New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூற்று வழி மானுடநேயம் முனைவர் மா.நடராசன்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
புறநானூற்று வழி மானுடநேயம் முனைவர் மா.நடராசன்
Permalink  
 


புறநானூற்று வழி மானுடநேயம்

 

                                                                

புறநானூற்று வழி மானுடநேயம் 

முனைவர் மா.நடராசன்,     தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு),  சி.பி.எம். கல்லூரி,     கோவை.
 
                இலக்கியம் ஏன் படைக்கப்படுகிறதுஇலக்கியத்தில் என்ன இருக்க வேண்டும்என்பதைப் புரிந்து கொண்டால் இலக்கியத்தின் இலக்கு என்ன என்பதையும் இலக்கியத்தின் பயன்பாடுகளையும் புரிந்து கொள்ள இயலும். படைப்பாளியின்
                                """"உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்    
                                    வாக்கினிலே ஒளி உண்டாகும்.   
                                வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்    
                                கவிப் பெருக்கும் மேவு மாயின்       
                            பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்    
                                   விழிபெற்றுப் பதவி கொள்வர்""
அப்படி என்றால் ஏழைகளாகிய மானுடர்கள் குருடர்களாக இருக்கக்கூடாது. அப்படி யாரராவது ஆதிக்கச் சக்தியாகிய பிற மனிதர்களால் நேயமில்லாமல்நேசிக்கப்படாமல் பள்ளத்தில் வீழ்த்தப்படும் மனிதர்களுக்காகப் போராடுவது இலக்கியம். இலக்கியம் அத்தகைய போராட்டத்தை முன் எடுத்துச் சொல்ல வேண்டும்.  தமிழின் சங்க இலக்கியத்தின் புற இலக்கியங்களில் வன்மைவண்மைபோர்,ஆண்மைசார்ந்த வெளிப்பாட்டுக் குணங்கள்’, வருத்தம்,கோபம் போன்றவை இழையாகும். அவற்றின் எதிர்த்திசை,மறுபக்கம் அதாவது உள்பக்கம் ஒருவித நெகிழ்ச்சிஅன்பு,கருணைஇரக்கம் போன்ற குணங்கள் இழையோடும். அதனால் தான் திருவள்ளுவர்,
                                """"அறத்திற்கே அன்பு சார்புஎன்ப அறியார்                                  மறத்திற்கும் அஃதே துணை""
என்று இலக்கணம் கூறுகிறார்.
                புறநானூறு      மூலம்    தமிழ்நாட்டின்,    அரசர்களின் வரலாறுபண்பாடுசமூக அமைப்புசமூகவாழ்க்கைபண்பாடு போன்ற பல கூறுகளைப் புரிந்து கொள்ள முடியும். பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல் என்பது கலித்தொகை. அதுதான் மானுட நேயத்தின் அடையாளம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.                புறநானூறு மட்டுமல்ல சங்க இலக்கியம் அனைத்தும் திணை இலக்கியம். ஒவ்வொரு பாடலுக்கும் திணை வகுக்கப்பட்டுள்ளது. திணையின் உள் கூறுதான் துறை. பாடாண் திணை என்பது (உதாரணத்திற்காக) பாடப்படுகின்ற அரசன் மற்றும் ஆண்மகனுடைய வீரம்கொடைதண்ணளி,புகழ் ஆகியவற்றினைப் பற்றிக் கூறுவது.

ஆட்சி : இயற்கை : மானுடநேயம்
                புறநானூற்றில் முதல் பாடலே சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் பற்றிய பாடல். பாடியவர் முரஞ்சியூர் முடிநாகராயர். இயற்கை மனிதனை மட்டுமல்லஉயிர்களைக் காக்க வேண்டிய அவசியம் என்னமனிதனுக்கு எதிரியாக இயற்கை இயங்கலாமே! இயற்கை தனக்குட்பட்ட அனைத்து வகை உயிர்களையும் அழிவுஆபத்துஉற்பாதங்கள் போன்றவைகளிலிருந்து காப்பாற்றும் தன்மை மேன்மையானது. அந்த மேன்மை அரசனிடம் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனிடம் உள்ளது. இது இயற்கையின் மானுட  நேயம் போன்றது. அரசன் சேரலாதனின் மானுடநேயம் ஆட்சியின் மாண்பு மானுடநேயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது எனக் கூறலாம்.
                                """"மண் திணிந்த நிலனும்                                               நிலன் ஏந்திய விசும்பும்                                             --------------                                                    ஐம்பெரும் பூதத்து இயந்கை போலப்                                       போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்                             வலியும் தெறலும் அளியும் உடையோய்!""
என்ற பாடல்தான் அது.                பாண்டவர்க்கும் நூற்றுவர்க்கும் போர். துரியோதனாதிகளாகிய நூற்றுவர்க்கும் போர் நடந்திருக்கிறது. துரியோதனாதிகள் போரிட்டு மாய்ந்துவிட்டனர். அந்தப் போர்க்களத்தில் மாய்ந்துவிட்ட தலைவனுடைய எஞ்சிய படைவீரர்கட்கும்,தருமன் முதலாகிய ஐவரின் படைவீரர்கட்கும் சேரலாகன் சோறிட்டுக் காப்பற்றினான். பொதுவாக வென்றவர்கள் பக்கம் சார்ந்து தோற்றவர்களை உதாசீனப்படுத்தும் பழக்கத்தைக் கடந்து இருவரையும் நேயத்துடன் பார்த்துப் பசி ஆற்றினான் என்றால் அது மானுட நேயத்தின்அடையாளமல்லவாஅதைத்தான் முரஞ்சியூர் முடிநாகராயர்,
                                """"அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ       
                             நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை 
                              ஈர்ஐம்பதின் மரும் பொருது களத்து ஒழிய  
                               பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்""
என்று பாடுகிறார்.
                பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பற்றிப் பல பாடல்கள் உள்ளன. அத்தனையும் வாகைத்திணைப் பாடல்கள் அவற்றுள் 25ஆம் பாடல் குறிப்பிடத்தக்கது.      சுக்கிரநீதி என்ற நூலின் முதல் அத்தியாயத்தில் 124, 125 ஆம் சுலோகம், """"தீயோலை ஒறுத்தலும்ஈதலும்குடிகளைக் காத்தலும்,இலாசசூயம் முதலிய வேள்விகளை வேட்டலும்அறநெறி பிறழாது பொலுள் ஈட்டலும்பிற அரசர்களைத் திறை தரச் செய்தலும்பகைவரைத் தொலைத்தலும்மேன்மேலும் நிலப்பகுதி கோடலும் ஆகிய இவ்வெட்டும் அரசர்க்குரிய தொழில் ஆகும்"" என்று சொல்கிறது. அடுத்த சுலோகத்தில், """"தம் படையைப் பெருக்காதவரும்பிற வேந்தர்களைத் திறை செலுத்தச் செய்யாதவரும்குடிகளை நன்கு ஓம்பாதவருமாகிய அரசர்கள் பேடியை ஒப்பர்"" என்று கூறப்படுகிறது.
                பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரசனுக்குரிய கடமையை - சுக்கிரநீதி கூறுகின்ற கடமையைச் செய்வதில் பின்வாங்காதவன். ஆனால் அவனைப் பாடுகின்ற கல்லாடனார் என்ற புலவர்,
                                """"முலைபொலி ஆகம் உருப்ப நூறி     
                                  மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்     
                                  ஒள்நுதல் மகளிர் கைம்மை கூர     
                                    அவிர் அறல் கடுக்கும் அம்மென்  
                                     குவைஇருங் கூந்தல் கொய்தல் கண்டே""
என்று பாடுகிறார். இவ்வரிகள் சொல்லுவன என்னதம் கணவர் போரில் நெடுஞ்செழியனின் படையால் கொல்லப்பட்டதை அறிந்து அவர்களின் மனைவிமார்கள்,முலை செழுத்த மார்பம் வருந்துமாறு அடித்துக் கொண்டும் அறிவு மயங்கியும் அளவற்ற அழுகையல் ஆரவாரித்தும் ஒள்ளிய நெற்றியை உடைய பெண்கள்கைம்மையை மேற்கொள்ள வேண்டிநன்றாக விளங்கிக் கொண்டிருக்கும் ஆற்றின் கருமணலைப் போலவும்மெல்லியதும் குவிந்ததுமான கரிய கூந்தலைக் களைந்தார்கள். அதனைக் கண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் உடனே போரை நிறுத்திவிட்டு அருள்செய்தான். இது மானுட நேயத்தின்அடையாளமல்லவா?     சுக்கிர நீதி கூறும் கடமையை விட மானுடநேயமே மிகவும் பாராட்டப்பட வேண்டிய நெடுஞ்செழியன் பின்பற்றினானே!
மானுடநேயத்தின் வெளிப்பாட்டு அடையாளம்
                மானுடநேயம்    இடம்,   சூழல்,    தேவைக்கு   ஏற்ப வெளிப்பட வேண்டும். அன்பாககருணையாகஉதவியாக,எளிமையான சொற்களாக வெளிப்படலாம். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடியுள்ள பாடாண்திணைப்பாடலில் (இயன்மொழித்துறை) புலப்படுத்துகிறார். (புறம் 30). அவரே இருபத்து ஏழாவது பாடலில் கூறும் மானுடநேயம் அரசன் மட்டும் அல்ல அனைத்து மானிடரும் பின்பற்றவேண்டும். அறம்பொருள்,இன்பம் என்பவற்றின் தன்மையைக் குற்றமில்லாது,அறிவுடையோர் அரசனுக்குக் கூறுதல் முதுமொழிக்காஞ்சித்துறை. சோழன் நலங்கிள்ளிக்கு உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கூறிய அறிவுரையில் மானுடநேயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மறைமுகமாகக் கூறுகிறார்உலகில் – மானுடவாழ்வில்- வளர்கின்ற செல்வம் குறைவதையும்குறைந்து போனது வளர்வதையும்பிறந்தது இறப்பதையும்இறந்தது பிறப்பதையும் உண்மை என்று மனிதன் அறிந்து கொள்ள தேய்ந்துவளர்ந்துமறைந்து தோன்றி வளர்ந்து மறைந்து காணப்பெறும் நிலவு உதாரணமாக விளங்குகிறது அல்லவாஇப்பேர்ப்பட்ட வாழ்க்கையில் மானுட நேயத்தோடு வாழ்ந்தால் மட்டுமே புலவரல் பாடப்பெறுவர். அப்படிப்பாடப்பட்டவர் தான் துறக்கம் செல்ல முடியும்! அதாவது புகழுடையாரைத் துறக்க உலகத்து ஊர்தி வந்து அழைத்துச் செல்லும் என்பது பொதுவான நம்பிக்கை. அந்த நம்பிக்கை,
                                """"புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்   
                             வலவன் ஏவா வான ஊர்தி            
                            எய்துப என்பதம் செய்வினை முடித்து""
என்ற வரிகளில் தெரிகிறதே! அப்படி என்றால் புகழ் அடைய ஒருவர் செய்ய வேண்டிய நல்ல செயல் என்னஅதே பாடலில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்வது மிக முக்கியமான அம்சம். அதைத் தான் நாம் மானுட நேயம் எனப் புரிந்துகொள்ள வேண்டும்.
சோழன் நலங்கிள்ளியே!                            
                                      """"திங்கள் புத்தேள் திரிதரு உலகத்து       
                               வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்  
                                வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி        
                                அருள் வல்லை ஆகுமதி அருள் இலர்  
                            கெடாஅத் துப்பின் நின்பகை எதிர்ந்தோரே!""
என்று முதுகண்ணன் சாத்தனார் கூறுகிறார். (திங்களாகிய கடவுள் இயங்கும் இந்த உலகத்தில் ஒரு காரியத்தைச் செய்ய முடியாகவர்களானாலும் செய்யும் வல்லமை வாய்ந்தவர்களானாலும் வறுமையால் வருந்து வந்தோரி னவயிற்றின் பாடறிந்து அவர்களுக்கு அருளுடன் உணவு முதல் அனைத்தும் வழங்க வல்லவனாகுக. பகைவர்கள் எனப்படுபவர்கள் அருளின்றிக் கொடுக்காமல் இருப்பதில் வல்லவராகட்டும்"" என்று அறிவுரை கூறுகிறார்)               சோழன் நலங்கிள்ளி அடக்கம் உடையவன். அதனால் மனித நேயம் அவனுடைய அடக்கத்தின் உள் ஒளிரும் ஒரு பண்பு என்பதை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் புறநானூற்றுப் பாடல் முப்பதில் கூறுகிறார். அவர் கூறும் முறைஒப்புமை அமைப்பில் அமைந்து முரண்பட சொல்லும் பாங்கில் அமைந்துள்ளது. """"சிவந்த சூரியனின் பாதையும்அச்சூரியனின் இயக்கமும் இயக்கம் சூழ்ந்த கிரணக் கதிர்களால் அமைந்த பார் வட்டடும் காற்றின் திசைகளும் எந்தப் பற்றுதலும் இல்லாது தனித்து நிற்கும் ஆகாயமும் ஆகிய இவற்றைச் சென்று அங்கங்கு அளந்து அறிந்தவர்களைப் போல் என்றும் எப்போதும் இவ்வளவின் என்று கூறுவேதறும் உளரே! ஆனால் அவர்கள் அடக்கம் என்பது அறியார். நீயோ அடக்கமாக இருந்து வறிது வந்தவர்களுக்குப் பசிக்காக உணவு வழங்குகிறாய்! கூர்த்த அறிவுக்கெல்லாம் விட மேன்மையான மானுட நேயமே சமுதாயத்தை உய்விக்கும்!.
நன்றி: மானுட நேயத்தினும் மேம்பட்ட வடிவ வெளிப்பாடு
                மானுட நேயம் அல்லாத செயல்களையும்மிக உயர்ந்த மானுட நேயச் செயலையும் குறிக்கும் ஒரு பாடல் புறம் 34. அதைப் பாடியவர் ஆலத்தூர் கிழார் (இயன்மொழித்துறைபாடாண்திணை). ஒரு பாணர் சோழன் குளமுற்றதுதுத் துஞ்சிய கிள்ளிவளவனின் இயல்பைப் பாடுடவது போலப் பாடுகிறார். அந்தப் பாடலில் அறநூல் சொல்லிய அறக்கருத்துக்களைமானுட நேயக்கருத்துகளை,ஜீவ நேயக் கருத்துகளைமானுட நேயக் கருத்து அல்லாத செயல்பாடுகளைச் சொல்லி அந்த எல்லாச் செயல்களை எல்லாம் விடச் சிறந்தது நன்றி மறவாமை என்பதைச் சொல்லும் பாங்கில் மானுட நேயத்தின் மேன்மையை அறிந்து கொள்ளலாம்.
                                """"ஆனமுலை அறுத்த அறனில் லோர்க்கும்  
                               மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்         
                             பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்                 
                          வழுவாய் மருங்கில் கழுவாயும் உளஎன     
                                 நிலம்புடை பெயர்வ தாயினும்ஒருவன்          
                              செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என                               அறம்பாடின்றே""
என்று நன்றி மறவாமை என்பதன் அடிப்படையே மானுட நேயம்தான். வள்ளுவர் """"உதவி வரைத்தன்று  உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து"" என்கிறார். இந்த சால்பைத்தான் மானுட நேயத்தின் அர்த்தம். இந்த நேயம் எப்படி வரும்வெட்டிக்கு வெட்டியாளனாகவோவீணான சிந்தனையாளனாகவோபொறுப்பில்லாகவனாகவோ ஒருவன் இருந்தால் அவனிடம் மானுடநேயம் எங்கே இருக்கும்?  உதவி செய்பவன் சால்புடையவன். மனிதநேயம் உடையவன். ஆனால் யாருக்குச் செய்ய வேண்டுமோ அந்தத்தகுதி உடையவர்க்கே செய்ய வேண்டும். மானுட நேயம் உள்ளவனுக்குத்தான் செய்ய வேண்டும்.(மானுட நேயத்தின் இன்னொரு வடிவம் நன்றி). அறநூல் கூறுவதாக ஆலந்தூர் கிழார் கூறிய ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென’ என்ற அடிகள் வலியுறுத்துகின்றன.  சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமானின் சிறுவர்களை யானைக் காலில் இட்டுத் கொல்ல முனைந்த போது போவூர் கிழார் அருளின் தன்மையையும்சிபிச்சக்கரவர்த்தி புறாவுக்காகத் தசை அறுத்து தராசின் இன்னொரு தட்டத்தில் புறாவின் எடைக்குச் சமமாக வைத்த கருணையையும் எடுத்துக் கூறிச் சினத்தையே ஒழித்தார் அல்லவா?                சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை மோசிகீரனாருக்கு – முரசு கட்டிலில் ஏறிப் படுத்திருந்த போது – கவரி வீசினானே அது மனிதரை மதிப்போடு நேசிப்புக்கும் அடையாளமாக விளங்குகிறதல்லவாஅதை மோசிகீரனாரே தம் பாடலில், """"இந்த அகன்ற பரந்த உலகில் புகழுடையார்க்கு அல்லது பிறர்க்கு உயர்நிலை உலகமாகிய சொர்க்கலோகத்தில் இடம் கிடைக்காது என்று புரிந்து கொண்ட நீ எனக்கு அருளோடு (மனித நேயத்தோடு) குளிர்ச்சியான காற்று வருமாறு கவரி வீசினாயே! அந்த மனித நேயத்துக்கு அடிப்படைக் காரணம் ஏதோ ஒன்று இருக்கிறது"" என்று கூறுகிறார். அதை அடையாளம் (அடிப்படை) என்ன என்று கூறமுற்படும் போது மோசிகீரனாரே, """"இருபாற் படுக்கும் நின்வாள் வாய் ஒழித்ததை                      அதூஉம் சாலும் நல்தமிழ் அமுது அறிதல்""என்று தமிழே மானுடநேயத்தின் வழி என்று பெருமைபடக் கூறுகிறார்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
RE: புறநானூற்று வழி மானுடநேயம் முனைவர் மா.நடராசன்
Permalink  
 


போரில் வெளிப்படும் நேயம்
                பாண்டியன் இலவந்தினகப் பள்ளி துஞ்சிய நன்மாறனைப் பற்றி மதுரை மருதன் இளநாகனார் பாடிய பாடலில் ஒரு அரண் பெறும் வெற்றியைப் பற்றிச் சொல்லும் போது, """"மாண்புடைய அறநெறியை அடிப்படையாகவும் முதலாகவும் கொண்டு பெறும் வெற்றியே வெற்றி ஆகும்"" என்று கூறுகிறார். மாண்புடைய அறநெறி என்பது எது எனப் புரிந்து கொள்ள நெட்டிமையார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய பாடல் வழி காட்டுகிறது.
                                """"ஆவும் ஆன்இயல் பார்ப்பன மாக்களும்   
                               பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்    
                                தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்  
                                பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்      
                                  எம்அம்பு கறவிடுதும்நும் அரண் சேர்மின் என          
                               அறத்து ஆறு நுவலும் பூட்கை......""
வஞ்சினம் கூறலில் வெளிப்படும் மானுடநேயம்               வஞ்சினக் காஞ்சி என்ற துறையில் உள்ள பாடல்கள் மானுட நேயத்தின் வெளிப்பாடுதான். (காஞ்சித்திணையில் எதிர்த்த பகைவரை வெல்வேன்வெல்லேனாயின் இன்ன பிழை செய்தவன் ஆவேன் எனத் தன்னைக் குறித்து மொழிவது வஞ்னிக்காஞ்சி ஆகும்) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடிய புறநானூற்றுப் பாடல் 71 ல் அவனுடைய வஞ்சினம் வெளிப்படுகிறது. அந்த வஞ்சினத்தின் அடிப்படையே மக்கள் மேல்மனிதர்கள் மேல் கெள்ளும் நேயம் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.   பெரிய படை உடைய வேந்தர் பலரும் தம்முள் கூடி என்னுடன் """"போரிடுவோம்"" என்பர். அவர்களைத் துரத்தி அடிப்பேன். அப்படித்துரத்தி அடிக்க முடியவில்லை எனில்,1.             என் மனைவி பெருந்தேவியை விட்டு நீங்குவேனாகுக.2. அறம் விளங்கியுள்ளதும் குடிகளிடம் மாறுபடாத அன்புடையதுமான அவைக்களத்தில்அற முறைக்குப் புறம்பான ஒருவனை வைத்துநீதி நெறி தவறி கொடுங்கோல் ஆட்சி செய்தவனாக நான் ஆவேனாகுக.3.             கண்போன்ற நண்பர்களை இழந்து இனிய பெருமிதம் கூடிய மகிழ்ச்சியான நகைப்பினைத் தவறவிட்டவன் ஆவேனாகுக.என்று வஞ்சினம் மொழிகிறான். அந்த வஞ்சினங்களில் எல்லாம் இழையோடும் கூறு மனித நேயம் தானே?    அதே போல பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புறநானூற்று 72 ஆம் பாடலில் தன்னைச் சிறு சொற்களால் மன உளைச்சலை ஏற்படுத்தியவருக்குத் தோல்வியைத் தருவேன். நான் தோற்றுவிட்டால்,
                                """"என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது   
                                கொடியன் எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பிக்          
                             குடிபழி தூற்றும் கோலோன் ஆகுக""
என்று கூறியதோடுமட்டுமல்லாமல் தன்னைச் சிறப்பித்து மாங்குடி மருதனார் தலைமையிலான புலவர்களும் தன் நாட்டைப் புகழ்ந்தும்தன்னைப் புகழ்ந்தும் பாட வேண்டாம் என்று வஞ்சினம் கூறுகிறான். அதற்குமேல் மக்கள் துன்பம் அடைந்து வறுமை அடைந்து தன்னிடம் வந்து இரந்து கேட்கும் சூழ்நிலையில் அவர்களுக்குத் தரத் தக்க மனநிலையும் செல்வநிலையும் இல்லாமல் நான் சீரழிய வேண்டும் என்று வஞ்சினம் கூறுகிறான். ஆகஇந்த மனநிலையைத் தான் நாம் இன்று மானுடநேயம்’ என்று சொல்கிறோம். அதைச் சில சங்க இலக்கிய ஆய்வாளர்கள்,இனக்குழுச் சமுதாயத்தின் அறக்கோட்பாடு அதுவும் பொதுமை அறக்கோட்பாடு என்று சொல்வார்கள்!
தியாகம் : மானுடநேயம்
                அதியமான் தான் கண்டெடுத்த சாவா மருந்தாகிய நெல்லிகனியை ஔவையார்க்குக் கொடுத்து நீண்ட நாள் சாவா வரம் பெற்று மக்களுக்காகவும்அரசனுக்காகவும்,நாட்டுக்காகவும் பாடும் புலவர் வாழ வேண்டும். தனக்குச் சாகாவலம் என்பதைவிடத் தனக்குப் பிறகும் மக்களையும் அரசனையும் பாடி நல்ல வழிகாட்ட வேண்டும் என்று தன் சாவு பற்றிக் கவலைப்படாமல் புலவர் ஔவையார் நீண்ட நாள் வாழும் வரம் பெறட்டும் என்று வாழ்ந்த அதியமானின் மனம் முழுதும் மானுட நேயமே நிறைந்திருக்கிறது அல்லவாஅதனால் தானே கடிய விடமுண்டு தேவர்களைக் காப்பாற்றி அருள் செய்கின்ற சிவபெருமானின் மன நிலையினை அதியமானுக்கு உவமை கூறுகின்றார் ஔவையார். இதை தியாகம் என்று சொல்வதை விட மானுட நேயம் என்பது இச்சூழலில் மிகப் பொருத்தமாக உள்ளது.             வேள்பாரியைப் பற்றிக் கபிலர் பாடிய பாடல் எல்லாமே அவனுடைய மானுட நேயத்தையும்ஜீவகாருண்யத்தையும்வீரத்தையும் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது. எருக்கம் பூவையே ஒரு பக்தன் சூட்டித் தெய்வங்களை வழிபட்டாலும்,அத்தெய்வங்கள் விரும்பேம் எனக் கூறாது. அது போல அறிவில்லாதவரும் புல்லிய குணத்தவரும் சென்று கேட்டாலும் பாரி அவர்களுக்கும் கொடுத்து மதிழ்வான் என்கிறார் கபிலர். எல்லாவற்றையும் பரிசிலர்க்குக் கொடுத்துவிட்ட பாரி தன்னையும் கொடுக்கும் குணம் உடையவன். அந்தக் கபிலர் பாரி இறந்த பிறது எத்திசைச் செல்லினும் அத்திசை சோறே’ என்று சென்றுவிடலாம்! ஆனால் கபிலர் அப்படிச் செய்யாமல் பாரியின் மகளிருக்குத் திருமணம் செய்து வைக்க அங்கும் இங்கும் அலைகிறார். பாரி கபிலர் மட்டுமல்ல சங்க காலக் கடை ஏழு வள்ளல்களும் மானுட நேயம் மிக்கவர்களாக விளங்கியவர்கள் என்பது அவ்வவர்களின் வாழ்க்கை காட்டுகிறது.
வறுமையிலும் மனிதநேயம்
                புறநானூற்றில் பெருஞ்சித்தரனார் குமணனைப் பற்றிப் பாடிய பாடல் 163 ஆம் பாடல். வறுமையுற்ற அவர் வேறு வழி இல்லாமல் குமணனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று வந்து தன்மனைவியிடம் கொடுத்துத் தன் குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ளுமாறு சொல்கிறார். அப்போதுசுயநலம் கொண்டு தான் குமணனிடமிருந்து பெற்ற பரிசில் பொருள்களைத் தனக்கு மட்டுமே வைத்துக் கொள்ளாலாமல்லவாஆனால் அதை விடுத்து மனைவியிடம்,
                                """"நின் நயத்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்                             பல்மாண் கற்பின் நின்கிளை முதலோர்க்கும்                                 கடும்பின் கடும்பசி தீர யாழ நின்                                        நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்                                  இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாத்                           வல்லாங்கு வாழ்தும் என்னாதுநீயும்                                       எல்லோர்க்கும் கொடுமதி""
என்று கூறுகிறார். இதுபோலச் செய்வதற்கும்அடிப்படையாக இருப்பதுதான் மனிதநேயம். வறுமை,பகைமைஎந்தச் சூழலிலும் தன்னை மட்டுமே மையப்படுத்திக் கொள்ளாமல் பிறரையும் தன்னைப் போல் எண்ணி வாழ்வதற்கு மனித நேயம் தான் அடிப்படையாக இருக்க முடியும்.  கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி பாடிய புறநானூற்றுப்பாடல் 182 இல் இந்த உலகம் நிலை பெற்று இருக்கக் காரணம் யாது என ஆய்கிறான். ஆய்வின் முடிவாகத் """"தமக்கு என முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுநர் உண்மையானே"" இந்த உலகம் நிலைபெற்று இப்படி இருக்கிறது என்று கூறுகிறான். இந்த உலகத்திலே இந்திர லோகத்து அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டுமே சாகாது நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற பேராசை கொண்டும்சுய நலம் கொண்டும் இனிதானது என்று நினைத்துக் கொண்டு தானே தனக்கு உண்டு கொள்ளமாட்டார்கள். பிறர் தீது செய்கிறார் என்று யார் மீதும் கோபம் கொள்ளாதவர்கள்புகழ்க் காரியம் செய்வதற்கு உயிரையும் கொடுப்பர். பழி’ எனின் உலகுடன் கொடுத்தாலும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்பேர்பட்ட மனிதர்கள் நிறைந்த உலகம் இது என்று கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி பேசுகிறான்.
முடிவுரை
                இவ்வாய்வின் மூலம் மானுட நேயம் சங்க இலக்கியங்களில் பயிலப்பட்ட பாங்கினைக் கீழ்வருமாறு காணலாம்.
1.             இயற்கையின் கூறுகள் மானுட நேயத்தின் வெளிப்பாடுகள். மானுடத்தின் பசி ஆற்றும் நேயமே சிறந்தது. அது மானுட நேயத்தின் முதன்மை அம்சம்.2. சுக்கிர நீதி கூறும் கடமையை விட மானுட நேயமே பாராட்டப்பட்டது.புகழுக்கு அடிப்படை மானுட நேயம். புகழ் உடையவரைத்தான் துறக்க உலகத்து ஊர்தி வந்து அழைத்துச் செல்லும். அதுவும் புலவரால் பாடப் பெறும் புகழுடையோரால் அத்தகுதி பெறமுடியும்.மானுட நேயத்தின் அடையாளம் நன்றியோடு வாழ்தல்.5.  பகைமை முடிக்கப் படை எடுத்துச் செல்லும் போதும் கூட அறநெறி பின்பற்றப்பட வேண்டும். அந்த அறநெறிதான் மானுட நேயம் என நெட்டிமையார் கூறுகிறார்.6பகைவரை வெல்ல வஞ்சினம் கூறும் அரசர்களின் கூற்றிலும் செயலிலும் மானுட நேயம் அடிநாதமாக ஒலிக்கிறது.7.    மானுட நேயத்தின் வெளிப்பாட்டுக் கூறுகளில் ஒன்று தன்னலம் பாராமைதியாகம்.8.   வறுமையிலும் கூட அனைவருக்கும் தன்னிடமுள்ளதைப் பகிர்ந்து அளித்து, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ பாங்கான மானுட நேயம் புறநானூற்றுப் பாடல்கள் மூலம் பயிலப்படுகிறது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard