New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிவஞானபோதம் -தமிழ் & வடமொழி கலகம்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சிவஞானபோதம் -தமிழ் & வடமொழி கலகம்
Permalink  
 


Thillai Karthikeyasivam SivamJataayu B'luru மற்றும் 7 பேருடன் இருக்கிறார்.

#சிவஞானபோதம் -#தமிழ் #வடமொழி #கலகம்

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது சைவசமயத்தை கடந்த100 ஆண்டுகளில் #திராவிடமிஷனரிகள் எந்தளவிற்க்கு மறைமுகமாக ஆக்ரமித்துள்ளனர் என்பதை ஓரளவு வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை உள்ளது .

பொதுவாக சைவசமயத்தில் எழுந்த இக்கலகம் 20 நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுமாராக 1901 க்கு பின் ஏற்பட்டதாக கொள்ளலாம்.

சைவர்களின் மொழியாக தமிழ் வடமொழி இரண்டுமே சமமாக பாவிக்கப்பட்டது அதுவரை. ஆனால் #கால்டுவெல் மிஷனரிகளின் வழிதோன்றல் சகவாசத்தாலும், 1916 ல் ஏற்பட்ட பிராமணர் -பிராமணர் அல்லாதோர் பிரிவினை தாக்கத்தாலும், #தனிதமிழ் இயக்க மாயையிலாலும் சைவசமயத்தில் எழுந்த குழப்பமே இது.அதுவரை சைவர்கள் வடமொழி தங்கள் மொழி என்றே உரிமையோடு இருந்தார்கள்.
பிராமணர் தவிர்த்த பல தமிழர்கள் வடமொழி வல்லுனர்களாக விளங்கினார்கள்.ஆனால் இக்காலகட்டத்திற்க்கு பின் வடமொழி என்பது வடக்கில் இருந்து வந்த ஒரு அந்நிய மொழி என்ற பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த பிரச்சாரம் தமிழகத்தில் இருந்த சைவசமயத்தாரையும் பாதித்தது.

அந்நிலையில் #சைவசித்தாந்தம் தமிழர் நெறி என்று நிறுவ பிரயத்தனப்பட்டனர்.அவ்வாறு நிறுவ முயலும் பொழுது, அவர்களுக்கு வடமொழி ஆகமத்தின் தழுவல் மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் என்ற முன்னோர் வாக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது. அதனை மாற்றி வாய் பந்தல் பிரச்சாரத்தால் செய்ய முனைந்ததே தமிழ் சிவஞானபோதம் என்பது.சிவஞானபோதம் மூலம் தமிழ் என்றால்தான் அவர் தமிழன் சான்றிதழ்க்குரியவர் என்ற நிலை கொண்டுவரப்பட்டது.

ஸ்ரீ மெய்கண்டார் காலத்திற்க்கு முன்பு சைவசித்தாந்தம் என்ற பதம் பல இடங்களில் வருகின்றது.அவை,

1)திருக்கயிலையில் ஆகமங்களை உபதேசம் பெற்று தென்திசைநோக்கி வந்து திருவாவடுதுறையில் யோகநிலையில் அருளிய #திருமந்திரத்தில் சைவசித்தாந்தம் என்ற சொல் வருகின்றது.

2)கி.பி. 7ம் நூற்றாண்டை சேர்ந்த காஞ்சி கைலாச நாதர் கோயிலை எழுப்பிய, #ராஜசிம்மபல்லவமன்னன் அக்கோயில் கல்வெட்டில் தன்னை #சைவசித்தாந்தமார்க்கஹ அதாவது சைவசித்தாந்த வழிநடப்பவன் என்று அறிவித்துள்ளான்.அதே கல்வெட்டில் தன்னை ஆகமப் பிரியன் என்றும் கூறியுள்ளதும் இங்கு சிந்திக்கத்தக்கது.

3) மூன்றாம் குலோத்து சோழனின் ராஜகுரு ஸ்ரீ ஈஸ்வர சிவாச்சாரியார் #சித்தாந்தரத்னாகரம் என்ற நூலை எழுதியுள்ளார்.இவரே #திருபுவனம் கோயிலை #கும்பாபிஷேகம் செய்துவைத்தவர்.

4)வடநாட்டு ஆகம மடங்களில் ஒன்றாகிய #கோளகி மடத்தின் கிளை ஆகம மடம் திருநெல்வேலி அருகே #திருவாலீஸ்வரம் என்ற இடத்தில் தோன்றி நடைபெற்றது.இம்மடத்தில் தோன்றிய #ஞானாமிர்தம் என்ற நூலே #முதல் முழுமையான #தமிழில் தோன்றிய சைவசித்தாந்த நூல். இதன் ஆசிரியர் ஸ்ரீ
#வாகிசமுனிவர் .இந்நூலின் ஆசிரியர் பாயிரத்தில் #ஆகமத்தின் வழியாக இந்நூலை ஆக்கியதாக எடுத்து இயம்புகின்றார்.

"ஆகமத்தின் அருளின் கோலத்து,
ஆசிரியமலன் பாத பங்கயப்....என்று தொடங்குகின்றது.

5)#அகோரசிவாச்சாரியார் தமது ஆகமபத்ததிகளில் பல இடங்களில் சித்தாந்த தத்துவங்களை எடுத்து இயம்புகின்றார்.

6)திருமுறைகளில் சித்தாந்த கருத்துகள் பல இடங்களில் வந்துள்ளன.

ஆக ஸ்ரீ மெய்கண்டார் காலம் முன்பே இங்கு ஆகம வழி சைவசித்தாந்த தத்துவம் பரவலாக இருந்துள்ளது.

மேலும் சித்தாந்த நூல்கள் பதிநான்கு மற்றும் அவற்றிற்க்கு பின் வந்த பண்டார சாத்திர நூல்கள், #சைவசமயநெறி#தத்துவபிரகாசம்#தருமோத்திரம் என்று வந்த சைவநூல்கள், அனைத்தும் தங்களின் நூல்களை ஆகமத்தின் வழிநூல்களாகவே கூறியுள்ளார்கள்.

ஆக மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் மூலம் #சைவசித்தாந்தம் என்பது #ஆகமத்தின் வழி நெறியாகும். ஆதாவது வேதத்தின் அந்தம் வேதாந்தம் என்பது போல் ஆகமத்தின் அந்தம் #ஆகமாந்தம் .அந்த ஆகமாந்தமே சைவசித்தாந்தம் என்று உரைக்கப்படுகின்றது.

ஆகமத்தின் #ஞானபாதம் சைவசித்தாந்தம்.
சிவாகமங்களே சித்தாந்தமாகும் என்பது ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியார் வாக்கு.

சைவசித்தாந்தம் காஷ்மீர் முதல் குமரி வரை ஆகமங்கள் எங்கெங்கு வலுப்பெறறு் இருந்த இடங்களில் எல்லாம் பரவி இருந்துள்ளது.தத்துவங்களில் சிற்சில மாறுபாடுகள் இருந்தாலும், காஷ்மீர சித்தாந்தம், அஷ்ட பிரகரணம் போன்றவை சித்தாந்த தத்துவங்களையே எடுத்து இயம்பிகின்றது.எனவே சைவசித்தாந்தத்திற்க்கு அடிப்படை ஆகமமே அன்றி மொழியோ, மாநிலமோ, பிரதேசமோ அல்ல.

அவ்வகையில் சைவசித்தாந்தம் தமிழர் நெறி என்பது,
தமிழ் சைவர், சித்தாந்த தமிழர் என்று வார்த்தைகள் எல்லாம் கடந்த #நூறாண்டுகளில் எழுந்த உணர்ச்சியூட்டும் போலி உரைகள்.

சைவசித்தாந்தி என்று இங்கு முதலில் கூறிக்கொள்ளவேண்டும் என்றால் ராஜசிம்ம பல்லவனையே கூறவேண்டும்.ஆனால் பல்லவர்கள் வந்தேறிகள் என்பதே சிந்தாந்த தமிழர் என்ற பட்டம் கொண்டவர்களின் கொள்கை. எனவே சைவசித்தாந்தத்தின் அடிநாதம் சிவாகமமே.

ஆக ஸ்ரீ மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம், 28 ஆகமங்களில் ஒன்றான ரௌரவ ஆகமத்தின் பாசவிமோசன படத்தில் உள்ள சூத்திரங்களின் தழுவலே என்பது சைவசமய அருளாளர்களின் வாக்கு கொள்கை.

சிவஞானபோதத்திற்க்கு தமிழில் அழகிய மாபாடியம் பாஷ்யம் செய்தருளிய ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகளும், ஆகமத்தின் வழியே மெய்கண்டாரின் சிவஞானபோதம் என்று தமது பாஷ்யத்தில் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.இவ்வாறு சிவஞானபோதம் மெழிபெயர்ப்பே ஆகம வழிநூலே என்பது 1905 வரை இருந்துள்ளது.

யாழ்ப்பாணத்து சுவாமிநாத பண்டிதர் பதிப்பித்த சிவஞானபோத மாபாடியம்
மெய்கண்டார் மரபின் சந்தான மரபில் நேரடி மரபாகிய திருவாவடுதுறை ஆதினம் முதல்வர் நமச்சிவாயமூர்த்திகளுக்கு அடுத்த பட்டத்திற்க்கு வந்த (சம காலத்தவர்) ஸ்ரீ அம்பலவாண தேசிகர் செய்த #தசகாரியம் நூலில்,

"முன்னவன் வடநூல் நோக்கி மொழிந்தனன் போதம் மற்றோன்,
பின்னவன் அந்நூல் நோக்கிப் பெயர்த்தனன் சித்தியாக,
அன்னவை இரண்டும் நோக்கி அறைந்தனன் புடைநூல் மற்றோன்,
சொன்னவை மூன்றும் நோக்கித் தொகுத்தனன் அவத்தை பத்தாய் "

என்ற பாடலில் வடமொழி ஆகம சிவஞானபோதத்தை குருவருளால், எம் குருநாதன் மெய்கண்டதேசிகன் செந்தமிழில் பாடினார் என்று கூறுகின்றார்.

இவரிடம் உபதேசம் பெற்ற, உலகுடைய நாயனாரும்,

"முந்துமா கமத்தை யருட்டுறை யண்ணல் மொழிபெயர்த் துரைத்த நூன் முதலா " என்பதும் காண்க.

எனவே அம்பலவாணதேசிகரின் 14 ம் நூற்றாண்டிலும் சரி, சிவஞானசுவாமிகளின் 17 நூற்றாண்டிலும் சரி தமிழ் சிவஞானபோதம் என்ற நவீன குழப்பம் சைவசமயத்தில் இல்லை.அருளாளர்கள் வாக்கே இங்கு முக்கியம். காலத்துக்கும் சூழலுக்கும் தகுந்த கற்பனை கதைகள் அல்ல.

ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகள் தமிழில் மாபாடியம் செய்யவேண்டும் என்பதற்க்கு உந்துதலாக இருந்தது வடமொழி சிவஞானபோத பாஷ்யமே. இதனை செய்தவர் சூரியனார் கோயில் ஆதினத்து சிவாக்கிரயோகிகள்.இவர் சிவஞானசுவாமிகளுக்கு முற்காலத்தவர்.ஆகமத்தில் உள்ள சிவஞானபோத 12 சூத்திரங்களுக்கு இவர் எழுதிய பாஷ்யமே சிவஞானபோத சிவாக்கிர பாஷ்யமாகும்.இந்த பாஷ்யமே பிற்காலத்தில் சிவாஞானசுவாமிகள் தமிழில் பாடியம் செய்யவேண்டும் என்பததற்க்கு உந்துதலாக இருந்தது.ஆக சிவஞானசுவாமிகள் காலத்திற்க்கு முன்பே ஆகமத்தில் உள்ள சிவஞானபோதத்திற்க்கு பாஷ்யமே இருந்துள்ளது என்பதும் சிந்திக்க.

இவ்வாறு நம் தமிழகத்தின் சைவசமயமரபில் தமிழ் வடமொழி வேறுபாடோ, துவஷமோ இன்றி, வேதங்களை ஆகமங்களை அனுசரித்தும் பயின்றும் வந்தார்கள்.அந்நிலையில் ஆகமம், வடமொழி என்பது வெறுக்கத்தக்கதாக இல்லை.இதுவே நமது ஆன்றோர் கொள்கை,

அருளார்கள் வாக்குகள் அனைத்தும் ஆகமத்தின் சராமே தமிழ் சிவஞானபோதம் என்பதில் மாறுபடவில்லை.குழப்பமும் இல்லை. காரணம் அதுவரை வடமொழியும் சைவர்களின் மொழியாகவே இருந்தது.

இந்நிலையில் முன்பே கூறியவாறு கால்டுவெல் மிஷனரி திராவிட வாசனையால் சைவர்கள் சிலர் தங்களை தமிழ் சைவர் என்று அடையாளப்படுத்திக்கொள்ள முயன்றனர்.அந்நிலையில் சைவசமயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர்.சிவஞானபோதம் ஆகமத்தின் சாரம் என்பது இவர்களுக்கு கசந்தது.எனவே சிவஞானபோதம் தமிழர் நெறி என்ற பட்டம் கட்டி பரப்பினர்.

இவ்வாறு இந்தவகை பிரச்சாரம் 1915 க்கு பின்பே வலுப்பெற்றதாக தெரிகின்றது.சிறந்த சைவசிந்தாந்தியாக விளங்கியவர் J.m. நல்லுசாமி பிள்ளை.சிந்தாந்த தீபிகை என்ற இதழ் மூலம் சைவசித்தாந்த தத்துவங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டவர்.நீதிபதி. புலமை நிறைந்தவர். சைவசிந்தாந்த சமாஜம் தோன்ற காரணமானவர்.
அவர்கள், ஸ்ரீ செந்திநாதையரின் சிவஞானபோத வசனாலங்கார தீபத்தின் முன்னுரையில், இவருடைய சித்தாந்த தீபிகை நூலில் வந்த சிவஞானபோத ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றிய பதிப்புரையிலே, முதன் முதலாக பண்டிதர். பி.சுந்தரம் பிள்ளை அவர்களே தமிழ்சிவஞானபோதம் என்ற கருத்தை வெளியிட்டதையும், அதை J.m.n .கண்டித்ததையும் குறிப்பிட்டுள்ளார்

திரு பிள்ளை அவர்கள் இவ்வாறு நவீன கருத்தை வெளியிட காரணம், அக்காலத்தில் மிகுந்திருந்த மெத்தப்படித்த தமிழறிஞர்களிடம் மிஷனரி திராவிட சிந்தனை ஆதிக்கம் + அதன் மீது இருந்த மையல்.

இவ்வாறு சைவசமயத்தில் இத்தகைய வகையில் பல குழப்பம் ஏற்பட திராவிட மிஷனரி வாசம் கொண்ட தமிழறிஞர்கள் முக்கிய காரணம்

இந்நிலையில் Jm.நல்லுசாமி பிள்ளை காலத்தில், ஞானியார் சுவாமிகள் காலத்தில் #சைவசித்தாந்தமகாசமாஜம் என்ற பெயரில் இருந்த அமைப்பு, 1916 க்கு பின் ஏற்ப்பட்ட திராவிட வாசனையால் சைவசித்தாந்த பெருமன்றம் என்று மாறியது போல்,

ஆகம சிவஞானபோதமும் தமிழ் சிவஞானபோதமாகியது.

ஆகம நெறியாக விளங்கிய சைவ சித்தாந்த நெறி, தமிழர் நெறியாகியது.

இருப்பினும் மிஷனரி சைவருக்கு தங்கள் நவீன கொள்கைக்கு தேவார திருமுறை, சித்தாந்த சாத்திர வாக்குகள். இடைஞ்சலாகவே இருந்தது.ஆகவே தோவார வாக்குகளுக்கு புது புது விளக்கம் வியாக்யானம் கொடுக்கவேண்டிய நிலை இவர்களுக்கு வந்தது.

அதில் சிவஞானசுவாமிகள் சிவஞானபோதத்தை வடமொழி மொழிபெயர்ப்பு என்று கூறியதற்க்கு காரணம் அவர் காலத்தில் இருந்த வடமொழி ஆளுமை என்ற போலிகொள்கையை பரப்பி சுவாமிகளை சிறுமைப்படுத்தினர்.
சுவாமிகளின் நூல்களை படித்தவர்கள் முக்கியமாக அவர்களது கண்டன நூல்களை படித்தவர்கள் சோமேசர் முதுமொழி வெண்பாவை படித்தவர்களுக்கு தெரியும். சுவாமிகள் எந்த ஆதிக்கத்திற்க்கும் வளைந்து செல்பவர் அல்ல என்று.ஆனால் போலி கொள்கை உருவாக்கியவர்கள் மிஷனரி ஆதிக்கத்திற்க்கு வளைந்த காரணத்தால் அதுவரை இருந்த சைவமரபை மாற்ற முனைந்ததுபோல் அதாவது தங்களைபோலவே, சிவஞானசுவாமிகளையும் எண்ணிவிட்டார்கள்.

இவ்வாறு மறைமலைகள், காசு பிள்ளை போன்றோர் பெருமன்றத்தை சார்ந்தோர் சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே என்றனர்.மறைமலைகள் கூட 1905 வரை வேத ஆகமங்களை போற்றுபவராகவே இருந்துள்ளார்.இவற்றை போற்றி வேதாந்தமத விசாரதம் என்ற நூலையே 1905 ல் வெளியிட்டார் மறைமலையடிகள்.

ஆக தமிழ் சிவஞானபோதம் என்பதை நிருபிக்கவேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்ட இந்த நவீன தமிழ் சைவர்கள் ,மேற்கண்ட சைவசித்தாம் பெருமன்றம் இதழாகிய சித்தாந்தம் இதழில், மா.பாலசுப்பிரமணிய முதலியார் காலத்தில் 1949 ல் சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே, 120 காரணங்கள் என்ற தொடரை எழுதி பின் புத்தகமாக 1950 வெளியிட்டார்கள்.

பாரம்பர்ய ஆதினங்கள் இக்கொள்கையை ஏற்க்கவில்லை.மரபுரீதியான சைவர்கள் இக்கொள்கையை புறக்கணித்தனர்.இருந்தாலும் 1950 காலம் தமிழ் தமிழ் என்று முழங்கிய காலம். எனவே இந்நூல் சைவசமயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்நூலை அருளாளர்கள் வாக்குகளைக் கொண்டு மறுத்து த.சி.ச.ராமசங்கு பாண்டியன் அவர்கள் தமிழ் சிவஞானபோதம் முதல் நூலா? வழி நூலா? என்ற நூலை விரிவாக எழுதி வெளியிட்டார்கள்.

. ஐயா ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்களும் சிவஞானபோதம் மொழிபெயர்பே என்ற நூலை வெளியிட்டார்கள்.

இவ்வாறு சைவசமய மரபில் மொழி சார்ந்த குழப்பம் ஏற்பட மூலக்காரணம் மிஷனரி திராவிட தாக்கமே ஆகும்.

ஆனால் இது அறியாது சில சைவர்கள் சிவஞானபோதம் தமிழ் மூலமே என்றால்தான் தமிழன் என்ற சான்றிதழ் கிடைக்கும் நிலையில் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இனத்தால் நீ தமிழனா ஆரியனா என்பது முக்கியமல்ல.சிவனை வழிபடும் சைவன் என்றால் வேத ஆகமம் உமக்கு முதல் நூல். அருளாளர்கள் வாக்கே பிரமாணம்.

மேலும், அடியேன் கூட இன்று வடமொழி உபமன்யு பக்தவிலாசத்தின் மொழிபெயர்ப்பே பெரியபுராணம் என்று பல எடுத்துக்காட்டுகள் காண்பித்து புலமை செய்யமுடியும். ஆனால் அது தகுமோ.காரணம் பெரியபுராணம் தமிழ் முதல் என்பது ஆன்றோர்வாக்கும் மற்றும் உண்மை.அதுபோல் புலமையும் வாக்கு சாதுர்யமும் உள்ளவன் 1000 காரணங்கள் காண்பித்தாலும் அருளாளர்கள் வாக்கு என்றும் மாறாது.எனவே சிவஞானபோதம் ரௌரவ ஆகமத்தின் தழுவலே.
@தில்லை கார்த்திகேயசிவம்.
.சிவார்ப்பணம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Thillai Karthikeyasivam SivamHariram Thejus மற்றும் 10 பேருடன் இருக்கிறார்.

#மலைக்கோட்டை #சாம்பசிவம்பிள்ளை

திருச்சிற்றம்பலம்.
பன்னெடுங்காலம் நமது சைவசமயம், நமது அருளாளர்களும், நாயன்மார்களாலும் குருவார்த்தை மாறாமல் மரபுரீதியாக போற்றி பாதுகாத்துவந்தனர்.

எண்ணிலடங்கா அருளாளர்களும் சைவசித்தாந்த ஆசிரியர்களும், பட்டினத்தார், அருணகிரியார்,குமரகுருபரர், தாயுமானவர், தருமை ஆதின குருஞானசம்பந்த பரம்பரை, திருவாவடுதுறை நமச்சிவாய மூர்த்திகள் பரம்பரை, மாதவசிவஞான சுவாமிகள், நாவலர்பெருமான், மகாவித்வான் பிள்ளை அவர்கள். கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாச்சாரியார் என இவர்களை போன்ற பல மஹான்கள் வாழையடி வாழையாக சைவமரபினையும், அதன் பெருமைகளையும், சைவசமய ஒற்றுமைகளையும் பேணிகாத்தும் கடைப்பிடித்தும் வந்தனர்.

நம் பாரததேசத்தில், ஆங்கிலேயே #கிழக்கிந்தியகம்பனியின் நிர்வாகத்தில் இருந்து விலகி நேரடி பிரிட்டிஷ் அரசு உருவான 1857 ம் ஆண்டுமுதல் கிருத்துவ மாதமாற்ற கும்பல் வெகுவேகமாக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர்.அவர்கள் மதமாற்ற பசப்புக்கு எளிதில் வழிகொடுத்த மாநிலம் தமிழகத்தின் தென்பகுதிகள்.தங்கள் மதமாற்றத்துக்கு துணையாக இருக்க வேதங்களை தவறாக அர்த்தம் கற்ப்பித்தும், பிராமணர்களை தவறாக சித்தரித்தும், நமது வழிபாட்டு முறைகளை கேவலமாக எழுதியும் இன, மொழி, வழிபாட்டுரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தனர்.

இதில் #வேதத்தை இகழ்ந்தும், தூற்றியும் பல பிரசுரங்கள் அக்காலத்தில் வெளிவந்தன.இதில் தமிழ் சைவர்கள் சிலரும், சில தமிழ்வாதிகளும் இந்த மாயபிரச்சாரத்தில் சிக்கி வேதத்தை இகழத்தொடங்கினர்.

வேதத்தை இகழத்தொடங்கிய சைவர்களுக்கு தாங்கள் கொண்டாடும் #தேவாரத்தில் உள்ள வேதம், மறை, வேள்வி போன்ற வாக்குகள் நெருடலாக இருந்தன.அதேநேரத்தில் வேதங்களை இகழ்ந்து பிரச்சாரம் செய்தால், மற்றவர்களில் இருந்து வேறுபட்டவராக, ஒரு முற்போக்காளனாக, மதமாற்ற கைகூலிகளால் ஏதேனும் லாபம் அடையலாம் என்ற நோக்கில்,சிந்தித்தனர்.

வேதங்களை புகழ்ந்தால் அது தமிழுக்கு விரோதம் என்பதுபோல் அக்காலம் சித்தரிக்கப்பட்டது.

அந்நிலையில் சில தமிழ் சைவர்கள், தேவாரங்களில் வரும் மறை, வேதம் என்பது வடமொழி இருக்காதி வேதங்களை குறிக்காது என்று கலகத்தை தொடங்கினர்.

1900 ஆம் ஆண்டுகளுக்கு பின் சைவத்தில் தோன்றிய #முதல் #பிரிவினை கலகம் இதுவே.

இந்த கலகத்தை முதலில் ஆரம்பித்தவர் #வேதாசலம் என்ற மறைமலை.இவர் திருமுறையில் வரும் நான்குவேதம் என்பது, தொல்காப்பியம், திருக்குறள், இறையனார்அகப்பொருள் , சிவஞானபோதம் என்ற நான்கை குறிக்கும் என்றார்.

இவர் வாதம் அனைவரையும் சிரிக்கவைத்தது.யாழ்ப்பாண சைவர்கள் இலங்கை வந்து மறைமலைகள் இதை நிறுவவேண்டும் என்று அழைத்தனர்.தேவார காலத்திற்க்கு பின்பு தோன்றிய. சிவஞானபோதம் எவ்வாறு திருமுறைகளில் வரும் மறைகளை குறிக்கும் என்று கேள்வி எழுப்பனர்.ஆனால் மறைமலை தன் போலிபிரச்சாரத்தை தொடர்ந்து செய்துவந்தார்.

இந்நிலையில் , தேவாரங்களில் உள்ள மறை என்பது தமிழ்வேதம் என்று நிறுவ மீண்டும் ஒருவர் வந்தார்.அவர்தான் திருநெல்வேலி
கா.#சுப்பிரமணியம்பிள்ளை என்ற கா.சு.பிள்ளை.

இவர் ஒரு புது யுக்தியை கண்டார்.தேவாரத்தில் வரும் மறை என்பது இது இது என்றால்தானே பிரச்சனை, எனவே தேவாரத்தில் வரும் மறை என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கை குறிக்கும். அவை #கடல்பொங்கிய போது தமிழ் வேதங்கள் எல்லாம் கடலில் கரைந்து காணாமல் போய்விட்டது என்று ஒரே போடு போட்டார்.

மறைமலை போன்று இவை இவை தமிழ்வேதம் என்றால்தானே பிரச்சனை.தமிழ் வேதம் கடலில் கரைந்துவிட்டது என்று கூறிவிட்டால் அப்புறம் என்ன பேச்சுக்கு வேலை.

இவ்வாறு சைவத்திருமுறைகளில் வரும் மறை, வேதம் என்பது தமிழ் வேதங்ககளை குறிக்கும், அவை கடலழிவில் காணாமல் போய்விட்டது என்ற கருத்தினை நிருபிக்கும் வகையில், #திருநான்மறைவிளக்கம் *என்ற நூலை(படம் 1) எழுதி வெளியிட்டு சைவசமயத்தில் முதல் பிரிவினை கலகத்தை தொடங்கினார்.

நமது தமிழகத்தில் சைவம், வைணவம் என்று இருசமயங்கள்.சைவத்தில் நாயன்மார்கள் பாடிய தேவாரம் உள்ளதுபோல், வைணவத்தில் ஆழ்வார்கள் பாடிய தமிழ் பிரபந்தங்கள் உள்ளன.நாயன்மார்களும், ஆழ்வார்களும் முன் பின் என்று சமகாலத்திலேயே வாழ்ந்தனர்.தேவாரத்தில் வரும் மறை என்பது தமிழ் வேதம் என்றால், ஆழ்வார்கள் பிரபந்தத்தில் வரும் மறை என்பதும் தமிழ்வேதமாகத்தான் இருக்கவேண்டும்.ஆனால் வைணவர்கள் ஆரம்பகட்டத்திலேயே தமிழ்வேதம் என்ற போலியை நிராகரித்துவிட்டனர்.ஆழ்வார்கள் பிரபந்தத்தில் வரும் மறை என்பது, வடமொழி இருக்காதி வேதங்களே என்பதில் தெளிவாக #வைணவர்கள் இருந்தனர்.

எனவே தமிழ் சைவத்திற்க்கு ஒரு வேதமும், தமிழ் வைணவத்திற்க்கு ஒரு வேதமும் தமிழகத்தில் இருந்திருக்க முடியாது.எனவே கா.சு.பிள்ளை கூற்று போலியானது.

கா.சு.பிள்ளை இவ்வாறு தமிழ் வேதம் என்ற கலகத்தை ஏற்படுத்தியதைக் கண்டு கலங்கிய மலைக்கோட்டை #சாம்பசிவம் பிள்ளை என்பவர் தனது 80 வயதில், அருளார்களின் வாக்குகளையும், வரலாறுகளையும் ஆதாரமாக்கி சைவமரபு காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கில்,
1926 ஆம் ஆண்டு*"
#திருநான்மறைவிளக்கஆராய்ச்சி*" என்ற 240 பக்கம் கொண்ட நூலை ( படம் 2,3,4) ஒரு ரூபாய்க்கு வெளியிட்டு பெரும் சிவப்புண்ணியத் தொண்டினை செய்தார்.

சிவத்திரு சாம்பசிவபிள்ளை அவர்கள் நூல் வெளியிட்ட பின் மெய்யடியார்கள் அனைவரும் உண்மையை உணர்ந்து சைவசமய போலிபிரச்சாரத்தை தூக்கிஎறிந்தனர்.

சாம்பசிவம் அவர்கள் நூல் சைவசமயத்தில் ஐம்பது ஆண்டுகள் #போலிப்பிரச்சாரத்தை துடைத்து எறிந்தது.

இப்பொழுது சைவசமயத்தில் சிலர் மெய்யடியார்களின், அறியாமையை மூலதனமாக்கி, உணர்வுகளை தூண்டி, தமிழ் வேதம், தமிழ் ஆகமம் என்று பிரச்சாரம் செய்து சைவமரபை சீர்குலைக்கும் செயலை, புகழுக்கும் பொருளுக்கும் ,பிழைப்புக்கும் ஆசைபட்டு செய்துவருகிறார்கள்.

மெய்யடியார்கள் ஒவ்வொருவரும் உண்மையை அறிய *திருநான்மறை விளக்க ஆராய்ச்சி *என்ற நூலை உணர்வோடு படிக்க வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

சிவத்திரு.சாம்பசிவ பிள்ளை திருவடிகள் போற்றி.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேய சிவம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 Thillai Karthikeyasivam Sivam, Hariram Thejus மற்றும் 12 பேருடன் இருக்கிறார்.

திருச்சிற்றம்பலம்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தில் புதியதாக எழுந்த தமிழில் வேதம் என்ற சைவசமய கலக பிரச்சாரத்திற்க்கு, சிவத்திரு. சாம்பசிவ பிள்ளை அவர்கள், #திருநான்மறைவிளக்கஆராய்ச்சி என்ற நூலை எழுதி உண்மையை வெளிப்படுத்தியதுபோல், இலங்கை யாழ்பாணத்தில் இருந்து ஒரு மகான்

*#வேதாகமநிரூபணம் *

என்ற தலைப்பில் இரண்டுபகுதிகளாக சைவசமய உண்மைகளை மெய்யடியார்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் வெளியிட்டார்.அவர்தான்,

#அச்சுவேலி. சிவஸ்ரீ #குமாரசுவாமிகுருக்கள்.

பொதுவாக நாவலர் அவர்கள் சைவப்பயிர் விளைவித்த மண் யாழ்பாணம் என்பதால், இலங்கை குருக்கள் பலர் ஆகமகிரியைகளோடு, ஆகம சித்தாந்த ஞானத்திலும் அதாவது ஞானப்பாதத்திலும் சிறப்புற்று விளங்கினார்கள்.அதில் தலைச்சிறந்தவராக விளங்கியவர் சிவஸ்ரீ .#குமாரசுவாமிகுருக்கள்.

ஆகம நூல்கள், சித்தாந்தநூல்கள் பல எழுதிவெளியிட்டுள்ள இவர் சைவசித்தாந்த சிவாகம ஞானபாநுவாக திகழ்ந்தார்.

இவர் தமிழகத்தில் ஏற்பட்ட மதமாற்ற பிரச்சார வாசனையாலும், திராவிட தாக்குதலாலும், நமது சைவசமயத்தில் ஏற்பட்ட தமிழில் வேதம் , என்ற கலக போலிபிரச்சாரத்தைக் கண்டு, மனம் கலங்கி, மெய்யடியார்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ளும் வகையில், எழுதி வெளியிட்ட நூலே,
*வேதாகம நிரூபணம் *
என்ற நூலாகும்.

பல சைவசமய அற்புத கருத்துக்கள், உண்மை மரபுகள் அனைத்தும் நிரம்பியுள்ள உண்ணத நூல்.

மெய்யடியார்கள் ஒவ்வொருவரும் இந்நூலை படித்து உண்மை சைவசமய தத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

சிவஸ்ரீ. குமாரசுவாமி குருக்கள் திருவடிகள் போற்றி.சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேய சிவம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 Thillai Karthikeyasivam Sivam, Jataayu B'luru மற்றும் 10 பேருடன் இருக்கிறார்.

#சைவசமயம் #வேதக்கலகம்

தமிழகத்தில் சைவசமயம் இன்று மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது.

தமிழ் சமூகத்தை எவ்வாறு பிரிவினைவாதிகள் இனம், மொழி வெறி ஊட்டி சீர்குலைத்துவருகிறார்களோ, அதுபோலவே சைவசமயமும் மொழி வெறி ஊட்டி சீர்குலைக்கப்பட்டுவருகின்றது.

இதற்க்கெல்லாம் இடைவிடாது எதிர்வினை ஆற்றவேண்டிய ஆதினங்கள், சிவாச்சாரியார்கள், மரபு சைவர்கள் அடையாளத்திற்க்கு ஏதாவது செய்துவிட்டு அமைதியாக உள்ளார்கள்.

சைவசமய திருமுறைகளும், அருளாளர்களும் வேதங்களை, ஆகமங்களை, வடமொழிகளை ஒருபோதும் இகழவில்லை. போற்றவேசெய்கின்றது.

இதனை முழு அளவில் இடைவிடாது பிரச்சாரம் செய்யவேண்டிய கடமை பெரிய அளவில் #ஆதினங்களுக்கே உள்ளன.

அடுத்த நிலையில் உள்ள #சிவாச்சாரியார்கள் நகரத்து முச்சந்தி கோயிலும், நான்கு ஹோமம் கிடைத்தால் பிழைப்பு ஓடாதா என்று இருக்கிறார்கள்.

சைவசமயத்தில் நடக்கும் பல தீய பிரச்சாரங்களுக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றுவதில்லை. தாங்கள் இயன்ற அளவில் துண்டு பிரசுரம் மூலம், தங்கள் ஆலயங்களில் சொற்பொழிவு மூலம் பிரச்சாரம் செய்யலாம். ஆனாலும் இல்லை.

அடுத்து #மரபுசைவர்களோ உபதேசம் செய்வதும், குற்றம் குறைக் கூறி ஆதங்கப்படுவதோடு சரி. சைவசமய சீரழிவை தடுக்க எந்த எதிர்வினையும் இவர்களும் ஆக்கபூர்வமாக செய்வதில்லை.

சைவசமய மரபுகளை, அருளாளர்கள் வாக்குகளை சீரழிக்க, தான்தோன்றி கருத்துகளை பரப்ப பலர் ரக்தபீஜன் போன்று தோன்றி பல வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் அந்த பிரச்சாரங்களை தடுக்க, #மரபுசைவர்கள் பக்கம் எத்தகைய ஆக்கபூர்வ செயல்பாடு நடந்துள்ளது என பார்த்தால் ஒன்றுமே இல்லை.கிடையாது.

எல்லாம் கலிகாலம், சுவாமி பார்த்துக்கொள்வார் என்ற கையலாகத தனமான பேச்சுகளே உள்ளன.

சைவசமயத்தில் வேத ஆகமங்களே முதல் நூல். இது அருளாளர்களின் சத்யவாக்கு.

வேதம் என்றால் வடமொழி வேதம்தான். தமிழ் வேதம் கிடையாது. தமிழில் வேதம் இருந்தது என்பது கற்பனையே.

இக்கருத்தை பன்னெடுங்காலம் நமது சைவசமயம், நமது அருளாளர்களும், நாயன்மார்களாலும் குருவார்த்தை மாறாமல் மரபுரீதியாக போற்றி பாதுகாத்துவந்தனர்.

எண்ணிலடங்கா அருளாளர்களும் சைவசித்தாந்த ஆசிரியர்களும், பட்டினத்தார், அருணகிரியார்,குமரகுருபரர், தாயுமானவர், தருமை ஆதின குருஞானசம்பந்த பரம்பரை, திருவாவடுதுறை நமச்சிவாய மூர்த்திகள் பரம்பரை, மாதவசிவஞான சுவாமிகள், நாவலர்பெருமான், மகாவித்வான் பிள்ளை அவர்கள். கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாச்சாரியார் என இவர்களை போன்ற பல மஹான்கள் வாழையடி வாழையாக சைவமரபினையும், அதன் பெருமைகளையும், சைவசமய ஒற்றுமைகளையும் பேணிகாத்தும் கடைப்பிடித்தும் வந்தனர்.

நம் பாரததேசத்தில், ஆங்கிலேயே #கிழக்கிந்தியகம்பனியின் நிர்வாகத்தில் இருந்து விலகி நேரடி பிரிட்டிஷ் அரசு உருவான 1857 ம் ஆண்டுமுதல் கிருத்துவ மாதமாற்ற கும்பல் வெகுவேகமாக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

அவர்கள் மதமாற்ற பசப்புக்கு எளிதில் வழிகொடுத்த மாநிலம் தமிழகத்தின் தென்பகுதிகள்.தங்கள் மதமாற்றத்துக்கு துணையாக இருக்க வேதங்களை தவறாக அர்த்தம் கற்ப்பித்தும், பிராமணர்களை தவறாக சித்தரித்தும், நமது வழிபாட்டு முறைகளை கேவலமாக எழுதியும் இன, மொழி, வழிபாட்டுரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தனர்.

இதில் #வேதத்தை இகழ்ந்தும், தூற்றியும் பல பிரசுரங்கள் அக்காலத்தில் வெளிவந்தன.இதில் தமிழ் சைவர்கள் சிலரும், சில தமிழ்வாதிகளும் இந்த மாயபிரச்சாரத்தில் சிக்கி வேதத்தை #இகழத்தொடங்கினர்.

வேதத்தை இகழத்தொடங்கிய சைவர்களுக்கு தாங்கள் கொண்டாடும் #தேவாரத்தில் உள்ள வேதம், மறை, வேள்வி போன்ற வாக்குகள் நெருடலாக இருந்தன.அதேநேரத்தில் வேதங்களை இகழ்ந்து பிரச்சாரம் செய்தால், மற்றவர்களில் இருந்து வேறுபட்டவராக, ஒரு முற்போக்காளனாக, மதமாற்ற கைகூலிகளால் ஏதேனும் லாபம் அடையலாம் என்ற நோக்கில்,சிந்தித்தனர்.

வேதங்களை புகழ்ந்தால் அது தமிழுக்கு விரோதம் என்பதுபோல் அக்காலம் சித்தரிக்கப்பட்டது.

அந்நிலையில் சில தமிழ் சைவர்கள், தேவாரங்களில் வரும் மறை, வேதம் என்பது வடமொழி இருக்காதி வேதங்களை குறிக்காது என்று கலகத்தை தொடங்கினர்.

1900 ஆம் ஆண்டுகளுக்கு பின் சைவத்தில் தோன்றிய #முதல் #பிரிவினை கலகம் இதுவே.அதுவரை நம் சைவசமயத்தில் இப்படியான கலகமோ பிரிவினைகளோ இல்லை.

இந்த கலகத்தை முதலில் ஆரம்பித்தவர் #வேதாசலம் என்ற மறைமலை.இவர் திருமுறையில் வரும் நான்குவேதம் என்பது, தொல்காப்பியம், திருக்குறள், இறையனார்அகப்பொருள் , சிவஞானபோதம் என்ற நான்கை குறிக்கும் என்றார்.

இவர் வாதம் அனைவரையும் சிரிக்கவைத்தது.யாழ்ப்பாண சைவர்கள் இலங்கை வந்து மறைமலைகள் இதை நிறுவவேண்டும் என்று அழைத்தனர்.தேவார காலத்திற்க்கு பின்பு தோன்றிய. சிவஞானபோதம் எவ்வாறு திருமுறைகளில் வரும் மறைகளை குறிக்கும் என்று கேள்வி எழுப்பனர்.ஆனால் மறைமலை தன் போலிபிரச்சாரத்தை தொடர்ந்து செய்துவந்தார்.

இந்நிலையில் , தேவாரங்களில் உள்ள மறை என்பது தமிழ்வேதம் என்று நிறுவ மீண்டும் ஒருவர் வந்தார்.அவர்தான் திருநெல்வேலி
கா.#சுப்பிரமணியம்பிள்ளை என்ற கா.சு.பிள்ளை.

இவர் ஒரு புது யுக்தியை கண்டார்.தேவாரத்தில் வரும் மறை என்பது இது இது என்றால்தானே பிரச்சனை, எனவே தேவாரத்தில் வரும் மறை என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கை குறிக்கும். அவை #கடல்பொங்கிய போது தமிழ் வேதங்கள் எல்லாம் கடலில் கரைந்து காணாமல் போய்விட்டது என்று ஒரே போடு போட்டார்.

மறைமலை போன்று இவை இவை தமிழ்வேதம் என்றால்தானே பிரச்சனை.தமிழ் வேதம் கடலில் கரைந்துவிட்டது என்று கூறிவிட்டால் அப்புறம் என்ன பேச்சுக்கு வேலை.

இவ்வாறு சைவத்திருமுறைகளில் வரும் மறை, வேதம் என்பது தமிழ் வேதங்ககளை குறிக்கும், அவை கடலழிவில் காணாமல் போய்விட்டது என்ற கருத்தினை நிருபிக்கும் வகையில், #திருநான்மறைவிளக்கம் *என்ற நூலை எழுதி வெளியிட்டு சைவசமயத்தில் முதல் பிரிவினை கலகத்தை தொடங்கினார்.

நமது தமிழகத்தில் சைவம், வைணவம் என்று இருசமயங்கள்.

சைவத்தில் நாயன்மார்கள் பாடிய தேவாரம் உள்ளதுபோல், வைணவத்தில் ஆழ்வார்கள் பாடிய தமிழ் பிரபந்தங்கள் உள்ளன.நாயன்மார்களும், ஆழ்வார்களும் முன் பின் என்று சமகாலத்திலேயே வாழ்ந்தனர்.தேவாரத்தில் வரும் மறை என்பது தமிழ் வேதம் என்றால், ஆழ்வார்கள் பிரபந்தத்தில் வரும் மறை என்பதும் தமிழ்வேதமாகத்தான் இருக்கவேண்டும்.

ஆனால் #வைணவர்கள் ஆரம்பகட்டத்திலேயே தமிழ்வேதம் என்ற போலியை நிராகரித்துவிட்டனர்.ஆழ்வார்கள் பிரபந்தத்தில் வரும் மறை என்பது, வடமொழி இருக்காதி வேதங்களே என்பதில் தெளிவாக #வைணவர்கள் இருந்தனர்.

எனவே தமிழ் சைவத்திற்க்கு ஒரு வேதமும், தமிழ் வைணவத்திற்க்கு ஒரு வேதமும் தமிழகத்தில் இருந்திருக்க முடியாது.எனவே கா.சு.பிள்ளை கூற்று போலியானது.

கா.சு.பிள்ளை இவ்வாறு தமிழ் வேதம் என்ற கலகத்தை ஏற்படுத்தியதைக் கண்டு கலங்கிய மலைக்கோட்டை #சாம்பசிவம் பிள்ளை என்பவர் தனது 80 வயதில், அருளார்களின் வாக்குகளையும், வரலாறுகளையும் ஆதாரமாக்கி சைவமரபு காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கில்,
1926 ஆம் ஆண்டு*"
#திருநான்மறைவிளக்கஆராய்ச்சி*" என்ற 240 பக்கம் கொண்ட நூலை ஒரு ரூபாய்க்கு வெளியிட்டு பெரும் சிவப்புண்ணியத் தொண்டினை செய்தார்.

சிவத்திரு சாம்பசிவபிள்ளை அவர்கள் நூல் வெளியிட்ட பின் மெய்யடியார்கள் அனைவரும் உண்மையை உணர்ந்து சைவசமய போலிபிரச்சாரத்தை தூக்கிஎறிந்தனர்.

சாம்பசிவம் அவர்கள் நூல் சைவசமயத்தில் ஐம்பது ஆண்டுகள் #போலிப்பிரச்சாரத்தை துடைத்து எறிந்தது.

அதன்பிறகு 1936 ல் அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமி குருக்கள் அவர்கள் #வேதாகமநிரூபணம் என்ற நூலை எழுதி வெளியிட்டு வேதம் பற்றிய போலி பிரச்சாரங்களை துடைத்தெறிந்தார் .

1940 வாக்கில் ஸ்ரீ ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் பல நூல்களை வெளிட்டு சைவசமயத்தில் மீஷனரி வாரிசுகள் ஏற்படுத்திய பல குழப்பங்களை நீக்கினார்.

இவர்கள் தொண்டால் சைவசமயம் பிழைத்தது.ஆனால் 1967 க்கு பிறகு திராவிட ஆட்சிகள் ஆரம்பித்த பின் சிறு சிறுக சைவசமயத்தில் பழைய கலகம் ஏற்படுத்த சில புல்லுருவிகள் தோன்றினார்கள் .

அவர்கள் சிறுசிறுக வளர்ந்து 2000 ம் ஆண்டுக்குப்பின் சைவசமயத்தில் பற்றுள்ள மெய்யடியார்களின், அறியாமையை மூலதனமாக்கி, உணர்வுகளை தூண்டி, தமிழ் வேதம், தமிழ் ஆகமம் என்று பிரச்சாரம் செய்து சைவமரபை சீர்குலைக்கும் செயலை, புகழுக்கும் பொருளுக்கும் ,பிழைப்புக்கும் ஆசைபட்டு செய்துவருகிறார்கள்.

முக்கியமாக வேதம் பற்றிய பல பொய்யுரைகளை பரப்பிவருகிறார்கள்.ஆனால் இதற்க்கான எதிர்வினை கடந்த 30ஆண்டுகளாக மடங்களோ, சிவாச்சாரியர்களோ ,மரபுச்சைவர்களோ எதுவுமே ஆற்றவில்லை.

ஸ்ரீ திருப்பனந்தாள் ஆதினம் மட்டும் அவர்கள் தனது தள்ளாத 80 வயதில் 2006 ஆம் ஆண்டு, #வேதநெறிதழைத்தோங்க மிகுசைவத்துறைவிளங்க.
#மெய்யும்பொய்யும் என இருநூல்களை எழுதி வெளியிட்டார்.

இவர்கள் இந்நூல்களை வெளியிட்டதால் ஒரு மடாதிபதி என்றும் பாராமல் பலர் இகழ்ந்தனர். பல சங்கடங்களை சந்திக்கவேண்டியதாயிற்று.

சைவசமயத்தில் வேதம் பற்றிய இகழ்ச்சிக்கு இடமே இல்லை. தேவாரங்களில் வரிக்கு வரி வேதங்கள் போற்றப்பட்டுள்ளன.தமிழில் வேதம் என்பது பொய்பிரச்சாரம்.கற்பனை கட்டுக்கதை.

இப்படியான நிலையில் வேதங்களை இகழ்வது என்பது தகாது. அதிலும் #சைவவேடத்தில் தேவாரதிருமுறைகளை தங்கள் உயிர் என போற்றுவதாகக் கூறிக்கொண்டு, அதே தேவார வாக்குகளுக்கு மாறாக வேதங்களை இகழ்வது என்பது எத்தகைய கொடூர புத்தி.எத்தகைய சைவசமய துரோகம்.நரகத்திற்க்கும் மேலான தண்டனை அல்லவா கிட்டும்.

வழிபாடு சார்ந்து மனிதர்களிடம் கருத்து மாறுபடலாம். ஆனால் அருளாளர்களில் வாக்குகளுக்கு பொய்யான அர்த்தம் கற்பித்து பரப்புவது என்பது பஞ்சமாபாதகத்திலும் மேலான குருதுரோகம்.

சைவவேடம்கொண்டு, சைவசமய அருளார்கள் வாக்குகளுக்கு மாறாக பிரச்சாரம் செய்யும் இவர்களை சிவபெருமான்தான் மன்னிப்பாரா?

தேவார ஆசிரியர்கள்தான் இவர்களுக்கு நற்கதி வழங்குவார்களா?

இதையெல்லாம் கண்டும் எதிர்வினை ஆற்றாது கையலாகதனமாய் இருக்கும் என்னைபோன்ற சைவர்களுக்குத்தான் இறைவன் அருளவாரா?
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேய சிவம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சைவக் #கற்பும்#மரபும் போற்றும் #சங்கரன்கோயில் #சைவசித்தாந்தசபை.

தென்பாண்டி நாட்டின் புகழ்பெற்ற திருத்தலங்களுள் ஒன்று சங்கரன்கோயில். இங்கு தோன்றிய சங்கரன் கோயில் சைவசித்தாந்த சபை சைவ வானில் சூரியனாக திகழும் சைவநெறி போற்றும் சபையாகும்.

ஹரிஹர புக்கர் மன்னர்களுக்கு ஒரு வித்யாரண்யர் குரு கிடைத்ததன் காரணமாக விஜயநகர சாம்ராஜ்யமும் இந்தசமய மலர்ச்சியும் ஏற்பட்டதுபோல்.,

சங்கரன் கோயில் சைவசிந்தாந்த சபைக்கு அச்சபை மெய்யடியார்களுக்கும் , வித்யாரண்யர் போன்று சிவனருளால் மாணிக்கமாய் கிடைத்த குருநாதர்தான்,

"சித்தாந்த பண்டித பூஷணம் "
சிவஸ்ரீ ஆ.#ஈஸ்வரமூர்த்திப்பிள்ளை ஐயா அவர்கள்.

தனிதமிழ் இயக்கம் மாயையிலும், மிஷனரிகளின் போலி புரட்டு வாதங்களிலும், குழம்பிக்கிடந்த சைவசமய உலகிற்க்கு வரப்பிரசதமாக சைவசமய மறுமலர்ச்சி ஏற்படுத்தும் சபையாக இச்சபையை ஐயா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

ஐயா ஸ்ரீ ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் உருத்திர மேரூரிலிருந்து, இவ்வூர் உயர்நிலை பள்ளிக்கு ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வே சைவசமய மறுமலர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கியது.

பக்குவம் பெற்ற மெய்யடியார்கள் இவ்வூரில் விளங்கிய நிலையில், இவர்கள் ஆலய வளாகத்தில் 8-3-1950 முதல் தொடர்ந்து மூன்று மாதங்கள் சிவஞான சித்தியாரை பாடமாக உபதேசித்தார்கள்.

ஐயா அவர்களின் நுண்பொருள் சித்தாந்த புலமையும், வானுயர் நெறியாம் பழைய வைதிக சைவம் மரபும் அடியார்களுக்கு நன்கு புலப்பட்டது.

ஐயா அவர்கள் பாடம் கூறும் முறையும் சைவநெறியை, மரபை போற்றும்விதமும் அடியார்களின் மனதை நெகிழவைத்தது.

பழைய வைதிகசைவ மரபை, தேவார அருளாளர்களின் உண்மை நெறியை சைவ உலகிற்க்கு எடுத்துக்காட்டும் வண்ணம்,

நந்தன வருஷம் ஆடி மாதம் (4-4-1952) திங்கள் கிழமை அன்று சங்ரன் கோயில் சைவசித்தாந்த சபை தோன்றியது. சபையின் ஸ்தாபகராக ஐயா அவர்களே விளங்கி சபையை வழிநடத்தினார்கள்.

உண்மை அன்பு கொண்ட அடியார்கள் சீடர்களாக அமைந்ததில் ஐயா அவர்கள் சைவசமய உலகின் சக்ரவர்த்தியாகவும், சபை அடியார்கள் சைவமரபு காக்கும் போர் படையாகவும் விளங்கினார்கள்.

அதுவரை #தனிதமிழ்இயக்க வாசனையால்,
#மிஷனரிகொள்கை வாசனையால்,
திராவிட, நாத்திக கோட்பாடு வாசனையால்,

அருளாளர்கள் போற்றிய நமது சைவசமயத்தில்,
பல போலி கொள்கைகளும்,
மரபுகளை வீழ்த்தும் சமாதான உபதேசங்களும் செய்யப்பட்டு #வாய்பந்தல் மூலம் பல குழப்பங்களை சிலர் ஏற்படுத்தினர்.

சைவசமய சிங்கமாக வந்த ஐயா அவர்கள், அருளார்கள் காட்டிய சமயம் "வைதிக சைவ சமயமே " என்பதை சிங்கம் போல் கர்ஜித்து எடுத்துரைத்தார்.

சைவத்தின் முதல் நூல் வேதம், ஆகமமே.

வேதம் என்றால் ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம்.
ஆகமம் காமிகாதி 28 ஆகமங்கள்.இவை வடமொழியில் உள்ளவை.
வடமொழி, தொன்மொழி இரண்டும் சைவத்தின் மொழி.
வடமொழி ஆகமமே கிரியா நெறி.
தேவார திருமுறைகள் பக்தியோடு செய்யப்படும் பாராயண நெறி.
சமயத்தில் மொழி துவேசம் கூடாது, ஏற்படுத்துவோர் நவீன அமணர்கள். அவர்களை புறக்கணிக்கவேண்டும் என்றார்.

கூறியதோடு அல்லாமல் சங்கரன் கோயில் சைவசித்தாந்த சபையை அந்நெறியிலேயே நின்று போற்ற உபதேசித்து வழிகாட்டினார்கள்.

ஐயா அவர்கள் 50 க்கு மேற்ப்பட்ட சிறுபிரசுரங்கள் நூல்கள் இயற்றியுள்ளார்கள்.

திராவிட மஹாபாஷ்யம்,
சைவாலயங்களில் சமஸ்கிருத மந்திரங்களே வேண்டும்,
கற்பென்னுந் திண்மை,
சைவசமயம், சைவ சமயி,
தமிழருச்சனை தகுமா?
நாடும் நவீனரும்,
சைவனே கேள்,
தமிழ் சிவஞானபோதம் மொழிபெயர்ப்பே,

போன்றவை ஐயா அவர்கள் இயற்றிய சில நூல்களாகும். இந்நூல்கள் சைவசமய உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதோடு, மறைக்கப்பட்ட சைவசமயத்தின் மரபுகளை வெளிக்கொணர்வதாக விளங்கியது.

மாயையின் மயக்கத்தில் இருந்து சைவசமயத்தவர்கள் மீண்டனர்.ஓரு சைவசமய புரட்சியை சங்கரன் கோயில் சைவசித்தாந்த சபை நிகழ்த்தியது.

ஐயா அவர்கள் காலத்திற்க்கு பின், அவர்கள் காட்டிய கற்புநிலை மாறாது, சித்தாந்த சைவநன்மணி,
சிவத்திரு .ச.இரத்நவேலன் அவர்கள், மற்றும், சிவத்திரு ஆவுடையப்பன் அவர்கள் தலைமையிலும் இச்சபை சிறப்போடு இயங்கி வருகின்றது.

இன்று வரை காலமாற்றம், சூழ்நிலை, சமூக மாற்றம் என்ற போலி சமாதானங்களை கூறி சைவசமயமரபை சீர்குலைக்காமல் , ஐயா ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் காட்டிய சைவக்கற்போடு மரபை பாதுகாத்து பழைய வைதிகசைவ சமயத்தை போற்றி வருகின்றார்கள் சங்கரன் கோயில் சைவசித்தாந்த சபை மெய்யடியார்கள்.

ஆதினங்களே சைவமரபு, மொழி விசயத்தில் தள்ளாடும் நிலையில், சங்கரன் கோயில் சைவசித்தாந்த சபை வைதிசைவ சமயத்தை போற்றுவதோடு அல்லாமல் கடைப்பிடித்தும் சிறு சிறு நூல்களும், பிரசுரங்களும் இன்று வரை வெளியிட்டு வருகின்றார்கள்.

தகுந்த குரு அமைவதின் உண்மை தாத்பர்யம் இங்கு உணரப்படவேண்டியது.

சரியான நெறியோடு நிற்க்கும் உண்மைகுரு ஒருவர் அமைத்துவிட்டால் எத்தகைய நல் மாற்றத்தையும் ஏற்படுத்தலாம் என்பதற்க்கு இச்சபை ஓர் உதாரணம்.இன்று வரை சங்கரன் கோயில் சைவசித்தாந்தசபை அடியார்கள் ஐயா காட்டிய வழியில் எதன் பொருட்டும் சமரசம் கூறி மீறாமல்,சைவசமய மரபை பேணிவருவதே இதற்க்கு அத்தாட்சியாகும்.

வாழ்க சங்கரன் கோயில் சைவசித்தாந்த சபை,
வளர்க மெய்யடியார்கள் தொண்டு.

ஸ்ரீ ஈஸ்வரமூர்த்திப் பிள்ளை ஐயா அவர்கள் திருவடி போற்றி போற்றி.

"பழைய வைதிக சைவம் பரக்கவே "
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேய சிவம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 Thillai Karthikeyasivam Sivam, Vishnu Sharma மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.

#சங்கரன்கோயில் சைவசித்தாந்த சபை மூலம் அச்சபையின் ஆசிரியர் சிவஸ்ரீ.ஆ.#ஈஸ்வரமூர்த்திபிள்ளை அவர்கள் எழுதி வெளியிட்ட நூல்,

"சைவாலயங்களில் சமஸ்கிருத. மந்திரங்களே வேண்டும் "

என்ற புத்தகமாகும்.

இங்கு சமஸ்கிருதம் என்பது வேத ஆகம முறைப்படி சிவாலயங்களில் பூஜை நடைபெறவேண்டும் என்பதை சுட்டுவதாகும்.

பன்னெடுங்காலமாக அருளாளர்களால் போற்றப்பட்டு வந்து சைவசமயத்திற்க்கு வேதம் ஆகமம் முதல்நூல்.

சைவசமயத்தில் வடமொழி, தென்மொழி என்ற வேறுபாடு 1900 ம் ஆண்டுவரை இருந்ததில்லை.ஆம் கடந்த நூறு ஆண்டுகளாகவே இந்த வேறுபாடு.

சைவசமயத்தில் வேத ஆகமங்கள் கிரியா மொழியாகவும், தேவார திருமுறைகள் பக்தி பாராயண மொழியாகவும் நம் ஆன்றோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

அத்தகைய உன்னத மரபிற்க்கு குந்தகம் விளைவிப்பவர்களாக சுவாமி வேதாசலம் என்ற மறைமலை அடிகளும், திருநெல்வேலியை சார்ந்த கா.சு. பிள்ளை என்பவரும் விளங்கினார்கள்.இவர்கள் நல்ல தமிழறிஞர்கள்தான். ஆனால் இவர்கள் தமிழறிவு, சைவசமயத்தை பாதுகாப்பதாக இல்லாமல், சைவசமயத்தில் #பிரிவினையை ஏற்படுத்துவதாக அமைந்ததே துரதிர்ஷ்டம்.

இவர்கள் வேதங்களுக்கு ஒரு போலி வரலாற்றை உருவாக்கி தமிழ் வேதம் என்ற விதன்டாவாதத்தை,பிரிவினையை முதன்முதலில் ஏற்படுத்தினார்கள்.

திருமூலர்காலம் முதல் நாவலர், மகாவித்வான் காலம்வரை வாழையடி வாழையாக அருளார்கள், சைவப்பெரியோர்கள் கடைப்பிடித்த திருவாக்குகளுக்கு முதன் முதலில், போலி விளக்கம் எழுதி சைவசமயத்தில் முதல் பிரிவினையை தூண்டியவர்கள்.

இவ்வாறான ஒரு குழப்பம் சைவசமயத்தில் ஏற்படக்காரணம் மிஷனரி பின்புலமும் ,திராவிட வாசமும் ஆகும்.

மிஷனரிகளின் கருத்தையே மறைமலைகள் தமிழ் முலாம் பூசி #தனித்தமிழ்இயக்கம் என்ற பெயரில் செயல்படுத்தினார்.

இந்நிலையில் சிவஸ்ரீ ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் சைவமரபுகளை எடுத்தியம்பும் வகையில் பல நூல்களை எழுதி அருளினார்கள்.

அவ்வாறு எழுதிய நூல்களில் இந்நூலும் ஒன்று.

இந்நூலில் ஒரு பகுதி,

நாத்தீக தமிழர், சிரத்தையின்றி ஆத்திகம் பேசும் தமிழர், சமஸ்கிருதத்தை பழிக்கும் தமிழர், பார்ப்பனரை பழிக்கும் தமிழர், எந்த ஆத்தீக நூல்களிலும் சிறிதும் பயிற்ச்சி இல்லாத தமிழர், தாழ்பட்டவரென்ற வகுப்பாறுள் சைவமாதி சமயங்களை யாசரித்தால் உலகில் முன்னேற முடியாதென நம்பிக்கை இழக்கும் தமிழர், எம்மதமும் சம்மதமென்னும் தமிழர், தமக்கென எதுவுமிலாத தமிழர் எனக் சில தமிழருளர்.அவரெல்லாங் கூடினர்.அஃதொரு தமிழர் கூட்டம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் சில சைவத்தமிழருங் அகப்பட்டனர்.அவர் நிலையென்ன?

சைவநூற்களை படிப்பர். அவற்றில் உள்ள தமிழை சுவைப்பார்.ஆனால் சைவத்தை அறவே உமிழ்ந்து விடுவார்.

இவர்கள் திருநீறு பூசிக்கொள்வர், உருத்திராக்கம் தரித்துக்கொள்வர், சமய பிரச்சாரமும் செய்துவருவர் .

ஆனால் அப்பிரச்சாரத்தில் ,
1)தமிழ்சமயம் இருக்கும். சைவசமயம் இருக்காது.
2)தமிழ் நாயன்மார் என்பார். சைவ நாயன்மார் இருக்காது.
3)தமிழ் திருமுறை என்பார். சைவத்திருமுறை இருக்காது.
4)தமிழ்கோயில்கள் என்பர் .சைவக்கோயில்கள் இருக்காது.

தமிழ் ஒரு மொழி,
சைவம் ஒரு சமயம்,

மொழி வேறு, சமயம் வேறு. அவ்வேறுபாட்டை அவர் விடுவார்.

சைவசமயம் என்று சொல்வதற்க்கான சந்தர்ப்பம் வரும்.அவ்விடத்திலெல்லாம் தமிழ் என்று உரைப்பார்.காரணம் சகவாச தோஷம்.

இப்படிப்பட்ட நவீன சைவர்கள் உருவாகியுள்ளார்கள்.

இவ்வாறு சைவவேடத்தில் உள்ள நவீனர்களின் சைவசமய விரோத செயல்களை, பேச்சுகளை ஆதாரத்தோடு இந்நூலில் விளக்கியுள்ளார்கள்.

வேத ஆகமங்களை போற்றுவோர் எவரும் தமிழையோ, திருமுறைகளையோ தூற்றுவதில்லை.

சைவசமயத்தை பொருத்தவரை வேதம் ஆகமம் முதல்நூல் என்பது இறைவாக்கு.

திருமுறைகள் #பக்திபாராயணமொழி, வேத ஆகமங்கள் #கிரியாமொழி. இதுவே சைவமரபு. அருளார்கள் வாக்கு.இதனை உள்ளபடி உணர்ந்தால் மொழிவேறுபாடு, மொழிசார்ந்த பிரிவினை சைவசமயத்தில் தோன்றாது.

மெய்யடியார்கள் படிக்க வேண்டிய நூல் இது.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேய சிவம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இந்நூல் "#வேதாந்தமதவிசாரம் " .

இந்நூலை இயற்றியவர் #மறைமலையடிகள் என்ற #வேதாசலம் அவர்கள்.

மறைமலையடிகள் "வைதிக சைவசித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீ சோமசுந்த நாயகரின் சிஷ்யராவர்.

சைவஅருளார்கள் காட்டிய சைவமரபினை போற்றும் வகையில், திரு மறைமலையடிகள் வேதாசலமாக இருந்த காலத்தில், இந்நூலில் வேத ஆகமங்களை போற்றியும், உபநிஷத்துகளை மதித்தும், வடமொழிகளை சிறப்பித்தும், பயன்படுத்தியும் எழுதியுள்ளார்கள்.இந்நூல் இயற்றப்பட்ட ஆண்டு 1899.

ஆனால் தனது குருநாதர் ஸ்ரீ நாயகர் மறைவுக்குப் பின் திரு வேதாசலம் என்ற மறைமலை அடிகள் #தடம்மாறி, தனிதமிழ் இயக்கம் என்ற பெயரில், சைவ அருளார்கள் காட்டிய வேத ஆகம முதன்மையை சீர்குலைத்து வடமொழி வெறுப்பை ஏற்படுத்தி சைவசமயத்தில் தேவையற்ற குழப்பத்தை,#பிரிவினையை ஏற்படுத்தினார்.

இவ்வாறு மறைமலைகள், திடிரென்று வேத ஆகம வடமொழிக்கு எதிராக பேசுவதற்க்கு காரணம், திராவிட &மிஷனரி பின்புலமாக இருக்குமோ என்ற சந்தேகம் பல ஆண்டுகளாக மரபு சைவர்களிடம் இருந்து வருகின்றது.

எவ்வாறாயினும், வேதங்களின், உபநிஷத்துகளின் பெருமையை அறிந்துகொள்ள மறைமலை அடிகளின் இந்நூலை படிக்கவேண்டிய அவசியம்.

சுமார் 110 ஆண்டுகளுக்குபின், சைவப்பெரியவர் சிவத்திரு, T.n.ராமச்சந்திரன் அவர்கள் இந்நூலை பதிப்பித்து வெளியிட்டு உள்ளார்கள்.அனைவரும் படித்து பயன்பெருக. சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேய சிவம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard