New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிருக்குறளின் அறக் கடவுளும், முந்தைய அற நூல்களும்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
கிருக்குறளின் அறக் கடவுளும், முந்தைய அற நூல்களும்
Permalink  
 


 கிருக்குறளின் அறக் கடவுளும், முந்தைய அற நூல்களும்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். குறள் 77: அன்புடைமை.

மணக்குடவர் உரை:என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.
சாலமன் பாப்பையா உரை:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. குறள் 204: தீவினையச்சம்.

மணக்குடவர் உரை:பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
சாலமன் பாப்பையா உரை: மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. குறள் 130:அடக்கமுடைமை.
மணக்குடவர் உரை:வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறக்கடவுள் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. குறள் 1018: நாணுடைமை
மணக்குடவர் உரை:உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.
சாலமன் பாப்பையா உரை:மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறக்கடவுள் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் குறள் 271: கூடாஒழுக்கம்
மணக்குடவர் உரை:கள்ள மனத்தை உடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன் உடம்பின் உண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும். பூதங்களைந்தும் அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.
பொழிப்பு (மு வரதராசன்): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: கிருக்குறளின் அறக் கடவுளும், முந்தைய அற நூல்களும்
Permalink  
 


சிறப்பீனும்செல்வம்பெறினும்பிறர்க்குஇன்னா
செய்யாமைமாசற்றார்கோள். குறள் 311: இன்னாசெய்யாமை
மணக்குடவர் உரை:மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.

கறுத்துஇன்னாசெய்தவக்கண்ணும்மறுத்தின்னா
செய்யாமைமாசற்றார்கோள். குறள் 312: இன்னாசெய்யாமை
மணக்குடவர் உரை:தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

வேட்பத்தாஞ்சொல்லிப்பிறர்சொல்பயன்கோடல்
மாட்சியின்மாசற்றார்கோள். குறள் 646: சொல்வன்மை
மணக்குடவர் உரை:தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள்கண்டார்வாய்ச்சொல். குறள் 91: இனியவைகூறல்.
மணக்குடவர்உரை:ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?
சாலமன்பாப்பையாஉரை:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

இழுக்கல்உடையுழிஊற்றுக்கோல்அற்றே
ஒழுக்கமுடையார்வாய்ச்சொல். குறள் 415: கேள்வி.
மணக்குடவர் உரை:வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.
சாலமன் பாப்பையா உரை:கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

 உலகு-உலகோர் என்பவை எல்லாமே நீதி-அற நூல்களின் வழி நிற்கும் உயர்ந்தோர் வழி என எல்லாமே முன்னோர் மரபை கூறுபவை ஆகும்.


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். குறள் 140: ஒழுக்கமுடைமை.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. குறள் 1015: நாணுடைமை-

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். குறள் 662: வினைத்திட்பம்.
பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. குறள் 870:பகைமாட்சி. குறள் 865:
சாலமன் பாப்பையா உரை:நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.


கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. குறள் 870:பகைமாட்சி.
மணக்குடவர் உரை:கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.
மு. வரதராசன் உரை:நீதிநூலைக் கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. அவையஞ்சாமை.குறள் 725:
மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. அமைச்சு. குறள் 635:
அறத்தை (அற- நீதி சாஸ்திர நூல்கள்) அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். பெரியாரைத் துணைக்கோடல். குறள் 441:
அறம் (அற- நீதி சாஸ்திர நூல்கள்) உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

திருக்குறள் போற்றும் முன்னோர் மெய்யியல் ஞான நூல் மரபு
திருக்குறளில் வள்ளுவர் மிகத் தெளிவாக பல இடங்களில் தான் பல ஆயிரம் ஆண்டு இந்திய ஞான மரபினைத் தொடர்வதை உறுதியாகக் கூறி உள்ளார். வள்ளுவத்தில் நூல் என்ற சொல், முன்னோர் மரபு நூல்களைக் குறிக்க 20முறை பயன்படுத்தி உள்ளார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. குறள் 322: கொல்லாமை.
தான் ஈட்டியதை கொண்டு உணவைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாம் முதன்மையான அறமாகும்.
திருவள்ளுவர் பாயிரம் எனும் முன்னுரையின் நீத்தார் பெருமையில்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை.
ஒழுக்கத்தில் உறுதியான முனிவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

இங்கே நூலோர்,பனுவல் என்பது - நீதி நூல்களை-அற வழிகாட்டி நூல்களைக் கூறுகிறார் என்பது மிகத் தெளிவு. தானே பல அறநூல்களை ஆராய்ந்த முடிபு எனக் கீழே குறிப்பிட்டு உள்ள்ளார்
யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. குறள் 300: வாய்மை.
அறங்களில் சிறந்தவை என்று நான் கண்ட நீதி நூல்களுல் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.

முப்பாலும் - சங்க இலக்கியமும்
பத்துப் பாட்டு & எட்டுத்தொகை நூல்கள் வெகு ஜன இலக்கியமாக காதல்- வீரத்தை மையப்படுத்தி அகம்-புறம் என இயற்றப்பட்டன.
திருக்குறள் தத்துவ (மெய்யியல்) ஞான மரபில் தர்ம-அர்த்த-காம என முப்பால் அக்க இயற்றப்பட்டது. திரிவர்க்கம் எனும் இந்த அமைப்பு நாற்பால் ஆக வீடு எனத் தனியாக ஆகுமுன் எழுந்தது ஆகும்.
பிறவிப் பெருங்கடல் கடக்கும் வீடுபேறு அடைவதே கற்று ஈண்டு மெய்
ப்பொருள் காண்பதன் அடிப்படை என வள்ளுவம் வலியுறுத்துகிறது.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.             குறள் 870:பகைமாட்சி. குறள் 865:
சாலமன் பாப்பையா உரை:நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. குறள் 870:பகைமாட்சி.
மணக்குடவர் உரை:கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.
மு. வரதராசன் உரை:நீதிநூலைக் கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. அவையஞ்சாமை.குறள் 725:
மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. அமைச்சு. குறள் 635:

அறத்தை  (அற- நீதி சாஸ்திர நூல்கள்) அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். பெரியாரைத் துணைக்கோடல். குறள் 441:

 

அறம்  (அற- நீதி சாஸ்திர நூல்கள்) உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

உலகு-உலகோர் என்பவை எல்லாமே நீதி-அற நூல்களின் வழி நிற்கும் உயர்ந்தோர் வழி என எல்லாமே முன்னோர் மரபை கூறுபவை ஆகும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்குறள் 140: ஒழுக்கமுடைமை.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகுகுறள் 1015: நாணுடைமை-

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.  குறள் 662: வினைத்திட்பம்.

பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பதுபழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

சிறப்பீனும்செல்வம்பெறினும்பிறர்க்குஇன்னா
செய்யாமைமாசற்றார்கோள்குறள் 311: இன்னாசெய்யாமை
மணக்குடவர் உரை:மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடுஇது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.

கறுத்துஇன்னாசெய்தவக்கண்ணும்மறுத்தின்னா
செய்யாமைமாசற்றார்கோள்குறள் 312: இன்னாசெய்யாமை
மணக்குடவர் உரை:தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டுஇன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

வேட்பத்தாஞ்சொல்லிப்பிறர்சொல்பயன்கோடல்
மாட்சியின்மாசற்றார்கோள்.     குறள் 646: சொல்வன்மை
மணக்குடவர் உரை:தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடுஇது நயம்படக் கூறுதலே யன்றிபிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.

 

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள்கண்டார்வாய்ச்சொல். குறள் 91: இனியவைகூறல்.
மணக்குடவர்உரை:ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?
சாலமன்பாப்பையாஉரை:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

இழுக்கல்உடையுழிஊற்றுக்கோல்அற்றே
ஒழுக்கமுடையார்வாய்ச்சொல். குறள் 415: கேள்வி.
மணக்குடவர் உரை:வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.

சாலமன் பாப்பையா உரை:கற்றுஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

திருவள்ளுவரும் கடவுள் வணக்கமும் 

ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகைப் படைத்த பரம்பொருள் எனும் இறைவனை ஏற்ற முழுமையான ஆத்திகவாதி திருவள்ளுவர். 

இறைவனை நாம் புரிய - 'அகர முதல எழுத்து எல்லாம்'என உவமை- நம் கல்வி "அ" எழுத்து எழுதி தொடங்கி நாம் கற்கிறோம். கண் என்ப எழுத்து என இலக்கியத்தை கூறியமையால் இங்கே அனைத்து கல்விக்கும் எனப் பொருள் நீழும், நாம் பெற்ற கல்வி ஆனது நாம் எங்கே -எந்த நிலையில் இருந்தாலும் நம்மோடு உள்ளது போலே இறைவனும் எங்கும் பரந்து கிடக்கின்ற பரம்பொருள் என்பதே வள்ளுவர் கூறுவது ஆகும்.

அடுத்த குறளில் கல்வி கற்பதன்  முழுப் பயனே அனைத்து அறிவிற்கும் ஆன இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதற்கே என்கிறார்.

இறைவன் வெளிப்பாடாக் இயறகையையும் பஞ்ச பூதங்களையும் போற்றி வணங்கும் முறையில் வான் சிறப்பு என அதிகாரம் வைத்துள்ளார்.  பஞ்ச பூதங்கள் நம் உள்ளேயும் உள்ளது என்கிறார். 

மழையைப் போற்றுகையில் திருவள்ளுவர் நீர் இன்று அமையாது உலகு என நீரின் முக்கியத்துவத்தைக் கூறும் முன்பாக தமிழர் மெய்யியல் வாழ்வின் முக்கிய அம்சங்களைச் சுட்டி உள்ளார்.

மழை இல்லாது போனால் தமிழர் இறிஅவன் திருக்கோவிலில் அன்றாட நடத்தும் பூஜை வழிபாடும் (பூசனை என வடசொல் தமிழில் முதல் முறை வந்து உள்ளது; பரிபாடலில் பூசை என பூனைச் சுட்டும் சொல் உள்ளது), பண்டிகை என விழாக்களும் நடவாது போகும் என்கிறார்

மனித வாழ்வில் திருமணம் செய்து பொருள் இட்டும் 'மனைவி, பிள்ளை, பெற்றோர் உடன் இல் வாழ்வான்'; ம்ற்றும் துறவு வாழ்க்கை. இல்வாழ்வான் தானங்களும், துறவி தவமும் மழை இல்லை என்றால் இல்லாது போகும் என தமிழர் வாழ்நிலையைக் காட்டி உள்ளார்.

அலங்கல் செல்வன் சேவடி பரவி - பதி 31/9

 

குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென 5 உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய் அலங்கல் செல்வன் சேவடி பரவி நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர 10 மணி நிற மை இருள் அகல நிலா விரிபு

# 31 பாட்டு 31

குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென			5
உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர			10
மணி நிற மை இருள் அகல நிலா விரிபு
கோடு கூடு மதியம் இயல்-உற்று ஆங்கு
துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டு
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு
கருவி வானம் தண் தளி தலைஇய			15
வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய
பனி வார் விண்டு விறல் வரை அற்றே
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவு தோள்		20
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையை-மன் நீயே வண்டு பட
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின்
குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின்		25
இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொல் நகர் செல்வி
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து		30
அடங்கிய புடையல் பொலன் கழல் நோன் தாள்
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ
புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர்
நகைவர்க்கு அரணம் ஆகி பகைவர்க்கு
சூர் நிகழ்ந்து அற்று நின் தானை				35
போர் மிகு குருசில் நீ மாண்டனை பலவே

குன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, பல பொருட்களும் திரண்டுள்ள கடலினை ஆடையாக உடுத்திய
மண் செறிந்த உலகத்து மாந்தர் எல்லாம் ஒரேநேரத்தில்
கைகளைத் தலைக்குமேல் கூப்பி உரத்த ஒலி எழுப்பும் ஆரவாரம், திசைகளின்
நால்வேறான அகன்ற பக்கங்களில் ஒன்றாக எழுந்து ஒலிக்க,
தெளிந்த ஓசையையுடைய, உயர்வாக வடிக்கப்பெற்ற மணியை அடிப்பவர்கள் கல்லென்ற ஓசையை உண்டாக்க,
உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி,
வண்டுகள் சுற்றிவரும் பொலிவுள்ள மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும்,
கண்ணைக் கூசவைக்கும் சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட
மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி,
நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்;
நீலமணியின் நிறத்தைப் போன்ற கரிய இருள் நீங்கும்படி நிலவொளியைப் பரப்பி
பிறைநிலவின் கொம்புகள் கூடிநிற்கும் முழுமதி வானத்தில் ஊர்ந்துவந்தாற் போன்று
வருந்துகின்ற குடிமக்களைச் சிறந்த நிலையில் நிலைநிறுத்தி, பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி,
வெற்றி வீரர்களுக்குப் பரிசளித்து ஆண்கடனைச் செய்துமுடித்த உன் பூண் அணிந்த பரந்த மார்பு,
இடிமின்னலுடன் கூடிய மேகங்கள் குளிர்ந்த நீரைப் பொழிய,
வடதெற்காகக் குறுக்கிட்டு நின்று தடுத்து விலக்கும் உச்சிகளில் மேகங்களை உடையதாகி,
குளிர்ச்சி நிறைந்த மலையாகிய சிறந்த மலையைப் போன்றது.
தேவர்களுக்குப் பயந்து வானத்தில் கட்டிய
தொங்குகின்ற கோட்டையின் கதவினைக் காத்துநிற்கும்
கணைய மரத்தை நிமிர்த்தி வைத்தாற்போன்ற பருத்த அழகிய வலிமையுள்ள முழவினைப் போன்ற தோள்கள் உன்னவை;
வெண்மையான அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில்
கொடையால் வரும் புகழை நிலைநிறுத்திய வகைவகையான செல்வங்களைக் கொண்ட
வண்டன் என்பானைப் போன்றவன் நீ; வண்டுகள் மொய்க்கும்
செழிப்பான கூந்தலையும், அறம் சார்ந்த கற்பினையும்,
காதிலிருக்கும் குழைக்கு வெளிச்சம் தரும் ஒளிவிடும் நெற்றியையும், பொன்னாலான
அணிகலன்களுக்கு வெளிச்சமூட்டும் அழகிய வளைந்த வயிற்றையும் கொண்டு,
வானுலகில் நடமாடும் பெண்களுக்குள் சிறந்த
செம்மீனாகிய அருந்ததியைப் போன்றவள் உன் தொன்மையான அரண்மனையின் செல்வியான உன் மனைவி;
நிலத்திலுள்ளோர் அதிர்ந்து நடுங்குமாறு முழங்காமல், வெற்றியினால் சிறந்து
உன் அகன்ற முரசு முழங்கும்; வேற்படை மொய்த்துக்கிடக்கும் போர்க்களத்தின் நடுவே,
ஒடுங்கிய பனைமாலை அணிந்த, பொன்னாலான கழலை அணிந்த வலிமையான கால்களையுடைய -
அடங்காத பகைவரின் ஊக்கம் கெடும்படியாக விரட்டி
அவரின் முதுகினில் வேல்களை வீசியெறியமாட்டார் - உன் வீரம் மிக்க சேனைக்குத் தலைமைகொள்பவர்
உன்னோடு சிரித்து உறவாடுவோருக்குப் பாதுகாவலாய் அமைந்து, பகைவர்க்கு
அச்சுறுத்தும் தெய்வம் தாக்கியது போன்றது உன் சேனை,
இவ்வாறு போர்த்தொழிலில் சிறந்து விளங்கும் அரசனே! மாட்சிமை பொருந்தியவனாவாய் பலவகையாலும்!

மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி/மணி திகழ் உருபின் மாஅயோயே - பரி  3/2,3

சேவடி தொழாரும் உளரோ அவற்றுள் - பரி 3/19

 அலங்கல் செல்வன் சேவடி பரவி - பதி 31/9

குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென 5 உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய் அலங்கல் செல்வன் சேவடி பரவி நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர 10 மணி நிற மை இருள் அகல நிலா விரிபு

# 31 பாட்டு 31

குன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, பல பொருட்களும் திரண்டுள்ள கடலினை ஆடையாக உடுத்திய

மண் செறிந்த உலகத்து மாந்தர் எல்லாம் ஒரேநேரத்தில்

கைகளைத் தலைக்குமேல் கூப்பி உரத்த ஒலி எழுப்பும் ஆரவாரம், திசைகளின்

நால்வேறான அகன்ற பக்கங்களில் ஒன்றாக எழுந்து ஒலிக்க,

தெளிந்த ஓசையையுடைய, உயர்வாக வடிக்கப்பெற்ற மணியை அடிப்பவர்கள் கல்லென்ற ஓசையை உண்டாக்க,

உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி,

வண்டுகள் சுற்றிவரும் பொலிவுள்ள மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும்,

கண்ணைக் கூசவைக்கும் சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட

மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி,

நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்;

மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி/மணி திகழ் உருபின் மாஅயோயே - பரி  3/2,3

சேவடி தொழாரும் உளரோ அவற்றுள் - பரி 3/19

திருக்குறள் தமிழில் எழுந்த வாழ்வியல் வழிகாட்டி அறநூல், சங்க இலக்கியத்திற்குப் பின்னர் எழுந்த வள்ளுவம் பாயிரம் அமைப்போடு குறள் வெண்பா என வளர்ச்சி பெற்ற யாப்பில் அமைந்து உள்ளது. 

வள்ளுவத்தின் கடவுள் வணக்கக் கோட்பாடு - நுழைவாயில் 

மனிதன் வாழ்வில் அனைத்து செயலிலும் அறம் செய்ய வேண்டும்; அறம் செய்ய கல்வி வேண்டும், கல்வி கற்பதன் பயனே உலகைப் படைத்த அனைத்து அறிவிற்கும் ஆன பரம்பொருளின் திருவடியைப் பற்றிக் கொள்ளவே என்கிறார்.

கற்றதனால் ஆய 

இறைவனை மனம், மொழி, மெய் என மூன்றினாலும் பணிய வேண்டும் என்பதி வலி உறுத்தும் வள்ளுவர், எண் குணத்தைக் கொண்ட இறைவனை தன் தலையால் வணங்காதவ்ன் கொண்டுள்ள ஐம்பொறிகள்- கண், காது, மூக்கு, வாய், தோல் இவற்றால் பயனே இல்லை, அதாவது இப்பிரபஞ்சத்தின் மெய்மையை ஏற்காதவனை வள்ளுவர் நிராகரிக்கிறார். 

இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டால் மட்டுமே இந்த உலகில் மனிதன் பிறந்து, இறந்து மீண்டும் பிறந்து எனும் பிறவிப் பெருங்கடலைக் நீந்திக் கடக்க இயலும் என்கிறார்.

திருவள்ளுவரின் மெய்யியல் மரபை அறிய திருக்குறள் 1330 குறளின் உள்ளே வள்ளுவர் மனத்தை அறிந்து காணும் முயற்சியே இந்த நூல். 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

திருவள்ளுவர் மெய்யியல் மரபில் இயற்றிய திருக்குறளை, தமிழ் மெய்யியல் மரபை ஏற்காத அன்னிய காலனி ஆதிக்க மதமாற்ற நச்சுப் பொய்களின் அடிமையான திராவிடியார் கழகங்களும், நவீன திராவிடியார் புலவர்களும் திருக்குறள் ஆய்வைக் கயில் எடுத்து வள்ளுவத்தை சிறுமை செய்வதன் உச்சமே - திரு.மோகனராசு, தெய்வநாயகம் (தேவநேயப் பாவாணர் வழி கிறிஸ்துவ மதவெறி) & தமிழ் பல்கலைக் கழக இணையத்தில் இக்கட்டுரைகளும்.                                                                            வள்ளுவர் உலகைப் படைத்த பரம்பொருள் என்பதை ஆதி பகவன் முதற்றே உலகு என்றவர் அந்த கடவுள் வாழ்த்து அதி காரத்தில்

1. 'நல் தாள் தொழாஅர் எனின்’ கல்வியினால் பயன் இல்லை
2. ‘மாண்அடி சேர்ந்தார்’ பூமியில் புகழோடு வாழ்வர்
3. ‘வேண்டாமை இலான்அடி’ துன்பங்கள் நீங்கும்
4. ‘உவமை இல்லாதான் தாள்’ மனக்கவலகைகள் நீங்கும்.
5. ‘ஆழி அந்தணன் தாள்’ - பிற பொருள் இன்பக் கடல் கடக்க இயலும்
6. ‘எண்குணத்தான் தாள்’- வணங்காதவனிடம் உள்ள ஐம்பொறிகளால் பயன் இல்லை.
7. ‘இறைவன் அடி சேரார்’ - பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பர்
என ஏழு குறள்களில் இறிவன் திருவடிகளை அடிபணிய வேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறார்.

நாம் நம்மிலும் பெரியோரை, வலிமையானோரை, அறிஞரை மரியாதைக்கு பணிகிறோம்.   அடிபணிதல் என்றால் மனம், மொழி, மெய் என மூன்றையும் ஒருங்கே கொண்டு இறைவனிடம்  தன்னை முழுமையாக அர்பணித்தல் என்பதாகும்

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை: 'கல்வி கற்பது அறிவுக்காக. நாம் எவ்வளவு கல்வி கற்றாலும் அதிலிருந்து அறிந்து கொண்ட அறிவுக்கு மேல் இன்னும் அறியவேண்டிய அறிவு இருந்து கொண்டே இருக்கிறது; அந்த அறிவின் எல்லை எங்கே முடிகிறது என்று நாடுகின்றபோது அது நாமறிந்த அறிவுக்கு எட்டாததாக இருக்கிறது; ஆகவே நாம் அறிந்து கொள்ள முடியாத அறிவு இருந்து கொண்டே இருப்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது; நம் அறிவுக்கு எட்டாத அந்த அறிவின் பூரணத்தைத்தான் 'வாலறிவன்' என்றும் 'பகவன்' என்றும் சொல்லுகிறோம். அந்தப் பகவான் என்ற பூரண அறிவிற்கு மிகவும் குறைந்ததுதான் நம்முடைய அறிவு என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டால் நாம் கற்ற கல்வியின் பயன் என்னவோ! ஒப்புக் கொண்டால் அதற்கு வணங்க வேண்டும்"

இந்திய ஞான மரபில் - இறைவனை வணங்குவதோடு,  இறைவனின் வெளிப்பாடாக இயற்கை எனும் பஞ்ச பூதங்கள்  போற்றுவதும்,  இறைவனின் அம்சம் என்பதை வள்ளுவர்- வான் சிறப்பு என 10 குறட்பாக்களோடு இரண்டாவது அதிகாரத்தை இயற்றினார். பஞ்ச பூதங்கள் சேர்ந்த கலப்பே மனிதன் என்பதை பூதங்கள் ஐந்தும் அகத்தே என குறள் 267ல் கூறுவதாலும் அறியலாம். 

மழை இல்லாது போனால் தமிழர் இறிஅவன் திருக்கோவிலில் அன்றாட நடத்தும் பூஜை வழிபாடும் (பூசனை என வடசொல் தமிழில் முதல் முறை வந்து உள்ளது; பரிபாடலில் பூசை என பூனைச் சுட்டும் சொல் உள்ளது), பண்டிகை என விழாக்களும் நடவாது போகும் என்கிறார்

மனித வாழ்வில் திருமணம் செய்து பொருள் இட்டும் 'மனைவி, பிள்ளை, பெற்றோர் உடன் இல் வாழ்வான்'; மற்றும் துறவு வாழ்க்கை. இல்வாழ்வான் செய்ய வேண்டிய  அறங்களான தானங்களும்; துறவி செய்யும் தவமும் மழை இல்லை என்றால் இல்லாது போகும் என தமிழர் வாழ்நிலையைக் காட்டி உள்ளார்.

திருப்பரங்குன்றமே இமயமலைதான் என்கிறார் சங்ககாலப் புலவர் நல்லந்துவனார். அதெப்படி? சொல்கிறார்:
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்றவனிடைத் தோன்றி
உலகிருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்துரை இருவரும் திருந்துநூல் எண்மரும்
ஆதிரை முதல்வனிற் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன்திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரணமாகப்
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்
துழாய் சூடியிருக்கும், தாமரைமலர்மீது வீற்றிருக்கும் லக்ஷ்மியைக் கொண்டிருக்கும், கருடக் கொடியை உடையவனாகிய விஷ்ணு, ரிஷபத்தின்மீது ஊர்பவனாகிய சிவன், தாமரைமேல் இருக்கும் பிரமன்,
பன்னிரு ஆதித்தியர்கள், அசுவினி தேவர்கள் இருவர், அஷ்ட வசுக்கள், பதினொரு ருத்திரர்கள், திசைகாப்போர் (திக்பாலர்கள்) எனும் இந்திரன், நிர்ருதி, யமன், அக்னி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர், சப்த ரிஷிகள், பிற தேவர்கள், அசுரர்கள் என அனைவருமே குமரனைக் காண, போற்றிவணங்க திருப்பரங்குன்றம் வருவதனால், திருப்பரங்குன்றமானது, சிவன் வசிக்கும் கைலாயத்துக்கு ஒப்பானது.

 

இதுதான் சங்கத்தமிழ் காட்டும் சனாதனம்.
 இனியவை நாற்பது கடவுள் வாழ்த்து - கண் மூன்று உடையான்
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே
தொல் மாண் துழாய் மாலையானை தொழல் இனிதே
முந்துற பேணி முகம் நான்கு உடையானை
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது

எவை நன்மை தரும்:
மூன்று கண்களைக் கொண்ட சிவனின் அடி பணிதல், 
பழமையான சிறப்புமிகுந்த துளசி மாலை அணிந்த திருமாலைத் தொழுதல், 
முகம் நான்கு கொண்ட பிரம்மனை வழிபடுதல், 
ஆகியன நன்மை தருவனவாம்


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
கிருக்குறளின் அறக் கடவுளும், முந்தைய அற நூல்களும்
Permalink  
 


 

கடவுள் வாழ்த்து - முக்கண் பகவன் அடி

முக்கட் பகவ னடி தொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.
 
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
முக்கண் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா
சக்கரத்தானை மறப்பு இன்னா ஆங்கு இன்னா
சத்தியான் தாள் தொழாதார்க்கு
 
எவை துன்பம் தரும்:
முக்கண் கொண்ட சிவனை வழிபடாமை, 
பனைக்கொடி கொண்ட பலராமனை நினையாமை, 
சக்கரப்படை கொண்ட மாலவனை மறத்தல்,
சக்தியான் வேலவனை வணங்காமை, 
ஆகியன துன்பம் தருவனவாம்

திருவள்ளுவர் கூறுவதை நாம் முழுமையாகக் அறிந்திட 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களையும் கற்று, வள்ளுவர் போற்றிய மெய்யியல் மரபு வழியில் செல்ல வேண்டும். 

வள்ளுவர் கற்க  என்ற உடனேயே கசடு அறக் கற்க என்றார். 19ம் நூற்றாண்டு தொடங்கி தமிழகத்தில் காலனி ஆதிக்க மதமாற்ற சக்திகள் பரப்பி உள்ள வெறுப்புணர்ச்சி தூண்டும் நச்சு ஊகக்  கருத்துக்கள் இன்றும் ஒரு குறுங்குழுவால் வளர்க்கப் படுகிறது. அந்த அடிமைகளாக எழுந்த திராவிடியார் கழகங்களும், நவீன தமிழ் புலவர்களும் வள்ளுவத்தில் வெகு சில குறட்பாக்களை, பெரும் அளவில் தவறாக பொருள் செய்து வள்ளுவத்தை சிறுமை செய்வது தொடர்கிறது. இன்று தமிழக பல்கலைக் கழக திருக்குறள் துறைப் பேராசிரியர்கள், இணைய தளத்தில் உள்ள பல கட்டுரை நூல்களுமே- வள்ளுவர் உள்ளத்திற்கு எதிரானதாகவே உள்ளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard