New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே


Guru

Status: Offline
Posts: 24799
Date:
சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே
Permalink  
 


சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே

 
01.jpg

02.jpg

03.jpg

17.jpg

18.jpg

19.jpg

19a.jpg

20.jpg

20a.jpg

21.jpg

21a.jpg

22.jpg

22a.jpg

23.jpg

23a.jpg

24.jpg

24a.jpg

25.jpg

25a.jpg

26.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

சங்க இலக்கியமும் நால்வேதமும்!

By DIN  |   Published on : 17th March 2019 03:28 AM  |   

 
NAL_VEDAM

நான்கு வேதங்கள் என்பது வடமொழி மற்றும் ஆரியர்களுக்கு உரியது என்றும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொடர்பற்றது என்றும் கருத்து உள்ளது. நமது இலக்கியம் மற்றும் புராணங்களை உற்று நோக்கும்பொழுது அதில் காணக்கிடைக்கும் தகவல்கள் வேறுவிதமான கருத்தை முன் வைக்கின்றன.
 தமிழகத்தின் வரலாறு, பண்பாடு இவற்றை எடுத்தியம்பும் சங்க நூல்களில் பதிற்றுப்பத்தும், புறநானூறும் காட்டும் தகவல்கள் ஒரு தெளிவான பார்வையை ஏற்படுத்துகின்றன. பதிற்றுப்பத்து இலக்கியம் தமிழகத்தின் எல்லைகள் பற்றிக்கூறும்பொழுது, "வடதிசை எல்லாம் இமயம் ஆக' என்கிறது. அதாவது, வடக்கு எல்லை இமயம் என்று கூறுகிறது. இப்படிக் கூறும் அதே நூல் குமரிக்கண்டம் பற்றிப் பேசும்பொழுதும் அதன் வடக்கு எல்லை இமயம் (ஆரியர் துவன்றியபேரிசை இமயம் / தென்னம்குமரியோடு ஆயிடை) என்றே குறிப்பிடுகிறது.
 இப்படி இமயத்தைத் தன்னுள் கொண்டதாகவே சங்க இலக்கியம் தமிழகத்தைக் காட்டுகிறது. இமயம் நமக்கானதாய் இருந்தபொழுது வேதம் மட்டும் வேறுபட்டது என்று எப்படி ஒதுக்க முடியும்? தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தின் முதல் செய்யுளில், "அறங்கரை நாவின் நான்மறை முற்றிய / அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து' என்று நான்மறை பற்றிய செய்தி உள்ளது.
 அதாவது, நான்கு வேதங்களை முற்றிலும் அறிந்த அறம் பேசும் அதங்கோடு என்னும் ஊரில் இருக்கும் ஆசிரியரிடம் முதலில் தொல்காப்பியத்தைப் படித்துக்காட்டிய பின்னரே அதனை அரங்கேற்றம் செய்ததாகக் கூறுகிறது தொல்காப்பியம்.
 பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரில் வீரர்களுக்குச் சோறிட்டான் என்று புறநானூறு (புறம்-2 ) கூறுகிறது.
 தமிழ் இலக்கியத்தின் வேர்கள், நம் நிலப்பரப்பு, வரலாற்றின் காலம் இவற்றின் ஆழ அகலங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், பத்ம புராணம், மச்சபுராணம் போன்ற புராணங்கள் நமது பழந்தமிழ் ஊர்களைக் களமாகக்கொண்டு அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம், மதுரை முதலிய ஊர்கள் பற்றி அவை பேசுகின்றன. இவற்றை எல்லாம் மனத்தில் கொண்டு பார்த்தால் வேதம் பற்றிய கருத்திலும் சற்று தெளிவு ஏற்படும்.
 புறநானூற்றின் பல பாடல்களில் வேதம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இறைவணக்கச் செய்யுளான முதல் பாடலிலேயே சிவபெருமானைப் பற்றிப் பாடுகிறார் பெருந்தேவனார். சிவனை வர்ணிக்கும் புலவர், வேதம் உணர்ந்த அந்தணர்கள் சிவனைத் தொழுது ஏத்துவார்கள் (கறைமிடறுஅணியலும்அணிந்தன்று; அக்கறை / மறைநவில்அந்தணர் நுவலவும்படுமே) என்கின்றார்.
 பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்தும் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர், "பால் புளித்தாலும், பகல் இருளானாலும் நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் நீ வாழ்வாயாக' என்கிறார்.
 "பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
 நாஅல் வேத நெறிதிரியினும்
 திரியாச் சுற்றமொடு முழுது சேண்விளங்கி' (புறம்-2)
 இப்பாடலில் நால்வேதம் பற்றி மட்டும் புலவர் குறிப்புத் தரவில்லை. அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீ பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
 "நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
 சிறுதலை நவ்விப்பெருங்கண் மாப்பிணை,
 அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
 முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு
 இமயமும்,பொதியமும் போன்றே' (புறம்-2 )
 "இமயம், பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி-மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள்-சுற்றம் நிலை கொள்வதாகுக' என்கிறார். இப்பாடல் வேதம் மற்றும் ஆரியக் கருத்துகள் பற்றிய தெளிவைத் தருகிறது. இதேபோல,
 "... ... ... நால் வேதத்து
 அருஞ் சீர்த்திப்பெருங் கண்ணுறை
 நெய்ம் மலி ஆவுதிபொங்கப், பன்மாண்
 வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி' (புறம் -15)
 "முழவினை முழக்கிக்கொண்டு உன்னைப் பாடும் பாடினியின் வஞ்சிப் பாடலை விரும்பும் வலிமை மிக்கவனே! நால்வேத சிறப்புமிக்க, குழியில் நெய் ஊற்றி, ஆவி பொங்க வேள்வி செய்து, தூண் நட்டுச் சிறப்பெய்தியவனே' எனக் கபிலர், சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை வாழ்த்துகின்றார். இங்கும் வேதம் மற்றும் வேள்வி பற்றிய குறிப்பைக் காண்கிறோம்.
 "பணியியர் அத்தைநின் குடையே; முனிவர்
 முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
 இறைஞ்சுக, பெருமநின் சென்னி; சிறந்த
 நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே' (புறம்-5)
 அதாவது, "நகர்வலம் வரும் முக்கண்ணரான சிவபெருமான் முன் மட்டுமே உன் குடை தாழ்வு கொள்ளட்டும், நான்மறைகளை ஓதும் முனிவர்கள் முன் மட்டுமே உன் சிரம் தாழ்த்துவாயாக!' என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மன்னனை வாழ்த்தும்பொழுது பாடுகிறார் புலவர் காரிகிழார். இவை தவிர, நால்வேதங்கள் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
 மொழியை மேன்மை செய்த நம் பெரியோர் ஒரே நிலப்பரப்பில் விளங்கிய இரு வேறுபட்ட தனிச் சிறப்பு வாய்ந்த மொழிகளை அவற்றின் செறிவுமிக்க கருத்துகளை ஒன்றுக்கொன்று பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்தினார்களேயன்றி, எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் அவர்களுக்கு இருக்கவில்லை. புறநானூறு நம் பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் முறை சொல்லும் நூல் எனில், அது சொல்லும் வேதம் பற்றிய செய்திகளும் நம்முடையவைதானே!
 -கோதை ஜோதிலட்சுமி



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

 தென்குமரி வடபெருங்கல் 

குண குட கடலா எல்லை 

குன்று மலை காடு நாடு 

                       ஒன்றுபட்டு வழிமொழிய   ( புறம் 17)



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

ஒவ்வொரு தெய்வத்திற்கும் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளன.

விநாயகரிலிருந்து ஆரம்பிப்போம்

 

  • விநாயகர் :                                               ஒருகைமுகன் தம்பியே (திருமுருகாற்றுப்படையில் காணப்படும் வெண்பா 7)
  • சிவன் முதுமுதல்வன்  (புறம் 166)                           தொல்முது கடவுள் (மதுரைக் காஞ்சி 42)

பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்

கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்

தொல்புகழ் த்ந்தாரும் தாஅம்

(பரிபாடல் திரட்டு  1: 72-78)

  • உமை கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ (கலைத்தொகை கடவுள் வாழ்த்து 7)
  • திருமால் மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே    (பரிபாடல் 3)

 

  • இலக்குமி அகனமர்ந்து செய்யாள் (குறள் 84)

அவ்வித்து செய்யவள்   (குறள் 167)

  • பிரம்மா- நான்முகன் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி   (திருமுருகாற்றுப்படை 164-165)

 

  • முருகன் முருகமர் மாமலைப் பிர்ந்தெனப் பிரிமே (ஐங்குறுநூறு 308;4)                                               ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து (அக்நானூறு 149-16)
  • தெய்வயானை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகாற்றுப்படை -6)
  • வள்ளி என்னுள் வருதியோ நல்நடை கொடிச்சி                     முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் (நற்றிணை 82 3,4)
  • இராமன் கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை     வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை    (புறநானூறு 358 :18,19)

 

  • பலராமன், கண்ணன்

 

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்

நீல்நிற  உருவின் நேமியோனும் என்று

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு

(புறநானூறு 58)   இப்படி ஏராளமான குறிப்புகளைச் சங்க இலக்கியத்த்தில் பரக்கக் காணலாம்.

adi-velli-muslims

இதை யார் படித்து விடப் போகிறார்கள் என்ற நோக்கில் தமிழர் பண்பாடு என்பது தெய்வத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாடு என்பது போலவும் தெய்வங்களைப் பற்றிப் பழைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லை என்றும் தன் சொந்த உள் நோக்கிற்காக வெள்ளையரின் வழியில் கடந்த அறுபது ஆண்டுகளாக நாத்திக பிரச்சாரம் நடைபெறுகிறது.

 

இவர்கள் தெய்வத்தை நம்பவில்லை என்றால் தமிழையும் நம்பக் கூடாது. தமிழை நம்பினால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகப் பண்பாட்டையும் மதித்துத் தழுவ வேண்டும்.

இல்லையேல் இவர்கள் அனைவரும் ‘ஜோம்பிகளாகத்’ தான் வாழ வேண்டும். ஜோம்பி என்பது கல்லறையில் புதைக்கப்பட்டு திடீரென்று இருளில் எழுந்து நடமாடும் சவம் என்ப்தை அனைவரும் அறிவர்.

 

தாங்கள் ஜோம்பிகளாக மாறியதோடு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் ஜோம்பிகளாக மாற்ற முயலும் இவர்களை என்ன்வென்று சொல்வது?

 

தமிழர்கள் விழிப்புணர்வுடன் சங்க இலக்கியத்தைத் தாமே ஊன்றிப் படிக்க வேண்டும். அது காட்டும் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

குமரி முனையில் ஆரம்பித்து இமயமலை வரை  முடிந்த் இடம் எல்லாம் சென்று நமது பண்பாட்டை ஊன்றிக் கவனிப்பதுடன் தனது ஆன்மீக அனுபவங்களைச் சிலரிடமாவது சொல்லி நல்லனவற்றைப் பரப்ப வேண்டும்.

ahmedabad-visarjan

சங்க இலக்கியம் தங்க இலக்கியம் அது தெய்வ இலக்கியமே!



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

சங்க இலக்கியத்தின் மிக பழைய பாடல்களில் ஒன்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதியினுடையதும்.

"நல் பனுவல், நால் வேதத்து

அருஞ் சீர்த்திப் பெருங்கண்ணுறை

நெய்மலி ஆவுதி பொங்க, பல் மாண்

வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,

யூபம் நட்ட வியன் களம் பல கொல்? - புறம் 15

அதாவது அற நூல் சொன்னபடி வேதவிதிப்படி நெய்யும் சமித்தும் பொரியும் இட்டு நீ செய்த புகழ்மிக்க போற்றற்கரிய பெரும் யாகங்களை செய்த யாகசாலையில் நீ நிறுத்தி வைத்த தூண்களின் தொகை அதிகமா? என்பது பொருள்.

இந்த பாடலின் நோக்கம் முதுகுடுமி பெருவழுதிக்கு முன்னால் தோற்று ஓடிய மன்னர்கள் தொகை அதிகமா? அல்லது வேள்வி செய்து நடத்திய யூபஸ்த்தம்பம் அதிகமா? என்று புலவர் நெட்டியமையார் பாண்டியனின் வீரத்தையும் அவனது வேதநெறி தவறாத ஆட்சியையும் குறிப்பிடுகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"எருவை நுகர்ச்சி, யூபநெடுந்தூண்
வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம்
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்" - புறம் 227

வட்ட வடிவமாக செய்யப்பட்ட மதில் சூழ்ந்த வேள்விச் சாலையில்,கருட சயனம் என்கிற வேள்வித் தூணை நட்டு வேள்விகள் பல செய்து அறிவுடையாளனாக விளங்கிய வேந்தன்.

கரிகால சோழன் இறந்த பிறகு அவன் பெருமைகளை சொல்லி கருங்குழல் ஆதனார் பாடிய பொதுவியல் திணை, கையறுநிலை துறையை சேர்ந்த பாடல்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"வாழச் செய்த நல்வினை அல்லது 
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
யான்அறி அளவையோ இதுவே" - புறம் 367

அதாவது, நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்.

சோழன் ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி-பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி-சேரமான் மாவண்கோ மூன்று பேரும் ஒரிடத்தில் சேர்ந்திருப்பதை பெருமை கொண்டு ஔவையார் சொல்லும் பாடல் இது.இந்த பாடலே அந்த ராஜசூயத்தையோ அல்லது வேறேதெனும் வேள்வி சூழ்நிலையையோ குறிக்கிற நிகழ்வாக கூட இருக்கலாம்.இதில் அந்தணர்களை இருப்பிறப்பாளர்கள் என்று நேரிடையாகவே குறிக்கப்படுகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை 
நான்மறை முதல்வர் சுற்ற மாக 
மன்ன ரேவல் செய்ய மன்னிய 
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே " - புறம் 26

இதன் பொருள் தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு, 
நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டு பணிவிடை செய்ய, 
நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினை உடைய வேந்தனே.

என பாண்டியன் நெடுஞ்செழியன் போர்களத்தில் மறக்கள வேள்வி செய்யும் அதே நேரத்தில் அறிவார்ந்த சான்றோர் மூலம் அறக்கள வேள்வியும் செய்கிறான்.எனவே அவனை எதிர்த்து நின்று மரணமடைபவர்கள் ஒரு வகையில் நோன்பிருந்து சிறந்தவரை போல வீரசுவர்க்கம் புகுவார்கள் என்று மாங்குடி மருதனார் அரச வாகையில் பாடுகிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"மறவர் மலிந்த தன்
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து" - புறம் 400

அதாவது போர் மறவர்கள் மிகுந்த படைக்கலத்தையும்,
கேள்வி அறிவிற் சிறந்த மறையோர்கள் நிறைந்த வேள்விச் சாலையில் தூண்களை நிலைநாட்டியவன் என்று சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு 
அருங்கல நீரோடு சிதறிப் பெருந்தகை" 
- புறம் 362

இதன் பொருள் பலநூல்களை படித்து வேள்வி செய்யும் அந்தணர்க்கு நீரைவார்த்து தானம் வழங்கும் பெருந்தகை.

பெயர் தெரியாத வீரனை பற்றி கயமனார் பாடிய பாடல்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி,நலங்கிள்ளி,கரிகாற் பெருவளத்தான்,நெடுஞ்செழியன் என்ற ஆகப்பெரிய மன்னர்களின் யாகத்தை பற்றியும்,வேத ஆதரவுத்தன்மையை பற்றியும் தெளிவான தரவுகள் விரவிக் கிடக்கின்றன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard