New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழகத்தில் கவலைக்கிடமாக சைவசமயம்


Guru

Status: Offline
Posts: 23958
Date:
தமிழகத்தில் கவலைக்கிடமாக சைவசமயம்
Permalink  
 


Thillai Karthikeyasivam SivamJataayu B'luru மற்றும் 10 பேருடன் இருக்கிறார்.

#சைவசமயம் #வேதக்கலகம்

தமிழகத்தில் சைவசமயம் இன்று மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது.

தமிழ் சமூகத்தை எவ்வாறு பிரிவினைவாதிகள் இனம், மொழி வெறி ஊட்டி சீர்குலைத்துவருகிறார்களோ, அதுபோலவே சைவசமயமும் மொழி வெறி ஊட்டி சீர்குலைக்கப்பட்டுவருகின்றது.

இதற்க்கெல்லாம் இடைவிடாது எதிர்வினை ஆற்றவேண்டிய ஆதினங்கள், சிவாச்சாரியார்கள், மரபு சைவர்கள் அடையாளத்திற்க்கு ஏதாவது செய்துவிட்டு அமைதியாக உள்ளார்கள்.

சைவசமய திருமுறைகளும், அருளாளர்களும் வேதங்களை, ஆகமங்களை, வடமொழிகளை ஒருபோதும் இகழவில்லை. போற்றவேசெய்கின்றது.

இதனை முழு அளவில் இடைவிடாது பிரச்சாரம் செய்யவேண்டிய கடமை பெரிய அளவில் #ஆதினங்களுக்கே உள்ளன.

அடுத்த நிலையில் உள்ள #சிவாச்சாரியார்கள் நகரத்து முச்சந்தி கோயிலும், நான்கு ஹோமம் கிடைத்தால் பிழைப்பு ஓடாதா என்று இருக்கிறார்கள்.

சைவசமயத்தில் நடக்கும் பல தீய பிரச்சாரங்களுக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றுவதில்லை. தாங்கள் இயன்ற அளவில் துண்டு பிரசுரம் மூலம், தங்கள் ஆலயங்களில் சொற்பொழிவு மூலம் பிரச்சாரம் செய்யலாம். ஆனாலும் இல்லை.

சிவாச்சாரியார் என்ற பட்டமே சைவசமயம் தந்தது. அந்த சைவசமயமே கற்பழிக்கப்பட்டு சீர்குலைப்படும் நிலையில், எதற்க்கு ஆதிசைவர் எற்ற பீத்தல். சிவாச்சாரியார் என்ற பெருமை.?

அடுத்து #மரபுசைவர்களோ உபதேசம் செய்வதும், குற்றம் குறைக் கூறி ஆதங்கப்படுவதோடு சரி. சைவசமய சீரழிவை தடுக்க எந்த எதிர்வினையும் இவர்களும் ஆக்கபூர்வமாக செய்வதில்லை.

சைவசமய மரபுகளை, அருளாளர்கள் வாக்குகளை சீரழிக்க, தான்தோன்றி கருத்துகளை பரப்ப பலர் ரக்தபீஜன் போன்று தோன்றி பல வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் அந்த பிரச்சாரங்களை தடுக்க, #மரபுசைவர்கள் பக்கம் எத்தகைய ஆக்கபூர்வ செயல்பாடு நடந்துள்ளது என பார்த்தால் ஒன்றுமே இல்லை.கிடையாது.

எல்லாம் கலிகாலம், சுவாமி பார்த்துக்கொள்வார் என்ற கையலாகத தனமான பேச்சுகளே உள்ளன.

சைவசமயத்தில் வேத ஆகமங்களே முதல் நூல். இது அருளாளர்களின் சத்யவாக்கு.

வேதம் என்றால் வடமொழி வேதம்தான். தமிழ் வேதம் கிடையாது. தமிழில் வேதம் இருந்தது என்பது கற்பனையே.

இக்கருத்தை பன்னெடுங்காலம் நமது சைவசமயம், நமது அருளாளர்களும், நாயன்மார்களாலும் குருவார்த்தை மாறாமல் மரபுரீதியாக போற்றி பாதுகாத்துவந்தனர்.

எண்ணிலடங்கா அருளாளர்களும் சைவசித்தாந்த ஆசிரியர்களும், பட்டினத்தார், அருணகிரியார்,குமரகுருபரர், தாயுமானவர், தருமை ஆதின குருஞானசம்பந்த பரம்பரை, திருவாவடுதுறை நமச்சிவாய மூர்த்திகள் பரம்பரை, மாதவசிவஞான சுவாமிகள், நாவலர்பெருமான், மகாவித்வான் பிள்ளை அவர்கள். கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாச்சாரியார் என இவர்களை போன்ற பல மஹான்கள் வாழையடி வாழையாக சைவமரபினையும், அதன் பெருமைகளையும், சைவசமய ஒற்றுமைகளையும் பேணிகாத்தும் கடைப்பிடித்தும் வந்தனர்.

நம் பாரததேசத்தில், ஆங்கிலேயே #கிழக்கிந்தியகம்பனியின் நிர்வாகத்தில் இருந்து விலகி நேரடி பிரிட்டிஷ் அரசு உருவான 1857 ம் ஆண்டுமுதல் கிருத்துவ மாதமாற்ற கும்பல் வெகுவேகமாக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

அவர்கள் மதமாற்ற பசப்புக்கு எளிதில் வழிகொடுத்த மாநிலம் தமிழகத்தின் தென்பகுதிகள்.தங்கள் மதமாற்றத்துக்கு துணையாக இருக்க வேதங்களை தவறாக அர்த்தம் கற்ப்பித்தும், பிராமணர்களை தவறாக சித்தரித்தும், நமது வழிபாட்டு முறைகளை கேவலமாக எழுதியும் இன, மொழி, வழிபாட்டுரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தனர்.

இதில் #வேதத்தை இகழ்ந்தும், தூற்றியும் பல பிரசுரங்கள் அக்காலத்தில் வெளிவந்தன.இதில் தமிழ் சைவர்கள் சிலரும், சில தமிழ்வாதிகளும் இந்த மாயபிரச்சாரத்தில் சிக்கி வேதத்தை #இகழத்தொடங்கினர்.

வேதத்தை இகழத்தொடங்கிய சைவர்களுக்கு தாங்கள் கொண்டாடும் #தேவாரத்தில் உள்ள வேதம், மறை, வேள்வி போன்ற வாக்குகள் நெருடலாக இருந்தன.அதேநேரத்தில் வேதங்களை இகழ்ந்து பிரச்சாரம் செய்தால், மற்றவர்களில் இருந்து வேறுபட்டவராக, ஒரு முற்போக்காளனாக, மதமாற்ற கைகூலிகளால் ஏதேனும் லாபம் அடையலாம் என்ற நோக்கில்,சிந்தித்தனர்.

வேதங்களை புகழ்ந்தால் அது தமிழுக்கு விரோதம் என்பதுபோல் அக்காலம் சித்தரிக்கப்பட்டது.

அந்நிலையில் சில தமிழ் சைவர்கள், தேவாரங்களில் வரும் மறை, வேதம் என்பது வடமொழி இருக்காதி வேதங்களை குறிக்காது என்று கலகத்தை தொடங்கினர்.

1900 ஆம் ஆண்டுகளுக்கு பின் சைவத்தில் தோன்றிய #முதல் #பிரிவினை கலகம் இதுவே.அதுவரை நம் சைவசமயத்தில் இப்படியான கலகமோ பிரிவினைகளோ இல்லை.

இந்த கலகத்தை முதலில் ஆரம்பித்தவர் #வேதாசலம் என்ற மறைமலை.இவர் திருமுறையில் வரும் நான்குவேதம் என்பது, தொல்காப்பியம், திருக்குறள், இறையனார்அகப்பொருள் , சிவஞானபோதம் என்ற நான்கை குறிக்கும் என்றார்.

இவர் வாதம் அனைவரையும் சிரிக்கவைத்தது.யாழ்ப்பாண சைவர்கள் இலங்கை வந்து மறைமலைகள் இதை நிறுவவேண்டும் என்று அழைத்தனர்.தேவார காலத்திற்க்கு பின்பு தோன்றிய. சிவஞானபோதம் எவ்வாறு திருமுறைகளில் வரும் மறைகளை குறிக்கும் என்று கேள்வி எழுப்பனர்.ஆனால் மறைமலை தன் போலிபிரச்சாரத்தை தொடர்ந்து செய்துவந்தார்.

இந்நிலையில் , தேவாரங்களில் உள்ள மறை என்பது தமிழ்வேதம் என்று நிறுவ மீண்டும் ஒருவர் வந்தார்.அவர்தான் திருநெல்வேலி கா.#சுப்பிரமணியம்பிள்ளை என்ற கா.சு.பிள்ளை.

இவர் ஒரு புது யுக்தியை கண்டார்.தேவாரத்தில் வரும் மறை என்பது இது இது என்றால்தானே பிரச்சனை, எனவே தேவாரத்தில் வரும் மறை என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கை குறிக்கும். அவை #கடல்பொங்கிய போது தமிழ் வேதங்கள் எல்லாம் கடலில் கரைந்து காணாமல் போய்விட்டது என்று ஒரே போடு போட்டார்.

மறைமலை போன்று இவை இவை தமிழ்வேதம் என்றால்தானே பிரச்சனை.தமிழ் வேதம் கடலில் கரைந்துவிட்டது என்று கூறிவிட்டால் அப்புறம் என்ன பேச்சுக்கு வேலை.

இவ்வாறு சைவத்திருமுறைகளில் வரும் மறை, வேதம் என்பது தமிழ் வேதங்ககளை குறிக்கும், அவை கடலழிவில் காணாமல் போய்விட்டது என்ற கருத்தினை நிருபிக்கும் வகையில்,   #திருநான்மறைவிளக்கம்   *என்ற நூலை எழுதி வெளியிட்டு சைவசமயத்தில் முதல் பிரிவினை கலகத்தை தொடங்கினார்.

நமது தமிழகத்தில் சைவம், வைணவம் என்று இருசமயங்கள்.

சைவத்தில் நாயன்மார்கள் பாடிய தேவாரம் உள்ளதுபோல், வைணவத்தில் ஆழ்வார்கள் பாடிய தமிழ் பிரபந்தங்கள் உள்ளன.நாயன்மார்களும், ஆழ்வார்களும் முன் பின் என்று சமகாலத்திலேயே வாழ்ந்தனர்.தேவாரத்தில் வரும் மறை என்பது தமிழ் வேதம் என்றால், ஆழ்வார்கள் பிரபந்தத்தில் வரும் மறை என்பதும் தமிழ்வேதமாகத்தான் இருக்கவேண்டும்.

ஆனால் #வைணவர்கள் ஆரம்பகட்டத்திலேயே தமிழ்வேதம் என்ற போலியை நிராகரித்துவிட்டனர்.ஆழ்வார்கள் பிரபந்தத்தில் வரும் மறை என்பது, வடமொழி இருக்காதி வேதங்களே என்பதில் தெளிவாக #வைணவர்கள் இருந்தனர்.

எனவே தமிழ் சைவத்திற்க்கு ஒரு வேதமும், தமிழ் வைணவத்திற்க்கு ஒரு வேதமும் தமிழகத்தில் இருந்திருக்க முடியாது.எனவே கா.சு.பிள்ளை கூற்று போலியானது.

கா.சு.பிள்ளை இவ்வாறு தமிழ் வேதம் என்ற கலகத்தை ஏற்படுத்தியதைக் கண்டு கலங்கிய மலைக்கோட்டை #சாம்பசிவம் பிள்ளை என்பவர் தனது 80 வயதில், அருளார்களின் வாக்குகளையும், வரலாறுகளையும் ஆதாரமாக்கி சைவமரபு காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கில்,
1926 ஆம் ஆண்டு*"  #திருநான்மறைவிளக்கஆராய்ச்சி*" என்ற 240 பக்கம் கொண்ட நூலை ஒரு ரூபாய்க்கு வெளியிட்டு பெரும் சிவப்புண்ணியத் தொண்டினை செய்தார்.

சிவத்திரு சாம்பசிவபிள்ளை அவர்கள் நூல் வெளியிட்ட பின் மெய்யடியார்கள் அனைவரும் உண்மையை உணர்ந்து சைவசமய போலிபிரச்சாரத்தை தூக்கிஎறிந்தனர்.

சாம்பசிவம் அவர்கள் நூல் சைவசமயத்தில் ஐம்பது ஆண்டுகள் #போலிப்பிரச்சாரத்தை துடைத்து எறிந்தது.

அதன்பிறகு 1936 ல் அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமி குருக்கள் அவர்கள் #வேதாகமநிரூபணம் என்ற நூலை எழுதி வெளியிட்டு வேதம் பற்றிய போலி பிரச்சாரங்களை துடைத்தெறிந்தார் .

1940 வாக்கில் ஸ்ரீ ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் பல நூல்களை வெளிட்டு சைவசமயத்தில் மீஷனரி வாரிசுகள் ஏற்படுத்திய பல குழப்பங்களை நீக்கினார்.

இவர்கள் தொண்டால் சைவசமயம் பிழைத்தது.ஆனால் 1967 க்கு பிறகு திராவிட ஆட்சிகள் ஆரம்பித்த பின் சிறு சிறுக சைவசமயத்தில் பழைய கலகம் ஏற்படுத்த சில புல்லுருவிகள் தோன்றினார்கள் .

அவர்கள் சிறுசிறுக வளர்ந்து 2000 ம் ஆண்டுக்குப்பின் சைவசமயத்தில் பற்றுள்ள மெய்யடியார்களின், அறியாமையை மூலதனமாக்கி, உணர்வுகளை தூண்டி, தமிழ் வேதம், தமிழ் ஆகமம் என்று பிரச்சாரம் செய்து சைவமரபை சீர்குலைக்கும் செயலை, புகழுக்கும் பொருளுக்கும் ,பிழைப்புக்கும் ஆசைபட்டு செய்துவருகிறார்கள்.

முக்கியமாக வேதம் பற்றிய பல பொய்யுரைகளை பரப்பிவருகிறார்கள்.ஆனால் இதற்க்கான எதிர்வினை கடந்த 30ஆண்டுகளாக மடங்களோ, சிவாச்சாரியர்களோ ,மரபுச்சைவர்களோ எதுவுமே ஆற்றவில்லை.

ஸ்ரீ திருப்பனந்தாள் ஆதினம் மட்டும் அவர்கள் தனது தள்ளாத 80 வயதில் 2006 ஆம் ஆண்டு, #வேதநெறிதழைத்தோங்க மிகுசைவத்துறைவிளங்க.
#மெய்யும்பொய்யும் என இருநூல்களை எழுதி வெளியிட்டார்.

இவர்கள் இந்நூல்களை வெளியிட்டதால் ஒரு மடாதிபதி என்றும் பாராமல் பலர் இகழ்ந்தனர். பல சங்கடங்களை சந்திக்கவேண்டியதாயிற்று.

சைவசமயத்தில் வேதம் பற்றிய இகழ்ச்சிக்கு இடமே இல்லை. தேவாரங்களில் வரிக்கு வரி வேதங்கள் போற்றப்பட்டுள்ளன.தமிழில் வேதம் என்பது பொய்பிரச்சாரம்.கற்பனை கட்டுக்கதை.

இப்படியான நிலையில் வேதங்களை இகழ்வது என்பது தகாது. அதிலும் #சைவவேடத்தில் தேவாரதிருமுறைகளை தங்கள் உயிர் என போற்றுவதாகக் கூறிக்கொண்டு, அதே தேவார வாக்குகளுக்கு மாறாக வேதங்களை இகழ்வது என்பது எத்தகைய கொடூர புத்தி.எத்தகைய சைவசமய துரோகம்.நரகத்திற்க்கும் மேலான தண்டனை அல்லவா கிட்டும்.

வழிபாடு சார்ந்து மனிதர்களிடம் கருத்து மாறுபடலாம். ஆனால் அருளாளர்களில் வாக்குகளுக்கு பொய்யான அர்த்தம் கற்பித்து பரப்புவது என்பது பஞ்சமாபாதகத்திலும் மேலான குருதுரோகம்.

சைவவேடம்கொண்டு, சைவசமய அருளார்கள் வாக்குகளுக்கு மாறாக பிரச்சாரம் செய்யும் இவர்களை சிவபெருமான்தான் மன்னிப்பாரா?

தேவார ஆசிரியர்கள்தான் இவர்களுக்கு நற்கதி வழங்குவார்களா?

இதையெல்லாம் கண்டும் எதிர்வினை ஆற்றாது கையலாகதனமாய் இருக்கும் என்னைபோன்ற சைவர்களுக்குத்தான் இறைவன் அருளவாரா?
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேய சிவம்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard