New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சமஸ்கிருதத்தில் கொக்கோக நூல்கள் எழுதப்படல் – “ராதா-கிருஷ்ண ” தத்துவத்தைக் கொச்சைப்படுத்திய


Guru

Status: Offline
Posts: 19564
Date:
சமஸ்கிருதத்தில் கொக்கோக நூல்கள் எழுதப்படல் – “ராதா-கிருஷ்ண ” தத்துவத்தைக் கொச்சைப்படுத்திய
Permalink  
 


 சமஸ்கிருதத்தில் கொக்கோக நூல்கள் எழுதப்படல் – “ராதா-கிருஷ்ண ” தத்துவத்தைக் கொச்சைப்படுத்தியது, ஆபாசப்படுத்தியது.

சமஸ்கிருதத்தில் கொக்கோக நூல்கள் எழுதப்படல்  “ராதாகிருஷ்ண   தத்துவத்தைக் கொச்சைப்படுத்தியதுஆபாசப்படுத்தியது.

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (11)].

Sati, Jauhar - committed by Hindu women

Sati, Jauhar – committed by Hindu women

ஹேரத்திலிருந்து விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட பெண்கள்: தூக்கிவரப்பட்ட பெண்கள், அடிமைப் பெண்கள், போலித்தனமாக திருமணம் செய்து கொண்டு கொண்டுவரப்பட்ட பெண்கள் என்று ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்கள் இவ்வாறு சீரழிந்தபோது, அவர்கள் விபச்சாரிகளாகவும் மாற்றப்பட்டனர் / மாறினர். நடனமாட, பாட, மது ஊற்றிக் கொடுக்க, பலவித சேவகங்கள் செய்ய பெண்கள் பணிக்கு அமர்த்தப் பட்டனர். அதுமட்டுமல்லாது, ஹேரத்தில் உள்ள பெண்களைப் பாதுகாக்க, அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்ய, அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளை வளர்க்க பல பணிபெண்கள் தேவைப்பட்டனர். இவ்வாறு பெண்கள் பெருக-பெருக விபச்சாரமும் வளர்ந்தது. அல்லாவுத்தீன் கில்ஜி (1296-1316) காலத்தில் இந்தந்த விபச்சாரிகளுக்கு இந்தவிலை என்று வைக்கப்பட்டு[1] விபச்சாரம் மிகக்கேவலமான நிலையை அடைந்தது.  அரண்மனை, ஹேரம் முதலிய இடங்களில் பணியில் அமர்த்தப்பட்ட பெண்கள் சேவையுடன் தங்களது உடம்புகளையும் கொடுத்தனர்.

Akbar, Pancha mahal, harem

Akbar, Pancha mahal, harem

முகலாயர் காலத்தில் ஹேரத்தின் நிலை: அக்பர் காலத்தில் பதேபூர் சிக்கிரியின் வெளியே விபச்சாரிகளுக்கு அதிகாரிகளின் நிர்வாகத்துடன் காலனிகள் இருந்தன. விபச்சாரிகள் பதிவு செய்து கொண்டு அங்கு இருக்க வேண்டும். அதாவது, அவர் காலத்தில் விபச்சாரம் அந்த அளவுக்கு நிர்வாகத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. “பஞ்ச மஹால்” என்ற ஐந்து அடுக்குக் கொண்ட மாளிகைக்கு அருகில் ஹேரம் இருந்தது, அங்கு அக்பர் உல்லாசமாக இருந்தார் என்று அவரது அரசவை எழுத்தாளர்களின் நூல்களில் விளக்கப்பட்டுள்ளது. ஷாஜஹான் ஒரு “உல்லாசி” ஆனதால், விபச்சாரிகளுக்கு மிகுந்த சுதந்திரம் இருந்ததால், அவர்கள் நகரங்களில் அதிக அளவில் காணப்பட்டனர். ஔரங்சீப் நடனத்தை தடை செய்தாலும், புதன்கிழமை அன்று “ஆம்காஸ்”ஸுக்கு வருவதைத் தடுக்கவில்லை[2]. பெண்களில் கூட முகமதிய பெண்கள், மதம் மாறிய பெண்கள், இந்து பெண்கள் என்று வகைப்படுத்தப் பட்டு பாரபட்சம் கடைபிடிக்கப்பட்டது. காபிர் பெண்கள் பலருடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தப்பட்டது. ஒருவேளை, அவர்களை மாதிரியாக வைத்து சித்திரங்களைத் தீட்டினார்கள் போலும்!

queen_padmini_commits_sati_jauhar

queen_padmini_commits_sati_jauhar

12-17ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பெண்களின் நிலை: பொதுவாக இந்தியாவில் 12-17ம் நூற்றாண்டுகளில் முகமதியர்களின் அதிரடி உள்நுழைதல், கொள்ளை, படையெடுப்பு முதலிய வரம்புமீறிய செயல்களினால் சமூகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக முகமதிய கொள்ளைக்காரர்கள், ராணுவ வீரர்கள் முதலியோர் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், திடீரென்று நூற்றுக்கணக்காணவர்கள் குதிரைகளில் வந்து தாக்கிக் கொள்ளையிட்டு ஓடி மறைந்து விடுவதால், அதிகமான பீதி, பயங்கரம், அபாயகரமான நிலைதான் இருந்தது. அவர்கள் திரும்பிச் செல்லும் போது, சில பெண்களையும் அபகரித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தியப்பெண்களின் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. கோரி-கஜினிகளின் அத்தகைய குரூரக் கொள்ளைகளுக்குப் பின்னர், கில்ஜியில் அடக்குமுறை ஆரம்பித்தது. தில்லியில் ஆட்சி ஸ்திரமாக இருந்தாலும், கத்தியின் மூலம் இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என்ற கொள்கையினைக் கொண்டவனாக இருந்தான். 1341ல் இவனது ஆணையால் மாலிக்காபூர் தென்னிதியாவின் மீது படையெடுத்து, கோவில்களைக் கொள்ளையிட்டுத் திரும்பினான். அல்லாவுத்தீன் கில்ஜியோ பெரிய காமுகனாக இருந்தான். அழகியப் பெண்களைத் தூக்கிச் சென்று ஹேரம் எனப்படுகின்ற அந்தப்புரத்தில் வைத்துக் கொண்டான். பல பெண்களை எப்படி இன்பம் தூய்ப்பது என்பதுதான் அவனது ஆராய்ச்சியாக இருந்தது. இந்துக்களிடம் “பெண்ணின்பம்” அடைய நூல்கள் இருக்கின்றன என்று தவறுதலாக அறிந்து கொண்டு, அவற்றைத் தேடிப்பார்த்தான். கிடைக்காததால், பல நூல்களை அழித்தான். பிறகு, பண்டிதர்களைப் பிடித்து வந்து, அவர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய நூல்களை எழுதச் சொன்னான். அவ்வாறு தோன்றியவை தான் ஆனந்த ரங்கா, அனந்த ரங்கா முதலிய கொக்கோக நூல்களாகும். முகலாயர்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் ஹேரம் நிலையான அமைப்பாக இருந்ததால், அந்நிலை தொடர்ந்தது. முகலாயர் காலத்திலும் இது தொடர்ந்தது.

slave-market -Jean-Lean Gerome

slave-market -Jean-Lean Gerome

அலாவுத்தீன் கில்ஜி – சதி, ஜோஹர் போன்றவற்றில் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல்: அலாவுத்தீன் கில்ஜியால் ராஜபுதன பெண்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர். அவர்கள் முகமதிய கொடுங்கோலர்களிடமிருந்து தங்களது மானத்தை, கற்ப்பைக் காத்துக் கொள்ள, ஒட்டு மொத்தமாக தீக்குளித்து இறந்தனர். அம்முறை “ஜோஹர் / ஜௌஹர்” எனப்பட்டது. அழகான இளம்பெண்கள் எப்படி தீக்குண்டத்தில் பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொள்வது, உடல்கள் கருங்கட்டைகளாக, எலும்புகளாக மாறுவது கண்டு முகமதியர்கள் திகைத்தனர்.  மனரீதியில் அவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கணவனுக்காக உயிர்விட்ட மனைவி சதியாக, சதிக்கடவுளாக மாற்றப்பட்டாள்.  இப்பெண்கள் உயிர் விட்ட இடங்கள், அவர்களது அஸ்தி-எலும்புகள் புதைக்கப்பட்ட இடங்கள் மற்றும் தீக்குண்டங்கள் முதலியனவும் புனித இடங்களாக மாறின.  ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டு நினைவு நாட்களில் மக்கள் லட்சக்கணக்கில் அங்கு வந்து சிரார்த்தம் / அஞ்சலி செய்தனர். இவ்வாறு முகமதியர் காலத்தில் காமத்திற்கு இலக்கான பெண்கள், தெய்வமாக்கப்பட்டார்கள், தெவீகச் சின்னங்களாக மாற்றப்பட்டார்கள்.

Jauhar, padmini

Jauhar, padmini

கொக்கோக ஓவியங்களும்ராதாவும்: முகலாயர்களின், முகமதியர்களின் காலத்தில் திடீரென்று ராதா-கிருஷ்ண ஜோடி பிரசித்தமாகி, ஓவியங்களில் காணப்பட்டன. மஹாபாரதத்தில் ராதா என்ற கோபி கிருஷ்ணரிடம் பக்தி கொண்டவளாக இருக்கிறாள். பிறகு தான் ஜெயதேவரின் கீதகோவிந்தம் என்ற கவிதையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு கிருஷ்ணரின் காதலியாக, வணங்கப்படும் கடவுளாக, மஹாலக்ஷ்மியாக (விஷ்ணுபத்னி), தாட்சாயிணியாக மாற்றப்படுகிறாள். பத்தாவது நூற்றாண்டு வரை கொக்கோக நூல்களில் “ராதா” காணப்படவில்லை. ஒருவேளை ஜெயதேவர் அல்லது வேறொருவர் அத்தகைய பாத்திரத்தை பாகவப் புராணத்தில் சேர்த்திருக்க வேண்டும் மாற்றும் அதற்கான பாடல்களை இடைச்செருகலாக கூட்டியிருக்கவேண்டும். அத்தகைய, புகுத்தப்பட்ட பாத்திரமான ராதா, கிருஷ்ணர் மீது அளவுகடந்த காம இச்சையைக் கொண்டாள், உடலிச்சையோடு புணர காத்திருந்தாள் போன்ற விவரங்கள், நிச்சயமாக ஆன்மீக விளக்கங்களுக்கு ஏற்புடையாத இல்லை.  உண்மையில் ராதா, அயன கோஷா என்ற இடைக்குலத்தவன் மனைவி[3]. சித்திரிக்கப்படுகிறது. மேலும் பாகவத புராணத்தின் 10வது காண்டத்தில், இத்தகைய விவரங்கள் வருகின்றன. ஆராய்ச்சியாளர்கள் அதில் இடைச்செருகல்கள் அதிகமாக உள்ளன என்று எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. 16வது நூற்றாண்டிற்கு முன்னர் வடவிந்தியாவில் ராதாவுக்கு கோவிலும் இல்லை.

 

Mughal manipulation of Radha-krishna tatva

Mughal manipulation of Radha-krishna tatva

ராதாராதாகிருஷ்ணமாபெரும் பெண்தெய்வமாக மாறியவிதம்: இந்துப் பெண்கள் இவ்விதமாக பலவழிகளில் தாக்குதல்களுக்கு உள்ளானதால், அவர்களைக் காக்க, சதி மற்றும் ஜோஹர் முறைகளில் உயிரைத் தியாகம் செய்த பெண்களை தெய்வமாக்கினர். அவர்கள் உயிர்நீத்த இடங்களே புண்ணியசேத்திரங்களாக மாறின, அங்கு அவர்கள் நினைவாக கோவில்களும் கட்டப்பட்டன. வைஷ்ணவம் திடீரென்று வளர்ந்த நிலையில், கிருஷ்ணருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் ராதாவழிபாடு அறிமுகப்படுத்தப்பட்டது. ராதா (राधा), ராதிகா, ராதாராணி, ராதிகாராணி, ராதாசக்தி என்றெல்லாம் வழங்கப்படும் பெண்கடவுள், ஜெயதேவர் (12ம் நூற்றாண்டு CE), நிம்பர்க்க (13ம் நூற்றாண்டு CE), வல்லபர் (1479-1531 CE), கௌடிய, சைதன்ய (1486–1534 CE) சம்பிரதாயங்களில் ஒரு பெரிய முழுமுதல் பெண் கடவுளாக, மாபெரும் சக்திரூபமாக பாவிக்கப்பட்டது. ராதா மிகமுக்கிய, பெரிய, மஹாசக்தியாக ஸ்கந்தபுராணத்தில் குறிப்பிடப்படுகின்றது. கோபி, கோபிகா, கோபிகை என்றால் இடையர்குலப்பெண் என்று பொருள். பக்தி இலக்கியத்தின்படி, ராதா என்ற கோபிகை கிருஷ்ணரிடம் மிக அதிகமான பக்தியை வைத்திருந்தாள். அந்நிலையில் தான் ராதா கிருஷ்ண (राधा कृष्ण) என்ற நம்பிக்கை, வழிபாடு, தத்துவம் தோன்றியது. கிருஷ்ணருடன் இருநிலைகளில் மனைவியாக (ஸ்வக்ய ரஸா) மற்றும் காதலியாக (பரக்கிய ரஸா) சித்திரிக்கப்பட்டது. இத்தகைய மாறுபாடு விசித்திரமாக இருக்கிறது, ஏனெனில், ராதை, கிருஷ்ணனைவிட வயதில் பெரியவள் மற்றும் பக்தி வெறெந்த உணர்வுடன் ஒப்பிட முடியாது என்றுள்ளது. அந்நிலையில் இத்தகைய “நாயக-நாயகி” பாவத்தில் பக்தி மூலம் பெண்மையை தெய்வமாக, சக்தியாக இடைக்காலத்தில் மாற்ற வேண்டிய தேவை என்ன என்று ஆராயவேண்டியுள்ளது. உண்மையில் முகமதியர்களால் சீரழிந்த பெண்கள் மறுபடியும் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையில், அவர்கள் ஹேரத்திற்கு செல்வதற்கு பதிலாக கோபிகைகளாக பிருந்தாவனத்தில் இருக்க பெண்கள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன.

Radha Krishna depicted in lewd pose

Radha Krishna depicted in lewd pose

ராதாசக்தி பெண்களைக் காக்கும் தெய்வமாக மாறியது: 12ம் நூற்றாண்டில் ஜெயதேவர் என்பவர், “கீத கோவிந்த” (गीत गोविन्द) என்ற சுலோகத்தில் பக்தியை விவரித்துள்ளார். பக்தர்கள் “ராதாராணி” என்று குறிப்பிட்டு, அந்த தத்துவத்தை மிகவுயர்ந்த சக்தியாக வழிபட்டனர். “ராதாசக்தி” என்பதனைய தலைச்சிறந்த சக்தியாக பாவித்து தெய்வமாக வழிபட்டனர். நிம்பர்க்கர் சம்பிரதாயம் (13ம் நூற்றாண்டு CE) அவ்வாறு ராதை வழிபாட்டை தெய்வீகமாக மாற்றியது. நிம்பர்க்கர், ஶ்ரீ நிம்பர்க்க ஆச்சாரியர் 3096 BCEம் ஆண்டு (பாரம்பரிய தேதி) ஆந்திராவில் பிறந்தவர். இவர் காலத்தில் அர்ஜுனனின் பெயரன் இருந்தான். “மாதவ முக மர்த்தன” என்ற நூலை இயற்றியுள்ளார்.  ஆனால் 1162ம் ஆண்டு இவர் மறைந்தார் என்று பண்டார்கர் எடுத்துக் காட்டுகிறார்[5]. ராதா பிறந்த நாளை “ராதாஷ்டமி” என்று வடவிந்தியாவில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. கோடிக்கணக்கில் பக்தர்கள் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். லட்சக்கணக்கில் பக்தர்கள், ராதைப் பிறந்த இடத்திற்கு தீர்த்தயாத்திரையாக சென்று வந்தார்கள். இது கிருஷ்ணரின் பிறந்தநாளாகிய ஜன்மாஷ்டமியிலிருந்து 15 நாட்கள் கழித்து கொண்டாடப்பட்டது. இவ்வாறு 12-17 நூற்றாண்டுகளில் பெண்களை தெய்வமாக மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இத்தகைய முறைகளில் இந்துக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வரும்போது, முகமதியர்கள் அவர்களைத் தாக்க முடியாமல் போயிற்று. இந்துபெண்களுக்கும் பாதுகாப்பு கிடைத்தது. இதனால், ஜெசியா போன்ற தீர்த்தயாத்திரையின் மீது விதிக்கப்பட்ட வரியின் மீதும் இந்துக்களுக்கு வெறுப்பு உண்டாகியது. கூட்டம்-கூட்டமாக சென்று வரும்போது, அவர்கள் தடுக்கப்பட்டால், விளைவு என்னாகும் என்று அவ்வரி விலக்கிக் கொள்ளப்பட்டது.

வேதபிரகாஷ்

© 25-06-2015

[1] Abraham Eraly, The Mughal World: Life in India’s Last Golden Age, Penguin, New Delhi, 2007, p.120

[2]  Abraham Eraly, The Mughal World, Penguin, New Delhi,

[3]  S. N. Sadasivan, A Social History of Inda, A. P. H. Publishing Corporation, New Delhi, 2000, p.175.

[4] Ram Gupta and Kenneth Valpay (ED.), The Bhagavata Purana: Sacred Text and Living Tradition, Columbia University Press, USA, 2013, p.80, 198.

[5] R.G.Bhandarkar, Vaisnavism, Saivaism and minor Religious system, Indological Book House, Varanasi, page 62-63.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard