முஸ்லிம் மதம் மாறும் போதே சரியான முஸ்லிம் ஜாதிக்கு மாறலைன்னா பிசி கிடையாதாம், குரான், அல்லாஹ், ஷரியாவை விட பிசி சர்டிபிகெட் முக்கியம் என வழக்கு சம்பந்தப்பட்ட ஜாதி முஸ்லிம் ஜமாத்து மூலமா மாறணுமாம்
இந்துவாக இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது உட்பிரிவு குறிப்பிடப்பட வேண்டும் : பி.சி சான்றிதழ் கேட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
2019-09-01@ 00:06:23
சென்னை: இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது இஸ்லாம் மதத்தின் உட்பிரிவு குறிப்பிடப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கவில்லை என்றால் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சான்றிதழ் கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் ரில்வான். இவருக்கு திருமணமாகி 11 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், 24 மனை தெலுங்கு செட்டி பிரிவை சேர்ந்தவர். இவரது மனைவி ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர். இந்நிலையில், ரில்வான் கடந்த 2012ல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். புதுப்பட்டினம் ஜமாத்தில் மதம் மாற்றத்திற்கான பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தனக்கும் மனைவி, குழந்தைகளுக்கும் இஸ்லாம் மதத்தில் லெப்பை பிரிவு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் மனு கொடுத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. பிறகு செங்கல்பட்டு ஆர்டிஓவிடம் முறையிட்டார். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தனக்கும் தனது மனைவி, குழந்தைகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சான்றிதழ் வழக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரில்வான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, இஸ்லாம் மதத்தில் லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. மதம் மாறும்போது உட்பிரிவை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட ஜமாத்தில் மதமாற்ற பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால், மனுதாரர் அரசிதழில் தனது மதமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்ததில் லெப்பை என்ற உட்பிரிவை குறிப்பிடவில்லை. அதனால் அவர் முற்படுத்தப்பட்டோர் பிரிவாகவே கருதப்படுவார். பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்க முடியாது என்று வாதிட்டார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இதேபோன்ற வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும்போது சம்பந்தப்பட்ட நபர் இஸ்லாம் மதத்தில் தான் சேரும் உட்பிரிவை குறிப்பிட வேண்டும். மனுதாரர் தான் சேர்ந்த இஸ்லாம் மதத்தின் உடபிரிவை குறிப்பிடவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர் .
உயர் சாதி கீழ்கண்டவாறு பிரிக்க பிரிக்க பட்டிருகின்றன :-
( 1 )அஹல்-இ-தொளலத் :- ஆளுகின்ற வர்கத்தினர் ,
இதில் அரச குடும்பதினர் , பிரபுக்கள் , ராணுவ அதிகாரிகள் அடங்குவர்...
(2 )அஹல்-இ-ச-அதாத் :- அறிவு ஜீவி வர்கத்தினர் , இதில் இறையில் , நீதி துறை , மத குருமார்கள் , சையது முதலியோர் , கவிஞர்கள் , எழுத்தளர்கள் அடங்குவர்.
3.அஹல்-இ-மூரத்:-
மகிழ்ச்சியூட்டும் வர்கத்தினர்;இசை வல்லுனர்கள்; நாட்டிய வல்லுனர்கள் ஆகியோர் அடங்குவர்.
இவர்களுக்குள்ளே உள்ள சதி சண்டைகளை இன்னும் இஸ்லாமிய நாடுகளில் காணலாம். மேலும் பல பிரிவுகள் உள்ளன.அவர்களை Caste and Social Statification Among muslim in india என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்.
ஆகியவை அடிமையின பட்டியலாக உள்ளன. இது அனைத்துமே அரபு
இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஜாதி பட்டியல். தேவையென்றால் இந்திய பட்டியலையும் அனுப்பி வைக்கிறேன்.
சிந்தியுங்கள் நண்பர்களே!!!
வள்ளுவன் வாக்கு:-
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
இஸ்லாமில் ஜாதி இல்லை ஏற்ற தாழ்வு இல்லை தீண்டாமை , அடிமை வம்சம் இல்லை என்று கூறாதீர் .
தௌலத்,அதாத்,சையத், போன்றவை முஹலாய இந்தியாவில் உள்ளவர்கள் இன்னும் பல பிரிவுகள் உண்டு அடுத்து ஹனஃபி ,ஷாஃபி என்பது மதஹப் குருமார்களின் பெயர்களை இஸ்லாத்திற்கு விரிவுரை விளக்கம் என்பதை இவர்களின் புரிதலில் கொடுத்தார்கள் அதுவே பின்னாளில் இவர்களின் பெயரால் மதஹப் ஆனது ஷியாக்கள் கார்ஜியாக்கள் ,முஃக்தஸீலாக்கள் என்பது கருத்தியல்,தலைமை சார்ந்த பிரிவுகளாகும் தனி தனி செய்திகளை ஒன்றாக போட்டு குழப்பியுள்ளீர்கள் !
முன்பு இருந்தது அதுவும் தொழில் ரீதியாக குறிப்பாக சலூன் தொழில் செய்பவர்கள் கசாப்கடை வைத்திருப்பவர்களை மேல்மட்ட மரைக்காயர் மாலிமார் சமூகத்தில் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள் மற்ற நிகழ்வுகளில் பெரிய இடைவெளி தற்போது இல்லை !