்திரம்
கல்முனை - இலங்கை
கல்லினா பாட் - ரஷ்யா

* மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை - ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும்

* மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி ய ர ல ள ழ போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது.

* மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன.

ஹிப்ரு மொழி
மனுஏல் - மனுவேல்
தமிழ்ப் பெயர்
கருமன் / கருத்திருமன்
தருமன் / திருமன்
வட இந்தியப் பெயர்
பீமன் இராமன்

இவ்வாறு "உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.

உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.

இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார்.

"கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன்" ஆகும். அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது.

கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் இலத்தீன் கிரீட் தொடர் பற்றாக இருந்தது. எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது.

"ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது?

(1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேறினர். எனவேதான், திருவிடமொழி உலகமெங்கும் உள்ளது. அப்போதைய திருவிடமொழி பழந்தமிழே!

(2) மங்கோலியர், சீனர், மத்திய கிழக்கு மக்களான ஹிப்ருக்கள், அரபிய மற்றும் சிலாவியர், ரோமானியர், ஜெர்மானியர், மலேசிய பாலினேசியர், இந்தோ ஆரியர், தென் அமெரிக்கர், ஆப்பிரிக்க மக்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் - இங்ஙனம் உலக மக்கள் பிரிவினர் யாவருமே திருவிடரே! கடல் கோளால் வந்தோரும் நில அதிர்வாலும் வந்தோருமாக உலகின் பல பாகங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முறைகளில் குடியேறியவர் திருவிடரே!

(3) திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர். அதன் மேலும் மேற்கே குடியேறத் தொடங்கி பாபிலோனியா மொசபப்டடோமியா வழியே ஈரான் ஈராக் ஆகிய பல பகுதிகளிலும் குடியேறினர். ஆக திருவிடர் தென்னிந்தியாவில் இருந்தே வடஇந்தியா போய் அங்கிருந்து உலக நாடுகள் யாவற்றிற்கும் சென்றிருக்க முடியும். எனவே திருவிட மொழியாம் தமிழ் உலகெங்கும் அடித்தளமாக அமைப்பு முறையாக இலக்கு கருவியாக இயக்கும் ஆற்றலாக விளங்குகின்றது என்று உலகளாவிய தமிழ் என்று, தான் எழுதியிருக்கும் நூலின் மூலமாகவும் விளக்கத்தை தந்திருக்கும் தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் சாட்சிக் களத்திற்காக விதைத்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.

தமிழ் எழுத்துக்கள் எப்படி எப்படி மாறும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதற்கு உட்பட்டே மாறுகிறது.

ஆகவே என்னோடு இந்த ஆய்வுகள் நின்றுவிடாமல் தொடர வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் இந்தத் தமிழ்மொழியை இளைஞர்கள் குழு மூலம் மக்களை ஒன்று திரட்டி பெரும் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் ஆசையை பழுத்த ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியதைக் கண்டு தமிழே நெகிழ்ந்ததைப் போல அவ்வப்போது தெரிவித்து வருகிறார்". இப்பேற்பட்டவர் ஒரு தமிழாசிரியிராக இருப்பாரா? பேராசிரியராக இருக்கலாம்? இல்லை தமிழ்த்துறை தலைவராகத்தான் இருக்க வேண்டும்? இத்தனை தமிழ் சார்ந்த் தகவல்களை சொன்னவர் ஏன் ஒரு பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கக்கூடாது? என்று நினைப்போர்க்கு...
இவர் அப்படி எந்த பதவியிலும் இல்லை

ஆனால் அத்தனை தகுதிகளையும் கொண்ட இன்னொரு தமிழ்தாத்தா என்று சொல்லும் அளவிற்கு தமிழ் மொழிப்புலமை சாத்தூர் சேகரன் அய்யாவிடம் புதைந்து கிடக்கிறது.

சரி இவர் என்ன படித்திருக்கக் கூடும்? எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) இது முழுக்க முழுக்க அவர் படித்து முடித்துவிட்ட பட்டங்கள். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்...

"இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்".

"உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது.

தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் மதுரைக்கு வரும்போதெல்லாம் இவரது குரல் அகிலமொழி பயலிரங்கத்தில் ஒலிக்கிறது.

தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி... தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார்.

தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார்.

"தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அவரோடு தமிழ்மொழியும் அச்சாரமிட்டுக் கொண்டிருக்கிறது".

அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ - மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் அகிலமொழி எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற கோ மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் 'அகிலமொழி' யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும்.

தொடர்பு கொள்ள :
சாத்தூர் சேகரன்
94429 56769, 92943 60806
3 A, R C South Street
Sathur - 626203
Virudhu Nagar Dt



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சமஸ்கிருதம் பற்றிய இந்துத்துவ மோசடி அம்பலமாகிறது!
சமஸ்கிருதம் முதலில் பேசப்பட்டது இந்தியாவில் அல்ல- சிரியாவில்!

(இந்தக் கட்டுரை Jun 30, 2015ல் ஆங்கிலத்தில் வெளியானது. தற்போது மரபணு ஆய்வுகளின்படி ஆரியர்கள் பற்றிய இந்துத்துவ மாயை களையப்பட்டு வருகிறது. அதற்கு முன்பே மொழியியல் ஆய்வுகளின்படி இந்துத்துவ பொய்களை தோலுரிக்கப்பட்டன. அவ்வகையான கட்டுரை இது. மொழியியல் ஆய்வுகளையும் மரபணு ஆய்வின் அடிப்படையில் மானுடப் பரவலை/ அனைவரும் மானுடரே என்ற உண்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கத்தில் இக்கட்டுரை மொழியாக்கம் செய்யப்பட்டது மொழியாக்கம் @Hari Raja

மூலம்: https://scroll.in/article/737715/fact-check-india-wasnt-the-first-place-sanskrit-was-recorded-it-was-syria

நரேந்திர மோடி சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், அம்மொழியை ஆதிகாலத்திலேயே பேசியவர்களான சிரியாவின் மித்தானி மக்கள் குறித்துப் பார்ப்போம்.

யோகாவைத் தூக்கிப் பிடிக்கும் நரேந்திர மோடி தற்போது தன் கவனத்தை சமஸ்கிருதத்தின் மீது காட்டத் துவங்கியிருக்கிறார். இந்திய அரசு பாங்காக்கில் நடைபெறும் 16 வது உலக சமஸ்கிருத மாநாட்டில் ஆவலுடன் பங்கேற்கிறது. 250 சமஸ்கிருத பண்டிதர்களை மாநாட்டுக்கு அனுப்புவதோடு நிற்காமல் அதற்கான செலவிலும் பங்களிப்பு செய்கிறது. அது மட்டுமல்லாமல் மந்திரி சபையின் மூத்த அமைச்சர்கள் இருவர் பங்கேற்கிறார்கள்; வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாநாட்டினைத் துவங்கி வைக்க, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி நிறைவு விழாவில் பங்கேற்றார். வெளியுறவுத் துறையில் சமஸ்கிருதத்துக்கான இணை செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்று அறிவித்த சுவராஜ் அதற்கான காரணத்தை விளக்கவில்லை. எவருமே பேசாத- எழுதாத- படிப்பதற்கான எழுத்து வடிவம் இல்லாத ஒரு பழமையான மொழி எவ்வாறு இந்தியாவின் வெளியுறவை மேம்படுத்தும் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டாமா?

இந்தியாவைப் பொறுத்தமட்டில் சமஸ்கிருதம் எதற்காக பயன்படுகிறது என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்று: ஆளும் பா.ஜ.க ஒற்றைக் கலாச்சார தேசியத்திற்கான குறியீடாகவே சமஸ்கிருதத்தை அணுகுகிறது. இந்துத்துவத்தின் வழிபாட்டு மொழியான சமஸ்கிருதம் மிகப் புனிதமானது. தாழ்ந்த சாதியினர் ( 75% நவீன இந்துக்கள்) அம்மொழி ஓதப்படுவதைக் கேட்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. இந்தியாவின் மொழியியல் திறன்களுக்கு சமஸ்கிருத்த்தைக் கொண்டாடுவது அளிக்கும் பலனை விட- பழமையான மொழியை பயிற்றுவிப்பதை விட- மக்கள் அனைவரும் தங்கள் நவீன தாய்மொழியில் (பழமையான சமஸ்கிருதத்தோடு ஒப்பிடுகையில் நவீனம்) பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் தேவையாக இருக்கிறது. ஆனால் இது பாரதிய ஜனதாவின் தனி முத்திரையான மிகை நடிப்பு தேசபக்திக்கு உதவாது.

துரதிர்ஷ்டவசமாக, தேசிய ஐதீகங்களை விடவும் யதார்த்தமானது சிக்கலாக இருக்கிறது. பாரதிய ஜனதாவின் இந்து தேசியத்திற்கான துருப்புச்சீட்டாக சமஸ்கிருதம் கருதப்படுகிற வேளையில் ஆச்சரியத்தையும், ஏன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் செய்தி என்னவென்றால் அம்மொழியை முதலில் பேசியதற்கான தடயத்தை ஏற்படுத்தியவர்கள் சிரியர்கள்; இந்துக்களோ இந்தியர்களோ அல்லர்.

சமஸ்கிருதம் பேசும் சிரியர்கள்

சமஸ்கிருதத்தின் பழைய வடிவமானது ரிக் வேதத்தில் (பழைய ரிக்வேத சமஸ்கிருதம்) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆச்சரியகரமாக, ரிக்வேத சமஸ்கிருதம் இந்திய சமவெளிகளின் கல்வெட்டுகளில் பதிவான காலங்களுக்கு முன்னரே சிரியாவில் பேசப்பட்ட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

1500 கி.மு- 1350 கி.மு கால கட்டங்களில் மித்தானி எனப்படும் பேரரசு யூரோபேட்ஸ்- டைகிரிஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கின் மேலுள்ள நிலப்பகுதியில் ஆட்சி செய்தது. அதுவே இன்றைய சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும். மித்தானிகள் சமஸ்கிருத்த்துக்கு தொடர்பில்லாத ஹரியன் எனப்படும் மொழியைப் பேசினார்கள். ஆனால் ஒவ்வொரு மித்தானி அரசருக்கும் அவரது சிற்றரசர்களுக்கும் சமஸ்கிருதப் பெயருண்டு. அவற்றுள் பின்வருபவை சில:
புருஷா(ஆண்மகன்), தசரதா(வலிமைமிகுந்த ரதத்தை உடையவன்), சுவர்த்தா (தேவர்களின் வழிவந்தவன்), இந்திரோதா( இந்திரனின் ஆசியைப் பெற்றவன்), சுபந்து( இப்போதும் இப்பெயர் இந்தியாவில் வைக்கப்படுகிறது)

சிந்தித்துப் பாருங்கள், மூக்கில் நீரொழுக பார்க்கச் சகிக்காத பள்ளிச் சிறுவனான சுபந்து தன் பெயரை மத்தியக் கிழக்காசியாவின் இளவரசனோடு பகிர்ந்து கொள்கிறான். சிலிர்க்கிறது.(இப்படிக் கூறுவதற்கு மன்னித்துவிடு சுபந்து)
வேதகால மக்களைப் போல மித்தானி மக்களும் யுத்தத்தில் தேர்ப்படையை பிரதானமாகப் பயன்படுத்தும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தனர். மித்தானியின் குதிரை வளர்ப்புக் குறிப்புகளில் மிகுதியான சமஸ்கிருதச் சொற்களைக் காணலாம்: ஐகா ( ஒன்று), தேரா ( மூன்று), சட்டா (ஏழு), அவுசா (அஷ்வா- குதிரை). மட்டுமல்லாமல், மித்தானி அரசின் போர்ப்படைத் தளபதிகள் தேர்ப்படையினரான மரியன்னர்களாவர். சமஸ்கிருத்த்தில் மரியா என்றால் இளைஞர் என்று பொருள்.
மித்தானி மக்கள் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட கடவுள்களை வணங்கினர்( ஆனாலும் பிராந்திய தெய்வங்களையும் வழிபட்டனர்). இந்திரன், வருணன், மித்ரன் மற்றும் நசத்யர்( அசுவினி குமாரர்கள்) ஆகிய தெய்வங்களை சாட்சியாக வைத்து மித்தானி அரசு 1380 (கி.மு) வில் எதிரி அரசோடு செய்த உடன்படிக்கை செய்திருக்கிறது. தற்போது இந்துக்கள் இந்தக் கடவுளர்களை வழிபடுவதில்லை என்றாலும், இந்த மித்தானி தெய்வங்கள் ரிக் வேத காலத்தில் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டனர்.

இது அதிர்ச்சி அளிக்கும் உண்மை. “The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World என்ற புத்தகத்தில் David Anthony குறிப்பிடுவதுபோல, ரிக் வேத சமஸ்கிருதம் ரிக் வேதத்திற்கு முந்தியது; அதுமட்டுமல்லாமல், ரிக் வேத மதத்தின் மையமான அம்சங்களும், நம்பிக்கைகளும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ரிக் வேதம் தொகுக்கப்படுவதற்கு முன்பே இருந்திருக்கின்றன.

சமஸ்கிருதம் இந்தியாவுக்கு முன்னரே சிரியாவில் பேசப்பட்ட்து எப்படி?
இந்த ஆச்சரியகரமான கூற்றை விளக்குவது எது? பி. என் ஓக்கின் (P. N. Oak இவர் இந்துத்துவத்தை மீட்டெடுப்பது குறித்து எழுதியவர்) விசித்திரமான இந்துத்துவ வரலாறுகள் மெய்தானா? ஒட்டுமொத்த உலக மக்களும் முன்னொரு காலத்தில் இந்துக்களா? மெக்காவிலிருக்கும் காபா அதற்கு முன்னர் சிவலிங்கமாக இருந்ததா?

துரதிர்ஷ்டவசமாக, வரலாறு அம்மாதிரி கிளர்ச்சி தருவதாக இல்லை.

சமஸ்கிருத்த்தின் அடிப்படைகளை உருவாக்கிறது பண்டைய இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பம் ஆகும். அதன் வழித் தோன்றல் பண்டைய இந்திய இரானியன் மொழி என்பதாகும். இப்படி அதனை அழைப்பதற்கான காரணம் வட இந்தியாவிலும் ஈரானிலும் வழக்கத்தில் இருக்கும் மொழிகளின் அடிப்படையாக அம்மொழி இருந்திருக்கிறது.

இந்தோ- ஐபோப்பிய நாகரிகத்தின் என்சைக்ளோபீடியாவை திருத்திய ஜே.பி மல்லோரி மற்றும் டி.க்யூ ஆதம்ஸ் ஆகியோர் தெற்கு ஊராலிலும் கஜகஸ்தானிலும் வளர்ந்த ஆதி இந்தோ- ஈரானிய மொழியை பழங்காலத்தில் பேசியவர்கள் குறித்து எழுதியுள்ளனர். ஆன்ட்ரோனோவா கலாச்சாரத்தின் (நம் செம்பு கற்காலத்துக்கு நிகரான காலகட்டம்) பிரதிநிதிகளான இந்த வன்பாலை மக்களின் தோற்றம் 2000 கி.மு காலகட்டங்களில்.

இவ்வாறாக மத்திய ஆசிய நிலப்பகுதி மக்கள் ஆதி இந்தோ- ஈரானிய மொழிப் பயன்பாட்டை நிறுத்திக் கொண்ட - அதே சமயம் சமஸ்கிருதத்தின் பழைய வடிவங்களைப் புழக்கத்தில் கொண்டிருக்கும் குழுவாகப் பிரிந்திருக்கிறார்கள். அம்மக்களில் சிலர் மேற்கு நோக்கி நகர்ந்து சிரியாவையும் சிலர் கிழக்கை நோக்கி வந்து இந்தியாவின் பஞ்சாபையும் அடைந்திருக்கிறார்கள்.

மேற்கு நோக்கி நகர்ந்தவர்கள் சிரியாவின் ஹரிய மன்னர்களுக்கு தேரோட்டிகளாக கூலிக்குப் பணி செய்திருக்கக் கூடும் என்று டேவிட் அந்தோணி எழுதியிருக்கிறார். அந்தத் தேரோட்டிகள் பேசிய மொழியும் அவர்கள் ஓதிய பாராயண மந்திரங்களுமே பின்னர் கிழக்கில் (இந்தியாவில்) அவர்களது தோழர்களால் ரிக் வேதமாக தொகுக்கப்பட்ட்து.

தங்கள் எஜமானர்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றிய அவர்கள் மித்தானி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். அதன் பிறகு அவர்கள் தங்கள் கலாச்சாரத்தை இழந்து ஹரிய கலாச்சாரத்துக்கும் மதத்துக்கும் தங்களை தகவமைத்துக் கொண்டார்கள். எனினும், அரசாட்சி குறித்த சொற்களும் தேரோட்டுதல் குறித்த சில சொற்களும் இந்திரன், வருணன், மித்ரன், அஷ்வினி குமாரர்கள் ஆகியோரைக் குறிக்கும் சொற்களும் வழக்கொழியவில்லை.

கிழக்கு நோக்கி நகர்ந்த குழு பின்னர் ரிக் வேதத்தை தொகுத்தது மட்டுமல்லாமல் தங்கள் கலாச்சாரத்தைப் பேணிக் காக்கும் வாய்ப்பையும் பெற்றது. துணைக்கண்டத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட அவர்களது மொழியும் மதமும் ஆழமாக வேர்விட்டுக் கொண்டே சென்றது. மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றைய நவீன இந்தியர்கள் நாடோடி மேய்ப்பர்களின் மொழியை (தங்கள் மொழி என்று) பாங்காக்கில் கொண்டாடுகிறார்கள்!

செறிந்த வரலாறைக் கொண்ட சமஸ்கிருதம் இந்துத்துவப்படுத்தப்பட்டது

அவர்களது மதமும் கலாச்சாரமும் கொண்டாடப்படும் அதே நேரத்தில் வழிபாட்டுக்குரிய கலாச்சார தேசியவாதத்தின் பெயரால் சமஸ்கிருதத்தை துணைக்கண்டத்துக்குக் கொண்டுவந்த இந்தோ-ஐரோப்பிய மக்களுடைய வரலாறு முற்றிலுமாக மறைக்கப்பட்டது துன்பகரமானது. தேசத்தின் பொதுவான நம்பிக்கை அவசர அவசரமாக சமஸ்கிருதத்துக்கு உரிமைச் சாயம் பூசுகிறது. அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளுதல் என்பது ஆதிக்கம் செலுத்துகிற இந்துத்துவக் கொள்கை என்பதற்கு தேசத்தின் மொழியாக இருக்க வேண்டுமானால் அது இந்த நிலத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்று விதிக்கப்படும் நிபந்தனை எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்தியாவின் உடன் பிறப்பான பாகிஸ்தானின் தேசிய நம்பிக்கைகளோ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்பது நகைமுரண். துணைக்கண்டத்தின் வேர் மறுத்த சமநிலையற்ற இஸ்லாமியர்கள் தங்கள் மொழி அரேபியர் வழிவந்தது என்பதை நிறுவ உழைக்கின்றனர்!

அரபோ சமஸ்கிருதமோ, பொதுப்புத்தியின் தேசிய ஐதீகம் தூய்மையான, மாசுபாடற்ற, பழங்காலத் தொன்மைகொண்ட கலாச்சாரத்தைக் குறித்து கற்பனை செய்ய முயற்சிக்கிறது. ஆனால் பல சமயங்களில் யதார்த்தங்கள் ஐதீகங்களைவிட அருவருக்கத்தக்கதாக இருப்பதில்லை. பாகிஸ்தானியர்கள் அராபியர்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல் இந்தோ ஐரோப்பிய கலாச்சாரம் குறித்த எண்சைக்ளோபீடியா மழுப்பலின்றி இவ்வாறு எழுதியிருக்கிறது:

”இந்தோ-ஐரோப்பியர்களின் பூர்வீகம் குறித்த-உயிர்த்தெழுப்பப்படும் பழம்பெரும் கற்பனைக் கோட்டையை ஒத்த இக்கருத்து (சமஸ்கிருதமும் அதன் முன்னோரான ஆதி இந்தோ-ஐரோப்பிய மொழியும் இந்தியாவில் தோன்றியவை எனப்படும் கருத்து), மொழியியல் அடிப்படையிலோ தொல்பொருள் அகழ்வின் அடிப்படையிலோ நம்பத்தகுந்த துளி ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை”



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சமஸ்கிருத மொழியை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

Some interesting information about the Sanskrit language!

*சமஸ்கிருதம் ஒரு உருவாக்கப்பட்ட மொழி

* சமஸ்கிருதத்தை உருவாக்கியவர் பனினி

* சமஸ்கிருத மொழிக்கு மிக நெருக்கமான சகோதரி மொழி லிதுவேனியன் மொழியாகும்.

* சமஸ்கிருதம் படித்தால் பிரெஞ்சும்-ஜெர்மானியமும் எளிதாக புரியும்

* சுமேரிய மொழிகளான செமிதிக் குடும்ப மொழிகளும் இரானிய மொழிக்குடும்பமும் சுமார் 5,000 வருடம் பழமையானதே அதேயளவு பழமையானது சமஸ்கிருதம் என்பது அபத்தமாகும். காரணம் சிந்து சமவெளி நாகரீகம் சுமார் 5,000 வருடம் பழமையானது … பழமையானது எனினும் அதற்கென தனி பேச்சு வழக்கும் எழுத்துநடையும் இருந்துள்ளது. அது ஆதி தமிழ் என பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே சமஸ்கிருதம் இந்திய மண்ணை அடையும் முன்னரே இங்கே ஒரு வளமான மொழி இருந்துள்ளது தெளிவாகிறது.

*வேத சமஸ்கிருதம் பயன்பாட்டில் இருந்ததே கிமு.600ல் தான்… 

*சமஸ்கிருத மொழி கங்கைச்சமவெளியில் பரவும் முன் அங்கே பேச்சுவழக்கு மொழியாக பாலியும் எழுத்து மொழியாக ப்ராக்கிருதமும் இருந்துள்ளது.

* ப்ராக்கிருதம் (பரகிருதம்) என்பது கூட இந்திய இமயமலை பகுதியில் இருந்து அந்நிய மொழிதான். 

*சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படும் ரிக் வேதம் கூட கிமு.900-1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட குரு பரம்பரையினரால் ஆளப்பட்ட  தற்போதைய டில்லி,பஞ்சாப்,உபியை உள்ளடக்கிய பகுதிகளில் பேசப்பட்டுள்ளது.

* சமஸ்கிருதம் இந்தியாவில் உருவான மொழியல்ல என்பதற்கான ஆதாரமாக சமஸ்கிருதம் பண்டைய சிரியாவில் கிமு. 1500-1100 ஆண்டுகளுள் ,யூப்ரடீஸ் மற்றும் டெகிரீஸ் ஆறுகளுக்கிடையில் இருந்த பகுதியை தலைநகராக கொண்டு இப்போதைய இராக்,சிரியா,துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மித்தானி எனும் ராஜாங்கத்தை ஆண்டவர்களால் அங்கே சமஸ்கிருதம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடைய மொழியை ஹுரியன் என அவர்கள் அழைத்துள்ளார்கள்,  அந்த ராஜாக்களின் பெயர்கள் பெரும்பாலும் இந்திய இந்துக்களின் பெயர்களை ஒத்ததாகவே இருந்துள்ளது. புருசா, துஸ்ரதா, சுவர் தத்தா , இந்ரோதா மற்றும் சுபாந்து போன்ற பெயர்களில் அவர்கள் கொண்டிருந்தனர். 

* சமஸ்கிருத மொழியில் வழங்கப்படும் எண்களின் பெயர்கள் ஏகா,துவா,தேரா ,சத்தா என்றும் குதிரைகளை குறிக்கும் சொல்லாக அஸ்வ என்றும் மித்தானி மக்கள் பேசியுள்ளனர்., அவர்களுடைய கடவுளர் பெயரும் பிராமண கடவுள் பெயர்களையே கொண்டுள்ளன, இந்த்ர, வருண, மித்ர,நடஸ்ய மற்றும் குதிரை வீரனை மர்யன்ன அல்லது மர்ய எனவும் அழைத்துள்ளனர். அதுவே இந்தியாவிலும் கடத்திவரப்பட்டுள்ளது.

*சமஸ்கிருத மொழிக்கு சொந்தமாக எழுத்துவடிவம் (லிபி) கிடையாது. முதலில் ரோமநாகரி எழுத்திலும் பிறகு வடகத்திய மொழிகளின் எழுத்தான தேவநாகரி எழுத்தை கடன் வாங்கியும் கிரந்தங்கள் எழுதப்பட்டுள்ளன.

*சமஸ்-கிருதம் , சமஸ்  என்பது சுமேரிய அல்லது செமித் மொழியின் தாக்கம்பெற்று உருவாக்கப்பட்ட கிருதம் – மொழி என்பதே பொறுத்தமான சொல்லாக வழங்கப்படுகிறது. 

* சமஸ்கிருதம் தேவபாஷை என அழைக்கப்பட்டதற்கு காரணம் அது ஒரு Oral – literature எனப்படும் நாட்டுப்புறப்பாடல் வழக்கில் இருந்த கடவுள் பற்றிய காவிய பாடல்கள் என்பதால் அதனை படிக்க தகுதியானவர்கள் பிராமணீயர்கள் மட்டுமே என்பதாலும் தான். 

* இந்தியாவில் சமஸ்கிருத மொழியினை மாநில மொழியாக உடைய மாநிலம் உத்தர்கண்ட்.

* கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள இரட்டை கிராமங்களான மாத்தூர் மற்றும் ஹோசஹல்லி கிராமங்களில் சுமார் 5,000 பேர் சமஸ்கிருத மொழி பேசுகின்றனர். இது தற்காலத்தில் ஏற்பட்ட ஒரு பழக்கம் தான், காரணம் சமஸ்கிருதம் அழிந்துவிடக்கூடாது என கமகா எனும் ஒரு கிராமியக்கதை கூறும் கலையை சமஸ்கிருத மொழியில் வளர்த்து வருகின்றனர்.

*இந்தியாவில் 2011ம் ஆண்டு கணக்குப்படி சுமார் 24,000 பேர் சமஸ்கிருத மொழி தங்களது தாய்மொழி என பதிவு செய்துள்ளனர். அதுவே 2001ம் ஆண்டில் இந்த கணக்கு வெறும் 14,000 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பிராமணர்கள் 2% பேர், ஆனால் இவர்களில் சரிபாதி பேருக்கு சமஸ்கிருதமும் வேதங்களும் தெரியாது. 

* 121 கோடி பேர் கொண்ட இந்திய மக்கள்தொகையில் சமஸ்கிருத மொழி பேசுவோர் 1%க்கும் குறைவே. 

ரோஸி எஸ் நஸ்ரத் என்பவரின் முகநூல் பதிவு இங்கு பகிரப்பட்டுள்ளது.

சமஸ்கிருத மொழியை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

Some interesting information about the Sanskrit language!

*சமஸ்கிருதம் ஒரு உருவாக்கப்பட்ட மொழி

* சமஸ்கிருதத்தை உருவாக்கியவர் பனினி

* சமஸ்கிருத மொழிக்கு மிக நெருக்கமான சகோதரி மொழி லிதுவேனியன் மொழியாகும்.

* சமஸ்கிருதம் படித்தால் பிரெஞ்சும்-ஜெர்மானியமும் எளிதாக புரியும்

* சுமேரிய மொழிகளான செமிதிக் குடும்ப மொழிகளும் இரானிய மொழிக்குடும்பமும் சுமார் 5,000 வருடம் பழமையானதே அதேயளவு பழமையானது சமஸ்கிருதம் என்பது அபத்தமாகும். காரணம் சிந்து சமவெளி நாகரீகம் சுமார் 5,000 வருடம் பழமையானது … பழமையானது எனினும் அதற்கென தனி பேச்சு வழக்கும் எழுத்துநடையும் இருந்துள்ளது. அது ஆதி தமிழ் என பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே சமஸ்கிருதம் இந்திய மண்ணை அடையும் முன்னரே இங்கே ஒரு வளமான மொழி இருந்துள்ளது தெளிவாகிறது.

*வேத சமஸ்கிருதம் பயன்பாட்டில் இருந்ததே கிமு.600ல் தான்… 

*சமஸ்கிருத மொழி கங்கைச்சமவெளியில் பரவும் முன் அங்கே பேச்சுவழக்கு மொழியாக பாலியும் எழுத்து மொழியாக ப்ராக்கிருதமும் இருந்துள்ளது.

* ப்ராக்கிருதம் (பரகிருதம்) என்பது கூட இந்திய இமயமலை பகுதியில் இருந்து அந்நிய மொழிதான். 

*சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படும் ரிக் வேதம் கூட கிமு.900-1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட குரு பரம்பரையினரால் ஆளப்பட்ட  தற்போதைய டில்லி,பஞ்சாப்,உபியை உள்ளடக்கிய பகுதிகளில் பேசப்பட்டுள்ளது.

* சமஸ்கிருதம் இந்தியாவில் உருவான மொழியல்ல என்பதற்கான ஆதாரமாக சமஸ்கிருதம் பண்டைய சிரியாவில் கிமு. 1500-1100 ஆண்டுகளுள் ,யூப்ரடீஸ் மற்றும் டெகிரீஸ் ஆறுகளுக்கிடையில் இருந்த பகுதியை தலைநகராக கொண்டு இப்போதைய இராக்,சிரியா,துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மித்தானி எனும் ராஜாங்கத்தை ஆண்டவர்களால் அங்கே சமஸ்கிருதம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடைய மொழியை ஹுரியன் என அவர்கள் அழைத்துள்ளார்கள்,  அந்த ராஜாக்களின் பெயர்கள் பெரும்பாலும் இந்திய இந்துக்களின் பெயர்களை ஒத்ததாகவே இருந்துள்ளது. புருசா, துஸ்ரதா, சுவர் தத்தா , இந்ரோதா மற்றும் சுபாந்து போன்ற பெயர்களில் அவர்கள் கொண்டிருந்தனர். 

* சமஸ்கிருத மொழியில் வழங்கப்படும் எண்களின் பெயர்கள் ஏகா,துவா,தேரா ,சத்தா என்றும் குதிரைகளை குறிக்கும் சொல்லாக அஸ்வ என்றும் மித்தானி மக்கள் பேசியுள்ளனர்., அவர்களுடைய கடவுளர் பெயரும் பிராமண கடவுள் பெயர்களையே கொண்டுள்ளன, இந்த்ர, வருண, மித்ர,நடஸ்ய மற்றும் குதிரை வீரனை மர்யன்ன அல்லது மர்ய எனவும் அழைத்துள்ளனர். அதுவே இந்தியாவிலும் கடத்திவரப்பட்டுள்ளது.

*சமஸ்கிருத மொழிக்கு சொந்தமாக எழுத்துவடிவம் (லிபி) கிடையாது. முதலில் ரோமநாகரி எழுத்திலும் பிறகு வடகத்திய மொழிகளின் எழுத்தான தேவநாகரி எழுத்தை கடன் வாங்கியும் கிரந்தங்கள் எழுதப்பட்டுள்ளன.

*சமஸ்-கிருதம் , சமஸ்  என்பது சுமேரிய அல்லது செமித் மொழியின் தாக்கம்பெற்று உருவாக்கப்பட்ட கிருதம் – மொழி என்பதே பொறுத்தமான சொல்லாக வழங்கப்படுகிறது. 

* சமஸ்கிருதம் தேவபாஷை என அழைக்கப்பட்டதற்கு காரணம் அது ஒரு Oral – literature எனப்படும் நாட்டுப்புறப்பாடல் வழக்கில் இருந்த கடவுள் பற்றிய காவிய பாடல்கள் என்பதால் அதனை படிக்க தகுதியானவர்கள் பிராமணீயர்கள் மட்டுமே என்பதாலும் தான். 

* இந்தியாவில் சமஸ்கிருத மொழியினை மாநில மொழியாக உடைய மாநிலம் உத்தர்கண்ட்.

* கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள இரட்டை கிராமங்களான மாத்தூர் மற்றும் ஹோசஹல்லி கிராமங்களில் சுமார் 5,000 பேர் சமஸ்கிருத மொழி பேசுகின்றனர். இது தற்காலத்தில் ஏற்பட்ட ஒரு பழக்கம் தான், காரணம் சமஸ்கிருதம் அழிந்துவிடக்கூடாது என கமகா எனும் ஒரு கிராமியக்கதை கூறும் கலையை சமஸ்கிருத மொழியில் வளர்த்து வருகின்றனர்.

*இந்தியாவில் 2011ம் ஆண்டு கணக்குப்படி சுமார் 24,000 பேர் சமஸ்கிருத மொழி தங்களது தாய்மொழி என பதிவு செய்துள்ளனர். அதுவே 2001ம் ஆண்டில் இந்த கணக்கு வெறும் 14,000 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பிராமணர்கள் 2% பேர், ஆனால் இவர்களில் சரிபாதி பேருக்கு சமஸ்கிருதமும் வேதங்களும் தெரியாது. 

* 121 கோடி பேர் கொண்ட இந்திய மக்கள்தொகையில் சமஸ்கிருத மொழி பேசுவோர் 1%க்கும் குறைவே. 

ரோஸி எஸ் நஸ்ரத் என்பவரின் முகநூல் பதிவு இங்கு பகிரப்பட்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

  ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும்

- வி. சிவசாமி


படித்ததில் பிடித்தது

இதனை எழுதுவதற்கான பல நூல்களையும் கட்டுரைகளையும், பேராதனைவளாக நூலகத்திலும், யாழ்ப்பாணவளாக நூலகத்திலும் பயன்படுத்தியுள்ளேன். குறிப்பாக பேராதனைவளாக நூலகத்தினைச் சேர்ந்த நண்பர் திரு. எம். துரைசுவாமி அவர்கள் இவ்விடயம் பற்றிய தகவல் தேட்டத்திற்கு அரும்பெரும் உதவி செய்துள்ளார்.

இந்நூலைப் பிரசுரித்தற்கான தாள்களைக் குறைவின்றிப் பெறுவதற்கு அனுமதி வழங்கிய கிழக்கு இலங்கைக் கடதாசிக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. கே. சி. தங்கராஜா அவர்களும். இதனை அச்சிட்டு உதவிய கலைவாணி அச்சகத்தாரும், குறிப்பாக முன்னின்று முகமலர்ச்சியுடன் உதவிய நண்பர் திரு. க. முருகேசு அவர்களும் நினைவுக்குரியவர்கள்.

நூலாக்கப் பணியின் போது ஊக்கியும், பிரசுரிக்கும்போது இதன் அமைப்புப் பற்றிய ஆலோசனைகளைக் கூறியுமுதவிய நண்பர் திரு. ஆ. சிவநேசச் செல்வன் அவர்களுக்கும், பல வழிகளில் ஊக்கி உதவி செய்த ஏனைய நண்பர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி உரியது.

காய்தலுவத்தலகற்றி யொருபொருட்கண்
ஆய்தலறிவுடையார்க் கண்ணதே

யாழ்ப்பாண வளாகம்
திருநெல்வேலி வி. சிவசாமி
வைகாசித் திங்கள், 1976.


பொருளடக்கம்

பக்கம்

ஆரியர் ... 1
ஆதி இருப்பிடம் ... 3
இந்தோ - ஆரிய இந்தோ - இரானியத் தொடர்புகள் ... 10
இந்தோ ஐரோப்பிய மொழிகள் ... 11
ஆரியரின் ஆதி இருப்பிடம் ஆசியாவிலா ஐரோப்பாவிலா? ... 13
ஆரியரின் புலப் பெயர்ச்சிகளும் காலமும் ... 18
இந்தியாவில் ஆரியர் ... 29
வேத இலக்கியம் ... 30
வேதங்களின் காலமும் வரலாற்றியல்பும் ... 34
வேத காலத்தில் ஆரியர் வாழ்ந்த இடங்களும் ஜனக் குழுக்களும் ... 37
வேத கால அரசியல் நிலை ... 44
வேதகாலச் சமயதத்துவநிலை ... 52
வேதகாலச் சமூகநிலை ... 68
வேதகாலப் பொருளாதாரநிலை ... 82
பிற்காலம் ... 88
அடிக் குறிப்புகள் ... 95
உசாத்துணை நூல்கள் ... 107
அட்டவணை ... 113
பிழைதிருத்தம் ... 116

ஆரியர்

இந்தியாவிற்குக் குறிப்பிடத்தக்க தொண்டு செய்தோரில் ஆரியர் முக்கியமான இடமொன்றினைப்பெறுகின்றனர். ஆரியர் என்ற பதம் வரையறுக்கப்பட்ட ஓரினத்தையன்றிக் குறிப்பிட்ட மொழி. கலாச்சாரத்தினைக் கொண்ட மக்களையே குறிப்பதாகும். ஆனால் அறிஞர்களில் ஒருசாரார் இப்பதம் இனத்தினைக் குறிக்கும் எனவும் கொள்வர். எவ்வாறாயினும் பிறமக்கள் பலரிலும் பார்க்க இவர்களின் செல்வாக்கு இந்தியாவில் மேம்பட்டுக் காணப்படுகின்றது. இவர்களும் திராவிடரும், ஆதிஒஸ்ரலோயிட் போன்ற பிறரும் ஒன்றுபட்டு உருவாக்கியதே புகழ்பெற்ற இந்தியப் பண்பாடாகும். இவ் ஆரியர் எங்கிருந்து வந்தாலும் அவர்களின் வீரம், துணிச்சல், நாகரிக வளர்ச்சி ஆகியன குறிப்பிடத்தக்கன. இந்தியாவிற்கும் பிற இடங்களுக்குமிவர்கள் சென்று அவ்வவ் இடங்களிலே நிலவிய மேம்பட்ட மேம்படாத கலாச்சாரங்களைச் சிலவேளைகளில் அழித்துத் தமது பண்பாட்டினைத் திணித்தனர்@ சில வேளைகளிலே தம்மிலும் மேம்பட்ட பண்பாடுள்ள மக்களை வென்றபோது அம் மக்கள் கலாச்சாரத்தினைத் தாம் ஏற்றுக்கொள்ளப் பின்னின்றிலர். தேவையான தவிர்க்கமுடியாத வேளைகளிலே ஒத்த மேவல் (ஊழஅpசழஅளைந) செய்தும் வந்தனர். தம்முடன் உறவாடிய, தொடர்பு கொண்ட பிறமக்களின் பண்பாடுகள் வளர்ச்சியடையும் பல வேளைகளில் பண்பாடுகள் வளர்ச்சியடையவும் பல வேளைகளில் உதவி அளித்தும் வந்தனர். இந்தியாவில் ஆரிய மொழியின் முக்கியத்துவத்தினை முதுபெரும் மொழிநூற் பேராசிரியர் சுநீதிகுமார் சட்டர்ஜி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இந்தியாவில் எம்முன்னோர் விட்டுச் சென்றுள்ள மிகப்பெரிய செல்வங்களில் எமது ஆரிய மொழியும் ஒன்றாகும். மேலான ஒழுங்கு முறைகளுடன், நெக்கிறிற்றோ, ஆத ஒஸ்ரலோயிட் (திராவிட முதலிய) பலவகையான மக்கட் கூட்டங்களை ஒருங்கு இணைத்தவர்கள் ஆரியரே. இவ்வாறு ஏற்பட்ட ஒருமைப்பாட்டிலே சில இடங்களில் இதன் கூறுகள் இரண்டறக் கலந்து விட்டன. சில இடங்களிலே, மேலெழுந்தவாரியாகவே ஒன்றுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய மக்களின் வரலாறு, சமயம், தத்துவம் - இந்தியாவின் தனிச்சிறப்பான பண்பாடு ஆதியன உருவாகுவதற்கு மிக முக்கியமான காரணியொன்றாக ஆரியமொழி இலங்கிற்று. ஒஸ்ரிக் மொழிபேசியமக்களும், திராவிடரும் அமைத்த அத்திவாரத்தின் மேலேதான் ஆரியர் கட்டத் தொடங்கிய கூட்டான பண்பாடு இந்திய மண்ணிலே மலர்ந்தது. இப்பண்பாட்டினை வெளிப்படுத்தும் வாயிலாகவும், இதன்சின்னமாகவும் இவ் ஆரியமொழி விளங்கிற்று. வடமொழி, பாளி. வடமேற்குப் பிராகிருதம், அர்த்தமாகதி, அபப்பிரம்சம் முதலியனவாகவும், பிற்காலத்திலே ஹிந்தி, குஜராத்;தி, மராத்தி, ஓரிய, வங்காளி, நேபாளி முதலிய பல மொழிகளாகவும் இவ் ஆரிய மொழி கிளைத்து வளர்ந்தது. இவ்வாறாக இம்மொழி வௌ;வேறு காலங்களிலே வௌ;வேறு பிராந்தியங்களில் இந்திய கலாச்சாரத்துடன் அழிக்க முடியாத வகையில் ஒருங்கு இணைந்து விட்டது.

'ஆரிய' என்ற பதம் உயர்குடிச் சேர்ந்த, மிகநேர்மையுள்ள, சிறப்பு வாய்ந்த, பெருந்தன்மையுடைய, மிக மரியாதையுள்ள முதலிய பல கருத்துக்கள் கொண்டதாகும்.

ஆரியர் "நோர்டிக்" எனவும் அழைக்கப்படுவர். தொடக்கத்தில் இவர்கள் உயரமானவர்கள்@ வெண்ணிறமுடையவர்கள்@ மஞ்சள் அல்லது பொன்நிறக் கேசம் உடையவர்கள்@ நீலக்கண்கொண்டிருந்தனர். இத்தகையோராகவே வேத இலக்கியத்தில் இவர்கள் ஒரளவு காட்சியளிக்கின்றனர். ஆனால் காலப்போக்கிலே புதிய இருப்பிடத்தின் சீதோஷ்ண வேறுபாடுபிறமக்களுடன் கொண்டிருந்த தொடர்பு முதலியனவற்றால் நிறம் போன்றவற்றிலே மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் மேற்குறிப்பிட்ட இயல்பு கொண்டோரை வட இந்தியாவின் சில பகுதிகளிலும் 'மஹாராஷ்டிரம்' போன்ற இடங்களிலும் காணலாம்.

ஆதி இருப்பிடம்

ஆரியரின் ஆதி இருப்பிடம் எது என்பது பற்றி முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களும் அறிஞரிடையிலே நிலவுகின்றன. இவர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் என ஒரு சாராரும், வெளியேயிருந்து வந்தவர்கள் என பிறிதொருசாராரும் கூறுகின்றனர். இவ்விருவகையான கருத்துடையோரிடத்தும் தனிப்பட்ட வகையிலே கருத்து வேறுபாடுகள் உள. இவற்றினைத் தொகுத்துக்குறிப்பிடலாம்.

ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவெனக் கொள்ளுவோரிலே திரு. எம். ஜா. பிரஹமர்ஷி தேசம் என்பர். கலாநிதி டி. எஸ். திரிவேத முல்தானிலுள்ள தேவிகா ஆற்றுப் பிரதேசம் என்பர்@ திரு. எஸ். டி. கல்ல காஷ்மீர் ஹிமாலயப் பிரதேசம் என்பர். திரு. ஏ. சி. தாஸ். திரு. கே. எம். முன்ஷி சப்த சிந்து அல்லது பஞ்சாப் என்பர். இவ்வாறு கொள்ளுவோரிற் சிலர் ஆரியர் இந்தியாவிலிருந்து மேற்கேயுள்ள பிற இடங்களுக்கும் சென்றனர் எனக்கூறுவர்.

இவ் அறிஞர்களின் கருத்துப்படி, ஆரியர் வேற்று நாட்டவர் என்பதற்கோ, புலம் பெயர்ந்ததற்கோ தக்க சான்றுகளில. இருக்குவேதகால ஆரியர் சப்த சிந்துப் பகுதியினையே தெய்வத்தால் ஆக்கப்பட்ட தேசமாகவும் தாயகமாகவும் கொண்டனர். புலம்பெயர்ந்து செல்வோர் தமது தாயகத்தினைப்பல நூற்றாண்டுகளின் பின்னரும் நினைவு கூருவர். ஆனால், ஆரியர் இவ்வாறு செய்திலர். ஆதி வடமொழிக்கும், ஆதி இரானியமொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கு மிடையிற் காணப்படும் ஒற்றுமையியல்புகள் புலப்பெயர்ச்சிக் கான சான்றுகளல்ல. மேலும் வேத இலக்கியம் மிகப் பழமையானது. வெளியிலிருந்து இவர்கள் வந்தவரெனின் ஏன் வரும் வழியில் இலக்கியம் இயற்றிலர்? இந்தியாவிற்கு வந்த பின்னரே இவர்கள் பண்பாட்டு மேன்மையடைந்தனர் எனக் கூறமுடியாது. இந்தியாவிலிருந்தே இவர்கள் வெளியே சென்றிருப்பர். வேள்விச் சடங்குகள் இருக்குவேதம் தொகுக்கப்படுமுன்னரே இந்தியாவிலேற்பட்டு விட்டன.

ஆனால் மேற்குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. முதலாவதாக, இந்தியாவே அவர்களின் ஆதி இருப்பிடமாயின், அது முழுவதையும் ஆரியமயமாக்கிய பின்னரே வடமேற்கு எல்லையினைக் கடந்து இரானிற்கும், பிறமேற்கு ஆசியா நாடுகள், ஐரோப்பா ஆகிய இடங்களிற்கும் சென்றிருப்பர். வரலாற்றுக்காலத்தில் இத்தகைய மக்கட்புலப் பெயர்ச்சி வடமேற்கு எல்லைக்கு ஊடாக நடைபெற்றிலது. இந்தியாவின் தென்பகுதியில் திராவிட மொழிகள் பரந்து நிலவுவதே ஆரியர் வெளியே இருந்து வந்தமைக்குத் தக்கசான்று எனலாம். மேலும் வேத இலக்கியம் முழுவதையும் கூர்ந்து கவனிக்கும்போது ஆரியர் படிப்படியாக வடமேற்கு இந்தியாவிலிருந்து கங்கைச் சமவெளிக்கும் பின் தக்கணம், தென் இந்தியா ஆகியனவற்றிற்கும் சென்றமையினை அவதானிக்கலாம். அடுத்தபடியாக, வடமொழியுடன் தொடர்புள்ள பிறமொழிகள் ஐரோப்பாவிலேயே தொடர்புள்ள பிறமொழிகள் ஐரோப்பாவிலேயே நெருங்கிக் காணப்படுகின்றன. ஆனால், ஆசியாவிலே வடமொழியுடன் தொடர்புள்ள மொழிகள் சிதறிச் சில இடங்களிலேயே நிலவுகின்றன. மேலும் இந்தியாவின் காலத்தால் முந்திய சிந்துசமவெளி நாகரிகம் (ஹரப்பாகலாச்சாரம்) ஆரியச் சார்பற்றதெனப் பல அறிஞர் கருதுகின்றனர்.

எனவே, ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவிற்கு வெளியே உளது எனலாம். இதனை அறிய இருக்குவேதம், ஆதிக்கிரேக்கர், ஆதி இரானியர் போன்ற பிற ஆரியரின் புராதன நூல்கள், தொல்பொருட்கள், ஒப்பியல்மொழிநூல், மானிடவியல்நூல் போன்றவற்றினையே துணையாகக் கொள்ள வேண்டியுளது. இவற்றினைத் துணைகொண்டு மிக முற்பட்டகால ஆரியரின் நாகரிகம், நடமாட்டங்கள், புலப்பெயர்ச்சி ஆகியவற்றினை ஒரளவு ஊகிக்கலாம்.

ஐரோப்பாவின் புராதனமொழிகளான கிரேக்கம், லத்தீன் போன்றவற்றினையும், வடமொழியினையும் பயின்ற மேனாட்டறிஞர் பலர் இவற்றிடையே நிலவிய ஒற்றுமையியல்புகளைக் கண்டு வியப்புற்றனர். இவை ஒரே மூலத்திலிருந்து முகிழ்த்திருக்கலாம் என முடிவு கட்டினர். எடுத்துக் காட்டாக, "வட மொழியின் தொன்மை எவ்வாறாயினும், அதுவியக்கத்தக்க அமைப்புக் கொண்டது@ கிரேக்கத்திலும் பார்க்க முழுமையானது@ லத்தீனிலும் பார்க்க வளமுள்ளது. இவ்விருமொழிகளிலும் பார்க்க மிக நேர்த்தியானது@ அப்படியாயினும் வினையடிச் சொற்கள், இலக்கண வடிவங்கள் ஆகியனவற்றில் இவ்விரண்டினுடன் தற்செயலாக ஏற்பட்டிருக்க முடியாத நெருங்கிய தொடர்புள்ளதாய்க் காணப்படுகின்றது. இத்தொடர்பு மிகவலுவாகக் காணப்படுதலின், இவற்றை ஆயும் மொழிநூலறிஞன் எவனும் இவை அனைத்தும் ஒரு பொது மூலத்திலிருந்து தோன்றியவை என்பதை நம்பாதுவிடமாட்டான். கோதிக். கெல்ரிக் போன்றவையும் வடமொழி மூலத்தைக் கொண்டவையே. பழையபாரசீக மொழியுமிதே குடும்பத்தைச் சேர்ந்ததே" என்றகருத்தினைச் சேர்வில்லியம் ஜோன்ஸ் என்பவர் 1786-ல் வங்காளத்திலிருந்த வேத்தியல் ஆசியக்கழகத்தில் நிகழ்த்திய புகழ்பெற்ற விரிவுரையிலே தெரிவித்தார். இம்மூலமொழி இந்தோ - ஐரோப்பிய மொழியெனப் பெயரிடப்பட்டது. இதனைப் பேசியமக்கள் இந்தோ ஐரோப்பியர் என அழைக்கப்பட்டனர். இதன் விளைவாக ஒப்பியல் மொழிநூல், மொழியியல் ஆகியவற்றிற்கு வித்திடப்பட்டது. இதன்பின்னர் பேராசிரியர் ம~;முல்லரும் இதே கருத்தினைத் தெரிவித்தார். ஆனால், ஆரிய மொழிகளைப் பேசியோர் ஒரே இனத்தவராய் இருந்திருக்கத் தேவையில்லை. சில அறிஞர் இவர்கள் ஒரேஇனத்தவர் எனவும் கருதுவர். ஆனால் அக்கருத்துச் சரியன்று.

வடமொழிக்கும் பிற ஆரியமொழிகளுக்குமிடையில் உள்ள சொல் ஒற்றுமைகளைக் குறிப்பாக, உறவினர் தெய்வம், மிருகங்கள், எண்கள் முதலியனவற்றைக் குறிக்கும் சொற்களிலே காணலாம். எடுத்துக்காட்டாக. சகோதரனைக் குறிக்கும் வடமொழிச் சொல்லான பிராதர் என்பதையும், அதே கருத்தினைக் கிரேக்க மொழியிற் குறிக்கும் பிராதெர் என்பதையும், லத்தீன் மொழியில் விரதர், கெல்ரிக் மொழியில் பிறதிர், தியூத் தோனியக் சார்பான ஆங்கிலத்தில் பிரதர் என்பனவற்றையும் ஒப்பிடலாம். இதுபோலவே, தாய், தந்தையைக் குறிக்கும் மாதர், பிதர் ஆகிய வடசொற்கள் முறையே மேற்ற, பேற்ற எனக்கிரேக்கத்திலும். மாற்ற, பாற்ற என லத்தீனிலும், மதிர், அதிர் எனக் கெல்ரிக்கிலும், மாடர், பாடர் எனத் தோக்கேரியத்திலும் வழங்குவன. தியூத்தோனியத்திலே வதர் எனும் சொல் தந்தையைக் குறிக்கும். தியூத்தோனியத்தைச் சேர்ந்த ஆங்கிலத்திலே வரும் மதர், வாதர் எனும் சொற்களையும் கவனிக்கலாம். மேலும், தெய்வத்தினைக் குறிக்கும் தேவ என்ற வடசொல், தியுஸ் என லத்தீனிலும், திய எனக் கெல்ரிக்கிலும், திவர் எனத் தியூத்தோனியத்திலும் திவொஸ் என லிதுவானியத்திலும் வழங்கும். இவை போலவே, சகோதரி, குதிரை, ஒன்று. பத்து, நூறு முதலியனவற்றைக் குறிக்கும் பதங்களிலும் ஒற்றுமை யுண்டு.

மேலும் ஆரியரின் தேரைக்குறிக்கும் ரத எனும் வடசொல்லினை இதே கருத்தில் லத்தீன் ரொத, கெல்ரிக்கில் ரொத், புராதன ஜேர்மானியத்திலும் லிதுவானியத்திலும் ரதஸ் என வரும் பதங்களுடன் ஒப்பிடலாம். இப்பதம் போலவே, சக்கரம். அச்சு, சில்லுக்குடம், நகம் முதலியனவற்றைக் குறிக்கும் இந்தோ - ஐரோப்பியப் பதங்களிடையில் ஒற்றுமையுண்டு.

இப்பெயர்ப்பட்ட பொதுச் சொற்கள், ஒப்பியல் மொழியியல், தொல்லியல், மொழியியற் புதைபடிவ ஆய்வியல் முதலியனவற்றின் துணைகொண்டு ஆதி ஆரியரின் நாகரிக நிலைகளை அறிவதற்கு அறிஞர் முயன்று சில முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றின்படி ஆதி ஆரியர் மிக உன்னதமான நாகரிகச் சிறப்புள்ளவராய் இருந்திலர். அவர்கள் வியக்கத்தக்க மொழியொன்றினைப் பேசிவந்தனர். சமூக ரீதியிலவர்கள் தம்மை நன்கு ஒழுங்குபடுத்தி யிருந்தனர். மிகமோசமான சூழ்நிலையிற் கூட. அவர்களின் ஜனக்குழு ஒற்றுமை குலைய வில்லை. பிற்காலத்தில் இவர்களுடன் தொடர்புற்ற பிறமக்கள் இவ் ஒற்றுமையினைக் கண்டு வியந்தனர். அவர்களின் சமூகம் குடும்பத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இக் குடும்பத்திலே தந்தை வழியுரிமையும். ஏகபத்தினி விரதமும் நிலவின. தந்தைவழியு ரிமையுடைய குடும்பமே இந்தியாவிற்கு வந்த ஆரியர் மத்தியிலே கோத்திரம் அல்லது குலம் என அழைக்கப்பட்டது. பொதுவாகத் தலைவனைக் கொண்ட இத்தகைய குலங்களே சமூகத்திலிருந்தன.

இந்தோ ஐரோப்பியர் சிறந்த கற்பனையுடையவர்கள். தாங்கள் சென்ற இடங்களிற் கேற்றவாறு தம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டனர். இவற்றால் அவர்களைப் பிறர் வெல்லமுடியாதிருந்தனர். ஆண், பெண் ஆகிய இருபாலார் மத்தியிலே நல்லுறவுகள் நிலவின. தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும், மகளாகவும் பெண்ணினை அவர்கள் நன்கு மதித்தனர். பெண்ணின்பாதுகாவலராகவும் விளங்கினர். தாயாகப் பெண் குறிப்பிட்ட குலத்தின் மதிப்புள்ள ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 அவர்களின் சமயத்திலே மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் நன்மை சார்பான அம்சங்களே பிரதானமாக வற்புறுத்தப்பட்டன. தெய்வங்கள் மனிதரைப் போலன்றி மேலேயுள்ள உலகத்திலேதான் வாழ்பவர் என அவர்கள் கருதினர். தெய்வங்களை மனித அம்சங்கள் கொண்டவராக அன்றிப் பெரும்பாலும் சக்திகளாகவே அவர்கள் போற்றினர். மனிதப் பண்புகளையும் தெய்வங்களிலேற்றிக்கூறினர். ஆனால் இத்தகைய போக்கு மனித இயல்புள்ள தெய்வங்களை வணங்கிய மக்களின் தொடர்பு கொண்ட பின்னரே, அவர்கள் மத்தியிலேற்பட்டது. அவர்கள் வணங்கிய தெய்வங்களில் எடுத்துக்காட்டாக, வானமாகிய தந்தை, மாதாவாகிய பூமி, சூரியன், உஷா, காற்றுத் தெய்வம் முதலியோரைக் குறிப்பிடலாம். ஆதி எகிப்தியர், சுமேரியர் வணங்கிய தெய்வங்களைப்போல இவர்கள் வணங்கிலர். மேலும் ஆதி ஆரியரின் அன்றாட வாழ்விலே தீ பெரியதோரிடத்தைப் பெற்றிருந்தது. குளிர்வலய மக்களுக்குத் தீயின் இன்றியமையாமை வெள்ளிடைமலை. தீ வணக்கமும் பிரதான இடம் பெற்றிருந்தது.


புராதன இந்தோ - ஐரோப்பிய வேர்ச் சொற்கள் அவற்றிலே காலப்போக்கிலேற்பட்ட மாற்றங்கள் முதலியனவற்றினை அடிப்படையாகக் கொண்டு பிரான்டென்ஸ் ரென் என்ற அறிஞர் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதாவது ஆதி ஆரியர் பெரும்பாலும் வரண்டபாறைப் பிரதேசத்தில் வாழ்ந்தனர். அங்கு "வில்லோ", "ஒக்", "பேர்ச்" பிசினுள்ள மரம் முதலியன வளர்ந்தன. ஆனால் பெரிய காடுகளில்லை. பழமரங்களுமி;ல்லை. அவர்கள் காட்டுப்பன்றி, ஓநாய். நரி, கரடி, முயல், சுண்டெலி முதலிய காட்டு மிருகங்களையும் பசு, செம்மறியாடு, வெள்ளாடு, குதிரை, நாய், பன்றி முதலிய வீட்டுமிருகங்களையும் அறிந்திருந்தனர். நிலம், நீர் ஆகிய இரண்டிலும் வாழும் மிருகங்களையோ மீனையோ அறிந்திலர். காலம் செல்லத் தொடக்கத்திலிருந்த இடத்தினை விட்டுத் தாழ்ந்த சதுப்பு நிலமுள்ள பிரதேசத்தையடைந்தனர். அவ்விடத்து மேலும்புதிய மிருகங்கள், தாவரங்கள் காணப்பட்டன. யூரல் மலைக்குத் தெற்கேயும் கிழக்கேயுமுள்ள வடக்குக் கேர்க்கிஸ் ஸ்ரெப்பிஸ் (புற்றரைகள்) பகுதியே அவர்களின் புராதன இருப்பிடமென்பது இந்தோ - ஐரோப்பிய மொழியின் மிகப்பழைய நிலைபற்றிய ஆய்வினாற் புலப்படும். அத்துடன் அவர்களின் புதியவிருப்பிடம் கார்ப்பேதியின் தொடக்கம் போல்ரிக் வரையுள்ள சமபூமியே என்பது பிற்பட்ட இந்தோ- ஐரோப்பிய மொழிநிலை பற்றிய ஆய்வினாலறியப்படும்.

இவர்கள் ஒரளவு நாடோடிகளாக மந்தைமேய்த்தும். புராதன விவசாயம் செய்தும் வந்தனர். மந்தைகளே இவர்களின் பெருஞ் செல்வமாகும். இதுபற்றிப் பின்னர் கூறப்படும். இவர்கள் குதிரையினைக் குறிப்பாகப் போரிலே நன்கு பயன்படுத்தினர். இவ்வாறு இந்தோ - ஐரோப்பிய நாகரிக நிலையினைப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் ஓரளவாவது திரும்பவும் அமைத்துக் குறிப்பிடுவர்.

இவர்களின் ஆதி இருப்பிடம் பற்றித் தொடர்ந்து ஆயுமுன் இந்தியாவிற்கு வந்த ஆரியரின் அயலவராகவும், மிகப்பழைய காலத்திலே சகோதரராகவும் விளங்கிய ஆதி இரானியருக்கும், இந்தோ - ஆரியருக்கும்மிடையிலே காணப்படும் ஒற்றுமையம்சங்களைக் குறிப்பிடலாம்.

இந்தோ - ஆரிய இந்தோ - இரானியத் தொடர்புகள்

இந்தோ - ஆரியரின் ஆதி ஏடு இருக்குவேதம். ஆதி இரானியரின் ஆதி ஏடு அவெஸ்தா. இருக்குவேதம் போரன்றி அவெஸ்தா கி. மு. 7ம் நூற்றாண்டளவிலே தோன்றிய சொறாஸ்ரர் எனும் பெரியாரின் சீர்திருத்தங்களால் தோன்றிய சொறாஸ்ரர் எனும் பெரியாரின் சீர்திருத்தங்களால் ஒரளவு மாற்றம் அடைந்துள்ளது அவ்வாறாயினும் அவெஸ்தாவின் மொழிநடை, யாப்பு, பொருள் ஆகியனவற்றிற்கும் இருக்குவேதத்தின் மொழி நடை, யாப்பு, பொருள் ஆகியனவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது இதனாலே மொழி நூலறிஞர் சிலர் இருக்குவேத மொழியும், பழைய இரானிய மொழியும் ஒருமொழியின் பிரதேச வேறுபாடுகள் என்பர். இருக்குவேத ஆரியரும் ஆதி இரானியரும் தம்மை 'ஆரிய', 'ஐர்ய' எனஒரு பொதுப் பெயராலழைத்தனர் ஒருவேளை, பொதுவான ஆற்றுப் பெயர்களையும் அறிந்திருந்தனர் போலும், எடுத்துக்காட்டாக இருக்குவேதத்திலே வரும் சரஸ்வதி, ஹரஉவதிஸ் என அவெஸ்தாவிற் குறிப்பிடப்படுகின்றது. இருசாராரும் பெரும்பாலும் பொதுத் தெய்வங்களை வணங்கினர். உதாரணமாக இருக்கு வேத மித்ர, வருண, சோம, அர்யமன், நாசத்ய போன்ற தெய்வங்கள் முறையே மித்ர, அஹ{ரமஸ்த, ஹயோம. அர்யமன், நாசத்ய என அவெஸ்தாவில் அழைக்கப்படுகின்றனர். பல சொற்களிலும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. எனவே "இருக்குவேதமும், அவெஸ்தாவும் ஒரே ஊற்றிலிருந்து பாயுமிரு நதிகள்" என ரொத் எனும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளமை பொருத்தமானது. இருக்குவேத ஆரியரும், ஆதி இரானியரும் முன்னொரு காலத்தில் ஒரே மக்கட் கூட்டத்தினராய் வாழ்ந்து பின் பிரிந்தனர் போலக்காணப்படுகின்றனர். இவ்வாறு இரு சாராரும் ஒன்றாக வாழ்ந்த காலம் இந்தோ - இரானிய காலமெனவும், (ஒன்றாயிருந்தபோது) இவர்களை இந்தோ - இரானியர் எனவும், அழைக்கலாமென அறிஞர் கருதுவர். ஆரியரின் ஆதியிருப்பிடம் பற்றி ஆயும்போது இந்தோ இரானியகாலம் ஒரு முக்கியமான காலகட்டமெனலாம். இரானில் ஆரியரின் சுவடுகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட நெருங்கிய கலாச்சார ஒற்றுமை பிற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக் கிடையிலே காணப்பட்டிலது.

இந்தோ - ஐரோப்பிய மொழிகள்

நூறு எனும் எண்ணைக் குறிக்கும் பதத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தோ ஐரோப்பிய மொழிகளிலே பெரும்பாலும் ஆசியாவிலுள்ளவை (தோகேரிய மொழி தவிர்த்து) 'சதம்' எனவும். அறிஞரால் இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலே முக்கியமாகப் பத்து மொழிகள் உள்ளனவாகப் பேராசிரியர் ரி. பறோ குறிப்பிட்டுள்ளார். அவையாவன@

1. ஆரிய அல்லது இந்தோ - இரானியமொழி: இதிலே, புராதன பாரசீக மொழி இந்தியாவிற்கு வந்த ஆதிஆரியரின் மொழி ஆகியன அடங்குவன. இவற்றுள்ளே காலத்தால் முந்திய இலக்கியம் இந்தியாவிற்கு வந்த ஆரியருடைய இருக்குவேதமாகும். இதுவே, இந்து - ஐரோப்பிய மொழிகளில் எழுந்த காலத்தால் முந்திய மிகப் பழைய நூலாகும். ஆதிப்பாரசீகரின் காலத்தால் முந்திய நூல் அவெஸ்தா.

2. போல்ரிக் - சிலாவேனிய மொழிகள்: முன்னையதிலே லிதுவானியம். லெற்றிஸ், வழக்கற்ற பிரஸ்ஸிய மொழி ஆகியனவும் பின்னையதிலே, ரூசிய, போலிஸ்செக், புல்கேரிய மொழிகளும் பிற சிலவும் அடங்குவன.

3. ஆர்மானிய மொழி: இது கி.பி. 5-ம்நூற்றாண்டு தொடக்கம் அறியப்படுகின்றது.

4. அல்பேனிய மொழி: இது தற்காலத்திலே தான் அறியப்படுகின்றது. இதுவரை குறிப்பிட்ட நான்கு சதம் மொழிகள்.

5. கிரேக்கம்: இதிலே பலகிளை மொழிகள் உள்ளன. கி. மு 800 அளவிலே வாழ்ந்த ஹோமரின் பாடல்களே காலத்தால் முந்திய கிரேக்க இலக்கியமாகும்.

6. லத்தீன்: இதிலிருந்துதான் பிராஞ்சியம், இத்தாலியம், ஸ்பானியம், போர்த்துக்கேயம், ரூமேனியம் முதலியன முகிழ்ந்தன. லத்தீன் இலக்கியம் கி. மு. 200 அளவில் வளரத் தொடங்கியது. இதற்கு முற்பட்ட காலச் சில சாசனங்கள் உள்ளன.

7. கெல்ரிக்: இதிலிருந்து ஐரிஸ், வெல்ஸ் முதலியன வளர்ந்தன. காலத்தால் முந்திய ஐரிஸ் பாடல்கள் கி. பி. 8-ம் நுற்றாண்டளவைச் சேர்ந்தவை.

8. ஜேர்மானியம்: இதிலிருந்து வழக்கிறந்த கோதிக், ஸ்காந்திநேவியன், மேற்கு ஜேர்மனியம் முதலியன தோன்றின. கடைசியாகக் குறிப்பிட்டதிலிருந்து தற்கால ஜேர்மானியம், ஆங்கிலம் முதலியன முகிழ்ந்தன. காலத்தால் முந்திய ஜேர்மானிய நூல் கி.பி. 4ம் நூற்றாண்டில் உல்வில என்பவரால் எழுதப்பட்ட கிறிஸ்தவவேத மொழிபெயர்ப்பாகும்.

9. தோக்கேரியன்: மத்திய ஆசியாவிலே, சீனத் துருக்கிஸ்தானில் கி.பி 6-10 நூற்றாண்டு காலத்திய பௌத்த ஏட்டுச்சுவடிகளில் இது இக்காலத்திலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கற்ற n;மாழியாகும்.

10. ஹிற்றைற்: இது மேற்காசியாவிலேயுள்ள போகஸ்கோயில் ஆப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள சாசனங்களில் இக்காலத்திலே கண்டுபிடிக்கப்பட்டது. இச்சாசனங்களின் காலம் கி. மு. 19-12 நூற்றாண்டு வரையாகும். இவற்றிலுள்ள மொழி வழக்கற்று விட்டது பிற்குறிப்பிட்ட ஆறு மொழிகளும் கென்ரும் வகையின.

வேறு எந்தமொழிக்குடும்பத்திலும் பார்க்க இந்தோ - ஐரோப்பிய மொழிகளே உலகின் பலபாகங்களிலும் நிலவுகின்றன. அத்துடன் உலகிலுள்ள இலக்கியவளமுள்ள மொழிகளிற் பலவும் இம்மொழிக் குடும்பத்தனவே. இதனால், இந்தோ - ஐரோப்பியரின் ஆதி இருப்பிடம் பற்றிப்பல ஆய்வுகள் நடைபெற்றமையினாலே வியப்பில்லை.

ஆரியரின் ஆதி இருப்பிடம் ஆசியாவிலா, ஐரோப்பாவிலா?

ஆராய்ச்சி நன்கு வளர்ச்சியுறாத காலத்திலே, மத்திய ஆசியாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் எனப் பலர் கருதினர். ஆனால் பெரும்பாலான இந்தோ - ஐரோப்பிய மொழிகள் ஐரோப்பாவிலே நிலவுவதால் அங்கேயே அவர்களின் ஆதி இருப்பிடம் இருந்திருக்க வேண்டும் எனவும் பலர் பிற்காலத்திலே கொண்டனர். மத்திய ஆசியாவிற்கு நீண்டகாலத்தின் பின்னரே வந்திருப்பர் எனவாதித்து வரலாயினர். ஐரோப்பாவின் தென்பகுதி, மேற்குப்பகுதி ஆகியனவற்றில் ஆரியரின் நடமாட்டங்கள் காலம் செல்ல ஏற்பட்டன. எனவே ஐரோப்பாவின் மத்திய பகுதி, கிழக்குப்பகுதி ஆகியன அவர்களின் ஆதி இருப்பிடம் எனக்கருதப்பட்டது. ஆகவே மத்திய ஆசியாவின் மேற்குப்பகுதி ஐரோப்பாவின் கிழக்குப் பகுதி ஆகியனவற்றிலேதான் அவர்களின் ஆதி இருப்பிடத்தைத் தேட வேண்டியுள்ளது.

ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவிற்கு வெளியே ஆசியாவிலுள்ளதென ஒரு சாராரும், ஐரோப்பாவில் உள்ளதெனப் பிறிதொரு சாராரும் கூறுகின்றனர். முதலில் ஆசியாவே அவர்களின் ஆதி இருப்பிடம் எனக் கொள்ளுவோரின் கருத்தினைக் குறிப்பிடலாம். இதிலும் கருத்து வேறுபாடு உள்ளது. மத்திய ஆசியாவே (பமீர் - பக்ரியப் பகுதிகள்) ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக் கூறியோரிலே பேராசிரியர் ம~;முல்லர் குறி;ப்பிடற்பாலர். இவ்வாறு கொள்ளுதற்குச் சிலகாரணங்கள் உள்ளன. முதலாவதாகச் 'சதம்', 'கென்ரும்' பிரிவுகளுக்குத் தகுந்த மையம் மத்திய ஆசியா. ஆதிகால நாகரிக மையங்கள் பல ஆசியாவிலேதான் உள்ளன. பிற்காலத்திலே பெருமளவிலே நடைபெற்ற மக்கட் புலப்பெயர்ச்சிகள் மத்திய ஆசியாவிலிருந்து ஏற்பட்டன. ஆதி ஆரியர் கடலுடன்; தொடர்பு கொண்டிருந்தனர் போலும் ஆதி இரானியரின் வேதமான அவெஸ்தாவின்படி மக்கள் மத்திய ஆசியாவிலே (அர்யானம் வையங்) உண்டாயினர்.

மேலும் அனவ் போன்ற இடங்களிலே காணப்படும் மைபூசிய பாத்திரங்களைப்பயன் படுத்திய மக்கள் குதிரைவளர்த்தனர் எனவும், ஒரு சாரார் கூறுவர். மத்திய ஆசியா ஆரியரின் ஆதி இருப்பிடம். (ருசாநiஅயவ) என்ற கருத்தினைப் பேராசிரியர் ஆர். என். தண்டேகர் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். யூரல் தொடக்கம் வட அல்தாய் வரையுள்ள வடகேர்க்கிஸ் புற்றரைகளே ஆரியரின் ஆதி இருப்பிடமாகும் என்பதே இவரின் கருத்தாகும் இவ்விடத்தில் ஆதி ஆரியரின் நாகரிக நிலைகளுக்குத் தக்க சான்றுகள் உள்ளன என இவர் கூறுவர்.

பேராசிரியர் சய்ஸ் அனட்டோலிய பீடபூமியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். அண்மைக்காலத்திலே றொபேட்ஷேவர் என்பவர் திபெத் ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கருத்தினை ஏற்கனவே பர்ஜிதர் போன்றோர் கூறியுள்ளனர்.

புகழ்பெற்ற இந்திய தேசிய விடுதலைவீரரான பால கங்காதர் திலக் வடதுருவமே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். இவர் தமது கருத்திற்குச் சான்றாக வேதங்களிலுள்ள வானநூற்குறிப்புகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இவரின் கருத்தினைப் பலர் ஏற்றிலர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 ஐரோப்பாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக்கொள்வோரின் கருத்துக்களை கவனிக்கலாம். இதிலும் கருத்து வேறுபாடு உள்ளது. பேராசிரியர் கைல்ஸ் கங்கேரி சமவெளியியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். இவர்களை இவ்வறிஞர் "விரொஸ்" என அழைத்துள்ளார். 'விரொஸ்' விவசாயம் செய்தனர்@ மந்தை மேய்த்தனர் எனக் கூறுவர். ஆனால் கைல்ஸ் மொழிநூல் வல்லுநர்@ தொல்லியலாய்வாளரல்லர்.


வட ஐரோப்பாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் என பென்கா லதம் போன்ற ஆய்வாளர் கூறியுள்ளனர் இவர்களின் கருத்துப்படி நோர்டிக் இனத்தவர்கள் நாகரிகமுள்ளவர்கள் பென்கா, கைகர் போன்றோர் ஜேர்மனியையும், லதம் போன்றோர் ஸ்காந்திநேவியாவையும் ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். பேராசிரியர் ஜே. சி. மையேர்ஸ், ஸ்கிரேடர், கோர்டன் சைல்ட், பி. கே. கோஸ் போன்றோர் தென்ரூசியாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். கஸ்பியன் கடல் தொடக்கம் நீப்பர் வரையுள்ள பிரதேசத்திலே சுருங்கிய எலும்புக் கூடுகள் கொண்டுள்ள கல்;லறைகள் உள்ளன. இவை சிவப்புக்களி மண்ணாலே மூடப்பட்டு மேலே மேடொன்று (குர்க்கன்) கொண்டுள்ளன. கல்லறைக்குமேலே, மண்தூவுதல், மேடையைச் சுற்றி மரவேலியிடுதல் ஆகியன இருக்கு வேதம் 10-18-4, 18-13-லே தொனிக்கின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் உயரமுள்ளவர்கள்@ பெரிய மண்டையோடு உடையவர்கள். இவர்களைப் பொதுவான நோர்டிக் இனத்தவர் எனலாம். இவ்விடத்திலே நிலவிய பண்பாடு ஒரே தன்மையானது. இம்மேடுகளிலே (குர்க்கன்களிலே) செம்மறியாடு, மாடு, குதிரை ஆகியனவற்றின் எலும்புகள் உள்ளன. எனவே இம்மக்கள் மந்தைமேய்த்த நாடோடிகளா? சக்கரமுள்ள குதிரை வண்டிக்காரரா? மேடுகளின் மேற்காணப்படும் தானியங்கள் விவசாயத்திற்குச் சான்றாகும் எனவும் சிலர் கருதுவர். இக் கல்லறைகளால் அறியப்படும் நாகரிகத்திலே கல், செம்பு, வெண்கலம் முதலியன இடம்பெற்றுள்ளன. கல், செம்பு, ஆதியனவற்றாலான துளையிட்ட கோடரிகள், அம்புகள். ஈட்டிகள் முதலிய கருவிகள் உள்ளன. இத்தகைய சின்னங்கள் மைக்கோப் போன்ற இடங்களிலே கிடைத்தன. மேலும், இப்பிரதேசத்திற்கு வெளியே ரேப்கிஸர், ருறங்ரேப் போன்ற இடங்களிலும் அநட்டோலியாவிலும் உள்ளன.

மேலும், தேன் உற்பத்திக்குத் தேவையான எலுமிச்சைமரம், 'பீச்' மரம் முதலியனவுமிங்கு வளர்ந்தன. இருக்குவேதத்திற் கூறப்படும் ரசா வொல்காவின் பழைய பெயரான ரா ஆக இருக்கலாமெனவும் சிலர் கருதுவர். பொதுவாக அறிஞர் பலர் இந்தோ, ஐரோப்பியரின் ஆதி இருப்பிடம் கலாச்சாரம் முதலியனபற்றிக் கூறுவனயாவும் பிறவற்றிலும் பார்க்க மேற்குறி;ப்பிட்ட கலாச்சாரத்துடன் பெருமளவு ஒத்துக் காணப்படுகின்றன எனவே, ஆதி ஆரியர் இங்கிருந்து பிற இடங்களுக்குப்புலம் பெயர்ந்தனர் எனவும் கொள்ளலாம் என்பர். மேலும் நெஹ்றிங்என்ற அறிஞர் ஆதி ஆரியர் 'ரிப்பொல்ஜி' கலாச்சாரத்தினைக் கொண்டிருந்தனர் எனவும், அவர்களினிருப்பிடம் தென்ரூசியாவிலே மட்டுமன்றி மேற்கேயுமிருந்தது என்பர். அண்மைக்காலத்திலே பிரான் டென்ஸ்ரென் என்பவர் சொற்பொருளாராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு ஆரியரின் ஆதி இருப்பிடம் மலைத் தொடரின் அடிவாரத்திலுள்ள புற்றரையெனவும் அது யூரல் மலைக்குத் தெற்கேயுள்ள வடமேற்குக் கேர்க்கிஸ் புற்றரைகள் எனவும் கூறுவர். மேலும் அவரின் கருத்துக்கள் சில குறிப்பிடற்பாலன. மொழியியற்சான்றினைக் கொண்டு நோக்கும்போது புராதன இந்தோ - ஐரோப்பிய வரலாற்றில் இரு காலப்பகுதிகள் உள்ளன. அவையாவன.

1. காலத்தால் முந்திய பகுதி - அதாவது. இந்தோ - ஐரோப்பியர் யாவரும் ஒன்றாக வாழ்ந்த காலம் அல்லது இந்தோ - ஐரோப்பியர் காலம்.
2. பிரதான மையத்திலிருந்து இந்தோ - இரானியர் பிரிந்து புதிய சுவாத்தியமுள்ள பிறிதோரிடத்திற்குச் சென்றுவிட்ட காலம்.

இந்தோ - இரானியர், ஹிற்றைற் மக்கள் ஆகியோரின் முன்னோர் கோகஸஸைத் தாண்டிச் சின்னாசியா, மொசொப்பொத்தேமியா, இரான் ஆகிய இடங்களுக்கும், பின் இந்தியாவிற்கும் வந்திருப்பர். அல்லது, ஒரு பகுதியினர் பிரதான மையத்திலிருந்து புலம் பெயர்ந்து இரானிய பீடபூமிக்கும்பின் இந்தியாவிற்கும் வந்திருப்பர். பிரதான மையத்திலிருந்து பிறிதொரு பிரிவினர் மேற்கே, போலந்து எனும்புதிய இடத்திற்குச் சென்றிருப்பர். இதைவிட. கார்ப்பேதியன், கிழக்கு ஐரோப்பா முதலிய பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்து பரவினர் எனலாம். பரான்டென்ஸ் ரெனின் கருத்துக்கள் பெருமளவு நியாயமானவை@ மிகத் திட்டவட்டமான மொழியியல், தொல்லியற்சான்றுகளின் அடிப்படையிலமைந்துள்ளவை. பொதுப்பட நோக்கும்போது, யூரல் மலைக்குத் தெற்கேயுள்ள பரந்த ஆசியச் - ஐரோப்பிய சமவெளியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என அறிஞரில் ஒரு சாரார் நன்கு எடுத்துக்காட்டியுள்ளனர். ஆரியரின் ஆதி இருப்பிடம் தென்ரூசியா எனப் பேராசிரியர் ரி. பறோ சில காலத்திற்குமுன் கூறியிருந்தார். ஆனால், அண்மையில் இக்கருத்தினை மாற்றியுள்ளார் என்பது பின்னர் கூறப்படும்.

ஆரியரின் புலப்பெயர்ச்சிகளும் காலமும்

ஆரியரின் புலப்பெயர்ச்சிகள் அவற்றின் காலம், இயல்புகள் ஆகியன பற்றிக் கலாநிதி சுப்பராவ் குறிப்பிட்டுள்ளவை கவனித்தற்குரியன. கி. மு. இரண்டாயிரம் ஆண்டின் பிற்பாதியிலே மேற்கு ஆசியா அடங்கலும் மக்களின் கொந்தளிப்புள்ள புலப்பெயர்ச்சிகள், அழிவுகள், புதிய மொழிகள் தோன்றல் முதலியன அநட்டோலியா தொடக்கம் நிலவின மேற்குறிப்பிட்டவை இந்தோ - ஐரோப்பியரின் வருகையாலே பலநாடுகளிலே காணப்பட்டன. இவற்றின் தாக்கத்திற்கு இந்தியா தப்பவில்லை. ஆனால் ஒரு முக்கியமான குறிப்பினை நினைவிலிருத்த வேண்டும். வன் செயலில் ஈடுபட்டும், ஒரளவு மந்தை மேய்த்தும் வந்த மக்கள் தாம் வென்று அடிப்படுத்தியோரின் கலாச்சார அம்சங்கள் பலவற்றை மேற்கொண்டனர். இவ்வாறு பழைய உலகனைத்திலும் ஆரியர் தெளிவற்றும். உறுதியற்றும் காணப்படுகின்றனர். ஆனால் நாகரிக வரலாற்றிற்கு அவர்களின் மொழிகள் முதுசொத்தாகக் கிடைத்துள்ளன. இந்தோ - ஐரோப்பிய மொழிகள் பரவுதலும் குதிரையினைப்பழக்குதலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட எளிதிற் செல்லும் போர்த்தேர் உபயோகமும் ஒரளவு சமகாலத்தவை. ஆரியரின் நாகரிகத்துடன் தொடர்பான மிருகங்களிலே பசுமட்டுமன்றிச் குதிரையும் குறிப்பிடற்பாலது. குதிரைகள் காட்டுமிருகங்களாகத் தென்ரூசிய, உக்றெயின் புற்றரைகளிலே திரிந்தன. பின்னர் மத்திய ஆசியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டன. கி.மு. 2000 அளவிலே மனிதன் இவற்றை நன்கு பயன்படுத்தி வந்தான். வேத இலக்கியத்திலே வரும் குதிரை பற்றிய குறிப்புகள் மத்திய ஆசியப் புற்றரைகளில் (ஸ்ரெப்பிஸில்) வாழ்ந்த வற்றினை நினைவூட்டுவன. ஆரியருக்குப் பெரும்பாலும் குதிரை தேர் இழுக்கும் மிருகமாகவே போருக்கும், சவாரிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கி மு. 2000 - 1500 அளவிலே தென்ரூசியாவிலே குதிரை வளர்க்கப்பட்டது. காலத்தால் முந்திய மைக்கொப் கல்லறையிலுள்ள வெள்ளிக் கிண்ணத்திலும் அனவ். சியல்க் போன்ற இடங்களிலுள்ள தொல்லியற சின்னங்களிலும் குதிரையின் வடிவம் காணப்படுகின்றது ஆரியர் குதிரை உபயோகத்தினைத் தொடக்கி வைத்திலர்@ ஆனால் அதனை விரைவான போக்குவரத்துச் சாதனமாக்கினர் என்று கூறுதலே பொருத்தமானது. மேற்காசியாவிலே சீரியாவிலுள்ள சாசனங்களிலும், கஸ்ஸைற், மித்தானிய மன்னர் சாசனங்களிலும் குதிரை பற்றிய குறி;ப்புகள் வருகின்றன. இந்தோ - ஐரோப்பியர்புலப்பெயர்ச்சி பற்றிய சான்றுகள் திட்டவட்டமாகக் கிடைத்தில. எனினும், சிலவற்றைக் குறிப்பிடலாம். வடபலுக்கிஸ்தானிலே ரணாகுந்தை, டபர்கொற் முதலிய இடங்களிலே பலகுடியிருப்புகள் முற்றாகவே வன்முறைச் செயல்களால் அழிக்கப்பட்டதற்கான சின்னங்கள் உள்ளன. தென்பலுக்கிஸ்தானிலுள்ள சாஹிதும்ப் கல்லறையிலே செப்புத்தகடு முத்திரைகள் (இலச்சனைகள்) செப்பினாற் செய்த துளையுள்ள கோடரி, காலுள்ள கிண்ணங்கள் முதலியன கிடைத்துள்ளன. இம்முத்திரைகள் இரானிலுள்ள அனவ் (iii) கிஸார் (iii) காலச்சின்னங்களிற் கிடைத்தவற்றினைப் போன்றவை. மேற்குறிப்பிட்ட கோடரிவகை இதுவரை இந்தியாவிற் கிடைத்திலது. இது மேற்காசிய வகையுடனும், தென் ரூசியாவிலுள்ள மைக்கொப் சார்ஸ்கய போன்ற இடங்களிற் கிடைத்தவற்றுடன் ஒப்பிடற்பாலது.

தென்ரூசியப் புற்றரைகளிலிருந்து ஆதி ஆரியர் மேற்கு, தெற்கு, கிழக்குத் திசைகளை நோக்கிப் புலம் பெயர்ந்திருப்பர். மேற்கே சென்றவர்களும் தெற்கே வந்தவர்களில் ஒரு சாராரும் மேற்கு, தெற்கு ஐரோப்பாவிலே குடியேறியிருப்பர். கிழக்கேயும், தெற்கேயும் சென்றோர் இரான் அதற்கு மேற்கேயுள்ள மேற்கு ஆசியப் பகுதிகள், இந்தியா ஆகிய இடங்களை நோக்கினர். கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியாவிலும் ஆரியரின் நடமாட்டங்களைக் காட்டும் சில சான்றுகள் கிடைத்துள்ளன. கி. மு. 2300 அளவில் அல்லது அதற்குச் சில நூற்றாண்டுகளின் முன் அதி ஆரியர் புலம்பெயரத் தொடங்கியிருப்பர். அவர்களில், ஒரு பிரிவினரான ஆதிக்கிரேக்கர் கி;. மு. 2300 -க்குச் சற்றுப்பின்னரே கிரீசிற்கு வந்தனர். கி; மு 16ம் நூற்றாண்டளவிலே, ஆரியர் மேற்கு ஆசியாவிலே காணப்பட்டனர். பழைய புகழ்பெற்ற மெசொப்பொத்தேமிய நாகரிக எல்லையிலும் ஆரியர் சிலர் வாழ்ந்தனர். அங்கிருந்தும் நாகரிக அம்சங்கள் சிலவற்றைப் பெற்றனர். கி;.மு 16ம் நூற்றாண்டளவிலே மெசொப்பொத்தேமியாவை ஆண்ட கஸ்ஸைற் மன்னர் இந்தோ - ஐரோப்பியப் பெயர்கள் தரித்திருந்தனர். எடுத்துக்காட்டாக அர்த்தமன்ய, அர்ஸவிய, யஸ்தத, சுத்தர்ன போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் வடக்கே அல்லது வடகிழக்கேயிருந்து வந்திருப்பர். கி. மு 14ம், 15ம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த மித்தானிய மன்னர் பெயர்களிலே இந்தோ - ஐரோப்பியப் பெயர்கள் பல காணப்படுகின்றன. எகிப்திலுள்ள எல் அமர்னாவிற்கும் சின்னாசியாவில் உள்ள ஹிற்றைற் தலைநகரான போகஸ் கோய்க்குமிடையிலே நடைபெற்ற ராஜதந்திரத் தொடர்புகளில் இவற்றைக் காணலாம். ஹிற்றைற் மன்னரான சுபிலுலியுமவிற்கும், மித்தானிய மன்னரான சுபிலுலியுமவிற்கும், மித்தானிய மன்னரான துஸ்ரத்தவின் மகன் மத்தியுசாவிற்குமிடையிலே கி. மு. 1380லே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை குறிப்பிடப்பாலது. இதிலே, மித்தானிய மன்னன் தான் வழிபட்ட மி -இத்ர (மித்திரன்), உருவன (வருணன்), இந்தர (இந்திரன்), நச...அத்தி இயன்ன (நாசத்ய) ஆகிய தெய்வங்களைச் சாட்சியாக விளித்து வணங்குகிறான். எனவே, கிழக்கே சென்ற ஆரியரின் தெய்வங்களை மித்தானியரும் வணங்கியிருந்தனர். மேலும், கூடுதலான சான்று ஒன்றினைக்குறிப்பிடலாம். போகஸ்கோய் சாசனங்களிலே குதிரைச் சவாரிபற்றிய நூலொன்று அரைகுறையாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடற்பாலது. இது கி. மு. 14ம் நூற்றாண்டளவைச் சேர்ந்ததாகும். இதனைக் கிக்குலி எனும் மித்தானிய மன்னன் எழுதினான். இதிலே திருப்புதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் வடமொழிச் சொற்களைப் போன்றவை. எடுத்துக்காட்டாக ஜகவர்த்தன, தேரவர்த்தன, பஞ்சவர்த்தன என்பன முறையே ஒன்று, மூன்று, ஐந்து திருப்புதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. குதிரைச்சவாரியினை ஆதி ஆரியர் இந்தியாவிலும் சிறப்பாகப் பயன்படுத்தினர். தொல்லியல் ரீதியிலும். மொழியியல் ரீதியிலும் மேற்குறித்த சான்று கி. மு இரண்டாயிரம் ஆண்டளவில் இந்து - ஐரோப்பிய மொழிகள் பேசியோரை இந்தியாவுடன் தொடர்புபடுத்தக்கூடிய முக்கியமான ஒன்றாகும். எளிதாகவும், மிகவிரைவாகவும் செல்லும் குதிரைகளையும், குதிரைபூட்டிய தேர்களையும் முதன் முதலாக நன்கு பயன்படுத்தி ஆரியர் வெற்றியடைந்தனர். மேற்கு ஆசியாவிலே கி, மு. 1500 அளவில் ஆரியரின் நடமாட்டங்களைப் பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டது.

அண்மையிலே பேராசிரியர் ரி. பறோ ஆரியரின் ஆதி இருப்பிடம் மத்திய, கிழக்கு ஐரோப்பாவாக இருந்திருக்கலாம் என்பர். இந்தோ - இரானியருக்கும் சதம் மொழிகளுக்கும் குறிப்பாக போல்ரோ - சிலாவோனிய மொழிகளுக்கும் வின்னிய உக்;ரிய மொழிகளுக்கும் புராதன இந்தோ - ஐரோப்பிய காலத்திலே நிலவிய விசேட தொடர்புகளை நோக்கும்போது மேற்குறிப்பிட்ட கருத்துத் தெளிவாகும் என்பது அவரின் வாதமாகும். மத்திய ரூசியாவிலிருந்து மக்கள் புலப்பெயர்ச்சி கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியுமேற்பட்டது. இதனால், மத்திய ஆசியா சில காலமாக ஆரியரின் இருப்பிடமாயிற்று. இப்பழையகாலத்தில் இந்தோ - ஆரிய, இரானிய எனும் இரு கிளைகள் ஏற்படத் தொடங்கி விட்டமைக்குச் சான்று உள்ளது. இந்தோ - ஆரிய, இரானிய எனும் இரு கிளைகள் ஏற்படத் தொடங்கி விட்டமைக்குச் சான்று உள்ளது. இந்தோ - ஆரியர் தான் முதலிலே தெற்கு நோக்கி இரானிற்கும் அங்கிருந்து இந்தியாவிற்கும் மேற்கு இரானிற்கும் சென்றனர் இரண்டாவது அலையாகவே இரானியரின் புலப்பெயர்ச்சி முதலிலே கிழக்கு இரானிலேற்பட்டது. இதன் விளைவாகக் கிழக்கேயும், மேற்கேயும் சென்ற இந்தோ - ஆரியரின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன பின்னர் இரானியர் மேற்கே செல்ல, அங்கு முன்னர் சென்றோரின் செல்வாக்குக்குன்றிற்று. ஆனால் அவர்கள் அங்குமுன் இருந்தமைக்கு மேற்கு ஆசியாவிலேயுள்ள ஆவணங்கள் சான்றுபகருவன.

இந்தியாவிலே ஹரப்பா கலாச்சார முடிவும் (கி. மு 1500 அளவில்) ஆரியரின் வருகையினாலேற்றப்பட்டதெனத் தொல்லியலறிஞரான மார்ட்டிமர் வீலர், ஸ்ருவட் பிகொற் போன்றோரும். மொழிநூல்விற்பன்னரான பேராசிரியர் பறோவும் வற்புறுத்தியுள்ளனர். எவ்வாறியினும் ஹரப்பா கலாச்சாரம் மங்கிக் கொண்டிருந்த காலத்திலே திடீரென முடிவுற்றது. இக்கலாச்hசரத்தலங்கள் பலவற்றலே அரண் செய்த நகரங்கள், கோட்டைகள் பல இருந்தன. இருக்குவேதத்திலே வரும் பிரபல்யமான போர்த் தெய்வமான இந்திரன் கறுத்த நிறம், தட்டையான மூக்குமுள்ள தாசர், தஸ்யுக்களின் அரணுள்ள நகரங்களைத் தகர்த்து ஆரியர் வெற்றியினை மேம்படுத்திய வீரனாக, புரந்தரனாக, புரபித் (நகரங்களைத் தகர்த்தவன்) ஆகப் போற்றப்படுகிறான். இக்கோட்டை நகரங்கள் கல்லினாலும், சுடாத செங்கட்டிகளினாலும் ஆனவை. சில வேளைகளிலே தீயினாலும் அழிவுகளை இந்திரன் ஏற்படுத்தினான். சிந்து சமவெளியிலுள்ள மொஹெஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளின் விளைவாக, அவ்விடங்களில் அரணுள்ள நகரங்கள் இருந்தமை நன்கு அறியப்பட்டுள்ளது. ஆரியர் நகரங்களை அறிந்திலர்@ கிராமிய நாகரிகத்தினர். மேற்குறிப்பிட்ட நாகரிகச் சின்னங்கள் ஆரியரின் வருகையினாலே அழிவுற்றன எனவும். சூழ்நிலைக்கேற்ற பொருத்தம் காட்டும் சான்றுகளைக் கொண்டு நோக்கும்போது இந்திரனே இதற்குக் காரணம் எனவும் வீலர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹரப்பா கலாச்சாரம் கி;. மு. 2500 - 1500 வரையெனப் பொதுவாகக் கொள்ளலாம் என்பர். ஆனால் அண்மைக்காலத்திலே காபன் 14 முறைப்படி இதன் காலம் பொதுவாக கி. மு. 2300 - 1750 வரையெனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஹரப்பா கலாச்சாரம் முடிவுற்ற பின். தரம் குறைந்த ஜுகர் கலாச்சாரம் ஜங்கர் கலாச்சாரம் ஒன்றன் பின் ஒன்றாக நிலவின. இவ்விரண்டிலும் ஒன்று அல்லது இரண்டுமே ஆரியர் கலாச்சாரமாயிருக்கலாமெனச் சில ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளனர். ஹைனேகெல்டேன், வெயர்சேவிஸ் ஆகிய இரு அறிஞர்கள் ஜுகர் கலாச்சாரமே, ஆரியருடையது என்பதைப் பொதுவாக ஏற்றுக்கொள்ளலாம். ஜுகர் கலாச்சாரம் ஆரியருடையது என்ற கருத்து வலுப்பெறுகிறது. கலாநிதி புசல்கார், கலாநிதி ரி. என். ராமச்சந்திரன் முதலியோர் ஹரப்பா கலாச்சாரம், ஆரியருடையதென்பர். கங்கை ஆற்றங்கரையிலுள்ள ஹஸ்தினாபுரத்தில் நடத்திய அகழ்வாய்வின் விளைவாகக் கங்கைக் சமவெளியிலே சாதாரண மைபூசிய சாம்பல் நிற மட்பாண்டங்கள் (Pயiவெநன புசநல றயசந) பலவற்றைத் திரு. பி. பி. லால் கண்டுபிடித்துள்ளார். இவை கி;. மு. இரண்டாவது ஆயிரம் காலத்தன. இவற்றைச் சமகாலத்திய மேற்காசிய. கிழக்கு ஐரோப்பியத் தொல்லியற் சின்னங்களுடன் ஒப்பிட்டு இவர் ஆராய்ந்துள்ளார். இவை போன்றவை கிரிஸ், இரானிலுள்ள ஷாரேப் ஆகிய இடங்களிலும், சில மாற்றங்களுடன் உர்மியா ஏரிக்குத் தெற்கேயும். கிழக்கே இந்தியாவின் மேற்கு எல்லையிலே, சீஸ்ரனிலும் காணப்படுகின்றன. இச்சின்னங்கள் இவ்வாறு கிரீஸ் தொடக்கம் சீஸ்ரன் வரை இந்தியாவுக்கு வெளியேயும் காணப்படுகின்றன. இதே காலப்பகுதியிலே கி. மு. 1360 ஆண்டளவைச் சேர்ந்த போகஸ்கோய்க் சாசனங்களும், மேற்காசியாவில் ஆரியரின் நடமாட்டங்களைக் காட்டுவன. எனவே, மேற் குறி;ப்பிட்ட சின்னங்கள் பொதுவாக ஆரியரின் புலப்பெயர்ச்சி, நடமாட்டங்கள் ஆகியவற்றைக் காட்டுவன. ஏற்கனவே குறிப்பிட்ட மைபூசிய சாம்பல்நிற மட்பாண்ட கலாச்சாரத்திற்கு முன் கங்கைச் சமவெளியிலே நிலவிய வெண்கலக் கருவிகளின் கலாச்சாரத்திலே (சிவப்புநிறம் நீரால் கழுவப்பட்டு மங்கி) மஞ்சள் நிறமட்பாண்டங்களும் இடம் பெற்றிருந்தன. வெண்கலக்கருவிகளிலே கோடரி, ஈட்டி, வாள், மனிதவடிவம் போன்ற கருவி முதலியனவும் அடங்கும். மேற்குறிப்பிட்ட பல்வேறு ஆய்வாளரின் கருத்துக்களிலே திரு. பி. லால் என்பவரின் கருத்தே பொருத்தமானதாகத் தெரிகின்றது. ஹரப்பா கலாச்சாரம் ஆரியருக்கு முற்பட்டது. ஆனால் இதனை ஆரியர்தான் அழித்தனர் என்பதும் அறிஞரின் ஒருமுகமான முடிவன்று.

இந்தியாவிற்கு ஆரியர் படிப்படியாகவே, வட மேற்கு எல்லைப்புறக்கணவாய்கள் ஆற்றோரங்கள் மூலமாக வரலாயினர். இவற்றுள். கிருமு, (குரம்), கோமதி (கோமல்), குபா (கபூல்), சுவாஸ்து (சுவாத்) முதலியன இருக்குவேதத்திலே குறிப்பிடப்படுகின்றன. ஆரியரின் இந்தியப் புலப்பெயர்ச்சி பல நூற்றாண்டுகளாக நடைபெற்றது எனலாம். இது குறித்துப் பேராசிரியர் ரி. பறோ பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இந்தோ - ஆரியரின் புலப்பெயர்ச்சி இந்தியாவில் ஒரே இயக்கமாக அன்றிப் பற்பல கட்டங்களாக ஏற்பட்டதற்கு மொழியியற் சான்றும் காணப்படுகிறது. வடமேற்கு இந்தியாவிலே நிலவிய வேதகால மொழிக்கும் மத்திய தேசத்திலே நிலவிய பிற்பட்ட காலமொழிக்குமிடையிலே கிளைமொழிச்சார்பான வேறுபாடுகள் பல உள்ளன. வேதமொழியிலே ர், ல். வேறுபாடுபெருமளவு பேணப்பட்டுள்ளது. இஃது ஒரு முக்கியமான வேறுபாடாகும். வேத மொழியிலுள்ள முக்கியமான வேறுபாடாகும். வேத மொழியிலுள்ள இவ்வியல்பு இரானிய மொழிக்குமுள்ள தனியியல்பாகும். மேற்காசியாவிலுள்ள ஆரியமொழிகளிலும் வின்னிய உக்ரிய மொழிகளிலுள்ள ஆரியச் சொற்கள் சிலவற்றிலும் இவ்வியல்பு காணப்படுகின்றது. ஆரியரின் புலப்பெயர்ச்சி திட்டவட்டமான தனியான செயலன்று. பல ஜனக்குழுக்களுடன் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றது. இவ்வாறு வந்த மக்கள் ஒருவேளை ஒரே இனம் ஒரே மொழியினைச் சேர்ந்தவராயிருந்திலர்.

மேலும், இந்தியாவிற்குவந்த ஆரியர் வருகைப்பற்றிப் பேராசிரியர் சுநீதிகுமார் சட்டர்ஜி குறிப்பிட்டுள்ள கருத்துக்களும் மனம் கொள்ளத்தக்கன. 'இரானிலிருந்து இந்தியாவிற்கு ஆரிய ஜனக்குழுக்கள் படிப்படியாகவே புலம்பெயர்ந்தனர். இப்புலப்பெயர்ச்சி பல தலைமுறைகளாக நடைபெற்றிருந்திருப்பன. இப்புலப்பெயர்ச்சிபற்றி இன்று கிடைத்துள்ள வேத இலக்கியத்திலே குறிப்பு எதுவுமில்லை. ஏனெனில் அவர்கள் தாம் புதிய இடத்திற்குப் புலம்பெயர்ந்தமை பற்றிய நினைவு கொண்டிருந்திலர். பர்சு, மத முதலிய இரானிய ஜனக்குழுக்களோடு பல நூற்றாண்டுகள் வாழ்ந்தனர். இரானிய மேட்டு நிலம் அவர்களின் புலப்பெயர்ச்சியின் போது தங்குமிடமாக அன்றித்தாயகமாகவே விளங்கியது. அங்கு அவர்கள் இந்தோ - இரானிய கலாச்சாரமரபுகள் பலவற்றை உருவாக்கினர். இவற்றின் தாக்கம் மெசொப்பொத்தேமியாவிலே நன்கு காணப்படுகின்றது. அவெஸ்தா, இருக்குவேதம் ஆகியவை இப்பொதுவான மரபுகளைக் கொண்டவை"

வரலாற்றுக்காலத்தில் இந்தியாவில் இஸ்லாமியர் வருகையும் ஆதிக்கமேற்படுத்தலும் பல நூற்றாண்டுகளின் பின்னரே வெற்றிகரமாக முடிந்தன. எனவே ஆரியரின் புலப்பெயர்ச்சியும் இவ்வாறே நெடுங்காலப் பகுதியிலே நடைபெற்றிருக்கலாம். இந்தியாவிற்கு வந்த ஆரியர் நீண்டகாலமாக ஆரியரல்லாத மக்களுடன் போர் செய்தே தமது செல்வாக்கினை நிலைநாட்டினர்.

"ஆரியர் கி. மு. 2000 அளவில் இந்தியாவை நோக்கி வந்திருப்பர். கி. மு. 1400 - க்குப்பின் வந்திரார். கி.மு. 1500 அளவிலே வந்திருப்பர். ஆனால் கி.மு 1800க்குமுன் வந்திரார்" எனப் பேராசிரியர் ஏ. பி. கீத் ஆரியரின் இந்திய வருகைபற்றிய காலத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆரியர் கி. மு. 1500 அளவிலே வந்திருப்பர் என மராட்டிமர் வீலர் கருதுவர். மேலும் "ஆரியர் கி. மு. 1700 - 1400க்கு மிடையில் இந்தியாவிற்கு வந்தனர்" எனவும், "இருக்குவேதப்பாடல்கள் கிமு 1200 - 1000க்கு மிடையில் இயற்றப்பட்டன எனவும் பேராசிரியர் ரி. பறோ கூறியுள்ளார். இவர்கள் இந்தியாவிற்கு கி. மு. 1750 - 1300 வரையுள்ள காலப்பகுதியிலே வந்திருப்பர் என டி. எச் கோர்டன் எனும் ஆய்வாளர் கருதுவர். ஹைனேகெல்டேர்ன்;;;;;;;;, வெயர்சேவிஸ் ஆகியோர் இவர்கள் கி. மு. 1200 - 1000 வரையில் வந்தனர் என்பர். இவ்விரு ஆய்வாளர்களுடைய முடிபுகளுக்கான தொல்லியற் சின்னங்களையும் பிறவற்றையும் இந்தியாவில் அண்மையில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட நவ்டதோலி (மத்திய இந்தியாவில்) ராஜஸ்தான், மத்திய பிரசேதம், மஹாராஷ்டிரம், ஆந்திரதேசம் ஆகிய இடங்களிலே கிடைத்துள்ள தொல்லியற் சின்னங்களுடன் நன்கு ஆராய்ந்து பேராசிரியர் எச். டி. சங்காலியா மேற்கு இந்தியா மேற்காசியத் தொடர்புகளுக்கான காலம் கி. மு. 1700 - 1500 வரை யென்பர். சேர்லியனாட் வூலி எனும் தொல்லியல் ஆய்வாளர் ஆரியர் கி. மு. 1500 அளவில் இந்தியாவிற்கு வந்தனர் என்பர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 24. இந்திரனும் வருணனும் சாட்சியாக..

மேற்கேயிருந்து வெள்ளைத்தோலும் பொன்னிற முடியும் நீலக்கண்களும் கொண்ட ஆரிய இனத்தவர் குதிரை மேலேறியமர்ந்து இந்தியாவின் கறுப்பின மக்களை அடிமை கொண்டார்கள். மூன்று நூற்றாண்டுகளாக காலனியம் கட்டமைத்து தந்த  சித்திரம் இது.

ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டின் மற்றொரு முக்கிய பிரச்னை மித்தானி (Mitanni) எனப்படும் மக்கள். மித்தானிகள் கிமு 1500 களில் மெசபடோமியாவுக்கு வடக்கே ஒரு வலிமையான சாம்ராஜ்ஜியமாக திகழ்ந்தவர்கள் ஆவர். இந்த மிட்டானி சாம்ராஜ்ஜியம் அதன் வலிமையின் உச்சத்தில் –அதாவது கிமு 1400களில்- இன்றைய துருக்கியின் தெற்கு பிரதேசத்தில் தொடங்கி வடக்கு ஈராக் வரை திகழ்ந்தது. கிமு 17 ஆம் நூற்றாண்டில் இந்த சாம்ராஜ்ஜியம் நிறுவப்பட்டிருக்க வேண்டுமென சரித்திர ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இவர்களுக்கும் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டுக்கும் அதைவிட முக்கியமாக வேதத்துக்கு என்ன தொடர்பு?


 

மித்தானி மன்னர்களில் ஒருவன் மதிவாஸா (மதிவாசன்?) என்பவன். இவனது சகோதரனின் பெயர் துஷ்ரதன். மதிவாஸா அரியணை ஏறிய போது குழப்பங்கள் ஏற்பட்டன. வாரிசு பிரச்சனைகள். ஷுதர்ணன் என்பவன் இவனைக் கொன்று அரியணையை கைப்பற்ற முயற்சி செய்தான். எனவே மதிவாஸா அப்போது மிகவும் வலிமையாக இருந்தவனும் எகிப்திய பேரரசின் விரிவாதிக்கத்தையே தடுத்து நிறுத்தியவனுமான (ஒன்றாம்) ஸுப்பிலுலியுமா என்கிற ஹிட்டைட் குல மன்னனுடன் ஒரு ஒப்பந்தமும் செய்து, அவன் மகளை மணந்து மண உறவும் ஏற்படுத்திக் கொண்டான்.

இந்த ஒப்பந்தம், மித்தானிகளின் குதிரை பயிற்சி ஏடுகள் ஆகியவை நமக்கு கிட்டியுள்ளன. இந்த பழங்கால ஒப்பந்தத்தில் வேதகால தெய்வங்கள் சொல்லப்படுகின்றன. கிமு 1380 இல் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தம் அது. இந்திரன், வருணன், மித்திரன் மற்றும் இரு நாசத்தியர் (அஸ்வின்கள்) ஆகிய தெய்வங்களை அந்த ஒப்பந்தம் சொல்கிறது. இந்த தெய்வங்கள் அனைத்துமே ரிக்வேதத்தில் ஒப்பந்தங்களில்ன் காவலர்களாக கருதப்படுபவை ஆகும் (ரிக். 10.125.1)

ஆரியர்கள் மேற்கிலிருந்து வந்த போது இங்கு பரவிய ஒரு கிளை என்பதற்கு ஆதாரமாக இதை எடுத்துக் கொள்ள முடியுமா? அதுதான் உடனடியாக ஆரிய படையெடுப்பாளர்கள் கொள்ளும் நிலைபாடு. ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. ஆரியர்கள் மேற்கிலிருந்து கிழக்காக வந்தவர்கள் என வைத்துக் கொள்வோம். என்றால் பாரசிகத்தின் ஜெராதுஷ்டிர தொன்மங்களில்  வருணன் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. மித்திரன் மட்டுமே உண்டு. வருணன் முழுக்க முழுக்க வேத இலக்கியத்தின் தெய்வம்.

ப்ரெண்ட்ஜெஸ் எனும் ஆய்வாளர் மயில் உருவத்தாக்கம், மயில் நடனம் ஆகியவை குறித்து இந்த ஒப்பந்தம் பேசுவதைச் சுட்டிக்காட்டி இது இந்திய தாக்கம் கொண்டதாக இருக்கவே வாய்ப்பு உண்டு என்கிறார். இந்தியாவிலிருந்து சுமேரியா சென்று சுமேரியாவிலிருந்து மத்திய ஆசியா சென்று இந்த மயில் உருவத்தாக்கம் மித்தானி ஒப்பந்தங்களில் வந்திருக்கலாம் என்று ஆரிய படையெடுப்பாளர்கள் இதற்கு பதில் சொல்கின்றனர்.

இந்த வேத தெய்வங்கள் எல்லாம் மித்தானி உடன்படிக்கை ஆவணத்தில் ஒருவித மெல்லிய நினைவாக ஊடோடுகின்றன. பெல்ஜிய இந்தியவியலாளர் கொயன்ராட் எல்ஸ்ட் கூறுகிறார்:

“மித்தானிகளில் வேத தெய்வங்கள் ஒரு பழைய ஞாபகமாக விளங்குகின்றனர். அவர்களது தெய்வங்களின் பெரும் பட்டியலில் நான்கு தெய்வங்களே வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள்….அவர்களது மொழி முதிர்ந்த இந்தோ-ஆரிய மொழி என வகைப்படுத்தப்படும் தன்மையில் அமைகிறதேயன்றி  தொல்-இந்தோ-ஈரானியம் என அழைக்கப்பட முடியாதது.”

ஆரிய படையெடுப்பு வாதத்தினை நிராகரித்து இந்த விஷயங்களை விளக்க முற்படுவோம் என்றால் பல சுவாரசியமான சாத்தியங்களை நாம் ஆராய முடியும். உதாரணமாக, கிமு 1500-1200 களில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதற்கு பதிலாக கிமு 1700-1600 களிலேயே வேதபண்பாடு இந்தியாவில் நன்கு தழைத்து அதிலிருந்து ஒரு கிளை மேற்கு நோக்கி நகர்ந்திருக்கிறது என்பதற்கு மித்தானி ஒரு ஆதாரமாக அமையக் கூடும் என்பதனை கொயன்ராட் எல்ஸ்ட் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவிலிருந்து கிமு இராண்டாயிரம் ஆண்டுகள் தொடங்கி பல காலமாக, இந்தியாவில் உருவாகிய வேத தொன்மங்கள், ஐதீகங்கள் மற்றும் சடங்குகள் மெல்ல மெல்ல வெளியே சென்றிருக்கின்றன. அதே விதமாக வெளித்தாக்கங்களும் இங்கு வந்திருக்கலாம். இவை எப்படிச் சென்றன? வர்த்தகரகள், சிறு படைக்குழுக்கள் போன்றவர்களால் இருக்கலாம். எதுவானாலும் வேத சிந்தனைகள் மற்றும் தொன்மங்களின் தாக்கம் நிச்சயமாக இந்திய எல்லைக்கு வெளியே மிகவும் பழமையான காலங்களிலேயே சென்றிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து இல.தமிழ்ச்செல்விஞானப்பிரகாசம் ஈரோடு.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard