New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெரியார் திடல் கொள்கைக்காக அல்ல! பணத்திற்காக!)


Guru

Status: Offline
Posts: 24765
Date:
பெரியார் திடல் கொள்கைக்காக அல்ல! பணத்திற்காக!)
Permalink  
 


பெரியாரின் மறுபக்கம் – பாகம் 9 (பெரியார் திடல் கொள்கைக்காக அல்ல! பணத்திற்காக!)

 

பெரியார் திடல் வரலாறு!

periyar_marubakkam”இந்த பெரியார் திடல் மன்றத்திற்கு ஒரு வரலாறு உண்டு. ஒரு தடவை தந்தை பெரியார் அவர்கள் செயிண்ட் மெமோரியல் ஹாலில் மாநாடு கூட்ட வேண்டுமென்று கேட்டபோது அய்யாவின் கொள்கையை கேட்டுவிட்டு அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படியானால் இங்கேயே ஒரு பொது மண்டபம் அமைப்போம் என்று இந்த மண்டபத்தை அமைத்தார்கள். அப்போது அங்கே இருக்கிற எல்லோரையும் அழைத்து தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்:-

நாங்கள் கேட்டோம், மறுத்துவிட்டார்கள்-உடனே எனக்கு என்ன தோன்றிற்று? பொதுமண்டபம் ஒன்று சென்னையிலே இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் பயன்படவேண்டும். எனக்கு மாறுபட்ட கருத்து உடையவர்கள் கேட்டாலும் கொடுக்கவேண்டும், தைரியமாக.இன்னாருக்கத்தான் என்று இருக்கவேண்டிய அவசியமில்லை. ”பொது மண்டபம்” என்ற முறையிலே-நமக்கு அவர்கள் மறுத்ததற்கு நேர் எதிரிடையாக நீங்கள் நடக்க வேண்டும்…என்று சொன்ன காரணத்தினால்தான் இன்றைக்கு அய்யா அவர்கள் வகுத்த அந்த நெறிப்படி இங்கே அனைவருக்கும் பொதுவுக்குப் பயன்படும்படி இந்த மண்டபம் அமைக்கப்படுகிறது’’ என்று வீரமணி அவர்கள் ‘சங்கராச்சாரி யார்’ என்ற நூலிலே கூறுகிறார்.

மேலும் 31-03-1994 அன்று சன் டி.வி.யில் ரவி பெர்னாட் அவர்கள், ‘‘பெரியார்திடலில் தீ மிதி நடத்த வேண்டும் என்றால் ஒத்துக்கொள்வீர்களா?’’ என்று கேட்டதற்கு வீரமணி அவர்கள், ”தாராளமாக ஒத்துக் கொள்வோம். அதற்கு அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியையும் நாங்கள் நடத்துவோம்” என்றும்

அதைத் தொடர்ந்த கேள்விக்கு ”பெரியார் திடல் எங்களுடைய கட்சியினுடைய மன்றம் அல்ல” என்றும் பதில் கூறியுள்ளார்.

…வீரமணி சொல்கின்ற இந்த பெரியார் திடல் வரலாற்றை ஆராய்ந்தால் ஈ. வே. ராமசாமி நாயக்கர் எவ்வளவு முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறார் என்பது புலனாகும். மற்றொன்றையும் யோசிக்கும்போது ஈ. வே. ராமசாமி நாயக்கரே, மூடநம்பிக்கை வளர ஏற்படுத்தித்தந்த இடம்தான் பெரியார் திடல் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.

ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய இந்த வழி எப்படி தவறானது என்பதை இப்போது பார்க்கலாம்.

மெமோரியல் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்? இடம் கொடுக்காதவர்களுக்குத்தானே நஷ்டம்! அந்த இடம் இல்லையென்றால் வேறு இடத்தில் நடத்தலாம் அல்லவா? அதைவிட்டுவிட்டு அவர் இடம் தரவில்லை. அதனால் பொது மன்றம் ஒன்றை ஆரம்பித்தேன் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் சொன்னது பகுத்தறிவின் செயலா? அதுவும் கொண்ட கொள்கைக்கு ஆபத்து ஏற்படுவதென்றால் அது வீண்வேலை தானே!

உதாரணமாக ஒன்றை நினைத்துப்பாருங்கள்.

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பேட்டியை ஒரு பத்திரிகை அவர்களின் கொள்கைக்கு முரணாக இருப்பதால் வெளியிடவில்லை என்பதற்காக எல்லோருடைய கொள்கைகளையும் சொல்லும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறேன் என்று வீரமணி சொல்வாரா?

இங்கே ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

veramani14.08.98 அன்று கோலாலம்பூரில் வீரமணி தன்னுடைய நிகழ்ச்சிக்கு இடம் கொடுக்காததைப் பற்றி பேசும் போது ”நண்பர்களே கீதையின் மறுபக்கம் நூலை அறிமுகப்படுத்த இங்கு இடம் தர மறுத்தால் இன்னொரு இடத்தில் அறிமுகம் செய்து வைத்துவிட்டுப் போகிறோம். புத்தகம் பரவுவதில் எங்களுக்கொன்றும் எந்தச் சங்கடமும் இல்லை. இடம் கொடுத்தவர்களுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கக்கூடாது என்ற உணர்வோடு நாங்கள் நடக்க வேண்டுமென்று விரும்புகிறோம். இதை ஒரு பெரிய குற்றமாகக் கூடக் கருதவேண்டிய அவசியமில்லை. ஆகா! இந்த இடத்தில் தான் பண்ணவேண்டும். அந்த இடத்தில்தான் பண்ணவேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் பகுத்தறிவுவாதிகள்” என்று கூறுகிறார்.

ஆனால் இப்படி பேசியிருக்கின்ற வீரமணி என்ன செய்திருக்க வேண்டும்? ஈ. வே. ராமசாமி நாயக்கரின் வழிப்படி, கொள்கைப்படி, கோலாலம்பூரில் ஒரு பொதுமன்றத்தைக் கட்டி எல்லோருக்கும் பொதுவாக வாடகைக்கு விட்டிருக்கவேண்டுமா? இல்லையா? அதையும் விட்டுவிட்டு ஈ. வே. ராமசாமி நாயக்கரின் வழியையும் விட்டுவிட்டு, இன்ன இடத்தில்தான் பண்ணவேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்று கூறுகிறாரே, அப்படியென்றால் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவுவாதி இல்லையா? ஒருவர் இடம் கொடுக்கவில்லை என்றால் மற்றொரு இடத்தில் நடத்திடவேண்டும். அவர்தான் பகுத்தறிவுவாதி என்று வீரமணியே சொல்கின்றபோது ஈ. வே. ராமசாமி நாயக்கர் செய்தது பகுத்தறிவின் செயல் அல்ல என்பது தெளிவாகின்றதே! வீரமணிக்கு இருந்த பகுத்தறிவு கூட ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு இல்லையே!

இது ஒருபுறம் இருக்க,

பொதுமன்றம் ஆரம்பித்ததன் மூலம் இவர்களே இவர்கள் கொள்கைக்கு முரணாக நடந்துகொள்கிறார்கள். எப்படியென்றால் பெரியார் திடலில் அடிக்கடி அற்புத சுகமளிக்கும் தெய்வீக கூட்டங்கள் நடைபெறுகின்றன. காது கேட்காதவர்களுக்கு காத கேட்கவைப்பது, குருடர்களை பார்வையடையச் செய்வத போன்ற நிகழ்ச்சிகள் பக்தியின் பெயரால் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 500 பக்தர்களுக்கு மேல் வருகின்றார்கள். நிகழ்ச்சி நடக்கும்போது மேலும் அங்கே பக்தி ஊட்டப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் போய் விடுகிறார்கள். ஆனால் அடுத்த நாள் வீரமணி சொல்கின்றது போல, மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தினால் அற்புத சுகமளிக்கும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் அல்லது பக்தர்கள் மறுநாள் நடக்கும் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா?

பெரியார் திடலில் தீமிதி விழா நடந்தால் சுமார் 500 பக்தர்களுக்கு மேல் வருவார்கள். ஆனால் அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடந்தால் முதல் நாள் தீமிதி விழாவில் வந்தவர்கள் இதற்கு வருவார்களா? கண்டிப்பாக வரமாட்டார்கள். ஆகவே பெரியார் திடலை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் இவர்களே பக்தியை ஏற்படுத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்! இதுதானா மக்களை பகுத்தறிவுவாதிகளாக மாற்றும் முறை?

பெரியார் திடலில் அடிக்கடி இயேசு ஜீவிக்கிறார் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதா? இல்லவே இல்லை! ஆதாரத்தோடு பகுத்தறிவுவாதிகள் இதை நிரூபிக்கமுடியுமா? அப்படி ஒருவேளை நடத்தப்பட்டிருந்தால் இயேசு ஜீவிக்கிறார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எத்தனைபேர் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்?

எலியை வயலில் அனுமதித்துவிட்டு, வயல் பாழாகிறதே என்று அலறிவிட்டு பின்பு எலியை விரட்டுகிறேன் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ-ஏமாற்றுத்தனமோ…

பாம்புக்கு பால் வைத்துவிட்டு ‘பாம்பு ஒழிப்பு’ நிகழ்ச்சி நடத்தினால் அது எவ்வளவு முட்டாள்தனமோ-ஏமாற்றுத்தனமோ…

திரைப்படம் எடுப்பதற்கு பணம் தந்துவிட்டு ”திரைப்படம் ஒழிப்பு” போராட்டம் நடத்தினால் அது எவ்வளவு முட்டாள்தனமோ… ஏமாற்றுத்தனமோ.. அதேபோல்தான் பெரியார் திடலில் பக்தியை பரப்பும் இயேசு ஜீவிக்கிறார் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு இடம் கொடுத்துவிட்டு, அவர்கள் போன பின்பு..(கவனிக்கவும்) அவர்கள் போன பின்பு-அய்யோ! மக்களுக்கு பக்தி பரவுகிறதே, மூடநம்பிக்கை பரவுகிறதே! என்று அலறிவிட்டு, பக்தியை ஒழிக்கிறேன் என்னும் பேரால் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துவதும் முட்டாள்தனமான செயலாகும்.

பகுத்தறிவுவாதிகளே! ஆங்காங்கே கூட்டம்போட்டு மக்கள் பக்தி போதையில் அறிவை இழக்கிறார்கள் என்று உரக்க கத்துகிறீர்களே அந்த பக்தி போதை வளர நீங்கள் வாடகைக்கு இடம் கொடுப்பதன் மூலம் ஒரு காரணியாக இருக்கின்றீர்கள் என்பதை மறுக்கமுடியுமா?

தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றால் அதற்கு மறுநாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துவோம் என்று வீரமணி சொல்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தீமிதி நிகழ்ச்சி நடந்தால் மூடநம்பிக்கை வளர்கிறது. அதனால்தான் நாங்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்றுதானே அர்த்தம்! பிறகு ஏன் மூடநம்பிக்கை வளர பெரியார் திடலில் முதலில் அனுமதி தரவேண்டும்? தாங்களே அதை வளர்த்துவிட்டு அதை நாங்கள் ஒழிக்கிறோம் பாருங்கள் என்று சொல்வதுதான் பகுத்தறிவா?

எல்லோருக்கும் இடம் கொடுப்பதன்மூலம் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு தெரிகிறதாம்! மெமோரியால் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் அவர் கொள்கையில் வழுவாமல் நிற்கிறார் என்றுதானே பொருள், ஈ. வே. ராமசாமி நாயக்கர் இடம் கொடுக்கிறார் என்றால் அங்கே பண்பாடு எங்கே தெரிகிறது? கொள்கை நழுவல்தானே தெரிகிறது. பண்பாட்டிற்காக என்றால் இலவசமாக கொடுத்திருக்கலாமே! மாற்றுக் கொள்கை உடையவர்களுக்கு கூட தங்களுடைய இடத்தை இலவசமாக தருகிறார்களே என்று மக்கள் இவர்களை புகழ்ந்திருப்பார்களே! ஆனால் உண்மையில் இது பண்பாட்டிற்காக அல்ல.

பெரியார் திடல் பணத்திற்காகவே!

பணத்திற்காக! பணத்திற்காக மட்டுமே!!

தங்களுடைய இயக்கத்திற்கு பணம் சம்பாதிக்கவே ஈ. வே. ராமசாமி நாயக்கர், பெரியார் திடலை கட்டினார் என்பதுதான் உண்மை. இல்லையென்றால் ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய சொந்தப் பணத்தில் இதைக்கட்டியிருக்கலாமே. இதை விட்டுவிட்டு மக்களிடம் பணம் வசூலித்துதானே இந்த மன்றத்தை ஈ. வே. ராமசாமி நாயக்கர் கட்டினார். மக்கள் பணம் தரவில்லை என்றால் இதை கட்டியிருப்பாரா ஈ. வே. ராமசாமி நாயக்கர்? தன்னுடைய சொந்தப் பணத்தில் இதைக் கட்டியிருந்தால் பண்பாட்டிற்காக என்று சொல்லலாம். ஆனால் மக்களிடம் வசூலித்த பணத்தில் கட்டிவிட்டு பண்பாட்டிற்காக கட்டினார் என்று சொன்னால் அதை நம்புவன் முட்டாளாகத்தான் இருப்பான். அதனால்தான் ஈ. வே. ராமசாமி நாயக்கரும் தன்னுடைய இயக்கத்திற்கு முட்டாள்கள்தான் வேண்டும் என்றார். அந்த அழைப்புக்கிணங்கித்தான் வீரமணியும் இயக்கத்தில் சேர்ந்தது. தற்போது ஈ. வே. ராமசாமி நாயக்கர் செய்த முட்டாள்தனமான காரியம் என்றும் தெரிந்தும் அதை பண்பாட்டிற்காக என்று வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்!

பெரியார் திடலின் நோக்கம் பண்பாடு அல்ல. பணம் என்பதை இவர்கள் வாடகை அதிகமாக வாங்குவதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதில் இன்னொரு விஷயம்.

பெரியார் திடல் தங்களுடைய கட்சியினுடையது அல்ல என்று வீரமணி கூறுகிறார். அப்படியென்றால் அது யாருடையது? அது யார் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகிறது? அதனுடைய தலைவர், செயலாளர் என்பவர்கள் யார்? அந்த வாடகைப் பணம் யார் வசூலிக்கிறார்கள்? இது போன்ற விஷயங்களை வீரமணி சொல்லியிருக்க வேண்டாமா?

இது எங்கள் கட்சியினுடையது அல்ல என்று வீரமணிதான் சொல்கிறாரே தவிர, அதன் உரிமையாளர் அல்லது பெரியார் திடலை நிர்வாகிப்பவர் இது தி.க. வினுடையது அல்ல என்று இதுவரை ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லையே ஏன்? பெரியார் திடலை விமர்சிக்கும்போது அதை எதிர்த்து வீரமணி மட்டுமே குரல் கொடுக்கிறாரே தவிர அதனை நிர்வாகிப்பவர் அல்லது அதனுடைய தலைவர் குரல் கொடுத்ததில்லையே ஏன்? பெரியார் திடல் எந்த அமைப்பின்கீழ், யாருடைய கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது என்று இனிமேலாவது வீரமணியோ அல்லது அதனை நிர்வாகிப்போரோ சொல்வார்களா?

வீரமணி பெரியார் திடல் எங்கள் கட்சியினுடையது அல்ல என்று கூறுகிறார். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

anaimuthu2

ஆனைமுத்து

திருச்சி வே. ஆனைமுத்து கூறுகிறார்:-

இயக்க நிதி என்பது ”சுயமரியாதை ஸ்தாபன-திராவிடர் கழக நிதியே ஆகும் என்பதையும் அய்யாவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

”சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியவற்றிற்குக்கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன்; கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள்; அல்லது பொது மக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள்; அவ்வளவுதான்”(விடுதலை, தலையங்கம் 26-08-1972) அய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் சென்னை பெரியார் திடல் மனை வாங்கவும், கட்டடங்கள் கட்டவும், ”திராவிடர் கழகக் கட்டட நிதி” என்ற பேரால் தான் கழகத் தோழர்கள் வசூலித்ததும், பொதுமக்களே முன்வந்தும் அய்யாவிடம் ரூபாய் இரண்டரை லட்சம் அளிக்கப்பட்டது.

(நூல்:- பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்)

வே. ஆனைமுத்து சொல்வதன் மூலம் நமக்கு தெரிவதென்ன?

திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திடல் இரண்டும் ஒன்றுதான் என்பதுதானே!

திராவிடர் கழகம் வேறு, பெரியார் திடல் வேறு என்று வீரமணி சொல்வது பொய்தானே!

மேலும் ஒரு கேள்வி.

இந்து முன்னணியோ, ஆர். எஸ். எஸ். அல்லது விஸ்வ ஹிந்து பரிஷத்தோ நிகழ்ச்சி நடத்த பெரியார் திடலை வாடகைக்குத் தருவார்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: பெரியார் திடல் கொள்கைக்காக அல்ல! பணத்திற்காக!)
Permalink  
 


ம.வெங்கடேசன் on July 26, 2009 at 9:16 am

மகிழ்நன் அவர்களுடைய ப்ளஸ்பாயிண்ட் என்னன்னா அவர் எப்போதுமே நமது கட்டுரைக்கு பதில் சொல்லியது கிடையாது. அதனால் அவர் விமர்சனத்தை விட்டுவிடுவோம்.

சீனிவாசஸ் அவர்களுக்கு
மதம் நம் அக வாழ்வை உயர்த்திடவே.

எமது இந்து மதம் மனிதனை உயர்த்த அரும்பாடு பட்டு வருகிறது. அதனால்தான் உலகில் தொன்மையான பல மதங்கள் அழிந்தும்கூட இந்துமதம் இன்றும் உயிரோடு இருக்கிறது. இந்து மதத்தைப் பற்றி ஆன்மிக பெரியார்கள் எழுதிய புத்தகங்களை படியுங்கள்.

நமக்கு வேட்டி கட்டவும், நம் பெண்களுக்கு ரவிக்கை போடவும் உரிமையை பெற்று தந்தவர் அய்யா என்று கூறுகிறீர்கள். அதற்கு ஆதாரமாக ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்.

வேட்டி கட்டவும், பெண்கள் ரவிக்கை போடவும் பெரியார் போராடினாரா? அப்படி என்ன போராட்டத்தை நடத்தினார் பெரியார்? எப்போது நடத்தினார்?

தாழ்த்தப்பட்ட மக்கள் படித்த்தாலேயே வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரித்துவிட்டது, தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிந்த்தாலேயே துணிவிலை ஏறிவிட்டது என்று தன் உள்ள நஞ்சை உமிழ்ந்தவர் பெரியார்.

செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகன் , ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் அமர்ந்து கொண்டு கேட்கிறான். அப்படி என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?
சரியான கேள்விதானே? பெரியார் அப்படி என்ன கிழித்துவிட்டார்?
சேரன்மா குருகுலத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் பிராமண மாணவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று வாய்கிழிய பேசிய பெரியார், அதே காலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்றிருந்த நிலைமைக்கு ஏன் போராடவில்லை?
பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் பாடுபட்டாரே தவிர தாழ்த்தப்பட்டோருக்கு அல்ல என்பதை பற்றிய கட்டுரை இந்த தொடரில் வர இருக்கிறது. அதைப் படித்த பின்பு உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்.

செருப்பு தைக்கும் மகன் இன்று பன்னாட்டு நிறுவனத்தில் அமர்ந்திருக்கிறான் என்றால் அது புரட்சியாளர் அம்பேத்கரின் உழைப்பு, தியாகம், போராட்டம்தான் காரணம் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கான போராட்டங்களை பெரியார் நடத்தியதுண்டா?
உடனே வைக்கம் போராட்டத்தை சொல்வீர்கள். அது காங்கிரசினுடைய போராட்டம். அப்போது பெரியார் இந்து மத த்தை நேசித்தவர், ஆத்திகர், காங்கிரசினுடைய வேண்டுகோளின்படியே இப்போராட்டத்தில் பங்கு கொண்டார். இதை பற்றியும் விரிவான கட்டுரை வர இருக்கிறது. நான் கேட்பது சுயமரியாதை இயக்கம் அல்லது திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக தனியாக போராட்டம் பெரியார் தலைமையில் நடத்தயதுண்டா?

இன்று தாழ்த்தப்பட்டோர் அனுபவிக்கும் உரிமைகளுக்கெல்லாம் காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்தான். தயவு செய்து பெரியாரை இதில் வம்படியாக இழுத்துவந்துவிடாதீர்கள். அது புரட்சியாளர் அம்பேத்கருக்கு செய்யும் துரோகம். புரட்சியாளர் அம்பேத்கரை படியுங்கள். புரியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

ராம்குமரன் on July 27, 2009 at 11:58 pm

//பெரியாரை உயர்த்தி தான் பேசினேன். அம்பேத்கரை நான் தாழ்த்தி பேசவில்லை. இருவரும் மக்களின் அடிமை வாழ்கையை மாற்ற போராடியவர்கள் தாம்.

நீங்கள் அம்பேத்காரை தாழ்த்தி பேசியதாக யாரும் கூறவில்லை. தலித் மக்களின் விடுதலைக்கு உண்மையாக பாடுபட்டவர் அம்பேத்கார், ஈவேரா அல்ல.

//ஏன் அம்பேத்கர் ஆராய்ச்சி செய்யாத வேதமா, உபநிடதங்களா, புராணமா? பிறகு ஏன் அவர் இந்து மத மேன்மையை உணராமல் புத்த மதத்திற்கு மாறினார். இந்து வாக இருப்பதிற்கு செத்து விடுவதே மேல் என்றாரே ஏன்?

அம்பேத்கர் சொன்னது நான் இந்துவாக இறப்பதற்கு விரும்பவில்லை என்பது. அவர் மதம் மாறும்முன் சீக்கிய, இஸ்லாமிய, புத்த , கிறித்துவ மத பெரியவர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பின்னர் புத்தமதம் சிறந்தது என்று அதில் சேர்ந்துள்ளார். அப்படியானால் அம்பேத்கார் புத்த மதம் மட்டுமே மேண்மையானது என்று சொல்கிறாரா? மற்ற எல்லா மதங்களும் கடவுள் என்ற கொள்கையை முன்வைக்கின்றன, ஆனால் புத்தமதம் கடவுள் என்ற ஒன்றும் இல்லை என்கிறது. அம்பேத்கார் கடவுள் என்பதை அடிமைப்படுத்தப்படும் ஒரு சாதனமாக பார்த்தார் , அதனால கடவுள் இல்லாத மதத்திற்கு தன் மக்கள் வரவேண்டும் என்று விரும்பினார்.

அம்பேத்கார் சாத்வீகமான முறையில் சாதிய அடக்குமுறைகளை எதிர்தாரேயன்றி ஈவேரா போல காட்டுமிராண்டி தனமாக நடந்துக் கொள்ளவில்லை. ஈவேரா போக்கில் ஒரு வேகம் இருந்ததே அன்றி விவேகம் இருக்கவில்லை.

//பெரியார் ‘சுதந்திரமே வேண்டாம், வெள்ளைக்காரனே ஆட்சியில் இருக்கட்டும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் நம் நாட்டிற்கு இந்துநாடு என்று பெயர் வைப்பதற்கான சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. பேசாமல் வெள்ளைக்காரனே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்றார்.
இந்துக்கள் 85% இருக்கும் நாட்டிற்கு இந்து நாடு என்று பெயர் வைக்காமல் ஈவேராநாடு என்றா பெயர் வைப்பது?
அப்படி பெரியாரது கூற்றுப்படி தான் நடந்ததா? வெள்ளைக்காரர்கள் கொள்ளை முடிந்தப் பின் சென்றார்கள். அதன் பிறகு என்ன பார்பனர்கள் சூழ்ச்சி செய்தார்களா? ஆனால் பெரியார் சொல்படி இருந்தால் நாம் இன்னும் இங்கிலாந்தின் அடிமையாகத் தான் இருந்திருப்போம்.

//இந்த பிறவி இழிவைப் போக்குவதற்கு வெள்ளைக்காரன் காலைக்கூட நக்குவதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.
//பார்ப்பான் காலை நக்குவதற்கு , british காரன் காலை நக்குவதே மேல்.

அப்பொழுது ஈவேரா தலித்துக்களை வேறொருவன் கால்நக்க தான் வேண்டும் என்று சொல்கிறாரே தவிர, அவர்களின் உரிமையை நிலைநாட்ட விரும்பவில்லை.

//நான் படித்து விட்டேன், உயர்ஜாதியினர் என்று சொல்லக்கூடியவர்கள் வகிக்கும் எல்லா பதவிகளிலும் நானும் வந்துவிட்டேன். இந்தியாவின் முதல் குடிமகனாகவும் பதவி கிடைத்து விட்டது. அதனால் என்னை பிராமணனாக நீங்கள் ஒத்துக்கொண்டீர்களா?

ஒரு புறம் ஜாதி இல்லை , அது உயர்வு தாழ்வுகளை சொல்கிறது என்று சொல்லிக்கொண்டே இன்னொரு புறம் என்னை பிராமனன் என்று ஒத்துக்கொள்வார்களா என்பது நகைப்பிற்குறியது. இந்து மதம் வெவ்வேறு வருணங்கள் இருக்கிறது என்றுதான் சொல்கிறதே தவிர எல்லாவற்றையும் ஒன்றாகத்தான் கருதுகிறது. ஒன்று உயர்வு ஒன்று தாழ்வு என்று சொல்வதில்லை. அதன் பின்னர்தான் என்னை அதுவாக ஒத்துக்கொள்வார்களா என்ற கேள்வி எழுகிறது. தற்பொழுதைய நிலைமையின் படி ராணுவ வீரர்கள் மட்டுமே சத்ரியன் என்று அழைக்கப்பட தகுதியுள்ளவர்கள் . மற்ற அனைவரும் உழைக்கும் வர்கத்தில் தான் இருக்கின்றனர், பிறகு என்ன நான் பிராமனன் ஆக முடியுமா என்ற கேள்வி? பிராமனர்களே அவர்களது கடமையை விட்டு பல காலம் ஆயிற்று

//அடிமையாக இருந்த நம்மை எப்படியோ போராடி கோவிலுக்குள் நுழைய வைத்து விட்டார்கள், இப்போது அங்கிருந்து வெளியே வராமல் இந்து மத பெருமையை பாடி கொண்டு இருக்கிறோம்.

அப்படி நீங்கள் கோயிலில் இருந்து வெளியே வந்தால் அடிமையாக இருந்தவர்களை கோவிலுக்குள் நுழைய வைத்தற்கான போராட்டம் அர்த்தமில்லாமல் போய்விடும். எந்த ஒரு அமைப்புமுறையும் ஒரு நல்ல எண்ணத்தோடுதான் உருவாக்கப்படுகிறது . ஆனால் காலப்போக்கில் அதிலே சில தேவையற்ற கட்டுப்பாடுகள் , அனர்த்தங்கள் உருவாகின்றன . உதாரணம் ஜனநாயகம் மக்களால் … என்று போற்றப்படும் ஒன்று நம் நாட்டில் தவறாக உபயோகிக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தவர் ஆசியாவின் மிகப்பெரிய் பணக்காரர் ஆக முடிகிறது. ஒரு கான்ஸ்டெபிளின் மகன் கூட ஏய் நான் யார் தெரியுமா என்று மார்தட்ட முடிகிறது. அப்பொழுது ஜனநாயகம் என்பதே வேண்டாம் என்கிறீர்களா. அதுபோல வருண முறையால் ஜாதி வளர்ந்தது. ஒரு காலத்தில் அது தவறாக உபயோகிக்கப்பட்டது , அதை சுட்டிக்காட்டி மனிதரை சீர் செய்ய நானக், கபீர், நாராயணகுரு, அம்பேத்கார் போன்றோர் தோன்றியிருக்கின்றனர் அதற்காக இந்துமதத்தையே இழிவுபடுத்துவது என்பது அபத்தம்.

// பெரியார் பெண்களுக்காக போராட வில்லையா? என்ன காமெடி செய்கிறீர்கள். 1942 ஆம் அவர் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலை படியுங்கள்.” உங்களுக்கு விளங்கும். காதல்,கற்பு, விபசாரம், சொத்துரிமை என்று அவர் கூறிய கருத்துக்கள் இன்று படித்த பட்டம் பெற்ற சிலராலேயே ஏற்று கொள்ள முடியாது. அவ்வளவு முற்போக்கான கருத்துக்கள்.

பெண்ணுக்கு கற்பு என்பதே அடிமைத்தனம் என்று சொன்னவர் ஈவேரா. அப்படி இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசியுங்கள் . குடும்பம் என்ற ஒன்றே இல்லாமல் இருந்திருக்கும் அப்படிப்பட்ட சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகள் கதி என்னவாகும். இதன் மூலம் ஒரு ஒழுக்கமற்ற சமுதாயத்தை உருவாக்க முயன்றவர் ஈவேரா
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு என்று ஒன்று உண்டு என்று சொன்னால் அது நல்லது , அதைவிடுது கற்பு பெண்ணுக்கு மட்டுமா அதை தூக்கு என்று சொல்லவது அவரது ஆராயாமல் முடிவெடுக்கும் அறிவை காட்டுகிறது

// பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது , தமிழகத்தில் மட்டும் ஏன் கலவரம் நடக்கவில்லை தெரியுமா? இந்தியாவிலேயே தமிழகம் தான் முற்போக்கு சிந்தனை மக்கள் அதிகம் உள்ள மாநிலம் தெரியுமா? இதற்க்கு காரணம் பெரியார் தான் தெரியுமா?

பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுது கலவரம் வடமாநிலங்களில் மட்டுமே நடந்தது. மற்ற மாநிலங்களில் கலவரம் ஏற்படாமைக்கு ஈவேராதான் காரணமா?ஆனால் பெரியார் சிலைக்கு ஸ்ரீரங்கத்தில் அவமதிக்கப்பட்டதிற்கு சென்னை அயோத்திய மண்டபத்தில் குண்டர்கள் தாக்கினர் இதற்கு காரணம் யார் தெரியுமா? பெரியார் தான் தெரியுமா.

5) தமிழை ஏன் திட்டினார் என்றால், புராண புளுகுகளில் இருந்து இந்த அழகிய தமிழை மொழியை பிரிக்க முடியவில்லை என்று திட்டினார். தமிழில் என்ன இருக்கிறது அறிவியல் பூர்வமாக ?. சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

இதுவும் பைத்தியக்காரத்தனம் ஒரு மொழியில் உள்ள தன் கருத்திற்கு எதிரான புத்தகங்களை தவிர்பதற்கு அந்த மொழியை நீக்க சொன்ன தன்மை. இது கொசுவிற்கு பயந்து குடிசையை எரித்துவிடு என்பது போல உள்ளது. ஈவேராவின் கொள்கைகள் அழிப்பதை தான் அடித்தளமாக கொண்டுள்ளதே தவிர ஆக்கத்தை அல்ல. அவரே ஒரு ஆக்கப்பூர்வமான மனிதராக இருந்தால் , தலித்துகளை உங்களின் எண்ணங்களை உங்களுக்கு தெரிந்த தமிழிலேயே எழுதுங்கள். நான் அதை பிரபலப்படுத்துகிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும் அதை விடுத்து அந்த மொழியையே அழித்துவிடு.ஆங்கிலமே போதும் என்று சொன்னது அபத்தம், அவரின் அறிவீனம்.

ஏதோ ஒரு இஸ்லாமிய மன்னன் குரானை தவிர வேறு புத்தகம் இல்லை என்று அலெக்சாந்திரியா நூலகத்தை கொளுத்தினானாம். சிங்கள வன்முறையாளர்கள் யாழ் நூலகத்தை தீயிட்டு கொளுத்தினர். இந்த சம்பவங்களுக்கும் ஈவேரா சொல்வதற்கும் அதிகம் வித்தியாசம் இல்லை

பெரியாரை பிரித்து விட்டு , தமிழர் வரலாற்றை யாரும் எழுதி விட முடியாது.

ஆம் சூரனை பிரித்துவிட்டு வேலனின் வரலாற்றை யாரும் எழுத முடியாது என்பது போல , இசுலாமிய படையெடுப்பை பிரித்துவிட்டு இந்திய சீரழிவை எழுத முடியாது என்பது போல இதுவும் முடியாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

ம.வெங்கடேசன் on July 28, 2009 at 7:23 pm

பெரியாரை தூக்கிப் பிடித்து எழுதுபவர்கள் அனைவரும் ஒன்றை தவறாமல் எழுதுகிறார்கள். அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு பெரியார்தான் காரணம், அவர் இல்லையென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியே இருக்க முடியாது என்பது போல எழுதுகிறார்கள்.
பெரியாரை பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்களுக்கு கிடைத்து இருக்கும் இந்த எழுத்து உரிமை கூட அய்யா அவர்கள் சிந்திய வியர்வையில் விளைந்த பூ தான் – என்று கூறி தாழ்த்தப்பட்டவர்களை மட்டம் தட்டுகிறார்கள்.
அதாவது இவர்கள் சொல்லவருவது என்னவென்றால் பெரியார் ஒருவர் பிறந்திருக்கவில்லை என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் கதி அதோகதிதான்.
பெரியாரை புகழ்ந்து எழுதுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அவரை புகழும் சாக்கில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தாழ்த்தப்பட்ட தலைவர்களை மறைக்காதீர்கள். வரலாற்றில் நீங்கள் செய்த்தெல்லாம் இதுதான்.
பெரியார் வேசிகளின் வீட்டில் சல்லாபம் செய்த காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர்கள்தாம்.
1. பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-1914)
2. இரட்டைமலை சீனிவாசன் (1860-1945)
3. எம்.சி.ராஜா (1883-1945)
4.பேராசிரியர் என்.சிவராஜ் (1892-1964)
5. பி.எம்.மதுரைப்பிள்ளை (1858-1913)
6. டி.ஜான்ரத்தினம் (1846-1942)
7. பி.வி.சுப்பிரமணியம் (1859-1936)
8.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை (1878-1938)
9.வி.தர்மலிங்கம்பிள்ளை (1874-1944)
10.ம.பழனிச்சாமி (1870-1941)
11.சுவாமி தேசிகானந்தா (1877-1949)
12.ஆர்.வீரையன் (1886-1938)
13.வி.ஐ.முனுசாமிப்பிள்ளை (1899-1955)
14.எம்.சி.மதுரைப்பிள்ளை (1880-1935)
15.ஜி.அப்பாதுரையார் (1890-1962)
16.சுவாமி சகஜானந்தர் (1891-1958)
17.பி.எம்.வேலாயுதபாணி (1896-1962)
18. பி.பரமேஸ்வரன் (1909-1957)
19.எம்.கிருஷ்ணசாமி (1917-1973)
20. அகில இந்திய அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய பணி அளவிட முடியாத்து.
– இதுபோன்ற தாழ்த்தப்பட்ட தலைவர்களின் அயராத உழைப்பினாலும் போராட்டங்களாலும்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று முன்னேறியிருக்கின்றார்கள். ( இவர்களைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள வேண்டுமானால் அன்புபொன்னோவியம் அவர்கள் எழுதிய மக்களுக்கு உழைத்த பெருமக்கள் என்ற நூலை படியுங்கள்)
இதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் நடத்திய பத்திரிகைகள் :
சூரியோதயம் (1869)
பஞ்சமன் (1871)
சுகிர்தவசனி (1877)
திராவிடமித்திரன் (1885)
திராவிட பாண்டியன் (1885)
பூலோக வியாசன் (1900)
தமிழன் (1907)
ஆதிதிராவிட மித்திரன் (1907)
ஆன்றோர்மித்திரன் (1910)
மகாவிகட தூதன் (1886)
பறையன் (1893)
விகடதூதன் (1897)
இல்லற ஒழுக்கம் (1899)
மதராஸ் டெம்ப்ரன்ஸ்
ஹெரால்ட் (1899)
தமிழன் (கோலார்) (1926)
சாம்பவகுலமித்திரன் (1930)
ஆதிதிராவிட மித்திரன் (சென்னை) (1939)
புத்துயிர் (1940)
இதுபோன்ற எண்ணற்ற பத்திரிகைகள், மாநாடுகள், போராட்டங்கள், கூட்டங்கள் வாயிலாக தாழ்த்தப்பட்டோர் இன்று அனுபவிக்கும் உரிமைகளை பெற்றுத் தந்தனர்.
ஆனால் இன்று பிச்சையெடுத்த பெருமாளு, பிடுங்கித் தின்ன அனுமாரு என்று சொல்லப்படுகிற பழமொழி? போல தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளையெல்லாம் பெரியார் பெற்றுத் தந்த்துபோல பேசுவது, எழுதுவது யாரை ஏமாற்ற?
தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன என்பதை இவர்கள் இருட்டடிப்பு செய்வதால்தானே இன்று என்னைப் போல் உள்ளவர்கள் பெரியாரை விமர்சனம் செய்யவருகிறார்கள்?
தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெரியார் என்னென்ன போராட்டங்களை நடத்தினார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லையே ஏன்?

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

அரிசி விலை கூடியதற்குக் காரணம் கஞ்சி சாப்பிட்டுக்கொண்டிருந்த பறையன் எல்லாரும் அரிசி சோறு சாப்பிட ஆரம்பித்து விட்டான் என்றும்…

பருத்தி விலை அதிகமானதற்குக் காரணம் நம்மூர் பெண்கள் எல்லாரும் ரவிக்கை போட ஆரம்பித்தது தான் என்றும் அறிவுஜீவித்தனமாக முழங்கியவர் ஈவேரா.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard