New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் பிறந்தநாளும், செந்தமிழ்ப் புத்தாண்டு தினமும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திருவள்ளுவர் பிறந்தநாளும், செந்தமிழ்ப் புத்தாண்டு தினமும்
Permalink  
 


திருவள்ளுவர் பிறந்தநாளும், செந்தமிழ்ப் புத்தாண்டு தினமும்

 
 
 

டாக்டர்.நா.கணேசன்


செந்தமிழ் இலக்கியங்கள் (சங்கம், சமண -பௌத்த காவியங்கள்) காட்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்திற்குத் தமிழ்நாட்டு அரசாங்கம் மீண்டுள்ளது. கொல்லம் ஆண்டு, சக வருஷாப்தம், ஹிஜிரி வருஷம், கிறித்துவ வருஷம், ... என்பவற்றில் புத்தாண்டு தினம் கணக்கிடுதல்போல் தமிழ் புத்தாண்டு என்பது செம்மொழி வரையறை கொண்ட தமிழ் இலக்கியங்களைக் கொண்டு பார்த்தால் சித்திரை ஒன்று என நன்கு தெரிகிறது.

 

மறைமலை அடிகள் செய்த கணக்குப் பிழையால் இந்தக் குழப்பம் (பொங்கல் = புத்தாண்டு) நேர்ந்துவிட்டது. தை 1-ஆம் தேதி திருவள்ளுவர் பிறந்தநாள் என்று அறிவித்தார் அடிகள். அதற்கு யாதொரு ஆதாரமும் இல்லை. மேலும் திருவள்ளுவர் வாழ்ந்த காலம் மறைமலையார் சொன்ன தேதிக்கு 500+ வருஷம் பிற்பட்டது. இலக்கியத்தில் மறைமலை அடிகட்கு முன்னர் தைப் பொங்கல் புத்தாண்டாக இருத்தலைக் காணோம். பாசி என்றால் கிழக்கு, ஊசி என்றால் வடக்கு என்று பிராகிருதச் சொற்கள் வரும் புற நானூற்றுப் பாடலைப் அடுத்ததாகப் படித்துப் பார்ப்போம். அது ஆடு  என்றுகுறிப்பிடும் ஏரிஸ் (Aries) கொண்டு தொடங்கும் பாடல் அது. ஏரிஸைக் குறிப்பிட ஆட்டின் தலை  '  யுனிகோட் சின்னமாகத் திகழ்கிறது. அந்த மேஷ ராசியில் புத்தாண்டு தொடக்கம் என்பது வசந்த காலத்தின் தொடக்கம். இப் புத்தாண்டு தமிழர்கள் வாழ்ந்து ஆட்சியில் தொடர்பு கொண்டிருந்த கேரளம், ஸ்ரீலங்கா, கம்போடியா எல்லாவற்றிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலும், சமணரும், பௌத்தரும் கொண்டாடிய புத்தாண்டு சித்திரை 1 தான். பஞ்சாங்கம் வைத்தே புத்த ஜெயந்தி, பரிநிர்வாண தினம், சமணர் திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன.

 

பஞ்சாங்கத்தில் உள்ள நட்சத்திரங்கள், வானியல் செய்திகளை சங்ககாலத் தமிழர் எவ்வளவு நம்பினர் என்பதைக் காட்ட ஓர் உதாரணம் தரலாம்

.

புறநானூறு 229,


பாடியவர்: கூடலூர் கிழார்.

பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை


ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காயப்,
பங்குனி உயர் அழுவத்துத்,
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல் நாள்மீன் துறை படியப்,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்,
கனைஎரி பரப்பக், கால்எதிர்பு பொங்கி,
ஒருமீன் விழுந்தன்றால், விசும்பி னானே:
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்,
’பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமன் தில்’லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,
அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே;
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்,
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்,
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,
ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்,
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை,
மணிவரை அன்ன மாஅ யோனே?


A translation:
Puranānuru 229, Poet Koodaloor Kizhār
King – Cheramān Yānaikatchey Māntharancheral Irumporai

At midnight crowded with darkness in the first
quarter of the night when the constellation of Fire
was linked with The Goat and from the moment
the First Constellation arose, formed like a bent palmyra,
and the one shaped like a reservoir was glittering
at the farthest limit, during the first half
of the month of Pankuni, when the Constellation
of the Far North was descending and the Eighth
Constellation was rising and the Deer’s Head
sinking into the sea, a star fell from the sky! 
Not slanting east or north,
like a light for the earth surrounded by ocean, a star fell as roaring,
spreading fire stirred and swollen by the wind! When we saw this,
I and many others who had come to him in our need thought, 
“May the king
who rules a good land with a waterfall whose music is like drum,
may he live without illness!” A feeling of despair spread throughout our
troubled hearts and we were afraid! Now the seventh day has come
and
as great elephants like sleeping on their trunks and the royal drum
tightly bound with its straps has burst its eye and rolls across
the ground and the white umbrella of protection is snapped off
at the base and ruined and the proud horses swift as the wind stand
stock still, he has reached the world of the gods! Has he
who was the lover desired by women who wear shining bangles
forgotten those women who were his companions? He as a man
the dark color of a mountain of sapphires! His strength bound up
his enemies and killed them. And to those
who wished him well he was munificent beyond measure! 
(Translated by George Hart).

 

கோள் எனும் தமிழ்ச்சொல்லை வடமொழிக்கு மாற்றிய மொழிபெயர்ப்பு தான் க்ரஹம் (graha) என்பது. அதுபோல், தமிழரின் நட்சத்திரங்கள், மாசங்கள், வருடங்களின் பெயர்கள் பிராகிருதம் (வடமொழி) ஆக இருப்பினும் இவை ஆதி காலத்தில் தமிழாக இருந்ததற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. புறநானூறு 229-ல் சொல்லப்படும் நட்சத்திரங்கள் யாவை? என அறிய அதன் உரையைப் பார்ப்போமா? இன்றைய காலகட்டத்தில் நட்சத்திரங்களின் பண்டைத் தமிழ்ப் பெயர்கள் மறைந்து விட்டன. அதுபோலவே, 60 தமிழ் வருடப் பெயர்களும் அழிந்திருக்க வேண்டும்.

 

கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்னநாளிற்றுஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துக் கூடலூர் கிழார் பாடியது.


(இ - ள்.) மேடவிராசி பொருந்திய கார்த்திகை நாளின் முதற்காலின்கண் நிறைந்த இருளையுடைய பாதியிரவின்கண் முடப்பனைபோலும் வடிவை யுடைய அனுடநாளின் அடியின்வெள்ளி (முதல் நட்சத்திரம்) முதலாகக் கயமாகிய குள வடிவு போலும் வடிவையுடைய புனர்பூசத்துக் கடையின் வெள்ளி எல்லையாக விளங்கப் பங்குனிமாதத்தினது முதற்பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சியினின்றும் சாய அதற்கு எட்டாமீனாகிய மூலம் அதற்கெதிரே எழாநிற்க அந்த உத்தரத்திற்கு முன்செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய நக்கத்திரம் (நக்ஷத்திரம்) துறையிடத்தே தாழக் கீழ்த்திசையிற் போகாது வடதிசையிற் போகாது கடலாற் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக முழங்காநின்ற தீப்பரக்கக் காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து ஒருமீன் வீழ்ந்தது வானத்தினின்றும்; அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப்பட்ட இரவலர் எம்முடைய பறையொலி போலும் ஒலியை யுடைய அருவியையுடைய நல்ல மலைநாட்டுக்கு வேந்தனாகியவன் நோயையுடையனல்லனாகப் பெறின் அழகிதென இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்தவுள்ளம் பரப்ப யாம் அஞ்சினேம்; அஞ்சினபடியே ஏழாம் நாள் வந்ததாகலின் இன்று, வலியையுடைய யானை கையை நிலத்தே யிட்டு வைத்துத் துஞ்சவும், திண்ணிய வாராற் பிணிக்கப்பட்ட முரசம் கண்கிழிந்து உருளவும், உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக்குடை கால் துணிந்து உலறவும், காற்றுப்போலும் இயலையுடைய மனஞ்செருக்கிய குதிரைகள் கதியின்றிக் கிடக்கவும் இப்படிக்கிடக்கத் தேவருலகத்தை அடைந்தான்; ஆகையாலே, ஒள்ளிய வளையையுடைய மகளிர்க்கு மேவப்பட்ட துணையாகித் தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்தான்கொல்லோ? பகைவரைப் பிணித்துக்கொள்ளும் வலியையும் நச்சியோர்க்கு அளந்து கொடுத்தலறியாத வண்மையையுமுடைய நீலமலை போலும் மாயோன்-எ-று.

                                                                                                         
Aries.jpg
                                                                                                            

(கு - ரை.) 1. அழற்குட்டம் : “அழல்சேர் குட்டத் தட்டமி (சிலப். 23 : 134) ; ஆடு - மேடராசி; அக்கினியை அதிதேவதையாகவுடைமையின் கார்த்திகைக்கு அழலென்பது பெயராயிற்று. அசுவதியின் நான்கு கால்களும், பரணியின் நான்குகால்களும், கார்த்திகையின் முதற்காலும் மேடராசிக் குரியன. பங்குனி மாதத்திற் கார்த்திகை நட்சத்திரம் உள்ள தினம் பூர்வ ஷஷ்டி அல்லது ஸப்தமி யென்பது கணிதநூற்றுணிபாதலால், அத்தினத்தின் பாதியிரவு நிறைந்த இருளையுடையதாயிற்று.

 

3. அனுடத்தின் வடிவமாகிய ஆறு நட்சத்திரங்களின் தொகுதி வளைந்த பனைமரம்போன்ற தோற்றமுடைமையின் அது முடப்பனை யெனப்பட்டது; ‘அனுட மாறு முடப்பனை போலும்’ என்பர்.

 

4. ‘பாசி, ஊசியென்பன முறையே பிராசி, உதீசி யென்னும் வடமொழிச்சிதைவுகள்; உச்சிமீனுக்கு முன் எட்டாவது மீன் அத்தமித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு; ‘உச்சி மீனுக்கெட்டாமீனுதயமீன் என்பர்.

 

5 - 12. புறநா. 24 : 24 - 5; பங்குனிமாதத்தில் நட்சத்திரம் வீழின், இராசபீடை என்பர்; “ஆடு கயறே டனுச்சிங்கத் தெழுமீன் விழுமே லரசழிவாம்” என்பது சோதிடநூல்.

 


 

செந்தமிழ் இலக்கியங்களில் எல்லா நட்சத்திரங்களுக்கும் நல்ல தமிழ்ப்பெயர் இருக்கின்றன. தமிழ் மாதப்பெயர்கள் பௌர்ணமி எந்த நக்ஷத்திரத்தில் ஏற்படுகிறதோ அந்தப் பெயரால் ஏற்படுகிறது, அத் தமிழ் மாதப் பெயர்கள் தூய சம்ஸ்கிருதத்தில் அல்லாமல், பிராகிருதச் சொற்களாக இருப்பது இவற்றைப் படைத்தோர் சமண, பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று காட்டுகிறது, இந்தப் பழைய மாதப் பெயர்களுக்கு தனித்தமிழ்ப் பெயர்களை மலையாள மாதங்கள் போல இராசிகளின் பேரால் அமைக்க முயற்சி செய்தவர் தேவநேயப் பாவாணர் ஆவார். தனித்தமிழ் முயற்சிகளை இயக்கமாக மறைமலை அடிகளாருக்குப் பின்னர் நடாத்திய பாவாணர் தரும் மாதப் பெயர்கள் இவை:

(1) சித்திரை - மேழம் (2) வைகாசி - விடை (3) ஆனி - ஆடவை (4) ஆடி - கடகம் (5) ஆவணி - மடங்கல் (6) புரட்டாசி - கன்னி (7) ஐப்பசி - துலை (8) கார்த்திகை - நளி (9) மார்கழி - சிலை (10) தை - சுறவம் (11) மாசி - கும்பம் (12) பங்குனி - மீனம். பௌர்ணமி காணும் நட்சத்திரங்கள் பெயரால் ஏற்பட்ட தமிழ் மாதப் பெயர்களை மலையாள மாசங்கள் போல, இராசிப் பெயரால் அமைத்த பாவாணர் முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழின் 60 வருட சுழற்சிப் பெயர்கள் சமணர், பௌத்தர், சித்தர்கள் தந்த வடசொல்லாக இருப்பினும் இவை தமிழ்நாட்டுக்கே உரியவையாகும். பிற பிரதேசங்கள் எங்கணும் பாரதநாட்டில் ஒருவருடத்துக்கு தமிழ்ப் பஞ்சாங்கங்கள் தரும் பெயரைக் காண இயலாது. இடைக்காட்டுச் சித்தர் ஒவ்வொரு ஆண்டுக்கும் பலன்களைத் தமிழ்நாட்டில் இன்னது நிகழும் என்றே அவ்வாண்டுகளுக்குப் பாடியுள்ளார். 60 வருடங்களுக்கான இடைக்காடர் பாடல்கள் தமிழ் மக்களுக்கும் நிலத்திற்கும் மட்டுமே பொருந்தக் கூடியவை. தமிழ் மாதப் பெயர்களின் நட்சத்திரப் பெயர்களை சங்கத் தமிழ் இலக்கியப் பெயர்களுக்கு மாற்றலாம். அதேபோல் 60 வருஷப் பெயர்களுக்கும் நல்ல தமிழாக்கம் செய்ய ஒரு அரசாங்கக் குழு அமைத்து முயலலாம். அல்லது, சங்கப் புலவர்கள் இறையனார், தொல்காப்பியர், கபிலர், பரணர், ஔவை, வள்ளுவர், இளங்கோ, சாத்தனார், சம்பந்தர், அப்பர், நம்மாழ்வார், ஆண்டாள், குமரகுருபரர், தாயுமானவர், வீரமாமுனி, உமறு, ... பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி என்று 60 தலைசிறந்த புலவர்கள் பெயரை ஆண்டுகளுக்குச் சூட்டலாம்.

                                                                                                                 
2.jpg.9k.jpg
                                                                                                                

தமிழ்ப் புத்தாண்டு செந்தமிழ் இலக்கியங்களில் இருந்து மாற்றப்பட வேண்டுமாயின் தமிழ்மக்களை ஆளும் எந்த ஒரு திராவிடக் கட்சியாயினும் விஞ்ஞானிகளைக்(உ-ம்: வானியல் (Astronomy)) கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும். அதுவே பகுத்தறிவுக்குப் பொருந்துவதாகும். உதாரணமாக, சூரியனின் வடசெலவு (உத்தராயனம்), தென்செலவு (தட்சிணாயணம்) இரண்டும் வானில் சூரியனின் கணநிலைநேரத்தை (Solstices) கொண்டு கணக்கிடப்பட்டால் வானத்து அறிவியலோடு இயையும். அதேபோல, சம-இராப்பகல் நாள் (Equinoxes) வானியலின்படி அமைய வேண்டும். அதாவது மாதப் பிறப்பு நாட்கள் வானியலுக்கு ஒத்திசைவுடன் செயல்படுதல் வேண்டும். அது இல்லாமல், வானியலுக்கு ஒவ்வாத பிழைபட்ட முறையில் ஒவ்வொருவரும் ஒன்றைப் புத்தாண்டு என்று சொல்லல் பயனற்ற செயலாகவே முடியும். திருவள்ளுவர் காலக்கணக்கைச் சரியாகச் செய்யாத மறைமலையடிகள் மாணிக்கவாசகர் காலத்தையும் 6 நூற்றாண்டுகள் முன்னால் போட்டுக் குழப்பிவிட்டார். பல்கலைகளில் அறிஞருலகு இரண்டையும் திருத்திவிட்டது. தொல்காப்பியர் தான் செந்தமிழை வரையறுத்தவர் என்பதால், செந்தமிழ் இலக்கியங்கள் குறிக்கும் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) மதுரைப் பேராசிரியர் தமிழண்ணல் (தினமணி: செப். 2, 2011) பரிந்துரைக்கும் தொல்காப்பியர் நாள் என்று அறிவிக்கலாம்.

                                                                                                                           
Nalvar.jpg
                                                                                                     

Further Reading on Classical Tamil New Year:
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-2/
Let me give another example of a wrong date determination by Maraimalai adikal. Tamil scholars like M. Rajamanickanar, T. V. Gopalaiyar, R. Nagaswamy, Vidya Dehejia, N. Cutler, Glenn Yocum, Zvelebil, ... have written that Manikkavacakar lived in the 9th century. MaRaimalai aDikaL came up with the idea that Manikkavacakar lived 6 centuries earlier - i.e., in 3rd century CE. The sole basis for the earlier date is an Appar tevAram verse, but when we read that poem, it seems not connected with Manikkavacakar at all. Like the wrong century attribution for Tiruvacakam author, MaRaimalai aDikaL also wrote about Tiruvalluvar's birth date as Thai Pongal and the year of birth Maraimalai gave for Valluvar (31 BCE!) is earlier by some 5 or 6 centuries. Both of these mistakes by Maraimalai aDikaL are well analyzed in academic works published by University research scholars. Note that Tamil new year date is used not just in Tamil Nadu, but also in Kerala, Sri Lanka (both Sinhala and Tamils), Cambodia as well. With who Tamils had relations historically.
Eelam Tamil views on the Tamil New Year change:
http://www.lankaweb.com/news/items/2011/01/03/a-tamil-cultural-debate/
http://transcurrents.com/tamiliana/archives/618
http://www.mayyam.com/talk/showthread.php?1013-Significance-of-the-Tamil-New-Year&
Lankan Tamils reject Karunanidhi’s diktat on Tamil New Year 
http://groups.google.com/group/mintamil/msg/30c18ffe223d0c13
http://mdmk.org.in/article/jan10/vaiko-letter-pongal
Just as Maraimalai Adikal was clearly mistaken about Manickavasakar's time period, he was way off on Tiruvalluvar birth date as well. That is why I recommend that if in the future Tamils (Eelam Tamils, TN Tamils, ...) want a linear Tamil new year, why not they just adopt Gregorian calendar itself? why the shift of 14 days from January 1. After all, all Indian calendars are unscientific and it is a fact that Precession corrections are not done 100% in the astrological calendars of India (incl. Tamil ones). So, why bother? If the party comes back to power, & if a new Tamil New Year is really needed, it has to be based scientifically on Astronomy, not the astrology of Thai 1 calculations. 
In sum, like 
- (i) Salivahana Era 
- (ii) Hijiri Era 
- (iii) Christian Era 
we can add (iv) Classical Tamil Era (Chiththirai 1) . 
Chiththrai 1 (of every year) should be declared officially as the Classical Tamil era, as evidenced from old Tamil literature, and because Tolkappiyam is the book that defines Classical Tamil (like Panini for Classical Sanskrit), the Classical Tamil New Year (Chiththirai 1) can be called as Tolkappiyar day to honor the ancient grammarian by Tamil society.


N. Ganesan



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: திருவள்ளுவர் பிறந்தநாளும், செந்தமிழ்ப் புத்தாண்டு தினமும்
Permalink  
 


 திருக்குறள் - குறளால் விளக்கம்

 
 
 

துரை. ந. உ 13:26, 26 மே 2010  

அறம் : அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு                                       [01:01]
விளக்கக் குறள் : 

எழுத்தின் தொடக்கம் அகரம்; இறைவன் 
உலகத்தில் வாழும் உயிர்க்கு (அ)

 

அகரம் முதலாம் மொழிக்கு ; பகவான்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு (ஆ)
எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ 
வுலகத்துக்(கு) என்றும் இறை (இ)

 

 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்                                    [01:02]

விளக்கக் குறள் : 
கற்றும் இறைவன் அடித்தொழார்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர் (அ)

கற்றறிந்தும் மூத்தோர் பணியார்; அனைத்தும்
அறிந்தும் பயனொன்றும் இல் (ஆ)

 

 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்                                        [01:03]

விளக்கக் குறள் : 
மலர்மனம் வாழுமிறைத் தாளடி சேர்ந்தார்
உலகில் நிலைத்துவாழ் வார்

மலர்போல் பரந்தஇறைத் தாளடி சேர்ந்தார்
உலகில் நிலைத்துவாழ் வார்

 

 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல                                      [01:04]

விளக்கக் குறள் : 
பற்றற்ற ஆண்டவன் நற்பாதம் சேர்ந்தார்க்கு
முற்றும் இடையூறு இல

 


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு                       [01:05] 

விளக்கக் குறள் : 
அறியாமை ஆசை அணுகாது; ஆண்டவனின்
அர்த்தம் புரிந்தார் வசம்                                    (அ)
பொருளாசை காரிருள் அண்டாது; நற்கடவுள்
பொருள்தம்முள் ஏற்றார் இடம்                       (ஆ)

 

 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்                                  [01:06] 

விளக்கக் குறள் : 
ஐம்புலன் ஆட்கொண்ட ஆண்டவனைப் பின்தொடர்வார்
வாழ்வு நிலைக்கும்என் றும்

 

 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது                               [01:07]

விளக்கக் குறள் : 
தனக்கிணை இல்லா இறைத்தாள்ப் பணியாதார் 
துன்பம் களைதல் அரிது

 

 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறஆழி நீந்தல் அரிது                                            [01:08]

விளக்கக் குறள் : 
அறக்கடவுள் தாள்சேரா(து); இப்பிறவி ஆழ்கடல் 
சற்றும் கடத்தல் அரிது

 

 

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை                                       [01:09]

விளக்கக் குறள் : 
இருந்தும் இயங்காப் புலனாம்; இறைத்தாள்
விரும்பி வணங்காத் தலை

 

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்                                        [01:10]

விளக்கக் குறள் : 
பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்கார்;
இறைவன் அடித்தொடரா தார்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard