New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐயனார்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
ஐயனார்
Permalink  
 


 

அய்யனார் யார்? – 1

அய்யனார்

 

அய்யனார் & அய்யப்பன் இரண்டும் ஒருவரே! இல்லை இல்லை அய்யனார் வேறு; அய்யப்பன் வேறு. இப்படி இருதரப்பான வாதங்கள் பல வருடங்களாய் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபற்றி பலர் ஆராய்ந்திருக்கக் கூடும். பல கட்டுரைகள் எழுதியிருக்கக் கூடும். அது பற்றிய என் ஆய்வு முயற்சியே இக்கட்டுரை.

 

அய்யனார் யார்? சாஸ்தா என்ற அழைக்கப்படும் சாத்தாவும் அவரும் ஒன்றா?  அவர் பற்றிய வரலாற்று, புராண, இலக்கியக் குறிப்புகள் எப்போதுமுதல் காணப்படுகின்றன என்று முதலில் பார்ப்போம்.

 

சாஸ்தா

 

நமக்குக் கிடைத்த தொன்மையான பண்டை இலக்கிய, இலக்கண நூல் எது என்றால் பரிபாடலையும் தொல்காப்பியத்தையும் சொல்லலாம். பரிபாடலில் முருகன், விஷ்ணு பற்றிய பாடல் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில் ஐந்திணைக் கடவுள்களாக முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை வழிபாடு பற்றிக் கூறப்படுகின்றது. இவற்றில் அய்யனார் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.

 

அப்படியானால் அய்யனார் யார்? அவரது வழிபாடு எப்போது முதல் தமிழகத்தில் தோன்றியிருக்கும்?

 

சாஸ்தா அல்லது சாத்தான் என்ற கடவுளும் அய்யனாரும்  தோற்றத்தில் ஒன்று போலவே உள்ளனர். அய்யனார் தான் சாத்தன் எனக் கொண்டால் சங்க இலக்கியத்தில் ’சாத்தன்’ என்ற பெயரில் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சாத்தன் எனும் பெயருடைய புலவர்கள் பலர் இருந்துள்ளனர். மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தன் என்ற பெயரும் அதில் ஒன்று. அவர் சாஸ்தாவை அல்லது அய்யனாரை குலதெய்வமாக வழிபட்டவர். அதனால் தான் அப்பெயரை வைத்திருக்கின்றார் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் கருத்து. ஏனென்றால் குலதெய்வத்தின் பெயரைச் சூட்டுவது தொல் தமிழர் மரபு என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

குதிரை வாகனம்

 

இதுகுறித்து தேவ நேயப் பாவாணர் கூறும் கருத்து சிந்திக்கற் பாலது. ”நாட்டின் பல இடங்களுக்கும் தத்தம் காவற்படையுடன் சென்று பொருளீட்டிய வணிகக் கூட்டங்களுக்கு சாத்து என்று பெயர். சார்த்து – சாத்து : சார்தல் – சேர்தல் என்பது பொருளாம்” என்கிறார் அவர். மேலும் அவர், “ வணிகக் சாத்துக்களின் காவல் தெய்வத்திற்கு சாத்தன் என்று பெயர். அவரே ஐயனார். அதனாலேயே அக்காலத்தில் வணிகர்கள் சாத்துக்கள், சாத்துவன், சாதுவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் உள்ளூர் வணிகர்கள் பெரும்பாலும் குதிரைகளில் சென்றே வாணிகம் செய்தனர். அதனாலேயே ஐயனாருக்கு குதிரை வாகனமாகியது. சாத்தன் என்னும் தெய்வப் பெயர் வடமொழியில் சாஸ்தா எனத் திரியும். சாத்தன் எனும் வணிகக் கூட்டப் பெயர் ஸார்த்த என்று திரியும்.” என்று குறிப்பிடுகிறார்.

 

குதிரைகள்

 

ஆக, சங்ககாலத்தில் ஐந்திணைக் கடவுள்கள் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன. அதில் சாஸ்தா (அய்யனார்) வழிபாடு பற்றிய குறிப்புகல் கிடைத்தில. ஆனால் அய்யனாரை சங்க மக்கள் வழிபடவில்லை என்று கூறிடுதல் இயலாது. ஐந்திணை நூல்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை. அதற்காக சங்க காலத்தில் சிவ வழிபாடே இல்லை என்று சொன்னால் அது எப்படித் தவறாக முடியுமோ அது போலத்தான் அய்யனார் வழிபாடே இல்லை என மறுப்பதும்.

 

எனவே திடீர் என அய்யனார் வழிபாடு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் என்பது சரியன்று. தொல் தமிழர் வரலாற்றோடு அய்யனார் வழிபாடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்பதே உண்மை. அதே சமயம் அய்யனார், சாஸ்தா வழிபாடுகள் பௌத்த மற்றும் சமண சமயத் தாக்கத்தால் விளைந்தவை என்ற கருத்தும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சமண, பௌத்தக் வழிபடு கடவுளாக இருந்து, பின்னர் சைவ சமய வழிபாட்டோடு இணைந்து விட்ட வழிபாடுதான் அய்யனார் வழிபாடு என்ற கூற்றும் மறுக்கக் கூடியதன்று.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

 அய்யனார் யார்? – 2

 

தர்ம சாஸ்தா

சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

 

மாலதி என்னும் அந்தணப் பெண்ணினால் ஒரு குழந்தை இறந்து பட, அவள் பாசாண்ட சாத்தனை வேண்ட, அவள் துயர் துடைக்க அச்சாத்தன் குழந்தையாக அவதரித்து, பின் அந்தணச் சிறுவனாக வளர்ந்து, பின் கண்ணகியின் தோழியான தேவந்தி என்பாளை மணந்து அவளுக்கு மட்டும் தன் ‘மூவா இளநலம் காட்டி’ என் கோவிலுக்கு நாள்தோறும் வா என்றுகூறித் தீர்த்த யாத்திரை செல்வது போல நீங்கியது பற்றிய செய்திகள் சிலம்பில் காணக் கிடைக்கின்றன.

 

கருப்பண்ணசாமி

மேலும் சிலம்பில், “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் குறிக்கப்பட்டிருப்பது சாஸ்தாவா அல்லது அவரது பரிவார தேவதையான கருப்பண்ணசாமியா? என்பது ஆராய வேண்டியிருக்கிறது. அந்த பூதம், இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக் கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்த பூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. (அய்யனார் மற்றும் சாஸ்தாவிற்கு பெரும்பாலும் சைவப் படையலே. கருப்பண்ணசாமிக்கே இரத்த பலி உண்டு. அதுபோல சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானது. அவரைப் போன்ற வேறு சில சிறுதெய்வங்களுக்கும் இதே வகை வழிபாடு உண்டு)

 

கருப்பர்

மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அதே போன்று சாம்பிராணி தூபம் போட்டே வழிபாடுகள் நடக்கின்றது.

 

வழிபாடு

 

மேற்கொண்ட தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத இடமுள்ளது. அதாவது இந்திர வழிபாடே அய்யனார் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது.

 

யானை வாகனம்

 

மற்றுமொரு முக்கியமான விஷயம் கிராமங்களில் இப்போதும் அய்யனாருக்காக நடத்தப்படும் புரவி எடுப்பு விழாவில் கண்டிப்பாக மழை பெய்யாமல் இருக்காது. விழா நாளனறு மேகம் இருண்டு காற்றும் தூறலும் வீசுதல் என்பது பெரும்பாலும் நடக்கும் சம்பவம். மழைக்கடவுள் இந்திரன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

புரவிகள்

 

அப்படியானால் இந்திர வழிபாடே பிற்காலத்தில் அய்யனார் வழிபாடாக மாறியுள்ளதா? அப்படியானால் அய்யப்பன் யார்? அய்யப்ப வழிபாடு பற்றி பண்டை இலக்கியங்கள் ஏதும் கூறவில்லையே ஏன்? அவ்வழிபாடு எப்போது தோற்றம் பெற்றிருக்கும்? அதற்கும் அய்யனார் வழிபாட்டிற்கும் ஏதாவது தொடர்பிருக்குமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

அய்யனார் யார்? – 3

 

யானை வாகனம்

பொதுவாக யானையை வாகனமாக உடைய தெய்வங்கள் மூன்று மட்டுமே. i) அய்யனார். ii) இந்திரன். iii) முருகன். அய்யனாருக்கு வாகனமாக வெள்ளை யானை இருக்கின்றது. இந்திரனின் வாகனமும் ஐராவதமான வெள்ளை யானை தான். முருகனுக்கு வாகனமான உள்ள யானைக்கு பிணிமுகம் என்பது பெயர். அது பற்றிய குறிப்பு பரிபாடலில் உள்ளது. (திருத்தணி முருகனுக்கு வாகனம் யானை. அது போல போரூர், பிரான் மலை போன்ற ஆலயங்களிலும் முருகனுக்கு யானை வாகனமே உள்ளது.)

 

கருப்பண்ணசுவாமி

 

பெரும்பாலான கோவில்களில் அய்யனாரும், கருப்பரும் இணைந்தோ, தனித்தனியாகவோ காணப்படுகின்றனர். இருவருக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது ஆராயத் தக்கது.

 

புராணத்தில் வரும் சாஸ்தா, அய்யனார் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.

 

கந்த புராணத்தில் தான் முதன் முதலில் சாஸ்தா பற்றிய செய்திகள் வருகின்றன. கந்தபுராணத்தில் மகாசாஸ்தா படலத்தில் இந்திராணிக்குக் காவலாக மகா காளர் என்னும் தன் தளபதியை சாஸ்தா நியமித்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

 

பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார்

 

பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்

ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்

கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்

மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!

 

என இந்திராணி, அஜமுகி தன்னை தாக்க வந்தபோது அரற்றியதாக கச்சியப்ப சிவாசாரியார் தெரிவிக்கின்றார்.

 

செண்டார் கையனே – இவர் செண்டலங்காரர் என்றும் குறிப்பிடப்படுவார். இவரும் ஐயனார் தான். உ.வே.சா இவர் பற்றி எழுதியுள்ளார். ஐயனார் கையில் வைத்திருக்கும் நுனி வளைந்த அந்த ஆயுதம் தான் செண்டு.

 

மெய்யர் மெய்யனே – பொய்யை விரும்பாதவர் ஐயனார். தவறு செய்பவரை தண்டிப்பவர். பொய்யா ஐயனார், மெய் வளர் ஐயனார் என பல பெயர்களில் ஐயனார் விளங்குகின்றார்.

 

தொல்சீர் வீரனே – வீரம் மிக்கவர் ஐயனார். ஊரின் காவல் தெய்வம் இவர். அதற்காகவே தனது பரிவார தேவதைகள் 32 உடன் அவர் வீற்றிருக்கிறார்.

 

அடுத்து சிதம்பரம் தல புராணத்தில்

 

சேரமான் அருளிச்செய்த திருவுலாத் தெய்வ வெற்பில்

நேருறக் கேட்டு முந்நீர் நெடும்புவி உய்யுமாறு

சீருறு சோலை சூழ்ந்த திருப்பிடவூரை நண்ணி

ஆரவே சொல்லி வைத்த ஐயனே போற்றி போற்றி

 

என்ற குறிப்பு வருகிறது.

 

சுந்தரர் - திருகைலாய யாத்திரை

 

சுந்தரரும் சேரமான் பெருமானும் வெள்ளையானை மீதேறி வானுலகம் செல்கின்றனர். இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளையானையில் சுந்தரர் செல்ல, ஒரு வெள்ளைக் குதிரை மீது ஏறிச் சென்ற சேரமான் இறைவனிடத்தே சேர்கிறார். (இதை அறிந்த ஔவை தானும் விரைவாக கைலாயம் செல்ல வேண்டி, விநாயகருக்கான பூஜையை வேக வேகமாக முடிக்க விழைய, விநாயகர் அவரைத் தடுத்து வழக்கம் போல் பூஜை செய்யும் படியும் தாம் அவர்களுக்கு முன்னால் ஔவையைக் கொண்டு சேர்ப்பதாகவும் கூற, அவ்வாறே ஔவை விநாயகர் அகவல் பாடி முடித்ததும், விநாயகர் தம் துதிக்கையால் அவரைத் தூக்கிக் கைலாயம் சேர்ப்பிக்கிறார் என்பது ஒரு செவி வழி வரலாறு 

 

 

 

(தொடரும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

 

அய்யனார் யார்? – 4

வெள்ளை யானை

கயிலையில் சேரமான் இறைவனை கண்டு மகிழ்ந்து பாட அவர் பாடிய பாடல்களை சாஸ்தாவிடம் கொடுத்து  பூவுலகில் வெளியிடுமாறு சொல்லி, சேரமான் வந்த வெள்ளை நிறக் குதிரையில் பூமிக்கு இறைவன் அனுப்பி வைத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில், வெள்ளானைச் சருக்கத்தில் குறிப்பிடுகின்றார். இறைவனின் ஆணையை ஏற்று சேரமான் சென்ற வெள்ளைக் குதிரையில் வந்திறங்கிய சாத்தன், சேரமானின் பாடல் தொகுப்பை எழுதி வெளியிட்டார் அந்த நூல்தான் திருக்கயிலாய ஞான உலா. இது பன்னிரு திருமுறைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.

இளங்குடி ஐயனார்

திருப்பிடவூர் என்று குறிப்பிடப்படும் அந்த ஊர் இன்றைய திருப்பட்டூர். இதற்கு திருப்படையூர் என்றும் பெயருண்டு. இன்றும் திருப்பட்டூரில் ஒரு மிகப் பெரிய ஆலயம் பராமரிப்பின்றி உள்ளது (நான் பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தைச் சொல்லவில்லை. அது செல்லும் வழியில் முன்னாலேயே உள்ளது. வாயிலில் மிகப் பெரிய கல் யானை வாகனமாகக் காணப்படுகிறது. அதை பெரியய்யா கோயில் என்றும் பெரிய சாமி கோயில், எழுத்தச்சன், அரங்கேற்றியான் கோயில், அரங்கேற்றிய ஐயன் கோயில் என்றும் கூறுகின்றனர். (இந்தக் கட்டுரை உருவாகவே அந்த ஆலயம் தான் காரணம்.)

தஞ்சை ஐயனார்

இந்த ஐயனார் ஆலயம் மிகப் பெரிய கற் கோயிலாக உள்ளது. பொதுவாக ஐயனார் ஆலயங்கள் கிராமத்தின் எல்லைப் புறத்தில் காடு, கண்மாய், ஏரிக் கரை ஓரத்தில், பெரும்பாலும் திறந்தவெளியிலேயே அமைந்திருக்கும். ஆனால் இந்த ஐயனார் மிகப் பெரிய கற் கோயிலில் எழுந்தருளியுள்ளார். பெரிய புராணம் கூறிய வரலாற்றுக்குச் சான்றாக – இத்தலத்தில் உள்ள சாஸ்தா – ஐயனார் கரத்தில் ஏட்டுச் சுவடியை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார். பூரண, புஷ்களா சமேதராக ஒரு காலை மடித்து மறுகையில் சுவடியும் ஐயனார் மிக அழகாகக் காட்சியளிக்கின்றார்.

பூரணை, புட்கலை பற்றி கச்சியப்பர்,

காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்

பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்

பூரணை புட்கலை பூம்புற மேவ

வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

என்கிறார்.

இந்த ஊரைச் சேர்ந்தவரே சாத்தனார் என்ற புலவர் என்ற கருத்து உண்டு.

சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்

செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,

நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்

அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம்பெரும!

முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்,

கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,

தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,

என்ற புறப்பாடல் வரிகள், (பாடல் தலைப்பு – அவிழ் நெல்லின் அரியல். பாடியவர்: மதுரை நக்கீரர். பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன். திணை: பாடாண். துறை: கடைநிலை – புறம். 394) இவ்வுண்மையைத் தெளிவாக்குகின்றன.

இன்றும் ஒவ்வொரு வருடமும் ஆடி சுவாதி தினத்தன்று திருக்கயிலாய ஞானஉலா விழா சிறப்பாகக் கொண்டாடபடுகிறது. அன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

 

மேற்கண்ட கருத்துகள் மூலம் அய்யனார் தமிழகத்து தொன்மைக் கடவுள் என்பதும். ஐயனார் சாஸ்தா வழிபாடு என்பது பண்டைத் தமிழர் வழிபாடு என்பதும் உறுதியாகிறது. ஆனாலும் சில சந்தேகங்கள் எழவும் செய்கின்றன.

கந்த புராணம் கூறும் சாஸ்தாவைப் பற்றிய தகவல்கள் இதனுடன் பொருந்தவில்லை.

சிலப்பதிகாரம் கூறும் சாத்தன் வரலாறு இதற்கு மாறானதாக இருக்கிறது.

ஐயப்பன் பற்றிய வரலாறு இதோடு தொடர்புடையதாய் இல்லை.

ஏனென்றால் சிவபெருமானுக்கும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர் ஐயப்பன். பந்தள மகராஜனது மகவாகத் தோன்றி இவர் செய்த அற்புதங்கள் தமிழகத்து பண்டைய ஐயனார் வழிபாட்டோடு ஒத்து வரவில்லை. இருவருக்கும் பெயர் வடிவில் ஒற்றுமை இருந்தாலும் அவதார வடிவில் ஒப்புமை இல்லை. மேலும் ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதும், யோக நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பவர் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஐயனார் பெரும்பாலும் பூரணா, புஷ்கலா சமேத தம்பதியராகக் கணப்படுகிறார். சில இடங்களில் தனது பரிவார தெய்வங்களுடன் தனித்தும் இருக்கிறார். எங்கு இருந்தாலும் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அவர் அமர்ந்திருக்கிறார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.

சாஸ்தா

ஆக, மேற்கண்ட ஆய்வுகளின் படி அய்யனார் என்ற தெய்வம் வேறு அய்யப்பன் என்ற தெய்வம் வேறு என்ற முடிவிற்கே வர முடிகிறது. இது பற்றிய ஆய்வுகள் இன்னமும் விரிவான அளவில் மேற்கொண்டால் இன்னும் புதிய பற்பல அரிய தகவல்கள் தெரிய வரும் என்பதே இந்த ஆய்வின் இறுதி முடிவு.

ஐயனார்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சாத்தன் - சாஸ்தா
 
சமணம் சொல்லும் ஐந்து நெறிகளையும் ஐந்து ஆசாரங்களையும் ஒருவர் 
கடைப்பிடித்தால் அவர் சமணத் துறவிகளுக்குப் பிச்சையிடும் தகுதிகொண்டவர் ஆகிறார். 
சமணம் அவர்களிடம் எதிர்பார்த்தது அதுவே. அவர் தன்னுடைய பிற மதநம்பிக்கைகளைத் 
துறந்து சமணத்துக்கு மதம் மாறவேண்டிய தேவை இல்லை. இதுவே பௌத்தர்களுக்கும் 
வழிமுறையாக இருந்தது.
 
 
அதாவது சமண பௌத்த மதங்களால் தமிழ்மக்கள் அந்த மதங்களுக்கு 
மாற்றம் செய்யப்படவில்லை. அவர்களின் அடிப்படை நெறிகளையும் 
ஆசாரங்களையும் தத்துவங்களையும் மற்றும் அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.  
கூடவே அவர்கள் தங்கள் தொன்மையான குலதெய்வ வழிபாடு, மூதாதையர் 
வழிபாடு ஆகியவற்றை அப்படியே நீடித்துக்கொண்டனர்.  ஒருவர் சமணராகவும் 
பௌத்தராகவும் ஒரேசமயம் இருந்து அதேசமயம் தன் குலதெய்வங்களையும் 
தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. காலப்போக்கில் இந்த சிறுதெய்வங்கள் 
சமண பௌத்த மதங்களுடன் இணைந்து வளர்ந்தன.
 
 
பாசண்டச் சாத்தன் : 
பாசண்டம் தொண்ணூற்றாறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை;
இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாதலின்,
'மகாசாத்திர' னென்பது அவனுக்குப் பெயராயிற்று.
 [அடியார்க்கு நல்லார் உரை ]
 
சில ஐயப்பாடுகள் -
 
சாத்தன் சமணரின் வழிபாட்டுக்குரியவர் என்பது சிலம்பின் வழியில் ஐயத்துக்குள்ளாகிறது. 
 
கவுந்தி அடிகளோ, கோவலன் - கண்ணகியோ சாத்தனை வழிபட்டதாகச் செய்தி உள்ளதா ?
 
சாத்தனை மகனாக வளர்த்த மாலதியும், கணவனாக அடைந்த தேவந்தியும் சாவக நோன்பினரா ?
 
கொலைப்படை ஏந்திய, பெண்பாலருடன் சேர்ந்திருக்கும் தெய்வங்களை வழிபடுவதற்குச் சமணம் ஒப்புதல்
அளிக்கிறதா ?
 
வடபுல ஜைநர் சாத்தனை வழிபடுகின்றனரா ?
 
தீர்த்தங்கரர்  சாத்தன் - பைரவ  வழிபாடு செய்தனரா ? 
 
 
‘அந்த: ப்ரவிஷ்ட: சாஸ்தா ஜநாநாம்’ [அருமறை]

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சைவம் - பௌத்தத்தில் ஐயனார் வழிபாடு எப்படி பெருஞ்சமயங்களில் உள்வாங்கப்பட்டது என்பதர்கு 20 ஆண்டு முன்னர்
அவலோகிதர் - தக்ஷிணாமூர்த்தி உருவ தோற்றம் பற்றி கட்டுரை ஆய்வேடுகளில் அச்சானது. இணையத்திலும் உண்டு.
 
ஐயனாரை சமணம் உளவாங்கியது பற்றி எழுத வேண்டும். யானை மேல் இருக்கும் ஐயனார் சமண ஐயனார்.
ஐயனாரை பிரமசாஸ்தா என கன்னர நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் உள்வாங்கியுள்ளனர் சமணர்கள்.
 
வல்லான் வகுத்த வகையல்லால் என்னும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் வல்லான் இந்த ஐயனாரே.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

சாத்தன் கணபதி 

சாத்தன் கணபதி என்றழைக்கப்பட்ட கணபதி கரவந்த புரத்தில் வாழ்ந்த மருத்துவனாவான். சாத்தன் என்பவனின் மகனான காரணத்தினால் சாத்தன் கணபதி என்ற பெயரைப் பெற்றவன்.பராந்தகன் ஆட்சிக் காலத்தில் படைக்குத் தலைமைத் தளபதியாக இருந்தவன் இவன் பராந்தகனால் அமிர்தலிங்க வரையன் என்ற பட்டத்தினை பெற்றான். திருப்பரங்குன்றத்துக் கோயிலுக்கு அறப்பணி செய்து[1] அங்குள்ள திருக்குளத்தையும் அமைக்கக்காரணமானவனும் ஆவான். இப்பணியினைப் பற்றி பராந்தகனின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது மனைவியான நக்கன் கொற்றியாரும் கோயில் திருப்பணிகளைச் செய்தவளாவாள்[2]துர்க்கையம்மனுக்கும்சேட்டைக்கும் தனித்தனியே கோயில் அமைத்தவள் என அக்கோயில் கல்வெட்டு கூறுவது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

  1.  "4.2 முற்காலப் பாண்டியர் (கி.பி. 550 - 1000)".தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் 15 ஆகத்து 2015.
  2.  குடந்தை என். சேதுராமன். "மூன்றாம் திருமுறை - நால்வர் காலம்". பார்த்த நாள் 15 ஆகத்து 2015.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தமிழ்நாட்டில் அய்யனார் வழிபாடு

E-mailPrintPDF

ஆய்வுகட்டுரை வாசிப்போமா?தமிழ் இலக்கியங்களில் இறைவழிபாடு முறையில் நோக்கிடும்போது தமிழகமக்களின் பழமையும், ஆய்வுக்குட்பட்ட பல செய்திகளும் புலப்படுகின்றன. வழிபாடு என்பது பின்பற்றுதல் என்ற பொருளினைத் தரும். பலதரப்பட்ட கடவுள்களைச் சைவசமயத்தினர் வணங்கி வருகின்றனர். இறைவனை நேரில் காண இயலாததாகி இருப்பினும் இறைவனுக்குப் படையல் இடுவதும், தன்னையும், தமது குடும்பத்தாரையும் காக்கும் சக்தியாக எண்ணியும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமாக அமையப்பெற்ற அய்யனார் வழிபாடு குறித்து இவ்வாய்வுக்கட்டுரை அமையப்பெறுகிறது.

அய்யனார் விளக்கம்
அய்யனாரைப் பல சாதி சமயத்தினரும் வழிபாடு செய்துவருகின்றனர். அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆண்பால் ஈறு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விகுதியாகும். பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யனார் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு  வந்திருக்கின்றார்கள். அவர்கள் இவரைப் பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்துச் சுட்டுச் செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.(நன்றி-வலைத்தளம்)

சைவமும்,வைணவமும் ஒருங்கிணைந்ததுபோல அய்யனாரின் பிறப்பு அமைந்துள்ளது. அய்யப்பனே அய்யனார் எனவும், சாஸ்தா எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது 'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது.   காப்பியச் சிலம்பில் சாஸ்தாவைப் பற்றிப் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

மேலும் சிலம்பில், “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் குறிக்கப்பட்டிருப்பது சாஸ்தாவா அல்லது அவரது பரிவார தேவதையான கருப்பண்ணசாமியா? என்பது ஆராய வேண்டியிருக்கிறது. அந்த பூதம், இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக்கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்தபூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து,மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. அய்யனார் மற்றும் சாஸ்தாவிற்கு பெரும்பாலும் சைவப் படையலே. கருப்பண்ணசாமிக்கே இரத்த பலி உண்டு. அதுபோல சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானது. மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத இடமுள்ளது. அதாவது இந்திர வழிபாடே அய்யனார் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி ஆய்வுக்குரியது.

ஆலங்குளத்தில் அமைந்துள்ள வன்னிசெண்பகசாஸ்தா கோயிலில் சாமியாடும்போது ஒருவரின்மேல் இறைவன் இறங்கி குறி சொல்வதாக ஐதீகம் உண்டு. இதனைச் சாத்தன் வருகிறது! எனக் குறிப்பிடுவர். இக்கோயிலில் அய்யனாருக்கு இரு பக்கமும் நாகர் சிலைகளும் அமைந்துள்ளன. சாத்தனார் என்ற பெயருக்கு அய்யப்பன் என்ற அர்த்தமும் உண்டு என்கிறார் பௌத்த அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. பத்மாசுரனை அழிக்க அவதாரம் எடுத்த விஷ்ணுவிற்கும்,சிவனுக்கும் பிறந்த குழந்தை அய்யப்பன் என்பது கதையாக வழங்கப்பட்டுவருகிறது. குழந்தையைக் கையில் அளித்தமையால் ‘கையனார்‘ என்பது அய்யனாராக மாறியிருக்கலாம் என எண்ணுவதற்கு இடம் உண்டு.

அய்யனாரின் பழமை
அய்யனாருடன் கருப்பண்ணசாமியும் இணைந்தே காணப்படுகின்றனர்.கருப்பண்ணசாமி காவல் தெய்வமாகி நிற்கின்றார்.இவர் வெள்ளைக்குதிரையில் கையில் அரிவாளுடன் ,நாய் உடன்வர,ஊரைக் காவல் செய்வதாக நம்பப்படுகிறது. அய்யனார் 218 பெயரில் உள்ளதாக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாஸ்தா என்ற தலைப்பின்கீழ் 46 பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆய்வுகள் சாஸ்தா,அய்யனார்,அய்யப்பன் –இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன.

மேருமலை என்பது 82 ஆயிரம் யோசனை(காதம்) உயரம் உடையது.மேருமலை சக்கரவாள மலைத்தொடருக்கு உட்பட்ட இடம் என்றும்,வேறு சில இடங்களில் உள்ளது எனவும் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.1

இந்தியக்கடலுக்குள் செல்லும் 90 டிகிரி மலைப்பகுதிகளில் வைடூரிய மலை இருந்தது. அம்மலைத்தொடரின் தென்பகுதியில் தென்மதுரை இருந்தது என்றும்,சிவனுக்கும்,மீனாட்சிக்கும் பிறந்த உக்கிரகுமாரபாண்டியன் அந்த மலைத்தொடரைச் செண்டால் அடித்து இரத்தினங்களை எடுத்தான் என்று திருவிளையாடல்புராணம் கூறுகிறது. செண்டு என்பது தங்கத்தால் ஆன வளைந்த தடியின் முனயில் பந்து போன்ற அமைப்புடையது என ஆய்வுகளின்வழி அறிய இயலுகிறது. இத்தகைய செண்டினைக் கையில் ஏந்தியபடி அய்யனார் பலஇடங்களில் அமைந்துள்ளார்.அய்யனாரே உக்கிரகுமார பாணடியனா!அல்லது அதைப்போன்றே செண்டினைப் பாண்டியன் பரம்பரையினர் ஏற்று வந்துள்ளனரா என்பது சரிவரப் புலப்படவில்லை. வடநாட்டில் புட்கலாபுரம் என்ற ஊர் அமையப்பெற்றுள்ளது. இவ்வூர் தென்னன் என்ற பாண்டியனால் ஆளப்பட்டது.புட்கலை இருந்துளளமையால் இவ்வூர் அப்பெயரினைப் பெற்றிருக்கலாம். புட்கலை என்பவள் குறித்து இருவேறுபட்ட கருத்துகள் ஆய்வுலகில் இடம்பெற்றுள்ளன. சத்யபூரணர் என்ற மகரிஷியின் புதல்விகள் எனப் பூரணை,புட்கலையைக் குறிப்பிடுவர். தெய்வ அம்சம் பொருந்திய ஆணை மணக்க விரும்பிய இப்பெண்கள் இறைவனை நோக்கிக் கடுந்தவம் செய்தமையால் இறைவன் அய்யனாரை மணக்க அருள் புரிநததாக வரலாறுகள் எடுத்தியம்புகின்றன. அய்யனார் வெள்ளையானையில் இருப்பதுபோலவும்,வெள்ளைக்குதிரையில் இருப்பதுபோலவும் இருவேறு வடிவங்களில் இடம் பெற்றுள்ளார்.கொச்சியை ஆண்ட பஞ்சகனின் மகள் பூரணை எனக் குறிப்பிடப்படுவதுண்டு. புட்கலையின் தந்தை நேபாளநாட்டினைச் சார்ந்த பளிஞன் எனத் தெரியவருகிறது. இவன் சாபமிட்டதால்தான் சாஸ்தா அய்யப்பனாக அவதரித்ததாகக் கதை உண்டு. இத்தகைய பலவகைப்பட்ட செய்திகளின்வழி அய்யனாரின் பழமை தெளிவாகிறது. கற்குவேல் அய்யனாரும், மேலப்புதுக்குடியில் அமைந்துள்ள அருஞ்சுனை காத்த அய்யனாரும் சகோதரர்கள் எனப் பதிவு செயயப்பட்டுள்ள கருத்து சிறப்பானது.(H.R.Pate,tinneveli Manuel,1916)

மேலும், குறிப்பிட்ட சாதியினைச் சார்ந்தவர்கள் பங்காளிகளாக இருந்தமுறைமை குறித்தும் தெளிவாக ஆ.தசரதன் ஆய்ந்து விளக்கியுள்ளார். (அருஞ்சுனைகாத்த அய்யனார்.,தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம்.,சென்னை-41.,1995) தேரிமணற்குன்றுகள் உருவான கதை குறித்தும்,நன்னன் மாங்கனி கதைபோன்றே அருஞ்சுனைகாத்த அய்யனாருக்கும் கதை இருப்பதை இதன்வழிஅறிய இயலுகிறது. அக்காலத்தில் செய்த தொழிலின் அடிப்படையிலேயே மக்கள் வாழ்ந்து வந்துள்ளமையால் பிரிவுகளும் அவ்வாறே இருந்திருக்கிறது. மக்களுடைய அறியாமையினால் சாதிப்பிரிவுகள் உருவானதால் அவை குலவழிபாடுகளாக உருமாறியுள்ளதைக் காண இயலுகிறது. சோழர்கள் காலத்தில் அய்யனார் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைந்தேறியுள்ளது.இங்கு அமைந்துள்ள தேரிமணல் மிகவும் கனிமவளம் நிறைந்தது என ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றே எனக் கூறினாலும் மக்கள் தங்கள் வழிபாட்டினை வேறுபாடு காட்டி அமைத்து வந்துள்ளமை புலனாகிறது.

முடிவுரை 
காலமாற்றத்தினால் புவியில் ஏற்பட்டுள்ள பல  மாற்றங்களினாலும்,மக்களின் அறியாமை காரணமாக தொன்மையான ஆதாரங்களைச் சிதைப்பதாலும் பல அரிய செய்திகள் ஆய்வுலகில் இடம்பெறுவதில்லை. இதனால் மொழியின் தொன்மையினை அறிய இயலாதநிலை ஏற்பட்டுள்ளதை அறிய இயலுகிறது. மதம் என்பது மக்கள் தங்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நல்ல வழிமுறை. காலப்போக்கில் மக்கள் தங்கள் வசதிக்கேற்றபடி இடப்பெயர்வாலும்,வேறுபல முறைமைகளினாலும் அவர்களது வழிபாட்டுமுறையினை மேற்கொள்கின்றனர். இதனால் மதவேற்றுமை மிகுந்து காணப்பட்டகாலத்தில் வழிபாட்டிற்குரிய இடங்களை அழித்தும் வாழ்ந்துவந்துள்ளது ஆய்வுகளின்வழி தெளிவாகிறது. அய்யனார் என்பவர் சோழர்கள் காலத்தில் வழிபாடு செய்யப்பட்டவராக இருப்பினும் காலத்தினால் மிகவும் பழமையானவர் என்பது இவ்வாய்வுக் கட்டுரையின்வழி புலப்படுத்தப்பட்டுள்ளது.

1. http://thamizhselva.blogspot.in/2014/02/), (http://thamizhan-thiravidana.blogspot.in/2010/12/17



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

சாத்தன், சாஸ்தா, சாதுவன் சாத்துவிகம் இன்னும்.....

 


 
ஐம்புலன்`களையும் சாத்தும் திறமை.
 
மனிதன் தன் ஐம்புலன்`களையும் அடைத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளவேண்டும். காண்பதிலும் தீமை ஏற்படும்.  ஓர் அழகிய பெண்ணைக் கண்டு மதியிழந்தோ அல்லது ஓர் கவரும் ஆடவனைக் கண்டு மனம்திரிந்தோ சென்று அதனால் துன்புறுவோர் பலர். இது காண்பதனால் வரும் தீது ஆகும். இங்கனமே கேட்பதிலும் மோப்பதிலும் உயிர்ப்பதிலும் உறுவதிலும் உண்பதிலும் துன்பங்கள் வரும்.  ஐம்புலங்களுமே நமக்குத் துன்பம் வரும் வழிகளாதலின் அவற்றைச் சாத்தி வைக்கவேண்டும்.  சாத்திவைத்தால் துன்பங்கள் நம்மை அணுகமாட்டா.
 
இதெல்லாம் தெரிந்துவைத்திருந்தாலும் மறந்துவிடுகிறோம். துன்பத்தில் வீழ்ந்துவிடுகிறோம். நம்மை நாம் காத்துக்கொள்ள நமக்குத் துணை தேவைப்படுகிறது.  அத்துணையே இறைவன். அவனை வணங்கி நின்று வலிமை பெற்று ஐம்புலன்`களையும் அடக்கவேண்டும்.
 
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தையும் அடக்கவேண்டும். இதனை இந்திய மண்ணில் தோன்றிய மதங்களும் நீதி நூல்களும் நன்றாகவே போதிக்கின்றன.  நாம்தாம் அவற்றை நன்`கு கவனிப்பதில்லை.
 
இப்படி ஐந்துமடங்கத் துணைநிற்பவனே “சாத்தன்”. இவன் ஐம்புலன்`களையும் உங்கட்குச் சாத்தி அருள்வான்.
 
சாத்தன்:
சாத்துதல்:  அடித்தல், அணிதல், அப்புதல், மூடுதல், சார்த்துதல், தரித்தல், பூசுதல், பெயர்த்து நடுதல்.
 
இத்தனை பொலிந்த பொருட்களும் உடைய சொல்லே சாத்துதல் என்ற சொல்.
 
இவற்றைத் தமிழ்ப் பேசுவோரிடம் கற்றுக்கொள்ளுங்கள். சில எடுத்துக்காட்டுகள், பயன்படுத்த:
 
சாத்து சாத்து என்று அவனை போட்டு சாத்திவிட்டார்    ( அடித்துவிட்டார்).
 
சாமிக்கு மாலை சாத்தினார்கள் ( அணிவித்தார்கள் )
 
சந்தனம் திருநீறு சாத்துகிறார்கள்  ( அப்புகிறார்கள் ).  ( அப்புகிறார்கள் என்பது பொருளாயினும் சாத்துகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.  சரியான பதங்களையே பயன்படுத்துவது அறிந்தோர் செயல்).
 
“கதவைச் சாத்தடி, கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி”  -- பாரதிதாசன் பாட்டு.  (கதவை மூடுதல்).
 
கருமாதியின் போது இவர் வேட்டி சாத்தினார்.
(தரிக்கச் செய்தார்).
 
பயிர்முளை சாத்துவது.  (நடவு).
 
 
ஆக, ஐம்புலன்`களையும் சாத்துவதற்குத் துணையாகுபவன் சாத்தன் என்னும் இறைவன்.
 
ஐயனார் ஐயன் என்பது சாத்தனின் இன்னொரு பெயர்.
 
“என்னைநீ ஏன் படைத்தாய் என் ஐயனே!”  ஐயன் = கடவுள்.
 
சாத்தன் > சாத்தா (விளிவடிவம்)  > சாஸ்தா. (ஐயப்பன்).
 
சாத்தன் > சாத்தப்பன்
 
ஐயன் > ஐயப்பன்.
 
சாத்தா என்று வல்லெழுத்தியலாமல் சாஸ்தா என்று மெலிவாக்கப்பட்டது.
 
சாத்தன் என்பது ஐம்புலன்`களையும் வென்ற புத்தபிரானையும் குறிக்கும்.
 
சாத்து >  சாத்து + அன் = சாத்துவன்.
 
இச்சொல் இடையில் தகர ஒற்றுக் குறைந்து சாதுவன் என்று வழங்கும்.  இலக்கணத்தில் இடைக்குறை.
 
சாத்து > சாது ( இடைக்குறை ).  ஐம்புலன்`கள் அடக்கியோன்.
 
சாத்து > சாத்து + வ் + இகம் = சாத்துவிகம்,  வ் என்பது வகர உடம்படு மெய்.   அடக்கியாளும் குணம் உடையோன். இகம் : விகுதி.
 
சாத்து > சாந்து (௷லித்தல் )  > சாந்தம்.
 
சாந்துவம் : சாந்த மொழி.  மென்மொழி.
 
சாந்து > சாந்தன்.  புலனடக்கம் உடையோனுக்குச் சினமில்லை.
 
சாது + உரி + இயம் = சாதுரியம்,  சாதுவைப்போன்ற  திறமை. சாதுவுக்கு உரிய திறன்.
 
அறிக. மகிழ்க.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

அய்யனார்...

 

 
     அய்யனார் யார்? அவர் பற்றிய வரலாற்று, புராண, இலக்கியக் குறிப்புகள் எப்போதுமுதல் காணப்படுகின்றன என்று முதலில் பார்ப்போம். நமக்குக் கிடைத்த தொன்மையான பண்டை இலக்கிய, இலக்கண நூல் எது என்றால் பரிபாடலையும் தொல்காப்பியத்தையும் சொல்லலாம். பரிபாடலில் முருகன், விஷ்ணு பற்றிய பாடல் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில் ஐந்திணைக் கடவுள்களாக முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை வழிபாடு பற்றிக் கூறப்படுகின்றது. இவற்றில் அய்யனார் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.

 
     அப்படியானால் அய்யனார் யார்? அவரது வழிபாடு எப்போது முதல் தமிழகத்தில் தோன்றியிருக்கும்?

 
     சாஸ்தா அல்லது சாத்தான் என்ற கடவுளும் அய்யனாரும்  தோற்றத்தில் ஒன்று போலவே உள்ளனர். அய்யனார் தான் சாத்தன் எனக் கொண்டால் சங்க இலக்கியத்தில் ’சாத்தன்’ என்ற பெயரில் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சாத்தன் எனும் பெயருடைய புலவர்கள் பலர் இருந்துள்ளனர். மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தன் என்ற பெயரும் அதில் ஒன்று. அவர் சாஸ்தாவை அல்லது அய்யனாரை குலதெய்வமாக வழிபட்டவர். அதனால் தான் அப்பெயரை வைத்திருக்கின்றார் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் கருத்து. ஏனென்றால் குலதெய்வத்தின் பெயரைச் சூட்டுவது தொல் தமிழர் மரபு என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
     இதுகுறித்து தேவ நேயப் பாவாணர் கூறும் கருத்து சிந்திக்கற் பாலது. ”நாட்டின் பல இடங்களுக்கும் தத்தம் காவற்படையுடன் சென்று பொருளீட்டிய வணிகக் கூட்டங்களுக்கு சாத்து என்று பெயர். சார்த்து – சாத்து : சார்தல் – சேர்தல் என்பது பொருளாம்” என்கிறார் அவர். மேலும் அவர், “ வணிகக் சாத்துக்களின் காவல் தெய்வத்திற்கு சாத்தன் என்று பெயர். அவரே ஐயனார். அதனாலேயே அக்காலத்தில் வணிகர்கள் சாத்துக்கள், சாத்துவன், சாதுவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் உள்ளூர் வணிகர்கள் பெரும்பாலும் குதிரைகளில் சென்றே வாணிகம் செய்தனர். அதனாலேயே ஐயனாருக்கு குதிரை வாகனமாகியது. சாத்தன் என்னும் தெய்வப் பெயர் வடமொழியில் சாஸ்தா எனத் திரியும். சாத்தன் எனும் வணிகக் கூட்டப் பெயர் ஸார்த்த என்று திரியும்.” என்று குறிப்பிடுகிறார்.
     ஆக, சங்ககாலத்தில் ஐந்திணைக் கடவுள்கள் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன. அதில் சாஸ்தா (அய்யனார்) வழிபாடு பற்றிய குறிப்புகல் கிடைத்தில. ஆனால் அய்யனாரை சங்க மக்கள் வழிபடவில்லை என்று கூறிடுதல் இயலாது. ஐந்திணை நூல்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை. அதற்காக சங்க காலத்தில் சிவ வழிபாடே இல்லை என்று சொன்னால் அது எப்படித் தவறாக முடியுமோ அது போலத்தான் அய்யனார் வழிபாடே இல்லை என மறுப்பதும்.

 
     எனவே திடீர் என அய்யனார் வழிபாடு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் என்பது சரியன்று. தொல் தமிழர் வரலாற்றோடு அய்யனார் வழிபாடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்பதே உண்மை. அதே சமயம் அய்யனார், சாஸ்தா வழிபாடுகள் பௌத்த மற்றும் சமண சமயத் தாக்கத்தால் விளைந்தவை என்ற கருத்தும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சமண, பௌத்தக் வழிபடு கடவுளாக இருந்து, பின்னர் சைவ சமய வழிபாட்டோடு இணைந்து விட்ட வழிபாடுதான் அய்யனார் வழிபாடு என்ற கூற்றும் மறுக்கக் கூடியதன்று.

 
     சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

 
     மாலதி என்னும் அந்தணப் பெண்ணினால் ஒரு குழந்தை இறந்து பட, அவள் பாசாண்ட சாத்தனை வேண்ட, அவள் துயர் துடைக்க அச்சாத்தன் குழந்தையாக அவதரித்து, பின் அந்தணச் சிறுவனாக வளர்ந்து, பின் கண்ணகியின் தோழியான தேவந்தி என்பாளை மணந்து அவளுக்கு மட்டும் தன் ‘மூவா இளநலம் காட்டி’ என் கோவிலுக்கு நாள்தோறும் வா என்றுகூறித் தீர்த்த யாத்திரை செல்வது போல நீங்கியது பற்றிய செய்திகள் சிலம்பில் காணக் கிடைக்கின்றன.
     மேலும் சிலம்பில், “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் குறிக்கப்பட்டிருப்பது சாஸ்தாவா அல்லது அவரது பரிவார தேவதையான கருப்பண்ணசாமியா? என்பது ஆராய வேண்டியிருக்கிறது. அந்த பூதம், இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக் கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்த பூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. (அய்யனார் மற்றும் சாஸ்தாவிற்கு பெரும்பாலும் சைவப் படையலே. கருப்பண்ணசாமிக்கே இரத்த பலி உண்டு. அதுபோல சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானது. அவரைப் போன்ற வேறு சில சிறுதெய்வங்களுக்கும் இதே வகை வழிபாடு உண்டு)
மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அதே போன்று சாம்பிராணி தூபம் போட்டே வழிபாடுகள் நடக்கின்றது.
     மேற்கொண்ட தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத இடமுள்ளது. அதாவது இந்திர வழிபாடே அய்யனார் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது.
     மற்றுமொரு முக்கியமான விஷயம் கிராமங்களில் இப்போதும் அய்யனாருக்காக நடத்தப்படும் புரவி எடுப்பு விழாவில் கண்டிப்பாக மழை பெய்யாமல் இருக்காது. விழா நாளனறு மேகம் இருண்டு காற்றும் தூறலும் வீசுதல் என்பது பெரும்பாலும் நடக்கும் சம்பவம். மழைக்கடவுள் இந்திரன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
     அப்படியானால் இந்திர வழிபாடே பிற்காலத்தில் அய்யனார் வழிபாடாக மாறியுள்ளதா? அப்படியானால் அய்யப்பன் யார்? அய்யப்ப வழிபாடு பற்றி பண்டை இலக்கியங்கள் ஏதும் கூறவில்லையே ஏன்? அவ்வழிபாடு எப்போது தோற்றம் பெற்றிருக்கும்? அதற்கும் அய்யனார் வழிபாட்டிற்கும் ஏதாவது தொடர்பிருக்குமா?
     பொதுவாக யானையை வாகனமாக உடைய தெய்வங்கள் மூன்று மட்டுமே. i) அய்யனார். ii) இந்திரன். iii) முருகன். அய்யனாருக்கு வாகனமாக வெள்ளை யானை இருக்கின்றது. இந்திரனின் வாகனமும் ஐராவதமான வெள்ளை யானை தான். முருகனுக்கு வாகனமான உள்ள யானைக்கு பிணிமுகம் என்பது பெயர். அது பற்றிய குறிப்பு பரிபாடலில் உள்ளது. (திருத்தணி முருகனுக்கு வாகனம் யானை. அது போல போரூர், பிரான் மலை போன்ற ஆலயங்களிலும் முருகனுக்கு யானை வாகனமே உள்ளது.)
     பெரும்பாலான கோவில்களில் அய்யனாரும், கருப்பரும் இணைந்தோ, தனித்தனியாகவோ காணப்படுகின்றனர். இருவருக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது ஆராயத் தக்கது.

 
     புராணத்தில் வரும் சாஸ்தா, அய்யனார் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.

 
     கந்த புராணத்தில் தான் முதன் முதலில் சாஸ்தா பற்றிய செய்திகள் வருகின்றன. கந்தபுராணத்தில் மகாசாஸ்தா படலத்தில் இந்திராணிக்குக் காவலாக மகா காளர் என்னும் தன் தளபதியை சாஸ்தா நியமித்ததாக கந்தபுராணம் கூறுகிறது.
 
பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்

ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்

கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்

மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!

 
என இந்திராணி, அஜமுகி தன்னை தாக்க வந்தபோது அரற்றியதாக கச்சியப்ப சிவாசாரியார் தெரிவிக்கின்றார்.

 
செண்டார் கையனே – இவர் செண்டலங்காரர் என்றும் குறிப்பிடப்படுவார். இவரும் ஐயனார் தான். உ.வே.சா இவர் பற்றி எழுதியுள்ளார். ஐயனார் கையில் வைத்திருக்கும் நுனி வளைந்த அந்த ஆயுதம் தான் செண்டு.

 
மெய்யர் மெய்யனே – பொய்யை விரும்பாதவர் ஐயனார். தவறு செய்பவரை தண்டிப்பவர். பொய்யா ஐயனார், மெய் வளர் ஐயனார் என பல பெயர்களில் ஐயனார் விளங்குகின்றார்.
 

 
தொல்சீர் வீரனே – வீரம் மிக்கவர் ஐயனார். ஊரின் காவல் தெய்வம் இவர். அதற்காகவே தனது பரிவார தேவதைகள் 32 உடன் அவர் வீற்றிருக்கிறார்.

 
அடுத்து சிதம்பரம் தல புராணத்தில்

 
சேரமான் அருளிச்செய்த திருவுலாத் தெய்வ வெற்பில்

நேருறக் கேட்டு முந்நீர் நெடும்புவி உய்யுமாறு

சீருறு சோலை சூழ்ந்த திருப்பிடவூரை நண்ணி

ஆரவே சொல்லி வைத்த ஐயனே போற்றி போற்றி

 
என்ற குறிப்பு வருகிறது.
 
     சுந்தரரும் சேரமான் பெருமானும் வெள்ளையானை மீதேறி வானுலகம் செல்கின்றனர். இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளையானையில் சுந்தரர் செல்ல, ஒரு வெள்ளைக் குதிரை மீது ஏறிச் சென்ற சேரமான் இறைவனிடத்தே சேர்கிறார். (இதை அறிந்த ஔவை தானும் விரைவாக கைலாயம் செல்ல வேண்டி, விநாயகருக்கான பூஜையை வேக வேகமாக முடிக்க விழைய, விநாயகர் அவரைத் தடுத்து வழக்கம் போல் பூஜை செய்யும் படியும் தாம் அவர்களுக்கு முன்னால் ஔவையைக் கொண்டு சேர்ப்பதாகவும் கூற, அவ்வாறே ஔவை விநாயகர் அகவல் பாடி முடித்ததும், விநாயகர் தம் துதிக்கையால் அவரைத் தூக்கிக் கைலாயம் சேர்ப்பிக்கிறார் என்பது ஒரு செவி வழி வரலாறு.
     கயிலையில் சேரமான் இறைவனை கண்டு மகிழ்ந்து பாட அவர் பாடிய பாடல்களை சாஸ்தாவிடம் கொடுத்து  பூவுலகில் வெளியிடுமாறு சொல்லி, சேரமான் வந்த வெள்ளை நிறக் குதிரையில் பூமிக்கு இறைவன் அனுப்பி வைத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில், வெள்ளானைச் சருக்கத்தில் குறிப்பிடுகின்றார். இறைவனின் ஆணையை ஏற்று சேரமான் சென்ற வெள்ளைக் குதிரையில் வந்திறங்கிய சாத்தன், சேரமானின் பாடல் தொகுப்பை எழுதி வெளியிட்டார் அந்த நூல்தான் திருக்கயிலாய ஞான உலா. இது பன்னிரு திருமுறைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.
     திருப்பிடவூர் என்று குறிப்பிடப்படும் அந்த ஊர் இன்றைய திருப்பட்டூர். இதற்கு திருப்படையூர் என்றும் பெயருண்டு. இன்றும் திருப்பட்டூரில் ஒரு மிகப் பெரிய ஆலயம் பராமரிப்பின்றி உள்ளது (நான் பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தைச் சொல்லவில்லை. அது செல்லும் வழியில் முன்னாலேயே உள்ளது. வாயிலில் மிகப் பெரிய கல் யானை வாகனமாகக் காணப்படுகிறது. அதை பெரியய்யா கோயில் என்றும் பெரிய சாமி கோயில், எழுத்தச்சன், அரங்கேற்றியான் கோயில், அரங்கேற்றிய ஐயன் கோயில் என்றும் கூறுகின்றனர். (இந்தக் கட்டுரை உருவாகவே அந்த ஆலயம் தான் காரணம்.)
     இந்த ஐயனார் ஆலயம் மிகப் பெரிய கற் கோயிலாக உள்ளது. பொதுவாக ஐயனார் ஆலயங்கள் கிராமத்தின் எல்லைப் புறத்தில் காடு, கண்மாய், ஏரிக் கரை ஓரத்தில், பெரும்பாலும் திறந்தவெளியிலேயே அமைந்திருக்கும். ஆனால் இந்த ஐயனார் மிகப் பெரிய கற் கோயிலில் எழுந்தருளியுள்ளார். பெரிய புராணம் கூறிய வரலாற்றுக்குச் சான்றாக – இத்தலத்தில் உள்ள சாஸ்தா – ஐயனார் கரத்தில் ஏட்டுச் சுவடியை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார். பூரண, புஷ்களா சமேதராக ஒரு காலை மடித்து மறுகையில் சுவடியும் ஐயனார் மிக அழகாகக் காட்சியளிக்கின்றார்.
 

பூரணை, புட்கலை பற்றி கச்சியப்பர்,

காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்

பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்

பூரணை புட்கலை பூம்புற மேவ

வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

என்கிறார்.
 
இந்த ஊரைச் சேர்ந்தவரே சாத்தனார் என்ற புலவர் என்ற கருத்து உண்டு.

சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்

செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,

நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்

அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம்பெரும!

முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்,

கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,

தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,

என்ற புறப்பாடல் வரிகள், (பாடல் தலைப்பு – அவிழ் நெல்லின் அரியல். பாடியவர்: மதுரை நக்கீரர். பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன். திணை: பாடாண். துறை: கடைநிலை – புறம். 394) இவ்வுண்மையைத் தெளிவாக்குகின்றன.

     இன்றும் ஒவ்வொரு வருடமும் ஆடி சுவாதி தினத்தன்று திருக்கயிலாய ஞானஉலா விழா சிறப்பாகக் கொண்டாடபடுகிறது. அன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
மேற்கண்ட கருத்துகள் மூலம் அய்யனார் தமிழகத்து தொன்மைக் கடவுள் என்பதும். ஐயனார் சாஸ்தா வழிபாடு என்பது பண்டைத் தமிழர் வழிபாடு என்பதும் உறுதியாகிறது. ஆனாலும் சில சந்தேகங்கள் எழவும் செய்கின்றன.

     கந்த புராணம் கூறும் சாஸ்தாவைப் பற்றிய தகவல்கள் இதனுடன் பொருந்தவில்லை.

     சிலப்பதிகாரம் கூறும் சாத்தன் வரலாறு இதற்கு மாறானதாக இருக்கிறது.

     ஐயப்பன் பற்றிய வரலாறு இதோடு தொடர்புடையதாய் இல்லை.
ஏனென்றால் சிவபெருமானுக்கும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர் ஐயப்பன். பந்தள மகராஜனது மகவாகத் தோன்றி இவர் செய்த அற்புதங்கள் தமிழகத்து பண்டைய ஐயனார் வழிபாட்டோடு ஒத்து வரவில்லை. இருவருக்கும் பெயர் வடிவில் ஒற்றுமை இருந்தாலும் அவதார வடிவில் ஒப்புமை இல்லை. மேலும் ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதும், யோக நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பவர் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஐயனார் பெரும்பாலும் பூரணா, புஷ்கலா சமேத தம்பதியராகக் கணப்படுகிறார். சில இடங்களில் தனது பரிவார தெய்வங்களுடன் தனித்தும் இருக்கிறார். எங்கு இருந்தாலும் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அவர் அமர்ந்திருக்கிறார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
 
ஆக, மேற்கண்ட ஆய்வுகளின் படி அய்யனார் என்ற தெய்வம் வேறு அய்யப்பன் என்ற தெய்வம் வேறு என்ற முடிவிற்கே வர முடிகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

சாத்தன் - 1

 

”சாத்தன் என்றசொல் தமிழா?” என்றும், ”இதற்கும் மேலைநாகரிகத்தில் சொல்லப்படும் சாத்தானுக்கும் தொடர்புண்டா?” என்றும் முகநூல் சொல்லாய்வுக் குழுவிற் கேட்கப்பட்டது. இதன் மறுமொழியை சட்டெனச் சொல்லமுடியாது. பழங்குடிகளின் தொழிற்பிரிவு, சாதி/வருணத் தோற்றம், தமிழ்/சங்கத ஊடாட்டமெனப் பலவும் சொன்னாற்றான் ”சாத்தனின்” ஆழம் புரிபடும். சாத்தான் தொடர்பு வேறு வழிப்பட்டது. ஏற்கனவே. தப்புந்தவறுமாய் நம்மைச் சுற்றியும், இணையத்திலும் ஏராளம் சொல்லப் பட்டுள்ளது. இவற்றையும் மீறி ஒழுங்குறப் புரிந்துகொள்ளப் பெருமுயற்சி தேவை. மெதுவாய்ப் படித்து, அசைபோட்டு ஓர்ந்துபார்த்துப் புரியவேண்டும், சாத்தனைத் தனிவாணிகனென்றும் வணிகக்கூட்டத்தில் ஒருவனென்றும் 2 விதங் காணலாம். வணிகத்தையும் 2-ஆய்ப் புரிந்துகொள்ளலாம். வாணியம்/வாணிகத்தின் குறுக்கமென்பது ஒன்று. பண்ணியம்/பண்ணிகம்>பணிகம்> வணிகம் எனுந் திரிவு இரண்டாவது. ’பண்ணிகத்தை’ விட ’வாணியம்’ மாந்தர் சிந்தனையில் முந்தையது. இவற்றைப் புரிந்துகொள்ள, பழந்தமிழர் குமுகாயப் பழக்கங்களை அறியவேண்டும்.

புதுக் கற்கால நாகரிகத்தில் வெவ்வேறு இனக்குழுக்களாய் (பொ..உ. மு 2000 க்கும் முன்னர்) .குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலெனத் திரிந்த காலையில், கூர்த்த கல்முனைகொண்ட சூலம்/வேல் போன்றவற்றால் விலங்குகளை வெட்டித்தின்றதும். மீன்களைக் குத்திக்கொன்றதும் போக, குழுக்கள் தம்மிடையேயும் சண்டை/போட்டி போட்டுக்கொண்டார். பிழைபட்டுச் சரிசெய்யும் முறையில் செம்பும், இரும்பும் ஆக்கும்நுட்பத்தைக் கற்றதால், கல்முனைகள், பொ.உ.மு. 2000 க்கு அருகில், மாழைமுனைகளாய் மாறி, மாந்தநாகரிகத்திற்குப் பெரும் உந்தலைக் கொடுத்தன. விலங்கு வேட்டையிலும், மாற்றாரை வெல்வதிலும் வெற்றி கூடின. ஒவ்வோர் இனக்குழுவினரும் அவரவர் புழங்கும் நிலம் அவர்க்கே சொந்தமென உரிமை பாராட்டத் தொடங்கினர். தனிச்சொத்து கூடக்கூடக் குழுக்களின் கட்டமைப்பு, குறிப்பாக அவர்களின் இருப்பை உறுதிசெய்யும் பாதுகாப்புக் கட்டமைப்பு இன்னும் அகன்று, இறுகியது; அதிகாரம் கூடியது.

சூலம்/வேலுக்கு அடுத்ததாய்த் தென்னக மேற்குக்கடற்கரை நெய்தலிலும், அதையொட்டிய குறிஞ்சியிலும் வில்/அம்பு ஆயுதமெழுந்தது. (வில்லடையாளம் சேரருக்கு.) விலங்குகளையும், வேற்றுமாந்தக் கூட்டத்தையும் அருகிற் சென்று கொல்வதினும் தொலை நின்று, வில்வளைத்து, அம்பெய்திக் கொல்வது இன்னும் நேர்த்தியென ஒருவேளை நினைத்தரோ?!? தெரியாது.! தம் குழுவிழப்பைக் குறைத்து, மாற்றாரிழப்பைக் கூட்டப் பழந்தமிழருக்கு வில்/அம்பு உறுதியாய் வகைசெய்தது. இதற்கப்புறம் நேரடிச்சண்டையிற் கொலைசெய்யச் சூலம்/வேலை விட செம்பு/இரும்பால் ஆன அரிவாள்/கத்தி வாகாய் ஆனது. (ஆதிச்சநல்லூரின் செம்பும், கொங்கின் இரும்பும் ஆயுதம் நாடி உருக்கப்பட்டதை ஆய்வாளர் மறவார். ஆதிச்ச நல்லூரின் காலம் பொ.உ.மு.2000க்கும் முந்தையது. இரும்புசெய்தது பொ.உ.மு.1500/1200 ஆக இருக்கலாம். கொங்கில் இரும்பு, தங்கம், மணிகள் என்பவற்றிற்கே தமிழக இனக்குழுக்கள் தொடர்ந்து மோதின.)

இம்மோதல்களின் முடிவில் சேர, சோழ, பாண்டியப் பெருங்குடிகள் எழுந்தன. இவற்றுள் வேளிரும் பிறருங் கொஞ்சங் கொஞ்சமாய் கரைந்துபோனார். சேர, சோழ, பாண்டியர்க்கு முன் கணக்கற்ற இனக் குழுக்கள் தமிழகத்துள் இருந்திருக்கும். அவற்றின் பாதுகாப்பைக் கவனிக்க அக்குழுக்களுள் மூவேறு வகையார் விதப்பாய் எழுந்தார். ஆயுத வழி பார்த்தால் முதல்வகையாரைச் சூலத்தார் (= வேலார்) என்றும், இரண்டாம் வகையாரை வில்லியர் (=அம்பார்) என்றும், மூன்றாம் வகையாரைக் கத்தியர் (=அரையர்) என்றும் அழைக்கலாம். முதல்வகையார் மிகநிறைந்தும், அடுத்தார் இன்னுங் குறைந்தும், மூன்றாமவர் மேலுங் குறைந்தும் இருந்திருக்கலாம். எண்ணிக்கை குறைந்த பெருமானரின் (இவரேதோ வடக்கிருந்து வந்தாரென்பது ஒருதலைச் செய்தி. இங்கிருந்த பெருமானரோடு வந்துசேர்ந்தவர் இணைந்துகொண்டார் என்பதே உண்மை) ஓர்தலோடு கிழார்/அரயர்/மன்னர்/வேந்தர் அரசியலதிகாரம் பெற்றார். வேட்டையிலாக் காலங்களில் இனக்குழுவின் பொதுக்கடன்களை அந்தந்தக் குழுவின் சூலத்தார்/வேலார் கவனித்தார். குறித்தவிடத்தில் ஓர் இனக்குழு தண்டுற்று உறைகையில், எல்லைதாண்டி மற்ற இனக்குழுக்களோடு சிறு பொருதல்களையும், விலங்கு கவர்தலையும் வில்லியரே செய்தார்.
------------------------------------
இங்கோர் இடைவிலகல். சங்கதம் கத்தியரைக் கத்ரியர்>க்ஷத்ரியர் என்றாக்கும். (தமிழில் நாம் அவரை அரயர்>அரசர் என்போம். வேறு வகையில் கத்தியின் இன்னொரு வடிவான வாளைக் கொண்டு வாள்மர்> வார்மர்>வர்ம என்றும் சங்கதம் கையாளும்) இதேபோல் வித்தையரை/விச்சியரை சங்கதம் விசையர்/வைசியர் என்றாக்கும்.(தமிழில் நாம் அவரை வாணிகர் என்போம்.) சூலத்தரைச் சங்கதம் சூல்த்தர்/சூத்தர்/சூத்ரர் என்றாக்கும். (தமிழில் வேலரை வேல்>வேள்>வேளாளர் என்போம்.). ”வேலைப்பகிர்வில்” தொடங்கிய தொழிற்பிரிவு நெடுங்காலங்கழித்து, பொ.உ.300 இல் குப்த அரசுகாலத்தில் இந்தியா எங்கணும் அகமுறைத் திருமணத்தால்/ பிறப்புமுறைப் பிரிவால் நிலைப்படுத்தப்பட்டது. முட்டாள்தனமான சாதி/வருணத் தோற்றம் நம்மூரில் இப்படி எழுந்ததே.

சங்ககாலத்தில் அகமுறைத் திருமணங்கள் மிகக் குறைவு. சங்க இலக்கியத்தில் கற்பிலும் மேலாய்க் களவே கொள்ளப்பட்டது. இன்றுங் கூட அகமுறைத் திருமணம் ஒழிந்தால் (காதல் திருமணங் கூடினால்) தமிழ்க் குமுகாயத்தில் சாதி/வருணம் இல்லாதுபோகும். அப்பன்வேலையை மகன்செய்வது இன்று மிகக் குறைந்துபோனது. ஆனாலும் வருக்கத் தாக்கம் அழியவில்லை.) பழந்தமிழ்க் குடிகளிடம் ஏற்பட்ட அதே தொழிற்பிரிவு தமிழகம், வட இந்தியா, உலகின் மற்ற குடியினரென எல்லோரிடமும் இருந்தது. அவரவர் கையாண்ட பெயர் வேறாகலாம். ஆனால் கருத்தீடு ஒன்றே. நால்வகையார் இருந்த குழுக்கள் பெருகி பல்வேறு சண்டைகளில் ஒருகுழு இன்னொன்றிற் கரைந்து அதிகாரக் கட்டுமானம் கூடிக் கிழார், அரயர்(>அரசர்), மன்னர், வேந்தரென மேலும் இறுகியது. வேந்தர் சங்க காலத்திலேயே வந்துவிட்டார்.
---------------------------------------.      
நாளா வட்டத்தில் அடுத்த இனக்குழுக்களுடன் எப்போதுமே போர்செய்ய முற்படாது, சிலபோது ஒன்றுகூடி உறவாடிப் பேசி, தம் பொருள்/பண்டத்தை மாற்றார் பொருள்/பண்டத்திற்கு மாற்றி வரவும் வில்லியர் முற்பட்டார் கொஞ்சங்கொஞ்சமாய் இனக்குழுக்களிடை பொருதுகள் குறைந்து, பேச்சும், உறவுங் கூடின. இதனால் ஏற்பட்ட பண்டமாற்றில் சில குறிப்பிடத் தக்க வில்லியர் இன்னும் விதந்த திறம்பெற்றார். வில்லறிவு, இங்கு வில்+தை= விற்றை>வித்தை>விச்சை எனச்சொல்லப்படலாயிற்று. வில்லியர், வித்தையர்> விச்சையரென்றும் சொல்லப்பட்டார். வில்+தல் விற்றலாயிற்று. விற்றையும் விற்றலும், (போர்த்திறமை, பண்டமாற்று என்ற) 2 வேறு வில்லியர் செயல்களையுந் தொடக்கத்திற் குறித்தன முடிவில் தகரம்பயின்ற சொல் போர்த்திறமையையும், றகரம்பயின்ற சொல் பண்டமாற்றையும் குறிக்கத் தொடங்கிற்று. (இம்மெய்வேறுபாட்டை இன்றும்நாம் பயில்கிறோம்.) வில்லியருக்கு இன்னொரு பெயரும் அவர்கையாண்ட, சிறுவுருவங் கொண்ட கூர் அம்பு/வாளி/வாணியால் ஏற்பட்டது. வில்லியர் என்பார், வாணியர் என்றும் இங்கு சொல்லப்பட்டார். பண்டமாற்று வேலைக்கு வாணியம்>வாணிகம் என்ற விதப்புப்பெயர் உருவானது. [ஆங்கிலத்தில் இவரை trader என்பார்.]

2 ஆம் வகை வளர்ச்சியாய்ப் பிற்காலத்தில் இயல்பொருள்களின் மேல் மாந்தவுழைப்புச் செலுத்தி நெளிவு சுளிவு, சுவை, நேர்த்திகளைக் கூட்டிப் பயனுறப் பண்ணும் நுட்பம் சிச்சிறிதாய்ப் பிழைபட்டுச் சரிசெய்வதாய் எழுந்தது. பண்ணல் பழகாக் காலத்தில் உலர்ந்து வறண்டு, சருகாகிய (உப்புக்கண்டம், கருவாடு, தோல், எலும்பு, கொம்பு, உலர்காய்கள், இலைகள், பயிர்கள், கூலங்கள் போன்ற வறள்/ வறைப் பொருள்களையே மாந்தர் பரிமாறிக்கொண்டார். இப்பரிமாற்றமே வாணிகம் எனப்பட்டது. பின்னால் பண்ணல் பழகியகாலத்தில் பண்ணம்>பண்டம் என்றசொல்லும், பண்ணிகம்>பணிகம்>வணிகம் (= பண்ணி விற்பது; manufacture and sale) என்றசொல்லும் எழுந்தன. முடிவில் வாணிகம், வணிகமென்பன ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தன. அவற்றின் வேறுபாட்டை இன்றுநாம் உணர்வதில்லை.

விற்றலிற் கிளைத்த சொல் விலை. இதையொட்டிய கூட்டுச்சொற்களும் தமிழிலுண்டு. எல்லோருமறிய விலைபகர்வது பகர்ச்சி (=price). விலை ஏல்த்துவது ஏற்றல்/ஏலம். இந்தையிரோப்பியனில் கீழே சொல்லப்படும் சாலும் ஏலும் கலந்து sale ஆகும். வில்கொண்டு விற்பென்றுஞ் சொல்வோம். விற்பிப்பது விற்பனை. விலை படியும்வரை, நிறையும்வரை, சாலும்வரை பரக்கப்பேசுவது சால்+தல்= சாற்றல்/ சாத்தலாயிற்று. சால்தல், விற்பனையாளருக்கு இருக்கவேண்டிய இயல்பு. சாத்தல் தொழில் செய்வோன் சாத்தன். இன்னொரு பக்கம் வில்லால் வேட்டையாடும் தொழிலில், வில்லிற்சிக்கியது (அங்கியது)/ வில்லாலழிப்பது விலங்கு. (பாணிக்கிற/அசைகிற காரணத்தால் சங்கதத்தில் ப்ராணி என்றார். உய்கின்ற/மூச்சு விடுகின்ற காரணத்தால் தமிழில் உயிரி.) ஓரிடத்தின் எல்லையை அம்பு தைத்து அக்காலங் குறித்ததால், வில்லால் அங்கப்பட்ட (உறுப்பாக்கிய) நிலம், முன்னுரிமையைக் குறிக்கும். தற்கால வில்லங்கப்பொருளும் வில்லடி, வில்லடை போன்றனவும் தொடர்பொருள்களைக் குறிக்கும். வில்லியரின் பண்டமாற்றில் நடக்கும் கூடல், சொலல் குறித்தே மேற்சொன்ன ”சால்” வினையெழும். அகரமுதலிகளில் ”சாலுக்கு” 2 வகைப் பொருள்சொல்வர். முதல் வகை நிறைதல், பொருந்தல், முற்றல், மாட்சி பெறுதல் என்பதாகும். இரண்டாம் வகை விளம்பரப்படுத்தல், விரித்துரைத்தல், சொல்லல், நிறைத்தல், அடித்தல், புகழ்தல், அமைத்தல் போன்றவையாகும்.

முதற்சொல் சால்>சார்>சார்தலெனத் திரியும். 2 ஆவது சால்+தல்/சாற்றலாகும். அணிதல், தரித்தல், பூசுதலென்பது சார்த்தலாகும். மனம்நிறைதலுக்கு/ அமைதியடைவதற்கு ஆடுங்கூத்து சா(ர்)ந்திக்கூத்து. ஏற்கனவே கல்யாணமாகி, 60 அகவை நிரம்பியவன் மனைவியோடு மீளத்திருமணஞ் செய்வது சாந்திக் கல்யாணம். இளம் ஆணும் பெண்ணும், திருமணத்தின்பின் கூடுவதும் சாந்திக் கல்யாணமே. சார்= கூடுகை. சார்தல்= சென்றடைதல், புகலடைதல், அடுத்தல், பொருந்தியிருத்தல், சார்பெழுத்து= முப்பது தலையெழுத்துக்களைச் சார்ந்த குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம். சால்= நிறைவு; சால்பு= மேன்மை, சான்றாண்மை, தன்மை, மனவமைதி; சாலை= ஓரிடத்திலிருந்து இன்னோரிடங் கூட்டிச்சொல்லும் பாதை. சான்றார்/சான்றோர்= (நற்குணங்கள்) நிறைந்தவர். சாதுவன்= நல்லவன், ஐம்புலன் அடக்கியவன், அருகன், ஆதிரை கணவன்; சாந்தன்= அமைதியுடையோன், அருகன், புத்தன்; சாந்தி= அமைதி, தணிவு, மேல் சா(ர்)ந்தி= மேலேயுள்ள ஐயனார்கோயிலில் பூசைகளைச் செய்கிறவன்.

பலரறிய வெளிப்படச் சொல்லலால் சாற்றல்/ சாத்தலுக்கு வேதமென்ற பொருளுமுண்டு. வேதத்தின் இறைச்சிப் பொருள் கருதி மறையென்பார். (நாளாவட்டத்தில் வேதமுடிவான வேதாந்தம், தருக்கம் போன்ற நூல்களும் சாற்றமாயின. சாற்றம்>சாத்தம்>சாத்ரம்>சாஸ்த்ர என்று சங்கதத்தில் வரும். சாஸ்த்ரம் தெரிந்தவன் சாஸ்த்ரி. பெருமானரிற் படித்தவன். இவனே சால்மன்>சார்மன்>சர்மனும் ஆனான். படித்தவன் என்பது பொருள். ”முதலிற் சொல்வது, அடுத்தது, அடுத்தது” என வெவ்வேறு தோத்திரங்களையும், பாசுரங்களையும் பெருமாள் கோயிலிற் சொல்லும் முறைக்குச் சாற்றுமுறை என்று பெயர். சால்ந்ததை, நிறைந்ததை, முடிந்ததைச் சொல்வது சான்றானது. இதைச் சால்க்கு>சாக்கு என்றுஞ்சொல்வர். சால்க்கைச் சொல்பவன் சால்க்கி> சாக்கி. சங்கதத்தில் இது சாக்ஷியாகும். முடிக்கத் தகுந்தது சால்த்த>சார்த்தத் தகுந்தது எனப்படும் சாத்து> சாத்தியம் இப்படியெழுந்ததே. “இப்படி நடக்கக் கூடுமா? இது சாத்தியமா?” எனும்போது உள்ளிருப்பது சாலெனும் வினையடியே.  

சாத்தவன்/சாத்தன் = வாணிகன், ஐயனார், அருகன், புத்தன், வாணிகக்கூட்டத் தலைவன். சாத்து = வணிகர் கூட்டம். ஐயனார் கோயில் பூசாரி சாமியாடி எதிர்காலம் பற்றி ஏதேனுஞ் சொல்வானானால் அவனும் சாத்தன் எனப் படுவான். ஐயனார்கோயில் சாத்தன் சாமி (இதையே பழந்தமிழ் இலக்கியம் அணங்கு என்னும்) ஆடுவான். சாலினி= தேவராட்டி, சாமியாடும் பெண்பூசாரி. குறிப்பிட்ட காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் பலவிடங்களில் வேதநெறி ஏற்க அரையர் தயங்கினர். பொ.உ.மு.800-500 களில் மேதமறுப்பு வடக்கே பெரிதாகிப் போனது. அற்றுவிகம் (=ஆசீவிகம்), செயினம், புத்தம் என்ற மூன்றும், இவைகளுக்கு முந்தைய சாங்கியம், விதப்பியம் (வைஷேஷிகம்), சாருவாகம் (உலகாய்தம்), ஞாயம் (ந்யாயம்) போன்றவையும் வேதமறுப்பு நெறிகள் என்பார். இவற்றை முதலில் வாணிகரே பெரிதும் புரந்தார். பின் அரசரும் சேர்ந்துகொண்டார். வடமேற்கிருந்து வந்த வேதருக்கு இந்தியக் கிழக்கில் புரவலர் குறைந்ததால், வேறு வழியின்றி தெற்குநோக்கி வரத் தொடங்கினார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சாத்தன் - 2

 

வேதமறுப்பு நெறிகள் அடிப்படையில் கடவுள் மறுப்பு நெறிகளே. தம்முள் அவை வேறுபடினும், சில பொது ஒர்மைகளைச் சுட்டின. பொ.உ.மு.500 களில் வேதமறுப்பு ஆசான்களின் பாதப்படிமங்கள் வைத்தும், பின் உருவங்கள் வைத்தும் மக்கள் தொழத்தொடங்கினர். கொஞ்சங்கொஞ்சமாய் பள்ளிகள் கோயிற் கருத்தீட்டுள் வந்தன. இனக்குழுப் படையல்கள், பழக்கவழக்கங்கள், கொண்டாட்டங்கள், நினைவேந்தல்கள் பள்ளிகளில் நடக்கத்தொடங்கின. (நிக்கந்தநாதர்/ மகாவீரர் உட்பட்ட) செயினத் தீர்த்தங்கரர், அற்றுவிகத்தின் மற்கலி கோசாளர் (மகாவீரர் தவிர்த்த தீர்த்தங்கரர் அனைவரும் அற்றுவிகத்திற்கும் ஏற்றவரே), பூரணகாயவர், பக்குடுக்கை நன்கணியார், நரிவெரூஉத் தலையார் (எனப்பட்ட அஜிதகேச கம்பலர்), சஞ்சய பேலட்ட புத்தர், (இன்று நாமெல்லோரும் அறிந்த) கோதம புத்தர் (முந்தைய 23 தீர்த்தங்கரர் பற்றிப் புத்தருங் கேள்வி கேட்கமாட்டார்.) ஆகியோர் அனைவரும் நாளாவட்டத்தில் ”ஐயன்= ஆத்தன்/ஆதன்/ ஆசான்/ஆசன்/ ஆஸ்ரியன்” என அறியப்பட்டார்.  (தமிழ் ஐயனும் பாகதப் பகவானும் ஒரே பொருளன) இக்காலத்தில் சில பெருமானரை ஐயரென்கிறோம் இல்லையா? பெருமானரே கூடத் தம் ஆசானை உவ ஆத்தன்> உபஆத்யன்> உபாத்யன்> வாத்யான் என்றழைப்பர். நாளாவட்டத்தில் ஆத்தனுக்கு மாறாய்ச் ”சாமான்யம் ஆனவன்” என்ற பொருளும் சாத்தனுக்கு ஏற்பட்டது. காட்டாக நீலகேசி மொக்கல வாதம் 413 ஆம் பாட்டில்,

ஆத்தன் உரைத்த பொருள் தன்னை அவ்வாகமத்தால்
சாத்தன் பயின்றால் அறியாவிடுந் தன்மை உண்டோ?
வீரத்து இங்குரைத்த பல தம்முள் ஒன்று இன்னதென்ன
ஓத்தின் வகையால் பெயரொடு உணர்வின்மைக்கு என்றாள்

என்று வரும். 50 ஆண்டுகள் முன் நம்மூரில் ’குப்பன், சுப்பன்’ பழகியது போல் (இப்போது இஷ்/புஷ் என்று பொருள்புரியாது வடமொழிப்பெயர் இடுகிறார்.) சங்ககாலத்தில் கண்ணன், சாத்தன், ஆதன், அத்தன், ஆந்தை, சேந்தன், நாகன், தேவன், பூதன் போன்ற பெயர்களே மிக்கிருந்தன. இன்றைக்கும் மிச்ச சொச்சங்களாய், திருச்சிக்குத் தெற்கில் தென்பாண்டியில் சாத்தையா, சாத்தப்பன் எனவுண்டு.] 

நந்தர் காலத்தில், அவர்தவிர்த்த வடபுலத்தரசர் வடமேற்கிருந்து வந்த வேதநெறியால் கவரப்பட்டு ஏராளம் வேள்விகளை பென்னம்பெரிதாய்ச் செய்யத் தொடங்கினார். பல்வேறு விலங்குகள் குறிப்பாய் ஆடு, மாடு, குதிரைகள் ஆகுதிகளாகின. கொஞ்சம் அசந்தால் இவற்றை அரசச்சேவுகர் பிடித்துப்போகும் நிலை ஏற்பட்டது. கால்நடைகள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் தேவையான குமுகாயத்தில் இந்நடவடிக்கை பெரும் இடரை ஏற்படுத்தியது. மக்கள் கொதித்தெழுந்தார். பார்சுவநாதர் கூற்று பொதுமக்களுக்குப் பெரிதானது. கொல்லாமை பெரும் அறமாய் நாடெங்கும் போதிக்கப்பட்டது. ஓரிடந் தங்காது ஊரூராய் பரிவரைந்து அலைந்த பரிவரையர் (>பரிவ்ராஜக) சொல்வது வட இந்தியாவெங்கணும் எடுபட்டது. வேதநெறி தாக்கிற்கு இலக்கானது. வேதநேறியைக் கேள்விமேல் கேள்விகேட்டு கொக்கிபோட்ட எழுவரும் சம்மணங்கூட்டித் தானத்தில் (த்யானத்தில்0 ஆழ்ந்ததால் சமணர் எனப்பட்டார். இவரைப் பின்பற்றியோரும் சமணரானார். பொ.உ.800 க்கு அருகிற்றான் சமணர்>ஸ்ரமண என்பது செயினரை மட்டும் விதப்பாய்க் குறித்தது. (ஒருகாலத்தில் புத்தரையே சமண என்றார்.)

சமணருக்குச் சாத்தரே பெருமாதரவு. நந்தரை எதிர்த்தெழுந்த மோரியருக்கு வேறுவழியில்லை. அவரும் வேதமறுப்பு நெறிகளைச் சாரவேண்டியிருந்தது. வேதநெறியை முற்றிலும் சாடாது, அதேபோது வேதமறுப்பு நெறிகளைப் புரந்து மோரியர் ஆட்சிநடத்தினார். வேதநெறியினர் மோரியரின் கீழிருந்த படைவல்லுநரின் உதவிநாடிக் காத்திருந்தார். சுங்கரும், கனகரும் மகதத்தில் அரசேறிய காலத்தில் வேதநெறி மீண்டும் தழைக்கத் தொடங்கியது. இவ்விரு குலத்தாரும் மோரியருக்கு அப்படியே தலைகீழாய் மாறினர். வேதமறுப்பு நெறிகளை முற்றிலும் சாடாது, அதெபொழுது வேதநெறி புரந்துவந்தார். நந்தர்/மோரியர் காலத்தில் தம் இயக்கவெளி குறைந்த காலத்தில் தமிழகம் நோக்கியும் வேதநெறியார் நடந்துவந்தார்.

சங்க இலக்கியத்தில், உலகாய்தம், சாங்கியம், ஞாயம், விதப்பியம், அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய நெறிகளின் கருத்துகளோடு வேத நெறியும் இழையும். இப்பொதுமையை உணராது சங்ககாலக் குமுகாயம் ஒருநெறி மட்டுஞ் சார்ந்ததென்பது குறை அவதானிப்பு. சங்ககாலத்தில் சிவ, விண்ணவ வழிபாடுகள் உண்டு. ஆனால் சிவ, விண்ணவ நெறிகள் கிடையா. சங்கம் மருவிய காலத்திற்றான் அவையெழுந்தன. ஆழ்ந்து நோக்கின் அவை இளைய நெறிகள்; தனிப்பட்டு எழுந்தவையாகவும் தெரியவில்லை. வேத நெறியின் அடிதொட்டு மேற்கட்டுமானமாய்ச் சிவ, விண்ணவ வழிபாடுகளைக் கொண்டு, பின்னாற்றான் தம் மெய்யியல்களை எழுப்பின. நானறிய மாணிக்கவாசகரும் (அவரைநான் 4/5 ஆம் நூற்றாண்டாய்க் கொள்வேன். நானெழுதிய ’மாணிக்கவாசகர் காலம்’ தொடர்கட்டுரை இன்னும் முடிபடாதிருக்கிறது) திருமூலருமே சிவநெறி மெய்யியலுக்கு வழிவகுத்ததில் முதன்மையானவர். மணிமேகலையே (பொ.உ.450) சிவநெறி இருப்பை முதன்முறையாகத் தமிழிற் சொல்லும்.  

இனி வாணிகத்தைப் பார்ப்போம். அற்றைமக்கள் ஊடாட்டத்தில், பொருள் பரிமாறும் வாணிகத்தில் பெரிதாய் இருந்தவை 3 பகுதிகளே. ஒன்று மகத நகரங்கள், இன்னொன்று தக்கசீலம், மூன்றாவது நூற்றுவர்கன்னரின் (சதகர்ணிகளின்) படித்தானம்/Paithaan nearer to Modern Aurangabad (மேலும் அது அழைத்துச்செல்லும் தமிழக நகரங்கள்.) இருவேறு வாணிகப்பாதைகள் அன்று இயல்பாய் எழுந்தன. (”சிலம்பின் காலம்” நூலில் விரிவாய்ப் பேசினேன். ஆர்வலர் அதைப் படியுங்கள்.) உத்தரப்பாதை, மகதத்தைத் தக்கசீலத்தோடு கணுத்தும் (connect). தக்கணப்பாதை மகதத்தைக் கோதாவரிக் கரையிலுள்ள படித்தானத்தோடு இணைக்கும். படித்தானத்திலிருந்து இற்றை கற்நாடக ஐஹோலெ (=ஐம்பொழில்) வழி தகடூருக்கு நீட்சி ஏற்பட்டது. மூவேந்தர் நகர்களிலிருந்து தகடூருக்குத் தனித்தனிச் சாலைகள் இருந்தன. மூவேந்தருக்குச் சமமாய் வடக்கே அதியமான் (சத்யபுத்ரன் என்று) சிறப்புப் பெற்றது பூகோளத்தால் மட்டுமே. தெற்கிருந்து சாத்துக்கள் தகடூர், ஐம்பொழில், படித்தானம் போய் மகதம் போகும். தமிழகத்தில் உருவான ஏதொன்றையும் விற்க வேண்டுமெனில் உள்ளூரை விட்டால் மகதமே போகவேண்டும். இல்லையேல் கலமேறி கடல்கடந்த வெளிநாடுகள் போகவேண்டும்.

[சிலப்பதிகாரத்தில் கோவலன் தந்தை மாசாத்துவான் உள்நாட்டு வாணிகன். சிலம்பு முழுக்க அவன் இயற்பெயர் தெரியாது. அவன் தொழிற்பெயர் பாண்டிநாட்டிலும் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் பாண்டியன் அவையில் கண்ணகி தன்னை அறிமுகப்படுத்துகையில் “மாசாத்தன் மருமகள்” என்று சொல்லிக்கொள்கிறாள். கோவலன் அவ்வளவாய் அடையாளந்தெரியாத ஆள். கண்ணகி தந்தை பெருங்கடலோடி. (மாநாய்கன்/மாநாவிகன். பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன்.. நாவுதல்=கொழித்தல், கப்பலோட்டல். பல தமிழாசிரியரும் தவறாக அவனைக் கடல்வாணிகன் என்பார். அவ்வளவு பேரெடுக்காது, தன் வாணிகத்தைச் சரியே கவனிக்காது கோட்டைவிட்ட கோவலனே கடல்வாணிகன்.]

சங்க இலக்கியத்தில் 50 விழுக்காட்டுப் பாட்டுகள் பாலைப் பாட்டுகளே. அதில்வரும் பாலை இன்றும் பெரிது சொல்லப்படும் இராயல சீமையே. ஐம்பொழில், இற்றை பெல்லாரி மாவட்டத்திற்கு இட்டுச் செல்லும். அதையொட்டிய இற்றை ஆந்திரக் கர்நூல், கடப்பா மாவட்டங்களும் இதிற்சேரும். இவற்றின் விவரிப்பும் சங்க இலக்கியங்களில் உண்டு. சாத்து வேலை என்பது அவ்வளவு எளிதானதல்ல. முதலில் கடினவேலை என்று பொருள்பட்டுப் பின் பல்வேறு சாத்தரும் தக்கணப்பாதையின் நெளிவுசுளிவு தெரிந்து போய்வந்த காரணத்தால் சாத்தார வேலையானது. (சாத்தம்> சாத்தாரம்>சாத்தாரன்> சாதாரண். இதன் இற்றைப்பொருள் சாதாரணம்= எளிமை என்பதே) இதற்கு இன்னொரு பெயருமுண்டு. சமண>சாமாண> சாமண்ய>சாமான்ய வேலை. வேடிக்கை என்னவென்றால், சமணர் என்ற சொல் பொதுமக்களையே குறித்திருக்கிறது என்பது தான். சாதாரணம், சாமான்யம் என்ற இரு சொற்களும் வடமொழி போல் தோற்றம் கொண்டாலும் அடிப்படை தமிழிற்றான்.      
  
இனி சாத்தாரின் கோயில்களுக்கு வருவோம். இன்றைக்கு நாம்பார்க்கும் பல்வேறு ஐயனார் கோயில்களிற் சில பார்சுவருக்கு எழுந்தவை சில மற்கலிக்கு எழுந்தவை, சில பூரணருக்கு எழுந்தவை சில பக்குடுக்கை நன்கணியாருக்கு எழுந்தவை, சில நிக்கந்த நாதருக்கு எழுந்தவை, சில கோதம புத்தருக்கு எழுந்தவை. (தென்பாண்டி நாட்டில் பல்வேறு சாத்தருக்கும் ஐயனார் கோயில்களும் காளி கோயில்களுமே குலதெய்வக் கோயிலாகும்.) சாத்தன் கோயில்களைச் சாஸ்தா கோயில் என்று சங்கதஞ் சொல்லும். பொ.உ.500-900 களில் எழுந்த பக்தியியக்கத்தில் ஐயனார் கோயில்களிற் பல சிவன் கோயிலாகவும், சில விண்ணவன் கோயிலாகவும் மாறின. (அவற்றை நானிங்கு சொன்னால் பலருக்கும் வியப்பாகும்.) சில இரண்டுங்கெட்டான் ஆயின (ஐயனார் கோயிலில் ஐயனாருக்கு முன் யானை வாகனத்திற்கு பின்னால் இலிங்கம் வைக்கப்பட்டிருக்கும்.) நடைமுறைகள் திரிந்து, ஐயனாருக்கு தீவங் காட்டித் திருநீறு கொடுப்பார்.

ஆனாலும் இன்னொரு பக்கம் இக்கோயில்களுக்கே சிறப்பாய்ப் பெரியகருப்பர், சின்னக்கருப்பர், பதினெட்டாம்படிக் கருப்பர், தொட்டியக்கருப்பர் எனப் பல்வேறு காவல்தெய்வங்கள் இருக்கும். காவல் தெய்வங்களுக்கெனக் களிமண் புரவி, களிறு பொம்மைகள் வைக்கப்படும். புரவியின்முன் அரிவாளேந்திய கத்தியரும், வேலேந்திய சூலத்தாரும் காட்சி தருவர். ஆண்டுக்கொருமுறை ஊரில் யாரேனும் வேண்டிப் புதிய புரவியெடுப்புகள் நடக்கும். ஆண்டுக்கொருமுறை சிவன் இராத்திரி அன்று படையல் கொடுக்கப்படும். கருப்பருக்கு அலங்காரஞ் செய்வர். கோழி, ஆடு படைப்பர், ஆனால் ஐயனார் திருநிலைக்கு முன் திரைபோட்டு மறைத்துவிடுவார். ஐயனார் முற்றிலும் மரக்கறி அல்லவா? அவருக்குக் கறி ஆகாது.

கொஞ்சம் ஆழப்பார்த்தாலே இற்றை வேதநெறி தழுவிய சிவநெறிக்கும், விண்ணவநெறிக்கும் புறம்பான பல செய்முறைகள் ஐயனார் கோயில்களில் நடைபெறுவது தென்பட்டுவிடும். ஆனாலும் எல்லாம் மேலோட்டச் சிவநெறிப் பூச்சுகொள்ளும். ஓவென்று பெரிதாயெழுந்த சிவநெறிக்கு முன் தம் அடையாளத்தை மூடிமறைத்து வெளித்தோற்றங்காட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளோ என எண்ணவைக்கும். எத்தனை ஊர்களில் மகாவீரருக்கும், பார்சுவருக்கும்., நேமிநாதருக்கும், ஆதிநாதருக்கும். புத்தருக்கும் மற்கலிக்கும், பூரணருக்கும், நன்கணியாருக்கும் நெற்றியில் திருநீறு பூசி துணிசுற்றி இன்னும் இரு கைகளை வலிந்து பூச்சில் ஏற்படுத்திக் கலிகாலத்தில் காப்பாற்றினாரோ? தெரியாது. சில வேதமறுப்பு நூல்கள்கூட அங்குமிங்கும் வேதம் போற்றும் சில சொலவங்களை, பாட்டுக்களைத் தூவிக்கொண்டு, தம்மைக் காப்பாற்றிக் கொண்டன. 2600 ஆண்டுகளிற் சிலபோதுகளில் சாத்தார மதங்களால் (வேதமறுப்பு நெறிகளால்) தம்வளர்ச்சி தடைப்பட்டதால், வேதநெறிக்கு இந்நெறிகளின் மீது பெரும் முரண் உண்டு. ”இச்சாத்தான்கள் நம்மைச் சாடுகிறாரே?” என்ற கோவமுமுண்டு. வேதநெறிப்பட்ட சிவநெறியும், விண்ணவநெறியுங்கூட வேதமறுப்பு நெறிகளை எதிரிகளாகவே பார்த்தன. பொ.உ.500-இலிருந்து பொ.உ.1000 வரை தெற்கே நம்மிடை நடந்த பக்தி இயக்கம் சாத்தாரமானதில்லை. இது பற்றிய ஆய்வுங் கூடக் குறைவு. ”இந்துத்துவம்” கூடியுள்ள இந்நாளில் இதைச் செய்யப் பலரும் தயங்குகிறார்.

அடுத்தது சாட்டுதல். சால்>சாள் என்பது இன்னொருவகையில் சார்தலை/சார்த்த்தலைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்டு அடையாளங் காட்டுவது சாட்டுதலாகும். சாட்டுதல் = பிறனிடம் சார்த்துதல், குற்றஞ் சுமத்தல், அடித்தல். ஏதோவொன்று விரும்பியவகையில் நடக்காமற் போவதற்கு ஒருவன் காரணனென்று பேசுவது சாடுதலாகும். to accuse என்று ஆங்கிலத்தில் பொருள்கொள்ளும். சாடுதல் = அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக்கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், ஆசைதல், ஒருகட்சிக்குச் சார்பாய் இருத்தல். சாட்டியம் = வஞ்சகம், பொய். சாத்தான் என்ற சொல்லிற்கு மேலை நாகரிகங்களில் தொடக்கமில்லை. அது யூத வழக்கத்திலிருந்து மேலை நாகரிகத்திற்கு வந்தது. தேவனை ஏற்காதவர் சாத்தர் எனப்பட்டார். சாத்தரின் தலைவன் சாத்தான் எனப்பட்டான். சாத்தான் தேவனைச் சாடுகிறானாம் என்றே மேலையரின் கிறித்தவ, யூதச் சிந்தனை இருந்தது. நம்மூர்ச் சாடலும், மேலையர் சாடலும் ஒன்று போலவே தெரிகிறது. இரு நிலங்களிலும் இருந்த சாத்தான் -சாடல் தொடர்பு காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா? அல்லது இரண்டிற்கும் ஏதோவொரு காலத்தில் தொடர்புண்டா? தெரியாது. வரலாற்றின் எத்தனையோ கதவுகள் திறக்காமலேயே போயுள்ளன. அவற்றில் இதுவொன்றோ?.  


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சாத்தன் - 3

 
”விலை, நொடை எனும் 2 சொற்களும் விலைப்பொருளில் வரும்" என்றும், ”விலையை ஏற்கனவே Price-இற்கு நிகராக்கிவிட்டதால் நொடையை Cost-இக்கு நிகராக்கலாம்” என்றும் திரு.வேந்தன் அரசு சொற்களம் முகநூற் குழுவிற் கூறி, அப்பொருளில் வருவதாய் அவரெண்ணிய சங்கப்பாடல்களைச் சொன்னார். நொடை = Cost எனுங் கருத்தில் நான் வேறுபடுவேன். தவிர, (அவ்வளவு புழங்காத) பொருளறியாப் பழஞ்சொற்களுக்கு, தனக்குத் தோன்றியபடி பொருள்திரிப்பதையும் ஏற்கமறுப்பேன். என்கருத்தை விவரிக்குமுன் ஏற்கனவே 2018 சூலையில் மடற்குழுக்களில் எழுதி என் வலைப்பதிவிற் சேமித்த ”சாத்தன்” எனுந் தொடரைப் படிக்கவேண்டுகிறேன். http://valavu.blogspot.com/2018/07/1.html. http://valavu.blogspot.com/2018/07/2.html

இப்போது அத்தொடரை நீட்டி நிகமம்/நியமம், நிகர்தல்>நேர்தல், நொடை, கொள்ளை (கொளுதை), பீடிகை, பகரல், பரிவட்டணை போன்றவற்றைப் பேசவிழைகிறேன். அகரமுதலியில் நிகமத்திற்கு வணிகம், கூட்டம், நெடுந்தெரு, கடைவீதி, கோயில், இடம், மண்டபம், நகரமெனுங் கூட்டப் பொருள் சொல்வர். நியமத்திற்கு ஒழுக்கம். செய்கடன், விதி, அட்டயோக விதிமுறைகளில் வழுவாதொழுகல், வரையறுக்கை, வழக்கம். உறுதி, வேதம், முடிவெனக் நியதிப்பொருள் சொல்வர். சில அகரமுதலிகளிலோ இரண்டையும் குழப்புவர். முதலில் நிகமம் பார்த்துப் பின் நியமம் பார்ப்போம்.

தமிழிக் கல்வெட்டுக்களிற் பயிலும் நிகமத்தை (மாங்குளம் கல்வெட்டு எண் 3, 6 இல் “வெள்ளறை நிகமத்தார்” பற்றிய குறிப்பு வரும். வெள்ளரிப்பட்டி என்பது இற்றை மாங்குளத்திற்கு அருகிலுள்ளது.) என்ன காரணமோ, சங்க இலக்கியம் அச்சொல்லை நேரடி பயிலவில்லை. ஆனால் நற்.17, 208, 209, அக.52 ஆகிய பாடல்களைப் பாடிய நொச்சி நியமங்கிழார் என்ற புலவர் இருந்துள்ளார். நொச்சி நியமம் என்பது நொச்சி படர்ந்த மதிலைக் குறிக்கும். பெரம்பலூர் வட்டத்திலுள்ள இற்றை நொச்சியமே அற்றை நொச்சி நியமம் என்பார். இது தவிர பொள்ளாச்சிக்கு அருகே பெரிய நெகமம், சின்ன நெகமம், சிவகங்கை மாவட்டத்தில் நிகமம்>நேமம், நேமத்தான்பட்டி எனும் ஊர்களுண்டு. ”நிகமம். நியமம்” தமிழர்க்கு இயல்பானவையே! சங்க இலக்கியத்தில் ’நிகமம்’ நேரடியாய் வாராதலாலேயே அதைச்சிலர் பாகதமென்பார். இதற்குச் சான்றாய் நிகையம்>நிகாயத்தை துணைக்கழைப்பார். (சுத்த பிடகத்தின் தீக நிகாயம், மஜ்ஜிம நிகாயம், சம்யுக்தி நிகாயம், அங்குத்தர நிகாயம், குட்டக நிகாயம் என்ற பெயர்களில் நிகாயம் வரும். அதுவே இந்நூற் பெயர்களுக்கும் சங்கநூற் பெயர்களுக்கும் தொடர்புண்டோ எனும் ஐயத்தையெழுப்பும். கீழே சொல்வேன்.)

முல்>முழு>முகு>முகுதல், நுல்>நுழு>நுகு>நுகுதல், துல்>துழு>துகு>துகுதல்> தொகுதல் என்ற தொழிற்பெயர்கள் தன்வினைக் கூட்டுப்பொருள் காட்டும். முகரமும் நுகரமும் தமிழிற் போலிகள். நுகரமும் துகரமும் பலுக்கலில் ஒன்றிற்கொன்று உறவானவை. முனி/நுனி, முதி/நுதி/துதி, முப்பது/நுப்பது, முடம்/நுடம் என்பன போல் முல், நுல், துல் வேரில் கிளைத்த நூற்றுக் கணக்கான சொற்களையும் எண்ணிப் பார்க்கலாம். இவ்வொலித் திரிவுகள் தமிழில் மிகச் சாத்தாரம். முகுத்தல், நுகுத்தல், துகுத்தல்>தொகுத்தல் என்பன பிறவினைக் கூட்டற் பொருள் காட்டும். yoke எனும் இந்தையிரோப்பியச் சொல்லின் நிகராய் பழங்கால வடமொழிகளில் yuga வரும். k>g ஆவது வடபால் மொழிகளிற் பெரிதுமுள்ள வழக்கம். நேரடிக் கூட்டப் பொருளில் தமிழில் உகம்>நுகம் எனலாம். இத்திரிவைப் பாகதம், சங்கதம், பாலி மொழிகள் காட்டமாட்டா. நுகமென்ற சொல்லே அங்கு கிடையாது.

வடவர் நிகமத்தை ni+gam எனவுடைத்துப் பொருள்சொல்வர். பாணினியில், யாஷ்காவின் நிருக்தாவில், சொல்லுடைப்பது ஏராளம். புராணிகர் சொல்வது போல் வார்த்தைச் சித்து விளையாட்டு அங்கு நிறையவுண்டு. ni= own to, gam= ஏகுமிடம் (meeting place) என்றுசொல்வர். ”நி-கச்சேத்தி” வினைக்கு to go down to எனப் பொருள்சொல்வர். குறுஞ்சொல்லுடைப்பு தமிழில் மிக அரிதே நடைபெறும். (இதுபோல் உடைப்பைப் பாவாணர் ஏற்கார். சாத்தூர் சேகரன், ம.சோ. விக்டர் போன்றோரின் விளக்கங்களில் சொல்லுடைப்பு மிகுந்து பழகுவது என்னை நெருடும். இணையத்தில் உலவும் குமரிக்கண்டக் கட்டுரைகள் / விழியங்கள் பலவும் இவ்விதயத்தில் தடுமாறும். பாவாணரை ஆழப் படியுங்கள் என்று மட்டுஞ் சொல்ல விழைவேன்.) நானறிந்தவரை நுகுதலை உடைக்காமலேயே கூட்டப்பொருள் சொல்லலாம். தலைசுற்றி காதுதொடும் மோனியர் வில்லியம்சு சொற்பிறப்பியலை விட உகம்> நுகம்> நிகம்>நிகமம் இயல்பாகும். இதற்கொரு கல்வெட்டுக் காரணமும் உண்டு. மாங்குளம் கல்வெட்டில், ஸ எனும் பெருமி பயின்றோர், நிகத்தைத் (nikam) ஏன் தமிழெழுத்தால் எழுதினார்? ga எனும் பெருமியைப் பயின்று nigam ஒலிக்கலாமே?. பெருமி தெரிந்தவர் ஏனதைப் பயனுறுத்தவில்லை?

இன்னொரு பொருளியற் காரணமும் சொல்லலாம். பண்டமாற்றிலிருந்து வணிகம்வளர, ஒரு நாடு காசு, பணத்திற்கு மாறும். பொ.உ.மு. 600-200 இல் அக்கால மகதத்தில் அதற்கு வழியில்லை. எங்கோ அரசத்தானத்தில் (ராஜஸ்தானத்தில்) செம்பும், இங்குமங்குமாய் ஈயமும், சிற்றளவே சுல்லு/வெள்ளியும் கிடைத்தன. பரிவட்டணைச் சரக்குகள் (exchange goods) ஆன மதிப்புச் செறிந்த தங்கம், முத்து (=நித்தில்>நிதி), வயிரம், மணி, பவளம் போன்றவை (தமிழ்பேசிய) தெற்கில் மட்டுமே கிடைத்தன. இவற்றிற்காகவே தென்னகத்தின் மீது மகதர் படையெடுத்தார். (பொ.உ.மு.600- பொ.உ.400 வரை 1000 ஆண்டுகளுக்கு மகதர்-தமிழர் போட்டியிருந்தது.) அற்றைத் துணைக் கண்டத்தில் தென்னகப் பொருளாதாரமே வலிது. பூகோளத் தன்னேர்ச்சி (geographical accident) காரணமாய்த் தென்னிந்திய வணிகச் சொற்கள், மரபுகள், பழக்கவழக்கங்கள் இறுதியில் வென்றன. கோதம புத்தர், வர்த்தமான மகாவீரருங் கூடத் தமிழ் கற்றாரெனப் பதிவு செய்வர். நீர்நில வளம் மகதத்தில் சிறந்தும், மணி, முத்து, மாழை வளம் தெற்கேயுஞ் சிறந்ததால், ’நிகமம்’ தமிழ்ச்சொல் ஆகவே வாய்ப்பதிகம். ஓரூரின் ”குறித்த தொழில்செய் நிகமத்தார்”. அல்லது ”வெவ்வேறு தொழில்செய் நிகமத்தார்” எனப் புரிந்துகொள்ளலாம்.

நிகமத்திற்கு மாறான சால்+த்+து = சாற்று>சாத்து என்பது ஊரூராய் நகரும் வணிகர் கூட்டமாகும். மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், சிறு தேர்கள், ஆயுதமேந்திய காவற் படைகளெனப் பல்வேறு உறுப்புகள் அடங்கியதாய்ப் பென்னம்பெரு வழிகளில் மாதக்கணக்கில் சாத்துகள் [சாரை சாரையான வேயனங்கள் (caravans - series of wagons) கொண்டதாய்] செல்லும். பொ.உ.மு. 800-600 அளவில் மகதமே இந்தியாவின் பேரரசு. துணைக்கண்டத்தின் வடமேற்கு, தெற்கு மூலைகளிலிருந்து மகதம் போகும் பெருவழிப்பாதைகள், (தக்கசீலம் தொடங்கி மகதம்வரும்) உத்தரப்பாதையும் (தகடூர் தொடங்கி மகதம் போகும்) தக்கணப்பாதையுமே. இப்பாதைகளில் நகரும் சாத்துகளின் கவனம், தம் சரக்குகளைப் பேணல், பாதுகாப்பு, இலக்கிப்பு (logistic ஓரிலக்கைச் சென்றடைதல்) என்றேயிருந்தது. வழிப்பறி, கொள்ளை, எதிர்பாராத் தாக்கல் போன்றவை இருந்ததால் பல்வேறு ஆள்-பேர்-அம்புகளுடன் தான் எல்லாச் சாத்துகளும் இப்பாதைகளிற் பயணித்தன.

வடமேற்கில் தக்கசீலந் தொடங்கி, (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ் எனும்) 4 ஆறுகளையுங் கங்கையையும் கடந்து அத்தினாபுரம் வழி, சாவத்தி, கபிலவாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலிபட்டணம் வழி அரசகம் (முதல் இந்தியப்பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வந்துசேரும் பாதையை உத்தரப்பாதை என்பார். (கிட்டத்தட்ட நேபாள எல்லையிலுள்ள சாவத்தி கோசலத் தலைநகர். கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள்.)

இதேபோல், கோதாவரியின் வடகரையின் படித்தானம் (patiththaana> prathisthana; patiththaana> payiththaana> paithan; இற்றை அவுரங்காபாதிற்கு அருகிலுள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழி வடக்குநகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையிலுள்ள மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப்பகுதியின் (Gond country) கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா (Bhilsa) வந்து நேர்வடக்கே திரும்பி தொழுனை (=யமுனை) ஆற்றுக்கரையில் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி/சாகேதம் (Fyzaabaad) வந்து சாவத்தியிற் சேருவதே தக்கணப் பாதையாகும்.

உத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டிப் பாடலியிலிருந்து மேற்கே வாரணசிவழி, கோசாம்பியடையும் பெருவழியும், தெற்கே (மதுரை, உறையூர், வஞ்சி போன்ற) தமிழக நகரங்களில் இருந்து குடகு, அதியர் (தலைநகர் தகடூர்), கங்கர்நாடு வழி (ஐம்பொழில் ஊடாக, வடுகவழி மேற்கு) கருநாடு கடந்து, படித்தானம் (கன்னரின் தலைநகர்) பிடிக்கும் நீட்சியும் முகன்மைப் பாதைகளே.

(இங்கோர் இடைவிலகல். பொ.உ.மு.600 இலிருந்து பொ.உ..300 வரை இற்றை ஆந்திரப்பிரதேசம், தெலிங்கானா, ஒரிசா, சத்திசுகார், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்றவிடங்களின் முழுதையும் இந்திய அரசுகள் ஆட்கொள்ள வில்லை. இவ்விடங்கள் எல்லாம் பெரிதுங் காடுகளே. காடுகுறைந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப்பிரதேசம், குசராத், மராட்டியம் போன்ற வழியே தான் வடக்கு/ தெற்கு வணிகம் நடந்தது. அற்றை உத்தர, தக்கணப் பாதைகள் வணிகத்துக்கு மட்டுமின்றி, அரணம் (army) நகரவும், கோட்டைகள் அமைத்துக் காவல்செய்யவுங் கூட முகன்மையானவை. இப்பாதைகளைக் கைக்கொள்ளாத எந்தப் பேரரசும் எளிதில் குலையும். அதேபோல் எந்த எதிரியும், இவற்றையே கைக்கொள்ளத் துடிப்பான். இப்பாதைகளின் விளிம்புகளிற்றான் பேரரசுகளால் (வரிவாங்கும்) மாதண்ட நாயகர் பணி அமர்த்தப்பட்டார். (2200 ஆண்டுகளுக்கு முன் தமிழரின் நட்பரசரான நூற்றுவர் கன்னர்- சாதவா கர்ணிகள்- மகதத்தின் மாதண்ட நாயகராகவே தம் அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.)

மாடுகள்/குதிரைகள், வண்டி ஆகியவற்றைப் பிணைத்து நுகுக்கும் (நுகுத்தல் = சேர்த்தல், பூட்டல்) மரம் நுகமெனப்படும். இச்சொல்லுக்கு இணை பிற தமிழிய மொழிகளில் ம.நுகம்; க. நொக (g); வ.யுக (g); குட. நொக; து.நுக, நொக; தெ.நொக என்றமையும். கணையம் (கணுக்கும் மரம். கணுத்தல்= கட்டல், பூட்டல்) என்றுஞ் சொல்வர். (சிவகங்கைப்பக்கம் பெரிய வீட்டு வளவுகளை மூடுவதாய் முகப்பு நிலைக்கதவைப் பூட்டும் மரத்திற்கும் கணையப் பெயர் உண்டு. ஒருகாலத்தில் மதிற்கதவுகளை இணைக்கவும் கணையம் பயனுற்றது. மேற்கண்ட வண்டிகளிற் கணுக்கப்படும்/ பூட்டப்படும் விலங்குகள் 2, 4 ஆய் மட்டுமிருக்கத் தேவையில்லை. 7 குதிரைகள் பூட்டிய சூரிய ஒளி வண்டியின் முன்னுள்ளதும் நுகமே. இதற்கு முன்னிற்பதென்றும் பொருள் உண்டு. அதனாலேயே agency பொருளும் இச்சொல்லிற்கு வந்துசேரும். இதேபொருளில் இன்றும் ’முகவம்’ என்ற சொல்லைப் பயனுறுத்துகிறோம். முகவந் திரிந்து முகாம் என்றுமாகும்.

முகத்தல் தொடர்பான முகைக்கும் பிங்கலம் கூட்டப்பொருளே சொல்லும். முகைப்போலியான நுகைக்கும் தொகுதிப்பொருள் உண்டு. நுகையம்= பெருந் தொகுதி. (பாகதத்தில் நுகாயம்> நிகாயம் ஆகும்.) தமிழில் இதைத் தொகை என்போம். வினைத்தொகை, எட்டுத்தொகை..... என்று சொற்கள் உருவாகும். மேலே சொன்ன தீகநிகாயத்தைத் தமிழாக்கினால் நெடுந்தொகை என்றுதான் சொல்லமுடியும்.(நம் அகநானூறும் புறநானூறும் கூட நீண்ட அடிகள் இருந்தலால் நெடுந்தொகை எனப்படும்.) மஜ்ஜிமநிகாயத்தை நடுத்தொகை என்று மொழிபெயர்க்கலாம். (நம் நற்றிணையும் அதன் அடியளவால் நடுத்தொகை எனப்படும்), குட்டகநிகாயத்தைக் குறுந்தொகை எனலாம். (நம்மூர்க் குறுந்தொகையும் குறுகிய அடிகளால் அப்படிச் சொல்லப்படும்.) ஆகச் சங்க நூல்களுக்கும் புத்த சமய நூல்களுக்கும் அடியளவால் இப்படிப் பெயர்வைக்கும் ஒப்புமை இருந்துள்ளது உண்மை தான். அதேபொழுது எது முந்தை வழக்கம், எது பிந்தை வழக்கம் என்று தமிழ், பாகதத்தில் பிரித்தறிவது ஆய்விற்குறியது. வேறிடத்தில் பார்ப்போம்.

முகத்தல்= நிறைத்தல். முகந்ததைச் சிவகங்கைப்பக்கம் மகுந்தது (=நிறைந்தது) என்பார். ”கரை மகுரக் காவிரியில் வெள்ளம் போகுது..”. முகவை= மிகுதியாய்க் கொடுக்கப்படும் பொருள். (”புகர்முக முகவை” புறநா. 371) நெற்களத்தில் சூடடிக்கும் போது முகக்கக் கிடக்கும் நெற்குவியல் முகவை ஆகும். முகவையிற் பாடும் பாட்டு முகவைப் பாட்டு. ஒருவிழாவில் நன்னேரம் கூடி வருவதை முழுத்தம்> முகுத்தம் என்பார். (காரணம் புரியாது அதைச் சிலர் முகூர்த்தமென நீட்டி முழக்கிச் சங்கதத் தோற்றந் தருவர்.)

வடபால் மொழித்திரிவில் நுகம் நிகமாகும். (தமிழிலும் இத் திரிவுண்டு.) agency, company, carporation என இந்தியில் பொருள் சொல்வார். தமிழிலும் நிகத்திற்கு நிறுவனப் பொருள் சொல்லலாம். நிகரம் என்பதற்கும் கூட்டம், குவியல், மொத்தப் பொருண்மைகளுண்டு. கூட்டப்பொருள் நீட்சியாய் இங்கே பொருந்தற் பொருள் வந்துசேரும். இதற்கு இது நிகம்/நிகல்/நிகர் (பொருத்தம்) என்பார். நுகத்தல், இதன் வழி நிக(ர்)த்தலாகும். (நிகர், நிகர்க்கும், நிகர்ப்பு, நிகரா, நிகரி, போன்றவை சங்க இலக்கியத்தில் பரவலாயுண்டு. நிகர், தெலுங்கில். நிகநிக, நிகாரிஞ்சு என்றும் துளுவில்.நிசாசு என்றும் மாறும்.) தொல்காப்பியத்தில் பல்வேறு உவம உருபுகளில் ’நிகர்ப்ப’ சொல்லப்படும். (உவ்வியது உவத்தலாகி ஒத்தலாகும். எங்கள் பக்கம் ”உள்ளது போல்” என்பார். இங்கு உள்ளது அங்கும் உள்ளும். உள்வு> உவ்வு என்றுந்திரியும். உவ்வலில் யகரஞ் சேர்ந்தும் பலுக்கப்படும். உவம்>யுவம்) ஒரேமாதிரி நிகரானவர், (காட்டாகப் பொன் வாணிகர், எண்ணெய் வாணிகர், வெளிநாட்டு வாணிகர், உழவர், வினைஞர் என்போர்) ஒரேவகைத் தொழில் செய்யும் ஆட்களாவார். இவர் சேரும் கூட்டமைப்பு நிகம். இக்காலத்தில் guild, society என்கிறாரே அது இதற்குச் சரிவரும். also gild, early 13c., yilde (spelling later influenced by Old Norse gildi "guild, brotherhood"), a semantic fusion of Old English gegield "guild, brotherhood," and gield "service, offering; payment, tribute; compensation," from Proto-Germanic *geldja- "payment, contribution" (source also of Old Frisian geld "money," Old Saxon geld "payment, sacrifice, reward," Old High German gelt "payment, tribute;" see yield (v.)).

”நிகமித்தல்” வடமொழி, தென்மொழி தெரிந்த மணிப்பவளரின் சொல்லாக்கம். (ஈடு.1.6) பல்வேறு வாதங்களை ஒன்றுசேர்த்து இறுதியில்வரும் முடிவை நிகமென்பதாய் மேலேகூறினேன் அல்லவா? ”தருக்க சங்கிரகத்தில்” வரும் 5 அனுமான உறுப்புகளில் இறுதியானது ”நிகமனம்” எனப்படும். இதுதவிர, ’நிகவம்’ முகட்டுத்தேற்றில் (metathesis) நிவகமென்று ஆகிக் கூட்டப்பொருள் உணர்த்தும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 சாத்தன் - 4

 
இதுவரை கூட்டப்பொருளின் நிகமங் கண்ட நாம், இனிக் கூட்டநீட்சியில் நியமங் காண்போம். நிகமம் எண்ணிக்கையில் பெரிதெனினும், செய்நேர்த்தியில் சாத்தாரமானது. அதைவைத்து உருப்படியாகச் சிறிதளவே செயலாற்றலாம். சிறப்பாய் நிகமம் இயங்கவேண்டின், அது நிறுவனப்பட வேண்டும். நியதி, நிறுவல் போன்றவை கட்டொழுங்கு (order) குறித்தவை. தலைவர் (chair), துணைத்தலைவர் (vice chair), செயலர் (executive head), செயற்குழு (executive committte), பொதுக்குழு (Common committee), கணப்பொதி (general body) போல் ஒரு கட்டமைப்பைக் (வேறுவிதத்திலும் கட்டமைக்கலாம்.) கூட்டத்தில் ஏற்படுத்துவதை ஒருங்கேற்றம் (organization) என்பார் ஏதோவொர் அமைப்பையும், சட்டதிட்டங்களையும் நிகமத்தில் ஏற்றினாற்றான் அது நியமமாகும். பொதுவணிகருள் இருந்த ஒரு தனிப்பெருங் கூட்டத்தால் ’நியமம்’ என்ற சொல் ஏற்பட்டுப் பின் எல்லோர்க்கும் பரவியது. ஆடை தொடர்பான அக்கூட்டத்தை விளக்கவேண்டிச் சற்று விலகுகிறேன். பொறுத்துக் கொள்க!

வேடுவச்சேகர வாழ்க்கையிலிருந்து மருத/நெய்தல் வாழ்க்கை நுழைந்த எல்லோர்க்கும் ஆடைசெய்யத் தெரியாது. ஆடைசெய்வோரிடம், செய்யாதார் வேறொன்று கொடுத்து பரிமாற்றுந் தேவையுண்டு. இவ்வேலைப் பிரிப்பால் பொ.உ.மு. 1000-400 அளவில் வாய்ப்பும், வளர்ச்சியும் ஏற்பட்டன. பண்டமாற்று பொருளாகவும், காசுவணிகப் பொருளாகவும் ஆடை மாறியது. வட்டாரம் விட்டு வட்டாரம், நாடு விட்டு நாடென நகரும் வணிகச்சாத்தில் ஆடை விற்போர் முகனுற்றார். வேய்தல்/நெய்தல் செய்யும் ஆடைத்தொழிலர் வேய்வர்/நெய்வரென அறியப்பட்டார். நுல்>நுள்>நெள்>நெய் எனச் சொல் வளர்ந்து நூல் நெருக்கித் துணியாய் முடைதலைக் குறிக்கும். இதை வேய்தல்/நெய்தல் என்போம். நெயவு பற்றிய விளக்கம் ”பனுவலும் text உம் ஒன்றா?” என்ற (முடிவுறாத்) தொடரிற் கிடைக்கும்.

http://valavu.blogspot.com/2018/07/text-1.html
http://valavu.blogspot.com/2018/07/text-2.html
http://valavu.blogspot.com/2018/07/text-3.html
http://valavu.blogspot.com/2018/08/text-4.html

வேடுவச்சேகர வாழ்க்கைக்குப் பின்னெழுந்த குமுகாயத்தில் தடுக்குகள், பாய்கள், துகில்களெனப் படிப்படியாக நுட்பியற்சோதனை நடந்தது. பருத்தியில் துகில்செய்யுமுன், பனையோலைக் கீற்று, நாணற் கோரைகளால் தடுக்குகளையும், பாய்களையும் முடைந்த பட்டறிவு பழந்தமிழருக்கிருந்தது. பின்னல், முடைதல், வேய்தல், பொருத்தல், கள்ளல், கட்டல், நுள்ளல், நெருக்கல், நெய்தலெனும் தொழில்கள் வளர்ந்தன. ஓலைக் கீற்றுகள் நீள வாட்டிலும் குறுக்கு வாட்டிலும் ஒன்றோடொன்று பின்னிப் போவதைப் பின்னலென்றார். இருவேறு ஓலைகள் முட்டி முடிவது முடைதலானது. முடைதலுக்கு வேய்தல் என்றும் பெயர் (வேய்தல் துகிற்றொழிலை இன்று குறிப்பினும் ஓலைமுயற்சியை உள்ளே காட்டும்.) பருத்திநூல் கண்டபின் கோணலாய் முடிந்த இருவேறு ஓலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் நூல்கள் ஆயின. ஒருநூல் நீண்டு நெடிதாய்ப் பாவ [பாவுநூல் (warp)]. இன்னொருநூல் ஊடிப்போய் வேய்ந்தது [ஊடுநூல் (weft)].

பாவுநூல்களின் நீளம், துணிநீளத்தையும், அவற்றின் குறுக்குவெட்டும் எண்ணிக்கையும் துணியகலத்தையும் நிருணயித்தன. ஊடும் பாவும் பொருந்துவதால் நெயவைப் பொருத்தலென்றுஞ் சொன்னார். பாவும் ஊடுஞ் சேர்வதால் கள்ளலாகி, அதன்நீட்சியிற் கட்டலானது. பாவுநூல்களின் ஊடே ஒன்றுமாற்றி ஒன்றாய் ஊடுநூல் வலைத்துத் துணி நிறைக்கிறது. அடிப்படையில் வேய்தலெனினும் வவ்வுதல் (வலைத்துப்/வளைத்துப் பற்றுதல்) என்பதும் weaving ற்கு இணைதான். வலைத்துப்பற்றலை மேலைச்சொற்பிறப்பியல் அகரமுதலிகள் சொல்லா. இன்னொரு காட்டுஞ் சொல்லலாம். நூலை வலைத்துச் செய்வது வலை. வலய அளவிற்கேற்பத் துணியின் அடர்த்தி மாறும். ஒருவலை நெருக்கச்செய்ததா? கலக்கச்செய்ததா? - என்பதைப் பொறுத்து வலை/துணியின் பயன்பாடுகள் மாறும்.

மேலும்பார்க்கின், நுள்ளல் அடைதலையும், செறிதலையும், பொருத்தலையும், குறிக்கும். நற்செறிந்த தடுக்கோ, பாயோ இடைவெளியின்றி நிற்கும். இன்னொரு வகையில் நுள்>நெள்>நெய்யாகி நெய்தலைக் குறிக்கும். பாவும், ஊடும் பிணைக்கும்செயல் முன்சொன்ன ஓலைக்கீற்று, கோரை, நூல் போன்றபொருள்களில் ஒன்றுபோல் நடந்தது பாவுநூலையும் ஊடுநூலையும் விதவிதமாய் வெவ்வேறு அடவுகளில் துகிலிற் பொருத்துவதென இறுதியில் பொருள்கொண்டார். நெய்த துணியும் வெவ்வேறுவிதம் அறியப்பட்டது. (சூடாமணி நிகண்டு 31 விதமாய்ப் பதிவுசெய்யும்.) “நெய்யு நுண்ணூல்” என்பது சீவக.3019. நுல்>நில்>நிற்று>நிறு என்றெழுந்த நிறுவல், நிறுவனம் போல் நுல்>நுள்.நெள்>நெய் எனும் நெய்தலுக்குத் தொடுத்தற் பொருளுமுண்டு. to string, to link together "நெய்தவை தூக்க” என்று பரிபா.19:80 சொல்லும். இங்கே பாவையும் (warp) ஊடையும் (weft) தொடுப்பது சொல்லப்படுகிறது.

ஏறத்தாழ எல்லாத் தமிழியமொழிகளிலும் நெய்க்கு இணையுண்டு .ம.நெய்க; தெ.நேயு; க்.நேய், நேயி, நெய்யு; கோத.நெச்; துட.நிச்; குட.நெய்; து.நெயுநி; கூ.நெப; குவி.நெநை; குரு.எஸ்நா; மா.எசெ; ’நெய்’யின் தொழிற்பெயர்கள் நெய்தல்/நெய(/ச)வு/நெயம் ஆகும். தொழில்செய்வோர் நெய்வார்/நெயவார்/நெசவார்/நெய்மார் (weavers) எனப்பட்டார் .இயப்பதை இயமென்றும், கயந்ததைக் கயமென்றும், குய்வதைக் குயமென்றும், நயப்பதை நயமென்றும், பயங்குவதைப் பயமென்றும், புய்வதைப் (புடைப்பது) புயமென்றும் மயல்வதை மயமென்றும் சொல்லலாமெனில், இதை நெயம் எனலாம். தவறில்லை. இந்’நெய்’க்கும், ஆநெய்க்கும் ஒட்டும்/பொருத்தும்/ஒருங்கும் பொருள் தொடர்புண்டு. ஆநெய்க்கும் கூட்டப்பொருள் நீட்சியால் ஒட்டுமை/பசைமை (to become greasy, unctuous, or sticky. குருணைகள் ஒன்றோடொன்று ஒட்டுவது) சொல்வர். நீர்ப்பொருளாய் உருகும் கொழுப்பிற்கும் நெய்ப்பெயர் சொல்வர். நெய்த்தோர் = நெய்போலுறையும் அரத்தம் “நெய்த்தோர் வாய... குருளை” - நற்.2. நெய்ப்பற்று/ நெய்ப்பிடி/ நெய்ப்பு/நெய்ம்மை = ஒட்டுந் தன்மை. நெய்மிதி = மிகுதியான நெய்ப்பு. நெய்ம்மீன் = நெய்ம்மை கொண்ட மீன். பொதுவாய் நெய்மம் = ஒட்டுமை கொண்ட entity.

உழவில் தோய்ந்தோருக்கு நெயவை வேறொன்றோடு ஒப்பிடத் தோன்றும். பாசன ஏரிகளின் கலிங்கோடு நெய்தற் செயனத்தை (செய்யனம்>செயனம்= மாகனம்= machine) ஒப்புநோக்கினார். ஒருபக்கம் வெள்ளம் வர, இன்னொரு பக்கம் கலிங்கால் கட்டுறுத்தி வேண்டுவழி நீரைத் திருப்புவோமன்றோ? (கலிங்கால் வெள்ளத்தை மடுப்பதால் மடு>மடையென்றும், மடு>மடுகு>மடகு> மதகென்றுஞ் சொன்னார்) ஏரிக்கலிங்கு போல் நெய்தற்செயனம் செயற்பட்டு, ஒருபக்கம் வெள்ளமாய் பாவு/ஊடுநூல்கள் வர, இன்னொருபக்கம் துணி வெளிப்படுத்துமாம். இவ்வொப்புமையால் நெய்தற் செயனத்திற்குக் கலிங்கு, மடுகு/மடுகமெனும் பெயர்கள் ஏற்பட்டன. கலிங்கம், மடி, துணிக்கு ஏற்பட்டன. ஆங்கிலக் cloth உம் கலிங்கிற்கு இணையே. ஒரு பெரும்நகரில் (புகார், உறையூர், கொற்கை, மதுரை, முசிறி, வஞ்சி) கலிங்கும், உணவுக் கடைகள் முகன்மையானவையே. மதுரைக்காஞ்சியும், பட்டினப்பாலையும், மற்ற பத்துப்பாட்டு நூல்களும் (கூடவே சிலப்பதிகாரமும்) இதுபோற் கடைவீதிகளை விவரிக்கும்.   .

மடுகம்>மடுக்கம்>மட்கம்>மக்கம் என்பது தமிழர் பேச்சுவழக்கிலும், மலையாளத்திலும் இருக்குஞ் சொல்லாகும். தெலுங்கு, கன்னடம், துளு, கோண்டி, மராட்டி மொழிகளிலும் அதன் இணைகள் புழங்கும். [4624 Ta. makkam loom. Ma. makkam id. Ka. magga id. Tu. magga id. Te. maggamu id.; maggari weaver. Go. (Mu.) maŋṭa weaving instrument (Voc. 2681). / Cf. Mar. māg loom; Or. maṅg id. DED(S)] நெசவிற்கான மக்கமே எல்லா machine களுக்கும் பொதுப்பெயரானது. சங்க நூல்களிலும், சிலம்பிலும் வரும் இலஞ்சியான நீர்த் துருவணை (water-turbine).ஏற்பட்டபின், பல நாகரிகங்களில் (ஆனாற் குறித்த இடங்களில்), மாந்தர் இன்றி, நீரோடையால் இயங்கும் (மாவரைவை, மாவாட்டல் போன்ற) சுழற்சி விளைவிக்கும் மக்கற் செயற்பாடுகள் நடந்தன. இவை பார்ப்போரை மயக்கியதால், மாகம் ((magic) என்றும் அழைக்கப்பட்டன. மக்கம்/மாகம்> மாகனச் சொற்பிறப்பியல் புரிகிறதோ? (தொழிற்புரட்சியில் நீரோடையாற்றல் நீராவியானது.) 2000 ஆண்டுகளுக்கு மேல் நம்மூருஞ் சேர்ந்த உலகின் பலவிடங்களில் நீரோடையாற்றல் இருந்தது. (எந்திரம்/பொறி= engine. மாகனம்= machine. மாகனப் பொறியியல்= mechanical engineering. இனித் தேவையின்றி யாருங் குழம்பவேண்டாம்.)    

மேற்சொன்ன ஒப்புமை காணா உரையாசிரியரும் அகரமுதலியாரும் கலிங்கத்தின் விதப்புத் துணியே கலிங்கமென்பார். ஆழப் பார்க்கின் அப்படித் தெரியவில்லை. கணப்புப் (generic) பயன்படாகவே சங்கநூல்களில் ”கலிங்கம்” பயன்படும். அரசர்/செல்வரிலிருந்து வறியவர்வரை, உச்சிமுதல் உள்ளங்கால் வரை, பலருமணிந்தது கலிங்கமே. பன்னூற்றாண்டு தென்கிழக்கு ஆசியா எங்கணும் கலிங்கத்தை விற்றுவந்த தமிழ் வணிகர் கலிங்ஙென அறியப் பட்டார். (இக்காலக் காஞ்சியிலிருந்து புடவை விற்கத் தெற்கு வருவோரைப் புடவைக்காரர் என்பார்.) இதுவறியா வரலாற்றாசிரியர் ஒடியா/ கலிங்கத்தை தென்கிழக்காசியரோடு தொடர்புறுத்துவர். (அத்தவறான பார்வையை வேறு கட்டுரையில் விளக்குவேன்.) வெறுமே இந்தியத்தொடர்பு, சங்கதத்தொடர்பு எனப் புனைவதற்கு மாறாய்த் தென்கிழக்காசியத் தொடர்பின் உயிர்நாடி தமிழரே என்றுசொல்லத் தயக்கமோ? இனி, தென்கிழக்கில் துணிவிற்ற தமிழர் வடவிந்தியாவில் விற்றிருக்க மாட்டாரா? நியமமென்ற சொல்லே பெருஞ்சான்று.

மேற்சொன்ன விளக்கங்களால், நெயம்>நெயமம் என்பது நெயவரின் நிகமமென்பதும். பேச்சுவழக்கில் நெயமம்>நியமமானதும், நாளாவட்டத்தில் நியமத்திற்கும் நிகமத்திற்கும் வேறுபாடு போனதும் புரிந்திருக்குமென எண்ணுகிறேன். நெயவின் ஒழுங்காற்றான் (order) நியமத்திற்கு ஒழுக்கம். செய்கடன், விதி, அட்டயோக விதிமுறைகளில் வழுவாதொழுகல், வரையறுக்கை, வழக்கம். உறுதி, வேதம், முடிவென்ற பொருட்பாடுகள் ஏற்பட்டன என்று கருதுகிறேன். [பல்வேறு வாதங்களை ஒன்றுசேர்த்து இறுதியிற் கூட்டி (சேர்த்து/தொகுத்து) வருவது முடிவு எனப்படும். அடிப்படையில் ’வேதமும், முடிவும்’ ’நியம’ வழிப் பிறந்தவையே.] நியமக்காரன், நியமங்கெட்டவன், நியமஞ் செய்தல், நியமனம், நியமித்தல், நியதி (>நீதி), நயம், நயன்மை, நியயம்>நியாயம் (யாயம்>ஞாயம்>நாயம் = கட்டுப்பட்டது. ஏற்படுத்தியது, ஊழ், அமைத்தது, விதித்தது. முறைப்படுத்தப் பட்டது, வரையறுத்தது என்பதும் இதோடு தொடர்புடையதே) நாயன், நாயனார்>நயினார் போன்ற சொற்களெல்லாம் இந்த நெயம்>நியம் என்பதில் உருவானவை தாம்.   


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சாத்தன் - 5

 
அடுத்தது நொடை பற்றியதாகும். இதற்குமுன் பழங்குடி மாந்தரின் தென்னிந்தியப் பரம்பலைப் பற்றிச் சொல்லவேண்டும். இதில் தமிழரிடம் இருவேறு கருத்துகளுண்டு. ஒன்று, குமரிக்கண்டத்திலிருந்து வடக்கே தமிழர் நகர்ந்ததாய்ச் சொல்வது. இன்னொன்று, இலாமைட்டுகளுடன் தமிழரைத் தொடர்புறுத்தி, ஆரியர்க்குமுன் இரானிலிருந்து வந்தாரென்பது, (ஈனியலாய்வு இதை உறுதிப்படுத்தவில்லை.) குமரிக்கண்டக் கருத்திற்கும் ஆதாரம் பெரிதும் இல்லை. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமரிக்கண்டக் கூற்றுக்களை எளிதில் மறுக்கும் வாதங்கள் பலவும் இற்றை அறிவுப் புலங்களில் எழுந்து விட்டன. இருப்பினும் நண்பர் ஒரிசாபாலு போன்றோர் இன்னும் முயல்கிறார். ஆய்விதழ் ஏற்பாக அவர் குழுவிலிருந்து கட்டுரைகள் வெளிவந்தது போல் தெரியவில்லை. ஒருவேளை முயற்சி கனிகையில் இவை வெளிவரலாம். நானும் ஒரு காலம் குமரிக்கண்டத் தோற்றம் சரியென எண்ணினேன். இப்போதோ, அறிவியல் ஐயம் காரணமாய் என் நம்பிக்கை பெரிதுங் குறைந்து விட்டது.

”16000 ஆண்டுகட்குமுன், இற்றைக்குமரிக்குத் தெற்கே  250 கி.மீ அளவிற்குக் கூட நிலம் நீண்டிருக்கலாம்; இலங்கை தமிழ்நாட்டோடு சேர்ந்திருந்து இருக்கலாம்; இந்திய மேற்குக் கிழக்குக் கடற்கரைகள் ஆங்காங்கே சற்று அகன்றிருக்கலாம்” என்றுமட்டுமே சொல்லமுடிகிறது. ஏனெனில் கடல்மட்ட ஆதாரங்களுள்ளன. ஆனால் இந்துமாக்கடலில் ”கண்ட” அளவிற்கு ஒரு பெரு நிலம் இருந்தது எனக்குப் புலப்படவில்லை. (அதேபொழுது கடலில்நான் ஆழ்ந்தவன் இல்லை தான்.) அத்தகைய பெருநிலமாய், அக்காலத்தில், தென்கிழக்காசியா, பாப்புவா நியுகினி, ஆத்திரேலியா சேர்ந்த ”சாகூலே” இயல்பாய்க் காண்கிறது. முதல்மாந்தன் எழுந்தது அங்கா? ஆப்பிரிக்காவிலா? இருவேறு இடங்களிலா? - எனும் வாதங்கள் அறிவியலுலகில் போய்க் கொண்டுள்ளன. அவ்வாதங்களின் முடிவில் பெரும்பாலோர் ஆப்பிரிக்காவின் ஒற்றை முகன மாந்த எழுச்சிக்கே வந்துசேர்கிறார். நானும் பெரும்பாலோரோடு இப்போதைக்கு நிற்கிறேன். ஈனியல் வழி அறிந்த அண்மைச் செய்தியையும் இங்கே குறிப்பிடுகிறேன்.

70000 ஆண்டுகட்குமுன் வறண்டுபோன ஆப்பிரிக்காவிலிருந்து முகன மாந்தர் [ஈனியலார் Dr Spencer wells நெய்தலார் (coastal people) என்பார்] கிளம்பி, எத்தியோப்பிய, சோமாலியக் கடற்கரையை ஒட்டி நகர்ந்து, அரேபியத் தீவக்குறை தாவி, இரானியக் கடற்கரை வந்து, இந்தியத் துணைக்கண்டம் நுழைந்து, மேற்குத்தொடர்ச்சிமலை ஒட்டிய நெய்தல், குறிஞ்சி, முல்லை நிலஞ்சார்ந்து, வேடுவச்சேகர வாழ்வில் நெடுங்காலம் வாழ்ந்தார். அவரில் ஒருபகுதியார் கடற்கரைவழி மேலும் நகர்ந்து பர்மா, தென்கிழக்காசியா போய், முடிவில் ஆத்திரேலியா சேர்ந்தார், பல்லாயிரமாண்டுத் தென்னக வாழ்வில் இங்கேயே தங்கிப்போன நெய்தலாரில் இனக்குழுக்கள் தோன்றி ஏராளமான போட்டி, பொறாமை, பொச்சரிப்பு, முரண்பாடு, அழித்தொழிப்புகளும் ஏற்பட்டன. இதன் விளைவால் சிறிய இனக்குழுக்கள் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பெரியனவற்றிற் கரைந்தன. பொ.உ.மு. 600 களுக்குச் சற்றுமுன் சேர, சோழ, பாண்டியரெனும் முப்பெருங் குழுக்களே எஞ்சினர். ஊடிருந்த வேளிர் பொ.உ.500/600 வரை பெருங்குழுக்களிற் கரைவதில் எதிர்ப்புக் காட்டினார். [பொ.உ.300 களுக்கு அருகில் இனக்குழுக்கள் மாறிச் சாதிகளாய்ப் பெருக்கெடுத்தது தமிழரின் சோகக் கதை.] இனி மொழிக்கு வருவோம்.

தென்னக வாழ்புலந்தில் தங்கிய, பேச்சுத்திறன் கொண்ட நெய்தலார் தமிழ் மொழி பேசினாரா? அல்லது அவரின் பழைய ஆப்பிரிக்க மொழி தமிழுக்கு மாறியதா? அன்றி வேறொருவர் கொணர்ந்த தமிழை இவர் பயின்றாரா? என்பதை எல்லாம் அறிவியல்வழி இதுகாறும் அறுதியாய்ச் சொல்ல முடிவதில்லை. ஒலியியல் பேராசிரியர் புனல் க. முருகையன் ஆய்வின் படி தமிழ் ஒலியன்கள் 105 என்பார். 118/120 ஒலியன்களைக் கொண்ட, பழமையான ஆப்பிரிக்கச் சொடுக்கு (click) மொழியான San க்கு அருகில் அது எண்ணிக்கையில் வந்துவிடும். எனவே தமிழையும் ஒரு தொடக்க கால மொழியாய்க் கருதலாம் தான். ஒலியன்கள் தொடர்பான இவ்வாதத்தை வேறு கட்டுரையில் தான் பேசவேண்டும். இதில் முடியாது. ”நினைவு தெரிந்தவரை தமிழர் இங்கிருந்தார்; இவரிற்பலர் கடலழிப்பில் அழிந்துபோனார்; மீந்தவர் பழந்தமிழ்நாட்டில் தொடர்ந்தாரெ”னும் இலக்கியக்குறிப்பு மட்டுமே நம்மிடமுண்டு. அது கொஞ்சமும் பற்றாது. பலரும் தொல்லியல், மாந்தவியல், ஈனியல், பண்பாட்டியல் எனப் பல்வேறு அறிவுப்புலங்களிற் சான்றுகளுண்டா என்று கேட்பார். எனவே அவற்றில் சிவவற்றையாவது உறுதிசெய்யவேண்டும். (பாவாணர் அன்பர் பலரும் அருள்கூர்ந்து என்னை மன்னியுங்கள். 50000, 60000 ஆம் ஆண்டுக் காலச்செய்தியை வெறும் இலக்கியங் கொண்டு நிறுவி விட முடியாது. என்மேல் சினமுறுவதிலோ, என்னோடு முரணுவதிலோ, பலனில்லை.)

சங்ககால வரலாற்றிற்குச் சற்றுமுன் கூட (மூவேந்தர் தொடக்கம் பொ.உ.மு.600 க்கு முன்னென ஊகிக்கிறோம்) பழைய, நடு, புதுக் கற்காலம் வரை (ஏன் பெருங்கற்காலம் வரை) இனக்குழுக்களாகவே தமிழரிருந்தது தொல்லியல், இலக்கியம் போன்றவற்றால் தெரிகிறது. இனக்குழுப் பாதுகாப்பிற்காக மூவேறுவகையார் குழுக்களுள் எழுந்தார். அவருள் முதல் வகையாரைச் சூலத்தார் (=வேலார்; சூல்த்த> சூல்த்த்ர என்பது சங்கதம். வேலர்>வேளர்>வேளாளர் தமிழ்) என்றும், 2 ஆம் வகையாரை வில்லியர் (=அம்பார்; வில்லியருக்கு அவர் கையாண்ட, கூர் அம்பு/வாளி/வாணியால் ஏற்பட்ட தமிழ்ச்சொல் வாணியராகும். இதன் சங்கதச்சொல் கீழே) என்றும், 3 ஆம் வகையாரைக் கத்தியர் (=அரையர்; இன்னும்பல சொற்களுண்டு. சங்கதத்தில் கத்திய>க்ஷத்திய>க்ஷத்ரிய ஆகும்) என்றுஞ் சொல்லலாம். கடலுள் மீன்பிடிக்கச் சென்ற நுளையரும் 2 ஆம் வகை சேர்ந்தவரே. [இவரைப் பரதரென்றுஞ் சொல்வர். நுளையென்பது துளைப்பொருள் சார்ந்து வலையைக் குறிக்கும். நுள்ளல்>நுளல்>நுளைதல்= நீருட்புகுதல். நுளுதல்>நுழுதல், முழுங்குதலைக் குறிக்கும். நுளையரை முழ்க்குவர்>முக்குவர் என்பர். இக்காலத்தில் நுளையரை மீனவரென்பதால், மற்றசொற்கள் பலரும் அறியாது வழக்கிழந்தன.]  

முன்சொன்ன சூலத்தார்/வேலார், வில்லியர்/நுளையர், கத்தியர்/அரையர் ஆகியோரில் முதல்வகையார் மிகநிறைந்தும், அடுத்தார் இன்னுங்குறைந்தும், மூன்றாமவர் மேலுங்குறைந்தும் இருந்திருக்கலாம். எண்ணிக்கை மிகமிகக் குறைந்த நாலாம் வகையாரான பெருமானரின் (இவரேதோ வடக்கிருந்து வந்தாரென்பது ஒருதலைச்செய்தி. இங்கிருந்த பெருமானரோடு வந்தவர் இணைந்துகொண்டார் என்பதே உண்மை) ஓர்தலோடு கிழார்/அரயர்/மன்னர்/வேந்தர் அரசியல் அதிகாரம் பெற்றார். வேட்டையிலாக் காலங்களில் இனக் குழுவின் பொதுக்கடன்களை அந்தந்தக் குழுவின் சூலத்தார்/வேலார் கவனித்தார். குறித்தவிடத்தில் இனக்குழு தண்டுற்று உறைகையில், எல்லை தாண்டி மற்ற இனக்குழுக்களோடு சிறு பொருதல்களையும், விலங்கு கவர்தலை வில்லியரும், மீன்பிடித்தலை நுளையர்/பரதவருஞ் செய்தார்.

நாளாவட்டத்தில் அடுத்த இனக்குழுக்களுடன் எப்போதும் போர்செய்ய முற்படாது, சிலபோது உறவாடிப்பேசி, தம் பொருள்/பண்டத்தை மாற்றார் பொருள்/பண்டத்திற்கு மாற்றிவரவும் ஒவ்வொரு கூட்ட வில்லியரும் நுளையரும் முற்பட்டார் இதனாற் கொஞ்சங் கொஞ்சமாய் இனக்குழுக்கள் இடையே பொருதுகள் குறைந்து, பேச்சும், உறவுங் கூடின. இதில் ஏற்பட்ட பண்டமாற்றில் குறிப்பிடத்தக்க வில்லியர் இன்னும் விதந்த திறம்பெற்றார். வில்லறிவு, வில்+தை= விற்றை>வித்தை>விச்சை ஆனது. வில்லியர், வித்தையர்>விச்சையர் ஆனார். (விச்சைய>விசய>வைஸிய என்று சங்கதத்தில் ஆகும்.) வில்+தல் விற்றலாயிற்று. விற்றையும் விற்றலும், (போர், பண்டமாற்றெனும்) இருவேறு வில்லியர் செயல்களைத் தொடக்கத்திற் குறித்தன முடிவில் தகரம் பயின்றசொல் போர்த்திறமையையும், றகரம் பயின்றசொல் பண்டமாற்றையும் குறித்தது. (இவ்வேறுபாட்டை இன்றும் பயில்கிறோம்.)  பண்டமாற்று வேலைக்கு வாணியம்>வாணிகம் என்ற விதப்புப்பெயர் உருவானது. [ஆங்கிலத்தில் இவரை trader என்பார்.] பரந்து வலையிடும் பரதவர் பரயவுந் தொடங்கினார்; பரதரும் ஆனார். இன்றும் மலையாளத்தில், ”இது எந்தா விலையாணு? பரயு” என்ற சாத்தாரப் பேசுண்டு.

வில்லியர்க்கும் நொடையருக்கும் ஒப்புமைகளுண்டு. வில்லியர்போலவே நுளையர்>நுடையர்>நொடையருக்கும் வணிகப்பொருள் சொல்வார். வில்லியர் நிலத்தாரங்களையும், நுளையர் கடற்றாரங்களையும் விற்று வணிகஞ்செய்தார். (கடற்றாரங்களில் சோழிகளென்ற நாணயங்கள் மட்டுமின்றி முத்து, பவளமெனும் உயர்விலைப்பொருட்களும் இருந்தன.) நுள்>நூள்>நூழ்>நூழிலர்= செக்கெண்ணெய் வணிகர்; விற்றல் போலவே நொடுத்தலும் அமையும். (நா நயமின்றி, மறைத்து நொடுப்பது நொட்டல் ஆயிற்று. சிறு பிள்ளைகள் தம் விளையாட்டினூடே நொட்டலை உணர்த்த ஆள்காட்டி விரலை மீன்பிடிக் கொக்கிபோல் வளைத்துக்காட்டுவர். நொடித்தல்= (விலை) சொல்லல். நொடுவின் மரூஉவான மொடுவிற்கு அதிகவிலை என்றுபொருள். விலைபோலவே நொடை அமையும். நொடைமை= விலைமை; நொடையாட்டி= விலைசொல்லும் மகளிர்.

நொடை,. கடலிற் கண்டெடுத்த பொருளுக்கும், அதைப் பதப்படுத்திய பொருளுக்குமான பெயர். அவ்வளவு தான். நொடுத்த(1), நொடுத்து(4), நொடை(13), நொடைமை (1) எனும் சங்க இலக்கியச் சொற்பயன்பாடுகள் அனைத்திலும் இதே பொருளைப் பெறுவோம். இன்னொன்றும் இங்கு சொல்ல வேண்டும். நொடையின் பொருள் பின்னாற் பொதுமைப்பட்டு மற்ற தாரங்களின் விலையையும் குறிக்கத்தொடங்கியது. 5.24 இந்திரவிழவு ஊரெடுத்த காதை, சிலப்பதிகாரத்தில் ”கள் நொடையாட்டியர்” என்ற பயன்பாட்டை  காணலாம். அதாவது பனங்கள், தென்னங்கள்ளின் விலையும் கூட நொடையெனப் பட்டிருக்கிறது. இறுதியாக திரு.வேந்தனரசு சொல்லும் cost பொருள் ஒருக்காலும் அதற்கு அமையாது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 சாத்தன் - 6

 
இனி வார்த்தகம்/வர்த்தகம் (வாணிகம்), பரிவட்டணை (exchange), தடகு (trade), பரத்து (barter), மாற்றன் (merchant), குவிமாற்று (commerce), மாங்கர் (monger), பகரல் (to say a price), வில்நர் (vendor), கூவுகர் (hawker), பீடிகை/பெட்டிகை (shop), பெட்டிலர் (peddler), சுற்றலர் (sutler), கொள்ளை / கொளுதை (cost), போன்ற சொற்களுக்கு வருவோம். இவற்றிற்சில தமிழ் வரலாற்றுப்புலத்தில் மட்டும் எழுந்தவை; சில வேறு வரலாற்றுப்புலங்களில் எழுந்தவை (ஆயினும் தமிழ்மூலங் காட்டுகின்றன.) முழுமை கருதி இவை எல்லாவற்றையுமே இங்கு தொகுக்கிறேன். இரண்டாம் வகைக்குத் தமிழிலக்கியப் பயன்பாடுண்டா, அகராதிச் சேர்ப்புண்டா என்று கேட்டுவிடாதீர். (இப்படிக் கேட்பது சிலருக்கு வாடிக்கை.) என் புரிதலால் இவற்றைச் சேர்க்கிறேன். 

முதலில் வார்த்தகம். வில்லியர் போல் ”வாணியர் (வாள்+நி= வாணி= அம்பு)” என்றசொல் எழுந்ததென மேலேசொன்னேன். "வாணிய" என்பது வடக்கே போய் வாணிஜ ஆகி, யகரஞ்சேர்ந்து வாணிஜ்ய ஆகும். மோனியர் வில்லியம்சு वाणिज्य-  traffic, trade, commerce, merchandise என்னும். கூரலகு குறிக்கும் வாளின் செய்பொருள் கல், செம்பு, பித்தளை, இரும்பெனப் படிப்படியாய் மாறியது. வாளும் வாரென (சோழ/சோள/ சோட/சோர என்ற சொற்றிரிவு போல்) வடக்கே திரிந்தது. ஒல்லியான (ஆனால் வலிந்த) மூங்கில்முனையில் வாரைப் பொருத்தி அக்காலத்தில் அம்புசெய்தார். வார்+த்+த்+அம்= வார்த்தமாகி அம்பைக் குறிக்கும். அம்புவிடல்= அம்புவார்த்தல். வார்த்தம் ஆள்பவன் வார்த்தன். வார்த்தகம்/ வார்த்திகம்/ வார்த்தை= அம்புவிடுங் கலை, வாணிகம். தவிர, வார்தல்= ஒழுகல், வடிதல்; வார்த்தல்= ஒழுக்கல், ஊற்றல், வடித்தல். வார்த்தகம்= வடித்தபடியிருத்தல்; occupation பொருளுஞ் சொல்வர். (வாணிகம்/ வணிகம் போல்) வார்த்தகம்/ வர்த்தகம் என்பார். பெருக்கல் = வள(ர்)த்தல்> வள்த்தல் வடக்கே வர்த்தலாகி, வர்த்தமானமாகும். vardhamAna, vartam Ana. वर्धमान mfn. increasing, growing, thriving, prosperous. தவிர, வளருஞ்செயலால் vartamAna நிகழ்காலத்தையுங் குறிக்கும். :

அடுத்தது பண்டமாற்றில் (exchange) பயன்படும் ”பரிவட்டணை”.பெருங்கோயில் விழாச்சடங்கு முடிந்தபின் இறைவனருள் வழங்குமாப்போல், இறைத் திருமேனியைப் போர்த்திய ஆடையால், மண்டிகப்படி செய்தோர் தலையைச் சுற்றிப் பரிவட்டம் கட்டுவார். பரிதல்= சுற்றல், மாற்றாய்க் கொடுத்தல், வட்டணை= மண்டிலம். ஒரு மண்டிலம் முழுக்க விற்பனைப்பாதையைச் சுற்றிவந்து பரிமாற்றச் செயல்களுக்கு உறுதுணையாவது பரிவட்டணை யாகும். குமுகமெங்கும் ஒருவட்டம் போய்வந்தால் பல்வேறு பண்டங்கள் மாற்றுப்படும். தமிழ் வட்டணை சங்கதத்தில் வர்த்தனையாகும். பரிவட்டணை> பரிவர்த்தனை = exchange. தமிழருமை தெரியாதோர் வர்த்தணையைப் பிடித்துக்கொள்வார்.

அடுத்தது trade (n.) எனும் ஆங்கிலச்சொல் இற்றைத்தமிழில் இது தவறாகவும், மேலைமொழிகளில் சரியாகவும் பொருளாகிறது. late 14c.,"path, track, course of action," introduced by the Hanse merchants, from Middle Dutch or Middle Low German trade "track, course" (probably originally of a ship), cognate with Old English tredan (see tread (v.)) என்பார். பண்டமாற்றில் நடுநிற்கும் தரகென்று தமிழிற் சொன்னதால்,. தடகு*>தரகு எனும் முன்தோற்றத்தை விட்டுவிட்டோம். நாம் நெய்தல்நிலஞ் சேர்ந்தவர் என வையுங்கள். நம்முப்பை விற்றுத் தடகன் கொணர்ந்த நெல்லை வாங்குவோம். தடகன் அந்த உப்பைக் கொண்டுபோய்க் குறிஞ்சி, முல்லை, மருதத்தில் விற்பான். தடஞ்சார்ந்த வாணிகன்/சாத்தன் தடகன் ஆனான். தடகு, சாத்திற்கு ஒரு மாற்றுப் பெயர். பேச்சுவழக்கில் சிலபோது டகரம் ரகரமாவது இங்குமாயிற்று. அதனாலேயே இற்றைத்தமிழர்க்குச் சொல்புரியாது போனது. தரகைக் commission என்றே இன்று புரிந்துகொள்கிறோம். எந்தத் தமிழ் அகர முதலியும் தடகைப்பதியாது, (மூலந்தெரியாத, முதற்பொருள் அழிந்த) தரகையே பதிகிறது. (தரகிலிருந்தே தடகை இங்கு மீட்டுருவஞ் செய்தேன்.). .

அடுத்தது பரதரை/நுளையரை ஒட்டிப்பிறந்த பரத்து. பரத்தல்= ஒசையிடல். “ஓடியாங்க, ஒடியாங்க. வஞ்சிரம் 1 கிலோ 700 உருவா, இறால் 1 கிலோ 400 உருவா.... ” என்றெலாம் காசிமேட்டுக் கடற் கரையிற் கேட்கிறோமே, அது பரத்தல் தான். 14.208 ஊர்காண்காதை. சிலப்பதிகாரத்தில் “பறைக்கண் பராரையர்” என்றதொடருக்கு “பறையின்கண் ஓசையிடுவோர். பராரை= பரையும் அரை” என்று பொருள்சொல்வர். பரத்தற்பொருள் தெரியாவிடின், இது விளங்காது. ”மீன்விலைப் பரதவர்” என்று 5.25 இந்திரவிழவு ஊரெடுத்த காதை, சிலப்பதிகாரஞ் சொல்லும். கடலில் பரந்துசென்று மீன்பிடிப்போர் தாம் கொணர்ந்த கடல்தாரத்தைக் கரையிற் பரத்தி, பின் பரைந்து கூவி வாணிகஞ் செய்வார். எல்லா மீன்களையுயும் இவரே உண்ணமுடியாதாகையால், மீனை மற்றபண்டங்களுக்கு மாற்றுவார். பரத்தை ஆங்கிலத்தில் barter என்பார். ஒரு வேளை மீன்வாடையும் பேச்சும், பலருக்கும் ஒவ்வாமை தந்தது போலும். ஏது காரணத்தலோ barter க்கு ஏமாற்றுப் பொருளும் சொல்வர்..

பண்டமாற்றில் பண்டம் விடுத்து மாற்றெனினும் அதே பொருளுண்டு. வில்தல் எப்படி விற்றலையும், அம்புவிடுங் கலையையும் குறித்ததோ, அதுபோல் மால்தல்>மாற்றல் (மால்= நுளை, வலை) பண்ட மாற்றையும், மீன் பிடிப்பையுங் குறித்தது. மால்முடிதல்= வலைபின்னல். மாற்றல்/ மாற்றுகை/ மாறாட்டம்= பண்டமாற்று. மாற்றுகிறவன் மாற்றன்/ மாற்றகன் (merchant). மாற்றை= merchandise. மாற்றிற்கு விலைப்பொருளுஞ் சொல்வர். அண்மையில் பண்டமாற்றின் தொடர்பாய் ஐராவதம் மகாதேவன் ஒரு சிந்துவெளிக் குறியீடு சொல்லி, அதன்வழி மாறனெனும் பாண்டியன் குடும்பப்பெயரை விளக்குவார். அவ்விளக்கத்தை நான் ஒப்பாவிடினும், அவர் சொன்னதைக் குறிப்பிட வேண்டும். ஒருசாத்திற் செல்லும் வாணிகன், பல்வேறு பண்டங்களைக் குவித்து வண்டிகளிலெடுத்துப் ஊரூராய் மாற்றி வருகிறான். ஒவ்வோர் ஊரிலும், அவன் பண்டக்குவியல் மாறும். குவியலோடு அவன்செய்யும் மாற்றுவேலை இதனாலே குவிமாற்றாகும். ஆங்கிலத்தில் இதைக் commerce என்பார். ஆங்கிலச் சொற்பிறப்பியலார் இலத்தீன்வரை போய் அதற்குமேல் இச்சொல் தோற்றம் தெரியாதென்பார்.

மாலிற்பிறந்த மாற்றோடு மா(ல்)ங்கு / மா(ல்)ங்கர் (monger) எனுஞ் சொல்லும் உண்டு. இதைவிளங்க வினைச்சொல் அமைப்பைப் புரிந்துகொள்ளவேண்டும். தமிழில் வரும் ”ங்குச்” சொற்களை “lingering verbs" எனலாம். ஆங்கிலத்தின் present continuous போல் தோற்றினும் முற்றிலும் அப்படியில்லை. கீழே காட்டுக்களைப் பாருங்கள். "அசங்கல், அடங்கல், அணங்கல், அரங்கல், அலங்கல், இசங்கல், இடங்கல், இணங்கல், இயங்கல், இரங்கல், இலங்கல், இளங்கல், இறங்கல், உடங்கல், ,உணங்கல், உயங்கல், உலங்கல், உழங்கல், உறங்கல், கசங்கல், கரங்கல், கலங்கல்". இவற்றில் அங்குச் சாரியை நிற்கும். (இதுபோல் இங்கு/உங்கு/ங்குச் சாரியைகளுண்டு.) சாரியைகள் இல்லாமலும் தொடர்பான வினைச்சொற்களைப் பயில்கிறோம். மேற்சொன்னவற்றில் அங்குச்சாரியை விடுத்தால், ஊடே ஐகாரஞ் சேர்த்து, “அசைதல், அடைதல், அணைதல், அரைதல், அலைதல், இசைதல், இடைதல், இணைதல், இயைதல், இரைதல், ......., இளைதல், இறைதல், உடைதல், உணைதல், ....., உலைதல், உழைதல், உறைதல், கசைதல், கரைதல், கலைதல்” கிடைக்கும். [சொல் தெரியாது அல்லது இற்றைப்புழக்கமின்றி இடைவெளி காட்டினேன்.] இதுபோல் மற்ற ங்குவகைச் சொற்களும்/ இல்லாதவையும் உண்டு

மால்+து= மாற்றென்பது ங்குச்சாரியை இல்லாத சொல். இதில் ங்கு சேர்ந்தால், மால்+ங்கு= மா(ல்)ங்கு>மாங்கு ஆகும். ”மாங்கு” அகரமுதலிகளில் இல்லை. ஆனால் வழக்கிலுண்டு. “இவன் ஏன் மாங்கு மாங்கென அலைகிறான்?” ஒவ்வொரு பண்டமாற்றிற்கும் (மாங்கிற்கும்) ஒரு சாத்தன் அலைகிறான் அல்லவா?. மாங்கர்= மாற்றலைத் தொடந்து (lingering) செய்பவர். Old English mangere "merchant, trader, broker," from mangian "to traffic, trade," from Proto-Germanic *mangojan (source also of Old Saxon mangon, Old Norse mangari "monger, higgler"), from Latin mango (genitive mangonis) "dealer, trader, slave-dealer," related to mangonium "displaying of wares." Not in Watkins or de Vaan, but Buck (with Tucker) describes it as "one who adorns his wares to give them an appearance of greater value" and writes it is probably a loan-word based on Greek manganon "means of charming or bewitching." Used in combinations in English at least since 12c.; since 16c. chiefly with overtones of petty and disreputable (for example ballad-monger "inferior poet," 1590s).

அடுத்தது பகரல். எந்தச் சந்தைவிற்பனையிலும் அக்காலத்தில் வாங்குவோரைச் சத்தமாய் அழைத்து, ”என்ன அலகில் (எண்ணிக்கை/பருமன்/எடை) எவ்வளவு மதிப்பிற்குக் கொடுப்பது?” என்பதைப் பகருவர். பகர்தல்= விலைசொல்லல். பகர்ச்சி = விலை/price. பகர்வனர்= விற்போர். “பகர்வனர் திரிதரு நகர வீதியும்” என்பது 5.15. இந்திரவிழவு ஊரெடுத்த காதை, சிலப்பதிகாரம். இதேபோல் ”வெள்ளுப்புப் பகருநர்” என்பது 5.25. இந்திரவிழவு ஊரெடுத்த காதை. சிலப்பதிகாரம்.
.      
அடுத்தது வில்நர்= விற்கிறவர் (vendor) இச்சொற்பிறப்பை contraction of venumdare "offer for sale," from venum "for sale" (see venal) + dare "to give" (from PIE root *do- "to give") என்பர். இதேபோல் கூவி (hawk; "to sell in the open, peddle," late 15c., back-formation from hawker "itinerant vendor" (c. 1400), agent noun from Middle Low German höken "to peddle, carry on the back, squat," from Proto-Germanic *huk-. Related: Hawked; hawking. Despite the etymological connection with stooping under a burden on one's back, a hawker is technically distinguished from a peddler by use of a horse and cart or a van) விற்போரைக் கூவுகர் (hawker) என்பார். இதே சொல்லைக் கூவியர் என்று .5.24. இந்திரவிழவு ஊரெடுத்த காதை, சிலப்பதிகாரம் சொல்லும்.

அடுத்தது பீடிகை. நாட்டுப்புறங்களில் பெட்டிக்கடைகள் பார்த்திருக்கிறீர்களோ? அவை 3 சுவர், ஒரு முன்படல், ஒரு கூரை சேர்ன்ந்து செங்கல் திண்ணையில் அமைந்தனவாய்ப் பீடங்களில் அமையும். அந்தக்கால மாநகரங்களில் பெருங்கடைகள் பெட்டித்தோற்றங் கொள்ளாது. ஆனால் 4 கால்கள் கொண்டு ஆற்றோரங்களில் சதுப்பு நிலங்களின் மேல், வீதிமேட்டை ஒட்டினாற்போல் பீடம் போட்டு  அமைவது உண்டு. பீடிகைத்தெரு என்றதொரு பயன்பாடு 5.41. இந்திரவிழவு ஊரெடுத்த காதை. சிலப்பதிகாரத்தில் வரும். சிலம்பின் வண்ணிப்பிற்கு மேல் எழுத்தாளர் செயமோகன் தன் “கொற்றவை” புதினத்தில் கொடுத்திருப்பார். நம்மூர் திரைப்படங்களின் 1000 ஆண்டு விவரிப்பை விட, தமிழாசிரியர்களின் உண்மைக்குப் புறம்பான விவரிப்பை விட, இவரின் விவரிப்பு 2000 ஆண்டுக்கு முந்தைய உள்ளமை காட்டும். பூம்புகார் இப்படி இருந்திருக்குமா? - என்று வியப்போம். இன்றுங்கூட பெருநகரங்களில் பெருங்கட்டடங்களின் தரைத்தளம் பீடத்தில் தான் அமைகிறது. பீடிகை/பெட்டிகை = கடை. 

பீடிகை/பெட்டிகை போன்ற சிறப்பு இல்களிலிருந்து விற்கிறவர் பெட்டு+இல் = பெட்டில்>பெட்டிலர் (peddler; late 14c. (c. 1300 as a surname, Will. Le Pedelare), from peoddere, peddere (c. 1200, mid-12c. as a surname), of unknown origin. It has the appearance of an agent noun, but no corresponding verb is attested in Middle English. Perhaps a diminutive of ped "panier, basket," also of unknown origin, but this is attested only from late 14c. Pedlar, preferred spelling in U.K.,is attested from late 14c.) ஆவார்.

இருப்பதிலேயே மிகக் குறைந்தவர் தலையில் கூடையை வைத்துக் குடியிருப்புகளைச் சுற்றிச்சுற்றி வந்து விற்பவர் சுற்றாளர் (sutler; formerly also suttler, "person who follows an army to sell food to soldiers," 1580s, from Middle Dutch soeteler "small tradesman, peddler, victualer, camp cook" (Dutch zoetelaar), cognate with Middle Low German suteler, sudeler "person who performs dirty tasks," Middle High German sudelen "to cook badly," Middle Dutch soetelen "to cook badly." Probably also related to Dutch zieder, German sieden "to seethe," from Proto-Germanic *suth-, from PIE root *seut- "to seethe, boil".

அடுத்தது கொள்ளை/கொளுதை. பேச்சுவழக்கில் கொள்ளல் என்பது விலைக்கு வாங்கலைக் குறிக்கும். கொள்ளல்= to hold. கொள்ளுகை= act of holding. கொள்வோன்= வாங்குவோன். கொள்வினை/ கொடுப்பினை= கொடுக்கல் வாங்கல் கொள்வினை= procurement. கொள்முதல்= வாங்கின விலை. கொள்ளை= விலை. (costக்கு ஈடாய் இதைப் பாவிக்கலாமெனினும், iகாலமாற்றத்தில், இதன் பொருள் மாறிப் பொதுவழக்கில் பெருந்திருட்டு ஆகியது.) கொழுநன்= கொண்டவன். கொள்+ந்+து= கொண்டு. கொள்ளலுக்குப் பொறுதலென்றும் பொருளுண்டு. கொள்ளார்= பொறாதவர். ”இப்படி அடிமாட்டு விலைக்கு விற்கிறீரே? உமக்கு இது கொள்ளுமா? கட்டுபடியாகுமா?” என்கிறோம் இல்லையா? பொறுதற்பொருள் இதில் உறுதியாகவுண்டு, இதைக் cost ஆகப் புரிந்துகொள்ளலாம். கொள்ளையெனுங் கெட்ட பொருளன்றி மாற்றிச்சொல்லுங் கட்டாயம் இப்போது வருகிறது. கொளு= செய்யுட் கருத்தை விளக்கும் சொற்றொடர். கொளுத்தல்/ கொளுவுதல்= கொள்ளச் செய்தல். கொளுத்தற் தொடர்பாய்க் கொளுதையைக் cost இற்கு ஈடாய்ச் சில காலம் பயனுறுத்தி வருகிறேன். . 

மேலே பல்வேறு சொற்களுக்குப் பிறப்பும் விளக்கமுஞ் சொன்னேன். இவற்றில் பலவும் தமிழரிடம் புழங்கியுள்ளன. சில்வற்றிற்கு இயலுமைகள் உள்ளன. ஏனெனில் தமிழ்மூலங் காட்டுகிறது. வாணிகம் என்பது தமிழரிடம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. குறைந்தது 2600 ஆண்டுகளாவது இந்தப் புழக்கம் இருந்திருக்கிறது. பலகாலம் சொல்லியிருக்கிறேன். சங்கப்பாடல்களில் பாதிப்பாடல்கள் பாலைப் பாடல்கள். அவற்றில் பலவும் இராயலசீமை கடந்து வடக்கே போனதைக் குறிக்கும் பாடல்கள் தாம். இந்திய வரலாற்றை ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், இந்தக்காலத்தில் ஆங்கிலம் இருப்பது போல் அந்தக்கால வணிக மொழி தமிழ் தான். வேறொரு தலைப்பில் உரையாடலைத் தொடர்வோம். ”சாத்தன்” தொடர் இப்போதைக்கு முடிந்தது. (இத்தொடரில் வாணிகத்தையும், பண்டம் பண்ணுவதையும் (பண்ணிகம்>பணிகம்>வணிகம்) சேர்த்தமையும் பொதினம் (business), மாறுகடை (market) போன்ற இன்னும் பல சொற்களைச் சொல்லவில்லை. அவற்றை வேறு கட்டுரையில் பார்ப்போம்.)


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard