New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்ககாலத்தில் இலக்கியத் தீட்டு


Guru

Status: Offline
Posts: 24709
Date:
சங்ககாலத்தில் இலக்கியத் தீட்டு
Permalink  
 


சங்ககாலத்தில் இலக்கியத் தீட்டு

வெ.பெருமாள்சாமி

தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்று மீண்ட பாணன் ஒருவன்வறுமை காரணமாக வள்ளல்களை நாடிச் செல்லும் மற்றொரு பாணனை வழியிடைக் கண்டான். கண்ட அவன் - பரிசில் பெறச் செல்லும் பாணனை இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தினான். அங்ஙனம் ஆற்றுப்படுத்திய பொழுதுஅவன் செல்ல வேண்டிய நாடுகள்மலைகள்,அருவிகள்ஆறுகள்சோலைகள்வனங்கள்ஊர்கள்மக்கள் முதலியவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் கூறினான்.

Slavesபகல் பெயன்

மழை வீழ்ந்தன்ன மாத்தாட் கமுகின்

புடை சூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்

ஆறுசெல்வம்பலர் காய் பசி தீரச்

சோறடு குழிசி இளக விழூஉம்

வீயா யாணர் வளங் கெழு பாக்கத்துப்

பன்மர நீளிடைப் போகி நன்னகர்

விண்டோய் மாடத்து விளங்கு சுவருடுத்த

வாடா வள்ளியின் வளம்பல தரூஉம்

நாடு பல கழிந்த பின்றை

(பகற் பொழுதிலே பெய்தலையுடைய மழை கால் விழுந்தாலொத்த பெரிய தண்டினையுடைய கமுகுகளின் பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப் பினையுடைய காய்வழிச் செல்கின்ற புதியோர் தமது மிக்க பசி தீரும்படி சோற்றை ஆக்குகின்ற பானை அடுப்பினின்றும் அசைந்து விழும்படிநிலத்தே விழும்குறையாத புது வருவாயினையுடைய செல்வம் பொருந்தின பாக்கத்திடத்துப் பல மரங்கள் வளர்ந்த இடத்திலே போய்விளங்குகின்ற மதில் சூழ்ந்த விண்ணைத் தீண்டும் மாடங்களையுடைய நன்றாகிய ஊர்களிலேவாடுங் கொடியினையுடைய வள்ளியல்லாத வள்ளிக் கூத்தின் வளப்பம்பலவற்றையும் தருதற்குக் காரணமாகிய புறநாடுகள் பலவற்றையும் போன பின்பு) என்றுஆற்றுப் படுத்திய பாணன் கூறியதாகப் புலவர்கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படை (3612- 71) யில் கூறியுள்ளார்.

உழைக்கும் மக்களான அடிமைகள் வாழ்கின்ற ஊர்ப் பகுதிகளைப் பாணர்கள் கடந்து செல்ல நேர்ந்த போதுஅவ்வூர் பற்றியும் அங்கு வாழும் மக்களைப் பற்றியும் எதுவும் கூறாமல் நாடு என்னும் ஒற்றைச் சொல்லால் தொகுத்துக் கூறினார். பாணன் விரித்துக் கூறாமல் அவ்வாறு ஒற்றைச் சொல்லாமல் தொகுத்து கூறியதாகப் புலவர் பாடியுள்ளதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் காரணம் வேதனைக்குரிய தாகும்.

அம்மக்களைப் பற்றியும் அவர்கள் வாழும் ஊர்பற்றியும் பாடுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்திருக்கலாம். அம்மக்களின் அடிமை நிலையின் அவலம் குறித்துப் பாடலாம். அவர்களது துன்ப துயரம் குறித்துப் பாடலாம். ஆண்டைகளின் அடக்குமுறை குறித்துக் கூறலாம். அடிமைகளின் வறுமை குறித்தும் அல்லல் குறித்தும் பாடலாம்;. ஆனால் புலவர் உருத்திரங்கண்ணனார். அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாடாவள்ளியின் வளம்பல தரூஉம் நாடு ‘ (வாடுங் கொடியினையுடைய வள்ளியல்லாத வள்ளிக் கூத்தின் வளப்பம் பலவற்றையும் தருதற்குக் காரணமாகிய புறநாடு) என்றுஅம்மக்கள் காணும் வள்ளிக் கூத்து பற்றி மட்டும் கூறுவதற்கான காரணத்தை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் வெளிப்படையாகவே கூறுகிறார். சிறப்புடைய நாடுகளைப் பாடி தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தோர் உறையும் நாடுகளைப் பாடாமல் தொகுக்கிறார். அவை புறநாடென்பது தோன்ற அவர்கள் காண்டற்குரிய வள்ளிக் கூத்தினையும் கூறி அதனை வெளிப்படுத்தினார்” என்பது உரையாசிரியர் கூறும் காரணமும் விளக்கமும் ஆகும். அம் மக்கள் தாழ்ச்சிபெற்ற இழிகுலத்தோர்” என்பதை உணர்த்துவதற்காகவே அவர்கள் காணும் வள்ளிக் கூத்து பற்றிக் கூறினார். இங்கு, ‘வள்ளிவாடுங் கொடியல்லாத வள்ளிக் கூத்துது இழிகுலத்தார் காணும் கூத்து” என்று பிற உரையாசிரியர்கள் கூறியிருப்பதும் நம் கவனத்துக்கு உரியதாகிறது.

மேன்மக்கள் வாழும் நாடுகளையும் ஊர்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் புகழ்ந்து பாடிய புலவர் அடிமைகளான உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளை நாடு” என்னும் ஒற்றைச் சொல்லால் குறித்துச் சென்றார். அம்மக்கள் தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தார் என்பதால்அவர்கள் வாழும்பகுதியை விரித்துப்பாடாமல் நாடு என்னும் ஒற்றைச் சொல்லால் தொகுத்துக் கூறினார்.

மக்கள் சேர்ந்து வாழும் பகுதி சேரி எனப்பட்டது. பார்ப்பனச்சேரி என்பன போன்ற சொற்கள் இதனை உணர்த்தும். ஆனால்தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தார் உறையும் பகுதிகளைக் குறிக்கும் போது புறம் என்னும் அடைமொழியும் சேர்த்துபுறச்சேரி” ‘புறநாடு” என்று குறித்தனர். உழைக்கும் மக்களான அடிமைகள் வாழும் பகுதியாகையால் அவை அவ்வாறு கூறப்பட்டன. அப்பகுதிகளில் வாழ்வோர்தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தோர் என்பதை உணர்த்துவதற்காகஒதுக்கப்பட்டவர் என்ற பொருளில் அவை புறச்சேரி புறநாடு” என்று வழங்கப்பட்டன. சேரி நாடு என்னும் சொற்கள் புறம் என்னும் அடைமொழி பெறாவாயின் அடிமை எஜமானர்களான மேன் மக்கள் உறையும் பகுதிகளைக்குறித்தன. அப்பகுதிகளைப் புலவர்கள் புகழ்ந்து பாடினர்.

உழைக்கும் வர்க்கத்தாரை தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தார்” என்றும் அவர்களைப் பற்றியும் அவர்கள் வாழும் பகுதிகளைப் பற்றியும் பாடுதல் கூடாது” என்றும் புலவர்கள் கருதியதுஉழைக்கும் மக்கள் பால் அவர்கள் கடைப்பிடித்த தீண்டாமை உணர்வின் வெளிப்பாடேயாகும் எனலாம்.

தாழ்ந்த சாதியாரைத் தொடுவது மட்டுமல்லஅவர்களைக் காண்பதும் தீட்டுபேசுவதைக் கேட்பதும் தீட்டு என்று கருதும் வழக்கமும் உயர்சாதியாரிடம் இருந்தது. அவ்வழக்கம் இன்றும் சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. இதனை கண்டுமுட்டு கேட்டுமுட்டு என்பர்.

பார்ப்பார் வாழும் தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடந்து செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததை வைக்கம் நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன. இது அண்மைக்கால வரலாறு நமக்குக் கூறும் செய்தியாகும். தில்லையில் பார்ப்பர் வாழும் தெரு வழியாக நடந்து சென்று நடராசர் கோயில் வாசலை அடைந்ததற்காக நந்தன் கோயில் வாசலிலேயே தீயிட்டுக் கொளுத்தப்பட்டான். நந்தனுக்குப் பார்ப்பர் இழைத்த இக்கொடுமையை விடஇலக்கியத்தில் புலவர் உழைக்கும் மக்கள் பால் கடைப்பிடித்த இந்த இலக்கியத்தீண்டாமை மிகப் பெரிய கொடுமை எனல் மிகையன்றுஇத்தீண்டாமையை இலக்கியத்தீட்டு எனல் சரியேயாகும்.

இங்கு கூறப்பட்ட இச்செய்திகள் சங்க காலத்தில் அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் தீண்டாமை உணர்வு மேற்குலத்தார் உள்ளத்தில் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியிருந்தது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

கள் கொண்டிக் குடிப்பாக்கம்

கள் கொண்டிக் குடிப்பாக்கம்” என்பது மதுரைக் காஞ்சி (137) யில் பயிலும் ஓர் அடி ‘. கள்ளாகிய உணவினையுடைய இழிந்த குடிகளையுடைய சீறூர்” என்பது நச்சினார்க்கினியர் இவ்வடிக்குக் கூறும் உரை ஆகும். உழைக்கும் மக்களான களமரும் உழவரும் தம் வேலைக் களைப்பை மறத்தற் பொருட்டுக் கள் உண்டனர். இது குறித்துச்சங்க இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன. கள் உண்ணும் களமர்களை இழிந்த குடிகள் என்று இகழ்வதும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளைத் தனியாக ஒதுக்கி வைப்பதும் ஆகிய செயல்கள் சங்க காலத்தில் நிகழ்ந்ததனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

இங்கு நாம் மற்றொரு செய்தியையும் நினைவில் கொள்ள வேண்டும் .பூக்கமழ்தேறல்தண்கமழ் தேறல்என்று புலவர்கள் புகழ்ந்து பேசும் மதுவகை களைப்பொற்கலங்களில் பெய்து இளமகளிர் எடுத்து உண்பிக்கஊனும் நறவும் உண்டு களித்த செல்வர்கள் ஆடிய காமக் களியாட்டங்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். ஆனால் நாளெல்லாம் வயல்களிலும் வைக்கோற் போர்களிலும் உழைத்துக்களைத்த உழவர்கள் தம் வேலைக் களைப்பை மறத்தற் பொருட்கள் உண்டனர். அங்ஙனம் உண்டாரை இழிந்தகுடிகள்” என்றும் அவர்கள் வாழ்ந்த ஊர்ப் பகுதிகளை கள் கொண்டிக்குடிப்பாக்கம் ‘ என்றும் புலவர்கள் இழித்தும் பழித்தும் பேசினர். இம் முரண்பாட்டையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.

புறச்சேரி என்னும் தொடர்உழைக்கும் மக்களாகிய அடிமைகள் ஊருக்கு வெளியில் குடிசைகள் அமைத்துக் தங்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர் என்ற செய்தியைத் தெளிவாக உணர்த்துகிறது. ஆண்டைகள் அடிமைகள் பால் கடைப்பிடித்த தீண்டாமையின் விளைவே இது எனல் சரியான கூற்றேயாகும். அடிமைச் சமூகம் கால் கொள்ளத் தொடங்கிய காலகட்டத்திலேயே தீண்டாமையும் கால் கொண்டு விட்டது. தமிழ் மரபுக்கும் தமிழர் நலனுக்கும் புறம்பான தீண்டாமையும் நால் வருணப்பாகுபாடும் சங்க காலத்தில் தமிழகத்தில் அடிமை எஜமானர்களால் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டன என்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக்காட்டுகின்றன.

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பாலொருவன் கற்பின்

மேற்பாலவனும் அவன் கட்படுமே’ என்றுபுறநானூறு (183) நால்வருணப் பாகுபாடும் மேற்குலம் கீழ்க்குலம் என்ற பேதமும் தமிழகத்தில் தீவிரமாக நிலவியது பற்றிக் கூறுகிறது. சங்க காலத்தில் தமிழகத்தில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி வள்ளுவரும் விரிவாகவே கூறியுள்ளார்.

மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர்பாடு

மேலிருந்தும் மேலல்லர் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லர் கீழல்லவர்

என்னும் குறட்பாக்கள் சாதி ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் சங்க காலத்தில் தமிழகத்தில் நிலவியிருந்தது குறித்துக் கூறுகின்றன. திருவள்ளுவர் கணியன் பூங்குன்றனார் முதலிய சான்றோர்கள் அத்தீமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததையும் சங்க இலங்கியங்கள் பதிவு செய்துள்ளன. தமிழகத்தில் நால்வருணப்பாகுபாடும் சாதி ஏற்றத் தாழ்வும் பரவுவதற்கு ஆரியப்பார்ப்பார் எந்த அளவுக்குக் காரணராக இருந்தனரோ அந்த அளவுக்குத் தமிழ் மன்னர்களும் காரணமாக இருந்தனர் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.

அடிமைகள் பன்றி வளர்த்தல்

அடிமைச் சமூகத்தில் உணவு உடை முதலியவற்றைப் போலவே அடிமைகளின் உறைவிடமும் எளிய குடிசைகளாகவே இருந்தன. வைக்கோலும் புல்லும் வேய்ந்த சிறு குடிசைகளே அவர்களின் உறைவிடமாயின. வரம்பிற்புது வை வேய்ந்த கவி குடில்’ ( வரம்பிடத்துப் புதிய வைக்கோலாலே வேய்ந்த கவிந்த குடில் ) என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. ‘ குடில்கள் பன்றி முதலியவற்றைக் காத்தற்குக் கட்டினவை” என்று அடிமைகள் வாழ்ந்த குடிசைகள் பன்றிக் குடிசைகளோடு சேர இருந்ததற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் சான்றளிக்கிறார்.

ஆனால் அடிமைகள் இக்குடிசைகளை ஊருக்குள் அமைத்துத்தங்கிட அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஊருக்குப் புறத்தே ஓதுக்கிடங்களில் தான் குடிசைஅமைத்துத் தங்கும்படி ஆண்டைகளால் வற்புறுத்தப்பட்டனர். இதனை

பறழ்பன்றிப் பல கோழி

உறை கிணற்றுப் புறச்சேரி

(குட்டிகளையுடைய பன்றிகளையும் பலசாதியாகிய கோழிகளையும் உறை வைத்த கிணறுகளையும் உடைய இழிகுலத்தோர் இருக்கும் தெருவுகள் ) என்று பட்டினப்பாலை ( 75-76) கூறுகிறது. சேரிகளில் வாழ்ந்த அடிமைகள் பன்றிகளையும் கோழிகளையும் வளர்த்தனர். அடிமைகள் பன்றி வளர்த்தனர் என்ற இச்செய்தியேஉழைக்கும் மக்கள் எந்த அளவுக்கு அடிமைச் சேற்றில் ஆழமாகப் புதைக்கப்பட்டனர் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

அடிமைகள் பன்றி வளர்த்ததால் தான் அவர்கள் ஊருக்குள் குடிசையமைத்து வாழ்;ந்திட அனுமதிக்கப்படவில்லை என்ற கூற்றும் ஏற்கத்தக்கதன்றுஏனெனில் செல்வர்களான வணிகர்கள் அங்காடித் தெருவில் பன்றிகளை வளர்த்தனர். இதனைப் பெரும் பாணாற்றுப்படை (339-414) நமக்குக் கூறுகிறது. 

கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய

வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பின்

ஈஞ்சேறாடிய இரும்பல் குட்டிப்

பன்மயிர்ப் பிணவோடு பாயம் போகாது

நென்மா வல்சி தீட்டிப்பன்னாட்

குழிநிறுத் தோம்பிய குறுந்தாளேற்றை பெரும்பாணாற்றுப்படை : 339 -45

(கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவின வடிந்து சிந்தும் சில நீர் பலகால் வடிதலின் நிறைந்து வழிந்த குழம்பிடத்தே ஈரத்தையுடைய மயிரையுடைய பெண் பன்றிகளுடனே புணர்ச்சியைக் கருதும் கருத்தாற்போகாமல் நெல்லை இடித்த மாவாகிய உணவைத் தின்னப் பணணிப் பலநாள் குழியில் நிறுத்திப் பாதுகாத்த குறிய கால்களையுடைய ஆண்பன்றி) என்று செல்வர்கள் பன்றிவளர்த்தமைக்குக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சான்றளிக்கிறார்.

செல்வர்கள் அங்காடித் தெருவில் ஆண்பன்றிகளைக் குழிக்குள் நிறுத்தி வளர்த்தனர். அவை பெண்பன்றிகளைப் புணர்வதைத் தடுப்பதற்காகக் குழிக்குள் நிறுத்தப்பட்டன. ‘ புணரிற்கொழுப்பின்றாம்” என்று நச்சினார்க்கினியர் இதற்குக் காரணம் கூறுகிறார். புணர்ச்சியைத் தடுப்பதற்காக மட்டுமல்லமலம் தின்பதைத் தடுப்பதற்காகவும் அவை குழிக்குள் நிறுத்தப்பட்டன. அரிசிமா முதலிய உயர்வகைத் தீனியைத் தின்னக் கொடுத்தனர். கொழுத்த நிணமும் தசையும் பெறுவதற்கே அவர்கள் அங்ஙனம் செய்தனர். பன்றிவளர்ப்பிலும் கூட ஆண்டைகளின் செல்வச் செருக்கு வெளிப்படுத்தப் படுவதை இங்குக் காண்கிறோம்.

அடிமைகள் ஆண்டைகளைப் போல் ஆடுமாடுகளை வளர்க்க முடியாது. அதற்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் தனியுடைமை உணர்வு தலை தூக்கியிருந்த அடிமைச் சமூகத்தில் வாழ்ந்தனர். ஆடுகளையும் மாடுகளையும் வளர்க்க வேண்டுமானால் விரிவான மேய்ச்சல் நிலங்கள் வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களை வளர்க்க விளைநிலம் வேண்டும். மக்கள் கணசமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் சமூகத்துக்குப் பொதுவாக இருந்த நிலம் அடிமைச் சமூகத்தில் தனியுடைமை ஆக்கப்பட்டுவிட்டது. அரசரும் படைத்தலைவரும் பார்ப்பாருமாகிய தனிமனிதர்கள் பொதுவாக இருந்த நிலங்களை அபகரித்து ஆக்கிரமித்துக் கொண்டனர். விடுநிலம் எனப்பட்ட பொது மேய்ச்சல் நிலம் தனியார் கைகளுக்குப் போய்விட்டது. இவ்வாறுவிளைநிலங்களும் மேய்ச்சல் நிலங்களும் தனியுடைமையாகிவிட்டன. இதனை,

தண்பணை தழீஇய தளராவிருக்கைப்

பகட்டா வீன்ற கொழுநடைக்குழவிக்

கவைத்தாம்பு தொடுத்த காழூன்றல் குல்

ஏணிஎய்தா நீணெடு மார்பில்

முகடு துமித்தடுக்கிய பழம்பல்லுணவின்

குமரி மூத்த கூடோங்குநல்லில்

(பெருமையுடைய பசுக்கள் ஈன்ற வளைந்த அடியையுடைய கன்றுகளைக் கட்டின தாமணியையுடைய நெடிய தாம்புகள் கட்டிக் கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தையும் ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும் தலையைத்திறந்த உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பலநெல்லினையும் உடையவாய்அழியாத் தன்மையவாய் முதிர்ந்த கூடுகள் வளர்ந்தநல்ல இல்) என்றுபெரும்பாணாற்றுப்படை (242 -47) கூறுகிறது.

அடிமை எஜமானர்களின் இல்லங்களில் ஏணிக்கு எட்டாத உயரத்தையுடைய நெல் நீரம்பிய நெற்கூடுகளும் அவற்றுக்கு அருகில் பசுக்களும் கன்றுகளும் கட்டப்பட்ட கட்டுத்தறிகளும் இருந்ததைக் கூறும் பெரும்பாணாற்றுப்படை அடிகள்நிலமும் கால்நடைகளும் ஆண்டைகளின் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்ட செய்தியை உணர்த்துகின்றன.

இந்நிலையில் ஆண்டைகளைப் போல அடிமைகளும் ஆடுமாடுகளை வளர்க்க நினைத்தால் அவற்றை எங்கே கொண்டு போய் மேய்ப்பதுகால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர் வளர்ப்பதற்கு வேண்டிய விளைநிலங்களுக்கு எங்கே போவதுஎனவே தான்அடிமைகள் மேய்ச்சல் நிலமோ தீவனப்பயிர்களோ தேவைப்படாத எளிமையாக வளர்ப்பதற்கேற்ற பன்றிகளையும் கோழிகளையும் வளர்க்க முற்பட்டனர். தாம் வாழும் சேரிகளிலும் குடிசைகளிலும் அவற்றை வளர்த்தனர். பன்றி வளர்ப்பு எளிமையான தொழிலாக இருந்தது. இவற்றை வளர்ப்பதற்கு கடின உழைப்பு தேவையில்லை. பொருட் செலவு ஏதும் இல்லை. மேய்ச்சல் நிலம் தேவையில்லை. தீவனம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. எளிய பராமரிப்பில் இவற்றை வளர்த்துப் பயன் பெறலாம். இவை அடிமைகளின் இறைச்சித்தேவையையும் ஓரளவு நிiவு செய்தன. அதனால் தான் அடிமைகள் பன்றிகளைக் குடிசைகளில் வளர்த்தனர்.

மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் வேட்டையின் மூலமாக உணவுத்தேவையையும் இறைச்சித் தேவையையும் ஓரளவு நிறைவு செய்து கொண்டான். ஆனால் அடிமைச் சமூகத்தில்சமூகம் இரண்டு வர்க்கங்களாக – உழைக்கும் வர்க்கம் உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் என்று – பிளவுபட்ட நிலையில் அடிமைகளான உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் பயனைச் சுரண்டும் வர்க்கத்தினிடம் பறிகொடுத்;து விட்டு வாய்க்கும் கைக்கும் எட்டாத நிலையிலேயே இருந்து வந்தனர். உணவு பெறுவதே பெரும்பாடாக இருந்தநிலையில் அவர்கள் ஊனைப் பற்றி நினைத்தாவது பார்க்க முடியுமா எனவே தான் அவர்கள் தங்கள் இறைச்சித் தேவைக்காகப் பன்றிகளை வளர்ந்தனர்.

வேட்டைச் சமூகத்தில் எயினர்கள் வேட்டையாடிக் கொண்டு வந்த சிறிய விலங்கான உடும்பைக் கூடச் சுட்டு அனைவரும் தமக்குள் சமமாகப்பங்கிட்டு உண்டதனை நமக்குக் கூறிய சங்க இலக்கியங்கள்தற்போது அடிமைச் சமூகத்தில் ஊன் விலைக்கு விற்கப்பட்ட காட்சியைக் காட்டுகின்றன.

தினற் பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்

விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்

என்றுஊன் விலைக்கு விற்கப்பட்ட செய்தியைத் திருவள்ளுவர் கூறுகிறார். ஊன் மட்டுமல்லஉணவும் விiலைக்கு விற்கப்பட்டது. அப்பம் முதலிய உணவுப் பண்டங்கள் அங்காடித் தெருவில் விற்கப்பட்ட செய்தியைச் சங்க இலக்கியங்கள் அறிவிக்கின்றன.

ஊன் விலைக்கு விற்கப்பட்டாலும் அதனை வாங்கியுண்னும் நிலையில் அடிமைகள் இல்லை. அடிமைகளின் வாங்கும் சக்தி என்பது பூஜ்ஜியமாகவே இருந்தது. எனவே தான் அவர்கள் சேரிகளில் பன்றிகளை வளர்த்தனர். பன்றி வளர்த்தல் இழிதொழிலாகக் கருதப்பட்டமையால் மேன் மக்கள் எனப்பட்ட அடிமை எஜமானர்கள் அவற்றை வளர்க்க வில்லை. கிளிகளைக் கூண்டுகளில் வளர்த்த பார்ப்பார் தம் மனைகளில் கோழிகளையும் நாய்களையும் வளர்க்கவில்லை. செல்வர்கள் அங்காடித்தெருவில் பன்றிகளைக் குழிக்குள் நிறுத்தி வளர்த்த செய்தி முன்னர்க் கூறப்பட்டது.

செல்வர்களான ஆண்டைகள் ஆடு மாடு மான் முதலியவற்றின் கொழுத்த ஊனை நெய்யிற் பெய்து பொரித்தும் வறுத்தும் சூடு குறையாமல் சுவையாகத் தின்று கொழுத்தனர். ஆனால் உழைக்கும் வர்க்த்தினரான அடிமைகள் வயல்களில் எளிதாகக் கிடைக்கும் நண்டு நத்தை தவளை மீன் ஆமை முதலியவற்றின் இறைச்சியைச் சரியாகப்பக்குவம் செய்யாமல் அவித்தும் சுட்டும் தின்றனர். அடிமைகள் பக்குவம் செய்யப்படாத இறைச்சியை உண்டனர் என்ற செய்தி முன்னர்க் கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஆமையும்மீனும் உண்டனர் என்ற செய்தியை அரிநர் கீழ் மடைக்கொண்டவாளையும் உழவர் படைமிளிர்ந் திட்டயாமையும்’ என்று புறநானூறு ( 42 ) கூறுகிறது.

ஏணிக்கு எட்டாத உயரமுடைய நெற்கூடுகளும் அவற்றுக்கு அருகில் பசுக்களும் கன்றுகளும் கட்டப்பட்ட தொழுக்களும் ஆண்டைகள் மற்றும் அந்தணர்களின் வளமனைகளில் அமைந்திருந்த காட்சியை நமக்குக் காட்டியசங்க இலக்கியங்கள்அடிமைகளின் குடிசைகளோடு பன்றிக் குடிசைகளும் சேர அமைந்திருந்த புறச் சேரிகளையும் காட்டத் தவறவில்லை.

மனிதன் காட்டுமிரண்டி நிலையிலும் அநாகரிக நிலையிலும வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த கால கட்டத்தில் ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பையில் வாழ்ந்தது போலவே வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்தில் அடிமைகள் ஓட்டையும் பொத்தலுமான ஓலைக்குடிசைகளில் வாழ்ந்த அவலம் தொடரவே செய்தது. இதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவுறக் காட்டுகின்றன. 



__________________


Guru

Status: Offline
Posts: 24709
Date:
Permalink  
 

http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/142-2009-08-18-01-20-27?__cf_chl_jschl_tk__=f5d28a788d3bc6105c5f8e50dec564e5aba9f054-1588667176-0-AVGoVO1XWkd1FQCQbwEVASEbkfzraLcAx_y-ev75zSujeEpf4BNO381Rgv_Edygdjb3uFexZk5KgEZrPQGYLauG_grwk2ZhLC2kD7JQ39BIMWattwnIJ0SfKHfoKKEFAMAdi50C0hm-46_vAaxZXr7HfJAmRFtZEehBY4nQor8hYPM7lMG7MJNgwIW9po6QETz7iV3OmgIYQFLuSFx9X6D711K0cmUZRdRk7-hy4knExfjO4JVwA-NHZ2miK9dQsmJv-olycxIxUbCRrXCqG8XklfStpunjocYU2QUAwmYtG1Nm9cwODd9VVMTVp3WK0LTA3EJJRRO3JYj_1qFuLYgaq7Swyau05C-WbpaM3iNTVQOqIbqkh8HTNp2tH_VUWHxxaDqvzyYWKpd-R4dM8BY6EeA5PxdKZRt0gDXNvFxVFFIu8_Q_aD2sM1O2VI9oZIybmttkgPdh5jq5gMeVsDyk

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24709
Date:
Permalink  
 

 

I

     தீண்டாமை எப்போது தோன்றிற்று? மிகப் பண்டையக் காலம் முதலே தீண்டாமை இருந்து வருவதாக வைதீக இந்துக்கள் சாதிக்கின்றனர். தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை பிற்காலத்தைச் சேர்ந்த ஸ்மிருதிகள் மட்டுமின்றி, காலத்தால் அவற்றுக்கு முற்பட்டவையும் சில எழுத்தாளர்களின் கூற்றுப்படி கிறித்து பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முந்தியவையுமான தர்மசூத்திரங்களும் ஆதரித்திருப்பதாக இவர்கள் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ambedkar 400தீண்டாமையின் தோற்றம் பற்றி ஆராய முற்படும்போது பின்கண்ட கேள்வியுடன் ஆரம்பிக்க வேண்டும்: அநேகர் கூறுவது போல் தீண்டாமை அத்தனைப் பழமையானதா?

இந்தக் கேள்விக்கு விடைகாணுவதற்கு தர்மசூத்திரங்களை ஆராய வேண்டும். அப்போதுதான் தீண்டாமையையும் தீண்டாதோர்களையும் அவை எந்த அர்த்தத்தில் குறிப்பிடுகின்றன என்பதைத் தீர்மானிக்கமுடியும். தீண்டாமையை இன்று நாம் எந்த அர்த்தத்தில் புரிந்து கொண்டிருக்கிறோமோ அந்த அர்த்தத்தில் அவை அவற்றுக்குப் பொருள்கொள்கின்றனவா? அவை குறிப்பிடும் வகுப்பினர் இன்று நாம் பயன்படுத்தும் தீண்டப்படாதோர் என்ற பதத்துக்குரிய அதே தீண்டப்படாத மக்கள்தானா?

முதலில் முதல் கேள்வியை எடுத்துக்கொள்வோம். தர்ம சூத்திரங்களைப் பற்றி ஆராயும்போது அந்த சூத்திரங்கள் அஸ்பிரஷ்யாக்கள் என்னும் வகுப்பினரைப் பற்றிப் பேசுகின்றன என்பதை அந்த ஆய்வு காட்டுகிறது என்பதில் ஐயமில்லை. அஸ்பிரஷ்யாக்கள் என்னும் பதம் தீண்டப்படாதோரைக் குறிக்கிறது என்பதிலும் ஐயமில்லை. எனினும் தர்மசூத்திரங்களின் அஸ்பிரஷ்யாக்களும் இன்றைய இந்தியாவின் அஸ்பிரஷ்யாக்களும் ஒரே மக்கள்தானா என்னும், கேள்வி இங்கு இயல்பாகவே எழுகிறது. அதிலும் அந்த யாக்கள், அந்த்யஜாக்கள், அந்த்யவாசின்கள், பாஹ்யாக்கள் போன்ற இதர பல்வேறு பதங்களை தர்ம சூத்திரங்கள் பயன்படுத்தியிருப்பதைக் கொண்டுபார்க்கும்போது இந்தக்கேள்வி இன்னும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்தப் பதங்கள் பிற்கால ஸ்மிருதிகளும் இந்தப் பதங்களை எவ்விதம் பயன்படுத்தி இருக்கின்றன என்பதை ஓரளவு தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். பின்வரும் அட்டவணை இந்தக் குறிக்கோளைக் கொண்டதே ஆகும்.

I.அஸ்பிரஷ்யாக்கள்

தர்மசூத்திரங்கள்

ஸ்மிருதிகள்

1.   விஷ்ணு V.104.

1.   கார்த்தியாயன சுலோகங்கள் 433, 783

  1. அன்த்யாக்கள்

தர்மசூத்திரங்கள்

ஸ்மிருதிகள்

1.   வாசிட்டம் (16-30)

2.   ஆபஸ்தம்பம் (III.1)

1.   மனு IV.79; VIII.68

2.   யாக்ஞவல்கியம் I.148-197

3.   அத்திரி 25

4.   லிகிதம் 92.

III. பாஹ்யாக்கள்

தர்மசூத்திரங்கள்

ஸ்மிருதிகள்

1.   ஆபஸ்தம்பம் 1.2.3.9.18

2.   விஷ்ணு 16.14

1.   மனு 28

2.   நாரதம் 1.155

 

IV.அந்த்வாசின்கள்

தர்மசூத்திரங்கள்

ஸ்மிருதிகள்

1.   கௌதமம் XXXI; XXIII 32

2.   வாசிட்டம் XVIII.3

1.   மனு IV.79; X 39

2.   மகாபாரதம் சாந்தி பருவம் 141; 29-32

3.   மத்யமங்கிராஸ் யாக்ஞவல்கியத்தைப் பற்றி மித க்ஷரத்தில் மேற்கோள். 3.280

  1. அந்த்யஜாக்கள்

தர்மசூத்திரங்கள்

ஸ்மிருதிகள்

1.   விஷ்ணு 36.7

1.   மனு IV.61; VIII. 279

2.   யாக்ஞவல்கியம் 12.73

3.   பிரிஹத்யாம ஸ்மிருதி (யக்ஞவல்கியத்தைப் பற்றி மிதக்ஷரம் மேற்கோள் III.260)

4.   அத்திரி. 199

5.   வேதவியாசம் 1.12.13

 II

     அடுத்த கேள்வி அந்த்யாக்கள், அந்த்யஜாக்கள், அந்த்யவாசின்கள், பாஹ்யாக்கள் என்னும் பதங்கள் குறிக்கும் வகுப்பினரையே சொல்லிணக்கத்தின்படி தீண்டப்படாதோரைக் குறிக்கும் அஸ்பிரஷ்யாக்கள் என்னும் பதமும் குறிப்பிடுகின்றனவா? வேறுவிதமாகச் சொன்னால் இவை எல்லாம் ஒரே வகுப்பைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்கள்தானா?

     இந்தக் கேள்விக்கு பதிலளிக்க தர்மசூத்திரங்களால் இயலவில்லை என்பது துரதிருஷ்டவசமானதாகும். அஸ்பிரஷ்யாக்கள் எனும் பதம் (ஒரு முறை சூத்திரத்திலும் ஒரு முறை ஸ்மிருதியிலும்) இரண்டு இடங்களில் வருகிறது. ஆனால் இதில் என்னென்ன வகுப்புகள் அடங்கியுள்ளன என்ற விவரங்களை இவற்றில் எதுவும் தரவில்லை. அந்த்யாக்கள் எனும் பதத்தின் கதையும் இதேதான். அந்த்யாக்கள் என்னும் சொல் (சூத்திரங்களில் இரு இடங்களிலும் ஸ்மிருதிகளில் நான்கு இடங்களிலும்) மொத்தம் ஆறு இடங்களில் வந்த போதிலும் இந்த அந்த்யாக்கள் என்பவர்கள் யார் என்பது ஓரிடத்தில்கூட விளக்கப்படவில்லை. இது போன்றே பாஹ்யாக்கள் என்னும் பதம் (சூத்திரங்களில் இரண்டு இடங்களிலும் ஸ்மிருதிகளில் இரண்டு இடங்களிலும்) நான்கு இடங்களில் வருகிறது. எனினும் இந்தப் பதத்தில் என்னென்ன வகுப்புகள் இடம்பெற்றுள்ளன என்பதை இவற்றில் எதுவுமே குறிப்பிடவில்லை. அந்த்யவாசின்கள், அந்த்யஜாக்கள் என்ற பதங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதற்கும் தர்மசூத்திரங்களைப் பொறுத்தவரையில் இவர்களைப் பற்றி பேச்சுமூச்சுவிடவில்லை. எந்த விவரங்களையும் தரவில்லை. ஆனால் ஸ்மிருதிகளில் இவர்களைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. அந்த்யவாசின்கள் பற்றிய விவரங்கள் மத்யமங்கிராஸ் என்ற ஸ்மிருதியிலும் அந்த்யஜாக்கள் பற்றிய தகவல்கள் அத்ரி ஸ்மிருதியிலும் வேதவியாச ஸ்மிருதியிலும் இடம் பெற்றிருக்கின்றன. அவர்கள் யார் என்பதை பின்கண்ட அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அந்த்யவாசின்கள்

அந்த்யஜாக்கள்

மத்யமங்கிராஸ்

அத்ரி

வேதவியாசம்

1.   சண்டாளர்

2.   சுவபாகர்

3.   ஷத்தர்

4.   சூதர்

5.   வைதேகர்

6.   மகதர்

7.   அயோகவர்

1.   நடர்

2.   மேதர்

3.   பில்லர்

4.   இரசகர்

5.   சார்மகர்

6.   புருதர்

7.   கயவர்த்தர்

1.   சண்டாளர்

2.   சுவபாகர்

3.   நடர்

4.   மேதர்

5.   பில்லர்

6.   இரசகர்

7.   சார்மகர்

8.   விராத்யர்

9.   தாசர்

10. பாட்டர்

11. கோலிகர்

12. புஷ்கர்

அந்த்யவாசின்கள், அந்தயஜாக்கள் ஆகிய பதங்களைப் பயன்படுத்துவதில் எத்தகைய துல்லியமோ ஒத்திசைவோ இல்லை என்பதை மேலே உள்ள அட்டவணையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, மத்யமங்கிராஸ், வேதவியாச ஸ்மிருதிகளின்படி சண்டாளரும் சுவபாகரும் அந்த்யவாசின்கள், அந்த்யஜாக்கள் ஆகிய இரு பிரிவுகளின் கீழும் வருகின்றனர். ஆனால் மத்யமங்கிராஸை அத்ரியுடன் ஒப்பிடும்போது அவை வேறுபட்ட வகைப் பிரிவுகளில் வருகின்றன. அந்த்யஜாக்கள் எனும் பதத்துக்கும் இது பொருந்தும். எடுத்துக்காட்டாக 1. சண்டாளரும் 2. சுவபாகரும் வேத வியாச ஸ்மிருதியின்படி அந்த்யஜாக்கள்; ஆனால் அத்ரி ஸ்மிருதியின் பிரகாரமோ அவ்வாறு இல்லை. இதேபோன்று, அத்ரி ஸ்மிருதியின்படி 1. புருதர்களும் 2. கயவர்த்தர்களும் அந்த்யஜாக்கள்; ஆனால் அதே சமயம் வேதவியாச ஸ்மிருதியின்படியோ அவர்கள் அந்த்யஜாக்கள் அல்ல. இவ்வாறே வேதவியாச ஸ்மிருதியின் பிரகாரம் 1. விராடர்களும், 2. தாசர்களும், 3. பாட்டர்களும், 4. கோலிகர்களும், 5. புஷ்கர்களும் அந்த்யஜாக்கள்; அத்ரி ஸ்மிருதியின்படியோ அப்படி இல்லை.

இதுவரை பார்த்தவற்றைச் சுருக்கிக் கூறுவோம்: அஸ்பிரஷ்யாக்கள் வகைப்பிரிவில் யார் யார் அடங்குவார் என்பதை நிர்ணயிப்பதில் தர்மசூத்திரங்களும் சரி, ஸ்மிருதிகளும் சரி நமக்கு உதவவில்லை. இதேபோன்று, அந்த்யவாசின்கள், அந்த்யஜாக்கள், பாஹ்யர்கள் ஆகியோர் அஸ்பிரஷ்யாக்கள் வகைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை உறுதிபடுத்துவதற்கும் தர்மசூத்திரங்களும் ஸ்மிருதிகளும் கைகொடுக்கவில்லை. இவர்களில் எந்த வகுப்பினரேனும் அஸ்பிரஷ்யாக்கள் அல்லது தீண்டப்படாதோர் பிரிவில் வருகின்றனரா என்பதை நிர்ணயிப்பதற்கு வேறு ஏதேனும் மார்க்கம் இருக்கிறதா? இந்த வகுப்பினர் ஒவ்வொருவரைப் பற்றியும் கிடைக்கக்கூடிய எத்தகைய தகவல்களையும் ஒன்றாக சேகரிப்பது உசிதமாக இருக்கும்.

பாஹ்யாக்கள் விஷயம் என்ன? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் தீண்டத்தகாதவர்களா? அவர்களைப் பற்றி மனு குறிப்பிடுகிறார். அவர்களது நிலையைப் புரிந்து கொள்வதற்கு மனுவின் சமூக வகைப் பிரிவு ஏற்பாட்டைப் பற்றி இங்கு சுருக்கமாகவேனும் கூறுவது அவசியம். முதலில் அவர் 1. வைதேகர்களுக்கும் 2. தஸ்யூக்களுக்கும் இடையே ஒரு பரந்த பிரிவினையைச் செய்கிறார். பின்னர் வைதீகர்களை பின்கண்ட நான்கு உபபிரிவுகளாகப் பிரிக்கிறார். 1. சதுர்வருண அமைப்புக்குள் இருப்பவர்கள், 2. சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள், 3. விராத்தியர், 4. பதிதர்கள் அல்லது பிரஷ்டர்கள். (பார்க்க மனு 1, 45)

ஒருவன் சதுர்வருண அமைப்புக்குள் இருக்கிறானா அல்லது அதற்கு வெளியே இருக்கிறானா என்பது அவனது பெற்றோர்களது வருணத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயமாகும். அவன் அதே வருணத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவனாக இருந்தால், சதுர்வருண அமைப்புக்குள்ளே இருப்பவனாகிறான். அவ்வாறில்லாமல் வேறுபட்ட வருணங்களைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவனாக இருப்பின் அவன் சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவனாகிறான். அவன் கலப்புத்திருமணங்களிலிருந்து பிறந்த வழித்தோன்றல் ஆகிறான்; இதனை மனு வருணசங்கரம் என்று கூறுகிறது. சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்களை மனு மேலும் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கிறார்; 1. அநுலோமர், 2. பிரதிலோமர். இவர்களில் அநுலோமர் (மேலது) என்பவர்கள் உயர் குலத்தைச் சேர்ந்த தந்தையருக்கும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த தாய்களுக்கும் பிறந்தவர்கள். அநுலோமர்களும் பிரதிலோமர்களும் சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருக்கும் காரணத்தால் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள். எனினும் மனு அவர்களையும் வேறுபடுத்திக் காணமுற்படுகிறார். அநுலோமர்களை வருண பாஹ்யாக்கள் அல்லது சுருக்கமாக பாஹ்யாக்கள் என அழைக்கிறார்; பிரதிலோமர்களை ஹீனர்கள் எனக் குறிப்பிடுகிறார். ஹீனர்கள் பாஹ்யாக்களைவிடத் தாழ்ந்தவர்கள். எனினும் பாஹ்யாக்களையோ அல்லது ஹீனர்களையோ மனு தீண்டத்தகாதவர்கள் எனக் கூறவில்லை.

அந்த்யாக்கள் ஒரு பிரிவினராக மனு IV.79ல் குறிப்பிடப்படுகின்றனர். ஆயினும் மனு அந்தப் பிரிவில் அடங்கியுள்ள வகுப்புகளைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை. மேதாதிதி தமது விளக்க உரையில் அந்த்யாக்கள் என்றால் மேதர்கள் போன்ற மிலேச்சர்கள் என்று பொருள் கண்டிருக்கிறார். புஹ்லர் அந்த்யாக்கள் என்பதை கீழ்ச் சாதிக்காரர்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24709
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24709
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24709
Date:
Permalink  
 

 

ambedkar 337இன்று, கல்வி அறிவென்பது பார்ப்பனர்களின் முற்றுரி மையாக உள்ளது. ஆனால், தம்மை உருவாக்கிய கத்தோலிக்க ஆலய வழிமுறைக்கு எதிராகப் போர் தொடுத்த அறிவு நாணயமுள்ள வால்டேரைப் போல, கெடுவாய்ப்பாக, தான் சார்ந்துள்ள மதத்தை எதிர்க்க எந்தவொரு பார்ப்பானும் இன்றுவரை முன்வரவில்லை. எதிர்காலத்திலும் எவனாவது ஒருவன் அப்படித் தோன்றுவான் என்றும் தெரியவில்லை.

ஏகபோக கல்வி மான்களான பார்ப்பனர்களிடையே ஒரு வால்டேர் தோன்றவில்லை என்பது பெரிதும் வருந்தத்தக்க தாகும். “பார்ப்பனர்கள் படிப்பாளிகளே தவிர, அறிவாளிகள் அல்லர்” என்பதை நினைவில் கொண்டால் அது வியப்பாய் இருக்காது. ஒரு அறிவாளிக்கும்-படிப்பாளிக்கும் உள்ள வேறு பாடு, மலைக்கும்-மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது.

படித்தவன் வர்க்க உணர்வோடு அவன் சார்ந்த வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவான். ஆனால் ஒரு அறி வாளியோ வர்க்கக் கண்ணோட்டங்களுக்கு அப்பாற்பட்டு, விடுதலையடைந்தவனாகவும், முழு உரிமையுடன் சிந்தித்துச் செயல்படுவான். பார்ப்பனர்கள் படிப்பாளிகளேயொழிய அறி வாளிகளல்ல. எனவேதான் அவர்களிடையே ஒரு வால்டேர் உருவாகவில்லை.

பார்ப்பனர்கள் ஏன் ஒரு வால்டேரை உருவாக்கவில்லை? இந்தக் கேள்விக்கு, வேறொரு கேள்வியின் மூலமே விடையளிக்கமுடியும். முகமது நபி தோற்றுவித்த இஸ்லாம் மதத்தை, துருக்கியை ஆளும் சுல்தான் ஏன் அழித்தொழித்திட வில்லை?

எந்தவொரு போப்பாண்டவரும் ஏன் கத்தோலிக்க மதத்தைப் புறக்கணிக்க முன்வரவில்லை? நீலநிற கண்களை உடைய குழந்தைகளை எல்லாம் கொன்றிட பிரித்தானிய நாடாளுமன்றம் சட்டம் தீட்டாதது ஏன்? துருக்கியை ஆளும் முகமதிய சுல்தான், கிறித்துவ போப்பாண்டவர் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்றம் எந்தக் காரணங்களுக்காக அந்தச் செயல்களைச் செய்யவில்லையோ, அதே காரணத்திற் காகவே பார்ப்பனர்களும் ஒரு வால்டேரை உருவாக்கவில்லை.

தனி ஒருவனின் தன்னலனே அல்லது அவன் சார்ந்த வர்க்க நலனே எப்போதும் அவனுடைய அறிவாற்றலைக் கட்டுப்படுத்தி, வழி நடத்துகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பார்ப்பனர்கள் அடைந்துள்ள ஆளுமையும்-அதிகாரமும் இந்து வாழ்வியலின்படி அளித்துள்ள மேலாதிக் கமும், தாழ்ந்த பிரிவினரை வன்முறை மூலம் வலிமையற்ற வர்களாக்கியுள்ள நிலையும், பல்வகை இன்னல்களுக்கு இலக்காகியுள்ள பார்ப்பனர் அல்லாத பிரிவினர் என்றுமே நிமிர்ந்து நிற்கவோ, எதிர்த்துப் போராடவோ, பார்ப்பனர் களின் ஆதிக்கத்தை அச்சுறுத்தவோ கூட முடியாத நிலைக்கு இந்து நாகரிகமே காரணமாகும்.

ஒரு பார்ப்பான் வைதீகனானாலும் அல்லது வைதீகன் அல்லாதவன் ஆனாலும், புரோகிதனானாலும், குடும்ப அளவில் இருப்பவனாயினும், கற்றவனானாலும், கல்லாதனானாலும் பார்ப்பனியப் பெருமையைத் தாங்கிப் பிடிப்பதிலே ஒவ்வொரு பார்ப்பானும் இயல்பாகவே அக்கறை கொண்டிருக்கிறான்.

எப்படி இந்தப் பார்ப்பனர்கள் வால்டேர்களாக முடியும்? பார்ப்பனர்களிடையே ஒரு வால்டேர் தோன்றுவது என்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக உருவாக்கியுள்ள, ‘பார்ப்பனிய ஏகபோக நாகரிகத்தை’ப் பேணிக்காப்பதிலிருந்து விலகிப் போகும் ஆபத்தினைக் கொண்டதாகும். பார்ப்பனக் கற்றி வாளன் ஒருவனுடைய அறிவுத்திறமை, அவனுடைய தன்ன லத்தைப் பேணிக்காக்கும் போரார்வத்துக்குப் கட்டுப்பட்டது என்பதை கவனித்தில் கொள்ளவேண்டும். நாணயம் மற்றும் நேர்மைக்கு ஏற்றவாறு தன் அறிவாற்றலைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் பார்ப்பனர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்கள். நாணயத்துடன் நேர்மையுடன் சிந்திப்பதும் செயல்படுவதும் தங்களுடைய வர்க்க நலனுக்கும், தம் சுயநலனுக்கும் கேடு விளைவிக்கும் என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

(1948 ஆம் ஆண்டில் மேதை அம்பேத்கர் எழுதிய “தீண்டப்படாதவர்கள் யார்? அவர்கள் தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டது ஏன்?” என்ற நூலுக்கு அம்பேத்கர் எழுதியுள்ள முன்னுரையில் உள்ள ஒரு பகுதி இது)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard