New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருமுறையாசிரியர்கள் தம் திருவாக்கில் சாம இருக்கு வேதங்கள்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
திருமுறையாசிரியர்கள் தம் திருவாக்கில் சாம இருக்கு வேதங்கள்
Permalink  
 


 

 சாம வேதம்

"சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்"               - (பொது - 10)

 

·   "தயங்கு தோலை உடுத்தச் சங்கரா

        சாம வேதம் ஓதி"                                     - (திருமுருகன்பூண்டி - 5)

  "பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே ஆடினார்"                               - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 2)

 "சாமநல் வேதனும் ........"                              - (திருப்புகலி - 5)

·   சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்  2.94.1

   "சங்கணி குழையினர் சாமம் பாடுவர்"                       - (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 5)

  "சடையினன் சாமவேதன்"                          - (திருப்பிரமபுரம் - 2)

 "சடையவன் சாமவேதன்"                          - (திருவொற்றியூர் - 1)

   "சாமத்து வேத மாகிநின்றதோர் சயம்பு தன்னை"      - (திருஒற்றியூர் - நேரிசை - 4)

   "சாமவெண் டாமரைமேல் அயனும்"                 - (திருவக்கரை - 9)

·   சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே. 3.102.8

·   சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும் 2.92.8

 "சாமம் உரைக்கநின்று ஆடுவானும்"                 - (திருநாரையூர் - 8)

  "தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்"         - (திருவிடைமருதூர் - 1)

   "தயங்கு சோதீ சாமவேதா"                         - (திருவலிவலம் - 2)

"சாம வேதனைத் தன்னொப்பி லானை"      - (திருநள்ளாறு - 1)

 "............... .................... எமையாளும்

        சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்"              - (சிவபெருமான் திருவந்தாதி - 68)

·   "சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம் கூத்தொடும் பாடவைத்தார்"        - (திருப்பயற்றூர் - நேரிசை - 4)

சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் (சாம வேதத்திற்கு ஆயிரம் சாகைகள்)

 

சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை

"சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர்"   - (திருவீழிமிழலை - நேரிசை - 7)

   சாம வேதி                         4.77.4

   "பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார்"       - (திருவாலங்காடு - நேரிசை - 8)

·   "சாம வேதம் பெரிதுகப் பானை"                    - (திருக்கச்சியேகம்பம் - 6)

இருக்கு வேதம்

முறைமுறை இருக்குச் சொல்லி

    எந்தைநீ சரண மென்றங்    கிமையவர் பரவி யேத்தச்

    சிந்தையுட் சிவம தானார்                   4.29.4

 "திருக்கு வார்குழல் செல்வன சேவடி

        இருக்கு வாய்மொழி யால்தனை ஏத்துவார்

        சுருக்கு வார்துயர்"                             - (திருப்பேரெயில் - குறுந். - 6)

 

இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே. 5.62.10

"இருக்கு நான்மறை ஈசனை யேதொழும் கருத்தினை" - (பொது - 100 - 8)

·   "இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்"     - (திருக்கானாட்டுமுள்ளூர் - 5)

"இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே

        உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி

        வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்

        கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே"               - (திருமந்திரம் - 53)

 

 பேசி இருக்கும் பெருமறை யம்மறை

        கூசி இருக்கும்"                        - (திருமந்திரம் - 2546)

  "நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து

        வந்து வசுக்கள் இருக்குரைப்ப"                  - (திருக்கயிலாய ஞான உலா - அடி - 23, 24)

 "இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும்

               நான்மறையும்

        நெருக்கும்"                                    - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 24)

"எண்ணிலரு முனிவர்குழாம் இருக்குமொழி

               எடுத்தேத்த"                           - (ஆனாயர் - 41)

 

 

"விரிசடையார் வேதியனே வேத கீதா"                       - (திருப்புகலூர் - 6)

"வேதங்க ளாட மிகுஆ கமமாட"             - (திருமந்திரம் - 2729)

·   "வேதங்கள் ஐந்தின் மிகுமா கமந்தன்னில்"    - (திருமந்திரம் - 2730)

  "அங்கம் ஆறு வேத நான்கும் ஓதும் அயன்"          - (திருப்பல்லவனீச்சரம் - 9)

 "ஆனநல் லருமறை யங்கம்ஓதிய ஞானனை"         - (திருப்பூவணம் - 2)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard