New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Keeladi


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Keeladi
Permalink  
 


 

How technology is guiding the search of Sangam-era bricks

10 Priority Zones Spread Over 450 Hectares And 110 Locations Were Zeroed In On Using Latest Techniques

Archeaology today is as much about technology as it is about history with new tools helping unravel the past. From radiocarbon dating and remote sensing techniques, the interdisciplinary field of archaeology has been relying heavily on some of the state-of-the-art technologies including LiDAR (Light Detection and Ranging), photogrammetry and DNA analysis.

At Keeladi, where the cultural mound extends to around 110 acres and archaeologically important places are scattered over an area of 15sqkm, the Tamil Nadu state archaeology department used multiple technological options to explore and identify spots for excavation.

Before work on the ground, a satellite imagery analysis was conducted along with a geophysical survey using magnetometer and thermo mapping using unmanned aerial vehicle survey. This was followed by ground penetrating radar survey to carryout systematic archaeological exploration during the fifth phase of excavation at Keeladi.

As a first step, the entire Keeladi cluster including adjoining habitations of Konthagai, Agaram and Manalur was earmarked for the study. Spatial and nonspatial data for the study area were generated from different sources such as geological map, remote sensing data and satellite images. Since the antiquities unearthed in the previous phases comprised of pottery items and metal tools, an integrated geospatial modelling was used to identify mineral-rich zones within the study area. A predictor model was developed to combine the evidence patterns of higher values of clay, ferrous oxide and thermal values to assess tangible spatial distribution of the anomalies in the study area.

Through this exercise, 10 priority zones spread over 450 hectares and 110 locations were zeroed in on. Next, officials from the Institute of Geomagnetism undertook a geophysical survey by using magnetometer. In recent years, magnetometers have been used for exploration at numerous archaeological sites around the world to detect such features as buried walls & structures, pottery, bricks, roof tiles, fire pits, buried pathways, tombs, buried entrances, monuments, inhabited sites or even an area of more intensive habitation.

A magnetometer survey maps the distribution of magnetic minerals in the Earth’s crust. Anomalies at archaeological sites are a consequence of the contrast in magnetic properties between the features of interest and the surrounding medium. In terms of the geomagnetic point of view, the Keeladi archaeological site falls at low geomagnetic latitude, meaning very close to magnetic equator. The resulting map suggested moderately magnetized magnetic sources in the sub-surface. This led to the discovery of a wall-like structure along a straight line with probable breaks in between with a length of 350m and width of 20m. To narrow down the ideal spots to carry out excavations, a non-invasive geophysical tool, ground penetrating radar (GPR) was commissioned.

GPR surveys provide a near continuous record of sedimentary structures below the water table. Armed with these findings, ongoing excavations at Keeladi are being carefully taken up so that maximum exposure of buried walls and structures could be achieved. Efforts are on to improve the processes associated with the technical execution and it is aimed to bring perfection and increase the accuracy of the findings in the near future.

Considering this initiative being the maiden attempt by the Tamil Nadu government, there is considerable scope for improvement in the processes adopted as well as in enhancing the accuracy levels. By suitably combining those accumulated traditional wisdom available with the archaeologists, a detailed protocol for archaeological exploration and excavation can be evolved.

(The author is principal secretary and commissioner of archeology)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கீழடியில் கிடைத்த உத்திரன், திஸன், இயனன், சுராமா போன்ற பெயர்களுக்கு என்ன பொருள்?

மகாபாரதத்தோடு , குறிப்பாக உத்தர குமாரனோடு பாண்டியர்கள் தங்கள் மூதாதையர்களைத் தொடர்புபடுத்திப் பேசுகிறார்கள். 8-9 ஆம் நூற்றாண்டுப் பட்டயங்களில் விராடபர்வ ஆனிரை மீட்பைத் தம் குல முன்னோரின் செயலாகப் பாண்டியர்கள் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்

உத்திரம் என்பது வடமொழிப்பெயர் என்ற குறிப்பு சங்க இலக்கியத்திலேயே உள்ளது.

உத்திரம் என்றால் வடக்கு என்று பொருள்! உருத்திரன் வேறு! உத்திரன் வேறு! பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்தது விராடதேசத்தில்! அந்த விராடநாட்டின் இளவரசன் உத்திரன்! மஹாபாரதப்போரில் அவன் வீரமரணம் அடைந்தான். இளவரசி உத்திரை! உத்திரை அர்ஜுணன் குமாரன் அபிமன்யுவை மணந்தாள! அவளது கர்ப்பத்தில் பரீக்ஷீத் இருந்த போது துரோணகுமாரன் அஸ்வத்தாமன் பிரம்மாஸ்த்திரத்தை கருவின் மீது ஏவினான்! ஶ்ரீ கிருஷ்ணர் தமது சுதர்சன சக்கரத்தினாலே கருவைக்காத்தான்! ஏற்கனவே இளம்பாண்டவர்கள் அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டதால் மிஞ்சிய பரிக்ஷீத் யுதிஷ்டிரருக்குப்பின்னர் அரசேற்றார் என்பன மாபாரத செய்திகளாம்!

Ramachandran நாளொடு பெயரிய விழுமரத்துக் கோளமை நடுநிலை--என நெடுநல்வாடை குறிப்பிடுகிறது. உத்தரம் என்ற நாளின்(நட்சத்திரத்தின்) பெயர் அமைந்த கட்டடப்பகுதி- அதாவது உத்திரக்கட்டை எனப்பொருள். இது உச்சி உச்சம் உத்தமம் போன்ற பல சொற்களோடு உறவுடையது. வடக்கு என்ற பொருளும் உண்டு.

Kanagaraj Easwaran Mani Mani வடக்கு வேறு தெற்கு வேறு என்பவர்கள்தான் அதற்கு ஆதாரப்பூர்வமாக பதில் சொல்லவேண்டும். எப்போது வடசொல் இங்கே வந்தது? யார்கொண்டுவந்தார்கள்? எப்படி வடசொற்கள் இங்கே தமிழிலே கலந்தன? என்ற வினாக்களுக்கு கதைவிடாமல் ஆதாரப்பூர்வமாக பதில் சொல்லவேண்டும்.

K. Rangan உத்திரன் என்பது.. (அபிமன்யு மனைவி ) உத்திரையின் மகனான் பரிக்ஷித்தையும் குறிக்கும். இளையோன் எனும்.பொருளிலும் வரும். இதில் முக்கியமாக.தெரிவது
உத்திரன் எனும் சொல் வடமொழியில் தான் வழங்கப்படுகிறது.
உத்தம.புருஷன் உத்தர..புருஷன்.உத் புருஷன். (எனும் கம்பேரிடிவ் டிகிரீஸ்)

இதுப்படி பார்க்கும்போது
உத்தம.புருஷன்.என்பவன்.எம்பெருமான்
உத்தர புருஷன்
என்பது நித்யசூரிகள்
உத் புருஷன என்பது
முக்தர்களை குறிக்கும்

K. Rangan சுராமா.. சுர என்பது தேவர்களை குறிக்கும்..
மா.. என்பது.மஹல்க்ஷ்மி ..
அல்லது எந்த ஐஸ்வரியத்தையும் குறிக்கும்.. தேவர்ளில் ஐஸ்வர்யம் வாய்ந்தவன் இந்திரன்.. ஆக

சுரானாம்.மா.. அல்லது ராமனில் மிக.உயர்ந்தவன்.சு ராமா. பரசுராமன் பலராமன் என.பல.ராமன் இருந்தாலும்..உயர்ந்தவன் ஸ்ரீராமனே.

Jayavarma Rudra Cholanar

 

Jayavarma Rudra Cholanar கீழடி அகழாய்வில் சமயம் (இந்து) சார்ந்த எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். அப்படி என்றால் தமிழர்கள் வடமொழி மற்றும் கடவுள் வழிப்பாடு ஏதும் இல்லாமல் இருந்தார்கள் என்று சொல்லவந்தார்கள். ஆனால் நேற்று ஒருவர் இந்த உத்திரன் மற்றும் ஸ்வஸ்திக் பற்றி கீழடி அகழாய்வில் கிடைத்ததை பற்றி பதிவு செய்து அவர்களின் பேதைத் தனமான நம்பிக்கையை தொலைத்தார்கள்.
 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..!

http://www.unmaionline.com/index.php/5043-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html

a16.jpg

பேராசிரியர் இரா.மதிவாணன்

இயக்குனர், சிந்துவெளி எழுத்தாய்வு  நடுவம்

கீழடி அகழ்வாராய்ச்சிகள், சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகள் ஆகியவை ஒரே இனம், ஒரே மொழி பேசிய திராவிட நாகரிகத்துக்கு உரியவை என அறிஞர்களால் நிறுவப்பட்டு வருகிறது.

1920-ல் சிந்துவெளி நாகரிகம் குறித்த ஜான் மார்ஷின் கண்டுபிடிப்புகளை போலவே 2014 முதல் நடைபெற்று வரும் வைகைச் சமவெளி கீழடி கண்டுபிடிப்புகளும் உலக அறிஞர்களின் பார்வையைக் கவர்ந்துள்ளன. ரோமிலா தாப்பர் என்னும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கீழடி கண்டுபிடிப்புகள் தமிழர் வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கும் எனக்கூறியுள்ளார்.

கீழடியில் இதுவரை நடந்த நான்கு அகழ்வாராய்ச்சிகளில் மொத்தம் 13ஆயிரத்து 658 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். சிந்துவெளியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை விட, ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகள் பெரியவை. அணிகலன் ஏற்றுமதியில் சிந்துவெளியை விட கீழடி போன்ற தமிழக நகரங்களின் ஏற்றுமதி அதிகமானது. குண்டூசியின் தலையைவிட சிறிய பாசிமணிகளில் தலைமயிரைவிட குறுகிய துளையிட்டு, உலக நாடுகளில் விற்ற நேர்த்தியை கீழடியில்தான் காண முடிகிறது. 138 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் தான் கீழடி அகழ்வாய்வு நடந்து வருகிறது. சிந்து வெளி நகர அமைப்பைப் போன்றே கீழடியிலும் திட்டமிட்ட நகர அமைப்பு, உறை கிணறு, குளியலறை, கழிப்பறை, புதை சாக்கடை ஆகியவை காணப்படுகின்றன. கொல்லன் உலைக்களம் செம்புருக்கவும் பயன்பட்டது, செம்பு வெட்டி எடுக்கப்பட்ட பொதிய மலை ‘செம்பின் பொருப்பு’ எனப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் செம்புக்காலம் இல்லையென்று கூறுவது பொருந்தாது. அம்பில் செருகும் கூரிய எலும்பு முனைகள் வேட்டைக்கால நாகரிகத்திலிருந்தே தமிழர்களின் நாகரிகத் தொன்மை விளங்கியதைக் காட்டுகிறது.

a17.jpg

கீழடி அகழ்வாராய்ச்சி

கீழடியிலிருந்தே சிந்து வெளி நாகரிகம் வடக்கு நோக்கிப் பரவியது என்பதை அது உறுதிப் படுத்துகிறது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் தென் பிராமி எனப்படும் தமிழி எழுத்தில் வேந்தன், பேரையன், இயனன், ஆதன் போன்ற பெயர்களைப் படித்துக் காட்டியுள்ளனர். ஆனால் சிந்துவெளி எழுத்துகளில் எழுதப்பட்ட மூன்று பானை ஓடுகளை அவர்கள் படிக்கவில்லை. அவற்றில் உள்ள காவன், உன்னு, வக்கன் உன்னப்பன் போன்ற சிந்துவெளிப் பெயர்களை நான் படித்துக்காட்டியுள்ளேன். ஆதிச்சநல்லூரில் நான் கண்டெடுத்த பானை ஓட்டில் ‘மணக்கன்’ என்னும் பெயர் சிந்துவெளி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது, அதனை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இயக்குனரிடம் ஒப்படைத்தேன். நகரமைப்பு, செம்பின் பயன்பாடு உலகளாவிய வணிகம், எழுத்தறிவு பெற்ற கல்வி வளர்ச்சி, தாய் தெய்வ வழிபாடு. தாழியில் புதைத்தல் ஆகியவை கீழடிக்கும் சிந்துவெளிக்கும் உள்ள பொதுவான நாகரிக ஒப்புமைகள் எனலாம், இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் இரண்டுக்கு மட்டும் காலக்கணிப்பு செய்து, கீழடி நாகரிகம் கி.மு. 300 முதல் கி.மு. 200 வரை நிலவியது எனக் கணித்துள்ளனர். ஆயிரக்கணக்கான பொருள்கள் காலக்கணிப்பு செய்யப்படவில்லை. பழைய நாகரிகங்கள் மூன்று காரணங்களால் அழிகின்றன. அவை, வெயில்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் எனப்படும். மழை பெய்யாமல் வெயில் நீடித்த நீண்ட காலங்களிலும், பெருவெள்ளத்தில் நகரங்கள் மூழ்கிய போதும், போர், கொள்ளை நோய் போன்றவற்றால் குடிமக்கள் இடம் பெயரும் போதும் பழைய நாகரிகங்கள் அழிகின்றன. இருப்பினும் நூற்றாண்டுகள் கடந்தும், மக்கள் மீண்டும் அங்கே குடியேறுவதும் உண்டு. எனவே நகரத்தின் அழிவை அந்த மக்கள் இனத்தின் அழிவு எனக் கூறலாகாது.

a18.jpg

கேரளத்து தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர் செரியன் என்பவர் முசிறித் துறைமுக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்கள் அழகன்குளம் அகழ் வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களொடு நூற்றுக்கு நூறு ஒப்புமையாக உள்ளன என்கிறார்.

a19.jpg

முதுமக்கள் தாழி

 a21.jpg

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

தமிழ்நாட்டில் 44 இடங்கள் அகழாய்வு செய்யப்பட வேண்டும் தமிழக மூவேந்தர்கள் எகிப்து, மத்திய தரைக்கடல் நாடுகள் உள்ளிட்ட மேலைக்கடல் நாடுகளிலும் சீனா முதலிய கீழைக்கடல் நாடுகளிலும் மொத்தம் 40 துறைமுகங்களில் கடல் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் எனவும் தமிழ்நாட்டுத் துறைமுகங்கள் உலகத் துறைமுகங்களுக்கு நடுநாயகமாக வணிகத் தலைநிலமாக விளங்கின என்றும் கூறுகிறார். வைகைச் சமவெளியில் உள்ள 293 இடங்களில் 90 இடங்கள் அகழ்வாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. கீழடி அகழ்வாய்வில் முதன்முதலில் ஈடுபட்ட அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையும், தமிழக தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிக்கையும் விரைவில் வெளியிடப்பட்டால், பல உண்மைகள் வெளிவரும்.

 திருப்புவனம் அருகே கீழடியில் தற்போது நடைபெற்ற 4ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 8 அடுக்கு உறை கிணறுகள், கத்தி, கோடரி, கண்ணாடி மணிகள், தாயக்கட்டைகள், அணிகலன்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடி போன்று ஆதிச்சநல்லூரை அடுத்த குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படும் கொங்கராயன்குறிச்சி மேட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும். வரலாற்றை மறந்த இனம் பிற நாட்டாருக்கு அடிமையாகி விடும் என்பதால் தமிழ் வரலாற்று மீட்டெடுப்பு தமிழினம் தலை நிமிரும் காலத்துக்குப் பச்சைக்கொடி காட்டுவதாகும்.

 

நன்றி: ‘தினத்தந்தி’ - 21.3.2019



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கீழடி அகழாய்வு முடிவை வைத்து பலத்த விவாதங்கள்!

 
 

தமிழ்நாட்டின் மதுரைக்கு அருகில் கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழக தொல்லியல் துறை வெளியிட்டதுதான் தாமதம்... இந்த ஆய்வுகளை முன்வைத்து இடைவிடாத விவாதங்கள் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் அனல்பறக்கின்றன.

சென்னை அருகே அதிரம்பாக்கத்தில் பழங்கற்காலத்தைச் சேர்ந்த ஆதிமனிதர்கள் சுமார் 12இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர் என்பதை அகழாய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. இதேபோல் வரலாறு குறிப்பிடும் இடைக் கற்காலம் தொடங்கி அத்தனை கால மனிதர்களும் இந்த தமிழர் பெருநிலப்பரப்பில் வாழ்ந்தனர் என்பதற்கான ஏராளமான அகழாய்வு சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

இந்த அகழாய்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதுதான் கீழடி முடிவுகள். கி.மு 6-ம் நூற்றாண்டில் வைகை நதிக்கரையில் எழுத்தறிவும் வாழ்வியல் வளமும் கொண்ட மிகச் செழுமை வாய்ந்த உச்சகட்ட நகர நாகரிகம் செழித்தோங்கியிருந்ததை 4ஏக்கர் பரப்பளவிலான அகழாய்வுகளில் கிடைத்த ஆயிரக்கணக்கான பொருட்கள் நிரூபித்திருக்கின்றன.  இப்பொருட்கள் அனைத்துமே உரிய அறிவியல் முறை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தமிழக தொல்லியல் துறையால் 'கீழடி- வைகை நதிக் கரையில் நகர நாகரிகம்' என்கிற தலைப்பில் தமிழ், ஆங்கிலத்தில் அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த கீழடி அகழாய்வு முடிவுகளை முன்வைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கோணங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த வாதங்கள், எதிர்வாதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு இது:

கீழடியில் இதுவரையில் வழிபாடு சார்ந்த எந்த ஒரு பொருளும் கிடைக்கவில்லை என்பதால் ஆதி தமிழர்கள் மதமற்றவர்களாக இருந்தனர் என்கின்றனர் சிலர். கீழடியில் இதுவரை குறுகிய பரப்பளவில்தான் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதனால் கீழடி தமிழர்கள் மதமற்றவர்கள் என்கிற முடிவுக்கு உடனே வருவது சரியல்ல என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

 

 
 

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களில் ஆதன், குவிரன் என்ற பெயர்கள் தமிழி அல்லது தமிழ் பிராமி எழுத்தால் எழுதப்பட்டுள்ளன. தமிழ் பிராமி என்று ஏன் உச்சரிக்க வேண்டும்? தமிழி என்றே எழுதுவதாலும் உச்சரிப்பதாலும் என்ன இடர்பார்டு வந்து  விடப் போகிறது?

குவிரன் என்பது வடமொழிச் சொல்லாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் சிலர். வணிகப் பொருட்களை குவித்து வைத்து வியாபாரம் செய்த நபரை குவிரன் என தமிழர்கள் குறித்திருக்கக் கூடும். ஆகையால் குவிரன் என்பது தமிழ்ப் பெயர்தான் என்கின்றனர் மற்றையோர்.

கீழடியை திராவிடர் நாகரிகம் என சொல்வது எப்படி சரியாக இருக்கும்? அது தமிழர் நாகரிகம் என சொல்ல தயங்குவது ஏன்? வரலாற்றின் பக்கங்களில் சிந்துவெளியை திராவிடர் நாகரிகம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் தொடர்ச்சி என்பதால் கீழடியை திராவிடர் நாகரிகம் என குறிப்பிடுவது தவறு இல்லை.

தமிழ்தான் திரிந்து த்ரமிள், த்ரவிட, திராவிட என மருவியது. ஆகையால் திராவிடம் என்பது தமிழரையே குறிக்கும். ஆந்திரர்களை மட்டும் குறிக்கும் சொல்தான் திரிவடுகர் எனும் திராவிடர். அதனால் தமிழருக்கும் திராவிடருக்கும் தொடர்பு இல்லை என்கிறது மற்றொரு வாதம்.

வட இந்திய கல்வெட்டுகளில் பெரும்பாலும் தமிழர்களை திராவிடர்கள் என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். ஆதன் என்பது தமிழ்ப்பெயர்தான்.. ஆனால் நெடுஞ்சேரலாதன் போன்ற ஆதன் பெயர்கள் பொதுவாக சேர மன்னர்களைத்தானே குறிக்கின்றன. பாண்டியர் நாடாகிய மதுரையிலும் ஆதன் என்கிற பெயர் பொது தமிழ்ப்பெயராக இருந்ததா? இப்படியாக தொடர்கின்றன விவாதங்கள்.

கீழடி அகழாய்வு முடிவை வைத்து பலத்த விவாதங்கள்!

 
 

தமிழ்நாட்டின் மதுரைக்கு அருகில் கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழக தொல்லியல் துறை வெளியிட்டதுதான் தாமதம்... இந்த ஆய்வுகளை முன்வைத்து இடைவிடாத விவாதங்கள் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் அனல்பறக்கின்றன.

சென்னை அருகே அதிரம்பாக்கத்தில் பழங்கற்காலத்தைச் சேர்ந்த ஆதிமனிதர்கள் சுமார் 12இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர் என்பதை அகழாய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. இதேபோல் வரலாறு குறிப்பிடும் இடைக் கற்காலம் தொடங்கி அத்தனை கால மனிதர்களும் இந்த தமிழர் பெருநிலப்பரப்பில் வாழ்ந்தனர் என்பதற்கான ஏராளமான அகழாய்வு சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

இந்த அகழாய்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதுதான் கீழடி முடிவுகள். கி.மு 6-ம் நூற்றாண்டில் வைகை நதிக்கரையில் எழுத்தறிவும் வாழ்வியல் வளமும் கொண்ட மிகச் செழுமை வாய்ந்த உச்சகட்ட நகர நாகரிகம் செழித்தோங்கியிருந்ததை 4ஏக்கர் பரப்பளவிலான அகழாய்வுகளில் கிடைத்த ஆயிரக்கணக்கான பொருட்கள் நிரூபித்திருக்கின்றன.  இப்பொருட்கள் அனைத்துமே உரிய அறிவியல் முறை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தமிழக தொல்லியல் துறையால் 'கீழடி- வைகை நதிக் கரையில் நகர நாகரிகம்' என்கிற தலைப்பில் தமிழ், ஆங்கிலத்தில் அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த கீழடி அகழாய்வு முடிவுகளை முன்வைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கோணங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த வாதங்கள், எதிர்வாதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு இது:

கீழடியில் இதுவரையில் வழிபாடு சார்ந்த எந்த ஒரு பொருளும் கிடைக்கவில்லை என்பதால் ஆதி தமிழர்கள் மதமற்றவர்களாக இருந்தனர் என்கின்றனர் சிலர். கீழடியில் இதுவரை குறுகிய பரப்பளவில்தான் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதனால் கீழடி தமிழர்கள் மதமற்றவர்கள் என்கிற முடிவுக்கு உடனே வருவது சரியல்ல என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

 

 
 

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களில் ஆதன், குவிரன் என்ற பெயர்கள் தமிழி அல்லது தமிழ் பிராமி எழுத்தால் எழுதப்பட்டுள்ளன. தமிழ் பிராமி என்று ஏன் உச்சரிக்க வேண்டும்? தமிழி என்றே எழுதுவதாலும் உச்சரிப்பதாலும் என்ன இடர்பார்டு வந்து  விடப் போகிறது?

குவிரன் என்பது வடமொழிச் சொல்லாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் சிலர். வணிகப் பொருட்களை குவித்து வைத்து வியாபாரம் செய்த நபரை குவிரன் என தமிழர்கள் குறித்திருக்கக் கூடும். ஆகையால் குவிரன் என்பது தமிழ்ப் பெயர்தான் என்கின்றனர் மற்றையோர்.

கீழடியை திராவிடர் நாகரிகம் என சொல்வது எப்படி சரியாக இருக்கும்? அது தமிழர் நாகரிகம் என சொல்ல தயங்குவது ஏன்? வரலாற்றின் பக்கங்களில் சிந்துவெளியை திராவிடர் நாகரிகம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் தொடர்ச்சி என்பதால் கீழடியை திராவிடர் நாகரிகம் என குறிப்பிடுவது தவறு இல்லை.

தமிழ்தான் திரிந்து த்ரமிள், த்ரவிட, திராவிட என மருவியது. ஆகையால் திராவிடம் என்பது தமிழரையே குறிக்கும். ஆந்திரர்களை மட்டும் குறிக்கும் சொல்தான் திரிவடுகர் எனும் திராவிடர். அதனால் தமிழருக்கும் திராவிடருக்கும் தொடர்பு இல்லை என்கிறது மற்றொரு வாதம்.

வட இந்திய கல்வெட்டுகளில் பெரும்பாலும் தமிழர்களை திராவிடர்கள் என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். ஆதன் என்பது தமிழ்ப்பெயர்தான்.. ஆனால் நெடுஞ்சேரலாதன் போன்ற ஆதன் பெயர்கள் பொதுவாக சேர மன்னர்களைத்தானே குறிக்கின்றன. பாண்டியர் நாடாகிய மதுரையிலும் ஆதன் என்கிற பெயர் பொது தமிழ்ப்பெயராக இருந்ததா? இப்படியாக தொடர்கின்றன விவாதங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் - வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்!

மதுரை கீழடியில் பழங்கால தமிழர் எழுதும் பழக்கம் உள்ள படிப்பறிவு பெற்றவர்களாகவும், மத கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவந்தவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

kalaignarseithigal%2F2019-06%2F60daad3d-
 
Premkumar
Updated on : 20 September 2019, 06:08 PM

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து, ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பத்து அடியில் குழிகள் பறித்து தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்களின் கல்வியறிவை பறைசாற்றும் விதமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்பால் செய்யப்பட்ட எழுத்தாணி ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கீழடியில் செய்யபட்டு வரும் ஆய்வு குறித்து தமிழக தொல்லியல்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வைகை நதிக்கரை நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடபட்டுள்ளது.

2,600 ஆண்டுகள் பழமையானது நம் கீழடி!

குறிப்பாக. கடந்த 2018ம் அண்டு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த மாதிரிகளை சேகரித்த தொல்லியல் துறை, அமெரிக்காவின் ‘பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வக நிலையத்திற்கு’ அனுப்பி வைத்தது.

அந்த ஆய்வக சோதனையில், இந்த மாதிரிகளின் காலம் கி.மு.580 என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழடியில் நகர உருவாக்கம் கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என தெரியவருகிறது.

மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் - வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்!
 

தமிழர்களின் எழுதும் பழக்கம்

கி.மு. 6-ம் நூற்றாண்டளவிலேயே தமிழ் சமூகம் எழுத்தறிவு பெற்ற விளங்கியுள்ளதும் இந்த ஆய்வில் உறுதியாகிறது. இது கீழடியில் கிடைத்த உடைந்த பானைகளில் உள்ள எழுத்து வடிவம் மூலம் தெரிந்துக் கொள்ளமுடிகிறது.

கீழடியில் கண்டெடுக்கப்பட்டு கீறல் ஓடுகள் குறித்த ஆய்வில், 1001 பானை ஓடுகள் இந்தக் காலத்தில் இருந்தது என்று கூறுகின்றனர்.

கீழடி அகழாய்வில் உள்ள குறீயிடுகள் தமிழ் பிராமி எழுத்து குறீயிடு ஆகும். இவற்றில் குவிரன் ஆத[ன்], ஆதன் போன்ற பெயர்களும், முழுமைபெறாத சில எழுத்துகளுடன்கூடிய உடைந்த பானை ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில் வரும் ‘ஆதன்’ என்ற பெயர் ‘அதன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எலும்புகளாலான எழுத்தாணி கண்டடெடுக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மூத்தகுடியான தமிழர்கள், மொழியையும், அறிவையும் கொண்டு நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்பதற்கு கீழடி ஒரு சாட்சி.

மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் - வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்!
 

மத அடையாளம் இல்லாமல் வாழ்ந்த தமிழர்கள்!

கீழடி அகழாய்வுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள், 35 காதணிகள், அணிகலன்கள், தங்கம், செம்பு இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைத்தன.

ஆனால் இதில் கடவுள் வழிபாட்டுடன் தொடர்புடைய எந்த அடையாளமும் அங்கு கிடைக்கவில்லை என்று அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உலகில் முத்தகுடிகளான தமிழர்கள் மத்தியில், மதம் என்ற ஒன்று இல்லை என்பது நிரூபனமாகிறது. மேலும் ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதின் மூலம் தமிழ் சமூகம் மிகவும் தொன்மையான நாகரீகம் என்று கருதப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 சரித்திரக் கால சுத்தமானத் தமிழ்ப் பெயர்கள் யாவை?

 
 
 
 
1 பதில்
V.E. Kuganathan
V.E. Kuganathan, தொழில் முனைவோன் (2012-தற்போது)
 
 

வரலாற்றுரீதியான தமிழ்ப் பெயர்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றினைப் பார்ப்போம்.

(சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரிமுதல் பாகத்தில் இடம்பெற்ற கதைமாந்தர் பெயர்கள்.இவை யாவும் தூய தமிழ்ப்பெயர்களே)

ஆதன்..
செம்பன்..
நாகு..
கபிலர்..
நீலன்..
செம்பன்..
வேண்மான்..
எவ்வி..
வேள்பாரி..
பழையன்..
பழைச்சி..
கூழையன்..
செம்பன்..
முடியன்..
தேக்கன்..
வேலன்..
மதங்கன்..
மதங்கி..
ஆதினி..
அங்கவை..
சங்கவை..
வாரிக்கையன்..
உதியன்..

2. கீழடியில் கண்டெடுத்த சங்கத்தமிழ்க் குழந்தைப் பெயர்கள்:

*சேந்தன் ஆவதி= முருகத் தலைவன்

*திசன்= ஈழப் பெயர், தலைவன் *

*ஆதன்= ஆக்குபவன்/இறை

*உதிரன்= உயிர்ப்பு உள்ளவன்

*இயனன்= இறைவன்/ ஆக்குபவன்

*குவிரன்= காடு ஆள்வோன்

*கோதை= மாலை/ பூப் பெண்

3.சங்ககால மன்னர்களின் தமிழ்ப்பெயர்கள்(இவற்றில் மிகப்பெரும்பாலனவை தூய தமிழ்ப்பெயர்கள்)

சங்க கால அரசர்கள் - தமிழ் விக்கிப்பீடியா

4. சங்ககாலப் புலவர்கள் (தூய தமிழ்ப்பெயர்கள்)

சங்க காலப் புலவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா

மேற்கூறிய வரலாற்றுப் பெயர்களை குழந்தைகளிற்குச் சூட்டி தமிழை வாழவையுங்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard