New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ராமசாமி நாயக்கர் - ஆங்கில மோகம்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
ராமசாமி நாயக்கர் - ஆங்கில மோகம்
Permalink  
 


பெரியாரின் மறுபக்கம் – பாகம் 2 (ஆங்கில மோகம்)

 

”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”

”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”

”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?”
நூல்:- தமிழும் தமிழரும்

இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான்.
(விடுதலை 03.03.1965)

(முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடான பேச்சு என்பதைப் பாருங்கள்! இதுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு மிக்க, நாணயமான பேச்சு.)

”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.
(குடியரசு 20.01.1920)

”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)

”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”

”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”

”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

periyar_marubakkamதமிழ் மொழி மீது வெறுப்பும், ஆங்கில மொழி மீது பற்றும் கொண்ட ‘ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழுக்காக அரும்பாடுபட்டவர் என்று சொல்கின்றனர். ஆங்கில மோகம் கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தொல்காப்பியரையும், கம்பனையும் தமிழ் துரோகிகள் என்று சொல்கின்றனர். இதைச் சொல்ல ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்பது தான் உண்மையானத் தமிழர்களின் கேள்வி.

அது மட்டுமல்ல, ஆங்கிலம் படித்தால் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகிவிடுவார்கள் என்று சொல்லுகின்றாரே ஈ. வே. ராமசாமி நாயக்கர்-

-அப்படியானால் ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஆற்றலும் திறமையும் உடையவர்களா? ஆங்கிலேயே நாட்டிலேதான் பிச்சைக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியானால் ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்களுக்கும் ஆற்றலும் திறமையும் இருந்திருக்குமே, எதற்காக ஆற்றலும் திறமையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்? ஆக ஆங்கிலம் படிப்பதால் மட்டும் ஒருவர் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி விடமுடியாது.

அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர், தன் மனைவியுடனும், வேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்திலேயே பேசினாரா? இல்லையே! சாக்ரடீஸ் முதலானவர்களோடு ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஓப்பிடுகிறார்களே- அப்படியானால் ஆங்கிலப் புட்டிப்பாலை உண்டுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவாளரானாரா? ஆங்கிலம் படித்ததனால் ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு ஆற்றலும் திறமையும் வந்ததா? பதிலைப் பகுத்தறிவுவாதிகள்தான் சொல்ல வேண்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

நீங்கள் சிந்திக்க சில கேள்விகள்…

01. ஆங்கிலத்தை கையில் எடுத்துக்கொண்டது பெரியாரின் தொலைநோக்கு. சரி. ஆனால், ஹிந்தியை எதிர்க்க, ஆங்கிலத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர், தமிழைக் கொச்சைப் படுத்துவது ஏன்?

02. புராணக் குப்பைகள் ஆங்கிலத்தில் இல்லையா? தொலைநோக்குப் பார்வையில் கிட்டப்பார்வை குறை என்று இதைச் சொல்லலாமா? ஆங்கிலம் புராணக் குப்பைகளைத் தண்ணி தெளித்துவிட்ட மொழியா?

03. புராணக் குப்பைகள் என்பது யார் பார்வையில்? யார் எதைக் குப்பை என்று சொல்வது? புராணம் என்பது ஒரு மொழியின் சொத்து. தன் பாட்டன் பேசியதைக் குப்பை என்று சொல்லி, அதற்குக் காரணம் மொழிதான் என்று கண்டறிவதுதான் பகுத்தறிவா?

04. ஒரு மொழியில் கருத்துகள் தவறாக இருக்குமானால், அது மொழியின் குற்றமா அல்லது அம்மொழியில் சிந்திப்பவர்களின் குற்றமா? மொழி என்கிற அருவத்தைச் சாடும் ஒருவரை எப்படி பகுத்தறிவாளர் என்று சொல்லமுடியும்?

05. ஆங்கிலம் தேவை என்பதைக் கண்டுகொண்டுவிட்ட பெரியாரின் தொலைநோக்கு கூட மேம்போக்கானதாக இருக்கிறது. வெள்ளைக்காரன் பேசும் மொழி என்கிற ஒருவித மயகக்த்திலும், ஆராதனை மனப்பான்மையிலும் அவர் இதைச் சொன்னதாகத் தெரிகிறது. ஏனென்றால், ’தமிழில் என்ன இருக்கிறது, ஆங்கிலத்தில் என்ன இல்லை’ என்பதை, இதைப்போன்ற மனநிலை உடைய ஒருவரே சொல்லமுடியும். உண்மையில் மொழி என்பது வெறும் மொழியல்ல. ஒரு கலாச்சாரத்தின், அக்கலாச்சாரத்தில் வாழ்ந்த மக்களின் தொகுப்பு. ஆங்கிலத்தில் இருந்துகொண்டு யோசித்தால் தமிழ் மொழியின் போதாமையும், தமிழ் மொழியில் இருந்துகொண்டு யோசித்தால் ஆங்கிலத்தின் போதாமையும் தெரியும். இது எந்த ஒரு மொழிக்கும் பொருந்திவரும் என்பதே உண்மை. அதைவிட்டுவிட்டு, ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழ்மொழியில் என்ன இருக்கிறது என்று கேட்பது குழந்தைத்தனமானது.

06. கட்டுடைத்தல் என்பதைப் பெரியார் மேலோட்டமாகப் புரிந்துகொண்டதாகத் தோன்றுகிறது. தடலாடிக் கருத்துகளின் ஒட்டுமொத்த உருவமாகப் பெரியார் தெரிகிறது. பெரியாருக்கு வரலாற்றுப் புரிந்துணர்வும், ஆழமான சமூகக் கண்ணோட்டங்களும் சுத்தமாக இல்லையோ என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது, பெரியார் தமிழ் குறித்துச் சொல்லும் கருத்துகளைக் காணும்போது.

இந்தத் தொடர் தொடரும்போது பார்க்கலாம், பெரியார் இன்னும் என்ன என்ன மொழி குறித்துச் சொல்லியிருக்கிறார் என்று.

உங்கள் கருத்துக்களையும் எனது கேள்விகளையும் குறித்துச் சிந்தியுங்கள். முரன்பாட்டின் மொத்த உருவமாய் வாழ்ந்துவிட்டுபோன ஒருவர் எப்படி பெரியாராகவும், தந்தையாகவும் கொண்டாடப் படுகிறார் என விளங்கவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

களிமிகு கணபதி on June 19, 2009 at 1:42 pm

ஆன்மீக நுணுக்கங்களை விளக்க தென்னிந்தியாவில் நடந்த முயற்சிகளின் விளைவே தமிழ் மொழி. பண்டைத் தமிழில் உள்ள இலக்கியங்கள் அனைத்துமே ஹிந்து ஞான பொக்கிசங்கள். தமிழ் அழிந்தால் இந்த ஞானச் செல்வமும் அழிந்துவிடும். அதனால்தான் தமிழ் மொழியை அழிக்க எவாஞ்சலிக்கர்கள் பாடுபடுகிறார்கள்.

ஒரு நாட்டு மக்களையும், அந்த நாட்டு வளங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே கிருத்துவ எவாஞ்சலிக்கர்களின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்திற்கு மொழியோ, கலாச்சாரமோ எதிராக இருக்குமாயின் அவற்றை அழித்தோ அல்லது தங்களுக்கு ஏற்றவகையில் மாற்றி தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவோ செய்கிறார்கள்.

இந்தியாவின் பல இடங்களில் அவர்களது மொழி அழிப்பு வெற்றி பெற்றுவிட்டது.
நாகலாந்து மாநிலத்தில் நாகா மொழியானது முழுக்க முழுக்க ஆங்கில எழுத்துக்களையே கொண்டது. நாகலாந்து மக்களுக்குத் தங்களது மொழியின் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்பதே இப்போது தெரியாது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதைத் தவிர வேறு எது இந்த இழிநிலைக்குக் காரணமாக இருக்க முடியும்?

தங்களது மாநிலத்தை கிருத்துவர்களின் மாநிலம் என்றே பெருமையாக அந்த மாநிலத்தின் ஒரு முதல்வர் சொல்லிவந்தார். நாகர்களாக மஹாபாரதத்தில் வர்ணிக்கப்படும் அந்த பழம்பெருமை மிக்க இனம் தனது ஆன்மீகப் பொக்கிஷங்களை எவாஞ்சலிக்கர்களிடம் இழந்துபோய், கிருத்துவ மதத்தின் பிடியில் சிக்கி அல்லாடுகிறது. தங்களது முன்னோர்கள் சாத்தானை வழிபட்டவர்கள் என்றும், கீழ்த்தரமானவர்கள் என்றும் மிக உறுதியாக நம்புகிறது. வயதான பெண்களையும், தனிமையில் வாழும் பெண்களையும் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தி சூனிய வேட்டை நடத்திவருகின்றது. அவர்களில் பலர் செல்வந்தர்களாக இருப்பதால், அவர்களுடைய சொத்துக்கள் நேரடியாக சர்ச்சிற்குச் சென்றுவிடுகிறது. இது மிகவும் லாபம் தரும் தொழில்.

எனவே, தமிழ் மொழியையும் ஆங்கில மொழியின் அடிப்படையில் மாற்றவேண்டும் என்ற குரல்களை அவர்கள் எழுப்பியது புதியதல்ல. அந்தக் கிருத்துவ எவாஞ்சலிக்கர்களால் உருவாக்கப்பட்ட தலைவர்தான் ஈவேரா. அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் திராவிடர் கழகமும், அதன் முந்தைய வேடங்களும்.

அது நாள்வரை நேரடியாக இந்துத் தெய்வங்களையும், தத்துவங்களையும், நம்பிக்கைகளையும் இழிவாகப் பேசிவந்த எவாஞ்சலிக்கர்களுக்கு அந்த வேலைகளைச் செய்ய கிடைத்த வேலையாட்களாக இந்த திராவிடர் கழகக் கும்பல்களும், தமிழ் தேசியக் கும்பல்களும் உழைத்துப் பிழைப்பை நடத்துகின்றனர்.

கிருத்துவ எவாஞ்சலிக்கர்களை மறைத்து நின்று, அவர்களின் கைப்பாவையாகச் செயல்பட்டு வரும் இவர்கள் தமிழ்மொழி காட்டுமிராண்டி பாசை என்றும், தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று சொல்லுவதும் ஆச்சரியமளிக்கத் தேவையில்லை.

தமிழில் முதன்முதலில் எழுதப்பட்ட பைபிள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பட்டது. தங்களது மதத்திற்கு ஏற்றவாறு தமிழை அழிக்க விரும்பிய பெஸ்கி உள்ளிட்ட எவாஞ்சலிக்கர்கள், சங்கப் பாடல்களும், மற்ற பண்டை இலக்கியங்களும் இருக்கும்வரை தெய்வீகமொழியே தமிழ் என்பதை மறுத்துவிடுவது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரிந்துகொண்டார்கள். (சங்கப் பாடல்களை மீட்டு தமிழினத்திற்குக் கொடுத்த உவேசா உள்ளிட்ட சான்றோர்களுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.)

தெய்வீகத் தமிழை எப்படி அழிப்பது, தமிழர்களை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்பதைப் பற்றிச் சிந்தித்து எவாஞ்சலிக்கர்கள் அக்காலத்திலேயே ஒரு நெடுங்காலத் திட்டத்தைத் தீட்டினர். ஆரிய-திராவிட இனவாதத்தைக் கால்ட்வெல் பாதிரி மூலமும், மாக்ஸ் ம்யூலர் மூலமும் உருவாக்கினர். இதை அடிப்படையாகக் கொண்டு தமிழை ஒரு சில நூற்றாண்டுகளில் அழிக்க முடிவு செய்துள்ளனர். தமிழர்கள் எல்லாரும் தோமா கிருத்துவர்கள் என்று சொல்ல ஆரம்பித்திருப்பது இந்த நீண்ட காலச் செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே.

நவீன தமிழ் எழுத்துக்களை வடிவமைத்தவர்களும் இவர்களே. எனவே, இந்த புதிய வடிவைக் கொடுக்க ஆரம்பித்தவர் ஈவேரா என்று தவறாக எண்ண வேண்டாம். எவாஞ்சலிக்கர்கள் இட்ட கட்டளையைச் செயல்படுத்தினார் ஈவேரா. அவர்களின் அல்லக்கையாக இருந்து சொத்து சேர்ப்பதைத் தவிர தமிழ்நாட்டில் வேறு எதையும் அவரால் சாதிக்க இயலவில்லை என்பது வருந்தத் தக்க உண்மை.

இந்து எனும் குடையின்கீழ் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வின்றி, ஒற்றுமையாக இருக்க வேண்டிய தமிழர்கள் சாதிவெறி பிடித்துத் தலைவிரித்து ஆடிக்கொண்டிருப்பதற்கும் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பரப்பிய ஈவேராவே காரணம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard