New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 1965 ஆம் ஆண்டும் மொழிப்போரும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் எதிர்ப்பும்


Guru

Status: Offline
Posts: 24459
Date:
1965 ஆம் ஆண்டும் மொழிப்போரும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் எதிர்ப்பும்
Permalink  
 


1965 ஆம் ஆண்டும் மொழிப்போரும் பெரியாரின் எதிர்ப்பும் எழுத்தாளர்: கதிர் நிலவன்

 https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamil-desam-thamilar-kannotam-feb-1-2015/28412-1965?fbclid=IwAR2Zic-dWmy_UmFqATMVkbRMdZovgTomxfDyebiBbWGraQgMr1ddAiZXA24 

“இந்திக்கு முடி சூட்டும் நாள்! தமிழர்களுக்கு துக்க நாள்!” - இப்படியரு முழக்கம் தமிழகத்தின் மூலை முடுக்கெல் லாம் தி.மு.க.வினாராலும் மாணவர்களா லும் எழுப்பப்பட்டது.

1965ஆம் ஆண்டு சனவரி 26ஆம் நாள் இந்திய அரசின் இந்தி ஆட்சிமொழிச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது, அதனை எதிர்த்துத் தமிழகமே போர்க் கோலம் பூண்டது.

சனவரி 25 முதலே இந்தியை வலியு றுத்தும் இந்திய அரசமைப்பின் 17ஆவது பகுதியை கொளுத்திய மதுரை, சென்னை, கோவை மாணவர்கள் கைது செய்யப்பட்ட னர். அப்போது, பல்லாயிரக் கணக்கானோர் நடத்திய ஊர்வலத்தில் மதுரையில் காங்கிரசு குண்டர்கள் கலகம் விளைவித்தனர். காவல்துறையின் குண்டாந்தடிகள், கண்ணீர் புகை வீச்சை போர்க்குணத் தோடு மாணவர்கள் எதிர் கொண்டனர்.

சனவரி 26 விடிவதற்குள்ளாகவே கல்லூரிகள், தி.மு.க. கழகத்தவர் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அன்று காலை ஆறு மணியளவில் சென்னை கோடம்பாக்கம் திடலில் சிவலிங்கம் என்ற தி.மு.க. இளைஞர் தீக்குளித்து மாண்டார். இச்செய்தி காட்டுத் தீயாய் பரவியது.

மதுரையில் மாணவர்களைத் தாக்கிய காங்கிர சாரைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக மாணவர் கள் தன்னெழுச்சியாக அணி திரண்டனர். காவல்துறையின் தடையை மீறி ஊர்வலம் நடத்தினர். தடியடிக்கு அஞ்சாத மாணவர் சமூகத்தின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 18 அகவை நிரம்பிய மாணவக் கண்மணி இராசேந் திரன் பலியானான். 1938 முதல் தமிழர்கள் நடத்தி வரும் நீண்ட நெடிய போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான முதல் தமிழன் இராசேந்திரன் என்பது குறிப்பிடத் தக்கது.

காங்கிரசு முதலமைச்சர் பக்த வத்சலம் கலவரத்தை அடக்கி குடியரசு நாளைக் கொண்டாட முயன்றதில் தோல்வி கண்டார். தமிழகமே கறுப்பு மயமாகியது. தமிழகம் முழுவதும் தமிழுணர்வு கொண்டோர் குடியரசு நாளைப் புறக்கணித்துத் துக்க நாளாகக் கொண்டாடினர்.

அதன்பிறகு ஏற்பட்ட தமிழர் எழுச்சியை அடக்க இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டது. முந்நூறுக்கும் மேற்பட்டோர் குருவி, காக்கை போல சுடப்பட்டு மாண்டனர். 1000க்கும் மேற்பட் டோர் காயமுற்றனர். 5000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட னர்; சிறைபட்டனர்.

1965 சனவரி 25 முதல் மார்ச் 15 வரை, அதாவது 50 நாட்களுக்குப் பிறகே தீரமிக்க மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியுடன் ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்குமென்று தலைமை அமைச்சர் லால் பகதூர் சாத்திரி வானொலியில் உறுதி கூறினார். அதன்பிறகு, மெல்ல மெல்ல ஓய்ந்தது போராட்டம். எல்லாத் தேசியமொழிகளும் இந்தி யாவின் ஆட்சி மொழிகளாக வேண்டும் எனும் கனவு இதன் மூலம் கலைந்து போனது. அந்நாளில் நேருவின் உறுதி மொழியை தி.மு.க. கொண்டாடி யதை ஏற்கவியலா விட்டாலும், இந்தித் திணிப்பிற்கு எதிராக தமிழக மக்களைத் தட்டி எழுப்பி யதில், தி.மு.க.விற்குப் பெரும்பங்கு உண்டென்பதை மறுக்கவியலாது.

இதில் பெரியாரின் பங்கு நேர் எதிரானது. அவரின் எதிர் நிலை பாட்டை தி.மு.க.வே சொல்லத் தயங்குகின்றது. பெரியாரின் கழகங் களும், முழு உண்மையை சொல்ல மறுத்து, பாதியை மென்று விழுங் குகின்றன.

1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தின் போது காம ராசரின் வழிகாட்டுதலில் நடை பெற்ற ஆட்சியின் மீது எரிச்சல டைந்த பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் ஆட்சியை வீழ்த்துவதற் கான ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும், மீண்டும் பார்ப்பனர் ஆட்சி அமைக்க, இராசாசி தலை மையில் நடந்த முயற்சி என்றும், எந்தவொரு இலக்கும் கொண்டி ராத வன்முறைக் கிளர்ச்சி என்றும் பெரியார் கருதினார். எனவே, மாணவர் போராட்டத்தை ஆத ரிக்க மறுத்தார் என்று பெரியாரிய இயக்கங்கள் கூறி வருகின்றன. எது உண்மை என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1938ஆம் ஆண்டு இராசாசி ஆட்சிக்காலத்தில் ஆதிக்க இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி சிறை சென்றவர் பெரியார். அதே போல் 1948ஆம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆட்சிக்காலத்திலும், ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்துப் பல மறியல்கள் பெரியாரால் முன்னெ டுக்கப்பட்டன.
1938, 1948 இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் ஆட்சி மொழி இந்தி என்பதை எதிர்த்து நடந்த வையல்ல. 1965இல் நடந்ததைப் போல 1938 மற்றும் 48இல் இந்தி ஆட்சி மொழி யாக்கப்படவில்லை. மாறாகப் பள்ளிகளில் கட்டாயப் பாட மாக்கப்பட்டதை எதிர்த்துத் தான் அப்போராட்டங்கள் நடத் தப்பட்டன. பெரியார் எதிர்த்த தெல்லாம் பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என்பதைத்தான். அது எதிர்க்கப்பட வேண்டியதே!

ஆனால், 1965ஆம் ஆண்டு மொழிப்போர் என்பது சற்று மாறுபட்டது. இந்திதான் இந்தியா வின் ஆட்சி மொழி என்று அறி விக்கப்பட்டதை எதிர்த்து நடை பெற்ற போராட்டம்.

தமிழகப் பள்ளிகளில் இந்தி கூடாது என்று போராடிய பெரியார், நடுவண் அரசு அலுவல கங்கள், நடுவண் ஆள் தேர்வு நிலையங்கள், மாநில - நடுவண் அரசுகளுக்கிடையேயான தொடர்புகள் ஆகியவற்றில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்த போது போராட முன் வரவில்லை. மாறாகத் தில்லி அர சிற்கு ஆதரவாகவும், மாணவர் களுக்கு எதிராகவும் செயல்படத் தொடங்கினார்.

தமிழகத்தில் முதன்முறையாக பக்தவத்சலம் அரசின் காவல் துறையோடு இந்திய இராணுவப் படையும் நுழைந்து தமிழ் மாண வர்களை நர வேட்டை யாடிய போது, பெரியார் நடத்திய ‘விடுதலை’ ஏடு பின் வருமாறு செய்திகள் வெளியிட்டது.

இன்றும் மாணவர்கள் காலித் தனம். பஸ்ஸை கொளுத்தினர். பச்சையப்பன் கல்லூரி மாணவர் கள் (விடுதலை, 26.01.1965).

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் (2000 மாணவர்கள் ஊர்வலம்) கலைந்து செல்ல கண்ணீர்ப்புகை. மாணவர்கள் கற்களை வீசுதல். (விடுதலை, 28.01.1965)

DSP, கான்ஸ்டபுள் 20 பேர் காயம். இராசேந்திரன் என்ற மாணவர் குண்டடிப்பட்டு மாண் டார். வி.டி.நெடுமாறன் குண்டடிப் பட்டு படுகாய முற்றதாகவும் தெரிகிறது. (விடுதலை, 28.01.1965).

போலிசார் அத்துமீறியதாகக் கூறப்படுபவை அபாண்டமே (சனவரி 25, 26ஆம் நாட்களில்). சட்டத்தையும், ஒழுங்கையும் பராமரிக்க அவர்கள் பாடுபட்ட னர். வக்கீல் சங்கத் தீர்மானத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்.

திருச்சியில் மாணவர்கள் காலித்தனம் பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை. (விடுதலை, 10.02.1965).

பொள்ளாச்சியில் போராட் டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர். (விடுதலை, 13.02.1965).

திருவல்லிக்கேணி பெரிய தெரு, வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப் பட்ட தேசியக் கொடி தோரணங் களை மாணவர்கள் அறுத்து சொக் கப்பனை போல் கொளுத்தி அவ மதித்திருக்கின்றனர். (7 கல்லூ ரிகள் மாணவர்கள், கோட்டைக்கு ஊர் வலம் சென்று அமைச்சர் வெங்கட் ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்).

தமிழ்மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து துணை நிற்க வேண்டிய பெரியார் தமது ‘விடுதலை’ ஏடு மூலம், இந்தித் திணிப்புக்கும் காவல்துறையினர் - இராணுவத்தினர் நடத்திய காட்டு மிராண்டித்தனத்திற்கும் ஆதரவு தந்தார்.

அது மட்டுமல்ல, “காலித்தனம் அதிகரித்து விட்டது. தோழர்களே! கையில் மண்ணெண்ணை வைத் துக் கொள்ளுங்கள். தீப்பெட்டி வைத்துக் கொள்ளுங்கள். நான் குறிப்பிட்டுச் சொல்லும்போது, நீங்கள் தீ வைத்து விடுங்கள்” என்று தன் தொண்டர்களுக்குக் கட்ட ளைப் பிறப்பித்தார்.

(‘கிளர்ச்சிக்குத் தயாராவோம்’ என்ற நூலில் (பக்கம் 6, 10, 14, 15), “இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடத்தப்பட்ட காலித்தனம், தமிழ் நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிக் கைக்கார அயோக்கியர்களும், பித்த லாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டிவிட்டது கண்டு எல்லா மக்களும் சிந்திக்கா மல் இந்தி, இந்தி என்று இல்லாத ஒன்றை இருக் கின்றதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா?...”

“ஆரம்பத்தில் நான்கு காலி களைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட் டம்? எதற்காக போலீஸ் கையில் தடி. துப்பாக்கி எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” என்று எழுதியுள்ளார்.

இதுதான் பெரியாரின் சன நாயகம்! இதுதான் அவரது தமிழ் இன அரசியல்!

தமிழக அரசு கொண்டு வரும் கட்டாய இந்திப்பாடம் வேறு, நடுவண் அரசு கொண்டு வரும் இந்தி ஆட்சி மொழி வேறு என் பதை பெரியார் அறியாதவர் அல் லர். ஆயினும், யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப் படுத்தினார் கள் என்று ஒருபுறம் கேள்வி எழுப்புவார். மறுபுறம், “மத்திய சர்க்கார் உத்தியோகம் கிடைக் கிறதுக்கு இந்தியை படிச்சிட்டுப் போயேன்” என்று ஆனந்தன் விகடன் (11.04.1965) இதழுக்குப் பதிலும் தருவார். 
பெரியார் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவிட்டு, எனக்கு ‘காமராசர் ஆட்சிதான் முக்கியம்’ என்று கூறியதாகச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? காமராசர் ஆட்சிக்காக தமிழினப் பிஞ்சுகளை பலியிடலாமா? தமிழ் மொழியை அழிக்கலாமா?

 பெரியரைப் பொறுத்தமட்டில, தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக மாறக்கூடாது என் பதே, அவரின் உள்ளக் கிடக்கை. இதனை 1938 மொழிப்போரிலும், 1965 மொழிப்போரிலும் வெளிப் படுத்தியுள்ளார்.

1939ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரின் காரணமாக சிறை சென்று வெளியே வந்த பெரியார் கோவையில் உள்ள ஒரு கல்லூரி நிகழ்ச்சியன்றில் பங்கு கொண்டார். அக்கல்லூரி முதல்வர் கிருட்டிணமூர்த்தி அய்யர் தலை மையில் நடைபெற்ற அந் நிகழ்ச்சி யில் மொழியின் பயன் என்ன? பயனுக்கேற்ற மொழி எது? எனும் தலைப்பில் உரையாற்றினார். அது வருமாறு:

“ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துகளுக்கு நெடுங்க ணக்காக, அகர வரிசையாக எடுத் துக் கொள்ளலாம். தமிழ் உச்சரிப் புக்கேற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையு மானால் அதற்கேற்ற தமிழ் எழுத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால், நான் மிகமிக மகிழ்ச்சியும் திருப்தியும் அடை வேன்”. (ஈ.வெ.ரா. சிந்தனைகள், வே. ஆனைமுத்து, தொகுதி).

1965ஆம் ஆண்டு மொழிப் போர் நடைபெற்றுக் கொண்டி ருந்த வேளையில் 3.3.1965 அன்று “என்னைப் பற்றி” எனும் தலைப்பில் “விடுதலை” ஏட்டிலே எழுதினார். அது வருமாறு. “இந்தியை நான் எதிர்த்தது உண்மை. அதுவும் நான் ஒருவனேதான் எதிர்த்தேன். பிறகு தமிழ்ப்புலவர்கள் தமிழ்ப்புத்தகக் கடைக்காரர்கள் கூட்டுச் சேர்ந் தார்கள். அதிலிருந்து தான் “தமிழ் உணர்ச்சி” என்பது தோன்றிற்று. தமிழ்ப்புலவர்களும் மதிப்புப் பெற்றார்கள். இதனல் தமிழுக்குத் தமிழின் பேரால் சிலர் பிழைக்க நேரிட்டதல்லாமல் ஒரு காசுப் பயனும் ஏற்பட்டுவிடவில்லை. இந்தி வெறியர்கள் மாதிரி சிலர் தமிழ் வெறியரானார்கள்.

”இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க்கிறேன். தமிழ் கெட்டுவிடும் என்பதால் அல்ல. தமிழ் கெடுவ தற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. ஆங்கிலமே அரசியல் மொழியாக, வரலாற்று மொழியாக, அறிவியல் மொழியாக, சட்ட மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே இந் தியை எதிர்க்கிறேன்”.

1960 ஆம் ஆண்டு வாக்கில் காமராசர் ஆட்சியில் கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் உயர்நிலைக் கல்வியில் தமிழைப் பாடமொழியாகக் கொண்டு வருவதாக அறிவித்தபோது பெரி யார் அதனைத் தீவிரமாக எதிர்த் துப் பேசினார்; எழுதினார்.

தமிழ்ப் பாடமொழி திட் டத்தை ஆதரித்த ம.பொ.சி., பாரதிதாசன் போன்றவர்களை “தாய்ப்பால் பைத்தியங்கள்” என்று கிண்டல் செய்தார். இதன் தொடர்ச்சியாகவே பிடிவாதமான தமிழ்மொழி எதிர்ப்பாளர் என்ற அடிப்படையில்தான் பெரியார் 1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தை அணுகினார் என்பதுதான் உண்மையான கார ணமேயழிய, காமராசர் ஆட்சி முக்கியம் என்பதெல்லாம் நொண் டிச் சமாதானங்களாகும். சண் டித்தனமான சாக்குப்போக்குகள் ஆகும்.

1965மொழிப்போரில் பங்கேற்ற இராசாசி கூட தமிழுக்காக வாதாடவில்லை. ”தற்போது நடக் கும் யுத்தம் இந்திக்கும், ஆங்கி லத்துக்கும் இடையேயான யுத்தமே தவிர இந்திக்கும் தமிழுக்கும் இடை யில் நடக்கும் யுத்தம் அல்ல..” என்று தான் கூறினார். ஆங்கி லத்தை அப்புறப்படுத்தி இந்தியை ஆட்சி மொழியாக நிலை நிறுத்தும் மத்திய அரசின் முயற்சிகளை மட்டுமே கண்டித்துப் பேசினார். Never Hindi Ever English ஒரு போதும் இந்தி வேண்டாம், எப் போதும் ஆங்கி லம் வேண்டும் என்றார் இராசாசி. இதில் பெரியாருக்கும் இராசாசிக் கும் கொள்கையளவில் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியா வின் ஆட்சி மொழிகளுள் ஒன்றா கத் தமிழும் இருக்க வேண்டுமென்ற தமிழின உரிமைக் கோரிக்கையை இராசாசியும் ஏற்கவில்லை. பெரியா ரும் ஏற்கவில்லை.

1950 ஆம் ஆண்டு இயற்றப் பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி 15 ஆண்டுகள் கழித்து இந்திமொழி ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டதன் காரண மாக, தில்லி அரசு தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டது.

அதனைத் தடுக்கும் முகமாக 1956க்குப் பின் தமிழ்நாட்டில் பல்வேறு கூட்டங்கள் நடை பெற்று வந்தன. அப்போது ஏற்கெனவே தீவிர இந்தி ஆதரவாளராக அறி யப்பட்ட இராசாசி இந்தி எதிர்ப் பாளராக மாறியிருந்தார். பல் வேறு கூட்டங்களில் அண்ணாவோடும் பெரியாரோடும் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசி வந்தார். அப்போ தெல்லாம் இராசாசி யோடு இணைந்து பணி யாற்றிட பெரியா ருக்கு எந்தவித சங்கடமும் ஏற்பட வில்லை. காமராசர் ஆட்சியை கவிழ்க்க முயலும் சூழ்ச்சியென்று முத்திரை குத்தவும் இல்லை.

28.1.1956அன்று இந்தி ஆட்சி மொழி ஆவதை எதிர்க்க இராசாசி கூட்டிய கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசினார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.சுப்பையாபிள்ளை என்பவரது வீட்டில் நடைபெற்ற அக் கூட்டத் தில் இராசாசி, பெரியார், அண்ணா, ம.பொ.சி, இரா. நெடுஞ்செழியன், திருப்புகழ்மணி, கிருஷ்ணசாமி ஐயர், கே.எஸ். இராமசாமி சாஸ் திரி, வெங்கட்ராம அய்யர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

அப்போது அக்கூட்டத்தில் பேசிய பெரியார் கூட்டத்தின் தலைப்பிற்கு மாறுபாடாக தமிழ் நாட்டில் கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஆங்கிலமே இருக்கவேண்டுமென்று பேசினார். அப்போது அங்கிருந்த ம.பொ.சி.க் கும் பெரியாருக்கும் கருத்துப்போர் ஏற்பட்டது. இது குறித்து “நான் அறிந்த இராஜாஜி” எனும் நூலில் ம.பொ.சி. கூறுகிறார்.

“இராஜாஜி தூண்டியதாலேயே இந்தக் கூட்டத்திற்கு திரு. சுப்பை யாபிள்ளை ஏற்பாடு செய்தா ரென்பது அதில் கலந்து கொண்ட போதுதான் எனக்குத் தெரியவந்தது நுங்கம்பாக்கம் கூட்டத்தில் இராஜாஜி, அண்ணா, நான் ஆகி யோர் மொழிப்பிரச்சினையில் ஒத்த கருத்துடையவர்களாகவே இருந் தோம். 
”பெரியார் ஈ.வெ.ரா. ஆங்கிலம் தமிழ்நாட்டிலும் ஆட்சி மொழி யாகவும் பள்ளிகளிலும் கல்லூரிகளி லும் பாட போதனை மொழியா கவும் நீடிக்க வேண்டுமென்பதிலே தாம் உறுதியாக இருப்பதாகக் கூறினார். இத்துடனன்றி, ஆங்கி லமே தமிழர் வீடுகளில் பேசும் மொழியாகவும் ஆக்கப் படவேண் டும் என்றும் கூறினார்.

”இதனால் பெரியாருக்கும் எனக்குமிடையில் சிறிதுநேரம் கடுமையான விவாதம் நிகழ்ந்தது. இராஜாஜி அடிக்கடி தலையிட்டு எங்களை அமைதிப்படுத்த முயன் றார்.

”மாநிலங்களின் ஆட்சிமொழி பற்றியும், கல்லூரிகளில் போதனா மொழி பற்றியும் இந்தக் கூட்டத் தில் விவாதிக்கத் தேவையில்லை” என்றும் இராஜாஜி கூறினார்.

மத்தியில் ஆட்சிமொழியாக 1965க்குப் பின்னும் ஆங்கிலமொழி ஒன்றே நீடிக்க வேண்டும் என் பதிலே நுங்கம்பாக்கம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பொதுவான கருத்து ஒற்றுமை ஏற்பட்டது.

நுங்கம்பாக்கம் கூட்டத்தில் பெரியாருக்கும் எனக்குமிடையே நடந்த விவாதத்தின்போது தமிழ் நாட்டளவில் ஆங்கில ஆதிக்கம் நீடிக்கக் கூடாது என்ற எனது கருத்துக்கு இராஜாஜி ஆதரவு அளித்தார். பெரியாரைப் பார்த்து “தங்கள் கருத்தை ஏற்றுக் கொள் ளும் தெளிவும் துணிவும் தமிழக மக்களுக்கு ஏற்படுவது கஷ்டம் என்று சிரித்துக் கொண்டே கூறினார். ”

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தின் மேற்கண்ட உரை யாடலில் கூட, பெரியார் மத்திய அரசின் தொடர்பு மொழிச் சிக்க லோடு தமிழகப் பயிற்று மொழிச் சிக்கலை அணுகுவதை உணர முடிகிறது.

எங்கும் எதிலும் ஆங்கிலம் வரவேண்டும் என்று விரும்பிய பெரியாரின் மொழிக் கொள்கையை நிராகரிப்பதை விட்டுவிட்டு 1965ஆம் ஆண்டு மொழிப்போரை இராசாசி எதிர்ப்பு என்றும் காமராசர் ஆதரவு என்றும் பிரித்துப் பார்த்து பெரியாரை நியாயப்படுத்துவது என்பது அநியாயமாகக் கொல்லப்பட்ட மொழிப்போர் ஈகியர்களை இழிவுபடுத்துவதாகும்.

பெரியாரின் தமிழின - தமிழ் மொழி எதிர்ப்புக் கருத்து களை விமர்சிக்காமல் அவற்றைப் புறந்தள்ளாமல் பெரியாரை ஏற்றுக் கொள்வது தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் இக்காலத்திலும் துரோகம் செய்வதாக அமையும்!__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard