New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரம் – சட்ட விரோதமான அனுமதிசாத்தான்க


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரம் – சட்ட விரோதமான அனுமதிசாத்தான்க
Permalink  
 


சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரம் – சட்ட விரோதமான அனுமதி

 

 

சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி பிஷப் இவான் அம்புடோஸால் திடுதிடுப்பென்று ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சமூகத்தினரை திருப்தி படுத்துவதற்காக புனித தாமஸ் மெட்ரிக் பள்ளியின் வருமானத்தில் இருந்து பணம் வாங்கி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடம் அமைந்துள்ள இடத்தை சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளிக்கும் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் விளையாட்டிடமாக தெரிவித்து அதனடிப்படையில் அங்கீகாரமும் நிதி உதவியும் பெற்று வருவதை மறைத்து பல குல்மால்கள் செய்து ஊழல் பேர்வழி திரு இராமேஸ்வர முருகன் அவர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் போது ஒரு சில நொடிகளில் துவக்க அனுமதி பெறப்பட்டது தெரியவருகிறது. திரு இராமேஸ்வர முருகன் பற்றி அறிய கீழ்காணும் இணைப்புக்கு செல்க. https://tamil.oneindia.com/news/tamilnadu/s-kannappan-appoints-new-school-education-director-216619.html மேலும் சம்மந்தப்பட்ட நிர்வாகம் மைனாரிட்டி நிர்வாகமாக பாவிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரு கோயில் ராஜ் என்பார் இது சார்பாக புகார் கொடுத்துள்ளார். விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் தவறு செய்துள்ளது அப்புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகத்தினரோடு சேர்ந்து கொண்டு விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்கள் அப்பள்ளியை பார்வையிட்டதாகவும் விசாரணை மேற்கொண்டதாகவும் படம் காட்டி மனுதாரரை விசாரிக்காமலும் அவரிடம் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்யாமலும் எல்லாம் சரியாக உள்ளது என்று தனது ந.க.எண்.377/அ/2017 நாள் 14.11.2017 கடிதத்தில் தெரிவித்துள்ளார். விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டிருக்கிறார். மேற்படி திரு. கோயில்ராஜ் எனபாரின் புகார் மனுவும் அன்னாரின் புகார் மனுவினை பரிசீலனை செய்ததாக கூறி அன்னாருக்கு தெரிவித்த கடித நகலும் இதோ. ஆவண ஆதாரங்களின் உதவியுடன் மனுதாரரை விசாரிக்காமல் பள்ளி துவக்க அனுமதி பெற்றதை நியாயப்படுத்தி எழுதியுள்ள விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்களின் கடிதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர் தனது கடமையை சரியாக செய்யாத குற்றத்திற்குள்ளாகியுள்ளார்.

திரு கோயில்ராஜ் என்பாரின் புகார் மனு Mr.Koilraj’s Complaint

விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்களின் கடிதம் IMS Letter in response to Mr. Koilraj’s Complaint letter

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard