New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கால்டுவெல் சைவர்கள்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
கால்டுவெல் சைவர்கள்
Permalink  
 


https://www.facebook.com/permalink.php?story_fbid=2251882538458638&id=100009107423631

தமிழகத்தில் பிரதான சமயங்களாக சைவம் வைணவம் என இரண்டு சமயங்கள் இருந்தாலும், கால்டுவெல் வகையறாக்களின் சதிக்கு ஆட்பட்டு மேடைதோறும் திராவிட கொள்கைகளை பரப்புபவர்கள் சமயதுரோகிகளாகிய சைவவேடத்தில் உள்ளவர்களே.

#வைணவர்கள் #ஆழ்வார்கள் வாக்குகளுக்கு,
ஜீயர் முதல் பாகவதர் வரை திமுக ஜெகத்ரட்சகன் வரை ஒரே மாதிரியே பொருள் கொள்வார்கள்.கூறுவார்கள்.

ஆனால் வனளாவிய புகழோடு ஓங்கவேண்டிய #சைவசமயம்இந்த கால்டுவெல் அடிப்பொடி சைவவேடத்தவர்களால் கலங்கிநிற்க்கின்றது.தேங்கிநிற்க்கின்றது.

திருமுறை வாக்குகளுக்கு,

திராவிட சைவர் ஒருவிளக்கம் அளிப்பார்.
மிஷனரி சைவர் ஒரு விளக்கம் அளிப்பார்.
டமில் தேசிய சைவர் ஒரு விளக்கம் அளிப்பார்.
மார்க்சிய சிந்தனை சைவர் ஒரு விளக்கம் அளிப்பார்.
நாத்திக சைவர் ஒரு விளக்கம் அளிப்பார்.

வைதிகசைவர் மட்டுமே ஆன்றோர் கருத்தை வழிமொழிவாரே ஒழிய தன் கருத்தாக திருமுறைகளுக்கு விளக்கம் அளிக்கமாட்டார்.

இப்படி சைவர் என்ற போர்வையில் திருமுறைகளுக்கு மேடைக்கு மேடை தவறாக விளக்கமளித்து சைவசமயத்தை சிதைத்து வருகிறார்கள்.

இன்றைய சைமன், காஸ்பர் இன்னும் மற்றுள்ள பலருக்கு முன்னோடு யார் என்றால், இந்த சைவவேடம் கொண்ட திராவிட சைவர்களே.

தனிதமிழ் இயக்கம் என்ற பெயரில் மறைமலை, கா.சு. பிள்ளை போன்றோர் தங்கள் தேவையற்ற கருத்துக்களால் சைவசமயத்தை பகுதி பகுதியாக சீர்குலைத்தார்கள். ருத்ரன், சிவன் வேறு என்பது, முருகன் ,சுப்பிரமணியன் வேறு என்பதெல்லாம் இவர்கள் சைவசமயத்தை அடையாளமாகக் கொண்டு ஆரம்பித்துவைத்த அசிங்கங்கள்.

இதனையே பின் வந்த அ.ச. ஞானசம்பந்தன் முதல் இன்றைய பல சிவவேடதாரிகள் பரப்பிவருகிறார்கள்.இதன் ஒரு தொடர்ச்சியே இன்றைய சுகி. சவம் பேச்சு எல்லாம்.

நெற்றியில் விபூதியும், வார்த்தையில் தேவாரமும் இருந்தாலும் உள்ளம் எல்லாம் திராவிட கால்டுவெல் வகையாரா கொள்கையில் காதல் கொண்டிருக்கும்.

மேடையில் இவர்கள் திருமுறையை புகழ்ந்து பேசும்பொழுது நாடிநரம்பு எல்லாம் ரத்தம் ஏறும். அப்படி உணர்ச்சியப்படவைப்பார்கள்.

ஆனால் சைவமரபு அல்லது நால்வர் வாக்குக்கு மாறாக உங்கள் கொள்கை பேச்சு உள்ளதே என்றால், உடனே அதற்க்கு ஒரு போலியான திருமுறை விளக்கம் அளிப்பதை பார்த்தால் கால்டுவெல் தோற்றுவிடுவார்.

கணவன் இருக்க மங்கை தன் உள்ளத்தை வேறு ஒருவனிடம் வைத்து அவனுக்கு விஸ்வாசமாக இருப்பதுபோல்,

கொஞ்சம் கூட சூடு சுரனை இன்றி, சைவ அருளார்கள் வாக்குக்கு புது புது தான்தோன்றி விளக்கங்களை அளித்து கால்டுவெல் வகையறா கொள்கைக்கு விஸ்வாசமாக விளங்குவார்கள்.

இரண்டு மூன்று நாட்களாக சென்னையில் நடக்கும் சைவசமயம் சார்ந்த ஒரு மாநாட்டில் ஒருவன் மேடை ஏறி ஈரோடு ராமசாமியை புகழ்ந்து பேசுகிறான்.

இவர்கள் திராவிடகழகம் வெளியிட்ட பெரியபுராண ஆராய்ச்சி, சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல்கேஸ், மற்றும் ஞானசம்பந்தர் பற்றி கழகம் வெளியிட்ட நூல்களை படித்திருந்தால், #சைவசமயம் சார்ந்த #சூடுசுரனை வந்திருக்குமோ?

சைவசமயத்தை இப்படி கேவலமாக எழுதி வெளியிட்ட ஒரு கழகம் தலைவனாக அடையாளப்படுத்தும் ஒருவனை சைவசமய மேடையில் புகழ இவர்களுக்கு வாய் கூசவில்லையா?

வாய் வியபாரிகள் என்பதால் எங்கு வேண்டுமானாலும் எதையும் பேசலாம் என்ற நினைப்பா.?

உண்மையில் கால்டுவெல் திராவிட வகையறாக்களுக்கு பிறகு, தமிழக ஆன்மீக பாரம்பர்யத்தை சிதைத்து சின்னாபின்னமாக சீர்குலைப்பவர்கள் இந்த கால்டுவெல் வகையறா சைவர்களே.

சைவசமயத்தின் தவக்குறைவே இது.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

ஸ்ரீராமதாஸ் மகாலிங்கம் இராமானுஜர் புரட்சி செய்தார்னு அங்கிட்டும் ஒரு கோஷ்டி இருக்கு.

சம்சார சாகரத்தில் இருந்து மனிதன் கடைத்தேற பகவானை சரணடைய வேண்டும் எல்லா சங்கராசாரியார்களும் தெளிவாக சொல்லி வர, நியோ வேதாந்ததிகள் / அத்வைதிகள்னு ஒரு கரப்ட் குரூப்பும் இருக்கு.
இதை மறை அல்லது புகாரளி
  • Thillai Karthikeyasivam Sivam
    Thillai Karthikeyasivam Sivam ஸ்ரீராமதாஸ் மகாலிங்கம் ராமானுஜர் புரட்சி கோஷ்டி வைணவத்தில் மிகக்குறைவு. அப்படி ஓர் இருவர் பேசினாலும், வைணவ மரபின் அடித்தளத்தை சிதைக்கமாட்டார்கள்.

    சைவத்தில் உள்ளதுபோல் மற்ற கயவர்களோடு, ஆழ்வார்களை ஒப்பிடமாட்டார்கள்.


    இங்கு சைவத்தில் சேக்கிழாரையும் பெரியாரையும் ஒப்பிட்டு பேசுவது, அப்பரையும் சேகுவாரேயும் இணைத்து பேசுவதெல்லாம் நடக்கும்.

    திமுக ஜெகத்ரட்சகனே ஆழ்வார் விழா எடுத்தாலும் வேதசப்தம் இன்றி விழா நடக்காது. வேத வெறுப்பு மேடையில் ஒலிக்காது.

    இங்கே சைவசமயத்தில் வேதநெறி தழைத்தோங்க என அவதரித்த ஞானசம்பந்தர் விழாவில் கூட, வேத சப்தம் இருக்காது. வைதிகன்று விழாவில் வைதிக சைவ எதிர்ப்பை மனதில் கொண்டவர்கள் மேடையேறி உளறிக்கொண்டிருப்பார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Neyveli Rajesh அண்ணா தாங்கள் கூறுவதில் ஒரு மாறுதலும் இல்லை என்றால் நான் எனது நண்பர் வகையறாக்களில் கூட கூறுவது உண்டு அதாவது சைவ பிள்ளைமார்கள் ஒரு பகுதியினர் முதலியார் ஒரு சில சகோதரர்கள் இவர்கள் பேசுவது அனைத்தும் சைவ மரபைச் சார்ந்து இருக்கும் ஆனால் அவர்கள் ஆழ்மனதில் திராவிடத்தை ஆதரவு அளிக்கக்கூடிய பெரியவர்களாக இருக்கிறார்கள் இது உண்மை
இதை மறை அல்லது புகாரளி
  • Thillai Karthikeyasivam Sivam
    Thillai Karthikeyasivam Sivam Neyveli Rajeshதிராவிடத்தை வளர்த்தவர்களே பிள்ளை, முதலியார்தான் என்ற பேச்சே உண்டு.
    இதை மறை அல்லது புகாரளி
  • Rmsankar Rms
    Rmsankar Rms Neyveli Rajesh திமுகவிர்கு
    வாக்களிப்பது
    நிறுத்தினால்எல்லாம்சரியாகும்


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 
 
Srinivasan Barathwaj Rajesh is 100% correct. இது தமிழகத்தில் வடமொழிக் கல்வி அறுகிப் போனதால் வந்தவினை. வடமொழி கல்வியை கால்டுவெல் குரூப் அழித்து ஆங்கிலம் கொண்டுவந்ததன் காரணம் இதுவே. பிரித்தாளும் சூழ்ச்சி
 
Thillai Karthikeyasivam Sivam Srinivasan Barathwajவடமொழி கல்வி அறுகிப்போனதோடு, பாரம்பர்ய சைவ குடும்பத்தை சார்ந்தவர்கள் மொழி வெறியர்களாகிப்போனதும் காரணமாகும்.

மேலும் திருமுறைகளுக்கு எவன் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விளக்கம் அளிக்கலாம் என்ற கட்டுப்பாடற்ற தன்மை
 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Krishnakumar Prathapan /////திருமுறை வாக்குகளுக்கு, திராவிட சைவர் ஒருவிளக்கம் அளிப்பார். மிஷனரி சைவர் ஒரு விளக்கம் அளிப்பார். டமில் தேசிய சைவர் ஒரு விளக்கம் அளிப்பார். மார்க்சிய சிந்தனை சைவர் ஒரு விளக்கம் அளிப்பார். நாத்திக சைவர் ஒரு விளக்கம் அளிப்பார்.////// ஸ்மார்த்த சைவர் ஒரு விளக்கம் அளிப்பர் இந்துத்துவ சைவர் ஒரு விளக்கம் அளிப்பர்

Thillai Karthikeyasivam Sivam Krishnakumar Prathapanதங்கள் கருத்துப்படி ஸ்மார்த்த சைவர், இந்துத்துவ சைவர் இருந்தாலும் அவர்கள் வாழையடி வாழையென வந்த அருளார்கள் வாக்கையே வழிமொழிவார்கள். புது விளக்கத்தை திணிக்கமாட்டார்கள்.

ஒருவேளை திருமுறைகளுக்கு தவறான விளக்கம் அளித்தாலும், முன்னோர்கள் வாக்கு இப்படியாக உள்ளது என்று எடுத்து கூறினால் மாற்றிக்கொள்வார்கள். 


முக்கியமாக சைவசமயத்தில் பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் செயல்படமாட்டார்கள்.

Krishnakumar Prathapan Thillai Karthikeyasivam Sivam

ஏனையவர் உருவாவதற்கு இவர்களே காரணமாயினர். வரலாற்றில் ஸ்மார்த்த ஆதிக்கத்திற்குப்பின்னரே, சைவம் எது...... ஸ்மார்த்தமெது....... என்றபேதம்தெரியாதவாறு கலந்தபின்னரே, தங்கள் கால்டுவேல் சைவர் உருவாயினர். அவர்களின் தேவபாஷை என்னும் 
எதிர்ப்பே, ஸ்மார்த்தத்தை சைவமென்று நினைத்ததால் வந்தது. சைவத்தில் தெய்வமொழிகள். சுமார்த்தத்தில் தேவமொழி. இரண்டுக்குமான அடிப்படைவேறுபாட்டை சாதரணர் உணராதவாறு ஸ்மார்த்தம் கலந்து ஆதீக்கம் ஆயிற்று. இங்கு தான் எல்லாக்குழப்பத்துக்குமான விதை.

1) மாயாவாத தும்சகோளரிக்குப்பிறகு மாயாவாதிகளை எதிர்த்து தமிழ்நாட்டில் சைவ இயக்கம் இருத்ததுண்டா? இன்றேனும் உண்டா? 

2)நோய்க்காரணிகளை நீக்காது, நோய் 
அறிகுறிகளைச் சாடுவதில் பலனில்லை.

Thillai Karthikeyasivam Sivam Krishnakumar Prathapanசைவத்தில் ஸ்மார்த்த ஆதிக்கம் என்பதெல்லாம் தமிழகத்தில் இன்றைய நிலையில் காலாவதியானது.

சைவத்தோடு ஸ்மார்த்தம் பேட்டியிட்டது என்று வேண்டுமானால் கூறலாமெ ஒழிய, ஆதிக்கம் செய்தது என்பதெல்லாம், அதிகாரபதவியில் இருந்ததன் பொருட்டே ஒழிய தத்த
ுவரீதியாக இல்லை.

கடந்தகாலத்தில் ஸ்மார்த்தம் சைவத்தை ஆதிக்கம் செய்ய சிவாச்சாரியார்கள் அனுமதிக்கவில்லை என்பதற்க்கு எடுத்துக்காட்டே ஸ்மார்த்தர் -சிவாச்சாரியர் பகை.

இன்று எவ்வாறு திருமுறை வியபார புரோகிதர்கள் சிவாச்சாரியார்களை போன்று நாங்களும் குருதான் என போட்டி புரோகிதம் செய்கின்றனரோ அதுபோல் கடந்த காலங்களில் ஸ்மார்த்தர்கள் செய்தனர்.சிவாச்சாரியர்களோடு குரு பட்டத்திற்க்காக போட்டியிட்டனர். 

ஆனால் பிற்காலங்களில் அது நின்றுவிட்டது. இன்று ஸ்மார்த்தர்கள் அவர்கள் வைதிகம், வேதம் வளர்ப்பதில் கவனமாக உள்ளார்கள். எவரும் சைவசமய சம்பிரதாய விசயங்களில் தலையிடுவதில்லை. சிதைப்பதில்லை. ஒரு வேளை எங்கேனும் நடந்தால் அவை விதிவிலக்கு. அவையும் மாற்றப்படும்.

ஸ்மார்த்தம் -சைவம் பகை 1900. வாக்கிலேயே முடிவுற்ற ஒன்று.இது தமிழக நிலை.

தேவபாஷை என்ற பதம் முதலில் எவர் கூறினார் என்ற ஆதாரம் இதுவரை தெரியவில்லை.

கால்டுவெல் சைவர்கள் தோன்ற காரணம் ஸ்மார்த்தர்களின் சைவ ஆதிக்கம் அல்ல. கடந்து 800 ஆண்டுகளாக சைவத்தை ஆதிக்கம் செய்வது சைவகுடிகளாகிய பிள்ளை, முதலி போன்றவர்களே.

கால்டுவெல் சைவர்கள் தோன்ற காரணம் தமிழகத்தில் ஏற்பட்ட பிராமணர் -பிரமணர் அல்லாதோர் இயக்கமே. இந்த இயக்கத்தை தோற்றிவித்தவர், வழிநடத்தியவர் எவரும் தமிழர் அல்லர்.

எனவே விபூதி பூசிய அனைவரும் சைவன் என்று நினைத்து ஸ்மார்த்த பிராமணனோடு, கோயில் குருக்களையும் எதிர்த்தனர். இதையே பின் வந்த சைவக்குடியில் பிறந்து இந்த மாயவலையில் சிக்கியவர்களும் பிரச்சாரம் செய்தனர்.

எனவே கால்டுவெல் சைவர்களின் தோற்றத்திற்க்கு காரணம், சமயம் வேறு, அரசியல் வேறு என்று பிரிக்கத்தெரியாத சைவக்குடிகளின் மடமையே 

 

Senthil Praveen Thillai Karthikeyasivam Sivam நீண்ட விளக்கம்,சைவகுடி பிள்ளைமார்கள் கால்டுவெல் சைவர்களின் தோற்றத்திற்கு காரணம் எனும் போது கொஞ்சம் நெருடலாக உள்ளது!குறிப்பாக எங்கிருந்த சைவகுடிகள் காரணம் என்று சொன்னால் நலம்! நான் என் சொந்தங்களிடம் காசு பிள்ளை,மறைமலை,திரு வி க ,போன்றவர்களின் சமயம் தொடர்பான புத்தகங்களை படிக்க வேண்டாம் என்றுதான் சொல்லிவருகிறேன்,சொல்லியும் வருகிறோம் ! கூடவே நெல்லை கண்ணன்,ஞானசம்பந்தன்,பேச்சுகளையும் !

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard