New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மகாத்மா காந்தி -திராவிடம்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
மகாத்மா காந்தி -திராவிடம்
Permalink  
 


Thiyagu Thiyagarajan "இந்தியாவுக்குத் தெற்கே உள்ள பகுதியை திராவிடம் என்று அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தார்".அவ்வாறு கருதுவதும் அதன் தொடர்ச்சியாக வடக்கில் இருப்பவர்கள் எல்லாம் ஆரியர்கள் என்று கருதி செயல்படுவதும் ஒரு முழுமையான மாயை என்று மகாத்மா கூறினார். இந்திய மக்கள் தங்கள் வரலாற்றில் இரண்டறக் கலந்துவிட்டனர். எனவே தெற்கே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அனைத்து மக்களும் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் தான். அனைவரும் இந்தியர்கள். அனைவரும் உற்றார் உறவினர்கள். பாகிஸ்தானை பிரித்துக் கொடுக்கும் தவறினால் மேலும் பல பிரிவினைகள் தோன்றினால் இந்த சோக நிகழ்வுகளுக்கு ஒரு முடிவே இருக்காது. சுயாதிபத்தியமுள்ள சுதந்திர நாடுகளை ஏராளமான அளவில் உருவாக்குவது இந்தியாவுக்கோ அல்லது உலகத்துக்கு நன்மை பயப்பதல்ல. இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அடிமை நிலையில் இருந்தால்தான் அவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் ஏற்படும். சுயமாக செயல்பட அனுமதித்தால் அவர்கள் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொள்வார்கள். எண்ணற்ற இனக் குழுக்களாக பிரிந்து விடுவார்கள். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு திசையில் செல்வதாக இருக்கும்.

இந்திய மக்கள் அனைவரும் மற்ற பிரிவினரின் மொழிகளைப் பற்றியும் பழக்க வழக்கங்களையும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். குறுகிய பிரதேச வெறித்தனத்தை கைவிட வேண்டும். உண்மையான தேசபக்தி என்பது இத்தகைய அணுகுமுறையில் தான் அடங்கியுள்ளது. அவ்வாறின்றிக் குறுகிய மாநில அளவிலான நோக்கத்துடன் செய்யப்படுவார்களானால் அவர்கள் நேசிக்கக்கூடிய கனவு காணக் கூடிய இந்தியா எங்கே இருக்கும்?

ஒழுக்க நெறிக்கு மதிப்பளிக்கும் ஒரு அரசாங்கத்தின் கீழ் தான் இந்தியாவினால் ஒரே அமைப்பாக இணக்கமான முறையில் செயல்பட முடியும்.

~ மகாத்மா காந்தி
16-07-1947



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard