சகர்கள் அதாவது இன்றைய ஆஃப்கானிஸ்தானியர்களும் பாகிஸ்தானியர்களும் எந்தையை லிங்க வடிவில் வணங்கும் காட்சி, குஷாணர் கலைப்படைப்பு, பொயு முதலாம் நூற்றாண்டு, மதுரா அருங்காட்சியகம்.
வடநாட்டில் குமரக்கடவுளோடு கிடைக்கும் துணைத்தெய்வங்களுள் ஒன்று நைகமேஷன். ஆட்டுத்தலையோடு காணப்பெறும் இந்த தெய்வ வடிவம் பல்வேறு சிற்பங்களிலும் காணப்பெறுகிறது. ஜைன நூல்களும் கூட இந்தத் தெய்வத்தைக் குறிப்பிடுகின்றன. தென்னகத்தில் எல்லோரா போன்ற சில இடங்களில் மட்டுமே காணப்பெறுகின்றன. இது முருகனின் வாஹனமான ஆட்டுக்கடா அல்ல. எல்லோராவில் இவர்களிருவருமே இருக்கக் காணலாம்.
-- Edited by Admin on Thursday 30th of August 2018 09:27:24 PM
ுத்து காஞ்ச்யர்கள் என்று காஞ்சியைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது. த்ராவிடர் என்பது பொதுவாக காவேரியை ஒட்டிய பகுதி என்பதால் காஞ்சியை ஒட்டிய பகுதியை இப்படிக் குறித்தாதல் வேண்டும்.
குடுமியான் மலைக் கல்வெட்டில் பரிவாதினீத என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடப்பெற்றுள்ள பரிவாதினீ என்பது ஏழு தந்திகளைக் கொண்ட வீணையாகும். த என்பது ததாதி அதாவது கொடுத்தல் என்ற பொருளில் அமைந்தது. பரிவாதினீ-த என்றால் பரிவாதினியைக் கொடுத்தவர் என்று பொருள் கொண்டு ஏழாம் நூற்றாண்டில் பரிவாதினியை முதலில் வடிவமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் என்றளவிலே பொருள் கூறுகிறார்கள்.
ஆனால் ஸப்ததந்த்ரீ வீணைதான் யாகத்தில் புகழ்பெற்றது என்று மஹாபாரதம் கூறுகிறது.
கஜுராஹோவிலுள்ள சதுர்புஜரின் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இந்த வடிவத்தைத் திருமாலின் வடிவமாகத்தான் பலரும் கருதுகின்றனர். உடனே பார்த்தவுடன் திருமாலின் வடிவமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அருகிலிருக்கும் இரு தேவியரில் ஒருவர் தலையில் கரோடிகா எனப்பெறும் மண்டையோட்டைச் சூடி நாகங்களையும் அணிந்துள்ளாள். இறைவன் மேற்கரத்தில் தாமரைத்தாளையும் சுவடியையும் ஏந்தியுள்ளார்.தலையோ ஜடாமகுடம். இவற்றை வைத்து சில ஆய்வறிஞர்கள் இவர் சிவபெருமான் எனவும் யோகதக்ஷிணாமூர்த்தி எனவும் அடையாளம் கண்டுள்ளனர். கோயிலின் வெளிப்புறத்தில் சிவபெருமானின் சிற்பமும் நாரஸிம்ஹி முதலியோர் சிற்பமும் இடம்பெற்றுள்ளதும் இதற்குச் சான்று.
முன்பே குறிப்பிட்டதைப் போல பாஞ்சால வம்சத்து மித்ர மன்னர்கள் மித்ரன் என்று கூறிக்கொண்டு அவர்தம் தெய்வங்களையும் குறிப்பிட்டார்கள். அத்தகைய காசுகளில் ஒன்று விஷ்ணுமித்ரனுடையது. இந்தக் காசின் முன்புறத்தில் விஷ்ணுமித்ரஸ என்னும் பொறிப்பும் பின்புறம் திருமாலின் வடிவமும் இடம்பெற்றுள்ளது. இதன் காலம் பொயுமு முதலாம் நூற்றாண்டாகும்.
This coin of Pāñcāla’s mitra kings belongs to Viṣṇumitra and dated as 1st BCE. The legend “Viṣṇumitrasa” is inscribed on one side and the image of Viṣṇu is there on the other.
இந்தக் குஷாணர் காலத்துச் சிற்பம் இப்போது கராச்சியிலுள்ளது. கேசி என்னும் குதிரை உருக்கொண்ட அரக்கனைக் கண்ணன் அழிக்கும் காட்சி. பொயு இரண்டாம் நூற்றாண்டாகக் கணக்கிடப்பெற்றிருக்கும் இந்தச் சிற்பத்திற்கு முன்னரே காசுகளில் இத்தகைய உருவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தக்ஷசிலா அருங்காட்சியகத்திலுள்ளது.
This panel depicting the assassination of the demon Kesi by Sri krishna belongs to Kushana period. This is dated as 2nd CE. It should be noted that some coins prior to this panel bear same type of image on them. This is placed in Taxila museum.
மனிதன் உருவான காலத்துல பேச்சில்லாம ஏதேதோ படங்களை உணர்ச்சிகளா வரஞ்சு வச்சான். இப்போ மொழியெல்லாம் உச்சத்துக்குப் போனதுக்கப்புறமா, மார்க் புண்ணியத்தில மறுபடியும் இப்படி மொட்டைமண்டையா உணர்ச்சிக்கு போடறோம். மறுக்கா பழைய கற்காலம் வந்துருமோ............