விஞ்ஞானிகள் அதிகரிக்கின்றனர். விஞ்ஞானம் வளர்கிறது. அதனால் அற்புதங்கள் பல ஆக்கம் பெறுகின்றன. ஆயினும் அவற்றுள் தீங்கு பயப்பன பல. அவையும் நலத்துக்குப் பயன்படுத்தப்படுமா? அத்தீங்கு அகற்றப்படுமா? அவ்வாசையோடு செய்யப்படும் முயற்சிகளுமுள. நலம் பயக்கும் அற்புதங்களும் பலவே. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஆபத்துக்கள் அவற்றாலும் விளைவதுண்டு. எப்படியும் அவ்வற்புதங்கள் அற்புதங்களே. அவற்றால் உலகம் செழிக்கிறது. நாகரிகம் மேற்போகிறது. மக்கள் சுகிக்கின்றனர். அதனை நாமுஞ் சம்மதிக்கலாம்.
விஞ்ஞானிகளுக்குப் புகழுண்டு. காணாதவற்றையெல்லாம் அவரறிவு கண்டு வருகிறது. ஆயினும் அவர் நூற்றுக்கணக்கானவரே. ஆனால் அவர் கண்ட அற்புதங்களை அனுபவிப்பவரோ கோடானு கோடியர். எனினும், ஆக்கும் அறிவு போல்வதாமா அனுபவிக்கும் அறிவு? மோட்டார் வண்டியைக் கண்டுபிடித்தவனது அறிவு சிறந்தது. அதில் ஏறிச் செல்பவனுக்கு அவ்வண்டி பற்றிய அறிவு எவ்வளவிருக்கும்? அப்படியிருந்தும் அதில் ஏறிச் செல்கிறவரும் தம்மறிவை மெச்சிக் கொள்கின்றனர். இன்றையவுலகில் அவர் பிறந்தார், இருக்கிறார். அதனால் அவரும் தம்மைப் புத்திசாலிகளென எண்ணிக் கொள்கின்றனர். முன்னோரை இகழ்ந்து பேசுமளவுக்கு அவரிடம் அச்செருக்கு மிகலாயிற்று.
மனிதனுக்கு ஆசையுண்டு. அதற்கு அளவோ? அதையளக்க முயன்றர் பூர்விகர். உலகெல்லாம் ஒரு குடைகீழ் வைத்து ஆள்கிறான் ஓர் அரசன். ஆயினும் அவனாசை அடங்கவில்லை. கடல்மீதிலும் தன் ஆணையைச் செலுத்தலாமா எனவும் அவன் நினைக்கிறான். ஆசைக்கோரளவில்லை. அதைக் காட்ட அக்கடலோடு நின்றனரவர். ஆனால் இன்றைய நிலையென்ன? ர்ஷிய ராக்கெட் வானிற் பறந்தது. எத்தனையோ இலக்கம் மைல்கள் மேற்சென்றது. சந்திரனைத் தாண்டியது. சூரியனையும் எட்டிவிட்டதாம். வானத்திற் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சில வருஷங்களே கழிக. அதற்குள் இவ்வுலக மக்கள் அக்கிரகங்களிற் போய் உலவுவர். அங்கும் மக்கள் உளரானால் அவரோடுந் தொடர்பு கொள்வர். போக்குவரத்துக்கான சாதனங்கள் விருத்தியாகும். போக்குவரத்தும் தொடர்ந்து நிகழலாம். அங்கு மக்கள் இல்லையானால் அக்கிரகங்கள் ஆக்கிரமிக்கப்படும். இவ்வுலக மக்களுக்கு அந்நம்பிக்கையுண்டு. இவருக்கு ஆசை மென்மேலும் வளர்கிறது. ஆனால் ஒன்று. அந்தக் கிரகங்களிலிருந்து எவரும் இவ்வுலகத்துக்கு இதுவரை வந்ததில்லை. அங்கு மக்களில்லையா? அவருக்கு ஆசையில்லையா? விஞ்ஞானம் வளரவில்லையா? என்னவோ? இங்குள்ளவரின் அறிவும் ஆசையும் முயற்சியும் நிதர்சனம். அவர் அங்குச் செல்ல முந்திக் கொண்டனர். இவராலாவது எல்லாக் கிரகங்களிலுமுள்ள மக்கள் விரைந்து சந்திக்க. அளவளாவுக, கொண்டுங் கொடுத்துங்குலாவுக. கடவுளென ஒருவரிருந்தால் அவரும் அதற்குத் துணை புரிக.
மற்றைக் கிரகங்களில் விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலுஞ் சரி இல்லாவிட்டாலுஞ் சரி. இங்குள்ள விஞ்ஞானிகள் அங்கு செல்ல நேர்ந்தால் இவரால் அங்கும் விஞ்ஞானம் வளரக்கூடும். அது அங்குள்ளோர்க்குப் பெரும் பாக்கியம். அதனால் எல்லாக் கிரகங்களுக்கும் பொது நலப் பேருபகாரிகள் விஞ்ஞானிகளேயென்பது தெரிகிறது. அவரால் கிரகங்களின் வக்கிரச் செயல் கூட மறையக்கூடும்.
ஆனால் பாரதி
'வள்ளுவன் றன்னை யுலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'
என்றார். திருவள்ளுவரை அவ்வளவு புகழவேண்டுமா? அவரறிவு அதற்குத் தகுதியுடையதா? புகைவண்டி, வானொலி கருவி, வானவூர்தி முதலிவற்றுள் ஒன்றிரண்டையாவது அன்றே அவர் கண்டு பிடித்திருக்கலாம். அது செய்தாரா? எல்லாக் கிரகங்களையும் நேசப்படுத்த அவரால் முடிந்ததா? அவராற் கிடைத்தது ஒரு நூல்.அன்று முதல் இன்று வரை அந்நூலாற் பயனெய்தியவர் எத்தனைபேர்? ஒருவரிருவர் பெயர்தானும் யார்கேனுந் தெரியுமா? அந்நூற்குப் பயன்றான் என்னை? அந்நூல் இவ்வுலகத்துள்ள மக்களைத்தானும் ஒன்றுபடுத்தியதா? அவ்வினாக்களுக்கு விடை இன்றுங் கிடைத்தபாடில்லை. எனவே பாரதி பாடிய அப்புகழ் பொருளுடையதாமா?சிந்திக்கவல்லார் சிந்திக்க.
இப்படி நான் கூறுகிறேன். அது திருவள்ளுவரை இகழ்வதாகும் என்பார் சிலர். அதற்காக அவர் என்மேற் சீறவுஞ் செய்யலாம். எல்லாம் அறிந்தவருமில்லை. ஏதும் அறியாதவருமில்லை. எல்லார்க்கும் ஒவ்வொன்றெளிது என்பது ஒரு நியாயம். விஞ்ஞானிகளும் அறிஞர். திருவள்ளுவரும் அறிஞர். முன்னவரறிவு ஒருவகை. பின்னவரறிவு இன்னொரு வகை.அவரறிவு இவருக்கில்லை. இவரறிவு அவருக்கில்லை. இங்ஙனம் திருவள்ளுவருக்கும் ஒரு வகை வகுத்து அவரறிவை அவ்வளவில் தடுத்து வைப்பார் சிலர். அதனால் திருவள்ளுவரும் அறியாதன பல, அது பற்றி அவருக்கும் அறியாமையுண்டு என்பது அவருக்குங் கருத்தாகும். அவர் தான் என்மேற் சீறுபவர். அச்சீற்றத்தில் அர்த்தமில்லை.
உண்மையில், உலகிற்கே திருவள்ளுவர் ஓர் ஒப்பற்ற மேதைதான். அவரை நன்கு அறிந்தவரே அவரறிவுடைமையைப் புகழ்தற்குரியார். அவரை நன்கு அறிதலாவது யாது? சூரிய மண்டலத்தை எட்டிவிட்டதாகச் சொல்லப்படும் ராக்கெட்டை ஆக்கியவரது அறிவு சாமானியமானதன்று. திருவள்ளுவரறிவும் அன்னதே. ஆனால் யாருடைய அறிவையும் மதிப்பது இரண்டு வழியாலாம். ஒன்று அவரிடமிருக்கும் அறிவின் விளக்கம் பற்றியது. இன்னொன்று அவரை விட்டு நீங்கியிருக்கும் அறியாமை பற்றியது. அறிவு விளங்கப் பெற்றவன் அறிஞனா? அறியாமை நீங்கப் பெற்றவன் அறிஞனா? இப்படி வினவிச் சிந்திக்க வேண்டும். அறிவு விளங்கப் பெற்றவரெல்லாம் அறியாமையில்லாதவரென்று சொல்ல முடியாது. அறியாமை நீங்கப் பெற்றவரை அறிஞரெனத் துணிந்து சொல்லலாம். அவரே தெள்ளறிஞர். ராக்கெட்டையனுப்பிய விஞ்ஞானிக்கும் அறியாமையுண்டு. பிற விஞ்ஞானிகளுக்கும் அ·துண்டு. அது கலவாத அறிவு பிராகிருதராயுள்ள எவரிடமுமில்லை. ஆனால் திருவள்ளுவரிடம் அவ்வறியாமை இம்மியுங் கிடையாது. அ·தறவே நீங்கப் பெற்றவர் அவர். அவர் போன்றோர் ஒரு சிலரேயுளர். அவரெல்லாம் பிராகிருதத் தொடர்பைக் கடந்தவர். திருவள்ளுவரை அறிவுடையாரென்பதை விட அறியாமை அறவே நீங்கப் பெற்றாரெனக் கொண்டு போற்றுபவன் நான்.
மக்களிடம் அறியாமையும் உண்டு. அ·து எதனால் வந்தது? எப்போது வந்தது? யாராலாவது தரப்பட்டதா? அவரேதேடிக் கொண்டனரா? அதற்கு மூலம் யாது? அ·து அறவே தீரக் கூடியதா? அல்லது குட்டம், குன்மம் முதலிய நோய்கள் போல் அவ்வப்போது செய்யப்படும் சாந்தியளவில் அடங்கிப் பிறகு துன்புறுத்திக் கொண்டிருப்பதா? அறவே தீர்தற்கு வாயிலென்ன? அவற்றையெல்லாம் விசாரித்து ஆவன செய்ய வேண்டும். அவ்வகையில் பிராகிருத நூல்கள் சிறிதும் பயன்படா. சமய நூல்களே உதவக் கூடியன. சமயங்கள் பல. ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த நூல்களும் அநேகம். ஆயினுமென்? அறியாமையைப் பற்றிய விளக்கமான செய்தி எந்தச் சமயத்திலுண்டு. அந்தச் சமய நூல்களின் சகாயம் வேண்டும். அந்த நூல்களே கற்பவை. திருவள்ளுவர் அவற்றைக் கசடறக் கற்றிருப்பர், கற்றபின் அதற்குத் தக நின்றிருப்பர். அதனால் அவரறியாமை அறவே நீங்கியிருக்கும். அவர் தெள்ளறிஞரானார். அச்சமயம் எது? பார்க்கலாம்.
திருவள்ளுவர் தந்த நூல் திருக்குறள். அதற்கு உரைகள் பல. அவை பத்து என்றொரு கணக்குண்டு. பத்தாவதாகவுள்ளது பரிமேலமுகரியற்றியது. இந்நூலில் அவர் பெயர் வருமிடங்களில் அழகரென்று சொல்லப்படுவார். அவர் போய்ச் சில நூறு வருடங்களாயின. அக்காலை இத்தமிழகம் எத்தனையோ தமிழ்ப் புலவர்களைப் பெற்றது. இலக்கணிகள், தார்க்கீசர், கவிகள், உரையாசிரியர், நீதிநூல் வல்லார், அரசியல் வல்லார், இன்பநூல் வல்லார், வீட்டு நூலார் எனப் பல துறைகளில் வல்லவர் வந்து போயினர். புலமைப் பஞ்சம் இங்கில்லை. அவரால் ஆக்கப்பட்டு இப்போது கிடைத்தது வரும் நூல்களே அதற்குச் சான்று. ஆனால் அவருள் திருக்குறளுக்குப் பதினோராவது உரையாசிரியராக எவரும் வந்திலர். காரணமென்ன? கெளரவ புத்தி கொண்டு சிந்திக்க. விடை கிடைக்கவே செய்யும். அவ்விடைக்காலத் தமிழ்ப் பெரும் புலவரனைவராலும் அவ்வழகருரை அங்கீகரிக்கப்பட்டது என்பதே விடை. அவ்வுரை இலக்கண தருக்க வரம்புடையது. நடுநிலையிலிருந்து நூலாசிரியர் கருத்தை வாங்கி விளக்குவது. பல ஞான நூல்களிற் பயின்று எழுதப்பட்டது. மக்களையுயர்த்த வேண்டுமென்ற கருணையாலியன்றது. ஆனால் சென்ற சில ஆண்டுகளாகப் பல புத்துரைகள் வெளிவரலாயின. அவற்றுள் நான் சிலவுரைகளைப் படித்தேன். அவை திருக்குறள் கூறும் உண்மைகளைப் புலப்படுத்தவில்லை. தான்றோன்றித்தனமாக எழுதப்பட்டன. உரைக்காரனின் அபத்தக் கொள்கைகள் புகுத்தப்பட்டன, காசு கொடுப்பவரைக் களிப்பிக்கப் போந்தன. நூலைக் கருதாமல் காலத்தைக் கருதின. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாலும் இறங்கலாம். அப்போலியுரைகளைக் கொண்டு சபையேற முடியாது. ஏறினால் அச்சபை பரிகசிக்கும். அவ்வுரைகளுங் கணக்கிற் சேர்ந்தன. இப்போது அவ்வுரைகளின் தொகை பத்தைத் தாண்டி விட்டது. நான் அவற்றையெல்லாம் விட்டுவிடுகிறேன். பிராமண ஸ்தானத்தை வகித்து வருகிற அழகருரையைத் தழுவித் திருக்குறளுக்குப் பொருள் காணு முகத்தால், திருவள்ளுவர் ஆசரித்த சமயம் எதுவாயிருக்குமென ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.
திருக்குறளுக்கு ஒன்பது பெயர்கள் காணப்படுகின்றன. ஆசிரியர் வைத்தனவா அத்தனையும்? ஒன்றிரண்டு அவரிட்டனவாயிருக்கலாம். அவ்வப்போது தோன்றிய புலவர் பெருமக்கள் பலர். அவர் அந்நூலை ஊன்றிப் படித்திருப்பர். அதன் நயம் அவருள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கும். அதனால் மதிப்புரை பல வழங்கியிருப்பாரவர். அம்மதிப்புரைகளே அப்பெயர்கள். அவ்வொன்பதுக்கு மேலும் அன்ன பெயர்கள் இருந்திருக்கலாம். அவை நூலருமையைச் சரியாக விளக்கியிரா. அதனால் கால வெள்ளத்தில் மறைந்து போயிருக்கும். இன்றுவரை நிலைத்திருப்பன அவ் வொன்பது. அவை தள்ளப்படுவன அல்ல. போற்றபடுவனயென்பது அதனாற் புலனாம். அவற்றுட் சிலவற்றை இயைபுபற்றி இங்கு ஆராய வேண்டும்.
'பொதுமறை' யென்பது ஒரு பெயர். பொதுவுடைமையென்ற சொல்லையெடுத்துக்கொள்க. ரஷியப் பொதுவுடைமை, சீனப் பொதுவுடைமையெனப் பலவுள. ரஷியர் சீனப் பொதுவுடைமையில் உரிமை கொள்ளமுடியாது. சீனர் ரஷியப் பொதுவுடைமையில் அப்படியே. அவ்வத்தேச வரம்பு அப்போது வென்னுஞ் சொல்லைக் கட்டுப்படுத்தி அவ்வுடைமையை அவ்வத்தேசத்தார்க்கே உரிமையாக்குகிறது. பொதுவென்னுஞ் சொல்லைப் பற்றிக் கொண்டு எவனும் எல்லாத் தேசங்களின் பொதுவுடைமைகளிலுங் கைவைக்கமாட்டான். வைத்தால் கை தறிபட்டுப்போம். அதுபோல் திருக்குறள் பொது மறையாயினும் அப்பொதுவுக்கும் வரம்புண்டு. அவ்வரம்பைக் கண்டு அதற்கு வெளியில் நிற்பவர் அந்நூலைத் தம்மதெனக் கொள்ளாதிருப்பதே நல்லது.
ஒரு தேசத்திற் பிறந்தவர் அத்தேசத்துக்கு மாத்திரம் பொதுமக்கள். யாமெல்லாம் பொதுவெனச் சொல்லிக்கொண்டு ஒரு தேசத்து மக்கள் மற்றத் தேசங்களுக்கும் பொதுவெனச் சொல்லிக் கொள்ளமாட்டார். அது போலப் பொதுமறையென்பதிலுள்ள பொதுவெனுஞ் சொல் தனக்கெனவொரு பொருளையுடையது. அதைவிட்டு அச்சொல்லே கொண்டு அம்மறை தனக்குப் புறம்பான மறைகளுக்குந் தன்னையுரியதெனச் சொல்லிக் கொள்ளமாட்டாது.
பொதுமக்கள் என்பதொரு பிரயோகம். அப்பொதுவை எவரும் தம்பாற் சார்த்திக்கொள்ள விரும்பார். பொதுமறையென்பதிலுள்ள பொதுவும் அங்ஙனமே.
சித்தாந்த சாத்திரங்களிற் சொரூப லட்சணம், தடத்த லட்சாம் என்ற பிரயோகங்களுள. அவை முறையே சிறப்பியல்பு, பொதுவியல்பு எனத் தமிழிற் பெயர்க்கப்படும். த்ருக்கத்தில் சாமானியம் விசேடம் என இரண்டிலக்கணங்களுள. அவற்றுக்கும் முறையே பொது, சிறப்பு என்பன தமிழ். அப்பொதுக்களின் பொருளும், பொது மறையென்பதிலுள்ள பொதுவின் பொருளும் ஒன்றாகுமா?
சிதம்பர ஆலயம் பொதுவெனப்படும். அப்பொதுப் போன்றதா பொதுமறை யென்பதிலுள்ள பொது?
'வேதமொ டாகம மெய்யா மிறைவனூ
லோதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக'
என்றது திருமந்திரம். சிவாகமமென்னுஞ் சிறப்புநூலொன்றுண்டு. அது பற்றி அவ்வேதம் பொதுநூலெனப்பட்டது. அப்பொதுவும், பொதுமறைப்பொதுவும் சமந்தானா?
தெய்வநூல் எதுவும் வயிநயிகருக்குத்தான் வேண்டப்படும் திருக்குறளுந் 'தெய்வநூல்'. அது பிராகிருதருள்பட அனைவருக்கும் பொதுவாதல் யங்ஙனம்?
சூரியன் சந்திரன் முதலியவை எல்லார்க்கும் நலஞ் செய்வன வாய்ப் பொதுவாகும் என்பர் சிலர்.
என்ற கந்தபுராணச் செய்யுளால் அவையும் வெறுப்புக் கிலக்காதல் அறியப்படும். அவற்றின் பொதுமைப்போல் பொதுமறைப் பொதுமையும் இருக்குமா? அறிஞர் சிந்தனையில் இன்னும் பல பொதுமைகள் தோன்றலாம். அவற்றையுஞ் சேர்த்துக் கொள்க. பொதுமறையென்பதிலுள்ள பொதுமையென்னுஞ் சொல் தெளிவான விளக்கத்தை வேண்டி நிற்றல் காண்க.
ஆனால் ஒன்று சொல்லப்படும் எல்லா மதங்களுஞ் சம்மதிக்கக் கூடிய அறங்களின் தொகுப்பே திருக்குறள், அதுபற்றி அந்நூலைப் பொதுமறையென்னலாம் என்பது அது. அதுவுஞ் சரியன்று. ஏன்? அப்பொதுவறங்கள் அவ்வச் சமயத்திலேயே கூறப்பட்டுள்ளன. எச் சமயத்தாரும் தம் சமய நூல்களிலேயே அவற்றைக் கற்றுக் கொள்வர். அவர்க்குத் திருக்குறள் அநாவசியம். மேலும் அதிற் காணப்படும் பொதுவறங்களத்தனையும் சர்வ மத சம்மதமுமல்ல. பொதுவறங்கள் Natural Religion என்றும், சிறப்பறங்கள் Revealed Religion என்றும் ஆங்கிலத்திற் சொல்லப்படும். சமயந்தோறும் சிறப்பறங்களுமுள. ஒவ்வொரு சமயமும் மோக்ஷமென ஒரு லக்ஷ¢யத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. பொதுவறங்களைத் தழுவினாலே போதும், மோக்ஷம் சித்திக்கும் என எச்சமயமுஞ் சொல்லாது. பொதுவறங்களோடு சிறப்பறங்களையும் அனுட்டிக்கவேண்டும். அவ்வனுட்டான பரருக்குத்தான் அச்சமயத்தின் மோக்ஷமுண்டு. அங்ஙனமே ஒவ்வொரு சமயமும் தன் சமயத்தவர்க்கு உபதேசிக்கிறது. திருக்குறள் அச்சிறப்புத் தருமங்களையுஞ் சொல்லாமல் விட்டிருக்குமானால் அந்நூலால் மக்களுக்கு முடிவான லக்ஷ¢யங் கிடைக்கப் போவதில்லையென்பது உறுதி. ஏதாவது ஒரு சமயமும், அதற்கேயுரிய சிறப்பறங்களும் மக்களுக்கு உறுதி பயப்பன என்பது அவருள்ளத்திற்பட்டிருந்தால், அவற்றையும் ஆசிரியர் அந்நூலிற் சொல்லத்தான் வேண்டும், சொல்லியேயிருப்பர். இன்றேல் அந்நூல் முற்றுப் பெற்றதாகாது. அவரும் மக்களுக்காக அதனைச் செய்தவராகார். ஆனால் இவ்வுலக வாழ்க்கையை விரும்புவார் மிகப்பலர். அவர்பாற் பரிபாகம் குறைவு. அவரையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கான ஒழுகலாறுகளுமுள. அவற்றை ஆசிரியர் அந்நூலில் அதிகமாகச் சொல்லிவைத்தார். மறுவுலக வாழ்க்கையை விரும்புவார் வெகு சிலரே. உள்ளம் பக்குவப்பட்டவர் அவர். அவருக்கு வேண்டும் ஒழுகலாறுகள் வேறு. அவற்றைச் சுருக்கமாகச் சூசகமாகச் சொன்னாற் போதும். அப்படித் தான் அவை சொல்லப்பட்டிருக்கின்றன. சத்திநிபாதர்க்கு வேண்டும் சிவாகமவுண்மைகளைச் சுருக்கமாகவும் சூசகமாகவும், உலகர்க்கு வேண்டுவனவற்றை விரிவாகவும் வெளிப்படையாகவுந் தன்பாற் கொண்ட வேதம் அவ்வியல்புபற்றிப் பொதுநூலெனப்படும். அம் முறையிற் செல்வது திருக்குறள். அது பொதுநூல் எனப்படாது பொதுமறை எனப்படாது பொதுமறை யெனப்பட்டது அவ்வுண்மையைக் காட்டவேயாம். அங்ஙனம் பொதுநூல் என்பதிலுள்ள பொதுவிற்குரிய பொருளைப் பொதுமறையென்பதிலிருந்து பொதுவுக்குப் பொருத்துவதுதான் பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது.
திருக்குறளுக்குத் திருவள்ளுவரென்பது இன்னொரு பெயர். தொல்காப்பியர் செய்த இலக்கணம் தொல்காப்பியம். சேனாவரையர் செய்தவுரை சேனாவரையம். பாணினீ செய்த வியாகரணம் பாணினீயம். அவற்றிற்கு அவ்வாசிரியன்மாரின் பெயர் அப்படியே வரவில்லை. ஈறு திரிந்தே வந்திருக்கிறது. ஆனால் திருக்குறளுக்குத் திருவள்ளுவம் என்ற பெயரில்லை. ஆசிரியர் பெயர் திரியாமல் நூலுக்கு வந்துள்ளது. திருவள்ளுவம் வள்ளுவம் என்பன நேற்றுத் தோன்றின. திருவள்ளுவர் என்ற பெயரின் பொருட் சிறப்பையறியாதார் இட்டன அவை. கடல் மீனுக்கு நுளையனிட்டது பெயர் என்பது பழமொழி. பெருநூல்களின் பெயர்களெல்லாம் அப்படித்தான் வந்தனவென அவர் எண்ணிக் கொண்டனர் போலும். இல்லாவிட்டால் திருவள்ளுவரெனப் பெயரிக்கும்போது அப்பெயர்கள் இடவும் துணிந்திருப்பாரா அவர்? அவர் கிடக்க, திருவள்ளுவரென்ற பெயரிட்ட பெரும் புலவருக்குக் கருத்து யாதாயிருக்கலாம். வேதத்துக்குச் சுயம்பு என்பது இன்னொரு பெயர். அப்பெயர் வரக் காரணத்தை ஆராய்ந்தனர் வேத பண்டிதர் பலர். சுயம்பு என்றால் தானே உண்டானது என்று அர்த்தம். வேதம் ஒருவராலும் ஆக்கப்படாமல் தானே யுண்டானது. அதனால் சுயம்பு எனப்பட்டது என்றனர் ஒரு சாரார். சுயம்பு எனபது சிவபெருமானுக்குப் பெயர், வேதம் அவரால் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் பெயர் நூலுக்காய் வேதமும் சுயம்பு எனப்பட்டது என்றனர் பிறிதொரு சாரார். அப்புலவருக்கு முற்கருத்துச் சம்மதமன்று, பிற்கருத்தே உடன்பாடு, அதை உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். சுயம்புவென்னும் சிவபெருமானாற் செய்யப்பட்ட வேதம் சுயம்பு எனப்படும் என்ற கொள்கையை அங்கீகரிக்கும் பிற்கால சந்ததியார்க்குத் திருட்டாந்தமொன்றுந் தேவை. திருவள்ளுவர் என்ற ஆசிரியர் பெயரைத் திரிவு செய்யாமல் திருக்குறளுக்கும் இட்டுவைத்து அவ்விரண்டையும் பூர்த்தி செய்தார் அப்புலவர். வேதத்துக்குச் செய்யாமொழி யெனவும் பெயருண்டு. செய்யாமொழியென்பது மனிதராற் செய்யப்படாத நூல் என்ற பொருளுடையது. வேதம் அபெளருஷேயம் என்றதன் பொருளும் அதுவே.
என்றது நூல். 'அவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி - அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண்' என்பது உரை. ஒழுக்க நெறி ஐந்துவித்தானாற் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருவு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு என்பது போல' என்பது குறிப்பு.
'நல்லாற்றா னாடி---' (242)
என்றது நூல். 'நல்லாற்றான் - அளவைகளானும் பொருந்துமாற்றானும் நன்றான நெறியி§லே நின்று' என்பது உரை. அளவைகளாவன ----காட்சியும், ----அனுமானமும் கருத்தா மொழியாககிய ஆகமுமென மூன்று என்பது குறிப்பு.
'யாமெய்யா -----' (300)
என்றது நூல். 'யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்' என்பது உரை. 'மெய்யுணர்த்துவனவற்றை மெய்யென்றார். அவையாவன தங்கண் மயக்கமின்மையின் பொருள்களை யுள்ளவாறுணரவல்லராய்க் காமவெகுளிகளின்மையின் அவற்றை யுணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர். அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற் பொருட்டுக் கூறிய வாகமங்கள்' என்பது குறிப்பு.
'பற்றுக பற்றற்றான் பற்றினை---' (350)
என்றது நூல். 'பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறியென்பது மனத்துக் கொள்க' என்பது உரை. 'பற்றற்றான் பற்றென்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது' என்பது குறிப்பு. இப்பிரமாணங்கள் அவ்வுண்மையைப் புலப்படுத்தும்.
உத்திர வேதம் என்பதும் திருக்குறளுக்குப் பெயர். வேதம் என்ற சொல் சம்ஸ்கிருதம். அச்சொல் யோகப் பெயர். யோகப் பெயரெனினும் காரணப் பெயரெனினும் ஒன்றே. வேதம் என்பது அறிதற் கருவி, அறிவு நூல் என்னும் பொருளுடையது. ஆயினும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கிற்கும் அ·து ரூடியுமாம். ரூடிப் பெயர் - இடுகுறிப் பெயர். எவ்வித அடையுமின்றி வேதம் என்று சொன்ன மாத்திரத்தில் அதற்கு இருக்காதி நான்குமே பொருள். ஆகையால் வேதம் என்ற சொல் இருக்காதியவற்றுக்குக் காரண இடுகுறி அல்லது யோகரூடிப் பெயராயிற்று. ஆயுள் வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம் முதலியவை அடையடுத்து வெவ்வேறு நூல்களைக் குறிக்கும்.
இக்காலத்தில் அவ்வேதத்தை நிந்திக்கச் சிலர் தலைப்பட்டனர். வேதம் என்பது காரணப் பெயர், அறிவு நூலென்பது அதற்கருத்தம். ஆகலின் அறிவு நூல்களெல்லாம் வேதமே என்பரவர். அவர் காரண இடுகுறிப் பெயரென்னும் இலக்கணப்பகுதிக்கு உலைவைக்கும் இலக்கணக் கொலைஞராவர். அவருள் சாத்தனென்பானொருவன். ஒரு நாள் அவன் அமர்வதற்கு நாற்காலியொன்று வேண்டியிருந்தது. அதனை யெடுத்துவரச்சொல்லி தன் பிரதம மாணாக்கனை ஏவினானவன். அவனிடம் வேதமென்னுஞ் சொற்பொருளைக் கேட்டிருந்த அறிவோடு அம்மாணாக்கன் நாற்காலியைக் கொண்டுவரச் சென்றான். கழுதையொன்று எதிர்ப்பட்டது. அதுவும் நாற்காலிதானேயென்பது அவனுடைய எண்ணம். அவன் அதைக் கொண்டுபோய்த் தனக்கு இலக்கணஞ் சொல்லிக் கொடுத்த குருவாகிய அச்சாத்தன் முன் நிறுத்தி அக்குருவை அதன்மேல் அமரும்படி வேண்டினான். அக்குரு கோபிக்கலாமா? காரண இடுகுறிப் பெயரைக் காரணப் பெயரளவில் வைத்துப் பொருள் கூறித் திரிவதற்கு அப்பதவியே தகும். வேதம் இருக்காதிகளுக்குக் காரண இடுகுறிப் பெயராயிருந்துவருவது சித்தம். திருக்குறள் உத்தரவேதமாயின், இருக்கு முதலிய நான்கும் பூர்வவேதமாகும். உத்தரம் - பின்னர் வந்தது. பூர்வம் - முன்னருள்ளது. பூர்வவேதமில்லையாயின் திருக்குறளுக்கு உத்தரவேதமெனப் பெயர் கொடுக்கப்பட்டிராது. பூர்வத்தை உத்திரம் எதிர்த்துச் சொல்வதில்லை. அநுசரித்தே செல்லும். எதிர்த்துச் செல்வது உத்தரமெனப்படாது. அப்பெயரிட்ட புலவர் இருமொழியிலும் வல்லவராய் அவ்வேத பண்டிதராயுமிருந்திருப்பரென
என்ற பிரயோகங்களால் எண்ணிறந்த கடவுளருண்மை அதிற் சம்மதிக்கப் பட்டது புலனாம். 'மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த தேவரும்' என்ற திருவாசகத்தோடு அவற்றையியைத்துக் காண்க. ஆனால் ஒரே கடவுள் தானுண்டு என்கிற சமயங்களும் பலவே. தோட்டியின் குடில்போல்வன அவை. அக்குடிலில் தோட்டி தலைவன் தான். ஆனால் அடிமைகள் கிடையா. திருவள்ளுவர் கொண்ட சமயமோ அரசமாளிகை போல்வது. அங்குத் தோட்டி முதல் மந்திரி வரை ஆயிரக் கணக்கான ஊழியர் இருப்பர். அரசன் அத்தனை பேருக்கும் ஆண்டவன், அதிகாரி, தலைவன், அச்சமயத்திலும் மாணிக்கவாசகர் அருளியது போல் கணக்கிலடங்காக் கடவுளரிருப்பர். அவரெல்லாந் தொண்டர்கள். அச்சமயத்து இறைவன் ஒருவனே. அவனே தலைவன், அக்கடவுளரடங்கலும் அவனுக்கு உடைமையே. அங்ஙனமாகத், தோட்டிக் குடில்கள் போன்ற மதங்கள் திருக்குறளைத் தமக்கும் உரியதாக எப்படிச் சொல்லலாம்? மேலும் அந்நூலில் வருகிற கடவுளர் அம்மதங்களுக்கு உடன்பாடுமல்ல.
பொய்வந்துழலுஞ் சமயங்கள் பலவாயிருக்கலாம்.ஆனால் மெய்ச் சமயம் ஒன்றே தான் இருக்க முடியும் என்பது ஆசிரியரின் அழுத்தமான கொள்கை.
'இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (5)
என்றது நூல். இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து' என்பது உரை.
'இறைமைக் குணங்களிலராயினாரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேரா வாகலின், அவை முற்றவுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழெனப்பட்டது' என்பது குறிப்பு.
வேதசிவாகமங்களிற் பிரஸ்தாபிக்கப்படும் இறைவன் ஒருவனுளன், அவனே முழுமுதற் பொருள், அவ்விறைவன்பாலுள்ள குணங்கள் அவனுக்கேயுரியன. அவையே இறைமைக் குணங்கள். அவனைக் கண்டு அக்குணங்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ வேண்டும். அவனைக் காண்டலாலது வேதாகமங்கள் கூறும் அவனுண்மையை அளவைகளால் துணிதல். அங்ஙனம் கண்டு அக்குணங்களாற் புகழ்வது அவன் விஷயத்தில் பொருள்சேர் புகழாகும். அதற்கு ஒரே சமயந்தான் இருக்க முடியும். இரண்டு மூன்று இருக்கலாமென்பது அறியாமை. மற்றைச் சமயங்கள் எத்தகையன? அவ்விறைவனல்லாத பிற சேதனங்கனைத்தும் உயிர்கள். அவற்றுள் தத்தமக்கு இஷ்டமான ஒவ்வொருயிரை அச்சமயங்கள் எடுத்துக் கொண்டு அதன்மேல் அவ்விறைமைக் குணங்களையேற்றி அந்தந்தவுயிரையே தந்தம் இறைவனெனப் புகழும். அப்புகழ்களெல்லாம் பொருள் சேராப் புகழ்கள். அங்ஙனம் புகழ்பவர் அறிவிலார். ஒருவனைப் புகழ் விரும்பினால் முதலில் அவனையும் அவனிடமுள்ள குணங்களையும் ஆராய்ந்து கண்டுகொள்ளவேண்டும். பிறகு அக்குணங்களே கொண்டு அவனை புகழ வேண்டும். அவனைத் தெரியாமல் பிறனுக்குரிய குணங்களை அவனிடம் ஆரோபித்துப் புகழ்வது மடமை. இவ்வுண்மை கடைப்பிடிக்கற்பாலது. மெய்யான இறைவனை வணங்குஞ்சமயம் ஒன்றேயுண்டு. மற்றவையெல்லாம் போலியிறைவரை வணங்குஞ் சமயங்களே யென்ற வுண்மையைப் 'பொருள்சேர் புகழ்' என்ற தொடரால் ஆசிரியர் சூசிப்பித்தனர். அழகர் அதைப் பலருமறியப் பகிரங்கப்படுத்தினர். பொய்ச் சமயங்களில்லையானால் அத்தொடர் தோற்றற் கவசியமேயில்லை. அச்சமயங்கள் திருக்குறளிற் பாத்தியதை கொண்டாடலாமா?
அவை இறைமைக் குணங்களை விளங்குவனவாகும். அக்குணங்கள் அந்த வரிசைப்படி தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் என்பன. 'எண்குணத்தான்' (9) என்பது அந்த எட்டு வகைப்பட்ட குணங்களையுடையான் என்னும் பொருளுடையதாய் அக்குணங்களின் தொகுப்புணர்த்தியவாறு. இறைமைக் குணங்களெனப் படுவனவெல்லாம் அவ்வெட்டினுள் அடங்கும். ஒன்பதாவதாக எண்ணத் தகுந்த, கருதத் தகுந்த குணம் வேறில்லை.எச்சமயத்திலுஞ் சொல்லப்பட்டிலது. ஆகலின் எண் குணத்தான் என்பதற்குத் கருதத் தகுந்த குணமுடையான் எனப் பொருள் கூறுவது பயனற்றது. அப்பொருள் கூறுவார் தம் கருத்தை அத்தொடருக்குட் புகுத்துகிறாரென்க. மனிதனது கருத்தைக் கடந்தது இறைமைக்குணம். அந்த எட்டுக் குணங்களுஞ் சைவாகமத்திற் கூறப்பட்டன என்பதை நூலோடியைந்து அழகர் தங்கருத்தாகக் கொண்டார். அவை வைணவாகமத்திற் கூறப்படாமை அவருக்குத் தெரியும். ஆகலின் அவ்வாகமந் தள்ளப்பட்டது. அணிமா முதலியன சித்திகளே. குணங்களல்ல. கடையிலா வறிவு முதலியன ஆருகத நூற் கொள்கை. ஆருகதமோ நாத்திகம். ஆகலின் குறிப்பில் அவையெல்லாம் எடுத்துக் காட்டித் தள்ளப்பட்டன.
உலகில் உயிர்கள் பிறக்கின்றன. பிறப்புச் சுகமுடையதா? துன்பமுடையதா?
'பிறவிப் பெருங்கடல் ----' (10),
'மாணாப் பிறப்பு' (351),
'பிறப்பென்னும் பேதைமை ----' (358),
'வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ---' (362)
என்றது நூல். 'காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், பிறவிப் பெருங்கடலென்றார்'.
'நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினுமுள்ளது துன்பமேயாகலின், மாணாப் பிறப்பென்றார். இதனாற் பிறப்புத் துன்பமென்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சையென்பதூஉங் கூறப்பட்டன'.
'ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்குங் காரண மாதலுடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாக்கிக் கூறினார்' என்பது குறிப்பு.
'வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்ப மாதலறிந்தவன் ஒன்றை வேண்டிற் பிறவாமையை வேண்டும்' என்பது உரை.
இதனால் எவ்வகைப்பட்ட பிறப்புக்கும் அவிச்சையே காரணம், பிறப்புக்களெல்லாந் துன்பமே தருவன என்பது ஆசிரியர் கொள்கை. வினைகளில் தீவினை மாத்திரந்தான் பிறப்பைத் தருமென்பதில்லை. நல்வினையும் பிறப்புத் தருவதே.
'இருள்சே ரிருவினையுஞ் சேரா ----'
என்றது நூல். 'இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினையென்னுமிரண்டு வினையும் உளவாகா' என்பது உரை.
'நல்வினையும் பிறத்தற்கேது ---' என்பது குறிப்பு. ஆகவே இறைவனாயுள்ளவனுக்கு அவிச்சையும் இருவினையுங் காரணமாக வரும் பிறப்பு இருக்கமுடியாதென்பது திண்ணம். ஆனால் கடவுள் பிறக்கலாம், அவர் பிறப்பதற்கு அவிச்சையும், இருவினையுங் காரணமாகா, அவர் சுவேச்சையாற் பிறக்கிறார் என்று கூறி மகிழுஞ் சமயங்களுமுள. அவிச்சையும், இருவினையுங் காரணமாகாத பிறப்பும் உண்டெனத் திருவள்ளுவர் யாண்டுஞ் சொன்னதில்லை. தம் கடவுள் பிறப்பதற்கு அவரது சுவேச்சையே காரணம் எனக் கூறுகிற சமயங்கள் பிறப்பின் காரணத்தில் முரண்பாட்டையேற்றி மக்களுக்குப் பிறப்புப் பற்றிய கவலையும், அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியும் உளவாகாதபடி தடுத்துவிடும்.
மேலும் ஆஸ்திகராயிருக்க விரும்புவாருக்கு ஒரு பொறுப்பான வேலையுண்டு.மெய்யான இறைவனாவான் எவன்? போலியிறைவராவார் எவர்? என்பதைக் கண்டு கொள்வதே அவ்வேலை. காண்டலாவது இதுவென்பதும், போலியிறைவராவார் இவரென்பதும் முன் சொல்லப்பட்டன.அவ்விருவகையாரையும் பிரித்தறிவதற்கு வாயில் ஒன்றேயுண்டு. மெய்யான இறைவன் பிறக்கமாட்டான். போலியிறைவரெல்லாம் பிறப்பர். பிறப்பின்மையும், பிறப்புண்மையுமே அவ்வாயில், சித்தியார் சூத்திரம் 2 செய்யுள் 25ல்
'நால்வகை யோனியுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பனயாவை அவையெல்லாஞ் சீவவர்க்கம். அவ்வாறு பிறத்தலில்லது யாது அது பதிப்பொரு ளென்னு மிது வொன்றே ஏனைச் செயல்களான் வேற்றுமையறிய வாராத வவ்விரண்டற்குந் தம்முள் வேற்றுமையறிய நிற்பதாகலின், ஏனைத் தேவரெல்லாம் அங்ஙனம் பிறந்திறத்தல் கேட்கப்படுதலானும்,'... என்றருளிய சிவஞான முனிவரின் உரையைக் காண்க. 'வேதனைப்படு மிறக்கும் பிறக்கு மேல் வினையுஞ் செய்யும்' என்ற குறைபாடுடைய உயிர்களுள் ஒன்றை இறைவனெனக் கொண்ட மதம் அக்குறைகள் தன் கடவுளுக்கில்லாதது போற் காட்டிப் பிரசார வேலைகள் பல செய்யும். அவையெல்லாம் வெற்றிரைச்சல். மாதாவுதரத்துட் கருவாய்த் தங்கி யோனிசனாக வெளிப்படுதல் என்னும் பிறப்பு உயிர்களுக்கேயுண்டு. இறைவனுக்கும் அ·திருந்தால் அவன் உயிர்களின் பிறவித் துன்பத்தை யொழிப்பதெப்படி? ஓட்டை மரக்கலம் பிறிதோரோட்டை மரக்கலத்தைக் கரையேற்றுமா?
இனிப், பிறவாமையைக் குணமாகவுடைய அம்மெய்யான இறைவன் யார்? திருவள்ளுவர் வேத சிவாகமங்களை இறைவன் வாக்கெனக் கொண்டு விசுவசித்தவர். அவர் கூறும் விடையைக் காணாலாம். வேதம்,
எனக் கூறி வலியுறுத்துகிறது. ஆதிபகவன் என்பது அவ்விறைவனுக்கு உத்தேசம். உத்தேசம் - பெயர். பெயரை முதலிற் கூறாமல் இலக்கணங்காணவும், பரி¨க்ஷ செய்யவுங் கூடாது. அ·து உத்தேசம் என்பதைக் காட்டவே 'ஆதிபகவன் - ஆதிபகவன்' என்று உரை கூறினார் அழகர்.
'சீர் கொளிறை யொன்றுண்டத் தெய்வநீ யென்றொப்பாற்
சோர்விலடை யாற்றெனிந் தேஞ் சோமேசா - வோரி
லகரமுதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு'
என்ற சிவஞான முனிவரர் திருவாக்கு அவ்வுண்மைகளனைத்தையும் விளக்கி நிற்பதறிக.
திருக்குறள் புணர்ச்சி மகிழ்தல் என்னும் 111 -ஆவது அதிகாரத்தில்,
'தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ
றாமரைக் கண்ணா னுலகு' (1103)
என வருகிறது. அதில் செங்கண்மாலுலகம் நிரதிசயவின்பமுடையது என்றாரழகர். அங்ஙனமாயின் தாமரைக் கண்ணனாகிய திருமாலே பரம்பொருளெனக் கொண்டவராதல் வேண்டும் ஆசிரியர். அப்படியா? அன்று. ஏன்? ஊடலுவகை என்னும் 133-ஆவது அதிகாரத்தில் ஆசிரியர்
'புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து' (1323)
என்றார். அதன் குறிப்பில் 'அப்புலவி பின்னே பேரின்பம் பயவா நின்றது' என்று காணப்படுகிறது. பேரின்பமும் நிரதிசயவின்பமும் ஒன்றே. புத்தேர் நாடென்பது எது?
'புத்தேளுலகத்தும் - தேவருலகத்தும்' (213)
என்ற உரையால் தேவருலகமே அதுவாம். இவ்வுலகத்தது சிற்றின்பம். அதை நோக்கத் தேவருலகம் பேரின்பத்தது. அதிற் சிறந்தது தாமரைக் கண்ணானுலகம். அவ்வளவே. அவ்வுலகை முத்தியுலகென்பதும், அக்கண்ணானைப் பரம்பொருளென்பதும் செல்லா. தாமரைக் கண்ணான் என்ற பிரயோகமே அதனை விளக்கும். திருமால் தம் கண்ணொன்றைப் பிடுங்கித் தாமரை பூவாகக் கொண்டு சிவபிரான் திருவடியில் அர்ச்சித்து அப்பிரானிடமிருந்து சக்கரத்தைப் பரிசாகப் பெற்றார். தாமரைக் கண்ணன் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது. அவ்வரலாற்றை,
என்றது வேதம். அங்ஙனம் சிவபெருமானால் அநுக்கிரக்கிக்கப்பட்டவர் திருமால். அடுத்து,
'அடியளந்தான் றாஅயது' (610)
என்று தொடரைக் கவனிக்கலாம்.
'அடியளந்தான் தாயது எல்லாம் - தன்னடியளவானே எல்லாவுலகையுமளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்' என்றது உரை. திருமால் திரிவிக்கிரமவதாரத்தில் உலகைத் தம் பாதத்தால் அளந்தார். இறுதியில் அவ்வவதாரம் சிட்சிக்கப்பட்டது. சிட்சித்தவர் சிவபெருமானே. வேதம் அச்சரிதத்தை.
உயிரென்னுஞ் சொல் தனக்கெனப் பொருளில்லாதது என்கிறது ஒரு சமயம். உயிர் பிரமத்தின் விசேடணம் என்கிறது இன்னொரு சமயம். இறைவன் மனிதவுடலையுண்டாக்கி அதன் மூக்கில் தன் சுவாசத்தை ஊதி உயிரை இடையில் சிருட்டித்தான் என்கிறது மற்றொரு சமயம். இப்படிப் பட்ட சமயங்கள் இன்னும் பல. ஆனால் திருக்குறள்.
'உயிர்களெல்லாம் நித்தமாகலின், மன்னுயிரென்றார்' என்பது குறிப்பு.
'மன்உயிர்க்கு - நிலைபேறுடைய உயிர்கட்கு' என்பது உரை.
'சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முண் மாறாகலின், வினை வயத்தாற் கூடிய தல்லது நட்பில் வென்ப தறிக.'
என்பது குறிப்பு. உயிரைப் பற்றி விபரீத புத்தி கொண்டுள்ள மேற்காட்டிய சமயங்கள் உயிர் நித்தப் பொருளென்கிற திருக்குறளைத் தமக்கும் உகந்ததென்றல் வீண்பேச்சென்க.
இன்னும், உயிர் மனிதனுக்கேயுண்டு, மிருக முதலிய பிற பிராணிகளுக்கில்லை. அவற்றினிடங் காணப்படுவது இயற்கையுணர்ச்சி (Instinct) யே, அவையறந்தால் அப்போதே அவ்வுணர்ச்சியும் நசித்துச் சூனியமாய்ப் போம் எனக் கூறும் சில சமயங்கள். ஆனால்
'தன்னுயிர் நீப்பினும் செய்ற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை' (327)
என்றது நூல். அதனால், ஏனைப் பிராணிகளுக்கும் உயிருண்டு, அவற்றிற்கு அவ்வுயிர் இனியதுமாகும் என்பது தெரிகிறது. பிராணிகளை வதை செய்வதும், வதைக்கப்பட்ட பிணங்களைத் தின்பதுமாகிய பாவங்களைச் செய்யத் தூண்டும் அச்சமயங்கள் திருக்குறளில் உரிமை கொண்டாடலாமா?
மனிதன் ஒருமுறையே பிறப்பான் எனச் சில சமயங் கூறும், திருக்குறளோ,
'பிறவிப் பெருங்கடல்' (10)
'எழுபிறப்புத் தீயவை தீண்டா' (62)
'உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்' (330)
'உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு' (339)
என்றது. 'காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், பிறவிப் பெருங்கடலென்றார்' என்பது குறிப்பு.
எழுபிறப்பும் தீயவை தீண்டா - 'வினை வயத்தாற் பிறக்கும் பிறப்பேழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா' என்பது உரை.
'செயிர் உடம்பிள் செல்லாத் தீவாழ்க்கையவர் - நோக்கலாகா நோயுடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை யுடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின்கண் உயிர்களை அவை நின்ற வுடம்பினின்று நீக்கினவரென்று சொல்லுவார் வினை விளைவுகளையறிந்தோர்' என்பது உரை.
'உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறி மாறி வருகின்றாற்போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறி மாறி வருமென்பது கருத்து' என்பது குறிப்பு. 'உயிருடம்பின்' என்ற திருக்குறள் உரையநுமானமுமாம். உயிர்கள் மாறி மாறிப் பிறக்கும் என்ற திருக்குறளுக்கு உயிர்கள் ஒரு முறை தான் பிறக்கும் என்ற சமயங்கள் உவப்புடையவாமா?
சுவர்க்க நரகம் என வேறுலகங்களில்லை என்கின்றன சில சமயங்கள்.
'புத்தே ளுலகத்தும் ----' (213)
'தேவ ரனையர் கயவ ரவருந்தா
மேவன செய்தொழுக லான்' (1073)
'அண்ணாத்தல் செய்யா தளறு' (255)
என்றது நூல். 'ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒரு தன்மைய ராதலின், புத்தே ளுலகத் தரிதாயிற்று' என்பது குறிப்பு.
அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அ·தியாதனானெனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவருந் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான்' என்பது உரை.
'நெடுங்காலம் நிரயத்து ளழுந்தும்' என்பது குறிப்பு. அவற்றில் சுவர்க்கம் அங்குள்ள தேவர்களின் ஒழுகலாற்றோடு வர்ணிக்கப்படுவது காண்க. இவ்வுலகத்தில்லாத் நீண்ட கொடிய துன்பங்கள் நிறைந்தது நரகம் எனத் தெரிகிறது. அவற்றை மறுக்கும் மதங்கள் அந்நூலைத் தொடலாமா?
'இன்ன தன்மைத்தென ஒருவராலுங் கூறப்படாமையின் அவிச்சையை இருள்' என்றது 5இன் குறிப்பு. 'ஒரு பொருளுங் காட்டா திருவளுருவங்காட்டு மிரு பொருளுங் காட்டாதிது' என்பது திருவருட்பயன். இருள் பொருளைக் காட்டாது, தன்னை காட்டும்; ஆணவமலம் தன்னையுங் காட்டாது என்பது கருத்து. அங்ஙனமாய அவிச்சையை (ஆணவத்தை) இன்ன தன்மைத்தென யாராற் கூற முடியும்? ஒருவராலுமாகாது. 'காமம், வெகுளி' (360) என்றதன் குறிப்பு 'அநாதியாய அவிச்சை' யென்கின்றது. ஆணவம் அநாதியாய தொரு மலமென்பது கொள்ளப்பட்டது. அம் மலம் இல்லையென்ற சமயங்களுக்குத் திருக்குறளின் தொடர்பு ஏன்?
வினை
வினை அல்லது கருமமலம் என்பதொன்றில்லையென்பர் சில சமயிகள். 'இருள்சே ரிவினையும்' (5) என்ற தொடருக்கு 'மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை யென்னு மிரண்டு வினையும்' என்பது உரை. 'அளவின்கண்' (2860) என்றதன் உரைக் குறிப்பில் 'அதற்கு (உயிர்ப் பொருளுக்கு) அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்குற்ற விளைவுகள்' என வருகின்றது. 338 - இன் குறிப்பு முன்னர்க் காட்டப்பட்டது. கருமமலம், உயிர்க்கு அநாதியாய் வருவதென்பது காண்க. அம்மலத்தை யில்லையென்பவர்க்குத் திருக்குறளிலுந் தொடர்பில்லையென்பது.
தத்துவ வுணர்வு, தத்துவ ஞானம், மெய்யுணர்தல் என்பன ஒன்று அ·தாவதென்னை?
'சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு' (27)
என்றது நூல். தத்துவம் இருபத்தைந்து. அவற்றையறிந்தவனே உலகை யறிந்தவன். அவ்விருபத்தைந்தும் பிரகிருதி பிரகிருதியின்பாற்பட்டவை. சாங்கிய நூல் அவ்வளவே சொல்லும். புருடதத்துவமாவது பஞ்ச கஞ்சுகத்தோடு கூடியது. பஞ்ச கஞ்சுகங்களாவன காலம், நியதி, கலை, வித்தை அராகம் என்பன. அவை அசுத்த மாயா காரியங்கள். சுத்தமாயா காரியங்கள் வேறு. சைவ சமயத்தில் தத்துவங்கள் முப்பத்தாறு. அவை மாயேயாம். தோன்றி நின்று மறைவன. அவற்றிற்கு உபாதாநம் மாயை. அது நித்தம். அதனை உடன்படாத சமயிகளுக்குத் திருக்குறள் அயலாகும்.
உயிர் சேதனமாய் அருவாய் நித்தமாயுள்ள பொருள் என்பது முன்காட்டப்பட்டது. 'புருடன் தானொன்றிற் றோன்றாமையானும்' தன்கட்டோன்றுவனவின்மையானும் இரண்டுமல்லன்' என்றது 27- இன் உரைக்குறிப்பு. புருடன் - உயிர், 422 - இன் குறிப்பில் 'அ·து (அறிவு) உயிர்க்குணம்' என்றிருக்கிறது. அதனால் உயிர் குணியென்பது சித்தம். அத்தகைய உயிரைச் சத்துப்போலி, சிதாபாசன் என்பவெல்லாம் திருக்குறளுக்கு மாறானவை.
'பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு' (358)
என்றது நூல். 'பிறப்பு என்னும் பேதமை நீங்க - பிறப்பிறகு முதற் காரண மாய அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது' என்பது உரை. 352- இன் உரைக்குறிப்பில் 'வீடாவது நிரதிசய வின்பமென்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருளென்பதூஉம், கூறப்பட்டன' என வருகிறது. பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெடப் பெறுதலும், நிரதிசய வின்பம் அடையப் பெறுதலுமே உயிர்க்கு முத்தியாகும். உயிர் அருவுடம்பு உருவுடம்பு என்பவற்றிலிருந்து விடுபட வேண்டும். அதன் சேதனத் தன்மை விளங்கும் அதிற் சிவஞானம் பிரகாசிக்கும். அவ்வுயிர் அதனைக் கண்டு கொண்டிருப்பது நிரதிசய 'வின்பத்தாய் நிற்ற' (370 இன் குறிப்பு)லாம். 'அவ்வுயிர்க்கு உடம்பு மிகை' (345) யே 'எற்றைக்கும் எச்சீர் வாய்ந்த காயமும் பகைமையன்றோ' என்றது தணிக்கைப் புராணமும், காயம் - உடம்பு. ஆகவே முத்தியிலும் உயிர்க்குத் தேகமுண்டெனக் கொள்ளுஞ் சமயங்களுக்குத் திருக்குறளின் தொடர்பு ஏன்?
திருக்குறள் வேள்வியைக் கண்டிக்கிறதாவென்பதைப் பார்க்க வேண்டும்.
'விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்' (88)
என்றது நூல். 'விருந்தினரை யோம்பி வேள்விப் பயனை யெய்தும் பொறியிலாதார்' என்பது உரை. அவ்வேள்விக்கு மானுடயாகம் என்று பெயர்.
'அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று' (259)
என்றது நூல். 'அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிதென்பதாம்' என்பது குறிப்பு.
பாவத்தைவிடப் புண்ணியஞ் சிறந்தது என்று சொல்வது அர்த்தமற்றது. ஒரு பாவத்தைவிட இன்னொரு பாவங் கொடியது எனச் சொல்லலாம். புண்ணியங்களுக்குட் பசு புண்ணியத்தைவிடச் சிவபுண்ணியஞ் சிறந்ததெனச் சொல்வது பொருந்தும். இங்கும் வேள்வியும் அறம், கொல்லாமையும் அறம். ஆயினும் முன்னையதைவிடப் பின்னையது மேல். அங்ஙனம் கொள்வதே நியாயம். திருவள்ளுவருக்கும் அதுவே கருத்து. இல்லாவிட்டால் அவ்விரண்டையும் அவர் ஓப்பு நோக்கியாராயமாட்டார். அவர் வேள்வியைப் பாவக் கூட்டத்திற் சேர்த்தாரென்பது மடமை.
'செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி
னான்றாரோ டொப்பர் நிலத்து' (413)
என்றது நூல். 'அவியாகிய வுணவு தேவர்க்கு வேள்வித் தீயிற் கொடுப்பன. அறிவானிறைந்தமையான் ஆன்றா ரென்றும் துன்பமறியாமையாற்றேவரோ டொப்ப ரென்றுங் கூறினார்' என்பது குறிப்பு.
வேள்வியைச் சிறப்பித்தார் திருவள்ளுவர் என்பதை அதனாலுந் தெரிக. வேத வேள்வியை நிந்தனை செய்துழல்பவரைத் திருக்குறள் மதிக்குமோ?
உலகம் அழியாது, நித்தம்: உலகிலுள்ள பொருள்களே அழியும் என்கின்றன சில மதங்கள்,
'ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்' (156)
என்றது நூல். 'பொன்றுந்துணையும் - உலக மழியு மளவும்' என்பது உரை. ; உலகிற் கழிவுண்டென்பது அதனால் தெரிகிறது. உலகம் அழியாதென்ற சமயங்கள் அந்நூலுக்கு விலக்கன்றோ?
புராணங்கள்
'ஐந்தவித்தான்' (25), 'அன்பிலார்' (72), 'கூற்றங் குதித்தலும்' (269), 'மடியிலா' (610), 'ஏந்திய கொள்கையார்'(899) என்ற பாக்களில் முறையே கெளதமர், ததீசி, மார்க்கண்டேயர், திரிவிக்கிரமன், நகுஷன் என்பவரின் சரித்திரங்கள் வருகின்றன. அவையெல்லாம் புராணங்களே. 'திங்களைப் பாம்பு கொண்டற்று' (1146) என்ற புராணப் பகுதியைக் கண் திறந்து நோக்குக. திருக்குறள் முழுவதிலும் இலெளகிகர் சிலரால் இப்போது மதிக்கப்பட்டு வருகிற வரலாற்றுக் கதைகளிலிருந்து ஒன்றேனும் எடுத்தாளப்படவில்லை. அதையுங் கருதுக. அங்ஙனமாகப் புராண நிந்தை கூறுஞ் சமயிகள் திருக்குறளிற் செல்லாமா?
பாரத தேசத்தில் சாதிபேதம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இத்தேசத்தை யாண்ட முந்திய வேற்றரசுகள் அதையழிக்கக் கடும் பிரயாசையெடுத்தன. இன்றைய அரசுக்கும் அப்பிரயாசையுண்டு. சதாசார அனுஷ்டானங்களைப் பரம்பரையாகக் கொண்டு வாழ்ந்த சாதிகள் சில. அங்ஙனம் வாழ மற்றைச் சாதிகள் இடங்கொடுத்தன. போதுமான அளவு சகாயமும் புரிந்தன. அவற்றிடம் அப் பழக்க வழக்கங்கள் இல்லாமற் போனாலும் மதிப்புப் பெற்றிருந்ததிற் குறைவில்லை. சாதி பேத மிகுந்த நாட்டில் வரவரச் சாதித் துவேஷங் கிளம்பலாயிற்று. எல்லாருக்கும் லக்ஷியம் ஒன்றானால் பேதத்தால் துவேஷ முண்டாகாது. லக்ஷியம்பிளந்தது. துவேஷமும் புறப்பட்டது. நல்ல பழக்க வழக்கங்கள் மதிக்கப்படவில்லை. அவற்றையுடைய சாதிகள் அவற்றைக் கைவிடுமளவுக்குப் பரிகசிக்கப் படுகின்றன. அச்சுறுத்தப்படுகின்றன. கலவைகளால் அவ்வொழுக்கங்கள் மறைகின்றனவே யன்றித் தாமில்லாத சாதிகளிற் பரவுவதாகத் தெரியவில்லை. புலாலுணவு கொள்ளாமை நல்ல பழக்கம். புலாலுண்ணாத சாதிகளிலும் இப்போது அவ்வுணவு புகுவது போலிருக்கிறது. பல்லாயிர வருடங்களாகக் காப்பாற்றப்பட்டு வந்த வொழுக்கம் அது. எவ்வளவு நெருக்கடியில் எவ்வளவு சிரமத்தோடு அது பரிபாலிக்கப்பட்டிருக்கும்! எவ்வளவு சிறந்த பாக்கியம் அது! அதனை யறியமாட்டாத, பொறுப்பற்ற சில விருதாக்கள் அச்சாதிகளில் தோன்றின. குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகளாயின அவை. அவை சகவாச தோஷத்தால் 'புலால்மறுத்த'லை விட்டன. 'சாதி வித்தியாசந் தொலைக' என்ற கூச்சலே அதற்குக் காரணம். அதற்குமுன் 'புலாலுணவு தொலைக' என்றன்றோ கூவ வேண்டும். அ·துண்டா? உண்மையில் உலக சுகானுபவத்துக்குச் சாதி வித்தியாசம் வேண்டாம். சாதி வித்தியாசமென்ன, முறை வித்தியாசமும் அநாவசியம். மிருக முதலிய பிற வர்க்கங்களில் அவ்விரண்டுமில்லை. அவையடையுஞ் சுகமும் அதிகம். ஆனால் உலக சுகத்தையுத்தேசித்ததல்ல அவ்விருவகை வித்தியாசங்களும். அதை நினைவிற் கொள்வது நலம். நல்ல பழக்க வழக்கமுள்ள சாதிகளின் இன்றைய நிலையைக் கவனித்தால் கந்தபுராணம், அசுரகாண்டம், தேவரையேவல் கொள்படலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் பட்ட துயரத்தை அவையும் எய்த நேர்ந்திடுமோவென அஞ்சவேண்டியதிருக்கிறது.
சாதிபேதம் வேண்டுமா? வேண்டாமா? அது பற்றிய பேச்சு இங்கில்லை. அதனை வேண்டாமென்பவர் தம் கொள்கைக்கு சாதகமாக அறிஞர் பலரின் வாக்கியங்களையெடுத்துக் காட்டுகின்றனர். மேலை நாட்டார் எழுதியவற்றிலிருந்து அவர் எடுத்துக் காட்டலாம். அக்கொள்கையில் ஊறிப் போன இந்நாட்டவரெழுத்துக்களும் அவருக்கு உதவுக. ஆனால் சாதிவித்தியாசத்தைக் கண்டிக்கத் திருக்குறளிலும் ஆதார மிருக்கிறதாமே, அதைத்தான் யோசிக்க வேண்டும். பிறப்பால் சாதிப்பேதமில்லை. உயர்வு தாழ்வில்லையென்பதைப்
'பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யால்' (972)
என்றமையால் தெரிகவென்கிறாரவர். இச்செய்யுள் 'பெருமை' என்னும் அதிகாரத்தில் வருகிறது. அதற்கேற்ப அழகர் உரை வகுத்தார். 'செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வா' என்ற பகுதிக்கு உரையு முண்டு. குறிப்பு முண்டு, 'சிறப்பொவ்வா' மைக்குக் காரணம் 'செய்தொழில் வேற்றுமை' யென நூலே கூறிற்று. 'பிறப்பொக்கும்' என்பதற்கு நூலிற் காரணமுண்டா? இல்லை, உரையிலுங் குறிப்பிலும் அழகர் சொல்லியுள்ளார். சாதிபேதம் வேண்டாதார் அதையேற்க வேண்டும். ஏற்பாராயின் சாதிபேதம் அவசியம் என்பது அந்நூலுக்குச் சம்மதமென அவர் கொண்டவராயினர். ஏற்க மறுத்தால் அவர் காரணமொன்று கண்டு வெளியிடுக. பிறகு அதனை ஆராயலாம். அவர் ஓருரை கூறத் துணியும் போது நானும் ஒன்று கூறினாலென்ன? அவருக்காக நானும் ஓருரை கூறுகிறேன். எல்லா உயிர்க்கும் - மனிதன், நாய், பன்றி, கழுதை முதலிய சகல உயிர்களுக்கும், பிறப்பு ஒக்கும் - தாய் வயிற்றிலிருந்து வெளியாவதே பிறப்பாதலால், அப்பிறப்புச் சமமாகவேயிருக்கும். செய்தொழில் வேற்றுமையால் - ஆனால் அவை செய்து, செய்கின்ற செய்யுந் தொழிற்பாடுகளின் வேறுபாட்டால் சிறப்பு ஒவ்வா - பெருமை சிறுமையென சிறப்பியல்புகள் சமமாகா என்பது. இவ்வுரையை அவர் சம்மதித்தால் மனிதன் தன் பிறப்பால் உயர்வடைய முடியாது. உலகில் மற்றைச் சீவவர்க்கங்களை விலக்கித் தனக்கேயுரிமை யுண்டெனக் கூற நியாயமுமில்லை.
சாதி பற்றிய உயர்வு தாழ்வுகளைத் திருவள்ளுவர் உடன்பட்டுள்ளரென்பதை இன்னுங் காண்க.
'ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும்' (133)
என்றது நூல். பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்க முடையராக உயர்குலத்தவராவராகலின் குடிமையா மென்றும் உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்திற் றவறத் தாழ்ந்த வருணத்தராவராகலின் இழிந்த பிறப்பாய் விடுமென்றுங் கூறினார். உள்வழிப்படுங் குணத்திலும் இல்வழிப்படுங் குற்றம் பெரிதென்றவாறு' என்பது குறிப்பு. இதில் குடிமை, இழிந்த பிறப்பு என்றவற்றின் வேற்றுமை நயம் புலப்படுத்தப்பட்டது. பிறப்பில் இழிவு உண்டென்பதனால் உயர்வுண்டென்பதும் பெறப்படும்.
'மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு' (409)
என்றது நூல். 'மேற்பிறந்தார் - உயர்ந்த சாதிக்கட் பிறந்தார். கீழ்ப் பிறறந்தும் - தாழ்ந்த சாதிக்கட் பிறந்து வைத்தும்' என்பது உரை.
'உடலோடொழியுஞ் சாதி யுயர்ச்சியினும் உயிரோடு செல்லுங் கல்வியுயர்ச்சி சிறப்புடைத் தென்பதாம்' என்பது குறிப்பு. உயிரோடு செல்லுங் கல்வி யுயர்ச்சி என்பது போல் உடலோடு செல்வது சாதியுயர்ச்சி யென்பது சரியே. ஆயினும் உடல் பற்றிய, சாதியின் உயர்ச்சி தாழ்ச்சிகள் உடலுக்குரியவாய்த் திருக்குறளாற் சம்மதிக்கப்பட்டனதானே.
'விளங்கொடு மக்களனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்' (410)
என்றது அடுத்த பாட்டு. 'விலங்கின் மக்கட் கேற்றமாய் உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினரல்ல ரென்பதாம்' என்பது குறிப்பு. அங்ஙனம் கல்லாதார் பிறப்பும் சுற்றார் பிறப்பும் ஒவ்வா என்றதால் கல்லாதாரை விலங்குக் பிறப்பினரெனச் சொல்லிவிடலாமா? விலங்கைப் போன்று அவரை நடத்தலாமா? நடத்தினால் நடத்துபவரை அவர் சும்மா விடுவாரா? கல்லாதவரைக் கற்றவராக்கி மனிதப் பிறப்பின் உயர்வை அவர் காப்பாற்றிக் கொள்ளும்படி செய்வதே முறை. அப்படியே அந்தந்த வருணத்தாரிடம் தவறுகள் காணப்பட்டால் அவற்றை நீக்கித் தந்தம் வருணத்துக்குரிய மதிப்பை அவரவர் காத்துக் கொள்ளுமாறு செய்யவேண்டும். திருவள்ளுவர் கருத்து அதுவே.
இனிப் 'பார்ப்பான் பிறப்பு' (134), 'அந்தணர்' (543), 'அறுதொழிலார்' (560) என வருகின்றன. அவை வந்துள்ள இடம் பற்றி நடு நிலைப் புத்தியோடு அவற்றை நோக்குக. அவை பார்ப்பனச் சாதிக்குரிய பெயர்களேயென்பது புலப்படும். அச்சாதி ஆண்டுப் போற்றப்பட்டிருப்பதும் உண்மை.
இன்னொரு முக்கிய விஷயம். உத்தமி வயிற்றிற் பிறந்தாரும் விபசாரி பயிற்றிற் பிறந்தாருமுளர். அவ்விருவகைப் பிறப்புக்களும் சமான கெளரவமுடையனவா? உயர்வு இழிவுகள் அவற்றிற் கிடையாவா? கிடையாவென்பவர் உத்தமி வயிற்றுப் பிறப்பையே யிகழ்பவர்ல்லரா? உத்தமிகளையே யிகழ்பவரல்லவா? அல்லது அதனையும் அவரையும் உதாசீனமேனுஞ் செய்பவரல்லவா? கற்பு வரம்பழிந்தவளது வயிற்றுப் பிறப்பைத் திருக்குறள் இகழ்ந்தது. அப்பிறப்புடையார் நல்ல செயல்களில் நாட்டம் வையார். அவர் போன்றார் பல்கிப் பெருகுவது நாட்டின் தரத்தையே கீழ்ப்படுத்திவிடும் என்றும் அது கூறியது.
'நலத்தின்க ணாரின்மை தோன்றி னவவைக்
குலத்தின்க ணையப் படும்' (958)
என்றது அது. ஆகவே சாதி, குலம் பற்றிய உயர்வு தாழ்வுகள் உளவென்பது திருக்குறளுக்கு முழுக்க அங்கீகாரமேயென்க. அதனை மறுக்குஞ் சமயங்கள் அந்நூலுக்கு அருகில் வரத்தானும் தகுதியுடையவாமா?சாதி
பாரத தேசத்தில் சாதிபேதம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இத்தேசத்தை யாண்ட முந்திய வேற்றரசுகள் அதையழிக்கக் கடும் பிரயாசையெடுத்தன. இன்றைய அரசுக்கும் அப்பிரயாசையுண்டு. சதாசார அனுஷ்டானங்களைப் பரம்பரையாகக் கொண்டு வாழ்ந்த சாதிகள் சில. அங்ஙனம் வாழ மற்றைச் சாதிகள் இடங்கொடுத்தன. போதுமான அளவு சகாயமும் புரிந்தன. அவற்றிடம் அப் பழக்க வழக்கங்கள் இல்லாமற் போனாலும் மதிப்புப் பெற்றிருந்ததிற் குறைவில்லை. சாதி பேத மிகுந்த நாட்டில் வரவரச் சாதித் துவேஷங் கிளம்பலாயிற்று. எல்லாருக்கும் லக்ஷியம் ஒன்றானால் பேதத்தால் துவேஷ முண்டாகாது. லக்ஷியம்பிளந்தது. துவேஷமும் புறப்பட்டது. நல்ல பழக்க வழக்கங்கள் மதிக்கப்படவில்லை. அவற்றையுடைய சாதிகள் அவற்றைக் கைவிடுமளவுக்குப் பரிகசிக்கப் படுகின்றன. அச்சுறுத்தப்படுகின்றன. கலவைகளால் அவ்வொழுக்கங்கள் மறைகின்றனவே யன்றித் தாமில்லாத சாதிகளிற் பரவுவதாகத் தெரியவில்லை. புலாலுணவு கொள்ளாமை நல்ல பழக்கம். புலாலுண்ணாத சாதிகளிலும் இப்போது அவ்வுணவு புகுவது போலிருக்கிறது. பல்லாயிர வருடங்களாகக் காப்பாற்றப்பட்டு வந்த வொழுக்கம் அது. எவ்வளவு நெருக்கடியில் எவ்வளவு சிரமத்தோடு அது பரிபாலிக்கப்பட்டிருக்கும்! எவ்வளவு சிறந்த பாக்கியம் அது! அதனை யறியமாட்டாத, பொறுப்பற்ற சில விருதாக்கள் அச்சாதிகளில் தோன்றின. குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகளாயின அவை. அவை சகவாச தோஷத்தால் 'புலால்மறுத்த'லை விட்டன. 'சாதி வித்தியாசந் தொலைக' என்ற கூச்சலே அதற்குக் காரணம். அதற்குமுன் 'புலாலுணவு தொலைக' என்றன்றோ கூவ வேண்டும். அ·துண்டா? உண்மையில் உலக சுகானுபவத்துக்குச் சாதி வித்தியாசம் வேண்டாம். சாதி வித்தியாசமென்ன, முறை வித்தியாசமும் அநாவசியம். மிருக முதலிய பிற வர்க்கங்களில் அவ்விரண்டுமில்லை. அவையடையுஞ் சுகமும் அதிகம். ஆனால் உலக சுகத்தையுத்தேசித்ததல்ல அவ்விருவகை வித்தியாசங்களும். அதை நினைவிற் கொள்வது நலம். நல்ல பழக்க வழக்கமுள்ள சாதிகளின் இன்றைய நிலையைக் கவனித்தால் கந்தபுராணம், அசுரகாண்டம், தேவரையேவல் கொள்படலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் பட்ட துயரத்தை அவையும் எய்த நேர்ந்திடுமோவென அஞ்சவேண்டியதிருக்கிறது.
சாதிபேதம் வேண்டுமா? வேண்டாமா? அது பற்றிய பேச்சு இங்கில்லை. அதனை வேண்டாமென்பவர் தம் கொள்கைக்கு சாதகமாக அறிஞர் பலரின் வாக்கியங்களையெடுத்துக் காட்டுகின்றனர். மேலை நாட்டார் எழுதியவற்றிலிருந்து அவர் எடுத்துக் காட்டலாம். அக்கொள்கையில் ஊறிப் போன இந்நாட்டவரெழுத்துக்களும் அவருக்கு உதவுக. ஆனால் சாதிவித்தியாசத்தைக் கண்டிக்கத் திருக்குறளிலும் ஆதார மிருக்கிறதாமே, அதைத்தான் யோசிக்க வேண்டும். பிறப்பால் சாதிப்பேதமில்லை. உயர்வு தாழ்வில்லையென்பதைப்
'பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யால்' (972)
என்றமையால் தெரிகவென்கிறாரவர். இச்செய்யுள் 'பெருமை' என்னும் அதிகாரத்தில் வருகிறது. அதற்கேற்ப அழகர் உரை வகுத்தார். 'செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வா' என்ற பகுதிக்கு உரையு முண்டு. குறிப்பு முண்டு, 'சிறப்பொவ்வா' மைக்குக் காரணம் 'செய்தொழில் வேற்றுமை' யென நூலே கூறிற்று. 'பிறப்பொக்கும்' என்பதற்கு நூலிற் காரணமுண்டா? இல்லை, உரையிலுங் குறிப்பிலும் அழகர் சொல்லியுள்ளார். சாதிபேதம் வேண்டாதார் அதையேற்க வேண்டும். ஏற்பாராயின் சாதிபேதம் அவசியம் என்பது அந்நூலுக்குச் சம்மதமென அவர் கொண்டவராயினர். ஏற்க மறுத்தால் அவர் காரணமொன்று கண்டு வெளியிடுக. பிறகு அதனை ஆராயலாம். அவர் ஓருரை கூறத் துணியும் போது நானும் ஒன்று கூறினாலென்ன? அவருக்காக நானும் ஓருரை கூறுகிறேன். எல்லா உயிர்க்கும் - மனிதன், நாய், பன்றி, கழுதை முதலிய சகல உயிர்களுக்கும், பிறப்பு ஒக்கும் - தாய் வயிற்றிலிருந்து வெளியாவதே பிறப்பாதலால், அப்பிறப்புச் சமமாகவேயிருக்கும். செய்தொழில் வேற்றுமையால் - ஆனால் அவை செய்து, செய்கின்ற செய்யுந் தொழிற்பாடுகளின் வேறுபாட்டால் சிறப்பு ஒவ்வா - பெருமை சிறுமையென சிறப்பியல்புகள் சமமாகா என்பது. இவ்வுரையை அவர் சம்மதித்தால் மனிதன் தன் பிறப்பால் உயர்வடைய முடியாது. உலகில் மற்றைச் சீவவர்க்கங்களை விலக்கித் தனக்கேயுரிமை யுண்டெனக் கூற நியாயமுமில்லை.
சாதி பற்றிய உயர்வு தாழ்வுகளைத் திருவள்ளுவர் உடன்பட்டுள்ளரென்பதை இன்னுங் காண்க.
'ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும்' (133)
என்றது நூல். பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்க முடையராக உயர்குலத்தவராவராகலின் குடிமையா மென்றும் உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்திற் றவறத் தாழ்ந்த வருணத்தராவராகலின் இழிந்த பிறப்பாய் விடுமென்றுங் கூறினார். உள்வழிப்படுங் குணத்திலும் இல்வழிப்படுங் குற்றம் பெரிதென்றவாறு' என்பது குறிப்பு. இதில் குடிமை, இழிந்த பிறப்பு என்றவற்றின் வேற்றுமை நயம் புலப்படுத்தப்பட்டது. பிறப்பில் இழிவு உண்டென்பதனால் உயர்வுண்டென்பதும் பெறப்படும்.
'மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு' (409)
என்றது நூல். 'மேற்பிறந்தார் - உயர்ந்த சாதிக்கட் பிறந்தார். கீழ்ப் பிறறந்தும் - தாழ்ந்த சாதிக்கட் பிறந்து வைத்தும்' என்பது உரை.
'உடலோடொழியுஞ் சாதி யுயர்ச்சியினும் உயிரோடு செல்லுங் கல்வியுயர்ச்சி சிறப்புடைத் தென்பதாம்' என்பது குறிப்பு. உயிரோடு செல்லுங் கல்வி யுயர்ச்சி என்பது போல் உடலோடு செல்வது சாதியுயர்ச்சி யென்பது சரியே. ஆயினும் உடல் பற்றிய, சாதியின் உயர்ச்சி தாழ்ச்சிகள் உடலுக்குரியவாய்த் திருக்குறளாற் சம்மதிக்கப்பட்டனதானே.
'விளங்கொடு மக்களனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்' (410)
என்றது அடுத்த பாட்டு. 'விலங்கின் மக்கட் கேற்றமாய் உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினரல்ல ரென்பதாம்' என்பது குறிப்பு. அங்ஙனம் கல்லாதார் பிறப்பும் சுற்றார் பிறப்பும் ஒவ்வா என்றதால் கல்லாதாரை விலங்குக் பிறப்பினரெனச் சொல்லிவிடலாமா? விலங்கைப் போன்று அவரை நடத்தலாமா? நடத்தினால் நடத்துபவரை அவர் சும்மா விடுவாரா? கல்லாதவரைக் கற்றவராக்கி மனிதப் பிறப்பின் உயர்வை அவர் காப்பாற்றிக் கொள்ளும்படி செய்வதே முறை. அப்படியே அந்தந்த வருணத்தாரிடம் தவறுகள் காணப்பட்டால் அவற்றை நீக்கித் தந்தம் வருணத்துக்குரிய மதிப்பை அவரவர் காத்துக் கொள்ளுமாறு செய்யவேண்டும். திருவள்ளுவர் கருத்து அதுவே.
இனிப் 'பார்ப்பான் பிறப்பு' (134), 'அந்தணர்' (543), 'அறுதொழிலார்' (560) என வருகின்றன. அவை வந்துள்ள இடம் பற்றி நடு நிலைப் புத்தியோடு அவற்றை நோக்குக. அவை பார்ப்பனச் சாதிக்குரிய பெயர்களேயென்பது புலப்படும். அச்சாதி ஆண்டுப் போற்றப்பட்டிருப்பதும் உண்மை.
இன்னொரு முக்கிய விஷயம். உத்தமி வயிற்றிற் பிறந்தாரும் விபசாரி பயிற்றிற் பிறந்தாருமுளர். அவ்விருவகைப் பிறப்புக்களும் சமான கெளரவமுடையனவா? உயர்வு இழிவுகள் அவற்றிற் கிடையாவா? கிடையாவென்பவர் உத்தமி வயிற்றுப் பிறப்பையே யிகழ்பவர்ல்லரா? உத்தமிகளையே யிகழ்பவரல்லவா? அல்லது அதனையும் அவரையும் உதாசீனமேனுஞ் செய்பவரல்லவா? கற்பு வரம்பழிந்தவளது வயிற்றுப் பிறப்பைத் திருக்குறள் இகழ்ந்தது. அப்பிறப்புடையார் நல்ல செயல்களில் நாட்டம் வையார். அவர் போன்றார் பல்கிப் பெருகுவது நாட்டின் தரத்தையே கீழ்ப்படுத்திவிடும் என்றும் அது கூறியது.
'நலத்தின்க ணாரின்மை தோன்றி னவவைக்
குலத்தின்க ணையப் படும்' (958)
என்றது அது. ஆகவே சாதி, குலம் பற்றிய உயர்வு தாழ்வுகள் உளவென்பது திருக்குறளுக்கு முழுக்க அங்கீகாரமேயென்க. அதனை மறுக்குஞ் சமயங்கள் அந்நூலுக்கு அருகில் வரத்தானும் தகுதியுடையவாமா?
இப்படியே எழுதிக் கொண்டு போகலாம். 'ஒரு பானைச் சோற்றுக்குப் ஒரு சோறு பதம்' என்றபடி இவ்வளவில் இதனை நிறுத்துகிறேன். இதுவரை இங்குச் சொல்லப்பட்டதென்னை? மெய்யான சமயமாயிருந்து வருவது ஒன்றேயொன்றுதான். அது சித்தாந்த சைவமே.திருக்குறள் அச்சமயத்தையே அதன் சநாதன வுண்மை கெடாதபடி தன்பாற் கொண்டு போற்றுவது, அதனால் அச்சமயத்துக்கே உரியநூல், மற்றைச் சமயங்களெல்லாம் போலியே என்பதாம்.திருக்குறள் சைவ சமய நூலேயென முன்னும் பலர் பேசியிருக்கின்றனர். எழுதியுமிருக்கின்றனர். ஆயினுமென்? அக்குறள் தமக்கும் பொதுவெனச் சொல்லிக்கொண்டு தம் ஆபாசக் கடையை விரிப்பதற்கு அந்நூலைப் பயன்படுத்திக் கொள்பவரும் இல்லாமற் போகவில்லை. என் செய்வது? அவருட் பலர் திருக்குறளாற் கடியப்பட்ட ஒழுகலாறுகளைத் தம் கொள்கைகளாகவுடையவர்.
'காட்சியே அளவை யாவதென்றும், நிலம், நீர், தீ, வளி யெனப் பூதம் நான்கே யென்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தாற் றோன்றிப் பிரிவான் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட் களிப்பு போல வெளிப்பட்டழியு மென்றும், இறந்தவுயிர் பின் பிறவாதென்றும், இன்பமும், பொருளும் ஒருவனாற் செய்யப்படுவன வென்றுஞ் சொல்லும் உலோகாயத முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து அவற்றிற்கேற்ப ஒழுகு' (281) வாரும்.
'மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளுமில்லையெனவும், மற்றுமித்தன்மையவுஞ் சொல்லும் மயக்கநூல் வாக்குகளை மெய்ந்நூல் வழக்கெனத் துணி' (351) வாருமாயிருப்பா ரவர். அவர் திருக்குறளையும் அப்படிப்பட்ட தொரு நூலென உலகிற்குக் காட்டவே அதனைப் பற்றிக் கொண்டு திரிகின்றனர். நாடு கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதென அரசியலார் பலரே இன்றுங் கூறி வருந்துவது பத்திரிகைகளிற் பிரசித்தம். அதற்கேற்பத் தொன்னூல்களையுஞ் சிதைத்துத் திரித்துப் பொருள் கூறி யலைந்தால் அவை இன்றையவுலகைக் கரையேற்றுமா?
போலிச் சமயங்களுக்கும் தம் கொள்கைகளுட் சில பலவற்றிற்கு அந்நூலிலும் பிரமாண வாக்கியங்கள் அகப்படக்கூடும். அவை அவற்றையெடுத்துக் காட்டலாம். 'அந்நிய நூலின் விதியவிரோதமே லுன்னேல் பழுதென் றுளத்து' என்றது சைவ சமய நெறி, அவ்விதிபற்றியது அவ்வெடுத்துக் காட்டு.
பலவூர்களிலும், பாடசாலை முதலிய பலவிடங்களில் திருவள்ளுவரின் பெயராலும், திருக்குறளின் பெயராலும் கழகங்களும், படிப்பகங்களும், நூல் நிலையங்களும் மலிந்துள்ளன. சைவ மக்கள் அது பற்றி மகிழ வழியில்லை. ஏன்? அங்குச் சைவ சமய சேவைக்கு இடங் கிடைப்பது வெகு சிரமம். திருவள்ளுவ நாயனார் திருநீறுங் கண்டிகையும் அணிந்திருப்பவராகப் பெரிய படங்கள் எழுதிப் பல பொது நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தது ஒரு காலம். இப்போது அச் சின்னங்கள் அழிக்கப்பட்டுப் போன படங்களே அக்கழக மாதியவற்றில் சாத்திவைக்கப்பட்டும் தொங்கவிடப்பட்டுமிருக்கின்ற
காடுகளில் மான் முயல் முதலிய் ஏழைப்பிராணிகள் பல திரிகின்றன. அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்புடையார் அங்கு யாருமிலர். அவற்றை அன்பாலுரிமைகொண்டு பாலிருப்பா ரிருந்தாலும் அவற்றிற்கு அவ்வுணர்ச்சியுங் கிடையாது. நின்றவரை நெடுஞ் சுவர் விழுந்தபிறகு குட்டிச்சுவர் என்ற முதுமொழிக்கேற்ப அவை வாழ்ந்து வருகின்றன. அதனால் அவற்றுட் சில சிங்கங்களுக்கு இரை, சில புலிகளுக்கிரை, சில வேடர்களுக்கிரை, சில பிடிபட்டுக் கூண்டுச் சிறைகளிற் கிடக்கின்றன, சில பிடித்தவரது குற்றேவல்களைச் செய்து வயிறு வளர்க்கின்றன.அதை நினைத்துப் பார்க்க. சைவ சமூகத்தின் இன்றைய நிலையையும் எண்ணுக. அச் சமூகத்தவருட் சிலரை இசுலாமியர் கொண்டு போகின்றனர், சிலரைக் கிறிஸ்தவர் கொண்டு போகின்றனர், சிலரைச் சமணர், பெளத்தர் தட்டிக்கொண்டு போகின்றனர், சிலர் கறுப்புச் சட்டைக்குட் புகுத்தப்படுகின்றனர், சிலரை இந்துக்கள், கலவை சமயிகள் அடித்துக் கொண்டு போகின்றனர், சிலரைச் சில தனித்தமிழ் வெறியர் தமிழ்ச் சமயம் அல்லது தமிழர் சமயம் என்றொரு புதுமுக சினிமா நக்ஷத்திரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டு போகின்றனர்.ஆகச் சைவ சமூகம் தன் சமயம் இன்னதென்றே தெரியாமல் தட்டுண்டு தடுமாறிச் சைவ சமயத்தின் விரோதிகளின் மடியில் வீழ்ந்து உறங்கிவிடுகின்றனர். சைவ மக்களுக்கு அது பெருமையா? இலாபமா? வாழ்வா?
சைவ சமயப் பெருமக்களே, நாடு சுதந்திரம் பெற்றது. நீங்களும் இந்நாட்டு மக்களே. உங்களுக்கென உயிர்நிலை இங்கொன்றுமில்லையா? உங்களுக்கெனச் சமயம், பிரமாண சாத்திரம், ஆசாரியர், சின்னங்கள், ஆதீனங்கள், கோயில்கள், வழிபடுமுறை, ஆசார அனுட்டான வகைகள் எல்லாப் பாக்கியமுண்டு. அவற்றை நீங்களே அறிந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.அப்படியில்லாத நிலையில் இப்போது பிறர் கைவசப்பட்டுத் திருக்குறள் படுவது பாருங்கள். அதனாசிரியர் அசைவராக விளம்பரஞ் செய்யப்படுவது பாருங்கள். உங்களுக்காக வேறு யாருங் கைகொடுக்கமாட்டார். மற்றைச் சமயத்தார் உங்களிடம் வருவார், திருக்குறளைக் காட்டுவார், சமய சமரசம் பேசுவார். பணம் முதலிய சகாயங்களை உங்களிடமிருந்து பெற்றுப்போவார். அங்குப் போய்த் தம் சமயங்களின், கொள்கைகளின் வளர்ச்சிக்கே அவற்றைப் பயன்படுத்துவார்.உங்களில் இரக்கமும் செல்வமுடையார் பலரிருப்பது தெரிந்ததே, யார் வந்தாலும் அவருக்கு நீங்கள் உதவி செய்யலாம். அதைத் தடுப்பாரிலர். ஆனால் அவரது சமயப் பிரசாரத்துக்கு மாத்திரம் நீங்கள் உதவுவது சரியன்று, சரியன்று. உதவினால் அது உங்கள் கண்ணான சைவ சமயத்துக்குத் துரோகஞ் செய்வதாய் முடியும்.'பழைய வைதிக சைவம் பரக்கவே' என்றருளினார் உமாபதி சிவனார். அதைக் கருத்திற் கொண்டு ஒருமுகப்படுங்கள், ஒதுங்காதீர்கள், பதுங்காதீர்கள், பராக்காக இராதீர்கள். மறைந்து கிடக்கும் ஆண்மையையும், அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்துங்கள். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் சைவ சபை, சைவ சித்தாந்த சபை, சித்தாந்த சைவ சபையெனச் சமயப் பெயர்களாலேயே சபைகள் வைத்துச் சேவை புரியுங்கள். சிவ பரத்துவம், சைவாசிரியன்மார் பெருமை, சைவ சாத்திரங்களின் நுண்பொருள், சைவ ஆசார அனுட்டானங்களின் இன்றியமையாமை தமிழ் வடமொழிப் பயிற்சி, சிவங் கலந்த இன்னிசை, இலெளகிகத்தில் உங்கள் சமூகத்தின் முன்னேற்றம் முதலிய அனைத்தும் எடுத்துப் பேசப்படுவதற்கு அங்குத்தான் இடமுண்டு. சமய வரம்பு அழிந்தால் சமயமே அழிந்துபோம். அவ்வழிவு உங்கள் சமயதிற்றான் தலை காட்டுகிறது. அதற்கு அன்னிய சமயத்தா ரளவுக்கு உங்களிலும் பலர் காரணமாயிருந்து வருகிறார்கள். அவரிடமிருந்து சைவ சமூகம் விடுபட வேண்டும். அதனைச் செய்தற்கு நீங்கள் துணிந்து முன்னுக்கு வருவீர்களாக. ஸ்ரீபார்வதி சமேத ஸ்ரீபரசிவனார் உங்களுக்குத் துணை புரிவாரென்பது சத்தியம்.