New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அகம் பிரம்மாஸ்மி - Santhanam Pammal


Guru

Status: Offline
Posts: 24811
Date:
அகம் பிரம்மாஸ்மி - Santhanam Pammal
Permalink  
 


Santhanam Pammal 

அகம் பிரம்மாஸ்மி, என்றால் என்னுள் பிரம்மம் இருக்கிறது என்று பொருள் , எப்படி எனில் பிரம்மா அஸி அஸ்மி அல்ல, அஸி இருக்கிறது, பிரம்மம் என்று குறிப்பிடுவது எல்லாம் பிரம்மதேவன் என எண்ண வேண்டா,

வள்ளுவர் கூற்றுப்படி ஆதி பகவன், எந்த ஒன்றிலிருந்து புவனாதிகள் தோன்றியதோ எந்த ஒன்றில் அவைஇறுதியில் அடங்குமோ அந்த சக்தி , அதை சைவத்தில் பதி என்பர்,

மனித ஆத்மா பசு எனப்படும், இந்த பசு பதியிடம் சேருவதே முக்தி,

பசு ஒருபோதும் பதியாகாது, ஆனால் இந்தபசு வினிடம் அந்த பதி மறைந்து உறைகிறார், அதாவது அந்த பதி என்னும் ஆற்றல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது, அதனால் அந்த பதியாகிய பிரம்மம் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறார் என்பதாகும், அதனால் இரண்டல்ல , அதாவது இரண்டாக இருந்தாலும் இரண்டாக பிரியாமல் எல்லா இடங்களிலும் எல்லா உயிர்கள். எல்லா பொருள்கள் என அைதத்திலும் இரண்டற கலந்து உள் நிற்பது பிரம்மம் என்னும் பதி, முடிந்த முடிபாகக் கொள்ள வேண்டிய ஆற்றல், ஆனால் யாரும் நானே பிரம்மம் என்று சொல்ல முடியாது, ஏனெனில் நான் என்பது அகங்காரம், இது ஆணவ மலம், இது பிரம்மத்திடம் அண்ட முடியாதது, நான் என்ற முனைப்பு இருக்கும் வரை நம்முள் இருக்கும் பிரம்மத்தை நாம் அறிய வே முடியாது, நானே பிரம்மம் என்று சொல்வது விவேகமற்றது, இரண்டல்ல என்னும் தன்மையில் உள்ளதால் அத்துவைதம், எனப்பட்டது,

துவைதம் இரண்டு, அ, அல்ல. என்ற பொரு ளில் சொல்லப்பட்டது,

ஒன்றே என்றல், இயலாதது, துவைதம் என்று இரண்டாக்கி பார்த்தால் இறைத்தன்மை இல்லாது ஆகிவிடும். முக்தி நிலை காணாது,



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Jataayu B'luruThillai Karthikeyasivam Sivam மற்றும் 3 பேருடன் இருக்கிறார்.

வேதம் பசு; அதன் பால் மெய்யாகமம்; நால்வர்
ஓதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதமிகு
நெய்யின் உறுசுவையா நீள் வெண்ணெய் மெய்கண்டான்
செய்த தமிழ் நூலின் திறம்.

- மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் நூலுக்கான பாயிரத்தில் உள்ள வெண்பா

[போதமிகு - ஞானம் நிறைந்த; நீள்வெண்ணெய் - திருவெண்ணெய்நல்லூரைக் குறித்தது]

சைவநெறி வேதமார்க்கம் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கும் இந்த அழகிய வெண்பாவைப் பார்த்த உடனே பகவத்கீதைக்கான பாரம்பரிய தியான சுலோகம் தான் நினைவில் வருகிறது (வைஷ்ணவீய தந்த்ரஸாரம் என்ற நூலில் உள்ளது).

ஸர்வோபனிஷதோ³ கா³வோ
தோ³க்³தா⁴ கோ³பாலநந்த³ன꞉।
பார்தோ² வத்ஸ꞉ ஸுதீ⁴ர்போ⁴க்தா
து³க்³த⁴ம்ʼ கீ³தாம்ருʼதம்ʼ மஹத் ॥

உபநிஷதங்கள் அனைத்தும் பசுக்கள்
கறப்பவனோ ஆயர்குலச் செல்வன் கோபாலன்.
கன்றுக்குட்டி பார்த்தன்.
கறந்த பால் – புவியில் நல்லறிவுடையோர் அனைவரும் அருந்தும் கீதையெனும் பேரமுதம்.

வேதப்பசு என்ற இதே உருவகத்தை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை திருக்குறளுக்கும் கூறுகிறார்.

நாலாரணப் பசுவை நாடிக் கறந்தளித்த
பாலாகுமென்று பாராட்டுமே - நூலாய்ந்த
வள்ளுவன் தந்த மறுவில் திருக்குறளை
உள்ளுவந்து ஓதும் உலகு.

[நாலாரணம் - நால் +ஆரணம், நான்கு வேதங்கள்; மறுவில் - குற்றமில்லாத]

மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று பாடல்கள். ஒரேவிதமாக, வேதங்களையே ஞானத்தின், அறிவுப்பாரம்பரியத்தின் ஊற்றாகக் கூறுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

நாவினில் வேதமுடையள் - கையில்
நலந்திகழ் வாளுடையாள்

என்று பாரத அன்னையையும்,

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு

என்று தமிழ்நாட்டையும் பாரதியார் ஒரே விதமாகப் புகழ்ந்து பாடுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்

 

சாரு நிவேதிதாவின் தடாலடி சாய்பாபா சந்திப்பு பரவசத்தை முன்வைத்து நேசகுமார் எழுதியிருந்தது மிகவும் ரசிக்கும்படியாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. சில விமரிசனங்கள்.

// வேதத்தின் முடிவு, சிகரம் என்றெல்லாம் புகழப்படும் வேதாந்தத்தின் மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. ஆனால், வேதங்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததில் எனக்கு இது நமக்கு விளங்காத விஷயம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். //

நேசகுமார், இதை நீங்கள் சொல்வது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. குரானையும், ஹதீஸ்களையும், பற்பல இஸ்லாமிய இலக்கியங்களையும் சளைக்காமல் படித்துக் கரைத்துக் குடித்திருக்கும் நீங்கள் இந்த முயற்சியில் அயர்ந்து விட்டீர்களா? ஒருவேளை மேற்சொன்ன நூல்கள் போன்று “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” (literally) என்று உள்ள சமாசாரங்களை நீங்கள் மிக அதிகமாகப் படித்துவிட்ட பழக்க தோஷத்தால், பல தளங்களையும், பற்பல படிமங்களையும், பல்வேறு அதீத உருவகங்களையும் உள்ளடக்கிய ஆகத் தொன்மையான வேத இலக்கியத்தை நிதானமாகப் படிக்கப் பொறுமை இல்லாமல் போய்விட்டதோ?

// சாருவைப் போன்று வேதங்களை திட்டத் தோன்றாததற்குக் காரணம் – உபநிஷத்துக்கள். வேதத்தின் சாரமென்று சொல்கிறார்களே அந்த உபநிஷத்துக்கள் உன்னதமானவை, இந்த பூமியில் என்றோ இத்துனை உயர் கருத்துக்களை சிந்தித்து போதித்துள்ளார்களே, அந்த முன்னோர்களை , மகான்களை நினைத்து பெருமைப்படுகின்றேன். அதே சமயம், வேதத்தின் பக்கம் போக வேண்டாம். உபநிஷத்துக்களுடன் நமது தேடலை நிறுத்திக்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். //

உபநிஷதங்களும் வேதத்தின் பகுதி தான் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். அதனால் இங்கே ‘வேதங்கள்’ என்று நீங்கள் சொல்ல வருவது சடங்குகள் மற்றும் தேவதைகள் பற்றிப் பேசும் கர்மகாண்டப் பகுதியை என்று எடுத்துக் கொள்கிறேன்.

நான்கு வேதங்களிலும் சம்ஹிதா (துதிப் பாடல்கள்), பிராமணம் (யாக செயல்முறைகள்), ஆரண்யகம் (விளக்கங்கள்), உபநிஷத் (தத்துவம்) என்ற எல்லா பகுதிகளும் உள்ளன. மந்திரங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில் உதித்த காலத்தில் இந்த எல்லாப் பகுதிகளிலும் உள்ள பாடல்கள் ஒன்று கலந்தே வந்தன. இத்தகைய பகுப்புகள் பின்னால் வேதவியாசரால் உருவாக்கப் பட்டவை.

உபநிஷதம் ஓரளவு படித்தவர்கள் கூட அது வேத கர்மகாண்டத்தினின்றும் வேறானது அல்ல, மாறாக அதன் தொடர்ச்சி, வளர்ச்சி, முதிர்ச்சி என்ற முடிவுக்குத் தான் வரமுடியும். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் இருவருமே இக்கருத்தைக் கூறியுள்ளனர். சுவாமி விவேகானந்தர் வேத சம்ஹிதைப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதியில் உள்ள வாசகத்தினை சுழுமுனைக்கு குறியீடாக தமது இறுதி நாளில் சீடரிடம் பேசினார். ஸ்ரீ அரவிந்தர் இன்னும் ஒருபடி மேல் சென்று சம்ஹிதை மந்திரங்களில் எல்லாம் கூட அடிநாதமாக இருப்பது உபநிஷதங்களின் வேதாந்தம் தான் என்கிற கருத்தை மிக அழுத்தமாகக் கூறுகிறார். இந்த கருத்து அடங்கிய அவரது “Hymns to the Mystic fire” என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது.


lflGL3WR3mgCcJpd3cqln8BsVzc5U7yxGadoViVT


உதாரணமாக, உபநிடதத்திலேயே மிகவும் அழகான இரட்டைப் பறவை படிமம் ரிக் வேதத்திலேயே (ரிக், 1.164) கூறப்பட்டுள்ளது. “அரச மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரே மாதிரியான இரு பறவைகள்: ஜீவன் மற்றும் பரமாத்மா” என்ற இந்த வேதப் படிமமே முண்டக உபநிஷதத்தில் இன்னும் அழகாக வளர்த்தெடுக்கப் படிகிறது : இவற்றில் ஒரு பறவை இனிப்பும், கசப்புமான பழங்களைத் தின்று கொண்டிருக்கிறது, இன்னொன்று அமைதியாக உட்கார்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதை முழுதாக உணர்வதற்கு சம்ஹிதை மந்திரங்களின் கவிதைகளில் பொதிந்துள்ள குறீயீடுகளுடன் பரிச்சயம் வேண்டும். இது இல்லாவிட்டால் பல ஆரம்பகால ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் பல வேத சம்ஹிதை மந்திரங்களுக்கு அபத்தமும், அனர்த்தமும், அதிபயங்கர ஊகங்களும் கலந்து அளித்தது போன்ற, பல சமயம் சம்பந்தமே இல்லாத, மேம்போக்கான பொருள் தான் இருப்பதாகத் தோன்றும்.

கீதை உபநிஷதங்களின் சாரம். யோகம் பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தை அது அளிக்கிறது. இதே கருத்துக்கள் உபநிஷதங்களில் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன, சில நேரிடையாக இல்லாமல் மறைபொருளாக உள்ளன. இதை அப்படியே நாம் உபநிஷதங்களின் முன்னோடியான வேத சம்ஹிதைகளுக்கும் பொருத்தலாம். துதிப் பாடல்களால் ஆன ரிக்வேதம் பக்தியோகத்தையும், யாக யக்ஞங்கள் பற்றி அதிகம் பேசும் யஜுர்வேதம் கர்மயோகத்தையும், இசைவடிவான சாம வேதம் ஞான யோகத்தையும் குறிப்பதாக சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்

// திருவிடைமருதூர் கோவில் வாயிலில் பிரம்மஹத்தி உட்கார்ந்து கொண்டிருக்கும். நமது கண்ணுக்குப் புலப்படா தலித்ஹத்திகள் ஒவ்வொரு கோவில் வாயிலிலும் அமர்ந்து கொண்டிருக்கின்றன. பிராம்மணக் கொலைகளுக்காக பிரம்மஹத்திகள் நம்மை பிடிப்பது பொய்யாகக் கூட இருக்கலாம், ஆனால் இந்த தலித்கத்திகள் இருப்பது நிஜம். தலித்ஹத்திகள் நம்மை விரட்டுமுன், நாமே முன்வந்து மாற்றங்களைச் செய்தல் நலம்.//

மிக அழகான ஒப்புமை. “தலித்ஹத்தி” என்ற பதப் பிரயோகத்தை மிகவும் ரசித்தேன். உங்கள் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன்.

// இந்து மதத்தில் இதுதான் பிரச்சினை. வேதத்தில் என்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது? எதற்கு ஒரு ஜாதி மட்டுமே படிக்க வேண்டும், பாராயணம் செய்ய வேண்டும்? … பெருவாரியான சனங்களுக்கு போய்ச்சேராத வேதங்களும், ஆகமங்களும், உபநிஷத்துக்களும், அறுவகைத்தத்துவங்களும் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன. //

இங்கு மறுபடியும் தவறு செய்கிறீர்கள் நேசகுமார். ஒரு உணர்ச்சி மேலீட்டில் இதை எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.


KhHNT-_X9oHgTRB2a7BhP6JN7cllFdK3ef1hFr82


வேதம் ஒரு குறிப்பிட குழுவுக்கு மட்டும் உரியது என்ற கருத்து வேதங்களில் எங்குமே இல்லை. வேலைக்காரப் பெண்ணுக்குப் பிறந்த சத்யகாம ஜாபாலன் கதையை உபநிஷதத்தில் படித்திருப்பீர்கள். வேதங்களைத் தொகுத்த வியாசரே மீனவப் பெண்ணின் மகன் தான். சுக்ல யஜுர் வேதத்தின் இந்த மந்திரத்தை எடுத்துக் காட்டி சுவாமி விவேகானந்தர் இதனை அழகாக விளக்குகிறார்.

"yathA-imAm vAcham kalyaNIm AdadAmi janebhyah;
Brahma-rAjanyAbhyAm sUdrAya cha AryAya cha svAya-chAraNAya cha"

Just as I am speaking these blessed words tothe people,
in the same way you also spread these words among all men and women -
the Brahmanas, kshtriyas, vysayas, Sudras andall other,
whether they are our own people or aliens.

வேத ரிஷி கூறுகிறார் - “(சீடர்களே) நான் உங்களிடம் இந்த நலம் பயக்கும் வேத மந்திரங்களைக் கூறியது போலவே, நீங்களும் பிராமணர், அரசர், வைசியர், சூத்திரர் எல்லா மக்களிடத்திலும் இவற்றைப் பரப்புங்கள். நம் மக்களாயினும் சரி, வேறு மக்கள் ஆயினும் சரி, எல்லாரிடமும் இச்சொற்களைப் பரப்புங்கள்"

செவிவழியாகவே கற்றுக்காக்க வேண்டிய கட்டாயத்தால் காலப்போக்கில் அது ஒரு குழுவின் சொத்தாகிப் போயிருக்கலாம். வேதத்தை முதல் மூன்று வர்ணங்களுக்கு மட்டும் என்று பிறகு வந்த மனு ஸ்மிருதி ஒதுக்கிற்று, பின்னர் காலத்தின் கோலத்தால் அது ஒரு ஜாதியில் உள்ள சிலருக்கு மட்டும் என்று ஆயிற்று. ஆனால் அதன் நுட்பங்கள், மெய்ஞானம், கருத்தியல் யாவும் பெருவாரி மக்களைப் பல விதங்களில் சென்று சேர்ந்தே இருக்கிறது. திருவைந்தெழுத்து மந்திரம் போதும், அதைவிடப் பெரியது வேதத்தில் என்ன இருக்கிறதென்று சில அரைகுறைச் சைவர்கள் கேட்கலாம். ஆனால் முழுதுணர்ந்த சைவர்கள் வேதரத்தினமான பஞ்சாட்சரம் கிருஷ்ண யஜுர்வேதத்தின் ரத்தினமான ஸ்ரீருத்ரம் என்ற துதியின் மையத்தில் ரத்தினம் போன்று திகழ்கிறது என்று அறிவார்கள். கார்காத்த வேளாளர் நற்குடியில் அவதரித்த அப்பர் பெருமான் இந்த ஸ்ரீருத்ரம் என்ற உத்தமமான துதியின் சாரத்தையே நின்ற திருத் தாண்டகமாகப் பாடினார்.

வேதக் கருத்துக்கள் அவரவர்களது மொழிகளில் மக்களைச் சென்று அடைந்திருக்கின்றன எனபதே உண்மை. பல இந்திய மொழிகளிலும் உள்ள பக்தி இலக்கியம் உள்ளிட்ட பல பழைய, புதிய இலக்கியங்களை நான் படிக்கையில் இந்த எண்ணம் வலுப்பெற்றுக் கொண்டே தான் வருகிறது. பிராமணர்களது ஆதிக்கத்தையும், சாதி வெறியையும் முனைந்து எதிர்த்த கன்னட வீரசைவ பசவேஸ்வரர் கூட தத்துவம் என்று வருகையில் முழுக்க முழுக்க உபநிஷதங்களின் உபதேசத்தையே சொல்கிறார், வேதங்களை எதிர்த்தாரில்லை. திருமந்திரமும், சித்தர் பாடல்களும், வள்ளலாரும், தாயுமானவரும் அப்படியே.

சொல்லப் போனால் இப்படி நீங்கள் பேசுவதும் உங்களுடைய மேட்டிமை சிந்தனை என்பேன். ஓஷோ யோகம் பயிலும் போது தாம் தொடக்க நிலையில் சமாதி அடைந்த போது தம் உயிர் போகாமல், அவர் என்ன நிலையில் இருக்கிறார் என புரிந்து கொண்டு ஒரு மாடு மேய்க்கிற பெண் காப்பாற்றியதை குறிப்பிடுகிறார். இந்த யோக முறை குறித்து அந்த பெண்ணுக்கு தெரிந்திருந்தது குறித்து ஆச்சரியமடைகிறார். அதே போல பஞ்சாட்சர மந்திரம் சொல்லி விபூதி அணிவதால் விபூதிக்கே பஞ்சாட்சரம் என்று ஒரு பெயர் உண்டு. பல பண்டிதர்களுக்கே தெரியாத விசயம் இது. திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை ஒரு கோவிலுக்கு போய்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த போது ஒரு தலித் பெண்மணி அவரிடம் சர்வ சாதாரணமாக "ஓய் சாமி எனக்கு பஞ்சாட்சரம் கொடுத்துட்டு போ" என்றாராம். வாரியார் சுவாமிகள் திக்கித்து போய் நின்றுவிட்டாராம். பிறகு திருநீறு கொடுத்துவிட்டு வந்தாராம். தமது சுயசரிதையில் கூறுகிறார். ஐயா வைகுண்டர் எந்த வேதமும் படிக்கவில்லை ஆனால் அவருடைய பல வாசகங்களில் வேத எதிரொலியை காணமுடியும். நாராயணகுரு மருத்துவ ஈழவ (நாவிதர்)குலத்தை சேர்ந்தவர் ஆனால் அவருக்கு எளிதாக (அந்த சாதீய அமைப்பிலும் அதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை) ஆறுவகை தத்துவங்களையும் வேதோபநிடதங்களையும் பயில முடிந்ததே!

ஆன்மிகத் தளத்தில் மட்டுமல்ல, இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்திலும் இருப்பவை வேதக் கருத்துக்களே அல்லவா? “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று குழந்தைகளுக்கு இயல்பாகவே ரத்ததோடு ஊறி வரும் கருத்தின் முதல் துடிப்பு எது? “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ” என்ற வேத வாசகங்களே அல்லவா? “தாய் மண்” (இந்தச் சொல் கண்டிப்பாக அரபியில் இருக்காது என்று சொல்லலாம்) என்று நம் மொழியிலேயே கலந்து விட்ட அந்த உணர்வு எங்கேயிருந்து வந்தது? “மாதா பூமி: புத்ரோஹம் ப்ருதிவ்யா” (இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்) என்ற வேத ரிஷியின் வாக்கு தானே அது?

நமக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தவர் செய்வது போல வழவழ கண்ணாடி பேப்பரில் வேதத்தை பிரிண்ட் போட்டு கொடுக்க முடியவில்லையாக இருக்கலாம். ஆனால் எத்தனை எத்தனையோ மகான்கள், சித்த புருசர்கள், கோவில் சிலைகள் முதல் தெருவோர சாந்து பூசிய கம்பங்கள் வரை மாலையிட்ட சுமைதாங்கிகள் வரை வேதத்தினை, வேதத்தின் சாறினை, வேத முடிவில் நடம் நவிலும் விமலத்தை நம் 'பாமர' மக்களுக்கு அளித்துக்கொண்டுதான் வருகின்றன.

இவ்வளவும் சொன்னது எப்படி வேதக் கருத்துக்கள் தாமாகவே பல வடிவிலும் மக்களைச் சேர்ந்தடைந்துள்ளன என்று காட்டுவதற்காகத் தான். வேதத்தை அதன் மூல வடிவிலேயே பலதரப் பட்ட மக்களும் பயில்வதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, இது மேன்மேலும் பெருக வேண்டும். எல்லாத் தரப்பினரும், வேத ஞானத்தின் பங்கு தாரர்கள். வேத ஞானம் உலகம் முழுவதற்கும் உரியது, தேவையானதும் கூட.

(இங்கே பயன்படுத்தியுள்ள சில குறிப்புக்களைத் தந்து உதவிய, தங்கள் பெயர்களைக் குறிப்பிட விரும்பாத இரு இணைய நண்பர்களுக்கு மிக்க நன்றி).


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 Mayoorakiri Sharma Jataayu B'luru இப்போது தான் கீதையின் சில சுலோகங்களை படித்து விட்டு இது பற்றி நினைத்தேன். வேதத்தை ஏற்கிற இந்துசமயப் பிரிவுகள் அல்லது இந்துசமய நூல்கள் குறித்த தம் பிரிவை அல்லது நூலினை வேத சாரமாகச் சொல்லி பிறகு வேதத்தினும் இதுவே மேம்பட்டது என்று சொல்கின்றன. பகவத்கீதையிலும் ஆகமங்களிலும் இந்நிலை உண்டு. ( வேதத்தை மட்டும் ஏற்றால் சுவர்க்கமும் மறுபிறவியும் உண்டு. ஆனால் கீதை/ சிவாகம வழி நடந்தால் மீண்டும் பிறவா மோக்ஷம்/ சிவ கதி கிடைக்கும் என்று குறித்த நூல்கள் கூறும் ) இதை எப்படி புரிந்து கொள்ளலாம்? இது வேதத்தை ஏற்றுப் பின் (சிவாகம வழி வந்த பிறகு அல்லது கீதை வழி கிருஷ்ண பக்தி உண்டான பிறகு) விலக்கி விடுக என்று சொல்வது போல இருக்கிறதல்லவா?

Jataayu B'luru Mayoorakiri Sharma "வேத:" என்ற சொல் நான்கு வேதங்களிலும் உள்ள கர்மகாண்டப் பகுதிகள் & நான்கு வேதங்களிலும் உள்ள அழிவற்ற, ஆதியந்தமற்ற ஞானம் என்ற இரண்டு பொருளையும் குறிக்கும். எந்த இடத்தில் வருகிறது என்பதைப் பொறுத்து அதன் பொருள் மாறுபடும். "நான்கு வேதங்களும் அபரவித்யா (புற அறிவு) என்பதில் அடங்கும்; அதனினும் வேறுபட்டது பரவித்யா (மெய்யறிவு)" என்று முண்டகோபநிஷத் கூறுகிறது. இந்த உபநிஷத்தே நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வவேதத்தின் பகுதியாகத் தானே உள்ளது :). இதில் குழப்பம் ஏதுமில்லை

Jataayu B'luru // வேதத்தினும் இதுவே மேம்பட்டது // என்று ஒரு குறிப்பிட்ட *நூலை* எந்த பாரம்பரிய ஞான, பக்தி நூல்களும் சொல்லாது. அப்படி இருந்தால் காண்பிக்கவும். வேதத்தினும் மேம்பட்டது என்று சொல்லப்படுவது தூய ஞானத்தை. ஏனென்றால் இந்த ஞானம் என்பது பரம்பொருளிலிருந்து வேறுபட்டதல்ல, அதுவே பரம்பொருளின் ஸ்வரூபம். ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம, ப்ரக்ஞாம் ப்ரஹ்ம - என்பவை உபநிஷத வாக்கியங்கள் Mayoorakiri Sharma



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Jataayu B'luru // மறைக்கப்பட்ட சைவசான்றோர்களை.// யார் அவரை மறைத்தது? யாரும் மறைக்கவில்லை. வெளிப்படுத்த வேண்டிய சைவர்கள் இவரைப் போன்றவர்களைக் கடாசிவிட்டு ஈவேராவுக்கும் மறைமலைக்கும் பின்னால் சென்றார்கள். அதுதானே உண்மை Thillai Karthikeyasivam Sivam

Shiva Sankar Jataayu B'luru மறைமலை ஆன்மீகவாதி ஆனால் திராவிட கட்டுபாட்டிலே இருந்தவர் சமயரீதியாக பேசிவிட்டு திராவிடத்தை பட்டும்படாமல் தாக்கிவிட்டு பிறகு திராவிடத்தை சமாதனப்படுத்த அது பரப்பிய திரிபை பேசுவது பிராமணரை திட்டுவது போன்ற செயலை மேற்கொண்டார். இவர் உட்பட பல தமிழ் அறிஞர்கள் கொண்டுவந்த நமது சமயம் முறையிலான திருவள்ளுவர் நாளை ஒதுக்கி தள்ளியதும் திராவிடம்தான் திராவிடத்திற்கு பட்டும்படாமலும் ஆதரவாக இருந்து என்னபயன். மறைமலை 90 சதவிதம் தமிழன் ஆன்மீகவாதி 10 சதவிதம் இல்லாத திராவிடத்திற்கு ஆதரவாளர் ஒருதுளி விஷம் ஒரு குடம் பாலை திரித்து விட்டது அவரது கல்வி கிருஸ்தவ பள்ளியில் அதான்

Shiva Sankar Jataayu B'luru ஆதினங்கள் சைவமடங்கள் ஏன் சிவாச்சாரியர்கள் இவர்கள் முன்னர் திராவிட அடக்குமுறையை மீறி செயல்படமுடியவில்லை இன்றும். சைவத்தை திராவிடமாக ஆக்க பல காலமாக முனைந்துகொண்டே உள்ளனர்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard