New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியத்தில் கூறப்படும் திருமண வகைகள்


Guru

Status: Offline
Posts: 23907
Date:
தொல்காப்பியத்தில் கூறப்படும் திருமண வகைகள்
Permalink  
 


. ஆரியம் திராவிடம்

ஆரியம், திராவிடம், கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்தவர்கள், பார்ப்பனர், அந்தணர், ஆதிக்க சக்தி...,

இப்படி வாய்ஜாலங்களால் வண்டியை ஓட்டி பிழைக்கும் டுமீல் போராளிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

நமது தமிழ்நாட்டில் ஒரு நல்ல பழக்கம் ஆதி காலத்தில் இருந்தே வந்துள்ளது.

அது கண்ணுக்கு முன்பாக உண்மை தெரிந்தால் கூட வெளிநாட்டு சரக்கு என்றால்,

அதுவும் வெள்ளை தோல் கொண்டவன் சொன்னால் அதை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வார்கள்.

ஆங்கிலேயன் கால்டுவெல் சொன்ன உளுத்துப்போன கருத்துக்களும். அந்த இத்துப்போன கருத்தை வைத்துத்தான் இந்த திராவிட டுமீலர்கள் தங்கள் வாதத்தை வைக்கின்றனர்.

அதற்கு ஆதாரமாக இவர்கள் சொல்வது சிந்து சமவெளி நாகரீகம். அது திராவிடர்களுடையது. ஆரியர்களின் படையெடுப்பால் அது அழிந்து விட்டதாக ஒரு வாந்தி வாதத்தை வைக்கின்றனர்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் காலகட்டத்தை பற்றி பல தகவல்கள் இருந்தாலும் கூட கி.மு 3,500 ல் இருந்து கி.மு 1,700 இதற்குள் அந்த நாகரிகம் பற்றிய காலகட்டம் அடங்கி விடுகிறது.

இந்த காலகட்டத்திற்குள் கைபர், போலன் கணவாய்கள் வழியாக படையெடுத்து வந்த ஆரியர்கள் அந்த திராவிட நாகரிகத்தை அழித்தார்களாம்.

ஆக கி.மு 3500 க்கு முன்னதாக ஆரியர் என்ற இனம் இந்தியாவில் இல்லை, அதற்கு பின்னால் தான் ஆரியர்களின் வரலாறு இந்தியாவில் ஆரம்பமாகிறது என நாம் எடுத்துக்கொள்ளலாம்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் இப்போது தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு செல்வோம். எனக்கு தெரிந்து தொல்காப்பியத்திற்கும் மேலான ஒரு பழமையான நூல் தமிழ் இலக்கியத்தில் கிடையாது.

தொல்காப்பியத்தில் தெய்வ வழிபாட்டை பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார்.

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)

இந்த பாடலில் வரும் மாயோன், சேயோன், வருணன் போன்ற வழிபாட்டு தெய்வங்கள் யார்...?

மாயோன் திருமால் எனவும், வருணன் வேதங்களில் குறிப்பிடும் வருணபகவான் எனவும் உறுதியாக எடுத்துக்கொள்ளலாம்.

சேயோன் என்பது தமிழ் கடவுள் முருகன், சிவன் இருவரில் யாரை குறிக்கிறது என்பதில் தமிழறிஞர்களிடையே இன்று வரை பலத்த சர்ச்சை நிலவுவதால் நாம் அதை விட்டு விடலாம்.

இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது தொல்காப்பியத்தின் காலம். கி.மு. 8000 ல் இருந்து கி.மு. 20,000 வரையாக பல காலகட்டங்களை தமிழறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.

கைபர், போலன் கணவாய் வழியாக கி.மு 3500 க்கு பிறகு வந்த ஆரியர்களின் வேதங்களில் உள்ள திருமாளும், வருணனும் எப்படி அதை விட பழமையான தொல்காப்பியத்திற்குள் வந்தார்கள்...?

ஒரு வேளை, தொல்காப்பிய காலத்தில் திராவிடர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஓடிக்கொண்டிருந்த விமானத்தில் ஏறி கைபர், போலன் கணவாய்களை தாண்டிச்சென்று தொல்காப்பியர் திருமாளையும், வருணனையும் பிடித்துக்கொண்டு வந்து தொல்காப்பியத்தில் வைத்திருப்பாரோ...?


இது தொல்காப்பியத்தில் கூறப்படும் திருமண வகைகள.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.

-தொல்.பொருளதிகாரம்—1038

 

தொல்காப்பியரின் இந்த சூத்திரத்துக்கு “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் நீண்ட விளக்க உரை எழுதி இருக்கிறார்.

எட்டுவகைத் திருமணங்களின் விவரம்

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் கலைக்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள்:–

1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8).பைசாசம்

பிராம்மம் வகைத் திருமணங்கள்.

இந்த எட்டு வகை திருமணங்களில் நமக்கு தேவையானது முதலாவது வகை திருமணம் பற்றிய தகவல்கள் மட்டுமே. பதிவின் நீளத்தை கருதி மற்றவற்றை விட்டு விடலாம். முதல் வகையை மட்டும் பார்க்கலாம்.

வேதம் ஓதினனாகவும் நல்லொழுக்கனாகவும் இருக்கின்ற பிரம்மச்சாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நூதன வஸ்திரத்தால் (புத்தாடைகளால்) அலங்கரித்து, கன்னிகையையும் அப்படியே நூதன பூஷண அலங்காரம் (பெண்ணையும் நகை, ஆடைகளால் ) செய்வித்து அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது பிராம்மம் ஆகும்.

இதில் வேதம் ஓதுகின்ற மாப்பிள்ளை யார்....? அவன் எந்த வேதத்தை ஓதினான்...? ஆரியர்கள் கி.மு 3500 ல் வந்தார்கள் என்றால் கி.மு 8000 ல் வேதம் ஓதும் மணமகன் எப்படி தொல்காப்பியத்தில் வந்தான்....? 
திராவிட டுமீலர்கள் இதற்கு விளக்கம் சொல்வார்களா....?

ஆக பிரம்மம் முறையில் திருமணம் செய்ய பெண்ணை பெற்றவர்கள் இங்கிருந்து திராவிடன் ஏர்லைன்ஸ் விமானம் பிடித்து கைபர், போலன் கணவாய்களை தாண்டிச்சென்று வேதம் படித்த மாப்பிள்ளைகளை பிடித்து வந்துள்ளார்கள். 
---------- ------------- -----------------

தொல்காப்பியம் மரபியல்:...

''நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய'' (தொடர் எண்- 1570)

முப்புரிநூல், கமண்டலம், முக்கோல் எனக்கூடிய தவம் செய்யும் கைதாங்கி, அமரும் பலகை இவை நான்கும் அந்தணர்க்குரியவைகள். (வனத்திற்கு சென்று தவம் செய்யும் வனப்பிரஸ்தன்)

''அந்தணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.'' (தொடர் எண்- 1572)

அந்தணர்க்குரிய முப்புரி நூல், கமண்டலம், முக்கோல், பலகை அரசர்க்கும் பொருந்தும். (அரசனும் தவம் செய்ய தகுதியானவன்)

தொல்காப்பியத்தின் இந்த அந்தணன் யார்...? கி.மு 3500 படையெடுத்து வந்த ஆரியர்கள் தான் அந்தணன் என்றால் அவன் எப்படி கமண்டலம், முப்புரி நூல், அமரும் பலகை உடன் எப்படி தொல்காப்பியத்திற்குள் வந்தான்...? அவனுக்குரிய அடையாளங்களை எப்படி தொல்காப்பியரல் சொல்ல முடிந்தது. அந்த அந்தணனன் எந்த தெயவத்திற்காக காட்டில் தவம் செய்தான். 
இதன் மூலம் நாம் கீழ்கண்டவற்றை விளங்கிக்கொள்ளலாம்

இந்த திராவிட டுமீலர்கள் சிவனையும்,விஷ்ணுவையும் ஆரிய கடவுள்கள் எனவும், அது தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்கிறது எனவும் மக்களை ஏமாற்றி பிழைக்கின்றனர்.

தமிழர்களின் இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம்......, 
இப்படி எண்ணிலடங்காத நூல்கள் அனைத்திலும் சிவன், விஷணுவை போற்றி பாடல்கள் உள்ளதே....! அதற்கு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள். 
பகுத்தறிவு என்ற பெயரில் சிவன், விஷ்ணுவை பற்றிய குறிப்புகள், துதிகள், புகழ் மாலைகள் உள்ள இந்த நூல்கள் அனைத்தையும் குப்பையில் எறிய போகிறார்களா....?

உண்மையை சொன்னால் இவர்கள் தமிழை காப்பாற்றுபவர்கள் அல்ல.

ஆரியம், திராவிடம் என்று பொய்களை அவிழ்த்து விட்டு கொள்ளையடிக்கும் கும்பலிடம் நாம் சிக்கி சீரழிந்து கொண்டுள்ளோம். இல்லாத ஆரியத்தின் பெயரில் இப்படியும் ஒரு மானங்கெட்ட பிழைப்பு.

இந்த இன துரோகிகளை இனியும் இப்படியே விட்டு வைத்தால் தமிழ் நூல்கள் அனைத்தும் அழியும். தமிழ் நூல்கள் அழிந்தால் தமிழ் மொழியும் அழியும்.

///// மீள் பதிவு /////

--------- வில்லன் Bommaiyah Selvarajan.__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
RE: தொல்காப்பியத்தில் கூறப்படும் திருமண வகைகள்
Permalink  
 


Sankara Narayanan G

மாத்ரா சந்தஸ்ஸும் தென்னகமும்

வடமொழியின் யாப்பு இருவகையானது. ஒன்று எழுத்துக்களைக் கொண்ட கணசந்தஸ். மற்றொன்று மாத்ரைகளை எண்ணும் மாத்ரா சந்தஸ். மாத்ரா சந்தஸ்ஸின் மிகப்பழைய பயன்பாடு காத்யாயனர் என்பவர் வடமொழிக்கு இயற்றிய புறநடையில் அதாவது வார்த்திகத்தில் காணப்பெறுகிறது. காத்யாயனர் தென்னகம் சார்ந்தவர் என்று பதஞ்ஜலி குறிப்பிடுகிறார்.

பட்டிப்ரோலுவில் கிடைத்த ப்ராக்ருத கல்வெட்டிலுள்ள சந்தஸ்ஸும் ’உத்கீதி’ எனப்பெறும் மாத்ராசந்தஸ். ஆந்திர அரசனான ஹாலன் என்பான் இயற்றிய காதா ஸப்தசதியில் இடம்பெற்றுள்ளவையும் மாத்ரா சந்தஸ்ஸே. ஆகவே மாத்ரா சந்தஸ்ஸின் பயன்பாடு தென்னகத்திலிருந்தே புழக்கத்தில் வந்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard