New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விக்ரமசோழனின் கல்வெட்டு ஆயுர்வேதத்திற்கு வ்யாகரணம்


Guru

Status: Offline
Posts: 24582
Date:
விக்ரமசோழனின் கல்வெட்டு ஆயுர்வேதத்திற்கு வ்யாகரணம்
Permalink  
 


ஆயுர்வேதத்திற்கு வ்யாகரணம்

ஆடுதுறையிலுள்ள விக்ரமசோழனின் கல்வெட்டொன்று அங்கிருந்த பாடசாலையைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. அங்கிருந்த வைத்யசாஸ்த்ரம் படித்த மாணவர்கள் கற்க வேண்டிய நூல்களாக அது குறிப்பிடுவது.

1. வாகடம் - வாக்படம்
2. சரக ஸம்ஹிதை மற்றும்
3. வ்யாகரணம் குறிப்பாக ரூபாவதாரம்

இதில் ஆயுர்வேதம் படிக்கும் மாணவர்கள் வ்யாகரணத்தையம் படிக்க வேண்டுமென்று குறிப்பு தெளிவாகிறது.
மேலும் பல்வேறு தமிழக சாலைகளிலும் 10-11ஆம் நூற்றாண்டுகளில் வ்யாகரணத்தைப் போதிக்க இருந்த நூல் ரூபாவதாரமேயாம். இது தர்மகீர்த்தியென்னும் பௌத்தரால் இயற்றப்பெற்றதாகும். இவர் புகழ்பெற்ற பௌத்த ஆசிரியரான தர்மகீர்த்தியிலிருந்து வேறானவராகக் கருதப்பெறுகிறார். இவரது காலத்தை 11-12ஆகக் கருதுகிறார்கள். ஆனால் தமிழக - கர்ணாட கல்வெட்டுக்களைக் கொண்டு அதற்கு சில நூற்றாண்டுகள் முன்பு கொள்ளப்பட வேண்டியதிருக்கிறது.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
RE: விக்ரமசோழனின் கல்வெட்டு ஆயுர்வேதத்திற்கு வ்யாகரணம்
Permalink  
 


 

கனிஷ்கரின் தாத்தாவும் ஸோமயாகமும்

எதையாவது சொல்லுவோம். ஆப்கானிஸ்தானில் ரபடெக் என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டொன்று குஷாணமன்னன் கனிஷ்கனின் காலத்தது. இது அவனுடைய பாட்டனாரான ஸத்தக்ஷிணரைக் (நல்ல தக்ஷிணை அளிப்பவர்) குறிப்பிடும்போது அவர் ஸோமயாகத்தை வேட்டவர் என்று குறிப்பிடுகிறது. வேற்றுநாட்டு மன்னவனின் பாட்டனார் ஸோமயாகம் வேட்ட செய்தி வியப்பைத் தருகிறது.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

 Sankara Narayanan G

கடிகாஸ்தானத்தின் தொடக்கம்

வேதகடிகைகள் தென்னகம் முழுமையும் இருந்த செய்தி தெரிந்ததுதான். இதற்குப் பழமையான குறிப்பாக விக்ரமனின் சிக்குள்ள செப்பேடு, கதம்பர்களின் தாள்ளகுண்ட கல்வெட்டு ஆகியவை காட்டப்பெறுகின்றன. ஆனால் ஆய்வாளர்கள் கீழ்வரும் வடமொழி இலக்கணத்தின் உரையான மஹாபாஷ்யத்தின் வரிகளைக் காட்டுகிறார்கள்

ஏவம்ʼ த்³ருʼஶ்யதே லோகே ய உதா³த்தே கர்தவ்யே(அ)நுதா³த்தம்ʼ கரோதி க²ண்டி³கோபாத்⁴யாயஸ்தஸ்மை சபேடாம்ʼ த³தா³தி அன்யத்த்வம்ʼ கரோஷீதி |

உலகில் உதாத்த ஸ்வரத்திற்குப் பதிலாக அனுதாத்த ஸ்வரம் எடுத்தால் கண்டிகோபாத்யாயர் கன்னத்தில் அறைவிடுவாரல்லவா என்று செல்கிறது.

இதில் இடம்பெறும் கண்டிகோபாத்யாயர் என்பவரின் சொல்விளக்கத்தை கடிகையைப் போன்று பானையில் பரீக்ஷை நடக்குமிடத்தின் ஆசார்யர் என்றே ஆய்வாளர்கள் கொள்கின்றனர். இந்த அடையாளம் சரியானால் கடிகாஸ்தானம் என்பது பொயுமு இரண்டிற்கும் முற்பட்டதாகத் திகழ்ந்தது என்றே கூறலாம்..__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
விக்ரமசோழனின் கல்வெட்டு ஆயுர்வேதத்திற்கு வ்யாகரணம்
Permalink  
 


 

குணபரன் பாடலிபுரமான திருப்பாதிரிப்புலியூரில் சமணப்பாழிகளை அழித்து திருவதிகையில் குணபரேச்வரம் எடுப்பித்த செய்தி பெரியபுராணம் தரும் செய்தி. இன்று திருவதிகை மில் குணபரேச்வரம் என்ற பெயரில் இருக்கும் கோயில் சிற்சில பல்லவ எச்சங்களோடு புதிய கோயிலாகக் காட்சியளிக்கிறது.

Jayavarma Rudra Cholanar கடலூர் திருப்பாதிரிப்புலியூர் என்பது மஹேந்திரவர்ம பல்லவன் காலத்தில் பாடலிப்புரம் என்று வழங்கப்பட்டது. அங்கிருந்த சமணர்களின் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அதன் கற்களைக் கொண்டு எம்பெருமான் அவர்களுக்கு ஆலையம் எழுப்பினர் மஹேந்திரவர்மன் என்பதாகும்.

இந்
த பாடலிப்புரம் என்ற பெயரானது இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னா என்பதாகும். இதுபோல பீகாரின் ஒரு பகுதியான வைஷாலி என்ற பெயரில் பல்லவர் காலத்தில் பாண்டிச்சேரி - கடலூர் பகுதியில் "வேசாலி நாடு" என்று இருந்தது. இந்த பகுதியை அரசாட்சி செய்தவர்கள் வேசாலிப் பேரரையர்கள் என்று குறிப்பிடப்பட்டனர் என்பதை நிருபதுங்கவர்ம பல்லவனின் பாண்டிச்சேரி பாகூர் செப்பேடு குறிப்பிடுகிறது. இந்த வேசாலிப் பேரரையர்கள் "குரு குலத்தவர்கள்" என்றும் குறிப்பிடப்பட்டதை இச் செப்பேடு குறிப்பிடுகிறது. 

காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்ட வர்மன் என்ற பெயர் உள்ளவர்களைப் பற்றி கி.பி.10 ஆம் நூற்றாண்டின் பீகார் கயா பகுதியில் உள்ள சாசன குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.

எனவே, சைவம் வளர்ச்சிபெறுவதற்கு முன்னர் சமணம் தமிழகத்தில் மிகவும் கோலோச்சியது என்று தெரியவருகிறது சார். இதன் காரணமாகவே இன்றும் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதி ஜைன காஞ்சி என்று வழங்கப்படுகிறது போலும் சார்.-- Edited by Admin on Wednesday 7th of August 2019 02:32:29 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
RE: விக்ரமசோழனின் கல்வெட்டு ஆயுர்வேதத்திற்கு வ்யாகரணம்
Permalink  
 


 

சீனர்கள் குறிப்பிடும் தமிழக அதிகாரம்

சீனநூல்களிலும் தமிழகத்தைப் பறாறிய குறிப்புகள் உண்டு. வஜ்ரபோதி என்னும் பௌத்தத் துறவி ராஜஸிம்ஹ பல்லவனின் வேண்டுகோளால் காஞ்சிக்கு வந்து தனது வேண்டுதலால் மழையை வருவித்து செய்தியைச் சீன நூல்கள் குறிப்பிடுகின்றன. இதை வைத்து ராஜஸிம்ஹனின் காலத்தை ஒருவாறாகத் தீர்மானிக்க முடிகிறது. மேலும் 720 இல் வலிமை வாய்ந்த மன்னனாக ராஜஸிம்ஹனைக் கூறும் குறிப்புகள் அவன் எடுப்பித்த புதாத விஹாத்திற்கு சீன அரசன் பெயரிட்டதையும் குறிப்பிடுகின்றன.
790இல் சாளுக்யரைத் தென்னகத்தலைவராக ஒப்புக்கொளாளும் சீன நூல்கள் 730 இல் ராஜஸிம்ஹனைக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

 Sankara Narayanan G

வடமொழி இலக்கியங்களில் 100க்கும் மேற்பட்ட அணிகள். அவற்றுள் ஒன்று அதிசயோக்தி. அதிசயமாகக் கூறல் என்று பொருள். இதற்கு எடுத்துக்காட்டைக் கூறும் சந்த்ராலோகம் என்னும் நூல் பின்வரும் செய்யுளைக் குறிப்பிடுகிறது.

யாமி இதி ப்ரிய-ப்ருஷ்டாயா: வலய: அபவத் ஊர்மிகா.

தலைவன் தொழிலுக்காக வேறிடம் செல்லும்போது பிரிவாற்றாமைையால் தலைவி உடலிளைப்பாள் என்பது பொதுவான இலக்கியச் செய்தி. இதனைப் பாலைத்துறை என்று தமிழிலக்கியங்கள் கூறாநிற்கும். அத்தகையதொரு எடுத்துக்காட்டுத்தான் இது. 

யாமி - செல்கிறேன். இதி - என்று ப்ரிய-ப்ருஷ்டாயா: - தலைவனால் கேட்கப்பட்ட தலைவிக்கு ஊர்மிகா - மோதிரம் வலய: - வளையல் அபவத் - ஆனது.

நான் வேற்றூர் சென்று வரட்டுமா என்று தலைவன் கேட்ட மாத்திரத்திலேயே தலைவியின் உடல் இளைத்து மோதிரம் வளையலாக ஆகிவிட்டதாம்.

என்னதான் கவிதைக்கு பொய்யழகு என்றாலும் இப்படியெல்லாமா கற்பனை செய்வார்கள்.

முடியல.............................


__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

மகதஸாம்ராஜ்யம் வீழ்ந்த பிறகு தலையெடுத்த பல அரசுகளில் ஒன்று பாஞ்சால அரசு. முன்பே மஹாபாரத காலந்தொட்டு இருந்தாலும் மகதத்திற்குப் பிறகு மீண்டும் மித்ர மன்னர்களால் தலையெடுத்தது. அரசர்கள் த்ருவமித்ரன், பானுமித்ரன், அக்னிமித்ரன், பூமிமித்ரன் என்று மித்ரன் என்ற பெயரைக் கொண்டமையால் அரசே மித்ர அரசு எனப்பெறுகிறது. இவர்கள் தங்கள் பெயரை ஒருபுறமும் அதற்குரிய இலச்சினையை மறுபுறமும் பொறித்துக் காசுகளை வெளியிட்டனர். பானுமித்ரன் பின்புறம் கதிரவனையும், பூமிமித்ரன் பின்புறம் பூமிதேவியையும் வைத்தாற்போல காசுகளை வெளியிட்டனர். இங்கே படத்தில் கொடுக்கப் பெற்றிருக்கும் காசு பொயுமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பூமிமித்ரனின் காலத்தது. மறுபுறம் பூமிமிதஸ என்னும் ப்ராக்ருத ப்ராஹ்மி பொறிப்பும் காணப்பெறுகிறது. பூமிதேவியின் மிகப் பழைய வடிவமென இதனைக்கருதலாம்.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

’நீங்க ஒண்ண நல்லா புரிஞ்சிக்கணும்’

இந்து சமயம் பன்முக வழிபாட்டுத் தன்மை கொண்டது; சித்தர் வழி என்று தனியாகப் பிரிப்பது உள் நோக்கம் கொண்டது. இப்போது திடீரென்று சித்தர் வழியை முன்னிறுத்தக் காரணம் என்ன?

சங்க இலக்கியம் சித்தர் வழியைச் சொல்லிற்றா?
அதன் தொன்மை யாது?

ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை 
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும் 
கடல் வளர் புரிவளை புரையும் மேனி 
அடல் வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும் 
மண்ணுறு திருமணி புரையும் மேனி 
விண்ணுயர் புட்கொடி விறல்வெய்யோனும் 
மணி மயில் உயரிய மாறா வென்றிப் 
பிணிமுக ஊர்தி ஒண்செய்யோனும் - என 
ஞாலம் காக்கும் கால முன்பின் 
தோலா நல்இசை நால்வர் உள்ளும்....

எனும் சங்கப் பாடல் சித்தர் வழிபாட்டைச் சொல்கிறதா?

‘அணங்காடுதல்’ எனும் வழக்கத்தைத் தொல் இலக்கியம் சொல்கிறது, அது சித்தர் வழியா?

‘அம்பாவாடல்’ என ஒன்று; அது சித்தர் வழியா?

வாசவி அம்மன், எல்லம்மன், திரௌபதி அம்மன், காந்தாரி அம்மன், உச்சி மாகாளி - எல்லா வழிபாடுகளும் இங்குள்ளன; பல புதிதாக வந்தவை. சித்தர் வழிபாடு சேராதவை என்று இவற்றை எல்லாம் நீக்குவதற்கு இந்து மதக் காவலர் சுகி சிவம் ஐயாவுக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை.

மாலை அணிந்து, நோன்பிருந்து சபரிமலை செல்வது சித்தர் வழியாகாது; இந்து சமயக் காவலர் அதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பாரோ?

அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் 
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே!

என்று சித்தர் சிவவாக்கியர் பஜனை செய்வதை சித்தர் வழி இந்துமதக் காவலர் ஏற்கிறாரா? மறுக்கிறாரா?__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
விக்ரமசோழனின் கல்வெட்டு ஆயுர்வேதத்திற்கு வ்யாகரணம்
Permalink  
 


சேரமான் பெருமாள் நாயனாரின் கல்வெட்டு

63 நாயன்மார்களில் சமகாலக் கல்வெட்டில் நேரடியாகக் குறிப்பதாக அறியப் பெறுபவர். சேரமான் பெருமாள் நாயனார். காடவர்கோன் கழற்சிங்கனின் அடையாளம் சரியாகத் தெரியாததால் அவரை இதற்கு சேர்க்கவியலாது. அவருடைய வாழைப்பள்ளி கல்வெட்டு 12 ஆம் ஆட்சியாண்டைச் சைர்ந்தது. பொதுவாக ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற பொது மங்கலச் சொல்லோடு கல்வெட்டுகள் தொடங்க இந்தக் கல்வெட்டு மட்டும் நமச்சிவாய என்று தொடங்குகிறது. ஸ்ரீ ராஜாதிராஜ பரமேச்வர பட்டாரக ராஜசேகரதேவர்க்கு யாண்டு என்று தொடங்கும் இந்தக் கல்வெட்டு திருவட்டாய் கோயிலில் நித்யபலி கொடுக்காதவர்களுக்கு தினார்கள் பெருமாள் அதாவது சேரமான் பெருமாள்அபராதம் விதித்த செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது. நமச்சிவாய போன்ற மங்கலச்சொல்லாலும் பிற அடைமொழிகளாலும் இவரே சேரமான் பெருமாள் என்பதுறுதி. மேலும் மலையாளத்தின் முதல் கல்வெட்டாகவும் கருதப்பெறுகிறது. இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பதால் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் காடவர்கோன் கழற்சிங்கனும் கூட ஒன்பதாம் நூற்றாண்டே என்றும் ஒருவாறாகக் கணிக்க இயல்கிறது. இவருக்கு முன் ஆண்ட குலசேகர வர்மரே குலசேகர ஆழ்வாராக அடையாளம் காட்டப்பெறுபவர்.

இந்நிலையில் சேரமான் பெருமாள் நாயனார் மெக்கா சென்றதாகக் கூறப்படுவது கற்பனையே. திருக்கயிலாய உலா பாடிய பெருமானைச் சோழர்கால ஓவியங்கள் அதாவது அவர் கைலையை அலங்கரித்த இருநூறு வருடங்களுக்கு உட்பட்ட ஓவியங்கள் அவர் கைலை ஏகியதைக் கூறுகின்றன. இவை பெரியபுராணத்திற்கு முற்பட்ட வை. ஆகவே மெக்கா சென்றதாகக் கருதப்பெறும் சேரமான் பெருமாள் 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்பதுறுதி.சேரமான் பெருமான் என்ற பொதுப்பெயர் கொண்டு இவ்விதம் குழப்பம் நேரிட்டது.

படம் கோகுள் மாமா

 

Ramachandran
Ramachandran சேரமான் பெருமாள்-கழறிற்றறிவார் கி. பி. 8ஆம் நூற்றாண்டவர் என்றும் சுந்தரரும் கழற்சிங்கரும் சமகாலத்தவர்கள் என்றும் கொள்வது பொருத்தமாகத்தெரிகிறது. மாணிக்கவாசகர் 9ஆம் நூற்றாண்டினராகலாம்
 
 • Sankara Narayanan G
  Sankara Narayanan G Ramachandran கொண்டால் திருவஞ்சைக்களத்து கோயிலிலே இடிக்கிறது. மஹோதையிலும். இரண்டுமே ஒன்பதாம் நூற்றாண்டு கோயில்கள்

   
 • Ramachandran
  Ramachandran காலநிர்ணயம் துல்லியமானதா? மட்டுமின்றி, திருமுறைச்சைவம் சார்ந்த சடங்குகள் -ஆகமநெறிகள் சேரநாட்டில் பின்பற்றப்பட்டனவா?
   
 • Sankara Narayanan G
  Sankara Narayanan G Ramachandran இல்லை. ஆனால் கால நிர்ணயம் மிகச்சரி. அஞ்சைக்ள அகழ்வாய்வுகளிலும் ஒன்பதற்கு முன்பு குடியமைப்பில்லையென்கின்றன
   
 • Deva Priyaji
  Deva Priyaji திருவஞ்சைக்கள தொல்லியல் அக்ழ்ழ்வாய்வுகள் அப்பகுதி முழுதுமே 800 வரை கடல் அடியில் இருந்தது என்கிறது
   
  படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 •  -- Edited by Admin on Thursday 8th of August 2019 08:44:57 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
RE: விக்ரமசோழனின் கல்வெட்டு ஆயுர்வேதத்திற்கு வ்யாகரணம்
Permalink  
 


தரும். மாதா எந்நிலையிலும் பூஜிக்கத் தகுந்தவள் என்பதற்காகத்தான் பெயரே இப்படிச் சூட்டியிருக்கின்றனர். தந்தை தீயவராக இருந்தால் கைவிடச் சொல்லும் தர்மசாஸ்த்ர நூல்கள் தாய் தீயவளாக இருந்தாலும் கைவிடக்கூடாது என்றே கூறுகின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

கும்பகோணத்தில் மீமாம்ஸை

கும்பகோணத்தில் நாகேச்வரன் கோயிலிலுள்ள முதலாம் பராந்தகன் காலத்திய கல்வெட்டொன்று அங்கே ப்ராபாகர மீமாம்ஸையில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்க்கு பட்டவ்ருத்தி அளித்த செய்தியைத் தருகிறது. இரண்டு செய்திகள் இதில் முக்கியமானவை. ஒன்று சோழர்காலத்திய சாஸ்த்ரங்களுக்கான படிப்பைப் பற்றிய கல்வெட்டில் இது பழைமையானது. மற்றொன்று அக்கால கட்டத்தில் தமிழகம் முழுமையும் ப்ராபாகரமீமாம்ஸைக்கு இருந்த செல்வாக்கு. கிட்டத்தட்ட சோழர்கால கடிகை அனைத்திலும் ப்ராபாகர மீமாம்ஸை இடம் பெற்றிருக்கிறது. 
கர்ம மீமாம்ஸையைப் பொறுத்தவரை குமாரில பட்டரின் கிளையை பாட்ட மீமாம்ஸை என்றும் அவருடைய மாணவரின் கிளையை ப்ராபாகர மீமாம்ஸை என்றும் வழங்குவர். சீடரானாலும் அவருடைய மதத்தைக் குருமதம் என்றே வழங்குவர். அதற்கான சிறப்பு தமிழகத்திலும் வழங்கப்பெற்றிருப்பது சிறப்பானது.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

 

ஸ்ரீராமதாஸ் மகாலிங்கம்

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றொர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ..
ஐவருள் ஒருவன் - அக்னி தேவன், அறுவர் - கார்த்திகை பெண்டிர். முருகர் தோற்றம் பற்றி திருமுருகாற்றுப்படை சொல்வது, கந்த புராணம் சொல்வது. கூடவே கொற்றவை தான் தாய் என்று வேறு வருவது சிறப்பு :)

பரிபாடல் 5 சொல்வது சப்த ரிஷிகள் மனைவியருள் அருந்ததி இல்லாத ஏனைய ஆறு பேர் இந்த பெண்டிர் என்று. சப்த ரிஷி மனைவியர் எல்லாம் திராவிடர் என்று உளறலாளர் ஒத்துக்குமா?

 

கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,

மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
சாலார்; தானே தரிக்க' என, அவர் அவி 
உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித்
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்: 
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்:
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,

 

 

ஐவருள் ஒருவன் - அக்னி தேவன், அறுவர் - கார்த்திகை பெண்டிர். முருகர் தோற்றம் பற்றி திருமுருகாற்றுப்படை சொல்வது, கந்த புராணம் சொல்வது. கூடவே கொற்றவை தான் தாய் என்று வேறு வருவது சிறப்பு :

 

)

 __________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

மூத்தவன்

சமக்கிருதம்/சமஸ்கிருதம் (அந்நியர் சூழ்ச்சியில்)

சமக்கிருதத்தை உருவாக்கியவர்கள் முதலாவது சங்க கால தமிழர்கள்.

முதலாவது சங்க காலத்தில் ஆரியர்களின் ஜேமானியமும் பூர்வீக தமிழர்களின் தமிழும் நன்றாக கலந்து விட்டன.

சமம் என்றால் பொது. கிருதம் என்றால் சாறு.
பல மூலிகைகளை கலந்து பிழிந்து எடுக்கும் சாறை, கிருதம் அல்லது அருமருந்து என்று சித்தர்கள் அழைப்பார்கள். அக்காலத்தில் சித்தர்கள் தான் வைத்தியர்கள்.

ஆதிதமிழ் தாய்க்கும் ஆரிய ஜேமானிய தந்தைக்கும் பிறந்த பல (இந்தோ-ஆரிய) மொழிகளை பிழிந்து எடுத்து, உருவாக்கப்பட்டது (மொழி) சமஸ்கிருதம்.

இதன் நோக்கம், எல்லோரும், தமிழர்களின் சனாதன தர்மத்தை மிக இலகுவாக அறிந்து கொள்வதற்கே.

இன்று உலகில் உள்ள எந்த மொழி பேசுபவர்களும், எந்த கோவில்களிலும் சென்று வழிபட கூடியதாக இருப்பதற்கு காரணம் எங்கள் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சமஸ்கிருதம் என்ற எல்லோருக்குமான பொது மொழிக்கருவி.

அதோடு ஒலிகள் மூலமாகவும் நோய்களைத்தீர்க்கலாம் என்ற அடிப்படையில் சமஸ்கிருத மந்திரங்கள் உருவாக்கப்பட்டன.

கோவில்களில் மந்திரங்கள் ஓதும்போது பல மன கஷ்டங்கள் நீங்குவதோடு உடல் நோய்கள் கூட ஆறி உடல் புத்துணர்ச்சி பெறும்.

ஒலி இசை மனதை குணப்படுத்த, மகிழும் மனம் உடலை குணப்படுத்தும்.

சமஸ்கிருதம் தமிழர்களின் மதிப்பில்லாத மருந்து.
அந்நியர்கள் சமஸ்கிருதத்தை அழித்தால் தமிழ் அழியும் என்று கணக்கிட்டு திராவிடர் மூலமாக அழிக்கிறார்கள்.

சமஸ்கிருதம் அழிய அழிய ஆங்கில கிறிஸ்தவமும், அரேபிய இஸ்லாமும் தமிழர்களை அடிமைகளாக்கி, இன அழிப்பும் செய்து கொண்டிருக்கின்றன.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

ரிக்வேதத்திலிருக்கும் இந்த மந்த்ரம் இந்தியக் கட்டிடக் கலைத்துறையின் வளர்ச்சியை ஆய்வோருக்கு இன்றியமையாதது.

ஶதமஶ்மன்மயீனாம் புராமிந்த்ரோ வ்யாஸ்யத்|| திவோதாஸாய தாஶுஷே|| 20 ||

இந்த்ரன் திவோதாஸனுக்கு கல்லாலான நூறு புரங்களை வழங்கினான் என்பது இதன் பொருள். இதை ஆய்ந்த ஆய்வாளர்கள் அக்காலத்திலேயே கல்லினாலான கோட்டைகள் இருந்தமைக்கு இதனை எடுத்துக் காட்டாகக் காட்டுகின்றனர். இந்த்ரன் கொடுத்த செய்தியை ஒப்புக்கொள்ளாத நடுநிலை ஆய்வாளர்கள் கூட வேதகாலத்தில் கல்லாலான அமைப்புக்கள் இருந்தமை பற்றியே இத்தகைய குறிப்பு ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் கருதுகின்றனர்.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

சோழர் காலத்து ஆகமக்கல்வி

திருமுக்கூடலிலுள்ள வீரராஜேந்த்ரனின் கல்வெட்டு அங்கு கற்பிக்கப்பெற்ற பல்வேறு பிரிவுகளைத் தரும் தறுவாயில் மூவகை ஆகமங்கள் கற்பிக்கப்பெற்ற தகவலையும் தருகிறது. அவற்றுள் மஹாபாஞ்சராத்ரத்திற்கு 10 மாணவர்களும் சைவாகமத்திற்கு 3 மாணவர்களும் வைகானஸத்திற்கு 5 மாண்வர்களும் இருந்த செய்தி பதிவாகியுள்ளது.

அப்பவும் இம்புட்டு பேர்தான் படிச்சாவளா...__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

தலைவர் - தலவார

ஆந்திர இக்ஷ்வாகு வம்சத்தவரின் செப்பேடுகளில் வந்துள்ள சொல் மஹாதலவார என்பதாகும். அரசனின் ப்ரதிநிதியாக இருந்து ஆள்வோரைக் குறிக்கும் சொல். கிட்டத்தட்ட கேரளத்தின் நாடுவாழிகளைப் போல. இந்தச் சொல் ஜைன நூலான ஸுபோதிகையிலும் வருகிறது. இதற்கு மூலமான சொல் வடமொழியில் இன்மையால் இது தமிழ்ச்சொல்லான தலைவர் என்னும் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கருதப்பெறுகிறது. தளவாய் முதலிய சொற்களும் இதனோடு ஒட்டி நோக்கப்பெறுகின்றன.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

பறையர் சங்கம் Pariah Foundation

ரஞ்சித் சொல்கிறார் கறுப்பர்கள் மிகத்தெளிவாக போராடி விடுதலை வாங்கினார்களாம்.

எப்பா ரஞ்சித் அமெரிக்காவில் வந்து பார் அவர்கள் எப்படி வாழுகிறார்கள் என்று, ஜாதியை (குல மரபை) மறந்து மொழியை மறந்து கலாச்சாரத்தை மறந்து கிறிஸ்த்தவனா முசுலீமா என்று புரியாமல் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிடருக்கிறார்கள். தான் வாழ்த்த கதையை எல்லாம் மறந்து விட்டு இன்னமும் நாங்க அடிமைகள் என்று சொல்லிக்கொண்டு உளவியலா அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் கொடுக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். குடும்பம் எனும் முக்கியமான சமூக கட்டமைப்பை இழந்து தாய் மகன் உறவு கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அண்மையில் பிள்ளைகள் எல்லாம் க்ராடுவேஷன் வாங்கியதை கொண்டாட ஒரு பெண்மணி தனது 5 பிள்ளைகளுடன் வந்திருந்தார். அவர் பிள்ளைகளிடம் நாளைக்கு எல்லோரும் உங்க அப்பாக்களிடம் நீங்கள் க்ராடுவேஷன் வாங்குவதை சொல்லிவிடுங்கள் என்கிறார். அதாவது தாயும் தகப்பனும் சேர்ந்து வாழவில்லை 5 குழந்தைகள் 5 க்கும் வேறுவேறு தகப்பன்கள்.. தாயும் தகப்பனும் தனி தனியா வாழ்கிறார்கள். அவர்களுக்கு இடையே உறவுகள் இல்லை. அப்படி என்றால் குழந்தைகள் என்ன மாதிரி ,மனோ நிலையில் வளருவார்கள். பறையர்கள் வறுமையில் வாடினாலும் தாய் தகப்பன் குடும்பம் பிள்ளை பாசம் ஜாதி ஜனம் என்று வாழுகிறார்கள். எங்கியோ இரண்டு தேசத்தில் பிறந்திருந்தாலும் இரண்டு பறையர்கள் சேரும்போது உறவின் முறை கொண்டாடிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் விட்டு விட்டு கருப்பர்கள் போல வாழ வேண்டுமா?

தயவு செய்து கருப்பர்களை பறையர்களுக்கு வழிகாட்டியா காட்டாதீர்கள் இருப்பதையும் (ஜாதி ஜனம் குடும்பம்) இழந்துவிட்டு அம்போன்னு நிற்பார்கள்__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

 மதுரையை ஆண்ட இஸ்லாமிய தலைமைகளின் விவரம்:

ஜலாலுதீன் அசன்ஷா : 1335-1340

அலாவுதீன் உடெளஜி: 1340 - 1341

குத்புதீன் பெரோஷா - 40 நாள் மட்டும்

கியாசுதீன் தாமகனி: 1340 - 1342

நசீருதீன் : 1342 -1356

அடில் ஷா : 1356 - 1359

பக்ருதீன் முபாரக் ஷா: 1359 - 1368

அலாவுதீன் சிக்கந்தர்: 1368 - 1378

கியாசுதீன் தாமகனி வீரவல்லாளனை ஏமாற்றி தோலூரித்து கொன்ற பிறகு தான் உண்ட மருந்தாலே இவனும் இறந்ததாக இபன் படூடா தெரிவிக்கிறார்.கியாசுதீன் இறந்ததால் கலகம் மூளலாம் மதுரையில் என்று பயந்த அவன் சகோதரன் நசீருதீன் 1342ல் அரியணை ஏறினான்.

இந்த காலங்கள் மதுரையின் மோசமான காலகட்டம்.பாண்டியர்கள் தங்கள் வலிமையை முற்றிலும் இழந்து பிரிவுகளாக பிரிந்து சிற்றரசர் போல ஆகினர்.மதுரை தல வரலாறு என்ற நூல் சொல்கிறது பஞ்சாட்ஷர திருமதிலும் பதினான்கு கோபுரமும் தெரு வீதிகளும் இடிக்கப்பட்டன.நாயகர் கோயில் கர்ப்பகிருகம்,அர்த்த மண்டபம்,மகா மண்டபம் வரை தப்பியிருந்தது என்ற தகவலை சொல்கிறது.நாற்பது வருட காலம் கோவிலை நாசம் செய்தும் பொருள்களை அபரித்தும் செழிப்பாய் இருந்த மதுரையை தொன்மூதூர் பெருமையை பாழாக்கி சென்றனர்.சிசுக்கள்/பெண்கள் படுகொலை அன்றாட நிகழ்ச்சியாகிப் போனது.இந்த நேரத்தில்தான் ஸ்ரீரங்கநாதர் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்ததை இபன்படூடா ஆவணங்கள் மூலம் அறிகிறோம்.

மதுரை பாண்டியர்கள் வலிமையில்லாத நகரமாகிப் போனது இனி இறைவனை காக்க வேறு வழியில்லை என்று மூலஸ்தானத்திற்கு முன் கிளிக்கூண்டு அமைத்து ஒரு மிகப்பெரிய மண் மேட்டை கட்டி அங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்துவிட்டு பல விக்ரகங்களை மண்ணுக்குள் புதைத்துவிட்டு தங்கம்/ஐம்பொன்களை விக்ரகங்களை நாஞ்சில் நாட்டில் கொண்டு பாதுகாப்பாய் வைத்தார்கள்.அம்மன் திருவுருவை கோவில் கோபுரத்தின் மேல் ஒளித்து வைத்தனர்.நாற்பது வருட காலம் மதுரையின் மோசமான இருண்ட காலம்.

வீரவல்லாளனுக்கு பிறகு தென்னிந்தியாவில் உருவான வலிமையான இந்து மன்னர் ஹரிஹர புக்கர் வீரவல்லாளனின் நீட்சியே விஜயநகர பேரரசு.ஹரிஹர புக்கரின் மகன் குமார கம்பண்ண உடையாரே மதுரையை மீட்டார்.1371ல் இராஜ நாராயண சம்புவராயன் உதவியுடன் மதுரையை மீட்டார்.அப்போது அவர் கோவிலை திறந்த போது இறைவனுக்கு சூடிய மாலை வாடாமலும் விளக்கு அணையாமலும் இருந்ததாக நம்பப்படுகிறது அதை மதுரா விஜயத்திலும் அவர் மனைவி எழுதியுள்ளார்.(இன்றும் மதுரை கோவிலில் மண்மேட்டின் பொறுத்திய சிதிலமடைந்த லிங்கமும் பீடமும் உள்ளது)

தகவல்கள்:(மதுரை தலவரலாறு/ஸ்தானிகர் வரலாறு/மதுரா விஜயம்/இபன்படூடா/ஆலவாய்)__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

\\\ மரபார்ந்த பக்தி இலக்கிய அறிஞர்களிடம் இருக்கும் ஒருவகையான செயற்கைநெகிழ்ச்சியும் செயற்கைப் பரவசமும். அவர்கள் அதை ஒரு வகை நடிப்பாகவே பழகியிருக்கிறார்கள். \\ 

இதையும் "பெரியார்" தான் சொன்னார்! 😄😄

"ஒருத்தனை ஒருத்தன் அடிமை கொண்டால் சட்டப்படிக் குற்றம் என்கின்றோம். ஒருவனை ஒருவன் தொட்டால் தீண்டாமை என்று சொல்லுவது சட்டப்படிக் குற்றமென்றிருக்கும் போது, ஒரு பெண்ணை நிரந்தர அடிமையாக்கக் கூடிய திருமணம் சட்டப்படிக் குற்றமாக்கப்பட வேண்டியது தானே நியாயமாகும். இல்வாழ்க்கை குடும்பம் என்பதெல்லாம் மனிதன் காட்டு மிராண்டியாக இருந்த காலத்தில் இருந்திருக்கலாம். இன்றைக்கு ஏன் இந்தத் தொல்லை? இதை அறிவுள்ள மனிதன் சிந்திக்க வேண்டாமா?"__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

ஜோடிசேர சூலியின் அருள்

குறுந்தொகையில் 218 ஆம் பாடல் தலைவி தலைவனை அடைய செய்த வேண்டுதல்களைக் குறிப்பிடுகிறது.

விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்

தலைவன் என்னை மறந்துவிட்டான். ஆகவே இனி அவனுக்காக குகைகள் செறிந்த மலைப்பிளவில் உள்ள சூலிக்காக பலி முதலியன தரவேண்டாம். இனி கையில் அவளை வேண்டி காப்பும் கட்டமாட்டேன் என்கிறாள். ஆக தலைவனோடு சேர கொற்றவைக்குக் காப்புக் கட்டி வேண்டும் வழக்கம் இருந்தது என்று தெரிகிறது. துர்க்கையிடம் இத்தகைய வேண்டுதல்கள் இருந்தமை ருக்மிணி யின் பாகவதம் முதலிய நூல்களால் தெரிகிறது.

மற்றொரு ச்வாரஸ்யமான தகவல் துர்க்கைக்கான வடமொழிப் பெயராக கோட்டவி என்னும் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பதுதான். இவள் கோட்டையைக் காப்பதால் கோட்டவி எனப்படுகிறாள். கொற்றவை என்னும் சொல் வடமொழி ஏற்றம் பெற்றதா அல்லது வடசொல்தானா என்பது ஆய்வுக்குரியது. இவள் மஹாசக்தியின் சக்திகளில் எட்டு பேரில் ஒருவள்.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

குமரக் கடவுளும் ப்ரஹ்மசர்யமும்

தென்னாட்டில் விநாயகர் திருமணமாகாமலும் குமரக் கடவுள் இரு மனைவியரோடும் வீற்றிருக்க வடநாட்டில் விநாயகர் இருமனைவியரோடும் குமரன் ப்ரஹ்மசாரியாகவும் போற்றப்படுகிறார். அங்கு ப்ரஹ்மசாரிகளே பெரும்பாலும் குமரக் கடவுளைப் பூஜை செய்வர். இந்தக் குறிப்பு திருமுருகாற்றுப்படையிலும் இடம்பெற்றிருக்கக் காணலாம்.

அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்
டாறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை (180)

அறுநான்கு இரட்டி அதாவது நாற்பத்தெட்டு ஆண்டுகள் ஆறினிலா ப்ரஹ்மசர்ய வழியினில் கழித்த அந்தணர்கள் பூஜை செய்தமையை ஆற்றுப்படை திருவே ரகத்தில் குறிப்பிடுகிறது. ஏதோவொரு தொடர்பு உய்த்தறியக் கிடக்கிறது.

கடவுளரின் சக்தி வெளிப்பட பூஜித்தால் மனைவியர். உள்ளொடுங்கிப் பூஜித்தால் தனியர் என்பது இங்கே உணரவேண்டியது.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

ஸ்மார்த்தம் என்பதன் பொருள்.... 
பரஞ்சோதிமுனிவர்- திருவிளையாடற் புராணம் - வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்த படலம்

"மறைவழி மதங்கட்கெல்லாம் 
மறை பிரமாணம் பின்சென்று 
அறைதரு (ஸ்)மிருதி யெல்லாம் 
அவைக்கனு குணமாம் இன்ன
முறையினால் (ஸ்)மார்த்தம் 
என்று மொழிவதம் மார்த்தஞ் சேர்ந்த
துறைகள் வைதிகமாம் 
மேலாச் சொல்வது இச் சுத்த மார்க்கம்"__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan/posts/3519094198116739
This is not for the Periyarist Nazi morons. This is for persons who really want to know how Buddhist art evolved:

J C Harle in his monumental work on the art and architecture of the Indian Subcontinent says this: "To what extent Buddhist art incorporated pre-Buddhist elements is best demonstrated by the presence of large standing Yakshas, identified by inscribed labels, on many of the vedika uprights at Barahut, their hands in anjali, indicating that they too are humbly worshipping at a shrine... Yakshas are minor local deities whose worship is immemorial antiquity and continues all over India to this day. "
He later says "An early shrine building .. can be associated with divinities of Krishna Vasudeva cult, the precursor of Vaishnavism. The third century BC inscription from the Gosundi well states that the enclosure there was for Sankarshna and Vasudeva."
Thus Hindu iconography and cults are very ancient


__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

Sankara Narayanan GMadhusudhanan Kalaichelvan மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.

#கல்வெட்டில்_மணிவாசகப்பெருமான்_1

கல்வெட்டுக்களைப் பொறுத்தவரை மணிவாசகப்பெருமானைப் பற்றிய குறிப்புக்கள் பதினோராம் நூற்றாண்டு தொடங்கி காணப்படுகின்றன. திருக்கோவிலூர் அருகிலுள்ள கீழூரில் உள்ள இரண்டாம் ராஜேந்த்ரனின் கல்வெட்டு அவனுடைய ஐந்தாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. பொயு 1057-ஐச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு அவ்வூர் கோயிலில் திருவெம்பாவை விண்ணப்பிக்க அளிக்கப்பெற்ற மான்யத்தைக் குறிப்பிடுகிறது. ஆகவே பதினோராம் நூற்றாண்டு தொடங்கியே திருவெம்பாவை விண்ணப்பித்தல் கோயில்கள் தொடங்கிவிட்டன எனலாம்.
தேவார விண்ணப்பங்கள் ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கியும் திருவெம்பாவை விண்ணப்பம் பதினோராம் நூற்றாண்டு தொடங்கியும் அமைவதே மணிவாசகரின் காலத்தைக் கணிக்க மறைமுகக் குறிப்பாக உதவுகிறது.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

Sankara Narayanan GMadhusudhanan Kalaichelvan மற்றும் 3 பேருடன் இருக்கிறார்.

#கல்வெட்டில்_மணிவாசகப்பெருமான்_2

இரண்டாம் பழமையான கல்வெட்டு திருவொற்றியூரிலுள்ளது. வீரராஜேந்த்ரனின் இ
றுதி ஆண்டான 1070-ஐச் சேர்ந்தது. இது உணர்ச்சி மயமானது. 
இந்தக் கல்வெட்டில் வீரராஜேந்த்ரனின் திருமேனி பாங்காகவும் அரசியாரின் திருமாங்கல்யம் நிலைக்கவும் படம்பக்க நாயனார் கோயிலில் காராணை விடங்கர் உத்ஸவம் கண்டருளும்போது 22 தளிப்பெண்டுகள் திருவெம்பாவைக்கு அபிநயம் செய்யவும் அவர்களுக்கு நாயிகா பாவத்தில் அபிநயத்தைக் கற்றுக் கொடுக்க ஒரு நடன ஆசிரியரும் இது போத 16 தேவரடியார்கள் திருப்பதியம் விண்ணப்பிக்கவும் மானியம் கொடுத்த செய்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அரசன் உடல்நலம் தேற திருவெம்பாவையை ஆடல்கலையில் அபிநயித்த செய்தியும் அதிலும் பாவம் மாறாமல் அபிநயித்த செய்தியும் சுவையானவையல்லவா.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

 அறம், மறம் என்பதன் பேதத்தை திருமூலர் சொல்லி விடுகிறார்...
//அறம் அறியார் அண்ணல் பாதம் நினையுந்
திறம் அறியார் சிவ லோக நகர்க்குப்
புறம் அறியார் பலர் பொய் மொழி கேட்டு
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே //(திருமந்திரம் 262)
(அறத்தினை அறியாதவர்கள் அண்ணலின் பாதத்தின் திறனை அறியமாட்டார்கள். சிவ லோக நகரத்தின் வாயிலை அறியாதவர்கள் பல பொய் மொழி களைக் கேட்டு அறத்திற்கு எதிரான மறப் பொருள்களை அறிந்து பகைக் கொண்டு இருந்தார்களே?
" தண்ட நீதிக்குறியவர்களாக இருந்தவர்கள் தமிழக மூவேந்தர்கள். அவர்கள் அறப்போர் மரபினர். மிகவும் பிற்காலத்ததில்" மறப்போர் முறையை பின்பற்றப்பட்டது. மறப்போர் முறைகளை கைக் கொண்டனர்.
திருமுருக கிருபானந்த வாரியார்" ராமன் நடத்தியது அறப்போர். ராவணன் நடத்தியது அதர்மப் போர்.. மறப்போர்" என்கிறார்.

1) இந்திரனோடு நடந்த முதல் சண்டையில் மகாபலி இறந்து விடுகிறார்.

2) ஒருவர்கிட்ட தான் மரணமடைந்தா உயிர்பிக்கச்செய்யும் மந்திரம் அப்பொ இருந்தது. சுக்ராச்சாரியார். அவர் உயிர்பிக்கிறார்.

3) உயிர் பெற்ற மகாபலி பிருகு வழி வந்த முனிவர்களை கொண்டு வேள்விகள் செய்து வலு பெறுகிறான்.

4) பிற்பாடு தேவலோகத்திற்கு படையெடுத்துச் செல்கையில், இந்திரா உன்னால் வெல்லவே முடியாது பேசாம ஓடி ஒளிஞ்சுக்கோ என்று பிரகஸ்பதி ஆலோசனை சொல்கிறார்.

5) தேவர்கள் எல்லாம் வந்து முறையிட்டு பார்த்தும் மகாபலியோட கர்மா டேடா அனாலைஸ் செய்யும் இறைவன் மகாபலியை கொல்வது சாத்தியமில்லை, தம்மாந்துண்டு அகங்காரம் இருப்பதாகவும் அதை வைத்து எதாவது செய்வதாகவும் சொல்கிறார்.

6) அவிசொரிந்து மகாபலி வேட்டல் மேற்கொண்டு இருக்கிற போது தான் வாமனராக வந்து உலகளந்து ஆட்கொள்கிறார்.

7) பிரகாலதனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் விதமாகவும் மகாபலியை கொல்லவில்லை. இதனை கிருஷ்ணராக வரும் போது பாணாசுரனை கொல்லாமல் விடுவதிலும் காப்பாற்றுகிறார்.

பிரகாலதான் தலைமுறையில் விஷ்ணு பக்தர்களாக வைணவர்களாக இருந்தவர்கள் பாணாசுரன் தலைமுறையில் சிவபக்தர்களாக சைவர்களாக மாறிவிட்டனர் ;) ஆனாலும் கிருஷ்ணருக்கு சம்பந்தி முறை அசுரர்கள்.

வருடா வருடம் இதையே எழுதணுமா!

புராண இதிகாசம் பிரமாணம்னா அதுல இருக்கறதை முழுக்க வச்சு பேசணும். இதன் வழி அறியப்படுபவற்றின் இயல் தனி டிராக். அறிவியல் என்று இன்று அறியப்படுபவை தனி டிராக்.

இவற்றில் இருந்து தெரிய வருபவை,

1) அந்தணரை வைத்து அசுரர்கள் வேள்வி நடத்தினர்
2) அசுரர்கள் விஷ்ணு பக்தர்கள்
3) அசுரர்கள் சிவ பக்தர்கள்
4) அசுரர்கள் நாத்திகர்கள் இல்லை
5) அசுரர்களுக்கும் ரேசனலிசத்தும் தொடர்பே இல்லை.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

1. Language, script and literature have been different concepts evolved, developed and completed during the course of time acceptable to the users.

2. Makings, occasional or accidental indents, scratches and vents, pictograms and similar things are not script.

3. Three or more scribbling is not an inscription, as the script could be claimed as any script and read in similar languages.

4. None can decide whether it has to be read from left to right or right to left.

5. The same language writing / inscribing people would not inscribe differently at various places.

6. For getting full meaning, at least, there should a sentence or more lines, so that the experts read and give acceptable and conveying meaning.

7. The potsherds evidences are not conclusive, as the script is not complete.

8. Even after the declaration that the race, racism and racialism are myth, not scientific and acceptable, it is intriguing, ironical and contradicting some researchers still talking and researching in terms of “Aryans” and “Dravidians.”

9. With predetermined mindset, confusing or compromising ideology and accepting something for the work done would not lead to any meaningful research.

10. Such biased research would only divide the people.

© Vedaprakash
06-09-2019__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

சிலப்பதிகாரத்தில் பிரதிஷ்டை(கும்பாபிஷேகம்) பற்றி ஒரு குறிப்பு வருகின்றது.

சேர மன்னன் கண்ணகிக்கு சிலை நிறுவ உத்தரவு பிறப்பிக்கின்றான்.

அதனை இளங்கோவடிகள்,

"கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்பு கடை நிறுத்தி,
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து,
கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்."

என்று பாடுகின்றார்.

அதாவது ஒரு கும்பாபிஷேகம் செய்வதற்க்கான கிரியைகளை மன்னன் வரிசையாக கூறி உத்தரவு இடுகின்றான்.

கும்பம் என்ற கடங்களை தயார் செய்து,

பூப்பலி என்பதை இன்றைய பிரவேசபலி என்ற கிரியை செய்து,

காப்புக் கடை நிறுத்தி என்ற வாஸ்து பூஜை செய்து அஷ்டதிக் பாலகர்களை பூஜித்து காப்பாக நிறுத்தி,

வேள்வியும் விழாவும் நாள்தொரும் என்றபடிக்கு, இன்றைக்கு செய்வதுபோல் யாகசாலை அமைத்து நான்குகால, ஆறுகால யாகங்கள் பூஜைகள் செய்து,

கடவுள் மங்கலம் என்ற கும்பாபிஷேகம் செய்ததாக சிலப்பதிகாரம் உரைக்கின்றது.

புரட்சிகாவியம் என திராவிடவாதிகள் அடையாளப்படுத்தும் சிலப்பதிகாரத்தில்தான் யாகங்கள் செய்து கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்த அற்புத செய்தியும் உள்ளது.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

்துதான் வந்தது எனறு சில வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
5. சிந்துச் சமவெளி நாகரிகத்தில் பேசப்பட்ட மொழி தமிழுக்கு முன்னோடி என்பது உண்மையானால் தமிழும் வடமொழிதான். இதற்கும் வலுவான சான்றுகள் இன்று வரை கிடைக்கவில்லை.
5. குமரிக் கண்டம், ஆமை வகையறாக்கள் காதில் பூச்சுற்றுபவர்கள்.
6. சிந்துச் சமவெளி நாகரிகம் 4000 வருடங்களுக்கு முந்தையது என்றால். அங்குள்ளவர்கள் தெற்கே வந்து கலந்து இங்கு நாகரிகம் உருவாக பல நூறாண்டுகள் எடுத்திருக்க வேண்டும். எனவே தமிழ் நாகரிகம் உலகிலேயே மிகப் பழமையான நாகரிகம் என்று சொல்வதும் காதில் பூச்சுற்றும் வேலைதான்.
9. சிந்துச் சமவெளி நாகரிகத்தோடு தென்னிந்தியாவிற்கு மட்டும் அல்ல வட இந்தியாவிற்கும் தொடர்பு இருக்கிறது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்கும் அது சொந்தம். இந்தியாவில் எங்கே தோண்டினாலும் அங்கே கிடைப்பது சிந்துச் சமவெளி நாகரிகத்திற்குப் பின்னால் இருந்தால் அங்கு கிடைப்பவற்றிற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இடையே இருக்கும் தொடர்புகளை நிறுவ வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.
10. ஆரியர்கள் என்று சொல்லப்படுவர்கள் பின்னால் வந்தார்கள் என்று கருதவும் இடமிருக்கிறது. ஆனால் கிடைத்திருக்கும் ஒரே ஒரு மரபணுக்கூறு ஆராய்ச்சியை வைத்து பெரிய முடிவுகளுக்கு வர முடியாது. The cities of the Indus Valley Civilization were cosmopolitan places, which also makes it harder to generalize from one genome. J. Mark Kenoyer, an anthropologist at the University of Wisconsin at Madison who was not an author of either study, cautions that only a small number of people who lived in these cities were buried in cemeteries—probably elites. The rest might have been cremated, or their bones simply left uncovered and thus scattered over time. “The cemeteries of the Indus civilization do not represent the people of the Indus civilization. They represent one community,” he says.
11. இது தொடக்கம். தேடல் தொடர வேண்டும்.
்துதான் வந்தது எனறு சில வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
5. சிந்துச் சமவெளி நாகரிகத்தில் பேசப்பட்ட மொழி தமிழுக்கு முன்னோடி என்பது உண்மையானால் தமிழும் வடமொழிதான். இதற்கும் வலுவான சான்றுகள் இன்று வரை கிடைக்கவில்லை.
5. குமரிக் கண்டம், ஆமை வகையறாக்கள் காதில் பூச்சுற்றுபவர்கள்.
6. சிந்துச் சமவெளி நாகரிகம் 4000 வருடங்களுக்கு முந்தையது என்றால். அங்குள்ளவர்கள் தெற்கே வந்து கலந்து இங்கு நாகரிகம் உருவாக பல நூறாண்டுகள் எடுத்திருக்க வேண்டும். எனவே தமிழ் நாகரிகம் உலகிலேயே மிகப் பழமையான நாகரிகம் என்று சொல்வதும் காதில் பூச்சுற்றும் வேலைதான்.
9. சிந்துச் சமவெளி நாகரிகத்தோடு தென்னிந்தியாவிற்கு மட்டும் அல்ல வட இந்தியாவிற்கும் தொடர்பு இருக்கிறது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்கும் அது சொந்தம். இந்தியாவில் எங்கே தோண்டினாலும் அங்கே கிடைப்பது சிந்துச் சமவெளி நாகரிகத்திற்குப் பின்னால் இருந்தால் அங்கு கிடைப்பவற்றிற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இடையே இருக்கும் தொடர்புகளை நிறுவ வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.
10. ஆரியர்கள் என்று சொல்லப்படுவர்கள் பின்னால் வந்தார்கள் என்று கருதவும் இடமிருக்கிறது. ஆனால் கிடைத்திருக்கும் ஒரே ஒரு மரபணுக்கூறு ஆராய்ச்சியை வைத்து பெரிய முடிவுகளுக்கு வர முடியாது. The cities of the Indus Valley Civilization were cosmopolitan places, which also makes it harder to generalize from one genome. J. Mark Kenoyer, an anthropologist at the University of Wisconsin at Madison who was not an author of either study, cautions that only a small number of people who lived in these cities were buried in cemeteries—probably elites. The rest might have been cremated, or their bones simply left uncovered and thus scattered over time. “The cemeteries of the Indus civilization do not represent the people of the Indus civilization. They represent one community,” he says.
11. இது தொடக்கம். தேடல் தொடர வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

ஐவகை நிலப்பாகுபாடு

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என தமிழகத்தில் ஐவகை நிலப்பகுப்பைக் கூறும் தொல்காப்பியம் அவற்றுக்கான கருப்பொருளையும் உரிப்பொருளையும் குறிப்பிடுகிறது. ஆனால் தமிழகம் முழுவதும் இத்தகையபாகுபாடு மட்டுமேயில்லை. இவை புறநகர்ப்பகுதிகளான மலை காடு வயல் கடல் மற்றும் நிலங்கள் அவ்வளவே. இதைத்தவிர அரசர்களின் அரண்மனைகளும் வணிகராகள் வாழிடங்களும் புலவர்கள் உறைவிடமும் பெருநகரங்களும் கோநகரங்களும் கூட இருந்தன. அவை இந்தப் பாகுபாட்டில் அடங்காது. இந்த ஐவகை நிலங்களில் எளிய மக்கள் வாழ்ந்தனர். இவர்களையும் பாடிய புலவர்கள் அரசர்களையும் கோநகரங்களையும் கூட பாடியிருக்கின்றனர். வேலன் வெறியாடல் குறிஞ்சியில் நிகழ்ந்ததாகக் கூறுமாபோதே முருகனுக்கான கோட்டத்தில் மன்னர்கள் வழிபட்ட முறையையும் குறிப்பிடுகின்றன. ஐவகை நிலப்பாகுபாட்டைக் கூறும் தொல்காப்பியமே அரசர்களையும் குறிப்பிடுகிறது. ஆகவே நகரமில்லாத ஐவகை நிலப்பாகுபாடுகள் இவை என்பதும். இவை தவிர மீப்பெரு நகரங்களும் நாகரிகமான மனிதர்களோடும் இருந்தமை தெளிவு.

Jagan Nath Sankara Narayanan G அட சங்க இலக்கியத்தையே வேட்டைச் சமூகக் காலம்னு தான் ஆய்..வாள்...அர்கள் சொல்கிறார்கள் ஸ்வாமிகளே...!!!!!
குறிஞ்சி ஆதிவாசியாம்...
முல்லை வனவாசியாம்...

மருதம் நிலவுடைமையாம்....
நெய்தல் அதன் வளர்ச்சியாம்...
பாலை வளர்ந்ததை அடித்த கொள்ளையாம்.....
இதுவே (தமிழ்) மறித நாகரீக வரலாற்றுப் படிமுறையாம்.....!!!!!!__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

திருத்தணி அடுத்துள்ள விளக்கணாம்பூண்டியில் அபராஜித பல்லவன் காலத்துக் கோயில் ஒன்றுள்ளது. சிதிலமடைந்து சரி செய்யப் பெற்றுள்ள இந்தக் கோயிலில் அபராஜிதன் காலத்து குமரன், அன்னையர் எழுவர் ஆகியோரின் சிற்பங்கள் கருத்தைக் கவர்வன. விசாலாக்ஷீச்வரர் என்று தற்போது வழங்கப் பெறுகிறது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 13 ஆம் நூற்றாண்டு தெலுகு கல்வெட்டொன்று இந்தக் கோயிலை விஜயாலய சோழீச்வரம் என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள் விளங்கவில்லையென்று பலரும் குறிப்பிடுகின்றனர். விஜயாலயன் இதுவரை ஆண்டதில்லை. அவன் பெயரால் இது அழைக்கப்படவேண்டிய காரணம் விளங்கவில்லை.

அபராஜிதனைக் கொன்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றிய பிறகு ஆதித்யசோழன் நிறைவுறாத கோயில் நிறைவுறச் செய்து தந்தை பெயரைச் சூட்டியிருத்தல் கூடும் என்பது ஊஹம். மேற்கொண்ட ஆவணங்கள்தாம் இதை நிறுவவேண்டும்.

இந்தக் கோயில் தமிழகத் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டிலுள்ளது. இதைப் படமெடுத்திருந்தேன். அத்தனையும் வைரஸ் கொண்டுபோய் விட்டது....__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

செண்டாயுதம்Sankara Narayanan G

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிடும் ஒரு பாடல்

"கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு"

கரிகாற் பெருவளத்தான் காஞ்சியில் வளைக்கைச்சியின் காமகோட்டத்திலிருந்து சாத்தனின் செண்டு பெற்று பொன்மலையைச் செண்டால் அடித்தான் என்பது பொருள். இந்தச் செய்யுள் அன்னை காமாக்ஷியின் கோயிலிலுள்ள சாத்தனிடமிருந்து செண்டு பெற்ற கர்ணபரம்பரைச் செய்தியை விளக்குகிறது. இதே செய்யுள் 14-15 ஆம் நூற்றாண்டு கால எழுத்தமைதியில் அதே கோயிலின் சாஸ்தா ஸந்நிதியின் கீழே வாஜனத்தில் செதுக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

21752087_10155178151747499_5375450434537   

41648609_2306746852673570_61083430543373செண்டாயுதம்21761515_1655973167769521_89718131500212

ஆறகழூர் சாஸ்தா.

 

21762649_1860417687302037_45073275988599

 

கச்சபேஸ்வரர் கோவில் தர்மசாஸ்தா__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

“வடக்கத்தியர் எல்லோரும் ஆரியர்களா? அல்லது பிராமணர்கள் அல்லாத எல்லோரும் திராவிடர்களா? இனங்களும் பண்பாடுகளும் மதங்களும் சாதி களும்கூட கலந்து, நெருக்கி நெய்த துணியாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் இழைகளைப் பிரித்துக் குலைக்க வேண்டாம்.

புஷ்கரம், பிருந்தாவனத்தில் உள்ள கோயில்களும்,வழிபாடும் காஞ்சிபுரத்தில் உள்ளதுபோல் இருக்கும். ராஜஸ்தானில் நம்மைப் போன்றே பொங்கல் கொண்டாடுவார்கள். முற்கால வரலாற்றில் இந்தப் பிரிவுகள் இருந்திருக்கலாம். பின்னர் எல்லாம் ஒன்றாகிப்போனதும் வரலாறுதானே?”

- முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம்__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

கோதையின் சாஸனம்

மதுரையிலுள்ள மதனகோபாலஸ்வாமி ஆலயத்தில் 1598 - சகம் 1520 ஐச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு வடமொழியில் சாஸன ச்லோகத்தையும் தமிழில் அவளது ஆணையையும் கொண்டது. அதன் சாஸன ச்லோகம்

स्वस्तिश्रीविष्णुचित्तस्य
दुहितुः जगतां हितम्।
देव्याः श्रीरङ्गनाथस्य
गोदायाः दिव्यशासनम्।।
ஸ்வஸ்திஶ்ரீ விஷ்ணுசித்தஸ்ய
து³ஹிது꞉ ஜக்³தாம் ஹிதம்.
தே³வ்யா꞉ ஶ்ரீரங்க³நாத²ஸ்ய
கோ³தா³யா꞉ தி³வ்யஶாஸனம்..

மங்கலத்திருவுடைய விஷ்ணுசித்தரின் மகளும் ஸ்ரீரங்கநாதரின் தேவியுமான கோதையின் தெய்வத்தன்மை பொருந்திய இந்தச் சாஸனம் உலகுக்கு நன்மை தருவது.

என்று ச்லோகம் அமைந்துள்ளது. இதற்கு மேலும் அமைந்துள்ள பகுதி சுவையானது

மென்னடையன்னம் பறந்து விளையாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நம் வீட்டில்
முத்துடைதாம நிரை தாழ்ந்த பந்தற்கீழ் அழகிய மணவாளன் பள்ளிக்கட்டில் நாமும் நம் வடபெருங்கோயில் பரம ஸ்வாமிகளும் திருவோலக்கம் கொடுக்க

என்று கல்வெட்டு செல்கிறது. ஆண்டாளின் சொற்களையே பயன்படுத்தி அவள் பள்ளியறையில் தலைவனோடு வீற்றிருக்கும் போது பிறப்பித்த ஆணை என்று குறிப்பிடப்பட்டிருப்பது மிகச்சுவையானது. இப்படி ஒரு சாஸன ச்லோகம் திருமகளுக்குக் கூட இல்லை.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

ஆளமஞ்சி

சம்பளமில்லாமல் வேலைபார்த்து பணிபயிற்சி பெறுவோர் உண்டு. என்னைப் போல பைத்யமானால் கூறுவதை செய்து கொண்டு கூலியின்றி இருக்கும் ஆட்களும் உண்டு. வடிவேலு கூறுவதைப் போல இவர்கள் அப்பரசண்டிகள். இந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கல்வெட்டுக்களில் காணப்பெறுகிறது. ஆளமஞ்சி அல்லது அமஞ்சி என்னும் சொல் கூலியின்றி பணியாற்றுவோரைக் குறிக்கும் சொல். நல்ல தமிழ்ச்சொல். பயன்படுத்தலாமே...

Arunkumar Pankaj ஆளமஞ்சி, வெட்டி, நிலையால் என்று பல வகையினரை கல்வெட்டுகள் குறிக்கின்றவே! இவர்களுக்குள் உள்ள வேறு பாடு என்ன ஜீ?

Ramachandran அமஞ்சி முறையால் அமைக்கப்பட்ட கரை தான் (சென்னையிலுள்ள) அமஞ்சிக்கரை எனக் கருதப்படுகிறது. இச்சொல் அம்ஜி amzi எனப் பாரசீக மொழிவழக்கில் உள்ளது எனச் சில அறிஞர்கள் எழுதியுள்ளனர்.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

 

"மிலேச்சர்"
------------------

ஒரு இடதுசாரி நண்பர் எழுதுகிறார்:

[Quote] தமிழ் வடமொழி இரண்டிலும் மிகப் பெரிய அறிஞராகப் போற்றப்படும் அண்ணங்கராசாரியர் தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தத்தில் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார்:

காஞ்சிபுரம் தேவப்பெருமாள் சந்நிதியில் கண்ண்மாசாரியார் என்ற பெரியவர் திவ்ய ப்ரபந்தவைபவம் என்ற பொருள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது வடகலையார், தென்கலையார் இருவரும் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டிருந்த போது திருமலை தாதாசாரியர் புதல்வர் ஸாமிதாதாசாரியர் என்பவர் எழுந்திருந்து தமிழ் மிலேச்ச பாஷை. அந்த பாஷையில் பிறந்த நூல்களை வேதத்திற்கு சமமாகவும், வேதத்தை விட உயர்ந்ததாகவும் சொல்லக்கூடாது என்று ஆட்சேபணை செய்தார்.

பெரியவர் அவருக்குப் பதில் சொன்னார் என்றாலும் பிராமணர்களிடையே தமிழை மிலேச்ச பாஷை என்று நினைப்பவர்கள் இருந்தார்கள் என்பது வெளிப்படை. இது இருபதாம் நூற்றாண்டு நிலைமை என்றால் அதற்கு முன்னால் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்பதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தமிழில் சொன்னவை வடமொழியில் சொன்னவற்றை விடத் தாழ்ந்தவை என்ற நிலைப்பாடு பிராமணர்களிடையே இருந்திராவிட்டால் ஆசாரிய ஹ்ருதயம் போன்ற நூல்கள் (13ம் நூற்றாண்டு) எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்காது. [Unquote]

1.) இருபதாம் நூற்றாண்டில், ஒரு ப்ராஹ்மணர், "தமிழ் மிலேச்ச பாஷை" என்று கருத்து சொன்னார் என்பதால், அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் பல ப்ராஹ்மணர்கள் அதைவிட அதிகமாகத் தமிழை நிந்தனை செய்திருக்கவேண்டும் என்று சொல்வது அடிப்படையான நேர்மையோ, தார்மீக உணர்வோ, ஆதாரமோ இல்லாத வாதம். அது போன்ற வாதங்களை இடுவோர், பத்தாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை எந்த தமிழ் ப்ராஹ்மணர்கள் "தமிழ் மிலேச்ச பாஷை" என்று சொன்னார்கள் என்று ஆதாரத்தோடு பட்டியலிடமுடியுமா?

2.) "மிலேச்சர்" என்ற சொல்லின் பொருள் என்ன? இதற்கு பதில் சொல்லும் முன், "சம்ஸ்க்ரிதம்" என்ற சொல்லின் பொருள் என்ன என்று புரிதல் வேண்டும். வேத காலம் தொட்டு, சந்தங்கள் என்பது வடமொழியின் முக்கிய அங்கமாக இருந்தன. காயத்ரி, அனுஷ்டுப், ஊஷ்ணிக் போன்ற ஏழு சந்தங்கள் உச்சரிப்பிற்கு மட்டுமின்றி, வேத பதங்களுக்கும் அடித்தளமாக இருந்தன. அதை விட முக்கியமாக, "வாக்கியம்" என்கிற சப்தம் சரியாக உச்சரிக்கப்படுகையில்தான் பலன் தரும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இந்த காரணத்தால்தான், பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு வேத மந்திரங்கள் எப்படி சொல்லப்பட்டனவோ அவ்வாறே இன்றும் சொல்லப்படுகின்றன. இதனால்தான், வேதம் "சப்த ப்ரமாணம்" என்று அழைக்கப்படுகிறது. எழுத்து வடிவங்கள் சொல்வடிவங்களை முழுதாகப் பிரதிபலிக்கமாட்டா. இதனால்தான், வேதமந்திரங்கள் எழுதப்படவில்லை. அவை, "எழுதாக் கிளவி" என்றே அழைக்கப்பட்டன.

மீமாம்சகர்கள் "அநாப்த வாக்யம்" என்று சில ப்ரமாணங்களைக் குறிப்பிடுவார்கள். இது நம்பத்தகாதோர் வாக்கியங்களை மட்டுமின்றி, சரியாக உச்சரிக்கப்படாத சப்தங்களையும் குறித்தது. ஏன்? மந்திரப் பிரயோகம், யோகா, தியானம் எல்லாவற்றிலுமே மிக சரியான உச்சரிப்பு தகுந்த பலன் பெற அவசியம். சரியான உச்சரிப்பும், மொழி இலக்கணங்களும் இன்றி பேசுவோரை "மிலேச்சர்கள்" என்று அழைத்தார்கள். ஹிந்துக்கள் மட்டுமின்றி, பௌத்தர்களும், இதே பொருள்படும்விதமாக "மிலக்கா" என்ற சொல்லை உபயோகித்தார்கள். இதற்கு, "நாகரீகமற்றவர்கள்" என்று பொருள் இல்லை.

விதிகள் லௌகீக விஷயங்களுக்கும் தேவை என்று நம் முன்னோர்கள் கருதினார்கள். தண்டின் என்கிற மிகப்பெரிய இலக்கண ஆசிரியர், ப்ராக்ருதங்கள் அவ்வாறு இலக்கண விதிகளையும், உச்சரிப்பையும் பின்பற்றவில்லை என்று சொல்கிறார். இதற்கு பதிலிடும் விதமாக நமிசாது என்கிற ஜைனர், ப்ராக்ருதங்கள் சம்ஸ்க்ரிதத்திற்கும் முந்தியவை என்றும், எனவேதான் அவற்றில் இலக்கண விதிகளும், உச்சரிப்பும் பின்பற்றப்படவில்லை என்று சொல்கிறார். மேலும், இலக்கணமும், உச்சரிப்பும் சீரமைக்கப்பட்டால், ப்ராக்ருதங்கள் சம்ஸ்க்ரிதமாகிவிடுகின்றன என்றும் சொல்கிறார். ப்ராக்ருதங்கள் குழந்தையின் பேச்சு போல என்றும் சம்ஸ்க்ரிதம் சிஷ்டா என்கிற கற்றோர் பேச்சு போல என்றும் உவமானம் இடுகிறார். காளிதாஸர் போன்ற பல சிருஷ்டிகர்த்தர்கள் படைப்புகளில், கல்லாதோர் ப்ராக்ருதங்களிலும் கற்றோர் சம்ஸ்க்ரிதத்திலும் உரையாடுவதைக் காணலாம். இவை யாவும், "மிலேச்சர்கள்" என்பது வசைச்சொல் அல்ல என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

3.) நாமக்கல் கவிஞர் ப்ராஹ்மணர் அல்லர். சித்தாந்தங்கள் தமிழில் குறைவே என்றும், அவை வடமொழி சார்ந்தே அமைந்திருக்கின்றன என்றும் உண்மையை சொல்கிறார். அது மட்டுமின்றி, மோக்ஷ மார்கம் சார்ந்த மந்திரங்கள், யோகா, தியானம் போன்ற யாவும் வடமொழியில்தான் உண்டு. தமிழில் கிடையாது. தமிழ் திராவிட மொழியாயினும், அதன் இலக்கண விதி வடிவமைப்பு சம்ஸ்க்ரித இலக்கண வடிவமைப்பை சார்ந்தே அமைந்திருக்கிறது. தமிழின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருந்தது சம்ஸ்க்ரிதம். இவ்வாறு இருக்கையில், மோக்ஷ மார்க்கம் சார்ந்த கலந்துரையாடல்களில் இரண்டு மொழிகளையும் சமமாக பாவித்தல் தவறு என்பது மிக நியாயமான வாதமே. சப்த ப்ரமாணங்கள் வடமொழியிலிருந்துதான் தரப்படுகின்றன.

4.) இருபதாம் நூற்றாண்டில், கிறிஸ்தவ மிஷனரிகளும், திராவிட இன வெறியர்களும் வடமொழியை நிந்தித்தும், தமிழ் வடமொழியைவிட பழைமையானது என்ற புரளியைக் கிளப்பியும் விட்டுக்கொண்டிருந்தார்கள். வடமொழி செத்த மொழி, ஒழிந்த மொழி என்று அருவறுப்பாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். வடமொழி தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. இந்த சூழலில், மோக்ஷ மார்க உரையாடல்களில் இரு மொழிகளையும் ஒப்பிடக்கூடாது என்று ஒரு ப்ராஹ்மணர் சொல்லியிருந்தால் அதில் தவறேதுமில்லை. தீரா விடர்கள் வடமொழியை ப்ராஹ்மணர்களின் மொழி என்று சித்தரித்து அதன்மீது வசைபாடியதுதான் தவறு. அதுபோன்ற வசைகளைக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. மிலேச்ச பாஷை என்ற பதிலடி தகுந்ததே.

5.) மொழியியல் நிபுணர்கள், ஆதி திராவிட மொழியில் ஒன்று, இரண்டு, கொஞ்சம், நிறைய என்ற பொருள்படும்விதமாகத்தான் எண் வடிவமைப்பு இருந்தது என்று சுட்டியிருக்கிறார்கள். இலக்கணம் (அதுவே லக்ஷண என்ற வடமொழி சொல்லின் திரிபுதான்), இலக்கிய (லக்ஷிய என்ற வடமொழி சொல்லின் திரிபு) வடிவமைப்பு, எண் வடிவங்கள் எல்லாமே வடமொழியிலிருந்துதான் தமிழுக்கு வந்தன. இந்த உண்மைகளை சொல்வது வெறுப்பின் வெளிப்பாடாகாது.

இடதுசாரிகள் வெள்ளைக்காரனும், கிறிஸ்தவப் பாதிரிப் பதர்களும் கிளப்பிவிட்ட அவதூறுகளைத் தம்பட்டமடித்து ப்ராஹ்மண துவேஷத்தைப் பரப்புவதைவிட நம் பாரம்பரியம் என்ன என்பதை அறிந்துகொள்ளலாமே?__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

தமிழின் பெருமை என்ன?
எனக்குத் தெரிந்து இந்திய மொழிகளில் எந்த மொழியும் சமஸ்கிருதத்திற்கு எதிராக நின்று நானும் உனக்குச் சமம்தான்; சொல்லப்போனால் சிலவற்றில் நான் உன்னை விட உயர்ந்தவன் என்ற நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அல்லது தொடர்ந்து எடுக்கவில்லை. தமிழ் மட்டுமே இந்நிலைப்பாட்டை தொடர்ந்து பல நூறாண்டுகளாக எடுத்துக் கொண்டிருக்கிறது.

சமஸ்கிருதத்திற்கு எதிராக நின்றது என்று சொல்வது சம்ஸ்கிருதத்திற்கு எதிரி என்ற பொருளில் அல்ல. உன்னிடத்தில் இருப்பதைப் போல நானும் படைப்பேன், அதை விட அழகாகப் படைப்பேன் என்ற பெருமிதம்தான் அது. சமஸ்கிருதத்தில் நன்றாக இருப்பதை எடுத்துக் கொள்ள தமிழ் என்றும் தயங்கியது இல்லை. ஆனால் அதைத் தமிழாக்கி எடுத்துக் கொண்டது.
கம்பன் மிகச் சிறந்த உதாரணம். வேதங்களை ஓதுவதைப் போல பிரபந்த சந்தை சொல்வது மற்றொரு உதாரணம்.

சிவப்பிராகசம் நூலில் உமாபதி சிவாச்சாரியார் சொல்வது:
"தொன்மையாம் எனும் எவையும் நன்றாகா; இன்று
தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா; துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியும் அதன் களங்கம்
நவையாகாது என உண்மை நயந்திடுவர்; நடுவாம்
தன்மையினார் பழமை அழகு ஆராய்ந்து தரிப்பார்;
தவறு நலம் பொருளின்கண் சார்வு ஆராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர் ஏதிலர் உற்று
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கு என ஒன்று இலரே"
இது மிகத் தெளிவாக பழமையானது என்பதனால் மட்டுமே ஒன்றைத் தூக்கிப் பிடிக்க முடியாது. பழமையை அதன் அழகை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. மற்றவர் புகழ்வதனால் புகழக்கூடாது. இகழ்வதனால் இகழக் கூடாது என்கிறது. வடமொழியையும் தமிழ் இவ்வாறே ஏற்றுக் கொண்டது.

தமிழ்ப்பற்று சாதி சார்ந்ததல்ல. தமிழைத் தூக்கிப் பிடித்த பல பிராமணர்கள் இருக்கிறார்கள். வடமொழியைத் தூக்கிப் பிடித்த பிராமணர் அல்லாதவர்களும் இருக்கிறார்கள்.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

Looking at the various fragments of news items about Keezhadi, the findings indicated are impressive.

1. Clearly an urban civilisation.
2. Dating much older than anything we have found so far. But need more conclusive evidence through wider testing.
3. Graffiti writing as pre-Brahmi is intriguing. Worthy topic for many students to do PhD.
4. The gold ornaments are fabulous. In terms of style and execution, better than what we get today. I hope jewellers start making a series of faux-keezhadi jewels and market them.
5. The weaving instruments are important. Scientific study may help us understand the evolution of these devices in the ancient Tamil land.
6. More excavations around this region will offer more clues for certain. So, we need to do relentless work of digging, collecting, interpreting and publishing.

Great time for Tamil Nadu and Indian Archaelogy.

Looking forward to reading the book published by the Dept of Archaelogy, Tamil Nadu.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

பிற இந்திய மொழிகளைத் தமிழுக்குப் போட்டியாக நினைக்கும் போக்கு மிக அதிகமாக வளர்ந்துள்ளது, வளர்க்கப்பட்டுள்ளது. மிகவும் தவறு. முக்கியமாக இலக்கியவாதிகள் இச்சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் வெளிவர வேண்டும். அரசியலாருக்கு மொழி ஒரு பிழைப்பு, அவர்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டா.

புராண - இதிஹாஸங்களில் தென்னகம் புறக்கணிக்கப்படவில்லை. சங்க இலக்கியம் இமயத்தைச் சொல்கிறது, மோரியரைச் சொல்கிறது, வடுகரைச் சொல்கிறது. வடபுல இலக்கியங்களில் மலயத் தென்றலும், சந்தனமும் சிறந்த உவமைக் குறியீடுகள்.

அர்த்த சாஸ்த்ரம் அறிந்தால் ‘பாண்ட்ய காவடிகம்’- புகழ்பெற்ற கொற்கை முத்தின் பெருமை அறியலாம்; ராமாயணம், ரகுவம்சம் தெரிந்து கொண்டால் பாண்டியர் தோள் வலிமை அறியலாம்.

மொழியறிவு மொழிமாற்றங்களுக்குத் துணை செய்யும். ஸ்ரீராம தேசிகன் என்ற பெரியவர் தொல் தமிழ் நூல்களைச் சங்கதத்தில் மொழி பெயர்த்தார். சங்கதத்தின் அறிவுசார் நூல்கள் பல உள்ளன, மொழிபெயர்ப்புப் பெறாமல்.

பெரிய புராணத்துக்கிணையான சங்கத வடிவம் ஒன்று இருந்துள்ளது என்றே ஊகிக்க முடிகிறது

சிலப்பதிகாரத்தின் முழு வீச்சையும் புரிந்துகொள்ளச் சங்கத அறிவு கட்டாயம். சங்கதத்தின் லம்பக வகைக் காப்பியத் தழுவல் ‘சீவக சிந்தாமணி’.

‘ஒப்பியல்’ என்பது மொழியியலின் ஒரு முக்கியமான துறை; மொழி வெறுப்பால் தமிழில் அத்துறை வளர்ச்சி பெறவில்லை; ஈழ அறிஞர் ஓரிருவர் முயன்றுள்ளதாகத் தெரிகிறது.

மொழிவெறி வேறு, மொழிப்பற்று வேறு.
வெட்டிக் கவுரவப் பிரச்னையால் எந்தப்பயனும் கிடையாது.__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

கர்ணனின் படையைச் சிதறடித்த பாண்டியன்.

மஹாபாரதப் போரில் பாண்டவர் பக்கல் நின்று போரிட்டவன் மலயத்வஜ பாண்டியன். அவன் மஹாரதிகளுள் ஒருவனாகக் குறிப்பிடப்பெற்றிருக்கிறான். கர்ணபர்வத்தின் பதிமூன்றாம் அத்யாயம் அவனுடைய வீரத்தை வர்ணிக்கிறது. அவன் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இணையானவன் என்றுதான் பர்வமே துவங்குகிறது. கர்ணனின் படையைச் சூறாவளி மேகங்களை உருக்குலைப்பது போல கர்ணனின் படையைச் சிதறடித்தான். நேர்நிற்க முடியாமல் அனைவரும் அஞ்சியோடினர். எவராலும் நிற்கமுடியாததைப் பார்த்து அச்வத்தாமன் எதிர்த்தான். அவனாலும் எதிர் நிற்கமுடியாமல் திணறினான். இறுதியில் பாண்டியனின் தேரோட்டியைக் கொன்றான். ஆயுதமற்ற பாண்டியன் தோமரம் போன்ற ஆயுதத்தால் பெரும்போர் புரிந்தான். இறுதியில் மாண்டான். அவன் வீழ்ந்து கிடந்தபோது அவன் மார்பெங்கும் சந்தனம் மணம் கமழ்ந்தது. உடலெல்லாம் முத்தும் வைரமும் கலந்த நகைகள் விரவிக் கிடந்தன. அவனுடைய பேருருவம் போர்க்களத்துக்கே அணியாக இருந்தது..__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

சிலப்பதிகாரமும் பஞ்ச தந்த்ரமும்

சிலப்பதிகாரத்தில் ஒரு கீ்ரிக்கதை ஒன்று வருகிறது. ஒரு பார்ப்பனி குழந்தை இறந்தது கண்டு தன் கணவன் வளர்த்த கீரியின் வாயில் குருதியும் கண்டு கீரியைக் கொன்றாள். பிறகு பாம்பொன்று இறந்து கிடப்பதைக் கண்டு உண்மையறிந்தாள். கணவனிடம் முறையிட்ட போது அவன் ஒரு வடமொழிச் செய்யுளைக் கூறினான் என்று வருகிறது.

“பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு

இந்த வடமொழி வாசகம் யாதென்ற கேள்விக்கு அரும்பத உரையாசிரியர் கூறும் வடமொழிச் செய்யுள்

அபரீக்ஷ்ய ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம்
பஸ்சாத் பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம் யதா

என்பதாகும். இந்தச் செய்யுள் வடமொழி நூலான பஞ்சதந்த்ரத்தில் காணப்பெறுவதாகும். இதைக் கொண்டே வையாபுரிப்பிள்ளையும் இரா.நாகசாமி அவர்களும் சிலம்பு பஞ்சதந்த்ரத்திற்கு பிற்காலத்தியது என்று கூறினர்.

இதை மறுப்பவர்கள், இதை இடைச்செருகல் என்றும் பஞ்சதந்த்ரத்தில் இந்தச் செய்யுளே இல்லையென்றும் பலவாறாகக் காரணம் கூறுகின்றனர்.

ஆனால் அரும்பதவுரையாசிரியரைக் காட்டிலும் தேர்ந்த கூற்றாக இடைச்செறுகல் கூற்று இல்லை. மேலும் இந்தச் செய்யுள் பஞ்சதந்த்ரத்தில் இருப்பது உறுதியான ஒன்று. ஆகவே சிலம்பின் காலம் நான்கிலிருந்து ஐந்தாக வகுப்பது சரியாகலாம் என்று கருதுகிறேன்...__________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

தளி-ஸ்தலீ

சங்ககாலத்தில் கோயில் என்பதைக் குறிக்கும் தனிச்சொற்கள் கிடைக்கவில்லை. பொதியில், மன்று போன்ற சொற்களைச் சிலர் ஒப்புக் கொள்கின்றனர். சிலர் ஒப்பவில்லை. பூலாங்குறிச்சி கல்வெட்டிலும் வல்லம் குடைவரை போன்ற கல்வெட்டுகளிலும் தேவகுலம் என்ற வடசொல்லே பயின்று வந்துள்ளது. தேவாரக்காலம் தொட்டு தளி என்னும் சொல் ஆலயங்களுக்கு பயில்கிறது. கீழைத் தளி , மேலைத் தளி போன்ற பல்வேறு பயன்பாடுகள் தென்படுகின்றன. தேவாரத்தில் காஞ்சியின் மேற்றளி குறிப்பிடப்பெற்றுள்ளது. மஹேந்த்ர பல்லவனின் மத்தவிலாஸ ப்ரஹஸனம் இதனை பஸ்சிம ஸ்தலீ என்று கூறுகிறது. இதைத்தவிர பூர்வஸ்தலியையும் அதாவது கீழைத்தளியையும் குறிப்பிடுகிறது. அதைப்பற்றி பிறகு பார்ப்போம். இந்நிலையில் தளியிலிருந்து ஸ்தலியா அல்லது ஸ்தலியிலிருந்து தளியா என்ற ஐயம் எழுகிறது. ஸ்தலீ என்ற வடசொல் சிறப்பான ஸ்தலம் என்ற பொருளிலேயே வடமொழியில் பயன்பட்டுள்ளது. ஸ்தலீ தேவதா என்று க்ராம தேவையைக் குறிப்பிட்டாலும் ஸ்தலீ என்பது க்ராமத்தைக் குறிக்குமே தவிர கோயிலைக் குறிக்காது. ஆகவே தமிழ் தளியிலிருந்து வடமொழிக்கு மஹேந்த்ரன் கொடுத்த கொடை கோயில் என்னும் பொருளில் ஸ்தலீ என்னும் சொல் எனலாம்.

 

 

Sankara Narayanan G Geetha M Sudharsanam தேவாய கோலதி அதாவது இறைவனுக்காக குலமாகக் கூடும் இடம் என்று பொருள் அம்மா

 

 

கற்றளி என்ற சொல் முதன்முதலில் ஆனைமலைக் குடைவரையிலேயே காணப்பெறுகிறது. மலையடிக்குறிச்சி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் கற்கோயில் என்றும் வல்லத்தில் தேவகுலம் என்றும் அறியப்படும் குடைவரை குரங்கணில்முட்டத்தில் கல்மண்டகம் எனப்பெறுகிறது. ஆக முதன்முதலில் கற்றளி என்ற சொல்லாட்சி ஆனைமலை நரஸிம்ஹர் குடைவரையில்தான்.

 

Ramachandran புத்தேளிர் கோட்டம் கலித்தொகையில் இடம்பெற்றுள்ளது. (இறந்தவீரனின் உடல்கிடைக்காவிட்டால் களிமண்-புல் கொண்டு அவனது உருவத்தைச்சமைத்து இறுதிச்சடங்கு செய்வதுண்டென்றும் அவ்வுருவம் புத்தலிகா எனப்பட்டது என்றும் தெரிகின்றன. புத்தேள்- புத்தேளிர் இதன் திரிபாகலாம்

Sankara Narayanan G Ramachandran புத்தலிகா பாஞ்சாலிகா வடசொற்கள். கோட்டமும் இருமொழிப் பொதுச்சொல்லாகலாம்

Ramachandran Diwakara Tanujaha நன்றி. ஸ்தலீ என்ற வடசொல்லே தளி எனத்திரித்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. தலம்-திருத்தலம் என்ற வழக்கு பரவலாக உள்ளதே!தளி என்ற தமிழ்ச்சொல் ஸ்தலீ என்று திரிந்திருக்கலாமெனில், கட்டுதல் என்ற பொருளுடைய "தள்" என்ற வினைச்சொல்லிலிருந்து தளி என்ற சொல் தோன்றியிருக்க வேண்டும். கட்டுமானம் என்ற பொதுப் பொருளில் தளி என்ற சொல் பயன்படுத்தப் படவில்லையே!

 __________________


Guru

Status: Offline
Posts: 24582
Date:
Permalink  
 

 

கோயில் கட்ட கடும் நியமம்

லால்குடி அருகிலுள்ள சிறுகளப்பூரிலுள்ள மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்று மிகவும் ச்வாரஸ்யமான தகவலைத் தருகிறது. ஆண்டவில்லி பேராயிரனான ஞானசம்பந்தன் என்பான் அங்கு இறைவனின் கோயில் செங்கலில் இடிபட்டு சுண்ணாம்பும் உதிர்ந்த நிலையில் கற்றளியாகக் கட்டுவதாக உறுதிபூண்டார். அதுவரை கைகளுக்கு விலங்கிட்டு கொள்வதாகவும் ஒற்றை ஆடை உடுத்துவதாகவும் கீரை மட்டுமே உண்பதாகவும் உறுதிபூண்டார். இப்படி கடும் நியமத்தோடிருந்து கோயிலைக் கற்றளியாக்கினார். அந்தக் கோயில் காளத்தீச்வரர் என்று வழங்கப்படுகிறது. கையில் விலங்கோடு அவருடைய சிற்பமொன்றும் அர்த்த மண்டபத்தில் காணப்படுகிறது.
என்னே பக்தி.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard