அணிந்துரை (ஜஸ்டிஸ் எஸ். நடராசன், உச்சநீதிமன்றம், தில்லி)
இன்றைய வாழ்க்கை நிலையைப் பொருளாதார அடிப்படையில் ஆய்ந்து அக்கால இலக்கியங்கள் இன்றைய சூழ்நிலையில் எங்ங்னம் பொருந்தும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். அகப்பொருளில் அறத்தைப்பற்றி பேசுங்கால் பால தாணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப' (தொல். கள. 5) என்னும் நூற்பாவில் கிழவனும் கிழத் தியும் என்று இருவரையும் எழுவாயாக வைத்துக் காட்டும் பாங்கில் முன்னதாகக் காதலித்தவர் யார் என்ற வினாவுக்கு இடம்வைக்கவில்லை என்பது சிந்திக்கத் தக்கது (பக்.28) என வரைந்திருப்பது ஆசிரியர் ஆய்வுத் திறனுக்கு ஒர் காட்டு. - - 'அறத்தொடுநிற்றலையைப் பக்தி இலக்கியத்தோடு புணர்த்திப் பேசுங்க்ால் ஆசிரியரது சமய இலக்கிய அறிவு நன்கு வெளிப்படுகிறது. குறிப்பாக வைணவ இலக்கியத் திலும், அந்த மரபுகளிலும் உள்ள ஆழ்ந்த பயிற்சி ஆய்வுக்குத் துணை செய்கிறது(பக்.-30). வெளிநாட்டைப்பற்றிக்கூறிவருங்கால் சமுதாயச்சடங் கிற்கும், கற்பொழுக்கத்திற்கும் நடக்கும் போராட்டமாக வரைந்திருப்பது அழகான ஒன்று. - இல்லற இயல், துறவறவியல் என்னும் இரண்டிற்கும் பொதுவானவையாக அழுக்க்ாறு, இன்னாச் சொல், அவா, வெகுளி என்னும் நான்கினையும் நீத்தல் என்றுகூறப்படுதல் வேண்டும் என்ற உரைத்த ஆசிரியர் (பக்-64) இக்காலத்துச் சில போலித் துறவிகள் செல்வம் சேர்ப்பதையே குறிக் கோளாகக் கொண்டு இயங்குவதைச் சுட்டிக்காட்டு கின்றார். » கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்' என்னும் கம்பன் சொற்றொடரில் வரும் க்ண்களால் என்ற சொல்லுக்குப் புத்துரை வழங்கிய ஆசிரியர் (பக்.73) பாராட்டுக்குரியவர்.
அன்பின் சிறப்பையும் தன்னலத்தினால் ஏற்படும் தீமைகளையும் ஆசிரியர் நன்கு விளக்குகின்றார் (பக்-82) விருந்தோம்பலைச் சொல்லுங்கால் இக்காலத்தில் விருந்து என்ற பெயரில் நடக்கும் ஆடம்பரங்களையும், உண்மையான விருந்து வழங்க இயலாத நிலையையும் குறித்து ஆசிரியர் கூறியிருப்பது அவரது துணித்த பார்வைக்கு ஓர் எடுத்துக் காட்டு (பக்-88). செய்ந்நன்றி அறிதல்' என்னும் தலைப்பின் கீழ், 'செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல்அரிது’ என்ற குறளுக்குக் கணித வாய்பட்டில் விளக்கம் தந்திருப்பது (பக்-98; 99) புதுமையான, ஆசிரிய ரின் சிந்தனைக்கு ஒர் உரைகல்லான எடுத்துக்காட்டு. பொறையுடைமையைப் பற்றிக் கூறுங்கால், தருமனது பொறுமையை விளக்கும் முகத்தான் வில்லிபாரதப் பாடல்களையும், பாஞ்சாலி சபதப் பாக்களையும் எடுத்துக் காட்டியிருப்பது (பக் 132-135) சிறப்பான ஒன்று. அவாவறுத்தல், வெஃகாமை, கள்ளாமை என்னும் மூன்று சொற்களும் ஒருபொருளுடையன போலத் தோன்றி லும் அவை தம்முள் துணுகிய வேறுபாடுடையன என அழகாகக் குறித்துள்ளார். துறவறவியலில், செவிச் செல்வத்தைப் பற்றிக் குறிப் பிடும்பொழுது, அந்தச் செல்வம் பொருட்டாவின காயினும் அருட்செல்வத்தினும் ஒருபடி உயர்ந்தது என்பதை விளக்கும் பாங்கு அழகியதாகும் (பக். 1 56-57). புலால் மறுத்தல் பற்றி நீதிபதி ஒருவர் கூறிய கருத்து வள்ளுவத்திற்கு முரணானது என நிலைநாட்டியிருப்பது ஆசிரியரின் Qāstāranāāgarsaság (Courage of conviction). எடுத்துக்காட்டு (பக். 163-64) 3. 'தவம்’ அனைவர்க்கும் பொதுவானதென்றும், இல்லறத்தினரும் இதனை முயலுதலே சிறப்பான தென்றும்கூறிய ஆசிரியர் அதற்குத் தக வள்ளுவரது வாய்மொழியை விளக்கியிருப்பது சாலப் பொருந்தும்(பக். 165). மழித்தலும் நீட்டலும் என்பதைப்பற்றிக் குறிப் பிடும்போது தமக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறி யிருக்கும் பாங்கு ஆசிரியரின் நகைச்சுவையுணர்வையும், இத்தகைய வழக்கங்களில் அவருக்கு நம்பிக்கையின்மை யையும் புலப்படுத்துவன(பக். 168-69). ಕು 'நீதி' என்ற பகுதியில் தொடக்கத்திலேயே அறத் திற்கும் நீதிக்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தி விடுகின்றார்(பக். 218). புறநானூற்றுக் காலத்தில் மன்னனை உயிராகவும் மக்களை உடம்பாகவும் காட்டப்பெற்ற கருத்து, கம்பன் காலத்தில் தலைகீழாகமாறி மக்களாட்சிக்கு வித்து நடப்பெற்றது. அத்தகைய நிலையிலிருந்து ஆட்சி செய்யும் மன்னனின் செங்கோன்மையைப்பற்றி இக்கால நடைமுறையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் ஆசிரியர் (பக். 224-225). "நீதி நெறி வழுவாது ஆட்சிபுரிந்த மூவேந்தரது வரலாறுகளின்று தக்க நிகழ்ச்சிகளை ஆசிரியர் கூறுகிறார் (பக். 232, 235, 248). - தமிழக வேந்தர் நீதி வழங்கிய முறையையும், அதன் பால் அவர்கள் கொண்டிருந்த ஊற்றத்தையும் ஆசிரியர் தக்க மேற்கோள்களுடன் புலப்படுத்துகிறார். - கொலைத்தண்டனை கூடாது' என்றும், சிற்சில இடங்களில் அது தேவை என்றும் இருவேறு கருத்துகள் நிலவும் சூழ்நிலையில் மேனாட்டு அறிஞர் வாய்மொழிப் படி திருந்தத் தக்கவர், திருந்தாதவர் என இரு பகுப் புடைய கொலைஞருள் பிற்பகுதியினருக்குக் கொலைத் தண்டனை சாலும் என்று கூறும் ஆசிரியர், அண்மைக் காலத்தில் நிகழ்ந்த இருபெருங் கொலைக் குற்றங்களைச் கட்டிக்காட்டுவது அவரது யதார்த்த நோக்கைப் (பக். 255) புலப்படுத்துவதாகும். இறை, புரவு, கடமை என்னும் சொற்கள் பிறந்த வகையைக் கூறும் ஆசிரியர் பிசிராந்தையாரது பாடலை எடுத்துக்காட்டி மன்னனது (இக்காலத்து அமைச்சரது) கடமை இன்னதென்று நிறுவுகின்றார் (பக்.258). அறிகரி பொய்க்கரி போன்ற சொற்கள் பயிலும் அகப்பாடல்களை மேற்கோள் காட்டி அம்முகத்தான் நீதிபற்றிக் கூறுவது சுவையான இடம் (பக். 266, 267). உடல் ஊனமுற்றோருக்குச் சிறப்பாக அரசன் செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கூறிவரும்போது சாதி யொழிப்பு என்ற பெயரில் நடக்கும் முறையற்ற செயல் களை ஆசிரியர் வெளிப்படையாகச் சாடுவது அவரது துணிவுக்கு ஒர் அளவுகோலாகும் (பக். 271, 275), மூன்றாவது பகுதியாகிய முறைமை' யில் ஆசிரியர் பொதுவாக அச்சொல் பயின்றுவரும் இலக்கிய மேற்கோள் களையே எடுத்துக்காட்கிடுன்றார். முறைமை என்ற சொல் பெரும்பாலும் அறம், நீதி என்ற பொருளிலேயே ஆளப் படுதலானும், அவ்விரண்டையும் பற்றி முன்னரே நிறையக் கூறியிருத்தலானும், இந்தப்பகுதி சுருங்கவே. அமைந்துள்ளது. ,ஆயினும், முறைமை என்பது அரசநீதி, மரபு முறை *مہ மாயாதைமுறை என்ற பொருள்களிலும் பயின்றுவரு வதைக் காணும் ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத் தக்கது. முறைமை என்ற சொல்லை நெறிமுறை தவறாது ಆಟ ಸ್ತ್ರೀ. ஞாலத்திகிரி, முதுநீர்த்திகிரி, காலத்திகிரி, கோலத்திகிரி போன்ற பொருள்களுடன் புணர்த்தி வைணவ இலக்கியங்களின் மேற்கோள்களுடனும் இக்கால அறிவியல் வளர்ச்சியுடனும் ஒப்பிட்டுப் பேசும் பாங்கு மிகவும் சுவையான பகுதியாகும் (பக். 308-309). பொதுவாக நூல்முழுதும், ஆசிரியரின் இலக்கண இலக்கிய அறிவையும், குறிப்பாக வைணவ சமயத்திலும் அதன் இலக்கியங்கள், தத்துவங்கள் ஆகியவற்றில் அவருக் குள்ள ஆழ்ந்த பயிற்சியையும் வெளிப்படுத்துகின்றன. இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த ஒர் மாமணி. தமிழின்பால் காதல் கொண்ட ஒவ்வொரு வரும் பன்முறை படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இஃது என்பதில் ஐயமில்லை. -எஸ். நடராசன்