பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் முதன் முதலாக கிடைத்த கலவெட்டுக்கள், கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து வெளியில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் ஆகும். ஆனால் இக்கல்வெட்டுக் குறிப்புகள் இதுவரை யாராலும் முழுமையாக படித்து அறியப்படவில்லை.
அசோகர் காலத்திற்கு முந்தைய கல்வெட்டுகள் இலங்கையின் அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [7]
கிபி நான்காம் நூற்றாண்டு காலத்திய சமசுகிருத மொழி கல்வெட்டுக் குறிப்புகள் முதன்முதலில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.[8]
கிபி முதல் ஆயிரமாண்டிற்குப் பின்னர் பாறை, தூண், சமணர் படுகைகள் மற்றும் குடைவரை சுவர்களில் கல்வெட்டுகள் மற்றும் செப்புப் பட்டயங்கள் அதிகம் கண்டறியப்பட்டது.[9]
இந்தியத் துணைக்கண்டத்தில் கிடைத்த கல்வெட்டுகளையும், மற்றும் செப்புப் பட்டயங்களையும், 1886 முதல் தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்து, அவைகளை தமிழ் பிராமி மற்றும் பிராமி என வகைப்படுத்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தனர். [16]
வட இந்தியவில் அசோகரின் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துமுறையிலும்; தென்னிந்தியாவின் தமிழ் கல்வெட்டுக்கள் தமிழ் பிராமி எழுத்துமுறையிலும் இருந்தது. பின்னர் தமிழ் பிராமி எழுத்துமுறைகள், வட்டெழுத்து முறையில் மாறி, கோயில் கருங்கல் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்தது. [17]
கிபி 1-ஆம் நூற்றாண்டு முதல் பட்டிபிரோலு மற்றும் கடம்பர் எழுத்துமுறைகளிலிருந்து கன்னடம் மற்றும் தெலுங்கு எழுத்துமுறைகள் உருவானது.
குறிப்பிடத்தக்க கல்வெட்டுகள்
கிபி 578 காலத்திய பழைய கன்னட கல்வெட்டுக்கள், பாதமி குகைக் கோயில்
கிரேக்க எழுத்தில், பாக்திரியா மொழி கல்வெட்டு ஒன்று 1993-இல் ஆப்கானித்தான் நாட்டின் சுர்க் கோட்டல் எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இக்கல்வெட்டில் குசான் பேரரசர்கனிஷ்கரின் ஆட்சிக் குறித்தும், குசான் வம்சம் குறித்தும் குறிப்புகள் உள்ளது.
பழைய கன்னட மொழி ஹல்மிதி கல்வெட்டுக்கள், (கிபி 450 - 600), பெங்களூரு அருங்காட்சியகம்
தமிழ் செப்பேடுகள்
தென்னிந்திய மன்னர்கள் குறிப்பாக சோழர், விஜயநகரப் பேரரசுகள், கிபி 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை, வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் நிலத்துடன் கூடிய கிராமங்கள், கோயில்கள், சைவ மடங்கள், அன்னசாலைகள் போன்ற பொதுநிறுவனக் காரியங்களை நிர்வாகிக்க, தனிநபர்களுக்கும், பொதுநிறுவனங்களுக்கும், செப்பேடுகள் மூலம் தானமாக வழங்கியதை வேள்விக்குடி செப்பேடுகள்போன்றவைகள் மூலம் அறியப்படுகிறது.
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பகுதிகளில் கல்வெட்டுகள் பிராகிருதம் மற்றும் சமசுகிருத மொழியில் அதிகம் கொண்டிருந்த போதும், தமிழ்நாட்டில் மட்டும் தமிழி எழுத்தில் கொண்டிருந்தது. [20]
இச்சங்க இலக்கியங்கள் கிமு 4 - கிமு 3-ஆம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டிருக்கலாம் அறிஞர்கள் கருதுகிறார்கள்.[22][23][24] கிமு 3-ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் கல்வெட்டுகள் தமிழ் பிராமிஎழுத்துமுறையில் இருந்தது. [25][26]
தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் கிமு 5 - 2-ஆம் நூற்றாண்டு காலமாக இருக்கலாம் அறிஞர்கள் கணித்துள்ளனர்.
↑Coningham, R.A.E.; Allchin, F.R.; Batt, C.M.; Lucy, D. (1996), "Passage to India? Anuradhapura and the Early Use of the Brahmi Script", Cambridge Archaeological Journal6 (1): 73–97, doi:10.1017/S0959774300001608
↑Coningham, R.A.E.; Allchin, F.R.; Batt, C.M.; Lucy, D. (1996), "Passage to India? Anuradhapura and the Early Use of the Brahmi Script", Cambridge Archaeological Journal6 (1): 73–97, doi:10.1017/S0959774300001608
↑Caldwell, Robert (1875). A comparative grammar of the Dravidian or South-Indian family of languages. Trübner & co. பக். 88. "In southern states, every inscription of an early date and majority even of modern day inscriptions were written in Sanskrit...In the Tamil country, on the contrary, all the inscriptions belonging to an early period are written in Tamil with some Prakrit"
↑Dating of Indian literature is largely based on relative dating relying on internal evidences with a few anchors. I. Mahadevan’s dating of Pukalur inscription proves some of the Sangam verses. See George L. Hart, "Poems of Ancient Tamil, University of Berkeley Press, 1975, p.7-8
↑George Hart, "Some Related Literary Conventions in Tamil and Indo-Aryan and Their Significance" Journal of the American Oriental Society, 94:2 (Apr - Jun 1974), pp. 157-167.
↑Kamil Veith Zvelebil, Companion Studies to the History of Tamil Literature, pp12
↑Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002)
↑"Tamil". The Language Materials Project. UCLA International Institute, UCLA. பார்த்த நாள் 2007-03-25.
↑Iravatham Mahadevan (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. Cambridge, Harvard University Press.
↑B. C. Jain, Journal of the Epigraphic Society of India 4 (1977): pp. 62-66 and plate facing p. 64.
மேற்கோள்கள்
Salomon, Richard, Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the Other Indo-Aryan Languages, Oxford University Press, 1998,ISBN 978-0-19-509984-3
Various (1988) [1988]. Amaresh Datta. ed. Encyclopaedia of Indian literature – vol 2. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-260-1194-7.
அலகாபாத் தூண் (Allahabad Pillar) கி மு மூன்றாம் நூற்றாண்டின் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவியதாகும். அவர் நிறுவிய பல தூண்களில் அலகாபாத் துண் மணற்கல்லால் ஆனது. இத்தூண் உயரம் 35 அடி உயரமும் 35 அங்குலம் சுற்றளவும் கொண்டது. தூணின் உச்சியில் அமர்ந்த நிலையில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது.
இத்தூண் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்த ஸ்தூபி ஆகும். இத்தூணில் அசோகரின் குறிப்புகள் மற்றும் சமுத்திரகுப்தரின் குறிப்புகள் காணப்படுகிறது.
ஆனைக்கோட்டை முத்திரை (Anaicoddai Seal) என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம் பெற்ற அகழ்வாய்வு ஒன்றின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முத்திரை ஆகும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு அடக்கக் குழி ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்ட இம் முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த முத்திரை எதனால் செய்யப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்களே இருந்து வருகின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழக இந்து பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார். ஆனால், அவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ. இரகுபதி (1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் (Bronze) செய்யப்பட்டது என்றுள்ளார். ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), அது உலோகத்தால் ஆனது என்றுள்ளபோதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக் கலவையால் ஆனது என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை. எதுவிதத்திலும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில் எழுதியிருந்த நூலில், அது Steatite (Soapstone) ஆல் ஆனது என்றுள்ளார். முத்திரையின் கீழ் வரிசையில் மூன்று பிராமி எழுத்துக்களும், மேல் வரிசையில் மூன்று அடையாளங்களும் காணப்படுகின்றன. மேல் வரிசையிலுள்ள மூன்று அடையாளங்களுள் ஒன்று ரோம எழுத்தான C போன்ற அடையாளத்தின் வளைவு உச்சிப்புள்ளியில் ஒரு குற்றும் காணப்படுகிறது. மற்றைய இரண்டு அடையாளங்களும், ஒரேமாதிரியாகத் தோற்றமளிக்கின்றன.
எண்ணாயிரம் கல்வெட்டுகள் என்பவை தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தில் உள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் கல்வெட்டுக்கள் ஆகும். இக் கல்வெட்டுச் செய்திகளின்படி தமிழகத்தில் கி.பி 846 முதல் கி.பி 1279 வரை ஆண்ட சோழர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழையும், வேத சாத்திரங்களையும் வளர்ப்பதில் அக்கறை காட்டினர். உண்டு, உறைவிடக் கல்விக்கூடங்களையும் ஊக்கப்படுத்தி பயிற்றுவிக்கும் குருமார்களுக்கு தாராளமாக ஊதியம் அளித்ததுடன் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையும் வழங்கினர்.
ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள் புதுக்கோட்டையில் இருந்து விராலிமலைக்குச் செல்லும் வழியில், 15 கல் தொலைவில் சித்தன்னவாசல் குன்றில் இந்த சமணப்படுக்கைகளும் கல்வெட்டுக்களும் அமைந்து உள்ளன.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கலசக்காடு என்னுமிடத்தில் தாமிழி எழுத்துக் கல்வெட்டு 2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, அந்தக் கல் இப்போது தஞ்சைப் பல்கலைக் கழத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. கண்டறிந்தவர் தஞ்சைப் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் தங்கதுரை.
இந்தக் கல்வெட்டிலுள்ள வரிகளில் காணப்படும் எழுத்துக்களை ஆய்வாளர்கள் அடியில் காணுமாறு படிக்கின்றனர்.
குடுமியான்மலை இசைக் கல்வெட்டு என்பது, தமிழ் நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை என்னும் இடத்தில் காணப்படும் இசைத் தகவல்களைக் கொண்ட ஒரு கல்வெட்டு ஆகும். குடுமியான்மலை புதுக்கோட்டை நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர். இவ்வூரில் உள்ள சிகாநாதசுவாமி கோயிலிலேயே மேற்படி கல்வெட்டுக் காணப்படுகிறது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதியில் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டின் இறுதியில் சில தமிழ்ச் சொற்களும் உள்ளன. இது 1904ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இசை தொடர்பான இதன் முக்கியத்துவம் ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்குப் பின்பே உணரப்பட்டது. 1931ல் டி. என். இராமச்சந்திரன் என்பார் இதன் இசைசார்ந்த சிறப்புக் குறித்து அறிஞர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.இக்கல்வெட்டு பல்லவ அரசனான முதலாம் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. இம்மன்னன், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். தமிழிசை தனது அடையாளத்தை இழப்பதற்குக் காரணமானது எனச் சில தமிழிசை அறிஞர்கள் கருதும் 13ம் நூற்றாண்டு இசை நூலான சாரங்கதேவரின் சங்கீத இரத்தினாகாரத்துக்கு முற்பட்டது என்பதால், தமிழிசை குறித்த ஆய்வுகளில் இக்கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
குருமாத்தூர் கல்வெட்டு (Kurumathur inscription (கி.பி 9 ஆம் நூற்றாண்டு) என்பது வட கேரளத்தில் பல்லவ கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்ட ஒரு சமசுகிருத கல்வெட்டாகும். இது ஆரியகோடின் தெற்கில் உள்ள குருமாத்தூர் விஷ்ணு கோவிலைப் புதுப்பிக்கும் போது அகழ்வாய்வில் 2011 பெப்ரவரி மாதம், கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டானது ஒரு கருங்கற்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது.அரியக்கோடானது காளியாறின் தென் கரையில், கரிக்கட்டின் வடமேற்கில் அமைந்துள்ளது. இது கேரளாள்பதியில் குறிப்படப்பட்டுள்ள 32 பிராமணக் குடியேற்றங்களில் ஒன்றாகும்.
இந்தக் கல்வெட்டானது பின்வரும் தகவல்களை அளிக்கிறது
அளவு: முன்று பத்திகள்
ஆட்சியில் இருந்த மன்னரின் பெயர்: "இராம இராஜசேகரன்"
நாள்: கி.பி. 871 மே 24
உள்ளடக்கம்:
"அரசன் இராம இராஜசேகரனின் புகழானது பெருங்கல் முழுவதும் பரவியுள்ளது"
"இந்த இராஜசேகர மன்னன் இராமர் பிறந்த புகழ்பெற்ற இசுவாகு மரபில் பிறந்தவர்."
"நாட்டை மனு நீதி தவறாமல் ஆட்சிசெய்பவர்"
"இவரது நீதியான ஆட்சியில் பிராமணர்களுக்கு 12 கோயில் குளங்களை வெட்டியும் விஷ்ணுவின் சிலையும் நிறுவப்பட்டது"
சன்யாசிப் புடவுக் கல்வெட்டு என்பது குற்றால மலையிலுள்ள தேனருவி பக்கத்தில் சன்யாசிப் புடவு என்னும் இயற்கைக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட 2500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு. இதில் காணப்படும் எழுத்துக்கள் சில மூலப் பிராமி எழுத்துக்கள் போல் இருந்தாலும் இதைக் கல்வெட்டு ஆய்வாளர்களால் முழுவதுமாகப் படிக்க இயலவில்லை.
இதிலுள்ள எழுத்துக்களில் சில கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது போல் தெரிந்தாலும் மற்றவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள எழுத்துக்களுடன் பொருந்தாததால் இதை அக்கல்வெட்டுகளுக்கு முந்தியவையாகவே கொண்டுள்ளனர். இதன் மாதிரி குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே, சிறுசுனை கிராமத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் உரிமை இருந்ததை வெளிப்படுத்தும் கல்வெட்டு உள்ளது .
ஜம்பைக் கல்வெட்டு என்பது, தமிழ்நாட்டில் ஜம்பை என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். ஜம்பை விழுப்புரம் மாவட்டத்தில், தென் பெண்ணை ஆற்றங் கரையில், திருக்கோயிலூர் நகரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிலேயே இக் கல்வெட்டு அமைந்துள்ளது. குகையின் உட்பகுதியில் அமைந்துள்ளமையால் மழை, வெயில், காற்று போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் இன்னும் தெளிவாகவே உள்ளது. கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டு தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு கல்வெட்டாகக் கருதப்படுகின்றது.
கரூர் மாவட்டம் புகழுரை அடுத்த வேலாயுதம் பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அந்த குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேரனைப் பற்றியும் படுக்கையில் இருந்த சமணத்துறவிகள் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
'புகழூர்க் கல்வெட்டு' என்பது புகழூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். இவ்விடம் பண்டைக்காலத்தில் சேரர்களின் தலைநகரமாக இருந்த கரூரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. இக்கல்வெட்டு கிறித்தவ ஆண்டுக் கணக்கின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. சேர மன்னன் இளம் கடுங்கோ என்பவன் சமணத் துறவி ஒருவருக்குக் குகை வாழிடம் ஒன்றைத் தானமாக வழங்கியதைக் குறிக்கவே இக் கல்வெட்டுப் பதியப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சேர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது இக்கல்வெட்டுக்கு ஒரு சிறப்பு ஆகும்.
இக் கல்வெட்டில் பெயர் குறிக்கப்பட்டுள்ள சேர மன்னர்கள், கோ ஆதன் செல்லிரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்பவர்களாவர். இவர்களில் கோ ஆதன் சேரல் இரும்பொறையின் மகனே பெருங்கடுங்கோ. இளங்கடுங்கோ பெருங்கடுங்கோவின் மகன். இக் கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் பெருங்கடுங்கோவே மன்னனாக இருந்ததாகத் தெரிகிறது. இளங்கடுங்கோ இளவரசராக முடிசூட்டப்பட்டதைக் குறிக்கவே இத் தானம் வழங்கப்பட்டது.
கிருட்டினகிரி மாவட்டம் மகராசாகடை என்ற ஊருக்கு அருகில் உள்ள மலையில் உள்ள ஈசுவரன் கெவி எனப்படும் குகையில் 'தமிழி' எனப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கும்,சிந்துவெளி எழுத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட எழுத்துவடிவங்கள் காணப்படுகின்றன. அதன் காலம் கி.மு.1800-500 ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அக்காலகட்டத்தில் சிந்துவெளி எழுத்தையும்,தமிழி எழுத்தையும் கலந்த எழுத்து முறையையும் அக்கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கமட்டன் மகன் சகடன் அனங்கன் என்பவன் பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது. கமட்டன் என்பது தமிழியிலும் சகடன் அனங்கன் என்பது சிந்துவெளி எழுத்திலும் எழுதப்பட்டுள்ளது.
ஹாத்திகும்பா கல்வெட்டு அல்லது அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, "யானைக்குகை" கல்வெட்டு) என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது. பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளித் தௌலியில் உள்ள அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது.
இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழைமையான கலிங்க பிராமி எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையைக் கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது.இந்தக் கல்வெட்டின் காலம் மௌரிய மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165 ஆம் ஆண்டு என்றும், காரவேலன் மன்னரின் 13ம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால், சந்திரகுப்த மௌரிய மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321 ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டால், காரவேலர் அரியணை ஏறிய காலத்தைக் கி.மு. 170 என்றும், யவன மன்னர் திமெத்ரியசுவுடன் நடந்த போரைக் கி.மு. 162 என்றும் கணிக்க முடிகிறது.
Suresh Venkatadriஆம். அன்று கோவையில் இது குறித்து ஒரு நீண்ட விவாதம் நடந்தது. (2 வருடங்கள் இருக்கலாம்) ஜெ convince ஆகவில்லை. அவர் தரப்பாக விரிவாகச் சொன்னார். அவை அனைத்தும் எனக்கு இப்போது நினைவிலில்லை.வீரா நினைவில் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.ஜெவின் முக்கியமான வாதம் தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே இதை தமிழ் மன்னர்கள் கூட்டணியை உடைத்ததைப் பற்றிய ஒன்றாகப் பார்க்கின்றனர் என்றும் பிற வரலாற்று ஆசிரியர்களின் கருத்து அதுவல்ல என்பதும்தான். நான் இந்த கல்வெட்டு குறித்து முதலில் இராமகி என்பவர் எழுதியுள்ள சிலம்பின் காலம் என்ற தொடரில் (நூல் வடிவில் தமிழினி வெளியீடு) படித்திருக்கிறேன். அவர் இதை தமிழ் மூவேந்தர் கூட்டணியை வென்றதைச் சொல்லும் ஒன்றாகவே பார்க்கிறார் அது ஒப்புக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே எனக்கும் பட்டது. இப்போது நீங்கள் காட்டும் விளக்கம் போலவே.
. ஆனால் விக்கிபீடியாவில் உள்ளவை முரண்பட்டு இருக்கின்றன. வீரா பின் எப்போதாவது ஜெவிடம் இது குறித்து பேசினாரா தெரியவில்லை.ஜெவின் தளத்திலும் இது குறித்து ஏதும் பதிவு இருப்பதாகவும் தெரியவில்லை.
Rajamanickam Veeraஜெ அப்படித்தான் சொன்னார், ஆனால் அதன் பிறகு நான் நிறைய ரெபர் செய்து விட்டேன். பல வரலாற்று ஆய்வாளர்கள், த்ரமிள தேச தமிழ் கூட்டணியை தான் உறுதி செய்கிறார்கள். அப்போது துளசி ராமசாமி சங்க பாடல்களே பழங்குடியினரிடமிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தார். பாண்டிய என்ற பெயரே எங்கும் பயன்படுத்தப்பட வில்லை என்றும் சொன்னார். ஆனால் வியாசர் பாண்டியர்களை சொல்கிறார். சங்கப்பாடல்களில் காரவேலர் போர் பற்றிய ரெபரன்ஸை ராமச்சந்திரன் சார் சொன்னார். மெளரியப்பேரரசு , அசோகர் பேரரசுகள் விரிந்த மேப்களை பார்த்தாலே தெரியும் தமிழகத்தில் அவர்கள் ஆதிக்கம் இல்லை என்பது., மேலும் அசோகர் தன் கல்வெட்டில் தமிழ் மன்னர்களை தர்மத்தால் ( அதாவது புத்த தர்மத்தை பரப்பி ) வென்றேன் என்று தான் குறிப்பிடுகிறார்.
Rajamanickam Veeraபாண்ட்ய என்பதற்கே பழைய என்று தான் பொருள், மேலும் வியாசர் சகதேவனின் மதுரை வருகையின் போது தூசி படர்ந்த நகரம் என்று குறிப்பிட்டிருப்பதாக சொன்னார். பாண்டியர்கள், சோழர்கள் தங்களை சந்திர குலத்தவர்கள் என்பதையும் ஒப்பு நோக்கி பாண்டிய இருப்பை உறுதி செய்து கொள்ளலாம். குமரி மைந்தன் ரேஞ்சுக்கு பொருளை உடைத்து வளைத்து இன்றும் கருத்து சொல்லும் பலர் இருக்கிறார்கள்.
Rajamanickam Veera11,12 வரிகளில் கெளதமி புத்ர சதகர்ணியை வென்றதை சொல்லும் காரவேலன்( பொது ஆண்டுக்கு முன் 163-180). தாம்ர லிப்தியை பற்றி 17வது வரியில் சொல்ல வேண்டிய அவசியமும் தேவையும் என்ன வருகிறது. சரி பாண்டியரிடமிருந்து எடுத்து வந்த முத்தை என்ற சொல்லை எப்படி தொடர்பு படுத்துவது...
Krishnan Subramanianசரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜடாயு. இங்கே தமிர ஸங்கதம் என்பது மூவேந்தர்களை மட்டுமல்லாது சத்யபுத்திரரான அதியமான்களையும் உள்ளடக்கியதாகவே இருந்திருக்கிறது. அசோகரின் கல்வெட்டிலும் இம்மன்னர்களின் நிலம் அவரது எல்லைக்கப்பால் இருந்தது என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
Krishnan Subramanianபின்னால் வருகிற எதிரி மன்னர்கள் அந்த ஜயஸ்தம்பத்தை அழித்து வீசி விடுவார்கள் என்ற காரணமாக இருக்கலாம். மலை / குகைக்கல்வெட்டுகளை அவ்வளவு சுலபமாக அழிக்க முடியாதல்லவா
Rangarathnam Gopuபல்லவர் காலம் வரை தமிழக வரலாறு பெரும் புதிராக உள்ளது. இவ்வளவு பரவலாக பல நாடுகளின் வரலாற்று சின்னங்கள் அழிந்திருப்பது விசித்திரமாக உள்ளது.
Jataayu B'luruஉண்மையில் எந்த வரியிலும் சதகர்ணி / சாதவாகன அரசனை வென்றதை சொல்லவில்லை என்பது தான் பிரசினையின் அடிப்படையே :) 11ம் வரியை பதிவில் ஏற்கனவே கொடுத்துள்ளேன், அதில் இல்லை. 12வது வரி கீழே. இதிலும் இல்லை Rajamanickam Veera
..... And causing panic amongst the people of Magadha (he) drives (his) elephants into the Sugamgiya (Palace), and (he) makes the King of Magadha, Bahasatimita, bow at his feet. And (he) sets up (the image) 'the Jina of Kalinga' which had been taken away by King Nanda ... and causes to be brought home the riches of Amga and Magadha along with the keepers of the family jewels of .....
Rajamanickam VeeraIn the second year, without caring for Satakarni (His Majesty) sent to the west a large army consisting of horse, elephant, infantry and chariot, and struck terror to Asikanagara with that troop that marched up to the river Kanhavemna.
Rajamanickam Veerasorry Jataayu B'luru காரவேலன் கல்வெட்டில் இரண்டாம் ஆண்டிலேயே சதகர்ணியை தாண்டி, அல்லது புறக்கணித்து காரவேலன் ஆந்திர பகுதிக்கு வந்ததை காரவேலன் கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது. சாதவாகன ஆட்சியில் கெளதமி புத்ர சதகர்ணியின் காலமும் காரவேலனின் காலமும் தான் ஒத்து போகிறது. கெளதமிபுத்ர சதகர்ணி பொது ஆண்டுக்கு முன் 164- 180
Rajamanickam Veeraசாதவாகன காயின்கள் நமக்கு கிடைத்திருக்கிறது. Aravindan Neelakandan அவர்களின் அப்பாவிடம் கூட இருக்கிறதாம் சதகர்ணிகளின் தமிழ், பிராகிருதம் பொறிக்கப்பட்ட பொ.மு172 ஆம் ஆண்டு காசுகள்.
Krishnan Subramanianகௌதமிபுத்ர சதகர்ணியின் காலத்தை பொது வருடம் 100களில், அதாவது காரவேலனின் காலத்திற்கு (பொ.வ.மு 170க்குப் பின்) மிகப் பிந்தியதாகவே ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே, காரவேலன் சதகர்ணியைத் தோற்கடித்திருக்க வாய்ப்பில்லை. மேலும், சதகர்ணி பல்லவர்களைத் தோற்கடித்ததாகக் குறிப்பு (நாசிக் கல்வெட்டு) உண்டு. பல்லவர்கள் தலைதூக்கியபோது மூவேந்தர்கள் ஆட்சி அநேகமாக மறைந்துவிட்டபடியால், அவர்களுடைய தமி(ர)ழ சங்கதம் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.
Jataayu B'luruஅப்படியானால் காரவேலனின் காலத்தில் ஆந்திரப் பகுதியை ஆட்சி செய்தது யார்? ஒருவேளை சில குறுநில மன்னர்களாக இருந்திருக்கக் கூடுமோ? அவர்களை எல்லாம் தோற்கடித்தது கல்வெட்டில் பொறிக்கத் தகுதி வாய்ந்ததல்ல என்று காரவேலன் நினைத்திருப்பானோ :)
Suresh Venkatadriதற்போது Abraham Eraly ( Roy Moxham அவர்களால் மிக உயர்வாக மதிப்பிடபடுபவர்) அவர்கள் எழுதியுள்ள இந்திய வரலாற்று நூல் வரிசை படித்துக் கொண்டிருக்கிறேன் ( இரண்டாம் பகுதி: The First Spring vol :1). நேற்று இரவு யதேச்சையாக நாம் பேசிக்கொண்டிருக்கும் பகுதி குறித்…மேலும் பார்க்கவும்
Krishnan Subramanianதிரு.ராஜமாணிக்கம், நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பிலேயே கௌதமி புத்திர சதகர்ணியின் காலம் பொ வ 90-120 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே (பக்கம் 59). எப்படி நீங்கள் கௌதமி புத்திரரும் காரவேலனும் சமகாலத்தவர் என்ற முடிவுக்கு வந்தீர்கள்?
Suresh Venkatadriதற்போது Abraham Eraly ( Roy Moxham அவர்களால் மிக உயர்வாக மதிப்பிடபடுபவர்) அவர்கள் எழுதியுள்ள இந்திய வரலாற்று நூல் வரிசை படித்துக் கொண்டிருக்கிறேன் ( இரண்டாம் பகுதி: The First Spring vol :1). நேற்று இரவு யதேச்சையாக நாம் பேசிக்கொண்டிருக்கும் பகுதி குறித்து படித்தேன். அதிலும் காரவேலனின் ன் கல்வெட்டு குறித்து எழுதும்போது,அவன் பாண்டியர்களை வென்று பரிசுகளைக் குவித்ததாக இருப்பதாகத்தான் உள்ளது. தமிழ் மன்னர்கள் கூட்டணி என்பது குறித்து ஏதும் இருப்பதாக ஆபிரகாம் இராலி எதுவும் குறிப்பிடவில்லை.ஆனால் வீரா வரலாற்றிசிரியர் எஸ். ராமச்சந்திரன் அவர்களும் இந்த தமிழ் மன்னர்கள் கூட்டணி என்பதை உறுதிபடுத்துவதாக எழுதியுள்ளார். இன்னும் விளக்கங்கள் வேண்டியிருக்கும் போலிருக்கிறது.
Rajamanickam Veeraசுரேஸ் அண்ணா, அசோகர் கல்வெட்டிலேயே சேரக, சோழ, பாண்டியக இவர்களை போரில் வெல்லாமல் தர்மத்தால் வென்றேன் என்று குறி இருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கும் வெர்ஷ்ன்களை பாருங்கள். தமிழகத்தில் இருக்கும் வரலாற்று புறக்கணிப்பும், பாரானிலையும் வட இந்தியாவிலும் இருக்கிறது.