துணி விலை ஏறிவிட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவது தான்…
ஈ.வெ.ரா.பெரியார் சொன்னது உண்மையா? பொய்யா?
பெரியார் பறையர் இனப் பெண்கள் ஜாக்கெட் போடுவதைக் கூட விரும்பவில்லை என்று கலைஞர் கருணாநிதி தனது முரசொலி பொங்கல் மலரில் (1962) கார்ட்டூன் போட்டு பழி சுமத்தும் அளவுக்குப் போனார் என்றும், இதற்கு தி.மு.க. மேயர் வேலூர் நாராயணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பெரியார் மறுத்துப் பேசினார் என்றும் தனது “பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்” நூலில் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பெரியார் அவ்வாறு பேசியது என்பது 1962ம் ஆண்டு. அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை ஆதரித்தும், தி.மு.க.வை எதிர்த்தும் பெரியார் பேசி வந்த காலகட்டமாகும். பெரியார் அவ்வாறு பேசவில்லையென்றால் அப்போதே அவர் மறுத்திருக்க வேண்டும். மறுத்திருந்தால் அதற்கான சான்றுகளை காட்டியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் 1968ஆம் ஆண்டு தி.மு.க.வை ஆதரிக்க தொடங்கியிருந்த நேரத்தில் அதுவும் தி.மு.க.வின் மேடையில் பெரியார் தந்த மறுப்பு விளக்கம் என்பது நம்பும்படியாக இல்லை.
ஏனெனில், இந்த குற்றச்சாட்டை தி.மு.க. மட்டும் அன்று கூறவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களும், அந்த மக்களுக்காக நடத்தப்பட்ட ஏடுகளும் கூட பெரியாரை குற்றம் சாட்டின என்பதை தோழர் கொளத்தூர் மணிக்கு நினைவு கூறவும், அவற்றை சான்றுகளோடு தரவும் கடமைப் பட்டுள்ளோம்.
1962ஆம் ஆண்டு தேர்தலில் பெரியார் தி.மு.க. வெற்றி பெறக் கூடாது என்று நினைத்தார். ஆனால் அக்கட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தாழ்த்தப்பட்டவர்களே காரணம் என்று குற்றம் சாட்டி கேவலமாகப் பேசியதாகவும், அப்போது நாங்கள் மட்டுமா ஓட்டு போட்டோம் என்று தாழ்த்தப்பட்டவர்கள் வருத்தப்பட்டதாகவும் அன்பு பொன்னோவியம் என்பவர் ‘உணவில் ஒளிந்திருக்கும் சாதி’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
அது மட்டுமல்லாது அவர் 2.3.1963 ஆம் ஆண்டு “நாத்திகம்” வார இதழுக்கு ஆசிரியர் அவர்களுக்கு பகுதியில் “ஆதி திராவிடர்களும் பெரியாரும்” என்ற தலைப்பில் கடிதமொன்றை எழுதினார். அது வருமாறு:
“துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்! வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்” என்று பெரியார் கூறியதாகச் செய்திகள் வந்த போது மலைத்து விட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் தாங்கள் குறிப்பிட்டதைப் போன்று நான் அப்பாவி அல்ல.
ஏனெனில், 1939ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பெரியாரை கூர்ந்து கவனித்து வரும் பல பேர்களில் நானுமொருவன். எங்களது நினைப்பிற்கு காரணம் பெரியார் அவர்களோ அன்றி அவரது பத்திரிகையோ அது பற்றிய விளக்கத்தை தராமையாலும், பொதுக் கூட்டங்களிலும் கூட, அதைப்பற்றி பேச்சு எழாததாலும், குறிப்பாக சமீபத்தில் நடந்த மாநாட்டின் போது அதைப் பற்றிய தகவல் எதையும் தெரிந்து கொள்ள முடியாத காரணத்தாலும் எங்களுக்கு மலைப்பு ஏற்பட்டதில் தவறில்லை…. பெரியார் பல சமயங்களில் ஆதி திராவிட மக்களைச் சாடி பழித்துப் பேசியிருக்கிறார்.
19.6.1947 பெரியார் பேச்சும், 24.4.1958 விடுதலை தலையங்கம் போன்றவைகளை சான்றாகத் தரலாம். அவை சில சமயங்களில் நேரிடையாகவும் சூசகமாகவும் இருக்கும். காரணம் எதுவாக இருந்தாலும் பெரியார் போன்ற தலைவர் நிலையிருப்பவருக்கு இது அழகல்ல.”
சென்னையில் அம்பேத்கரிஸ்டுகளால் ‘அப்பேத்கார்’ இதழ் நடத்தப்பட்டது. அதில் (நவம்- டிசம். 1963) ‘சூட்டுக்கோல்’ பகுதியில் பெரியாரின் பேச்சு கடுமையாக கண்டிக்கப்பட்டது. அது வருமாறு: ஒரு முறை ஈ.வெ.ரா. துணி விலை ஏறி விட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவது தான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டதுதான் என்று கூறினார். அன்று மறுப்பு கூறினோம்.”
அடுத்து அயோத்தி தாசருடன் இணைந்து ‘தமிழன்’ இதழில் பணியாற்றியவர் ஏ.பி.பெரியசாமிப் புலவர். அவரது புதல்வர் பெயர் தி.பெ.கமல நாதன். இவர் தி.க. தலைவர் வீரமணிக்கு மறுப்புரையாக ஆங்கில நூல் ஒன்றினை எழுதியவர். இவர் ‘போதி’ (2005) இதழுக்கு பேட்டி அளித்தார். அதில் பெரியாரின் பேச்சை மெயில் முனுசாமி என்பவர் எதிர்த்ததாக குறிப்பிடுகிறார். அது வருமாறு:
போதி: பெரியார் இந்த மக்களுக்கு செய்த பணிகள் பற்றி?
கமலநாதன்: அதைத் தான் நான் வீரமணிக்கு எழுதின புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். மெயில் முனுசாமின்னு ஒருத்தர் இருந்தார். சேத்துபட்ல இறந்து விட்டார். விடுதலைப் பத்திரிகைகள் எல்லாம் வச்சிருந்தார். பெரியார் திருச்சியில் பேசும் போது “இப்ப துணி விலை எல்லாம் ஏறினது வந்து பறச்சிங்கள்ளாம் ரவிக்கைப் போட்டுகிட்டதால தான்” அப்படீன்னு பேசினாரு. அதை வச்சி எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. அதுல மெயில் முனுசாமியும் ஒரு ஆளு.”
அதுபோலவே, கே.எஸ். சீதாராமன் அவர்கள் தான் எழுதிய “கோலார் தங்கவயல் வரலாறு” எனும் (1989. பக்.193) நூலிலும் பெரியாரின் இந்தப் பேச்சை சுட்டிக்காட்டி திராவிடர் வேறு, ஆதி திராவிடர் வேறு என்று பெரியார் கருதியதாக குறிப்பிடுகிறார்.
11.12.1968 அன்று பெரியார் அவ்வாறு மறுத்துப் பேசிய பேச்சிலும் கூட ஆதாரத்தோடு கூடிய மறுப்புகள் இல்லை. அன்றைக்கே விளக்கி விட்டேன் என்று பொத்தாம் பொதுவாகத் தான் கூறுகிறார். பெரியார் உண்மையிலே அன்றைக்கு விளக்கிக் கூறியிருந்தால் அன்பு பொன்னோவியம், தி.பெ.கமலநாதன், கே.எஸ்.சீதாராமன் போன்றவர்களும் அம்பேத்கர் ஏடு நடத்தியவர்களும், குற்றம் சுமத்தி எழுதவோ, பேசவோ இருந்திருக்க மாட்டார்கள்.
பெரியார் 6 ஆண்டுகள் கழித்து தன்னோடு உறவு கொண்ட தி.மு.க. மேடையில் கூறியது என்பது தி.மு.க.வினர் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள் எனும் தைரியம் மட்டுமல்ல இதற்குக் காரணம், இதன் மூலம் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தி.மு.க.வை கொண்டே துடைக்க நினைத்ததும் மற்றுமொரு காரணமாகும். இது தான் உண்மையிலும் உண்மையாகும். தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இந்த உண்மையை விளங்கிக் கொண்டு இனிமேல் எழுதுவது நல்லது!
துணி விலை உயர்வுக்கு பறைச்சிகள் இரவிக்கை போடுவதே காரணம்! -பெரியார்