New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!


Guru

Status: Offline
Posts: 24625
Date:
ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!
Permalink  
 


பெரியாரின் மறுபக்கம் – பாகம் 17: ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!

September 24, 2009
ம வெங்கடேசன் rss_icon16.jpg

 

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!

பெண்ணடிமையை அழிக்க வந்த வீரர்!
பெண் விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்!
பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தீரர்!

– என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை நாம் பாராட்டுகிறோம். போற்றுகிறோம். தான் ஆணாக இருந்தபோதிலும் ஆணாதிக்கத்தை வெறுத்தவர் என்று அவரின் சீடர்கள் முதல் நாமும் கூறுகிறோம். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஆணாதிக்க மனப்பான்மை இருந்து இருக்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

marriage01”பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியது ஒருவேளை அவரை நினைத்து தான் சொல்லியிருப்பாரோ என்னவோ நமக்குத் தெரியது ஒருவேளை இது உண்மையாகக்கூட இருக்கலாம்.

எப்படி? இதோ!

அன்று முதல் இன்று வரை பெண் விடுதலைக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொண்டிருக்கும் பலர் ‘பெண்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் பெயருடன் கணவனின் பெயரையும் சேர்த்து எழுதுகின்றனர். இது தனக்கு மனைவி அடிமையானவள் என்பதைக் காட்டுவதைத் தவிர வேறில்லை. ஆனால் ஆண் தன் பெயருடன் தன் மனைவியின் பெயரை சேர்ப்பதில்லை. மனைவியின் பெயருடன் தன் பெயரையும் கணவன் போடச் சொல்வது ஆணாதிக்க மனப்பான்மையைத்தான் குறிக்கிறது என்று பெண்களுக்காக போராடும் போராளிகள் பலர் கூறுகின்றனர்.

அதேபோல், வீரமணியிடம் ஒருவர், ”பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டுமென்று மேடை தோறும் முழங்குகிறோம். ஆனால் மனைவி தன் பெயருக்கு பின்னால் கணவன் பெயரையும் சேர்த்து போட்டுக்கொள்வது எதற்கு? அதுபோன்று ஆடவர், மனைவி பெயரை சேர்த்து போட்டுக்கொள்வது இல்லையே ஏன்? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு வீரமணி பதில் கூறும் போது, ”மனைவி என்பவர் கணவனின் (ஆணின்) அடிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் அப்படி நடக்கிறது” என்று கூறுகிறார்.
(நூல்:- வீரமணி பதில்கள்)

அதாவது மனைவியின் பெயருக்கு முன்னால் கணவனின் பெயரைப் போட்டுக்கொள்வது என்பது மனைவி என்பவர் கணவனின் அடிமை என்பதற்காகத்தான் என்று வீரமணியே அடித்துக் கூறிவிட்டார். வீரமணியின் சொல்படி பார்த்தால், ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் திருமணத்திற்குப் பிறகு(இரண்டாவது திருமணத்திற்கு பிறகு) மு. ஹ. மணிம்மை (மு. அரசியல்மணி)என்று இருந்துவந்த பெயரை தன்னுடைய பெயரையும் சேர்த்து அதாவது ஈ.வே. ராமசாமி மணியம்மை என்று தமிழிலும், நு. ஏ. சு. மணியம்மை என்று ஆங்கிலத்திலும் அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தாரே-இது மனைவி என்பவர் கணவனின்(ஆணின்) அடிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நடந்ததுதானே! வீரமணியின் பதில்படி இது ஆணாதிக்க மனோபாவமா? இல்லையா?

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உண்மையிலேயே தனக்கு தன் மனைவி அடிமையல்ல என்று நினைத்திருந்தால் தன்னுடைய பெயரை சேர்க்கசொல்லியிருப்பாரா? தன்னுடைய பெயரை எதற்கு சேர்க்க சொல்லவேண்டும்? அப்படி என்ன அவசியம் வந்தது? மணியம்மையின் பெயருக்கு முன்னால் தம் பெயரை சேர்க்க வேண்டுகோள் விடுத்த ஈ.வே. ரா. தன் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ மணியம்மையின் பெயரைச் சேர்க்க வேண்டுகோள் விடுத்திருக்கலாமே! அது தானே முற்போக்கு! ஏன் அவ்வாறு செய்யவில்லை? தன் பெயருக்கு முன்னால் ஒரு பெண்ணினுடைய பெயரை சேர்ததால் அவமானம், அகெளரவம் என்றெல்லாம் நினைத்திருப்பாரோ என்னவோ! யாருக்குத் தெரியும்? ஒரு வேளை இதுதான் ஆணாதிக்க மனோபாவமோ! அவர்களுக்கே வெளிச்சம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம் ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து மீள பல வழீகளைக் கூறியுள்ளார். ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதிய ‘பெரியார் ஒரு வாழ்க்கை நெறி’ என்ற நூலிலே, ”ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும். ஜிப்பா போடவேண்டும். உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது. நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ளவேண்டும்” என்று கூறுகிறார்.

மேலும் ‘குடியரசு’ இதழில் (16-11-30) கேள்வி பதில் வடிவில் இவ்வாறு எழுதுகிறார்:-

பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.

பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வுகிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)

marriage02இவ்வாறெல்லாம் பெண்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரைக் கூறுகிறார். இந்த அறிவுரைகள் எல்லாம் தன்னுடைய திராவிடக்கழகத்தினுடைய தோழிகளுக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருப்பார் என்று நம்பிக்கைக் கொண்டு நமக்கு எழுந்த சந்தேகங்களை கேட்போம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்ணடிமை நீங்கும் விதமாக கூறிய அறிவுரைகள், நாகம்மையாருக்கும், மணியம்மையாருக்கும் மற்றும் கழக தோழிகளுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படியானால் பெண்ணடிமை நீங்க ஆண்களைப் போலவே பெண்களும் வேஷ்டி, ஜிப்பா போடச் சொன்னரே ஈ.வே. ராமசாமி நாயக்கர்-

ஏன் மணியம்மையும் கழக தோழிகளும் வேஷ்டி-ஜிப்பா போடவில்லையே?

புடவையே தேவை இல்லை என்று சொல்லிவிட்டாரே-

ஏன் மணியம்மையும், கழக தோழிகளும் புடவையை உதறாமல் இருந்தார்கள்? இன்றும் இருக்கிறார்களே ஏன்?

கூந்தல் இருப்பது அநாகரீகம் என்று சொன்னாரே-

பின் ஏன் மணியம்மையாரும், கழக தோழிகளும் கூந்தலை வைத்திருந்தனர்? ஏன் இன்றும் வைத்திருக்கின்றனர்?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மீது அல்லது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கையை கடைபிடிக்கின்றவர்கள் என்று சொல்லப்படுகின்ற மணியம்மையும், கழக பெண்மணிகளும் ஏன் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்படி செய்யவில்லை? இதுதான் கொள்கைப்பிடிப்பா?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இறப்புக்குப்பின் மணியம்மை தலைமை ஏற்று நடத்தினாரே திராவிடர்கழகத்தை – அப்போதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கொள்கையை கடைப்பிடித்தாரா? இல்லையே!

தம்மை பின்பற்றும் மக்கள் தம்முடைய வாழ்வு செயலுக்கு ஒரு முன்மாதிரியான தன்மையில் நடந்து காட்டுவது தானே ஒரு நல்ல தலைவரின் கடமை.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னமாதிரி, பெண்ணடிமை விலக, மணியம்மையார் கூந்தலை அகற்றி, கிராப் வைத்துக்கொண்டு, புடவை கட்டாமல் ஜிப்பாவோ அல்லது சட்டையோ போட்டுக் கொண்டு, வேஷ்டிக்கட்டிக் கொண்டு முற்போக்காக ஒரு புரட்சி செய்திருக்கலாமே! நீங்கள் தான் புரட்சிவாதிகளாயிற்றே! முற்போக்காளர்கள் நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொள்பவர்களாயிற்றே! ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது முற்போக்கு கருத்து அல்ல என்று கடைபிடிக்கவில்லையா? அல்லது ஈ.வே. ராமசாமி நாயக்கரின்படி செய்தால் தமிழ் பண்பாடு அழிந்துவிடும் என்ற காரணமா?

எந்தக் காரணமாக இருந்தாலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த கருத்து ஏற்புடையது அல்ல என்ற காரணத்தால்தான் மணியம்மையும், கழக பெண்மணிகளும் கடைபிடிக்கவில்லை என்று நாம் நம்பலாம்.

நம்முடைய இந்த நம்பிக்கை பொய் என்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்படி இவர்கள் ஏன் கடைபிடிக்கவிலலை என்பதை விளக்குவார்களா திராவிட கழகத்தவர்?

ஆண்களும், பெண்களும் வித்தியாசம் தெரியாதபடி பழகவேண்டும், உடை உடுத்தவேண்டும் என்றெல்லாம் புரட்சியான செய்திகளை சொன்னார் ஈ.வே. ராமசாமி நாயக்கர்.

ஆனால் தம்முடைய திராவிடர் கழகத்திலேயே பெண்களுக்கான தனி அணியை உருவாக்கினாரே ஏன்? திராவிடர் கழகத்திலே ஏன் மகளிரணி வைத்தார்கள்?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அகராதிப்படி, ஆண்களும், பெண்களும் வித்தியாசமில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்பதுதானே! ஆனால் இவர்களே பெண்கள் அணி, ஆண்கள் அணி என்று பிரித்தது ஆண்கள் வேறு. பெண்கள் வேறு என்பதைக்காட்டத்தானே! திராவிடர் கழகத்திலே மகளிரணி என்று பிரித்தவர்களுக்கு பெண்களும், ஆண்களும் ஒரே மாதிரிதான் என்றுச் சொல்ல அருகதை உண்டா?

தங்களுடைய கொள்கைக்கு மாறாக மகளிரணியை உருவாக்கினார்களே – அப்படி உருவாக்கும்போது யார் சட்டைப்போட்டுக்கொண்டு, தலைமுடிவெட்டி கிராப் வைத்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை மட்டும்தான் சேர்ப்போம் என்ற விதியை சேர்த்திருந்தால் இன்னும் புரட்சிகரமாக இருந்திருக்குமே – ஏன் அவ்வாறு செய்யவில்லை?

திராவிடர் கழகத்தில் சேருபவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அல்லது தங்கள் அமைப்பினுடைய கொள்கைகளை ஏற்று செயல்படுவார்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கொள்கையை கடைபிடிக்கும் திராவிடர் கழகத்தினர் மகளிர் விஷயத்திலும் மேற்கண்ட விதிகளை சேர்த்திருக்கலாமே! பெண்ணடிமை விலகவேண்டும் என்ற நோக்கம் உண்மையிலேயே இருந்திருந்தால்தானே இவர்கள் இந்த விதியை சேர்ப்பதற்கு என்ற எண்ணம் அல்லவா நமக்கு தோன்றுகிறது!

மேலும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

இஸ்லாமிலும் பெண்கள் எவ்வளவு அடிமையாக – கேவலமாக நடத்தப்படுகிறார்கள் தெரியுமா?

இதைப்பற்றி பகுத்தறிவாளர்கள் இதுவரை பேசியதுண்டா? அல்லது அவர்களுக்காக போராட்டம் நடத்தியதுண்டா? இதைப்பற்றி கேள்விக் கேட்டால் என்ன தெரியுமா சொல்வார்கள்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”நமக்கு கடிதம் எழுதிய நண்பர் ‘இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறைபோட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்’ என்று எழுதியிருக்கிறார். அது (உறைபோட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக்கொள்வோம். இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகிறவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்ராயம்”
(குடியரசு 17-11-1935)

இஸ்லாமின் பெண்ணடிமையைப் பற்றிக் கேட்டால் பெண்ணுரிமை பேணுபவர்கள் கவனிக்க வேண்டியவை என்று சொன்னால் இந்து மதத்திலும் பெண்ணடிமை விலக பெண்ணுரிமை பேணுபவர்கள் கவனிக்கப்படவேண்டியவை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் சொல்லவில்லை?

முஸ்லிம்களும் தமிழர்களே! திராவிடர்களே என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம் தமிழ் பெண்களின் அடிமைத்தனம் விலக போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமா? இல்லையா? கோஷாமுறையை அகற்ற மசூதிமுன் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கலாமே. ஆனால் இதுவரை போராட்டம் நடத்தவில்லை. காரணம் முஸ்லிம்களிடம் போனால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்களோ என்ற பயமோ என்னவோ? யாருக்குத் தெரியும்? திராவிடர் கழகத்தவர் உண்மையிலேயே பெண்ணடிமை விலக பாடுபடுவர்கள்தான் என்றால் எல்லா மத பெண்களுக்கும் சேர்த்து போராட வேண்டியதுதானே! அது தானே சீர்த்திருத்தமாக இருக்கும்! இனிமேலாவது அவர்களுக்காக போராடுவார்களா?

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்ணடிமை விலக இன்னொரு வழியை கூறுகிறார்:-

”பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்”.
(குடியரசு21-09-1946)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறிய இந்த அறிவுரையைகூட ஈ.வே. ரா. வே கடைபிடிக்கவில்லை. அதற்கு முரணாகத்தான் நடந்துகொண்டார். ஈ.வே. ரா. மணியம்மை என்று கூப்பிடுமாறு அறிவுறுத்தினாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – அந்தப் பெயரிலே இருக்கின்ற அம்மை என்பது பெண்பாலை குறிக்கின்றது. அதைத்தவிர்த்து வெறும் ஈ.வே. ரா. மணி என்று அழைக்கச் சொல்லியிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?

ஆண்கள் பெயரையே பெண்களுக்கு இடவேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் – எத்தனை பெண்களுக்கு ஆண் பெயர் வைத்துள்ளார் என்பதை சொல்லமுடியுமா?

ஒரே ஒரு உதாரணம்.

திருவாரூர் தங்கராசு மகளுக்கு பெயரிடும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆண் பெயரையா வைத்தார்? பெண் பெயரைத்தானே வைத்தார். ஏன் தன் கொள்கைப்படி ஆண் பெயர் இடவில்லை? பதில் சொல்லுங்கள் பகுத்தறிவாளர்களே!

annathurai

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

துரோகி! எவ்வளவு இலேசாகக் குற்றம் சாட்டிவிடுகிறார்!

பொது வாழ்வால் வயிறு வளர்ப்பவர்கள் – எவ்வளவு கேவலமான குற்றச்சாட்டு – இதற்கு என்ன காரணம் காட்ட முடியும், நான் ஏழை என்பதும், அவர் இலட்சாதிபதியின் திருமகானர் என்பதும் தவிர!!

இதைச் சொல்வதால் என்னைப் பற்றித்தான் பொதுவாக மக்கள் எடைபோட – கணக்குப் பார்க்க – விரும்புவார்கள்? பெரியாரைப் பற்றியும் கூடத்தானே!

இன்னும் சொல்லப்போனால், பல்லக்குத் தூக்கிக்கே இவ்வளவு பலன் கிடைத்ததென்றால், பல்லக்கில் சவாரி செய்தவருக்கு அதிகமாகத்தானே கிடைத்திருக்கும் என்றுதானே பொதுவாகப் பேசுவார்கள்? பொது வாழ்வுத் துறைக்கே பொறுப்பற்றவர்களின் மூலம் ஒரு பழிச்சொல் கிடைக்குமேதவிர, என்னையா இச்சொல் இழிவுபடுத்தும்.

இவ்விதமெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத மனநிலை ஏற்பட்டுவிட்டது பெரியாருக்கு – ஏமாற்றத்தின் காரணமாக எனவேதான், தூற்றுகிறார். தூற்றினால் கோபம் பிறந்து நாம் சுடுசொல் கூறுவோம். அதைத்துருப்புச் சீட்டாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார். இங்குதான் என்னை அவர், பதினைந்தாண்டுக்குப் பிறகும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.
(திராவிட நாடு 09-10-1948)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard