New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே
Permalink  
 


சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே

01.jpg 18.jpg 19.jpg19a.jpg

 



-- Edited by Admin on Sunday 25th of August 2019 07:35:52 PM



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

20.jpg 20a.jpg

21.jpg 21a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

22.jpg 22a.jpg

23.jpg23a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

24.jpg 24a.jpg

25.jpg25a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

26.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

"ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்,

ஈதல், ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்

அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி" - பதிற்று : 24 : 6-8.

 

 21ஆம் பாட்டின் முதல் இருவரிகள் அரசர்களின் நல்லாட்சிக்கு, ஐம்பெரும் துணைகளாக, சொல்இலக்கணம் பொருள்இலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய ஐந்திணைக் குறிக்கின்றன்.

"சொல், பெயர், நாட்டப், கேள்வி நெஞ்சம் என்று ஐந்து" - பதிற்று : 21 : 1 - 2.

சேர அரசர்கள், ஆண்டாண்டு காலமாக நிலைபேறு கொண்டிருந்த பழம்பெரும் மரபுகளை உடைத்து உட்புகுவதற்கு வேண்டுமளவு, ஆரிய மயமாக்கப்பட்டு விட்டனர். ஆனால், அதே நிலையில், ஐம்பெரும்துணைகள், சமஸ்கிருத்தின் தனித்ததமிழ் மொழிபெயர்ப்புச் சொற் களாலேயே அழைக்கப்பட்டுள்ளன. அவற்றுள்ளும், "நாட்டம்" "கேள்வி" ஆகிய இருசொற்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன என்பதை நோக்க மொழியாட்சி நிலையில், பழைமை போற்றும் உறுதிப்பாடு இன்னமும் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தது என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. அக்காலகட்டம், ஒன்றிலிருந்து ஒன்றிற்கு நிலைபெயரும் ஒன்றாம் என்பதைக் காட்டும் வகையில், அரசர்களின் உள்ளங்களிலிருந்து பண்டைமரபுகள் மெல்ல மெல்லப் பிடிப்பிழந்து போகப் பிராமணர்களின் போதனைகள் வலுவாக இடம் பெறலாயின. அரசின் ஒழுக்க நெறிகளைக் காக்கும் காவலர்களாகப் பிராமணர்கள் உயர்வு பெற்று விட்டனர் என்பது, "மறை ஒதுதல், வேள்விவேட்டல், அவை இரண்டையும் பிறரைச் செய்வித்தல், வறியார்க்கு ஈதல், பிறர் தமக்குக் கொடுப்பதை ஏற்றல் என்ற ஆறு தொழில்களையும் செய்து ஒழுகும், எக்காலமும் அறநூற் பயனையே விரும்பும் அந்தணர்களை வழிப்பட்டு ஒழுகி” என அரசர்கள் புகழ்ப் படும் அப்பாடற் பகுதியால் உறுதி செய்யப்பட்டுவிட்டது : "ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி" - பதிற்று : 24 : 6-8.

 

22 கேள்விகவ் (சுருதிகள்) கொண்ட இசைப்பாங்கு என்று. அறிஞர்கள் விளக்கம் கண்டுள்ளனர். இந்த வகையில் மாங்குடி மருதன் இசையில் சிறந்து விளங்கினார் என்பது பெறப்படுகிறது' என்றும்; “இந்த மாங்குடி மருதனார் நாம் முன்பு குறிப்பிட்ட தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைச் சிறப்பித்துப் பாடு கையில் பெரியகற்று இசை விளக்கி’ என்றும் குறிப்பிட் டுள்ளார். பாண்டிய அரசன் இந்தப் புலவரை இசையில் வல்லவர் என்று குறிப்பிட்டிருப்பதையும், இந்தப் புலவர்' பாண்டிய அரசனை இசை விளங்கும்படி செய்தான் என்று குறிப்பிட்டிருப்பதையும் எண்ணிப் பார்க்கும்போது, இசைத் தமிழ் வளர்க்கப்பட்டதைத் தெளிவாக உணர முடி, கிறது. இந்த வகையில் பாண்டியனது சங்கத்தில் இசைத் தமிழு வளர்க்கப்பட்டது. ಕಲ್ಲ! நாம் கொள்ளலாம்' என வும் தம் முடிவுகளை அறிலித்துள்ளார். - - - -

கேள்வி என்ற சொல், தன்னளவில் இசை எனும் பொருள் தருமா? இதற்கு விளக்கம் காண, கேள்வி என்ற சொல் இடம் பெற்றுள்ள இலக்கியத் தொடர்கள் சிலவற். றைக் காண்போம். . . . -

1. ஆறு எழுத்து அடுக்கிய அருமறைக் கேள்வி" 2. வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்

கேள்வி போகிய நீள்விசித் தொடையன்'10 * 3. 'அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி ,

. . . . . '. - நரம்பின் பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்வி'ய - 4. புரி அடங்கு நரம்பின் - தொடையமை கேள்வி இடவயின் தழிஇ

5. கேள்வி அந்தண்ர்". 6. சொல், பெயர். நாட்டம், கேள்வி, நெஞ்சம்

ஐந்துடன் போற்றி" (என்று



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சங்கத் தமிழில் சனாதன தர்மம்

LORD INDIRA

தமிழன் என்பவன் தனி இனத்தவன், அவனுக்கும் பாரத சமுதாயத்தின் அடிநாதமாகிய வேத நாகரிகத்துக்கும் தொடர்பில்லை என்ற புனைச் சுருட்டு, திராவிட இயக்கங்களால் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், தமிழன் வேத நாகரிகத்திலிருந்து வேறுபட்ட தனி இனத்தான் அல்லன், மாறாக அதன் தனித்துவம் வாய்ந்த சமூகத்தினன்.

வேதம் என்பதற்கு வேர்ச் சொல்லான வித்தை (அறிவு), வித்து (விதை) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து விளைந்தது. பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குப் பேரறிவுதான் வித்து (விதை). அதைப் பற்றி மொழிவதே வேதம். இதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், ஆராய்ந்து அறியத் தக்கவை. உலகின் அரிய பல விஷயங்கள், அதில் நுட்பமாகப் புதைந்துள்ளன. ஆகையால்தான் வேதத்துக்குத் தமிழில் மறை என்று சிறப்பான மறு பெயரும் உண்டு. ஏதேனும் ஒரு பொருளை அல்லது விஷயத்தை வேண்டி, கடவுளுக்கு வேண்டுதலோடு செய்வதுதான் யாகம்.

 

உதாரணத்துக்கு பிள்ளைப்பேறு வேண்டுகின்ற புத்திர காமேஷ்டி யாகம், அரசனின் வெற்றியை வேண்டும் ராஜசூய யாகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறு வேண்டி விழைந்து செய்யும் யாகத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல்தான் வேள்வி.

இந்த யாகத்தீயில் பொருட்களை சமர்ப்பிப்பதற்குப் பெயர் ஆஹூதி. தமிழில் சொன்னால், ஆகுதி. இறைவா இது உனக்கு ஆகட்டும் என்று கூறி படைப்பதுதான் ஆகுதி என்பது. இந்த யாகத் தீயில் இடப்படும் பொருட்களுக்குப் பெயர் அவிஷ் அல்லது அவிர்பாகம். யாகத்துக்குப் பிறகு இந்த அவிர்பாகம் (அவிப்பொருள்) தான் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. தீயில் இடப்படும் பொருள் அவிந்துதானே போகும். அவ்வாறு அவிவதால்தான் அதற்கு அவி என்று பெயர்.

இவ்வளவு ஏன்? அக்னியே தூய தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதுதான். அதனை அறிந்து கொள்ள, முதலில் இதனைப் பார்ப்போம். தமிழில் ஃ என்ற சொல்லை ஆயுத எழுத்து என்பர். ஆனால் உண்மையில் அதன் பெயர் ஆய்த எழுத்து. பழந்தமிழ் இலக்கணங்களில் ஆய்த எழுத்து என்றே குறிக்கப் பெறுகிறது.

SUN ONE

ஆய்தம் என்றால் மூன்று புள்ளிகள் கொண்ட ஓர் எழுத்து என்று பொருள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த கும்முட்டி அடுப்பைப் பார்த்தால் தெரியும். மேலே முக்கோணமாக மூன்று உருண்டைகள் ஃ போல் இருக்கும். அக் காலத்திலும் சரி, இப்போதும் சரி, யாகத்துக்கு இதுபோன்ற ஃ வடிவில் யாக குண்டம் அமைப்பதுதான் சிறப்பானது. பேச்சு வழக்கில் ஃ என்ற எழுத்தை அக் என்று கூறுகிறோம். இந்த அக் வடிவ குண்டத்துக்குளே  உருவாவது, இருப்பது என்ற பொருளில்தான் அக்+உள்ளி, அக்குணி என்றாகி, அதுவே அக்னி ஆனது. (அக் உள்ளி எப்படி அக்குணி ஆனது எனில், உள்ளது என்பது உண்டு என்று ஆனதைப் போல என அறிக.)

பகுத்தறிவு இல்லாதவர்களால் ஆரியக் கடவுள் என்று கூறப்படுகிற இந்திரன், உண்மையில் தமிழ்க் கடவுள்தான். இந்து என்றால் திங்கள் அதாவது சந்திரன் என்று பொருள். இதன் நிறம் வெண்மை. இதன் தன்மை குளிர்ச்சி. இதுபோல் குளிர்ந்த தன்மையோடு விளங்குகின்ற தண்ணீருக்கு நிறம் இல்லை என்று கூறப்படுகின்ற போதிலும், அது வெள்ளை நிறம் கொண்டதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் தண்ணீருக்கு வெள்ளை நிறம் கொண்டது என்னும் பொருள் கொண்ட வெள்ளம் (வெள்+அம்) என்ற மற்றொரு பெயரும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தைக் கொண்டு செய்வது வேளாண்மை (விவசாயம்).

பழந்தமிழர்களின் ஐந்திணைகளில் வேளாண்மை நடைபெறுகின்ற மருத நிலத்தின் தெய்வம் இந்திரன். ஏன்? வெள்ளத்துக்கு (தண்ணீருக்கு) காரணமான மழைக்கு அவன்தான் தலைவன். அவன் நிறமும் திங்களைப் போன்ற வெண்மை. அவன் போருக்கும், காதலுக்கும் பெயர் பெற்றவன். தமிழர்களின் நாகரிகமும் போரும் (புறம்), காதலும் (அகம்) தானே. ஆகையால்தான் வேந்தன் எனப்படும் இந்திரன், தமிழர்களில் பெருவாரியான வேளாண்மை செய்வோரின் தெய்வமாக மதிக்கப்பட்டான். இவனது கோவில் இந்திரக் கோட்டம் என்று அழைக்கப்பட்டதுடன், வசந்த காலத்தில் இந்திர விழாவும் அக்காலத்தில் அமர்க்களமாக நடத்தப்பட்டது. இதற்கான சான்றுகளை, சிலப்பதிகாரத்தில் இந்திரன் விழவு ஊரெடுத்த காதையைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.

இதேபோல் யாகங்களில் தீக்கு அடுத்தபடியாக போற்றப்படும் புனித நீருக்குரிய வருணனும் தமிழ்க் கடவுள்தான். இவன் நெய்தல் நிலத்தின் கடவுள். நெய்தல் என்பது கடல் நீர் சூழ்ந்த நிலப் பகுதி. மருத நிலமானது மழை நீரை நம்பியிருப்பதால், மழைப்பொழிவுக்குக் காரணமாகப் போற்றப்படும் இந்திரன் அதன் தெய்வம் ஆனான். இதேபோல் கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்துக்கு, கடல் நீரின் அதிபதியான வருணன் தெய்வம் ஆனான். வாரி என்ற தமிழ்ச் சொல்லுக்கு பரந்து கிடக்கும் நீர், பல துளிகள் சேர்ந்தது என்று பொருள். நீரை மொண்டு (முகந்து) எடுப்பதற்கு வாரி எடுத்தல் என்று பெயர். வாரி என்பது தமிழின் கிளை மொழியான தெலுங்கில் ஆறு, குளத்தைக் குறிக்கிறது. இந்த வாரி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதுதான் வருணன் என்ற பெயர்.

இவ்வாறு பழந்தமிழோடு வேதம் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆராய்ந்து பார்த்தால் வேத கலாசாரத்துக்கு வேறாக அன்றி, வேராக இருப்பது தமிழ்தான். பழந்தமிழர்கள் தீயோம்பும் (வேள்வி நடத்தும்) வேத கலாசாரத்தைப் பின்பற்றியும் ஆதரித்தும் வந்துள்ளனர். இதற்குப் பழந்தமிழ் மன்னர்களான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிப் பாண்டியனும், ராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளியுமே சான்று.

இவையெல்லாம் கற்பனைகள் என்றும், புளுகுகள் என்றும் பகுத்தறிந்து பார்க்காத பகல்வேஷத் தமிழர் அமைப்புகள் சில கூறக்கூடும். அவர்களுக்காகவும், தெய்வீகத் தமிழின் சிறப்பையும் தொன்மையையும் உண்மையிலேயே அறியாத பாமரத் தமிழர்களுக்காகவும் சங்க இலக்கியங்களில் காணப் பெறும் வேத நாகரிகச் சான்றுகளை இங்கே எடுத்துரைக்கிறேன்.

LORD MURUGAN

பத்துப்பாட்டில் முதல் பாட்டு, முருகப் பெருமான் மீது நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை. முருகனுக்குத் தமிழ்க் கடவுள் என்றே சிறப்புப் பெயர் உண்டு. அப்படிப்பட்ட முருகனைப் போற்றும் திருமுருகாற்றுப் படையில், ஆறுமுகப் பெருமானின் ஒரு முகம் என்ன செய்வதாக நக்கீரர் கூறுகிறார் தெரியுமா?

ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்குமே என்கிறார். அதாவது மந்திர விதிமுறைகளில் பிசகாது, மரபுப் படி அந்தணர் நடத்துகின்ற வேள்வியை சுப்ரமணியக் கடவுளின் ஒரு முகம் விரும்பி ஏற்கிறதாம்.

இந்திரனைப் பற்றி திருமுருகாற்றுப்படை எப்படிக் குறிப்பிடுகிறது தெரியுமா?

நூறுபல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின், எழில்நடை தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் என்கிறது.

அதாவது பலநூறு வேள்விகளை நடத்தியவனும் போர்களில் எதிரிகளைக் கொன்று பல வெற்றிகளைப் பெற்றவனும், நான்கு கொம்புளையுடைய மகுடத்தைத் தரித்தவனும் எழிலான நடையும் நீண்ட கைகளும் உடையவனும், ஐராவதம் என்ற யானையில் வருகின்ற, செல்வம் நிரம்பிய  செல்வனுமாகிய இந்திரன் என்று கூறுகிறது.

சிறுபாணாற்றுப் படையில் புலவர் நல்லூர் நத்தத்தனார், ஒய்மான் நாட்டு மன்னன் நல்லியக்கோடனின் நகரம், அந்தணர் அருகா அருங்கடி வியல் நகர் என்று புகழ்ந்துரைக்கிறார். அதாவது அந்தணர்கள் எண்ணிக்கைக்கு குறைவே இல்லாத, அருமையான கட்டுக்காவல் நிறைந்த நகரம் என்று பொருள். மேலும் பொருநர்கள் (பாணர்கள்), புலவர்கள் மற்றும் அருமறை நாவின் அந்தணர்களுக்கு (அருமையான வேதத்தை ஓதுகின்ற நாவினை உடைய அந்தணர்களுக்கு) நல்லியக்கோடனின் அரண்மனைக் கதவு அடையா வாயில் கொண்டது (எப்போதுமே திறந்திருக்கும்) என்றும் கூறுகிறார்.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படையில், கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்துஎன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. கேள்வி என்றால் வேதம் என்று பொருள். அந்தக் காலத்திலே வேதம் எழுதப்படாமல் செவிகளால் கேட்டே மனப்பாடம் செய்யப்பட்டதால், இதற்கு சம்ஸ்கிருதத்தில் ஸ்ருதி என்று பெயர். தூய தமிழில், எழுதாக் கிளவி (எழுதப்படாமல் கேட்கப்படக்கூடிய வாக்கியங்கள்) என்றும் கேள்வி என்றும் வேதம் அழைக்கப்படுகிறது. அந்த வேதத்தில் சிறந்த அந்தணர்கள் தங்கள் அருமையான கடமையாகிய வேள்வியை நடத்தி, அதன் சிறப்பைப் பொறித்து வைத்துள்ள தூண் என்று இந்த வரிகளுக்குப் பொருள். இந்தத் தூணை, யூபத் தூண் என்றும் வேள்வித் தூண் என்றும் அழைப்பார்கள்.

மகா விஷ்ணுவின் உந்தியில் பிரும்மன் தோன்றினான் என்ற புராணச் சம்பவத்தை, பெரும்பாணாற்றுப் படை இவ்விதம் அழகாக எடுத்துரைக்கிறது.

LORD SIVA

நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவற் பயந்த பல்இதழ்த் தாமரைப் பொகுட்டின்..

நீல நிறமும் நெடிய உருவமும் கொண்ட திருமாலின் கொப்பூழ் (தொப்புள்) நான்முகம் கொண்ட பிரம்மனைப் படைத்தளித்த பல இதழ்களைக் கொண்ட தாமரைப் பூவாகும் என்று இதற்குப் பொருள்.

மதுரைக் காஞ்சியில் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்துபாடும் மாங்குடி மருதனார், நெடுஞ்செழியனின் முன்னோராகிய பெருவழுதி, பல யாகங்களை நடத்தியவன் என்பதை, பல் சாலை முது குடுமியின் நல் வேள்வித் துறை என்று குறிப்பிடுகிறார்.

மதுரையிலே அந்தணர்களின் வேள்விப் பள்ளிகள் நிறைந்து இருப்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.

சிறந்த வேதம் விளங்கப் பாடி விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி, உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும் அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின், பெரியோர் மேஎய், இனிதின் உறையும் குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் என்கிறார்.

சிறப்புடைய வேதத்தைப் பொருள் விளங்குமாறு பாடுகின்றவர்களும், பெருமைக்குரிய சிறப்புகளைத் தருகின்ற வேள்வி செய்தல் உள்ளிட்ட ஒழுக்கங்களோடு பொருந்தி நிற்கின்றவர்களும், நிலங்களைக் கொண்டு அமைகின்ற உலகத்திலே ஒருமை உணர்வுடையே பிரம்மமே தாம் ஆகி, உயர்ந்த நிலையில் உள்ள தேவருலகத்தை இங்கேயே தமது ஒழுக்கச் சிறப்பாலும் வேள்விகளாலும் உருவாக்கக் கூடியவர்களும், அற நெறிகளில் இருந்து பிறழாத நடத்தையுடன் அன்பு நெஞ்சம் கொண்டவர்களும், பெரியோர்களுமாகத் திகழ்கின்ற அறவோர்களும், முனிவர்களுமாகிய அந்தணர்கள் இனிதாக உறைவதற்கேற்ப, அதாவது தவம், வேள்வி உள்ளிட்ட அறச் செயல்களைச் செய்வதற்ப, குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்தணர் தவப்பள்ளி என்று இதற்குப் பொருள்.

சிவபெருமான் ஐந்துபூதங்களைப் படைத்த தலைவனாக, இயற்கைக் கடவுளாக விளங்குவதை, நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்பொடு ஐந்து உடன் இயற்றிய மழு வாள் நெடியோன் தலைவன் ஆக என்று குறிப்பிடுகிறார். நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிய, மழு (கோடரி), வாள் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய, நெடிய உருவம் படைத்த சிவபெருமான் உலகின் தலைவனாக இருக்கிறார் என்று இதன் பொருள்.

பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானை எப்படிப் புகழ்கிறார் தெரியுமா?

கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் நல் ஆனொடு பகடு ஓம்பியும் நான் மறையோர் புகழ் பரப்பியும் வாழ்ந்தானாம் திருமாவளவன் எனப்படும் கரிகால் சோழன். அதாவது அவனது அரசாட்சியிலே கொலை, கொள்ளை போன்ற தீமைகள் அகற்றப்பட்டிருந்தன. அமரர்கள் எனப்படும் தேவர்களுக்கு உரிய யாகங்களைச் செய்து அவர்களுக்கு உரிய ஆவுதி(ஆகுதி)களை முறை தவறாமல் வழங்கியிருக்கிறான் மன்னன் கரிகாலன். அத்துடன் அதனைச் செய்வித்த அந்தணர்களுக்கு நல்ல ஆநிறைகளை (கால்நடைகளை) பரிசாக அளித்ததுடன், வேதத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய நான்கு மறைகளை அறிந்த அந்தணர்களின் புகழைப் பரப்பியும் வந்திருக்கிறான் அந்தத் தொல் திருமாவளவன்.

மலைபடுகடாம் எனப்படும் கூத்தர் ஆற்றுப்படையில் அதன் ஆசிரியர் புலவர் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், சிவபெருமான் ஆலகால விஷம் அருந்திய புராணச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அவரை காரி உண்டிக் கடவுள் என்று புகழ்கிறார்.

இனி எட்டுத்தொகை சங்க இலக்கிய நூல்களைக் காண்போம். எட்டுத்தொகையின் முதல் தொகை நூலாகிய பதிற்றுப்பத்து நூலில், மூன்றாம் பத்துப் பாடல்களை, சேரன் பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் புகழ்ந்து புலவர் பாலைக் கௌதமனார் பாடியுள்ளார். அந்தப் பாடலில்,

சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சமென்று ஐந்துடன் போற்றி அவைதுணை ஆக எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக் காலை அன்ன சீர்சால் வாய்மொழி உருகெழு மரபின் கடவுள் பேணியர் கொண்ட தீயின் சுடர்எழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி (பாடல் 21) என்று புலவர் குறிப்பிடுகிறார்.

சொல் (சொல் இலக்கணம்), பெயர் (பொருள் இலக்கணம்), நாட்டம் (சோதிடம்), கேள்வி (வேள்வி), நெஞ்சம் (நெஞ்சுக்குப் பொருந்திய ஆகமம்) ஆகிய ஐந்தையும் போற்றி, அவற்றின் துணை கொண்டு, எந்த உயிர்களுக்கும் தீங்கு சூழாது, விளக்கத்துடன் கூடிய கொள்கைகளைப் பின்பற்றி, கதிரவனைப் போன்ற வாக்குத் தவறாத நேர்மையைக் கடைப்பிடிக்கின்ற, முன்னோர் காட்டிய மரபுப்படி கடவுளைப் பேணுகின்ற முனிவர்களாகிய அந்தணர்கள் வளர்க்கின்ற வேள்வித் தீயின் சுடர் எழும்போதெல்லாம் அதிலே ஆவுதி (ஆகுதி) இடப்படுகின்றது. எப்படிப்பட்ட ஆவுதி தெரியுமா? அதனைச் செய்பவர்கள் விரும்புகின்றவற்றை மெய்யாக்குகின்ற (உண்மையாக்குகின்ற) பெரிய பலன்களைத் தரக்கூடிய ஆவுதியாம். இந்தப் பாடலுக்குப் பெயரே அடுநெய்யாவுதி என்பதுதான். வேள்விக்கு இதைவிட என்ன பெரிய விளக்கம் வேண்டியிருக்கிறது?

அத்துடன், அந்தணர்களின் ஆறு கடமைகள் என்று வேதம் கூறுவதையும் மிக அழகாகத் தமிழில் எடுத்துரைக்கிறார் பாலைக் கௌதமனார்.

ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர்  (பாடல் 24) என்கிறார். அதாவது தான் வேதம் ஓதுதல், வேள்வி செய்தல், அவை இரண்டையும் பிறருக்குச் செய்வித்தல்- அதாவது வேதத்தை ஓதச் செய்தல் (சொல்லிக் கொடுத்தல்), வேள்விகளை பிறருக்காக அல்லது பிறரைக் கொண்டு நடத்துதல் – தானங்களை வழங்குதல், அரசர்கள் மற்றும் செல்வந்தர்களிடமிருந்து அறச் செயல்களுக்காக தானங்களை தாம் ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய ஆறு கடமைகள் அறச் செயல்களைச் செய்கின்ற

(தர்மத்தைக் கடைப்பிடிக்கின்ற) அந்தணர்களுக்கு உண்டு என்கிறார். இதேபோல் ஆறாம்பத்துப் பாடலைப் பாடியுள்ள பெண்பாற் புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார், பாட்டுடைத் தலைவனாகிய சேரமன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழந்துரைக்கும்போது

பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டு ஓரூர் ஈத்து வான் வரம்பன் எனப் பேர்இனிது விளக்கி (பாடல் 60-க்குப் பிந்தைய பதிகம்) என்கிறார். மறையோதுகின்ற, அறச் செயல் புரிகின்ற பார்ப்பனர்களுக்கு கபிலை எனப்படும் பழுப்பு நிறமுடைய சிறந்த பசுக்களையும், குடநாட்டிலே ஓர் ஊரையும் தானமாகக் கொடுத்ததன் மூலம் வானில் வாழும் தேவர்களை திருப்தி செய்ததால், வான் வரம்பன் (வானத்தை எல்லையாகக் கொண்டவன்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளான் சேரலாதன் என்கிறார் புலவர். இந்த வான்வரம்பன் வழிவந்தவர்கள்தான் வானவராயர் எனப்படும் வானவரையர்கள்.

வேதம் ஓதுகின்ற, அறத்தோடு வாழ்கின்ற அந்தணர்களுக்கு அக்காலத் தமிழர்கள் எத்தகைய மதிப்பு அளித்தனர் என்பதை, வேளிர் மரபைச் சேர்ந்த மன்னன் செல்வக் கடுங்கோ வாழிஆதனைப் பாடிய ஏழாம் பத்தில் கபிலர் எடுத்துரைக்கிறார். வாழிஆதனைப் பார்த்து

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே (பாடல் 63) என்கிறார். அதாவது, யார்க்கும் அஞ்சாத, எவருக்குமே தலைவணங்காத மாவீரன் வாழிஆதன், பார்ப்பனர்களுக்கு மாத்திரமே பணிவோடு தலைவணங்குவான், வேறு யார்க்கும் வணங்க மாட்டான் என்கிறார் கபிலர். இதன்மூலம் எப்பேர்ப்பட்ட பெரும்புகழும், வீரமும் படைத்த மன்னர்களும் பண்பு நிறைந்த பார்ப்பனர்களுக்கு பணிவோடு மரியாதை செலுத்தினர் என்ற வரலாற்றுச் செய்தியைச் செதுக்கியுள்ளார் கபிலர்.

எட்டாம் பத்திலே சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை, அரிசில் கிழார், கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை (பாடல் 74) என்று பாராட்டுகிறார். அருமறை குறித்த விளக்கங்களை நன்கு கேட்டறிந்து, அதன் முறை தவறாது வேள்விகளைச் செய்தான் இரும்பொறை என்கிறார்.

எட்டுத்தொகையின் மற்றொரு நூலாகிய பரிபாடலில், காக்கும் கடவுளாகிய திருமால், நாவல் அந்தணர் அருமறைப் பொருள் (முதல் பாடல்) என்று புகழப்படுகிறார். நாவலந்தீவு எனப்படும் பாரதம் முழுவதும் வாழுகின்ற அந்தணருக்கு அருமறையின் உட்பொருளாக இருப்பவர் திருமால் என்று இதற்குப் பொருள். அந்தணர் என்றால் ஆரியர் என்றும் அவர்கள் வெளியே இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்றும் பரப்பப்படும் பசப்புரைக்குப் பதிலடி இந்த வரிகள்தாம்.

மேலும் பரிபாடலின் 3-ஆவது பாடலில், அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ, அமரர்க்கு முதல்வன் நீ, அவுணர்க்கும் முதல்வன் நீ என்று திருமால் போற்றப்படுகிறார். இதனைப் பாடியவர் புலவர் பெட்டனாகனார். அமரர் என்றால் ஆரியர் என்றும் அரக்கர் (அவுணர்) என்றால் திராவிடர் என்றும் இல்லாத இனவாதம் மொழியும் இழிபிறவிகளை இந்தப் பாடல் வரிகளால் கொட்டுகிறார் பெட்டனாகனார். இறைவன் அனைத்துமாகி நிற்பவன், அத்துடன் எதிரும் புதிருமான அமரர்களுக்கும் அவனே முதல்வன், அரக்கர்களுக்கும் அவனே முதல்வன். அவனே அனைத்தும். இந்தப் பரிபாடல் வரிகள், யஜூர் வேதத்தின் ஶ்ரீ ருத்ரத்தில் சிவபெருமானை, முரண்பாடாக நாம் கருதும் அனைத்துக்கும் அவரே தலைவர், அவரே அனைத்தும் என்று போற்றுவதற்கு ஒப்பாக இருக்கின்றன.

பரிபாடலில் 5-ஆவது பாடல் (பாடியவர் புலவர் கண்ணனாகனார்) செவ்வேள் எனப்படும் முருகனைப் புகழ்ந்து பாடப்பட்டிருப்பது. முருகனின் பிறப்பையும் இது எடுத்துரைக்கிறது. இந்தப் பாடலில், முருகனைத் தோற்றுவித்த அவன்தம் தந்தையாகிய சிவபெருமான், அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் என்றும் விண்ணோர் வேள்வி முதல்வன் என்றும் போற்றப்படுகிறார். அதாவது, (திரிபுர தகனத்தைப் பாராட்டி) அமரர்கள் நடத்திய வேள்வியின் அவிர்பாகத்தை உண்ட பசுமையான கண்களை உடைய பார்ப்பனர் (சிவபெருமான் எப்போதும் யோகநெறியிலும், தவத்திலும் இருப்பதால் அவர் பார்ப்பனர்) என்றும், விண்ணோர்களாகிய தேவர்கள் நடத்துகின்ற வேள்விகளில் துதிக்கப்படும் முதல்வன் என்றும் சிவபெருமான் போற்றப்படுகிறார். மேலும் இதே பாடலில், முருகனின் சேவடியை மறுபிறவி இல்லை என்று கூறும் மடையர்கள் சேரமாட்டார்கள் (மறு பிறப்பு இல் எனும் மடவோரும் சேரார்)என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பரிபாடலின் 8-ஆவது, 9-ஆவது பாடல்களில் சிவபெருமான் மணிமிடற்று அண்ணல்(நீலகண்டன்) என்று புகழப்படுகிறார்.

14-ஆவது பாடல் (கேசவனார் பாடியது), செவ்வேளைப் புகழ்துரைக்கும்போது இருபிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே என்கிறது. துவிஜர்கள் அதாவது இயற்கையாய் பிறக்கும்போது ஒரு முறையும், பூணூல் அணிவித்து உபநயனம் செய்விக்கப்படும்போது மறு முறையும் என இரு பிறப்பு கொண்ட இருபிறப்பாளர்களான, கருணை நெஞ்சமுடைய அந்தணர்களின் அறச் செயல்களில் அமர்ந்து விளங்குபவன் முருகப்பெருமான் என்று இதற்குப் பொருள்.

பரிபாடலில் புறத்திரட்டாகத் தொகுக்கப்பட்ட பாடல்களில் எட்டாம் பாடல் மதுரை மாநகரின் சிறப்பை இவ்வாறு எடுத்துரைக்கிறது-

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரலெடுப்ப ஏமஇன் துயில் எழிதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது, எம்பேர் ஊர் துயிலே.

தாமரைப் பூவில் பிறந்த பிரும்மனின் நாவில் இருந்து பிறந்த பெருமை உடையவை நான்கு வேதங்கள். அப்படிப்பட்ட வேதங்களைப் பாடுகின்ற சிறந்த குரல் ஒலி கேட்டுத் துயில் எழுகிறதாம் பாண்டியன் தலைநகராகிய மதுரை மாநகரம். அவ்வாறு இல்லாமல், சேரனின் வஞ்சி, சோழனின் கோழியூர் எனப்படும் உறையூரைப் போன்று கோழி (சேவல்) கூவி இங்கு பொழுது விடிவதில்லையாம்.

ஆக, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, அதற்கு இணையாக வேத நெறியையும் வளர்த்தெடுத்துள்ளது என்பதற்கு இதனைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? மதுரையில் மட்டுமல்ல, பண்டைத் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் வேத நெறி தழைத்திருந்ததை முன்னர் பல பாடல்களை எடுத்துக்கூறி நிறுவியுள்ளோம்.

தமிழர் நெறி வேறு, வேத நெறி வேறு என்பதைப் போன்ற தவறான கண்ணோட்டங்களை விடுத்து, உயர்ந்த திருக்காட்சியைக் கண்டு, நம் முன்னோர்களைப் போன்று தமிழும், வேதமும் தழைக்கச் செய்ய, சங்க இலக்கியங்களை ஊன்றிப் படிப்போம். அதன்வழி நடப்போம்.

-பத்மன்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பதிற்றுப்பத்து  பாட்டு 21
பாலைக்கௌதமனார்
 

# 21 பாட்டு 21
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை
காலை அன்ன சீர் சால் வாய்மொழி
உரு கெழு மரபின் கடவுள் பேணியர்
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும்
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்து கண்மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின்
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்
மாரி அம் கள்ளின் போர் வல் யானை
போர்ப்பு_உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து
நன் கலம் தரூஉம் மண் படு மார்ப
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர்
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம்
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை
பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு
கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல்
ஒரீஇயின போல இரவு மலர் நின்று
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணை தோள் இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே
 
  பாலைக்கௌதமனார்

# 21 பாட்டு 21
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக,
எவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன்,
ஞாயிற்றைப் போன்ற சிறப்புப் பொருந்திய, வாய்மை உரையால்,
அச்சம் பொருந்திய முறைமையினையுடைய கடவுளைப் போற்றுவதற்காக
மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடர் மேலெழும்போதெல்லாம்,
உள்ளத்து விருப்பம் உடலிலும் பரவும் பெரும் புகழ் கொண்ட ஆவுதிப்புகையும்;
பரிசில் பெற வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்,
விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர்
இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை
தாளிக்கும்போதெல்லாம் இடைவிடாமல் ஒலிக்க -
கடல் ஒலியைப் போல, செழுமையான இல்லங்களின் மதில்களின்
நடுவில் எழுந்த சமைக்கும் நெய்யால் எழுந்த ஆவுதிப்புகையும்;
இரண்டும் சேர்ந்து கமழும் மணத்தோடு, வானுலகத்தில்
நிலைபெற்ற கடவுளும் விரும்புமாறு வழிபட்டு,
குறையாத வளம் நிறைந்த, குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய -
மழையாய்ச் சொரியும் கள்ளினையுடைய - போரில் வல்ல யானையின் மேலிருக்கும்
தோலினால் போர்த்தப்பட்ட போர்முரசம் முழங்க, ஆரவாரம் மிகுந்து
பகைவர் திறையாகத் தரும் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவருகின்ற - சாந்து அணிந்த மார்பினனே!
முல்லைப்பூவால் கட்டப்பட்ட தலைமாலையையுடைய பல பசுக்களையுடைய கோவலர்
புல் நிறைய உடைய அகன்ற வெளியில் அந்தப் பசுக்களை மேயவிட்டு,
கற்கள் உயர்ந்த காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!
குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!
பலவகைப் பயன்களைத் தரும் காடுகளைக் கொண்ட, தானும் பயன்களை அளிக்கும் நெடிய உச்சியையுடைய,
நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,
புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
ஆண்டுதோறும் பொய்க்காமல் பயனைத் தரும் மழை நிறையப்பெய்து,
நோய் இல்லாமல், மக்களுக்கு, நல்ல காலமாகக் கழிய,
நறுநெய் பூசப்படாவிட்டாலும் கமழ்கின்ற மணத்தைக் கொண்டு,
கார்காலத்து மலரின் மணம் கமழும் தாழ இறங்கிய கரிய கூந்தலையும்,
குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,
அசைகின்ற காந்தள் ஒளிவிடும் நீர்ப்பரப்பின் கரையில் நிற்கும்
மூங்கிலைப் போன்ற பெரிய தோள்களையும் உடைய இவளோடு
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்க!
 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்

வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது:  பரிபாடல் 9-12,13

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், பரிபாடல் 2:2425
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.பரிபாடல் 3:11-15
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;  பரிபாடல் 3: 65-66
வேதவாதி கூறும் கருத்துக்கள் கீழ்வருமாறு மணிமேகலையில் இடம் பெற்றுள்ளது. 

"கற்பம் கை சந்தம் கால் எண் கண்
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச்
சார்பில் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இல்லை அது நெறி எனும்
வேதியன் உரையின் விதியும் கேட்டு" (பாடலடி 100 - 105)

என்பது வேதவாதி கூறும் கொள்கையாகும். இதில் வேதமே சிறப்புடையது என்ற கொள்கை இடம் பெற்றுள்ளது. மீமாம்சகர் வேதத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பர். எனவே மீமாம்சை சைமினி என்ற ஆசிரியர் பெயராலும், வேதம் சிறப்புடையது என்று கூறும் வேதவாதியின் கொள்கைச் சார்பாலும் மணிமேகலையில் மீமாம்சை மதம் இடம் பெற்றுத் திகழுகின்றது. எனவே அம்மதத்தின் கருத்துக்களை ஆய்வாளர்களின் கருத்து வழியும், பிற்காலச் சிவஞானச்சித்தியாரின் வழியும் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆறு அறி அந்தணர்க்கு, அருமறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக்,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும், கடும் கூளி,
மாறாப் போர் மணி மிடற்று எண் கையாய்! கேள்  கலித்தொகை 1
பதிற்றுப்பத்து 21 
சொல்பெயர்நாட்டம்கேள்விநெஞ்சம்என்று
ஐந்துடன் போற்றி அவை துணையாக,
காலை அன்ன சீர் சால் வாய்மொழி, 1-3


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை 15

மண் நாணப் புகழ் வேட்டு,

நீர் நாண நெய் வழங்கிப்,

புரந்தோன் எந்தை  ...    புறநானூறு - 384   15-18

5 முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்,
10 அறிந்தோன் மன்ற அறிவுடை யாளன்;
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்; புறநானூறு - 224:5 -11

நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய, 15

வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்

நற் பனுவல் நால் வேதத்து

அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை

நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்

வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, 20

யூபம் நட்ட வியன்களம் பலகொல்?  புறநானூறு -15

உரு கெழு மரபின் கடவுள் பேணியர், 5
கொண்ட தீயின் சுடர் எழுதோறும்
விரும்பு மெய் பரந்த பெரு பெயர் ஆவுதிபதிற்றுப்பத்து 21 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

(புறநானூறு – 18)

 

இம்மை செய்தது மறுமைக்கு ஆம்எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்

பிறரும் சான்றோர் சென்ற நெறிஎன

ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே

 

– (புறநானூறு பா. 134)

 

நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை

முது முதல்வன் வாய் போகாது,

ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,

ஆறு உணர்ந்த ஒரு முது நூல்

 

இகல் கண்டோர் மிகல் சாய்மார்,” – (புறம் 166)

 

நான்மறை விரித்துநல் இசை விளக்கும்

வாய்மொழிப் புலவீர்கேண்மின்சிறந்தது;

 

காதற் காமம்காமத்துச் சிறந்தது;” பரிபாடலில்

அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகன் போலத் தாமுங்

குடுமித் தலைய மன்ற

நெடுமலைநாடன் ஊர்ந்த மாவே” –

 

(ஐங்குறுநூறு பாடல் எண். 202)

 

பார்ப்பன மகனேபார்ப்பன மகனே!

செம் பூ முருக்கின் நல் நார் களைந்து

தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்

படிவ உண்டிப் பார்ப்பன மகனே!

எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்

பிறிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்

மருந்தும் உண்டோமயலோ இதுவே

 

– (குறுந்தொகைப் 156)

 

கல்லே பரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!”

 

நெல்-அரிசியைக் கொட்டி “நைவேத்யம்” செய்யும் கடவுள், எங்களுக்கு இல்லை 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பாடியவர்: மாங்குடி கிழார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை
 

அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு
5
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
10
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

குருந்து [குறிஞ்சி], முல்லை. (மருதம், நெய்தல்) என்னும் நான்கு பூக்களைத் தவிர வேறு வாழ்வியல் திணையைக் குறிக்கும் பூக்கள் இல்லை. வரகு, தினை, கொள், அவரை என்னும் நான்கு அல்லாத வேறு உணவுப்பொருள் அந்த மூதில் குடிக்கு இல்லை. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நான்கு இனக் குடிமக்கள் அல்லது அந்த மூதில் மக்களுக்கு உறவினர் வேறு குடிமக்கள் இல்லை. இப்படி எல்லாம் நான்கு வகைப்பட்டதாக இருக்கும்போது அவர்களுக்குக் கடவுள் மட்டும் ஒன்றே. அந்த ஒன்றும் நடுகல். வாளேந்திப் போர்க்களம் சென்று பகையரசரின் களிற்றை வீழ்த்திவிட்டு மாண்டுபோனவனுக்கு நடப்பட்ட கல் அது. அதற்கு அவர்கள் பூவைப் போட்டுப் பூசை செய்வது போல நெல்லை ஒவ்வொன்றாகப் போட்டுப் பூசை செய்வர். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

துனி இல் காட்சி முனிவர் முன் புக - திரு 137

செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு - பெரும் 498

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் - பட் 54

நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து - பரி 5/37

பணியியர் அத்தை நின் குடையே முனிவர்

  முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே - புறம் 6/17,18

நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20

மூவா அமரரும் முனிவரும் பிறரும் - அகம் 0/12

அவிர் சடை முனிவரும் மருள கொடும் சிறை - புறம் 43/4

பொதியில் முனிவன் புரை வரை கீறி - பரி 11/11

நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி - புறம் 201/8



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

துனி இல் காட்சி முனிவர் முன் புக - திரு 137

செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு - பெரும் 498

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் - பட் 54

நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து - பரி 5/37

பணியியர் அத்தை நின் குடையே முனிவர்

  முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே - புறம் 6/17,18

நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20

மூவா அமரரும் முனிவரும் பிறரும் - அகம் 0/12

அவிர் சடை முனிவரும் மருள கொடும் சிறை - புறம் 43/4

பொதியில் முனிவன் புரை வரை கீறி - பரி 11/11

நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி - புறம் 201/8



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி

  நா இயல் மருங்கில் நவில பாடி - திரு 186,187

கேள்வி போகிய நீள் விசி தொடையல் - பொரு 18

பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி

  கூடு கொள் இன்னியம் குரல் குரல் ஆக - சிறு 228,229

தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ - பெரும் 16

கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315

பல் கேள்வி துறைபோகிய - பட் 169

கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா - மலை 22

சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று - பதி 21/1

உரை சால் வேள்வி முடித்த கேள்வி

  அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/4,5

வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி

  உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை - பதி 70/18,19

கேள்வி கேட்டு படிவம் ஒடியாது - பதி 74/1

நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் - பரி 3/48

கில்லா கேள்வி கேட்டன சிலசில - பரி 12/39

விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி

  திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி  23/19,20

நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8

கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை - புறம் 26/12

வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் - புறம் 53/12

சில் செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து - புறம் 68/3

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

  மாங்குடி மருதன் தலைவன் ஆக - புறம் 72/13,14

துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் - புறம் 221/6

கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு - புறம் 361/4

கண் கேள்வி கவை நாவின் - புறம் 382/13

கேள்வி மலிந்த வேள்வி தூணத்து - புறம் 400/18



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

#224 - கருங்குழல் ஆதனார்
** பாடப்பட்டோன்: சோழன் கரிகால் பெருவளத்தான்
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து
முறை நற்கு அறியுநர் முன் உறப் புகழ்ந்த		5
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு
பருதி உருவின் பல் படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்
அறிந்தோன்-மன்ற அறிவுடையாளன்		10
இறந்தோன் தானே அளித்து இவ் உலகம்
அருவி மாறி அஞ்சுவரக் கருகிப்
பெரு வறம் கூர்ந்த வேனில் காலைப்
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார்
பூ வாள் கோவலர் பூ உடன் உதிரக்		15
கொய்து கட்டழித்த வேங்கையின்
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே
# 224 கருங்குழல் ஆதனார்

பகைவர்களின் அரண்களை மதியாது, அவற்றைப் போரில் அழித்ததுவும்,
துணையாகக் கூடிய இனத்துடன் சேர்ந்து, குடிப்பதற்கு மதுவைக் குடம் குடமாக அளித்து,
பாணர்களின் பெரிய சுற்றமாகிய கூட்டத்தைப் பாதுகாத்ததுவும்,
அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில்
வழிமுறைளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய
தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு
வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள்,
பருந்து விழுங்குவதுபோல் செய்யப்பட்ட இடத்து நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்து,
வேதத்தால் சொல்லப்பட்ட வேள்வியைச் செய்து முடித்ததுவுமாகிய.
இத்தகைய செயல்களின் பயனை நிச்சயமாக அறிந்த அறிவுடையோன்
இறந்தான்; ஆகவே இவ்வுலகம் இரங்கத் தக்கது;
அருவியில் நீர் குறைந்து, உலகத்தார் அஞ்சும்படி தீய்ந்து
பெரும் வறட்சி மிகுந்த வேனிற்காலத்தில்
பசியால் வாடும் பசுக்களாகிய பயன்தரும் கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக,
கூர்மையான கொடுவாளால் இடையர்கள் இலைகளும் பூக்களும் உதிரக்
கொய்து தழைச்செறிவை அழித்த வேங்கை மரத்தைப் போல்
மெல்லிய இயல்புடைய மனைவியர் தங்கள் அணிகலன்களைக் களைந்தனர்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard