New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!


Guru

Status: Offline
Posts: 24624
Date:
அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
Permalink  
 


அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!

 
நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம்! http://madhavipanthal.blogspot.com/2017/01/Agaramudhala.html
Cc8vh1jUYAAQo6U.jpg
"அஹர" முதல எழுத்தெல்லாம் - "ஆதி பகவான்", முதற்றே "லோகம்"

தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே, Sanskritஇல் தான் தொடங்குறது? பார்த்தேளா? பார்த்தேளா?
*அகர முதல சம்ஸ்கிருதம்!
*ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
அட, தமிழே= சம்ஸ்கிருதம் தான் ஓய்! "ஜமீஷ்" என்பதே "தமீழ்" எ. ஆகியது!:)))

*சம்ஸ்கிருதமே = தமிழில் உள்ள சொற்களுக்கு அடிப்படை!
*தமிழ் உட்பட..இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய்= சம்ஸ்கிருதமே!

*சம்ஸ்கிருதம், தெய்வீகம் நிரம்பிய மொழி; தமிழும் சுமார் தான்; ஆனா சில "மந்த்ர ஸப்தங்கள்" தமிழில் இல்லை! தெய்வாம்சம் இல்லை!

*சம்ஸ்கிருதத்தை, மொழியாய்ப் பார்க்காதீர்கள்; It's a great culture! அதை ஒரு "கலாச்சாரமாய்ப்" பாருங்கள்!
*தமிழை, பற்று கொள்ளாதீர்கள்; It;s just a communication tool; குறுகிய மனசை விரிவு படுத்துங்கள்!

*சம்ஸ்கிருதம், தமிழ்.. இரண்டுமே நம் கண்கள்!அதில், ஒரு கண் மட்டும் சற்றே உசத்தி; ஏனென்றால், அந்தச் சம்ஸ்கிருதக் கண்= பாரதீய தெய்வீகம்!

மேற்கண்டவை, என் சொற்கள் அல்ல!
*சில பிரபலங்கள்,
*பல ஆன்மீக/தெய்வீக ஆட்கள்,
*அக்ஷராதிபதிகள் (I mean.. எழுத்தாளர்கள்)
*பாரதீய தர்ம & ஞான மரபுக் காவலாளிகள்.. சொல்பவையே!

இப்படிச் சொல்வோரின் தனிப்பட்ட சாதிகளை, நாம் ஆராயத் தேவையில்லை!
"சம்ஸ்கிருத பாசம்" மிகுதியாகக் கொண்டவர்கள் யார்? = இது உங்களுக்கே தெரியும்:)

இப்படி, "சம்ஸ்கிருத பாசம்" கொண்டவர்கள் எத்தனை பேருக்கு,
சம்ஸ்கிருதம்= எழுதவும்/ படிக்கவும் தெரியும்? என்பது வேறு கதை!:)

"ஸ்லோகார்த்தம் ஏவ விவரண ஹஸ்தோபி" - இதன் முழுமையான பொருள் என்ன? என்று எனக்கு 5 ஆண்டுகளாய்ச் சொல்ல முடியாம.. இன்னும் முழிச்சிக்கிட்டு இருக்காங்க, பல Sanskrit அபிமானிகள்!:)

Sanskrit தெரியாவிட்டாலும், "அங்கே தான் தங்கள் வேர்!" என்று மனத்து ஆழமாக நம்புகிறவர்கள்!
அதனால், அங்கு அதீத பாசங்கள் இயற்கையே! நேரடியாகவும்/ மறைமுகமாகவும் வெளிப்படுத்துவார்கள்!

இருக்கட்டும்! ஆனால்..
*ஒரு மொழி மேல் பாசம் கொள்வது வேறு!
*அதை.. இன்னொரு மொழியில், கள்ளத்தனம் செய்து கலப்பது வேறு!
*கலந்த பின், மூல மொழியின் பெருமையெல்லாம், தங்களுடையதே! எ. தம்பட்டப் பொய்ம்மை வேறு வேறு!


main-qimg-d24a2a54de622c2d2cd63a50c0acc5

சம்ஸ்கிருதம் = செம்மொழி தான்; மறுப்பே இல்லை!
பாளி/ பிராகிருத மொழியிலிருந்து பலவும் இழுத்துக் கொண்டாலும்,
இன்று, ஒரேயடியா வழக்கு  ஒழிந்து விட்டாலும்,
வெறுமனே பிராமணீய/ மதச் சடங்கு 'பாஷை'யாய் ஒடுங்கி விட்டாலும்,

சம்ஸ்கிருதமும் செம்மொழியே! இதை.. தமிழ் தயங்காது ஒப்புக் கொள்ளும்!

ஆனால், என் மனசு வலி என்னவென்றால்: 
சம்ஸ்கிருதத்தை, பிற மொழிகளிலெல்லாம் ஏற்றி ஏற்றிக் கலப்பும் திணிப்பும் செய்கிறார்களே?
குறிப்பாகத் தமிழில்; இது ஏன்? எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?

ஓவ்வொரு மொழியும் உன்னதமே!
மொழிக்குள்  = "பல தலைமுறை மனிதம்" வாழ்கிறது!
அந்த “மனிதம்” மதிக்கணும்; திணிக்கக் கூடாது!

ஒரு பெரும் தொல்-மொழியின் மரபை, "சிறுமை" செய்து,
//பாத்தீங்களா? உங்க தமிழ் “இலக்கணம்” என்ற சொல்லே = எங்கள் சம்ஸ்கிருத “லக்ஷணம்” தான் டா!//
= ஏன் இந்த மனப்போக்கு???
= எதிர்ப்பது, இத் "திணிப்பை" மட்டுமே!
= எதிர்ப்பது, இத் திணிப்பு செய்வோரை மட்டுமே! எல்லாப் பிராமணர்களையும் அல்ல!

சம்ஸ்கிருதம் தானாய் வளராமல், இன்னொன்றில் ஏறி, 
Parasite போல், மூல மொழிச் சொற்களை அழிப்பதால் மட்டுமே = எதிர்ப்பு!


இதைச் சம்ஸ்கிருதம் என்னும் மொழி செய்யவில்லை; அது நல்ல மொழி தான்!
இதை ஆட்களும்/அதிகார அமைப்புமே செய்கிறார்கள்; அதற்கு மட்டுமே எதிர்ப்பு!

(மற்றபடி, என் அன்புக்கினிய ஆசிரியர்/ திருநின்றவூர் கோயில் பட்டர் ஸ்ரீ. உ.வே. வேங்கட கிருஷ்ணமாச்சாரியார் மூலமாக,
நானே சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும் அறிவேன்.. ஸாம வேத - சாந்தோக்ய உபநிஷதம் வரை!

அன்று, அன்னார் இட்ட வித்து! 
இன்றும் உதவுகிறது, தமிழைச் சிறுமை செய்யும் பிராமணீய அரைகுறைகளை, தடி கொண்டு நொறுக்க!:)
அமர துருஷ்ட ஸ்வ-விக்ரம! சமர ஜூஷ்ட பிரமிக்ரம)


சரி, நாம் முதல் திருக்குறளுக்கு வருவோம்!
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு
தமிழர்களின் தன்மானம்/பெருமிதம் = இக் குறள்! அதில் கை வைக்கலாமா?

1. அகரம்  2. ஆதி 3. பகவன்  & 4. உலகு
= இந் நான்கு சொற்களும் சம்ஸ்கிருதமா?
= சம்ஸ்கிருதம், தமிழுக்கு இட்ட பிக்ஷையா, முதற் குறள்?
= வள்ளுவர், "தமிழ் ஒரு கண்; சம்ஸ்கிருதம் ஒரு கண்" எ. வாழ்ந்த மஹரிஷியா?

இப்படியெல்லாம் (பொய்) சொல்வது யார்?
 = As usual, காஞ்சிப் (போன) பெரியவா:)

*அவரை முன்னிட்டு
*அவரின் அதீத எளிமை, பக்தி, ஞானம் என்ற போர்வையில்..
*அவரைப் போலவே Sanskrit பாசம் கொண்ட, ஆனால் அவர் போல் Sanskrit அறிவிலா அரைகுறைகள்,
*சமயம் கிடைக்கும் போதெல்லாம், 'விஷத்தைக்' கலந்து கொண்டே இருக்கிறார்கள்!

shekhar%2Bprostitute.JPG
amas%2Bprostitute.JPG
 
மேற்கண்டவாள்: தமிழ் + சம்ஸ்கிருதம், இரண்டுமே அறியா அற்ப அறிவிலிகள்!
கீழ்க்கண்டவாள்: சம்ஸ்கிருதம் அறியா விட்டாலும், தமிழ் மட்டுமே கொஞ்சூண்டு பழக்கப்பட்ட எழுத்-தாளர்கள்! 
தமிழன்னையை, சரஸ்வதி மாதா ஆக்கும் Projectஇல் இருப்பவர்கள்!


operation%2BVaiyapuri.JPG
 
இணையத்தில், இந்தச் சிவப்பு முக்கோண ஆசாமிகளிடம், விழிப்பாகவே இருங்கள்!
நட்பு போல் நடித்து, வேளை பார்த்து.. நச்சுப் பாம்பு போல் கொத்தி விடுவார்கள்!:(

இந்தச் சொக்கன், பாரா, பீயே. கிருஷ்ணன் எழுத்-தாளர்களை விட, 
அந்த அற்ப அறிவிலிகள், @amas32 & @n_shekar போன்றவர்கள் தான் 
= மிகு 'விஷம்'! மிக்க 'அபாயம்'!

ஏனென்றால்.. உங்க கூட நட்பு பாராட்டுவது போல பசப்பி, ஆன்மீகம் பேசுவது போல் நடித்து, "மென் முறையில் விஷம்" ஏற்றும் விற்பன்னர்கள்!
எழுத்தாளர் எ. பீடத்தில் உட்காராது, உங்க கூடவே பழகி, உறவாடிக் கெடுக்கும் Social Virus!

*பின்னவர்களை= அடையாளம் கண்டு கொள்ள முடியும்!
*முன்னவர்களை= நட்பு வளையம் எ. மாயப் போர்வை மறைக்கும்!

தமிழையே சிதைத்தாலும்.. உங்கள் நண்பர்கள் என்பதற்காக, நீங்கள் Adjust செய்து கொண்டு போகிறீர்களே?
ஆனா அவர்களோ, 'பகவத் கீதையில் ஜாதி' என்று ஒரு சொல் சொன்னாலே, நட்பு கூட பாராமல், பொங்கி வருகிறார்களே? ஏன்?

இதான் ஒங்க "நட்பா"?__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
RE: அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
Permalink  
 


தமிழையோ/ குறளையோ இப்படில்லாம் சிதைக்காதீங்க! -ன்னு,
உங்களால் அவிங்க கிட்ட சொல்ல முடியலையே? ஏன்?


"இது அவிங்க கருத்து! அவரவர் கருத்து அவர்களுக்கு!" எ. நீங்க Escape ஆக முடியாது!
*அழகில் சிறந்தவர் = ரஜினியா? கமலா? என்றால்.. 
அப்போ அவரவர் கருத்து! ஒவ்வொருவரின் அழகு அளவுகோல் மாறுபடும்!
*ஆனால் "தமிழ்ச் சிதைப்பு" = அவரவர் கருத்து அல்ல! 
அறம் சார்ந்தது! அறத்தின் அளவுகோல் மாறாது!

"ராஜபட்சே கருத்து அவருக்கு! அவர் கருத்து அவர் வரையில் சரி!" என்று
ட்விட்டரில் இந்த Sanskrit கும்பலோடு ஈஷிக் கொள்ளும் ஈழத்து நண்பர்கள் கிட்ட சொல்லுங்களேன் பார்ப்போம்? 
வலிக்கும்ல?:( அதே தானே தமிழ்ச் சிதைப்பும்?

karuna-praba-and-karuna-mara.jpg


என் அன்பு கெழுமிய ஈழம் & தமிழகத் தமிழர்களே,
உங்கள் Self Networking வேண்டி, தமிழை அடகு வைக்காதீர்கள்!

வெறுமனே.. தமிழ்ச் சினிமா இசை, தமிழ் இலக்கியக் கம்பன் என்றெல்லாம் உங்கள் 'சுயம்' பரவ வேண்டி,
அவர்கள் Media பலத்துக்குப் பல் இளித்து, ராஜபட்சே-கர்னல் விநாயகமூர்த்தி முரளிதரன் போல் மாறி விடாதீர்கள்! (கர்னல் கருணா எ. சொல்லை, அதே பேருள்ள நண்பர்கள் நலம் கருதித் தவிர்க்கிறேன்)

யாராயினும்.. தமிழ்ச் சிதைப்பை, பொதுவெளியில் தட்டிக் கேளுங்கள்!

இல்லாவிடின்..உங்களைத் தமிழ் அறம் சூழும்!
பெருஞ்சித்திரனார் அறம்! இட்ட சாபம் முட்டும்!


 

a2.jpg


இனி, பேசுபொருளுக்கு வருவோம்..
அகர முதல = சம்ஸ்கிருதமா? ஆதி பகவன் = சம்ஸ்கிருதமா? 

1. அகரம்  2. ஆதி 3. பகவன்  & 4. உலகு
= தமிழ்ச் சொற்களே என்ற ஆதாரம்/ தரவு தருகிறேன்! இதோ!

 

அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு!
பொருள்:
எல்லா எழுத்துக்கும், அகரம் முதல் ஆதல் போல்
எல்லா உலகுக்கும், இறைவன் முதல் ஆகின்றான்

1. முதல் சொல் = அகரம்
அகரம் என்றாலே சம்ஸ்கிருதம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? 
ம் -ன்னு முடிஞ்சா சம்ஸ்கிருதமா?
ழ-வை= ழகரம் என்போம்! அப்போ ழ= சம்ஸ்கிருதமா?:) 
உங்களுக்கே தெரியும், ழ= தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து என்று!

அ என்னும் “ஓசை”
முதல் எழுத்தாய்= உலகின் பல மொழிகளிலும் உள்ளது!

அ in Tamizh,
A in English, 
Alpha α in Greek, 
ā in Latin,
诶 in Chinese,
అ in Telugu,
ಅ in kannada, 
അ in Malayalam,
অ in Bengali

கிரேக்கம், இலத்தீன், சீன மொழியில் உள்ள "அ"கரம் கூட= சம்ஸ்கிருதமே என்று சொல்வீர்களா என்ன?:)

தாய்மொழி என்று ஒரு மொழியைப் பழகும் நேரம் வரும் போது,
"அ" என்ற ஒலியே..
உலகெங்கும் முன்னிறுத்தப்படுகிறது! இது எதனால்?

அகர ஓசை= பல பண்பாடுகளுக்கும் முதல் ஓசை!
மாந்தவியலின்.. பழங்குடித் தொல்லியல் ஓசை!
"அ" என்ற ஒலி = ஒலிக்காமலேயே ஒலிக்கவல்ல, உலகப் பொது ஒலி!

ஒரு குழந்தை.. நெட்டொலி தான் முதலில் எழுப்பும்!
தா, மா, பா என்ற 'நெடில்'ஒலிகள் தான், வீட்டுக் குழந்தைகள் முதலில் பழகுவதைக் காணலாம்!
'தாத்தா' வேகமாய் வரும்; ஆனா 'அப்பா' மெதுவாய்த் தான் வரும்:)

ஆனா, அந்த நெட்டொலியிலும், ஒளிந்துள்ள குற்றொலியை அறிவீர்களா?
"அ" ஒலி = உயிர் ஒலி
ஒரு குழந்தை வாயைத் திறக்கும் முன்பே, உடலில் தங்கி விடுகிறது உயிர்ப்பு!

voice.jpg


இந்த வரியைப் படிக்கும் போதே, ஏதாச்சும் பேசத் துவங்குங்களேன்! உதடு திறக்க ஆரம்பிங்க, பார்ப்போம்?
நீங்கள் பேசாமலேயே, "அ" என்ற ஒலி முயற்சிக்கு, உங்கள் உதட்டு விரிவு அடங்குவதைக் காணலாம்!

இப்பவே, செஞ்சிப் பாருங்க!
இரண்டு உதடுகளை மட்டும் லேசாக விரிங்க!
விரிக்கும் போதே "அ" என்ற ஒலி அமைப்பு வந்துரும்!

பிறந்த குழந்தையின் முதல் அழுகையோ,
பின்னர் சிரிப்போ,
பின்னர் தத்தக்கா பேச்சோ,
பின்னர் முறையாகத் தாய்மொழி பயிலும் போதோ..
எதுவாயினும், ஒலிக்கும் முன் இதழ் விரிக்க வேண்டும்! அந்த விரிப்பிலேயே "அ" என்ற நுட்ப ஒலி அடங்கிவிடும்!

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து, 
.... பிறப்பொடு விடுவழி, உறழ்ச்சி வாரத்து, 
"அ"கத்து எழு வளி இசை, அரில்தப நாடி 
(தொல்காப்பியம் - எழுத்துப் பிறப்பியல்)

இதனால் தான், உலக மொழிகள் பலவும்.. "அ" எ. அகரம் முன்னிட்டே தொடங்குகின்றன!
மொழியே இல்லாத, ஆதி மனித இனத்தின் ஒலிப்பியல்! = அகரம்!

"அகர முதல", வள்ளுவர் மட்டுமே பாடவில்லை; அவருக்கும் முன்பே தொல்காப்பியர் பாடிச் சென்ற மரபு தான்!
அகரம் முதல்
னகர இறுவாய், முப்பஃது' என்ப; எழுத்து எனப்படுப!

அதைத் தான்.. அகர முதல எழுத்தெல்லாம் என்று தொடங்குகிறார் ஐயன்!
*அகரம் = உலக ஒலிப் பொதுமை!
*அகரம் = சம்ஸ்கிருதம் அல்லவே அல்ல!
*அகரம் = தமிழ் உட்பட, பன்மொழிப்பொதுமை!

திருக்குறள்= "பொது"மறை என்ற நோக்கில் தான் எழுதப்பட்டது!
அதான், “தமிழ்” என்ற சொல் கூட அதில் இல்லை!
முல்லை/குறிஞ்சி, திணைக் கட்டுப்பாடு கூட இல்லாத அகத்திணைக் குறள்!

ஒரு “பொது மறையை”,
= முதல் குறளே சம்ஸ்கிருதம் தான் என்று சொல்லுதல்
= ஐயன் வள்ளுவனின் நோக்கத்துக்கே கேடு செய்யக் கூடியது!

உங்கள் இறைவன் அமரும் மனச்சாட்சியைக் கேட்க! 
வேண்டாம், மட்டமான Sanskrit ஆதிக்கப் புத்தி! தவிர்த்து விடுங்கள்!


 

75529_689083117776608_351600930_n.png

2.  அடுத்த சொல் = ஆதி

ஆதி = “ஆதல்”;
இறைவன் = உலகுக்கு முதல் “ஆகிறான்”; அதுவே “ஆதி”
Ready ஆதல் என்று பேச்சு வழக்கிலும்,
திருமணம் ஆதல், நேரம் ஆதல், வயசு ஆதல்.. இப்படி!

சேர மன்னன்= சேரல் + "ஆதன்"=சேரலாதன்

ஆதன்/ஆதி= தமிழில் மாண்பு உள்ள பெயர்ச்சொற்கள்! பண்பாடு "ஆகி" வரும், இவர்களிடமிருந்து!


மன்னர்கள்: வாழி ஆதன், ஆதன் ஓரி, ஆதன் எழினி
பெண்கள்: ஆட்டனத்தி ஆதிமந்தி
கவிஞர்கள்: மால் ஆதனார், குழல் ஆதனார்
ஆதன் எழினி= சம்ஸ்கிருத ராஜா என்பீர்களா என்ன?:)

சம்ஸ்கிருதத்திலும் "ஆதி" உண்டு என்பதை அறிவேன்!
ஆனால், அது வேறு ஆதி/ आधी
ஆதிலக்ஷ்மி என்று வடமொழியில் சொன்னால், அது “ஆகும்” லக்ஷ்மி அல்ல!:)
அது, ஆதியில், Original லக்ஷ்மி என்ற பொருளில்! 

Sanskrit ஆதி/ आधी = Original, பொண்ணு, துன்பம், சாபம் என்ற பல பொருளில் வருமே?
ஆதி பகவன் = சாபம் குடுக்கும் பகவான் -ன்னு எடுத்துக்கோங்களேன் பார்ப்போம்?:)
சம்ஸ்கிருதம் தான் 'ஸப்த' நுட்பம் பயங்கரமா இருக்குற மொழியாச்சே?:)

ஆக.. தமிழ் ஆதிக்கும், சம்ஸ்கிருத ஆதிக்கும், வேறுபாடு உண்டு!
அதே போல் தான், கந்தன்-ஸ்கந்தன்! அமிழ்தம் - அம்ருதம்!
*அமிழ்தம் = தமிழ்; இனிமை எ. பொருள்!
*அம்ருதம் = சம்ஸ்கிருதம்; அ+மிருத்யு = சாகாமை எ. பொருள்; 
அதைக் குடிச்சா, தேவாள் சாக மாட்டாங்க! ஆனா Sanskrit Scoundrels நீங்க செத்துருவீக!

*கந்தன்= கந்து/ பற்றுக்கோடு (தூண், நடுகல் போன்ற அமைப்பு)
*ஸ்கந்தன்= ஒன்றாக்கப்பட்டவன் (6 முகமும் 1 முகமாய், பொய்ப் புராணம்)

CXc1ISmUkAIMgn7.jpg
195fa830ed3970cdbd93fed8084a7ecf.jpg

மதப் பரவலால், இன்று.. இந்த இரண்டு சொற்களும், ஒரே கடவுளைக் குறிக்கத் துவங்கி விட்டாலும்..
முருகன்= “பழங்குடித்” தமிழ்க் கடவுள்! 
ஸ்கந்தன் = Mixed up, Post Vedic, Brahministic Deity!
கந்தன் – ஸ்கந்தன் = இரு மொழிகளிலும் வெவ்வேறு வேர்ச்சொல்!

சொற்கள் ஒன்று போல் ஒலிப்பதாலேயே.. அங்க இருந்து தான், இங்க வந்துச்சி எ. "புத்தி" காட்டாதீர்கள்!
ஏன்??? இங்கிருந்து அங்கு போகாதா?
இங்கிருந்து தான் அங்க போச்சி! எ. உங்களைப் போலவே அடிச்சி விட எவ்ளோ நேரம் ஆகும்? ச்சீ..

வேர்ச் சொல் அறிந்து பேசுங்கள்; இரு மொழியும் அறிந்து பேசுங்கள்!
__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

ஒரே மாதிரி ஒலிப்பதாலேயே, எல்லா மொழிச் சொல்லும் சம்ஸ்கிருதம் ஆகி விடாது!
Rum  எ. இலத்தீன்/ஆங்கிலச் சொல்லும், “ரம்”மியம் எ. சம்ஸ்கிருதச் சொல்லும் ஒன்றா?
குடிகாரர்களுக்கு Rum  ரம்மியமா இருக்கும் என்பது வேறு கதை:)

ராமன் = 'ரம்யம்' என்பது தானே சம்ஸ்கிருதச் சொல் இலக்கணம்?
ரமந்தே ராமஹ; ரமந்தே யோகினோநந்தே

ரம்மியமான ராமன் 'ரம்' குடிச்சான்னு 'ஷொல்லு'ங்கோ பார்ப்போம்? 
அதை மட்டும் சொல்ல மாட்டேளே?:)
அதே போல் தான் தமிழ் ஆதியும், சம்ஸ்கிருத ஆதியும்!
ஒன்று போல் ஒலித்தாலும்,  இரண்டும் வேறு வேறு!

திருக்குறளின், ஆதி பகவன் = "ஆதி" தமிழ்ச் சொல்லே!
ஆவதால் ஆதி!


 

1769799_orig.jpg
 

3. அடுத்த சொல் = பகவன்

பகவன்= பகவான் அல்ல:)
அது Pagavan எ. ஒலிப்பு! Bhagawan எ. ஒலிப்பு அல்ல!

தமிழ்ச் சொற்களில் வரும் "முதலெழுத்து வல்லினம்" அழுத்தியே ஒலிக்கும்!
*சொல்= Chol; Sol அல்ல
*கொலு= Kolu; Golu அல்ல
*தேவாரம்= Thevaaram; Devaram அல்ல!
*போலவே, பகவன்= Pagavan; Bhagawan அல்ல!

பகவன் = பகு + வ் + அன்
*பகு = பகுதி
*வ் = இடைநிலை
*அன் = விகுதி
பகவு + அன் என்றும் பிரிக்கலாம்; பகவுதல் = பகுத்தல்! தக/ தகவு, பக/ பகவு!

தமிழில், பகவன்= “பகு” (Divide & Distribute) என்ற பொருளில் வரும்!

*ஆதி= உலகத்துக்கு முதல் “ஆகி”றான்

*பகவன்= உலக உயிர்களை, பல விதங்களாய்ப் “பகு”க்கிறான்
Bacteria, செடி, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதன் எ. பல்வேறு பகுத்தல்!

இதே வள்ளுவர், “பக” என்று மற்ற குறட்பாக்களிலும் சொல்கிறாரே?
“பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர்” 
கேளிர்= அதுவும் சம்ஸ்கிருதமா?:)

ஆதிபகவன் = இருபெயரொட்டுப் பண்புத் தொகை / உம்மைத் தொகை!
உயர்திணை உம்மை என்பதால் வலிமிகல் இல்லை!
இகரவீற்று உயர்திணைப் புணர்ச்சி! ஆதியும் பகவனுமான இறைவன்!

முக்கோல் “பகவர்கள்” என்று தமிழில் உண்டு; முக்கோலைக் கையில் ஏந்திய சான்றோர்கள், சமூக அறங்களைப் “பகுத்து” வழங்குபவர்கள்;
அந்தப் பகவர்களை (வெறும் மானிடர்களை) Bhagawan என்பதா? இது ஒங்க பகவானுக்கே அடுக்குமோ?:)

சம்ஸ்கிருத Bhagawan = “பஜ்” என்ற சொல்லில் பிறக்கும்;
பஜ் = (இறைவனுக்கு) வழிபாடு
பக்தி என்பதும்= “பஜ்” என்ற மூலமே!
பஜி= வழிபடு; அதிலிருந்து தான் பஜனையும்!

bhagawan.JPG


இப்போ சொல்லுங்க: தமிழ் Pagavan  & சம்ஸ்கிருத Bhagawan  ஒன்றா?:)
Sanskrit அறியாமலேயே, ஏன் உங்களுக்கு இந்தச் "சொருகு" வேலை? வெட்கமாயில்லை? உடம்பு கூசலை?
'சுயம்' பிடித்த அஹங்கார உங்களுக்கா, Bhagawan மோட்சம் குடுப்பான்?
குடுக்கவே மாட்டான்! உழன்று அழிந்து சாகுங்கள்! ந தர்ம நிஷ்டோஷ்மி!

ஆதிபகவன் = தமிழ்ச் சொல்லே!
*ஆதி= பல்லுயிரும், ஆவதால் ஆதி
*பகவன்= பல்லுயிரும், பகுப்பதால் பகவன் (Pagavan)


 

3d-globe1.gif


4. கடைசிச் சொல் = உலகு

உலகம் என்னும் தமிழ்ச் சொல் = “லோகம்” என்ற உங்கள் வடசொல் அல்ல!:)
சம்ஸ்கிருதம்: “லோக்” = லோக+ஈகம்= லெளகீகம்
ஆனா, தமிழில், “உலகீகம்”-ன்னு ஏதாச்சும் இருக்கா என்ன?:) அப்பறம் எப்படி உலகம் = லோகம்-ன்னு சொல்றீங்க?

தொல்காப்பியக் காலம் தொட்டே, “உலகம்” எ. தமிழ்ச் சொல்!
மாயோன் மேய காடு உறை உலகம்
சேயோன் மேய மை வரை உலகம்

உலகு = உல் + அ + கு
உல்லுதல் = "திரண்டு" உருளல்; உல்லும் தோள் = திரண்ட தோள்
உல்லுவதால்= உலகம்!

போலவே..
*ஞால்வதால் (தொங்குவதால்)= ஞாலம்
*வைப்பதால்= வையம்
*நிலைப்பதால்= நிலம்

Sanskrit லோக் = ஆங்கில Look ஆகாது!
விட்டா ஆங்கிலமே, Sanskrit போட்ட பிச்சைன்னு கூடச் சொல்வேள் போலயே?:)
English Look =  West German Luogen/ Lagud என்ற வேர்ச்சொல்லில் வருவது!
Lagud = Eyes என்று பொருள்படும்!

Periyavaa_Mathappu.jpg

காஞ்சிப் (போன) பெரியவா, அடிச்சி விடுவதெல்லாம் மொழியியல் / வேர்ச் சொல்லாய்வில் நில்லாது;
நீங்க மட்டும் தான் "நம்ம பெரியவா பெரியவா"-ன்னு மெச்சிக்கணும்:)

लोक/ லோக் தான் Look ஆச்சு-ன்னா,
"அந்தக லோகம்" = பார்வையில்லாத லோகம் எப்படி ஓய், Look விடும்?
பொய்யைப் பொருந்த ஷொல்ல மாட்டேளா?:)

இப்படி, பொய்யைப் பொருந்தச் சொல்லாம தான், ஆத்திசூடியில் கை வைச்சி, காஞ்சி பெரியவா அசிங்கப்பட்ட நிகழ்வு = https://goo.gl/41QZQY
தேவையா இது, மஹா ஞானி, மஹா பெரியவாளுக்கு? பாவம்:(

உலகம் = தமிழ்ச் சொல்லே! அது लोक அல்ல!
பல தமிழ் இலக்கியங்களும், “உலகம்”-ன்னே துவங்கும் மரபு.. பலப்பல காலமாய்!
இவை அத்தனையுமே சம்ஸ்கிருதம் ஆயிடுமா? ரொம்பவே ஒங்க பேராசை:)

* ஆதி பகவன் முதற்றே "உலகு" – திருக்குறள்
* நனந்தலை "உலகம்" வளைஇ நேமி – முல்லைப்பாட்டு
* "உலகம்" உவப்ப வலனேர்பு திரிதரும் – திருமுருகாற்றுப்படை
* திங்களைப் போற்றுதும்.. "உலகு" அளித்தலான் – சிலப்பதிகாரம்
* "உலகம்" திரியா ஓங்குயர் விழுச் சீர் – மணிமேகலை

மதம் பிடிப்பதை விட, "உலகம்" பிடிப்பதே உவப்பானது, சங்கத் தமிழுக்கு!
அவரவர் அகம்-புறம் Truthful வாழ்வு தானே தவிர,
Imaginary சொர்க்கமோ/ நரகமோ கண்டு அஞ்சாத தமிழ்!

அதான் "உலகம்" என்ற சொற்-பொருளை முதற்சொல்லாய் வைத்து, இலக்கியம் படைத்தது!
உலகம் = தமிழ்ச் சொல்லே!
Thus Proved, quod erat demonstrandum (Q.E.D)
அகர முதல ஆதி பகவன் உலகு= தமிழ்ச் சொற்களே!


 

CSPqnU7WcAAn1dp.jpg


முடிப்புரை:


இன்றைய தமிழ் மொழியில், “சம்ஸ்கிருதக் கலப்பே” இல்லை-ன்னு நான் சொல்லமாட்டேன்! 30% சொற்கள் Parasite தான் உறிஞ்சித் தின்கிறது:(
அவாளே வாத்திகளாய் உட்கார்ந்து..
தமிழில், Sanskrit கலந்து கலந்து பரப்பிய 'லட்சணம்' இது:(
 
நம்மை அறியாமல் பயன்படுத்தும் Sanskrit சொற்களுக்கு மாற்றாக,
அன்றாட வாழ்வில் எளிய தமிழ்ச் சொற்கள், அகராதி இங்கே= https://goo.gl/cbm2nY

Sanskrit Parasite என்பது பின்னாளில்= மதம்/பண்பாட்டுக் கலப்பு மூலமா, 
அரசியலில்.. அரசர்களை வலைக்குள் வீழ்த்தி நுழைந்தவை!
ஆதித் தமிழ் நிலத்துக்கு... "மதம்" பிடித்த கதை, இங்கே = https://goo.gl/9dKl0L
 
என்ன தான்.. "மதம்" காட்டி, Emotional Blackmail மூலமாக, பிராமணீயம் தமிழகத்தில் கடை விரித்தாலும்,
சங்கத் தமிழ் இலக்கியங்களில், பிராமணீய மதத்துக்கும்/ சம்ஸ்கிருதக் கலப்புக்கும், 
சான்றோர்/ மக்களின் எதிர்ப்பு ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டே உள்ளது!
 
*இன்றைய பொது மக்கள், அது பற்றி நிறைய அறியலீன்னாலும்,
*தங்களின் சமயமே அல்லாத ஒரு மதத்தில், போலியாய்க் கட்டுண்டு கிடந்தாலும்..
*எது தமிழ்ச் சொல்-பொருள்? / எது சம்ஸ்கிருத வார்த்தை-அர்த்தம்? என்றே பிரித்தறிய முடியாதபடி, Parasite ஒட்டப்பட்டு விட்டாலும்..

மெய்த் தமிழைப் படிக்கப் படிக்க = உண்மைகள் தானே வெளி வந்துரும்!

thamizhthaay02.jpg

இக் காலம் = அறிவியல் காலம்!
முன்பு போல், (பிராமணீய) வாத்திகளின் கையில், தமிழ் இல்லை!
பொதுமக்கள் நினைத்தால், உண்மைத் தமிழைத் தோண்டி எடுக்க முடியும்!
Technology Integrated Tamizh!
 
அதைப் பொறுக்க முடியாமல் தான், இணையத்தில் இத்தனை கூத்து!
பொய்யாய் எழுதி வைக்கிறார்கள்!
அதற்கு, "ஸ்வாமி பக்தி" என்ற போர்வை போர்த்துகிறார்கள்!
 
வாத்திகள் கைவிட்டுப் போன தமிழை,
இணைய பிராமணீயம் கைக்கொண்டு, 
திருக்குறள் = Sanskrit என்று 'ஜோடிச்சி', விதம் விதமாய் 'விஷம்' பரப்புகிறது!
 
தரவு கேளுங்கள்! தர மாட்டார்கள்:)
ஆனாலும் தமிழ் இலக்கணம் = 'லக்ஷணம்' எ. இடைவிடாது பரப்பிக் கொண்டே இருப்பார்கள்!
நீங்களோ, நட்பு கருதி கண்டு கொள்ளவே மாட்டீர்கள்:( தமிழை அடகு வைத்துப் போய் விடுவீர்கள்!
இதனால் தான்... இன உணர்வே இல்லாமல், இன ஒற்றுமை இன்றி, ஈழத்தில் ஒரேயடியா முடிஞ்சி போனீங்க:(
 
பெரியார் சமூக இயக்கம்/ தமிழ் இயக்கம்/ அறிவியல் பரவல்களால் தான்
இன்று பழைய ஜாதிச் சிறைகளைக் கடந்து, 
"படிப்பு" எ. கல்விக் கதவுகள் திறந்து, சற்றே மேல்வந்து உள்ளீர்கள்!
 
ஆனால், இன்னும் நீங்கள் அடிமைகளே!
*கல்வி/ பொருளாதாரம் மட்டும் தான் வென்று உள்ளீர்கள்!
*மொழி/ சமயம்/ சமூகம்/ பண்பாடு = பலவற்றிலும், இன்னும் அடிமைகளே!
ஆனால், அடிமைகள் என்று கூட உங்களுக்கே தெரியாது:( அதான் கொடுமை!
 
*உங்கள் தமிழ் மொழியில்= Sanskrit ஆதிக்கம், இன்றும் நிறைய உண்டு!
*உங்கள் சமயத்தில்= பிராமணீய ஆதிக்கம் இன்றும் உண்டு!
*உங்கள் சமூகத்தில்= பகவத்கீதா விதைத்த ஜாதிபேதம் இன்றும் உண்டு!
*உங்கள் பண்பாட்டில்= கல்யாணம் முதல் கருமாதி வரை, தமிழல்லாத பிராமணீய வழக்கமும், Emotional ஆதிக்கமும் இன்றும் உண்டு!
 
இதையெல்லாம், ஒரு பெரியாரால்/ ஒரு வள்ளலாரால் மாற்ற முடியாது!
இஃது, இடைவிடாத தொடர் இயக்கம்!
 
இந்த இயக்கத்தில், உங்கள் தமிழ் வேர்களை, அறியவாச்சும் முயலுங்கள்!
1. ஜாதியை, மனத்தால் துறந்து விடுங்கள்
2. மதம் கடந்து, தமிழை அணுகுங்கள்
3. அறிவியல் தமிழாக.. தரவுகளை நாடுங்கள்!
இதோ, உங்கள் கூர்வேல் ஆயுதம்! பெருஞ்சித்திரனாரின்.. "ஆதி பகவன்" முதலான.. ஆழமான பல திருக்குறள் ஆய்வு= https://goo.gl/jtxAjT
nin-kayil-vel-potri.jpg
பெருசா ஒன்னும் வேணாம்; 
திருக்குறள் = உங்கள் 2500+ ஆண்டு இனத்தின் பெருமிதம்!
குறளின் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்= Sanskrit அல்ல!
இதை உரக்கச் சொல்லுங்கள்! அஃதே போதும்; முதல் படி!

Sanskrit புல்லுருவிகள், மாறப் போவதில்லை!
ஆனால், நீங்கள் மாற முடியும்! "திரள" முடியும்!
இதோ, இந்தக் கயமைக் கீச்சின் மேல் Quote செய்து,
https://twitter.com/amas32/status/817569021767729152

தமிழின் தன்மானப் பெருமிதம்= திருக்குறள்! 
அகர முதல ஆதி பகவன்= Sanskrit Parasite அல்ல! தமிழே! 
இதோ ஆதாரம்= https://goo.gl/ehvVZi
என்று அனைவரும் ஒன்று திரண்டு, நாடும் நகரமும் நன்கறிய, ஊருக்கு உரையுங்கள்! 
அப்போ தான், அவங்களுக்கு அச்சம் வரும்! தமிழுக்கு ஒற்றுமை வரும்!
 
போலியான நட்புக்கு அஞ்சாது, அறம் துணிந்து,
திருக்குறள் = Sanskrit அல்ல! என்றாச்சும் சொல்வீர்களா?
இளமை மிகு தமிழ்ப் பெண்களே/ஆண்களே, 
நீங்கள் உரக்கச் சொல்வீர்களா? சொல்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?
Cc8vh1jUYAAQo6U.jpg
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு!
(உங்கள் உலகு/ உங்கள் தலைமுறை உலகு/ தமிழ் உலகு!)


__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

 Anonymous6:53 AM, November 28, 2017

சிவன் பற்றி 'வேதமும் சைவமும்' என்ற புத்தகதில் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது, சிந்து சமவெளி நாகரீகத்தின் போது பசுபதி யாக அறிமுகமாகிறார், பின்னர் தெற்கே சைவம் பரவுகிறது. ஒரிசா பாலு என்ற ஆராய்ச்சியாளர் 'சிவன் தான் பாண்டிய நாட்டின் முதல் மன்னன்' என்று சொல்கிறார். Tamil Chinthanaiyalar Peravai என்ற Youtube பதிவாளர் சிவன் ஒரு சிறு தெய்வமாக இருந்து பின்னர் பெரிய கடவுள் ஆக்கப்பட்டார் என்று சொல்கிறார். உங்களுடைய கருத்து இதில் என்ன?

'சித்தர்கள் அனைவரும் சிவனடியார்கள், தமிழர்கள், அனைவரும் உருவ வழிபாட்டை எதிர்த்தார்கள்' எல்லாம் சரி. ஆனால் அவர்களுடைய பாடல்கள் எல்லாவற்றிலும் வடமொழி கலப்பு உள்ளனவே? அப்போ அவர்களுடைய உண்மையான பாடல்கள் இவை இல்லையா? அகத்தியர் பேரில் மட்டும் என்னிடம் 200 நூல்கள் உள்ளன. தலை சுற்றுகிறது.

போகர் செய்த நவபாஷாண முருகன் சிலை உண்மையா? பொய்யா? சித்த வைத்தியம், தேரையர் பதார்த்த குண சிந்தாமணி, திருமூலர் திருமந்திரம், இவைகளும் பொய்யா?__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

வாத்தியாரே! வழக்கம் போலவே நார் நாராய்க் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டு விட்டீர்கள் ஐயா! ஆனால் நான்தான் மிகத் தாமதம்.

'ஆதி' தவிர மற்ற மூன்று சொற்களும் தமிழ்தாம் என்பதற்கான சான்றுகளை முன்பே படித்திருக்கிறேன். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, 'ஆதி' பற்றி நீங்கள் தந்திருக்கும் இதே விளக்கம் எனக்கும் பல நாட்களாகத் தோன்றிக் கொண்டே இருந்தது. ஆனால் இவ்வளவு தெளிவாக அதை எழுத்தாக்கும் வல்லமை எனக்கு இல்லை.

'பகவன்' பற்றிய உங்கள் விளக்கம் இதுவரை அறியாதது. ஆனால் இதற்கு வேறு ஒரு விளக்கம் அண்மையில் படித்தேன். அறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதியது. பகம் என்றால் தமிழில் 'ஆறு' என ஒரு பொருள் உண்டு இல்லையா? அதன் அடிப்படையில்தான் 'பகவன்' என்கிற சொல் உருவாகியிருக்கிறது என்கிறார் அவர். அதாவது, "ஆறு நல்ல பொருள் அமைந்தவன் என்பதே பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், கீர்த்தி, அறம் ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவனே பகவான். இந்த ஆறினுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக ஒருவனுக்கு அமைந்துவிடுமானால் அவனே பெருமகன் ஆகிவிடுகிறான். ஆறும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் குடியிருக்குமானால் அவன் கடவுளே ஆகிவிடுகிறான். இப்படி எண்ணியிருக்கிறான் தமிழன் தமிழ்நாட்டுக் கலைஞன். அப்படி தமிழன் கற்பனை பண்ணிய தமிழ்க் கடவுளே முருகன்" என்பது அவர் கூற்று. காண்பதற்கரிய நூல்களிலிருந்தும் இதழ்களிலிருந்தும் தமிழமுதைத் தொடர்ந்து கடைந்தெடுத்து வழங்கி வரும் பசுபதி ஐயா அவர்களின் 'பசுபதிவுகள்' தளத்தில் இதைப் படித்தேன்.

பேசுவதற்கு வாயைத் திறக்கையிலேயே அகரம் தானாக எழும் என்கிற உங்கள் விளக்கம் படித்து விட்டுச் செய்து பார்த்ததும் சிலிர்த்து விட்டது ஐயா! களிகூர்ந்த நன்றி!!!

Reply
Replies
 • ஐசுவரியம் - சமக்கிருதச்சொல்
  பா'ஸ்'கர தொண்டைமான் - பெயரிலேயெ மொழிக்கலப்பு - குழப்பம்
  "அப்படி தமிழன் 'கற்பனை' பண்ணிய தமிழ்க் கடவுளே முருகன்" = கற்பனையா? முருகன் - சேயோன்(நல்விளக்கம் பெற, கரச-வின் முந்தைய தொகுப்புரைகளை காணவும்)__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

 

சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?

naan_nathikan_yenசங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே!
புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை!
= 10 Avtars/ 12 Hands
= இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை!

என்ன ஆதாரம்? என்ன தரவு??

கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது!
அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா:)


“விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் சில பெரியவா, தய்யா-தக்கா -ன்னு குதிச்சாங்களாம்:)
Okies; I am Very Sorry! But.. என்ன தான் குதிச்சாலும்.. விநாயகரைச் சங்கத் தமிழில் கண்டுபுடிக்க முடிஞ்சுதா? இல்லை தானே? அதான் உண்மை:)

Matter is Very Simple!
*இன்றைய நிலை வேறு; தொன்மம் வேறு!
*இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!
இந்தப் புரிதலே போதும்!

உங்களுக்கு இன்னிக்கி புடிச்சிருக்கு என்பதற்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாது!
*உங்க தனிப்பட்ட விநாயக வழிபாட்டை “இழிவு” செஞ்சா, அது தப்பு.
*ஆனா, “சங்கத் தமிழில் விநாயகர் இல்லை” -ன்னு எழுதினா? தப்பு அல்ல; அது தொன்மவியல்!


தமிழ் நிலத்தின் இறைத் தொன்மம் = “நடுகல்”!

nadukal-heroesstone+02-300x300nadu kalதமிழ் முன்னோர் தலைவர்கள், தங்கள் ஆதிகுடிகளைக் காத்த நினைவாக = கல் சமைத்துப் போற்றுவது= நடுகல்! நீத்தார் பெருமை! அதுவே இறைமை!

“கந்து” என்பதும் உண்டு= கல் தூண்!
கந்து/ நடுகல்லில்= குடி காத்தவர்களின் பெயர்/படம் எழுதி வைப்பதும் உண்டு!

முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்)
= இப்படித் தோன்றியவர்கள் தான்!
= ஆதி குடிகளின் இனத் தலைமை!

கந்தன் =  இவன் “ஸ்கந்தன்” அல்ல!
திருமால் =  இவன் “விஷ்ணு” அல்ல!

இவர்கள் ஆதி குடி நாட்டார் தெய்வங்கள். (பின்னாளில் சம்ஸ்கிருதம் கலந்து, புராணக் கதைகள் ஏற்றப்பட்டு, “பெரும்”தெய்வங்களாய் மாறிப் போனது அப்புறம் தான்.
சைவம்/ வைணவம் என்ற பேரே சங்கத் தமிழில் கிடையாது; “மத அமைப்பு” இல்லவேயில்லை)

முல்லை = காட்டின் அடர் “கருமை” = மாயோன்maayon cheyon
குறிஞ்சி = மலை உச்சியின் “சிவப்பு” = சேயோன்

மால் = தங்கள் கண்ணுக்குப், பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, “மால்” என்று ஆதித் தமிழர்கள் வழுத்தினர் – திரு.வி.க ஆய்வுரை!
மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” – ஈழத்து அறிஞர் கா. சிவத்தம்பி!

முருகு = பெண்கள் மேல் இறங்கும் ஒரு “ஆவி”த் தெய்வம் என்பதே சங்க மரபு!
“வேலன் வெறியாடல்” என்கிற நாட்டார் பூசை;
வெறியாடிகளின் மேல் ‘முருகு’ இறங்கல்; ஆட்டுப் பலி, “சூர் மடிதல்” -ன்னு பழங்குடி வழக்கம்.


கந்து = யானையைக் கட்டி வைக்கும் குறுந் தூண்; அதையும் அந்த யானையே தான் சுமந்து செல்லும்!
தன்னைக் கட்டும் ஒன்றையும் தானே சுமந்து செல்லுதல் போல்..
கட்டுப்படாக் கடவுளும், அன்பால் தானே கட்டுப்படல்;  அதுவே, கந்து + அன் = கந்தன்!

வள்ளி = கந்து  (எ) கல்தூணில் படரும் வள்ளிக் கொடி!

valli-amma-at-the-hill-top-temple-velloreஇது முன்னோர்களின் காதல் வாழ்வுக்கு அடையாளம்;
(மறைந்து விட்ட) தலைவன் – தலைவி = நடுகல்லும், அதில் படரும் கொடியுமாய்!
கொடிநிலை, கந்தழி, வள்ளி  (தொல்காப்பியம்)
நினைவு போற்றுதல்! அன்பே தெய்வம்! இயற்கை வாழ்வு! புராணங்கள் இல்லை.

நடுகல்லு வச்ச இடத்தில், ஒரு காதல் காட்சி பார்க்கலாமா? வாங்க..

அவளுக்கு அவன் மேல் “மிக்க” அன்பு! ஆனா, அவனோ அவளைக் “கண்டும் காணாதது” போல் இருக்கான்.
தன் காதலை வாழ்விக்க முடியாம, அவ என்ன பண்ணுறா? = தற்கொலை? இல்லையில்லை!

சூர் நசைத் தலையாய் “நடுகல்” கண்டே
பரிந்தனென் அல்லனோ, இறை இறையானே

nadukalமுன்னோர்களே,  நீங்க தூக்கி வளர்த்த இவனுக்கு..
நீங்களே என் அன்பையும் புரிய வைக்கக் கூடாதா?”
-என்று, நடுகல்லையே அவ வணங்குறா!

தன் முன்னோர் மரபின்  மேல், அவ கொண்ட மதிப்பு!
அந்த மதிப்பால், அவன் மதிப்பில் அவ உசந்துட்டா;
அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டான்; இதழ் இழுத்து உறிஞ்சிக்கிட்டான்; இதுவே மாமூலனாரின் குறுந்தொகைப் பாடல்!

இந்த நடுகல், பார்ப்பதற்கு… இன்றைய “லிங்கம்” போல் இருந்தமையால், சில ஆய்வாளர்கள், லிங்கம் என்று பிழையாக எண்ணி விட்டார்கள்:)p8c
ஆனால், அன்றைய தமிழில் “ல” -ன்னே எழுத்து தொடங்காது; லக்ஷ்மி= இலக்குமி; லிங்கம்= இலிங்கம்!
லிங்கம் = வடமொழி; தமிழில் எழுதும் போது = இலிங்கம்!
அப்புறம் எப்படி நடுகல் = “லிங்கம்” ஆகும்?
தொன்மவியல் ஆய்விலும், ஆய்வாளரின் சைவப் பற்று; “மதம் ஆன பேய்” வந்து ஊடாடினால்? = இதான் கதி:(


தொல்காப்பியர் காட்டும் நடுகல் = “சீர்த்தகு மரபு”

காட்சி, கால்கோள், நீர்ப்படை, “நடுகல்”
சீர்த்தகு “மரபில் பெரும்படை வாழ்த்தல் (தொல். புறத்திணை)

இந்த “மரபு” தான் -> தமிழ் மரபு என்று ஓங்கி வளர்ந்தது!
* முன்னை “மரபின்” முதுமொழி முதல்வ = திருமால்
* அரும்பெறல் “மரபின்” பெரும்பெயர் முருக = முருகன்


கலப்பின் காலம்:

வணிகம்-தொடர்பு காரணமாய், வடமொழி (எ) வடநெறி, தமிழ் நிலத்தின் ஓரமா வந்து குந்திக்கிட்டு இருக்கு! இது தொல்காப்பியருக்கும் தெரியும்! அதான் “வட எழுத்து ஒரீஇ” (ஒதுக்கு) -ன்னு எழுதினாரு!

பண்பாடுகள் சற்று கலக்கத் தான் செய்யும்!
யாரும் தனித்து வாழவியலாது; ஆனால்.. ஆனால்…

அப்படிக் கலக்கும் போது,
* ஒரு சமூகம், தன் “வேர்”களை இழந்து விடக் கூடாது!
* மரியாதையுடன் கூடிய கொடுக்கல்-வாங்கல்; அதுவே நல்லது!

Grantha_ConsLigதமிழில், 5% பிற மொழிச் சொல் Okay;
ஆனால் 35% சம்ஸ்கிருதச் சொல் புகுத்தினால்?

Parasite போல்… ஒட்டி ஒட்டியே, உறிஞ்சி இழுத்து விடும்!

“சொல்/பொருள்” என்ற சொற்களே நாளடைவில் மறைஞ்சிப் போய்..
“வார்த்தை/அர்த்தம்”-ன்னே புழக்கம் ஆயீரும்!

ஆங்கிலமாச்சும் பரவாயில்லை, “பிகர்”-ன்னு எழுதினா, உங்க பாட்டி கூட Figure என்பது இங்கிலீஷ்-ன்னு சொல்லீருவாங்க:)
ஆனா சம்ஸ்கிருதச் சொற்கள்: “வார்த்தை/அர்த்தம்”?
அதுவும் தமிழ் தானோ? எ. நம்மையே நம்ப வைத்துவிடும் தலைமுறைத் தீமை, இந்த Parasite தீமை!

நம்மிடம் இல்லாத சொற்களை, பிற மொழிகளில் இருந்து பெற்றுக் கொளல் தவறில்லை.
ஆனால் இருக்கும் சொல்லை/சொத்தை அழித்து, கடன் வாங்குதல் அறிவீனம் அல்லவா?

தொல்காப்பியர், வடசொற்களும் தமிழில் புழங்க flexibility (எ) நெகிழ்வு குடுத்தாரு.
எடுத்துக்காட்டு:
*கமலம்= தற்சமம் (அப்படியே எழுதுவது)
*பங்கயம்= தற்பவம் (பங்கஜம்: தமிழ் விதிகளுக்கு உட்பட்டு, பங்கயம் என்று மாற்றி எழுதுவது)
இந்த Flexibility பெயர்ச் சொற்களுக்குச் சரிவரும்! ஆனா இதையே எல்லாத்துக்குமே நுழைக்கப் பார்த்தால்?


 

chera chozha pandiyaஅரசர்கள்-அதிகாரம் மூலமா ‘நுழைந்து’ கொண்டது வடநெறி! “மதம்” என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருக்கே? Emotional Attack!

“உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு”

இப்படில்லாம் சொன்னா, எதுக்கு வம்பு.. உண்மையோ/பொய்யோ.. கொடுத்துத் தொலைச்சிருவோம் என்று செய்வீர்கள் தானே?:)

 • பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி = பாவம்
 • பாவத்தை ஈடு கட்டணுமா? = புண்யம்
  ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் = இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது!

* முது குடிப் பெருவழுதி -> பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி ஆனான்!
* பெருநற் கிள்ளி = இராஜசூய யாகம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான்!

pic 6அரச/ அதிகாரப் பரவலே முதலில்;
பின்பே இலக்கிய/ சமூகப் பரவல்!

ஆம்!… அது கடைச்சங்க காலம்!
கடைச்சங்க காலம் = மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, “மதம்” பிடித்தது, ஜாதியும் பிடித்தது:(

முல்லை-குறிஞ்சி என்ற ஆதிகுடி காட்டு வாழ்க்கை!
புலம் பெயர்ந்து..
மருதம் என்ற வயல்வெளி/ ஆற்றோர நாகரிகம் கண்ட மக்கள்.
நாகரிகம் செழிக்கச் செழிக்க, “அந்நிய நெறிகள்” நுழைந்து, தமிழ் நிலத்தை மாற்றிப் போட்டது!


பண்பாட்டுக் கலப்புக்குப் பின்…

அரசனைக் ‘கொண்டது’ போல், ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படிக் ‘கொள்வது’?
= வாழ்க்கையின் துன்பமெல்லாம் விலகி ஓடணுமா?
பூஜா-புனஸ்கார-ஜோதிட-பரிகாரம்
ஜோதிட மயக்கம், நம் அப்பாவி மக்களுக்குப் பெரும் மயக்கம் அல்லவா?

(கண்ணகி கிட்டவும் பரிகாரம் செய்யச் சொல்றாங்க, இழந்த புருசனை அடைய; ஆனா அவள் செய்ய மறுக்குறா)

p26a“Hello தமிழ் மக்களே.. origin-of-murugan-other-names-500x330
உங்க முருகனும், திருமாலும், இங்கேயும் இருக்கா பாருங்கோ! எங்க சம்ஸ்கிருதத்திலும் இருக்கா பாருங்கோ!
வெறுமனே  நடுகல்லா இல்லாம… Magic; ‘ஜாலி’ யான புராணக் கதைகள்”?:)

தங்கள் வேதக் கடவுள்களான.. சோமன், அக்னி, இந்திரன், அஸ்வின், மித்ரன்..
இவர்களையெல்லாம் சற்றே தள்ளிவைத்து, தமிழ்க் கடவுள்களையே -> புதிய புராணக் கடவுள்களாக உருவாக்கம்!
Local பாணியில் பேசிப் பேசியே, Local மக்களைக் கவரும் அன்றைய “பிராமண சுவிசேஷம்”:)

* கந்தன் -> ஸ்கந்தன் ஆனான்!
* திருமால் -> விஷ்ணு ஆனான்!

தமிழ்த் தொன்மங்களின் மேலேயே, பலதும் ஏற்றப்பட்டன.
நம் தொன்மங்களை, நாமே இழக்க வைக்கும் “உத்தி” = புராணம் ஏற்றுதல்!

இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?
பிரபலம் ஆகாத வரை= அவள் எளியோரின் சமயபுரத்தாள்!
ஆனால் கொழிக்கத் துவங்கியவுடன்= அர்ச்சகாள் வந்துட்டா!
“ஆத்தாள்” -> “அம்பாள்” ஆகி, தல “புராணமும்” இப்போ வந்துருச்சு அல்லவா? அதே உத்தி!
நமக்கும்.. ஆத்தாளை விட, அம்பாள் என்று சொல்வதே, Promotion அடைந்த திருப்தி:(

சிறு தெய்வம்= நம் தாழ்வு மனப்பான்மை!
அதையே மந்திரம் சொல்லிக் கொண்டாடினால்? பெருந் தெய்வம்= உயர்வு மனப்பான்மை!

உங்க நடுகல் முருகனும்/திருமாலும், Sanskritலயும் இருக்கா பாருங்கோ!
*முருகன் aka சுப்ரமண்யன்= கம்மி
*திருமால் aka விஷ்ணு= சற்று அதிகம்

CRF_3hXUwAAEhNF“விஷ்ணு”வை அங்கே அதிகம் பரவிட்டாங்க; மும்மூர்த்தியுள் ஒரு மூர்த்தி.
மோகினி + கிளுகிளு கதைகள்!
“ஸ்கந்தனை”, ஏனோ அங்கு அதிகம் பரவலை; மும்மூர்த்தி ஆக்கலை;
ஆனாலும், சுப்ரமண்ய ஸ்வாமி, தேவ ஸேனாபதி என்ற பட்டம்!

*அங்கு அதிகம் பரவாதவன் மட்டுமே = “தமிழ்க் கடவுள்” முருகன் -என்று இன்றைய கண்ணுக்குத் தெரிகிறான்;
*ஆனால், முருகனும் திருமாலும்= இருவருமே தமிழ்த் தொன்மங்கள் -என்று சங்கத் தமிழ்க் கண்ணுக்கு நல்லாவே தெரியும்!

முருகன்= தமிழ்க் கடவுள் என்று சைவப் பெருமைக்கு, இன்று சொல்லிக் கொண்டாலும்..
அந்தத் தமிழ்க் கடவுள் கதை பூராவும்= சம்ஸ்கிருத/புராணக் கதையாய் இருப்பது ஏன்?

(நெத்திக் கண்ணுல தோன்றினாரு, 6 ஒடம்பு ஒன்னாச்சு, கைலாஸ மலையில் பழம் நீ அப்பா, பிரணவ மந்திர உபதேசம்;
வீரபாஹூ Friend ஆனாரு; பாஹூ= சம்ஸ்கிருதம்; தோள் எ. பொருள்! அப்பறம் எப்படித் தமிழ்க் கடவுள்?:)
அசுரர் குடியையே கெடுத்தாரு, அசுரர் “குடிகெடுத்த” ஐயா வருக;  தூங்கும் குழந்தைகள் உட்பட அசுர பட்டணத்தையே தண்ணிக்குள் மூழ்கடிச்சாரு, தேவஸேனா கல்யாணம்)

“தமிழ்க் கடவுள்” முருகன் மேல், ஏன் பூராவும் சம்ஸ்கிருதக் கதைகள்?
இந்த எளிய உண்மை= நம் மக்களுக்கு உறைப்பதே இல்லை!:)  அதான் மதம் என்கிற மாயை!


 __________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

 மேலும் பேசுவோம்!

தங்கள் நடுகல்லும்/தொன்மமும் = “பெருந்தெய்வமாய்” மாறிப் போச்சு;G_L2_178
அப்போ ஆதி குடிகளின் கதி?

= கொல்லிப் பாவை, இசக்கி, சுடலை, சாத்தன்-சாத்தி…
இப்படி, முன்னோர்களை, வேறு வேறு பெயரில், வழிபட்டுக் குறுகிப் போயினர்!
(சாத்தன்-சாத்தி என்கிற தமிழ்ப் பெயர்கள்: சீத்தலைச் சாத்தனார், ஒக்கூர் மா-சாத்தியார்)

மக்களும் “மாற”த் துவங்கியாச்சி..
அட, நம்ம முருகன் தானே, அங்கேயும் சுப்ரமண்ய ஸ்வாமியா இருக்கான்?
கூடவே கிளுகிளு கதைகள்!
கல்யாண + வியாபார பரிகாரங்கள் -ல்லாம் சொல்றாங்களே, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு?

 1.  மன்னன் முதற் கட்ட மாற்றம்! மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி..
 2. அரசியல் அதிகாரம் பெருக்கி, மக்கள் இரண்டாம் கட்ட மாற்றம்!
  அரசியலும், தன்னலமும்.. எதையும் செய்யும்!

முருக-“இயற்கை” வழிபாடு குறுகி -> முருக-“புராண” வழிபாடு பெருகியது!
பொய்யான “கதைகளே” மலிந்து போய்,
இன்று, ஆலயம் தோறும்.. முருகத் தமிழ்க் கடவுள் & திருமால் தமிழ்க் கடவுள் -> சம்ஸ்கிருதக் கடவுள் ஆகி நிற்கும் கோலம்!:(


சமணம் & பெளத்தம்:

IMG_6530இவை கூட வடக்கில் இருந்து வந்த நெறிகள் தான்!
ஆனா அவர்கள் தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்கலை; “புது நெறி”-என்றே அறிமுகம் செய்தார்கள். கந்தனை -> “ஸ்கந்த தீர்த்தங்கரர்” ஆக்கலை!

சம்ஸ்கிருத நெறி மட்டுமே தமிழ் மரபியல் சிதைப்பு செய்தது.

தொன்மத்தின் மேலேயே புராணம் ஏற்றினால்?
= எது இருந்தது? எது வந்தது?
= கண்டுபுடிக்கவே முடியாது! Thatz the Trick! Ir-reversible:(

இயற்கையான முருகனுக்கு = 6 தலை, 12 கை, 18 கண்:)
நாமளும், ஆறு-தலை/தரும் ஆறுதலை -ன்னு “வார்த்தை விளையாட்டு” விளையாடி, மகிழ்வு கொண்டு விடுகிறோம்; வெட்கக்கேடு:(

சென்னைக்கு அருகே திருப்போரூர்;
இது போன்ற பழமையான முருகன் கோட்டங்களில், இன்னிக்கும் நடுகல்லைப் பார்க்கலாம்!
உருவமோ/முகமோ இருக்காது;
ஆனா முகம் போல் எழுதி, அலங்காரத்தில் மறைச்சிருக்கும்!

யாரேனும், “ஹிந்து”  மத அபிமானிகள் வாசிக்க நேர்ந்தால் மன்னித்து விடுங்கள்.
உங்களுக்குப் “பிடிக்கலை” -ன்னு தெரியும். அதுக்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாதே?
வசையாடி/இழிவு செய்தால் கோச்சிக்குங்க; ஆனால் சங்க கால உண்மைக்கெல்லாம் கோச்சிக்காதீக, Please!

மனசாட்சி இருப்பின், நீங்களே யோசிங்களேன்.
* சமண-பெளத்தம் = பாளி மொழி -> அதன் கலப்பு தமிழில் இருக்கா?
* வேத/ பிராமணீய மதம் = சமஸ்கிருதம் -> ஏன் இது மட்டும் அதீதக் கலப்பு?
அவரவர் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்:)


சங்கத் தமிழ் வாசிப்புக்கு = “காலம் அறிதல்” இன்றியமையாதது!

yagasalaகொஞ்சூண்டு புற400 பாட்டில்… பஞ்ச பாண்டவர், இராமன் + இதர தெய்வங்களின்  குறிப்பு கூட வரும் (மிகச் சொற்பமாக)
ஒடனே, “பாத்தீங்களா பாத்தீங்களா? சங்கத் தமிழ்லயே ராமர் இருக்கார் பாருங்கோ; பேஷ் பேஷ்!
தமிழாள் ஸ்ரீ-ராமரையே கும்புட்டாங்க! Bolo, Jai Sri Ram!” -ன்னு எறங்கீறக் கூடாது:)

அப்படீ-ன்னா, “Sati” = தமிழாள் பண்பாடா என்ன?:) மாண்ட கணவனோடு, பெண்ணை நெருப்பிலே தள்ளல்! அதுவும் புற400-இல், ஒரு மூலையில் லேசா வரும்:(Sati-Ka-Yogagni-Mein-Aatmdah
இதுக்குத் தான் காலம் அறிதல் முக்கியம் -ன்னு சொன்னேன்!

* முதல்/இடைச் சங்கத் தமிழில்= இது போன்ற “புராணக் குறிப்பு” வராது!
கடைச் சங்க காலம் = கலப்புக்குப் பின்னரே, புராணம் லேசு மாசாய் வரும்!

இவை = “தொகை” நூல்கள்; தொகுக்கப் பட்டவை! ஒரே காலத்தி்ல் எழுதப் பட்டவை அல்ல!
*முதல்-இடைச் சங்கப் பாட்டும் வரும்
*கடைச் சங்கப் பாட்டும் விரவி வரும்
ஆனா, எதுஎது, எந்தக் காலம்? -ன்னு அகச் சான்று உண்டு!

என் iPod Playlist -இல், பாபநாசம் சிவன், KV Mahadevan, மெல்லிசை மன்னர் MSV, இளையராஜா, Rahman -ன்னு “தொகுத்து” இருக்கு! எல்லோரும் ஒரே காலமா என்ன?:)

MSV போட்ட “Melody”-க்கு, இன்னிக்கி  Remix என்கிற “Tragedy” வேற:(
இதே போல், குறுந்தொகைக்கெல்லாம் “கடவுள் வாழ்த்து” -ன்னு Remix சொருகினார்கள்:(
நினைவில் வையுங்கள்:
எட்டுத் தொகையில்= 8 “கடவுள் வாழ்த்துச்” செய்யுள்களும், சைவ சமயப் பிற் சேர்க்கையே! Remix செய்யப்பட்டதே!


 மக்கள் வாழ்வியல்:

mullai*குறிஞ்சி: வெறியாடும் முருகன் கூத்து!
*முல்லை: காதலர்கள், மாயோன் (திருமால்) மேல் சத்தியம் செஞ்சி, காதலை நிரூபிப்பது!
-இப்படி.. “வாழ்வியல்” (Social Life);

ஆனால், (இல்லாத) நெற்றிக் கண்ணால் எரிப்பது? பரியை நரி ஆக்குவது?
இது மக்கள் வாழ்வியல் அல்ல; புராணம்!
“வடவரின் புதுக் கதையில் வருவது போல்” -ன்னே சங்கப் பாட்டும் இருக்கு; It’s just a “Myth”

காலம் செல்லச் செல்ல..
மதம் (எ) சக்தி வாய்ந்த ஆயுதம், “நிறுவனப்படுத்தல்” ஆகி விட்டது.
ஆனா அப்போதும், தமிழ்ச் சமூகம் = தன்னை “முழுசா” ஒப்புக் குடுத்துடலை, சம்ஸ்கிருத நெறிக்கு!
Kannagi is the Proof!

கலப்புக்குப் பின்னால் எழுந்ததே சிலப்பதிகாரம்!
கோவலன் திருமணமே = “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்”  தான் நடக்குது;
அது காதல் திருமணம் அல்ல!
அரசனுக்கு இயைந்த, வணிகச் சமூகப் பெற்றோர் நடத்தும் திருமணம்!
பெற்றோர் சொற்படி, பார்ப்பனன் நடத்தி வைத்த திருமணமே ஆயினும், அதே கண்ணகி.. சடங்கு செய்ய மறுக்கிறாள்!

பிரிஞ்ச தம்பதிகள் பரிகாரம்:
பிரிந்து விட்டவனை மீண்டும் அடைய, சோம குண்டம்/ சூர்ய குண்டம் = பரிகாரம் பண்ணலாம் வாடீ-ன்னு… அவள் பக்கத்து வீட்டுப் பார்ப்பனத் தோழி தேவந்தி கூப்பிட..
கண்ணகி சொல்லும் தமிழ்நெறிச் சொல் = அது எங்களுக்குப் பீடு (பெருமை) அன்று”!


பண்பாட்டின் பரவல் | Expansion of Civilization:

mullai kurinji marutham neithalமுல்லையின் மாயோன், குறிஞ்சியின் சேயோன்
= முதலில் வைக்கிறார் தொல்காப்பியர்;
= காடு-மலை; முதலில் தோன்றிய நாகரிகம் அல்லவா?

காடு-மலை கடந்து, மக்கள் புலம் பெயர்ந்த போது.. தங்கள் தொன்மங்களையும் உடன் எடுத்தே சென்றார்கள்! மருதம்= வேளாண்மை; நெய்தல்= கடலாண்மை கண்டனர்.

 • மருத நிலம் = வேந்தன் (அரசன்); மாறிக் கொண்டே இருப்பவன்
 • நெய்தல் நிலம் = வருணன்/ வருள்நன் (கடல்காற்று); மாறிக் கொண்டே இருப்பது

முருகன்/திருமால் போல்.. வேந்தனோ/காற்றோ = ஒரு நிலைத்த அடையாளம் அல்ல!
அதனால் மக்கள் வாழ்வியலில், வேந்தன்/வருணன் அதிகம் பேசப்படலை.
துறை/கூத்து -ன்னு வேந்தன்/வருணனுக்கு.. “வாழ்வியலாய்” ஒன்னுமேயில்ல; வெறும் நில அடையாளம் மட்டுமே!

paalai kotravai 1கொற்றவை (எ) பழையோள் = இவளும் தமிழ்க் கடவுளே!
= நடுகல்லாய் உதித்து, உருப் பெற்றவள்!
= பாலை நில எயினர்கள்/ வழிப்பறிக் கள்வர்களின் தெய்வம்!

“நாகரிகம் குறைந்த” கள்வர் என்பதால்.. இவள் பேரிலே மிகுந்த இலக்கியப் பாடல்கள் இல்லீன்னாலும்..
திணை அளவில் இல்லாது, துறை அளவிலாச்சும் (கொற்றவை நிலை) குறித்து வைக்கிறார் தொல்காப்பியத்தில்! தொல்காப்பியர் பேதம் இல்லாதவர்; எவரையும் ஒதுக்காமல், “உள்ளது உள்ளபடி”.. தமிழாய்க் குறித்து வைக்கின்றார்!

மாயோன் மேய மன் பெரும் சிறப்பின்,
தாவா விழுப் புகழ் = “பூவை” நிலையும்

-ன்னு தொல்காப்பியர் சொல்லும் அந்தப் பூ-வை என்பதே => பூ-சை ஆனது;

இப்படி, இயற்கை வழிபாடாய் இருந்த ஒன்று..indra-small
* நாள் செல்லச் செல்ல, “புதிய புராணம்”= இலக்கியத்திலும் பரவத் துவங்கியாச்சு
* வேந்தன்= இந்திர பகவான், வருள்நன்= வருண பகவான் -ன்னு ஆக்கியாச்சு!


நினைவில் வைங்க; வேந்தன் = இந்திரன் அல்ல!
வேந்தன்= மருத நில மன்னவர்கள்; (மாறிக் கொண்டே இருப்பவர்கள்)
அதே போல் வருணன் = (வருள்நன்)
வருள்= சூழ்தல்; நிலத்தை வருளும் (சூழும்) கடல்!

முது “வருண்”, முந்து கிளவாச் செறிவு  -ன்னு திருக்குறளே இருக்கு!
வருள்/வருண்= சூழ்தல்!
தமிழ் “வருணம்” வேற; சம்ஸ்கிருத “வர்ணம்” வேற;
வருள்வதால்= வருணன்; வருளும் கடற்காற்று= நெய்தல் நிலத் தெய்வம்!

ஆனால், வேந்தன் = இந்திரன் -ன்னு உரைகளில் மாற்றி எழுதினார்கள்:(
இந்திர விழா என்று மன்னனும் தோற்றுவித்தான்!
வேதக் கடவுள்கள் சோமன் /இந்திரனை, Local மதப் பரப்பலுக்காக “சற்றே ஒதுக்கி வைத்து”, ஹோமம்/ யக்ஞங்களில் மட்டும் இந்திரனை விட்டுவிடாது பிடித்துக் கொண்டனர்! ஓம் இந்திராயா ஸ்வாஹா.. யாகத்தில், இந்திரனுக்கு அவிர்ப்பாகம்!

உலகெங்கும், ஆஸ்திகம்= கடவுள் உண்டு; நாஸ்திகம்= கடவுள் இல்லை!
ஆனால் சம்ஸ்கிருத/ பிராமணீயக் கொள்கையில் மட்டுமே, ஆஸ்திகம்= வேதம் உண்டு; நாஸ்திகம்= வேதம் இல்லை!(கர்ம மீமாம்சை= இறை மறுத்து, ஆனால் வேதம் மறுக்காதவர்கள்)

வேதம் மறுத்த புத்தரும், மகாவீரரும்.. இவர்களைப் பொருத்த மட்டில்= நாத்திகர்கள்:)
நீ, இறைவனை மறுத்தாலும் பரவாயில்லை; எங்கள் வேதத்துக்கு உடன்பட்டால்= நீயும் ஆத்திகனே!
என்னே இறை அன்பு! கடவுளை விடவும், தங்கள் கட்டமைப்புக்கு உருவாக்கிக் கொண்ட வேதமே பெரிது!:)
அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே! -என்று பாடும் சங்கத் தமிழ் மாண்பு எங்கே? இச் சுயநலம் எங்கே?


Grammar = The Breeding Ground

தமிழ் இலக்கணமே= இவர்கள் முதலில் கை வைப்பது; Cut at the root!
(உங்க இலக்கணத்தைத் திரித்து, உங்களுக்கே வழங்கும் பண்டிதாள்)

* ஒரு புடை உருவகம் = “ஏக தேச” உருவகம் -ன்னு.. இன்னிக்கி  பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்திலெல்லாம் நிலைச்சிருச்சே!
Why should Tamizh Grammar have “ek” & “ekam” inside it?
Does Sanskrit Grammar has, Tamizh words “Or & Eer (ஓர் & ஈர்)” in it? உங்க மனச்சாட்சியைக் கேளுங்கள்!

இது வடமொழி (எ) ஒரு தனிப்பட்ட மொழியின் குற்றமல்ல; அது நல்ல மொழி தான்.
அந்த மொழியில் ஊறிய, ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் குற்றமே இது!

tolkaDoes Sanskrit have Tamizh sounds ழ & ற?
But Tamizh “MUST” have sanskrit sounds ஸ்ரீ & ஷ!
இது தானே “நியாயம்“?:) புகுத்து, தமிழில் கிரந்த எழுத்தை!

தமிழின் சிறப்பான  ழ-க்குப் பதிலா, ட -போட்டுக்கலாம் ன்னு, தமிழ் இலக்கணத்தையே மாத்தி எழுதப் பார்த்தாங்க;
தமிழ்க் கடவுள் முருகனே வந்து  “ழ”-க்குப் பதில் “ட” போடச் சொன்னான்-னு சைவக் கதையும் புனையப்பட்டது:) கச்சியப்ப சிவாச்சாரியின் கந்த புராணம்!

ஆனால், எத்துணை “சம்ஸ்கிருத/மதம்” மிகுந்தாலும், இன்று வரை… தமிழ் மொழி இயல் = தொல்காப்பிய அடிப்படையே! அதை எவரும் அசைக்க முடியலை!
காலங் காலமாய்ப் பின்னிப் பிணைந்து… இன்று வரை..
தொல்காப்பியமே காத்துக் குடுக்கும்= நம் தமிழ்த் தொன்மம்!

<end>

Further Read/Ref:
1) ஞா.தேவநேயப் பாவாணர் – தமிழர் சமயம்
2) தொ. பரமசிவன் – பண்பாட்டு அசைவுகள்
3) மா. இராசமாணிக்கனார் – கால ஆராய்ச்சி (ebook)

சரி, பெரீய்ய்ய முன்னுரை போதும்:) வாங்க, இன்றைய பாட்டுக்குச் சுருக்கமாய்ச் செல்வோம்:)
தமிழர்களுக்கு, நைவேத்யம் செய்யும் கடவுள்கள் இல்லை!  என்ற தெளிவான எதிர்ப்புக் குரல்; சங்கத் தமிழிலேயே!
இது போல் பலப்பல அகச் சான்றுகள்!


நூல்: புறநானூறு (335)
கவிஞர்: மாங்குடிக் கிழார்
திணை: வாகை
துறை: மூதின் முல்லை

அடல் அரும் துப்பின்…..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;

துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!


காபி உறிஞ்சல்:

mullaiஅடல் அருந் துப்பின்…..
குரவே, தளவே, குருந்தே, முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;

வெல்ல முடியாத வலிமை (துப்பு) கொண்ட இனம்;
* குரவம், தளவம் (பிச்சிப்பூ), குருந்து, முல்லை
= இந்த நான்குமே இவங்க குடிப் பூக்கள்;

கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;

வரகு, தினை, கொள்ளு, அவரை = இந்த நான்குமே இவங்க குடி உணவு;

parai_performing_childrenதுடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;

துடியன், பாணன், கடம்பன், பறையன் = இந்த நான்குமே இவங்க குடி முறைகள்;

அரசின் உயர் அலுவலர் = பறையன்; But today itz an offensive word;
எள்ளல் பேர்வழிகள் கும்மி அடித்து அடித்து, “பறையன்” என்னும் செந்தமிழ்ச் சொல், தீச் சொல்லாய் மாறி விட்டது:(

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி,
ஒளிறு ஏந்து மருப்பின், களிறு எறிந்து வீழ்ந்தெனக்

பகைவர்களின் முன்னே அஞ்சாது நிற்பர்;
ஒளி வீசும் தந்தம் உள்ள யானை = அதையே சாய்க்க வல்லவர்;
அப்படிச் சாய்க்கும் போது, தாமும் சாய்ந்து இறந்தார்கள்  = குடி காத்த முன்னோர்;

nadu kal - kuda koothuகல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!

அவங்க நினைவாக இட்ட = நடுகல்!
அந்த நடுகல்லைத் தான் போற்றுவோமே அன்றி…
நெல்-அரிசியைக் கொட்டி (உகுத்து),
“நைவேத்யம்” செய்யும் கடவுள், எங்களுக்கு இல்லை! =நெல் உகுத்துப் பரவும் “கடவுளும் இலவே”!

(Strong Views recorded by maangudi kizhaar, during the “culture change” of his times)

இது போன்ற அகச் சான்று= பல சங்கத் தமிழ்ப் பாடல்கள்!
மன்னன் மாறினாலும்.. தான் மாறாது,
தமிழ்க் கொள்கைக்கு எதிரான.. சம்ஸ்கிருத/ வேத/ பிராமணீயம்; அவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்த்தமைக்குச் “சாட்சி”யாய்.. ஆங்காங்கு நிற்கும் சங்கத் தமிழ் வாழ்க!

dosa 106/365__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard