இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம்
இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம் - சேசாத்திரி
இலெமூரியாக் கண்டம் அல்லது வேறுவகையில் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலப்பரப்பு இந்நாள்களில் அறிஞர் கைகளில் மிகப் பெரும் கவனம் பெற்று வருகின்றது. இக்கள ஆய்வில் முன்னோடியானவர் பசுமலை சோமசுந்தர பாரதியார். அவரைப் பின்பற்றி எம். எசு. பூர்ணலிங்கம் பிள்ளை நெடுங்காலத்திற்கு முன்னம் 'தமிழ் இந்தியா' என்ற நூலை யாத்தார். க. அப்பாதுரையும் இப் பொருண்மைக்கூறு (subject) ஆய்வில் பங்களிப்பு ஆற்றியவர் தாம். இலெமூரியாக் கண்டம் குறித்து முனைவர் பட்டத்திற்கு வழிநடத்துகின்ற ஆய்வேடுகளும் உள்ளன.
தமிழ் மக்களின் தோற்றமும் அவரது பண்பாடும் குறித்த புதிர்மறைவுச் (mystery) செய்தியின் மடிப்பானது இலெமூரியாக் கண்ட நிலைப்படலைச் சுற்றிச்சூழ்ந்த புதிர்மறைவு வெடித்துவெளிப்பட்டு அதோடு அதன் உணமைத் தரவும் உறுதிப்படுமானால் அவிழ்ந்துவிடும். வேதம், தமிழின் செம்மொழிச் சங்க இலக்கியங்கள், கல்வெட்டியல், நிலவரைவியல் (geography) நிலத்தியல் (geology), மற்றும் நிலவடிவியல் (geomorphology) ஆய்வுகள் சிறிதளவு வெளிச்சத்தையும், அதோடு இப்பொருண்மைக்கூறு பற்றிய ஓர் அளவுபட்ட பருமத்திற்கு பருப்பொருளையும் (sizeable volume of material) எறிந்துள்ளன. ஆயினும் அவை பொறுப்பதிகாரத்தில் உள்ளோரின், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாததால் அகன்ற அளவில் அறியப்படவில்லை. கடந்த ஓர் இலக்கம் (1,00,000) ஆண்டுகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள் குறித்த நிலத்தியல் ஆய்வுகள் அறிவியலாளர்களை கி.மு.80,000 முதல் கி.மு. 2,600 வரையிலாக ஐந்து பெரும் படுவீழ்ச்சிக்குரிய (cataclysmic) மாற்றங்களை வரிசைப்பட்டியிட (table) இயல்வித்தன. இறுதிப் பேரிடர் கி.மு. 3ஆம் ஆயிரஆண்டுகளின் (millenium) இடைக்காலத்தில் நிகழ்ந்தது, இதுவே தமிழ் இலக்கியஙகளில் பதியப்பட்டு உள்ளது. அடிக்கடலுக்குள் குமரிக்கண்டத்தின் அமிழ்வு நிகழ்வானது பின்வருமாறு பல்வேறு கட்டங்களைக் கடந்துள்ளது.
1. முதல் நிலை 16,000 கி.மு. ஊழிவெள்ளம் (deluge) தொடங்கி இலெமூரியாவின் பெரும்பகுதி அமிழ்ந்தது. 2. இரண்டாம் நிலை 14,000 கி.மு. இலெமூரியாவின் இன்னம் சில பகுதிகள் அமிழ்ந்தன. 3. மூன்றாம் நிலை 9,500 கி.மு. மீண்டும் எஞ்சியவற்றில் பெரும் பகுதி அமிழ்ந்தது. 4. நான்காம் நிலை 3,000 - 2,400 மாந்தர் நாகரிகத் தொடக்கம் பற்றி.கட்டியம் (heralds) கூறுகின்றது. 5. இறுதி நிலை 1,700 கி.மு. கடைசி சங்க காலத்துடன் ஒன்றிப்பாகின்றது.
இலங்கையின் நிகழ்ச்சிக்கோவையான மகாவமிசத்தின்படி, இலங்கைக்கு தெற்கே அமைந்த நிலம் 4,900 கல்தொலைவுகள் (miles) இதாவது 700 காவதம் வரை பரவி இருந்தது. இருந்தபோதிலும், இலங்கையின் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் அதன் துலக்கமான பரவல் இன்னமும் நிறுவப்பட வேண்டி உள்ளன.
தமிழ் மரபுகள் மூன்று பெருஞ் கழக(சங்க)ங்கள் முறையே தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரையில் செயற்பட்டதாகப் பதிவு செய்கின்றன. ஆயினும் அவை கடலால் விழுங்கப்பட்டுவிட்டன.
பண்டைக் காலத்தே ஏழு தமிழ்க் கழகங்கள் செயற்பட்டதாக மகாவமிசம் குறிப்பிடுகின்றது. மேலும், இற்றை மதுரை நகரம்தான் மூன்றாம் தமிழ்க் கழகத்தை ஓம்பியது (hosted) என்பது நிறுவப்பட வேண்டியுள்ளது. கழக(சங்க) இலக்கியங்கள் வண்ணிக்கின்ற விந்திய மலைக்குத் தெற்கே கிடக்கின்ற நிலத்தையும் தீவுகளையும் குறிப்பறிவது ஆர்வமூட்டவதாய் உள்ளது, இது இலெமூரியாக் கண்டத்தினுட்படுவதாகலாம். அதன் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. மணிமேகலை தமிழகத்திற்கு அருகே இருந்த சம்புத் தீவையும் அதே போல் சம்புத் தீவு எனப்படும் ஒரு மிகப் பெருந்தீவையும் குறிக்கின்றது. 2. 7 ஆம் நூற்றாண்டு நாயன்மாரான அப்பர் நாவலந்தீவில் வாழ்ந்த மக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
மேற்சொன்ன மேற்கோள்களின்படி நாவலன்தீவு என்பது இந்திய மற்றும் அயலக அறிஞர்களால் இலெமூரியா என அடையாளங் காணப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும், இற்றைத் தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு தொலைந்துபோன இந்தியப் பேராழிக் கண்டத்தின், வேறுவகையில் இலெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்று அழைக்கப்படுவதன் மீந்தமிச்சமாக உள்ளது.
மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்று மேற்சென்று மேவார் நாடு இடம்படப் புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (கலி: 104-1-4)
(குமரி என்பது குமரி ஆற்றையும் குறிப்பதாகலாம்)
அகழாய்வுகளின் மூலம் மேற்கொள்ளப் பெறும் நிலத் தொல்லியலால் தமிழ் நாட்டின் ஆழமான தொன்மையை, இதாவது முந்து வரலாற்றுக் காலத் தொன்மையை மெய்ப்பிக்க இயலாமல் போகலாம். நாம் பண்டைய நாகரிகங்கள் மெசபெட்டோமியா, எகிபது மற்றும் சிந்துவெளியில் நிலைப்பட்டிருந்தமையைக் கண்டு வியக்கிறோம். இருந்தபோதிலும், பெரும் நாகரிகங்கள் முந்து வரலாற்று உலகில், குறிப்பாக இந்தியாவில் கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னம் செழிப்புற்றிருந்தன. இந்தியாவைச் சுற்றிச்சூழ்ந்து நிலைப்பட்டிருந்த கண்டத்தின் புதிர்மறைவைத் (mystery) தோண்டிஎடுப்பதும், அதன் மடிப்பைஅவிழ்ப்பதும் (unfold) மிகக் கடினமானது. ஆயினும் இன்று கடலடியில் தொலைந்துபோன அரசியத்தின், கண்டத்தின் மீதங்களைத் தோண்டிஎடுக்க அடிக்கடல் தொல்லியல் அகழாய்வுகள் நடைமுறைபட்டு வருகின்றன. நம்மை, மூழ்கிய நிலங்களின் புகழ்மிகுக் காட்சியை ஊடுநோக்கச் செய்கின்ற பேராழியில் (oceanography) அல்லது கட்டமைவுக்குலைவு (tectonic) அறிவியல் அமெரிக்காவிலும் ரசியாவிலும் வளர்ந்துள்ளன. இதனால் இலெமூரிய மற்றும் அட்லாண்டிகு போன்ற தொலைந்த கண்டங்கள் பற்றிய பல உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு மக்கள் கவனத்திற்கு செல்லும்.
இலெமூரியா :
இலெமூரியா இந்தியப் பேராழியின் "தொலைந்த கண்டம்" என்று அடிக்கடி குறிக்கப்பெறுகின்றது. இந்த அமிழ்ந்த நிலப்பரப்பு குறித்துத் தான் இந்தியத் தொல்லியலாளர் இடையேயும் அதே போல் அயலக எழுத்தாளரிடையேயும் பெருத்த ஊகங்கள் நிலவுகின்றன. விசர் எசு. கார்வியின்படி (Wisher S. Carve) 'இலெமூரியா - பசிபிக்கின் தொலைந்த கண்டம்' என்ற அவரது வியத்தகு நூலுள் தொலைந்த இலெமூரியாக் கண்டம் அட்லாண்டிகு, பசிபிக்கு மற்றும் இந்தியப் பேராழியின் பெரும் பரப்பை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்று அவர் நோக்குகிறார். இலெமூரியர்களை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொலைவான மவுண்ட்டு சாஸ்தா பகுதிகளில் காணவியலும் என்று அவர் மேலும் விரித்துரைத்து உள்ளார். அவருடைய கொள்கை பல மேலை மற்றும் அமெரிக்க அறிஞர்களிடமிருந்து ஆதரவைப் பெற்று உள்ளது. அயல்நாட்டு எழுத்தாளர்கள் இலெமூரியாக் கண்டமானது இற்றைய இந்தியப் பேராழியுடன் தொடர்புடையது என்று நம்பினர்.
கழகக்(சங்க) காலத்து உள்நாட்டு இலக்கிய ஆக்கங்களும், அப்பர்த் தேவாரமும் விந்தியத்திற்குத் தெற்கே நிலைப்பட்டிருந்த ஒரு தீவு பற்றிய விளக்கமான வண்ணனையை கொண்டுள்ளன. இத்தீவு அல்லது நிலப்பரப்பே 'சம்புத்தீவு', 'நாவல் பெருந்தீவு' மற்றும் 'நாவலம் பொழில்' என்றும் பலவாறாக அழைக்கப்படுகின்றது.
மேற்சொன்ன தீவுகள் குறித்த சங்க இலக்கிய வண்ணனை பின்வருமாறு செல்கிறது:
"சம்புத் தீவினுட் டமிழக மருங்கில்" மணிமேகலை
"இமிழ் கடல் வரைப்பிற் தமிழக மனிய" சிலப்பதிகாரம்
"இஅமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க" பதிற்றுப்பத்து
"நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து" மணிமேகலை
அப்பர் இத்தீவை பெரு நாவல் தீவு என்று அழைக்கிறார்.
"நாவலும் பெருந் தீவினில் வாழ்பவர்"
இந்தோ- பேராழிக் கண்டம் தென் இந்தியாவை அதன் ஒரு மீந்தபோன, பிணைந்த பகுதியாகவே கொண்டுள்ளது. சம்புத்தீவை திருச்செந்தூரில் தமிழ்க் கழகம் (சங்கம்) நிறுவியதாக நம்பப்படும் ஒரு தமிழ் அரசனே ஆண்டதாக ஊகங்கள் உள்ளன. அவன் ஒரு பேரறிஞன் என்பதோடு அறிஞர்களையும் புரப்பவன். அவன் ஒரு பெரும் முருக பக்தன் என்பதோடு முருகப் பெருமானின் ஆளுமையைப் புகழ்ந்தும் தமிழ் இலக்கணம் மற்றும் சொற்பிறப்பியல் குறித்தும் நூல்கள் பல ஆக்கியவன். தமிழ்க் கடவுள் முருகனது பெருந் தோற்றத்தின் அடியில் பல செவிவழிச் செய்திகளும் மரபுகளும் வளர்ந்தன. அந்த ஆட்சியாளன் குமரவேல் என்று அழைக்கப்பட்டான்.
முதல் தமிழ்க் கழகம் (சங்கம்) தென்மதுரையில் செயற்பட்டது என்பது அறியப்பட்டதொரு உண்மையாகும். இரண்டாம் தமிழ்க் கழகம், தென்பாண்டிய நாடு அமிழ்ந்துவிட்ட பிறகு தென்மதுரையில் இருந்து இடம்மாற்றப்பட்டு கவாடபுரத்தில் செயற்பட்டது. மீண்டும் நிகழ்ந்த இன்னொரு ஊழிவெள்ளம் பாண்டிய அரசன் முடத்திருமாறனை கவாடபுர நகரைக் கைவிடும்படியான கட்டாய நிலைக்குத் தள்ளி, அவன் புதுநகர் மதுரையைத் தலைதநகராய்த் தேர்ந்தெடுத்து அதனையே தமிழ்க் கழகத்தின் தலைமை இருக்கை ஆக்கினான் போலத் தெரிகின்றது.
மேற் சொன்ன நிகழ்வுகள் இந்தியப் பேராழியில் அடிக்கடல் புலனாய்வுகளுக்கான தேவையைத் தெளிவாகச் குறிக்கின்றன.
ஊழிவெள்ளத்திற்கான (deluge) காரணங்கள் பன்மடிப்பானவை (manifold). ஊழிவெள்ளத்திற்கு எல்லாம்வல்லானைக் (almighty) காரணங்காட்டும் மதமுகாமை வாய்ந்த பல கொள்கைகள் உள்ளன. தொன்மக் கதைகள் அறிவியலாளர்களை நம்பகப்படுத்தாமல் (convince) போகலாம். "பெரு வெள்ளம்" போன்று ஓர் இயற்கைத் துன்பியல் (tragedy) நிகழ்வு முந்து வரலாற்று நாகரிகங்களை அழித்திருக்கலாம் என்ற மற்றொரு பார்வையும் உள்ளது.
அறிவியல், நிலக்கோளமானது ஒரு வால்மீனால் (comet) மோதப்பட்டு அதன் மட்கற்புதைமண்ணை (dirt bed) இடம்பெயர்த்தியதால் நாகரிகங்கள் அழித்துள்ளன என்று விளக்குகின்றது. அத்தகு இடப்பெயர்வு அரிதாகப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.
1968 இல் இந்தியப் பேராழியின் நடுமோட்டின் (central ridge) மேல் விளக்கமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தியப் பேராழியில் காந்த விலக்கங்கள் நிலைப்பட்டிருந்ததை நிறுவியது. இந்த ஆய்வு ஆப்பிரிக்காவும் தென் அமெரிக்காவும் 18 கோடி ஆண்டுகள் முன்னம் வரை கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியாகப் பூட்டிப் பிணைந்திருந்ததை வெளிப்படுத்தியது தொன்மையான கோண்டுவானா நிலத்திலிருந்து முறிந்துபிரிந்த பின்பு இந்தியாவை ஏந்திய நிலவட்டாரம் வடகிழக்குமுகமாக விரைந்து நகரத் தொடங்கியது. இது ஒரு கண்டப் பெயர்வு நிகழ்ச்சி ஆகும். இந்தியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா மற்றும் ஆத்திரேலியா ஆகியனவற்றின் மூலப் பொருத்தம் (original fit) இதுகாறும் நிறுவப்படவில்லை.
மேற்சொன்ன கண்டப் பெயர்வு, மோதல் முதலாயன உலகம் 18 கோடி ஆண்டுகள் முன்னமும், 12.5 கோடி ஆண்டுகள் முன்னமும், 5.5 கோடி ஆண்டுகள் முன்னமும், 4 கோடி அண்டுகள் முன்னமும் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்துகின்றது. (National Geographical Association Atlas)
மேலுள்ள கலந்துரையாடலின் வெளிச்சத்தில், முந்து -வரலாற்றின் கடந்த காலத்துக்குள் ஊடுநோக்க (peep) உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரு முழுமையான பேராழி அளக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்துரைக்கலாம். அடிக்கடல் தொல்லியல் அகழாய்வுகள் இந்தியப் பேராழியில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பதிவைப் (record) பொருத்தமட்டில், கடந்த நூற்றாண்டின் இறுதிக் காற்பங்கில் (last quarter) அமிழ்ந்து போன துவாரகை நகரையும் பூம்புகார் நகரையும் இடமறிவதற்கு ஏற்கெனவே ஒரு சிறு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டாகிவிட்டது.
பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, "Lemuria : The Last and the Lost Continent of Tamils" என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான "அருங்கலைச் சொல் அகரமுதலி" உதவியோடு தமிழாக்கித் தட்டச்சு செய்தவர் சேசாத்திரி. பின் வரும் தனிக் கட்டுரையும் இலெமூரியாவுடன் தொடர்புடையதால் இக்கட்டுரையுடன் இணைத்து வழங்கப்படுகின்றது.