New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 28 ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்!


Guru

Status: Offline
Posts: 24788
Date:
28 ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்!
Permalink  
 


போகப் போகத் தெரியும் – 28

August 17, 2009
சுப்பு rss_icon16.jpg

 

ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்!

cho-ramaswamyசோ: கிறிஸ்தவர்களிடையிலோ முஸ்லிம்களிடையிலோ கடவுளை நம்புகிறவர்கள், வணங்குகிறவர்கள் இருக்கும்போது அவர்களும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள்தானா?

வீரமணி: மூட்டிவிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கேட்டாலும் சரி….

சோ: மூட்டிவிடவேண்டும் என்பதற்காக அல்ல, உங்களிடமிருந்து ஒரு ‘கமிட்மெண்ட்’ வேண்டும் என்பதற்காகத்தான்.

வீரமணி: நீங்கள் எதற்காக கேட்டாலும் சரி, தத்துவம் அதுதானே?

சோ: நீங்கள் நேரடியாகச் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்

வீரமணி: நேரடியாகச் சொல்ல நான் தயார். ஆனால் நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் சொல்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

சோ: இதுகூடவா எனக்குப் புரியாது?

வீரமணி: நீங்கள் கேட்கவேண்டிய அவசியமே இல்லையே…. நாங்கள் சொல்வது தெளிவாக இருக்கிறதே. அதன் அர்த்தமே அதுதானே?

சோ: நீங்கள் ஹிந்துமதத்தைப் பற்றியே அடிக்கடி பேசுவதால் இந்தச் சந்தேகம் வருகிறது. நான் உங்களிடம் மிகவும் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. ‘முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கடவுளை நம்பினால் பரப்பினால், வணங்கினால் அவர்களும் காட்டு மிராண்டிகளா?, முட்டாள்களா? அயோக்கியர்களா?’ என்பதுதான் என் நேரடியான கேள்வி…

வீரமணி: ‘கடவுளை நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும்’ என்ற அடிப்படையில் நீங்கள் கேட்டிருக்கலாம், நீங்கள் குறிப்பிட்டுக் கேட்பதன் நோக்கம் என்ன?

சோ: நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லாததுதான் நான் குறிப்பிட்டுக் கேட்பதற்குக் காரணம்.

வீரமணி: நாங்கள்தான் தெளிவாகச் சொல்கிறோமே இதன்மூலம் எங்களுக்கும் அவர்களுக்கும் சண்டையை உண்டாக்கிவிட உங்களால் முடியுமா என்ன? இதில் நாங்கள் ஒன்றும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. எங்களுக்கு தயவு தாட்சண்யம் கிடையாது. யாராக இருந்தாலும் எங்கள் கருத்து இதுதான். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டுதானே அவர்களும் ‘நாத்திகர்கள் என்றால் இப்படிப்பட்டவர்கள், அப்படிபட்டவர்கள்’ என்று சொல்கிறார்கள்.

-பக் 87, 88, 89 இவர்களைத் தெரிந்துகொள்வோம் / சோ / பரந்தாமன் பதிப்பகம்

விடாக்கண்டன் சோ-வின் கேள்விகளுக்கு பிடிகொடுக்காத கி. வீரமணியின் பதில்கள் இவை.

‘கடவுள் இல்லை’ என்று சொல்லவேண்டும். ஆனால் கடைசிவரை முஸ்லிம், கிறிஸ்துவக் கடவுள்களைத் தாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் வீரமணி.

கி. வீரமணி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். பத்திரிகைப் பேட்டியில் அவர் குறிப்பிடும் வார்த்தைகள் நிச்சயமாக அந்த இயக்கத்தின் கொள்கையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்ளுங்கள்

திராவிடர் கழகத்தின் நிறுவனரான ஈ. வெ. ரா, இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரிச்சைக்குவிட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாகச் சொல்லுகிறார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை? எனெனில் திரு. முகம்மது நபி கொள்கைகள் அனைத்தும் அநேக விஷயங்களால் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கிதையுடையதாய் இருக்கின்றது.

– குடி அரசு. ஆக. 23, 1931.

ஈ. வெ. ரா இஸ்லாத்தை பகுத்தறிவு மார்கமென்கிறார், அவரது சீடரோ இஸ்லாமியக் கடவுளும் தேவையில்லை என்கிறார்.

இதில் எது கொள்கை? எது சுயமரியாதை? எது பகுத்தறிவு?

இது விஷயமாக நடந்த கொள்கைக்கூத்தின் முழு விவரங்களைப் பிறகு பார்க்கலாம்.

இப்போது சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப கட்டமான 1926-க்குப் போகலாம்.

1926 நவம்பர் 8 ஆம் நாளில் சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களையும், சுயேச்சைகள் 36 இடங்களையும் நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் கைப்பற்றினர். நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட பனகல் அரசர் மட்டும் வெற்றிபெற்றார். மற்ற தலைவர்களான திரு. கே. வி. ரெட்டி நாயுடு, ஏ. இராமசாமி முதலியார், டாக்டர். சி. நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார் போன்றவர்கள் தோல்வியடைந்தனர்.

சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பாக எஸ். சீனிவாச ஐய்யங்காரும், எஸ். சத்தியமூர்த்தியும் நடத்திய பிரசாரத்தின் விளைவு இது.

தேர்தலில் பெரும்பாலான இடங்களைப் பெற்றுவிட முடியும் என்ற மிதப்பில் இருந்தனர் நீதிக்கட்சியினர். சுயராஜ்ஜியக் கட்சியினர் தீவிரமாகத் தேர்தல் பணி செய்தனர். அவர்களுடைய பிரசாரம் மக்களைக் கவரும் விதத்தில் இருந்தது. கோகலே மண்டபம் போன்ற கட்டடங்களைவிட்டு வெளியேறிய அவர்கள் கடற்கரையில் பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்தினர். தெரு முனைகளில் கூட்டம் போட்டனர். நீதிக்கட்சியினர் வழக்கம்போல் சரிகைத் தலைப்பாகையோடு ஆளில்லாத மண்டபங்களை அலங்கரித்தனர்.

இந்தத் தேர்தலில் நீதிக்கட்சிக்கு ஈ. வெ. ரா கொடுத்த ஆதரவால் எந்தப் பயனும் இல்லை.

டாக்டர். பி. சுப்பராயன்

டாக்டர். பி. சுப்பராயன்

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு டாக்டர். பி. சுப்பராயன் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. டாக்டர். பி. சுப்பராயன் சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தார்.

1926, டிசம்பரில் பதவியேற்ற சுப்பராயன் அமைச்சரவை 1930 அக்டோபர் வரை நீடித்தது.

டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் எஸ். முத்தையா முதலியாரும் எம். ஆர். சேதுரத்தினம் ஐயரும் அமைச்சர்களாக இருந்தனர். இந்த அமைச்சரவையின் காலத்தில்தான் அரசு வேலைவாய்ப்பில் வகுப்புரிமைக்கான அரசு ஆணை வெளியிடப்பட்டது. இது நீதிக்கட்சியின் ஆட்சி அல்ல என்பதையும், அதில் ஒரு பிராமணர் அமைச்சராக இருந்தார் என்பதையும் வாசகர்கள் குறித்துக் கொள்ளவேண்டும்.

தேர்தல் பிரசாரத்தால் எதுவும் தேறவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார் ஈ. வெ. ரா; அவரது கவனம் சுயமரியாதைத் திருமணங்களின் பக்கம் திரும்பியது.

இந்த ஆரம்பகாலத் திருமணங்களைபற்றி அவர்கள் தரப்பில் சொல்வதைக் கேட்போமா?

1928-ம் வருடத்தில் அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்கா சுக்கல நத்தம் கிராமத்தில் நடந்த திருமணங்களைப் பற்றி எழுதுகிறார் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி.

காஞ்சிபுரம் மாநாட்டுக்குப் பிறகு பெரியார் காங்கிரசைவிட்டு விலகி வந்து காங்கிரஸ் எப்படி ஒரு சிறு கூட்டத்திடம் சிக்கிக்கொண்டு பெரும்பான்மை மக்களை வஞ்சிக்கிறது என்று பிரசாரம் செய்தபோது சுப்பா ரெட்டியார் காங்கிரஸ் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்….

சுக்கல நத்தத்தைச் சுற்றியுள்ள 116 கிராமங்களில் ‘குடி அரசு’ பத்திரிகையை வரவழைக்கச் செய்து பாமர மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் சுப்பா ரெட்டியார்….

சுப்பா ரெட்டியார் பக்கத்து வீட்டுப் பெரியவர்களான மு. அழகர்சாமி ரெட்டியாரையும். மு.சி. சீனிவாச ரெட்டியாரையும் தனித்தனியாக அனுகி, ‘என் பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர விருப்பமா’ என்று கேட்டார். இரண்டு பேருமே போட்டி போட்டுக்கொண்டு ‘என் பெண்ணைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார்கள்….. அப்பாக்கள் இப்படி சுப்பா ரெட்டியார் வீட்டில் சம்பந்தம் கொள்ள போட்டி போட்டபோது அவர்களது பெண்களோ வேறுவிதமாக அதிசயக்கத் தக்க வகையில் சிந்திக்கத் தலைப்பட்டார்கள். அழகர்சாமி ரெட்டியாரின் மகள் நாகம்மாளும், ஸ்ரீ நிவாச ரெட்டியாரின் புதல்வி ரத்தினத் தாயம்மாளும் இளம்வயது முதல் இணைபிரியாத தோழிகள்!

அவர்கள் இருவரும் ‘மணந்தால் ரெட்டியாரின் மகன் அரங்கசாமியையே இரண்டுபேருமே திருமணம் செய்து கொள்வது. இல்லாவிட்டால் இரண்டு பேருமே கடைசி வரையில் திருமணமே செய்துகொள்வதில்லை’ என்று சூளுரை செய்துவிட்டார்கள்

பெற்றோருக்குத் தங்களது பெண்ணின் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க இஷ்டமில்லைதான். ஆனால் இந்த ஏற்பாட்டை மாப்பிள்ளை ஒப்புக்கொள்ள வேண்டுமே! மனம் கலங்கி நின்றார்கள்.

ஆனால் இந்தச் செய்தியை கேள்விப்பட்ட அரங்கசாமியோ ‘குடி அரசு படித்து குடி அரசின் பெண்களாகவே சொல்லப்படும் இந்த இரு பெண்களையுமே திருமணம் செய்து கொள்ள நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்றார். பெண்ணைப் பெற்றவர்கள் மண்ணுலகம் முழுவதுமே தங்கள் கைவசப்பட்டுப் போனதுபோல மகிழ்ச்சிக்கடலில் திளைத்தார்கள்.

தந்தைப் பெரியார் அவர்களுக்கு விவரங்களை எழுதி திருமண நிகழ்ச்சிக்குத் தேதி கேட்டார்கள். 28-05-1928 திருமணத்தை நடத்திவைக்க அய்யா மனமுவந்து ஒப்புதல் அளித்தார்.

– பக் 106, 107 : புதையல் / சின்னக்குத்தூசி / நக்கீரன் வெளியீடு.

சுப்பா ரெட்டியாரின் மகனுக்கு மட்டுமல்ல, அவருடைய உறவினர் ஒருவருடைய மகனுக்கும் அதே நாளில் ஈ. வெ. ரா தலைமையில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்திலும் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள்தான்.

சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான கதை இதுதான். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டிவைத்ததுதான் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் தொடக்கம்.

ஆனால் இந்தத் தகவல்களை இப்போதைய கழக வீரர்கள் அறிவதில்லை.

அவர்கள் ஈ. வெ. ரா என்பவர் பெண்களுக்காக உலகத்தைப் புரட்டிப் போட்டவர் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.

bharathiar1திருநெல்வெலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஈ. வெ. ரா வொடு பாரதியாரை ஒப்பீடு செய்திருக்கிறார். (16. 12. 2007)

‘கவிதையில் பெண்ணியத்தைத் தூக்கிப்பிடித்த பாரதி கூட தனது கட்டுரையில் தடம்புரண்டு இருக்கிறார். பாரதியை விஞ்சும் வகையில் உண்மையான பெண்ணியத்தை அதிகம் பேசியவர் பெரியார்’ என்கிறார் அவர்.

அவருக்கு அரசியல் அறிவும் அனுபவமும் குறைவு என்பதால் வார்த்தைகள் அதிகமாக வெளிப்பட்டிருக்கின்றன. இரட்டை மணப்பெண்கள் விவகாரத்தை இவர் இருட்டடிப்பு செய்துவிட்டார்.

பதவி தரும் பாதுகாப்பு இப்படியெல்லாம் பேசவைத்திருக்கிறது. பாரதியார் மீதே பழி சொல்லத் துணிந்துவிட்டார். தமிழ் மக்கள் எண்ணத்திலும் எழுச்சியிலும் பாரதியின் பாடல்கள் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கின்றன. ஆனால் அதைத் தடை செய்த பிரிட்டீஷ் ஆட்சி காணாமல் போய்விட்டது. இதை அவரும் அவருக்கு பின்புலத்தில் இருக்கும் ஆட்சியாளர்களும் அறியவேண்டும்.

மேற்கோள் மேடை:

‘சுயமரியாதை இயக்கம்’ என ஓரியக்கம் சென்ற ஆண்டில் நம் தென்னாட்டில் தோன்றியது. அவ்வியக்கத்தைச் சார்ந்த சிலர் பழையனவற்றைப் பழித்தலைப் பேரறமாக மேற்கொண்டனர். திருக்குறளோ பழையனவற்றில் எல்லாம் பழையதாக அவர்கள் எதிர் நின்றது.

– தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் / 05. 03. 1930



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

தமிழ் ஓவியா on August 17, 2009 at 1:16 pm

வீரமணி அவர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருக்கிறார்.சங்கராச்சாரியர் சொல்லித்தான் வீரமணியிடம் சோ கேள்வி கேட்டிருக்கிறார். இந்து மதத்தை எதிர்ப்பது ஏன் என்பது பற்றி கீழ் கண்ட விளக்கம் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தும். முழுமையாக அறிந்து கொள்ள அந்நூலைப் படிக்க வேண்டுகிறேன்.
தற்போது அந்நூலிலிருந்து ஒரு சில பகுதிகள்:

காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துறவு பூண்டு 50 ஆண்டுகள் ஆனதை சினிமாவின் நூறாவது நாள் விழா மாதிரி கொண்டாடிவருகிறார்கள். “அடுத்த பிரதமர் ஜெயேந்திரர் என்று சிலர் கிண்டலடிக்கும் அளவுக்கு அவரது அரசியல் பாணி துறவறம் வளர்ந்து கொண்டிருப்பதுவருத்தத்துக்குரியது. இப்படிச் சொல்வதால் அந்த பீடத்தின் மீது நமக்குள்ள மதிப்பு இம்மியும் குறைவுபட்டு விடாது” என்று கல்கி இதழ் எழுதுகிறது.

ஒருவர்துறவியானதைக் கொண்டாட வேண்டுமா என்றால் ஜயேந்திரர் விஷயத்தில் அவசியம்தான். ஏனென்றால் 16 வருடங்களுக்கு முன்பு துறவியின் தண்டத்தைப்போட்டுவிட்டு நள்ளிரவில் மடத்தை விட்டு ஓடிப் போனவர் அவர். பிறகு திரும்பிவந்து தொடர்ந்து துறவியாக இருப்பது கொண்டாட்டத்துக்குஉரியதுதானே! கல்கி வர்ணிக்கிற ‘அரசியல் பாணி துறவறம்’ எப்படிப்பட்டது என்பதற்கு வரலாற்றிலிருந்து இதோ ‘சாம்பிள்! 1983ல் ஜயேந்திரர்அழைத்ததன் பேரில் அவரை சந்தித்த சின்னக்குத்தூசி, உடன் சென்ற ஞாநி இருவரும் ‘எதிரொலி’யில் எழுதிய கட்டுரைகள், அதற்கு ‘சோ’வின் மறுப்பு,மறுப்புக்கு மறுப்பை வெளியிட மறுப்பு முதலியவை இதோ:

‘தவறாமல் விடுதலை படிக்கிறேன்’

– சின்னக்குத்தூசி கட்டுரை

“ஆச்சார்ய ஸ்வாமிகள் உங்களைப் பார்க்க விரும்புகிறார்” என்றார் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராசன். நமக்கு அதிசயமாக இருந்தது.

கெல்லீசில் உள்ள கார்பொரேஷன் பாங்க் கிளையின் நிர்வாகி சீனிவாசன் ஒருநாள் பிற்பகல் வந்தார். அவருடன் நாமும் பரீக்ஷா நாடகக் குழுவின்அமைப்பாளர் ஞாநியும் ஸ்வாமிகளை சந்திக்கப் புறப்பட்டோம்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவல்லிக்கேணியில் வசந்த மண்டபத்தில் தங்கி இருந்தார்கள். வசந்த மண்டபத்தின் வாயிலில்நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமிகளை தரிசனம் செய்யக் காத்திருந்தார்கள்.

கார்ப்பொரேஷன் பாங்க் சீனிவாசன் எங்கள் வருகையை ஸ்வாமிகளுக்கு ஒரு ஊழியர் மூலம் சொல்லி அனுப்பினார். உடனடியாக நாங்கள் சுவாமிகள்தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றோம். சிலபடிகள் ஏறியவுடன் ஒரு சிறிய ஹால் இருந்தது. அந்த அறையின் தரை பாயோ சமுக்காளமோவிரிக்கப்படாமல் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் நாங்கள் காத்திருந்தோம்.

இரண்டொரு நிமிடங்களே ஆகியிருக்கும்; ஸ்வாமிகள் உள்ளே வந்தார். நாங்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தோம். ஸ்வாமிகள் எங்கள் அருகில் வந்துஅமர்ந்தார். ஒரு ஊழியர் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வெளியே போய்விட்டார். அறையில் நாங்கள் மூவரும் ஸ்வாமிகளும் மட்டுமேஇருந்தோம்.

“என்ன இதெல்லாம்” என்றார்.

“இதுவரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பகுத்தறிவுப் பிரச்சார நூல்களும் பெரியார் எழுதிய நூல்களும் இதில் இருக்கின்றன”என்றோம்.

“இதெல்லாம் எதற்காக?” என்றார் ஸ்வாமிகள்.

“சமீப காலமாகத் தாங்கள் பேசி வருவதை எல்லாம் நாம் படித்து வருகிறோம். சுயமரியாதை இயக்கம் சம்பந்தமாகத் தாங்கள் ஒரு தவறானமனோபாவத்தை வளர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக எமக்குத் தோன்றுகிறது. ஸ்வாமிகள் இந்த நூல்களை எல்லாம் படித்தால் உண்மை தெரியும்”என்றோம்.

ஸ்வாமிகள் வாய்விட்டுச் சிரித்தார்.

பின்னர்,

“நான் தினசரி வேறு எந்தப் பத்திரிகை படித்தாலும் படிக்காவிட்டாலும் ‘விடுதலை’ பத்திரிகையை மட்டும் படிக்காமல் இருப்பதில்லை” என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு,

“என்ன உங்கள் கட்சியின் வேலை? ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசவேண்டியது இதுதானே…” என்றார்.

சின்னக்குத்தூசி: “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில் எவரையும் தாக்கிப் பேசுவது பகுத்தறிவு இயக்கத்தவரின் வழக்கமல்ல”

ஸ்வாமிகள்: “ஏன் இல்லை? எல்லா இடங்களிலும் நான் போகும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் கலாட்டா செய்கிறார்கள்; கறுப்புக்கொடிகாட்டுகிறார்கள். என்னை எதிர்த்து ஆபாசமான வார்த்தைகள் கூறி திட்டுகிறார்கள்.”

சி.கு.: “தங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் எந்த திராவிடர் கழகத்தவரும் தாக்கிப் பேசி இருக்க மாட்டார்கள். தாங்கள் ஒரு அமைப்பின் வர்ணாஸ்ரம தர்மத்தின் பிரதிநிதியாக இருப்பதால் தங்கள் வருகைக்கும் தங்களது பேச்சுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களே தவிர,தனிப்பட்ட முறையில் இருக்காது.”

—-நூல்:-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

ஸ்வாமிகள்: “திருவான்மியூரில் ஒருவர் எதையோ என்மீது விட்டெறிந்தார். பல இடங்களில் அராஜகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். சுவர்களைப் போய்ப்பாருங்கள். எப்படி எல்லாம் ஆபாசமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்.”

சி.கு.: “தாங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. எங்காவது ஓரிரண்டு இடங்களில் வன்முறைப் போக்கு தலைதூக்கி இருக்கலாம். ஆனால்,அதையெல்லாம் வைத்துக்கொண்டு, “எல்லாமும் வன்முறைதான்” என்று முடிவுகட்டக் கூடாது. வன்முறை எங்காவது தலைதூக்குவது என்பது எல்லாஇயக்கங்களுக்கும் பொதுவானதுதான். காந்திஜி நடத்திய அகிம்சைப் போராட்டத்திலேகூட அவ்வப்போது வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன.சவுரிசவுரா போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தியது போன்ற வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு காந்திஜியின் இயக்கமே வன்முறைஇயக்கம்தான் என்று முடிவுகட்டிவிட முடியுமா?”

நான் இன்னொரு விஷயத்தையும் ஸ்வாமிகளுக்கு ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் கடந்த அய்ம்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த அய்ம்பது வருட காலத்தில் எத்தனை வன்முறைச்சம்பவங்கள் நடந்துவிட்டன என்று ஸ்வாமிகளால் பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா? என்னால் முடியும்! பட்டுக்கோட்டை டேவிஸ் என்பவர் ஒருபிராமணரின் பூணூலை அறுத்திருக்கிறார். தூத்துக்குடி புது கிராமம் அக்கிரகாரத்திலே தி.மு.க போராட்டத்தின்போது வன்முறை நடந்ததாகக் கூறப்பட்டது.தஞ்சாவூரிலே, மன்னார்குடியிலே, கோவைக்கருகிலே சமீப காலத்தில் வன்முறை நடந்ததாகச் செய்தி வெளிவந்தது.

அய்ம்பது வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஒரு இயக்கத்திலே இப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சம்பவங்கள் நடந்தது ஒன்றும் பெரியவிஷயமல்ல. திராவிடர் கழகக்காரர்களால் பெரியார் தொண்டர்களால் இதுவரையிலும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டதாகவோ, எந்தஉயிருக்கும் ஆபத்து ஏற்பட்டதாகவோ வரலாறு கிடையாது.

ஆனால், தங்களைப் போன்றவர்கள் இந்துமத எழுச்சி, இந்துமத ஒற்றுமை என்ற பேரால் சமீப வருடங்களில் செய்துவரும் பிரச்சாரத்திற்குப் பிறகுஎத்தனை கலவரங்கள் நடந்து இருக்கின்றன? எத்தனை உயிர்ச் சேதங்கள், எத்தனை பொருட்சேதங்கள். மீனாட்சிபுரம், ராமநாதபுரம், மண்டைக்காடு,புத்தநத்தம், புளியங்குடி என்று எத்தனை எத்தனை வன்முறைச் சம்பவங்கள் துப்பாக்கிச் சூடுகள் நடந்துவிட்டன.

இந்துமத ஒற்றுமையின் பேரால் நடந்த இதுபோன்ற வன்முறைகள் கலவரங்கள் மத எதிர்ப்பு இயக்கமான திராவிடர் கழகத்தினரால் ஒருபோதும்நடந்ததில்லை..”

——நூல்;-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

“பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாமிகள் இடையில் குறுக்கிட்டு,

“பிராமணர்களைப் பற்றி சுவற்றில் எழுதுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே” என்று கேட்டார்.

நண்பர் ஞாநி சொன்னார்:

“எங்களுடன் மைலாப்பூருக்கு வாருங்கள். உங்களை வரவேற்பவர்கள் எப்படியெல்லாம் சுவர்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றுகாட்டுகிறோம்.

‘வீரமணியின் மனைவியை பொதுவுடைமை ஆக்குவோம்’ என்றுகூட எழுதி வைத்திருக்கிறார்கள்.”

ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானேஇருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே” என்றார்.

சி.கு.: “ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்.”

ஸ்வாமிகள்: “இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம்சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.

‘சோ’வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்.”

சி.கு.: “தாங்கள் அப்படிக் கருதுவது தவறு இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவமதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.

மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.

எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்துஎன்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே;இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.

கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும்ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்துமுற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள்வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின்பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்.”

—நூல்;-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

//ஈ. வெ. ரா என்பவர் பெண்களுக்காக உலகத்தைப் புரட்டிப் போட்டவர் //

இதிலொன்றும் உங்களுக்கு அய்யம் வேண்டாம். உண்மை இதுதான். மேலும் அதிகமான தகவல்களுக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன்ம் வெளியிட்டுள்ள பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை தொகுதி – 5,6,22,23,24 ஆகிய நூல்களை படிக்க வேண்டுகிறேன். அதோடு வீரமணி அவர்கள் எழுதியுள்ள “சுயமரியாதை திருமணம்-தத்துவம்” நூலைப் படியுங்கள். உங்களின் அனைத்து அய்யங்களுக்கும் விடை கிடைக்கும்.

தற்போது உங்கள் பார்வைக்கு ஒரு சில சான்றுகள்


1929-இல் செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது என்றால், இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்ற இடம் ஈரோடுதான் (10.5.1930) எம்.ஆர். ஜெயகர் தலைமையில் நடை பெற்ற அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இன்று நினைத்தாலும் மலைப்பாகவே இருக்கும்.

வருணாசிரமக் கொள்கையும் ஜாதிப் பிரிவினையுமே இந்திய சமூகக் கேடுகளுக்கு மூலகாரண மென்று இம்மாநாடு கருதுகிறது. பிரிவினையால் ஏற்றத் தாழ்வு – ஏற்படுமென்னும் கொள்கையை இம் மாநாடு மறுப்பதுடன், அக்கொள்கையை வெளியிடும் வேத புராணங்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.

ஜாதி, வகுப்பு வித்தியாசங்களின்றி ஒருவருக்கொருவர் விவாகம் செய்து கொள்ள அனுமதிக்கத்தக்க சிவில் விவாகச் சட்டமொன்று இயற்றப்பட வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் சொத்துரிமை, வாரிசு பாத்தியம் ஆகியவைகளில் சம உரிமை இருக்க வேண்டுமென்றும், எந்தத் தொழிலிலும் ஈடுபடவும் அதைக் கையாளவும் சம உரிமை இருக்க வேண்டுமென்றும், குறிப்பாக ஆரம்பக் கல்வி உபாத்தியாயர் விஷயத்தில் அவர்களை அதிகமாக நியமிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது. எந்தப் பொதுக் கூட்டத்திலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்களின் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்வதாகயிருந்தால், நம் நாட்டில் உள்ள கல்யாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இன்றைக்கு 78 ஆண்டுகளுக்கு முன் இத்தகு தீர்மானங்கள் ஈரோட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

புரட்சி கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் காலத்தையும், உண்மையான புரட்சிப் பூகம்பம் நிகழ்த் தப்பட்ட அந்தக் காலத்தையும் கருத்துடன் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும்.”

————-நன்றி “விடுதலை” 16-8-2009

பெரியார் பெண்களுக்காக உலகத்தையையே புரட்டிபோட்டவதான். அதனால்தான் 1938 இல் தாம் பெண்கள் மாநாடு கூட்டி ஈ.வெ.ரா வுக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்கள்.
உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ல அத்தனை விசயங்களுக்கும் நான் மேற்குறிப்பிட்ட நூல்களில் விடை கிடைக்கும் .அருள் கூர்ந்து அவைகளைப் படியுங்கள்.
நன்றி … விவாதிப்போம்



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

 ம.வெங்கடேசன் on August 17, 2009 at 7:53 pm

மாநாடுகளில் தீர்மானங்கள் போடுவதெல்லாம் பிரச்சினைக்கு தீர்வாகாது.
தீர்மானங்கள் படி திராவிடர் கழகமோ, பெரியாரோ நடந்து கொண்டார்களா என்பதுதான் முக்கியம்.

இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்வதாகயிருந்தால், நம் நாட்டில் உள்ள கல்யாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

அப்படியென்னால் எத்தனை திக்கார ர்கள் விதவைகளை திருமணம் புரிந்துகொண்டார்கள் என்பதை தெரியப்படுத்துவீர்களா?

பெரியார் திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது கழக விதவைகளையோ,அல்லது யாரோ ஒரு விதவையையோ திருமணம் செய்து கொள்ளவில்லையே ஏன்? சரி வீரமணிகூட விதவையை திருமணம் செய்துகொள்ளவில்லையே ஏன்?

பெரியார் உண்மையிலேயே பெண்களுக்கு பாடுபட்டவர் என்றால் அந்த தீர்மானத்தில் என்ன இருந்திருக்க வேண்டும்?
சுயமரியாதை இயக்கத்தில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் விதவைகளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதி சேர்த்திருந்தால் இன்னும் புரட்சியாக இருந்திருக்குமே!

இயக்கத்தில் சேர பல விதிகளை நிர்ணயம் செய்யும் திக இதையும் ஒரு விதியாக செய்திருக்கலாம் அல்லவா?

பெண்களுக்காக உலகத்தையே புரட்டிப்போட்டவர் பெரியார்.
எந்த உலகத்தை?
தான் நடத்தி வந்த பத்திரிகையில் மட்டும்!
திருமணம் ஆனவுடன் பெண்கள் தங்கள் பெயருக்கு பின் ஆண்கள் பெயரை சேர்ப்பதையே பெண்ண டிமை என்று கூறுகிறார்கள்.
ஆனால் மணியம்மைக்கும் பெரியாருக்கும் திருமணம் நடைபெற்ற பின் பெரியார் சொன்னது என்ன தெரியுமா?
இனி மணியம்மை என்று கூப்பிடக்கூடாது. ஈவேரா மணியம்மை என்று தம் பெயரையும் சேர்த்து கூப்பிட வேண்டும் என்பதுதான்.
இதுதான் பெண்களுக்காக உலகத்தையே புரட்டி போட்ட பெரியாரின் தொண்டு.

சுயமரியாதை திருமணம் என்பதே ஒரு காமடிதான்.அது ஒரு சீரியஸான விஷயம் அல்ல. ஏனென்றால் பெரியாரே சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளவில்லை. பதிவுத் திருமணம் தான் செய்துகொண்டார்.

திக கார ர்கள் திருமணத்தன்று மேடையில் வெறும் மாலைகளை மாற்றிக்கொள்வார்கள். பிறகு எல்லோரும் போனவுட னோ அல்லது மறுநாளோ தாலி கட்டிக்கொள்வார்கள். இது நான் நேரில் கண்டது.என்னால் நிரூபிக்க முடியும். எங்கள் பகுதியில் திக மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் இப்படிதான் செய்தார். வீரமணி முன்னிலையில்தான் சுயமரியாதை திருமணம் நடந்த்து. ஆனால் இன்றும் அவர் மனையின் கழுத்தில் தாலி தொங்குகிறது. இதுதான் அவர்களின் சுயமரியாதை திருமணம். இது காமடிதானே!



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

Satish Kumar A on August 17, 2009 at 10:57 pm

“இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின்பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்”

I hear this arguement quite often. Is there any history in any part of the world, that a minority group, which is hardly 2-3% of the total population, enslaved and suppressed the remaining 97% of the population? Forget instances where it had happened for short time of period. The british did that but they were thrown out in a couple of hundred years. I am asking is it logically possible for such thing to happen in any part of the world?

So if really the 2% brahmins tried to enslave the 98% people, dont you think the brahmins would have been crushed if not in a couple of hundred, atleast in a couple of 1000 years? But the proof is it never happened in the known 5000 years of Indian history.

Nowhere in the history of the world, we can see that a minority group suppressed and ruled the majority for 1000’s of years. And this is enough proof that these arguements are baseless.



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

Rani on August 17, 2009 at 11:35 pm

“yaaro”
நாட்டில் பிரிவினைகளை உருவாக்கி நாட்டை துண்டாக்க பெரியார் கிருஸ்தவ மிசனரிகளால் உருவாக்கப்பட்ட ஏஜென்ட்.இன்றும் இவரது கட்சிகள் பாதிரிகளுடன் இயங்கும் உபகுழுவாகவே இருக்கு.இவர் தான் பிராமண எதிர்ப்பு எனும் போர்வையில் தமிழ்நாட்டில் பல ஜாதிகட்சிகளை தோற்றிவித்து பல சாதிகலவரங்களை நடத்தும் குழு .பெண்களுக்கு கற்பு தேவையில்லை நாலு ஆண்களுடனும் படுக்கலாம் என சொன்ன பெண்ணியவாதி.வெள்ளையர்கள் கலாசாரத்தில் வெறி கொண்டவர்.தான் சொல்லுவதுக்கு தலையாட்டுபவர்களுக்கு பகுத்தறிவுவாதி சேர்டிபிகேட் கிடைக்கும் .எதிர்த்து கேள்வி கேட்டால் மதவெறியன் ,சாதிவெறியன் ,மூடநம்பிக்கையாளன் என பல பட்டங்கள் சூட்டப்படும்.மேலும் விவாதம் செய்தால் பதில் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்கதக்கதகும் இருக்கும் (உன் தாயை கூட ஆபாசமாக வர்ணிப்பார் பொறுத்துக்கொள்ள வேண்டும் )



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard