New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறம் ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு


Guru

Status: Offline
Posts: 24603
Date:
திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறம் ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு
Permalink  
 


 

திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறம் ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு

 

திருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல. அணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில் பேசிக்காட்டும் அசாத்தியத்தில் தான் அது குறள்.

 

அந்தப் பத்துக் குறட்பாக்களில், பேசப்படும் அறக் கருத்து வரையறுக்கப்படும். அதன் அவசியம் விளக்கப்படும், விளைவுகள் சொல்லப்படும், அதாவது அறம் கடைப்பிடிப்பதின் மேன்மையும், அறத்தைக் கடைப்பிடிக்காததின் கீழ்மையும் குறிக்கப்படும். கூர்ந்து நோக்கினால், சில கருத்துக்களை நிறுவுவதற்காகக் காணும் நடைமுறை நிகழ்வுகளைச் சான்றாகக் காட்டும் அனுபவ அணுகுமுறையும் கையாளப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு அறக் கருத்தென்னும் வைரத்தின் பன்னிறங்கள் பத்துக் குறட்பாக்களில் பட்டை தீட்டப்பட்டிருக்கும்.

திருக்குறள் வாசிப்பு- ஒரு அதிகாரத்தில் குறட்பாக்கள் அளவில்

இப்படி ஒவ்வொரு அறக்கருத்தையும் பத்துக் குறட்பாக்களில் வாசிக்கும் போது சில சமயங்களில் ஒரு அதிகாரத்தில் பேசப்படும் அறக் கருத்தின் கட்டமைப்பும் உன்னதமும் இப்போது இருக்கும் நிரல் முறையில் அல்லாமல் வேறு நிரல் முறையில் இருந்தால் இன்னும் உன்னதம் கூடி நிகரற்று விளங்குமோ என்று தோன்றும்.

இது உள்வயமானது என்று சிலர் புறந்தள்ளலாம். இப்போது இருக்கும் ஒவ்வொரு குறட்பாக்களின் நிரல் முறையும் உள்வயமானதென்று இருக்கும் போது இன்னொரு நிரலில் அமையும் உள்வயமான வாசிப்பு ஒரு அறக்கருத்தைக் கூடுதலாய்ப் பட்டை தீட்ட முடியுமென்றால் திருக்குறள் என்ற நிகரற்ற படைப்பு வாசகனுக்குத் தரும் வாசிப்பு சுதந்திரம் அது. அரவிந்தர் திருக்குறளின் கடவுள் வாழ்த்தையும், வான் சிறப்பின் ஐந்து குறள்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

திருக்குறளின் கடவுள் வாழ்த்தை அரவிந்தர் மொழி பெயர்த்துள்ள விதம் போப், சுத்தானந்த பாரதி போன்ற மற்ற மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து வித்தியாசமாக மூலத்தின் உண்மையையும், உயிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது. அதற்கு அரவிந்தருடைய ஆன்மீக அனுபவம் காரணமாய் இருக்க வேண்டும். ஆனால் சுவாரசியமானது என்னவென்றால் கடவுள் வாழ்த்தின் பத்துக் குறட்பாக்களை மொழி பெயர்க்கும் போது அவர் நிரல்படுத்தியிருக்கும் முறை வழக்கமாக கடவுள் வாழ்த்தில் நாம் வாசிக்கும் பத்துக் குறட்பாக்களின் நிரல் முறையை 1,2,3,4,5,6,7,8,9,10 என்பதற்கு பதிலாக 1,2,3,7,8,4,5,6,10,9 என்று மாற்றியமைக்கிறார். இந்த நிரலை 1,2,3,6,7,8,4,5,10,9 என்று சிறிது மாற்றியமைத்தால் இன்னும் வாசிப்பு அனுபவம் மிகைப்படும். சொல்லப்படும் முறையிலும், கருத்தாக்கத்திலும் மூன்றாவது, ஆறாவது குறள்கள் இயைபுடையதாயிருக்கின்றன.

இதேபோன்று ஏழாவது, எட்டாவது குறள்களும், நான்காவது, ஐந்தாவது குறள்களும் முறையே இயைபுடையதாகி வாசிப்பு அனுபவத்தைக் கூட்டுகின்றன. இறைவனைச் சார்ந்தோருக்குச் சேரும் நலன்களைச் சொல்லும் நான்காவது, ஐந்தாவது குறள்களோடு பத்தாவது குறள், அடையும் நலன்களின் மலையடுக்குகளில் இறுதி உச்ச அடுக்கைச் சொல்வது போல இருக்கிறது.

திருக்குறளின் இந்த ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவம் வாசிக்கும் யாருக்கும் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக அறன் வலியுறுத்தல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான்காம், ஐந்தாம் குறள்கள் அறத்தை வரையறுக்கின்றன.

அறத்தின் சிறப்பை ஒன்றாம் இரண்டாம் ஒன்பதாம் குறள்கள் பேசுகின்றன. ஆறாம், எட்டாம் குறள்கள் அறம் செய்ய வேண்டிய காரணங்களைச் சொல்கின்றன. மூன்றாம், பத்தாம் குறள்கள் அறம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அதற்கு நடைமுறை உண்மையைச் சொல்வதாய் ஏழாவது குறள் அமைகிறது.

ஆக அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் வாசிப்பு அனுபவத்தில் 4,5,1,2,9,6,8,3,10,7 என்று குறள்களை நிரல் மாற்றி வாசிக்கும் போது அறன் வலியுறுத்தல் என்ற கருத்தாக்கத்தின் முழுப் பரிமாணமும் ஒருங்கிணைந்த வாசிப்பாய் மனதில் பிடிபடுகிறது. இன்னொருவருக்கு, இது வேறு விதமாகவும் அமையலாம். இங்கு வலியுறுத்தப்படுவது வழக்கமான நிரல் முறை வாசிப்பில் திருக்குறளின் மகோன்னதம் முழுதும் மனத்தில் பிடிபடாமல் போய் விடும் சாத்தியம் இருக்கிறது என்பதைத் தான். இது ஒரு அதிகாரத்தின் கீழ்வரும் பத்துக் குறட்பாக்களின் வாசிப்பை விட, அடுத்த தளத்தில் அதிகார முறைமையில் வாசிக்கும் போது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

திருக்குறள் வாசிப்பு- அதிகார அளவில்

திருக்குறளின் அறத்துப்பால், பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற நான்கு இயல்களாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இயலும் அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இல்லறத்துக்கான அறங்களைப் பேசுவது இல்லறவியலாகவும் துறவறத்துக்கான அறங்களைப் பேசுவது துறவறவியல் எனவும் இல்லறவியல், துறவறவியலுக்கான வகைப்படுத்தலை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இப்படி எளிதாகக் கோடு போட்டுக் கொண்டு வாசிப்பது ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதாக இல்லை.

இல்லறவியலில் வைக்கப்படும் அறக்கருத்துக்களுக்கும் துறவறவியலில் வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அப்படியொன்றும் பாகம் பிரிப்பது போல் பிரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை என்று துறவறவியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் கருத்துக்கள், துறவறவியலுக்கு மட்டுமே உரித்தானது என்பது கண்மூடிய நிலைப்பாடாகத் தான் இருக்கும். இந்தக் கருத்துக்கள் இல்லறவியலுக்கும் இல்லறத்தின் நடைமுறைக்கேற்ற அளவில் பொருத்தமானவை தாம். அதேபோல் பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம் போன்ற கருத்தாக்கங்கள் இல்லறவியலுக்கு மட்டுமே உரித்தானவை என்ற நிலைப்பாடும் அறிவுக்கு முழுதும் ஒப்புடையதாய் இல்லை. துறவற நிலையினும் இந்த அறக்கருத்துக்களுக்கு ஒரு பொருத்தம் இருக்கிறது.

ஆக துறவறவியல், இல்லறவியல் என்ற பகுப்பு பல்வேறு அறக்கருத்துக்களிடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மறுதலிக்கிறது. ஆனால் அதிகாரங்களின் வரிசைக்கு, சொல்லப்படும் காரணங்கள் அவ்வளவு ஒப்புடையதாக இல்லை. சில அதிகாரங்களின் வரிசைக் கிரமத்திற்குச் சொல்லப்படும் காரணங்கள் வலிந்து நியாயங்கள் கற்பிக்கப்பட்டது போல் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்திற்கு அடுத்து பிறனில் விழையாமை என்ற அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பரிமேல் அழகரின் உரை தரும் காரணம் விசித்திரமாக இருக்கிறது. அஃதாவது காமமயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை.

இது ஒழுக்கம் உடையார் மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது என்பது பரிமேல் அழகர் உரை தரும் விளக்கம். அடுத்து பொறையுடைமை அதிகாரம் பிறனில் விழையாமை அதிகாரத்தின் பின் வைக்கப்பட்ட முறைமைக்குப் பரிமேல் அழகரின் உரை தரும் விளக்கத்தைப் பாருங்கள். "அஃதாவது காரணம் பற்றியாதல், மடமையானாதால் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன் கண் செய்யாது பொறுத்தலை உடையராதல் நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்பதற்கு, இது பிறன் இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது. இந்த மாதிரியான வைப்பு முறையில் இன்னொரு சிக்கலும் ஏற்படுறது.

ஒரு அதிகாரம் விளக்கம் பெறும் போது அதன் பெற்றி தாழ்வுறுவது போல் அதற்கான வைப்பு முறை விளக்கம் தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக நடுவு நிலைமை அதிகாரத்திற்கான விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது பகை நொதுமல், நண்பு எனும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. இது நன்றி செய்தார் மாட்டும் அந்நன்றியினை நினைத்த வழிச் சிதையுமன்றே? அவ் இடத்துஞ் சிதையலாகாது என்றதற்கு செய்ந்நன்றி அறிதலின் பின் வைக்கப்பட்டது. நடுவு நிலைமை என்ற கருத்தாக்கத்தின் தன்னளவிலான உயர்ச்சி அதற்கான அதிகார வைப்பு முறையில் சேர்த்துக் காணப்படும் போது உயர்ச்சியிலிருந்து தாழ்வுறுகிறது.

இந்த அதிகார முறைமை பற்றி ஏன் பெரிதும் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்கலாம். திருக்குறளின் பல்வேறு அறக்கருத்துக்களை உதிர்ந்த மணிகள் போல் பொறுக்கிக் கொள்ளலாமா? அல்லது பல்வேறு அறக்கருத்துக்களிடையே ஒரு தத்துவக் கோர்வை இருக்குமா என்று ஒரு மணிமாலையைக் கோர்த்துக் கொள்ளலாமா? இந்த இரு கேள்விகளில் நாமெடுத்துக் கொள்ளும் தெரிவைப் பொறுத்துத் தான் திருக்குறளில் பேசப்படும் அறத்தை நாம் மனதில் அகப்படுத்திக் கொள்ளும் திறனும் தீர்க்கமும் அமைகின்றன.

அறத்தை மொழி, மெய், மனம், சார்ந்து புரிந்து கொள்வது ஒரு தத்துவார்த்த முறை. வாழ்வின் பரிசுத்தத்தையும் மொழி, மெய், மனம் சார்ந்த பரிசுத்தங்களாக அடையாளம் கண்டு கொள்ளலாம். திருக்குறளில் அறத்துப்பாலில் பேசப்படும் அதிகாரங்களை இந்த தத்துவார்த்த அடிப்படையில் நிரல் படுத்திப் புரிந்து கொள்ள முடியுமா என்பது தான் கேள்வி, மொழி சார்ந்த அறங்களாக இனியவை கூறல் புறங்கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை போன்ற அதிகாரங்கள் அடங்குகின்றன.

அடுத்து மெய் சார்ந்த அறங்களாக கீழ்க்கண்ட அதிகாரங்களை அடையாளம் காணலாம் - பிறனில் விழையாமை, வெஃகாமை, புலால் மறுத்தல், கள்ளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை மூன்றாவதாக மனம் சார்ந்த அறத்தை, முன்னால் குறிப்பிடப்பட்டது போல்

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

அனைத்து அறன்.

ஆகுல நீர பிற

என்று திருக்குறள் மையப்படுத்திச் சிறப்பிக்கிறது. இந்தக் குறளை அடுத்து வரும் குறள் முன்னாலே குறிப்பிடப்பட்டது தான்.

அழுக்காறு, அவா வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

மனம் சார்ந்த அறத்தின் பண்புகளாகக் கடிந்தொழுக வேண்டியவற்றில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் குறிப்பாகச் சொல்லப்படுன்றன. கடிந்தொழுக வேண்டிய இந்த நான்கு பண்புகளை விரித்துரைக்குமுகமாக அழுக்காறாமை, அவா அறுத்தல், வெகுளாமை, பொறையுடைமை என்ற நான்கு அதிகாரங்கள் அமைகின்றன. ஆக, மொழி, மெய், மனம் சார்ந்த அறங்கள் ஒழுக்கத்தின் அடிப்படையாய் அமைய, இதன் பின்னணியில் ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம் என்ற இரு அதிகாரங்களையும் இணைந்து வாசிக்கும் போது சில குறள்களின் அர்த்தங்கள் ஆழம் பெறுகின்றன.

அற ஒழுக்கத்தின் அடுத்த கட்ட மன நிலைகளாக அன்புடைமையையும் அருளுடைமையையும் நாம் தேர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த மன நிலைமைகளை பெளத்தத்தில் பேசப்படும் கருணா, மைத்ரி என்ற நிலைகளோடு ஒப்பிடலாம். கருணா என்பது சக மனிதர்களோடான அன்பாகவும், மைத்ரி என்பது சக உயிர்நிலைகளோடான அன்பாகவும் (மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு (குறள் 244) பரிணமிக்கின்றன. அருளுடைமை குறித்து "அதாவது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை என்று பரிமேல் அழகர் உரையும் குறிக்கிறது. அன்புடைமை பற்றி 'இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள் மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயன் ஆலின் இது வேண்டப்பட்டது. என்று பரிமேல் அழகர் உரை சொல்லும் போது அன்புடைமையை இல்லறத்தாரோடு என்று பொருத்திப் பார்ப்பதை விட சக மனிதர்களோடு என்று பொருத்திப் பார்த்துக் கொள்வது நல்லது. இதை அன்பிடைமை அதிகாரத்தில் வரும் குறள்களை வாசிக்குங் கால் உணரலாம்.

ஆக எதைக் கருதி மொழி, மெய், மனம் சார்ந்த மேற் சொன்ன அறங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு மெய்யுணர்தலைக் கருதியே அது இருக்க முடியும் என்ற அளவில் திருக்குறளின் மெய்யுணர்தல் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். புத்த கோசர் தனது "தூய்மையுறுவதற்கான வழி என்ற நூலில் மூன்று அடிப்படை மாசுக்களைக் குறிப்பிடுகிறார். அவை பேராசை (மிrலீலீனீ), வெறுப்பு (சிatrலீனீ), காமம் (யிnஜீatuation) என்பவை.

இவை சக்தி, எண்ணெய் போன்று தம்மளவில் மட்டும் மாசானவை அல்ல; மற்றவற்றையும் மாசுடையாக்குபவை என்பார் அவர். புத்த கோசரின் மூன்று அடிப்படை மாசுக்களைப் போலவே, திருக்குறளின் மூன்று அடிப்படை மாசுக்கள்- காமம், வெகுளி, மயக்கம்- மெய்யுணர்தலுக்குத் தடையாக உள்ளன. மயக்கம் என்பதை அறியாமை, அல்லது அகந்தை என்று பொருள் கொண்டால், விருப்பு (காமம்), வெறுப்பு (வெகுளி) என்ற மனம் சார் நிலைகளான் மாசுக்கள் மெய்யுணர்தலுக்குத் தடையாகின்றன. இந்தக் கருத்து 'யான் எனது என்னும் செருக்கு அறுப்போன் என்று வரும் குறளில் (குறள் 346) மேலும் விளக்கம் பெறுகிறது.

'தான் இல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை எனது என்றும் கருதி அவற்றின் கண் பற்றுச் செய்வதற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் என்று பரிமேல் அழகர் உரை விளக்கம் சொல்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் "தான்" என்பது உடல் உபாதைகளால் பாதிக்கப்படாது உடலினின்றும் தனியாய் என்றும் நிலையாய் அனுபூதியாய் ஒளிரும் ஆத்மா என்ற ரீதியில் சொல்லப்படவில்லை. "தான்" "எனது" என்னும் அகந்தை நிலைகளை அகற்றி ஒரு அகண்ட பிரக்ஞையைச் (Cosmic Consciousness) சுட்டுவதாய்த் தான் இருக்கிறது. இந்தக் கட்டத்தில் தவம் அதிகாரத்தில் வரும் 'தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் வரும் "தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (குறள் (268) என்ற குறளையும் நினைவு கூர்வது பொருத்தமானது. ஆக, நிலையாமை, தவம், துறவு, மெய்யுணர்தல் என்ற அதிகாரங்களை ஒருங்கு கூடி வாசித்தால் திருக்குறளின் அறத்தின் இலக்கு என்னவென்று புரிந்து கொள்ள உதவும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறம் ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு
Permalink  
 


தமிழில் அறஇலக்கியங்கள் – ஓர் அறிவியல் பார்வை

 
அறிவின் ஆற்றல் இற்றைநாளில் சூழலுலகென (Universe) விரிந்து அளப்பரிதாய் விளங்குகின்றது. மானுடச் சிந்தனைக் கதிர்களின் ஒளிச் சிதறல்கள் கலைகளின் தொடக்கம் என்பர் அறிவோர். பண்டைக் காலத்தில் அறிவியல் பொருண்மைகளும் கலையின் கலவையில் ஒளிர்ந்தன. தமிழ்ச் செம்மொழி இலக்கியங்கள் மேற்கணக்கு, கீழ்க்கணக்குப் பகுப்பில் பலுக்கப் பெறுகின்றன. இவற்றுள் கீழ்க்கணக்கில் சுட்டும் அறஇலக்கியங்கள் அறிவியல் பார்வைக்கு உரியனவாய் இலங்குகின்றன.
 
நோக்கம்
 
பதினெண்கீழ்க்கணக்கின் பதினோர் நூற்கள் அறத்தின் சிறப்பைப் பதிவுறு செய்கின்றன. மூன்று இலக்கியங்கள் மருந்துப் பொருட்களை நயமுற நவிலுகின்றன. இவையொத்த அற இலக்கியங்கள் எதிரொளிக்கும் கணிதம், மருத்துவம், வாழ்வியல், நீரியல், குடும்பக்கலை, சுற்றுச்சூழலியலன்ன கருத்துகள் நடைமுறை அறிவியல் அணுகுமுறைக்கு ஒட்டியுள்ளதை எடுத்துரைப்பது இவ்ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
 
தமிழ்மொழி அமைப்பும் செவ்வியல் பகுப்பும்
 
‘உலகம் எண்களால் ஆனது’ என்பர் கிரேக்க கணிதவியலறிஞர் பித்தகோரசு. தமிழர் சிந்தனையின் பதிவுகள் எண்ணைத் தொடக்கமாகக் கொண்டது. நிலம், தீ, நீர், வளி, விசும்போடைந்தும் கொண்டதுதான் உலகம் என்று வரையறை செய்யும் தொல்காப்பியர், அய்ந்துத் தனிமங்கள் (Elements) என்று எண்களால் குறிப்பிடுவது நோக்கற்பாலது.ஒருவர் காவியம் கற்காமல், கவிதையைப் படிக்காமல் இருந்துவிடலாம். ஆனால், கணக்கைக் கற்காமல் இருக்க முடியாது. அதனால்தான் நம் முன்னோர்கள் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றும், எண் எழுத்து இகழேல்என்றும் கூறியுள்ளனர்.
 
        வள்ளுவரோ,
 
        எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
        கண்ணென்ப வாழும் உயிர்க்கு  என்று எண்ணுக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளதைக் கவனித்தாலே, கணக்கின் முக்கியத்துவம் தமிழ்ச் சிந்தனையில் கால்கொண்டுள்ளதைத் தெரிய வைக்கின்றது.
 
        இயற்கையாகத் தோன்றிய மொழிகளுள் தாய் போன்றது தமிழ் என்கின்றார் பாவாணர். தமிழ் மொழியின் அமைப்பு எண்களால் சுட்டி விளக்குவதற்கு இசைவானது. இதனைத் தமிழ்ச் சான்றோர் தமிழ் நெடுங்கணக்கு என்று இயம்புவர். தமிழ் நெடுங்கணக்கின் பெரும எல்லை 247 எழுத்துகளாகும். இவை உயிர், மெய் என 2 ஆகி முறையே 12, 18 என விரியும். இவ் உயிரும், மெய்யும் புணர உயிர்மெய் 216 உய்யும். இவையும் 3 வகைமையாக வல்லினம் 6, இடையினம் 6, மெல்லினம் 6 எனச் சொல்லப் பெறுகின்றன.
 
        இயல், இசை, நாடகம் என 3 ஆகி, அகம், புறமென அமுதத் தமிழ் 2 தொகையாகின்றன. மேற்கணக்கில் 18, கீழ்க்கணக்கில் 18 என அடிநிமிர்வில் பகுவாய்க் கணக்கிற்குப் பக்குவப்படுகின்றதைக் காணமுடிகின்றது.
 
                நான்கு அடிகளுக்கு மேற்பட்டு ஈறிலியாய் அமையும் அடிகளைக் கொண்டமைவனவற்றை மேற்கணக்கென்றனர். நான்கு அடிகளுக்குட்பட்டவற்றை கீழ்க்கணக்கு என்றனர். இப்பதினெட்டையும் மிகச் சுருங்கியகணித வாய்பாடன்ன வெண்பாவில் நெடுவெண்பா, குறுவெண்பா என்றளந்து கட்டினர். இவ்வாறு அடிவரையறை, சுருக்கம், உரிய சொற்சொட்டும் கொண்ட வெண்பாக்களால் ஆனது 18 கீழ்க்கணக்குப் பனுவல்களாகின்றன. வெண்பா 4 அடிகளையும், குறுவெண்பா 2 அடிகளையும் கொண்டது. நாலடி வெண்பா போன்று இலக்கியங்களை எண்களால் குறிப்பிடும் போக்கில் கணிதவியல் சிந்தனைக்குத் தலைமையிடம் கொடுத்தவர்களாகத் தமிழ்ச் சான்றோர் திகழ்ந்தனர் என்பதை, பழங்காலத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை, கணக்காயர் என்று அழைத்தமையும், கணக்கின் சிறப்பை விளக்கும் என்று பூவண்ணன் தமிழிலக்கியப் புலத்தில் காணும் கணிதவியலின் ஆளுமைக்கூறு உறுதியாக அறிவிக்கின்றது.
 
கணிதவியலும் பதின்மவியலும்
 
பதினெண் கீழ்க்கணக்கு நூற்களை இயற்றியவர் கணிதத்தில் வல்லுநராய் விளங்கியுள்ளனர். இப்பனுவல்களின் பெயரமைப்பு எண்களால் சுட்டப் பெறுகின்றன. குறள் என்ற சொல் ஈரடிகளால் ஆன குறுவெண்பாவினைக் குறிக்கின்றது. நாலடியார், நான்மணிக்கடிகை, கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அய்ந்திணை அய்ம்பது, அய்ந்திணை எழுபது, திணைமொழி அய்ம்பது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம் ஆகிய 14 நூற்கள் எண்களின் பெயராலேயே விளிக்கப் பெறுவது நினைவுகூரத்தக்கது.
 
        அண்மைக்கால அறிவியலின் அளவையியலில் காணும் பதின்ம முறை (தசம முறை) கணக்கீட்டு எளிமைக்கும், சீர்மைக்கும் கையாளப் பெறுகின்ற அறிவியல் அணுகுமுறை. இவ்வெளிய முறை, சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப்பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து என்ற முதுமொழிக் காஞ்சி மொழிதலில் காணமுடிகின்றது. தமிழ்ச் சிந்தனையில் முகிழ்த்த இப் பதின்ம இலக்க முறைக்குரிய கணித அறிவியலுக்கு, சிந்துவெளி மக்களிடையிலும் 10, 100 எனப் பதின் (தசம) மடங்கு எண்கள் தென்னாட்டுத் தமிழரிடமிருந்தே சென்றுள்ளன என்று முனைவர் இரா.மதிவாணனின் கூற்று முன்மொழிவாக அமைகின்றது. முதுமொழிகள் அல்லது மூதுரைகள் அறிவியல் நூல்களுக்குத் தொடக்கமாகத் தோன்றுகின்றன எனும் முனைவர் க.த.திருநாவுக்கரசு ஆய்வறிவிக்கை தமிழரின் கணக்கியல் அறிவியலுக்கு வழிமொழியாகி வலுவூட்டுகின்றது.

 
அறநெறிகளும் மருத்துவக் கருத்துகளும்
 
அறிவியலில் உண்மையும் கருத்தும் கலந்து முதலிடம் பெறுகின்றன. இலக்கியங்களில் புனைவும், கற்பனையும் இழைந்த வருணனைகள் முன்னிலை வகிக்கின்றன. தமிழ் மருத்துவம் எனும் சித்த மருத்துவம் பல மருந்துப் பொருட்களைக் கொண்டது. இதனைத் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் ஆகிய நூற்கள் இனிது நுவலுகின்றன. கடுக்கும் குணமுடைய பொருட்களான சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அன்றி இம்மூன்றையுமோ உணர்த்துவது திரிகடுகம். மக்களின் உடல் நோயைப் போக்கும் திரிகடுகம் போன்று இந்நூலின் பாடல்தோறும் உரைக்கப் பெறும் மூன்று கருத்துகள் மக்களின் உளநோய்களைப் போக்கும் மருத்துவ முறைக்குச் சான்றாக விளங்குகின்றன.
 
        மானுடர் நோய்கள் பற்பல. இவற்றுள் மூப்பு என்பதும் ஒருவகை நோய் என்பர் மருத்துவ அறிவியலர். இதற்குரிய மருத்துவ முறைக்கு மூப்பியல் (GERIATRIC MEDICINE)  என்று பெயர். இம்மருத்துவத்தால், மனிதருடல் விரைவில் மூப்படையும் காலத்தை / போக்கைத் தள்ளிடப் போட இயலும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர். மருத்துவ அறிவியலின் இவ்வணுகுமுறை ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்புடைய மக்களைப் பெற்றவர்கள். மூப்பெனும் நோய் அளந்து காக்கும் மருந்துப் போன்றவர்கள் என்ற திரிகடுக நூலின் கருத்துகளில் எதிரொளிக்கக் காணமுடிகின்றது. ஏவா மக்கள் மூவா மருந்து என்ற முதுமொழியும் இதனைச் சுட்டுகின்றது. இவ்வாறு, அற இலக்கியங்களுக்கு உயிராக விளங்குவன கருத்துகள் என்பதால் அற இலக்கியங்கள் ஓர் அறிவியல் பண்பைப் பெற்றுள்ளதை நிறுவிடவியலுகின்றது.
 
அறிவியலில் இலக்கியப் போக்கு
 
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது திருமூலரின் திறம்பா கருத்து. உடம்பை வளர்க்கும் முறைமை தெரியின், உடலுடன் உயிர் வளர்க்கும் திறன் பெறவியலும். கல்லாமை நோய்க்கு மருந்து கல்வியாகிறது.உடல்நோயொத்து உயிர்க்கும் நோய்கள் பற்பல. பொய், கொலை, புலால் உண்ணுதல், களவு என்பன உயிரைப் பற்றும் நோய்கள். இவற்றிற்கு மருந்தாவன அருளுடைமை, மெய்ம்மை, புலால் உண்ணாமை, திருடாமை ஆகியன. சிறு வழு துணைவேர், நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், கண்டங்கத்தரி வேர் என்ற அய்ந்து வேர்களும் மக்களின் உடல்நோயைத் தீர்க்கவல்ல மருந்துகள். இதனையொத்து, சிறுபஞ்சமூலம் நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பெறும் அய்ந்து கருத்துகளும் மக்களின் அறியாமைப் பிணிக்கு மருந்தாவன அறக்கருத்துகள் என்று மருத்துவ அறிவியலை உவமைப்படுத்துகின்றது. தமிழ் அற இலக்கியத்தின் இப்போக்கு, இலக்கியத்தில் அறிவியல் கூறுகள் காணக் கிடைப்பன போன்று, அறிவியலில் ஓர் இலக்கியப் போக்கு இழையோடி மிளிர்வதைப் பதினெண் கீழ்க்கணக்கு நூற்கள் பகலவ ஒளியாய் எதிரொளிக்கின்றன.

 
நீரியல் அறிவியல்
 
உலகம் என்பது உயிர்கள் உள்ளடங்கியது. உயிரிகளுக்கு நீர் மூலப்பொருள். நீரின்றி உலகு அமையாது என்பது தமிழரின் அறிவுக் கோட்பாடு. இந்நீரும் வான்மழையின் மூலமே இவ்வுலகு பெறுகின்றது என்கிறார் திருவள்ளுவர்.
 
        மழை நீரின் அறிவியல் கண்டுபிடிப்பை குழந்தைசாமி மாதிரியாக உலகம் முழுவதும் பொறியியல் மாணவர்களால் கற்கப் பெறுகின்றது. நீர்நிலைகளில் உள்ள நீர் கதிரவ வெப்பத்தால் ஆவியாகிறது. இது வானில் முகிலாக உருவாகின்றது. இம்முகில் குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிந்து நீர்நிலைகளில் தேங்குகின்றது. இது நீர் சுழற்சி என்று நீரியலில் சொல்லப் பெறுகின்றது. இந் நீரியியல் அறிவியல் (hydrology’s) கருத்து, உப்பு நீரைக் கடலிலிருந்து முகந்து ஆவியாகி, பின் மழை நீராகிய நன்னீரைப் பொழிகின்றது. அதுபோல் நற்பண்புடையார் தீதகற்றி மாண்புடையராக மக்களுக்குப் பயன்படுவர் எனும் அறக்கருத்தில் காண ஏதுவாகின்றது. அற இலக்கியத்தின் இப்பதிவு ’கடல்நீர் குடிநீர் (நன்னீர்) ஆகும் பண்புடையது’ எனும் அறிவியல் உணர்வுடன் ஒத்திருக்கும் உண்மை புலனாகின்றது.
 
அறநெறியியலில் அளவையியல்
 
அறிவியலுக்கு எண்ணிக்கையும் அளவீடும் (Measurement) இன்றியமையாத அடிப்படைகள். தமிழ் அறநெறி இலக்கியங்களில் ஒன்றான ஏலாதியில், ஏலம் ஆகிய ஆறுபொருள்கள் சேர்ந்த ஒருவகைச் சூர்ணம் ஏலாதி என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப் பட்டை இரண்டு பங்கு. நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நான்கு பங்கு, திப்பிலி அய்ந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படிச் சேர்த்து ஆக்குவதைப் போன்று, உயிருக்கு உறுதுணையான அறநெறியை உரைக்கும் ஒப்புமை நீர்மையில் இப்பெயரைப் பெற்றுள்ளது என்ற கூற்றிலிருந்து அறிவியலின் அடிப்படைப் பண்பான அளவீடு, மருந்தியல் முறைகளுக்கு முதலிடம் கொடுக்கப் பெற்றுள்ளதை அறிய இயலுகின்றது.
 
 
முக்காலத்து உண்மை அறிவியலின் தன்மை
 
தற்காலத் தன்மை (Presence) அறிவியலின் உயிர்நாடி போன்றது. அதனுடன், முற்கால, பிற்காலத் தன்மைகளும் இன்றியமையாதன. இயற்கையின் அகப்புற நிகழ்வுகளின் உண்மைகள் தமிழ் அற இலக்கியங்களின் மாறா விதிகளாக (Laws) இடம் பெற்றுள்ளன. இதனை, எக்குடியிலும் நன்மக்கள் தோன்றுவர்உயிர்கள் பிறக்கும்போதே மறைகென மறையாதுஇறக்கும்போது நிலவென நில்லாதுவிண்மீன், திங்கள், கதிரவன் என்றும் உள்ளவை; நோயும் முயற்சியும் (சிகிச்சையும்) என்றும் உள்ளவை; ஈவாரும் ஏற்பாரும் என்றும் உள்ளனர். பிறப்பார் இறப்பார் என்றும் உள்ளனர் என்ற இயற்கையின் நிலைத்த முடிபுகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றதை அறிய ஏதுவாகின்றது.

 
குடும்பக்கலை
 
கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், சுற்றத்தினர் கொண்ட நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்பது தமிழ்ப் பண்பாடு. இத்தகையக் கூட்டுக் குடும்பம் சிதைவுற்று வருகின்றது. குடும்பச் சிக்கல்களும், மணமுறிவுகளும் மிகுகின்ற காலமிது. இச்சூழலில், இளமையில் கல்வி நல்குதல், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதல், சான்றோர் வழிச் செல்லுதல் உயர்ந்த அறங்கள் என்று தமிழ் அறநெறி இலக்கியங்கள் காட்டும் குடும்பக்கலை (Science of Family Life) கருத்துகள் ஏற்புடையனவாகின்றன.
 
சூழலியல் அறிவியல்
 
இயற்கையுடன் இயைந்த வாழ்வியலைப் பழந்தமிழர் மேற்கொண்டனர். இற்றைச் சூழலியல் பேரிடர்க்குப் பழந்தமிழ்ச் சுட்டும் திணை ஒழுக்கமும், திணைத் தொழில் நுட்பமும் தீர்வாக அமைகின்றன என்பர் சூழலியல் அறிவியலர். இக்கருத்தை எதிரொலிக்கும் வகையில், அறச் செயல்களுக்கும் இயற்கை நெறிகளுக்கும் நெருங்கியத் தொடர்பு நிலவுகின்றது. மன்னனும் மக்களும் நெறி தவறி நடந்தால் இயற்கை தன் நிலை மாறும். குடிமக்களை வருத்தி வரி வாங்கும் மன்னனின் நாட்டில் மழை பெய்யாது. பொய் பேசுவோர் நாட்டில் மழை பெய்யாது. வலிமை வாய்ந்த இயற்கையை நெறிப்படுத்தும் ஆற்றல் அறத்திற்கு உண்டு என்ற திரிகடுகப் பாடல் கருத்து எடுத்தியம்புகின்றது.காவோடு அறக்குளம் தொட்டல் மிகவினிதே என்ற மூதுரையும் இங்கு எண்ணிப் பார்க்கப் பொருத்தமாகின்றது.
 
முடிவுரை
 
தமிழில் ஒளிரும் அற இலக்கியங்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நாடிய வேட்கையில் தேடிய மணிகளாக விளங்குகின்றன. அவை, புறப்பொருள்களின் மறைபொருள்களைப் பேரார்வத்தோடு துருவித் துருவி ஆய்ந்து காண்பது அறிவியல்; அகப்பொருளின் மறைபொருளை ஆய்ந்து காண்பது இலக்கியம் எனும் இரு பொருண்மைகளும் ஒருசேர அமைந்த அறிவியல் இலக்கியம் எனும் வகைமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தமிழின் மூத்த குடிகளில் முக்கியமான குடியினர் பார்ப்பனர் எனும் அந்தணர். இது சாதியப் பிரிவு இல்லை, தொழில் முறைப் பிரிவு. தமிழின் மிக முக்கிய நூல்களான பொ.ஆ.7ம் நூற்றாண்டின் தொல்காப்பியம்,  பொ.ஆ. 9ம் நூற்றாண்டின் இயற்றியவர்கள் அந்தணர்களே. சங்கப் புலவர்களில் பலப் பிரிவு போலே அந்தணர்களும் நிறைய உண்டு.

திருவள்ளுவர் தமிழருள் இருந்த பல மூட வழக்கங்களை கண்டிக்கவே திருக்குறள் எழுதினார் என யாரும் சொல்வது இல்லை.

பாட்டுத் தொகை நூல்களில் பரத்தையர் நட்பு பெருமையாய் பேசுகிறது.

கள் குடித்தல், வெளிநாட்டு சாராயம்(ஏசுவின் ரத்தம்) குடித்தல் பெருமை என உள்ளது.

மாமிசம் உண்ணல் பெருதும் போற்றப் பட்டு உள்ளது- சங்கத் தொகை நூல்களில்.

இறைவனுக்கு விலங்கு படைத்தல் உள்ளது. 

களவியல் என பெண்களோடு பழகி விட்டுச் செல்லல் பெருகவே -"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்பர்" என்பார் தொல்காப்பியரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

திருக்குறள் முழுவதிலும் ஒருமுறை கூட அவர் பயன்படுத்தா சொல் தமிழ், அதைவிடவும் மொழியால், இனத்தால் புனைகதைகளால் நாட்டு மக்களை பிரித்துக் கெடுப்போர் இல்லாதது நாடு என்பார்.

பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் என்பார், உட்பகை கொண்டு நடிப்போருடன் நட்பாய் இருத்தல் விஷம் கொண்ட பாம்போடு வாழ்தல் போலெ என்பார். தவறான நட்பு கொண்டால் உன் காலம் அல்ல வரும் சந்ததி கூட பாதிக்கும் என்பார் வள்ளுவர்.

கோவாவில் நுழைந்த வேசித்தன மதமாற்ற கிறிஸ்துவம் கத்தி பலத்தால் மாற்றும் ஆரம்பகாலத்தில் ப்ரான்சிஸ் சேவியர், லயோலா போன்றோர் செய்துள்ள அராஜகம் அளவில்லாதவை, இதை "கிறிஸ்துவ தண்ட நியாய சர்ச் விசாரணை" என பாதிரிகள் தலைமை விசாரணை மன்றம் என வைத்து செய்துள்ள கொலைகள், கற்பழிப்புகள் அராஜகங்கள் பற்றிய வரலாற்று உண்மைகளை இந்தியாவில் அழித்தனர்; ஆனால் ப்ரான்சைச் சேர்ந்த கிறிஸ்துவ மருத்துவர் தில்லான் என்பவர் உள்லே சிக்கி தான் பட்ட அவலத்தை எழுதியது கொண்டு மேலும் விசாரணை செய்து பேராசிரியர் ஏ.கே.பிரோல்கர் எழுதிய நூலையும் தடை செய்யப் பார்த்தார் பாதிரி ஹீராஸ்  தடுக்கப் பார்த்தும் நூல் வெளிவந்தது, கிறிஸ்துவ பாதிரிகள் வேசித்தனமாய் மதமாற்றம் மட்டுமின்றி அராஜகம், கொலை, கற்பழிப்பு இவற்றை பைபிள் கதை நாயகர் ஏசு பெயரில் செய்தவை வெளிவந்த்ன.

  • Priolkar, A. K. The Goa Inquisition (Bombay, 1961).
  •  Relation de l'inquisition de Goa, Gabriel Delon (1688, in French)
  • The history of the Inquisition, as it is exercised at Goa written in French, by the ingenious Monsieur Dellon, who laboured five years under those severities ; with an account of his deliverance ; translated into English, Henry Wharton (1689) (Large file, University of Michigan Archives)
  • An account of the Inquisition at Goa, in India by Gabriel Dellon (Re-translated in 1819)
  • Flight of the Deities: Hindu Resistance in Portuguese Goa Modern Asian Studies, Vol. 30, No. 2. (May, 1996), pp. 387–421.
  • Repression of Buddhism in Sri Lanka by the Portuguese (1505 - 1658)

1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள் தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கு என்று ஒரு இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும்   அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க  தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார்.

 

 

 

போர்ச்சுகீசிய அரசர் அனுமதியில் கிறிஸ்துவ சமய புனித  விசாரணை மன்றம் அமைத்து மன்றம் அமைத்து தன்னால் மாற்றப்பட்டவர்களை சர்ச்சில் பிடித்துவைக்க அதைப் பயன்படுத்தினர்.

 

இங்கு நாம் மதமாற்றியவர்களை தரத்தில் வைத்துக்கொள்ளவும், அவிசுவாசிகளை மதம் மாற்றவும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது....  இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் அதனை வெறுக்கின்றனர். ஆகவே நமக்கு அவர்களை நாம் பிரசிங்கிக்கிற விசயங்களை கேட்க வைப்பதே ரொம்ப கடினமாக உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதென்பதை ஏதோ சாவது போல பார்க்கின்றனர். எனவே இப்போதைக்கு நாம் கிடைத்த மதம்மாறிகளை நழுவாமல் வைத்துக்கொள்வதில்தான் முழு கவனம் செலுத்த வேண்டும்." (St.Francis Xavier's Letter on the Missions, to St. Ignatius de Loyola, 1549) 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard