New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: செந்தமிழில் கல்வெட்டுகள் இல்லை - ஏன்? பேராசிரியர். இ.அண்ணாமலை


Guru

Status: Offline
Posts: 24636
Date:
செந்தமிழில் கல்வெட்டுகள் இல்லை - ஏன்? பேராசிரியர். இ.அண்ணாமலை
Permalink  
 


செந்தமிழில் கல்வெட்டுகள் இல்லை - ஏன்?

E.Annamalai 

சென்னை, மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் இரா. சீனிவாசன் எழுப்பிய கேள்விகள்:
கல்வெட்டுகளில் பயின்று வரும் மொழி, இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதன் காரணம் என்ன?
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
சங்கக் கவிதைகளின் மொழியும் சமகால பிராமிக் கல்வெட்டுகளின் மொழியும் தனித்து நிற்கின்றன. கம்பராமாயணத்தின் மொழியும் சோழர் காலக் கல்வெட்டுகளின் மொழியும் வேறானவை. இதற்குக் காரண்ங்கள் பல. சில காரணங்கள் ஊகங்களே. ஒரு காரணம், எழுதப்பட்ட பொருள். கவிதையின் பொருள் கற்பனை கலந்தது. இந்தக் கற்பனைக்கு ஒரு மொழி சார்ந்த ஒரு மரபு இருந்தது. கல்வெட்டுகளின் பொருள், கொடை, போர் வெற்றி, கோயில் பராமரிப்பு முதலிய உலகியல் சார்ந்தது. இன்றும் அரசு ஆவணங்களின் மொழிக்கும் நவீன இலக்கிய மொழிக்கும் வேறுபாடு உண்டு.
இரண்டாவது காரணம், எழுத்தின் நோக்கம். இலக்கியம், மொழித் திறம் படைத்தவர்கள் படித்து இன்புற எழுதுவது. கல்வெட்டு, குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டது. இதனால் கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் கலப்பைப் பார்க்கலாம்.
மூன்றாவது காரணம் புரவலர்களின் மொழிக் கொள்கையும் நாட்டின் மொழி நிலையும். பிராமிக் கல்வெட்டுகளில் சுட்டப்படும் உறவிடங்களைத் தானமாகப் பெற்றவர்கள் பிராகிருதம் பேசிய சமணத் துறவிகள். இந்தக் கல்வெட்டுகள் தமிழும் பிரகிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கின்றன. இதே சமணர்கள் தாங்கள் தமிழில் கவிதை எழுதும்போது தமிழ்க் கவிதை சார்ந்த மொழி மரபை – பிற மொழி கலக்காத, கலந்தாலும் தமிழாக்கப்பட்ட மொழியை – பின்பற்றுகிறார்கள். சோழ அரசர்கள் தங்கள் பேரரசுத் தகுதியை நிலைநாட்ட இந்தியாவிற்கு வெளியேயும் அரசவைகளில் கோலோச்சிய சமஸ்கிருதத்தைத் தழுவி அதைக் கல்வெட்டுகளில் தங்கள் பெருமையைப் பறைசாற்றப் பயன்படுத்தினார்கள். இதனால் கல்வெட்டுகளில் அரசனின் வம்சப் பெருமையையும் போர் வெற்றிகளையும் புகழும் மெய்க்கீர்த்தி சமஸ்கிருதத்தில் அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருக்கும். ஆனால் இது போன்ற புகழ்ச்சியுரை இலக்கியத்தில் பாடாண்திணையாக வரும்போது நல்ல தமிழில் இருக்கும். மேலே சொன்ன காரணத்தால் கல்வெட்டுகளில் பிறமொழிச் சொற்கள் அதிகமாக இருக்கும். அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த பல கலைச் சொற்களும் பிராகிருதத்தில் இருக்கும்.
நான்காவது காரணம், மொழி வெளிப்பாட்டு வடிவம். இலக்கியம், கவிதை வடிவம் கொண்டது. கல்வெட்டு, உரைநடை வடிவம் கொண்டது. உரைநடையில் மொழியைப் பொறுத்தவரை அதிகச் சுதந்திரம் உண்டு. இறையனார் அகப்பொருள் உரை போன்ற இலக்கியம் தொடர்பான உரைநடை இலக்கிய மொழியின் தன்மைகளைக் கொண்டது. உலகியல் தொடர்பான உரைநடை, நாட்டு மொழிப் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
http://www.vallamai.com/?p=625
இ.அண்ணாமலை- பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார். இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில்.
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: செந்தமிழில் கல்வெட்டுகள் இல்லை - ஏன்? பேராசிரியர். இ.அண்ணாமலை
Permalink  
 


தமிழ் பிரம்மி, தமிழி என்றெல்லாம் சொல்லப்படும் தமிழ் வரிவடிவம் கொண்ட - தமிழில் கல்வெட்டு மூன்றாம் நூற்றாண்டிற்கு BCE முன்பாக இல்லை. உள்ளவை –

1. தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் - குகைக் கல்வெட்டுக்கள்

2. 5ம் நூற்றாண்டு CE - திருநாதர் குன்றுக் கல்வெட்டு - தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டு
3. 7ம் நூற்றாண்டிற்கு CE பிறகு.
4. மாங்குளம் - 6th century BCE முதல் 6th century CE வரை கணக்கிடப் படுகிறது.
5. அசோகனுக்கு முந்தைய [pre-Ashokan] என்ற கல்வெட்டுகள் இன்னும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
6. அசோகனுக்கு முந்தைய என்ற கல்வெட்டுகள் [அனுராதபுரம்] இலங்கையில் 4th century BCE காலத்திற்கு வைக்கப்படுகிறது.
7. சங்க இலக்கியமும் c. 300 BCE முதல் 100 CE வரையில் வைக்கப் படுகிறது.
8. ஆக, இதற்கு முன்பாக தமிழ் செல்ல முடியாது.
9. பாரதம் பாடிய பெருந்தேவனார் தான் “கடவுள் வாழ்த்து” எழுதி சேர்த்து விட்டார் என்றால், பிறகு அவை – அவர் காலமாகிறது.
10. இவற்றையெல்லாம் மீறி “கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு” செல்வேன் என்றால் செல்லலாம். சரித்திராசிரியர்கள் ஏற்றுகொள்ளவில்லை.

வேதபிரகாஷ்
05-03-2019

 

அரசியல்வாதிகளுக்கு இந்தியநாட்டின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம், சரித்திரம் இவையெல்லாமே தெரிவதில்லை [1]

பிறகு, சமஸ்கிருதம்-தமிழ் தொன்மைகளைப் பற்றி இவர்கள் / இனம்-மொழி பேசும் கட்சிகள் விவாதிப்பது பொருளற்றதாகும் [2]


திராவிட [Dravidian] என்ற சரித்திர ஆதரமில்லாத இனம் [race] உள்ளது என்ற ரீதியில் கட்சிகள் நடத்தப் படுவது தமிழ் நாட்டில் தான்! [3]

இவ்விசயத்தில் மோடியே தேவையில்லாமல், தமிழ் தான் சமஸ்கிருதத்தை விட தொன்மையானது என்று பிரச்சினையை தொடங்கி வைத்தது [4] 

இப்பொழுது, காங்கிரஸ் கட்சி அழகிரி சமஸ்கிருதம் 2000 BCE தொன்மையானது, ஆனால், தமிழின் 300 BCE தான் என்றுள்ளதை வைத்து பிரச்சினையை ஆரம்பித்துள்ளார் [5]

மொழி, வரிவடிவம், இலக்கியம் என்று வைத்து பார்க்கும் போது, சங்க இலக்கியம் காலம் 500 / 300 BCE முதல் 100 CE வரை தான் என்று ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது [6]

சமஸ்கிருதம் மொழி, வரிவடிவம், இலக்கியம் முதைய ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது, நிச்சயமாக 2000 BCEற்கு உள்ளது [7]

அப்படி பார்த்தால், தெலுங்கில் உள்ள பட்டிபோர்லு கல்வெட்டு 490 BCEக்கும், தமிழ்-பிரம்மி வரிவடிவம் 400 BCEக்கும் தான் உள்ளது [8]

பொகோஸ்கய் கல்வெட்டில் வேதகடவுளர்கள் குறிப்பிடப் படுவதால், அதன் காலம் 1450BCEக்கு முன்னர் மொழி இருந்திருக்க வேண்டும் என்றாகிறது [9] 

தவிர தொன்மையானது, மொழி வழி விஞ்ஞான-தொழிற்நுட்பம், கலை-கட்டிட வெளிப்பாடு, உலோக-கலவை பயன்பாடு, இவற்றின் மற்ற தொன்மையான நாகரிகஙளின் மீதான தாக்கம், உலகில் பல இடங்களில் ஒத்தகாலத்தில் பரவியுள்ள நிலை என்று பல ஆதாரங்களில் வெளிப்படுகிறது [10]

வேதபிரகாஷ்
27-07-2019



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

This is what a respected historian Dr Upinder Singh says in her celebrated book "A History of Ancient and Medieval India". Will the Minister take action against her?

"The oldest surviving texts in the Indian subcontinent—the Vedas—are in Sanskrit. Sanskrit belongs to the Indo-Iranian branch of the Indo-European family of languages, as do ancient Pali and Prakrit. There were various dialects of Prakrit—e.g., Maharashtri, Shauraseni, and Magadhi. Apabhramsha is a term used for the further development of Prakrit up to the end of the 1st millennium CE. Among the Dravidian languages, Tamil has the oldest literature, followed by Kannada. Many of the other Indian regional languages and dialects we are familiar with today took shape between c. 1000 and 1500. The various languages were not closed, separate worlds, but overlapping and interacting ones."

"As mentioned earlier, the oldest inscriptions in the Indian subcontinent are in the yet undeciphered Harappan script. The oldest deciphered inscriptions belong to the late 4th century BCE, and are in Brahmi and Kharoshthi (sometimes spelt Kharoshti). These include those of the Maurya emperor Ashoka, which are in a number of different languages and scripts, but mostly in the Prakrit language and Brahmi script. As there are no obvious links between the Harappan script and Brahmi or Kharoshthi, what happened to writing in between remains a mystery. There is no direct mention of writing in Vedic literature, but references to poetic metres, grammatical and phonetic terms, very large numbers, and complex arithmetical calculations in later Vedic texts are taken by some historians to indicate the possibility that writing may have been known at the time."

"The earliest inscriptions in the Tamil language (with some Prakrit elements) are engraved in rock shelters and caves, mostly in Tamil Nadu, especially in the area near Madurai. They are in a script known as Tamil–Brahmi, an adaptation of Brahmi for writing the Tamil language. Iravatham Mahadevan (2003) has identified two phases in the evolution of the Tamil–Brahmi script—early Tamil-Brahmi (c. 2nd century BCE–1st century CE) and late Tamil–Brahmi (2nd–4th centuries CE)."



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வேதம் வேதபிரகாஷ் கால்டுவெல் நாற்காலி அமைப்பதைப் பற்றி, எந்த இந்துத்துவ வாதியும் மூச்சு விடவில்லை, ஆனால், சிலர் வழக்கு போட திட்டமிடுகின்றனர் [1]

தமிழ் பல்கலைக் கழகம், திராவிட பல்கலை, உலகத்தமிழ் ஆராய்ச்சி கழகம், ஹார்வார்ட் நாற்காலிக்கு கோடிகள்……பிறகு எதற்கு கால்டுவெல் ந
ாற்காலி? [2]

மோசடி பிஷப் அருளப்பா நாற்காலி உருவாக்கி, முன்பு இந்து-விரோதி தெய்வநாயகம், அதில் பிஎச்.டி செய்து, இந்துவிரோத புத்தகம் வெளியிடப் பட்டது [3]

1985ல், “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்” புத்தகம் வெளியிட்டபோது, எவனையும் காணோம், இன்று வரை பல பிஎச்.டிக்கள் / புத்தகங்கள் [4]

1991ல் அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் வெளியிட்டபோது எவனையும் காணோம், ஒரு ஆள் அலைந்தான், அவனையும் கண்டுகொள்ளவில்லை [5]

ஆக 30-40 வருடங்களாக இந்துக்களுக்கு, போராளிகளுக்கு, அமைப்புகளுக்கும் எந்தவிதமான தொலைநோக்கு திட்டமும், செயல்படு யுக்திகளும் இல்லை [6]

ஒரு இந்துவும் எந்த பிஎச்.டியோ மறுப்போ முறையாக செய்யவில்லை, மாறாக, ஒரு புத்தகம் வெளியிட்டு தெய்வநாயகத்தை பிரபலப் படுத்தப் பட்டது தான் மிச்சம் [7]

“உள்-கலாச்சாரமயமாக்கல்” அறியாமல், எதிர்க்க ஒரு இந்துவிற்கும் சூடு, சொரணை, வெட்கம், மானம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை! [8]

மதங்களுக்குள் உரையாடல் என்ற போர்வையில், எப்படி, இந்துத்துவ வாதிகளையும் கிருத்துவர் மடக்கிப் போட்டுள்ளனர் என்பதையும் அறிவதில்லை [9]

அதாவது, மூலத்தை அறிந்து, அங்கேயே சரிபடுத்தாமல், இப்பொழுது பேஸ்புக்கில் வீராப்பு காட்டுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது! [10]

வேதபிரகாஷ்
01-08-2019

 

பாவாடைங்க நம்ம கலாச்சாரத்தை காப்பி அடிக்கவில்லை ...

இப்போது திருடி, உள்வாங்கி ...

அடுத்த இரண்டு தலைமுறையில் அவை தங்கள் கலாச்சாரம் ...

ஹிந்துக்கள் பின்பற்றக்கூடாது என்று கூறுவர் ...

மீறி பின்பற்றினால் வன்முறையில் இறங்கக் கூடும் ...

நாம் இப்போதே உஷாராகவில்லை என்றால் ...

நம்முடைய பேரன் பேத்திகள் இப்போது நாம் இருப்பதை விட மோசமான சூழ்நிலையில் இருக்க நேரிடும் ... !



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வேதம் வேதபிரகாஷ் 1. Language, script and literature have been different concepts evolved, developed and completed during the course of time acceptable to the users.

2. Makings, occasional or accidental indents, scratches and vents, pictograms and similar things are no
t script.

3. Three or more scribbling is not an inscription, as the script could be claimed as any script and read in similar languages.

4. None can decide whether it has to be read from left to right or right to left.

5. The same language writing / inscribing people would not inscribe differently at various places.

6. For getting full meaning, at least, there should a sentence or more lines, so that the experts read and give acceptable and conveying meaning.

7. The potsherds evidences are not conclusive, as the script is not complete.

8. Even after the declaration that the race, racism and racialism are myth, not scientific and acceptable, it is intriguing, ironical and contradicting some researchers still talking and researching in terms of “Aryans” and “Dravidians.”

9. With predetermined mindset, confusing or compromising ideology and accepting something for the work done would not lead to any meaningful research.

10. Such biased research would only divide the people.

© Vedaprakash
06-09-2019



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

6a.png



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

6.png



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard