New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Kural Manu Gita


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Kural Manu Gita
Permalink  
 


 விவசாயி தன் வயலில் உள்ள நற்பயிரைக் காக்கவே களைகள் எடுக்கப்படுகின்றன. அதேபோல் மன்னன் தன் நாட்டில் உள்ள நல்ல மக்களைக் காக்கக் குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் வழங்கி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை,

³பயிரிடுகிறவன் பயிருடனுண்டான புல்லு முதலானவற்றைப் பிடுங்கிவிட்டு பயிர்களைக் காப்பாற்றுகிறாப் போல் அரசன் தன் தேசத்திலுண்டான துட்டர்களைத் துரத்திவிட்டு நல்லோர்களைக் காப்பாற்ற வேண்டியது´ (மனு ± 7 : 110) என்று மனு குறிப்பிடுகின்றது.

இதே போல் வள்ளுவரும்,

³கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

 களைகட் டதனோடு நேர்´ (குறள் - 550)                    என்று குறிப்பிடுகின்றார். இதனைக் ³கொடிய குற்றங்களைச் செய்தவர்களைக் கொலைத் தண்டனையால் அரசு ஒறுத்தல் வளரும் பயிரைக் காப்பதற்காகக் களைகளைக் களைவதற்கு நிகரானதாகும். சமுதாயம் என்ற பயிரைக் காக்கக் குற்றவாளிகள் என்ற களைகள் நீக்கப்பட வேண்டும்´ என்று கு.ச. ஆனந்தன் குறிப்பிடுகின்றார். 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 போர் செய்வதில் அறம் :

 போர் செய்யும் காலத்தில் மன்னர்கள் அறத்தைக் கடைப்பிடித்துப் போர் செய்துள்ளனர். சண்டை போடுவதிலும் ஒரு நேர்மை வேண்டும் என்பதைப் போல அக்கால மன்னர்கள் அறத்தைக் கடைப்படித்தனர். ³சிறுவர், மெலியார், தூயர் முதலியோரைக் கொல்லாமையும், பொருதும் நிலையற்றவன், தோற்றோடுபவன் முதலியாரோடு பொருதாமையும், அடைக்கலம் புகுந்தவனைக் கைவிடாமையும் போர் அறங்களாகப் பின்பற்றப்பட்டன´ என்று ஞா. தேவநேயன் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு போரிலும் அறத்தைப் பின்பற்ற வேண்டிய அறநெறிகளை மனு வலியுறுத்துகின்றார். அவை ³படைக்கலன்களை ஒன்றைப் போல் மற்றொன்றை உருமாற்றிக் காட்டியும், சல்லடை அம்புகள், நஞ்சுதோய்ந்த சரங்கள், தீயிற் காய்ச்சியவை, இவற்றால் பகைவரைக் கோறலாகாது. தேரைவிட்டுக் கீழே இறங்கியவன், பேடி, தன்னைத் தஞ்சம் புகுந்தவன், சிகை விரித்தவன், உட்கார்ந்திருப்பவன், கைதொழுது நிற்பவன் இவர்களைக் கொல்லக்கூடாது. உறங்குவோன், மகிழ்ச்சியற்றவன், ஆடையில்லாதவன், நிராயுதன், எதிர்த்து நிற்காதவன், சண்டையைப் பார்ப்பவன், பிறனுடன் பொருது நிற்பவன் இவர்களையும் கொல்லக் கூடாது. படைக்கலமொடிந்தவன், பிள்ளை இறந்து சோகமுற்றவன், நைய அடியுண்டு கிடப்பவன், அஞ்சினோன் புறங்கொடுத்து ஓடுகிறவன் இவர்களையும் கொல்லக் கூடாது என்பது மேலோர் விதித்த தருமமாகும்´ (மனு± 7 : 90 ± 93)  என்று மனுதருமம் போர் தருமத்தைப் பற்றி வரையறுக்கின்றது.

 போரில் தன்னை எதிர்த்துப் போரிடுபவனை மட்டுமே தாக்க வேண்டும் என்ற அறத்தைப் போற்றுகின்றது மனுதருமம். போர் அறம் என்று மனு மேலே கூறிய பட்டியல்களை வள்ளுவர் குறிப்பிடவில்லை. ஆனால் அறப்போர் செய்யும் அரசன் மாற்றான் வலிமை இழந்து நிற்கும் போது, அவரை வெல்லுதல் சிறந்த மன்னனுக்கு அழகன்று என்பதை,

³பேராண்மை என்ப தறுகணொன் றுந்தக்கால்

 ஊராண்மை மற்றதன் எஃகு´ (குறள் - 773)

என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். வலிமையோடு போர் செய்தல் ஆண்மையாயினும், மாற்றரசனுக்கு குறைவு வந்தவிடத்து அவன்மீது இரக்கம் கொண்டு அன்பு பாராட்டுவதே வீரமாகும். இவ்வாறு இரு அறநூலாரும் போர் முறை பற்றிக் கூறுகின்ற முறை வேறுபட்டாலும் கருத்து ஒற்றுமை உடையதாகத் தான் உள்ளது. தன்னை நேராக நின்று போர் செய்பவனை மட்டுமே போரிட்டு வெல்ல வேண்டும் என்ற கருத்தை இருவருமே முன்வைப்பதை அறிய முடிகின்றது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 முறை செய்தல் :

 முறை செய்தல் மன்னனின் முக்கிய அறமாகக் கருதப்பட்டது. செய்த குற்றத்தையும், குணத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து நீதி வழங்குவதே முறை செய்தல் ஆகும். இதனைச் செங்கோன்மை என்றும் கூறுவர். இச்செங்கோலே அறம் என்று கூறுவர். இச்செங்கோலே அறம் என்றும் கூறப்படுகின்றது. ³குடிமக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாப்பது அறம் எனப்பட்டது. அறத்தைப் பாதுகாப்பது அரசனது கடமை ஆகும்´

என்று மா. இராச மாணிக்கனார்

எடுத்துரைக்கின்றார். இதனை மனு, ³உயிர்கள் அனைத்தையும் புரக்கும் பொருட்டு அறத்தின் வடிவமானதும், ஒளிபொருந்தியதுமான செங்கோலைப் பிரமன் படைத்தான்´ (மனு ± 7 : 14) என்று எடுத்துரைக்கின்றது.

செங்கோல் எல்லா மக்களையும் ஆணையிட்டுக் காக்கின்றது. இதனால் அறமே செங்கோல் என்பதை,  ³தண்டமானது எல்லாப் பிரசைகளையும் ஆஞ்ஞை செய்கிறது. எல்லாரையும் காப்பாற்றுகிறது. தூங்குகின்றவர்களிடத்தில் விழித்துக்கொண்டிருக்கிறது. ஆகையால் தருமத்தையே தண்டமாகப் பெரியோர்கள் கருதுகிறார்கள்´ (மனு ± 7 : 18) என்று மனு எடுத்துரைக்கின்றது. மேலும்,

´செங்கோல் செலுத்தும் நாட்டில் கருத்த மேனியும் சிவந்த கண்களுமுடைய, பாவத்தைப் போக்குவதுமான தண்டநீதியாகிய தெய்வம் சஞ்சரிக்கிறது. ஆதலால் அங்கு வாழும் மக்கள் துயருறார்.´ (மனு ± 7 : 25) இவ்வாறு தண்டநீதி செலுத்தப்பட்டால் குடிகள் இன்புறுவர், கோல் சாய்ந்தால் யாவும் அழிவடையும் என்று மனுநீதி மன்னனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி ஆரியக் கடவுளான திருமாலை உட்புகுத்துவதை அறிய முடிகின்றது.

 கடவுளின் பெயரில் மன்னனை உயர்த்தி அவர்களை முட்டாள்களாக்கி, அவர்களின் மூலம் தானங்களையும், தருமங்களையும் பெற்றனர் என்பதைப் பல குறிப்புகளால் அறிய முடிந்தது.

 திருக்குறளில் செங்கோன்மை என்ற அதிகாரம் இடம் பெற்றுள்ளது. அவற்றில் யாரிடத்தும் கண்ணோடாது நடுவு நிலைமையுடன் ஆட்சி புரிவதே செங்கோன்மை என்பதை,

³ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்

 தேர்ந்துசெய் வஃதே முறை´ (குறள் - 541)

என்று வள்ளுவர் கூறுகின்றார். இதே போன்று கலித்தொகைப் பாடலில் முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்´ என்று கூறப்படுகிறது. மேலும், வள்ளுவர்

³அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

 நின்றது மன்னவன் கோல்´ (குறள் - 543)

என்றும் சுட்டியுள்ளார். மேலும் மன்னனுக்கு வெற்றியைத் தருவது அவன் எரியும் வேலன்று, மன்னவனின் செங்கோலே வெற்றியைத் தருகிறது என்பதை, ³வேலன்று வென்றி தருவது மன்னவன்

 கோலதூஉங் கோடா தெனின்´ (குறள் - 546)      என்று விளக்குகின்றார். ஆதலால் அரசனுக்கு வெற்றி அளிப்பது செங்கோலே ஆகும். அறமே செங்கோல் என்று மனுநீதியும், அறத்திற்கு அடிப்படையாய் அமைவது செங்கோல் என்று வள்ளுவரும் கூறியிருப்பது நோக்குதற்குரியதாகும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 1:4 அறத்தின் வகைகள்

-----------------------------

􀄻

அறம்

----------------------------------------------------------------------------------------------------------------

􀄻 􀄻 􀄻 􀄻 􀄻

தனிமனித அறம்

குடும்பஅறம்

சமுதாய அறம்

சமயஅறம்

அரசியல்அறம் 

என அறம் ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டு விவரிக்கப்படுகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தனிமனித அறம்

 1. உள்ளத்தூய்மை

2. அன்பு செலுத்துதல்

3. புலனடக்கம்

4. பொய்யுரை கூறாமை

5. இனிய மொழி கூறல்

6. கள்ளுண்ணாமை

7. உயிர்க்கொலை செய்யாமை

8. காமம்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 மனுதருமத்தில் 􀂳மனம், மொழிகளால் பொய் கூறாமல், விருப்பு வெறுப்பைக் கொள்ளாமல், தூய்மையுடன் அடங்கி நிற்போன் வேதம் விதித்த மேன்மைகளை அடைவான் (மனு 􀂱 2 : 160) என்று குறிப்பிடுகின்றது. மேலும் 􀂳காம எண்ணம் இன்றியே கனவு ஒழுக்கம் நேர வேண்டும􀂴; (மனு 􀂱 2 : 181) அதாவது கனவில் கூட காம எண்ணம் தோன்றுதல் தவறு. அது அறமான செயல் இல்லை என்பதை மனு வலியுறுத்துகின்றார்.

எல்லா நலங்களும் மனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகினற் ன. மனிதனுடைய எண்ணத்தின் எழுச்சிக்கு நிலைக்களனாக உள்ள மனம ; மாசு இல்லாதவையாகத் தூய்மையுடன் இருக்க வேண்டும். மனம் மாசற்ற தூய்மையாக இருக்கும் நிலையே அறம் எனப்படுகிறது. உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்கிறார் பாரதியார். உள்ளத்தில் உண்மை வேண்டும். தூய்மை வேண்டும். மாசற்ற தன்மை வேண்டும் என்பதை,

􀂳மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற􀂴 (குறள் - 34)

என்று திருக்குறள் எடுத்துரைக்கிறது. மனத்தின்கண் மாசற்ற தன்மையே சிறந்த அறமாகும். இது வள்ளுவர் கூறும் அறத்தின் முதல் நிலையாகும். மேலும் மனத்தின் மாசைப் போக்க வேண்டுமானால் மனத்தில் பொறாமை உணர்வு, அவா, வெகுளி ஆகிய தீய உணர்ச்சிகள் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வுணர்ச்சிகளின் உந்துதலால்தான் மனிதன் தன் நிலையிலிருந்து தடுமாறுகிறான். அந்தத் தடுமாற்றத்தைக் குறைக்க மனிதன் தன் நிலையிலிருந்து மாறுபடாமல் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை நீக்க வேண்டும். இதனை, 

􀂳அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம􀂴; (குறள் : 35)                 என்ற குறள் மூலம் எடுத்துரைக்கின்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 புலனடக்கம் :

மனம், மொழி, மெய் ஆகியவற்றை மனிதன் காத்தல் வேண்டும.; ஐம்புலன்களை அடக்கி அதனைத் தீய வழியில் செல்ல விடாமல், நன்னெறியில் செலுத்துவது தன்னடக்கமாகும். மேலும் புகழ்ச்சியைக் கண்டு மயங்குவதும், பிறர் பழி கூறினால் அதற்காக வருந்துவதும் கூடாது. மனிதன் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். தன்னடக்கத்தோடு இருந்தால் மட்டுமே நினைத்ததைச் சாதிக்க முடியும். உயிர்க்கு ஆக்கம் தருவது கூட அடக்கம்தான ; என்பதனை வள்ளுவர்,

􀂳காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு􀂴 (குறள் - 122)          என்றும்,

􀂳அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும􀂴; (குறள் - 121)

என்றும் குறிப்பிடுகின்றார். அடக்கமாகிய அறம் ஒருவனைத் தேவலோகத்திற்குச் செல்லுவதற்கும் வழி வகுக்கும். அதே சமயத்தில் தன்னடக்கம் இல்லாமல் இருந்தால் பாவம் தங்குதற்கு இடமாகிய இருளின்கண் செலுத்திவிடும் என்று வள்ளுவர் எடுத்துரைக்கின்றார். மேலும் மனு 􀂳பாகன் தனது தேர்ப் பரிகளை வசக்கிச் செலுத்துவது போன்று சப்தாதி அனுபவங்களின் மூலம் விஷய சுகத்தை நாடியலையும் மனக் குதிரையை அடக்கி வசப்படுத்த அறிவுடையோh ; முயல வேண்டும்􀂴 (மனு 􀂱 2 : 88) என்று குறிப்பிடுகின்றார். மனதை அலைய விடாமல் தன் கட்டுக்குள் வைத்திருப்பவன் அறிவாளி என்பதை எடுத்துரைகின்றார். இக்கருத்தினைப் புத்தரும், 􀂳அம்பை நேராக நிமிர்த்துபவர் வில்லாளிகள், மரத்தில் சாத்திரங்கள் பொறிப்பவர் தச்சர், தம்மைத்தாமே அடக்கி ஆள்பவர் அறிஞர்􀂴􀀖􀀚 என்று, தன்னைத்தானே அடக்கி ஆள்பவரை அறிவுடையோர் என்று போற்றுகின்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

􀂳பரம்பொருள் எல்லாப் பொருள்களையும் ஐவினைகளில் இயங்கச் செய்து, முன்பு செய்த வினைகளுக்கேற்ப மறுபிறப்புக்களை அவற்றிற்கு விதித்து, அவ்விதமே பிறந்து வளர்ந்து மாய்ந்தும், பின்னர் முக்தி நிலை பெறும்வரை வண்டிச் சக்கரம் போல் நில்லாது சுழன்றும்வரச் செய்கிறார்􀂴 (மனு 􀂱 12 : 124) என்று மனுதருமத்தில் கூறப்படுகின்றன. மனிதன் செய்கின்ற தீவினைகளுக்கு ஏற்ப அவன் அடையும் மறுபிறப்புக்களைப் பற்றி மனுதருமம் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இதனை, செய்த வினை - அடையும் மறுபிறப்பு

􀂾􀀃 பிரம்மஹத்தி - நாய், பன்றி, கழுதை, அட்டை, பசு, ஆடு, சிங்கம், பறவை, சண்டாளன், புற்கசன ;

􀂾􀀃 கள்ளுண்ட அந்தணன் - புழு, உலண்டு, விளக்கணை ப+ச்சி, மலப்ப+ச்சி, பறவை, புலி

􀂾􀀃 பொன் களவாடியவன் - சிலந்திப்ப+ச்சி, பாம்பு, கரட்டோணான், நீர்வாழ்பிறவிகள், கொலை விருப்புள்ள பிசாசுகள்

􀂾􀀃 குரு மனைவியைக் கூடியவன் - புல், புதர், கொடி, மாமிசம் தின்னிக் கழுகு, கொல்புலி

􀂾􀀃 பிராமணனை இம்சை செய்வோர் - ப+னை

􀂾􀀃 தகாதவற்றை உண்ணுதல் - புழு

􀂾􀀃 பிறன்மனை கூடுதல்,

அந்தணன் பொருளை அபகரித்தல் - பிரம்ம ராஷசனாகப் பிறப்பான்

􀂾􀀃 தானியம் திருடுதல் - பெருச்சாளி

􀂾􀀃 வெண்கலத் திருடன் - அன்னப் பறவை

􀂾􀀃 தண்ணீர் களவாடியவன் - நீர்க்காக்கை

􀂾􀀃 தேன் திருடன் - வால்கொசு

209􀀃

􀀃

􀂾􀀃 பால் - காகம்

􀂾􀀃 இரசவகை - நாய்

􀂾􀀃 நெய் - அணில்

􀂾􀀃 மாமிசம் - கழுகு

􀂾􀀃 எண்ணெய் - வெளவால்

􀂾􀀃 உப்பு - சுவர்க்கோழி

􀂾􀀃 தயிர் - கொக்கு

􀂾􀀃 வெண்பட்டு - ஊர்க்குருவி

􀂾􀀃 பட்டுச்சால்வை - தவளை

􀂾􀀃 பசு - உடும்பு

􀂾􀀃 வெல்லம் - வாக்குதம் என்ற பறவை

􀂾􀀃 நறுமணப்பொருள் - மூஞ்சுர்

􀂾􀀃 காய்கறிகள் - மயில்

􀂾􀀃 உணவுப்பொருள் - முள்ளம்பன்றி

􀂾􀀃 நெருப்பு - நாரை

􀂾􀀃 வீட்டுக் கருவிகள் - குளவி

􀂾􀀃 யானை - செந்நாய்

􀂾􀀃 குதிரை - புலி

􀂾􀀃 கனி, கிழங்கு - குரங்கு

􀂾􀀃 பெண்ணைச் சிறையெடுத்தவன் - கரடி

􀂾􀀃 வண்டி முதலிய ஊர்திகள் - ஒட்டகம் (மனு : 12 : 60 - 68)

இவ்விதமாகச் செய்த வினைகளுக்கு ஏற்ப அடையும் மறுபிறப்புக்களைப் பற்றி மனுதருமம் எடுத்துரைக்கின்றது. மேலும் 􀂳சிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட அந்தணன் புலால் உண்ணலாகாதென்று எண்ணி மறுத்தால் இருபத்தோரு பிறவிகள் பசுவாய்ப்பிறப்பான்􀂴 (மனு 􀂱 5 : 35) என்று மனு அந்தணர்களுக்குப் புலால் உண்பதை வற்புறுத்துவதோடு அதை உண்ணாமல் மறுத்தால் இருப்பதோரு பிறவிகள் பசுவாகப் பிறப்பர் என்று அவனுடைய மறுபிறப்புச் செய்தியினையும் எடுத்துரைக்கின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 􀂳பிராம்மண சத்திரியர்கள் வாணிபம் செய்து பிழைத்த போதும் உடல் முயற்சியும், பிறர் தயவை நாடத் தக்கதாயுமுள்ள விவசாயத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது. (மனு:10:83) என்று கூறியுள்ளார்.

மேலும், 􀂳பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக்கொழு நுனியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக்கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ!􀂴 (மனு 10:84)

 

 பொருளாதாரத்தின் நிலையினைத் தனிமனிதன் குடும்பம், சமுதாயம், நாடு எனப் பல நிலைகளில் வள்ளுவர் விளக்கியுள்ள விதம் சிறப்பானது. பொருளற்றவனை இச்சமுதாயம் மதிப்பதில்லை. அவனை மதிப்பிற்குள்ளாக்குவது பொருள.; அறிவால் இழிந்த ஒருவனும் அவையில் பேசப்பட பொருளே காரணமாகும். பொருள்

இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. வாழ்வின் இருளைப் பொருள் அகற்றுகின்றது.

இந்தப் பொருளெல்லாம் பகை நாட்டிலிருந்து திறையாக வந்த பொருள். அவை திறைப்பொருள், உல்குபொருள், உறுபொருள் என்பவையாகும். இவையெல்லாம் அரசனுக்குச் சொந்தம் என்கிறார் வள்ளுவர். இதனை,

􀂳உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள􀂴; (குறள்:756)

என்று எடுத்துரைக்கின்றார். அரிச்சந்திர புராணத்தில் கூட மயானத்தில் பொருள் தான் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஒருவனின் பிறப்பு முதல் இறப்பு வரை பொருள் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆகவே நீ பொருளைச் சோக் ;க வேண்டும். அதுவே உன் பகைக்கு, பகைவருக்குப் பயநN; தாடச் செய்யும் ஆயுதமாகத் திகழும்.

பொருளைக் காட்டிலும் கூரியது வலிமை உள்ளது வேறொன்றுமில்லை என்பதை அரசருக்கு எடுத்துரைக்கின்றார் வள்ளுவர். இதனை,

􀂳செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்

எஃதனிற் கூரிய தில􀂴; (குறள்:759)                       என்று குறிப்பிடுகின்றார். அரசு எப்போதும் செல்வ நிலையில ; வலிமை பெற்றுத் திகழ வேண்டும். செல்வ நிலையில் வலிமை பெற்றால்தான் உலக நாடுகள் மத்தியில் நிலைத்திருக்க முடியும். இன்று படைபலத்திலும், செல்வ நிலையிலும ; வலிமை பெற்ற நாடுகள்தாம் வல்லரசுகளாய் மதிக்கப்படுகின்றன. வல்லரசு ஆவதற்கு நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு முதல்படியே செல்வம்தான். அதனால் தான் வள்ளுவமும் செல்வத்தை வலியுறுத்துகின்றது.

இதனை,

􀂳பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று􀂴 (குறள்:753)                         என்று எடுத்துரைக்கின்றது. மேலும்,

􀂳இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு􀂴 (குறள்:752)                       என்று செல்வத்தின் இன்றியமையாமையை விளக்குகின்றார். செல்வம் உள்ளவன் மட்டும்தான் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறான். தற்கால நடைமுறை வாழ்க்கையில் கூடச் செல்வம் உள்ளவன் தான் அடையவிரும்பும் அனைத்து இலட்சியங்களையும் அடைகிறான். ஆதி முதல் அந்தம் வரை பொருள் இல்லாமல் எச்செயலும் நடைபெறுவதில்லை.

2:3 நல்வழியில் பொருளீட்டும் முறை:

பொருளற்றவரை இச்சமுதாயம் ஒருபோதும் மதிப்பதில்லை. பொருள் நிறையச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமுள்ள உலக மக்களுக்கு வள்ளுவர் சில விதி முறைகளை வகுத்துத் தருகின்றார். நேர்மையான வழிகளன்றித் தயீ வழிகளில் ஒருபோதும் செல்வம் சேர்த்தல் ஆகாது. அதனைக் கட்டாயம் நகீ ;க வேண்டும் என்பதனை,

􀂳அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல􀂴; (குறள்:755)                           என்று விளக்குகின்றார். அன்பின் வழியாலும் அருளின் வழியாலும் ஒரு மனிதன் சேர்த்து வைக்காத பொருளானது அம்மனிதனுக்கும் அவன் வழித்தோன்றலுக்கும் தீரா இடும்பைத் தருவதாகும். ஒருவேளை தீயவழிகளில் சேர்த்த பொருளாயிருந்தால ; அது தீக்கிரையாகிவிடும். அவ்வாறு இல்லையெனில் அவன் நல்லவனா, தீயவனா என்பதை அவனது மக்கள் அடையாளம் காட்டுவர் என்பதை வள்ளுவர்,

􀂳தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும􀂴; (குறள்:114)      என்று கூறுகின்றார். அன்பின் வழியாக உலக மக்கள் வாழவும், அன்பே உயிர்நிலையாகக் கொள்ளவும் வேண்டுமெனில் நேர்வழியில் பொருளீட்ட வேண்டும் என வள்ளுவர் உலக மக்களுக்குக் கூறுகின்றார். இதனைப், 􀂳புத்தர் முறைகேடாகச் செல்வம் ஈட்ட விரும்பாதவன் ஒருவனே சீலவான், அறிஞன், நீதிமான் என்று தம்மபதத்திற் சொல்லியுள்ளார்.􀂴7 என்று சோ.ந.கந்தசாமி குறிப்பிடுகின்றார். மேலும் நேர் வழியில் வந்த பொருளானது அன்பினையும், அறத்தினையும் வளர்க்கிறது என்பதனை,

􀂳அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள􀂴; (குறள்:754)

என்று குறிப்பிடுகின்றார் வள்ளுவர். தீமையால் சேர்க்கப்பட்ட பொருள் அன்பையும், அறத்தையும் இழக்கச் செயக் pன்றது. தீதின்றி வரும் பொருளை வள்ளுவம் வரவேற்கிறது. பிறரின் அழிவிலும், அழுகையிலும் பெற்ற பொருளை வெறுத்தொதுக்குகின்றது. ஆனால் தற்காலத்தில் பெரும்பாலான மக்கள் தீயவழிகளில் தான் பொருள் சேர்க்கின்றனர்;. எல்லாத் துறைகளிலும் கையூடடு; என்பது முறையாகி விட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருக்குறறள, எஸ். றகைாசபதி அவர்கள் பின்வருமாறு உறரக்கின்றார்.

“சுருக்கமாக ஈரடியில் பறடக்கப்பட்டிருப்பதனால் வாசிப்பதற்கு மிகவும் சுைபமாகத் ததான்றினாலும், அதன் உண்றமப் லபாருறள உணர்தல் அவ்வளவு எளிதன்று. திருக்குறளில் தவதத்தின் சாரம் அடங்கியுள்ளததாடு ஆய்பவர்களின் உள்ளத்றதப் பண்படுத்துவதாகவும் அஃது அறமகின்றது"1

“சமஸ்கிருத தவதங்கள் ஆாியர்களுக்குச் லசாந்தமானறவ. ஆாியர் அல்ைாதவர்கள் அதறன ஆய்றகயில் மிகப்லபாிய பைறன அறடவது சிரமம். ஆனால், திருக்குறறள ஆய்ந்த; ஆழ்ந்து கற்ற அறனவரும் அதன் பைறன அறடவது திண்ணம். பிறப்பு, குைம், தகாத்திரம் ஆகிய எதுவுதம

திருக்குறறள ஆழ்ந்து கற்பறதத் தறடபடுத்திவிட முடியாது; அதன் பைறன அறடவறதத் தவிர்க்க இயைாது. ஏலனனில், திருக்குறள் சாதி கட்டுகளில் அடங்காத, அறனவருக்கும் உாித்தான லபாது மறறயாகும்”2

என வ.சுப மாணிக்கம் அவர்கள் பகர்கின்றார்.

ஒருவனுக்கு ஒருத்தி எனும் கற்பு லெறிறய வலியுருத்தும் மறற

“உண்றமப்லபாருறள உணர்த்த எடுத்த அந்தக் காைத்திய நூல்கள் அறனத்துதம லபண்களின் கற்பு லெறிறய உணர்த்துபவனவாகதவ அறமந்திருந்தன. அப்படி எழுந்த எந்த ொளுதம ஆணானவன் ஒரு மறனவியுடன் மட்டுந்தான் வாழ தவண்டும் என்ற எந்தக் கட்டாயங்கறளயும் ஏற்படுத்தியதாகஇல்றை. ஆனால், அறவ அறனத்தினின்றும் முற்றும் மாறுபட்டதாக உதித்தது திருக்குறதளயாகும். திருவள்ளுவர் தனது திருக்குறளில் அறத்துப்பாலில் பிறனில் விறழயாறம மற்றும் லபாருட்பாலில் வறரவின் மகளிர் ஆகிய இரு இயல்களிலும் ஆணானவன் ஒதர ஒரு லபண்ணுடன் மட்டுதம வாழ்க்றக ெடத்த தவண்டும் என உறுதியாகக் கூறுகின்றார்”4

என தக.எஸ் ஆனந்தம் கருத்துறரக்கின்றார்.

 

துறர அரங்கசாமி அவர்களின் கருத்றதப் தபாற்ற தவண்டிய அவசியம் புாிகின்றது. அவர் திருக்குறறள ஆைமரத்திற்கு ஒப்பாகவும் இதற பிற இைக்கியங்கறள அதன்

95

(திருக்குறள்) ெிழலில் படர்ந்துள்ள இைக்கியங்களாகவும் உவறம காட்டியிருக்கின்றார்.

“இறற ெம்பிக்றக இந்நூலின் ஆணி தவராகவும், அறம், லபாருள், இன்பம் ஆகியன ெீண்டு அகன்ற முப்லபரும் கிறளகளாகவும் 133 இயல்களும் சல்லிதவர்களாகவும் உயிர்ொடியாக விளங்கும் 1330 குறள்களும் மரத்தின் உறுதியான தண்டாகவும், அக்குறள்களின் விரவியுள்ள லதாிெிறை லபாருள்களும், உள்ளார்ந்த லபாருளுண்றமகளும் கனிறயப் தபான்றனவாகவும் உள்ளன”10

என உவறமப்படுத்தியிருக்கின்றார். இவரது கருத்துகள் சற்தற மிறகயானறவயாகத் ததான்றினாலும்

 

லசால்ை விரும்பும் கருத்துகறளக் குறள்

வடிவில் லசால்லியிருப்பதன் வாயிைாகச் சுருக்கமாகவும், திறம்படவும் சிறப்பான முறறயிலும் லவளிபடுத்த முடிந்திருக்கின்றது. குறட்பாக்கள் அறனத்றதயும் ஒதர குவியைாகத் தந்து விடாமல், சிறு சிறு இயல்களாகப் பகுத்துத் தந்திருப்பது

96

லதளிவான முறறயில் கருத்துகள் அறியப்பட ஏதுவாக இருக்கின்றது”11



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard