தற்போதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் திருக்குறளையும் விவிலியத்தையும் தொடர்பு படுத்ட்தி பல முனைவர் பட்டங்கள் புனையப்படும் நிலையில் தோமா வருகை என்பது கட்டுக்கதைகள் மட்டுமல்ல இயேசு கிறிஸ்து விவிலியக் கதைகள் இவைகளைப் பற்றியும் மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்த நூல்.
October 18, 2018100 கோடி பட்ஜெட் செலவில் சாந்தோம் சர்ச் தயாரிக்கும் திரைபடம் "புனித தோமையார்" துவக்கவிழா 3 ஜூலை 2008 அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
சாந்தோம் சர்சில் அமைந்துள்ள மயிலை உயர் விவிலிய மாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ள அந்தப் `புனித தோமையார்’ படத்தில்தான் திருவள்ளுவராக வந்து வாழ்ந்து காட்ட இருக்கிறார் ரஜினிகாந்த் எனவும், அஜித், விக்ரம், விஜய் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்றெல்லம் செய்தியை இந்த திரைக்கதை, வசனகர்த்தாவான பாதிரி பால்ராஜ் லூர்துசாமி பரப்பினார்
சினிமா எடுப்பதான்னதை பற்றி பாதிரி மேலும் சொல்கையில் கிறிஸ்துவ தொன்மக் கதை நாயகர் இயேசு கி.பி. 29-ம் ஆண்டு தூக்குமரத்தில் ரோம் ஆட்சியின் மரண தண்டனையில் இறந்த பின்னர் சீடர்களில் ஒருவரான தோமோ பாரசீகம் பகுதிகள் வழியாக ஆப்கானிஸ்தான் வந்து பின்னர் கேரளாவில் பணியாற்றி சென்னை வந்து மரணம் அடைந்ததாக கூறினார். திருவள்ளுவரும் தோமோவும் சந்திக்க தோமோ போதனையில் தான் திருக்குறள் வந்தது ஏன பாதிரி கூறினார். தோமோ வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன என விளக்கி அவற்றை வைத்து சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் தெய்வநாயகம் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்றும் கூறினார்.
தமிழக அரசின் சார்பாக சென்னை சங்கமம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இன்று அறிவிப்போடு அதற்கு முந்தைய வருடம் அதை நடத்தும் பொறுப்பை சாந்தோம் கிறிஸ்தவ சர்ச்சின் தமிழ் மையம் என்ற பிரிவிற்கு கொடுக்கப்பட்டது அதன்மூலம் தொழிலதிபர்கள் பெரும்பணம் அறக்கட்டளைக்கு போக பலம் பண பரத்தோடு அரசியல் சேரன் சேர்ந்திட 100 கோடியில் திரைப்படம் இன்னொரு பக்கம் பெரும் மாநாடு இன்னொரு பக்கம் தெய்வீக கர்நாடக சங்கீதத்தில் மோசடி போர்ஜரி வார்த்தைகள் போட்ட கிருத்தவ ஆல்பங்கள் வெளியீடு இத்தோடு தமிழ் மையம் சார்பாக உலக வரலாற்று ஆசிரியர்கள் முழுமையாக நிராகரித்த குமரிக்கண்டம் வேர்ச்சொல் ஆய்வு போன்றவை பற்றி பல புத்தகங்கள் வெளியாகின. அரசியல் பலம் பண பலம் விளையாடியது
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே தமிழகத்தில் தமிழர் அல்லாத பெரும் பணக்காரர்கள் நீதிக்கட்சி என்ற பெயரில் கிறிஸ்தவ ஆங்கிலேயரோடு இந்து சொத்துக்களை காக்க தமிழர் விரோத காரியங்களில் செயல்களில் ஈடுபட்டுவந்தனர தேவநேயப் பாவாணரும் ஒரு நூலில் சுட்டிக் காட்டி இருப்பார்.
தோமையார் திரைப்பட அறிவிப்பு வந்தவுடன் பல ஹிந்துத்துவ தமிழ் மெய்யியல் மரபைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினர் ஆனால் திருக்குறள் -திராவிட- தமிழ் பேரால் பெயரால் புலவர்கள் அமைதி காத்தனர்.
இந்த நூலாசிரியரும் மேலும் பலரும் தொடர்ச்சியாக வலைதளங்களில் எழுதியும் இந்து அமைப்பினரும் போராட இந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது.
தெய்வநாயகம் "திருவள்ளுவர் கிருத்துவரா" நூல் 1969ல் அன்றைய முதல்வர் கருணாநிதி திரு அணிந்துரையோடு வெளி வந்தது. அதில் திருவள்ளுவர் பைபிளிலிருந்து காப்பி அடித்துதான் திருக்குறளை எழுதினார் என்று தெளிவாகக் சுட்டுகிறார்.
இந்த நூல் பின் மேலும் சில நூல்கள் எழுதிட சென்னையில் தேவநேயப்பாவணரோடு சேர்ந்து மிகப்பெரும் மாநாடு நடந்தது. இதன் பின்னர்தான் திருக்குறளுக்கு ஆச்சாரியா பவுல் எனும் ஜான் கணேஷ் ஐயர் என்பவருக்கு பல லட்சம் கொடுத்து வாடிகன் போப் தரிசனம் வரை செய்துவைத்து திருக்குறளுக்கு மோசடி உரை கிருத்துவ உரையுடன் பழங்கால சுவடி தயாரிக்கும் முயற்சி- நீதிமன்றத்தில் சென்று முடிந்தது.
சாந்தோம் சர்ச் பின்னர் சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கிறிஸ்தவ துறை என ஆரம்பித்து அதில் தரப்பட்டது தான் மேலே சொன்ன முனைவர் பட்டம் அந்த ஆய்விற்கு பெரும் கண்டனம் வர உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அது ஆராய்ச்சி நூல் அல்ல என ஒரு அறிக்கையும் விட்டது.
தமிழக அரசின் சார்பாக சென்னை சங்கமம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இன்று அறிவிப்போடு அதற்கு முந்தைய வருடம் அதை நடத்தும் பொறுப்பை சாந்தோம் கிறிஸ்தவ சர்ச்சின் தமிழ் மையம் என்ற பிரிவிற்கு கொடுக்கப்பட்டது .அதன்மூலம் தொழிலதிபர்கள் பெரும்பணம் அறக்கட்டளைக்கு சேர்ந்தது. 100 கோடியில் திரைப்படம் இன்னொரு பக்கம் தெய்வநாயகம் “தமிழர் சமயம்” மாநாடு; இன்னொரு பக்கம் தெய்வீக கர்நாடக சங்கீதத்தில் மோசடி போர்ஜரி வார்த்தைகள் போட்ட கிறிஸ்துவ ஆல்பங்கள் வெளியீடு இத்தோடு தமிழ் மையம் சார்பாக உலக வரலாற்று ஆசிரியர்கள் முழுமையாக நிராகரித்த குமரிக்கண்டம் வேர்ச்சொல் ஆய்வு போன்றவை பற்றி பல புத்தகங்கள் வெளியாகின. அரசியல் பலம் பண பலம் சேர்ந்து விளையாடியது
https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/ldquoEngineering-colleges-should-have-Tamil-scholarsrdquo/article16344700.ece
https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Album-of-Christian-songs-set-in-Carnatic-music-launched/article15329715.ece
சாந்தோம் சர்ச் வரலாற்றில் முன்பு திருக்குறளுக்கு மோசடி கிறிஸ்துவ ஓலைச்சுவடிகள் தயாரிக்க பெருந்தொகை செலவு செய்த பேராயர் அருளப்பாவிற்கு பேராயர் சின்னப்பாவும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.
கிறிஸ்துவ மதவெறியை தமிழ் பற்று எனும் வேடத்தில் தேவநேயப் பாவாணர் வழியில் நச்சுப் பொய்கள் - பிரிவினை தூண்டும் பெங்களூர் குணா எனும் சாமுவேல் குணசீலன் ஒரு கிறிஸ்துவபள்ளியில் திருவள்ளுவர் சிலை என திறந்தது, திருவள்ளுவர் உருவத்தை தோமோ உருவமாக்கி உள்ளனர்.