New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாலடியார்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
நாலடியார்
Permalink  
 


நாலடியார்

தமிழ் இலக்கியம் சங்க இலக்கிய நூல்கள்....

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது,
ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது,திருக்குறள், திரிகடுகம்,ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம்,  முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள் பாஉதொ
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; [1] பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும். இந்நூல் முத்தரையர் எனும் பிரிவினைப் பற்றி கூறும் நூல் ஆகும்.

வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.

கீழ்க்கணக்கு நூல்கள் 
தொகு
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்கள் பட்டறிந்த உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துக்களாகப் போற்றினர்.

நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும்.

திருக்குறளும் நாலடியாரும் 
தொகு
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார். முப்பாலாகப் பகுத்தவர் தருமர். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.

நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) பொருட்பால் : 240 பாடல்கள் (24 அதிகாரங்கள்) காமத்துப்பால் : 30 பாடல்கள் (3 அதிகாரம்) மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)

எடுத்துக்காட்டு பாடல்கள் 
தொகு
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.
(2. பொருட்பால், 2.14 கல்வி, 131)

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.
2. பொருட்பால், 2.14 கல்வி, 132)

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.
(2.25 அறிவுடைமை, 247)

கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்"
சினமால் பொருத களத்து.

No photo description available.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கடவுள் வாழ்த்து

அறத்துப்பால்

செல்வம் நிலையாமை

இளமை நிலையாமை

யாக்கை நிலையாமை

அறன் வலியுறுத்தல்

துய்தன்மை

துறவு

சினம் இன்மை

பொறையுடைமை

பிறர்மனை நயவாமை

ஈகை

பழவினை

மெய்ம்மை

தீவினையச்சம்

 பொருட்பால்

கல்வி

குடிப்பிறப்பு

மேன்மக்கள்

பெரியாரைப் பிழையாமை

நல்லினம் சேர்தல்

பெருமை

தாளாண்மை

சுற்றந்தழால்

நட்பாராய்தல்

நட்பிற் பிழை பொறுத்தல்

கூடா நட்பு

அறிவுடைமை

அறிவின்மை

நன்றியில் செல்வம்

ஈயாமை

இன்மை

மானம்

இரவச்சம்

அவையறிதல்

புல்லறிவாண்மை

பேதைமை

கீழ்மை

கயமை

பன்னெறி

காமத்துப்பால்

பொது மகளிர்

கற்புடை மகளிர்

காமநுதலியல்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard