New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தி.மு.க. ஜனநாயக ரீதியான இயக்கம் காங்கிரஸ் அல்ல


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தி.மு.க. ஜனநாயக ரீதியான இயக்கம் காங்கிரஸ் அல்ல
Permalink  
 


பழைய சரக்கு

1981ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணிப் பூங்காவில் திமுக இளைஞர் அணி அமைப்பு கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது ' இளைஞர் அணி என்பது வாழைக்குக் கன்றல்ல, ஆலுக்கு விழுது" என்று குறிப்பிட்டார் கருணாநிதி. அப்போது இந்த அமைப்பில் தலைவர், செயலாளர் பதவிகள் கிடையாது.அமைப்பாளர்கள் ஏழு பேர் நியமிக்கப்பட்டார்கள் அதில் ஸ்டாலினும் ஒருவர் நகர அளவில் மட்டுமே இளைஞரணிக் கிளைகளை அமைக்க முடியும் .. ஆண்டுச் சந்தா ரூ 1. 15லிருந்து 30 வயதுக்க்குள் இருப்பவர்கள் உறுப்பினராகலாம் என்று அதற்கு வரைமுறைகள் வகுக்கப்பட்டன
இளைஞர் அணி ஒன்றிய அளவில் கிளைகள் அமைக்கலாம் என்று 1989ல் விலக்குக் கொடுக்கப்பட்ட போது ஸ்டாலினிடம் நான் எடுத்த நேர் முகம் இது. செப்டம்பர் 20 1989 இதழில் வெளியானது
-----
"தி.மு.க., காங்கிரஸ் அல்ல”

முதன் முறையாக ஸ்டாலினைப் பார்க்கிறவர்கள் அவர் முகத்தில், கருணாநிதியைக் கண்டு பிடிக்க முடி யாது. கோபுரம் போன்ற ஹேர் ஸ்டைலும், வேறுபட்ட மீசையும், தன முழங்கை வரை உருட்டி விட்ட சட்டையும் அவரை வித்தியாசப்படுத்திக் காட்டும். ஆனால் அவர் பேச ஆரம்பித்தால் கலைஞரைக் கண்டு கொள்ள முடியும். குரல் அல்ல காரணம். பேசும் போது அவர் வெளிப்படுத்தும் மானரிசம். ஸ்டாலினுக்கு வயது 36. 1953ல் கல்லக்குடி போராட்டத்தில் கைதாகி கருணாநிதி சிறையில் இருந்த போது பிறந்தார். அது ரஷ்யாவில் ஸ்டாலின் இறந்த சமயம். என்ன பெயர் வைப்பது என்றபோது கலைஞர் அந்தப் பெயரைத் தேர்ந் தெடுத்தார்.

ஸ்டாலினை இதழாசிரியர் மாலன் சந்தித்தபோது:

கே: இளைஞரணி தன் கிளை களை விஸ்தரித்துக் கொள்ள தலைமைக் கழகம் அனுமதித்திருப்பதன் காரணங்கள் என்ன?
- ப : எதிர்கட்சியாக இருந்த போது தலைவர்கள் கட்சிப்பணி மட்டும் செய்து வந்தனர். ஆளுங் கட்சியாக ஆன பின், அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக, அரசுப்பணியும் செய்து வருகிறோம். கட்சிப் பணிக்கு வேண்டிய நேரம் கிடைப்பதில்லை. இதனால் மக்களுக்கும் கட்சிக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி இடை வெளி இல்லாமல் இருக்க இளைஞர் அணி உதவும். 1983ல் இருந்தே ஒன்றிய அளவில் அமைப்புக்கள் ஏற்படுத்த தலைமையிடம் அனுமதி கேட்டு வந்தோம். இப்போதுதான் கிடைத்திருக்கிறது.

கே: இதன் மூலம் இளைஞரணிக்கு என்று ஒன்றிய அளவில் இருந்து, தலைமை நிலையம் வரை நிர்வாகிகள் ஏற்படுவார்கள். அப்போது இது கட்சிக்குள் இன்னொரு கட்சியாகாதா?

ப : இளைஞரணி என்பது இணை அமைப்பல்ல. துணை அமைப்பு. இதன் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

கே: இளைஞரணி உறுப்பினர்களுக்கு கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந் தெடுக்கும் உரிமை உண்டா ? 
ப: ஒவ்வொரு சாதாரண தி.மு.க. உறுப்பினருக்கும் அந்த உரிமை உண்டு. இளைஞரணியினரும் தி.மு.க. உறுப்பினர் தான்.

கே: இளைஞர் அணிக்குக் கடந்த தேர் தலில் எத்தனை சீட்டுகள் கொடுக்கப்பட்டன?
ப : 13 இடங்கள் தரப்பட்டன. 12ல் வென்றோம்
.
கே : மற்ற அணிகளுக்கு எவ்வளவு 5 இடங்கள் தரப்பட்டன? 
ப: அணிகளின் அடிப்படையில் அல்ல, வெற்றி வாய்ப்பை எடை போட்டு இடங்கள் தரப்பட்டன.

கே: அவசியம் ஏற்பட்டால், தந்தையின் இடத்திற்கு நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்களா? ராஜீவ் காந்தி யைப் போல?

ப : காங்கிரஸ் ஜனநாயக ரீதியான இயக்கம் அல்ல. அங்கு எதுவும் நடக்கலாம். தி.மு.க. அப்படி அல்ல. தொண்டர்கள் வாக்களித்து தேர்ந் தெடுக்க வேண்டும். என்னை விட ஆற்றலும் அனுபவமும் உள்ளவர் கள் இருக்கிறார்கள். அவர்களை ஒதுக்கி விட்டு என்னைத் தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: தி.மு.க. ஜனநாயக ரீதியான இயக்கம் காங்கிரஸ் அல்ல
Permalink  
 


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், தாடி, மீம் மற்றும் உரை
Suba.Veerapandianபக்கத்தை விரும்பு

தோற்றுப் போனேன் என்பது உண்மைதான்! 
----------------------------------------------------------------------- 
-சுப. வீரபாண்டியன்

கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன்.

கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது. அதற்கு இத்தனை பின்விளைவுகள் இருக்குமென்று அப்போது நான் நினைக்கவில்லை. என்னிடம் வினாக்களைத் தொடுத்த மதன் என்னும் இளைஞர், 'இடக்கு மடக்கான' பல வினாக்களை என்னிடம் கேட்டார். சில வினாக்களுக்கு விடை சொல்வதில், எனக்குச் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்தன. .

நான் விடை சொல்வதற்கு முன்பே அடுத்த கேள்வியைக் கேட்டுவிடும் அவரது போக்கை மனத்தில் வைத்துக் கொண்டு, "நீங்களெல்லாம் நண்பர் பாண்டேயிடம் பாடம் படித்துக் கொண்டு வருகின்றீர்களோ?" என்று நேர்காணல் முடிந்தபின், வேடிக்கையாகக் கேட்டேன். எப்படி இருந்தாலும், வளரும் இளைஞர் நீங்கள், வளருங்கள் என்று வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தேன்.

அடுத்தநாள் தொடங்கி, இரண்டுவிதமான பின்விளைவுகளை என்னால் பார்க்க முடிந்தது. அந்த நேர்காணலை, என்னை விரும்பாதவர்கள், எனக்கு எதிர்க்கருத்துக் கொண்டவர்கள் கொண்டாடினார்கள். குறிப்பாக, பாஜக வினரும், நாம் தமிழர் கட்சியினரும் அதனைப் பரப்பினார்கள். நான் விடை சொல்ல முடியாமல் தடுமாறியதாகவும், என் நிலை பரிதாபமாக இருந்ததாகவும் பதிவுகள் இட்டனர். நேர்காணலில் நான் தொற்றுப் போய்விட்டதாக எழுதினர்.

பாஜக வை விட என்னை எதிர்ப்பதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நாம் தமிழர் தம்பிகள்தாம். ஆர்எஸ்எஸ் நண்பர்களாவது என்னை எதிர்ப்பதும், மிரட்டுவதுமாக இருப்பார்கள். ஆனால் நாம் தமிழர்கட்சியினரோ, நான் இறந்துபோய்விட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தம்பி சீமானே ஒரு பேட்டியில்,, அவர் (நான்) இறந்துபோய்விட்டார் என்று 
சொன்னார். உடனே அவர் தம்பிகள் அடுத்தநாள், என் படத்திற்கு மாலை அணிவித்தும், சவப்பெட்டியில் என் உடல் இருப்பது போன்று படத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தும் மகிழ்ந்தனர். சீமான் மேடையில் இருக்கும்போதே, அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர், பாளையங்கோட்டையில், திமுக வை நான் ஆதரிப்பது குறித்துப் பேசுகையில், "நாயினும் கீழாய் நக்கிப் பிழைக்கும் ஈனப்பிறவி சுபவீ" என்று பேசினார். சீமான் கண்டித்ததாய்த் தெரியவில்லை. (மகிழ்ந்திருப்பாரோ!)

இப்படி ஒரு சாரார் அந்த நேர்காணல் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்க, என்னிடம் அன்பு கொண்ட நண்பர்கள் பலர் வருத்தப்பட்டனர். அந்த நேர்காணலுக்கு நீங்கள் போயிருக்கக் கூடாது என்றனர். இவ்வளவு மென்மையாகப் பேசியது சரியில்லை என்றனர். நீங்கள் தோற்றுப் போய்விட்டதாக வலதுசாரியினர் மகிழ்வதற்கு இடம் கொடுத்து விட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டனர்.

"எல்லா நேரமும் நாமே வெற்றிபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவது கூட ஒரு விதமான பாசிசம்தான், ஒருமுறை தோற்றால் குற்றமில்லை" என்று நான் சமாதானம் சொன்னேன்.

இவையெல்லாம் ஒருபுறமிக்க, காவேரி தொலைக்காட்சியில் நான் எதிர்பாராத வேறு சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சில நாள்களுக்குப் பிறகுதான் அது எனக்குத் தெரிய வந்தது. அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த திரு ஜென்ராம், அந்தப் பேட்டி குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அங்கு பணியாற்றிய சில பெண் ஊடகவியலாளர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க மறுநாள் கருப்பு உடையுடன் அலுவலகம் வந்துள்ளனர். தங்கள் எதிர்ப்பையும் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஜென்ராம் அவர்களை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவர் மறுத்துவிட்டார்.

இதனால் கோபம் மொண்ட நிர்வாகம், ஜென்ராம் அவர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, 23.07.19 அன்று பணி நீக்கம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஊழியர்களும் வேலைக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், காவேரி தொலைகாட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சோஷலிச தொழிலாளர் மையம் கண்டன அறிக்கை விடுத்துள்ளது. நண்பர் வன்னி அரசு போன்றவர்கள்,ஜென்ராம் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து, இனிமேல் காவேரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்துள்ளனர். .

நான் மிகவும் மதிக்கும் மூத்த ஊடகவியலாளரான ஜென்ராம் அவர்களும், நான் அறிந்திராத அந்தப் பெண் ஊடகவியல் நண்பர்களும், என் மீது கொண்டுள்ள அன்பும் மதிப்பும் என்னை நெகிழ வைக்கின்றன. அந்தப் பெண்களை நினைக்கும்போது, நான் பெற்ற பிள்ளைகளை விட, பெறாத பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதை உணர முடிகிறது.

நான் நேர்காணலில் தோற்றுப்போனேன் என்று எண்ணி மகிழ்கின்ற என் இனிய எதிரிகளே! நேர்காணலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்பதை உங்களுக்குக் காலம் உணர்த்தும்.

ஆனால் நான் இன்னொரு விதத்தில் தோற்றுத்தான் போனேன் என்பது உண்மை. யாருக்கோ எதோ ஒரு மரியாதைக் குறைவு நடந்தால் நமக்கென்ன என்று இருக்காமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்திய தோழர் ஜென்ராமுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்ற வினாவிற்கு விடை தெரியாமல் தோற்றுப்போனேன். அவரை விடுங்கள், அவராவது என் நண்பர், அந்தப் பெண் பிள்ளைகள் யார், அவர்களுக்கு நான் இதுவரையில் என்ன செய்திருக்கிறேன்? அவர்கள் ஏன் எனக்காகத் தங்கள் பணியிலும், வாழ்விலும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்?

கண்கள் கலங்குகின்றன. அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும், கருத்துரிமையின் மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்புக்கும் முன்னால் நான் தோற்றுத்தான் போனேன்!!

#காவேரிதொலைக்காட்சி #ஜென்ராம் #சீமான் #நாம்தமிழர்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நெறியாளர் மதன் தமிழ்தேசிய கருத்தியல் ஆதரவாளராக இருப்பதால் திராவிட கருத்தியலை இயல்பாகவே மூர்க்கம் கொண்டு தாக்குகிறார்.அவர்கள் போட்டு வைத்திருக்கும் ஊடக வரம்புகளை தாண்டி வந்து அடிக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்து அடுத்த கட்டத்திற்கே இன்று சென்றுவிட்டது.

சுப.வீயிடம் கேள்வி கேட்டு அவர் பதில் சொல்ல முடியாமல் போனால் மறுநாள் காவேரி தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் பெண்கள் கருப்பு உடையில் போக வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது?

மதன் கேள்விகளை நேர்மையாக கேட்டார்.அதில் ஏதாவது அவர் எல்லை மீறியிருந்தால் தவறு சொல்ல நியாயம் உள்ளது.செட்டியார்களும் அவாள்கள்தானா? என்று கேட்டது தனிப்பட்ட முறையில் தாக்கியது என்று சொல்கிறார்கள்.

சரி மதிமாறன் பாண்டேவை பார்ப்பனர் என்று சொல்லியது போலவோ,நாரயணனை பார்ப்பனர் என்று சொல்லியது போலவோ இழிவாக குற்றம் சுமத்த சுட்டிக் காட்டினாரா? இல்லை மானமிகு யோக்கியர் சுப.வீ இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அன்று மதிமாறனைத்தான் கண்டித்தாரா?

கேள்வியே வராத இடங்களில் மட்டுமே சண்டப்பிரசண்டம் செய்வதை தங்கள் தாராக மந்திரமாக வைத்திருக்கும் கூட்டத்திற்கு இது எரிச்சலையும்,வெறுப்பையும்தான் தரும்.இதில் எப்போதும் சகிப்புத்தன்மை பற்றியெல்லாம் பாடம் எடுப்பவர்களும்,பாசிஸஸம் பற்றி வரையறை தரும் இடதுசாரிகளின் ஆதர்சனர் ஜென்.ராம் உண்மையான பாஸிஸ்ட்டுகள் யார் என்பதை தன் செயல்களின் மூலம் நிரூபித்துள்ளார்.

எந்த கேள்வியும் வராத வரை,எங்கள் இருப்பை அசைக்காத வரை முற்போக்காக வாழ்கிறோம் என்ற மன்றாடுதல் மட்டுமே இங்கே புரட்சி என்ற வாய்சவடால் எல்லாம்.அதன் பிறகு எல்லாமே சீமான் சொல்வது போல போனை வைடா. .த்தாதான்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சொற்பொழிவு என்கிற பெயரில் திமுக குடும்ப சேனல்களில் கல்லா கட்டி வயிறு வளர்க்கும் எச்சைப் பயல் சுகிசவம் சொல்கிறான் யேசு மோஸஸின் வேசிகளை கல்லெறிந்து கொல்லும் சட்டத்தையும் மீறாமல், மன்னிக்கும் சுபாவதையும் கைவிடாமல் டிப்ளமேட்டிக்காக "ஒரு பாவமும் செய்யாதவர்கள் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்" என்றாராம். ஏண்டா எச்சக்கலை இதை நீ விளக்கு புடிச்சு பார்த்தியா ? யேசு இப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கா ? விஷ்னு என்பது வேதத்தில் இடைச்செருகல் என பிதற்றும் சதுர்வேத பண்டித சிகாமணி பொறுக்கிப் பயல் இதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளாய் ?

யேசு என்று ஒருவர் இருந்தார் என பலர் நம்புவதற்கே நான்கு பேரின் குறிப்புகள்தான். இதில் மார்க், மேத்யு, லூக் ஆகியோரின் குறிப்புகளில் இந்த வேசி மீது கல்லெறியாதீர்கள் எனும் வசனமே இல்லை. மேலும் ஜானின் மிகப் பழமையான கையெழுத்து பிரதிகளிலும் இது குறித்து குறிப்பு இல்லை. ஐந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு இடை செருகப்பட்ட கையெழுத்து பிரதிகளில்தான் இந்த குறிப்பு ஜானின் பிரசங்கத்தில் இடம் பெறுகிறது. ஆக இது ஒரு ஐந்தாம் நூற்றாண்டு இடைச்செருகல் என்பது பல பைபிள் ஆராய்ச்சியாளர்களே ஒத்துக் கொள்ளும் உண்மை. ஆனால் நம் மிகப்பழமையான வேதங்களை கரைத்து குடித்தவன் போல் அடித்தட்டு மக்களிடம் நாடகமாடும் ஃப்ராடுப் பயல் சுகிசிவம், யேசு பேசியதை இவன் ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல் பேசுகிறான். மிஷநரிகள் பணம் இவன் இடையில் செருகப் படுவதால் இதெல்லாம் இடைச்செருகல் லிஸ்ட்டில் வராது போல் தெரிகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard