New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை -ஈ.வெ.ராமசாமி நாயக்கர்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை -ஈ.வெ.ராமசாமி நாயக்கர்
Permalink  
 


வெங்காயம்! என்னடா தமிழ்! வெங்காயம்!!! (Post No.3321)

ce11a-evr2bstamp.jpg?w=600

Written  by London Swaminathan-  Date: 5  November 2016  Time uploaded in London: 17-45   Post No.3321

 Pictures are taken from various sources; they are only representational.  contact; swami_48@yahoo.com

 0cb1f-img_9327.jpg?w=600

தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை. அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை இல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை.”

 தமிழின் மூலமோதமிழ் இலக்கியத்தின் மூலமோதமிழ்ச் சமயம் பண்பாடு மூலமோ நாம் உலக மக்கள் முன்னனி வரிசையில் ஒருநாளும்  இருக்கமுடியாது.

இன்றைய நிலமையைவிட வேகமாக முன்னேறவேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம்.

 1957 ஆம் ஆண்டு மலேசிய தமிழ் முரசு பத்திரிக்கை மலரில் வெளியான ஒரு கட்டுரையில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழ் கலாசாரம் பற்றி தனது கருத்துகளைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார். அதை வெளியிட்ட பத்திரிகையே இது எங்கள் பத்திரிக்கையின் கருத்து அல்ல என்று ஈ.வெ.ரா.வை கை கழுவிவிட்டது!

 கட்டுரை நகலை இணத்துள்ளேன் அதை பெரிதாக்கி படிக்க இயலாதவர்களின் நலன் கருதி சில அம்சங்களை மட்டும் இங்கே மீண்டும் எழுதுகிறேன் (அவர் சொன்னபடியே)

 இவர் தமிழ் துரோகியா? தமிழ் அன்பனா என்று வாசகர்களே  முடிவு செய்யலாம்.

18807-img_9324.jpg?w=600

தினமணியில் வந்த ஒரு பழைய செய்தி

 திருச்சியில் பகுத்தறிவுப் பகலவர்களைப் பெற்றெடுத்த, “தாலி அறுத்த மாதர்” மகாநாட்டில் பேசிய  ஈ.வெ.ரா. திருவள்ளுவரைச் சாடியதை நாங்கள் தினமணியில் பெட்டிச் செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிட்டோ . (40 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தினமணி சீனியர் சப் எடிட்டராக வேலை பார்த்தபோது).

 எங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் கரஸ்பாண்டன்ட் கோபால ஐயர், ஈ.வெ.ராவுக்கு மிகவும் பிடித்த ஐயர்களில் ஒருவர். திருச்சியில் நடந்த திராவிடக் கழக மாநாட்டு விஷயங்களை அப்படியே ஆங்கிலத்தில் எழுதிக் கொடுப்பவர்.

 அவர் அனுப்பிய செய்தியைத்தான் நாங்கள் முதல்பக்கத்தில் பாக்ஸ் ஐயிட்டமாக BOX ITEM வெளியிட்டோம்.

 தெய்வம் தொழாள் (குறள் 55) —– என்னும் திருக்குறளைச் சொல்லி முதல் வரிசையில் அமர்ந்த பெண்களைப் பார்த்து நிங்கள் எல்லாம் பத்தினிப் பெண்கள்தானே? என்று ஈ.வெ.ரா. கேட்டார். அதுகளும் மாடு மாதிரி தலை அசைத்து ஆமாம் சாமி போட்டன. எங்கே பார்ப்போம்; வள்ளுவன் சொல்றான்— பத்தினிப் பெண்கள் எல்லாம் பெய் என்றால் மழை பெய்யுமாம்; நீங்கள் எல்லோரும் “பெய்” என்று சொல்லுங்கள் என்றவுடன் அதுகளும் “பெய்” என்றன. மழை பெய்யவில்லை. பார்த்தீர்களா வள்ளுவனின் மூடநம்பிக்கை என்று சொல்லி ஈ.வெ.ர. உரையை முடிக்க அந்தப் பெண்கள் மூஞ்சியில் ஈ ஆடவிலை. இப்பொழுது வள்ளுவன் சொன்னது தப்பா? அல்லது அதுகள் எல்லாம் பத்தினிகள் இல்லையா– என்ற ஒரு தரும சங்கடமான நிலையில் மகளிரைத் தள்ளிவிட்டார் பெரியார்.

 கீழே உள்ளதைப் படியுங்கள் இன்னும் வேடிக்கை பார்க்கலாம்:— xxxxx

 7bacf-img_9325.jpg?w=600

“மொழி என்பது மனிதனுக்கு அவ்வளவு ஒரு முக்கிய சாதனம் அல்ல. இயற்கையானதும் அல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவை இல்லை”. xxxxx

 நமக்கு சொந்த மொழி என்பது பிறந்த ஜாதியின் காரணமாக. எனக்குக் கன்னடம். மற்றும் சிலருக்குத் தெலுங்கு. மற்ற தமிழ்நாட்டுப் பெரு ம்பாலான மக்களுக்குத் தமிழ்.  xxxxx

 தமிழ்நாடு நம் சொந்த நாடு. ஆனாலும் அட்சி தமிழர்கள் அல்லாத அந்நியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அந்நியர்கள் பலர் ஒன்று சேர்ந்து நம்முடைய நாட்டை அடக்கி ஆள்பவர்களாக இருப்பதனால் — இந்தி மொழிதான் அட்சி மொழியாகவும் போதனா மொழியாகவும்……………… இது நமக்கு ஒரு மாபெரும் கெட்ட வாய்ப்பும் வெட்கப்படத்தக்கதுமான சம்பவமுமாகும். xxxx

காலம்சென்ற ஐக்கோர்ட் ஜட்ஜ் சதாசிவ ஐய்யர் குமாரர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் தலைமையில் மொழி என்னும் தலைப்பில்   (1939 ஆம் ஆண்டில் என்று ஞாபகம்) பேசியிருக்கிறேன். ஆங்கில எழுத்துக்களையே தமிழ் நெடுங்கணக்காக, தமிழ் அகரவரிசையாக எடுத்துக்கொள்ளலாமென்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ப தமிழ் எழுத்தையே எடுத்துக் கொள்ளலாமென்றும் சொன்னதோடு மற்றும்,

ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாகும் காலம் ஏற்பட்டால்தான் மிகவும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன் xxx

“இங்கிலீஷ் மொழியே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நீங்கள் பேசியவுடன் எல்லோரும் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் யாராவது இப்படிப் பேசியிருந்தால் கூட்டத்தில் பெரிய கலாட்ட செய்திருப்பார்கள் என்று 6,7 வருடங்களுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்பு மகாநாட்டிற்குப் பிறகு சி.என். அண்ணாதுரை என்னிடம் கூறினார். xxx

 f6c61-img_9326.jpg?w=240&h=320

நான் ஆங்கிலம் ஆட்சி மொழியாக வேண்டும் என்று சொன்னவுடம், மொழி வெறியர் சிலர், நீ யாருக்குப் பிறந்தாய்? என்று கேட்டனர்.

 அந்த மொழியைப் பேசவேண்டும் என்று சொல்லுவது நாம் ஆங்கிலேயனுக்குப் பிறந்ததாகும் என்றால், மற்றபடி காப்பி குடிப்பது முதற்கொண்டு ரயில், ஆகாய விமானம், ரேடியோ, டெலிபோன் , மருந்து முதலியவை ஆங்கிலேயனுடையது என்று தெரிந்து அனுபவிக்கிறோம். இதனால் எத்தனை முறை ஆங்கிலேயனுக்குப் பிறந்தோம் என்பதை சிந்தித்துப் பார்த்தால், மொழி பேசுவதனால் ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாக மாட்டோம் என்று சொல்லுவேன்.

தமிழின் மூலமோதமிழ் இலக்கியத்தின் மூலமோதமிழ்ச் சமயம் பண்பாடு மூலமோ நாம்  உலக மக்கள் முன்னனி வரிசையில் ஒருநாளும்  இருக்கமுடியாது.

இன்றைய நிலமையைவிட வேகமாக முன்னேறவேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம்.

 ஆங்கிலமே அரசியல் மொழியாகவும் போதனா மொழியாகவும் இருக்க வேண்டும். ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங் கணக்காவது அவசியம்ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம்பயத்தக்கது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 தமிழை எடுத்துக்கொண்டாலும் இன்று உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மையில் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறதுதமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை. அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை இல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை. அதாவது ஆரிய வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம்விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது மிகவும் அருமையாகதான் இருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்துக்கு முந்தியது என்று ஒப்புக்கொள்ளலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவும் என்ன பயனைக் கொடுத்திருக்கிறது. விஞ்ஞாநதிற்கு சிறிதும் பயன்படத்தக்கதாய் இல்லை. அறிவுக்கும் தக்கபடி பயனளிக்க முடியவில்லை.

 தமிழனின் பேச்சு மொழி”, “தாய் மொழி தமிழ்” — என்பதைத் தவிர தமிழுக்கு வேறு உலக முக்கியத்துவம் எதும் இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்கால நிலச் சின்னங்களாகவே காணப்படுகின்றனர்.”



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard