பெரியோர்களே, செந்தமிழ்ச் செல்வர்களே வணக்கம். சில ஆண்டுகட்கு முன்னர் நம்மிடையே: வாழ்ந்தவர் டாக்டர் (திருமதி) கிருட்டிணா சஞ்சீவி அவர்கள். கற்றவர்க்கு இனியவராகவும், மற்றவர்க்குப் பெருமையுடையவராகவும், மாணாக்க, மாணாக்கியர்க்கு எல்லோர்க்கும் நல்லவராகவும், நல்லாசிரியையாகவும், 'மனைத் கணவருக்கு வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப தக்க மாண்புடையவளாகித் தற்கொண்டான் வளத்தக் ாள் வாழ்க்கைத் துணை' (குறள்-51) யாகவும் இருந்து நல்வாழ்வு வாழ்ந்தவர் டாக்டர் (திருமதி) கிருட்டினா சஞ்சீவி அவர்கள். இவர்கள் நினைவாகவும், தம் அருமை அன்னையார் திருமதி கண்ணம்மாள் நடேசன் நினை வாகவும் டாக்டர் ந. சஞ்சீவியவர்கள் டாக்டர் (திருமதி) கிருட்டினா சஞ்சீவி - திருமதி கண்ணம்மாள் நடேசன் சொற்பொழிவுத் திட்டம்’ என்ற ஒர் அறக்கட்டளை யைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ளார்கள்.
இந்தத் திட்டத்தின்கீழ் மூன்று சொற்பொழிவுகள் இ! பல்கலைக்கழகம் எனக்கு அழைப்பு தது. என்ன பொருள் பற்றிப் பேசலாம் என்று அறக்கட்டளை நிறுவிய டாக்டர் சஞ்சீவி அவர்களை யோசனை கேட்டபோது அவர்கள் தமிழ் இலக்கியங் களில்- அறம், நீதி, முறைமை என்ற பொருள் பற்றிப் பேசலாம் என்றார்கள். நல்ல தலைப்புதான். தமிழே. ஒரு பெருங்கடல் மாக்கடலில் எண்ணற்ற வகை மீன் கள் உள்ளன. குறிப்பிட்ட மூன்று வகை மீன்களைப் பிடிக்க வேண்டுமென்றால் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டுமோ அவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும். தமிழ்க்கடலில் அறம், நீதி, முறைமை என்ற தலைப்புகளில் பொருள் சேர்ப்பதற்கு என்னால் இயன்ற அளவு முயன்று கருத்துகளைத் திரட்டி வைத்துக் கொண்டு இன்று உங்கள் முன் வந்து நிற்கின்றேன். தவிர, இந்த, தமிழ் இலக்கியங்களில்-அறம் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதில் ஒரு பெருமித உணர்வு என்பால் எழுகின்றது. இதற்குக் காரணம் இத்திட்டத்தை நிறுவிய டாக்டர் சஞ்சீவி, என் அருமைப் பேராசிரியர் மு. நடேச முதலியார் அவர் களின் அருமருந்தன்ன முதற்குமாரர். நான் (1984-86) திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் பயின்ற பொழுது திரு. முதலியார் என் தமிழ்ப் பேராசிரியர். திரு. முதலியாரின் வகுப்பில் மாணாக்கர்கள் ஒழுங்கு முறையைக்கடைப்பிடித்தது போல் எந்தத் தமிழ்ப் பேராசிரியர் வகுப்பிலும் மாணாக்கர்கள் கடைப்பிடித்ததை இன்று வரை நான் எங்கும் கண்ட றிந்ததில்லை. அவர் திறமையுடன் கற்பித்தது ஒருHம் மிருக்க, கட்டுரை எழுதுவதில் அவர் கற்பித்த முறை மிக மிக அற்புதமானது. இன்று எழுதுவது என்னிடம் இரண்டாம் இயல்பாக அமைந்திருப்பதற்கு முக்கிய கார ணம் அவர் தந்த பயிற்சியே என்பது என் அதிராத நம் பிக்கை. மூன்றாண்டுப் பருவத்தில் தந்தையை இழந்த எனக்கு அவர் தந்தை முறையில் நின்று அடிக்கடித் தனிமையில் கூறிய அறவுரைகள் என் சிந்தையில் ஆழப் பதிந்து என் வாழ்க்கையை நெறிப்படுத்தின என்பதை இன்றும் நீள நினைந்து போற்றுகின்றேன். இவையெல் லாம் இன்று என் நினைவில் ஒன்றன்பின் ஒன்றாக எழு கின்றன. மேலும் இப்பேராசிரியப் பெருந்தகை திருச்சி மலைக்கோட்டையில் வாழ்ந்ததும் நினைவுக்கு வந்ததால் தாயுமான அடிகளின் பாடல்களை இறைவணக்கப் பாடல்களாகக் கொள்ளவும் நேர்ந்தது. நிற்க
அன்பர்களே, இன்றைய பொழிவில் தமிழ் இலக்கியங் களில் அறம்' பற்றிய கருத்துகள் அமைந்திருப்ப ைத உங்களுடன் சேர்ந்து உரக்கச் சிந்திக்கின்றேன். இவ் வுலகிலுள்ள பொருள்களை உயிர்ப்பொருள்கள், உயிரில் பொருள்கள் என இரு கூறிட்டுப் பேசலாம். உயிர்ப் பொருள்களின் நலத்தின் பொருட்டே உயிரில் பொருள் தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கள் படைக்கப்பெற்றுள்ளன. தன் துன்பத்தை உணாநது வ ரு ந் து வ தும், த ன் இ ன் பத் ைத உ ன ர் ந் து களிப்பதும் எல்லா உயிர்கட்கும் பொதுவான இயல்பு என்பதை நாம் அறிவோம். ஆனால், மக்கள் வாழ்க்கை யின் தனிச்சிறப்பு அதில் பகுத்தறிவு விளக்கம் அடைந் திருப்பதும் இன்பத்தை அவாவி நிற்றலுமேயாகும் என்ப தையும் உணர்கின்றோம். ஏனைய உயிர்களைப்போலவே கனிதன் ஐயறிவு நிரம்பப் பெற்றவனாயினும் அவற் றிடம் அமையாத மனம் என்னும் கருவியை அவன் பெற். றுள்ளான். இந்தச் சிறந்த கருவியைப் பெற்றுள்ள அவன் அதைப் பண்படுத்தவும், பயன்படுத்தவும் வல்லவனாகவும். விளங்குகின்றான். மனிதனுடைய வாழ்க்கை மெய்,வாய் š மூக்கு, கண், செவி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழும் வாழ்வு மட்டிலும் அன்று. இவையு மாய் இவற்றிற்கு அப்பாலுமாய் உணர்ந்து அறிந்து மனத்தால் வாழும் வாழ்க்கையாகும் அவனது திரு ழ்க்கை. அறியாமை வாயிலாக வரும் துன்பங்களை க்கி இன்பத்தை நுகர்தற் பொருட்டே இவனிடம் அறிவு ாக்கம் அமைந்துள்ளது. இதனையுணர்ந்த தொல்,
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது bதான்அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்." AAAAAA SAAAAA AMM AA g SMMMS SSSSSS A SAS SSAS SSAS TS T S T SAAAAS - - என்று கூறியிருப்பதைச் சிந்திக்கின்றோம்.இங்ங்னமே. பிற்காலத்தார் உறுதிப்பொருள்களை அறம், பொருள், இன்பம் எனப் பாகுபடுத்தி ஒதியது போலாது அவர்,என்று ஒதியவற்றானும் இதனை நன்கு அறியலாம். இக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே டாக்டர் மு. வ. தமது திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம்' என்ற தம் அருமையான நூலில் நூற்பொருளைத் திருக்குறளில் காணப்பெறுவது போல் அறம், பொருள், இன்பம் எனப் பகுத்தோதாது இன்பம், பொருள், அறம் எனப்பகுத் தோதினார் என்றே எனக்குத் தோன்றுகின்றது. இந்த அமைப்பைத் தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்கள் பலப் படப் பாராட்டியிருப்பது(அணிந்துரையில்) நம் கவனத்தை ஈர்க்கின்றது. உறுதிப் பொருள்கள்: இந்நிலவுலக வாழ்வில் மக்கள் எல்லோரும் அடைதற் கரிய உறுதிப் பொருள்களை அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் பாகுபடுத்திக் கூறுவதை நாம் அறிவோம். எல்லா உயிர்களாலும் விரும்பி நுகரப்படுவது இன்பம்; அந்த இன்பத்திற்குக் காரணமாக அறிவுடைய மக்களால் ஈட்டப்படுவது பொருள்; பிறர்க்குத் தீங்கு நினையாத மாசற்ற மனத் தால் பொருள் செய்தொழுகும் முறை அறம். நுகர்தல், வேட்கைமுறைபற்றி இன்பம் - பொருள் - அறம் @了@ö” 'இன்பமும் பொருளும் அறனும்’ என்ற மேற்காட்டிய நூற்பாவால் வகுத்துக் காட்டினார் தொல்காப்பியர். செய்கை முறை பற்றி அறம்-பொருள்-இன்பம் எனவும் எண்ணுதல் மரபு. இம்முறையில் எண்ணுவதை, - அந்நிலை மருங்கின் அறம்முத லாகி மும்முதல் பொருட்கும் உரிய என்ப." என்று கூறுவர் தொல்காப்பியர். வீட்டினைப் பற்றித் தொல்காப்பியர் தனியாக எடுத்தோதவில்லை. உலகின் 5. செய்யு. 106. (இளம்) தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பொருள் மூன்றினையும் கூறுவான் அவற்றை மும்முதல் பொருள் என்றான், அவையின்றி விடுபெறுமாறு வேறின் மையின் வீடும் ஆண்டுக் கூறினான் என்பது” என்ற பேராசிரியரின் உரைப்பகுதியால் ஆசிரியர் எடுத்தோதாதன் காரணத்தை அறியலாம். இந்த மூன்றினைத் தவிர அறி வுடைய மக்களால் விரும்பி மதிப்பதற்குரியன பிற இன் கையின் இம் மூன்றினையும் மும்முதற்பொருள் என்று ஆசிரி வர் சிறப்பித்துள்ளமை உய்த்துணரத்தக்கது. அறவழியில் பொருளாக்கி அப்பொருளால் இன்பம் நுகர்தலே மக் கனது விழுமிய நல்வாழ்க்கை முறையாகும். இவ்வாறு. மூன்று பகுதிகளாக நிகழும் இவ்வுலக வாழ்க்கையின் பகுதியினை மூன்றன் பகுதி” எனத் தொகுத்துரைப்பர் தொல்காப்பியர். வள்ளுவப் பெருந்தகையும் தொல்காப் வியரின் முறையையொட்டியே தம் நூலை அறம், பொருள், இன்பம் என முப்பால்களாக வகுத்தருளினார் என்பது ஈண்டு நோக்கி உணரத்தக்கது. இன்பநிலை, பொளிருயல்பு போன்றவற்றை விளக்குவது. போருத்தமின்மையால், அவற்றை ஈண்டு விளக்கவில்லை. இவை பற்றிய விளக்கத்தை என் பிறிதொரு நூலில்’ காணலாம். ஆசிரியர் மூன்றாவதாக நிறுத்திய அறம்: என்னும் முடிந்த பொருளை ஈண்டு ஆராய்வது பொருத்த முடையதாகும். அறமும் அன்பினையே முதலும் ஈறுமாகக் கொண்டு சட்டப்படுதலும் நுகரப் பெறுதலும், செய்யப் பெறுதலும் வேண்டும். என்பது தொல்காப்பியரின் கருத் தாகும். இது இன்பமும் பொருளும் என்ற நூற்பாவின் முதலிரண்டு அடிகளினால் இனிதுபெறப்படும். வள்ளுவப் பெருந்தகையும்,
5. தொல்காப்பியம் காட்டும். வாழ்க்கை
- - " و سیمین پیر ۹: م او است . (மூன்றாம். பதிப்பு月。 (பழநியப்பா பிரதர்ஸ், 14 பீட்டர்ஸ்சாலை, சென்னை “G森姆·莎丑参J