New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூற்றில் போர்நீக்கிய புலவர்கள் முனைவர் வை.சோமசுந்தரம்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
புறநானூற்றில் போர்நீக்கிய புலவர்கள் முனைவர் வை.சோமசுந்தரம்
Permalink  
 


புறநானூற்றில் போர்நீக்கிய புலவர்கள்

 

முனைவர் வை.சோமசுந்தரம்,                               தமிழ்த்துறைத்தலைவர்,          ம.இரா.அரசினர்கலைக்கல்லூரி,மன்னார்குடி – 614 001.

                பழங்காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்த தமிழ்ப் புலவர்கள் மூவேந்தர்களையும்,குறுநில மன்னர்களையும்வள்ளல்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தனர். அப்புலவர்கள் பரிசுகள் பெறுவதோடமையாமல் அரசர்களிடமும் பிறரிடமும் காணப்படுகின்ற குறைகளை எடுத்துக்கூறிஅவர்களைத் திருத்தினர் உற்ற இடத்தில் உதவிபுரிந்தனர் பகை அரசர்களை அறவுரை கூறி நண்பர்களாக்கினர். முற்றுகைகளிலும் படையெடுப்பிலும் ஆண்மையோடு சென்று அறிவுரை கூறினர். அரசியல் நெறி கடந்து செல்பவர்களுக்கு இடித்துரை வழங்கினர்.    
அக்கால அரசர்கள் முதலியோர்புலவர்களை நண்பர்களாகவும்உயிர்த் துணைவர்களாகவும்மதிகூறும் நல்ல அமைச்சர்களாகவும் கொண்டுஅவர்கள் கூறும் பொன்மொழிகளைப் போற்றி வாழ்ந்தார்கள். புலவர்கள்,அரசர்கள் தங்களிடத்து வைத்திருந்த நன்மதிப்பிமைப் பயன்படுத்திக் கொண்டுபோர்களங்களுக்குச் சென்று போர்கள் நிகழாவண்ணம் அறிவுரை கூறிஅவர்களைத் தடுத்தி வந்தனர். அப்புலவர் பெருமக்களின் நற்செயல்களால் மக்கள் பெரிதும் நன்மை அடைந்தனர். போர்களம் சென்றுபோர் நடைபெறா வண்ணம் காத்து மக்கள் நன்மை அடைய வழிவகுத்த புலவர் பெருமக்களின் அறச்செயல்களை இக்கட்டுரையில் அறியலாம்.
ஆலத்தூர் கிழார்
                சோழநாட்டு ஆலந்தூரில் வேளாண் மரபில் பிறந்தவர் ஆலந்தூர் கிழார். நூலறிவுபரந்த உள்ளம்,பரிந்துருகும் அன்பு வாய்த்தவர் கிழார். அரசராயினும் தவறு செய்தவழி இடித்துரைக்கும் ஆற்றல் உடையவர்.         கரிகால் பெருவளத்தானின் மகன் கிள்ளிவளவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தான். இவனுக்கு நெடுமுடிக்கிள்ளிமாவெண்கிள்ளி,வடிவேற்கிள்ளி எனும் பெயர்களும் உண்டு இவன் மனைவி கீர்த்தி. இவர்களுக்குப் பிறந்தவன் உதயகுமரன்.                கிள்ளிவளவன் கல்வியறிவுடையவன்;கவிபாடும் திறனுடையவன்வீரன்பெருங்கொடையாளன்;நெறிபிறழாமல் ஆட்சிபுரிந்த நேர்மையன. செவி அறிவுறுத்தல்களைச் செவிமடுத்து செந்நெறி ஒழுகுபவன். புலவரொடு பழகி தமிழ் இன்பம் நுகர்பவன். புலவர்களைக் காக்கும் பாவலன்.                இறுதிக்காலத்தில் கிள்ளிவளவன்,சேரநாட்டு குளமுற்றம் என்னும் ஊயில் சேரன் ஒருவனோடு போர் புரிந்து இறந்தமையால்குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப்பட்டான்.
கருவூர் முற்றுகை
                கருவூரிலிந்து ஆட்சிபுரிந்து வந்த சேரமன்னன் ஒருவன் மீது பகைமை கொண்டுநால்வகைப் படைகளோடு சேரனை எதிர்த்துகருவூரை முற்றுகை இட்டான் கிள்ளிவளவன்                சேரன் புரிய ஆற்றல் இல்லாதவனாய்,மதிலை அடைத்துக்கொண்டு உள்ளிருந்தான். இச்செய்தி அருள் உள்ளம் கொண்ட ஆலத்தூர் கிழாருக்குத் தெரிந்தது. விரைந்து சென்றுஅடைமதிலுக்குள் அகப்பட்டிருக்கும் குடிமக்கள் படும் துன்பம் கண்டு உள்ளம் வருந்தினார்.
                இணையில்லா ஒருவனோடு எதிர்த்தும்ப் போரிடுதல் முறையற்றதுவருந்ததத்தக்கது என்று உணர்ந்தார் புலவர். கிள்ளி வளவனைக் கண்டு பின்வருமாறு எடுத்துக்கூறினார்.                """"அரசே! நீ கருவூரை முற்றுகையிட்டுருக்கிறாய். பொருனை ஆற்றங்கரையில்,காவல் மரங்கள் நின் வீரர்களால் வெட்டப்படுகின்றனர். நகர் மகளிர் ஆற்றங்கரைச் சோலைகளில் கழற்காய் ஆடுவர்.                அரசன் சேரன்மரங்கள் வெட்டப்படும் ஒசையைக் கேட்டறிந்தும்வெளியே வந்து போர்புரிய அஞ்சி இருக்கும் நிலையில்அவரோடு போர்புரிதல் இழுக்காகும். பிறர் அறியின் உன் செயலைப் பழிப்பர்சிறிதும் புகழ்ந்துரையார்.    இதனை ஏற்று சேரனைக் கொள்ளாது விடினும் விடுக! அன்றிப் போர்புரிந்து கொன்றாலும் கொல்லுக!   இச்செயலால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை நீயே எண்ணிப்பார். யபம் கூறவேண்டியதில்லை"" என்று   மனம்    கொள்ளும்    வண்ணம்    இனிமையாக   எடுத்துரைத்தார். புலவர் பொன்னுரையைக் கேட்ட கிள்ளிவளவன் அப்பொழுதே முற்றுகையை கைவிட்டு உறையூர் சென்றனர்.    எனினும் பின்னாளில் அவன் அவனொடு போரிட்டு கருவூரைக் கைப்பற்றிய செயல் நப்பசலையார் பாடல்களால் அறியமுடிகிறது.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
                உறையூர் தொன்றுதொட்டு சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. உறையூரில் பிறந்த புலவர் மோசியார் முடவராய் இருந்தார் போலும்! முடமோசியார் எனவும் ஊர் பெயரையும் சேர்த்துஉறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என அழைக்கப்பட்டார்.                இவர்   அறிவால்   முடவரில்லை.    சிறந்த  புலவர்.   சான்றோடு   கூடி   வாழ்ந்தவர். எதனையும் அஞ்சாது கூறும் ஆண்மையர்  . உறையூர் முடித்தலைக் கோப்பெருநற்கள்ளி மோசியைக் காணப் பெரிதும் விரும்பினன். இதை அறிந்த புலவர் சென்றனர்.
நுண்ணறிவுடைய மோசிஅரசனுக்கு நாள்தோறும் தமிழ்ச் சுவை அளித்தார். ஏணிச்சேரியில் அமைந்த மாளிகை அரசன்புலவருக்கு வழங்கினான்.   பின்னர் சோழனின் ஒப்புதலோடுமோசியார் கருவூரைத் தலைநகராகக் கொண்டுசேரநாட்டினை ஆண்ட சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றுஅவனுடன் இருந்து வந்தார்.
சோழன் யானை மதம்படல்
                உறையூர் சோழன் முடித்தலை கோப்பெருநற்கிள்ளி யானை மீதேறி உலா வந்தான். அவன் யானை மதம் கொண்டது. சோழனுக்குத் துணையாகத் தொடர்ந்து வந்த படையினரும்வாள் மறவரும் எவ்வளவோ அடக்கியும் யானை அடங்கவில்லை. கருவூர் எல்லைக்குள் யானை நுழையவேவாள் மறவரும் தொடர்ந்தனர்.
சேரன் சீற்றம்
                மோசியாருடன்மதிற்புறத்து வெண்மாடத்தில் தமிழாய்வு செய்து கொண்டிருந்த சேரன் தனது நகரை நோக்கி வரும் யானையையும்அதன்மீதிருந்த சோழனையும்பின்னால் வாளேந்தி வரும் வீரரையும்,பாகரையும் ஒருசேரக் கண்டான். பகையரசன் தன்மீது போர்புரிய வருகிறான் என்றெண்ணி சினம் கொண்டான்;கண்கள் சிவந்தன.
                மோசியாரிடம் யாவன் என விபரம் கேட்டான். """" யானை மீதேறி வருபவன் சோழன் என்பதையும்யானை ஒழுங்கற்ற நிலையில் ஓடி வருவதையும் தன் நுண்ணறிவால் உணர்ந்துதன் பழைய நண்பன் தனியே வருவதையும்அதைக் கண்டு சேரன் பெருஞ்சினம் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். தனித்து வரும் சோழனுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்துவிடக்கூடாது என எண்ணினார். சோழன் பெருமைக்குக் குறைவு ஏற்படாத வகையிலும்சோழனிடத்துச் சேரன் சிறிதும் தீங்கு நினையாதிருக்கும் வகையிலும் புலவர் கூறிய உரைகள் கருதத்தக்கன.   அரசே! யானைமேல் வருகின்றன இவன் உறையூர் அரசன்கோப்பெருநற்கிள்ளி. புலித்தோல் கவசம் பூண்ட மார்பினன். பகைவர் எய்த அம்பு பிளந்தமையால் விழுப்புண்பட்ட மார்பினை மார்பினை உடையவன். இவன் இங்கு உன்னோடு போர்புரிய வரவில்லை. இவனது யானை கூற்றுவனைப் போன்றது. அது மதங்கொண்டிருக்கின்றது. அது கடலின் நடுவே செல்லும் திங்கள் போலவும் போலவும் வாள்மறவர் பின் தொடர்ந்த வர இங்கு ஓடி வருகின்றது.   இது கருதி இவன் மீது சினம் கொள்ளவேண்டா. மதம் கொண்ட யானை மீதேறி வரும் சோழனும் எத்தகைய துன்பமும் இல்லாமல் இனிச் செல்வனாக! என்று தம் புலமைத் தன்மைக்கு ஏற்றவாறு கூறினார்.   புலவர் பொன்னுரையை ஏற்றுசேரவேந்தன் அந்துவஞ்சேரல் சினம் தணிந்தான். ஆதலின் நடக்கவிருந்தபோர் நடவாதொழிந்தது. அருள் உள்ளம் கொண்ட புலவர் மோசியின் உள்ளங்கவரும் நயம்மிகு பேச்சாற்றல்போர் நடைபெறாதிருக்கக் காரணமாயிற்று. நாட்டில் அமைதி நிலவி மக்கள் மகிழ வழி ஏற்பட்டது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: புறநானூற்றில் போர்நீக்கிய புலவர்கள் முனைவர் வை.சோமசுந்தரம்
Permalink  
 


கபிலர்
                பாண்டிநாடு நீதிநெறிப்படி ஆளப்பட்டு வந்த பெருமை உடையதுவையை பாய்ந்து வளங்கொழிக்கும் சிறப்புடையது. திருவாதவூரார் என்னும் மணிவாசகர் பிறந்த புண்ணிய பூமி! அப்பூமியில் முன்பு-அந்தணர் ஒருவர்க்கு கபிலர் பிறந்தார்.  கபிலர் கல்வியில் கருத்தடையார் ;கவிபாடும் ஆற்றலுடையர். கபிலர் சங்கத்துச் சான்றோருள் ஒருவராய்த் திகழ்ந்தார். பரணர் போன்றோர் கபிலரைப் பெரிதும் போற்றினர்.    தமிழ்மொழி ஆரியமொழிக்கு ஒப்பாகுமாஎன்று ஐயம் கொண்டிருந்த ஆரிய அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழறிவு ஊட்டுதற் பொருட்டுகுறிஞ்சிப்பாட்டு’ பாடி மன்னனைத் தெளிவித்தார்.
பாரியின் பெருமை
                கபிலர் காலத்தில் பறம்பு மலையையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் ஆட்சி செய்தவன் வேள் பாரி. பாரிஅறிவுடையவன்நேர்மையுடையவன்வீரம் செறிந்தவன்வள்ளல் எழுவருள் ஒருவன். முல்லைக் கொடி படர்தற்துத் தன் தேரிமைக் கொடுத்தவன். கொடைமடம் படுவதன்றிபடைமடம் படாஅன்.      பாரியைக் காண கபிலர் பெருவிருப்பமுற்றுமதுரை நீங்கி பறம்பு நாட்டை அடைந்தார் கபிலர். பல்லாண்டுகள் பாரியின் பக்கமே இருந்து அவனைப் புகழ்ந்து பாடி வாழ்ந்து வந்தார் கபிலர். இந்நாட்களில் வையாவிக் கோப்பெரும் பேகன்,மலையமான் திருமுடிக்காரி ஆகியோர் நட்பு கபிலருக்குக் கிடைத்தது.
 
கபிலரின் நற்செயல்
                ஒரு சமயம் பேகனைக் காணச் சென்றபோது,கண்ணகி எனும் பெயரை உடைய பேகனின் மனைவி மிக்கத்துயருற்றுபேகனால் பிரிந்திருக்க நேர்ந்தனையால் வாடிய மேனியளாய் இருக்கக்கண்டு கபிலர் பெரிதும் வருந்தினார். அவன் இருக்கும் இடம் சென்று கண்ணகியின் துயரை எடுத்துக் கூறிஅவளைப் பேகன் சேர்வதே தான் வேண்டும் பரிதசில் என எடுத்துரைத்துஇருவரையும் சேர்த்து வைத்தார். பின்னர் கபிலர் திருக்கோவலூருக்குச் சென்று மலையமான் திருமுடிக்காரியைப் புகழ்ந்து பாடி,அவன் அரண்மனையில் தங்கியிருந்து மகிழ்ந்தார். அவனிடம் விடைபெற்று பின் பாரியைச் சென்று சேர்ந்தார்.
பாரியின் கொடைச்சிறப்பு
                பாரியின் கொடைச் சிறப்பு தமிழ் நாடெங்கும் பரவியது. சேர சோழ பாண்டியரினும் மிக்க புகழ் படைத்தவனாக பாரி விளங்கினான். பாரியின் புகழைக்கண்டு மூவேந்தவரும் பொறாமை கொண்டனர். மூவரும் ஒன்று சேர்ந்து நாற்படைகளைத் திரட்டிபறம்பு மலையை முற்றுகையிட்டனர்.
பறம்புமலை
                நீர்நிலம்காடு முதலிய அரண்களால் சூழ்ந்தது பறம்புமலை. திண்மையான மதில்உடையது. மூங்கில் நெல்,பலாவள்ளிக்கிழங்குதேன்பால்தண்ணீர்ச் சுனைகள் உடையது. வளஞ்செறிந்தது.  முற்றுகை பலநாள் நீட்டித்தது. பாரியின் அரணுக்குள் புகுந்து போர் புரிய மூவரும் அஞ்சினர்!    பாரி தன் மகளிரைத் தமக்கு மணம் செய்து கொடுப்பின் போர் புரிவதில்லை என்று சொல்லியனுப்பினர்.   இதைக் கேட்டப் பாரி சினந்து போர்புரிய படை திரட்டினன். போர் நடைபெறின் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பர் என எண்ணி,போர் நடைபெறாமல் தடுக்க கபிலர் முயன்றார்.
                மூவேந்தர்களிடம் சென்று """"முடிமன்னர்களே நீவிர் எத்துணை நாள் முற்றுகையிட்டாலும்பறம்புமலையின் வளம் மக்களைப் பாதுகாக்கும் நீங்கள் எத்துணை யானை குதிரைப் படைகளைக் கொண்டுவரினும் உங்களால் பறம்புமலையைக் கைப்பற்ற முடியாது. முந்நூறி ஊர்களையும் பரிசிலர் பெற்றுவிட்டனர். யானும்பாரியும்,பறம்புமலையும் தாம் எஞ்சியுள்ளன. அவற்றைப் பெறவிரும்பினால் நும் அருமை பாடிக்கொண்டு வர அதற்கேற்ப நீவிர் ஆடிக் கொண்டு வந்து இரந்து கேட்டால் அவன் பறம்பு மலையைக் உங்களுக்குக் கொடுப்பன் என்றார். நீங்கள் பறம்புமலையை உங்களுக்குக் கொடுப்பன் என்றார். நீங்கள் பறம்புமலையைப்  பெறுவதற்கு இதுவே தக்க வழி என்றார். மூவேந்தரும் பறம்புமலை முற்றுகையிலிருந்து பின்வாங்கிச் சென்று பின் மூவரும் ஒன்று கூடி சூழ்ச்சி செய்து பாரியைக் கொல்லும் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றினர். மூவர் பொறாமையாலும் வஞ்சனையாலும் பாரி கொல்லப்பட்டான். பாரியின் உரிமை மகளிர் உயிர் துறந்தனர். பறம்புமலை வெறிச்சோடியது. புலவர்கள் புலம்பினார்கள். கபிலர் கண்ணீர் சிந்தினார்.   பின்னர் கபிலர்பாரியின் மகளிர் இருவரையும் அழைத்துச் சென்றுதிருமுடிக்காரி வழியில் வந்த ஒருவருக்கு மணம் செய்து கொடுத்தார். பின்கபிலர் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார்.     கபிலர்பாரியைச் சூழ்ச்சியினால் வெல்லலாமே ஒழிய போரிட்டு வெல்லமுடியாது என்று அவன் கொடைச் சிறப்பு விளங்கக் கூறிய சொற்கள்பாரி கொல்லப்படுவதற்குக் காரணமாகி விட்டனவோஎன்று கருத இடம் ஏற்படுகிறது.
புல்லாற்றூர் எயிற்றியனார்
                புல்லாற்றூழ் எயிற்றியனார் சங்கபாலப் புலவருள் ஒருவர். புல்லாற்றூரில் பிறந்தவர். இது பாவிரியின் வடகரையில் உள்ள ஊர். இவர் இயற்பெயர் எயிற்றினார் என இவர் வழங்கப்படுகிறார். சிறந்த கல்விகேள்வி அறிவுடையர்கவிபாடும் திறனுடையர்அரசியல் அறிவும் உலகியல் அறிவும் சொல்வன்னையும் ஒருங்கே பெற்றவர்;நன்மங்கையை மணந்து மனையும் நடத்தியவர்பரிசில் வாழ்க்கையினர்.
கோப்பெருஞ்சோழன்
                இவன் இப்புலவர் காலத்தினன்உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். வீரம் கொடை மிக்கவன்செங்கோல் தவறாதவன்கவிபாடும் ஆற்றல் உடையவன். பொத்தியார் முதலிய பெருமக்களையுடைய அவையினன். இவ்வரசனின் மக்கள் இருவர். அவர் கோப்பெருஞ்சோழனோடு மாறுபட்டனர். தந்தையை எதிர்த்துப் போர் புரிந்து அரசைக் கைப்பற்றும் எண்ணம் கொண்டனர். கொடுஞ்சினம் கொண்டுபடைதிரட்டி போர்க்குப் புறப்பட்டான் சோழன்.
புலவர் பொன்னுரை
                சோழனிடம் பரிசு பெறச் சென்றிருந்த புல்லாற்றூர் எயிற்றினார் இது அறிந்தார். சோழனின் மக்கள் வீரம் உடையவர்களாக விளங்கினும் அறிவுடையவர்களாக இல்லை. ஒரே குடியிற் பிறந்த தந்தைக்கும் மக்களுக்குமான இப்போரைத் தடுக்க வேண்டும் என்று எண்ணினார். புதல்வர்க்கு அறிவுரை கூறின் அவர்கள் இப்போதுள்ள நிலையில் அதனை ஏற்கார் என உணர்ந்தார்;ஏற்கனவே தாம் பழகியுள்ள கோப்பெருஞ்சோழன் இதை ஏற்பன் என்று எண்ணினார். ஒருவேளை அரசன் தம் அறிவுரையைக் கேளாது போனால் பெரிய இழுக்குத் தமக்கொன்றுமில்லைகேட்டுப் போரைத் தவிர்த்தால் பெரும்பயன் உண்டாகும் என உணர்ந்தார். பின் அரசரை நோக்கி, """"அரசே! போரில் வென்று பல வெற்றிமாலைகளைப் புனைந்திருக்கின்றாய்! மிகுந்த ஊக்கம் உடையை. வெண்கொற்றக் குடை உடையை! மிக்கப் புகழ் கொண்டு விளங்குகிறாய்"" எனப் புகழ்ந்தார்.   """"உலகில் வீரமுடைய அரசர்கள்புகழ்தரும் நெறிகளில் தம் வீரத்தைச் செலுத்துவர்! உலகம் பழிக்கும் செயல்கள் தம் வீரத்தைக் காட்டார்! இப்போது நீ மேற்கொண்டிருக்கும் செயல் பழிச்செயலே அன்றிபுகழ்ச்செயல் அன்று"" என்று உரைத்தார்.
                மேலும் இப்போது உன்னுடன் போர்புரிய வந்திருப்பவர் நின் நெடுநாள் பகைவரான பாண்டியரோ சேரரோ அல்லர்! நீயும் அவர்கட்குப் பகைவன் அல்லன்.உனக்கு இறுதிக்காலம் வந்துற்ற வழி இவ்வாட்சிப் பொறுப்பு அவர்கட்கே உரியது. இது உமக்கும் தெரியும்.நின்மக்கள் தோற்றபின்நின் அரசியலை நின்மக்களுக்கன்றி யாருக்குக் கொடுப்பாய்?  ஒருவேளை நீ அவர்களிடம் தோற்றால்உன் பாகைவர்கள் உன்னை இகழ்ந்துரைப்பர்! இவ்வாறு கூறுவதால் உன் ஆற்றலில் நான் ஐயம் கொண்டேன் என்று பொருளாகாது. நீ போரை நிறுத்தி நின் ஊர் செல்க! நல்லறங்கள் புரிக! வாழ்க! என நயமாக எடுத்துரைத்தார். அரண்மனை சென்றான்! தன் மக்களால் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி வாழ்க்கையில் வெறுப்புற்று வடக்கிருந்து உயிர்விட்டான்.   எயிற்றியனார்போருக்குப் புறப்பட்ட அரசனிடம் துணிந்து சென்றார்இனிய மொழிகளை எடுத்துக்கூறினார். போரைத் தடுத்தார். இவ்வாறு போரைத் தடுக்கவில்லை யானால் மக்கள் பலர் மடிந்திருப்பர். பல விலங்குகள் அழிந்திருக்கும். சோழர் குலம்தந்தையும் மகனும் போர் புரிந்தனர் என்ற பழியைச் சுமந்திருக்கும். நாட்டில் அமைதி நிலவி இருக்காது.  நமது அருள் உள்ளம் படைத்த புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் செயல் பெரிதும் பாராட்டத்தக்கது.
கோவூர் கிழார் : ஊரும் பேரும்
                """"பொய்யா வளந்தரும் பொன்னி நாடு"" என்று பண்டைநாளில் புலவர் போற்றிய பெருமையினை உடையதாக விளங்கிய சோழநாட்டில் கோவூர்’ என்னும் பெயரில் உள்ள சிற்றூரில் கோவூர் கிழார் பிறந்தார்.               இவருக்குப்    பெற்றோர்    இட்டபெயர் இன்னதென்று விளங்கவில்லை. கோவூர் என்பது ஊர்ப் பெயர்கிழார் என்பது வேளாளரைக் குறிக்கும் மரபுப் பெயர். இவ்விரண்டு பெயர்களையும் சேர்த்து இவரைக் கோவூர் கிழார் என்று வழங்கினர்.
கல்விப் பயிற்சி
                கோவூர் கிழார் இளமையில் நன்கு கற்றார். கற்கவேண்டிய நூல்களைக் கசடறக் கற்றுகவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் நல்லொழுக்கம் உடையராயும்அன்பும் அருளும் கொண்டவராயும் பிறர் துன்பம் சகியாதவராயும்,உலகியலறிவும்அரசியலறிவும்குற்றம்  கண்டவிடத்து நேர்மையாக எடுத்துரைக்கும் ஆண்மை உடையராயும்,விளங்கினார்.
நலங்கிள்ளி 
                சோழன்  நலங்கிள்ளி என்பவன் சோழ நாட்டைக் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். கோவூர் கிழாரின் அறிவுத் திறனை அறிந்துதன் அவைக்களத்திற்கு அழைத்து மகிழ்ந்தான்.
நெடுங்கிள்ளி
                சோழன் நெடுங்கிள்ளி உறையூரிலிருந்து அரசாட்சி செய்து வந்தான். சோழன் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே அரசுரிமை காரணமாக போர்கள் நடைபெற்றன.
நெடுங்கிள்ளி போர்தொடுக்க எண்ணுதல்
                ஒரு சமயம் நெடுங்கிள்ளிநலங்கிள்ளியின் நாட்டைக் கைப்பற்ற எண்ணினான்நால்வகைப் படைகளையும் திரட்டினான்.  இச்செய்தி ஒற்றர் மூலம் நலங்கிள்ளிக்குத் தெரிந்தது. தன் படைகளை அணிவகுத்துப் பகைவன்மீது செலுத்தினான்.   போரில் எதிர்த்து நிற்க முடியாமல்நெடுங்கிள்ளி ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை தொடர்ந்தது. ஆவூர் மக்கள் பெரிதும் துன்புற்றனர். உணவுப் பொருள் குறைந்து,போர்வீரர்களும் பெருந்துன்பம் அடைந்தனர்.
கோவூர் கிழாரின் அறிவுரை
                """"யானைகள் குளிக்கவில்லைஉணவு உண்ணாமல்,பேரிடிபோல் முழங்குகின்றனகுழந்தைகள்பால் இல்லாமல் அழுகின்றன. மங்கையர் மலர் அணியாது வருந்துகின்றனர்;குடிமக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர்நீ மட்டும் கோட்டைக்குள் இனிதாக இருப்பது தகாது. நீ மட்டும் கோட்டைக்குள் இனிதாக இருப்பது தகாது. நீ அறச் சிந்தனை உடையவனானால் கோட்டையை நலங்கிள்ளியிடம் ஒப்படைத்து மக்களைக் காப்பாற்று! அல்லது போரில் வென்று உன் மக்களைக் காப்பாயாக! இவை இரண்டும் இல்லாமல் கோட்டையின் ஒருபுறத்தில் ஒதுங்கியிருப்பது நாணம் தரும் செயலாகும்"" என்றார்.
                அறிவுரை கேட்ட நெடுங்கிள்ளி கோட்டையைத் திறந்துவிட்டுஉறையூருக்குச் சென்று மதிலினை அடைத்துக் கொண்டான். நீண்ட நாட்களாகப் பெருந்துன்பத்தில் வருந்திய ஆவூர் மக்களுக்கு கோவூர் கிழாரால் விடிவு உண்டாயிற்று.
இளந்தத்தரின் துன்பத்தைக் களைதல்
                ஆவூர் கோட்டையைக் கைப்பற்றியிருந்த நலங்கள்ளியிடம் சென்றுஇளந்தத்தர் என்னும் புலவர் பரிசில் பெற்றார். பின்னர் உறையூர் சென்று நெடுங்கிள்ளியைப் பாடிப் பரிசில் பெற சென்றார்.ஆனால் அவர்கள் இருவருக்கும் உள்ளப் பகைமைபுலவர்க்குத் தெரியாது. நெடுங்கிள்ளி இளந்தத்தரை ஒற்றன் எனக் கருதி கொன்று விட துணிந்தான். இச்செய்தி அறிந்து கோவூர் கிழார் உறையூர் விரைந்தார். """"இளந்தத்தர்  ஒற்றர் நன்நெஞ்சினர். பரிசில் வாழ்க்கையினர். பழுமரம் நாடிச் செல்லும் பறவைகள் போன்றுபுரவலர்களை நாடிச் செல்லும் புண்ணியர் புலவர்கள் ஆவர். இப்புலவர்கள் கல்விப் போர் புரிவரே அன்றி உயிர்களை அழிக்கும் போரை விரும்பாதவர்கள். ஆகவே இளந்தத்தரைக் கொல்ல நினைப்பது அறம் ஆகாது என்று அரசன் உள்ளத்தில் பதியுமாறு எடுத்துரைத்தார்.
                ஏற்றுக்கொண்ட நெடுங்கிள்ளிபுலவரைக் கொல்லாமல்நிரம்பப் பரிசில் கொடுத்தனுப்பினான்.
நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிடல்
                ஆவூரிலிருந்துப்      புறப்பட்டு      நலங்கிள்ளி   உறையூரை     முற்றுகை    இட்டான். நெடுங்கிள்ளி ஆவூரைப் போலவேஉறையூரிலும் கோட்டைக்குள்ளிருந்து கதவடைத்துக் கொண்டான்.       இவ்விருவர்க்கும் அடிக்கடி போர் நிகழ்தலையும் அதனால் மக்கள்கடும் அவலங்களையும் அறிந்து கோவூர் கிழார் பெரிதும் வருந்தினார்.      """"உங்கள் இருவருள் ஒருவரும் பனம் பூ மாலையணிந்த சேரர் அல்லர்வேப்பப்பூ மாலையணிந்த பாண்டியர் அல்லர். இருவர் மாலையும் ஆத்திப்பூ மாலைகள்தாம். நீங்கள் இருவரும் சோழர் குடியில் பிறந்தவர்கள். இருவரும் ஒருவரே ஆவர்சோழர் குடியில் பிறந்தவர்கள் எவர் தோற்றாலும் தோற்பது சோழர் குடி! இருவரும் வெற்றி பெற இயலாது. இப்படியிருக்கப் போர்புரிதல் உங்களுக்கு பெருமை அன்று. மாற்றார் மனம் மகிழ இது வழி வகுக்கும். எனவே இனியேனும் நட்புக் கொள்ளுங்கள்"". இவ்வாறு கோவூர் கிழார் கூறிய அறிவுரையை ஏற்றுஉள்ளம் கலந்தனர். மக்கள் உவகை அடைந்தனர். கோவூர் கிழாரின் அற்புதமான செல்வாக்கையும்அரசர்களையும் இடித்துரைக்கும் ஆண்மையினையும் மக்கள் பெரிதும் விரும்பிபாராட்டினர்.
கோவூர்கிழார் மக்களைக் காப்பாற்றுதல்
                நலங்கிள்ளியின்   தம்பி     சோழன்  குளமுற்றத்துத்     துஞ்சிய கிள்ளி வளவன்,
திருக்கோவலூரை ஆண்ட மலையமான் திருமுடிக்காரியின் மீது பகைமை கொண்டிருந்தான்.
                கிள்ளிவளவன் மலையமானின் மக்கள் இருவரையும் யானையின் காலில் இட்டு அழிக்க நினைத்தான். அச்செய்தி அறிந்து கோவூர்கிழார் விரைந்தோடி வந்து,கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூறினர்.
                """"அரசேநீ சிபியின் மரபில் தோன்றியவன்! நீ கொல்லத்  துணிந்த மக்கள்புலவர்களைக் காக்கும் மலையமான் திருமுடிக்காரியின் மக்கள். இம்மக்கள் யானையைக் கண்டு அஞ்சவில்லை! அழவில்லை! இங்கே திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைக் கண்டு மருள்கின்றனர். நீ உன் விருப்பம் போல் செய்க!"" என்றனர். கோவூர் கிழாரின் அறிவுரைகளை ஏற்றுஒன்றுமறியாக குழந்தைகளைக் கொல்லுதல் பாவம்! தவறு என்று உணர்ந்துகிள்ளிவளவன் குழந்தைகளைக் கொல்லாகு விடுத்தான். அவன் மீது கோவூர்கிழார் பல பாடல்கள் பாடினார். மக்கள் அனைவரும் கோவூர் கிழாரைப் பாராட்டினர்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஔவையார்
                ஔவையார் சேரநாட்டில் பிறந்தவர். கல்வி,கேள்விகளிலும் அரசியலியலும் சிறந்து விளங்கியவர். பரிசில் வாழ்க்கையினர் அதியமான் நெடுமான் அஞ்சியின் சமகாலத்தவர் ஔவையார்.
அதியமான்
                சேர நாட்டின் ஒரு பகுதியாகிய தகடூரை ஆட்சி செய்து வந்தான்சேர அரசர்க்கு உறவினன். வள்ளல்கள் எழுவருள் ஒருவன்.   ஔவையார் அதியன் பெருமைகளை அறிந்துதகடூர் சென்றுஅவனைப் பாராட்டிப் பாடினார். அதியன் ஔவையாரின் பாடல்களில் மிகவும் ஈடுபாடு உடையவன். எனவே ஔவையாருக்கு உடனே பரிசில் வழங்காது ஔவை எப்போதும் தன் பக்கம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் காலம் நீட்டித்தான்ஔவையார் அதியனைக் காணவிரும்பாமல்,வாயிற்காப்பாளனை நோக்கிஉன் அரசன் தன் தகுதி அறியானோஎன் தகுதியேனும் அறிய வேண்டாமோ?இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இறந்துபடவில்லை. நான் என் யாழ் முதலிய கருவிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு புறப்படுகின்றேன் என்று கூறிப் புறப்பட்டார்.    தாங்கள் என்பக்கமே எப்போதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரிசில் கொடுக்கக் காலம் தாமதித்தாக அதியமான் கூறஅதனை ஏற்ற ஔவைசினம் தணிந்துஅவன் அவைக்கண் புலவராக அமர்ந்தார்.   அதியன் ஒருநாள் வேட்டையாட சென்றபோது,காட்டில் கிடைத்த நெடுநாள் வாழக்கூடிய அருநெல்லிக்கனியைக் கொண்டு வந்து ஔவையாருக்குக் கொடுத்து உண்ணச் செய்தான்.   ஔவையார் அதியமானுக்குத் தக்க நண்பராககும்அறிவுரை கூறும் அமைச்சராகவும்துணிந்து வினையாற்றும் தூதாராகவும் விளங்கினார்.  அதியமானின் நாடு நாளுக்குநாள் விரிவடைவதைக் கண்டு பொறாமை கொண்டான் தொண்டைமான். தொண்டைமான் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆட்சி செய்தவன்.                அதியமானோடு புரிய படைக்கலங்களையும்படைகளையும் சேர்த்து வந்தான்.  தொண்டைமான் தனக்கு இணையானவன் அல்லன் என்பதலோஅவனோடு போர்புரிதல் தனக்கு இழுக்கு என்று கருதியதாலோஇரு தரப்பிலும் பலர் இறக்க நேரிடும் என்பதாலோவேறு காரணங்களாலோ தொண்டைமானோடு அதியமான் போர்புரிய விரும்பவில்லை.                ஔவையார் தூது செல்ல தகுதியானவர் என அறிந்து தொண்டைமானிடம் தூது செல்ல வேண்டினான் அதியமான். ஔவையார் இணங்கினார்.தொண்டைமானிடம் சென்று ஔவையாரை தொண்டைமான்  வரவேற்று உபசரித்தான். பின்னர் தன்  படைக்கலக் கொட்டிலைக் காட்டினான்.     படைக்கலக் கொட்டிலில் படைக்கலங்கள் மிகுதியாக சேர்த்து வைக்கப்பட்டிருந்தன. தொண்டைமானிடம் பின் வருமாறு எடுத்துரைத்து அறிவு புகட்டினார் ஔவையார்.                """"அரசே! உன்னுடைய படைக்கலங்கள் அனைத்தும் மயிற்பீலி அணிய பெற்று,மாலை சூட்டப்பெற்றுகாம்பு திருத்தப்பட்டுநெய் பூசப்பட்டு அரண்மனையில் அழகாக அடுத்தி வைக்கப்பட்டுள்ளன.    வள்ளண்மை வாய்ந்த அதியமானின் படைக்கலங்கள்,பலமுறை போர்களில் பகைவர்களைக் குத்தியதால் பக்கங்களும் நுனியும் முறிந்துசிரைந்துகொல்லர் உலைக்களத்தில் செப்பனிடுவதற்காகக் கிடக்கின்றன.               உன்னுடைய படைக்கலங்களுக்கும்அதியனின் படைக்கலங்களுக்கும் எத்துணை வேறுபாடுகள் உள்ளன?""என்று தொண்டைமானின் படைக்கலங்களைப் புகழ்வது போல இகழ்ந்தும்அதியனின் படைக்கலங்களை இகழ்வது போல புகழ்ந்தும் கூறியுள்ளார்.   மேலும் அடிக்கும் கோலுக்கு அஞ்சாது எதிர்த்து நிற்கும் பாம்பு போன்ற இளைய வீரர்கள் பலரும்மாக்கிளைகளில் தொங்கும் மத்தளங்களின் மீது காற்றுப்படுவதால் உண்டாகும் ஓசையைப் போர்ப் பறை எனக் கருதி ஆர்ப்பரிக்கும் தலைவன் அதியமானும் எம் நாட்டில் உளர் என்னும் உரைத்தார் ஔவையார்.    ஔவையாரின் நயம் மிக்கச் சொல்லாடலைக் கேட்டுதொண்டைமான் தன் செருக்கொழிந்தான்.அதியமான் - காரி போர்               திருக்கோவலூரை ஆண்டு வந்தவன் மலையமான் திருமுடிக்காரி போர்களில்  வெற்றி பெற விரும்பும் அரசர்கள் திருமுடிக்காரியைத் துணைக்கு அழைப்பர். தனக்கு நிகரானவர் எவருமிலர் என்ற செருக்கு அவனுக்கிருந்தது.   அவன் செருக்கை அடக்க நினைந்த அதியமான் தன் நால்வகைப் படைகளையும் திரட்டிச் சென்று திருக்கோவலூரை முற்றுயையிட்டான். திருமுடிக்காரியும் காரிக்குதிரை மீதேறிகடும் போர் புரிந்தான். அதியன் பெரும் போர் செய்து காரியின் நால்வகைப் படைகளையும் நாசமாக்கினான்.  இப்போரை ஔவை தடுத்ததாகத் தெரியவில்லை. அதற்கான காரணம் தெரிந்திலது. ஆயினும் அப்போரில் பல உயிர்கள் மடிவதனைக் கண்டு மனம் வருந்தினார் ஔவையார். திருமுடிக்காரியையும் அவனது வீரர்களையும் பணிந்து போகுமாறு கூறினார்.    """"அதியன் வலியன். தேர்க்கால் போன்றவன்அவன் வாள்கள் பகைவர் மீது பதிந்து வடிவிழந்துள்ளன. அவன் வேல்கள் குறும்பா அரண்களை அழிந்து அவர்களது நாட்டையும் அழித்தன. களிறுகள் பகைவரின் அரண்மனைகளை அழித்ததால் பூண்கள் கழன்றன. குதிரைகளின் குளன்புகளில் இரத்தக் கறை படிவதாயிற்று. எனவே நீங்கள் அதியனுக்குத் திரை செலுத்திஉங்கள் உயிரைக் காத்துஉங்கள் மனைவியரோடு சேர்ந்து வாழப்பாருங்கள். அதியமானுக்கு ஆற்றமுடியாமல்,காரியின் படைகள் நிலை கலங்கி ஓடினகாரியும் புறமுதுகிட்டான். ஔவை வாழ்த்தனார்.
அஞ்சி - சேரமான் போர்
                வல்வில் ஓரியைசேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையும் மலையமான் திருமுடிக்காரியும் ஒரே நேரத்தில் சேர்ந்து முற்றுகை இட்டனர்.
                வல்வில் ஓரிக்குத் துணைக்காக அஞ்சியும் போரில் ஈடுபட்டான்.
                மலையமான் தம் துணைக்காக சோழர் பாண்டியர்களை அழைத்தான்.
                போர் கடுமையாக நடைபெற்றது.
                போரில் வல்வில் ஓரி இறந்தான்.
                சோழர் பாண்டியர் தோற்றோடினர்.
                அதியனும் தோற்றோடினான்.
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை அதியமான் மீது படையெடுத்துச் சென்று தகடூரை  முற்றுகை இட்டான். அதியன் மதிலுக்குள்ளேயே இருந்துவெளிவந்து எதிர்த்துப் போரிடாமல் இருந்தான்.                ஔவையின் வீர மொழிகளைக் கேட்டு மதிலுக்கு வெளியில் வந்து முன்னிலும் வேகமாக போரில் ஈடுபட்டான். பெருஞ்சேரல் விடுத்த வேல் அதியமானின் மாரிபில் பாய்ந்து ஊடுருவியது. அதியன் தேரில் சாய்ந்து உடனே உயிர்விட்டான். அதியனின் அருங்குணங்களை நினைத்து நினைத்துப் புலம்பினார் ஔவையார்.
                """"அதியமான் மார்பிற்பட்டு ஊடுருவிச் சென்றவேல்,
                பாணர்களின் மண்டைப்பாத்திரத்தில் பாய்ந்கது!
                இரப்போர் கைகளில் தைத்துருவியது!
                சுற்றத்தார் கண்ணின் ஒளியை மழுங்கச் செய்தது!
                நல்லிசைப் புலவர் நாவில் தைத்தது!
                எமக்கு ஆதரவாக இருந்த எம் இறைவன் எங்கு சென்றானோ?
                இனி இவ்வுலகில் பாடுவாரும் இல்லை!
                பாடுபவர்க்கு ஒன்று ஈவாரும் இல்லை?
                இனி அவனை எங்கு காண்பேன்?""
என்று ஔவையார் மிகவும் வருந்தினார்.
                ஔவையார் பொதுவாக போர் ஒன்று நடைபெற்று மக்கள் மாய்வதில் மனம் வைத்திலர். சில நேரங்களில் மானம் பெரியதென்று வாழும் மனிதர்கள் யார் தடுத்தாலும் போரைத் தவிர்ப்பதில்லை.     எக்காரணத்தாலோ மூண்ட போரில் அதியமான் தன் கடமையான போர் புரிதலைத் தவிர்த்துவாளாவிருத்தல் தகாது என எண்ணித்தான் வீர உரை பகன்றார்.                 எல்லாரும் ஒன்று சேர்ந்து பகையுள்ளம் இல்லாமல் வாழவேண்டும் என்பதை ஔவையின் பாடல்கள் உணர்த்துகின்றன.
ஔவையாரின் தாய்மை உள்ளம்!
                உறையூரில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் சோழனுடன்சேரமான் மாரி வெண்கோவும்,பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் ஆகிய மூவேந்தரும் ஒருங்கே அமர்ந்திருந்த காட்சியைக் கண்டு ஔவை பெரிதும் மகிழ்ந்தார்.
                மூவரும் இப்படி ஒற்றுமையாய் இருப்பின் நாட்டில் பல நன்மைகள் உண்டாகும் என்று அவர் கூறியதிலிருந்து அவர் நன்னோக்கத்தை அறியலாம்!
சான்றாதாரங்கள்
ஆலத்தூர் கிழார் பாடல் - புறநானூறு பாடல் எண் 36 (நூல் பக்கம் 102) தொகுதி 1.
உறையூர் ஏணிச்சேரி  முடமோசியார் பாடல் - புறநானூறு பாடல் எண் 36 (நூல் பக்கம் 35) தொகுதி 2.
கபிலர் பாடல் - புறநானூறு பாடல் எண் 110 (நூல் பக்கம்245) தொகுதி 2.
புல்லாற்றூர் எயிற்றியனார் பாடல் - புறநானூறு பாடல் எண் 213 (நூல் பக்கம் 34) தொகுதி 2.
கோவூர் கிழார் பாடல் - புறநானூறு பாடல் எண் 44, 45, 46.
ஔவையார் பாடல் - புறநானூறு பாடல் எண் 95 (நூல் பக்கம் 211) தொகுதி 2.
கட்டுரை ஆக்கத்தில் பயன்பட்ட நூல்கள்
1.             புறநானூறு மூலமும் உரையும் - கழக வெளியீடு.
2.             சி.முத்துக்கிருட்டின நாடார் போர் நீக்கிய புலவர்கள் அல்லயன்ஸ் கம்பெனி,     
                                                                     தபால் பெட்டி எண் - 617,                                                                                மயிலாப்பூர்சென்னை – 4.                                                                                                                                 உரிமைப் பதிப்புஅக்டோபர் 1952 .     
3. தமிழர் சால்பு           -     பேரா.டாக்டர் வித்யானந்தன்,    
     புத்தகப் பண்ணை,             58, டி.பி. கோவில் தெரு திருவல்லிக்கேணி,   
                                                                                 சென்னை – 600 005.                                                 மூன்றாம் பதிப்பு : 

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard