New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சைவசித்தாந்தத்துக்கு வித்து -அத்துவித சம்பந்தம்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
சைவசித்தாந்தத்துக்கு வித்து -அத்துவித சம்பந்தம்
Permalink  
 


சைவசித்தாந்தத்துக்கு வித்து

 

nalvar2அத்துவித சம்பந்தம்

இறைக்கும் உயிருக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை இந்தியதத்துவ ஞானம் அத்துவிதம் என்று மொழியும். அத்துவித சம்பந்தத்தை இந்துசமயதத்துவங்கள் உவமைகள் வாயிலாக விளக்கம் செய்கின்றன. சைவசித்தாந்தத்திற்கு அத்துவிதம் குறித்துத் தனிக் கோட்பாடு உண்டு. அதன் அடிப்படை திருக்குறள், திருஞானசம்பந்தப் பெருமான் முதலாய திருமுறை ஆசிரியர்களின் திருப்பதிகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.

அகர முதல்

அனைவரும் அறிந்த திருக்குறள் கடவுள் வாழ்த்து முதற்பா “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”. தெய்வப்புலவரின் இந்தக் குறளின் முதலடியைனை வழி மொழிந்து திருஞான சம்பந்தரும் அகர முதலானை அணியாப்பனூரானை’ என மொழிந்தார்.

கடவுள் வாழ்த்து முதற் குறளில், ‘அகர முதல’ என்ற தொடரில் ‘முதல’ என்னும் சொல்லாட்சி சிறப்பான பொருள் உடையது. ‘முதல’ என்பதற்கு, எழுத்துக்கள் வரிசை முறையில் அகரத்தை முதலாக உடையன என்பதன்று இதன்பொருள்.

ஒருவன் ஒரு தொழில் தொடங்குவதற்குச் சிறிது பொருளை முதலீடு செய்கின்றான். அந்தப் பொருள் பின்னர் வளர்ந்து பல்கிப் பெருகுகின்றது. முதலீடு செய்த பொருள், பெருகிய பொருளில் கலந்து மறைந்து நிற்கின்றது. தொழிலில் பெருகிய செல்வம் புலப்படுகின்றதன்றி முதலீடு செய்த பொருள் புலப்படுவதில்லை. அந்த முதலீடு செய்த பொருளே’ முதல்’ எனப்படும்.

ஒருவன் வாயைத் திறந்தால் இயல்பாக எழும் ஒலி ‘அ’ அல்லது அதன் நீட்டமான ‘ஆ’ வாகும். இந்த அகரமே எல்லா எழுத்துக்களுக்கும் முதல். இந்த அகரம் உயிரெழுத்து , மெய்யெழுத்து ஆகிய எல்லா எழுத்துக்களிலும் கலந்து அவ்வவ்வெழுத்துக்களை இயக்கி அவ்வெவ் வெழுத்தாகவே இருக்கும். மெய்யெழுத்துக்கள் அகரவொலியுடன் கூடியே ஒலிக்க வேண்டும்.”மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்பது தொல்காப்பிய விதி. எனவே,  மெய்யெழுத்துக்களில் உயிர்கலந்து நிற்றலை எளிதாக அறியலாம்.  உயிரெழுத்துக்களில் அகரவுயிர் கலந்து நிற்றல் உய்த்துணர்வு உடையோருக்கே புலனாகும்.

siva-and-soul அகரவுயிருடன் பிற எழுத்துக்களின் மூவகைச் சம்பந்தம்

அதாவது அகரவுயிர், அனைத்து உயிரெழுத்துக்களுடனும் தனி மெய்யெழுத்துக்களுடனும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும்.

சுருங்கச் சொன்னால், அகரவுயிர் தனித்துத் தானே இயங்கும்; பிற உயிர், மெய்யெழுத்துக்களுடன் உடனாகி அவற்றை இயக்கும்; அவற்றுடன் கலந்து நின்று அவையாகவே இருக்கும்.

அகர உயிரும் சிவமும்

அகரவுயிர்  மெய்யெழுத்துக்களோடு கூடி மெய்யெழுத்தின் ஒலியைப் பிறப்பித்தல் தெளிவாகப் புலப்படுதல்போல உயிரெழுத்துக்களுடன் கூடி அவ்வவ்வுயிரொலியைப் பிறப்பித்தல் தெளிவாக அறிய இயலுவதில்லை. நுண்ணறிவுடையோர் அதனை உய்த்து உணர்வர். அதேபோல் இறைவன் உயிர்களுடன் உயிருக்குயிராக நிற்றல் நுண்ணறிவுடையோருக்கே புலனாகும்.

முதன்மைத் தன்மை உடைய அகரவுயிர் கலத்தல் இல்லையேல் ஏனைய வுயிரெழுத்துக்களுக்கும் இயக்கம்  இல்லை. அவ்வாறே இறைவன் உயிருக்குயிராய் உயிர்களுடன் உடனாய் நின்று கண்டும் காட்டியும் உதவாவிடில் உயிர்களுக்கு அறிவிச்சைசெயல்கள் நிகழா. இவ்வாறு இறைவன் உயிர்களோடு கலந்து நின்று உயிர்களுக்குச் செய்யும்  உபகாரத்தினைத் திருஞானசம்பந்தர்,

உரைசேரும் எண்பத்து நூறாயிரமாம் யோனி பேதம்
நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்

என்றார்.

உலகுயிர்களோடு சிவமாகிய இறைவன் கலப்பினால் அவையேயாயும், பொருள் தன்மையினால் வேறேயாயும், இயங்கச் செய்ய உடனாயும் இருத்தலைச் சைவசித்தாந்தம்  அத்துவித சம்பந்தம் என்று கூறுகின்றது.

இந்த அத்துவித சம்பந்தத்தைத் திருஞானசம்பந்த சுவாமிகள்,

“ஈறாய் முதலொன்றாய் இருபெண்ணாண் குணம் மூன்றாய்
மாறா மறைநான் காய்வரு பூதமவை ஐந்தாய்
ஆறார் சுவை யே ழாய்வரு எட்டுத்திசை தானாய்
 வேறாய்உடனா னானிடம் வீழிமிழலையே”

என விதந்தோதினார்.

சைவசித்தாந்தம் கூறும் சுத்தாத்துவித நிலைக்கு அடிப்படை இத்திருப்பாடலேயாம்.

அத்துவிதம்– உயிர்களிடத்துச் சிவம் நிற்கும் முறைமை.

அத்துவிதம் என்னும் சொல் ஆன்மாக்களிடத்து முதல்வன் நிற்கும் முறைமையைக் கூறுவது என்பது சைவசித்தாந்திகளின் கொள்கை.  எனவே, அத்துவிதம் என்றசொல் ஆன்மாவுக்கும் சிவத்துக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை உணர்த்துவதே யன்றி , உள்ள பொருள் ஒன்றா, இரண்டா, அவை ஒன்றுக்கொன்று விரோதமானவையா, பேதமா, அபேதமா, பேதாபேதமா , என்பனவற்றை உணர்த்துவதன்று. சைவசித்தாந்தத்தில் ‘அத்துவிதம்’ என்னும் இச்சொல் இம்மூன்று நிலைகளுக்கும் பொதுவானது.

பொதுவாக சங்கரரின் அத்துவிதம் அபேதம்(ஏகாத்மவாதம்) என்றும் மாத்துவர் கூறும் துவிதம் பேதவாதம் எனவும் இராமானுஜர் கூறும் விசிஷ்ட்டாத்துவிதம் பேதாபேதம் என்றும் கூறுவர்.

இதற்கு எடுத்துக்காட்டாகப் ‘பொற்பணி (பொன்னால் ஆன நகை) போல் அபேதம்; இருளும் வெளிச்சமும் போலப்  பேதம்; சொல்லும் பொருளும் போலப் பேதாபேதம்’ என எடுத்துக் காட்டும் கூறுவர்.

advaita_abstractஅபேதம் –  ஒன்றாயிருத்தல்     

‘அபேதம்’ என்பதற்கு மாற்றாகச் சைவசித்தாந்தம் ‘ஒன்றாயிருத்தல்’ என்று கூறும். கலப்பினால் ஒன்றாயிருத்தல். மெய்கண்டார் ஒன்றாயிருத்தலுக்குக் கூறும் எடுத்துக்காட்டு, ‘உடலுயிர்’ என்பதாம். ஒருவன் என் பெயரைச் சொல்லி அழைக்கிறான்.  நான் அவன் அழைப்பை ஏற்றுப் பதில் கூறுகிறேன். அந்தப் பெயர் உடலுக்கு உரியதா? உயிருக்கு உரியதா? இரண்டும் இல்லை. ஆனால் உடலும் உயிரும் கலந்து ஒன்றாக இருக்கும் அந்த நிலைக்கு உரியது. உயிரின் கலப்பு இல்லையேல் உடல் இல்லை; உடல் அழியும். அதுபோல, சிவமாகிய முதல்வன்,  உலகு உயிர்களுடன் கலப்பினால் ஒன்றாக இராதபோனால் அவற்றிற்கு இருப்பு (existence) இல்லை.

பேதம் – வேறாயிருத்தல்

இருளும் வெளிச்சமும் போலப் ‘பேதம்’ என்பதனைச் சைவசித்தாந்தம் மறுக்கின்றது.

இருளும் ஒளியும் தம்முள் பேதம் உடையன. அவை ஒன்று சேர்வதில்லை. அது போல இறை, உயிருலகுடன் பேதமானது; இறை உலகு உயிருடன் ஒன்று சேராது என்பர் பேதவாதிகள்.

பொருளின் தன்மையால் இறையும் ஏனை உலகு உயிரும் வேற்றுமையுடையன என்பது சைவசித்தாந்தத்திற்கும் உடன்பாடுதான். ஆயினும் அவற்றுடன் இறைக்குச் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.

மெய்கண்டார் அகரமும் ஏனைய எழுத்துக்களும் போல வேறாய் என்றார். அகரவுயிரின்றேல் ஏனைய எழுத்துக்கள் இல்லை. ஆயினும் அகரம் வேறு; ஏனைய எழுத்துக்கள் வேறு.

அவ்வாறே, இறை சேதன அசேதனப் பிரபஞ்சங்களுக்குத் தாரகமாக உள்ளது. இதற்கு மெய்கண்டார் காட்டும் உதாரணம் ‘ கண்ணும் சூரியனும் போல’ என்பது. கண் காணும் ஆற்றல் உடையது. என்றாலும் இருளில் காண இயலாது. சூரியனின் கதிரொளி பொருள்களின் மேற்படர்ந்து கண்ணொடு கலந்தால்தான் கண் காண இயலும். ஒளியின்றேல் கண் காண இயலாது. கதிரொளி கண்ணுக்கு அந்நியமாக நின்று காட்டுதலைச் செய்கின்றது.

கண்ணும் சூரியனும் என்னும் இந்த உவமையினை மெய்கண்டாரின் மாணாக்கர்களில் ஒருவராகிய திருவதிகை மனவாசகம் கடந்தார், ‘ “நின்று அருக்கன் கண்ணுக்குக் காட்டுமாப்போல உனதறிவில் நண்ணி அறிவித்திடுவோம் நாம்” என்று கூறினார்.

இந்த சம்பந்தத்தைத் திருஞான சம்பந்தர், வேறாய் என்றார். உயிர் வினை அனுபவம் பெறும் பொருட்டு, இறை, உலகுயிர்களுக்கு வேறாக நின்று காட்டும் உபகாரத்தைச் செய்கின்றது; சூரியன் கண்ணுக்கு வேறாக இருந்து காட்டுதல் போல.  பிறர் ‘பேதம்’ என்பதனைச் சைவசித்தாந்தம் திருஞானசம்பந்தர் வாக்கில் ‘வேறாய்’ என்றுகூறுகின்றது.

பேதாபேதம் –  ஒன்றாயிருத்தல்

இனி பேதாபேதம் என்போர் ‘சொல்லும் பொருளும் போல’ என்ற உதாரணம் காட்டுவர். சொல் வேறு அது உணர்த்தும் பொருள் வேறு என்றாலும் அவற்றிடையே காணப்பெறும் ஒற்றுமை போலப் பொருள் தன்மையினால் இறைக்கும் உலகுயிர்க்கும் வேற்றுமையுண்டெனினும் ஒற்றுமைச் சம்பந்தம் உண்டென்பர்.

மெய்கண்டார்

மெய்கண்டார்

சைவசித்தாந்தம் பேதாபேத சம்பந்தம் கூறாமல் ‘உடனாதல்’ என்னும் சம்பந்தத்தைக் கூறும். இதற்கு மெய்கண்டார்,’கண்ணொளியும் ஆன்மபோதமும்’போல் என உதாரணம் கூறினார். கண் ஒருபொருளைக் காணும்போது ஆன்ம சிற்சத்தியும் உடனாய் நின்று காணுகின்றது.  காணுவது கண் என்றாலும் கண் சடம், அதற்கு அறிய இயலாது. கண்ணோடு உடனிருந்து காண்பது ஆன்ம சிற்சத்தி. கண்ணின் செயலும் ஆன்மசிசத்தியின் செயலும் முன் பின் அன்றி இரண்டின் செயலும் உடன் நிகழ்கின்றன.  இறைவன் வேறாய் நின்று காட்டுகின்றான்; உடனாய் நின்று காணுகின்றான். ஆன்ம முன்னேற்றத்திற்கு இறைவன் இவ்வாறு காட்டும் உபகாரத்தையும் காணும் உபகாரத்தையும் செய்தருளுகின்றான். இறைவன்பால் பத்தி பெருக இவ்வுபகாரமே காரணமாகும்.

கண் சடம்;அறிவற்றது. ஆதலால், காணுதலின்பயன் உயிருக்கே. ஆனால், கண்போல உயிர் சடமன்று; ஆதலால், சிவம் கண்ணுடன் ஒற்றித்துக் காணுதலினால் பயன் அடைவது உயிரே என்ற வேற்றுமையையை அறிதல் வேண்டும்.

சைவசித்தாந்தம் பேசும் சுத்தாத்துவிதத்தில் சிவமும் உயிரும் ‘ஒன்றாய், வேறாய், உடனாய்’ இருக்கும் சம்பந்தம் உண்டு; ‘பேதம், அபேதம், பேதா பேத’ சம்பந்தம் இல்லை. சிவத்துக்கும் உயிருக்கும் இடையே உள்ள இந்த ‘ ஒன்றாய், வேறாய், உடனாய்’ அமைந்துள்ள இந்த அத்துவித சம்பந்தத்தை உமாபதி சிவாச்சாரியார் ‘ பிறிவரும் அத்துவிதம் என்று கூறுவார்.

வேத உபநிடதங்களில் இறைக்கும் உயிர்களுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை பேதமெனவும் அபேதம் எனவும் பேதா பேதம் எனவும் கொள்ள மொழிகள் உள்ளன. பெரியோர் தத்தம் கொள்களுக்கேற்ற மறை மொழிகளின் அடிப்படையில் தம் கொள்கைகளை நிறுவினர். மெய்கண்டார் ஞானசம்பந்தப் பிள்ளையாரின் தென்மறைமொழியின் அடிப்படையில் வடமொழி மறையில் கண்ட வேறுபாடுகளைச் சமன்வயப்படுத்தி, அத்துவித சம்பந்தத்தை விளக்கினார். இவ்வாறு இந்திய தத்துவ ஞானத்தில் பேதாபேதக் குழப்பத்தை மெய்கண்டார் தீர்த்து வைத்தார் என்பர்.

“The service done to Indian philosophy by Sri Meikantadeva is that he cleared the air of the polemics aising out of the conflicting interpretation of the Brhma Sutras and the Upanishads by the various schools of thought and the many varieties of Bheda-bheda schools which sprang up after the great Achariyas who wrote the commentaries”.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: சைவசித்தாந்தத்துக்கு வித்து -அத்துவித சம்பந்தம்
Permalink  
 


Thillai Karthikeyasivam SivamOmampuliyur Jayaramanமற்றும் 6 பேருடன் இருக்கிறார்.

"நம ஸ்வேதாபிதாநாய நாநாகம விதாயினே,
கைவல்ய கல்பதரவே கல்யாண குரவே நம:

#ஆவணிபூசம்.-இன்று.

ஸ்ரீ #நீலகண்டசிவாச்சாரியர் குருபூஜை.-

வடமொழியில் #பிரஸ்தானதிரயம் என்று பிரம்மசூத்திரம், பகவத்கீதை, உபநிஷத் ஆகிய மூன்றையும் சுட்டுவார்கள்.

இவற்றில் பிரம்மசூத்திரத்திற்க்கு,

ஸ்ரீ சங்கரர் -அத்வைதம் என்றும்,
ஸ்ரீ ராமானுஜர் -விசிஷ்டாத்வைதம்.
ஸ்ரீமத்வர் -துவைதம்

என்ற முறையில் பேரூரை (பாஷ்யம்) வரைந்துள்ளார்கள்.

நம் சைவசமயத்தை பொருத்தவரை #உபநிஷத்துகளைஏற்பதுபோன்று பிரம்மசூத்திரம், பகவத்கீதையை பிரதானமாக ஏற்பதில்லை.

இவற்றில் பொதுவான நூலாக விளங்கும் #பிரம்மசூத்திரத்திற்க்கு #சைவபரமாக ஆகமங்களைக் கொண்டு சைவபாஷ்யமாக உரை அருளியவர் ஸ்ரீ நீலகண்ட சிவாச்சாரியார்.

இவர்கள் அருளிய இந்த நூலுக்கு #ஸ்ரீகண்டபாஷ்யம் என்றும் #நீலகண்டபாஷ்யம் என்று கூறுவார்கள்.

சைவசமயத்தில் புறச்சமயம், புறபுறச்சமயம், அகப்புறச்சமயம், அகச்சமயம் என்ற நான்கில் நிறைவில் உள்ள #அகச்சமயங்கள்சைவசமயத்தோடு பெருமளவு ஒட்டி இயைவன.பெரும்பாலும் முக்தியில் மட்டுமே வேறுபடுவன.

எனவேதான் #அகசமயத்துஒளியாய் சிவப்பிரகாசம் உரைக்கின்றது.

இந்த அகச்சமயம் என்பவை,
1)பாடாணவாத சைவம்,
2)பேதவாதசைவம் 
3)சிவசமவாத சைவம்,
4)சிவசங்கிராந்த வாத சைவம் 
5)ஈஸ்வர அவிகாரசைவம்,
6)சிவாத்துவித சைவம் 
என்ற ஆறினுள் சைவசித்தாந்தத்தோடு மிக நெருக்கமாக உள்ள, அகச்சமயம் ஆறினுள் கடைசியாக உள்ள #சிவத்துவிதசைவமேநீலகண்ட பாஷ்யத்தில் பிரதிஷ்டை ஆகி உள்ளது. அதாவது நிருபிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பாஷ்யத்திற்க்கு,

#பிரம்மசூத்திர #சிவாத்வைத #நீலகண்ட #சைவபாஷ்யம் என சிறப்பித்து அழைப்பார்கள்.

பிரம்மசூத்திரத்திற்க்கு ஆகமங்களின் வழிநின்று பிரம்மசூத்திரத்தின் முடிந்த பொருள் #சிவப்பரம்பொருளே என்று நீலகண்ட சிவாச்சாரியார் நிறுவுகின்றார் இந்நூலில்.

சுருக்கமாக கூறவேண்டுமாகில் ஸ்ரீ கண்டரின் உரை ஆகமங்களை பின்பற்றியதாகும்.

இந்த பாஷ்யம் சைவசித்தாந்தம் போன்றே ஆணவமலத்தையும், 36 தத்துவங்களையும் உண்மை என உரைக்கின்றது. இந்நூலில் பதி, பசு, பாசம் விசாரிக்கப்படுகின்றது. ஆனால் முக்தி நிலையில் வேறுபடுகின்றது.

அதாவது நம் ஆகமசித்தாந்தத்தோடு முக்தி நிலையில் தத்வார்த்தமாக வேறுபடுகின்றது.

இருப்பினும் சைவசமய பரமாக சிவபரம்பொருளை முக்கியமாகக் கொண்டு எழுதப்பட்ட பாடியம் என்பதால் இந்நூல் #சைவபாஷ்யம் என்றே அழைக்கப்படுகின்றது.

ஸ்ரீ நீலகண்ட சிவாச்சாரியார் பற்றி முழுமையான வரலாறு இல்லை. இலிங்கபுராணம் வாயுசங்கிதை மூலம் இவர் #சுவேதாசாரியருடை சிஷ்யர் என்பது தெரியவருகின்றது.
இவர் சங்கரர், ராமானுஜருக்கு முற்பட்டவர் என்பது காசிவாசி செந்திதாதையர் கருத்து.

ராமானுஜர் இவர் பாஷ்யத்தை உய்த்துணர்ந்தே வைணவபரமாக வைணவ பாஷ்யம் இயற்றினார் என்ற கூற்று உண்டு.

எப்படியாகிலும் மற்ற மூன்று பாஷ்யக்காரர்களையும், அவர்கள் பாஷ்யத்தையும் கொண்டாடுவதுபோல் இந்நூல் கொண்டாடப்படவில்லை என்பது தவக்குறைவே.

இந்த ஸ்ரீ கண்டபாஷ்யத்திற்க்கு #அப்பையதீக்ஷிதர்#சிவார்க்கமணிதீபிகை எனும் விளக்கநூல் எழுதியுள்ளார்.

நூறாண்டுகளுக்கு முன் சைவம் தழைக்க தொண்டு செய்த J.m.#நல்லசாமிப்பிள்ளை அவர்கள் தமது #சித்தாந்ததீபிகை என்ற இதழில் இந்த பாஷ்யத்தை முழுமையாக வெளியிட்டார்கள் .

இந்நூலுக்கு முதன்முதலில் 1907 ல் தமிழ் மொழிபெயர்த்து அருளியவர்கள் யாழ்ப்பாணத்து குப்பிழான் காசிவாசி #செந்திநாதையர் அவர்கள் .

காசிவாசி செந்திநாதையர் அவர்கள் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை சமீபத்தில் 2005 ல் மறுபதிப்பு செய்து பெறும் தொண்டாற்றியவர்கள் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் அவர்கள்.

ஓர் எடுத்துக்காட்டு,

பூமாதிகரணம் என்ற பகுதியில் ஆகாயத்தை சரீரமாகவுடைய பிரம்ம் மாயை என்று மற்ற சூத்திரகாரர்கள் உரைக்க, ஸ்ரீ கண்ட பாஷ்யம் ஆகாய சரீரமாய் சிதம்பரப்பிரகாச சரீரத்தையுடைய சிவமாக உரைக்கின்றது.
மஹாதேவர் என்பதற்க்கு அழகிய விளக்கமும் இந்நூலில் காணப்படுவது சிறப்பு .

இத்தைய உன்னத சைவபாஷ்யத்தை அருளிய ஸ்ரீ நீலகண்ட சிவாச்சாரியார் குருபூஜை இன்று.

அவர் திருவடிகளை போற்றி புண்ணியம் பெருவோம் .

(ஆகமங்கள் அருளிய ஸ்ரீகண்ட ருத்தரர் பாஷ்யம் அருளிய ஸ்ரீ கண்டர் பெயரில் ஒன்றுபோல் இருப்பினும் வேறானவர்கள்)
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2244914289155463&id=100009107423631

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

Natesan Muthukumaraswamy 'பிரஹ்மஸூஸத்திர மெனும் மீமாம்சையானது பண்டையா வழக்கிற் பிரமாணமாய் விலவுகின்ற வித்தை பதினாங்கனுள் ஒன்றாயிருத்தலானும் , சிவபெருமானது ஆஞ்ச்ஞ்சையின்படி விட்டுணுமூர்த்தி வியாசராக அவ்தரித்துப் பிரமத்தை விதிக்குஞ் சூத்திரஞ் செய்தன ரென்பது ஸ்காந்த மஹாபுராண சங்க்கர ஸ்மிதையின் ஆரம்பத்திற் பெறப்படுதலினாலும், 'அதோதா ப்ரஹ்ம ஜிக்ஞ்சாஸா' என்னும் பிரதம சூத்திரத்தைச் செபமாக செபிக்க வேண்டு மென்பது "அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்க்ஞஸா வேதாதீவநபிசம் ஜபேது" என்று சைவமஹாபுராண கைலாஸ சமிஹையில் 8அம் அத்தியாயத்திற் பெறப்படுதலினாலும், (ஸ்ருதோபவிஷக்த கத்யபிதாவநாச்ச) "உபநிஷத்தைை உணர்வ்தற்்க்குரிய கதி கூறப்படலாமனும் " என்று அந்தப் பிரமசூத்திரமே கூறிக் கொண்டு , இஃது உபநிடத நெறியென்பதை உணர்த்துதலினாலும், " பத்யுரஸாமம்ஜஸ்யாதித்யேதத்து விரூடபாசு, பதஸ்யைவ நிராகரண பரம்ந்து காமிகாதி ஸித், தாந்த சைவாகமஸ்ய வேதாவிருத்தஸ்ய" என்று உமாபதி சிவாச்சாரியர் தெரித்தருளிய மொழிகள் , "பத்யுர ஸாமம் ஜஸ்யாதிகரணத்தில் நிரூட பாசுபதமே விராகரணஞ்ச் செய்யப்பட்டது: வேத விருத்தம் ஆகாக் காமிகாதி சித்தாந்த சைவாகமங்கள் நிராகரணஞ்செய்யப்படவில்லை" எனும் பொருள் பயத்தலின் அவ்வாசாரியரும் (உமாபதி சிவம்) பிரம சூத்திரத்தை அங்கீகரித்தவறே யென்பது தோன்றி நிிற்றலினாலும் அந்தப் பிரம சூத்திரத்தைக் கழிப்பார் கொள்கை வைதிக சித்தாந்தமெனற்கு வாயின்றே. - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்- பரிபூரணானந்தபோதம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
சைவசித்தாந்தத்துக்கு வித்து -அத்துவித சம்பந்தம்
Permalink  
 


  • Santhanam Pammal நீலகண்ட சிவாச்சாரியார் பிரம்மசூத்திரத்திற்கு ஆகம விதிப்படியான சைவ சித்தாந்த மாபாடிய உரை எழுதியுள்ளார், அதனை, காசிவா சி செந்தில்நாத ஐயர் தமிழாக்கம் செய்துள்ளார், மேலும் தமிழ் உரையில் அவர் எழுதிய உபநிஷத் உபக் கிரம ணிகை என்ற முன்னுரையை எல்லாசை வர்களும் படித்தறிய வேண்டும், அதிலும் ஆதி சைவர்கள் அவசியம் படித்தறிய வேண்டும்,

  • Santhanam Pammal
    Santhanam Pammal பிரம்ம சூத்திரத்திற்கு போதாய ண ர் ஒரு உரை எழதினார் என்றும் அவர் உரையை காஷ்மீர் சென்று படித்தறிந்து இராமானுஜர் பிரம்ம சூத்திர உரை எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது,


-- Edited by Admin on Wednesday 28th of August 2019 05:44:11 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard