New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழகத்தில் சாதிகள் வரலாறு


Guru

Status: Offline
Posts: 24636
Date:
தமிழகத்தில் சாதிகள் வரலாறு
Permalink  
 


தமிழகத்தில் சாதிகள் வரலாறு 

தமிழகத்தில் சாதிகள் வரலாறு,

http://www.worldtamilswin.com/read-tamil-news/18416/%D1%80%D0%BE%D0%B4%D1%80%D0%BE%D0%BE%D1%80%D0%BE%E2%94%90%D1%80%D0%BE%E2%94%A4%D1%80%D0%BE%D0%A5%D1%80%D0%BE%D0%B4%D1%80%D0%BF%D0%9D%D1%80%D0%BE%D0%B4%D1%80%D0%BE%E2%94%90%D1%80%D0%BE%25

சாதிகள் வரலாறு என்ற தலைப்பை என் வலையில் இட்டதன் காரணம் சாதிகளின் பெயரைச் சொல்லி மற்றவர்களை இழிவுபடுத்தவோ அல்லது தாழ்மைப்படுத்தவோ அல்ல. உண்மையில் சாதிகள் என்றால் என்ன? அது எவ்வாறு தோன்றியது? என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமே காரணமாகும். இன்றும் பலர் சாதிகளின் பெயர்களைச் சொல்லி சண்டையிடுவதை காண்கிறோம். இவை சரிதானா? இனி வரும் சந்ததியினரும் இதைத் தொடர வேண்டுமா?

அக்காலத்தில் சாதிகள் என்பது  நம் முன்னோரின் தொழில், வாழ்க்கை முறை, புகழ் அல்லது பட்டம் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை தெரியப்படுத்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்ந்தது. இன்று அவையே வேரூன்றி ஆலமரம் போல் அசைக்க முடியாமல் மனித சமூகத்தில் வேற்றுமையைக் காட்டும் சாதிகளாக நடமாடி வருகின்றன. இதில் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ பிரித்துப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. எனவே சாதிகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சாதிகள் ஏற்றபட்ட காலத்தில் அவை பிறப்பை மையமாகக் கொண்டு அமையவில்லை அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டே அமைந்தது. மற்றும் அவை ஒருவனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ நிரந்தரமாகவும் அமைந்தவை அல்ல அதாவது அவன் செய்யும் தொழில் மாறுபட்டால் அவன் சாதியும் மாறும் (அக்காலத்தில்). எடுத்துக்காட்டாக ஒருவன் முடிவெட்டும் தொழில் செய்தால் அவனை அம்பட்டன் என்பர். அவன் அத்தொழிலை விட்டு வேறு தொழிலில் ஈடுபட்டால் அதாவது பறை(ஒருவகை வாத்தியம்) அடிப்பவனாக மாறினால் அவனை ப‌றையன் என்றுதான் கூறுவர்.

ஆனால் இன்று சாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. ஒருவர் என்ன தொழில் செய்தாலும் சாதி மாறாத் தன்மையுடன் திகழ்கின்றது. இது இடையில் ஏற்பட்ட மாறுதல்களே ஆகும். இவற்றை நாம் மாற்ற வேண்டும். மனிதன் தோன்றியது ஓருயிரில் இருந்துதான் என்ற கருத்தை அனைவரும் ஒத்துக்கொள்கிறோம். அப்படியிருக்க அனைவரும் ஒருவருக்கொருவர் உறவுமுறை கொண்டவராக இருக்கவே வாய்ப்புண்டு இதில் எங்கிருந்து வந்தது இந்த ஏற்றத் தாழ்வு.

ஒவ்வொரு சாதியும் எப்படி உருவாகியது, அதன் அர்த்தம் என்ன, அதன் வரலாறு என்ன என்பதை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் தன் சாதிதான் பெரிது என்று பேசுகிறவர்கள் கூட‌ அவர்களின் சாதியின் வரலாறு என்ன என்று அறிந்திருக்க மாட்டார். அப்படி அறிந்திருந்தால் ஏற்ற தாழ்வு பேசமாட்டார். அதனால் இங்கே சாதிகளின் வரலாறு என்ன என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

சாதி என்றால் என்ன? சாதியம் என்றால் என்ன?
மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான்.  ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது. அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர்.  இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா கலாசாரங்களிலும் இத்தகைய சமூகக் குழுக்கள்  தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப் பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன.  இதே போன்று, பாரத நாட்டில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே சாதிகள்.

ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும், மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும்.  அண்ணல் அம்பேத்கர் ஒருவித வரலாற்றுச் சட்டகத்தை மனதில் கொண்டு  இத்தகைய போக்கை பிராம்மணீயம் என அழைக்கிறார். ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை.

மனிதர்கள் அனைவரும் ஒன்றே, சாதி வேறுபாடுகள் காலாவதியானவை என்கிற எண்ணமே மானுடநேய எண்ணமாகும். ஒவ்வொரு சாதியினரும் தன்னுள் ஊறிப்போயிருக்கும் இந்த சாதிய எண்ணத்தை அழித்து மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.

சாதி என்றால் என்ன? வர்ணம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா?
ஒருவர் தன்னுள் எழும் ஆர்வத்தினால் திறமை பெறும் தொழில் சார்ந்த வாழ்க்கைமுறைக்கு வர்ணம் என்று பெயர். இது நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது.  இவற்றில் ஒன்றையோ, பலவற்றையோ தேர்ந்தெடுத்து ஹிந்துக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இதிகாசங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. சாதி என்பது பிறப்பால் நிர்ணயிக்கப்படுவது. பெற்றோரின் சாதியே அவர்களின் குழந்தைகளுடைய சாதியாகும் என்று சொல்லுவது சாதி முறை.

வேதகாலத்தில் சாதி என்பதே இல்லை, வர்ணம் என்பது இருந்தது.  வர்ணம் வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மனிதருக்குத் தந்தது. சாதி அந்த சுதந்திரத்தை முற்றிலுமாக மறுத்தது.  சாதியத்தை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போதைய பொதுவான வெகுஜன புரிதலில் வர்ணமும் சாதியும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்ளப்படுகிறது. அது தவறான புரிதல்.

அப்படியானால், சாதியத்திற்கு வேதங்களில் இடம் இல்லையா?
நிச்சயமாக, இல்லை. அண்ணல் அம்பேத்கர் வேதகால முறை குறித்து மிகவும் விரிவாக விவரிக்கிறார்.  வர்ணாசிரமம் அடைந்த மாறுபாடுகளை அவர் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறார்:

முதல் காலகட்டத்தில் வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரால் செய்யப்படும் தொழிலாக அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில் ஒருவர் வர்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாம் கால கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவரது வர்ணம் நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது. மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல அடிப்படையில் மாறியது.

தொடக்க காலத்தில் ஒருவரது வர்ணத்தை மனு மற்றும் சப்தரிஷிகள் எனும் அமைப்பினைச் சார்ந்த முதுமக்கள் தீர்மானிப்பார்கள். நேர்முகத் தேர்வு போன்றதொரு நிகழ்ச்சியின் மூலம் இது தீர்மானிக்கப்பட்டது. இந்த வர்ண ஒதுக்கீடானது ஒரு யுகம் எனப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அப்போது மனு மற்றும் சப்தரிஷி எனக்கூறப்படும் முதுமக்கள் குழுவும் மாற்றி அமைக்கப்படும். இதுவே மன்வந்தரம் என கருதப்பட்டது. புராணங்களில் கூறப்படும் இந்த மன்வந்தரம் என்பதே ஒரு மனிதரின் வர்ணம் ஒதுக்கிடப்படும் காலகட்டமாகும். இதன் மூலம் வர்ணம் என்பது ஒருவருக்கு கொடுக்கப்படும் பதவி என்பதும் அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவே இருந்தது என்பதும் தெளிவாகும்.

இந்த முறையிலிருந்த குறைபாடு என்னவென்றால், இந்த நேர்முகத் தேர்வு அத்தனை சரியாக ஒருவரது திறமைகளை மதிப்பிட முடியாது. மேலும் ஒரு வர்ணத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முறையான பயிற்சியும் இருக்காது.

எனவே குருகுல முறை பண்டைய பாரதத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆச்சாரியர் எனும் குரு 12 ஆண்டுகள் காலத்திற்கு மாணாக்கருக்கு பயிற்சி அளித்து அதன் அடிப்படையில் மாணவரின் வர்ணம் எது என்பதனை நிர்ணயிப்பார். அந்த வர்ணமே மாணவரின் வாழ்க்கை முழுக்க நிலைக்கும். இந்த முறை முந்தைய முறையைக் காட்டிலும் சீர்மைப்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்த முறையிலும் வர்ணம் என்பது பிறப்படிப்படையில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் எப்போது உபநயன சடங்குகள் வீட்டிலேயே செய்யப்படும் முறை உருவாகியதோ அப்போது பிறப்படிப்படையிலான வர்ண-சாதி முறை ஏற்பட்டது.

அம்பேத்கர் இவ்வாறு கூறியுள்ளார் சரி. ஆனால் வேதங்களில் அம்பேத்கரின் இந்த வரலாற்று ஊகங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?

ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில இங்கே.
வேத மகரிஷிகள் பலர் இன்று தாழ்த்தப்பட்டதாக கருதப்படும் குலங்களில் வந்தவர்களே ஆவர். உதாரணமாக மீமாம்ச பாஷ்யம் எழுதிய சாபர மகரிஷி வேடரின் மகனாவார். இன்று சாபரர் எனும் குலம் தாழ்த்தப்பட்ட குலமாகும். சாபர பாஷ்யம் இந்து தத்துவ ஆன்மிக உலகின் அரும்பெரும் பொக்கிஷமாக விளங்கும் போது அந்த மகரிஷியின் குலத்தைச் சேர்ந்தவர்கள்

சத்யகாமன் எனும் பாலகனுக்கு தன் தந்தை  யார் என்பதே தெரியாது. ஆனால், அவன்  கௌதம மகரிஷியின் குருகுலத்தில் ஏற்கப்பட்டு வேத மந்திரங்களை காணும் சக்தி பெற்ற பெரும் அந்தண மகரிஷியானார் என சாந்தோக்கிய உபநிடதம் கூறுகிறது.

தாசி பெண்ணின் மகனாகப் பிறந்து, சூதாடும் மனைகளில் வளர்ந்தவரென்ற போதிலும், கவாக்ஷ மகரிஷி ஞானம் உடையவராகத் திகழ்ந்தார். வேத மந்திரங்களை ஞானக் கண்ணால் கண்ட மந்திர திரஷ்டா எனப்படும் மிகவும் உயர்ந்த ஆன்மிக நிலையில் வாழ்ந்த மகரிஷி அவர். அவரால் அருளப்பட்ட வேதமந்திரங்கள் மிக உயர்ந்த முக்தி நிலையை அளிப்பவை. அவரே சரஸ்வதி நதி தீரத்தில் நடந்த சோமயாகத்தின் எஜமானராக இருந்தருளினார் (ரிக் வேதம் - ஐதரேய  பிராம்மணம்). அவரே நீர் நிலைகளைக் கட்டுப்படுத்திய சுயநலவாதிகளை அழித்து நீர் நிலைகளை மக்களுக்கு பொதுவான வளமாக ஆக்கினார் (சாமவேதம் - கௌஷீதகீ பிராம்மணம்). ரைவகன் எனும் வண்டி இழுப்பவர் பிரம்மஞானம், கொண்டிருந்தார் என்றும் அவரிடம் மன்னரே வந்து மண்டியிட்டு ஞானம் பெற்றார் என்றும் சாந்தோக்ய உபநிடதம் கூறுகிறது. பவிஷ்ய புராணத்தின் படி பராசரரின் அன்னை சூத்திரர் ஆவார். பாரசரருக்கும் மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவரே நான்கு வேதங்களையும் தொகுத்தளித்த மாமுனிவரான வேத வியாசர்! ஐததேரய பிராம்மணத்தை எழுதிய மஹிதாச மகரிஷியும் சூத்திர குடும்பத்தில் பிறந்தவரே ஆவார்.

எனவே, வேத காலத்தில் வர்ணம் பிறப்படிப்படையில் அமையவில்லை, வேத இலக்கியத்தில் பிறப்பு அடிப்படையிலான சாதியத்துக்கு இடமில்லை என அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதற்கு் தெள்ளத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

சுதந்திரத் தன்மையுடைய வர்ண அமைப்பு, எதனால் சுதந்திரமற்ற சாதிய அமைப்பாக மாறியது?
வேத நெறி சுதந்திரத்தை கொள்கையாகவும், செயலாகவும்கொண்டது. ஆனால், பிற்காலத்தில் வேத நெறிக்கு எதிராகத் தோன்றிய சுயநலவாதங்கள் வர்ண அமைப்பை சுதந்திரமற்ற அமைப்பாக மாற்றின. வேதநெறியை இகழ்ந்தன.

ஆனால், பழங்கால நூல்கள் சில வேதநெறிக்கு எதிராக சாதியம் பேசுகின்றனவே. அவை கூறும் சாதியக் கருத்துக்களைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

இப்பழங்கால நூல்களில் உள்ள கருத்துக்களை மாற்றலாம் என இந்து மதம் சொல்லுகிறது. இந்த நூல்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை, தற்காலிக சட்டங்கள் (ஸ்மிருதி) என்று இந்து மதம் வரையறுக்கிறது. ஆதிக்க மனப்பான்மை இன்றி உயிரினங்கள் அனைத்தும் சம உரிமையோடு  சுதந்திரமாக  வாழவேண்டும் என சொல்லுகிற வேதநெறியை இந்துமதம் மாற்றமுடியாதது, நிரந்தரமானது (ஸ்ருதி) என வரையறுக்கிறது.

சாதிப்பாகுபாடுகளை வலியுறுத்தும் தர்ம சாஸ்திரங்கள் இந்து தருமத்தின் அடிப்படை வேதங்களோ, உபநிஷதங்களோ, கீதையோ அல்ல - அவை ஸ்மிருதிகள் எனப்படும் தற்காலிக சட்டங்களே. இச்சட்டங்கள் இன்று பெரும்பாலும் எங்கும் செயல்முறையில் இல்லை.

ஆனால் அதுமட்டும் போதாது. கருத்தளவிலும் இச்சட்டங்களை இந்துக்கள் முழுமையாக மறுதலிக்க வேண்டும். இன்று உலக அரசியல் சட்டங்களில் உன்னதமான அரசியல் நிர்ணய சட்டமாக விளங்கும், அன்ணல் அம்பேத்கர் தலைமையில் தேசபக்த தலைவர்கள் இணைந்து உருவாக்கிய பாரத அரசின் அரசியல் நிர்ணய சட்டமும், அதன் அடிப்படை கருத்தாக்கமுமே இந்துக்களின் சமூக செயல்பாடுகளை நிர்ணயிக்கும் சட்டமாகத் திகழ வேண்டும்.

ஆனால் சாதி முறை என்பது இனரீதியில் உருவானது, கைபர், போலன் கணவாய் வழியாக படையெடுத்த ஆரியர்கள் இங்குள்ள பூர்வீகவாசிகளான திராவிடர்களை அடிமைப்படுத்தி அவர்களை சூத்திரர்களாக்கினார்கள். பிராம்மணர்கள் ஆரிய வந்தேறிகள். இதைத்தான் ஆரியர்களுக்கும் தஸ்யூக்களுக்குமான போராட்டமாக இந்து மதத்தின் அடிப்படையான ரிக்வேதமே சொல்கிறது எனக் கூறுகிறார்களே?

இது குறித்தும் பாபாசாகேப் அம்பேத்கரே தெளிவுபடுத்தியுள்ளார். ஆரிய - தஸ்யு எனும் பதங்கள் இனத்தைக் குறிப்பவை அல்ல என அவர் கூறியுள்ளார். ஆரியப் படையெடுப்பு என்பதே ஒரு இனவாதக் கற்பனையாகும் எனக் கூறும் அம்பேத்கர், பிராம்மணர்களும் சரி சூத்திரர்களும் சரி வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறும் ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டினை முழுமையாக மறுத்துள்ளார். அவர் கூறுவதாவது -

“ஆரியப் படையெடுப்புக் கோட்பாடானது உண்மைத்தகவல்களின் மேல் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக முதலில் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு உருவாக்கப்பட்டு பின்னர் அதனை உண்மையாக நிரூபிக்கும் விதத்தில் தகவல்கள் தேர்ந்தெடுத்து புனையப்பட்டதாகும். அது ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும் தரையில் வீழ்கிறது.

வேத இலக்கியங்களில் இந்தியாவின் மீது ஆரிய இனம் படையெடுத்ததற்கோ அல்லது இங்கு வாழ்ந்த பூர்விக வாசிகளாக கருதப்படும் தஸ்யூக்கள் அல்லது தாஸர்களை வெற்றிக்கொண்டதற்கோ ஆதாரமில்லை. தாஸர்கள் அல்லது தஸ்யூக்களுக்கும் ஆரியருக்குமான வேறுபாடு இனரீதியிலானது என்பதற்கோ ஆரியர்களின் தோல் நிறமும் தாஸ-தஸ்யூக்களின் தோல் நிறமும் வேறுபட்டது என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை.”

அம்பேத்கர் மேலும் கூறுகிறார்: “தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் திராவிடர்கள் என்றால் பிராம்மணர்களும் திராவிடர்களே. பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் ஆரியர்களே. பிராம்மணர்கள் நாகர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உட்படுத்தப் பட்டவர்களும் நாகர்களே.”

சரி, அம்பேத்கர் இப்படி கூறுகிறார். ஆனால் வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? திராவிட நகரங்களான சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரியர்கள் அழித்ததாகவும் அதன் பிறகு அவர்கள் சாதி முறையை ஏற்படுத்தியதாகவும் கூறுகிறார்களே?

இல்லை. இன்றைய நவீன வரலாற்றாசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் அம்பேத்கர் கூறிய கருத்துக்களில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்ல ஆரிய-இனவாதக் கோட்பாட்டுக்கும் அப்படி ஒரு இனம் இந்தியாவில் பழங்காலத்தில் நுழைந்ததற்கும் எவ்வித மரபணு ஆதாரமும் இல்லை என நவீன மரபணு ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். பிராம்மண சாதி எனக் கருதப்படுபவர்களுக்கும் நம் தேச காடுகளில் வசிக்கும் வனவாசி மக்கள் சமுதாயங்களுக்கும் மரபணுத் தொடர்புகள் உள்ளது நிரூபிக்கப் பட்டுள்ளது.

சிந்து சமவெளியில் அண்மைக் காலங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஜிம் ஷாப்பர் எனும் அகழ்வாராய்ச்சியாளர் கூறுவதாவது: “அகழ்வாராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியிலிருந்து படையெடுப்பு ஏற்பட்டதாக காட்டவில்லை. (பண்டைய பாரதத்தின்) பண்பாட்டு வளர்ச்சி இந்த மண்ணிலேயே ஏற்பட்ட கலாச்சார பரிமாணமே ஆகும்.”

அதைப்போலவே இருபது ஆண்டுகளும் மேலாக ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட மார்க் கென்னோயர் தம் இணைய தளத்தில் கூறுகிறார்: “பழைய அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதியது போல ஆரிய படையெடுப்பு நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக்கும் அதன் அருகாமையில் வாழ்ந்தவர்களுக்கும் ஏற்பட்ட உறவுகள் தொடர்புகள் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” மேலும், ஹரப்பா என்பதே ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஹரிவிப்யாவாக இருக்கலாம் எனும் அறிவார்ந்த ஊகத்தையும் தெரிவிக்கிறார் (ஹரிவிப்யா எனும் இடத்தில் புரு வம்சத்தவர்களுக்கும் துர்வாச வம்சத்தவர்களுக்கும் போர் நடந்ததாக ரிக் வேதம் தெரிவிக்கிறது. அவர்கள் இருவருமே வேத பண்பாட்டை சேர்ந்தவர்கள்.)

அதைப் போலவே, பழைய மரபணு ஆராய்ச்சியாளர்கள் சிலர் சில மேம்போக்கான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஆரிய படையெடுப்புக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், அண்மையில் நடத்தப்பட்ட முழுமையான ஆராய்ச்சிகளோ இந்திய சாதிகளின் மரபணுக்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் இருப்பதுடன் அவற்றில் வெளியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தின் தாக்கம் (ஆரியப் படையெடுப்பு நடந்திருந்தால் எப்படி இருந்திருக்க வேண்டுமோ அப்படி) இருக்கவே இல்லை எனத் தெரிவிக்கின்றன.

அது மட்டுமலல. அம்பேத்கர் கூறியதைப் போலவே, (”தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் திராவிடர்களென்றால் பிராம்மணர்களும் திராவிடர்களே. பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் ஆரியர்களே”) இங்குள்ள அந்தண சாதியினரும் வனவாசிகளும் மரபணுத் தொடர்புடையவர்கள் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வேளாளர் எனப்படுவோர் சாதீய அமைப்பில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களைக் குறிக்கும். இவர்கள் அனைவரும் சைவ சமயத்தையே சார்ந்துள்ளனர். இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர் முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும் இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

வேளாளர் விளக்கம்
வேளாளர் என்பார் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளராவர். வேளாண்மையாவது உழுதுண்டு வாழும் வாழ்வாகும். தாளாண்மையாவது இம்முயற்சியால் ஈட்டிய பொருளைத் தக்கார்க்குக் கொடுத்து மகிழ்வதாகும். இவ்விரு பண்புகளோடு வாய்மை குன்றா வகைமையும் இவர்கள் பால் ஆழமாக வேரூன்றி இருந்து வந்தது.

இவர்களைச் சூத்திரர் என்ற பெயராலும் குறித்து வந்தனர். 'நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்குலம் செய்தவத்தினால், இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப்பதி மாறனார்' (தி.12 பு.4 பா.1). 'தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல, நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார், தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்' எனவரும் ஆசிரியர் திருவாக்கால் இவ்வுண்மை அறியலாம். சூத்திரர் என்னும் சொற்கு முன்னும் பின்னும் வரும் அடை மொழிகளைக் காண இச்சொல் உயர்பொருளைக் குறித்து வந்தமை அறியலாம். 'சூத்ரா சுத்த குலோத்பவா' எனச் சிவாகமமும் கூறும் என்பர். எனினும் இச்சொல் இழிநிலையில் வந்த பிறப்பைக் குறிக்கும் என்றும், மேழியர் என்பதற்கு மாறாக இச்சொல் இடைச் செருகலாய்ப் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுவாரும் உளர். எனினும் ஆசிரியர் திருவாக்கின் அமைதியைக் காண இக்கருத்து மேலும் எண்ணத் தக்கதாகவே உள்ளது.

உட்பிரிவு சாதியினர்
    காக்கட்டு வேளாளர் (கார்காத்தர் அல்லது கார்காத்தர் பிள்ளை)
    சோழிய வேளாளர்
    வீரகுடி வேளாளர்
    நாமதாரிப் பிள்ளை
    ஓதுவார் பிள்ளை
    தேசிகர்
    ஆறுநாட்டு வேளாளர்
    நாஞ்சில்நாட்டு வேளாளர்
    சேர வேளாளர்
    சோழ வேளாளர்
    நாட்டம்படி வேளாளர்
    நன்குடி வேளாளர்
    துளுவ வேளாளர்
    பாண்டிய வேளாளர்
    கொடிக்கால் வேளாளர்
    தொண்டை மண்டல வேளாளர்
    அரும்புக்கட்டி வேளாளர்

சாதிகளின் பட்டியல்
    பிராமணர்
    பஞ்ச கம்மாளர்
    மீனவர்
    பழங்குடிகள்
    ஆதி திராவிடர்
    ராஜூக்கள்
    புதிரை வண்ணான்
    பலிஜா
    சாலியர்
    பண்டாரம்
    குறவர்கள்
    தேவர்
    முத்தரையர்
    நாடார்
    நாவிதர்
    ரெட்டி
    கோனார்
    வண்ணார்
    பாணர்
    செங்குந்தர்
    வேளாளர்

 பிராமணர்
பிராமணர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் பிராமணர்கள் முதன்மை நிலையில் வைக்கப்படுகின்றனர்.  இந்து சமூக அமைப்பில், மனுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, இவர்கள் வேதங்களைப் பயின்று இறை வழிபாடுகளை நடத்தும் கடமை கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் அறிஞர்களாகவும் இருடிகளாகவும் அரச குருமார்களாகவும் இருந்தனர்.

வரையறை
மனு ஸ்மிருதி பிராமணர் என்பவர் யாசித்தே உண்ண வேண்டும் என்றும், நாட்டின் நலனுக்காக மன்னர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேதங்களையும் பிற கல்வி அமசங்களையும் பயிற்றுவிக்க வேண்டுமென்றும் கூறுகிறது. மேலும் பிராமணர் என்பவர் அமைதி, சுய கட்டுப்பாடு, பொறுமை, நேர்மை, அறிவு, விவேகம், சுத்தம், புனிதம் போன்ற தன்மைகளும் நிறைந்திருக்க வேண்டும்.

தொடக்கத்தில், வேதகால இந்தியச் சமூகத்தில், இந் நிலைகள் ஒருவருடைய குணம், நடத்தை, இயல்பு போன்றவற்றால் அடையப்படுவதாக இருந்திருக்கிறது. ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. காலப்போக்கில், இந் நிலை மரபுவழியாக அடையப்படும் ஒன்றாக மாறிவிட்டது. தற்காலத்தில் இவ் வருணமுறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை ஆயினும், பிராமணர்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் ஐயர், ஐயங்கார் என இரு பிரிவுகளில் பல உட்பிரிவுகளாக உள்ளனர். சமூகநீதி இயக்கங்கள் வலுப்பெறும் வரை இவர்களது ஆளுமை அனைத்து அரசு, கல்வி மற்றும் வணிகத் துறைகளில் ஓங்கியிருந்தது. ஆனால் தற்போது இப்படியில்லை.

 ஐயர்
ஐயர் (அல்லது அய்யர், சாஸ்திரி, சர்மா, பட்டர்) என்றழைக்கப்படுவோர் தமிழ், தெலுங்கு மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணர்கள் ஆவர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள இவர்கள், பெரும்பாலும் தமிழகத்தில் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவு கர்நாடகம், ஆந்திரம், கேரளத்திலும் காணப்படுகின்றனர்.
ஐயர் என்ற பெயர் இடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு பிராமண சமூகங்கள் ஒன்றுபட்ட சமுதாயமாகிய பொழுது உருவாகியது. அவர்களில் இருந்து விலகிய வைஷ்ணவத்தின் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்போரை ஐயங்கார் என்று அழைக்கிறோம். ஐயர்கள் தங்களின் பணிகளுக்கு ஏற்ப வெவ்வேறு உபகுழுக்களாக பிரிந்துள்ளனர். அவர்கள் கோத்திரம், வேதம் என்பதின் வகையிலும் பகுக்கப்பட்டுள்ளனர்.

பிரிவுகள்
ஐயர் சமுகத்தில் பல பிரிவுகள் உள்ளன.
    வடமா
    வாத்திமா
    பிரிகச்சரணம்
    அஷ்டசகஸ்ரம்
    குருக்கள்
    முக்கானி
    தீட்சிதர்
 அஷ்டசகஸ்ரம்
அஷ்டசகஸ்ரம் (சமசுகிருதம்: अष्टसहश्रम) (தமிழ அர்த்தம்: எட்டாயிரம்) என்றழைக்கப்படுவோர் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர்.
பிரிவுகள்
    அத்தியூர்
    அறிவர்படை
    நந்திவாடி
    சத்குலம்

 வாத்திமா
வாத்திமா என்றழைக்கப்படுவோர் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். மற்ற ஐயர் சமூகங்கள் போல் இவர்களும் ஆதிசங்கரரின் அத்வைதத்தைக் கடைப்பிடித்து வந்தவர்கள்.

பதினெட்டு கிராமத்து வாத்திமா
வடமா என்றழைக்கப்படுவோர் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். மற்ற ஐயர் சமூகங்கள் பொல் இவர்களும் ஆதிசங்கரரின் அத்வைதத்தைக் கடைப்பிடிதத்து வந்தவர்கள். இவர்களில் பலர் வைணவத்துக்கு மாறிவிட்டு ஐயங்கார் சமூகத்தின் வடகலை ஐயங்கார் பிரிவை துவங்கினார்கள். பிரபல வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் ஒரு வடமா குடும்பத்தில் பிறந்ததாக சிலர் நம்புகிறார்கள். பாரம்பரியத்துக்கு மாறாக இவர்களுக்கு ஒரு தனி வீர வரலாற்று உள்ளது.
    வடதேசத்து வடமா
    சோழதேசத்து வடமா
    சபையர்
    இஞ்சி
    தும்மாகுண்ட திராவிடர்

 ஐயங்கார்
ஐயங்கார் (அல்லது அய்யங்கார்) என்றழைக்கப்படுவோர் தமிழ் மொழியை தாய்மொழியாய் பேசும் இராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்திலும் காணப்படுகின்றனர்.

இவர்களில் முக்கியமாக இரெண்டு பிரிவுகள் உள்ளன.
    வடகலை
    தென்கலை

 கவுட சாரஸ்வத் பிராமணர்
கவுட சாரஸ்வத் பிராமணர் (கொங்கணி:गौड सारस्वत / ಗೌಡ ಸಾರಸ್ವತ) என்றழைக்கப்படுவோர் கொங்கணி மொழியைத் தாய்மொழிகளாக கொண்ட் பிராமணர்கள் ஆவர்.
பயன் படுத்தும் பெயர்கள்
    கினி
    கமத்
    ஷேனாய
    பயி
    மல்லையா
    நாயக்
    படுகோன்

 கொங்கணஸ்த் பிராமணர்
கொங்கணஸ்த் பிராமணர் (கொங்கணி/மராத்தி:कोकणस्थ ब्राह्मण) என்றழைக்கப்படுவோர் கொங்கணி மொழியைத் தாய்மொழிகளாக கொண்ட் பஞ்ச திராவிடம் பிரிவைச் சேர்ந்த பிராமணர்கள் ஆவர்.
 
தமிழ்ப் பிராமணர்கள்
தமிழர் சமூகத்தில் தமிழ்ப் பிராமணர்கள் ஒரு இணைபிரிக்க முடியாத அங்கம். சைவம், வைணவம், இந்து சமயம் ஆகியவை பண்டைக்காலம் முதற்கொண்டு தமிழோடும் பொதுத் தமிழர் சமூகத்தோடும் இழையோடிய கூறுகளாக இருப்பவை. இச் சமயங்களின் குருமார்களில் முதன்மையாக இருந்த தமிழ் பிராமணர்கள் தமிழர் சமூகத்தில் ஒரு முக்கியமான, ஆற்றல் மிக்க, செல்வாக்கு மிக்க பங்கு வகித்தனர், வகிக்கின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றியுள்ள பணியும் குறிப்பிடத்தக்கது.

தேசஸ்த் பிராமணர்
தேசஸ்த் பிராமணர் என்றழைக்கப்படுவோர் மராத்தி மொழியை தாய்மொழிகளாக கொண்ட பிராமணர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலும் மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் வாசித்து வருகிறார்கள்.
 பஞ்ச திராவிட பிராமணர்
பஞ்ச திராவிட பிராமணர் என்பவர்கள் பிராமண சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் தமிழ் நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகிய தேன் இந்திய மாநிலங்களிலும் கோவா, மகாராட்டிரம் மற்றும் குஜராத் ஆகிய வட இந்திய மாநிலங்களிலும் வசிக்கும் பிராமணர்கள் ஆவர்.

பிரிகச்சரணம்
பிரிகச்சரணம் (சமசுகிருதம்: ब्रहतचरनम्) (தமிழ அர்த்தம்: பெரிய கால்கள்) என்றழைக்கப்படுவோர் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். மற்ற ஐயர் சமூகங்கள் போல் இவர்களும் ஆதிசங்கரரின் அத்வைதத்தைக் கடைப்பிடிதத்து வந்தவர்கள். மற்ற ஐயர் சமூகங்கள் போல் இல்லாமல் இவர்களுக்கும் வடமா சமுகத்தினருக்கும் ஒரு தனி வீர வரலாற்று உள்ளது.
பிரிவுகள்
    கண்டிரமாணிக்கம்
    புத்தூர் திராவிடர்
    மாங்குடி
    மலைநாடு
    முசநாடு
    கோலத்தூர்
    பழமநேரி
    மருதன்சேரி
    சத்தியமங்கலம்

பஞ்ச கம்மாளர்
ஆபரணத் தொழில் செய்யும் தட்டார், உலோகத் தொழில் செய்யும் கன்னார், இரும்புத் தொழிலில் ஈடுபடுகின்ற கொல்லர், மட்பாண்டத் தொழில் செய்யும் குயவர் என்னும் கைவினைத் தொழில் செய்யும் சாதியாருடன் தச்சரையும் சேர்த்துப் பஞ்ச கம்மாளர் எனவும் அழைப்பதுண்டு. தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.

குயவர்
குயவர் என்பவர் மண்பாண்டக் கலையில் தேர்ந்தவர்களைக் குறிக்கும். இது ஒரு தொழில் சார்ந்த பெயரும், சாதிப் பெயரும் ஆகும். இவர்களும் விஸ்வகுலத்தில் உள்ளடக்கப்படுவர். மரவேலை, நகைத்தொழில், மட்பாண்ட வேலை, இரும்புவேலை மற்றும் கற்சிற்பங்கள் போன்ற கைவினை வேலை செய்பவர்கள் ஒருமித்த விஸ்வகுலத்தவர் அல்லது பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்றனர்.
பானை, சட்டி, குவளை, மண் அடுப்பு, சிற்பங்கள் (குதிரை, காவல் தெய்வங்கள், வாகனங்கள்) போன்றவற்றைச் செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.
சாதிகளின் பட்டியல்
    பிராமணர்
    பஞ்ச கம்மாளர்
        குயவர்
        கொல்லர்
        தச்சர்
    மீனவர்
    பழங்குடிகள்
    ஆதி திராவிடர்
    ராஜூக்கள்
    புதிரை வண்ணான்
    பலிஜா
    சாலியர்
    பண்டாரம்
    குறவர்கள்
    தேவர்
    முத்தரையர்
    நாடார்
    நாவிதர்
    ரெட்டி
    கோனார்
    வண்ணார்
    பாணர்
    செங்குந்தர்
    வேளாளர்

கொல்லர்
இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்பவர் கொல்லர் என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில் கருமான் என்று கூட ஒரு பதம் உண்டு.
பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் பொற்கொல்லர்கள் எனப்படுகின்றனர். இவர்களைப் தட்டார் என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் சாதியை குறிக்கும்.

தச்சர்
மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் தச்சன் எனக் குறிப்பிடுவர். தமிழ் நாட்டில், சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருப்பதால், தச்சர் (தச்சன் என்பதன் பன்மைச் சொல்) என்பது மரவேலையாளர் சாதியையும் குறிக்கும். முற்காலத் தமிழகத்திலும், தமிழர் வாழும் இலங்கை போன்ற இடங்களிலும், மரவேலை மேற்படி சாதியாருக்கு மட்டுமே உரியதாக இருந்தது. தற்காலத்தில் இது பெருமளவு மாறிவிட்டதெனலாம்.

கற்களில் சிற்பங்கள் செய்யும் சிற்பிகளும் சில பண்டைய நூல்களில் கற் தச்சர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆபரணத் தொழில் செய்யும் தட்டார், உலோகத் தொழில் செய்யும் கன்னார், இரும்புத் தொழிலில் ஈடுபடுகின்ற கொல்லர், மட்பாண்டத் தொழில் செய்யும் குயவர் என்னும் கைவினைத் தொழில் செய்யும் சாதியாருடன் தச்சரையும் சேர்த்துப் பஞ்ச கம்மாளர் எனவும் அழைப்பதுண்டு.
முற்காலத்தில் வீடுகள் போன்ற கட்டிடங்களைக் கட்டும்போது, தச்சரின் பங்கே முதன்மையாகக் கருதப்பட்டது. இன்றும் கூட இது தொடர்பான பாரம்பரியச் சடங்குகளில் தச்சருக்கு முதன்மை கொடுக்கப்படுவதைக் காணமுடியும்.

மீனவர்
ஐவகை நிலங்களுள் ஒன்றான கடலும் கடல் சார்ந்த நிலமாகிய நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் மீன் பிடித்தலையும் அது சார்ந்த பிற தொழில்களையும் செய்து வாழ்ந்தனர். இவர்களே மீனவர் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு சமூகப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டனர். படிப்பறிவில் பின் தங்கியிருந்தாலும் நடுக்கடலில் நின்றுகொண்டு வானையும் அலைகளையும் வைத்தே திசைகளைக் கண்டறியும் அறிவை இவர்கள் வழிவழியாக கற்று வைத்திருப்பது இவர்களின் சிறப்பாகும்.

கடையர்
கடையர் இன மக்கள் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர், தமிழகமீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர் :
1.வலையர்
2.பரவர்
3.கடையர்
வலையர்
வலையை வைத்து மீன் பிடித்ததால் அவர்கள் வலையர் எனப்பட்டனர்.
பரவர்
பரவலாக கடலில் பரந்து விரிந்து சென்று மீன் பிடித்ததால் அவர்கள் பரதவர் எனப்பட்டனர்.

கடையர்
இவர்கள் கரை ஓரங்களில் மீன் பிடித்ததாலும் கடல் சார்ந்த கரை தொழில்கள் செய்ததால் (கரைவலை, சுண்ணாம்பு எடுத்தல், சங்கு சம்பந்தப்பட்ட தொழில்கள், கடல் பூச்சிகளை காய வைத்து விற்பனை) போன்ற தொழில்கள் செய்ததால் கரையர் எனப்பட்டனர் பின்பு கரையர் மருவி கடையர் எனவாகியது. இதற்கு சான்றாக இன்னும் இந்த இனமக்களில் உட்பிரிவாக சுண்ணாம்புகடையர், பூச்சிகடையர் எனபிரிவுகள் உள்ளனர், இன்றளவும் இம்மக்கள் கடற்கரை ஓரங்களில் வசித்து வருகின்றனர் இவர்கள் கரையர் எனப்பட்டதற்கு சான்றாக இராமேஸ்வரத்தில் கரையாதெரு என்ற ஊர் உள்ளது. (கரையர் தெரு கரையாதெருவாக மருவியது).

கரையார்
கரையார் யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பில் உள்ள ஒரு முக்கியமான பிரிவினராகும். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.

பரம்பல்
பெரும் பாலும் கரையோரப் பிரதேசங்களில் கடல் வளம் உள்ள இடங்களில் இந்த சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். தற்போதைய நிலையில் பலர் தமது பாரம்பரியத் தொழிலைக் கைவிட்டு அரச மற்றும் தனியார் தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
தொழில் முறை
பெரும்பாலும் கடல் சார்ந்த தொழிலான மீன் பிடித்தலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைவிட கப்பல் கட்டி அதன் மூலம் நாடு பல கண்ட மாலுமிகளாகவும் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.
உட் சாதிப் பிரிவுகள்
சம்பாங்காரர்

பரதவர்
பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான சாதியினர். பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள். இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலை நாட்டியவர்கள். பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. இவர்கள் சந்திர வம்சத்தினர். பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே.
இலக்கியத்தில் பரதவர்
பண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.

பரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாக பிரிந்தார்கள். அவ்வுட் பிரிவுகளின்படி தொன்மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.
பழம் குலப் பெயர்கள்

பரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், ஆரிய நாட்டார் (ஆரியன்), கங்கை நாட்டார், சிந்து நாட்டார் சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு. இதில் ஒரு பெயரான ஆரியன் என்ற பெயர் சோழநாட்டு பட்டினவரைக் குறிக்கும் பெயராகும். இது இன்றும் வழக்கில் உண்டு. துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். அதில் சோழநாட்டுத் துறைமுகங்களில் வாழ்ந்த பட்டினவர் ஆரியன் என்று அழைக்கப்பட்டார்கள். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும். பட்டினவர் தொழில்களாக கடல் ஓடுதல், கடல் வாணிபம் செய்தல், கடற்படை வீரர்களாக அரசபடைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.

சிறப்புக்கள்
பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முன்நாட்களில் பாண்டியர் என்றும், படையாட்சியர், வில்லவராயர், பூபாலராயர், பாண்டியதேவர், சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ, மச்சாடோ, மச்காறேன்ஹாஸ், ரோட்ரிகோ என்ற போர்த்துக்கீசிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பரத குலத்தினர் பேரரசர் குலத்தவர் என்பதற்கான பல அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன.

பழங்குடிகள்
பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ அல்லது பன்னெடுங் காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில், வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும், மொழியும், நிலமும் அதைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டும் தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும், கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணம் பற்றிய பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டின் நகர, கிராம வாழ்விற்கு அப்பாற்பட்டவர்களாகவும், தங்கள் உரிமைகளைப் பொறுத்த விழிப்புணர்வு அற்றவர்களாகவும், அதே நேரத்தில் அரசு நிர்வாகத்திற்கோ அல்லது நகர மக்களுக்கோ எந்த தீங்கும் இழைக்காமல் வாழ்ந்து வருபவர்கள் பழங்குடியின மக்கள்.  பழங்குடியினர் என்று குறிப்பிடப்படும் இம்மக்கள் இந்திய நாட்டின் மொத்த மக்கட் தொகையில் 8 விழுக்காடு மட்டுமே இருந்தாலும், இவர்கள் அதிகமாக வாழும் 187 மாவட்டங்களில்தான் இந்திய நாட்டின் 68 விழுக்காடு வனப்பகுதி உள்ளது. தங்களின் வாழ்விடமாக, உலகமாகத் திகழும் வனப்பகுதியை அதன் வளம் குன்றாமல் காத்து வருபவர்கள் இம்மக்கள். அவர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த காட்டை அழிப்பதிலும், இயற்கை வளங்களைச் சுரண்டுவதிலும் மட்டுமே இந்த இன்றைய நாகரிக சமூகம் நின்றுவிடவில்லை, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தியது, அவர்களின் அந்தரங்க வாழ்க்கையிலும் அத்துமீறியது. இப்படி ஓரிரு வனப் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை, சுதந்திர இந்தியாவின் வனப் பகுதிகள் அனைத்திலும் இந்த திட்டமிட்டச் சுரண்டல் தங்கு தடையின்றி நடந்து வந்தது. அதே நேரத்தில் பிரதமரே குறிப்பிட்டுள்ளது போல அரசுகள் தீட்டிய சமூக, பொருளாதாரத் திட்டங்கள் எதுவும் அவர்களைச் சென்றடையவில்லை. ஒரு பக்கத்தில் சமூக, பொருளாதார வாழ்விலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு, தங்களுடை உரிமைகளுக்கும், உடமைகளுக்கும் எவ்வித பாதுகாப்பும் அற்ற நிலையில், பாதுகாக்க வேண்டியவர்களே தொழில் நிறுவனங்களுடனும், ஊழல் அரசியல்வாதிகளுடனும் இணைந்து ஒடுக்க முற்பட்ட நிலையில், இயற்கையாக எழும் எதிர்ப்புணர்வு அவர்களை ஒரு கொள்கை ரீதியான ஆயுதப் பாதுகாப்பை ஏற்க தூண்டியது.

ஒரு முன்னேறிய மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிலேயே, வனப் பகுதிகளும், பழங்குடியினரும் அத்துமீறல்களுக்கு ஆட்படும்போது, ஒரிசா, பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்ட் போன்ற இடங்களில் எப்படிப்பட்ட ஒடுக்கு முறை இத்தனை ஆண்டுக் காலமாக அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 இந்தியாவில் 427 பழங்குடிகள் உள்ளன

 பளியர்
தமிழ்நாட்டிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்தப் பகுதிகளில் வாழும் பளியர் சமூகத்தினர் சிதைந்த தமிழைப் பேசுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையின் மிகப் பழங்குடியினர் இவர்களே. பழனியர் என்பதே பளியர் என மாறி வழங்குகிறது என்றும் சிலர் சொல்கின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிகளிலும் இவ்வினத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.

இவர்களில்
    காட்டுப்பளியர்,
    புதைப்பளியர் என்னும் இரு பிரிவினர் உள்ளனர்.
தேனடைகளை எடுக்கப் பயங்கரமான பாறைகளிலும் ஏறக் கூடிய திறனுடையவர்கள். விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவர். இவர்கள் காய், கனி, தேன், தானியங்களை உண்பது வழக்கம். மரங்களின் மீது பரண்களை அமைத்தும், பாளை இடுக்குகளிலும் குகைகளிலும் குடியிருப்பைக் கொண்டிருக்கிறார்கள். குட்டையான உருவம், சுருண்ட முடி, தடித்த உதடு, கருப்பு நிறம், குறைந்த ஆடை இவைகளைக் கொண்டு பளியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

புலையர்
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் எனும் பழங்குடியின மக்கள் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே
    குடும்பி,
    குள்ளன்,
    மல்லன்,
    குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன.
சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது.

முதுவர்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் வாழ்கிற ஒரு பழங்குடியின சமூகத்தினர் முதுவர். இவர்களில் திண்டுக்கல் தேனி மாவட்டங்களிலுள்ள மலைப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாண்டிய நாட்டுத் தமிழர் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் மதுரை மீனாட்சியம்மையை குலதெய்வமாக வணங்குகின்றனர். காடுகளின் ஊடே வாழ்வது இவர்தம் இயல்பு. வேட்டையாடுவதிலும், கம்பு, கேழ்வரகு, ஏலக்காய் ஆகிய வற்றைப் பயிர் செய்வதிலும் தேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி பேச்சுத் தமிழின் கிளை மொழிகளுள் ஒன்றாக உள்ளது.

குறும்பர்
குறும்பர் அல்லது குறுமனர் அல்லது குறுபாரு (Kurumbar or Kurumans or Kurubaru) தென்னிந்தியாவில் வாழும் ஆடு மேய்ப்பவர்களாவர். இந்தியாவின் பழங்குடியினர் ஆவர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது மொழி குருமன் பழங்குடி கன்னடம் ஆகும். இவர்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு) வழிபடுகின்றனர். தங்களது தலையில் தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுகின்றனர். இவர்களது சாதிப் பெயர்கள் கவுண்டர், கௌடர், ஹெக்கடே, நாய்க்கர் என்பன ஆகும். இந்தியாவின் பிற பகுதிகளில் இவர்கள் தங்கர் என அறியப்படுகின்றனர்.

தோடர்கள்
தோடர்கள் தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர். தோடர்கள் தாம் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர். இம் மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. இதனால் இம்மக்களை மாந்தவியலாளர் செல்லமாக எருமையின் குழந்தைகள் என அழைப்பர்.  இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது. இம்மக்கள் பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள்.

தோடர்கள் பண்பாடும் பழக்கவழக்கங்களும்
தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர்.
தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர்.
தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்.

மண உறவு
இவர்கள் முற்காலத்தில் பல கணவர் மணமுறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.
 படுகர்

படுகர் (Badagas அல்லது படகர்) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். நீலகிரியில் வாழும் 18 இன மக்களுள் ஓர் இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாதது. இவர்கள் விஜய நகர பேரரசின் காலத்தின் போது மைசூர் நிலப் பகுதிகளில் இருந்து நீலகிரிக்குப் இடம் பெயர்ந்தார்கள் எனப்படுகிறது.

நீலகிரியில் வாழும் படகர்களை வடுகர் என்றும் படகர் என்றும் கௌடர் என்றும் கூறுகின்றனர். நீலகிரி படகர் சமுதாயத்தில் 18 பிரிவுகள் உள்ளன.
மலைபடுகடாம் என்னும் சங்ககால நூலில் (அடி 161) குறிப்பிடப்படும் 'ஆரிப் படுகர்' இவர்களின் முன்னோடிகள் என்பர்.
 காடர்

காடர் என்போர் தமிழ் நாட்டில் உள்ள பழங்குடிகளில் ஓரின மக்கள். இவர்கள் கோயம்புத்தூரில் உள்ள ஆனைமலை, பரம்பிக்குளம் கங்கடவு பெரும்பாறை போன்ற இடங்களிலும், மற்றும் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் மொழி கன்னட மொழி கலப்புள்ளது.

இருளர்
தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஆந்திரப் பிரதேசத்திலும் வசிக்கும் முதற்குடியினர் இருளர் (Irulas) ஆவார்கள். இவர்கள் காடு சார்ந்த வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்கள். குறிப்பாக பாம்பு, எலி போன்றவற்றை பிடிப்பதில் கைதேந்தவர்கள். இவர்களின் சமுதாயப் படிநிலை மிகவும் தாழ்த்தப்பட்ட ஒன்றாகும். ஆகையால் இவர்கள் பட்டியல் வகுப்பினர் (Scheduled Tribe) என இந்திய அரசால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு மொழிகளையே பேசுகின்றார்கள். இவர்களின் மொழி வழக்கு இருளா மொழி என்றும் கூறப்படுகிறது. இவர்களின் தற்கால வாழ்வியல் சூழல் கேள்விக்கிடமாகவும் பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டும் நிற்கின்றது. காடு, சாதி சார்ந்த வாழ்வியலை மீறி நவீன பொது வாழ்வியலுடன் தங்கள் தனித்துவத்தையும் பேணி இணைவது இவர்களுக்கு சவாலாக அமைகின்றது.

ஆதி திராவிடர்
ஆதி திராவிடர் என்பது தமிழ் நாட்டில் தலித்துக்களைக் குறிக்க பயன்படுகிறது. இப்பதம் பெரியார் இராமசாமி அவர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்து சமூகத்தால் தாழ்ந்தச் சாதிகளாக வகைப்படுத்தப்பட்ட பறையர், அருந்ததியர், பள்ளர் போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களை கூட்டாக அழைக்கப்பயன்படுகிறது.
கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இவை முறையே ஆதி கர்நாடகா, ஆதி ஆந்திரா என்ற சொற்களால் குறிப்படப்படுகின்றன.

பறையர்
பறையர் அல்லது பெறவா என்போர் கேரளா, தமிழ் நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் ஒரு சமூகக் குழுவாகும். பறையர், (அ) சாம்பவர் , மற்றும் ஆதி திராவிடர் என்பவர்கள் இந்தியாவின் ஒரு இன அல்லது சமூக குழுவினர் , இவர்கள் அதிகமாக தமிழ் நாடு , கேரளா மற்றும் ஸ்ரீ லங்கா நாட்டில் வாழ்கின்றனர் .தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும் , பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும் , தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.

2001 இந்திய மக்கள் தொகை கணக்கின் படி , ஆதி திராவிடர்களின் மக்கள் தொகை 90 லட்சமாக உள்ளது.தமிழ் நாடு அரசின் பட்டியல் இனத்தவருள் ஆதி திராவிடர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.
இச்சமூகக் குழுவினது பெயர் "பறை" என்பதில் இருந்து தோன்றியதாகும். இவர்களது முக்கியத் தொழிலாக காணப்பட்ட பறையறிவித்தல் காரணமாக இப்பெயர் வழங்கியது. தமிழ் இலக்கியங்கள் இவர்களை பறை முழங்கும் குழுவாக இனங்காட்டுகிறது. சங்க இலக்கியங்களில் பறையர், பறை முழங்கும் மக்கள் குழுவினரிடயே காணப்பட்ட விசேட குழுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெறவா என்பது இலங்கையின் பௌத்த மக்களிடையான பறையர் மக்கள்குழுவுக்கு இணையானவர்களாவர்.
வரலாறு

சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். வழிவழியாக பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர். பறையர்களில் ஒரு பிரிவினர் "வள்ளுவன்" என்று அழைக்கப்படுவர். இவர்கள் சோதிடத்திலும், மாயாஜாலங்களிலும் பெயர் பெற்று இருந்தனர். அரசர்களின் ஆலோசகர்களாகவும் இவர்கள் பணி புரிந்திருக்கின்றனர்.

கிளய்டன் அவர்கள் கூற்றிலிருந்து, பறையர்கள் தமிழகத்தில் நீண்டதொரு வரலாறு அமையப்பெற்றதும், துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர் என்பதற்கும் சான்று பகர்கின்றார். பிரான்சிஸ் அவர்கள் 1901 ஆம் ஆண்டின் மெட்ராஸ் சென்சஸ் பட்டியலை இயற்றியவர். அவர் கூற்றின்படி, கிறித்தவ ஆதிக்கம் தழைத்தோங்கிய பண்டைய தமிழ் படைப்புகளில் "பறையர்" என்னும் சொலவடை உபயோகத்தில் இல்லை எனவும், ஆனால் தனித்ததொரு இயல்பினையும், கிராமங்களில் அல்லாது கோட்டைகளில் வாழும் "Eyivs" என்னும் பழங்குடியின மக்களைப் பற்றிய செய்திகள் நிரம்பியிருப்பதாக கூறுகின்றார்.ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

பறையர்
எழுபதுக்கும் மேற்பட்ட சாதியினர் தமிழ்நாடு அரசினரால் அட்டவணைச் சாதியினர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இவர்களில்தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் என்ற மூன்று சாதியினர்தான், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். கல்வெட்டுகளிலும், செப்புப் பட்டயங்களிலும் இம்மூன்று சாதியினர், முறையே பள்ளர், பறையர், சக்கிலியர் என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்
பறையர் குடியிருப்பு

பறையர் குடியிருப்பு சேரி என்று இன்று அழைக்கப்படுகிறது. அழுக்குத் தெரு என்ற பொருளைத் தரும் Slum என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லாகவே சேரி என்ற சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது. தூய்மையற்ற இடமே சேரி என்ற கருத்தாக்கம் மக்களிடம் இடம் பெற்றுள்ளதன் அடிப்படையில், சேரி வாழ்க்கை, சேரி மக்கள், சேரிப்பேச்சு என்ற சொற்களை இழிவான பொருளில்பயன்படுத்துகின்றனர். ஆனால் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனச்சேரி என்ற சொல்லாட்சி சங்க காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பறைச்சேரி (தெ.இ.க;4,க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686)
மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5)
என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும் அதற்கு தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச் சான்றுகளால் தெரியவருகின்றது.
தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (தெ.இ.க.II;4) இதனால் பறையர்கள் அனைவருமே தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை என்று கருத இடமுள்ளது.
தொழில்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள்

குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். குதிரைக்கிப் புல்லிடும் பறையர் என்று சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.
உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறானதொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும்புலனாகிறது.
அரசன், பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை அரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க.எ. 56)

மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) பள்ளுப்பறை... சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)
கல்வியறிவு

இம்மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தமையை சில கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகிறோம். கொடை வழங்குவதைக் குறிப்பிடும் கல்வெட்டுக்களில் அதை வழங்குவோர் மற்றும் சாட்சிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். கல்வெட்டு வெட்டுவதற்கு முன்அச்செய்தியை ஓர் ஓலையில் எழுதிக்கொள்வர். கையெழுத்திடத் தெரிந்தவர்கள் இவ்ஓலையில் இவை என்னெழுத்து என்று எழுதிக் கையெழுத்திடுவர். கையெழுத்திடத் தெரியாதவர் எழுத்தாணியால் கீறுவர். இது தற்குறி எனப்படும். இவை என்னெழுத்து என்பதற்குப்பதில் இது இன்னார் தற்குறி என்று குறிப்பிடப்படும். அதன் பின்னர் தற்குறி மாட்டறிந்தேன் என்று குறிப்பிட்டு இது என்னெழுத்து என்றுஎழுதி, கையொப்பமிட தெரிந்த வேறொருவர் தன் கையெழுத்தை இடுவார். (ராசகோபாலன் 2001:94-95).

ஆவணங்கள் சிலவற்றுள் தலித்துகள் கையெழுத்திட்டுள்ளதை, கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன. உமையாள்வான் என்ற பெண் 13ம் நூற்றாண்டின் இறுதியில் செங்கல்பட்டு மாவட்டம் கூவம் கிராமத்தின் திருவிற்கோலமுடைய நாயனார் கோவிலுக்கு சக்தி விளக்குஎரிப்பதற்கு கொடை வழங்கியுள்ளார். அதை பெற்றுக் கொண்ட மூவரில் முதலாமவர் வைத்தான் பள்ளன் என்றும், கல்வெட்டின் இறுதியில்இவை பள்ளன் எழுத்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி கட்டமுடியாத நிலையில் ஒல்லையூர் மறவர்கள் மதுராந்தகம் என்ற குடிகாடை விற்று வரி செலுத்தியுள்ளனர். இவ்விற்பனை தொடர்பான கல்வெட்டில் அஞ்சாத கண்டப்பறையின் நெடும்பறி கால் என்று ஒரு கால்வாய் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் கால கல்வெட்டொன்றில் (IPS 309) இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் பறையர் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்ற சிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர். ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். (IPS 421)

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் வட்டத்திலுள்ள விரையாச்சிலைஎன்ற ஊரில் பனையன்குன்று என்ற நீர்நிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.(IPS 535)
மாறவர்மன் குலசேகரன் என்ற பாண்டி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நீர்க்குட்டை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டைஆராய்ந்த ஆர்.திருமலை (1981:28) பெரும்பாலான மறவர்களும் குறுநில மன்னர்களின் வழித்தோன்றல்களும் கூட கல்வியறிவுஇல்லாதவர்களாக இருக்க பறையர்களும் கைவினைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவதானித்துள்ளார்.

வரி
சோழர் காலத்தில் பள் வரி, பறை வரி என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

பொருளாதார நிலை
நிலங்களுக்கு உரிமையாளராக இருந்ததற்கும் கோவில்களுக்குத் தானம் வழங்கும் அளவுக்கு பணம் படைத்தவராக இருந்தமைக்கும் சிலசான்றுகள் உள்ளன.

கோவில்களுக்கு நிலங்கள் மட்டுமின்றி நந்தா விளக்கெரிக்க கால்நடைகளைத் தானமாகவும் வழங்கியுள்ளனர். திருமானிக்குழிஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்ற ஊர்ப்பறையன் மண்டை கோமான் என்பவர் பால் எருமை ஒன்றைஅதன் கன்றுடன் குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம் வழங்கியதை மூன்றாம் ராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக்கல்வெட்டொன்று (தெ.இ.க. 7,க.எ.794) குறிப்பிடுகிறது.
விக்கிரம சோழ தேவன் காலத்திய (1292-93) கல்வெட்டொன்றில், வெள்ளாட்டி பூசகரான பறையன் ஆளுடை நாச்சி என்பவனும்அவருடைய சிறிய தாயாரும் சேர்ந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவில்மண்டபத்திற்கு திருநிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ளார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. (தெ.இ.க. 26,க.எ. 253)

எதிர்க்குரல்
தம்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தலித்துக்கள் கிளர்ந்து எழுந்தமையை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
திருமயம் வட்டம் தேக்காட்டூர் தருமசமர்த்தினி அம்மன் கோவிலிலுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் பறையர்கள் களஞ்செதுக்கிவந்ததாகவும், பின்னர் களஞ்செதுக்க மாட்டோம் என்று அறிவித்ததாகவும் குறிப்பிடுகிறது. ஊரவர்கள் பறையர்களின் அறிவிப்பைஏற்றுக்கொண்டதுடன் ஊரிலேயே குடியிருந்து கொண்டு முன்னர் பெற்று வந்த சுதந்திரத்தை அவர்கள் பெற்று வர அனுமதித்ததையும்இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. (IPS 948)
திருமயம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மண்டபத்திலுள்ள கல்வெட்டு, மறவருக்கும் பறையருக்கும் இடையிலானஉடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. "நம்மில் வினைவிரோதங்களும் வந்து இரண்டு வகையிலும் அழிவில் இருக்கையிலே" (அழுத்தம்எமது) என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் பறையர்கள் மறவர்களை எதிர்த்து நின்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. "செம்மயிர்யிட்டும்பாடிக்கொண்டும் பறையர் வரலாம்" என்று இவ்வுடன்படிக்கை குறிப்பிடுவதால் பண்பாட்டு அடையாளம் தொடர்பாக மறவருக்கும்பறையருக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதலாம் (IPS 828).

உட்பூசல்கள்
ஒடுக்கப்பட்ட பிரிவின்கீழ் வரும் பல்வேறு சாதியினருக்கிடையே நிகழும் மோதல்கள் அவர்களின் போராட்டத்தை திசை திருப்புகின்றன. அத்துடன் ஒடுக்குவோரின் ஆதிக்கம் தொடர மறை முகமாகத் துணை புரிகின்றன. தலித்துகளிக்கிடையிலான உட்பூசல்கள் குறித்தும் சில செய்திகள் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன.
திருமயம் வட்டம் மேலத்தானையம் மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக இருக்கும் கல்தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்றுவீரசின்னு நாயக்கர் என்ற குறுநில மன்னன் காலத்தில் விருதுகள் தொடர்பாக பள்ளருக்கும் பறையருக்கும் இடையே நிகழ்ந்த பூசலைத்தெரிவிக்கிறது. வெள்ளானை, வாழை, கரும்பு ஆகிய விருதுகள் தங்களுக்கு மட்டுமே உரியதென்றும் பறையர்களுக்கு இல்லையென்றும்கூறி, கொதிக்கும் நெய்யில் பள்ளர் கைமுக்கினராம். அவர்கள் கை சுடாமையால் இவ்விருதுகள் பள்ளருக்கு மட்டுமே உரியதென்று தீர்ப்பு வழங்கப்பட்டதாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது (IPS 929).

மேளமடிப்பது தொடர்பாக பள்ளர், பறையர் என்ற இருவகுப்பினருக்கும் இடையே நடந்த பிணக்கில் உடன்பாடு ஏற்பட்டதாக திருமயம்வட்டம் பேரையூர் நாகநாத சுவாமி கோவில் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது (IPS 976).
திருமலை நாயக்கர் காலத்தில், குடும்பர் சாதியினருக்கு "திருமலைக் குடும்பர்" என்ற பட்டம் வழங்கப்பட்டதன் பின்புலத்தை ஒரு கல்வெட்டுதெரிவிக்கிறது. திருவில்லிப்புத்தூரில் தேவேந்திரக் குடும்பருக்கும் பறையருக்கும் ஏற்பட்ட பூசலை ஒட்டியே இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இச்செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டில் தேவேந்திரக் குடும்பர் தோற்றம் குறித்த புராணக்கதை ஒன்றுஇடம்பெற்றுள்ளது.

பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பாண்டிய மன்னன் ஒருவன் தேவேந்திரனுடன் சமமாகஅமர்ந்து நான்கு தேவ கன்னியரையும் கரும்புக்கணுக்களையும், வாழைக்கன்றுகளையும் ஒரு பனங்கொட்டையையும் பல வகையானநெல்வித்துக்களையும், காளை ஒன்றையும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான். இக்கடும் பஞ்சகாலத்தில் பனிரெண்டாயிரம்கிணறுகளை ஒரே நாளில் தோண்டி பாசன வசதியை, தேவேந்திரக் குடும்பன் உருவாக்கினான். இப்பணியை மதித்து தேவேந்திரக்குடும்பனுக்கு சில சலுகைகளை வழங்கினர். இதன்படி வெள்ளை யானை, தீவட்டி, நடைபாவாடை, இரட்டைச் சிலம்பு, இரண்டு கொடுக்கு,பதினாறு கால் பந்தல், இறப்பில் மூன்றடுக்குத் தேர் பயன்படுத்தல், பஞ்சவன் என்ற பட்டம், பதினெட்டு வகை இசைக்கருவிகள், கனகதப்புஆகியன தேவேந்திரக் குடும்பருக்கு உரியன. இவை தமக்கும் உரியன என்று கூறி பறையர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர். வாகைக்குளத்தைச் சேர்ந்த குட்டி குடும்பனும் மலையன்குளத்தைச் சேர்ந்த அல்லகாரக் குடும்பனும் மன்னனைச் சந்தித்துப் பறையர்களின் இச்செயல் குறித்து முறையிட்டனர். முன்னர் வெளியான செப்புப்பட்டயங்களின் அடிப்படையில் திருவிழாக்களில் மூன்றுகால் பந்தல் இடுவதும், ஒரு கொடுக்கு, ஒரு சாம்பு, ஒரு மப்பு, ஒரு தீப்பந்தம், மாடியில்லா வீடு ஆகியன பறையருக்குரியன என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் குடும்பர்களுக்கு திருமலைக் குடும்பன் என்ற பட்டமும் வரிவிலக்கு அளிக்கப்பட்ட இரண்டு கோட்டை நெல்பயிரிடும் பரப்புள்ள நிலமும் வழங்கப்பட்டன. (ARE 1926 பக்.119-120).

வீடுகளின் அமைப்பு, ஆடை, செருப்பு அணிதல், விருதுகளைப் பயன்படுத்துதல் ஆகியனவற்றில் சாதிக்கேற்ப வேறுபாடுகளை உருவாக்கி அதன் வாயிலாக உழைக்கும் மக்களை மன்னர்கள் பிரித்து வைத்துள்ளனர். சாதாரண உரிமைகள் சலுகைகளாக மாற்றப்பட்டன.இச்சலுகைகள் தமக்கு மட்டுமே உரியன என்று ஒரு பிரிவும் தமக்கும் உரியன என்று மற்றொரு பிரிவும் முரண்படும்போது நிலைமைக்கேற்பஆளுவோர் ஆணை பிறப்பித்துள்ளனர். இதன்வாயிலாக தம்மைச் சார்ந்து நின்றே அடித்தள மக்கள் பண்பாட்டு உரிமைகளை அனுபவிக்கமுடியும் என்ற நிலையை உருவாக்கினர். இதனால் தமக்குரிய உரிமைகளை சலுகைகளாகவே அடித்தள மக்கள் கருதும் நிலை உருவாகியது.
இத்தகைய உரிமைகளை தமக்கு மட்டும் உரியது என்று ஒவ்வொரு சாதியையும் கருதும்படி செய்து அவர்களுக்கிடையே மோதல்களை உருவாக்கி ஆளுவோர் தம் நலனை பாதுகாத்துக் கொண்டுள்ளனர். பண்பாட்டு அடையாளங்கள் குறித்த மேற்கூறிய மோதல்கள்உணர்த்தும் உண்மை இதுவேயாகும்.

உதிரப்பட்டி
போர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டி அல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும்நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது.

திருமய்யம் வட்டம் தேவமலைக் குடபோகக் கோவிலுக்கு இடதுபுறம் பாறையில் உள்ள கல்வெட்டு மலையாலங்குடி ஊர் பெரியான்பேரையூர் பறையன் மகள் நாடியாருக்கு உதிரப்பட்டியாக மூன்று மா நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது. வெள்ளம் பெருக்கெடுத்தநேரத்தில் குளத்தை அடைக்கும் பணியில் பெருந்தேவப் பள்ளர் என்பவர் இறந்துபோக, அவரது மகளுக்கு உதிரப்பட்டியாக நிலம்வழங்கப்பட்டது. இச்செய்தியைக் குறிக்கும் கல்வெட்டு வருமாறு:

குலைசேகர தேவ ர்க்கு யாண்ட34வ துக் கருங்குளர்த்திக் கு ஒரு பழி உண்திடான படியாலே இப்பழிக்கு இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன் அணை வெட்டிப் போகையா லே இவன் மகளுக்கு ஊரார்களிட்ட உதிரப்பட்டி குடுத்தபடி தபான வ நிலம் அரை மா அணை நிலம்......

பிற செய்திகள்
முதலி என்ற சொல் சாதியைக் குறிக்கும் சொல்லாக அல்லாமல் சாதி தலைவர் அல்லது அதிகாரியைக் குறிக்கும் சொல்லாக இருந்துள்ளது. பிள்ளை முதலி, நாட்டு முதலி, தனியார் முதலி என கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய முதலி பதவி பறையர்களிடமும் வழக்கில் இருந்ததை பறை முதலி என்ற சொல் உணர்த்துகிறது.
உழப்பறையர், தேவேந்திரப் பறையன் என்ற உட்பிரிவுகளையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
விக்கிரமச் சோழன் காலத்தியக் கல்வெட்டொன்றில் வெள்ளான் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழில் செய்து வந்த பறையர்கள் வெள்ளாளன் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனர் என்பதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. (SII ங:253)

இதுவரை நாம் பார்த்த கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் செய்திகள் பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
1. தலித்துகள் அனைவரும் தீண்டத்தகாதவர்களாக ஒரே காலகட்டத்தில் கருதப்படவில்லை. தீண்டாமைக் கொடுமை படிப்படியாகவேஅவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது.
2. கல்வியறிவு உள்ளவர்களாகவும் சொத்துரிமை உடையவர்களாகவும் அவர்கள் விளங்கியுள்ளனர்.
மேலும் கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் செய்திகளை தொகுத்து ஆராய்ந்தால் தலித்துகளின் கடந்த கால வரலாறு குறித்த பல புதியசெய்திகளைக் கண்டறிய முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 அருந்ததியர்

அருந்ததியர் அல்லது சக்கிலியர் இலங்கை மற்றும் தமிழ் நாட்டில் வசித்து வரும் ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள் குழுவாகும். பள்ளர், பறையர் சாதிகளோடுச் சேர்த்து இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்ததாக கருதப்படுகிறது.

முக்கியத் தொழில்
இவர்களின் முக்கியத் தொழிலான துப்புரவுப் பணியாளர்கள் காரணமாக, தலித்துக்களின் உடைகளைக் கழுவும் சாதியினரோடு சேர்த்து மிகவும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவில் அடக்கப்படுகின்றனர். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் சக்கிலியருக்கு இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.
இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப்பணியாளர்கள் அகற்றல் என்றபடியால் தலித்துகள் உட்பட ஏனைய சாதியினர் இவர்களுடன் சேர்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இவர்கள் மனித கழிவகற்றும் தொழிலுக்கு மேலதிகமாக மேற்கு மற்றும் வட தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளிகளாகவும் ஈடுபடு்த்தப்படுகின்றனர். இவர்கள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் வசிப்பது வழக்கமாகும். அருந்ததியர் மக்களின் தொழில் அன்று கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல் கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து துப்புரவுப் பணியாளர்களாக சீரழிக்கப்பட்டுள்ளார்கள்.
சக்கிலியர், அருந்ததியர்கள் இவர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு வழங்கிய 3 சதவீகித உள் ஒதுக்கிட்டின் படி அரசு கல்வி நிறுவனங்களிலும் மற்றும் வேலை வாய்ப்பிலும் இடம் கிடைக்கப்பட்டாலும், தனியார் கல்வி நிறுவனங்களில் இவர்கள் கட்டணம் செலுத்தி படிக்க முடியா சூழ்நிலையில் உள்ளனர். ஒரு சிலர் தனியார் நிறுவனங்களில் சேர்ந்தாலும் அவர்களின் குடும்பம் கடன் சுமையில் சிக்கி மிகவும் அவதிபடுகின்றனர். தனியார் நிறுவனங்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் தயக்கம் கட்டி மறுக்க படுகின்றனர். இதன் காரமாக பட்ட படிப்பு முடித்தவர்கள் கூட தொழிலாளிகளாகவே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

 ராஜூக்கள்
ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் ராஜூக்கள் எனப்படும் சமூகத்தின் ஒரு பிரிவினர் 15 ஆம் நூற்றாண்டு மத்தியில் தமிழ்நாட்டிற்குக் குடி பெயர்ந்தனர். விஜயநகர அரசர் புசாபதி சின்ன ராஜூவின் வழித்தோன்றல்களான இவர்கள் முதலில் இராஜபாளையம் அருகிலுள்ள கீழராஜகுலராமன் எனும் ஊரில் வந்து தங்கியிருந்தனர். மதுரை சொக்கநாத நாயக்கின் கீழ் பணிபுரிந்து வந்த இவர்கள் 1885 ஆம் ஆண்டு விஜய சொக்கநாத நாயக்கிடம் இருந்த ஒரு பகுதியை விலைக்கு வாங்கி இராஜபாளையத்தை உருவாக்கி அங்கு மொத்தமாக வசிக்கத் தொடங்கினர்.

 புதிரை வண்ணான்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் துணிகளைச் சலவை செய்து கொடுத்தல், அவர்களின் பிற தேவைகளை செய்து கொடுத்தல் போன்ற தொழில்களைச் செய்யும் சமுதாயத்தினராக, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக புதிரை வண்ணான் சமுதாயத்தினர் இருந்தனர். இந்த சமுதாயத்தினர் சமூக, பொருளாதார நிலைகளில் இன்னும் தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

புதிரை வண்ணார் நல வாரியம்
தமிழ்நாடு அரசு தற்போது புதிரை வண்ணார் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் எனும் பெயரில் தனி வாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இதில்
தலைவர்
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
உறுப்பினர்கள்
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர்
    நிதித்துறைச் செயலாளர்
    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்
    ஊரகவளர்ச்சித் துறைச் செயலாளர்
    தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறைச் செயலாளர்
    சுகாதாரத் துறைச் செயலாளர்
    பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர்
    பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ மேலாண் இயக்குநர்
    பேரூராட்சி ஆணையர்
-ஆகியோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக இருப்பார்கள்.

வாரியப் பணிகள்
    இச்சமுதாய மக்களின் கல்வி அறிவுநிலை பின்தங்கிய நிலையில் உள்ளதை கணக்கில் கொண்டு இவ்வினத்தை சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்தல்.
    இச்சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் கட்டித்தருதல், பொருளாதார திட்டங்களை மானியத்துடன் தருதல் உள்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் இவ்வாரியம் மூலம் செயல்படுத்தப்படும்.
    புதிரை வண்ணார் இன மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உதவிகளும் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும் இதனை கண்காணிக்கும் வகையில் இவ்வாரியம் செயல்படும்.
மனோவியல் மருத்துவர்

"புதிரை வண்ணார் எனப்படும் சாதியினர் இன்றளவும் பேய் விரட்டும் தொழிலை செய்து வருகின்றனர். தான் பேயினால்தான் தாக்குதலுக்குள்ளானேன் என்று நம்புவர்கள் பேய் விரட்டும் நிகழ்ச்சி செய்தவுடன் அந்நோயிலிருந்து குணமடைந்ததாக உணருகின்றனர். இது அறிவியலா அல்லது மூடநம்பிக்கையா என்பது இவ்விடத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பேய் விரட்டப்பட்டதால் நோய் ஒழிந்துவிட்டதாக உணருகின்ற காரணத்தினால் பேய் விரட்டும் புதிரை வண்ணார் இவ்விடத்தில் மனோவியல் மருத்துவராக செயல்படுவதைக் காணமுடிகிறது."

 பலிஜா
பலிஜா தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் வாழும் ஒரு சாதியை குறிக்கும். பொதுவில் இவர்களை நாயுடு அல்லது நாயக்கர் என்று அழைப்பர். கன்னடம் பேசும் பலிஜா சமூகத்தினர் கொங்கு நாட்டில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். பலிஜா காப்பு இனத்தின் உட்பிரிவாக கருதபடுகிறது . பலிஜா என்றால் வாணிகம் செய்தவர்கள் என்றும் , பலம் பொருந்தியவர்கள் என்றும் இரு வேறு பொருள் கூறபடுகிறது .
பிரிவுகள்
பலிஜாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
    கவரை (கவரா) நாயக்கர்
    வேளம நாயுடு / நாயக்கர்
    தொட்டிய நாயக்கர்
    ராஜ கம்பளம்
    கோபிட பலிஜா
    காஜுல பலிஜா (வளையல் நாயக்கர்)

சரித்திர காலத்தவர்கள்
    வீரபாண்டிய கட்டபொம்மன்
    மதுரை நாயக்கர்கள்
 நாயக்கர்

நாயக்கர்
ஆந்திரா, கர்நாடகா, தமிழ் நாடு , கேரளா போன்ற தென் மாநிலங்களில் காணப்படும் ஆரியரல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களே நாயக்கர் இனத்தவர்கள். இவர்களின் தாய் மொழி தெலுங்கு . இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்கள் ஆதியில் காப்பு என்னும் இனத்தை சேர்ந்தவர்கள். காம்பு எனப்படும் பழங்குடி இனத்தவர்களின் மரபுகளாக அறியபடுகிரார்கள் . இவர்களே நாகர்கள் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.

நாயுடு , நாயக்கர் , ரெட்டி , ராவ் , ராயர் , செட்டே, உடையார் , ராயுடு என்ற பலபெயர்களில் இவர்கள் வாழுகிறார்கள் . தமிழகத்தை பொறுத்தவரையில் கொங்கு நாடில் நாமக்கல் , திருப்பூர் , கோயம்புத்தூர் , சேலம் , ஈரோடு , கரூர் போன்ற பகுதிகளிலும் , தெற்கு பகுதியில் விருதுநகர் , மதுரை , திண்டுக்கல் , தேனீ , ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளிலும் , செஞ்சி , தஞ்சை , சென்னை , திருவள்ளூர் போன்ற இடங்களிலும் கணிசமாக வாழுகிறார்கள்.
நாயக்கர்களில் காப்பு இனத்தை சேர்ந்தவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் , திருமலை நாயக்கர் , ராணி மங்கம்மாள், கோபாலசாமி நாயக்கர் போன்ற அரசர்கள் தங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர் .

சொல்லிலக்கணம்
    நாயக்கர்= தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன் , உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
    நாயக்கடு=( தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது )
    நாயக்கர்=நாயர் ( மலையாளம் )
    நாயக்கர்=நாயகே( சிங்களம் )
    நாயக்கர்=நாயக்( மராத்தி)
    நாயக்கர்=நாயக்ஸ், பட்டநாயக் ( ஒரிசா)
பிரிவுகள்
    காப்பு
    பலிஜா
    கவரா
    தொட்டிய நாயக்கர்
    முத்தரைய நாயக்கர்

காப்பு
ஆந்திராவில் வழங்கப்படும் பெயர் . இவர்கள் முன்னேறிய சாதிகள் பிரிவில் உள்ளனர் , உயர் சாதியினராக கருதபடுகிறார்கள். காப்பு என்பதற்கு காவல் என்று பொருள் . இம்மக்கள் அரசர்களாக இருந்ததால் இவர்களை காப்பு என்று அழைப்பர் . காப்பு என்றால் காவல் காப்பவர் .

பலிஜா
பலிஜா என்பதற்கு பலம் பொருந்தியவர்கள் என்றும், வாணிகம் செய்தவர்கள் என்றும் இருவேறு பொருள் கூறுகிறார்கள் . இம்மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்தே வாழுகிறார்கள் . இவர்கள் தென் நாடு முழுவதும் வாழுகிறார்கள் . கவரா , வளையல் நாயக்கர், வடுகர் என்பது பலிஜாவின் கிளை ஜாதியினர் .
தொட்டிய நாயக்கர்
தொட்டிய என்றால் பெரிய என்று தெலுங்கில் பொருள் . காப்பு இனத்திலேயே பழங்குடியினர்கள் . தாங்கள் "கம்பளம்" என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்து கொள்கிறார்கள் . இம்மக்களே 90 லட்சம் பேருக்கு மேல் தமிழகத்தில் வாழுகிறார்கள் . இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கை பேசுவர் . வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே .
இவர்கள் பலிஜா வின் கிளை ஜாதியினர் . இம்மகள் தங்களுக்கு என்று ஒரு கட்டுபாட்டை வைத்துக் கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு , இவரை "ஊர் நாயக்கர்" என்று அழைப்பர் . இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர் .
தொட்டிய நாயகர்களின் கிளை

தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:
    சில்லவார்
    கொல்லவார்
    தொக்கலவார்( முதாவுலுவார்)
    குரு சில்லவார்
    பாலவார்(பாளையகார்)
    பெல்லவார்
    மல்லவார்
    எற சில்லவார்
    மேகலவார்
இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்து கொள்வர் .
குல தெய்வம்
பலிஜா
ரேணுகா அம்மா, எல்லம்மா , கனகம்மா , மீனாக்ஷி அம்மா , திருமால் , மல்லன்னா , அங்கம்மா , நாகம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குவர் .

கவரா
அழகர் சாமி , சின்னம்மா , சென்னம்மா , மங்கம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வமாக கொள்வர் .
ராஜ கம்பளத்தார்
ஜக்கம்மா இவர்களின் இஷ்ட மற்றும் குல தெய்வம் , பொம்மன்னா, பொம்மக்கா , வீர சின்னையா , மல்லையா போன்ற தெய்வங்களை வணங்குவர் .
பலிஜா , கவரா , ராஜ கம்பளம் சமுதாயத்தினர் தங்கள் முன்னோர்களை கடவுளாக வணங்கும் வழக்கம் உடையவர்கள் . போரில் இறந்தவர்கள் , தங்களுக்கு உதவிய ஏனைய சமுதாயதினரையே வணங்கும் பழக்கம் கொண்டவர்கள்.

திருமணத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வு
    இவர்களின் திருமணத்தில் வரதட்சணை கிடையாது.
    மணமகன் வீட்டினர் தான் திருமண நிகழ்ச்சியை நடத்துவர்.
    பழைய பழக்க வழக்கம் எதனையும் இன்று வரை இம்மக்கள் பெரும்பாலும் விடுவதில்லை .
    மணமகன் மணமகளுக்கு காசு கொடுத்து தான் திருமணம் செய்ய முடியும்.
குழந்தைப் பேறு
இம்மக்கள் பொதுவாக அதிக மக்களை பெறும் வழக்கம் உடையவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் குல தெய்வ பெயரையே வைப்பர். தற்போது நாகரிக மக்கள் குல பெயரையும் வைத்துக் கொண்டு , வெளியில் இன்னொரு பெயரையும் வைத்துக் கொள்கிறார்கள் உஞ்சல் ஆடுவது என்ற சடங்கை மேற்கொள்கிறார்கள் , இது பிள்ளை பிறந்து மூன்றாவது மாதத்தில் நடத்தப்படும் , அதில் குழந்தைகளின் எதிர் காலம் எவ்வாறாக நடை பெற வேண்டும் என்றும் , தங்கள் குல பெருமை , வீரக்கதை முதலிய வற்றை தெலுங்கில் பாடுகிறார்கள். ஒரு வருடத்தில் மொட்டை இடும் பழக்கம் ஏனைய சமுதாயத்தவர்களை போல இவர்களிடமும் உள்ளது. தங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று கிடா வெட்டி , பொங்கல் வைத்து , முடி இறக்கி , தாய் மாமனை கவுரவித்து அவருக்கு கப்பம் கட்டி சாமி கும்பிடும் பழக்கமும் இவர்களிடம் உள்ளது.

இறப்பு சடங்கு
சுடுகாடு வரையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கம் இவர்களிடம் உள்ளது . இதற்கு பல காரணம் சொல்கிறார்கள் அக்கால கட்டத்தில் கம்பளத்து சமுதாய மக்களால் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்ததாலும் , பெண்களை மதித்து அவர்களும் சுடுகாடு வரை வரலாம் என்றும் பல்வேறு கருத்துக்கள் சொல்ல படுகிறது . இவர்களின் உடல் எரிக்க படும் , இறந்த மூன்றாம் நாள் நடுக்கல் நடுவர் . நடுக்கலில் அம்மக்களின் பெயர் , பிறந்த மற்றும் இறந்த செய்தி மற்றும் அவர்கள் செய்த சாதனை பொறிக்க படும் .
மொட்டையிடும் பழக்கம் இம்மக்களுக்கு இல்லை, அதே போல இறப்பு நிகழ்வில் பெரும்பாலும் அழுவது கிடையாது . தேவேந்திர குல வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இம்மக்களின் இறப்பில் வந்து ஒப்பாரி வைத்து அழுவர். தற்போது இந்த நடைமுறை மாறி வருகிறது. அதே போல இவர்களின் இறுதி ஊர்வலம் மிக ஆடம்பரமாக நடக்கும் , பறை மேளம் , உரிம்மி , உடுக்கை , பம்பை போன்ற இசைக் கருவிகள் இசைக்க , முன்னே பொய் கால் குதிரை , மயிலாட்டம் , போன்றவை ஆடிக்கொண்டு இறப்பு நிகழ்ச்சியை கூட இம்மக்கள் விமரிசையாக நடத்துவர். சாவுக்கு மொய் எழுதும் வழக்கமும் இவர்களுக்கு உண்டு.

சமுதாயத்தினர் நிலை
நூறு வருடம் முன்பு வரை
ஜமின்தாரர்களாகவும் , செல்வந்தர்களாகவும் , அரசர்களாகவும் , குறுநில மன்னர்களாகவும் நூறு ஆண்டு முன்பு வரை இருந்து வந்த இந்த சமுதாயம் , ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் இவர்களின் சொத்துகள் அனைத்தும் ஆங்கிலேயர்களால் அபகரிக்க பட்டது. பாளையக்காரர்களாக இம்மக்கள் இருந்து உள்ளனர் , பெரும்பாலான பாளையங்கள் ராஜ கம்பளத்தார் சமுதாயதாலையே ஆளப்பட்டுள்ளது .அதில் குறிப்பிட கூடியவை ( பாஞ்சாலங்குறிச்சி , எட்டயபுரம் , போடிநாயக்கனூர் , திண்டுக்கல் போன்ற 72 பாளயங்களுள் 62 பாளையங்கள் இம்மக்களால் ஆளப்பட்டு உள்ளன. இவர்கள் விடுதலை போராட்டத்துக்காக பல உயிர்களை இழந்து உள்ளனர்.  கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் ஆதிக்க சாதியினராக இருந்து வந்து உள்ளனர்.

இன்றைய நிலை
பொருளாதாரத்தில், கல்வியில் பின் தங்கியே உள்ளனர். தற்போது இட ஒதிக்கீடு போன்ற சலுகைகளால் ஒரு அளவுக்கு படித்து அரசாங்க , தனியார் வேலைகளில் உள்ளனர் . இருந்தாலும் மொத்த சமுதாயத்தை பார்க்கையில் கல்வி அறிவில் பின் தங்கியே உள்ளனர். சிலர் குறி சொல்வது போன்ற தொழில்களிலும் , பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே மேற்கொள்கிறார்கள். பெரும்பாலான மக்கள் விவசாய நிலம் கொண்டவர்களாகவே உள்ளனர் என்பதால் விவசாயம் இவர்களின் முக்கிய தொழில் , ராணுவம் , காவல் துறை போன்ற வற்றிலும் இம்மக்கள் அதிக அளவில் உள்ளனர்.

தொட்டிய நாயக்கர்
தமிழ்நாட்டில் சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தொட்டிய நாயக்கர் வசித்து வருகின்றனர்.தெலுங்கு மொழி பேசும் இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்த சாதியினர் ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர் என்ற உட்பிரிவுகளின் பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தற்போது ராஜகம்பளம் என்கிற பெயரையே தங்கள் சாதிப் பெயராகப் பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டு வகைப் பிரிவுகள்
ராஜகம்பளத்தார்களின் உட்பிரிவுகள் 10 வீட்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன . இவர்கள் பெரும்பாலும், குறிப்பிட்ட உட்பிரிவுகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
1. இர்ரி வீட்டு வகை
    கண்ணடிர்ரி
    தாத்திர்ரி
    போற்றிர்ரி
    கூசமிர்ரி
    பாசமிர்ரி
    பந்திர்ரி
    ஏமிர்ரி
    எனுமிர்ரி
    நாயிர்ரி
2. கொடையானி பொம்மு வீட்டு வகை
    குண்டானி கொடையானி
    கோட்டண்ண கொடையானி
    பிதுரண்ண கொடையானி
    புவ்வுல கொடையானி
    உக்கம கொடையானி
    திம்மிசி கொடையானி
    சில்ல கொடையானி
3. பாலமண்ண வகை
    முட பாலம்
    உண்டாடி பாலம்
    கட்டாறி பாலம்
    கெங்கிசி பாலம்
    காட்டேரி பாலம்
    சாம பாலம்
    சல்லூறு பாலம்
    தூணாக்கோல் பாலம்
    மல்ல பாலம்
    குரி பாலம்
    எகநாகி பாலம்
    திகநாகி பாலம்
4. குஜ்ஜ பொம்மு வகை
    போட பொம்மு
    பொட்டக பொம்மு
    பீலி பொம்மு
    பிக்கா பொம்மு
    சல்லி பொம்மு
    குல்லி பொம்மு
    எரமிசி பொம்மு
    எரகினி பொம்மு
    குந்திலி பொம்மு
    குலகட்ட பொம்மு
    பங்கு பொம்மு
    பங்காரு பொம்மு
    கசிகிலி பொம்மு
    குசிகிலி பொம்மு
5. கம்பராஜு வீட்டு வகை
    கோனண்ண
    கெத்தண்ண
    சில் பொம்மு
6. எரமாசி சின்ன பொம்மு வீட்டுவகை
    எரமாசி
    கமண்ண
    பீரண்ண
    சக்கிடண்ண
    கொடுக்கண்ண
    சருக்கண்ண
    காட்டண்ண
7. மங்கராஜு வீட்டு வகை
    மேக்கலண்ண
    நல்லிமண்ண
8. கலிமு சோமு வீட்டு வகை
உட்பிரிவுகள் தெரியவில்லை
9. குரிமாசி வீட்டு வகை
    பெத்தொட்டி காட்டையா
    சிவகாணி பாலப்பா
    வந்த பாலமுத்து
10. சில்லண்ண வீட்டு வகை
    எரசில்ல
    நலசில்ல
    பூத்தமசில்ல
    பூத்தனாகாச்சி சில்லா
    நாரமுத்து சில்ல
    தும்பி சில்ல
    கோண சில்ல
    உப்பிடி சில்ல
    பொந்து சில்ல
    கொடை சில்லா

திருமணம்
இந்த குலத்தினரிடையே, திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, நேர் சுட்டம் என்ற ஒரு முறை பார்க்கப்படுகிறது. இதன்படி, ஒரு குலத்தவர், அவருக்கு நேர் சுட்டம் இருக்கும் குலத்தினருடன்தான் சம்பந்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது, வேறு சுட்டத்தினருடனும் திருமணம் செய்வதும் நடக்கிறது.

   இர்ரி மாது - கொடையானி பொம்மு சில்ல
    பால சித்து - குஜ்ஜ பொம்மு
    கம்பராஜு - எரமாசி சின்ன பொம்மு
    மங்கராஜு - கலிமுசோமு
    பல்லகதொப்பு - நூட்ட குமாரலு
குல தெய்வங்கள்
ராஜகம்பளம் சாதியினர் தங்களின் குல தெய்வங்களாக கீழ்காணும் தெய்வங்களை வழிபடுகின்றனர்.
    இர்ரி காணி
    கெண்டு காட்டம்மா
    கொடையானி பொம்மு
    பேரவாடி அக்ககாரு
    பாலவநாகு
    பல்லகொண்ட கண்ணகாரு
    குஜ்ஜபொம்மு
    வெல்லக்குஞ்சர பொம்மையசாமி
    கம்பராஜு
    ரங்கநாதர்
    எரமாசி
    காமாட்சியம்மன்
    மங்கராஜு
    கெட்டவைய்ய
    கலிமிசோமு
    டத்தலூட்டி கண்ணகாரு
    பல்லகாணி
    லகுவம்மா
    குரிமாசி
    பைட்டம்ம
    சில்லண்ண
    சீப்பாலம்ம

குழு வாழ்க்கை
இந்த சாதியினர் ஒரு குழுவாகத் தங்களுக்கென ஒரு பகுதியை உருவாக்கிக் கொண்டு அங்கு தனியாக வசித்து வந்தனர். இதனால் இவர்கள் பிற சாதியினரை தங்கள் ஊருக்குள் அனுமதிக்காமல் இருந்து வந்தனர். இச்சாதிப் பெண்களை மாத விலக்கு காலத்தில் ஊரின் ஒரு பகுதியில் தனியாகத் தனிமைப்படுத்தி வைக்கும் வழக்கமும் இச்சாதியினரிடம் இருந்தது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது. கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இவர்கள் அக மண முறையை தீவீரமாகப் பின்பற்றுகின்றனர்.
தேவராட்டம்
இச்சமுதாயத்தினர் தேவராட்டம் எனும் ஒரு வகை நடனம் ஆடுகின்றனர். இவர்கள் வீட்டு விழாக்களில் இந்த நடனம் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 சாலியர்

தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் செய்து வரும் இந்த சாதியினர் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராசபாளையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும், தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி-சக்கம்பட்டி பகுதியிலும், அருகிலுள்ள டி.சுப்புலாபுரம் பகுதியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கள சாலியர்

இலங்கையிலுள்ள சிங்களவர்களிலும் சாலியர் என்னும் ஒரு சாதியினர் உள்ளனர். இவர்களின் முன்னோர்கள் தமிழகத்திலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய சாலியர் ஆவர். சிங்கள மொழியையே முதன் மொழியாகப் பேசும் இவர்கள் சிங்கள இனத்துக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்ட தமிழர்கள் ஆவர். இலங்கையிலுள்ள பேருவளைப் பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வர்த்தகரின் உதவியினாலேயே இவர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது.
நாயன்மார்கள்

கி.பி 400 முதல் 1000 வரையுள்ள ஆண்டுகளில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறுத்தொண்ட நாயனார் மற்றும் நேச நாயனார் ஆகிய இருவரும் சாலியர் சாதியினர் ஆவர்.

 பண்டாரம்
பண்டாரம் என்று அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர். ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், புலவர் போன்ற 164 உட்பிரிவைச் சார்ந்த எல்லோரும் ஒன்று தான். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப் பண்டாரங்கள்.

பெயர்க் காரணம்
பண்டாரம் இனத்தைச் சேர்ந்தவர்களில் அனேகமானோர் ஆலயங்களில் தொண்டு வேலைகளை செய்யவும், ஓதுவார்களாகவும், பண்டகசாலை பராமரிப்பாளராகவும், பண்டைய அரசனால் நியமிக்கப் பெற்றார்கள் என்றும் அறிய முடிகின்றது. அத்துடன் இவர்கள் சோதிட சாத்திரத்திலும் வல்லுனர்களாகவும் இருந்தனர். இவை மாத்திரமன்றி ஆலயங்களில் பண்ணோடு திருமுறைகள் ஓதுபவர்களாகவும், சங்கு வாத்தியம் செய்பவர்களாகவும், பூமாலை கட்டுதல், பூசைக்குரிய பூக்கள் சேகரித்தல், சுவாமி திருவுருவங்களை (சாத்துப்படி) அலங்கரித்தல் போன்ற திருத்தொண்டுகள் செய்வதிலும் வல்லவர்களாக இருந்துள்ளார்கள்.
மேலும் "பண்டாரம்" என்ற சொல்லானது "அருளநுபவக் கருவூலம்" என்ற பொருளைக் கொண்டது. பண்+ஆரம்=பண்டாரம்; பண்ணினால் பாமாலை தொடுப்பவர்கள் என்றும், பண்ணோடு ஓதுபவர்கள் என்றும், பண்ணோடு இசைப்பவர்கள் என்றும், பண்டகசாலை காப்பாளர் என்றும் பொருள் கூறுவர். இதன் காரணமாகவே இவர்களை எல்லோரும் "பண்டாரம்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார்கள்.

தொழில்கள்
கோயில் பணி
சைவ சமய அனுட்டானங்களையும், பூசை விதிகளையும் நன்கு அறிந்திருந்தனர். இதன் காரணமாகவே இன்றும் இக்குலத்தினர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற தெற்காசிய நாடுகளிலும் கோவில்களில் பணி புரிகின்றனர். இந்தியாவில் பிராமணருக்கு அடுத்தபடியாக கோவில்களில் பணி புரிகின்றனர். கர்நாடகம், ராயலசீமா மற்றும் மராட்டியத்தில் பிராமணருக்கு மேலாகவே வீரசைவர் அல்லது லிங்காயத் பெயரில் ஆலயங்களில் பணி புரிகின்றனர். தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் சில கோவில்களில் ஆலயங்களில் ஓதுபவர்களாகவும் உள்ளனர்.

புலவர்
அக்காலங்களில் அரசவைப் புலவராகவும் இருந்துள்ளனர். இதனால் இவர்களை "புலவர்" என்றே அழைத்துள்ளனர். தற்பொழுது கூட தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட ஒரு பண்டாரப் பிரிவினரை "புலவர்" என்றும் அவர்கள் குடும்பத்தினரை புலவர் வீட்டு பிள்ளைகள் என்றே அழைக்கின்றனர்.

வெவ்வேறு பெயர்கள்
தமிழ்நாடு முழுவதும் பரவலாக காணப்பட்டாலும் ராமநாதபுரத்தில் ஆண்டிப் பண்டாரம் அல்லது புலவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீரசைவர், திண்டுக்கல் பகுதியில் பண்டாரம், மலைபண்டாரம் அல்லது ஆண்டிபண்டாரம், மதுரையில் யோகிஸ்வரர், கோவையில் ஜங்கம் அல்லது லிங்காயத் போன்ற பெயரால் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். இருந்தாலும் ஆண்டிபண்டாரம் அல்லது பண்டாரம் என்ற பெயரை சமூகம் கேலியாக சித்தரிப்பதால் பொதுவாக முக்கியமாக இளைய தலைமுறையினர் வீரசைவர் மற்றும் யோகிஸ்வரர் என்றே கூறிக்கொள்கின்றனர். இதனால் அரசு மூலம் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன.

மொழிகள்
இவர்கள் பொதுவாக தமிழ் மொழியினை தாய்மொழியாக கொண்டுள்ளனர். இருந்தாலும் சிலர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசுகின்றனர். தெற்காசிய நாடுகளில் இருப்பவர்கள் மலாய் பேசுகின்றனர்.
பண்பாடு மற்றும் கலாச்சாரம்
இவர்கள் இந்து சைவமுறைகளில் திருமந்திரத்தினை அடிப்படையாக கொண்டுள்ள தூய தமிழ் பண்பாட்டினையும் கொண்டுள்ளனர். சிலர் வீரசைவ (லிங்காயத்) கன்னட, தெலுங்கு, மலையாளம் போன்ற திராவிட பண்பாட்டினையும் கொண்டுள்ளனர்.

குறவர்கள்
குறவர்கள் எனப்படும் சாதியினர் பண்டைய தமிழ் சமூகத்தினர். இவர்கள் நானிலங்களில் மருதம் எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் சமூகத்தை சேர்ந்த வள்ளி என்பவளை கடவுளான முருகன் மணந்து கொண்டதாக இந்து சமயக் கதைகள் கூறுகின்றன.

பழக்க வழக்கங்கள்
"நானில மக்களுள் ஒருவர்களான குறவர்களின் பழக்கவழக்கங்கள் அறிய முடிகின்றது. சங்க இலக்கியங்களிலும் குறவர்கள் பற்றிய செய்தி மிகுதியாக காணப்பெறுகின்றன. குறவர்கள் தேனையும் கிழங்கையும் விற்றுப் பண்ட மாற்றாக, மீன் நெய்யினையும் நறவையும் பெறுவர். உடும்பிறைச்சியோடு, கடமான் தசை,முள்ளம் பன்றியின் ஊன், மூங்கி குழாயில் ஊற்றி வைத்த தேனிறல், நெய்யால் செய்த கள், புளிப்புச் சுவையுடைய உலையாக ஏற்றி ஆக்கிய மூங்கிலரிசிச் சோறு, பலாவிதையின் மாவு ஆகியவற்றை நல்கி மலைவாழ்நர் விருந்தோம்புவர் என மலைப்படுகடாம் கூறும். இதே நிலையினை மீனாட்சியம்மை குறத்திலும் காணமுடிகின்றது. குறவர்கள் செழித்த கொடியிலிருந்து வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்து உணவாக உட்கொள்கின்றனர். மலையின்கண் உள்ள குறிஞ்சி மலரை முல்லைக் கொடியில் வைத்துத் தொடுத்தும், பசுந்தழையையும் மரவுரியையும் ஆடையாக உடுத்திக் கொள்கின்றனர். விருந்தினருக்கு தேனும், தினையும் வழங்கி விருந்தோம்புகின்றனர்."  என்று இச்சமூகத்தினரின் பழக்க வழக்கங்களை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

தேவர்
தேவர் என்பது தென் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதியினரையும் குறிக்கும். கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு.

தேவர் (முக்குலத்தோர்)
தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர். தேவர் என்போர் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் இம்மூவரும் உள்ளடக்கிய ஒரு சமூக கூட்டமைப்பு. இம் மூவரும் இணைந்தவொரு வீரவர்க்கமானது முக்குலத்தோர் யென்று வழங்கப்பட்டு வருகிறது.

ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர். ஆங்கிலேய ஆதிக்கத்தின் போது தமிழகத்திலிருந்து சட்டிஸ்கர் பகுதிக்கு இடம் பெயர்ந்த தேவரின மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.

தேவர் (முக்குலத்தோர்) சமூகத்தினர் பெரும்பான்மையானோர் தென் தமிழகத்து மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர். மேலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி யென தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தென் தமிழகத்திலும், மத்திய தமிழகத்திலும் தேவரின மக்கள் அதிகம் காணப்படுகின்றனர்.
முக்குலத்தோர் :

தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர்.
"கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்" என்ற பாடலை செவி வழி கேட்டறிந்து இருக்கலாம்,

 முத்தரையர்
தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குலத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.

முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.

முத்தரையரின் தோற்றுவாய்
முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலைக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக் குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்த பரதவ குலத்தினராக இருந்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர் (அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள்). முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் (பரதவரின்) கிளைக் குடியினராக இருந்திருக்க வேண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர்.

தங்கள் அரசியல் மேலாண்மையாளர்களான பல்லவரின் பட்டப் பெயர்களான, விடேல், விடுகு, பெரும்பிடுகு, மார்ப்பிடுகு, பாகாப்பிடுகு (பிடுகு = இடி) போன்ற பட்டங்களை தங்களது பெயர்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டனர். முத்தரையர் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளும் அளவிற்கு நிறைந்த அளவு கல்வெட்டுகளும், கோயில்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றன.

திருமயம் - சத்தியமூர்த்தி கோவில்
இது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி - எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த குகைக் கோயிலைப் புதுப்பித்து அதன் பராமரிப்பிற்கு நன்கொடைகள் வழங்கிய செய்தியை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

மலையடிப்பட்டி - வாகீஸ்வரர் கோவில்
குளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் வாகீஸருக்கு(சிவன்) குகைக்கோயில் எடுப்பித்து நன்கொடைகள் வழங்கிய செய்தி தெரியவருகிறது.

குளமங்கலம் - பெரியகோவில்
இக்கிராமத்தின் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த மிகப்பெரிய குதிரை சிலையுடன் கூடிய பெருங்கரையடி மிண்ட அய்யனார் ஆலயம் உள்ளது.இக்குதிரைச் சிலை ஆசியாவில் மிக உயரமான குதிரை சிலை என வர்ணிக்கப்பட்டுள்ளது. அருள்மிகு பெருங்காரையடிமிண்ட அய்யனார் திருக்கோயில் ஆசிய அளவில் பிரசித்தி பெற்ற 33 அடி உயரமுள்ள குதிரைச் சிலையைக் கொண்ட இக்கோயில் 1574-ல் கட்டப்பட்டதாகும். 1937-ல் இத்திருத்தலம் செப்பனிடப்பட்டதை கோயில் வரலாறு தெரிவிக்கிறது. இப்பகுதியில் முத்தரையர் சமூகம் தழைத்து விளங்கியதற்கான அடையாளமும் இவ்வாலயத்தின் கல்வெட்டுகளிருந்து புலப்படுகிறது. இப்பகுதியுடன் நெருங்கிய கலாச்சார உறவுகளை முத்தரையர் மன்னர்கள் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. தமிழர்களின் கட்டிடக்கலை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியிலும் இருந்து வந்தமைக்கு இக்கோவில் சான்றாக விளங்குகிறது. இப்பகுதி மக்களான முத்தரையர் சமூக மக்களால் முன்மொழியப்படும் பழமை வாய்ந்த ஒரே ஆலயமாக இந்த அய்யனார் ஆலயம் விளங்குகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 நாடார்

தமிழ்நாட்டில் நாடார் என்ற சாதிப் பட்டம் கொண்ட சமுதாயத்தினர் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் உள்ளனர். திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இவர்கள் பெரும்பான்மையினர். மேலும், மதுரை, தேனி,சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் இவர்கள் பல தொழில்களிலும் துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். வட மாவட்டங்கள் மற்றும் புதுவையைப் பூர்விகமாகக் கொண்ட சமுதாயத்தவர் கிராமணி என்ற பட்டம் கொள்வர். நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும் அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவரே. திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.

வரலாறு
நாடாள்வார் போன்ற பட்டங்களைக் கொண்ட சமூகத்தினர் பூர்விகத் தென்னிந்திய அரச குலத்தவர் ஆவர். இதற்கு ஏராளமான கல்வெட்டு, செப்பேடு மற்றும் இலக்கியச் சான்றுகள் உண்டு. சால்பு என்ற பண்பின் அடிப்படையில் தோன்றிய சான்றோர், சான்றார் என்ற சொற்களே சாணார் என்ற வழக்குச் சொல்லின் மூல வடிவங்களாம்.

பெயர் மாற்றம்
நாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும் பொருளுடைத்தது. ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் சான்றோர் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Chanar) என்று குறிக்கப்பட்டுள்ளனர். சாணார் என்ற வழக்கு இழிவாகக் கருதப்பட்டதால் நாடார் என்ற பட்டத்தையே சாதிப் பட்டமாகவும் சாதிப் பெயராகவும் இச்சாதியினரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத் தொடங்கினர். சான்றோர் சாதியில் பின்வரும் ஐந்து உட்பிரிவுகள் உள்ளன:
1. நாடாள்வான், நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலைமைக்காரர்,
2. முக்கந்தர் அல்லது முக்கந்த நாடார்,
3. சிறுகுடிச் சாணார் அல்லது நட்டாத்திகள்,
4. பனையேறிச் சாணார்,
5. மேனாட்டார், கள்ளச் சாணார், சேதிராயர், புழுக்கை ஆகிய பெயர்களைக் கொண்ட சேர்வைக்காரர்.

தொழில்கள்
நாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்குமிடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத் தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது. ஆனால் பலர் பனையேற்றுத் தொழில் செய்தனர். அவர்கள் பனை மரங்களிலிருந்து பதநீர், கள் இறக்குதல் மற்றும் அவைகளை விற்பனை செய்தல் போன்றவைகளுடன் பனை மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர். பிற சாதியினரைப் போலவே நாடார்களும் கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் ஈடுபட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
சமுதாயத்தினர் அன்றைய நிலை

தென்மாவட்டங்களில், குறிப்பாக முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடாருக்கு எதிரான சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, உயர் சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேச வேண்டும்; அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது; செருப்புப் போடக் கூடாது; தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது; மாடி வைத்து வீடு கட்டக் கூடாது; பசுக்களை வளர்க்கலாம்; ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்க வேண்டும்.

அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850கள் வரை தொடர்ந்தன. இத்தகைய அடக்கு முறைகள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் (அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும்) இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாடார் சமுதாயத்தினரும், கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான். இந்தியக் குடிமக்கள் அனைவரும் சம நிலையினரே என சட்டத்தில் இருந்தாலும் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சமத்துவம் பிறக்கவில்லைதான். ஆனால் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.

சமுதாயத்தினர் போராட்ட வரலாறு
இன்றைய கேரளா அன்று திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியாக இருந்தது. அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நாடார் போன்ற சில சமூகத்தினருக்கும் உயர்சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட கோயில்களுக்குள் சென்று கடவுளை வணங்கும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த அடக்கு முறையைக் கண்டு மனம் வெறுத்த இச்சமூகத்தினர் சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். இதற்கும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாடார் இன மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். உதாரணமாக, 1680இல் திருநெல்வேலி மாவட்ட ஊராகிய வடக்கன் குளத்தில் கிறித்தவ நாடார் இருந்தனர். அவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள். 1685இல் அவர்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டது. 1701இல் அங்கு சுமார் 4000

கிறித்தவர் இருந்தனர்.
திருவிதாங்கூர் பகுதியில் நாடார் மக்கள் நடுவே புராட்டஸ்டாண்டு சபையினர் பணிசெய்தனர். 1780இல் பலர் கிறித்தவர் ஆயினர். ரிங்கல்டவுபே Ringeltaube என்னும் பெல்ஜிய நாட்டு போதகர் திருவிதாங்கூர் பகுதியில் அமைந்த மயிலாடி என்னும் ஊரில் நாடார் கிறித்தவப் பிள்ளைகளுக்கென்று முதல் பள்ளிக்கூடத்தை 1806இல் நிறுவினார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1819இல் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தைக் கிறித்தவ போதகர்கள் நாகர்கோவிலில் தொடங்கினார்கள். நாடார் சமுதாய மக்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடினர். ஒரு சமூகப் புரட்சியே வெடித்தது.

நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது. நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான உயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் சமூகத்து ஆண்கள் சித்ரவதை மற்றும் கொலை போன்ற இன்னல்களுக்கு ஆளானார்கள். நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815-1829) "நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது" என்று பிரகடனம் செய்தார். இப்பிரகடனம் நாடார் குலமக்கள் பலத்த கோபமடையச் செய்தது. இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார் சமுதாயத்தினர் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த சமூக நீதிப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் கடும் மோதல்கள் நிகழ்ந்தன.
ஆனால் மக்கள் சக்திக்கு முன்னால் அரசு பணிய வேண்டியதாயிற்று. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, ஜுலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார். ஆயினும் நாடார் பெண்கள் மேல்சாதிப் பெண்களைப் போல உடுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. சமத்துவம் கோரி எழுந்த மக்கள் எழுச்சி சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.

பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வீறு கொண்டு எழுந்து போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது.  இப்படி நாடார் சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்த போராட்டமும் அதில் அவர்கள் வெற்றியடைந்து மீண்டு வந்ததும் இங்கு கவனிக்கத் தக்கது.
சமுதாயத்தினர் இன்றைய நிலை

இன்று தமிழ்நாட்டில் பொருளாதார வசதியுடையவர்களாக இச்சமூகத்தினர் முன்னேற்றமடைந்துள்ளனர். பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். மேலும் இவர்கள் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த காமராசர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இச்சாதியினரில் பலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 நாவிதர்

நாவிதர் எனப்படுபவர் கிராமப்புற மருத்துவர்களாகவும் ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்த ஒரு சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் மருத்துவர், நாவிதர், மங்களா என்கிற வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.
மக்கள்தொகை
தமிழகத்தில் மருத்துவர், நாவிதர், மங்களா என்று சொல்லப்படுகின்ற வகுப்பினர் 4 லட்சத்து 26 ஆயிரத்து 427 பேர் வசிக்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

நாவிதர்
" நாவிதர் அல்லது அம்பட்டையர்" என்று குறிப்பிடப்பட்டவர்கள் தலைமுறைகள் தோறும் முடிவெட்டுதல், சவரம் செய்தல், மொட்டை அடித்தல் போன்ற வேலைகளை கிராமத்தினருக்குச் செய்து வந்தனர். பேனும் ஈரும் மிகுந்து கரடிபோல அடர்த்தியான தலைமுடியுடன் திரியும் கிராமத்தினரை, தங்களுடைய ஒப்பனை மூலம் நேர்த்தியாக மாற்றும் கைவன்மை மிக்கவர்களாக இத்தகையோர் விளங்கினர். ஊருக்கு வெளியே மரத்தடி அல்லது சிறிய கீற்றுக் கொட்டகையில்தான் முடி அலங்கார நிலையங்கள் நடைபெற்றன. வசதியானவர் வீடுகளுக்குச் சென்று காத்திருந்து, ஏழெட்டுப் பேருக்கும்கூட முடியை வெட்டிவிட்டுப் பொறுமையுடன் திரும்பிவரும் நாவிதர் வாழ்க்கை பொருளியல் ரீதியில் பலவீனமாக இருந்தது.

அரிசியில் அரை அளவுதான் முடி இருக்கவேண்டும் என்று சிறுவர்களிடம் பெற்றோர் சொல்லிவிடுவார்கள். அவர்கள் ஸ்டைலாக முன்னால் முடிவைக்கச் சொன்னாலும் முடிவெட்டுபவர் மறுத்துவிடுவார். தலையில் முடிரொம்ப இருந்தால் சளி பிடித்துவிடும் என்ற நம்பிக்கை நிலவியது.
கிராமங்களில் பலர் செருப்பு அணிவது கிடையாது. எனவே காலில் முள் குத்திக் கொண்டு சீழ்ப் பிடித்து அவதிப்படுவார்கள். பாதத்தில் நுழைந்த முள்ளின் முனை, உள்ளேயே முறிந்து தங்கிவிடுவதால், நடக்க முடியாமல் சிரமம் ஏற்படும். முள்வாங்கியினால் கூட முள்ளை எடுக்க முடியாத போது, நாவிதரிடம் வருவார்கள்.

முள் குத்தியதால் சிரமப்படுகிறவரை ஓரிருவர் பிடித்து அமுக்கிக் கொள்ள, நாவிதர் சிறிய கூர்மையான கத்தியினால் முள் குத்திய இடத்தைக் கீறிவிடுவதுடன் சீழைப் பிதுக்கி வெளியேற்றுவார். ஓரிரு நாட்களில் முள் குத்திய இடம் குணமடையும். முள்ளை வெளியேற்றுவதற்காகச் செய்யும் வேலைக்கெனத் தனியாகப் பணம் எதுவும் தரமாட்டார்கள். நாவிதரின் பணி சேவை ஆகும். முடிவெட்டுவதுடன் கால் கை விரல்களில் வளர்ந்திருக்கும் நகங்களை வெட்டுதல், தலையைத் திருப்பிச் சொடக்கு முறித்து மசாஜ் பண்ணுதல் என நாவிதரின் பணிகள் பன்முகப்பட்டவையாக விளங்கின. சில சாதியில் தனிப்பட்ட நாவிதர் இருந்தார். அவர் குடிமகன் என்று அழைக்கப்பட்டார். அவரும் எல்லோரையும் அப்பா என்றே அழைப்பார். இறப்பு வீடுகளில் நடைபெறும் சடங்குகளில் குடிமகன்கள்தான் எல்லாச் சடங்குகளையும் முன்னின்று செய்தனர்.
நாவிதர் வீட்டுப் பெண்கள்தான் கிராமத்தில் எல்லா சாதிப் பெண்களுக்கும் ‘பிரசவம்’ பார்த்தனர். இன்று மகளிரியல் மருத்துவரான பெண் டாக்டர் செய்யும் வேலையை, அன்று பரம்பரை அறிவின் துணையுடன் நாவிதர் சாதிப் பெண்கள் சிறப்பாகச் செய்தனர்.

பியூட்டி பார்லர், மகப்பேறு மருத்துவர் எனச் சமூகத்தில் கௌரவமாகக் கருதப்படும் தொழில்களைச் செய்த மருத்துவர் குலத்தினராகத் தங்களைக் கூறிக்கொள்ளும் நாவிதர்களின் மதிப்பு இன்றைய கால கட்டத்திலும் தாழ்வாகவே உள்ளது வருத்தமான விஷயம்.
வரலாற்றுத் தகவல்

வட இந்தியச் சரித்திரகால அரசர்களில் "நந்தர்கள்" சூத்திரராகக் கருதப்படுகின்றனர். நந்தர்களைப் "பார்பர்" (நாவிதர்) என அழைக்கும் வழக்கமும் உள்ளது. சந்திரகுப்த மௌரியனுடைய தாய்வழித் தாத்தா ஒரு நாவிதர்.

ரெட்டி
ரெட்டி (தெலுங்கு:రెడ్డి, ருட்டி (Ruddy), ரொட்டி (Roddy), ராட்டி (Raddi), ரெட்டீ (Reddi) எனவும் ஒலி பெயர்ப்பு செய்யப்படுகிறது) என்பது ஆந்திரப் பிரதேசத்தில் ஆதிக்கம் நிறைந்த, ஒரு இந்திய சமூக அமைப்பு அல்லது சாதி முறை ஆகும். ரெட்டிகள் தெலுங்கு மொழியைத் தங்களது தாய்மொழியாகக் கொண்டுள்ளனர், இந்தி மற்றும் ஆங்கிலம் அவர்களது இரண்டாவது மொழியாகும். கர்நாடகா, தமிழ்நாடு, மஹாராஸ்டிரா மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கணிசமான அளவில் ரெட்டி இனத்தவரின் மக்கள்தொகை உள்ளது.

தோற்றம்
19 ஆம் நூற்றாண்டு எழுத்தாளரான எட்கர் தர்ஸ்டன், தனது "கேஸ்ட்ஸ் அண்ட் டிரிப்ஸ் ஆஃப் சவுத்தன் இந்தியா" (Castes and Tribes of Southern India) என்ற நூலில், ரெட்டிகள் கிராமத் தலைவர்களாகவும் இருந்தனர். அவர்கள் கபூ (Kapu) என்ற சமுதாயத்தின் கீழ் பட்டியலிடப்பட்டனர் என்று குறிப்பிடுகின்றார். கிராமத் தலைவர்கள் 'ரெட்டி' என்ற தலைப்பைக் கொடுத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தின் போது சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ரெட்டி மற்றும் கபூ சமூகங்களை ஒன்றாகப் பட்டியலிட்டினர்.
தெலகா, பாலிஜா, கம்மா, வெலமா மற்றும் யாதவா போன்ற பிற வேளாண்மை சார்ந்த சமூகத்தை சேர்ந்த மக்களும், அரிதாக 'ரெட்டி' என்ற தலைப்பை அவர்களது பெயரில் சூட்டிக் கொள்கின்றனர். இது ஆந்திரப் பிரதேசத்தின் அனைத்து வேளாண்மை சார்ந்த சாதிகளுக்கும் பொதுவான தோற்றத்தைக் குறிக்கின்றது. அனைத்து வேளாண்மை சார்ந்த சாதிகளானவை அனைத்து தென் இந்திய சாதிகளைப் போன்ற இனத் தோற்றத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுவதை தோற்றம் பற்றிய அண்மை ஆய்வுகள் ஆதரிக்கின்றன.
ராஷ்ட்ரகுட்டுடு என்ற சொல்லில் இருந்து வந்த ராட்டொடு என்ற வரலாற்று இடைகாலத்துச் சொல்லில் இருந்து ரெட்டி என்ற வார்த்தை பிறந்ததாக சில மொழியியலாளர்கள் ஊகித்தனர். ராஷ்ட்ரகுட்டுடுகள், கிராமங்களின் தலைவர்களாக இருந்து வளமான உள்ளூர் விவசாயிகளை வேலைக்கமர்த்தி, பேரரசில் வரிகளைச் சேகரித்தனர். மேலும் அவர்களுக்கு ரெட்டி என்ற தலைப்பை வழங்கினர். ரெட்டி என்ற வார்த்தையின் பயன்பாடானது, குறிப்பாக ரெனட்டி சோழா ஆட்சிகாலத்தின் (CE ஏழாவது நூற்றாண்டு ) கல்வெட்டுகளில் முதலில் காணப்பட்டது.

கி.மு 200 ஆம் ஆண்டுக்கு முன்னர், சட்டவஹனாக்கள் மற்றும் மயூர்யாக்களுக்கு முன்பும் தக்காண பீடபூமியில் சிறிய இளவரச ஆட்சிமுறை அதிகாரங்களைக் கொண்டிருந்த ரத்திஸ் இனத்தவருக்கு ரெட்டிகளை தொடர்பு படுத்தும் மற்றொரு கொள்கையும் உள்ளது. வடக்கு ஆந்திரப் பிரதேசத்திலும், கர்னூல் மாவட்டத்திலும், புனேவுக்கு அருகிலும், ரத்திஸ்கள் நாணயங்களை விட்டுச் சென்றனர். அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நாணயங்கள், மெகாலித்திக் மற்றும் சட்டவஹானா காலத்திற்கு இடைப்பட்ட காலங்களை உணர்த்துகின்றன.

ரெட்டி என்ற வார்த்தையின் பயன்பாடானது, குறிப்பாக ரெனட்டி சோழா ஆட்சிகாலத்தின் (ஏழாவது நூற்றாண்டு CE) கல்வெட்டுகளில் முதலில் காணப்பட்டது. CE 1323 ஆம் ஆண்டில், தென்னிந்தியாவில் கக்கட்டியா வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முஸுனரி நாயக்கர்களின் தலைமையில் ஒரு சுதந்திர இயக்கம் இருந்தது. தெலுங்குப் பிரதேசத்தின் அனைத்து சமுதாயங்களின் போர் வீரர்களும் ஒன்றிணைந்து, டெல்லி சுல்தானிடம் இருந்து வாரங்கலை மீண்டும் வெற்றிகரமாகக் கைப்பற்றினர். எனினும், தெலுங்குப் பிரதேசத்தின் ஒற்றுமையானது ஐம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே நிலைத்திருந்தது.

ஆட்சிமுறையின் அளவு
புவனகிரிப் போரில் (தெலுங்கான மண்டலத்தில் உள்ள போன்கிர்) ரெச்சர்லா வெலமா தலைவர்களின் கைகளில், முஸுனரி கப்பயா நாயகா இறந்த பின்னர் அடான்கியின் ரெட்டி நிலக்கிழார்கள் சுதந்திரம் பெற்றனர். CE 1353 ஆம் ஆண்டு முதல் 1448 ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதியை அவர்கள் ஆட்சி செய்தனர். இந்த அரசாட்சியின் முதலாவது தலைநகரம் அடான்கியாகும். பின்னர் கோந்தவிடு தலைநகரமாக மாற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து ராஜமுந்திரி தலைநகரமானது. ரெச்சர்லா வெலமா தலைவர்கள் மற்றும் ஒரிசாவின் கஜபதிஸ்களுடன் தொடர்ந்து போர் நடத்திக் கொண்டிருந்ததால் இந்த வம்சம் அழிந்தது. பின்னர் வந்த ஆண்டுகளில், ரெட்டிகள் கோல்கொண்டா இஸ்லாமிய அரசர்களின் பணியாளர்களாக இருந்தனர். ரெட்டிகள் அவர்களது அரணை வலுவூட்டியதற்காக அறியப்பட்டனர். விஜயவாடாவின் வடமேற்கில் கொண்டபள்ளியின் ஒன்றும், குண்டூருக்கு அருகில் கொண்டவிடுவில் ஒன்றுமான இரண்டு முக்கியமான மலைக்கோட்டைகள், ரெட்டிகளின் கோட்டைகள் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றுகளாக உள்ளன.

ஆரம்பகால வரலாறு
"ரஷ்ட்ரகுட்டா" என்ற வார்த்தையானது "ரெட்டக்குடியின்" சமஸ்கிருதப் பதிப்பாகும். ரெட்டாடியில் இருந்து ரெட்டக்குடி மாற்றியமைக்கப்பட்டது, பின்னர் ரெட்டி என்றானது. ராஷ்ட்ரகுட்டாஸ் துவக்கத்தில் சாலுக்கியாவின் மேல் தட்டு இராணுவத்தில் இருந்தனர். படமிக்குப் பிறகு ஒரு பேரரசை அவர்கள் நிறுவினர், அப்போதிருந்து சாலுக்கியாக்கள் மறைந்தனர். ராஷ்ட்ரகுட்டாஸ் வீழ்ச்சியுற்ற பிறகு, ஆந்திரப்பிரதேசத்தில் அடுத்து வந்த கல்யாணி சாலுக்கியாக்கள் கல்வெட்டுகளில் ரெட்டிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர் (CE 900). கல்யாணி சலுக்கியாக்கள் மூலமாக மெடாக் மாவட்டதில் உள்ள கிராமங்களின் தலைவர்களாக படைவீரர்கள் நியமிக்கப்பட்டனர். மினி ராட்டி மற்றும் கட்டி ராட்டி என்று சில பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. பணியமர்த்தப்பட்டவர், பணியமர்த்தும் அதிகாரமுடையவரின் பெயர், அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருந்த முக்கியமான மனிதர்களைப் பற்றி அங்கிருந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தன.

கக்கட்டியா ஆட்சிகாலம்

12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்யாணி சலுக்கியாக்கள் வீழ்ச்சியடைந்த பிறகு, புரோலா II (1110-1158 CE) சலுக்கியாக்களிடம் இருந்து சார்பற்றவறாக அறிவித்துக் கொண்டார், மேலும் கக்கட்டியா வம்சத்தை உருவாக்கினார். புரோலா தனது கல்வெட்டுகளில் ரெட்டீ என்ற தலைப்பைப் பயன்படுத்தினார்.

ரெட்டி வம்சம்
ரெட்டி வம்சமானது ஆந்திரப்பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் சிலவற்றில் சுமார் 60 ஆண்டு காலம் ஆட்சி செய்தனர். புவனகிரியில் நடந்த (தெலுங்கானா மண்டலத்தில் உள்ள போன்கீரில் நடந்த) போரில் ரெச்செர்லா வெலமா அரசர்களின் மூலமாக முஸுனரி கப்பாயா நாயகா இறந்த பிறகு ரெட்டிகள் சுதந்திரம் அடைந்தனர். ரெட்டி வம்சத்தின் முதல் அரசர் கோமாட்டி புரோலயா வேமா ரெட்டி ஆவார். அந்த அரசாங்கத்தின் தலைநகரமாக அடான்கி இருந்தது. பின்னர் கொண்டவிடு தலைநகரமாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜமுந்திரி தலைநகரமானது. அவரது ஆட்சியின் இயல்புகளாக அமைதி மறுசீரமைப்பு, கலை மற்றும் இலக்கியத்தின் ஆதரவு, மேலும் அதைப் பொருத்த மேம்பாடுகள் ஆகியவை இருந்தன. இந்தக் காலகட்டத்தில் ராமாயணத்தின் மொழி பெயர்ப்பாளரான எரானா வாழ்ந்தார்.

கோல்கொண்டா ஆட்சிகாலம்
துர்கிஷ்ஷின் ஆட்சிக்காலம் மற்றும் நிஜாம்களின் ஆட்சிக்காலம் முழுவதிலும் தெலுங்கானா மண்டலத்தின் தலைவர்கள், கிராமக் காவல்துறை அதிகாரிகள், வரி வசூலிப்பவர்கள் மற்றும் விவசாயிகள் என்று ரெட்டிகள் தொடர்ந்து பதவிவகித்து வந்தனர். ரெட்டி நிழக்கிழார்கள் தங்களை தேசாய்கள் , தோராக்கள் மற்றும் பட்டேல் என்று வகைப்படுத்திக் கொண்டனர். பல்வேறு ரெட்டிகள், நிஜாம் நவாப்புகளின் நீதிமன்றத்தில் பிரபுக்களாக இருந்தனர்.

சமுதாய நிலை
ரெட்டிகள் வழக்கமாக கிராமத் தலைவர்களாக இருந்தனர். மேலும் கிராமப்புற மக்களிடம் இருந்து நன்மதிப்பைப் பெற்றனர். இதைத் தெலுங்கு மொழியில் உள்ள ஒரு பழமொழி விளக்குகின்றது. (தெலுங்கு:రెడ్దొచ్చె మొదలెట్టు) - "ரெட்டி வந்தார்; ஆட்சி செய்யத் தொடங்கினார்" என்பது இதன் பொருளாகும்.

கோனார்
கோனார் (யாதவர்) என்போர் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சமுதாயம் ஆகும், யாதவர்கள் என்போர் தமிழ்நாட்டில் கோனார் என்று அழைக்கபடுக்கிறார்கள், வடஇந்தியாவில் யாதவ் என்று அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின் யாதவர்களுக்கும் கலாச்சார பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும் ஆடு மாடு மேய்ப்பதையும், அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக் கறந்து விற்பதுமே இவர்கள் இருவரின் தொழிலாகவும் இன்றும் இருக்கிறது. தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி. இவர்கள் பால் மற்றும் பால் பண்ணை சார்ந்த வளர்ச்சியான தொழில்களைச் செய்கின்றனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சிவகங்கை, புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

வழிபாடு
இவர்களில் அநேகர் வைணவ வழியைப் பின்பற்றுகின்றனர். மதுரை மீனாட்சி, இந்து கோனார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன.

பெயர்காரணம்
`இடை' (நடு) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து `இடையர்' என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் `முல்லை' என்ற நடுக்காட்டில் புல்வெளி நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது.
விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு பிரிவினர்களுக்கு இடையே நடுவே ஒரு தொடர் கண்ணியாக இடையர்கள் இருந்ததால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது என்று பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இடையர்கள்தான் பிற்காலத்தில் தங்கள் பெயர்களுடன் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்துக் கொண்டுள்ளனர். 1891ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் `பிள்ளை, கரையாளர்' என்ற பட்டப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்திக் கொண்டது பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.
பாரம்பரியம்

இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண் சித்தர்கள்) என்று கூறுவர். அவர்களில் திருமூலர் மற்றும் இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் ஆய் குலத்தை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்கள். அரசியலிலும் இலக்கியத்திலும் இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு உண்டு.

 வண்ணார்
சலவைத் தொழிலாளர் என்போர் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் துணி சுத்திகரிக்கும் தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்ட சாதியாகும். இவர்களை வண்ணான் (அல்லது டோபி) எனவும் அழைப்பர்.
இவர்கள் பொதுவாக வீடுவீடாகச் சென்று சுத்திகரிப்புக்கான ஆடைகளை சேகரித்து கழுவி சுத்தப்படுத்திய ஆடைகளை பின்னர் வீடுகளுகே சென்று கொடுப்பர். இன்றைய நவீன ஆடை சுத்திகரிப்பு நிலையங்கள் வழங்கும் சேவைகளுக்கு ஒத்த சேவைகளை இவர்கள் வழங்கினாலும் கட்டணம் மிகக் குறைவாக காணப்படும். இவர்கள் முன்னர் கழுதைகளை சுமைத்தூக்கிகளாக வளர்த்து வந்ததன் காரணமாக பொதுவாக கழுதைகளுடன் சித்தரிக்கப்படுவது வழக்கமாகும்.

வண்ணார் சாதி என்ற ஒரு பிரிவினர் இலங்கைச் சிங்களவர்களிலும் உள்ளனர். அவர்கள் சாதீய படி நிலையில் தரம் குறைந்தோராகக் கணிக்கப்படுகின்றனர். அவ்வாறே, இலங்கையில் பெரும்பாலும் முடிவெட்டுவோரைக் கொண்ட சாதிப் பிரிவினர் நாவிதர் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களும் சாதீய படி நிலையில் பிற்படுத்தப்பட்டே உள்ளனர்.

பாணர்
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பண் பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல், நடனம் ஆகிய கலைகளைத் தொழிலாக கொண்டோர் பாணர் எனப்பட்டனர். நாடோடிகள் போன்று பல ஊர்களுக்கு சென்று இவர்கள் தம் கலைகளால் மக்களை மகிழ்விப்பர். இக்கலைக்களில் ஆண்களைப் போன்றே பெண்களும் இணையாக ஈடுபட்டனர். பெண்கள் பாடினிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

  • பாணர்
    பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பண் பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல், நடனம் ஆகிய கலைகளைத் தொழிலாக கொண்டோர் பாணர் எனப்பட்டனர். நாடோடிகள் போன்று பல ஊர்களுக்கு சென்று இவர்கள் தம் கலைகளால் மக்களை மகிழ்விப்பர். இக்கலைக்களில் ஆண்களைப் போன்றே பெண்களும் இணையாக ஈடுபட்டனர். பெண்கள் பாடினிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

    பழந்தமிழர்கள்
    பழங்காலத்தில் பாணர்கள் என்னும் குடியினர் இருந்தனர். அவர்கள் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது போன்றவற்றைச் செய்வார்கள். அவர்களைப் பல மன்னர்கள், குறுநில மன்னர்கள், செல்வர்கள் முதலியோர் ஆதரித்து வந்தனர். அவர்களில் பெண்பாலர்களை 'விறலியர்' என்பார்கள். பாணர்களின் முக்கிய இசைக்கருவி யாழ் என்பது. அதிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தன. சகோட யாழ், சீறியாழ், பேரியாழ் போன்றவை. ஆயிரம் நரம்புகள் உள்ள யாழும் இருந்திருக்கிறது.

    பாணர்களில் சிலர் மன்னர்களுக்காக தூதுகூட சென்றிருக்கிறார்கள். சங்க காலத்திலிருந்து பிற்காலப் பாண்டியர்கள் காலம் வரைக்கும் பாணர் குடி இருந்திருக்கிறது.

    நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு ராஜராஜசோழர் திருமுறைகளைத் தொகுத்த சமயத்தில் தேவாரப்பாடல்களுக்குப் பண் முறையை வகுக்க வேண்டியிருந்தது. அப்போது அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நீலகண்ட யாழ்ப்பாணர் குடியில் தோன்றிய ஒரு பெண்மணியை ( மதங்கசூளாமணி ) வைத்துப் பண்முறை வகுத்தனர்.
    மாறவர்மன் சுந்தர பாண்டியர் சோழநாட்டின் மீது படையெடுத்த பின்னர் சோழனுடைய திருமுடி ஆகியவற்றைப் பாணனுக்குப் பரிசிலாகக் கொடுத்ததாக அவருடைய கல்வெட்டுக் கூறுகிறது. துருக்கர் படையெடுப்புக்குப் பின்னர் இக்குடியினர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

    பாணர்கள் வேறு பெயர்கள்
    அக்காலத்தில் இவர்கள் இசைப்பாணர்கள், யாழ்ப்பாணர்கள், மண்டைப்பாணர்கள், பெரும்பாணர், சிறும்பாணர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இக்காலத்தில் பாணான், மேஸ்திரி, தையல்காரர் பிள்ளை என்று அழைக்கப்படுகிறார்கள். சமூக அந்தஸ்திற்காக சிலர் பாண்டிய வேளாளர் என்று கூறி வருகின்றனர்.

    திருமண உறவுகள்
    பாணர்கள் தங்கள் உறவுக்குள்ளேயே அத்தை மகள், அக்காள் மகள்களை திருமணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பெரும்பாலும் வீட்டில் வைத்தே திருமணங்கள் நடக்கும் இக்காலத்திலும் வீடுகளிலேயே பிரசவம் நடைபெறுகிறது. அந்தந்த வீடுகளில் உள்ள வயது முதிர்ந்த பெண்கள்தான் பிரசவம் பார்ப்பார்கள். முடியாத நிலையில் மட்டுமே மருத்துவச்சிகளை அழைத்து வந்து பிரசவம் பார்ப்பார்கள்.
    இலக்கியங்களில் பாணர்
    சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் பாணர்கள் குறித்து பல செய்திகள் காணப்படுகிறது.

    பாணர்களின் சிறப்பு
    யாழ் வாசிப்பில் மிகுதிறமை பெற்ற ஒரு வகுப்பினரே யாழ்ப் பாணர் என்றழைக்கப்பட்டனர். பாணர்களில் ஒருவருக்கு நாயன்மார் வரிசைகளில் இடம் கொடுத்து அழகு செய்தது பழந்தமிழகம். தேவாரப்பண்களுக்கு பண்ணும் இசையும் செய்வித்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் என்று வரலாறு கூறுகிறது. மேலும் இலங்கையின் யாழ்ப்பாணம் என்னும் ஊர் ஒரு யாழ் வாசிப்பில் நல்ல திறன் பெற்ற ஒரு பாணருக்கு இலங்கை அரசனால் பரிசளிக்கப்பட்ட ஊராதலின் அந்த ஊருக்க யாழ்ப்பாணம் என்று பெயர் ஏற்பட்டது.
    பாணர்கள் வீழ்ச்சி
    சங்ககாலத் தமிழகத்தில் இசை மக்களின் வாழ்வில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. இசை வல்லுனர்களான பாணர்களும், பாடினிகளும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஊர்கள் தோறும் சென்று, வள்ளல்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வந்தனர். பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை என்ற இரு சங்க நூல்கள் பாணர்களின் பெயரைத் தாங்கியுள்ளன. வாழ்க்கையின் இன்பங்களையும் சரி, துயரங்களையும் சரி, பாடல்களாகப் புனைந்ததோடு மட்டுமல்லாமல், யாழ், முழவு (மிருதங்கம்) முதலிய கருவிகளின் துணையோடு அவற்றை இசைக்கும் கலாசாரமும் செழித்து வளர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, தொடக்க கால சமண காவியமான சிலப்பதிகாரத்தில் இசையும், நடனமும் முக்கிய இடத்தைப் பெறுவதைப் பார்க்கின்றோம்.
    ஆனால், வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அல்லாமல், கர்மவினையின் சுழற்சியாகவே பார்க்கும் தன்மையை மிக அதிகமாக பிற்காலச் சமணம் வலியுறுத்தத் தொடங்கியது. இசை என்கிற கலை மேன்மையான விஷயமாக அல்ல, மேலும் மேலும் வினையில் ஆழ்த்தும் ஒரு பந்தமாக, மனித மனத்தை மயக்கி வீழ்த்தும் விஷயமாகவே சமண இறையியலில் கூறப் பட்டது. அதனால் களப்பிரர் ஆட்சியின் வளர்ச்சி நிகழ்கையில் இசையின் வீழ்ச்சி தொடங்கியது. பாணர்கள் சமூக அடுக்கில் கீழ்நோக்கிச் சென்றனர். பாணர்களை ”இழிசினர்” என்ற கீழ்ச்சாதியினருடன் இணைத்துக் கூறும் ஒரு சங்கப் பாடல் இந்தப் போக்கைக் காட்டுகிறது.
    காலப் போக்கில், இசையும், பாணர்களும், பாடினிகளும் தமிழ் மண்ணிலிருந்து ஏறக்குறைய அழிந்தே போகும் தருவாயிலிருந்தார்கள். நான்மணிக்கடிகை என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூலில் ”பண் அமைத்துப் பாடுபவர்கள் இல்லையே, யாழ் இசைப்பவர்கள் இல்லையே” என்றெல்லாம், நல்ல இசையைக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தொனிக்கும் வரிகளைக் காணலாம் - “பறை நன்று பண்ணமையா யாழின்”, “பண்ணதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும்”. இன்னா நாற்பது என்ற நூலும், “பண்ணமையா யாழின் கீழ்ப் பாடல் பெரிதின்னா” என்று புலம்புகிறது. இஸ்லாமியக் கொடுங்கோலன் ஔரங்கசீப் தனது மதநம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி, தனது ஆட்சிக் காலத்தில் இசையைத் தடைசெய்தான்.
    பொருளாதார நிலை
    திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, நாகர்கோயில், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் வீடும் வயல்களுமாக சிறப்போடு வாழ்ந்திருக்கிறார்கள். தற்சமயம் சொத்துக்களையும் இழந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பொருளாதாரம் முதலியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழும் நிலை. முன்பு பாணர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத காரணத்தால் அவர்கள் வாழும் பகுதிகளிலேயே தங்களுக்கு என்று சில கடவுள்களை அமைத்து வழிபடுகின்றனர். ஆடு, கோழி, பலி கொடுப்பதும் உண்டு. முற்காலத்தில் யாழ் இசைத்து, இறைவனுக்குத் தொண்டு செய்யும் பணி இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் விழாக்காலங்களில் தேர் அலங்கார வேலைகள், அலங்காரக் கடைகள், ஆண்டவனுக்குரிய ஆடைகள் தைத்தல், பந்தல் போடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர். அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
    அரசாங்க மாற்றத்தால் கோயில்கள் மூலம் கிடைத்த வருமானம் நின்றுவிட்டது. தையல் தொழில், பந்தல் தொழில், கூலித் தொழில் செய்து வாழத் தொடங்கிவிட்டனர். மற்ற சமுதாய மக்கள் இறந்தால் அவர்களின் சடலங்களைக் கொண்டு செல்லும் 'பாடை' கட்டிக் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். பெண்கள் பீடி சுற்றுதல், தீப்பெட்டி ஒட்டுதல் போன்ற தொழிலைச் செய்ய்து கொண்டுள்ளனர். இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவில் அரசு உயரதிகாரிகள், அதிகாரிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நகர்மன்ற, பஞ்சாயத்து உறுப்பினர் என்று யாரும் கிடையாது. இச்சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான அரசியல் தலைவர்களும் இல்லை.

    செங்குந்தர்
    செங்குந்தர் என்பது இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு சாதியை குறிக்கும். இச்சமூக மக்கள் கைக்கோளர் என்கிற பெயராலும் அழைக்கப்படுவர். செங்குந்தர் முதலியார் என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்படும் சாதிகளில் ஒன்றாகும்.
    பெயர்க்காரணம்
    செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வரலாற்றுச் சான்றுகள்
    தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன.
    செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.
    பிற்கால சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத் தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.
    திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமை பெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை இவர்கள் அளித்திருக்கின்றனர்.
    மக்கள் பரப்பு
    இம்மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோவை தர்மபுரி, தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகத்திலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

     வேளாளர்
    வேளாளர் எனப்படுவோர் சாதீய அமைப்பில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களைக் குறிக்கும். இவர்கள் அனைவரும் சைவ சமயத்தையே சார்ந்துள்ளனர். இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர் முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும் இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.
    வேளாளர் விளக்கம்
    வேளாளர் என்பார் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளராவர். வேளாண்மையாவது உழுதுண்டு வாழும் வாழ்வாகும். தாளாண்மையாவது இம்முயற்சியால் ஈட்டிய பொருளைத் தக்கார்க்குக் கொடுத்து மகிழ்வதாகும். இவ்விரு பண்புகளோடு வாய்மை குன்றா வகைமையும் இவர்கள் பால் ஆழமாக வேரூன்றி இருந்து வந்தது.
    இவர்களைச் சூத்திரர் என்ற பெயராலும் குறித்து வந்தனர். 'நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்குலம் செய்தவத்தினால், இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப்பதி மாறனார்' (தி.12 பு.4 பா.1). 'தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல, நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார், தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்' எனவரும் ஆசிரியர் திருவாக்கால் இவ்வுண்மை அறியலாம். சூத்திரர் என்னும் சொற்கு முன்னும் பின்னும் வரும் அடை மொழிகளைக் காண இச்சொல் உயர்பொருளைக் குறித்து வந்தமை அறியலாம். 'சூத்ரா சுத்த குலோத்பவா' எனச் சிவாகமமும் கூறும் என்பர். எனினும் இச்சொல் இழிநிலையில் வந்த பிறப்பைக் குறிக்கும் என்றும், மேழியர் என்பதற்கு மாறாக இச்சொல் இடைச் செருகலாய்ப் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுவாரும் உளர். எனினும் ஆசிரியர் திருவாக்கின் அமைதியைக் காண இக்கருத்து மேலும் எண்ணத் தக்கதாகவே உள்ளது.
    உட்பிரிவு சாதியினர்
        காரக்காட்டு வேளாளர் (கார்காத்தர் அல்லது கார்காத்தர் பிள்ளை)
        சோழிய வேளாளர்
        வீரகுடி வேளாளர்
        நாமதாரிப் பிள்ளை
        ஓதுவார் பிள்ளை
        தேசிகர்
        ஆறுநாட்டு வேளாளர்
        நாஞ்சில்நாட்டு வேளாளர்
        சேர வேளாளர்
        சோழ வேளாளர்
        நாட்டம்படி வேளாளர்
        நன்குடி வேளாளர்
        துளுவ வேளாளர்
        பாண்டிய வேளாளர்
        கொடிக்கால் வேளாளர்
        தொண்டை மண்டல வேளாளர்
        அரும்புக்கட்டி வேளாளர்

     

    தமிழகத்தில் சாதிகள் வரலாறு,
  • http://www.worldtamilswin.com/read-tamil-news/18416/%D1%80%D0%BE%D0%B4%D1%80%D0%BE%D0%BE%D1%80%D0%BE%E2%94%90%D1%80%D0%BE%E2%94%A4%D1%80%D0%BE%D0%A5%D1%80%D0%BE%D0%B4%D1%80%D0%BF%D0%9D%D1%80%D0%BE%D0%B4%D1%80%D0%BE%E2%94%90%D1%80%D0%BE%25



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard