New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 44. அண்ணாதுரை வைத்த ஆப்பு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
44. அண்ணாதுரை வைத்த ஆப்பு
Permalink  
 


போகப் போகத் தெரியும் – 44

January 1, 2010
சுப்பு rss_icon16.jpg

 

அண்ணாதுரை வைத்த ஆப்பு

ktkthangamani1அப்போது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின் காரணமாகக் கடும்பஞ்சம். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தாங்களுக்குத் தெரிந்த வழிகளில் போராடிக்கொண்டிருந்தார்கள்.

சிவகங்கையில் அரசுக் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டது. தேவகோட்டையில் இருந்த சப்-கோர்ட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். திருவாடானை நீதிமன்றத்தையும் போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் கைப்பற்றிக்கொண்டார்கள்.

போலீஸ் எதுவும் செய்யத் திராணியற்று முடங்கிப் போனது ஏனைய அரசு அலுவலங்கங்கள் எதுவும் செயல்படமுடியவில்லை.

இன்றைக்கு சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் என்றழைக்கப்படும் மூன்றும் அன்றைக்கு ஒரே மாவட்டமாக இருந்தன. கிழக்கு ராமநாதபுரத்தில் மூன்று மாதகாலமாக அரசு என்று எதுவும் இல்லை. மக்களே ஆட்சி நடத்தினார்கள். இந்த எழுச்சியை நசுக்க வெளியிலிருந்து பிரிட்டிஷ் அரசு போலீசைக் கொண்டுவந்தது.

எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர்கள் எல்லாரும் வேட்டையாடிப் பிடிக்கப்பட்டனர். இதில் முக்கியமானவர் சித்தூர் சிவஞானம். அவரும் கைதுசெய்யப்பட்டார்.

சிவஞானத்தைக் கொன்றுவிடுமாறு அரசாங்கம் தகவல் தந்துள்ளதாக மிகுந்த மனவருத்தத்தோடு சப்-இன்ஸ்பெக்டர் ராமையா என்னிடம் கூறினார்.

‘கைதானவரை எப்படிக் கொல்லமுடியும்?’ என்றேன்.
கோர்ட்டுக்குப் போகும் வழியில் தப்பித்துச் சென்றதாகவும் அப்போது போலீஸ் சுட்டதாகவும் அதில் இறந்து போனதாகவும் ரிப்போர்ட் தரச் சொல்லியிருக்கிறார்கள்’ என்றார் அவர்.

’அப்படிக் கொன்று விடுவார்களா?’ என்று பதைத்துக் கேட்டேன்.

‘காலையிலேயே கட்டிவைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்’ என்றார்.

எனக்குள் இச்செய்தி இடியாய் இறங்கியது.

ஆறுமாதகாலம் வழக்கு நடந்தது.. ஸ்பெஷல் கோர்ட் 30 பேரை விடுதலை செய்தது. 100 பேருக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் எல்லோரும் சாதாரண ஜனங்கள். யாரும் வசதி படைத்தவர்கள் இல்லை. படிப்பறிவும் கிடையாது. தேவர்களும், ஹரிஜனங்களும்தான் மிகப் பெரும்பாலானவர்கள்.

இவர்கள் ஒரு பெரும் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து வீரச் சமர் புரிந்தனர். ஏராளமான இன்னல்களையும் சித்திரவதைகளையும் இன்முகத்தோடு ஏற்றனர்.

– கே.டி. கே. தங்கமணி, தினமணி சுதந்திரப் பொன்விழா மலர்.

ராமநாதபுரம் மட்டுமல்ல, சாத்தான்குளம், மெய்ஞானபுரம் குலசேகரன் பட்டினம், உடன்குடி ஆகிய திருநெல்வேலி மாவட்டத்துச் சிறுநகரங்களிலும் கலவரம் வெடித்தது. நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்கள் இவை. ஒரு வெள்ளைக்கார அதிகாரி இங்கே கொலை செய்யப்பட்டார்.

rajaji2இந்த வழக்கில் காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1947-இல் சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக இருந்த ராஜாஜி தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் இருவரையும் மரணதண்டனையிலிருந்து விடுவித்தார்.

பெஞ்சமின், செல்லதுரை, தர்மம் கோவில் பிள்ளை, தங்கைய நாடார், முத்துமாலை நாடார், மந்திரக்கோன் ஆகிய ஆறுபேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. தேவ இரக்க நாடாருக்கு பத்தாண்டும், நாராயண பிள்ளைக்கு ஐந்தாண்டும் மோட்டாரத்தினசாமி, பூவலிங்க நாடார் ஆகிய இருவருக்கும் இரண்டாமாண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. துரைசாமி நாடார், லக்ஷ்மண நாடார் ஆகிய இருவரும் பாதுகாப்புக் கைதிகளாக்கப்பட்டனர்.

கோவை, தஞ்சை, சென்னை, தென்னாற்காடு, ஈரோடு, மதுரை நீலகிரி, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் வன்முறை வெடித்தது.

அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி 26 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; இதில் 39 பேர் மாண்டனர், 17 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 6000 பேர் கைது செய்யப்பட்டனர். 295 பேருக்குச் சாட்டையடி தண்டனை தரப்பட்டது. காங்கிரஸ் போராட்டத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியதற்காக 27 உள்ளூராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இத்தனை எழுச்சிக்கு இடையே நீதிக்கட்சி என்ன செய்தது?

மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று இந்தியர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய நேரத்தில் நீதிக்கட்சித் தலைவரான சர். ஏ. ராமசாமி முதலியார் வைஸ்ராயின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பதவியேற்றார்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்பட்ட உலகப் போருக்காக ஈவெரா நிதி திரட்டிக்கொடுத்தார். அவருடைய சீடர்கள் நாடகங்களை நடத்தி யுத்தநிதி திரட்டினார்கள்.

ஹரிஜனங்கள், தேவர்கள், நாடார்கள் போன்ற தாழ்த்தப்பட்டவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவரும் முன்னனியில் செயல்பட்ட ஆகஸ்ட் போராட்டத்திற்கு எதிராகவே நீதிக்கட்சி செயல்பட்டது; ஈவெராவும் செயல்பட்டார்.

1942-இல் சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையில் பிரிட்டிஷ் மந்திரி சபைக்குழு இந்தியா வந்தது. நீதிக்கட்சியின் சார்பில் 30.03.1942 இல் ஈ.வெ.ராமசாமி, டபிள்யு. பி. சவுந்தரபாண்டியன், என். ஆர். சாமியப்ப முதலியார், எம்.ஏ.முத்தையா செட்டியார் ஆகியோர் இந்தக் குழுவைச் சந்தித்து மனு கொடுத்தார்கள். திராவிடர்களுக்குத் திராவிடநாடு பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

ஆகஸ்டு போராட்டத்தில் அடக்குமுறைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோர் பற்றியோ பிற்படுத்தப்பட்டோர் பற்றியோ ஈவெராவும் நீதிக்கட்சியும் வாய்திறக்கவில்லை.

தமிழகமே திரண்டு விடுதலைப் போரில் முன்னணியில் இருந்தபோது நீதிக்கட்சியினர் செய்ததெல்லாம் ‘திராவிட நாடு’ வேண்டுமென்று மனுக் கொடுத்ததுதான்.

ஈவெராவைப் பொறுத்தவரை அவர் தேசியத்திற்கு எதிராக இருப்பது போதாது என்று நினைத்தார். ஒரு படி மேலே போய் பாகிஸ்தான் கேட்ட ஜின்னாவுக்கு ஆள்பிடித்தார்.

periyar1காந்தியார் காலடியில் பிரிட்டிஷ் சர்க்கார் போய் விழுவதைத் தடுத்தது ஜின்னா அல்லவா? ஜனாப் ஜின்னா அவர்களின் பாகிஸ்தான் கோரிக்கை ஒரு புறமிருக்கட்டும். ஆனால் பாகிஸ்தானில், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில், காங்கிரஸ் ராஜ்ஜியத்தில் தாழ்த்தப்பட்டோர் நிலையிலிருப்பதைவிட உயர்ந்த நிலையிலிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலும் காங்கிரஸ் ராஜ்ஜியத்திலும் தாழ்த்தப்பட்டோர் தாழ்த்தப்பட்ட நிலையிலேயிருந்து வந்தால் தான் அவர்களால் சுரண்டிவாழ இடமுண்டு என்பதாக நினைத்து வருகிறார்கள். ஆனால் முஸ்லீம் ஆட்சியில் இவ்வாறு ஒரு சமூகத்தை மற்றோரு சமூகம் சுரண்டி வாழ இடமிருக்காது.

– விடுதலை, 12.05.1943

எரிகிற வீட்டில் கிடைத்ததைப் பிடுங்க ஈவெரா செய்த முயற்சி இது.

ஆகஸ்ட் தீர்மானம் இந்நாட்டு மக்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல என்பதோடு அது ஜப்பான்காரனின் பலத்தை நம்பி அவன் வெற்றி பெற்றுவிடுவான் என்கின்ற தைரியத்தில் அவனுக்கு தங்கக் குடத்தில் பூரண கும்பம் எடுப்பதற்குச் செய்யப்பட்ட ஒரு சதிச்செயல் தீர்மானமேயாகும்— என்று எழுதி ஈவெரா தமிழர்களின் தியாக உணர்வையும் நாட்டுப் பற்றையும் இழிவுபடுத்தினார்.

தானடித்த ஜால்ரா வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக ஈவெரா காங்கிரசைக் குறைகூறினார். காங்கிரஸ் எப்போதும் சர்க்காருக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது என்று பச்சைப் பொய் ஒன்றை கட்டுரையாக எழுதினார்.

“காங்கிரசுக்கும் சர்க்காருக்கும் அந்தரங்கத்தில் என்றும் போராட்டம் நடந்ததில்லை. ஆரம்பகாலம் முதல் காங்கிரசானது ராஜ விசுவாச பிரமாணம் செய்து சர்க்காரை ஆதரித்தே வந்திருக்கிறது. சர்க்காரும் காங்கிரசை ஆதரித்தே, அதைப் பெருமைப்படுத்தியே வந்திருக்கிறது,” என்று ‘குடி அரசு’ இதலில் ஈவெரா எழுதினார்.

அரைப்பொய், கால்பொய் என்று சொல்லி இயக்கத்தைத் துவக்கிய ஈவெரா, தன் பொய்யில் தானே மயங்கி அதை முக்கால் பொய், முழுப்பொய்யாக்கி, அதுவும் போதாமல் அண்டப்பொய், ஆகாசப்பொய்யாக ஆக்கி விடுதலையே வேண்டாம் என்றார்.

கூட இருந்து கொண்டாடியவர்களுக்கே இவருடைய மக்கள் விரோதப்போக்கை சகிக்கமுடியவில்லை. அண்ணாதுரை வைத்தார் ஆப்பு. அது பற்றிய விவரங்களை போகப்போகத் தெரியும் இரண்டாம் பகுதியில் காணலாம்.

மேற்கோள் மேடை:

நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்துவிடுமோ? கடவுள் வாழ்த்துவேண்டாம் என்றால் உடனே தமிழ்த்தாய் வாழ்த்து. ஒரு முட்டாள்தனத்துக்குப் பதில் இன்னொரு முட்டாள்தனம்.

– ஈவெரா / விடுதலை / 13.04.1972



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

போகப் போகத் தெரியும் – 45

January 2, 2010
சுப்பு rss_icon16.jpg

 

c-n-annaduraiநம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி சர்க்காருக்கு அனுகூலமான நிலையை உண்டாக்க உதவிசெய்து வந்ததும், குறிப்பாக, சென்ற ஐந்தாண்டு காலமாக நடந்து வரும் உலக யுத்தத்தில் நல்ல நெருக்கடியில் நேச நாடுகளின் வெற்றிக்குக் கேடு உண்டாக்கும் படியான நிலையில் நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்து வந்த பெருங்கிளர்ச்சியையும் நாச வேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும் நேச நாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரசாரம் முதலியவைகள் நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும் சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப் படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன்பட்டுவிட்டது.

இந்திய அரசியல் சமூக இயல்பு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில், சர்க்கார் நம் கட்சியையும், நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

இந்திய மக்கள் அரசியல் சமுதாய இயல்பு சம்பந்தமான ஸ்தாபனங்களில் நம் ஸ்தாபனம் குறிப்பிடத் தக்கதாகவும் நீதிநெறி உடையதாகவும் இருந்து, ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் மெச்சும்படி நடந்து வந்தும் நம் ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக்கூட சேர்த்துப் பேசுவதற்கில்லாததாக அலட்சியப்படுத்தப்பட்டது.

மாகாண கவர்னராலோ, கவர்னர் ஜெனரலாலோ இந்திய மந்திரியாலோ, பிரிட்டிஷ் முதல்மந்திரியாலோ, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றி பலதடவை பேச்சு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்று இரண்டு தடவை கூட நம் சமுதாயத்தையோ, நம் ஸ்தாபனத்தையோ, நம் இலட்சியத்தையோ குறிப்பிடக் கட்டுப்பாடாய் மறுத்தே வரப்பட்டிருக்கிறது.

— நீதிக்கட்சி மாநாட்டில் அண்ணாதுரை தீர்மானம் / சேலம் / ஆகஸ்ட் 1944

சேலம் நகரில் 27.08.1944 அன்று நீதிக்கட்சியின் மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு ஈவெரா தலைமை வகித்தார். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் இது.

வெள்ளைக்காரன் ஏவிய படியெல்லாம் பணிசெய்தும் தங்களை அந்த அரசு மதிக்கவில்லை என்கிற ஆதங்கம் இந்தத் தீர்மானத்தில் வெளிப்படுகிறது. அடிமையாக இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் இது.

நீதிக்கட்சி என்று மக்களால் அழைக்கப்பட்ட அந்தக் கட்சியின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். சேலம் மாநாட்டில் இந்தப் பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது.

ஈவெரா தலைமையில் இருந்த இயக்கம் திராவிடர் கழகம். பின்னர் சி.என். அண்ணாதுரை தலைமையில் உருவான அரசியல் கட்சியின் பெயர் திராவிட முன்னேற்றக் கழகம். திமுகவில் ‘ர்’ இல்லை என்பதைக் குறித்துக்கொள்ளவும். இதற்கான காரணங்களை அந்தக் காலகட்டத்தில் பார்க்கலாம்.

நீதிக்கட்சிக்குத் தலைமையேற்ற ஈவெராவுக்கு தனக்கு மட்டும்தான் தமிழர்களின் தலைவனாகத் தகுதி உண்டு என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் தமிழனால் மதிக்கப்படக்கூடிய போற்றக்கூடிய, ஒரு தமிழன் கூடக் கிடையாது.என்று எழுதினார் அவர். (குடி அரசு / 17.11.1943)

  • விடுதலைப் போரில் தன் வாழ்க்கையைப் பணயம் வைத்து, சிறைச்சாலையில் செக்கிழுத்த சிதம்பரனார் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.
  • பொதுவுடமைக் கொள்கையைத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த, மீனவர் குலத்தைச் சேர்ந்த ம. சிங்காரவேலர் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.
  • சுயமரியாதை இயக்கத்தில் இவருக்குத் தோள் கொடுத்து நின்ற ப. ஜீவானந்தம் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.
  • அரசியல் நெறிக்கும், தமிழ் நடைக்கும் உரியவரான திரு. வி. கல்யாணசுந்தரனார் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.
  • விடுதலைப் போரில் தமிழகத்து விடிவெள்ளியாக இருந்த ராஜாஜி இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.
  • சைவப் பெரியவரான மறைமலை அடிகள் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.

இது ஏதோ அவசரத்தில், ஆத்திரத்தில் சொல்லப்பட்ட கருத்து என்று தள்ளிவிடமுடியது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கருத்தையே ஈவெரா மீண்டும் சொல்கிறார்.

‘நீ ஒரு கன்னடியன். அப்படியிருக்க, நீ எப்படித் தமிழர்களுக்குத் தலைவனாக இருக்கமுடியும்? ‘ என்று என்னைக் கூடக் கேட்டார்கள். ‘தமிழன் எவனுக்கும் அந்தத் தகுதி இல்லையப்பா!’ என்று நான் அதற்கு விடைசொன்னேன்

– விடுதலை / 01.06.1954

இப்படித் தமிழர்களின் மீது திணிக்கப்பட்ட ஈவெராவின் தலைமையால் நாட்டுக்குக் கிடைத்த நன்மை என்ன?

கிருத்துவப் பாதிரியார்களால் தயாரிக்கப்பட்ட திராவிட இனவாதத்தை ஒரு அரசியல் கொள்கையாக அறிவித்ததுதான் இவருடைய பெருமை.

இந்தத் திராவிட இனம் என்ற வாதத்திற்கு எந்தவித இலக்கிய, வரலாறு மற்றும் அறிவியல் அடிப்படையும் கிடையாது. ஆரியம் ஒரு இனம், திராவிடம் என்பது மற்றொரு இனம் என்பதை மானுடவியல் அறிஞர்கள் எவரும் இன்று ஏற்றுக்கொள்வதில்லை.

இதுபற்றி சற்று விபரமாகப் பார்ப்போம்,

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளான ஹிவான் ஸ்வாங், அல்பெருணி, அமீர் குஸ்ரூ, இபத்பதுதா, மார்கோபோலோ போன்றவர்களின் குறிப்புகளில் ஆரிய இனம், மற்றும் திராவிட இனம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

திராவிட இனம், ஆரிய இனம் என்ற சொற்கள் பழைய தமிழ் இலக்கியத்திலோ சமஸ்கிருத இலக்கியத்திலோ எங்குமே இடம் பெறவில்லை; தெலுங்கு இலக்கியத்திலோ மலையாள இலக்கியத்திலோ, கன்னட இலக்கியத்திலோ எங்குமே இல்லை.

காலனி ஆதிக்கம் செய்யவந்த போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்த இனவேற்றுமை கண்ணில் படவில்லை.

ரோமானியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், பாரசீகர்கள் யாருமே இந்தியாவில் உள்ள ஆரிய இனம், திராவிட இனம் பற்றிப் பேசவில்லை. இது மட்டுமல்ல.

மார்க்சிஸ்ட் சார்புடைய சரித்திர ஆய்வாளரான ரோமிலா தப்பார் எழுதுகிறார்: “திராவிட மொழி பேசுபவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தவறான கருத்தாகும். ஆரிய மொழி பேசுபவர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து இப்போது கைவிடப்பட்டு விட்டது. ”  — India : Historical Begining and the concept of the Aryan National Boo Trust

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை பி.ஆர். அம்பேத்கர் கூறுகிறார்: “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை.”

புகழ் பெற்ற சரித்திர ஆசிரியர் பி.டி. ஸ்ரீனிவாஸ அய்யங்கார் எழுதுகிறார்: “வேதத்தை உருவாக்கியவர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது முட்டாள்தனமான கருத்து.”

எஸ். ஆர். ராவ் என்ற தொல்லியல் அறிஞர் எழுதுகிறார்: “சிந்து சமவெளியில் கிடைத்துள்ள ஆதாரங்களில் ஆரியப் படையெடுப்புக்கான ஆதாரம் ஒன்றுகூட இல்லை.”

பாரதியார், நாமக்கல் கவிஞர், அரவிந்தர் போன்றவர்கள் திராவிட இனம் பற்றிக் கூறிய கருத்துகளை இந்தத் தொடரின் முன்பகுதியில் (போகப் போகத் தெரியும் -20″) கொடுத்திருக்கிறேன்.

இத்தனை ஆதாரங்களுக்கும் எதிராக ‘பகுத்தறிவு’ இயக்கம் பிழைத்தது ஒரு துன்பியல் நிகழ்வுதான்.

இனி பிழைக்காது என்ற எண்ணத்தில் நடு வீட்டில் போடப்பட்டிருந்தது நீதிக்கட்சி; காங்கிரசின் கோஷ்டிப் பூசலும், இந்தி எதிர்ப்புப் போராட்டமும், சைவ வேளாளர்கள் அங்கீகாரமும் அதற்குப் புத்துயிர் கொடுத்து நடமாட வைத்தது என்பதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம்.

காங்கிரசின் தவறான கொள்கைகளும், நாடக மற்றும் சினிமா கவர்ச்சியும் திராவிட இயக்கத்திற்கு வலு சேர்த்து தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதை இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை:

தமிழ்ப் படிப்பதனாலாவது தமிழ்த்தாய் பற்றினாலாவது மனிதனுக்குத் தன்மான உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று அய்யப்பட வேண்டியிருக்கின்றது.
 ஈவெரா / பெரியார் ஈவெரா சிந்தனைகள், மூன்றாம் தொகுதி, பக் 1766



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

விஜயகாந்த் சொன்னது சரிதானா?

December 1, 2009
சுப்பு rss_icon16.jpg

 

dmk1967 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. சி.என். அண்ணாதுரை முதலைச்சரானார். சில மாதங்களுக்குப் பிறகு மாதச் சம்பளமாக ரூ. 500.00 ஐப் பெற்றுக்கொண்டார். ஆனால் அதை அவருடைய வங்கிக் கணக்கில் சேர்க்க முடியவில்லை.

அண்ணாதுரைக்கு வங்கிக் கணக்கே இல்லை என்பது அப்போதுதான் தெரியவந்தது. உடனடியாக வங்கிக் கணக்கு துவக்கப்பட்டு அந்தக் காசோலை வரவு வைக்கப்பட்டது.

நாற்பது ஆண்டுகாலமாக தமிழக அரசியலைப் பார்த்து வருபவர்களுக்கு இது ஒரு அதிசயமாகத்தான் தெரியும். அதிசயம் ஆனால் இது உண்மை.

திராவிட இயக்கங்களைப் பற்றித் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் என் பார்வையில் கூட அண்ணாதுரை முதலமைச்சர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாகப் புகார் இல்லை.

முதலமைச்சர் அண்ணாதுரைக்கு அரசியல் நெறிகளில் பிடிப்பு இருந்தது; பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தது,, வெகுஜனங்களின் நலவாழ்வில் அக்கறை இருந்தது என்பதும் உண்மைதான்.

இத்தனை குணங்களையும் அடக்கி வைத்துக் கொண்டு அண்ணாதுரை ஈவெராவிடம் அடங்கி இருந்தாரே அது ஏன்? என்பது சுவாரசியமான கேள்வி.

மாறுபட்ட குணங்களைக் கொண்ட இருவர் எப்படி இணைந்திருந்தார்கள் என்பதையும் கருப்புச் சட்டையில் தொடங்கி, சுதந்திர தினத்தில் வளர்ந்து ஈவெராவின் திருமணம் என்ற மூன்றாவது காட்சியோடு உறவு முடிந்துவிட்டதையும் கற்பனை கலப்பில்லாமல் சொல்லி இருக்கிறார் மலர்மன்னன்.

கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் கடவுள் சிலை உடைப்பு, மதநூல்கள் எரிப்பு என்று நீண்ட கால ஆர்ப்பாட்டம் செய்தவர் ஈவெரா. வெளிநாட்டுக்காரனுக்கு அடிமையாக இருப்பதை பெருமை என்ற ரீதியில் பேசியவர் அவர். கட்சிக்காரனை அடிமையாக வைத்திருப்பது இன்னொரு பெருமை.

ஆனால் இந்தத் தமிழ்நாட்டில் ஈவெராவுக்கு ஒரு ஒளிவட்டம் தரப்பட்டிருக்கிறது அவரது புனித பிம்பம் அரசாலும், அரசியல் கட்சிகளாலும், கல்வி நிலயங்களாலும், மீடியாக்களாலும், தேசவிரோதிகளாலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

இந்த பிம்பத்திற்குத் திரிவைத்து அதைப் பற்ற வைத்திருக்கிறார் மலர்மன்னன்.

காணக்கிடைக்காத காட்சி இது; நேர்மையான முயற்சி இது. காலச்சுவடு, ஜனவரி 2009 இதழில் அண்ணாதுரை குறித்து அவர் எழுதிய கட்டுரையின் விரிவான வடிவமே இந்தப் புத்தகம்.

periyaar_aa1
பெட்டிச் சாவியை அண்ணாதுரையிடம் தருகிறேன் என்று மாநாட்டு மேடையில் முழக்கமிட்ட ஈவெரா பிறகு ஒரு காலகட்டத்தில் ‘என்னிடம் வேலைக்கு வந்தபோது இவர் எம்.ஏ படித்ததாகக் கூறித்தான் சேர்ந்தார். ஆனால் இப்போது எனக்கு சந்தேகம் வருகிறது. இவரது எம்.ஏ. சர்ட்டிஃபிகேட்டைப் பார்க்கவேண்டும்’ என்று வெறுப்பை அள்ளிக்கொட்டினாரே, அது ஏன்?

‘ஹைதராபாத் நிஜாமுக்கு இருக்கவேண்டிய கவலை, ஆதினகர்த்தாக்களுக்கு இருக்க வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை’ என்று பழத்தில் ஊசியை பக்குவமாக ஏற்றினாரே அண்ணாதுரை அது எதற்காக?

‘வெள்ளை சட்டை அணியும் குள்ள நரி’ என்று அண்ணாதுரையை ஈவெரா கண்டித்தாரே, அதற்குப் பின்னனி என்ன?

‘ஆகஸ்டு 15ந் தேதி, திராவிடருக்கும் திருநாள்தான், துக்கநாள் இல்லை’ என்று அண்ணாதுரை அறிவித்தாரே அதன் விளைவு என்ன?

என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரே வழி புத்தகத்தை வாங்கிப் படிப்பதுதான்.

இருந்தாலும் தமிழ் ஹிந்து வாசகர்களுக்காக ஒரு தகவலை மட்டும் கொடுக்கிறேன்.

‘திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது மு. கருணாநிதிக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு கூறினார்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்த் மீது திமுக தரப்பில் அர்ச்சனை நடத்தப்பட்டது.

விஜயகாந்த் சொன்னது சரிதானா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு மலர்மன்னனின் புத்தகம் உதவக்கூடும்.

திமுக உருவானது ஏன்?
மலர்மன்னன்
கிழக்கு பதிப்பகம், சென்னை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard