New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் முரணானவையே!


Guru

Status: Offline
Posts: 24636
Date:
ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் முரணானவையே!
Permalink  
 


பெரியாரின் மறுபக்கம் – பாகம் 10

 

periyar_marubakkamஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் முரணானவையே!

சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்ற புத்தகத்தில் ‘சொல்லும் செயலும்’ என்ற தலைப்பில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியை சொல்கிறார். அதாவது இறுதிவரை ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார் என்ற கருத்திலே சாமி சிதம்பரனார் சொல்கிறார்:-

nagammaiyar_periyar‘‘அம்மையார் (நாகம்மையார்) இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று தடுத்துவிட்டார். அம்மையார் இறந்த அன்று பெரியார் நடந்து கொண்டவிதம் பலருக்கு வியப்பைத் தந்தது. அவர் தமது கைத்தடியுடன் வாயிற்படியில் நின்று கொண்டார். துக்கத்திற்கு வரும் பெண்களிடம் அழாமல் பிணத்தைப் பார்ப்பதாயிருந்தால் உள்ளே செல்லலாம், அழுவதாயிருந்தால் உள்ளே செல்லவேண்டாம். இப்படியே திரும்புங்கள்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். வந்த பெண்களும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடந்து கொண்டார்கள். பிணம் பெட்டியில் வைக்கப்பட்டது. வண்டியில் ஏற்றி மாடு கட்டி ஓட்டப்பட்டது. சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது. பெட்டியில் வைத்தல் முஸ்லிம் மத வழக்கம், வண்டியிற் கொண்டு-செல்லுதல் கிறிஸ்தவ மதத்திற்கு உடன்பாடு. சுடுவது இந்து மதக்கொள்கை. இம்மூன்றும் நாகம்மையார் இறந்த பின் பெரியாரால் நடத்திக்காட்டிய நன்முறையாகும்.”

சாமி சிதம்பரனார் குறிப்பிட்டுள்ள இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு தி. க. நண்பர் ஒருவரிடம் ‘‘இறந்தபின் அவர்களுக்காக அழுவது கூட தவறா?’’ என்று கேட்டபோது, அந்த நண்பர் ‘‘ஈ.வே. ராமசாமி நாயக்கர்’’ ஒரு பகுத்தறிவுவாதி. பிணத்தைப்பார்த்து அழுவது மூடநம்பிக்கையாகும். நாம் அழுவதால் இறந்தவர் உயிரோடு திரும்பி வரப்போவதில்லை. அதனால்தான் தம் மனைவி இறந்த பின் யாரும் அழக்கூடாது என்று பெரியார் சொல்லிவிட்டார்’’ என்று கூறினார். அதாவது பகுத்தறிவுப்படி பிணத்தைப் பார்த்து அழுவது மூடநம்பிக்கையின் செயலாகும் என்று கூறுகிறார்.

இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.

அதாவது இந்த நிகழ்ச்சி ‘சொல்லும்-செயலும்’ என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ளது. முன்னரே கூறியபடி ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் இறுதிவரை ஒன்றாகவே இருக்கும் என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக் கூறுப்பட்டுள்ளது. வீரமணியும் 14-08-98 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பேசும்போது ‘‘தந்தை பெரியார் அவர்கள் எதைப் பேசினார்களோ அதைச் செய்தார்கள். எதைச் செய்தார்களோ அதை மட்டும்தான் பேசினார்கள். இதுதான் பெரியாரின் ஒரு தனித்தன்மை. சொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற அந்தக் கட்டத்திற்கு அய்யா அவர்கள் போகவில்லை’’ என்று சொல்கிறார்.

இவர் சொல்கின்றாற்போல ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் ஒன்றாகவே இருந்ததா? வீரமணி சொல்வதும் கூட உண்மையா?

rajajiபேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் அவர்கள் எழுதிய ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற நூலில் “தமது தள்ளாத வயதிலும் இராஜாஜியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும், அவருடைய உடல் சென்னை கிருட்டிணாம்பேட்டைச் சுடுகாட்டில் எரியூட்டப்பெற்ற போது சிதையருகே சக்கர நாற்காலியில் அமர்ந்து மறைந்த தம் நண்பருக்காகப் பெரியார் கண்ணீர் உகுத்ததும் இன்னும் நம் கண்களில் நிற்கிறது’’ என்று குறிப்பிடுகிறார். இதை மேலும் உறுதிபடுத்தும் விதமாக மேலும் ஓர் ஆதாரம் இதோ!

சின்னராசு அவர்கள் ‘சோவின் குடுமி சும்மா ஆடாது’ என்ற புத்தகத்தில் ‘மூதறிஞர் காலமாகி அவருக்கு இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருந்த நேரம், தள்ளாத வயதிலும் மயானத்திற்கே வந்து பெரியார் சிறுபிள்ளை மாதிரி குலுங்கி குலுங்கி அழுதாரே’ என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட உதாரணங்கள் நமக்கு எதை விளக்குகின்றன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் எதைச் சொன்னரோ அதைச் செய்யவில்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் வீரமணி என்ன சொல்கிறார்? தந்தை பெரியார் அவர்கள் எதைப் பேசினாரோ அதைச் செய்தார்கள் என்று சொல்கிறார். அதனால் வீரமணி எழுதிய புத்தகத்திலிருந்தே வீரமணி சொன்னது பொய் என்று நிரூபிக்கலாம். இதோ!

வீரமணி கூறுகிறார்:- ‘‘கொள்கைகளில் நேருக்கு நேர் எதிரியாக இருந்த திரு. ராஜாஜி அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த நேரத்தில் எத்தனை முறை தந்தை பெரியார் அவர்கள் ஓடோடிப் பார்த்தார்கள்!ஆச்சாரியார் மறைந்தபோது முடியாத உடல்நிலையிலும் மயானம் வரை சென்று கசிந்துருகிய தந்தை பெரியாரின் மனிதாபிமானத்தையும்…” சங்கராச்சாரியார் என்ற புத்தகத்திலே இவ்வாறு கூறி ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் புகழ்கிறார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கே படிக்காத காரியத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கரே செய்கிறபோது அதை பாராட்டுகிறாரே வீரமணி. இதுதான் பகுத்தறிவா? அதாவது பிணத்தைப் பார்த்து மக்கள் அழுவதால் அது மூடநம்பிக்கை; அதே பிணத்தைப் பார்த்து ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது அவரது வாரிசுகளோ அழுவதால் அது மனிதாபிமானம்; பகுத்தறிவு. இதுதான் பகுத்தறிவுவாதிகளின் அகராதி போலும்!

பிணத்தைப் பார்த்து அழக்ககூடாது என்று கட்டளையிட்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர் இராஜாஜியின் பிணத்தைப் பார்த்து அழுதது ஏன்? சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற அந்த கட்டத்திற்கே ஈ.வே. ராமசாமி நாயக்கர் போகவில்லை என்று வீரமணி பொய் சொல்கிறாரே-அப்படியென்றால் பிணத்தைப் பார்த்து அழக்கூடாது என்று சொன்னக் கட்டத்திலிருந்து இராஜாஜியின் பிணத்தைப் பார்த்து அழுதக்கட்டத்திற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் சென்றது ஏன்?

இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்ததில்லை என்பதை நாம் அறியலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய வாழ்க்கையில் முரண்பாடாக நடந்துக்கொண்டதை மறைத்துப் பொய் சொல்வதுதான் அவருடைய சீடரான வீரமணியின் வேலை. பொய் சொல்வதில் வீரமணியும் விலக்கல்ல என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

இதில் மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதாவது மூன்று மதத்துக்கும் பொதுவான ஏற்றாற்போல நாகம்மையாருடைய பிணத்தை எடுத்துச் சென்று எரிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்கின்றனர். இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. அதைவிட ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கொள்கை முரண்பாடுதான் தெரிகிறது.

எப்படி?

நாகம்மையார் 1933-ல் இறந்தார். 1933-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பழுத்த நாத்திகவாதியாக, பகுத்தறிவாளராக இருந்தார் என்பதை அவருடைய சீடர்கள் சொல்கின்றனர். 1927-லே இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்று காந்தியிடம் சொன்னார். அந்த அளவுக்கு நாத்திகவாதியாக இருந்தார். அந்த அளவுக்கு நாத்திகவாதியாக இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய மனைவியின் பிணத்தை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதப்படி எடுத்துச்சென்று எரித்தது கொள்கை முரண்பாடு அல்லவா? தன்னுடைய மனைவியின் பிணத்திற்காக எல்லா மதப்படியும் எடுத்துச் சென்றதுதான் பகுத்தறிவா? ஆனால் இவர் என்ன செய்திருக்க வேண்டும்? எல்லா மதத்திற்கும் எதிராகத்தானே அடக்கம் செய்திருக்க வேண்டும்! அப்படி செய்பவர்தான் நாத்திகவாதி, பகுத்தறிவுவாதியாக இருக்கமுடியும்?

அதைவிட்டு தனக்காக, தன் குடும்பத்திற்காக ஒரு கொள்கையும், மக்களுக்கு ஒரு கொள்கையும் சொல்வதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய பகுத்தறிவுக்கொள்கையா?



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் முரணானவையே!
Permalink  
 


ஈவேராவின் குணத்தைப் பார்க்கும்போது, அவருக்கு பணம் மற்றும் சொத்து விவகாரங்களில்தான் காதல். குடும்பப்பாங்கான கற்புக்கரசியான தனது மனைவியின் மேல் அவருக்குக் காதலே கிடையாது. ஏன் ஒரு சராசரி அன்பு கூட கிடையாது என்பது தெரிகிறது.

மேலும், ராஜகோபாலச்சாரிதான் அவருக்கு பணம் சொத்து அரசியல் செல்வாக்கு போன்றவற்றில் உதவி செய்தவர். அரசியல் விவகாரங்களில் ஒருவர் வளர மற்றவர் உதவியுள்ளனர். எனவே, ஈவேராவிற்கு அழுகை வர வயது ஒரு காரணமாகத் தெரியவில்லை.

நான் ஏதோ ஒரு இதழில் (வாரமலர் ?) படித்ததை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

ஈவேராவுடைய பெற்றோர்கள் அவருடைய மது மாது சூது போன்ற கீழ்த்தரமான நடத்தைகளையும், பண வெறியையும் கண்டு வெறுத்துப்போய் தங்களுடைய சொத்துக்களையெல்லாம் திருச்செந்தூர் முருகனுக்கு எழுதி வைத்துவிட்டார்கள். ஈவேராவிற்கு ஐந்து பைசாகூட கிடையாது.

அப்போது நொந்துபோயிருந்த ஈவேராவிற்கு அவரது சொத்துக்களைத் திரும்பிப்பெற உதவினவர் ராஜாஜிதான்.

திருச்செந்தூரில் இருக்கும் கடவுளின் பெயர் முருகன் இல்லை. அதனால், திருச்செந்தூரில் ஒரு முருகன் கோயில் கட்டி அந்தக் கோயிலுக்கு ட்ரஸ்டியாக ஈவேரா மாறினால் அந்த சொத்துக்கள் முழுவதும் ஈவேராவிற்கு வந்துவிடும் என்று அறிவுரை சொல்லி, அத்தனை சொத்துக்களையும் ஈவேராவிற்குக் கிடைக்கச் செய்தார் ராஜாஜி.

இப்படிப்பட்டவர் இறந்துபோனால் சாதாரண மனிதனே அழுவான். அப்படி இருக்கும்போது பணத்தாசை மிக்க ஈவேரா கதறி கதறி அழுததில் என்ன வியப்பு இருக்கக்கூடும்?

விசித்திரமான உண்மை என்னவென்றால், கடவுள் இல்லை அதுவும் இந்துக் கடவுளையும், இந்து மதத்தையும் அழிக்க வேண்டும் என்று போராடும் திக இயக்கத்தின் பணம் திருச்செந்தூரில் உள்ள ஒரு கோயில் பணம். ஒரு கோயில் பணத்தை இப்படி ஒரு இயக்கம் முறைகேடாகப் பயன்படுத்தலாமா என்பதும், இதை ஏன் யாரும் எதிர்த்துப் போராடவில்லை என்பதும் புரியாத புதிர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

இந்து மதத்தின் மிக முக்கிய நூலாக விளங்கும் பகவத் கீதை, கடவுளே நேரடியாக மனிதனுக்கு கூறியதாக கருதப் படுவது. அதில் கடவுள் மக்களைக் காக்கவும், மக்களை அச்சுருத்தி அடிமைப் படுத்தும் தீயவர்களை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் பிறப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மார்க்கங்களில் அவ்வப்போது இறைத்தூதர்கள் அனுப்பப் படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்து மதத்தில் கடவுளே நேரடியாக பூமிக்கு வந்து நல்லது செய்வதாக உள்ளது, அவை அவதாரங்கள் என்று கூறப் படுகின்றன. அந்த அவதாரங்கள் கடவுளின் அவதாரம். ஆதலால், அந்த அவதாரங்களும் கடவுலேயன்றி வேறு ஒன்றாக கருதப்படவில்லை. எனவே அவதாரங்களை கடவுளாக கருதி வழி படுவதில் மக்களுக்கும் எளிதான விஷயம், கடவுளுக்கும் அது ஒப்புதலே!

மேலும் இது வரை தாங்கள் பார்த்தே இராத உருவம் இல்லாத கடவுளை வழி படுவதை விட , அதே கடவுள் தங்களுடன் வாழ்ந்து தங்களைக் காத்த வடிவில் வணங்குவது மக்களுக்கு மிகவும் விருப்பமான, எளிய வழிபாடு ஆகும்!

இன்னும் வள்ளுவர் ” வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர், வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்றார்.

உருவ வழிபாடு மனக் குவிப்பிற்கு உதவுகிறது. “எல்லையற்ற, உருவம் இல்லாத” என்று கூறினாலே உடனே நமது மனம் வான வெளியை எண்ணுகிறது. எனவே வெளியிலே பார்ப்பதை மனதிலே எண்ணுவது எளிதானது.

எனவே ஒரே தெய்வத்தை பல அவதாரங்களில், அவர் செய்த செயல்களை எண்ணி, அப்போது அவர் எடுத்த உருவத்தை எண்ணி வழிபாடு செய்வதில் இந்துவுக்கு எந்த தயக்கமும் இல்லை, மகிழ்ச்சிதான்!

உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்த்து கண்டிக்க வேண்டிய அவசியம் என்ன என்று நமக்குப் புரியவில்லை. எப்போதோ ஒரு முறை யூத வம்சத்தில் தோன்றிய ஒருவர் கண்டித்தார் என்பதற்காக ellorum கண்டிக்க வேண்டிய அவசியம் என்ன?

நீங்க‌ள் ஏன் காபா இருக்கும் திசையை ம‌ட்டும் நோக்கி வ‌ண‌ங்குகிரறீர்க‌ள்? காபாவில் எல்லொரும் ம‌ண்டியிட்டு வ‌ண‌ங்குவ‌து உருவ‌த்தின் முன் தானே?

//ஒவ்வொரு ஊருக்கு ஒரு கடவுள் உள்ளது,.ஏன் ஓவொரு வீட்டிற்க்கும் (kula theivankal) கடவுள் உண்டு.
ஏன் இத்தனை முரண்பாடு..உண்மையான மதம் பற்றி அறிய விரும்புபவனுக்கு இது இடியாப்ப சிக்கலாகவே உள்ளது..
உண்மையில் இத்தனை கடவுள்கள் சாத்தியமா?இதில் யாருடைய கடவுள் உண்மையானவர்..ஹிந்துமதத்தில் ஒரு கடவுள் கொள்கை உண்மையெனில்,மற்றைய கடவுள்கள் பொய்யே…//

பாஷா ப‌ட‌த்தில் பாஷாவாக‌ இருந்த‌ ர‌ஜினி, முத்து ப‌ட‌த்தில் முத்துவாக‌ இருந்த‌ ர‌ஜினி, ப‌டைய‌ப்பா ப‌ட‌த்தில் ப‌டைய‌ப்பாவாக‌ இருந்த‌ ர‌ஜினி, சிவாஜி ப‌ட‌த்தில் சிவாஜியாக‌ இருந்த‌ ர‌ஜினி, எல்லா ர‌ஜினியும் ஒரே ர‌ஜினி தான்.

ர‌ஜினி ர‌சிக‌ன் த‌ன் வீட்டில் பாஷா ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், முத்து ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், ப‌டைய‌ப்பா ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், சிவாஜி ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், எல்லாமே ர‌ஜினிதான்.

என‌வே நீங்க‌ள் உண்மையை புரிந்து கொள்ள‌ வேண்டும் என்று திற‌ந்த‌ ம‌ன‌த்துட‌ன் வ‌ந்தால் சிக்க‌லே இல்லை.

அருமை ந‌ண்ப‌ர் ஜ‌டாயு அவ‌ர்க‌ளுக்கு, இவ்வ‌ள‌வு வேக‌ம் தேவையா? நாம் இந்து அல்ல‌வா, ந‌ம‌க்கும் எல்லோரும் அதிதி அல்ல‌வா?

அவ‌ர் கேட்க்க‌ட்டுமே, வேறு எங்கு போய் கேட்பார்?

உள் நோக்க‌த்துட‌னே கேட்க‌ட்டுமே, இந்து ம‌த‌ம் அறிவின் அடிப்ப‌டையில் அமைக்க‌ப் ப‌ட்டு உள்ளதே!



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

ஜடாயு on August 11, 2009 at 8:51 am

திருச்சி சார், ரொம்ப சிரத்தையுடன் ரகுமானுக்கு பதில் சொல்ல முயற்சி செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இத்தகைய கேள்விகளுக்கு இந்து மதத்தில் அற்புதமான பதில்களும், முடிவின்றி விரியும் தேடல்களும் பல தளங்களில் தரப்பட்டுள்ளன.. ஆனால் அடிப்படை ஆபிரகாமிய மனோபாவமே, கடவுள் என்றால் என்ன என்பதை *நாம்* வரையறை செய்துவிடலாம், *நம் தீர்க்கதரிசி* வரையறை செய்து விட்டார் என்று இருக்கிறது (இது உண்மையில் self defeating logic). ஜாகிர் நாயக் என்ற இஸ்லாமிய பிரசாரகர் பேசிக் கேட்டிருக்கிறீர்களா? இப்படி ஆரம்பிப்பார் – Now let us define God.. who or what is *fit to be* a god. There are four criteria for the god.. number one …number two… இப்படி சொல்லிக் கொண்டே போவார். கடைசியில் Allah alone is fit to be a god என்று தீர்ப்பும் சொல்லுவார் :))) அதோடு நின்றுவிட்டால் பரவாயில்லை, ஆனால் அப்படி ஒரு god ஐ உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.. அப்படி ஏற்றுக் கொள்ளாதவர்களை அந்த godஇன் அடியார்கள் படுகொலை செய்வது அடியாட்களின் தார்மீகக் கடமை என்றெல்லாம் இது நீளும்.

இவர்களை என்னதான் செய்ய முடியும் என்று சொல்லுங்கள்.

“எனது ஒரு துளி அம்சத்தால் இந்த பிரம்மாண்டம் முழுவதையும் தாங்குகிறேன்” என்று கீதையும் “கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்” என்று திருமந்திரமும், “என்னானாய் என்னானாய் என்னின் அல்லால் ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே” என்று தேவாரமும், “உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருக்கள், உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருக்கள்” என்று திருவாய்மொழியும் பகரும் அகண்டாகாரமான பரம்பொருள் தத்துவத்தின் சிறு கீற்றுக் கூட சென்றடையாத பெரும் இருளில் (மகா தமோ குணம்) இவர்களது இறையியல் பற்றிய கொள்கைகள் இருக்கின்றன. அவற்றில் எந்த ஆன்மிக அனுபவமும் இல்லை. வெறுப்பும், அகந்தையும், மூடிய சிந்தனைகளும், அதிகார வெறியும் மட்டுமே உள்ளன.

என்ன பதிலும் அவர்களுக்குத் திருப்தியளிக்காது.. அதிலிருந்து இன்னொரு கேலியையும், அவதூறையுமே அவர்கள் உற்பத்தி செய்வார்கள்..

”சொல்லப் பயன்படுவர் சான்றோர் …. “ என்ற திருக்குறள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard