New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாஸ்தா வழிபாடு- உ. தாமரைச்செல்வி


Guru

Status: Offline
Posts: 24769
Date:
சாஸ்தா வழிபாடு- உ. தாமரைச்செல்வி
Permalink  
 


 சாஸ்தா வழிபாடு  உ. தாமரைச்செல்வி

http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p25.html

perumpadaisastha.jpg

 

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் சாஸ்தா கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நாளில், இம்மாவட்டத்து மக்கள் தங்களுக்குரிய சாஸ்தா கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த மாவட்டங்களிலிருந்து, தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் பிற ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்றவர்களும், இந்நாளில் சாஸ்தா கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். எப்படித் தொடங்கியது இந்த சாஸ்தா கோயில் வழிபாடு? என்பது குறித்துத் தெரிந்து கொள்ள வாருங்கள்…
சாஸ்தா தோற்றம்

தாங்கள் செய்த வேள்விகளின் வழியாகக் கிடைத்த பலன்களை நல்வழிக்குப் பயன்படுத்தாத சில முனிவர்கள், தங்களிடமிருக்கும் பலன்களைப் பெரிதாக நினைத்ததுடன், தங்களை விட உயர்ந்தவர்கள் எவருமில்லை என்று அகந்தையும் கொண்டனர். அகந்தை கொண்ட முனிவர்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்தி, முப்பெருங்கடவுள்களின் சக்தியையும் தாங்கள் பெற்று விட வேண்டும் என்று முடிவு செய்தனர். 


தாருகா வனத்தில் ஒன்று கூடிய அவர்கள், முப்பெருங்கடவுள்களின் சக்தியைப் பெறுவதற்கான வேள்வியைச் செய்யத் தொடங்கினர். அந்த வேள்வி நிறைவடைந்தால், அவர்களது அகந்தை மேலும் அதிகரிப்பதுடன், தங்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்று நினைத்த இறைவன் சிவபெருமானும், விஷ்ணுவும் அந்த வேள்வியைத் தடுக்கத் திட்டமிட்டனர். 

அவர்கள் திட்டத்தின்படி, இறைவன் சிவபெருமான் பிட்சாடனர் வேடமும், விஷ்ணு மோகினி வேடமும் கொண்டு அந்த இடத்திற்குச் சென்றனர்.

பிட்சாடனராக வேடமிட்ட சிவபெருமான், முனிவர்களின் குடில்கள் அமைந்திருந்த பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த முனிவர்களின் மனைவிகளிடம் தனக்குப் பிச்சையிடுமாறு கேட்டார். சிவபெருமானின் பிச்சாடனர் தோற்றத்தைக் கண்ட அவர்களது மனதில், தங்கள் கணவரை விட இவர் அழகாக இருக்கிறாரே என்கிற தவறான எண்ணமும், தடுமாற்றமும் ஏற்பட்டது.

இது போல், மோகினித் தோற்றத்தில் சென்ற விஷ்ணு, முனிவர்கள் வேள்வி நடத்திக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று அவர்களின் முன்பாகப் போய் நின்றார். மோகினியின் தோற்றத்தில் மயங்கிய முனிவர்களின் மனம் வேள்வியிலிருந்து வெளியேறி, மோகினியின் அழகில் அலைபாயத் தொடங்கியது.

முனிவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளின் மனங்களில் ஏற்பட்ட தவறான எண்ணங்களால் வேள்வியினைத் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. முனிவர்களுக்குத் தாங்கள் செய்யவிருந்த தவறும் நன்றாகத் தெரிந்தது. அவர்கள் தங்களது வேள்வியை உடனே நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில், பிச்சாடனர் உருவத்திலிருந்த சிவபெருமானும், மோகினி உருவத்திலிருந்த விஷ்ணுவும் அங்கிருந்த நீர்நிலை ஒன்றின் அருகில் சந்தித்துக் கொண்டனர். மோகினியின் அழகில் மயங்கிய பிச்சாடனர், மோகினியுடன் இணைந்தார். அதனால், மோகினியின் கையில் குழந்தை ஒன்று தோன்றியது. 

இருவரது சேர்க்கையிலும் தோன்றிய அந்தக் குழந்தைக்கு இருவரது சக்திகளும் கிடைத்தன. அந்தக் குழந்தையைப் பார்த்த சிவபெருமான், பிற்காலத்தில் அவர் பூலோக மக்களின் காவல் தெய்வமாகப் புகழ் பெறுவார் என்று வாழ்த்தினார். சிவன், விஷ்ணு இருவரும், தங்களுக்குப் பிறந்த குழந்தைக்குத் துணையாகத் தங்களது பாதுகாவலர்களில் சிலரையும், அந்தக் குழந்தை சொல்லும் பணிகளைச் செய்வதற்காக இயக்கியர்கள் என்கிற மாடன், மாடத்தியர்களையும் கொடுத்தனர். 

குழந்தையாக இருந்த அவர், வளர்ந்து இளம்பருவத்தை அடைந்த போது, சிவபெருமான் வாழ்த்தியபடி சாஸ்தா எனும் பெயரில் கிராம மக்களின் காவல் தெய்வமாக உயர்ந்தார்.

 

kakuvelayyanar.jpg

அய்யனார்

பொதுவாக அமைதியான தோற்றத்திலேயே சாஸ்தா இருக்கிறார். அவர் கோபத்துடன் வீரமான தோற்றத்திலிருக்கும் நிலையில் அவரை அய்யனார் என்று அழைக்கின்றனர். பிச்சாடனருடன் இணைந்த மோகினியின் கையில் தோன்றிய குழந்தை என்பதால், இவரைக் கையனார் என்று அழைத்து, இந்தப் பெயரே, பின்னர் ஐயனார் என்று மருவி விட்டதாகச் சிலர் சொல்கின்றனர். சாஸ்தா என்பதை "ஐயன்” என்றும் சொல்வதனடிப்படையில், அந்தச் சொல்லுடன் மரியாதைக்குரிய "ஆர்” எனும் விகுதியும் சேர்ந்து "ஐயனார்” என்றாகி விட்டது என்றும் சிலர் சொல்கின்றனர்
கோயில்கள
சாஸ்தாவிற்குப் பல இடங்களில் கோயில்கள் அமைக்கப்பட்டன. அக்கோயில்களில் இருக்கும் சாஸ்தா மார்பில் பூணூல் அணிந்து, சிவபெருமான் அணிந்திருக்கும் அனைத்து அணிகலன்களையும் அணிந்து கொண்டிருப்பார். இளம் வயதுத் தோற்றத்தில், வலது கையில் தண்டம் ஒன்றை வைத்திருக்கும் இவர், இடது கையை, இடது காலின் மீது சார்த்தியபடி வைத்திருப்பார். இடது காலை மடித்துப் பீடத்தின் மேல் வைத்துக் கொண்டு, வலது காலைத் தொங்க விட்ட நிலையில் அமர்ந்திருப்பார். சில இடங்களில் குதிரை அல்லது யானையின் மீது அமர்ந்த நிலையிலும் இருப்பதுண்டு. இது போல், சில இடங்களில் சாஸ்தா நின்ற நிலையிலும் இருக்கிறார். 

சாஸ்தா தேவலோகத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும், அவர் பூலோகத்தில் தோன்றியவர் என்பதால், அவருக்குத் தேவலோகத்தைச் சேர்ந்த புஷ்கலா எனும் தேவியும், பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவி எனும் தேவியுமாக இரண்டு தேவியர்கள் உடனிருக்கின்றனர். பல சாஸ்தா கோயில்களில் சாஸ்தாவுடன் பூர்ணாதேவி, புஷ்கலா தேவி என்று இரண்டு தேவியர்களும் இருக்கின்றனர். 

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான சாஸ்தா கோயில்களில் சாஸ்தாவிற்கு எனத் தனிச்சிலைகள் எதுவுமில்லாமல், முக்கோண வடிவிலான பீடம் மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில்களில், பங்குனி உத்திரத் திருவிழா நாளில் பீடத்தின் முன்பாக சாஸ்தாவின் உருவம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. 

பொதுவாக சாஸ்தா கோயில்களில், அவருக்குப் பாதுகாவலாகச் சுடலை மாடன், கருப்பசாமி ஆகிய துணைக்கடவுள்களில் ஒருவரும், இயக்கியர்கள் என்று அழைக்கப்படும் சிறு காவல் தெய்வங்கள் இருபத்தொன்று பேர்களும் இருப்பது போன்ற அமைப்பு செய்யப்பட்டுள்ளன.
சாஸ்தா வழிபாடு
சாஸ்தா கோயில்களில் அவர் தோன்றியதாகக் கருதப்படும் பங்குனி உத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோயில்களில் பங்குனி உத்திர நாளில் காலை ஐந்து மணிக்குத் தொடங்கும் வழிபாடு, இரவு பன்னிரண்டு மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. 

சாஸ்தா கோயில் வழிபாடுகள் அனைத்தும் குலதெய்வ வழிபாடு போன்றே தனித்து அமைந்திருக்கிறது. இருப்பினும், பல சமூகத்தினர் இணைந்து வழிபடும் கோயில்களாகவே சாஸ்தா கோயில்கள் இருக்கின்றன. பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தால், அந்தக் குடுமபத்தினரின் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. 

இதனால், சாஸ்தாவிற்குச் சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபடும் பக்தர்கள், கோயிலில் சைவ உணவினையே உண்கின்றனர். சில சாஸ்தா கோயில்களில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல், கருப்பசாமி, சுடலை மாடன் போன்ற துணைக்கடவுளுக்கு ஆடு, கோழி போன்றவைகளைப் பலியிட்டு, அந்த இறைச்சியைக் கொண்டு அசைவ உணவு தயாரிக்கப்பட்டுப் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. 

சாஸ்தா கோயில் வழிபாடு என்பது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களிடமே அதிகம் காணப்படுகிறது. இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், இம்மாவட்டங்களிலிருந்து வெளியூர்களில் சென்று வசிப்பவர்களும் சாஸ்தா வழிபாட்டிற்காக ஆண்டுதோறும், பங்குனி உத்திர நாளில் தங்களுடைய சாஸ்தா கோயில்களுக்கு வந்து சாஸ்தாவை வழிபட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர். 

சாஸ்தாவின் பெயர்கள்

சாஸ்தா என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், கிராமங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மருதவுடையார் சாஸ்தா, பொய்சொல்லா மெய்யான் சாஸ்தா, தென்னம் பாண்டி சாஸ்தா, பூந்தலை உடையார் சாஸ்தா, இளங்காமணி சாஸ்தா, சுந்தரபாண்டிய சாஸ்தா, கால்வாய் நம்பி சாஸ்தா, சொக்க கூத்தர் சாஸ்தா, சின்னதம்பி சாஸ்தா, முதலாமுடையார் சாஸ்தா, தீரன் சாஸ்தா, மயிலேறும் பெருமாள் சாஸ்தா, அழகர் சாஸ்தா, புங்கமுடையார் சாஸ்தா, கரும்புளிசாஸ்தா, சேரந்தையர் சாஸ்தா, பெரும்படை சாஸ்தா, குருக்காட்டூர் சாஸ்தா என்று சாஸ்தாவிற்குப் பல பெயர்களும், கரையடி காத்த அய்யனார், அடைக்கலம் காத்த அய்யனார், நீர்காத்த அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், சொரிமுத்து அய்யனார், கலியணான்டி அய்யனார், வீரப்ப அய்யனார், கற்குவேல் அய்யனார், செண்பகமூர்த்தி அய்யனார், சமணர்மலை அய்யனார், சிறை மீட்டிய அய்யனார், நிறைகுளத்து அய்யனார், செல்லப்பிள்ளை அய்யனார், வணங்காமுடி அய்யனார், பலவேசம் அய்யனார், பொய் சொல்லாத மெய் அய்யனார், செம்புலி அய்யனார் என்று அய்யனாருக்குப் பல பெயர்களும் ஏற்பட்டிருக்கின்றன. சாஸ்தா மற்றும் அய்யனாரின் பெயருக்கு முன்னால் அமைந்திருக்கும் முன்னொட்டுப் பெயர்கள் அந்தக் கோயிலைத் தோற்றுவித்தவரின் பெயரையோ அல்லது கோயில் இருக்குமிடத்தின் பெயரையோ அல்லது ஏதாவதொரு சிறப்பு ஒன்றைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

அஷ்ட சாஸ்தாக்கள்

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகமாக வழிபடப்படும் கிராமக் கடவுளான சாஸ்தாவின் உருவம் எட்டு வகையாக வடிவமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த எட்டு வகையான சாஸ்தாக்களையும் வடமொழிப் பயன்பாட்டில் ”அஷ்டசாஸ்தா” என்று சொல்கின்றனர். 

சந்திரனைப் போல் குளிர்ச்சியான அருளை வழங்கி இல்லற வாழ்க்கையை இனிமையாக்ககக் கூடியவராக இருக்கும் வடிவிலான சாஸ்தாவை “சம்மோகன சாஸ்தா” என்றும், திருமணத் தடைகளை நீக்கித் திருமணத்தை விரைவில் நடத்திட உதவும் வடிவிலிருக்கும் சாஸ்தாவை “கல்யாண வரத சாஸ்தா” என்றும், இறை பக்தியுடன் ஆன்மிகப் பணியில் மகிழ்ச்சி தேடுபவர்களுக்கு உதவும் வடிவிலான சாஸ்தாவை “வேத சாஸ்தா” என்றும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைகளை அளித்து, அக்குழந்தைகளின் வழியாகக் குடும்பத்தில் மகிழ்ச்சியடையச் செய்யும் வடிவில் அமைக்கப்பட்ட சாஸ்தாவை “சந்தான ப்ராப்தி சாஸ்தா” என்றும் சொல்கின்றனர். 

வாழ்க்கையில் வரும் அனைத்து தோசங்களையும் நீக்கிப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வடிவில் அமைந்த சாஸ்தாவை “மகா சாஸ்தா” என்றும், கல்விச் சிறப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வடிவத்திலான சாஸ்தாவை “ஞான சாஸ்தா” என்றும், சனிக்கிரகத் தோசத்தினால் வரும் துன்பங்களிலிருந்து காத்தருளும் சாஸ்தாவை “தரும சாஸ்தா” என்றும், தீயசக்திகளிடமிருந்து காக்கும் கடவுளாகக் குதிரை மீது அமர்ந்த நிலையில் இருக்கும் சாஸ்தாவை “வீர சாஸ்தா” என்றும் அழைக்கின்றனர். 

இந்த எட்டு சாஸ்தாக்களையும் வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைப்பதுடன், மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கும் என்பது சாஸ்தாவை வழிபடுபவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

மஹத்பூதமே சாஸ்தா

தசரதர் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த வேள்வியின் போது, அந்த வேள்வித் தீயிலிருந்து கையில் குழந்தைப்பேறு அளிக்கும் பாயாசத்துடன் ஒருவர் தோன்றினார். அப்படித் தோன்றியவரை அங்கிருந்தவர்கள் "மஹத்பூதம்” என்று அழைத்தனர் என்று வால்மீகி தான் எழுதிய இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார். வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மஹத்பூதமே சாஸ்தா என்று சிலர் சொல்கின்றனர். பூதமாகத் தோன்றிய சாஸ்தாவுக்குப் பூதநாதன், பூதத்தான் என்கிற பெயர்களும் இருக்கின்றன என்றும் சொல்கின்றனர்.

சங்ககாலத்தில் சாஸ்தா

சங்கப் பாடல்களில் இடம் பெற்றிருக்கும் புலவர்களில், பாண்டியன் கீரன் சாத்தன், அரசன்கிழார் மகனார் பெருஞ்சாத்தன், ஒக்கூர் மாசாத்தியார், பிரான் சாத்தனார், பெருந்தோள் குறுஞ்சாத்தன், மோசி சாத்தனார், மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் என்று பலரின் பெயர்களில் “சாத்தன்” என்ற பெயர் இடம் பெற்றிருக்கிறது. சாஸ்தாவின் தமிழ்ப் பெயரே சாத்தன் என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். இந்தப் புலவர்களில் ஒக்கூர் மாசாத்தியார் மட்டும் பெண் புலவர் என்பதால், அவர் சாத்தன் என்ற சொல்லின் பெண்பாலான "சாத்தி” என்ற பெயரைக் கொண்டிருந்தார் என்றும் சொல்கின்றனர்.

கணியான் கூத்து - சாஸ்தா வரலாறு

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கும் குலதெய்வக் கோயில்களில் நடைபெறும் கொடை விழாவில் (கோடை காலங்களில் நடத்தப்படும் விழா என்பதால், முன்பு கோடை விழா என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் கொடை விழா என்று மாற்றமடைந்திருக்கலாம்) கணியான் கூத்து என்கிற ஒரு கிராமியக்கலை இடம் பெறுகிறது. இந்தக் கணியான் கூத்தில் குலதெய்வத்தின் வரலாற்றுக்கு முன்பாக சாஸ்தாவின் வரலாறுதான் முதலில் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

சாத்தனார் - ஐயனார்.

சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது 'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய 'மணிமேகலை'யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் 'சாத்தனார்' என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் 'சிலப்பதிகார'க் கதைத் தலைவனுடைய தந்தை 'மாசாத்துவன்' என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷ¨வாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன. மற்றும், 'பெருந்தலைச் சாத்தனார்', 'மோசி சாத்தனார்', 'வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்', 'ஒக்கூர்மா சாத்தனார்', 'கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்' முதலான சங்ககாலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த 'சாத்தன்' என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.

கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோவில்களுக்குச் 'சாஸ்தாவு குடி' என்றும், 'சாஸ்தா வேஸ்வரம்' என்றும், 'சாஸ்தாவு கள' என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவை யாவும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்த மதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் 'சாத்தன் காவுகள்' என்று பெயர். (காவு = கா = தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்) பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு 'ஆராமம்' (பூங்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக்கோயில்களாக இருந்து, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு 'ஐயப்பன்' என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கிவருகின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. 'சாஸ்தா', அல்லது 'சாத்தன்' என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் 'ஐயன்', அல்லது 'ஐயனார்' என்பது. 'ஐயன்' என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக்கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.

         ' பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
          சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
          கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
          தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே '

என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.

பிற்காலத்தில், 'சாத்தனார்,' 'ஐயனார்', 'அரிஹரபுத்திர்' என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.

    'சாத்தன்,' அல்லது 'சாஸ்தா' என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப் பற்றி என்க. சிலப்பதிகாரம், கனாத்திற முரைத்த காதையில், 'பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு' எனவரும் அடியில், 'பாசண்டச் சாத்தன்' என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு : "பாசண்டம் தொண்ணூற்றாறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாதலின், மகாசாத்திர'னென்பது அவனுக்குப் பெயராயிற்று." இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, 'சூடாமணி நிகண்டும்,'

         ' அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி
          நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் '

என்று கூறுகின்றது. 'அருங்கலை நாயகன்' என்று திவாகரம் கூறுகின்றது. நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், 'ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்' என்று எழுதியிருப்பது (படம் 3) காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் 'சாஸ்தா', அல்லது 'மகா சாஸ்தா' என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். 'லலிதாவிஸ்தார' என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பலகலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண் கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் 'சாஸ்தா' என்னும் பெயர் உள்ளதுதான். (படம் 6 காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் 'காமாட்சிலீலாப் பிரபாவம்' என்னும் காமாக்ஷ¤ விலாசத்தில், 'காமக்கோட்டப் பிரபாவத்தில்', 'தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம்' காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. * 'சாஸ்தா' என்பவரும் 'புத்தர்' என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம். இன்னும் சில ஆதாரங்கள் உண்டு. அவை விரிவஞ்சி விடப்பட்டன.

    'சாஸ்தா' என்னும் புத்தருடைய கோயில்களை 'ஐயனார் கோயில்கள்' என்றும், 'சாதவாகனன் கோயில்கள்' என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச் செய்துவிட்டது போலவே, ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகின்றது. சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், 'தலைவெட்டி முனீஸ்வரன்' கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம்போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது காணப்படும் 'தருமராஜா கோயில்கள்' என்பனவும் பண்டொருகாலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. 'தருமன்,' அல்லது 'தருமராசன்' என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் 'தருமன்' என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் 'தர்மராஜன்' என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமாராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில், பௌத்தர் போற்றும் 'போதி' என்னும் அரச மரங்கள் இன்றைக்கும் காணப்படுவதே, தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் 'தருமராஜா', அல்லது 'தருமதாகூர்' என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக்கால்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருதப்படும்.

    இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப் பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது. 'தருமராஜா' என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, 'தாராதேவி' என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதையின் கோயிலாக்கப்பட்டதுபோலும்.

    சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் 'வரதராசர் கோயில்', 'திருவரங்கர் கோயில்', 'வேங்கடேசர் கோயில்' முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் 'கபாலீஸ்வரர் கோயில்', 'தியாகராசர் கோயில்', 'சொக்கலிங்கர் கோயில்' முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக்காலத்தில், பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் 'தருமராசா கோயில்', 'சாத்தனார் கோயில்', 'முனீஸ்வரர் கோயில்' என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டுவந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமத்த் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராம தேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகின்றது.

______________________________________________________________
   

* காஞ்சிக் காமாட்சி அம்மன் கோயில் உட் பிராகாரத்தில் இருந்த இந்த 'சாஸ்தா' என்னும் புத்தர் உருவச்சிலை இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் இருக்கின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

 

shasta_pura_pushkala_on_elephantகாருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

என்பது கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்திலுள்ள ஐயனார் தோற்றம் பற்றிய வரலாறு பேசும் பகுதியில் ஐயனாரின் திருவுருவ வர்ணனையுடன் கூடிய பாடல். இப்பாடலில் பூரணை புஷ்கலா தேவியருடன் ஹரிஹரபுத்திரராக ஐயப்பன் மதக்களிற்றில் எழுந்தருளி வருவதாகச் சொல்லப்படுகின்றது. இதே போலவே,

’மத்தமாதங்க கமநம் காருண்யாம்ருத பூஜிதம்
ஸர்வ விக்னஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்’

”மதம் பொருந்திய யானையை ஊர்தியாகக் கொண்டவரும், கருணை பொழியும் திருமுகத்தினரும், வணங்கத்தக்கவரும, எல்லா துன்பங்களையும் நீக்குபவரும் ஆகிய சாஸ்தாவை வணங்குகிறேன்” என்று தர்மசாஸ்திரா ஸ்தோத்திரம் சொல்கிறது.

ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா?

ஐயனார் வழிபாடு என்பது மிகப்பழைய காலம் தொடக்கம் தமிழகத்திலும் இலங்கையிலும் விரவிக் காணப்படுகின்றது. ஊர்கள் தோறும் வயல் நிலங்களிலும் கடலோரத்திலும் மலை உச்சிகளிலும் ஐயனாருக்கு கோயில் எழுப்பி தமிழர்கள் பாரம்பரியமாக கிராம உணர்வுடன் இயற்கை வழிபாடாற்றியும் சிவாகம பூர்வமாக திருக்கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்து வேதாகம நெறி சார்ந்தும் வழிபாடாற்றி வந்திருக்கிறார்கள்.

shasta_sorimuthu_ayyanarசாத்தா (சாஸ்தா) என்றும் அழைக்கப்பெறும் ஐயனார் கிராமத்தேவதையாகவும் வழிபடப்பட்டு வந்துள்ளார். தமிழகத்தின் கிராமங்களில் ஊர் நடுவே சிவபெருமானுக்கோ, மஹாவிஷ்ணுவுக்கோ திருக்கோயில் பெரிதாக எழுப்பி வழிபாடாற்றும் போது ஊரின் நாற்புறத்தும் கிராமத்தேவதைகளாக மாரி, பிடாரி, ஐயப்பன் முதலிய தெய்வங்களை கோயில் அமைத்து வழிபாடாற்றியிருக்கிறார்கள். இது இப்படியே இன்னும் விரிவடைந்து சில ஊர்களில் ஐயனாருக்கு பெரிய கோயில்கள் அமைத்து மஹோத்ஸவாதிகள் செய்து வழிபாடாற்றியும் வந்திருக்கிறார்கள்.

இவ்வகையில் பெரிய சிற்ப சித்திர தேரில் ஐயனாருக்கு உலாவும் நடைபெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிட வேண்டியது. இது இவ்வாறிருக்க, மேற்படி ஐயனாரின் அவதாரமாகக் கொள்ளப்பெறும் ஐயப்பன் வழிபாடு கேரளதேசத்திலிருந்து அண்மைக்காலத்தில் மிகப்பிரபலம் பெற்றிருக்கிறது. இன்றைக்கு கேரளாவிலுள்ள சபரிமலைக்கு உலகெங்கிலுமிருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான அடியவர்கள் மிகப்பக்தி சிரத்தையுடன் சரண கோஷம் முழங்க செல்வதையும் காண்கிறோம்.

ஆக, நம் தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வரும் ஐயனார் வழிபாடும் தற்போது பிரபலம் பெற்றுள்ள ஐயப்பன் வழிபாடும் நெருக்கமானதாகக் கருத முடிகிறது. ஐயனாரின் அவதாரமான ஐயப்பனை இணைத்து சிந்திக்க முடிகின்றது. எனினும் இரு வேறு வடிவங்களில் வழிபாடாற்றும் போது இடையில் சில ஸம்ப்ரதாய பேதங்களையும் அவற்றின் வழியான வழிபாட்டு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அவதானிக்கலாம்.

ஐயனாரின் அவதாரமும் அருளாட்சியும்

கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியதும் சிறப்புப் பொருந்தியதுமான கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள் ஊறித் திளைத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

சாவா மூவா மருந்தாகிய அமிர்தத்தைப் பெற திருப்பாற்கடலை தேவரும் அசுரரும் கடைந்து அமிர்தத்தைப் பெற்ற போது, தேவர்களுக்கே அமிர்தத்தை வழங்க திருமாலோன் மோஹினி வடிவம் என்ற அழகிய பெண் வடிவு கொண்டு, அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளித்தார். இது நிற்க, சைவசித்தாந்த மரபானது

சாந்தமயமாக இறைவன் எழுந்தருள்கையில் உமா,
கோபங்கொள்கையில் காளீ,
போரிடுகையில் துர்க்கா,
புருஷத்துவத்துடன் எழுந்தருள்கையில் விஷ்ணு

என்று சிவபெருமானின் சக்திகளை நான்காகக் கூறும்.

இந்த வகையில் சிவபெருமானின் சக்தியாகவும் விஷ்ணு விளங்குகிறார். ‘அரியல்லால் தேவியில்லை’ என்ற அப்பர் பெருமானின் தேவார அடியும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. இதில் விஷ்ணுவை சக்தி என்கிற வகையில் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று கொள்வதிலும் பார்க்க விஷ்ணு உயிர் என்றால், சிவன் உடல் அல்லது சிவன் உடல் என்றால் விஷ்ணு உயிர் என்று கொண்டார்கள் என்று கருதுவதே சிறப்பு. சிவபெருமானின் ஹிருதயத்தில் விஷ்ணுவும், விஷ்ணுவின் ஹிருதயத்தில் சிவனாரும் வாஸம் செய்வதாக ஒரு பிரபல சம்ஸ்கிருத வாக்கியமும் இருக்கிறது.

shasta_ayyappan_birthஆக, சிவசக்தி ரூபமாக, சங்கர நாராயணனாக இணைந்து காட்சி தரவும் ‘அரியும் அரனும் ஒண்ணு அறியாதார் வாயில் மண்ணு’ என்ற கிராமத்துக் குழந்தைகள் சொல்லும் உண்மையை எடுத்துக் காட்டவும் இச்சந்தர்ப்பத்தில் மோஹினி அவதாரம் செய்து பெண்ணுருக் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவுடன் ஆணுருக் கொண்டு காட்சி தந்த பரமேஸ்வரன் இணைய இந்த திருவிளையாடலில் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் சிலர் கூறுவது போல ஒரு பாற்புணர்ச்சி என்று இதனைக் கருதக்கூடாது. அப்படிக் கருதுவது இங்கு பொருத்தமானதுமல்ல. இங்கே இருவரும் ஒருவர். அவ்விருவரில் தோன்றிய மூன்றாமவரும் ஒருவரே.

நாவலந்தீவில் தேக்க மர நீழலில் நடந்த கூடலில் அரிகரபுத்திரர் அவதரித்தார். லோகரட்சகராக இறைவனால் உடனேயே பணி நியமனமும் மேற்படி ஐயப்ப தேவருக்கு வழங்கப்பெற்றதாகவும் கந்தபுராணத்தின் ‘மகா சாத்தாப்படலம்’ சொல்லும். கந்தபுராணம் இப்பெருமானின் தோற்றப்பொலிவைக் காட்டும் போது,

மைக்கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர் மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீக்கினான்

என்று கூறும்.

மேலும் கந்தபுராணம் சிவகுமாரர்களான விநாயகர், முருகப்பெருமான், போன்றோருக்கு இளவலாக தம்பியாக இக்கடவுள் கொள்ளப்படுவார் என்கிறது. தேவர்களையும் யாவரையும் காக்கும் பொறுப்பில் ஐயனார் என்ற இக்கடவுள் என்றும் ஈடுபட்டிருப்பதாகக் காட்டுகிறது.

ஸ்காந்தத்தின் அடிப்படையில் கந்தபுராணம் இவ்வாறு ஐயப்பனின் அவதாரத்தைக் காட்ட பத்மபுராணம் பஸ்மாசுரனை அழிக்க சிவபெருமான் எழுந்தருளிய போது பஸ்மாசுரனை மயக்கி அழிக்க திருமால் மோஹினி வடிவம் கொள்ள, அப்பொழுது பிறந்தவரே ஐயனார் என்று காட்டுகிறது. இதே போலவே தாருகா வனத்து முனிவர்களின் கடவுள் நிந்தனையையும் செருக்கையும் அழிக்க பிட்சாடனராக சிவபெருமான் வந்த போது மோஹினி வடிவம் கொண்ட திருமாலும் இணைந்து பிறந்தவரே ஐயனார் என்பதும் வரலாறு.

‘ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் சோதி’ ஆகிய இறைவன் அடியவர்களின் நலன் கருதி திருவிளையாடல்கள் புரிகிறான். ஆதில் சில உண்மைகளை நிலை நிறுத்திக் காட்ட புராணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் இறைவனையே அளக்கவோ, அவனின் பிறப்பை அறியவோ முற்படுவது விநோதமானது , உண்மையில் அது எவராலும் இயலாதது என்பதையே இக்கதைகள் புலப்படுத்தி நிற்கின்றன எனலாம்.

தமிழ் இலக்கியங்களினூடு நயந்து பேசப்படும் ஐயனார்

சூரபத்மனால் வருந்திய இந்திரன் சீர்காழியில் இந்திராணியுடன் மறைந்து வாழலானான். அப்பொழுது தேவர்களுக்காக இறைவனை வேண்ட திருக்கைலைக்கு அவன் செல்ல நேரிட்டது. அப்போது தனித்தவளாயிருந்த இந்திராணிக்கு அசுரர்களால் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சிய அவன் ஐயனாரைத் துதித்து அவரைக் காவலாக எழுந்தருளியிருக்க வேண்டினான்.; ஐயனார் தனது சேனாபதிகளில் ஒருவரான மஹாகாளர் என்பரை இந்திராணிக்கு காவலாக நியமித்தார்.

இந்திரன் எதிர்பார்த்தது போலவே சூரனின் தங்கை அசமுகி இந்திராணியைக் கண்டு அவளின் அழகைப் பார்த்து ‘இவளை நாம் கொண்டு போய் நம் அண்ணனிடம் கொடுப்போம்’ என்று துணிந்து அவள் சிவபூஜை செய்து கொண்டிருந்த சோலையை அடைந்து, இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்தாள். இவ்வமயம் அஞ்சிய இந்திராணி தன் காவல் நாயகராகிய ஐயனாரை நோக்கி தன் அபயக்குரலை வெளிப்படுத்தி அழுதாள்.

பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்
கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்
மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!

shasta_ayyanar_chennai_museumஇந்த அழுகுரலைக் கேட்டு ஓடி வந்த ஐயனாரின் சேனாபதியாகிய வீரமஹாகாளர் அசமுகியின் இழுத்த கையை அறுத்தெறிந்தார். இவ்விடம் இன்றும் சீர்காழியில் ‘கைவிடான் சேரி’ என்று வழங்கப்பெறுவதுடன் அங்கு ஐயனாருக்கு திருக்கோயிலும் அமைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆக, இந்திராணியின் திருமாங்கல்யத்தைக் காப்பாற்றிய முருகக் கடவுளுக்கு இளையவரான ஐயனாரின் பெருமையும் முருகனின் புகழ் சொல்ல வந்த கந்தபுராண காவியம் தெளிவுறக் காட்டுகிறது எனலாம்.

பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தம் வாழ்வின் நிறைவில் திருக்கைலாசத்திற்குச் சென்ற போது அவருடன் கைலாசத்திற்கு எழுந்தருளிய சேரமான் பெருமாள் நாயனார் ‘திருக்கைலாச ஞான உலா’ என்ற பிரபந்தத்தை பாடினார். அதனை கைலாசத்திலிருந்து கேட்டு தமிழகத்தின் திருப்பிடவூருக்குக் கொண்டு வந்து வெளிப்படுத்தி தமிழ்த் தொண்டாற்றியவராகவும் ஐயனார் பெருமானைக் காட்டுவர். பேரம்பலூருக்கு அருகிலுள்ள திருப்பிடவூர் என்ற இவ்வூரிலுள்ள ஐயனார் இன்றும் கையில் புத்தகத்துடன் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள். இவரை ஊர் மக்கள் ‘அரங்கேற்றிய சாமி’ என்று அழைக்கிறார்களாம்.

ஈழத்துச் சிதம்பர தலபுராணத்தில் இக்கதையை,

சேரமான் அருளிச்செய்த திருவுலாத் தெய்வ வெற்பில்
நேருறக் கேட்டு முந்நீர் நெடும்புவி உய்யுமாறு
சீருறு சோலை சூழ்ந்த திருப்பிடவூரை நண்ணி
ஆரவே சொல்லி வைத்த ஐயனே போற்றி போற்றி

என்று கூறுவதைக் காணலாம்.

மூக்கில் விரலை வைத்து முகுந்தன் மகன் சிந்திப்பதென்ன?

பொ.பி* 16ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மகானாகிய ஸ்ரீமத் அப்பையதீட்சிதர் ஒரு சமயம் அக்கால அரசனாகிய நரசிம்ஹபூபாலன் மற்றும் அவனது அரசவைப்புலவருடன் ஒரு ஐயனார் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஐயனார் மூக்கில் ஒரு விரலை வைத்து ஆழ்ந்த சிந்தனையில் காட்சி தருவதைக் கண்டார். (* பொ.பி – பொதுயுகத்திற்குப் பின், CE – Common Era).

அவ்வூர் மக்களிடம் இது பற்றி வினவிய போது ‘ஒரு ஞானி வருவார். அவர் ஐயப்பதேவனின் சிந்தனையைச் சொன்னவுடன் மூக்கிலிருந்து கையை எடுத்து விடுவார் எங்கள் ஐயப்பன்’ என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டனர். உடனே அரசன் அவைக்களப்புலவரைப் பார்க்க, அவர் பாட, மூக்கிலிருந்து கை எடுக்கவில்லையாம் சாஸ்தா. அப்பையதீட்சிதரை அரசன் நோக்க, அவர்,

அன்னையாம் அரவணையான், அபிராமவல்லி, இருவரையுமே யான்
இன்சொல் பேசி அம்மே என்றுமே இன்புற்று, கைலாச நாதனாய
பொன்னார் மேனிப்பெருமானை தந்தையெனவும் விளித்ததனால், வைகுண்ட
மின்னிடு பதியுற்றால் மிளிருமெழில் ஸ்ரீதேவியை எப்படி அழைப்பேனோ?

என்று பாட சாஸ்தாவின் மூக்கிலிருந்து கை எடுக்கப்பெற்று விட்டதாம்! ஐயப்பனுக்கு திருமால் அன்னை என்றால் திருமகள்? இந்த வினாவின் விடையைச் சொல்ல வல்லவர் யார்?

இந்த வினாவினூடே நாம் அபரிமிதமான இறையருளின் திருவிளையாடல்களை இனங்கண்டு கொள்ளலாம். இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும் அம்மூர்த்திகளிடையே பேதங்கள் பார்த்து ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும் நம் சந்தோஷத்திற்காகவும் நாம் அறிவு பூர்வமான நீதிகளைப் பெறவுமே அன்றி அம்மூர்த்திகளுள் பேதமில்லை என்ற உண்மையைக் காட்டவேயாம் என்ற உண்மை இக்கதை ஊடாகவும் வெளிப்படுகின்றது. எல்லோரும் அப்பைய தீட்சிதரின் திறனையும் அறிவையும் பாராட்டினார்களாம் என்று ‘தீட்சிதேந்திரம்’ என்ற நூல் சொல்கிறது. இந்தக் கதை நம்மூர்களில் மிகப்பிரபலமாக உள்ளது. இது போல ஐயனார் பற்றிய பல கதைகளும் இருக்கலாம். சாஸ்தா என்பதற்கு மக்களின் மனங்களில் ஊடுருவியவர் என்றும் பொருள் சொல்வதுண்டல்லவா?

ஆகம நெறியில் ஐயப்பன் வணக்கம்

சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிரபேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப் பேசுகின்றது. மதகஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, சௌந்தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.

shasta_ayyanar_parivarangalஇந்த ஆகமங்கள் மற்றும் பத்ததிகளின் படி சில மாறுபாடான கருத்துகளும் உள்ளன. சாஸ்தாவின் பரிவாரங்களாக மஹாகாளன், கோப்தா, பிங்களாட்சன், வீரசேனன், சாம்பவன், த்ரிநேத்ரன், சூலி, தட்சன், பீமரூபன் ஆகியோரையும் கொடியாக யானை மற்றும் கோழியையும் த்யானரத்னாவளி காட்டுகிறது. அது சௌந்திகராஜன் புதல்வியான பூர்ணா மற்றும் அம்பரராஜன் புதல்வியான புஷ்கலா ஆகியோர் ஐயப்பனின் இரு மனைவியர் என்றும் சொல்கிறது.

இது இவ்வாறாக சில்பரத்னம் இப்பெருமான் மேகவர்ணர் என்றும் அவருக்கு பிரமை என்ற மனைவியும் சத்யகன் என்ற புதல்வனும் உண்டு என்றும் கூறுகிறது. பூர்வகாரணாகமம் ஐயப்பனின் நிறம் கறுப்பு என்கிறது. சுப்ரபேதம் என்ற சைவாகமம் ஐயப்பனை பெருவயிறர் என்றும் மதனா, வர்ணினி என்ற மனைவியரை உடையவர் என்றும் கரியமேனியர் என்றும் கூறுகிறது. இதே வேளை, அம்சுமான ஆகமம் ஹரிஹர சாஸ்தா என்ற ஐயன் முக்கண்ணும் சாந்தரூபமும் கொண்டவர். வெண்பட்டாடை சாற்றிய திருமேனியர். தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவர் என்று கூறுகிறது. எனினும் பொதுவாக ஐயனாரையும் ஐயப்பனையும் பொன்மேனியராகவே காட்டும் வழக்கமே இருக்கிறது.

இவ்வாறாக, ஐயனார் -ஐயப்பன் வணக்கம் பல்வகைப் பட்டு பலவாறாக பலராலும் பல்வேறு நிலைகளில் செய்யப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். அவரை கிராமதேவதையாகவும் காவல் தெய்வமாகவும் கண்டிருக்கிறார்கள். அவரே முழுமுதற்பொருள் என்று பூஜை செய்தும் வாழ்ந்திருக்கிறார்கள். ஆக, ஐயன் அவரவர் தத்தம் அறிவின் வண்ணம் எப்படி எப்படி வணங்குகிறார்களோ அப்படி அப்படிக் காட்சி தந்து அவரவர் நிலைக்கேற்ப அருளி வந்திருக்கிறார் என்றே கருத முடிகின்றது.

பொதுவான வழக்கில் உள்ள கதையின் படி ‘நேபாளதேசத்து அரசனான பலஞனின் மகளான புஷ்கலையை அவனின் வேண்டுகோளின் படி ஐயன் மணந்தார் என்றும், வஞ்சி மாநகராண்ட பிஞ்ஞகன் என்ற அரசனின் வேண்டுகோளை ஏற்று அவனின் மகள் புஷ்கலையை ஐயன் ஏற்றார் என்றும்’ சொல்லப்படுகிறது. இவர்கள் ஸத்தியபூரணர் என்ற முனிகுமாரத்திகள் என்றும் சில நூல்கள் சொல்வதாக அறியக்கிடக்கிறது.

shasta_with_purna_pushkala

எது எப்படியோ இருமையின்பத்தையும் அருளவல்ல பெருமான் இருதேவியருடன் காட்சி தருவது ஏற்கத்தக்க விடயமாக தெரிகிறது. இதனை தத்துவார்த்த நோக்கில் அவதானித்து ஸத்தியத்தை அறிய வேண்டும்.

ஆகம வழிப்பட்ட வழிபாடுகளைப் பெறும் ஐயனாரைப் பற்றி நோக்கும் போது நம் ஊர்களின் ஆகம நெறிப்பட்ட வகையில் ஐயனாருக்கு பேராலயங்கள் சமைத்துக் குடமுழுக்காட்டி வழிபாடாற்றியும் வந்திருப்பதைக் காண்கிறோம். வடஇலங்கையில் அனலைதீவு என்ற தீவிலும் ஊர்காவற்துறையிலுள்ள சுருவில் கிராமத்திலும் மேற்சுன்னாகம் பகுதியிலும் காரைநகரின் வியாவிலிலும் அளவெட்டியிலும் ஐயனாருக்கு பலநூறாண்டுகள் பழைமையான சிவாகம வழியில் அமைந்த சிவாகம வழியில் பூஜிக்கப்படும் ஆலயங்கள் உள்ளன.

வியாவில் ஐயனார் கோயில் பற்றி ‘ஆறுமுகநாவலர் / ஈழத்துச் சிதம்பர தலபுராணம்’ என்ற இத்தளத்தில் வெளியான முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் கட்டுரையிலும் பல செய்திகளைக் காணலாம். அனலை தீவில் இன்றும் தான்தோன்றியான ஒரே கல்லில் அமைந்ததும் கடலில் மிதந்து வந்ததுமான பூரணை புஷ்கலை உடனாய ஐயப்பன் திருவுருவம் உள்ளது. பாரம்பரியமாக இக்கோயிலில் கொடியேறி சிவாகமப்படி மஹோத்ஸவம் வருடாந்தம் நடைபெற்று வருகிறது. சுருவில் என்பது ஐயனாரின் கரவில் அல்லது கருவில் ஊன்றிய இடம் என்று சொல்கிறார்கள். .இக்கோயிலில் உள்ள ஊஞ்சல் பாவில் ஒரு பாடல்

நந்தவன வாவிமலி நாடுங் காடும் நல்லவனாய் பூவுலகைக் காக்க வேணிச்
சங்கரனார் மோகினியாம் அரியோடாட சாந்திமிக அவதரித்த காந்தமூர்த்தி..

என்று ஐயனின் அவதாரத்தைப் பேசுவதைக் காண முடிகின்றது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

சபரி மலைக்கு வந்த சாஸ்தா யார்?

பசுமை கொஞ்சும் கேரளதேசத்தில் பம்பை நதிக் கரையோரம் கோயில் கொண்ட சபரிகிரீஸனான ஐயப்பன் கலியுகத்தில் மிகப்பிரபலம் பெற்று விளங்குகிறார். இப்போதெல்லாம் கார்த்திகை பிறந்தால் உலகெங்கும் ‘ஐயப்பா சரணம்’ என்ற சரணகோஷம் தொடங்கி விடும். மஹிஷி என்ற அரக்கியை அழிக்க வந்த அவதாரம் ஐயப்ப அவதாரம். இவரை நாம் முன்னரே கண்ட ஐயனாரின் பிறப்பாக காட்டுவர். ஐயனாரின் அவதாரமாக பம்பையாற்றங்கரையில் தானே குழந்தையாகி கழுத்தில் மணியுடன் கிடந்தார் சுவாமி. அப்போது அங்கே வந்த பந்தளம் என்ற அப்பகுதியை ஆண்ட ராஜசேகர மன்னன் குழந்தையைக் கண்டு எடுத்துக் கொண்டு போய் தன் பிள்ளையில்லாக் குறை போக்க வந்த பிள்ளை என்று மகிழ்ந்து ‘மணிகண்டன்’ என்று நாமகரணம் செய்து ஆசையாய் வளர்த்தான்.

shasta_ayyappan_on_tigerதனது பன்னிரண்டாவது வயதில் தாயின் தலைவலி நீக்க மருந்தாக புலிப்பால் பெற.. அதன்பேரில் தன் அவதார ரஹஸ்யத்தை செயற்படுத்த காட்டிற்குச் சென்றார் ஐயப்பன். மஹிஷியை ஐயப்பன் காலால் உதைந்த போது அவள் அவரின் திருவடிகள் பட்டு புனிதையானாள். அழகிய பெண் வடிவம் எய்தினாள். தன்னை மன்னிக்குமாறு மன்றாடினாள். சாப விமோசனம் பெற்று மனைவியாக தன்னை ஏற்க வேண்டி நின்ற மஹிஷியை நோக்கி ‘இப்பிறவியில் எப்பெண்ணையும் சிந்தையாலும் தொடாத’ பிரம்மச்சர்ய விரதம் அனுசரிப்பதே தன் நோக்கு என்று குறிப்பிட்ட ஐயன் அவளுக்கும் பிரம்மச்சர்ய சக்தி பற்றிக் கூறினார். பின் அவளைத் தன் சகோதரியாக ஏற்று தான் இருப்பிடமாக கொள்ளவுள்ள சபரிமலையின் வலது பாரிசத்தில் ‘மஞ்சுமாதா’ என்ற பெயருடன் விளங்க அருளினார்.

பின் தன் காரியத்தை முடித்துக் கொண்டு தேவர்கள் பூஜிக்க புலிப்பால் பெற வந்த பெருமான் புலிவாஹனராக பந்தள ராஜசபைக்கு எழுந்தருளினார். சூழ்ச்சி செய்து ஐயனைக் காட்டுக்கு அனுப்பிய சிறியதாய் பதறிப்போய் தன் பையனான ஐயன் கால்களில் விழுந்து தன் பாவத்தை மன்னிக்க வேண்டினாள்.  அவளை மன்னித்த பெருமான் அனைவருக்கும் அருளாட்சி செய்து தன் அவதாரத்தை வெளிப்படுத்திய பின் வில்லில் ஒரு அம்பைப் பூட்டி ‘இது விழும் இடத்தில் எனக்கு கோயில் அமைக்குதி’ என்று தன் வளர்ப்புத் தந்தையான ராஜசேகரனுக்கு ஆணையிட்டு பரமனாக பரமபதமேகினான் ஐயன் ஐயப்பன்.

ஐயப்பன் காடு செல்லுகையில் ராஜசேகரன் தந்து கொண்டு போனது இருமுடி என்று அவன் அடியார்களும் இன்றும் சபரிமலைக்கு கொண்டு செல்கிறார்கள். ஒரு முடியில் உணவுப்பொருட்களும் மறுமுடியில் பூஜைப்பொருட்களும் என்று அந்த இருமுடி அமைகிறது. மஹிஷி உடல் வளராமல் சுவாமி கல்லிட்ட கல்லிடுங்குன்றில் அடியார்களும் கல்லிடுகிறார்கள். ஐயப்பனின் அம்பு(சரம்) விழுந்த சரங்குத்தி ஆலில் அடியார்கள் சரங்குத்துகிறார்கள். அப்புறமாகத் தான் புலன் ஐந்து, பொறி ஐந்து பிராணன் ஐந்து, மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று ஆக பதினெட்டையும் கடந்து பதினெட்டுப்படி ஏறி சுவாமி ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் சுவாமி ஐயப்பனைக் காண்கிறார்கள்.

shasta_kirata_murtiசபரி மலையிலே ஐயப்பனைக் காண வாருங்கள்… அவன் நாமத்தை எப்போதும் பாடுங்கள்… ஐயப்பனைக் காண வாருங்கள்.. என்று பாடி.. அவன் திருவடித்தாமரைகளில் வாழ்வின் ஆனந்தத்தைப் பெறலாம். ஐயனானவர் கேரளதேசத்தில் தான் வாழ்ந்த பதியில், குளத்துப்புழாவில் பாலயோகிநாதனாயும், ஆரியங்காவில் இல்லறக்கோலத்துடன் பூரணை புஷ்கலை துணைவனாயும், அச்சங்கோவிலில் வனப்பிரஸ்தரூபராயும், எருமேலியில் கிராதவடிவுடன் வேடனாயும், சபரிமலையில் சாஸ்தாவாகவும் காந்தமலையில் மோட்சப்பிரதாயகராயும் காட்சி தருவதாக அடியார்கள் போற்றி வணங்குவர்.

இன்றைக்கு சில தசாப்தங்களாக இவ்வழிபாடு மிகப்பிரபலம் பெற்று வருவதையும் கேரள முறைப்படி சபரிமலையில் தாந்திரீகர்கள் செய்வது போல திருக்கோயில்களை அமைத்து திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பல்வேறு ஊர்களிலும் பல்வேறு கோயில்கள் செய்து கோவிந்தன் மகனான ஐயப்பனை வழிபாடாற்றி வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

ஐயப்ப வழிபாட்டில் உள்ள ஸம்ப்ரதாயங்களும் சில வினாக்களும்..

ஏழைபங்காளன், ஆபத்பாந்தகனான ஐயப்பனின் வழிபாட்டில் ஜாதியில்லை, சமயமில்லை, ஐயப்பனே வாவர் என்ற முஸ்லீம் நண்பரை உடையவர் என்று சொல்லுவார்கள். இதனால் சபரிமலைக்குச் செல்லும் அன்பர்கள் ஒவ்வொருவரும் வாவர் சுவாமி கோயில் என்று வாவர் மசூதிக்கும் சென்று பின்னரே ஐயப்பனைக் காணச் செல்கிறார்கள். பணக்காரன், ஏழை பேதமில்லை.. மாலை அணிந்து ஐயப்பனைக் காணச் செல்ல வேண்டும் என்றால் எல்லோரும் சுவாமிகள்… எல்லோரும் மஞ்சமாதாக்கள்… சிறுவர்கள் யாவரும் மணிகண்டன்கள்.. எங்கும் சமத்துவம் இது தான் ஐயப்ப வழிபாட்டின் விசித்திரம்.

அருள் உண்டு.. அச்சமில்லை.. எங்கு நோக்கினும் பஜனை..’ சாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷம். எல்லாமே சிறப்புத் தான்.. எனினும் சில விடயங்கள் தெளிவாக்கிக் கொள்வதும் அவசியம். ஐயப்ப வணக்க முறைகள் சில தசாப்த காலங்களுள்ளேயே ஒழுங்கமைக்கப்பெற்றிருப்பதாகவே கருதமுடிகின்றது. ஆகவே, சில விடயங்களில் சிற்சில மாற்றங்களும் தேவை என்று சிறியேன் கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரையில் நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியனவே. ஆயினும் சில விடயங்கள் பற்றி சிறியேனுக்குச் சில சந்தேகங்கள் உண்டு.

(அ) கன்னிச்சாமிமார்கள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் சிலர் கறுப்பு நிறத்தில் ஆடையணிகிறார்கள் .ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலரைத் தவிர நமது இந்துதர்மத்தில் கறுப்புடை சாற்றி வழிபாடுகளில் ஈடுபடும் வழக்கம் இல்லை என்றே அறிகிறேன். திருமால் கார்மேக வண்ணனாய் இருந்தாலும் வைஷ்ணவர்கள் கறுப்பாடை சாற்றிக் கொள்வதில்லை. ஏன் ஐயப்பனடியார்கள் கறுப்பாடை அணிகிறார்கள்?. செம்பொருளான இறைவனைக் காட்ட செவ்வாடை சாற்றுவதோ.. மங்கலமான மஞ்சளாடை, காவியாடை சாற்றுவதோ வெள்ளாடை அணிவதோ ஏற்கத்தக்கது. இது விடயத்தில் மீள்பரிசீலனை செய்தால் என்ன என்பது எனது வேண்டுகோள்.

shasta_ayyappan_sabariஅதிலும் கேரள தேசத்தில் வெண்மையான ஆடைகளுக்கு மரியாதை அதிகம். அவர்கள் அதனையே விரும்பி அணிகிறார்கள் .பார்க்கவும் தூய்மையும் அழகும் பொலிகிறது. எனவே ஐயப்ப பக்தர்களும் அதனையே பின்பற்றலாமே? சுவாமி சந்நதியில் பூஜை பண்ணும் மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும் என்பது என் வினா.. சில அடியவர்கள் மோட்டார் வாகனப் பாவனைக்கு கறுப்பு நிற ஹெல்மெட் (தலைக்கவசம்) தான் இக்காலத்தில் அணிகிறார்கள். இப்படி எல்லாம் கறுப்பு மயமாக்கிக் கொள்வது விரதகாலத்திற்குப் பொருத்தமானதா? என்று தெரியவில்லை. சில அடியவர்கள் நீல வர்ண ஆடை அணிகிறார்கள் இதனை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடிகின்றதல்லவா?

(ஆ) இது போல, இஸ்லாமியப் பள்ளி வாசல்களுக்கு தொழுகைக்குப் பெண்கள் செல்ல இயலாது என்பது போல அமைந்திருக்கிற, பெண்ணடியார்களுக்கு ஐயப்பவழிபாட்டிலுள்ள சில தடைகளும் நீக்கப்பெறலாம் என்பதும் தாழ்மையான எனது கருத்து. இருந்தாலும் இது விடயத்தில் பெண்களே சிந்திக்க வேண்டும். ஒரு ஆடவனான சிறியேன் அறிவுக்குறைவுடன் இது பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

(இ) ஐயப்பனடியார்களில் சிலர் கார்த்திகை, மார்கழி என்ற இருமாதங்களிலும் விரதம் அனுசரிக்கிறார்கள். இந்த மண்டலபூஜை என்ற விஷயம் பரம்பரையாக ஐயனார் பக்தர்களாக ஐயனாருக்கு ஆட்பட்டிருக்கிற அடியவர்கள் அறிந்திருக்கிறார்களில்லை. ஆக, ஐயனின் புதிய அவதாரத்தினை முதன்மைப்படுத்தியே இது பேணப்படுகிறதா? இது பற்றியும் தெளிவான செய்திகள் பேணப்படுவது சிறப்பல்லவா? மாலை அணிபவர்களுக்கு ஒவ்வொரு குருசாமியும் ஒவ்வொரு விதமாக கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஒரு ஒழுங்கமைப்பில்லாத நிலையையே ஏற்படுத்தும். எனவே இவற்றில் ஓர் சீரிய ஒழுங்கமைப்பை ஏற்படுத்திக் கொள்வது வழிபாட்டைச் செம்மைப்படுத்தும்.

(ஈ) இப்போதெல்லாம் புதிது புதிதாக சாஸ்தா ஆலயங்கள் உருவாகின்றன. அங்கே பூஜைகளில் சபரிமலை நடைமுறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். சபரிமலைக் கோயிலில் பின்பற்றப்பெறும் நடைமுறைகள் எவ்வாறானவை..? அவ்வழியில் பிரதிஷ்டை செய்யப்பெறும் ஆலயங்களுக்கு உள்ள கிரியாபத்ததிகள் வைதீக மரபிலா? ஆகம மரபிலா? அமையும் என்பதெல்லாம் சிந்திக்க வேண்டியனவே.. நம் தர்மம் நிலைபேறாகவும் சுதந்திரமாகவும் இருக்கிற நிலையில் இவற்றைத் தெளிவாக வெளிப்படுத்துவது எவ்வித சிக்கல்களையும் தராது என்பதும் இவற்றின் வழியே அடியவர்கள் தங்களைத் தயார் செய்து வழிபாட்டில் ஈடுபட வழிசெய்யும் என்பதும் எனது கருத்தாக உள்ளது.

(உ) இதே போலவே ஏகாதசி, ஸ்கந்தஷஷ்டி போன்ற விரதங்களையெல்லாம் அனுசரிக்கக் கூடிய அடியவர்களை இனங்காண்பது கடினம். ஐயப்ப விரத பக்தர்கள் கழுத்தில் ஏராளமான மாலைகளை அணிந்திருப்பதை கொண்டே அவர்களை சுலபமாக இனங்காண முடிகின்றது. சிற்சில இடங்களில் இவ்வாறு தங்களை மாவிரதாதிகளாகக் காட்டிக்கொள்ளும் பாங்கும் நகைப்பிற்குரியதாகி விடுவதைக் காண்கிற போது மனம் வேதனைப்படுகின்றது. பிறர் அறியாமல் விரதம் மேற்கொள்ளும் வகையில் இவ்விரதத்தை அனுசரிக்கிறவர்களையும் ஆற்றுப்படுத்தின் சிறப்பல்லவா? இன்றைய உலகம் செல்லும் போக்கு அப்படியிருக்கிறது என் செய்வது?

எனினும் உளவியல் ரீதியாக விரதாதிகள் தங்களை தனித்துவமாக தயார்ப்படுத்திக் கொள்வது கட்டாயம் அவசியமானது. அப்படிச் செய்கிற போது மனதில் புத்துணர்வும் விரதசங்கல்பமும் ஏற்படும் என்பது மறுக்க இயலாத உண்மை.

shasta_ayyanar(ஊ) இதே போலவே ஐயனார்- ஐயப்பன் என்னும் மூர்த்திகளிடையான உறவும் விளக்கப்பெற வேண்டும். இது தொடர்பாக அடியவர்கள் பலருக்கு அநேக சந்தேகங்கள் இருப்பதையும் காண்கிறோம். சாதாரணமாக அவதாரம் என்றால் அதாவது கிருஷ்ணாவதாரம், ஸ்ரீ ராமாவதாரம், போல பந்தள தேசத்தில் ராஜசேகரன் மகனாக எழுந்தருளியிருந்த ஐயப்பன் என்பதும் ஒரு அவதாரமாகவே கொள்ளலாமா? என்பதும் சிந்தனைக்குரியது. இவ்வாறு பந்தளத்தில் பகவான் பிறந்தது வரலாற்றுக் காலத்திற்கு உட்பட்டது என்றால் ஆண்டையும் ஆய்வு செய்து கணிப்பதும் வரலாற்றை உணர்வு பூர்வமாக மட்டுமன்றி ஆதாரபூர்வமாகவும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும்.

இப்படியெல்லாம் ஒரு இந்து இளைஞனாக சிறியேன் கேட்கிற, ஆராய்கிற விடயங்களை பெரியவர்கள் -ஐயப்ப அடியார்கள் தவறாகக் கருதிவிடக்கூடாது. எவரையும் எவ்வகையிலும் புண்படுத்தும் நோக்கு சிறிதும் இதில் இல்லை. ஐயப்பபக்தியின் பேரில் மிகவும் நம்பிக்கையுடனும் சீர் செய்யப்பெற்ற வணக்க முறைமையாக இது விளங்க வேண்டும் என்ற அக்கறையுடனுமே இவற்றை வினவினேன். குற்றமுண்டாகில் பொறுத்தருள்க.

எனினும் சபரிமலையிலுள்ள மகத்துவம் வாய்ந்த புனிதத்தன்மையையும் அங்கே திருவாபரணப்பெட்டி எடுத்து வரப்பெறும் போதும் மகரஜோதி ஏற்றும்போதும் உண்டாகிற அதியுச்ச பக்தி நிலையையும் ஏற்கத்தான் வேண்டும். ‘சுவாமி திந்தக்கத்தோம்….ஐயப்ப திந்தக்கத்தோம்…’என்று பாடி ஆடும் போதும் ஏற்படும் ஆனந்தம் உயர்வானதே.. அங்கே திருவாபரணப்பெட்டிகள் எடுத்து வரப்படும் போது கருடப்பட்சிகள் இரண்டு வட்டமிட்டு இறைசாந்நித்யத்தை வெளிப்படுத்துவதையும் மகரஜோதியின் எழில் மகத்துவமும் பேரின்பப் பெருநிலையான இறைவனின் பேராளுகை சபரிச்சந்நதியில் இருப்பதை எடுத்துக் காட்டும்.

எது எப்படியிருப்பினும் உண்மை அன்போடு உள்ளம் உருகி ஐயப்பப் பெருமான் திருவடிகளைப் போற்றுகிற அடியவர்கள் எல்லாப் பேற்றையும் பெறுவது உண்மை. ஆக, ஹரிஹசுதனாக எழுந்தருளி சைவவைஷ்ணவ சமரச மூர்த்தியாகக் காட்சி தரும் பெருமான் முன்றலில் நம்மிடையே பேதங்கள் இல்லை.. ஜாதிகள் இல்லை.. சமயபேதங்கள் இல்லை.. அளவற்ற கிரியைகள் இல்லை.. பக்தி என்பதில் சங்கமித்து சரணகோஷம் சொல்லுகிற போது நாம்…இன்பப் பெருவெளியில் சஞ்சரிப்பதை உணரலாம் என்பதில் மாற்றுக்கருத்துமில்லை….

தண்டாமரை முகமும் மலர்க்கண்களும் தன் கரத்தே
செண்டாயுதமும் தரித்து எமையாளும் சிவக்கொழுந்தைக்
கண்டேன் இரண்டு கரங்கூப்பினேன் வினைக் கட்டறுத்துக்
கொண்டேன் அழியாப் பெருவாழ்வு தான்வந்து கூடியதே

நாமும் சொல்லுவோம் –

ஸ்வாமியே…. சரணம் ஐயப்பா!



-- Edited by Admin on Sunday 30th of April 2023 08:49:26 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 சங்க காலத்திலேயே சாத்தன் வழிபாடு இருந்துளது. சாத்தன் எனும் பெயருடைய புலவர்கள் பலரிருந்துள்ளனர். சிலப்பதிகாரம் மாசாத்தன் கோயிலைப் புறம்பணையான் கோட்டம் என்கின்றது.சிலப்பதிகாரம் கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் எனும் ஒரு சாத்தன் பேசப்படுகின்றார். பாசண்டம் என்பது தொண்ணூற்றறுவகை சமய சாத்திரக் கோவை என்றும் இவற்றில் வல்லவன் இச்சாத்தன் என்றும் அதனால் மகாசாத்தன் எனப்படுவான் என்றும் கூறப்படுகின்றது. மாலதி என்னும் பெண்ணின் துயர் துடைக்க மாசாத்தன் குழவியாக அவதரித்து, அந்தணச் சிறுவனாக வளர்ந்து உலகியல் மரபுப்படி தேவந்தி என்னும் பெண்ணை மணந்து அவளுக்கு மட்டும் தன் ‘மூவா இளநலம் காட்டி’ என் கோவிலுக்கு நாள்தோறும் வா என்றுகூறித் தீர்த்த யாத்திரை செல்வது போல நீங்கியது முதலிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றன. இச்செய்தி ஐயப்பன் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒட்டி உறவாடுதலைக் காட்டுகின்றது.. திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் வேளாளர்களுக்கும் பிராமணர்களுக்கும் பல்வேறு பெயர்களுடைய சாத்தா குலதெய்வமாக அருள்பாலிக்க்கின்றார்.

சபரிமலை வனாந்தரம். ஒருகாலத்தில்யானைகளின் நடமாட்டம் அங்கிருந்திருக்கும். யானைகளுக்கு வெள்ளை நிறம் சினமூட்டும். அதனால் சபரிமலைக்குச் செல்வோர் கறுப்பு அல்லது நீல் ஆடை உடுத்தினர் போலும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 அப்பர் தேவாரத்தில் சிவனை ” சாத்தனை மகனாய் வைத்தார் என்று பாடியுள்ளார்.

1 விழுப்புரம் அருகே அகரம் என்ற ஊரில் உள்ள அபிராமேச்வரத்தில் 11 கல்வெட்டுகள் ராஜராஜ சோழன காலத்தது – சாஸ்தா பரமசுவாமி என்று அந்த ஊர் சாஸ்தாவைக் குறிப்பிடுகின்றன

2 திருப்பட்டுர் சாஸ்தா ராஜேந்திரன் காலத்தவர்
3 . அழகர் கோவில் அருகில் உள்ள ஒரு கிராமத்துப் பாண்டியர் கல்வெட்டு சாஸ்தாவை புலிவாகன தேவர் என்று குறிக்கிறது
4 கன்னியாகுமரி கல்வெட்டு வேதிய சாத்தான் என்று குறிப்பிடுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

ஐயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search
 
ஐயனார்

ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

ஐயனார் வழிபாடு பிராமணிய இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.

சிவனுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.[சான்று தேவை]

 
கீழ்ப்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வர அய்யனார் கோயில்

தோற்றம்[தொகு]

தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.

மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.

ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார்.

ஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.

வடிவம்[தொகு]

 
யானை மீது அமர்ந்திருக்கும் ஐயனார்

ஐயனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.

கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.

 

தேவியர் இருவர்[தொகு]

சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.

பொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.

ஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.

புஷ்கலை என்றால் பூவைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.

 
ஐயனார் கோயில் பரிவாரங்கள்

பரிவார தெய்வங்கள்[தொகு]

இந்திரன்அக்னிஎமதர்மன்நிருதிவருணன்வாயுகுபேரன்ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.

ஐயனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பணசாமி,வீரபத்திரர்,இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,செல்லியாய்,காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.

நாய்ஆடுமயில்கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.

உணவு[தொகு]

ஐயனார் சைவ உணவு உண்பவர். சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.

கோயில்[தொகு]

ஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க்கரையாகும். இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் அல்லது மடைகளுங்கு அருகே இருக்கும். சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் கோயில் இருக்கும்.

கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே முருகனும் இருப்பர்.

மடப்புரம் காளியம்மன்[தொகு]

ஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பெரிய குதிரைகள் இருக்கும். இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர். இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள்களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.

கோயில் பூசாரி[தொகு]

பூணூல் அணிந்தும் அசைவம் (மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாரிகளாக உள்ளனர். பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.

திருவிழாக்கள்[தொகு]

சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.

எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.

தைப்பொங்கலை அடுத்து வரும் மஞ்சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளை மாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.

புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.

முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.

பிரசாதம்[தொகு]

ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமான நீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.

காவலுக்குக் கருப்பர்[தொகு]

ஐயனாரின் பரிவார தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார்.

ஐயனாரும் ஐயப்பனும்[தொகு]

சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும்ஒருவரே. இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும். ஆனால் தம்பதி சமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட செய்திகளால் நன்கு அறியலாம்[1].

ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர். ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால், ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர். ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பரிவார தெய்வங்களுடனும் உள்ளவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.

ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.

அய்யனாரா? ஐயனாரா?[தொகு]

தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும்.

"சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" என்பதற்கேற்பத் தற்போது விவரம் ​தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர்.

ஐயனார் என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத்தாகும் இரண்டு மாத்திரை அளவு உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ளதாகும். "ய்" என்பது மெய்யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.

ஐ நெடில் = 2 அளவு
அ குறில் = 1 அளவு
ய் ஒற்று = ½ அளவு
அய் = 1+½ = 1 ½ அளவு

"ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயன்" என்றால் தலைவனானவன் என்று பொருள். "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை[1].



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

Shrines for Sastha, in eight forms

The modle of the temple complex dedicated to Sri Ayyapan coming up at Veppampattu in Tiruvallur district.Extensive research has gone into the project taking shape at Veppampattu.

A temple complex dedicated to Sri Ayyapan is coming up on unusual lines in Veppampattu in Tiruvallur district. The eight forms of the deity will be enshrined in this temple that was visualised by Gurusami Viswanatha Sharma, who was ordained by Paramacharya. He visited almost all the Sastha temples south of India and dedicated himself to the renovation of temples. He was instrumental in the conduct of Sastha Tirukkalyanam and composed Sasthru Ashtapati, Ayyan Tiruvadippa, etc.

Villivakkam Sree Viswanatha Sharma Ashta SasthaTrust has taken up the task of completing the project. Heads of maths and spiritual leaders are providing guidance.

With contributions from devotees and philanthropists construction is being carried out but is making slow progress because of paucity of funds. Two shrines with 18 steps, the priest’s room, kitchen, office room, compound wall and other basic amenities need to be constructed.

The famous Sastha Varavu song, “Ettu Avadharangal Undu, Yettu Swaroopangal Undu” suggests eight important incarnations and eight forms of Sastha ; and ‘Dyana ratnavali’ confirms the same fact.

Ancient deity 

Sastha was an ancient deity worshipped thousands of years ago across the globe. There are references to Sastha worship in the submerged Lemuria, Vietnam and Africa. There is a Sastha Hill in California, the U.S.

Guruswamy Viswanatha Sarma, who made an extensive study of the Sastha concept, Ayyanar and Ayyappan chose eight Sastha incarnations for Loka Kshema. He also made panchaloka idols along with Aadhi Boodha Naadha Sastha , which makes it nine altogether.

The Tamil word ‘Aadhi’ means source. ‘Aadhi Boodha Naadhar’ or ‘ Aadhi Maha Sastha ’ is the source of all other Sastha s, including Lord Ayyappan, also called Dharma Sastha of Sabarimala.

Adhi Maha Sastha is worshipped with two consorts – Poorna and Pushkala. He is worshipped in many villages of South, as a protector of their houses and cities. He is also offered prayers to help find missing/lost items. His grace helps us receive rainfall on time, makes our water and land resources fertile and thereby enhancing crop cultivation. It is believed that Karikaala Chozhan, an ardent devotee of this Sastha , won many battles after worshipping Sastha in Kanchi Kamakshi Amman temple.

Dharma Sastha disseminates knowledge and peace. He is said to break the barrier of caste and creed and guides us towards righteousness and salvation. Saturn effect? He is believed to provide solace. Sri Dharma Sastha was a Brahmachari. However, in previous avatars, Sastha dwelt at Kantha Mala with two consorts Poorna and Pushkala. A distinct line therefore should be drawn between Sastha and Manikanta.

Gnana Sastha , as the name implies showers intellect and wisdom. He plays the Manikka Veena and sits under a banyan tree a la Dakshinamoorthi. There are references of this Sastha in “Aakasa Bhairava Kalpam.” Sree Dharma Sastha temple in Thiruvullakavu is considered the Abode of Wisdom. There is an idol of Sri Vidhya Sastha in Veda Nayaga Sastha temple at Vedikarampalayam, Salem.

Kalyana Varadha Sastha is worshipped for the removal of hurdles to marriage. He is worshipped with Poorna and Pushkala. There are references of Kalyana Varadha Sastha in verses such as Guhyia Rathna Chinthamani and Boodha Naadha Charitham.

Mythology has it that Kalyana Varada Sastha resides in Kanthamalai.

Sastha is worshipped as Kalyana murthy in Ganapathy Agraharam,

Tirunellai, a village in Palakkad. Gajaarooda Sastha or Kaala Sastha or Maha Sastha is annihilator of enemies. Since one of his devotees won over Yamadharma Raja - Maha Kaalan, He is called as Kaala Sastha.

Although there is no temple for Kaala Sastha , we can find Sastha sitting on an elephant, one of his Vahana, in Thriyambakapuram.

A great enchanter is Sammohana Sastha , who stands for conjugal bliss and harmony.

He is worshipped with Poorna and Pushkala. His grace is compared with Amudha Surabhi. There are references to Sammohana Sastha in Skanda Puranam.

There is a temple for Sammohana Sastha in Sirkazhi, Kaivilanchery. The deity is called Kaividael Appan.

Santhana Prapthi Sastha represents Planet Venus and is worshipped for progeny. His consort Prabhavati has a Maanikka Veenai and hence he is also called Brahma Sastha . This Sastha is different from other incarnations as he is seen with his child Satyagan.

An interesting piece culled from mythology is that it was Brahma Sastha who offered the Divine Payasam to King Dasaratha when he performed Puthrakameshti Yaaga. There are references of this Sastha in ‘Thantra Samuchayam” and ‘Silparathnam.’

Veda Sastha also goes by the name Simharooda Sastha and is synonymous with the Vedas and the knowledge they represent.

Even now, Ayyanar in Vedikarampalayam, Salem, is worshipped as Veda Nayaga Sastha , surrounded by four Neem trees representing the four Vedas. According to Sthala Purana, this Sastha was born to Siva and Vishnu (Mohini).

Veera Sastha is a great warrior, visualised on a horse with weapons. Also called ‘Aswarooda Sastha ,’ he is considered a son of Lord Siva and is worshipped to destroy evil and to protect humanity.

There are references to this Sastha in ‘Adi Sankara Vicharitham’ which has Adi Sankara worshipping Veera Sastha in a place called Kudhiran.

In order to raise funds for the Ashta Sastha complex, the Trust (No. 29, North Mada Strett, Villivakkam, Chennai 600049) has organised a music-cum-discourse programme by Veeramani Raju at P.T. Thyagaraja Hall, G.N. Chetty Road, T. Nagar, 10 a.m. tomorrow, December 7. For details call

94441 09431 and 99625 62067. Website: >http://ashtasastha.org



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 ஐயனார் உலகில் பல்வேறு அவதாரங்களை எடுத்தார் என்று கூறுகின்றனர். அவற்றில் எட்டு முக்கியமானவை. அவற்றில் முதன்மையானதும் தற்போது சபரிமலைச் சாஸ்தாவாக வழிபடப்பெறுபவரும் தர்மசாஸ்தா ஆவார். இது சரித்திரபூர்வமானது என்பர்.

பாண்டிய அரசு சிதைந்த பின்னர் பொ.பி 1081ல் மதுரையை விட்டு விட்டு சில காலம் வள்ளியூரிலும் தென்காசியிலும் ஆட்சி செய்தனர். அந்த தென்காசி பாண்டியர் வம்சத்தில் வந்த மன்னர்கள் பிற்காலத்தில் கேரளத்துப் பந்தளத்தில் ஆட்சியை நிறுவினர். அங்கே தான் ஐயப்பன் தர்மசாஸ்தாவாக அவதரிழத்திருக்கிறான். ஆக, ஐயப்பனின் காலம் ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் ஆதிசங்கரார், இராமானுஜர் ஆதிய ஆச்சார்யார்கள் காலத்திற்கும் பிற்பட்டது என கருதக் கூடியதாக உள்ளது.

ஆனால் இந்த வழிபாட்டிற்கு முன்னோடியாக இன்றைய சபரிமலையில் முன்னரே ஐயனாருக்குக் கோயில் இருந்தது. என்று சொல்கிறார்கள். முக்கியமாக இன்றும் கோயிலில் மிகச் சிறப்பாகப் பூஜிக்கப்பெறும் பதினெட்டுப்படிகள் பரசுராமரால் ஸ்தாபிக்கப்பெற்றவையே என்கிறார்கள்.

மணிகண்டனின் வரலாற்றில் இராமாயணத்தின் சாயலையும் காண்கிறோம். இது இவ்வாறாகிலும் சபரிமலை வழிபாட்டில் இஸ்லாமிய சமயத்தின் தாக்கங்கள் சில உள்ளனவா? என்றும் சில சமயங்களில் சிந்தித்துண்டு. இவை பற்றி மேன்மேலும் சிந்திக்க வேண்டும்.

எனினும் நானும் ஐயப்ப பஜனைகள் பலவற்றில் இந்த சிக்கல்களை எல்லாம் சிந்திக்காமல், பேசாமல் இன்று வரை பங்கேற்று வருகிறேன். பக்திபூர்வமாக மிக சிறப்பாக உள்ளது. உண்மையில் ஐயப்பனை உருகி வழிபடுபவர்கள் எல்லா வளங்களும் பெறுகிறார்கள். எல்லா நலங்களும் பெறுகிறார்கள்.

திரு. மணிமன்னன் அவர்களுக்கு,

தாங்கள் குறிப்பிடுவது போல பாவர் சமரசத்தைக் காட்ட இணைக்கப்பெற்றிருக்கலாம் என்ற கருத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஏனெனில் ஐயப்பனைப் போலவே பாவரும் சரித்திரபூர்வமானவராக இருக்க மாட்டாரா? அது தவிர பிற மதங்களிலும் மதங்களைக் கடந்த சமரசஉள்ளமும், பரந்த எண்ணமும், உண்மையான இறை அபிமானமும், ஆன்மீகத்தேடலும் உள்ளவர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்பது உண்மையே. அவ்வகை ஒருவராக பாவரையும் கருதலாமே?

இற்றைக்கு சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாகப் பேசப்பெறும் ஐயப்ப வரலாற்றில் உண்மைகள் நிறையவே இருக்கலாம் என்று நம்புகிறேன். ஐயப்பப் பெருமான் அவ்வுண்மைகள் வெளிவர அருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard