தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா?
தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்ற NGO தூத்துக்குடி மாவட்டத்தில் 19 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை நடத்துவத்துவதாக கூறியுள்ளது. இந்த NGOவின் தலைவர் பிஷப் இவான் அம்புரோஸ் தனது பதவியை கார்பரேட் மேனேஜர் என்று திடீரென்று மாற்றிக் கொண்டார். கல்வித்துறையின் அனுமதி பெறப்படவில்லை. இவர்மீதும் கல்வி முகமை மீதும் புகார் அனுப்பப்பட்டது. புகாரை பரிசீலனை செய்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர், தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலரை இப்புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டுள்ளார். முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி கடைசியில் அது குப்பைத் தொட்டிக்கு போகுமா என்பது தெரியாது. புகார் மனு இதோ
Complaint against Bishop Yvon Ambroise and the Tuticorin Diocesan Association
இணை இயக்குநரின் கடிதம் இதோ
முதன்மை கல்வி அலுவலர் திருமதி அனிதா அவர்கள் தனிக்கவனம் செலுத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றோம். மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு நரசிம்மன் மற்றும் திருமதி செந்தூர்கனி ஆகியோர் போல இசக்கியிடமும் பிஷப் இவானிடமும் ஏமாற மாட்டார் என்று எமது சங்கம் நம்புகிறது.